லக்னாதிபதி 6 ல்

அண்ணே வணக்கம்ணே !
ஜோதிடம் :முற்றிலும் புதிய கோணம்ங்கற தலைப்புல ஒரு தொடரை ஆரம்பிச்சு எழுதிக்கிட்டிருக்கம். ஒரு மவுசுக்கு இத்தீனி க்ளிக்குன்னு ஒரு லிமிட்டேஷன் இருக்குமாம். அதை தாண்டினா நொண்டியடிக்குமாம். அப்படி நாம லிமிட் தாண்டிட்டமா ? இல்லை இத்தனை நாள் நாம எழுதினதெல்லாம் சாதா மேட்டர். இப்பம் எளுதப்போற மேட்டர் தான் பிரம்ம ரகசியமா தெரீல.

வீட்டு விலக்கான ,டெலிவரி ஆன பொம்பள மாதிரி ஒரு ஃபீல். லோக்கல்ல வேற ஒரு மல்ட்டி கலர் காலண்டர் போட்டு கலக்கினமா? அதுல கொஞ்சம் அலைச்சல்.கண் திருஷ்டி?

சீதா சுயம்வரத்துல ராமன் சிவ தனுசை நாணேற்றும் போது கம்பன் “எடுத்தது கண்டார் -இற்றது கேட்டார்”னு சொல்லுவாரே அப்படி பதிவுன்ன்னு ஆரம்பிச்சா “அண்ணே வணக்கம்ணே”ல ஆரம்பிச்சா “உடுங்க ஜூட்ல” முடிஞ்சுரும்.

இடையில என்ன நடந்ததுன்னு ஆருக்குமே தெரியாது.(நமக்கும் தேன்) .ஆனால் இந்த பதிவை ஜனவரி 2 ஆம் தேதியிலருந்து அடிச்சிக்கிட்டே இருக்கம். இன்னம் முடியல.

நிற்க. கடந்த பதிவுல லக்னாதிபதியை எட்டுல வச்சுக்கிட்டு என்னெல்லாம் சாதிக்கலாம்னு சொன்னேன். இன்னைக்கு லக்னாதிபதி ஆறுல இருந்தா என்னன்னு பார்ப்பம்.
இரண்டு இளைஞர்கள் மோட்டார் சைக்கிள்ள ஊர் சுத்த போறாய்ங்க.சாரி நாடுகளை சுத்திப்பார்க்க போறாய்ங்க. போற வழியில மக்களோட வாழ்க்கை நிலைய பார்த்துக்கிட்டே போறாய்ங்க. ஆட்சியாளர்களுக்கு ஒரு அறிக்கை கூட கொடுக்கிறாய்ங்க. அவிக ஏதோ ஆக்சன் கூட எடுக்கிறாப்ல ஞா. இந்த மேட்டரை மணி மேகலை பிரசுரத்தோட உலகப்புகழ் பெற்ற புரட்சிகள் புக்ல படிச்சதா ஞா.

அந்த இளைஞர்கள் அறிக்கை கொடுத்துட்டு வேற நாட்டுக்கு நகர்ந்துர்ராய்ங்க. அவிகளுக்கு போறதுக்கு இன்னொரு நாடு இருந்தது. நமக்கு ? ஊஹூம். 1997 லருந்து 2004 வரை அதே வேலையா சந்திரபாபுவை லந்து பண்ணிக்கிட்டே இருந்தம்.

இடையில ஒரு 7 வருசம் ரெஸ்ட். இப்பம் புரட்சி தலைவிய டார்கெட் பண்ணி ஒர்க் அவுட் பண்ணிக்கிட்டிருக்கம். இது எப்படி சாத்தியமாச்சுன்னா? நமக்கு ரோகாதிபதி குரு.அவரு லக்னத்தில் உச்சம்.

லக்னாதிபதிய ஆறுல வச்சுக்கிட்டு இன்னம் எப்படில்லாம் கலக்கலாம் ரோசிச்சு பாருங்க.

அந்த சமயத்துல என்.டி.ஆர் சி.எம். நாம முதியோர் உதவித்தொகை பிரிவுல செக்சன் ரைட்டரு. அதுக்கு மிந்தி காங்கிரஸ் ரெஜிம்ல இந்த மேட்டருக்கு “நாம் கே வாஸ்தே” ஒரு அமவுண்டை சேங்ஷன் பண்ணிட்டு போயிருவாய்ங்க போல.

தலீவரு கச்சா முச்சான்னு சேங்சன் பண்ணி விட்டுட்டாரு. சேங்சன் ஆன பணத்தை வேட்டு விட்டாகனும். அப்பம் மாவட்ட கருவூல அதிகாரியா இருந்தவரு எங்க அப்பா காலத்துல சபார்ட்டினேட். நாம ஒரு ரோசனைய எடுத்து விட்டம்.

அது வரை பென்சன் அனுப்பினா அந்த எம்.ஓ போய் சேர்ந்து எம்.ஓ ரசீது வந்தாதான் அடுத்த குவார்ட்டருக்கு எம்.ஓ அனுப்புவம். அப்படி ஒரு ரூல் ( எந்த தே.மகன் வச்சானோ தெரியாது) நாம ” ஐயா ! எம்.ஓ ரசீதுங்கறது தள்ளு கேசு. ஆற அமர ஆராமாத்தான் போஸ்டல் டிப்பார்ட்மென்ட் அனுப்புவாய்ங்க. ஆனால் எம்.ஓ டெலிவரி ஆகலின்னா மட்டும் படக்குன்னு ரிட்டர்ன் பண்ணிருவாய்ங்க.அதனால 15 நாளைக்குள்ள எம்.ஓ ரிட்டர்ன் ஆகாத பார்ட்டிகளுக்கு டெலிவரி ஆயிருச்சுன்னு தானே அருத்தம் .எம்.ஓ ரிட்டர்ன் ஆகாத பார்ட்டிகளுக்கெல்லாம் அனுப்பிட்டா சீக்கிரமாவே டார்கெட் ரீச் ஆயிருமே”ன்னு சொன்னம் .

டி.டி.ஓ ஆக்செப்ட் பண்ணிட்டாரு. எத்தனை பேருக்கு லாபம்?

ஒரு வேளை டி.டி.ஓ “கொய்யால .. ஏதோ உங்கப்பன் மூஞ்சை பார்த்து வேலை கொடுத்திருக்கன்.ஒயுங்கு மருவாதியா வேலைய பாரு.ஊர் பஞ்சாயத்தெல்லாம் உனக்கு தேவையில்லாத மேட்டரு”னு ஸ்கட் விட்டிருக்கலாம்.ஆனாலும் ரிஸ்க் எடுத்தம் . இதான் இதான் நீங்க செய்யவேண்டியது.

லக்னாதிபதி 6 ல இருந்தா மோதியே ஆகனும்.அத உங்களுக்காக பண்ணாதிங்க. பிறருக்காக பண்ணுங்க. இதை தொழிலா செய்தா (லாயர் ?) ஒன்னுக்கு பத்தா கேஸு வரும். எம்.ஜி.ஆர் வேலையா செய்தா பேரு வரும். பேரை வாங்கினா ஊரை வாங்கலாம்.

லக்னத்துல ரோகாதிபதியை உச்சமா வச்சுக்கிட்டு நாம சொந்த மேட்டர்ல கோதாவுல இறங்கினப்பல்லாம் ஒன்னு அபாத்திர தானம் , இல்லின்னா அவப்பேரு தான். இதுவே பொது விஷயங்கள்ள இறங்கினப்பல்லாம் தூள் பண்ணினம்.

20 வயசுல ஆரம்பிச்சதை இன்னைக்கு வரை கன்டின்யூ பண்ணிக்கிட்டு தான் இருக்கம். கலீஞர் என்ன பண்ணுவாரு? அம்மா என்ன பண்ணுவாய்ங்க? ராமதாஸ் நினைச்சா என்ன செய்யமுடியும்னெல்லாம் கணக்கு பார்த்துக்கிட்டிருந்தா ஒரு மண்ணும் செய்யமுடியாது.

அதுக்குன்னு சின்ன சின்ன மன்சன்ங்க சோலிக்கெல்லாம் போயிராதிங்க. ஒடனே ஒரு ஆட்டோ பிடிச்சு வந்துருவாய்ங்க.

இந்த சோசியல் நெட் ஒர்க்கிங் சைட்டெல்லாம் ஒரு வரம். கிளிங்க. எதெல்லாம் அ நியாயம்னு தோனுதோ அதை எல்லாம் கிளிங்க.
விவாதமேடை , நேர் பட பேசு மாதிரி ப்ரோக்ராம்ஸ் வாட்ச் பண்ணுங்க. ஒரே மேட்டரை பாசிட்டிவா -நெகட்டிவா அப்ரோச் பண்ண கத்துக்கங்க.
பிராமண எதிர்ப்பையே எடுத்துக்கங்க. தேவைங்கற தலைப்புல ஒரு பக்கம் எழுதிப்பாருங்க. தேவையில்லைனு ஒரு பக்கம் எழுதுங்க. சின்சியரா எழுதனும். மனம் ஒன்றி எழுதனும். ஃப்ரெண்ட்ஸ் சர்க்கிள்ள பொது விஷயங்களை பத்தி டிபேட் பண்ணுங்க.

எந்த விஷயத்தை -அதுவும் நெல்ல விஷயத்தை செய்தாலும் கடன் வாங்கின காசுல செய்ங்க. (ஒழுங்கா திருப்பி கொடுத்துருங்க)
சின்ன சின்ன நோய்கள் -அது பெரிய நோய்க்கான பைலட்டா இல்லாத பட்சத்துல ட்ரீட்மென்டுக்கு பாயாதிங்க. அந்த நோயை ஃபேஸ் பண்ணுங்க.
கடன்னு வாங்கினா லம்பா வாங்குங்க. பேங்க்குல வாங்குங்க.லக்னாதிபதி 6 ல இருந்தாலும் செரி , ரோகாதிபதி உச்சத்துல இருந்தாலும் செரி . அதோட இம்பாக்ட் பெருமளவு குறையும்.

பதிவு ஓகேவா. நாளைக்கு லக்னாதிபதி 12ல இருந்தா எப்படி சமாளிக்கிறதுன்னு பார்ப்பம். உடுங்க ஜூட்டு