சிகப்பு நாடாத்தனம் என்றால் இது தான் .

இந்தியாவின் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வாக என்னால் தீட்டப்பட்ட திட்டம் ஆப்பரேஷன் இந்தியா 2000. திட்டத்தைப் பற்றியும், அதன் அமலுக்கு நான் செய்த முயற்சிகள் பற்றி இந்த பதிவில் விவரித்துள்ளேன். அடுத்த சைட்டுக்கு ஜம்பாகாது தொடர்ந்து படிக்கும் புண்ணீயாத்மாக்களுக்கு மூனு கிரகம் உச்சமான ஜாதகத்தில் குழந்தை பிறக்கட்டும்.

முதலில் திட்டம்:

ஆனாலும் இந்தியாவின் எல்லா பிரச்சினைகளையும் தீர்க்க ஒருவன் ஆப்பரேஷன் இந்தியா 2000 என்ற பெயரில் புதுமையான திட்டம் ஒன்றை தீட்டி , அதன் அமலுக்காக லட்சக் கணக்கில் சொந்தப் பணத்தை செலவழித்து 1986 முதல் உழைத்து வருகிறான் என்றால் ஓரளவாவது ஆர்வம் பிறக்கும் என்று நம்புகிறேன்.
என் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு :
1.பிரதமரை மக்களே தேர்ந்தெடுக்கும் முறையை அமல் செய்தல்
2.நாட்டில் உள்ள 10 கோடி வேலையற்ற வாலிபர்களை கொண்டு சிறப்பு ராணுவம் ஒன்றை ஏற்படுத்துதல்
3.மேற்படி சிறப்பு ராணுவத்தை கொண்டு நதிகளை இணைத்தல்4.நாடெங்கும் கிராம அளவில் விவசாயிகளின் கூட்டுறவு சங்கங்களை ஏற்படுத்தி விளை நிலங்கள் அனைத்தையும் அதற்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் உரிமையாக்குதல். கூட்டுறவு பண்ணை விவாசாய முறையை அமல் படுத்துதல்.( இதை தற்போது ஆந்திரத்தில் பரீட்சார்த்தமாக அமல் செய்ய உள்ளனர்)
5.தற்போதுள்ள கரன்சியை ரத்து செய்தல். பழைய கரன்சி உள்ளவர்கள் அது தமது சட்டப்படியான வருவாயே என்பதை நிரூபித்து புதிய கரன்சியை பெற வகை செய்தல்

இப்போ சுய‌ அறிமுக‌ம்:
இந்த சுய அறிமுகத்தை ஓஷோவின் கருத்தோடு ஆரம்பிக்கிறேன்.
“சமுதாயத்தில் பிறரைவிட நாம் தாழ்ந்துவிட்டால் யாரும் கண்டு கொள்ளமாட்டார்கள். உயர்ந்து விட்டாலோ அவர்களால் சகித்துக் கொள்ளவே முடியாது. “
பொருளாதார அளவிலான உயர்வுக்கே இதுதான் நிலை. அறிவு,ஆக்கம்,ஆய்வு,ஆன்மீகம்,இப்படி சகல துறைகளிலும் உயர்ந்துவிட்டால் உங்களுக்கும் உலகத்துக்கும் இடையில் பெரிய்ய…….இடைவெளி ஏற்பட்டுவிடும். இது உறுதி. என் திட்ட‌த்தின் பெய‌ர் ஆப்ப‌ரேஷ‌ன் இந்தியா 2000. அதாவ‌து 1986 ல் இந்த‌ திட்ட‌த்தை தீட்டும்போது இது 2000 ஆம் ஆண்டுக்குள் அம‌லுக்கு வ‌ந்துவிடும் என்று ஒரு ந‌ம்பிக்கை. அத‌னால் தான் இதில் 2000 என்ற எண் வ‌ருகிற‌து.

நாட்டின் ஒரே பிரச்சினை ஏழ்மை தான்:
ஒரு த‌னிம‌னித‌னின் வ‌ருவாயைக் கொண்டு அவ‌ன் செழிப்பை க‌ண‌க்கிடுகிறோம். அதே போல் ஒரு நாட்டின் தனி மனித வ‌ருவாயை கொண்டு அத‌ன் செல்வ‌ செழிப்பை க‌ண‌க்கிடுகிறார்க‌ள்.முதலில் தேசீய‌வ‌ருவாய் என்றால் என்ன‌?ஒரு வ‌ருட‌த்தில் த‌யாரிக்க‌ப்ப‌ட்ட‌ பொருட்க‌ள் ம‌ற்றும் அளிக்க‌ப்ப‌ட்ட‌ சேவைக‌ளின் ம‌திப்பே தேசீய‌வ‌ருவாய்.த‌னிம‌னித‌ வ‌ருவாய் என்றால் என்ன‌?தேசீய‌ வ‌ருவாயை, ம‌க்க‌ள் தொகையால் வ‌குத்தால் கிடைக்கும் தொகையே த‌னி ம‌னித‌ வ‌ருவாய்.(அதாவ‌து ர‌ஜினி காந்தின் வ‌ருவாயையும், அவ‌ர் க‌ட்‍‍ அவுட்டுக்கு பீர் அபிஷேக‌ம் செய்யும் ர‌சிக‌னின் வ‌ருவாயையும் கூட்டி இர‌ண்டால் வ‌குத்து விடுகிறார்க‌ள். ப‌ச்சையாக‌ சொன்னால் ர‌ஜினி வ‌ருமான‌த்தை‍ அவ‌ன் ர‌சிக‌னுக்கு ப‌ங்கு போடுகிறார்க‌ள். அதாவ‌து வெறும் காகித‌த்தில்.
அதனால் தான் பிரதமரும்,நிதி மந்திரியும் தனிமனித வருவாய் உயர்ந்துவிட்டதாக கூவினாலும் ஏழ்மை ஆண்,பெண்களின் தன் மானத்தை ,மானத்தை எரித்துக் கொண்டே இருக்கிறது.
உற்பத்தி நடவடிக்கைகளில் சமப் பங்கு :உற்பத்தி நடவடிக்கைகளில் சமப் பங்கு கிடைத்தால் தான் உய‌ர்ந்து வ‌ரும் தேசீய‌ வ‌ருமான‌த்தில் உண்மையான‌ ப‌ங்கு கிடைக்கும். இல்லாவிட்டால் காகித‌ப்ப‌ங்கு தான்.
உற்ப‌த்தி கார‌ணிக‌ள்:உற்ப‌த்தி கார‌ணிக‌ள் 4. அவை நில‌ம்,கூலி,முத‌லீடு,நிர்வாக‌ம் ஆகிய‌ன‌வாகும். நாட்டில் ஆதிகால‌ம் முத‌ல் நில‌விய‌ சாதி அமைப்பினால் ச‌மூக‌த்தின் மெஜாரிட்டி ம‌க்க‌ள் வாழ்க்கைக்கு ஆதாரமான க‌ல்வி கிடைக்காது கூலிக‌ளாக‌வே வாழ்ந்து வ‌ருகிறார்க‌ள். அவ‌ர்க‌ளிட‌ம் நில‌மோ.முத‌லீடோ,நிர்வாக‌த்தில் ப‌ங்கெடுக்கும் வாய்ப்போ த‌குதியோ இல்லை.
நில‌த்தை முத‌ல் வைத்த‌வ‌னுக்கு வாட‌கை,முத‌லீடு வைத்த‌வ‌னுக்கு வ‌ட்டி,நிர்வாக‌ம் செய்த‌வ‌னுக்கு லாப‌ம் கிடைக்கும்.வெறும் உட‌லுழைப்பை முத‌ல் வைத்த‌வ‌னுக்கு என்ன‌ கிடைக்கும்? கூலி. அதிலும் சேமிப்போ,எதிர்கால‌ பாதுகாப்போ,ஸ்கில்லோ,க‌ல்வியோ இல்லாத‌ வ‌னுக்கு என்ன‌த்தை..கூலி கிடைக்கும்? தேசீய‌வ‌ருமான‌த்தில் எந்த அளவுக்கு ப‌ங்கு கிடைக்கும்?
இரு வர்கங்கள் /உற்ப‌த்தி கார‌ணிக‌ள் :
நாட்டில் ப‌ல‌ நூற்றாண்டுக‌ளாய் நில‌வி வ‌ரும் சாதி அமைப்பினால்,சமூகம் இரண்டாக பிளவு பட்டுள்ளது. எண்ணிக்கையில் குறைவாக உள்ள ஒரு வர்கம் ஆளும் வர்கமாக உள்ளது. மெஜாரிட்டி‌ ம‌க்கள் அட‌ங்கிய‌ வ‌ர்க‌ம் ஆள‌ப்ப‌டும் வ‌ர்க‌மாக‌ உள்ள‌து. உற்ப‌த்திக் கார‌ணிக‌ளில் நில‌ம்,முத‌லீடு,நிர்வாக‌ம் மூன்றுமே ஆளும் வ‌ர்க‌த்தின் கையில் சிக்கி உள்ள‌து. ஆள‌ப்ப‌டும் வ‌ர்க‌மோ வெறும் கூலிப் ப‌ட்டாள‌மாக‌ நலிந்து வ‌ருகிற‌து.
நில‌ப்ப‌ங்கீடு:
உற்ப‌த்திக் கார‌ணிக‌ளில் முக்கிய‌மான‌தான‌ நில‌ம் ஆள‌ப்ப‌டும் வ‌ர்க‌த்தின் கைக‌ளுக்கு மாற்ற‌ப் ப‌ட‌ வேண்டும். இது நேரிடையாக‌ அம‌ல் செய்ய‌ப் ப‌ட்டால் நாட்டில் ர‌த்த‌ வெள்ள‌ம் ஓடும். இதை த‌விர்க்க‌ விவ‌சாயிக‌ளின் கூட்டுறவு ச‌ங்க‌ங்க‌ள் ஏற்ப‌டுத்த‌ப்ப‌ட்டு, நாட்டில் உள்ள‌ விவ‌சாய‌ நில‌ங்க‌ள் மேற்ப‌டி விவ‌சாயிக‌ளின் கூட்டுறவு ச‌ங்க‌ங்க‌ளுக்கு நீண்ட‌ கால‌ குத்த‌கை அடிப்ப‌டையில் த‌ர‌ப்ப‌ட‌ வேண்டும். கூட்டுறவுப்பண்ணை விவ‌சாய‌ம் அம‌ல் ப‌டுத்த‌ப் ப‌ட‌வேண்டும். இந்த‌ புர‌ட்சிக‌ர‌ திட்ட‌த்தை அம‌லாக்கும் “த‌ம்” “தில்” “அதிகாரம்” இன்றைய ஆட்சி முறையிலான பிர‌த‌ம‌ருக்கு கிடையாது.
நேரிடை ஜ‌ன‌நாய‌க‌ம்:
தனி மெஜாரிட்டி என்பது கனவாகிப் போன நிலையில் நேரிடை ஜனநாயக முறையில் தேர்வான பிரதமருக்கே மேற்டொன்ன புர‌ட்சிக‌ர‌ திட்ட‌த்தை அம‌லாக்கும் “த‌ம்” “தில்” “அதிகாரம்” உண்டு. பிரதமரை மக்களே நேரிடையாக தேர்ந்தெடுக்கும் போது இன்று போல் அநாமதேயங்கள் அரசாள்வது தடுக்கப்படும்.பிரதமருக்கு எம்.பிக்களுக்கு லாலி படும் அவசியம் இருக்காது.இந்தியாவில் 52 சதவீதம் மக்கள் எஸ்.சி,எஸ்.டி,பி.சி மற்றும் மைனாரிட்டிக்களாக இருக்கும் நிலையில் -பிரதமர் பதவிக்கு மும்முனைப்போட்டி ஏற்பட்டால் மேற்சொன்னவர்களில் பாதிப் பேர் யாருக்கு வாக்களிக்கிறார்களோ அவர் பிரதமராகும் வாய்ப்பு ஏற்படும். அரசு,அரசியல் கட்சிகள்,வேட்பாளர்கள் அனைவருக்கும் தேர்தல் செலவ்ய் பெருமளவு குறையும்.
க‌ங்கை காவேரி இணைப்பு:
இந்திய விவசாய நாடு. எழுபது சதவீதம் மக்கள் விவசாயத்தை சார்ந்தே வாழ்ந்து வருகிறார்கள். கூட்டுறவுப் பண்ணை விவசாய முறை அமலானாலும் விவசாயத்துறைக்கு சவாலாக இருக்கக்கூடியது நீர்ப்பாசன பற்றாக்குறை. நதிகளை இணைப்பதே இதற்கு தீர்வு.
நில‌ங்க‌ள் விவ‌சாயிக‌ளின் கூட்டுற‌வு ச‌ங்க‌ங்க‌ளுக்கு குத்த‌கைக்கு த‌ர‌ப் ப‌ட்டாலும் நீர் பாச‌னப்பற்றாக்குறை பிர‌ச்சினை ச‌ங்க‌த்தின் குர‌ல் வ‌ளையை நெறித்துவிடும் என்ப‌தால் இத‌ற்கு நிர‌ந்த‌ர‌த்தீர்வாக முதல் கட்டமாக ‌ க‌ங்கை காவேரி இணைப்பு மேற்கொள்ள‌ப் ப‌ட‌வேண்டும். பின் ப‌டிப் ப‌டியாக‌ எல்லா ந‌திக‌ளும் இணைக்க‌ப் ப‌ட‌ வேண்டும்.
ந‌திக‌ளை இணைக்க‌ சிற‌ப்பு ராணுவ‌ம்:
ந‌திக‌ளை இணைக்க‌ சிற‌ப்பு ராணுவ‌ம் ஒன்று அமைக்க‌ப் ப‌ட‌வேண்டும்.இந்தியாவில் வேலையின்மை தீர்க்கப்படாத பிரச்சினையாக உள்ளது. என்னதான் தகவல் தொழில் நுட்பத் துறையில் வேலை வாய்ப்பு அதிகரித்திருந்தாலும் ரயில்வே துறை கலாசி வேலைக்கு இஞ்ஜினீயர்கள் அப்ளை செய்யும் நிலை மாறவில்லை. இதனால் வேலையற்ற வாலிபர்கள் பாதை மாறிப்போகும் நிலை உள்ளது. இந்த நிலையில் நாட்டில் உள்ள 10 கோடி வேலையற்ற வாலிபர்களை கொண்டு சிறப்பு ராணுவம் ஒன்றை அமைத்து அதன் மூலம் நதிகளை இணைக்கவேண்டும்.
சிகப்பு நாடாசிகப்பு நாடாத்தனத்தின் கொடுமையை அறிந்தவன்,அதனால் கொடூரமாக பாதிக்கப்பட்டவன் என்ற முறையில் இந்த வலைப்பூவை வலை மேயர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். இந்தியாவின் எல்ல பிரச்சினைகளுக்கும் தீர்வாக ஆப்பரேஷன் இந்தியா 2000 என்ற திட்டத்தை தீட்டினேன். இதன் 200 பிரதிகளை அன்றைய லோக்சபா சபாநாயகர் ஜி.எம்.சி பாலயோகிக்கு அனுப்பினேன்.(பதிவு தபால் மூலம் தான்). அவற்றை அன்றைய ஆளும் கட்சி கூட்டணியை சேர்ந்த எம்.பி.க்களுக்கு கிடைக்க செய்யுமாறு கோரினேன்.(11/6/98) .பல மாதங்கள் வரை பதிலில்லை. அந்த சமயம் என்.டி.ஆர்.ரசிகன் என்ற வகையில் தெலுகு தேசம் சார்பாக பூத் ஏஜண்ட்டாக உட்கார்ந்ததற்கான அடையாள அட்டை என்னிடம் இருந்தது. அதை இணைத்து எங்கள் தொகுதி எம்.பி.ராமகிருஷ்ணாரெட்டி காருவுக்கு இது விஷயமாகஒரு இன்லண்டு லெட்டர் போட்டேன்.அவர் சபாநாயகர் அலுவலகத்தில் விசாரித்திருப்பார் போல.சபாநாயகர் அலுவலகம் எம்.பி.க்கு நான் போட்ட கடிதத்தை மேற்கோள் காட்டி ஒரு கடிதம் போட்டது.”நீங்கள் சொல்லும் திட்ட பிரதிகள் அடங்கிய பார்சல் எங்களுக்கு வந்து சேரவில்லை”-என்பது அதன் சாரம். நான் பதறியடித்து ஓடி தபால் அலுவலகத்தில் மேற்படி பார்சல் டெலிவரி ஆனதற்கான அத்தாட்சியை பெற்று பதிவு தபாலில் அனுப்பினேன். மீண்டு சில மாதங்கள் மவுனம். இடைவிடாத நினைவூட்டு கடிதங்களுக்கு பிறகு சபாநாயகர் அலுவலகத்து அதிகாரிகள் ஒரு கடிதம் போட்டனர். அதன் சாரம்:நீங்கள் அனுப்பிய கடிதம்,பார்சல் டெலிவரி ஆனதற்கான ஆதாரம் கிடைத்தது. தங்கள் பார்சலை இந்த அலுவலகத்தில் லொகேட் செய்ய முடியவில்லை.எனவே தங்கள் திட்டத்தின் மற்றொரு பிரதியை அனுப்பினால் தேவையான பிரதிகளை நாங்களே தயாரிப்பதில் பிரச்சினை இல்லை.மனம் நொந்து உடனே திட்டத்தின் மற்றொரு பிரதியை அனுப்பினேன். பதிலில்லை. பலமாதங்கள் கழித்து வெறுத்துப் போய் திட்டப்பிரதியை திருப்பியனுப்பச் சொல்லி தபால் செலவுக்காக ரூ.50 க்கான அஞ்ஜலாணை கூட அனுப்பிவிட்டேன். நாளிதுவரை ஒரு இழவும் நடக்கவில்லை. நானும் தொடர்ந்து நினைவூட்டுக் கடிதங்களை அனுப்பிக் கொண்டேதானிருக்கிறேன். சிகப்பு நாடாத்தனம் என்றால் இது தான் .

மெனக்கெட்டு மத்திய அரசின் வலை தளத்தில் எம்.பிக்களின் மெயில் ஐ.டிக்களை பிகப் செய்து அனைவருக்கும் மெயில் கூட அனுப்பினேன் . தெலுங்கில் வலைதளம் அமைத்து 7 மாதத்தில் 16000 பேருக்கு இத்திட்டம் குறித்த தகவல்களை தெரிவித்து ஆதரவு திரட்டினேன். உங்கள் ஆதரவையும் வேண்டித்தான் இந்த பதிவு.

Advertisements

அடுத்த தமிழக முதல்வர் விஜய் ?

தமிழ் நாடு போகும் போக்கை பார்த்தால் அடுத்த முதல்வர் விஜய் தானோ என்று தோன்றுகிறது. ஆந்திர மக்களை சினிமா பைத்தியங்கள் என்றும் கொல்ட்டி என்றும் நக்கலடிக்கும் தமிழ் கூறு நல்லுலகே ! சற்றே பொறுமையுடன் ஆந்திர அரசியல் பற்றிய சிறு அறிமுகத்தையும், ஆந்திர மக்கள் எத்தனை அறிவுக்கூர்மை படைத்தவர்கள் என்பதையும் படித்துப்பாருங்கள், அதன் பிறகாவது சினிமா பித்தம் தெளிகிறதா பார்ப்போம்.

ஆந்திர அரசியல் பற்றிய ஆர்வம் எனக்கு ஏற்பட்டதே என்.டி.ஆரின் அரசியல் பிரவேசத்திற்கு பிறகுதான். தமிழ் பத்திரிக்கைகளின் அலசல் என்னவென்றால் அவர் ராமர் வேடம் போட்டார் ,மக்கள் தேவுடு என்றனர்,எனவே என்.டி.ஆர் முதல்வராகிவிட்டார்.. Thats all !

அட டுபாகூருங்களே ! என்.டி.ஆர் வெறும் ராமன் வேடம் மட்டும் போடலை ராவணன் வேடமும் போட்டிருக்கார். வெறும் கிருஷ்ணன் வேடம் மட்டும் போடலை துரியோதனன் வேடமும் போட்டிருக்கிறார். நெகட்டிவ் கேரக்டர்ஸ் செய்திருக்காரு. (உ.ம். தமிழில் பில்லாவாக வந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கில் என்.டி.ஆர்.தான் பில்லா)

என்.டி.ஆரின் சினிமா வாழ்க்கையும் சாமானியப்பட்டதில்லை.இன்னைக்கு ரஜினி ஷங்கர் வருவாரா, ரஹ்மான் வருவாரானு ஜொள்ளு விடற நிலை எல்லாம் வந்ததே கிடையாது. என்.டி.ஆர் படம்னா அவர் வருவார், போவார் அவ்ளதான் படம். எத்தனை படம் ஃபெயில்யூர் ஆனாலும் அடுத்த படத்துலயும் அதேதான் இருக்கும்.

விஜய் கதையெல்லாம் எடுத்துக்கிட்டு NTR கூட ஒப்பிட்டால் Vijay எல்லாம் ஜுஜுபி.
ஒரே ஒரு உதாரணம் கொடுத்து என்.டி.ஆரோட அரசியல் வாழ்வுக்கு போகலாம். சூப்பற ஸ்டார் கிருஷ்ணா தெலுங்கு திரையுலகத்தையே கூட்டிக்கிட்டு ராஜஸ்தான் போயிட்டாரு. குருக்ஷேத்திரம்னு ஒரு படம் எடுக்க. சில மாசம் கழிஞ்ச பிறகு என்.டி.ஆருக்கு ஐடியா வந்தது மகாபாரதத்தை வச்சு படம் எடுத்தா என்னனு. இங்கே பார்த்தா எந்த நடிகரும் அவைலபிலிட்டில இல்லே. பார்த்தார். அவருக்கு ஒரு டஜன் பிள்ளைகள் . கிடைச்சவனுக்கெல்லாம் மேக்கப் போட்டார். தானே கர்ணன், தானே கிருஷ்ணன் , தானே துரியோதனன், இப்படி எடுத்தார் படத்தை. குருக்ஷேத்திரம் அட்டர் ப்ளாஃப். என்.டி.ஆர் எடுத்த படம் சூப்பர் டூப்பர் ஹிட். (தான வீர சூர கர்ணா) இது தான் என்.டி.ஆரோட ஸ்பெஷாலிட்டி.

இதையெல்லாம் தெரிஞ்சுக்காத தமிழக பத்திரிக்கைகள் என்.டி.ஆரை ஆந்திர எம்.ஜி.ஆர் என்று குறிப்பிடும்போது எங்களுக்கு எப்படியிருக்கும். என்.டி.ஆருக்கும் எம்.ஜி.ஆருக்கும் ஆறு வித்யாசங்கள் ..இல்லையில்லை ஆறு நூறு வித்யாசங்கள் உண்டு. எம்.ஜி.ஆர் பற்றி நீங்கள் முழுக்கவே அறிந்திருப்பீர்கள் என்வே இந்த ஒப்பீட்டில் என்.டி.ஆர் குறித்த விஷயங்களை மட்டும் கூறுகிறேன் . நீங்கள் இவற்றை எம்.ஜி.ஆருடன் ஒப்பிட்டு பார்த்துக் கொள்ளுங்கள்.

1.எம்.ஜி.ஆர் இலங்கையில் உள்ள கண்டியில் பிறந்தவர்.(என்.டி.ஆர் தெலுங்கு தேசத்தின் மண்ணின் மைந்தர்)
2.எம்.ஜி.ஆர் நாடக நடிகராய் ஆரம்பித்து சினிமாவுக்கு வந்தவர். என்.டி.ஆர் டைரக்ட் சினிமா.
3.எம்.ஜி.ஆர் கைநாட்டு. என்.டி.ஆர் பி.ஏ ப‌ட்ட‌தாரி. வ‌ருவாய்த்துறையில் ரிஜிஸ்ட்ராராக‌ ப‌ணிபுரிந்த‌வ‌ர்.

4.எம்.ஜி.ஆர் ஆர‌ம்ப‌த்தில் காங்கிர‌ஸ் வாதி.என்.டி.ஆருக்கு அத‌ன் வாச‌னை கூட‌ கிடையாது. பி.வி. தெலுங்க‌ர் என்ற‌ ஒரே கார‌ண‌த்துக்காக‌ ஒரு எம்.பி தொகுதியை அவ‌ருக்கு பிச்சையிட்டார்.

5.எம்.ஜி.ஆர் பெரியார்,அண்ணா,க‌லைஞ‌ர் ஆகியோரின் த‌லைமையை ஏற்று செய‌ல்ப‌ட்ட‌வ‌ர்.(பின்பு க‌லைஞ‌ருக்கே ஆப்பு வைத்த‌து வேறு க‌தை). என்.டி.ஆர் சுய‌ம்புவாய் தோன்றிய‌வ‌ர்.

6.எம்.ஜி.ஆர் காங்கிர‌சுட‌ன் கூட்டு வைத்து தில்லிக்கு காவ‌டி எடுத்த‌வ‌ர். என்.டி.ஆர் ?ஊஹூம்.

7.எம்.ஜி.ஆர் நடிகராக இருந்த காலத்திலேயே நடிகைகளுடன் இணைத்து பேசப்பட்டவர். அரசியலுக்கு வந்த பிறகும் இது தொடர்ந்தது. உம்.ஜெயலலிதா,லதா,வெண்ணிற ஆடை நிர்மலா. என்.டி.ஆர் ஊஹூம்.

8.எம்.ஜி.ஆரின் பேச்சுத்திற‌மை,வாக்குவ‌ன்மை யெல்லாம் க‌ட‌ன் வாங்கிய‌தே.ஆனால் , என்.டி.ஆர் சிங்கிள் ஹேண்ட் அட் எனி கார்ன‌ர்.

9.எம்.ஜி.ஆரின் இமேஜ் என்ப‌து ஆர‌ம்ப‌ம் முத‌லே க‌வ‌ன‌மாக‌,ஹிட‌ன் அஜெண்டாவுட‌ன் வ‌ள‌ர்க்க‌ப்ப‌ட்ட‌து. ஆனால் என்.டி.ஆர் த‌ம் திரைப்ப‌ட‌ங்க‌ளில் சிக‌ர‌ட்,த‌ண்ணி,க‌ஞ்சா,ஸ்ம‌க்ளிங்,க‌ற்ப‌ழிப்பு காட்சிக‌ளில் கூட‌ ந‌டித்திருக்கிறார். அர‌சிய‌லுக்கு வ‌ந்த‌ பிற‌கும் மொட்டை த‌லையுட‌ன் ப‌த்திரிக்கை கேமிராக்க‌ளுக்கு காட்சிய‌ளித்த‌வ‌ர்,

10.எம்.ஜி.ஆர்,ஜெய‌ல‌லிதா உற‌வு எந்த‌ வ‌கையான‌தோ அது எம்.ஜி.ஆருக்கே வெளிச்ச‌ம். ஆனால் என்.டி.ஆர் தான் விரும்பிய‌ ல‌ட்சுமி பார்வ‌தியை துணிவுட‌ன் ம‌ண‌ந்தார். ம‌க்க‌ளும் அதை அங்கீக‌ரித்து மீண்டும் முத‌ல்வ‌ராக்கினார்க‌ள். பெரியாரே ம‌ணிய‌ம்மையை ம‌ண‌ந்து பெரும் அவ‌திக்குள்ளான‌து இங்கு குறிப்பிட‌த்த‌க்க‌தாகும்.

இதே ஆந்திரத்தில் சிரஞ்சீவி அரசியலி குதித்தார், என்னாச்சு..கை கால்தான் முறிஞ்சது . ராஜசேகரரெட்டி என்ன சூப்பர் ஸ்டாரா? இல்லே கலைஞர் மாதிரி வசனகர்த்தாவா இல்லயே.. பின்னே எப்படி இந்த அற்புதம் நடந்தது. ரோசிக்கனுங்க ..

சந்திரபாபு அக்கவுண்ட்ல பணம் போடறேன்னாரு, அரிசி ச்சும்மாவே போடறேன்னாரு. தமிழகத்து தாத்தா கலைஞர் பாணில கலர் டி.வி.தரேனு கலர் கலரா படம் காட்டினார் . ஜனம் ஏமாறலயே..

இதுக்கு மேல ஆந்திரால எந்த நடிகனும் அரசியல்னு கனவுல கூட நினைக்காத அளவுக்கு ஆயிருச்சு.

ஆனால் தமிழ் நாட்டுல ஒரு விஜயகாந்த் மண்ண கவ்வியும் ,கார்த்திக் காணாமல் போயும், சரத்து சுரத்து இல்லாம கிடக்கறத பார்த்தும் விஜய் வருவாரு வருவாரு வருவாருனு அவரோட அப்பா மூணு வாட்டி சொல்றாருனா எந்த நம்பிக்கைலங்க ! நீங்க எல்லாம் குடுமிங்கன்ற நம்பிக்கைலதானே !

ஓரின சேர்க்கைக்கு சட்ட அங்கீகாரம் ? செக்ஸ் ஒர்க்கர்ஸ் செய்த பாவம் என்ன?

ஓரின சேர்க்கைக்கு சட்ட அங்கீகாரம் ? செக்ஸ் ஒர்க்கர்ஸ் செய்த பாவம் என்ன?
ஓரின சேர்க்கைக்கு சட்ட அங்கீகாரம் வழங்குதல் குறித்து வேகமாய் சிந்தித்த இந்திய அரசு “அவசரப்படமாட்டோம்” என்று பின் வாங்கியுள்ளது. மதங்கள் யாவும் ஓரின சேர்க்கைக்கே அல்ல செக்ஸுக்கும் எதிரிகள்தான். மனிதனை தன்னை மறக்கச்செய்யும் எதுவும் இறைவனையும் மறக்க செய்துவிடும் என்பதே மதங்களின் அச்ச்ம். எனவே தான் செக்ஸை ஏறக்குறைய தடை செய்து வைத்துள்ளன.

உலகில் மாறாதது மாற்றம் ஒன்றுதான். மாற்றம் என்பது பழமை வாதிகளுக்கும் மதவாதிகளுக்கும் மரணத்துக்கு ஒப்பானதாக உள்ளது. “காமி கானி வாடு மோட்ச காமி கா லேடு ” இது தெலுங்கு சொலவடை. அதாவது காமத்தை அனுபவிக்காதவன் மோட்சத்தை விரும்புபவனாய் மாற முடியாது என்பதே. பேரின்பம் முழு சினிமா என்றால் சிற்றின்பம் என்பது சினிமா ஸ்லைடு மாதிரி. ஸ்லைடையே பார்க்காதவனுக்கு சினிமா பார்க்க வேண்டும் என்ற எண்ணம் கூட தோன்றாது.

அந்த காலத்தில் பால்ய திருமணங்கள் நடைபெற்றன. ஆனால் மருத்துவத்துறை வளராத காலம் என்பதால் இளம் விதவைகள் பிரச்சினை பெரும் பிரச்சினையாக இருந்தது. இப்போது மட்டும் என்ன வாழ்கிறதாம் பிள்ளைக்கு ஒரு பத்தாயிரம், மருமகளுக்கு ஒரு பத்தாயிரம் ஸ்கூல் ஃபீஸ் கட்ட முடியுமா ? முடியாது.

இளமையை முற்றாய் தொலைத்தாலன்றி படிப்பு முடியாது,வேலை கிடைக்காது.(இப்போதெல்லாம் வேலை கிடைத்தால் மட்டும் போதாதாம். செட்டில் ஆகனுமாம்.அதுக்குள்ற இளமை போயே போச்) ஓரின சேர்க்கை பெருக காரணமே சமூகம் செக்ஸ் மீது விதித்துள்ள தடைதான். ஜெனட்டிக்,மன காரணங்களால் ஹோமோக்கள் ஆனவர்கள் உண்டு என்றாலும் இல்லாத குறைக்கு அந்த கரை பக்கம் ஒதுங்கியவர்களும் உண்டு.

இது இயற்கைக்கு விரோதமானது என்பதோடு, மன கோளாறும் கூட. எயிட்ஸுக்கு முக்கிய காரணமாகவும் கூறப்படுகிறது. இன்னிலையில் ஓரின சேர்க்கை பற்றி பேசுவோர் கூட முப்பது, நாப்பது வயசு வரை செக்ஸ் எண்ணங்களை உள்ளடக்கி வைத்து தலையில் சொட்டை,தொந்தி,வாங்கி மெனோஃபஸ் வயதில் கல்யாணம் செய்து, தனிமைக்கு பழகிப்போய் பெண் ஆணை வைபரேடராகவும், ஆண் பெண்ணை ஸ்பென்ஸர் ப்ளாசா ஸ்பெஷல் பொம்மையாகவும் வாழ்ந்து நாறிப்போவதை காட்டிலும் பாலியல் தொழிலாளிகளுக்கு (ஆண், பெண்) லைசென்ஸ் வழங்குவது நல்லதல்லவா?
எப்படியும் குழந்தை,எயிட்ஸ் பயத்துக்குதான் காண்டோம் இருக்கிறதே. உள்ளடக்கி வைக்கப்பட்ட செக்ஸ் எண்ணங்களே வன்முறைக்கு காரணம் என்று மனோதத்துவம் கூறுகிறது

எனவே ஓரின சேர்க்கை பற்றி யோசிக்கும் வேகத்திலேயே (பின்வாங்குவதில் காட்டிய வேகத்தில் அல்ல) விபச்சாரத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்குவது குறித்தும் அரசு பரிசீலிப்பது நல்லது.

இந்த‌ ப‌டைப்பே ஒரு விப‌த்து. ம‌னித‌ வாழ்வு அக்மார்க் விப‌த்து. ஒரு எல‌க்ட்ரானிக் உப‌க‌ர‌ண‌த்தில் ஆன்,ஆஃப் ஸ்விட்ச் இருப்ப‌து போல் ஒவ்வொரு உயிரிலும் உயிர் வாழும் இச்சையும்,த‌ற்கொலை இச்சையும் சேர்ந்தே உள்ள‌ன‌. ம‌னித‌ர்க‌ள் வெவ்வேறு போர்வைக‌ளில் செய்வ‌து இர‌ண்டைத்தான். 1.கொல்வ‌து 2.சாவ‌து. இவை இர‌ண்டுமே செக்ஸ்,மற்றும் ப‌ண‌த்தில் கைகூடுவ‌தால் தான் ம‌னிதனுக்கு செக்ஸ் ம‌ற்றும் ப‌ண‌த்தின் மீது இத்த‌னை காத‌ல்.

முக்தி என்ப‌து என்ன? எண்ண‌ங்க‌ள் இற‌த்த‌லே முக்தி. செக்ஸில் ஆர்காச‌ம் அடையும்போது எண்ண‌ங்க‌ள் இற‌க்கின்ற‌ன‌. ஒரு செக‌ண்ட் ப்ளாக் அவுட் ஏற்ப‌டுகிற‌து. இதை மீண்டும் மீண்டும் பெற‌த்தான் ம‌னித‌ன் செக்ஸில் ஈடுப‌டுகிறான்.

உயிர்வாழும் இச்சை ப‌டைப்புக்கு தூண்டுகிற‌து. ப‌டைப்பால் ம‌னித‌ன் பார்ஷிய‌லாக‌ இற‌க்கிறான். டூ இன் வ‌ன். ம‌னித‌ உட‌லில் இருப்ப‌து ஒரே ச‌க்தி தான். அது காம‌ ச‌க்தி. அவ‌ன‌து செய‌ல்பாடுக‌ளை பொருத்து அது யோக‌ ச‌க்தியாக‌ மாறுகிற‌து.

செக்ஸில்,பிள்ளைகள் பெறுவதில் முழுமையாக செல‌வ‌ழித்து விட‌ முடியாத‌ அள‌வுக்கு ஆண்மை உள்ள‌வ‌னே ப‌டைப்பு தொழிலுக்கு வ‌ருகிறான். அங்கும் முழுமையாக செல‌வ‌ழியாத‌ காம‌ ச‌க்தி தான் அவ‌னை முக்திக்கு தூண்டுகிற‌து.

ப‌ண‌ம்,செக்ஸ் உத‌வியால் ஒரு ம‌னிதன் முழுமையாக‌ சாக‌வும் முடியாது ,எதிராளியை முழுமையாக‌ கொல்ல‌வும் முடியாது. தியான‌த்தால் இவைஇர‌ண்டுமே சாத்திய‌ம். இந்த‌ உண்மையை அனைவ‌ரும் அறிய‌ முத‌ற்க‌ண் அவ‌ர்க‌ளுக்கு செக்ஸும்,ப‌ண‌மும் த‌ங்கு த‌டையின்றி கிடைக்க‌ வேண்டும். இவற்றை (ஒரு ஜோதிட ஆய்வாளனாக கிர‌க‌ங்க‌ளின் பாதிப்புகளை, அவை வேலை செய்யும் விதத்தை அறிந்த‌வ‌ன் என்ற‌ முறையில்) ம‌க்கள் முழுமையாக, த‌ங்கு த‌டையின்றி,ச‌ட்ட‌ப்பூர்வ‌மாக‌,த‌ரும‌ வ‌ழியில் பெற‌ உத‌வுவ‌தே என் ப‌திவுக‌ளின் நோக்க‌ம்.

மனித‌னுக்கு ம‌ர‌ண‌ம் என்றால் ப‌ய‌ம். இருட்டு ம‌ர‌ண‌த்துக்கு சிம்ப‌ல். த‌னிமை ம‌ர‌ண‌த்துக்கு சிம்ப‌ல். இதனால் தான் ராத்திரியில் ப‌வ‌ர் க‌ட்டானால் கூட‌ மின் நிலைய‌ங்க‌ளுக்கு போன் மேல் போன். இத‌னால் தான் 6 முத‌ல் 60 வ‌ய‌து வ‌ரை ம‌னித‌ன் காத‌லித்துகொண்டே இருக்கிறான். நீயே உன் ஒளியாக‌ இரு என்றான் புத்த‌ர். எத்த‌னை பேரால் இப்ப‌டி வாழ‌ முடியும். ஏழ்மையும்,த‌னிமையும் ம‌னித‌னை வெருட்ட‌ ஆர‌ம்பிப்ப‌தால் தான் ம‌க்க‌ள் ப‌ண‌ம் ப‌ண‌ம் என்று ப‌ற‌க்கிறார்க‌ள்.ஈவ் டீசிங்,க‌ற்ப‌ழிப்புக‌ள்,க‌ள்ள‌ உற‌வுக‌ள் எல்லாமே இத‌ன் விளைவுதான்.

இத‌ற்காக‌த்தான் ஆப்ப‌ரேஷ‌ன் இந்தியா 2000 திட்ட‌த்தை தீட்டினேன். அத‌ன் அம‌லுக்கு 1986 முத‌லாக‌ உழைத்து வ‌ருகிறேன். பாலிய‌ல் தொழிலுக்கு ச‌ட்ட‌ அங்கீகார‌ம் வ‌ழ‌ங்க‌ வேண்டும் என்று தொட‌ர்ந்து குர‌ல் கொடுத்து வ‌ருகிறேன்.

த‌ன‌து அடிம‌ன‌தில் உள்ள‌ ,அடிப்ப‌டை கோரிக்கைக‌ள் (சாவ‌து,சாவ‌டிப்ப‌து) செக்ஸிலோ,ப‌ண‌த்தாலே நிறைவேறாது, அது தியான‌த்தின் மூல‌ம் ம‌ட்டுமே சாத்திய‌ம் என்று ம‌னித‌ன் அனுபவ பூர்வமாக உண‌ர‌ வேண்டுமானால் ப‌ண‌ம்,செக்ஸ் முழுமையாக, த‌ங்கு த‌டையின்றி,ச‌ட்ட‌ப்பூர்வ‌மாக‌,த‌ரும‌ வ‌ழியில் கிடைத்தாக‌ வேண்டும். என் நாடு சித்த‌ர்க‌ள் சூட்சும‌ வ‌டிவில் இன்றும் வாழும் பொன்னாடு. இந்நாட்டு ம‌க்க‌ள் அனைவ‌ருமே ஞான‌ம் பெற‌வேண்டும். அத‌ற்கு முத‌ல் ப‌டியாக‌
ப‌ணம் மற்றும் செக்ஸை முழுமையாக, த‌ங்கு த‌டையின்றி,ச‌ட்ட‌ப்பூர்வ‌மாக‌,த‌ரும‌ வ‌ழியில் பெற‌வேண்டும்.

ஜோதிட சாஸ்திர‌ மர்மங்கள் ஆயிரமாயிரம்.

ஜோதிட சாஸ்திர‌த்தில் உள்ள மர்மங்கள் ஆயிரமாயிரம்.. எல்லோரும் ஒரே பஞ்சாங்கத்தை தான் உபயோகிக்கிறோம். சிலர் சொல்வது நடக்கிறது. பலர் சொல்வது நடப்பதில்லை. இதை வைத்தே பகுத்தறிவாளர்கள் ஜோதிடம் விஞ்ஞானம் அல்ல என்று கூறிவிடுகிறார்கள்.
எந்த ஜோதிடர் பலன் கூறினாலும் அது அப்படியே நடக்க வேண்டும் என்றால் அதற்கு சில மர்மங்களை ஜோதிட நிபுணர்கள் பகிரங்கப் படுத்த வேண்டும் . நான் நிபுணர் அல்ல என்ற போதிலும் இதை துவங்கி வைக்கிறேன்.
ஜோதிட சாஸ்திரத்தில் எத்தனையோ விதிகள் உள்ளன. இவற்றில் எது முக்கியம் எது முக்கியமல்ல என்பதை புரிந்து பலன் கூறவேண்டும்.
1.உதாரணமாக கிரகங்களுக்கு நைசர்கிக சுபத்துவ,பாபத்துவம் ‍/ லக்னாத் சுபத்துவ,பாபத்துவம் என்று இரண்டு விதிகள் உள்ளன. இதில் லக்னாத் சுபத்துவ,பாபத்துவ விதியையே அப்ளை செய்ய வேண்டும்.
2.எண்சாண் உடலுக்கு சிரஸே பிரதானம் என்பது போல் லக்னம்,லக்னாதிபதி பலத்தை வைத்துத் தான் மற்ற கிரகங்கள் பலனளிக்கின்றன.
லக்னாதிபதி 6,8,12 லிருக்க, அல்லது அஸ்தங்கதம் அடைந்திருக்க மற்ற கிரகங்கள் என்னதான் நல்ல நிலையில் இருந்தாலும் நல்ல பலன் கள் ஏற்படுவதில்லை. அதே போல் லக்னாதிபதி 6,8,12 அதிபதிகளோடோ,லக்னாத் பாபர்களோடோ சம்பந்தப்பட்டாலும் நிலைமை இது தான்.
3.பிரபல தோஷங்கள் இருத்தல் : உதாரணமாக செவ்வாய் தோஷம்,சர்ப்ப தோஷம்,குருசந்திர தோஷம்
4.பாபர்கள் வலுத்தும்,சுபர்கள் வலுக்குன்றியும் இருத்தல்
5.லக்னாதிபதியை விட 6,8,12 அதிபர்கள் அதிகம் பலம் பெற்றிருத்தல்
6.சுபபலனை தரவேண்டிய கிரகங்களின் தசைகள் இளமையில் வராது போதல். (இதுவே சுக்கிரன் சுபனாக இருந்து இளமையில் சுக்கிர தசை வந்தாலும் தொல்லையே.
7.தாய்,தந்தையரின் ஜாதகங்களில் 5 ஆமிடம் வலுக்குன்றியும், சோதர,சோதரிகள் ஜாதகத்தில் 3 ஆமிடம் பாப சம்ம்ந்தம் பெற்றுமிருத்தல்
8.ஜாதகர் தம் ஜாதகத்தில் வலுக்குன்றிய கிரகத்தின் தொழில்,வியாபாரம்,வேலையில் ஈடுபட்டிருத்தல்
9.சேரக்கூடாத கிரக‌ங்கள் சேர்ந்திருத்தல்,
10.மாங்கல்ய தோஷம் உள்ள பெண்ணை மணத்தல், இருதார ஜாதகனை மணத்தல் போன்ற அம்சங்களும் நற்பலன் களை தடுத்து விடுகின்றன‌.
11. அதே போல் வாஸ்து கோளாறுகள்: வாடகை வீடாக இருக்கும் பட்சத்தில் நல்ல தசை,புக்தி வந்ததுமே அந்த நல்ல நேரம் அந்த வீட்டிலிருந்து வெளியே கிளப்பிவிடும். ஒரு வேளை சொந்த வீடாக இருந்தால்? இவர்கள் வீடு மாறமாட்டார்கள். கிரக பலன் அவ்வீட்டின் கெடுபலனை கட்டுப்படுத்துவதிலேயே செலவழிந்து விடும்.
12. நஷ்ட ஜாதகர்களுடன் கூட்டு: நம் ஜாதகம் நல்ல ஜாதகமாயிருந்தாலும் நஷ்ட ஜாதகர்களுடனான் கூட்டு அது தரும் நல்ல பலன் களுக்கு வேட்டு வைத்து விடும்.
13.பிள்ளைகள் ஜாதகம்: நமக்குப் பிறக்கும் பிள்ளைகளின் ஜாதகத்தில் 9 ஆமிடம் கெட்டால் தந்தை காலி, 4 ஆமிடம் கெட்டால் தாய் காலியாகிவிடுவார். தாய்,தந்தையரின் ஜாதகம் தீர்காயுஷ் ஜாதகமாக இருந்தால் போண்டியாகி விடுவார்கள்.

14.நேரம் தவறிய செயல்: சிலர் நல்ல நேரத்தில் அடிமைத்தொழில் செய்வர், கெட்ட நேரத்தில் சொந்தத் தொழில் செய்வர்.

ஜோதிடம் பெயரால் மோசடிகள்

ஜோதிடம் பெயரால் நடைபெறும் மோசடிகளை ஒரு தொழில் முறை ஜோதிடனான நானே எடுத்துக்கூற இருப்பது தங்கள் பூர்வ ஜென்ம புண்ணியமென்றே கூற வேண்டும்.
1.பேர் ராசிக்கு பலன் சொல்லி ஜல்லியடிப்பது. இது 100 சதம் போலி. சிலர் ரொம்பவே சாலாக்குடன் 30 வயசுக்கு பிறகு வச்ச பேருதான் வேலை செய்யும் என்பதும் உண்டு. என் கேள்வி : நாய்க்கு டைகர் என்று பெயர் வைத்த மாத்திரத்தில் அது புலியாகிவிடுமா என்ன ?
இதே மாதிரி கல்யாண பொருத்தத்திலும் மோசடிகள் நடைபெறுகின்றன. வச்ச பேரு, வீட்டுல கூப்புடர பேரு, செல்ல பேருக்கெல்லாம் பொருத்தம் பார்க்கிறது வேஸ்ட். ஜாதகம் பொருந்தனும். தோசங்கள் சமமா இருக்கனும். தச வித பொருத்தங்கள்ள ரஜ்ஜு நாடி கரெக்டா இருக்கனும் தட்ஸ் ஆல்
2.ஜன்ம நட்சத்திரம் அல்லது ஜன்ம ராசியை வைத்து பலன் சொல்லிவிட்டு இதுதான் உன் எதிர்காலம் என்பது. இதுவும் மிகப்பெரிய தவறாகும். மோசடி என்றே கூறலாம். வாழ்க்கை எனும் ரயில் ஜாதகப்படி நடைபெறும் தசாபுக்திகள்,தற்கால கிரக சஞ்‌சாரம் எனும் 2 தண்டவாளங்களின் மீது பயணிக்கும். வெறுமனே கோச்சார பலனை சொல்வது ஊரை ஏமாற்றும் செயலாகும்.(பத்திரிக்கைகளில் வெளியாகும் ராசிபலன்கள் கூட மோசடிதான்.
3.உண்மையில் கோச்சாரப்படி சொன்ன நல்லதோ கெட்டதோ நடைபெறுமானால் உங்கள் ஜாதகம் சப்பை,தக்கை ,என்று அர்த்தம்.

4.சூரியன்,சந்திரன்,செவ்வாய்,ராகு,குரு,சனி,புதன்,கேது,சுக்கிரன் என்று 9 கிரகங்கள் இருந்தாலும் ஒவ்வொரு லக்னத்துக்கும் 3 கிரகங்கள் தான் சுபர்.அதாவது நன்மை செய்யும் கிரகங்கள். சர்ப்ப தோஷமில்லையென்றால் ராகுவும் நலம் புரிவார். எனவே அது உச்சம், இது உச்சம் என்று பூ சுற்றினால் நம்பாதீர்கள். லக்னத்துக்கு சுபனாக இருக்கும் கிரகம் உச்சம் பெற வேண்டும் . அது கூட ஸ்தான பலம், அஸ்தமனம்,வக்கிரம் போன்ற லொள்ளுக்கு உள்ளாகாது இருக்க வேண்டும். அப்போதுதான் பஞ்சமகா புருஷ யோகங்கள் (கிரகம் உச்சம் பெற்ற) வேலை செய்யும்.
5.அப்படியே கிரகங்கள் உச்சம் பெற்றிருந்தாலும் நீங்கள் அந்த கிரகம் தொடர்பான கல்வி,தொழிலில் ஈடுபடுவதோடு, மேற்படி கிரகம் தொடர்பான மனிதர்களுடன் தொடர்பு கொண்டிருந்தால் தான் அந்த கிரகம் தரும் யோகம் வேலை செய்யும்.
6.தனயோகம் என்பது வாயை கட்டி,வயிற்றை கட்டி ஒன்று அல்லது இரண்டு லட்சங்களை சேர்த்துவைத்து ஊர் வாயில் போட்டு முழிப்பதல்ல. எத்தனை லட்சங்களை வீணாக்கினாலும் மீண்டும் மீண்டும் லட்சங்கள் வரவேண்டும் அதுதான் தனயோகம்.

7. சுப கிரகங்கள் தரும் யோகம் ஒரு விதமாக, அசுப கிரகங்கள் தரும் யோகம் வேறு விதமாக பலன் தரும்.

8. வீட்டுக்கு கடைக்கால் எப்படியோ ஜாதகத்துக்கு லக்னம் முக்கியம். லக்னம்,லக்னாதிபதி கெட்டிருந்து எத்தனை யோகங்கள் இருந்தாலும் வேஸ்டுதான்
9.ஒரு ஜாதகனுக்கு பணம் வரக்கூடாது என்று சொல்லக்கூடிய நாள் எதுவும் கிடையாது/எவருக்கு எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பணம் வரலாம். (அஷ்டமாதிபதி தசையில் கூட கால் போய்,கை போய் பணம் வந்திருக்கிறது) என்னவொரு பிரச்சினை என்றால் கெட்ட நேரத்தில் வரும் பணம் வீணாகும். நல்ல நேரத்தில் வரும் பணம் உபயோகப்படும்.

மறு மொழிக்கு மறுமொழி :சுன்னத் செய்து கொண்டுவிட்ட ஆணுக்கு

நண்பரே !
ஆக்கப்பூர்வமாக அணுகி பொறுமையுடன் தங்கள் வாதத்தை எடுத்து வைத்தமைக்கு நன்றி. பிறப்புறுப்புகளுக்கு் கடைசிச்சொட்டு சிறு நீரே கேடு விளைவிக்கும் என்றால் ஜன சஞ்சாரமிக்க இடங்களில் கிடைக்கும் கற்களில் அதுவும் மழைகாலங்களில் என்றால் சொல்லவே தேவையில்லை. அவற்றில் எத்தனை கோடி கிருமிகள் இருக்குமோ சிந்தித்து பாருங்கள். நாயகம் கூறியது பாலை நிலத்துக்கு 100 சதம் பொறுத்தம்.

அழுக்கை சுத்தப்படுத்தத்தான் தண்ணீர் இருக்கிறதே (In our country) . பாலை நிலத்தில் தண்ணிர் கிடைப்பது துர்லபம். எனவே தான் நாயகம் இப்படி கூறியிருக்கிறார். சற்றே சிந்தித்து பாருங்கள். சுன்னத் செய்து கொண்டுவிட்ட ஆணுக்கு எப்படி அழுக்கு சேர முடியும் ?

மருத்துவர்கள் நீரையோ,வென்னீரையோ, ஏன் டெட்டால் கலந்த நீரையோ ரெகமண்ட் செய்வார்களே தவிர ஆயிரம் பேர் உபயோகித்த கற்களை ரெகமென்ட் செய்யமாட்டார்கள்.

இது நிச்சயம் எனக்கொரு செய்தியே ! வரவேற்கத்தக்கது . ஆஹா அற்புதமான பிரயோகம் ?

நான் மேற்சொன்ன சொன்னதை இஸ்லாமாக புரிந்து கொள்ளவில்லை என்பதை உறுதியாக கூற முடியும்.

மீண்டும் சொல்கிறேன்.. இஸ்லாம் மட்டும் நூற்றுக்கு நூறு பின்பற்றப்படுமேயானால் சர்வ‌ நிச்சயமாக வேறொரு மதம் இந்த பூமியிலேயே தொடர முடியாது.

செய்வதை பார்த்து இஸ்லாமை தவறாக புரிந்து கொள்ளாதீர்கள் என்றீர்கள் . பெரும்பாலான முஸ்லீம்கள் பின்பற்றும் பலவும் இஸ்லாமுக்கு விரோதமாக இருப்பதை காண்கிறேன். அவை குறித்த விவரங்களை தனிப்பதிவாகவே இட்டால் நலம்.

ஔரங்கசீப் தர்காவுக்குள் செல்வார். சலாம் அலைக்கும் என்று சலாம் கூறுவார். தர்காவுக்குள் புதை பட்டிருக்கும் பெரியவரிடம் பிரதி சலாம் வர வேண்டும். இல்லையோ அந்த தர்கா இடிக்கப்படும்.

அவ்வாறே எந்த ஒரு மசூதிக்குள் தொழுகை நடத்தும்போது ஔரங்கசீபுக்கு இணக்கமான வைபரேஷன்ஸ் கிடைக்கவில்லையோ அந்த மசூதி இடிக்கப்படும். ஔரங்கசீபின் இறை நம்பிக்கைக்கு ஒரு உதாரணம். ஔரங்கசீப் தொழச்செல்லும் மசூதி வாயிலில் எப்போதும் ஒரு குருடன் இருப்பது வழக்கம். ஒரு நாள் ஔரங்கசீபுக்கு தோன்றியது “இறைவன் பேரருளாளனாய் இருக்கும்போது மசூதி வாயிலிலேயே இருக்கும் இந்த குருடனுக்கு ஏன் பார்வை கிடைக்கவில்லை..? ஆம் இவன் இறை நம்பிக்கையற்றவனாய் தான் இருக்கவேண்டும் அதனால் தான் பார்வை பெறவில்லை. இறை நம்பிக்கைக்கு களங்கம்கற்பிக்கும் வகையில் இவன் இங்கே இருக்கக்கூடாது “என்று முடிவு செய்தார்.

குருடனை அழைத்தார். ” இதோ பார் ! நான் தொழுகைக்கு சென்று திரும்புவதற்குள் உனக்கு பார்வை கிடைத்திருக்கவேண்டும் இல்லை
என்றால் உன் கழுத்தை வெட்டியெறிவேன்”

தொழுகைக்கு சென்றார். திரும்பினார். குருடன் பார்வை பெற்றிருந்தான் . இது தான் ஔரங்கசீபின் இறை நம்பிக்கைக்கான அடையாளம். அவர் குரான் பிரதி எடுப்பதிலும், தொப்பிகள் தயாரித்து விற்பதிலும் கிடைத்த பணத்தை மட்டுமே சொந்ததுக்கு உபயோகித்து வாழ்ந்தார் என்பது யாவரும் அறிந்ததே. பாபர் ,ஹுமயூன் கதை தெரியுமா? அது அடுத்த பதிவில்

ஔரங்கசீப் தர்காக்களை,மசூதிகளை கூட இடித்து தள்ளியிருப்பது தெரியுமா?

இஸ்லாமில் என்னை கவர்ந்தவை (‍சில உறுத்தல்கள்)
இஸ்லாமில் என்னை கவர்ந்தவை :
வட்டியை தடை செய்துள்ளமை. (யதார்த்தத்தில் பலரும் வட்டி வாங்குவதும் கொடுப்பதும்)
வரதட்சிணைக்கு தடை அதற்கு பதில் மொஹர் (யதார்த்தத்தில் வரதட்சிணை கொடுக்கல் வாங்கல் உள்ளது)
சம‌த்துவம், சகோதரத்துவம் நமாஸ் வேளைகளில் யார் முன்னே வந்தால் அவருக்கு முதலிடமே தவிர இந்து கோவில்கள் போல் கொள்ளையடிப்பவனுக்கு பூர்ண‌கும்பம் எல்லாம் கிடையாது‌

(யதார்த்தத்தில் பார்க்கும்போது என்னென்னவோ பிரிவினைகள் சன்னி,ஷியா,லெப்பை)
இறைவனை தவிர வேறு எவனுக்கும்,எதற்கும் தலைவணங்காமை (இதுவும் நடைமுறையில் 100 சதம் பின்பற்றப்படுவதில்லை) இதே கான்செப்ட் இந்து மதத்தில் ஊடாடினாலும (நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்) தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்று கூறி மைல் கல்லுக்கெல்லாம் படையல் போடுகிறோம்.

ஔரங்கசீப் இந்து கோவில்களை இடித்ததாய் இந்துத்வாவாதிகள் வாதிடுவது உண்டு. அதே ஔரங்கசீப் தர்காக்களை,மசூதிகளை கூட இடித்து தள்ளியிருப்பது தெரியுமா? அதற்கான காரணம் எத்தனை உத்தமமானது தெரியுமா? அவை அடுத்த பதிவில்இந்து மதம் போலவே இஸ்லாமிலும் பண்டித கூச்சல்கள் அதிகமாய் உள்ளன. அண்டர்வேர் அணியலாமா கூடாதா என்று ஒரு அப்பாவி முஸ்லீம் கேட்டால் கூட ஒரே பதிலை கூற முடியாத நிலை உள்ளது. இஸ்லாம் குறித்த விவாதங்களில் தத்துவத்தின் மையத்தை விட்டு விலகிப்போகும் தன்மை உள்ளது. இதற்கு மதப்பெரியவர்களே காரணமாய் உள்ளது வருத்தம் தருகிறது.

இந்துக்களும் உண்ணாவிரதம் இருக்கிறோம். டம்ளர் டம்ளராக காபியும்,டீயும் உள்ளே தள்ளி மதியம் 2 க்கெல்லாம் வடை பாயாசத்துடன் விருந்து உண்கிறோம். ஆனால் ரமலான் நோன்பை பாருங்கள். நோன்பென்றால் அதுதான் நோன்பு.