நொடிக்கு நொடி மாறும் வாழ்க்கை

16 Laks
அண்ணே வணக்கம்ணே !
கண்டம்ங்கற வார்த்தைக்கு அசலான அர்த்தம் துண்டு . உலகின் நிலத்துண்டுகளை கண்டம்னு சொல்றம். நாட்டின் கண்டங்களை மானிலம்னு சொல்றம். இந்த தொடர்ல உபயோகப்பட்டிருக்கிற வார்த்தைக்கு விபத்துக்கள்னு ஒரு அருத்தம்  செலாவணியில இருக்கு. ஆனால் இதையும் வாழ்வின் துண்டுகள்னு எடுத்துக்கலாம்.
இங்கே எந்தெந்த கிரகத்தால கெண்டம்னு சொல்லியிருக்கோ ..அந்தந்த கிரகத்தின் -அந்த கிரகம் சம்பந்தப்பட்ட கிரகத்தின் தசா/புக்தி காலத்துல – இது ஒரு துண்டு தானே. அந்த துண்டுல கொஞ்சம் சிரமம் இருக்கும்னு  சொல்லலாம்.
தசாபுக்தி காலம்னா அது லாங் பீரியடாச்சேன்னு பயந்துக்காதிங்க. அந்த கிரகத்துக்குரிய-அந்த கிரகங்கள் தொடர்பு கொண்டிருக்கிற கிரகங்களின்  நட்சத்திரங்களில் தான் எஃபெக்ட் அதிகமா இருக்கும். அந்த கிரகத்துக்குரிய எண் கூட்டுத்தொகையா வர்ர தேதிகள்ள எஃபெக்ட் இருக்கலாம்.
2.ஐந்தில் சனி,ராகு/கேது இருந்தால் கெண்டம்னு சொல்லியிருக்கு.
இதுல சனிக்குரிய நட்சத்திரங்கள் பூசம்,அனுஷம்,உத்திரட்டாதி. இந்த  நட்சத்திர காலங்கள்ள பிரச்சினை வரலாம்.
ராகுவுக்குரிய நட்சத்திரம்னா திருவாதிரை,ஸ்வாதி,சதயம். கேதுவுக்குரிய நட்சத்திரம்னா அஸ்வினி,மகம்,மூலம்.
எல்லாம் சரி அஞ்சுல சனி இருந்தாலே லொள்ளுதானானு கேப்பிக சொல்றேன். என் மகள் கன்யா லக்னம். அஞ்சாமிடத்துல சனி. அஞ்சுங்கறது? புத்தி ஸ்தானம். சனின்னாலே டிலே. டெக்னிக்கல் நாலெட்ஜு கிடைக்கலாமே தவிர அகடமிக் கஷ்டம் தான். ஏழாங்கிளாஸு ரெண்டு தபா ஃபெயிலு. இது அதிர்ஷ்டத்தை காட்டற இடம். இங்கே சனி இருந்ததால ..அதிர்ஷ்ட கட்டைன்னு சொல்லனும். இது புத்ர ஸ்தானங்கறதால குழந்தை பிறப்புல தாமதம் ஏற்படனும்.
ஆனால் இங்கே சனி வக்ரம். வக்ரமானதால நாம  சின்ன வயசுல ச்சூ காட்டிவிட்ட எம்.எஸ்.பெய்ண்ட் ஃபோட்டோஷாப்ல போய் முடிஞ்சது. அதே வயசுல நாம கையில கொடுத்த பாக்ஸ் கேமரா ஃபோட்டோ கிராஃபர்ல கொண்டு விட்டுது. இந்த வருசம் பிப்ரவரியில கண்ணாலம் .இப்பம் நாலாவது மாசம் கர்பம்.ஏன்னா சனி வக்ரம்.
கிரகங்கள் வக்ரமா நின்னப்போ பலன் கணிக்கிறதுல ஒரு சூட்சுமம் இருக்கு. அது சாதாரணமா  நின்னா என்ன பலனோ அதுக்கு கொய்ட் ஆப்போசிட்டா பலன் தரனும். இது விதி.ஆனால் ஆரம்ப கட்டத்துல சாதாவா நின்னா என்ன பலனோ அந்த பலன் நடக்கும்.
இப்பம் என் டாட்டர் கேஸ்லயே அஞ்சுல சனி =வித்யா பங்கம். அதிர்ஷ்ட கட்டை . நாலஞ்சு வருசமா லவ்ஸு ஆனா விபரீதமா (ஐ மீன் கன்சீவ் ) எதுவும்  நடக்கல. இப்பம் புரியுதா வக்ர கிரக பலன் எப்படி ஒர்க் அவுட் ஆகும்னு?
சரி வக்ரமா போச்சு தப்பிச்சுட்டாய்ங்க. சனி சாதாவா நின்னிருந்தா என்ன பலன்னு கேப்பிக. சொல்றேன். அதுக்கு மிந்தி ஒரு  முக்கியமான மேட்டர் என்னடான்னா வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும் தான் அடுத்த நொடியை தீர்மானிக்குது.

ஆரோ தெரியாம காலை மிதிச்சுட்டு சாரிங்கறாய்ங்க. பரவால்ல விடுங்கன்னு இந்த நொடி சொன்னா அடுத்த நொடி சுமுகம். இதுவே “இன்னாடா சாரி..பூரி உருளை கிழங்கு எருமை ..எருமை மாதிரி மிதிக்கிறே”ன்னுட்டா அடுத்த நொடி?
அஞ்சுல சனி இருக்கு. குடும்பமே பிசினாறி குடும்பம். கறிக்குழம்பை ஒருவாரம் வரைக்கும் ஃப்ரிட்ஜுல வச்சு திங்கற கேரக்டருங்கனு வைங்க. எட்டணா மூக்கு பொடிய கூட அக்கம் பக்கம்  ஓசி வாங்கி போட்டுக்கற தாத்தா ,சட்டை காலரை மட்டும் சோப்பு போட்டு அலசி போட்டுக்கிற அப்பா, ஒரே நைட்டிய மாசம்லாம் போட்டுக்கற மம்மி இப்டி ஒரு என்விரான்மென்ட்ல ஜாதகர் வளர்ராருன்னா அஞ்சுல சனி அவரை ஒன்னுமே செய்யாது.
அட கதை வேற மாதிரி போகுது பத்து வட்டிக்காச்சும் வாங்கி வெட்டிசெலவு பண்ற குடும்பத்துல ஜாதகர் பிறந்துட்டாருனு வைங்க . ஸ்கூலுக்கே போக மாட்டாரு. போனாலும் படிக்க மாட்டாரு. நிலைமை இப்படி இருந்தா மேட்டர் ஓவர்.
இல்லை. வேற ஏதோ கிரக பலத்துல ஜாதகர் ஒழுங்கா படிக்கவும் செய்றாருன்னு வைங்க .ஃபீஸ் கட்ட பணம் இருக்காது.(துரதிர்ஷ்டம்) வேற ஏதோ கிரக பலத்துல ஃபீஸ் கட்டவும் ஆள் வந்துருச்சுனு வைங்க. பரீட்சையில பிட் அடிச்சிக்கிட்டிருந்தவன் ஸ்க்வாட் வர்ர நேரமா பார்த்து பிட்டை இவன் மேல வீசிருவான்,அவமானம் நடக்கும்.
பத்தாங்கிளாஸ் வரை ஒப்பேத்திட்டு டெக்னிக்கல் ஸ்டடீஸுக்கு போயிட்டா நோ ப்ராப்ளம். இல்லின்னா அரியர்ஸு. சார் வைட் காலர் ஜாப்ல இருந்தா கண்ணாலம் டிலே,குழந்தை பிறப்புல டிலே. வேற ஏதோ கிரக பலம் காரணமா கொளந்தையே பிறந்துருச்சுன்னு வைங்க அது கருப்பா பயங்கராமா-பயங்கர கருப்பா பிறக்கலாம். அட வெள்ளையாவே பிறந்துருச்சுன்னு வைங்க கால் தொடர்பான ஊனம் ஏற்படலாம். அடி முட்டாளா இருக்கலாம்.
லைஃப் ஈஸ் ஆப்ஷன்ஸ். இந்த நொடி அடுத்த நொடியை டிசைட் பண்ணுது பாஸ்.. சரி அஞ்சுல ராகு/கேதுவை பத்தி இன்னொரு பதிவுல பார்ப்போம்.
உடுங்க ஜூட்டு.