உங்களுக்கும் ராஜயோகம் : 4

hands up

அண்ணே வணக்கம்ணே !
உங்களுக்கும் ராஜயோகம்ங்கற இந்த தொடரை ஆரம்பிக்கும் போதே கொஞ்சம் உதறல் தான். ஏன்னா நம்ம சனத்துல 99.99 சதவீதம் தொண்டர்கள் கேட்டகிரி தான். ஆனால் இதை எவனும் ஒப்புத்துக்கமாட்டான். பாலிட்டிக்ஸ்? அதெல்லாம் கிழவாடிங்க சமாசாரம்பான். அல்லது சாக்கடைன்னுவான். அல்லது ஓட்டு பிச்சை எடுக்கனும்.அதெல்லாம் நமக்கு வேலைக்காகாதும்பான்.

கொஞ்சம் சுரண்டி பார்த்தா ஒரு கவுன்சிலரு சாக்கடை கனெக்சனுக்கு இவன் விரைய பிதுக்கி லஞ்சம் வாங்கினப்பயோ அல்லது விஐபி கான்வாய்க்காக ட்ராஃபிக்கை நிறுத்தின சமயம் இவன் அந்த ட்ராஃபிக் ஜாம்ல மாட்டி சொட்டை தலை தீய்ஞ்சு போனப்பவோ ஒரு செகண்ட் நவீன பாஞ்சாலி மாதிரி சபதம் போட்டிருப்பான்.ஆனால் அடுத்த நிமிட்டே புஸ்.

நம்ம நாட்ல உள்ள எம்.எல்.ஏ,எம்பி,எம்.எல்.சி இவிக தளபதிகள் நெம்பரை எல்லாம் கூட்டினா கூட மொத்த ஜனத்தொகையில 1 சதவீதம் கூட தேற மாட்டானுவ.
ஆனால் இவிக தேன் மத்த 99 சதவீதத்தை ஆள்றாய்ங்க. ஏன் இப்படி? இவிக அப்பன்லாம் ஒரு கையில பஞ்சாங்கத்தையும்/ஒரு கையில வாட்சையும் வச்சுக்கிட்டா லைட்டை ஆஃப் பண்ணியிருப்பாய்ங்க? அதெல்லாம் கிடையாது . ஒலகத்துல கமலஹாசனோட அப்பாதான் ஏதோ தத்து பித்துன்னு இந்த ரூட்ல ஆராய்ச்சி பண்ணியிருக்காரு.அதுவும் அவர் பஞ்சாங்க மேட்டரை டச்சு பண்ணாரா இல்லையா தெரியாது .

பின்னே ஏன் இப்படி நடக்குது?

ராஜகிரகங்களின் பலம் உடையவன் மட்டும் நாட்டை ஆள வந்திருந்தா இந்த கேடு கெட்ட நிலையில ஏன் நாடு இருக்கப்போகுது?மேட்டர் என்னடான்னா ..
நவகிரகம் நவகிரகம்ங்கறமே ( நவம்னா 9) ஒரு காலத்துல 7 கிரகம் தான் . ராகு கேது கிடையவே கிடையாது. நம்ம பாடில உள்ள சப்த தாதுக்கள் சப்த கிரகங்களால பாதிக்கப்படுது. நம்ம ஜாதகத்துல உள்ள 7 கிரகங்களின் வலிமையை பொருத்து நமக்குள்ள அந்த கிரகம் தொடர்பான தாது இருக்கு -இழக்கப்படாம இருக்குது – ஒரு வேளை தற்காலிகமா இழக்கப்பட்டாலும் கிரகிக்கப்படுது .

உ.ம் குரு -தங்கம், செவ் -செம்பு,சூரியன் -பித்தளை

ஒருத்தன் ஜாதகத்துல குரு உச்சமா இருக்காருனு வைங்க. அவன் பாடியில குரு தொடர்பான தாதுக்கள் தன்னிறைவு பெற்றிருக்கும். வெளிய இருந்து பூஸ்ட் தேவைப்படாது .அவனுக்கு குரு காரகமான ஞாபக சக்தி ,திட்டமிடல் இத்யாதி இத்யாதி எல்லாம் இயற்கையாவே அமைஞ்சிருக்கும்.

இதுவே ஒருத்தன் ஜாதகத்துல குரு செம பல்பு வாங்கியிருக்காருனு வைங்க. அவன் பாடியில குரு தொடர்பான தாது இருக்கவே இருக்காது .அதை வெளிய இருந்து சீக்கிரத்துல கிரகிக்கனும்ங்கற சப்கான்ஷியஸ் தாட்ல அவன் சவரன் சவரனா தங்கத்தை சேர்த்து போட்டு போட்டு அழகு பார்ப்பான். ஆனால் இந்த தங்க நகையிலருந்து குரு தொடர்பான தாது பாடிக்கு கிடைக்குமான்னா ..கிடைக்கலாம்.டெம்ப்ரரியா கிடைக்கலாம். ஓவர் ட்ராஃப்ட் மாதிரி .ஆனால் பொசுக்குனு போயிரும்.

ஹ்யூமன் பாடியோட பெசாலிட்டியே இதான்.அது தனக்கு தேவையானதை தானே ஜெனரேட் பண்ணிக்கனும்.வெளிய இருந்து கொடுத்தா ஏத்துக்காது .அப்படியே ஏத்துக்கிட்டாலும் பொசுக்குனு எக்ஸாஸ்ட் பண்ணிரும்.

இந்த குரு பலமில்லாத கேஸு தங்கத்தை போட்டு போட்டு பார்ப்பான் வேலைக்காகாது .பின்னே எப்படி இதை பெறுவது? பாலிட்டிக்ஸ்ல உள்ள (உண்மையிலயே குரு பலத்தோட) தலீவர்களை பார்க்கிறான்னு வைங்க. அப்ப அவன் மைண்டுக்குள்ள (சப்கான்ஷியஸ் மைண்ட்) கொய்யால .. நாமளும் குதிக்கனும்டா ..அப்பத்தேன் அந்த தலீவருங்களை போல பளிச்சுன்னு ஆயிருவம்ங்கற இன்ஸ்டிங்ட் அவனுக்குள்ள வரும்.

ஏற்கெனவே சொன்னதை போல அரசியல் சூழல் அவனோட பயோ கெமிஸ்ட் ரியில கொஞ்சம் மாற்றத்தை ஏற்படுத்தலாம்.ஆனால் ஏற்கெனவே சொன்னதை போல சில நாட்களிலோ மாதங்களிலோ புஸ் ஆயிருது .(பஸ்ட் ஆன லாரி யூபுக்கு சைக்கிள் பம்புல காத்தடிச்ச கதை )

இதுவே குரு பலம் உடையவன்? அவனுக்கு அரசியலுக்கு வரனும்ங்கற அவசியமே இல்லை. அரசியல்ல குதிச்சு எம்.எல்.ஏ வாகி என்ன சுகம்லாம் அனுபவிக்கனுமோ அதையெல்லாம் -அந்த அரசியல் வாதி பட்ட எந்த ஒரு பாட்டையும் அனுபவிக்காம வாழ்க்கையை அனுபவிச்சுக்கிட்டு போயிட்டே இருப்பான்.
ஆக எந்த துறையை எடுத்துக்கிட்டாலும் எவன் ஜாதகத்துல அந்த துறை தொடர்பான கிரக பலம் இல்லையோ அந்த துறையே இவனை இழுக்குது .இவனும் நாசமாகி அந்த துறையையும் நாசமாக்கிர்ரான். இதான் மேட்டரு .

சூரிய பலம் இல்லாதவன் தலைவனாகறான்,சந்திர பலம் இல்லாதவன் பொதுமக்களை ஈர்க்கிறான் . செவ் பலமில்லாதவன் போலீசுக்கு போறான். கதை கந்தல்.
ஓஷோ ஸ்டைல்ல சொல்லனும்னா உங்களுக்கு அரசியல் ஆர்வம் இருக்கா? அப்ப உங்க ஜாதகத்துல ராஜகிரகங்கள் வலுவா இல்லேனு அருத்தம். அரசியல் ஆர்வமே இல்லையா ? ( சாக்கடை எட்செட் ரா கருத்து இருக்க கூடாது ) ஒரு வேளை உங்க ஜாதகத்துல ராஜகிரகங்கள் வலிமையோட இருக்க வாய்ப்பிருக்கு .
ஓகே பாஸ்.. உங்க ஜாதகம் எப்படி இருந்தாலும் நீங்க அரசியலுக்கு வந்தே ஆகனும்.செயிச்சே ஆகனும்.இதானே உங்க டிமான்ட்? அடுத்த பதிவுலருந்து பாய்ண்ட் டு பாய்ண்ட் டிப்ஸ் அள்ளி வழங்கறேன்.

உங்களுக்கு ஒரு புரிதல் ஏற்படுத்த இந்த அத்யாயத்தை உபயோகிச்சுக்கிட்டேன். (ஏம்பா நான் செரியா பேசறனா?)

யார் யார்..யார் இவர் யாரோ?

faceless

எல்லா ஊர்லயும்/எல்லா க்ரூப்புலயும் ஐடியா மணின்னு கேரக்டர் இருக்கும். மொகர புக்ல ஐடியா மணி ஆருன்னா இந்தாளை தான் சனம் கை காட்டும்.
தமிழகம் மின் மிகை மானிலமாக – தமிழ் வளர – திமுக செயிக்க – ன்னு எதிர்பாராத சப்ஜெக்டுல எல்லாம் ஐடியாங்கள அள்ளி வீசுவாரு .

தமிழ் வளரனும்னா கலைஞர் கவிதை எழுத தடை போடனும் -ரஜினி சொந்த குரல்ல பேசக்கூடாதுன்னு ஆரம்பிப்பார் .
இடையில சில உபயோகமான யோசனைகளுமிருக்கும்.

இதுல டர்ராக்கற மேட்டரு என்னன்னா சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில கத்த வித்தை எல்லாம் இறக்கப்போறேன்னு அடிச்சு விட்டுக்கிட்டிருக்காரு . கடந்த ஜூலை 27 ஆம் தேதி ஒரு தனியார் டிவியில உலக எதிர்காலத்தை பற்றிய குறிப்புகள் அடங்கிய கால ஞானம் என்ற சுவடி நூலை பற்றிய இவரது பேட்டி டெலிகாஸ்ட் ஆகியிருக்குங்கறது ஹைலைட்..

தற்சமயம் ஸ்கை டிஜிட்டல்ங்கற லோக்கல் சேனல்ல இருக்காரு (காப்பிரைட்டர்) அடுத்தது மேஜர் சானல்.அதை வச்சு சினிமா -சினிமால காசு புரட்டி ஒரு பிரச்சார வாகனம் வாங்கிக்கிட்டு ஆல் இண்டியா டூர் .ஷாட் கட் பண்ணா இந்தியாவுல பிரதமர் பதவிக்கு நேரிடை தேர்தல் .நாமதேன் அடுத்த பிரதமர்னு அள்ளி விடறாருன்னு என்னத்த சொல்ல?

பாவம் .. எதையும் தாங்கும் இந்திய மக்களும் தமிழ் ரசிகர்களும் “இதையும்” தாங்க வேண்டி வந்துருமோன்னு மொகறை புஸ்தவமே பீதியில பேதியாகி கிடக்கு .
ப்ளாக் யுகத்துலருந்து மொகரை புக் வரை புதுசு புதுசா கெளப்பி விட்டு ட்ரென்டுல இருக்கிறதுதான் இவரோட பெசாலிட்டி

இவரை என்னதான் கலாய்ச்சாலும் “தம்பீ ..நாம அடிவாங்காத ஏரியாவே இல்லே”ங்கற ரேஞ்சுல ஸ்கிப் பண்ணி போய்ட்டே இருப்பாரு. தன்னை கலாய்க்கற சான்ஸை கூட அடுத்தவனுக்கு கொடுக்காம சேம் சைட் கோல் போடறதுல மன்னன்.

கவிஞர்னு சொல்லிக்குவாரு .படக்குனு விஐபிங்க ஜாதகங்களை எல்லாம் போட்டு பலன் எழுதுவாரு.என்னய்யா இது அக்கிரமம்னா “கணியன் பூங்குன்றனார் “தெரியுமா? கணியன்னா ஜோதிடர்னு அருத்தம்பாரு .

இவரோட ப்ளஸ்ஸா மைனசா தெரியாது ஆனால் தன் சோசிய எழுத்துல வாழ்க்கைய கொண்டு வந்துருவாரு -அரசியல் எழுத்துல சோசியத்தை கொண்டு வந்துருவாரு . எந்த மேட்டரு ட்ரென்ட்ல இருந்தா அதை பத்தின தன் கணிப்பை தில்லா அடிச்சு விடுவாரு .

பௌலிங்குன்னு ஆரம்பிச்சா பவுன்சர் விழறதும் சகஜம் தானே. கனிமொழிக்கு 2 ஜி மேட்டர்ல திகார் வாசமாகட்டும், 2011 த.நா.ச.மன்ற தேர்தல்ல மம்மி சக்ஸசானதாகட்டும் படபடன்னு அடிச்சு விட்டாரு .பச்சக்குன்னு உட்கார்ந்திருச்சு.அந்த சூடு ஆறிப்போறதுக்குள்ள மம்மிக்கு சசியோட முட்டிக்கும் பலான தேதிக்கு பிறவு பேட்ச் அப் நடக்கும்னு அடிச்சு விட்டாரு . நெல்லா போயிட்டிருந்த சமயம் மோடிமேட்டர்ல வாயை வச்சு செம பல்பு ..

இந்த சீரிஸ்ல மோடி பிரதமராகவே முடியாதுன்னு அடிச்சு விட்டாரு .மோடி பிரதமராவே ஆயிட்டாரு .என்னய்யா இப்படி சொதப்பிட்டிங்களேன்னா
அதுக்கும் ஒரு விளக்கம் வச்சிருப்பாரு. சோசியரு ஜட்ஜு கணக்கா விருப்பு வெறுப்பு இல்லாம இருக்கோனம். நமக்கு மோடின்னா செம கடுப்பு.அதான் அந்தாள பத்தின கணிப்பு ஊத்திக்குச்சுன்னுட்டு போயிட்டே இருப்பாரு . ரெம்ப கடுப்பேத்தினா “மோடி பிரதமர் வேலையத்தான் செய்றாரானு கில்லியா கவுண்டர் கொடுப்பாரு.
2011 தேர்தல்ல சுதேசி இதழ்ல இவர் எழுதின நாலு கட்டுரையும் பக்காவா மேட்ச் ஆயிருச்சுன்னா பாருங்களேன்.

இந்த வருசம் டைம்பாஸ்ல கேப்டன் திமுகவோட தான் சேருவாரு . கலைஞர் தான் முதல்வர்னு சொன்னாரா.. சொன்ன முகூர்த்த விசேஷம் கேப்டன் “தனியா தான் நிப்பேன்னுட்டாரு ” இப்பவும் நோ நோ ..கேப்டன் வந்தே தீருவார்னு சொல்லிக்கிட்டிருக்காரு .

மோடி பிரதமராகி 100 நாள் ஆச்சு. சனம் கயிவி கயிவி ஊத்த மோடி ஆளுங்க 100 நாள் தானேப்பா ஆச்சு . இதுல என்னத்த செய்துர முடியும்னு சால்ஜாப் சொல்லிட்டிருந்தாய்ங்க.

உடனே நம்மாளு 100 நாள்ள என்னெல்லாம் செய்திருக்கலாம்னு ஸ்டேட்டஸ் மழை பொழிய ஆரம்பிச்சுட்டாரு. அதோட விட்டாரா Thirumurugan karthikeyan என்ற பட்சி அதை இங்கிலீஷ்ல ட்ரான்ஸ்லேட் பண்ணி கொடுக்க பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பி அவிக தாலிய அறுத்தாரு.

அந்த நேரம் பார்த்து மோடி ஆஸ்திரேலியா போயி கக்கூஸ் கட்ட டொனேஷன் கேட்டாரா.. என் லெட்டருக்கு பதில் போட ஸ்டாம்புக்கு காசில்லியாடான்னு அம்பது ரூவா போஸ்டல் ஆர்டர் அனுப்பி உட்டாரு . பிறவு ஆரோ சொல்ல ஆர்.டி.ஐ படி கேட்டாரு .

பிரதமர் அலுவலகம் சுதாரிச்சுக்கிருச்சு. 2014ஜூலை 16 ஆம் தேதி அனுப்பின லெட்டருக்கு அடிச்சு பிடிச்சு 2015 மார்ச்சுல பதில் வாங்கிட்டாருன்னு பாருங்களேன். கண்ணா இன்னொரு லட்டு தின்ன ஆசையாங்கறாப்ல பி.எம்.ஓ ரெண்டு தபா பதில் போட்டுருச்சுங்கோ..(தீயா வேலை செய்யனும் கொமாரு ).
ஆனால் பிரச்சினை எங்க வருதுன்னா அவரோட 100 நாள் வேலை திட்டம் இப்படி ஆரம்பிக்குது ..பாவம் பிரதமர் அலுவலகத்துலருந்து கு.பட்சம் அரைடஜன் பேருக்காவது பேதியாகி இருக்கும்.

நதிகள் இணைப்புன்னு ஒரு மேட்டரை அப்பப்போ எடுத்து விடுவாரு. இதுக்கு ஆக்சன் ப்ளான் இருக்கு. இதை அமல்படுத்த பைசா புரட்டவும் நம்ம கிட்ட ப்ளான் இருக்கும்பாரு .
திடீர்னு ஒரு நாள் என் திட்டத்தோட 234 பிரதிகளை தமிழ் நாடு சட்டமன்ற சபா நாயகருக்கு அனுப்பியிருக்கேன்னு பார்சலை படம் பிடிச்சு போடுவாரு .
பதில் வல்லன்னா கார்டனுக்கு மறுபடி 234 பிரதி அனுப்புவாரு .மம்மி பரப்பன அக்ரஹாராவுல நொந்து நூடுல்ஸ் ஆகிட்டிருந்தப்போ முன் பதிவு திட்டத்துல தான் வெளியிட்ட 4 புக்கையும் -கூடவே தன் ஆக்சன் ப்ளானையும் செயிலுக்கே அனுப்பியிருக்கிறதா ஒரு அப்டேட் கொடுப்பாரு . கூரியர் காரனோட பி.ஓ.டி யை ஸ்கான் பண்ணி போடுவாரு .

இந்த மேட்டரை சி.எம்.செல்லுக்கு அப்டேட் பண்ண -பன்னீரு முதல்வரா இருந்தப்போ இவர் மனுவே ரிஜெக்ட் ஆச்சுன்னா சி.எம்.ஓ காரவிக எந்தளவுக்கு பேதியாகியிருப்பாங்கன்னு பாருங்க.

அப்படியும் நம்மாளு விடல மம்மி வெளிய வந்ததும் மறுபடி சி.எம்.செல்லுக்கு அப்டேட் . இந்த முறை உரிய அதிகாரிக்கு அனுப்பியிருக்கம்னுட்டு டாஸ்மாக் எம்.டி.க்கு அனுப்பிட்டாய்ங்க. டாஸ்மாக் எம்.டி பாவம் சின்சியரா ” கர்னாடகாவுக்கு அனுப்பின யோசனைகளுக்கு நன்றி”னுட்டு பதில் கடிதாசியும் போட்டுட்டாரு.
பதில் வந்ததேன்னு திருப்பதி போய் மொட்டை போட்டு காணிக்கை செலுத்தாம தமிழ் நாட்டை ஆள்றது முதல்வரா டாஸ்மாக் எம்.டியான்னு வில்லங்கம் பண்ணி தன் உரை வீச்சை (?) வீடியோவா போட்டிருக்காரு .

எழுத்துல மட்டும்ல விதவிதமான கெட்டப்புல ஃபோட்டோ புடிச்சு போட்டு அதுக்கும் சில ரசிகர்களை கேட்ச் பண்ணி வச்சிருக்கு பார்ட்டி.
ரசிகர்கள்னு கெத்தா சொல்லிக்கிடலாமே கண்டி அவிக இவரை டைம்பாஸுக்குன்னே வச்சிருக்காய்ங்கங்கறது கன்ஃபர்ம்.

இவரோட பெசாலிட்டி என்னன்னா மொகறை புக்குலைருக்கிற லட்சக்கணக்கான போராளிகள் மாதிரியே மதம்,சாதி, ஊழல் இத்யாதிக்கு எதிரா பயங்கரமா பொங்குவாரு. பிரபலங்களே செமர்த்தியா வாங்கிக்கட்டிக்கிற மேட்டர்ல எல்லாம் அசால்ட்டா பவுலிங் பண்ணிட்டு மூஞ்சி பல்லு உதிராம சேஃபா லேண்ட் ஆயிருவாரு .(அந்த தொழில் ரகசியம் என்னன்னு பலரும் சிண்டை பிச்சுக்கிட்டிருக்கிறாய்ங்க)

இது லூஸா -லூஸு மாதிரி நடிக்குதாங்கற சந்தேகத்துலயே இந்தாள விட்டு வச்சிருக்காய்ங்களோன்னும் ஒரு சம்சயம் வந்துரும்

இவரு தமிழ் நாட்டுக்கு தொலைவா இருக்கிறதாலயோ கொஞ்சம் வயசாயிட்டதாலயோ (சாஸ்தி இல்லிங்க 49 தான்) ,வலையுலக ஆட்டத்தோட விதிகள் ரீச் ஆகாததாலயோ ஒரு 9 வருசத்துல இவர் ப்ளாகை படிச்சவிக 2006 பேர்.

கொஞ்சம் கொஞ்சமா ட்ரென்ட் புரிபட தன் ஏரியாவுல (சோசியம்) சைக்காலஜி /செக்ஸாலஜில்லாம் கலந்து அடிக்க ஆரம்பிச்சாரா..
கொஞ்ச நாள் .. ரெம்ப கம்மி தான் 9 வருசம் உபதேச மஞ்சரி கணக்கா எழுதிக்கிட்டிருந்தாரு. நதிகளை இணைக்கறது தான் மொத வேலைம்பாரு .அதுக்கு 10 கோடி யூத்த வச்சு பெசல் மிலிட்டரி வரனும்பாரு. பிறவு பார்த்தா சில மாதங்களுக்கு அந்த ஸ்மெல்லே இருக்காது . ஏன் பாஸுன்னு கேட்டா “கூட்டம் சேர்க்கரேம்பாரு”
இவர் எழுத்துல எது சீரியஸ் எது கலாய்னே புரியாது .டுபாகூர்ங்கற வார்த்தைக்கு இவர் பொருள் சொன்ன மேட்டர் இருக்கே..

தும்கூர் இட்லின்னா ரெம்ப ஃபேமஸுங்ணா. பரந்த தமிழ் நாட்ல எல்லா ஊர்லயும் இருட்டுக்கடை அல்வா விக்கிறாப்ல எல்லா ஏரியாவுலயும் தும்கூர் இட்லின்னு விக்க ஆரம்பிச்சுட்டாய்ங்க. தின்னு பார்த்தவன் டுபாகூர் இட்லின்னு சொல்ட்டான். இப்டித்தான் டுபாகூருன்ற வார்த்தை வந்ததுன்னு எளுதிப்பிட்டாரு .
ஆனானப்பட்ட ஞா நி சாரே உள்ளாற வந்து அருத்தம் சொல்ல வேண்டியதாயிருச்சு .

சாதாரணமா ப்ளாக் எழுதறவிக அந்த நேரத்துக்கு ஸ்பார்க் ஆனதை வச்சு ஒரு பதிவு பண்ணிட்டு மறு நாள் நகங்களை கடிச்சு மோட்டு வளைய பார்த்துக்கிட்டு புது பதிவுக்கு மண்டைய உடைச்சுப்பாய்ங்க.

ஆனால் இந்தாளு கொளுத்தி போடறதெல்லாம் தவுசன்ட் வாலா தான்.

கில்மா ஜோக்கும் -மனோதத்துவமும்

உடலுறவு குறித்த மூட நம்பிக்கைகள்

உடலுறவு முறையும் -மனோதத்துவமும்

இப்படி ஒரு தலைப்பை பிடிச்சாச்சுன்னா அதை வச்சு பல மாசங்களை ஓட்டிருவாரு .

பீலா விடறாரா? சொம்மா கலாய்க்கிறாரா? இல்லை நெஜமாலுமே இதெல்லாம் சைக்காலஜி தானான்னு சனத்தை குழப்பத்துலயே வச்சி கச்சேரி நடத்திக்கிட்டிருப்பாரு .ரஜினியை நக்கலடிச்சு ஒரு பதிவு போட்டப்போ ஆரோ ரஜினி ரசிகர் ஒருத்தரு “ஆளில்லாத கடையில ஆருக்கு டீ ஆத்தறேன்னு” கேட்டு தொலைச்சுட்டாரா?

அந்த நிமிட்லருந்து இந்தாளுக்கு பிடிச்சது ஹிட் மேனியா..

ஆபிரஹாம் லிங்கனுக்கு தாடி வைக்க சொல்லி ஐடியா கொடுத்த சிறுமி கணக்கா ஒரு ஈழத்து தம்பி அண்ணா உங்க தமிழ் ரெம்ப டென்ஸா இருக்கு. (Dense) கொஞ்சம் பேச்சுதமிழிக்கு வாங்கன்னு கமெண்ட் பண்ணிருச்சா

நம்மாளு ரூட்டை மாத்தி ஃபுல் ஃபார்முக்கு வந்துட்டாரு.பதிவுகளோட தலைப்ப பார்த்தா மெர்சலாயிரும்.

கலைஞர் எழுதிய பலான கதை (வான் கோழி), வாயும்-இன உறுப்பும் ரேஞ்சுல இருக்கும்.

வாயும்-இன உறுப்பும் பதிவை பார்த்தா மனவியல்/பாலியல் ரீதியா -அனலைஸ் பண்ணி அதுல சோசியத்தையும் மிக்ஸ் பண்ணி அதிரி புதிரியா இருக்கும்.
ஈதிப்படி இருக்க முத்துக்குமார் மேட்டர்ல பெரீ ரேஷ்னலிஸ்டு கணக்கா “உள்ளதை சொல்லி” செமர்த்தியா வாங்கி கட்டிக்கிட்ட சாதனையும் நம்மாளுக்கு சொந்தம்.
சகலகலாவல்லவன்னு ஒரு நெனப்பு நம்மாளுக்கு.ஒரு தாட்டி சீரியஸ் – காமெடின்னு ப்ராக்கெட்ல போட்டு ரெண்டு பதிவு ஒரே நேரத்துல போட்டாரு.
ஒரு தம்பி பதிவுகள் ஓகே தான்.ஆனால் ப்ராக்கெட்ல உள்ள மேட்டரை மட்டும் மாத்தி போடுங்கன்னு கமெண்ட் பண்ணிருச்சு.
எது எப்படியோ நான் வேற மாதிரின்னு காட்டிக்க இவரு பண்ற அலப்பறைகள் இருக்கே ..ஸ்..யப்பா கண்ணை கட்டும். ஒரு 9 வருசம் ஆன்லைன்ல ஜோசியம் சொல்றேன்னு கல்லா கட்டிக்கிட்டிருந்த பார்ட்டி நாம சீரியசான விஷயத்தை சொன்னா கூட ஜோசியரேன்னு கமெண்ட் போடறாய்ங்க.ஆகவே ஆன்லைன் ஜோதிட ஆலோசனைக்கு கல்தானு அனவுன்ஸ் பண்ணிட்டாரு .

சனம் விடுவாய்ங்களா என்ன? இவர் கூகுள் ஆட்சென்ஸ் வாங்கியே தீருவன்னு புதுசா ஆரம்பிச்ச இங்கிலீஷ் வெப்சைட்டு நன் கொடை அனுப்பிட்டு பின்னாடியே ஜாதகம் அனுப்பிர்ராய்ங்களாம்.

இந்த கோக்கு மாக்கு ப்ரொஃபைல்காரரோட லேட்டஸ்ட் ட்ரென்டு என்னடான்னா கலைஞர் ஆதரவு ( 2006-11 கால கட்டத்துல திமுக ஆட்சியை கிளி கிளினு கிளிச்சவரு அப்டியே மாறி கலைஞரை தாங்கோ தாங்குன்னு தாங்கறாரு. இதுலயும் செம வெரைட்டி .

இவர் பதிவுல வந்து கலைஞரை விமர்சனம் பண்ணி பதிவு போட்டா
இன்னைய தேதிக்கு கலைஞர் ஒன்னும் 100% பகுத்தறிவு வாதி அல்ல . இன்னைய தேதிக்கு கலைஞர் மக்கள் பணிக்காக அனைத்தையும் இழந்து குடிசையில வாழற தியாகி அல்ல.
இன்னைய தேதிக்கு கலைஞர் ஒன்னும் 100% தமிழினத்தலைவர் அல்ல. இன்னைய தேதிக்கு கலைஞர் ஒன்னும் 100% போராளியல்ல.
ஆனால் இதுக்கே அந்த மன்சனை தோற்கடிக்க எத்தனை க்ரூப்பு கிளம்புது? ஒரே க்ரூப்பு இத்தனை க்ரூப்பை உருவாக்கி விட்டிருக்குன்னா..
கலைஞர் ஒரு வேளை 100 % பகுத்தறிவு வாதியா – மக்கள் பணிக்காக சகலத்தையும் இழந்தவரா – தமிழின தலைவரா ,போராளியா இருந்திருந்தா போட்டு தள்ளியிருப்பானுவ போல.

என்பார் .. எதிராளி என்ன செய்ய?

மொகர நூல்ல நீங்க போடற ஸ்டேட்டஸால திமுகவுக்கு எத்தனை ஓட்டு வந்திர போவுது .இதுக்கு மேல என்ன செய்ய போறிங்கனு கேட்டா..
நமக்கு தெலுங்குல நல்ல கமாண்ட் இருக்கு பாஸ்.. சென்னை சிட்டியில தெலுங்கு பாப்புலேஷன் அதிகம். மேலும் ஆந்திரா பார்டர்லயும் தெலுங்கு சனம் சாஸ்தி .
தலைமை கூப்டா தெலுங்குல சவுண்டு விட்டு ஓட்டு சேகரிப்பம்ங்கறாரு . இதெல்லாம் எங்கே போய் முடிய போவுதோ?

வால் துண்டு (டெய்ல் பீஸ்)

கட்சி ,தேர்தல் அறிக்கை , எதிர்கால ஆட்சி இத்யாதி மேட்டர்ல கலைஞரும் ஸ்டாலினும் என்னெல்லாம் பண்ணலாம்னு கடந்த பிப்.22 ஆம் தேதி கோம்போ பேக்ல யோசனைகளை அனுப்பியிருக்காராம்.
தப்பி தவறி உடன் பிறப்பேனு விளிச்சு கலைஞர் பதில் கொடுத்து தொலைச்சுட்டா? ஹ்ம்..எதையும் தாங்கும் மொகர புஸ்தவம் இதையும் தாங்கும்னு தான் நினைக்கிறேன்..

இன்னைய தேதிக்கு கூகுள் ப்ளஸ்ல இவரோட ப்ரொஃபைலுக்கு கிடைச்ச வ்யூஸ் 27 லட்சம் ப்ளஸ்

உங்களுக்கும் ராஜயோகம்: 3

parapnna

அண்ணே வணக்கம்ணே !
இந்த எலீக்சன்ல சகட்டுமேனிக்கு ஆளாளுக்கு அனைத்து தொகுதியிலயும் தனித்து போட்டின்னு சொல்லிட்டிருக்காய்ங்களா..புது புது கட்சில்லாம் ஃபீல்டுக்கு வந்துக்கிட்டிருக்கா..எந்த புத்துல எந்த பாம்பு இருக்கோங்கறாப்ல எந்த வேட்பாளர் நெஜமாலுமே சனத்துக்கு நெல்லது பண்ணுவாரோ ஆருக்கு தெரியும்.

ஜாதகத்துல ராஜயோகம் உள்ளவிக அசால்ட்டா செயிச்சு வந்து அனுபவிச்சுட்டு போயிருவாய்ங்க.உண்மையிலயே சனத்துக்கு நெல்லது பண்ணலாம்னு வர்ரவிக ஜாதகத்துல ராஜயோகம் இல்லாம கூட இருக்கலாம். நாம இப்ப எளுதிக்கிட்டிருக்கிற தொடரை மேற்படி வேட்பாளரோட மனைவியோ,மச்சானோ பார்த்து -அவியளுக்கு சொல்லி -ஒர்க் அவுட் ஆகி செயிச்சு வரட்டுமே.நெல்லது பண்ணட்டுமே. அந்த புண்ணியத்துல நமக்கும் ஒரு ஷேர் வரும்ல?

கடந்த பதிவுல ராஜகிரகங்கள் பல்பு வாங்கியிருந்தாலும் ராஜயோகம் வரதுக்கு வாய்ப்பிருக்குன்னு ஆரம்பிச்சு நம்ம வாழ்க்கையையே உதாரணமா காட்டியிருந்தன். அதை தொடரலமா? ஏன்னா நம்ம லைஃப்ல ஆட்டோமெட்டிக்கா நடந்ததை -குரு பல்பு வாங்கியிருக்கிறவிக – வாலண்டியரா நடத்திக்கிட்டா ராஜயோகம் வரலாம்லியா?

இப்ப ஒங்களுக்கு ராஜயோகம் கொட்டுதா பாஸ்னு கேப்பிக. நம்ம ஜாதக மேட்டர்ல ஜோதிட விதிகளை கறாரா அப்ளை பண்ணா முக்கிய ராஜகிரகமான குரு டப்பாஸுன்னு தான் சொல்லனும்.

ஆனாலும் நாட்ல டைரக்ட் எலீக்சன் வரவழைச்சு,பிரதமராகி நதிகளை இணைச்சே தீருவன்னு பினாத்திக்கிட்டிருக்கம். இதெல்லாம் பாசிபிளா? இம்பாசிபிளா?ங்கறது பிறவு. இந்த மாதிரி ஒரு கனவு -அது பத்தின ஆராய்ச்சி – தியரிட்டிக்கல் டெஸ்க்ரிப்ஷன்,முயற்சின்னு ஃபீல்டுக்கு வர்ரதுக்கே ஒரு தாக்கத் இருக்கனுமில்லையா?

1967 ல பிறந்த நம்ம வாழ்க்கையில 1986 வரை ஒரு இழவு புரட்சியும் கிடையாது .புரட்சி என்ன கு.பட்சம் சிந்தனை கூட கிடையாது .மிஞ்சிப்போனா கிளிப்பிள்ளை கணக்கா கண்டதையும் கோட் பண்ணிக்கிட்டிருப்பம் அவ்ளதான் . இப்படியே தானே மிச்ச சொச்ச வாழ்க்கையும் ஓடியிருக்கனும்?

இடையில என்னாச்சு?

ஏதோ சொந்தக்கதை சொல்லி உங்களை பேஜார் பண்றேன்னு பேஜாராயிராதிங்க. ஒங்க ஜாதகத்துல குரு பயங்கர பல்பு வாங்கியிருக்காரு.ஆனாலும் அவசரமா கவுன்சிலர்/எம்.எல்.ஏ ஆகியே தீரனும்னா இந்த பதிவு அதுக்கு ஒரு ரூட்டை போட்டு கொடுக்கும்.

என் வாழ்க்கையில தானா நடந்த விஷயங்களை நீங்களா நடத்திக்கிட்டா எம்.எல்.ஏ என்ன மந்திரியா கூட ஆயிரலாமுங்கோ..

அப்பா மாவட்ட கருவூல அதிகாரி (லக்னத்துல இருந்து 9 ஐ பார்க்கிற குருவோட பலம் இதுக்கே சரியா போச்சு ஒன்பது என்பது அப்பாவை காட்டும் பாவம்) பெரிய பக்திமான் (போச்சுரா)

ஆனால் லஞ்சம் வாங்காத பார்ட்டி .வாங்கற சொற்ப சம்பளத்துலயும் தம்பி,தங்கை குடும்பத்துக்கு டைவர்ட் பண்ணிக்கிட்டிருப்பாரு .(குரு பலம் சேவ் ஆச்சு)
சகாயத்தை எப்படி தூக்கியடிச்சுக்கிட்டிருந்தானுவளோ அப்படி எங்க அப்பாவையும் ஜில்லா ஜில்லாவா தூக்கியடிப்பாய்ங்க. ஃபேமிலிய கூப்டு வச்சுக்கற அளவுக்கு வசதி இல்லை .ஆகவே அப்பா வெளியூரு (குரு பலம் சேவ் ஆச்சு )

அவரை பத்தி மேலதிகாரிகளுக்கெல்லாம் நெல்லாவே தெரியும். எப்படியும் பத்து பைசா சேர்த்து வச்சிருக்கமாட்டான். கடேசி காலத்துல உள்ளூர்ல போஸ்டிங் போட்டா செலவு குறையும். பத்து பைசா சேர்த்து வச்சு ஃபேமிலிய செட்டில் பண்ணுவான்னு கருணை காட்ட உள்ளூர் வந்துட்டாரு (ஆஹா குரு பலம் போச்)
இங்கே தான் சடன் ட்விஸ்ட் . ஒரு யூனிஃபார்ம் சமாசாரம் அப்பனுக்கும் பிள்ளைக்கும் இடையில பெரிய பள்ளத்தை வெட்டிருச்சுங்ணா. ஆக்சுவலா இந்த பள்ளம் நாலாங்கிளாஸ் படிக்கிறப்பயே வந்திருக்கனும். ஏன்னா..

அப்பா கஜானாவையே கட்டிக்காக்கிற ட்ரஷரி ஆஃபிசரா இருந்தாலும் ஜனதா புடவைல தான் எங்களுக்கு ( நான்கு மகன்கள்) சட்டைகள். எங்கப்பா அக்மார்க் மிடில் கிளாஸ் பார்ட்டி. தூர திருஷ்டியோட அரை டஜன் பின்னி காக்கி அரை கால் சட்டை. அரை டஜன் வெள்ளை சட்டை ( ஜனதா புடவை) அரை டஜன் கலர் சட்டை ( ஜனதா புடவை).

தாளி போகி, பொங்கல், மாட்டுப்பொங்கல்,காணும்பொங்கலுன்னு நாலு பண்டிகைக்கும் ஒரே டிசைன் ட்ரஸ்ஸுதான்.

இதுல கலர் புடவையில ஒரு பிட்டும், வெள்ளைபுடவையில ஒரு பிட்டும் மிச்சமாயிரவே அது ரெண்டையும் சேர்த்து ஒரு சட்டை. ஒரு தாட்டி ஸ்கூல்ல இன்ஸ்பெக்சன் வந்துருச்சு.

யூனிஃபார்ம் இல்லின்னா வெளிய அனுப்பிரனும். அன்னைக்குனு பார்த்து நான் டூ இன் ஒன் சட்டை போட்டுக்கிட்டு போயிருந்தேன். எங்கப்பனுக்கு இருந்த தூர திருஷ்டி டெயிலருக்கு இல்லாததால முன் பக்கம் கலர் பின் பக்கம் வெள்ளை பிட்டை வச்சு தச்சிருந்தான்.

லலிதா டீச்சர் பார்த்தாய்ங்க. (அப்படியே எங்கம்மாவோட ஃபிசிக் -நிறம் அச்சா) டே இங்க வாடான்னுட்டு வஸ்திராபரணம் பண்ணி சட்டையை அந்த காலத்து ரவிக்கை கணக்கா திருப்பி போட்டுவிட்டாய்ங்க. இன்ஸ்பெக்சன் ஓவர்.

ஆனால் எட்டாங்கிளாசுல வந்ததுய்யா ஒரு சோதனை .சுந்தரேசன்னு கணக்கு வாத்யாரு .ஒரு நாள் யூனிஃபார்ம் போட்டுக்கிட்டு போவல (பின்னி க்ளாத்ல தச்ச ட்ராயரும் -காடா க்ளாத்ல தச்ச சட்டையும் வருசம் முச்சூடும் தாங்குமா என்ன?)

“ஏன் யூனிஃபார்ம் போடல?”
“கிளிஞ்சிருச்சு சார்”
“புதுசு வாங்கிக்க வேண்டியதுதானே”
“வாங்கி தரல சார் ”
“நீ என்ன பண்ணியோ?

தமிழ் சினிமாவா இருந்தா ஈரோவுக்குள்ள எரிமலை வெடிக்கிறது -பூகம்பம் வர்ரதுன்னு விஷுவல் எஃபெக்ட் எல்லாம் காட்டியிருப்பாய்ங்க.
என்ன பண்ணேன்? நேர அப்பா ஃப்ரண்டு கடைக்கு போயி ரெண்டு பேண்ட்,ரெண்டு சட்டைக்கு க்ளாத் எடுத்தேன்.அப்பாவோட ஃப்ரண்டான டெய்லர் கிட்டே போய் தச்சேன் மறு நாள் போட்டுக்கிட்டு போனேன்.

பிறவு அப்பன்-மவன் உறவு என்னமா சீரழிஞ்சிருக்கும்னு உங்க கற்பனைக்கே விட்டுர்ரன். (ஆக குரு பலம் செமர்த்தியா சேவ் ஆச்சு)
டிகிரி வரையாவது ஏதோ காலேஜ் போறான்னு ஒரு பேர் . 3ஆவது வருசம் ஃபெயில். (காரணம்? திமிருதேன்) மறு தேர்வு எழுதப்போனம். ஹால் டிக்கட் இல்லை . ஃபோட்டோ ஒட்டி க்ளாஸ் டீச்சர் கிட்டே சைன் வாங்கி ப்ரின்சிபல் கிட்டே சைன் வாங்கிட்டு வந்தா பரீட்சை எழுதலாம்னானுவ. க்ளாஸ் டீச்சர் வேஸ்ட் பேச்செல்லாம் பேசினான்

போடாங்கொய்யால மை ஃபுட் யுவர் காலேஜ் .ஐம் வாக்கிங் யுனிவர்சிட்டின்னு வீட்டுக்கு வந்துட்டம்.பிறவு அப்பன்-மவன் உறவு என்னமா சீரழிஞ்சிருக்கும்னு உங்க கற்பனைக்கே விட்டுர்ரன். (ஆக குரு பலம் செமர்த்தியா சேவ் ஆச்சு)

குரு = கங்கண காரகன் (கண்ணாலம் பாஸ்) 1989 ல லவ்ஸ் /ஓடிப்போயி கண்ணாலம் . சாதி ? வேற சாதிதேன். சாதி பார்த்து வருமா காதல்? ஊர்ல உள்ள பெரீ மன்சன்லாம் இந்த ஒரு மேட்டர்ல ஒத்துமையா நின்னு காரியத்தை முடிச்சுட்டானுவ.பிரிச்சுட்டானுவ பாஸ் !

1991ல மறுபடி லவ்ஸ். இந்த தாட்டி அலார்ட்டா உள்ளூர் போலீஸ் ஸ்டேஷன்லயே கதைய முடிச்சன் (இப்ப இன்னா செய்வீங்க..இப்ப இன்னா செய்வீங்க)
இங்கே இருந்து 16 வருசம் நாயடி .பைசா பைசாவுக்கு லாட்டரி ( குரு =தனகாரகன்) பொஞ்சாதி தாலியில கூட தங்கம் கிடையாது . ஏதோ 2007 க்கு பிறவு ஃபைனான்ஸ் மேனேஜ்மென்டை மவள் கையில ஒப்படைச்ச பிறவு அவளா பார்த்து ஏதோ வாங்கினாப்ல இருக்கு.

1992 மார்ச் முதல் 1994 ஜூலை வரை ரிட்டையரான அப்பா ஏதோ பாவம் பார்த்து அப்பப்போ ஃபைனான்சியலா கொஞ்சம் சப்போர்ட் பண்ணிக்கிட்டிருந்தாரு .1994 ஜூலையில அவரும் டிக்கெட்டு .

அடுத்து ஒரு 3 வருசம் கொய்யால சொத்துல பங்கு வாங்கி அம்பானி ஆயிர்ரன்னு திரிஞ்சம். பங்கு வந்தும் ஆப்பு தேன்.

கண்ணாலமா? போலீஸ் ஸ்டேஷன்ல. பொஞ்சாதிக்கு பூமுடிக்கிறது ,சீமந்தம், குழந்தைக்கு சாங்கியம்,சம்பிரதாயம் ,தொட்டில்ல போடறது புண்ணாக்குல புரட்டறது இப்படி ஒரு ம…..னாவும் கிடையாது .ஆக குரு பலம் செமர்த்தியா சேவ் ஆகி 2002 லயே தெலுங்கு தினசரியில நம்மை பத்தி ஸ்டோரி ஐட்டம் வர்ர அளவுக்கு செல்வாக்கு வளர்ந்துச்சுங்கோ ..

ஆக ..ஜாதகத்துல குரு பலம் இல்லாம ராஜயோகத்தை அடையனும்னா என்ன பண்ணனும்? பதிவை படிச்சிங்கல்ல.. பதில் சொல்லுங்க பாஸ்..!

உங்களுக்கும் ராஜயோகம் : 2

ஓபாமா

அண்ணே வணக்கம்ணே !
கடந்த பதிவுல ராஜயோகத்தை அனுபவிக்கிறவிகளை பத்தி சொல்லும் போது
//இதுல ரெண்டு கேட்டகிரி இருக்குங்கோ.. ஒன்னு ஜாதகத்துலயே பலம் இருந்து ரிசர்வ்ட் டிக்கெட்ல ரயில்பயணம் மாதிரி கிடைக்கிற ராஜயோகமொரு விதம்.
அடுத்தது பாசஞ்சர் டிக்கெட்ல எக்ஸ்பிரஸ் ரயில்ல பயணம் கணக்கா ராஜயோகத்தை கேப்சர் பண்றது இன்னொரு விதம்.//னு சொல்லியிருந்தன்.
ஹ..அப்ப கிரகம் -ஜாதகம்லாம் டுபாகூருதானேம்பிங்க.

இல்லிங்க பாஸ் !

ஜோதிடவியலோட அடிப்படைய புரிஞ்சுக்காத மனப்பாட வித்வான்ஸ் கிரகபலன் என்பது கல்வெட்டு மாதிரி .அச்சு அசலா அப்படியே நடந்துரும்னு சொல்வாய்ங்க. அனுபவத்துல பார்க்கும் போது அப்டியில்லிங்ணா. ஏன் இப்படி?

ஒரே கிரகஸ்திதியில பிறந்த எந்த இருவருக்கும் கிரகங்கள் ஒரே மாதிரியான பலனை தருவதில்லை.இந்த மேட்டரில் பூர்வ புண்ணியம், கடவுள் கருணை, அப்பா அம்மா நல்வினை, வாஸ்து இப்படி நிறைய ஃபேக்டர்ஸ் வேலை செய்யுது. நாம் ரெசிப்டிவாக மாறும்போது பிரச்சினை குறைகிறது. ரெபல் ஆகும்போது அது பல மடங்காகிறது.

ஒரு கிரகம் நான் இந்த ஒரு பலனை தான் தருவேனு அடம் பிடிக்கிறதில்லை. காம்பவுண்டுக்குள்ள குதிச்ச திருடன் சிச்சுவேஷனை பொருத்து பாய்லர் மூடியையாவது தூக்கிக்கிட்டு போறாப்ல தான் நின்ற பாவ காரகத்வத்தில் ஏதோ ஒன்றை நாறடித்து விடுகிறது. ( நெம்பர் ஆஃப் ஆப்ஷன்ஸ்) .

இதே போல நன்மை செய்யும் நிலையில் உள்ள கிரகமும் தன் ஜூரிஸ்டிக்சனில் (காரகத்வம்) ஏதோ ஒன்றை அள்ளி கொடுத்து தூள் கிளப்பி விடுகிறது.

மேலும் உங்கள் அடுத்த கணம் இந்த கணத்திலான உங்கள் செயலை வைத்தே நிர்ணயிக்கப்படுகிறது. இறைவன் மனிதனை சுதந்திரமாக வாழும்படி சபித்துள்ளான். ஃபைனல் கோல் நிர்ணயிக்கப்பட்டுள்ளதே தவிர தினசரி நிகழ்ச்சி நிரல் எல்லாம் நாட் ஃபிக்ஸ்ட்.

ஜாதகம்ங்கறது டூ இன் ஒன். அதுவே டெபிட் கார்டு .அதுவே கிரெடிட் கார்டு. கிரக பலங்களை அளவோட எக்ஸாஸ்ட் பண்ணா அதான் டெபிட் கார்டு. அன்லிமிட்டடா எக்ஸாஸ்ட் பண்ணா அதுவே கிரெடிட் கார்டு.

டெபிட் கார்டுல செலவழிச்சா பிரச்சினை இல்லை. கிரெடிட் கார்டுல செலவழிச்சா வரி,வட்டி,கிஸ்தில்லாம் குஸ்தி போடும்ல.

இயல்பாவே ஒரு ஜாதகத்துல ராஜயோகம் அமைஞ்சிருந்தா அவன் அரசியல் வாழ்க்கை டெபிட் கார்ட்ல செலவழிக்கிறா மாதிரி ஸ்மூத் கோயிங்கா இருக்கும். இல்லின்னா நாயடிதான்.

சூரியன்,செவ்வாய்,குரு இந்த 3 கிரகங்களையும் ராஜகிரகங்கள்னு சொல்றாய்ங்க.சில பழைய கிரந்தங்கள்ள சுக்கிரனையும் ராஜயோக காரகன்னு சொல்லியிருக்காம்.

சூரியன்னா தலைமை குணம்,தானகுணம்,மோட்டீவேட்டிங் ஸ்கில்ஸ் இப்படி பலதும் வருது . செவ்வாய்னா போர்குணம், படை திரட்டுதல் இப்படி பலதும் வருது . குருன்னா திட்டமிடல், நினைவாற்றல்,செல்வாக்கு இப்படி பலதும் வருது .ஒரு வகையில இதெல்லாம் இருந்தா அரசாளும் யோகம் வர வாய்ப்பிருக்கு.

சுக்கிரன் எப்படி ராஜயோகத்தை தருவாரு?

தமிழ் நாட்ல மம்மி கதையையே எடுத்துக்குவம்.அவிக ஜாதகத்துல சுக்கிரன் தான் உச்சம். சுக்கிரன்=கலை,சுக்கிரன் = காதல்/தாம்பத்யம் கூட்டிகழிச்சு பாருங்க.மம்மிக்கு ராஜயோகம் எப்படி வந்தது? கணக்கு செரியா போச்சா?

இந்த சுக்கிரன் மேட்டரை கடேசியில பார்ப்பம்.

சிலர் சனியும் ராஜயோக காரகன்னு சொல்றாய்ங்க. சனி =தொழிலாளர்கள்,ஏழை,பாழைகள். நம்ம நாட்ல இவிக சனத்தொகை தான் அதிகம்.இவிக மத்தியில செல்வாக்கு பெற்றவர்கள் அரசாள வரலாம். இவிக மத்தியில செல்வாக்கு பெறனும்னா உங்க ஜாதகத்துல சனி பலம் இருக்கோனம்.

கிரகங்களை ஓவரா எக்ஸ்ப்ளாய்ட் பண்ணா என்ன நடக்கும்னு சொல்ல நம்ம சமகால அரசியல் வாதிகள் அனைவரையும் உதாரணமா காட்ட முடியும். (இந்த வில்லங்கம்லாம் பிறவு வருது)

கிரகங்களை ஓவரா எக்ஸ்ப்ளாய்ட் பண்ணாட்டா என்ன நடக்கும்ங்கறதுக்கு என் வாழ்க்கை ஒரு உதாரணம்.

இப்ப என் ஜாதகத்தையே எடுத்துக்குவம் .லக்னம் கடகம் . 6/9 க்குடைய குரு லக்னத்தில் உச்சம்.
வாழ்க்கையில பேர் பாதி வருசம் கடன்,நோய்,வழக்கு வில்லங்கத்துலயே கழிஞ்சுரனும்.இவரோட சூரியன். ஈகோ காரணமா பெரீமன்சங்க கிட்டல்லாம் மோதி மொக்கையாகனும்.

சூரியனோட புதன் வேற (இவரு 3/12 க்குடையவர்) நமக்கு ஜஸ்ட் அல்லல் ,அலைச்சல்,வீண் விரயம் தான் மிச்சமாகனும்.ஜோதிட விதிகளை கறாரா அப்ளை பண்ணா குரு டப்பாஸுன்னு தான் சொல்லனும்.

ஆனாலும் நாட்ல டைரக்ட் எலீக்சன் வரவழைச்சு,பிரதமராகி நதிகளை இணைச்சே தீருவன்னு பினாத்திக்கிட்டிருக்கம். இதெல்லாம் பாசிபிளா? இம்பாசிபிளா?ங்கறது பிறவு. இந்த மாதிரி ஒரு கனவு வர்ரதுக்கே மேற்படி குரு தோதா இல்லையே ? எப்படி வந்தது?

ஏதோ சொந்தக்கதை சொல்லி உங்களை பேஜார் பண்றேன்னு பேஜாராயிராதிங்க. ஒங்க ஜாதகத்துல குரு பயங்கர பல்பு வாங்கியிருக்காரு.ஆனாலும் அவசரமா கவுன்சிலர்/எம்.எல்.ஏ ஆகியே தீரனும்னா இந்த பதிவு அதுக்கு ஒரு ரூட்டை போட்டு கொடுக்கும்.

என் வாழ்க்கையில தானா நடந்த விஷயங்களை நீங்களா நடத்திக்கிட்டா எம்.எல்.ஏ என்ன மந்திரியா கூட ஆயிரலாமுங்கோ..

உடுங்க ஜூட்டு ..

உங்களுக்கும் ராஜயோகம் :1

ராஜயோகம்

அண்ணே வணக்கம்ணே !
நம்ம வலையுலக /முக நூல் வரலாற்றில் பல தொடர்களை ஆரம்பிச்சு எளுதியிருக்கம்.சிலதை திருப்பதி நாவிதர் கணக்கா பாதியில விட்டிருக்கம்.ஆனால் பலதையும் எளுதி முடிச்சிருக்கம்.

நாளைக்கு ஒருத்தன் வருவான்.அவன் படிப்பான்ற பாலிசி நமக்கில்லை. இந்த மேட்டர்ல எல்லாம் நாம இப்ப ராமசாமி .
ஆளில்லாத டீக்கடையில எதுக்கு டீ ஆத்தனும். ப்ரிண்ட் மீடியா போலவெ வலைப்பதிவுக்கெல்லாம் வாயிதா போயிருச்சோன்னு ஒரு சம்சயம் இருந்தாலும் – கேப்டன் கணக்கா முக நூல்ல ஒரு கால்,வலைப்பதிவுல ஒரு கால்னு ஓட்டிக்கிட்டிருக்கம்.

ஆகவே பாய்ண்ட் என்னடான்னா நம்ம எழுத்து படிக்கப்படனும்.அடுத்து பயன்படனும்.எலீக்சன் டைமாச்சே .அரசியல் தொடர்பான பதிவு போடலாமான்னு கருத்து கேட்டா நண்பர் ஒருவர் பிரபலங்களின் ஜாதகங்களை அலசலாமேன்னு ஐடியா கொடுத்தாரு .

இதுல உள்ள ரிஸ்க் என்னடான்னா நமக்கு கிடைக்கிற பர்த் டீட்டெய்ல்ஸ் கரெக்டா இருக்கோனம்.இல்லின்னா பல்பு தான். எப்படியோ தமிழக அரசியல்ல மூவர் கணக்கா இருக்கிற ஜெ,கலைஞர்,கேப்டன் ஜாதகங்களை எளுதிமுடிச்சாச்சு. ஆகவே அதுக்கு போறதா இல்லை.

சனத்துல ரெண்டு ரகம். ஒன்னு எவனோ எழுதினதை படிச்சு /எவனோ எடுத்ததை பார்த்து/எவனோ பார்த்ததை கண்ணாலம் கட்டி வாழ்ந்துட்டு போற ரகம். இவிக தேன் இன்டியன் மார்க்கெட் /ஆசியன் மார்க்கெட்னு அஃறினையில குறிக்கப்படறவிக. இங்கிலிபீசுல சொன்னா கன்ஸ்யூமர்ஸ்.

இன்னொரு ரகம் உண்டு .நான் எழுதனும், நான் எடுக்கனும், நான் லவ் பண்ணனும்,லவ் பண்ணவளை கட்டனும். இவிக தேன் ப்ரொட்யூசர்ஸ்.
ஒரு வகையில பார்த்தா ஈகோ உள்ளவன் ப்ரொட்யூசராவான். அது இல்லாதவன் கன்ஸ்யூமரா நின்னுருவான். இன்னொரு வகையில பார்த்தா ஆண் பெண் எல்லார்ட்டயும் உள்ளது ஒரே பவர்.அது செக்ஸ் பவர். இந்த செக்ஸ் பவர் உருவாக்கும் சக்தியாவும் வெளிப்படும். செக்ஸ்ல செலவழிஞ்சும் தீர்ந்து போகாத செக்ஸ் பவர்தான் ப்ரொட்யூசர்ஸை உருவாக்குது . எல்லா சக்தியையும் செக்ஸ்லயே இழந்துட்டவிக ? கன்யூஸ்மர்ஸா நின்னுர்ராய்ங்க.

மன்சனுக்குள்ள செல்ஃப்-ஈகோ எல்லாத்துக்கும் பின்னாடி வேற ஒரு சமாசாரம் இருக்காம் ( ஆத்மா?) . ஆனால் அதை உணரமுடியாத மனித மனம் ஈகோவையே “அதுவா” உணர்ந்து செயல்படுமாம்.

ஈகோ அடிப்பட்டா உசுரே போயிட்டாப்ல டீலாயிருவாய்ங்களாம். ஆன்மாவை அடையாளம் காணமுடியாத சனம்லாம் தங்கள் ஈகோவை போற்றி பாதுகாப்பாய்ங்களாம்.

இந்த ஆத்மாவ அடையும் வழியா எனக்கு காட்டப்பட்டது உடல்,மனம்,புத்தி இந்த மூன்றுமே டாரா கிளிஞ்சுரனும்.ஐ மீன் ஏதோ ஒரு பிரச்சினை வந்து அதை உடல்,மனம்,புத்தி கொண்டு தீர்க்கமுடியாம பரிதவிக்கிறப்ப ரஜினி படத்துல ஓப்பனிங் சீன் மாதிரி ஆத்மா தரிசனமளிக்குது .
இன்னைக்கு சனத்தோட நிலைமை எப்படி இருக்குன்னா..பிரச்சினை காட்பாடியில புறப்படும் போதே ..ஸ்.யப்பா நான் திருச்சிக்கு போறேன்னு கழண்டுக்கிற நிலையிலதான் இருக்கு.

இவிக எங்கே ஆத்மாவ தரிசனம் பண்றது? ஆகவே தங்கள் ஈகோவையே ஆத்மாவா வரிச்சுக்கிட்டு வாழ்ந்து போய் சேர்ந்துர்ராய்ங்க.
எனவே நாலு வயசு கொளந்தைக்கும் ஈகோ இருக்குண்ணே.. ரீடரோட ஈகோவை திருப்தி படுத்தினா தான் எழுத்தாளனோ /படைப்பாளியோ பேர் சொல்ல முடியும். அதனாலதேன் உங்களுக்கும் ராஜயோகம்னு டைட்டிலை ச்சூஸ் பண்ணிக்கிட்டன்.

இதுக்கே அட போப்பா எனக்கெதுக்கு ராஜயோகமும் இன்னொன்னும்னு கழண்டுக்கபார்க்கிற சனம் அதிகம். ஏன் சனம் இந்த அளவுக்கு டீ ஜெனரேட் ஆயிபோச்சுன்னா ?? இதுக்கும் பார்ப்பனீயம் -சாதியத்தை தான் கூப்பிடனும்.கொய்யால லிமிட்டட் சர்க்கிள்ள கண்ணாலம் கட்டி கட்டி கட்டி ஃபிசிக்,சைக்கிக் டைனமிசம் எல்லாமே போச்சு.

பெரிய மேட்டர்னாலே உதறுது .

தமிழ் நாட்டு வாக்காளர் பட்டியல்ல உள்ள எவனையாவது பாதி ராத்திரி எழுப்பி ஒனக்கு எம்.ஜி.ஆர்/கலைஞர் மாதிரி 3 வேணமான்னு கேளுங்க? ஒரு பய வேண்டாம்னு சொல்லமாட்டான். ( 3= பதவி,அதிகாரம்,புகழ்) ஆனால் பொழுது விடிஞ்ச பிறவு கேட்டா “அய்ய..நமக்கெதுக்குங்க பாழா போன அரசியல்”னுருவான்.ஏன்னா விடிஞ்சதுமே கான்ஷியஸ் மைன்ட் வேலை செய்ய ஆரம்பிச்சுருது .உதறுது .

ஆக எல்லாருக்குள்ளயும் ராஜயோக கனவுகள் இருக்கு . இந்த கனவை நனவாக்கிறது எப்படின்னு தான் இந்த தொடர்ல விவரிக்க போறேன்.
இதுல ரெண்டு கேட்டகிரி இருக்குங்கோ.. ஒன்னு ஜாதகத்துலயே பலம் இருந்து ரிசர்வ்ட் டிக்கெட்ல ரயில்பயணம் மாதிரி கிடைக்கிற ராஜயோகமொரு விதம்.
அடுத்தது பாசஞ்சர் டிக்கெட்ல எக்ஸ்பிரஸ் ரயில்ல பயணம் கணக்கா ராஜயோகத்தை கேப்சர் பண்றது இன்னொரு விதம்.

இந்த தொடரை ரெண்டு ரூட்லயும் கொண்டு போறேன். ஜாதகம் உள்ளவிக /இல்லாதவிக . ஜாதகத்துல கிரக பலம் உள்ளவிக .இல்லாதவிக..
ஆகவே புதிய தொடருக்கு சைக்கலாஜிக்கலா ப்ரிப்பேர் ஆயிருங்க .தெறிக்க விடலாமா?

காசு பணம் துட்டு மணி மணி : 9 ஆவது கேட்டகிரி (பரிகாரம்)

1

அண்ணே வணக்கம்ணே !

உலக மனிதர்களை 9 கேட்டகிரியா பிரிச்சு அவிக பொருளாதார தேக்கத்துக்கு காரணங்களையும் -பரிகாரங்களையும் சொல்லிட்டு வரேன். இந்த தொடரின் கடைசி அத்யாயம் இது. அடுத்த தொடருக்கான அறிவிப்பையும் இதுலயே கொடுத்திருக்கன்.இந்த அத்யாயம் ஒன்பதாவது கேட்டகிரி சனத்தோட பொருளாதார தேக்கத்துக்கான காரணங்கள் மற்றும் பரிகாரங்களை உள்ளடக்கி இருக்கு .பதிவுக்க்கு போயிரலாமா?

1.தமிழக அரசியலுக்கும் சினிமாவுக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. அரசியல்ல பிரமாதமான நடிகர்கள்ளாம் உண்டு.கமலே அந்தளவுக்கு நான் சிறந்த நடிகனில்லேன்னு சொல்ற அளவுக்கு இருக்காங்க.ஆனால் விஜய்காந்தை பாருங்க.. கேமரா முன்னே என்னமா நடிக்கிறாரு .ஆனால் நிஜ வாழ்க்கையில த்தூனு துப்பிர்ராரு.தூக்கி அடிச்சுருவன் பார்த்துக்கன்னிர்ராரு இது கேப்டன் மேட்டர்ல ஒர்க் அவுட் ஆயிருச்சு.ஆனால் சாதாரணர்கள் விஷயத்துல? டங்குவார் அந்துரும்.
இவிக பெண்ணா இருந்தா போலீஸ்,மிலிட்டரி,ரயில்வே ,எலக்ட் ரானிக்ஸ் தொடர்பான கல்வி /பயிற்சி முடித்து ஒர்க்கிங் விமனா போனா பிரச்சினையே இல்லை.தப்பிதவறி ஹவுஸ்வைஃபா இருந்தா சிக்கல்வரும்.

ஒரு யுத்தத்தையே நடத்தி முடிக்கிற கப்பாசிட்டி உள்ள ஆள் செயல்படவே வாய்ப்பில்லாத நிலையில இருந்தா அது இவிக உடல் நிலையை பாதிக்கும். குறிப்பா ப்ளட்ப்ரஷர்,அல்சர் . மாதவிலக்கு சக்கரத்தில் குளறுபடி .

இவிக பொருளாதார தேக்கத்துக்கும் – நெருக்கடிக்கும் இந்த குணம் முக்கிய காரணம்.

2.பேரறிஞர் அண்ணாவுக்கு கான்சர் வந்திருக்கு. ட்ரீட்மென்டு ஓடிக்கிட்டிருக்குன்னு தெரியும்.அந்த சமயம் ஏதோ ஒரு விவாதத்துல எதிர்கட்ச்சிக்காரவிக “உங்கள் நாட்கள் எண்ணப்படுகின்றன”ங்கறாய்ங்க. அதுக்கு அண்ணா சென்ன சொல்றாரு? “எங்கள் காலடிகள் அளந்தே வைக்கப்படுகின்றன”
அந்த சிச்சுவேஷன்ல அண்ணா இல்லாம வேற நபர் இருந்து உங்கள் எலும்புகளும் எண்ணப்பட போகின்றனனு சொல்லிட்டு தூக்கி அடிச்சிருந்தா? மேட்டர் ஓவர். சட்டசபை ரத்து -கவர்னர் ஆட்சினு எல்லா இழவும் நடந்திருக்கும்.

இவிக பொருளாதார தேக்கத்துக்கும் – நெருக்கடிக்கும் இந்த குணம் -துடுக்கான பேச்சு முக்கிய காரணம்.

3.என் தாயை பழித்தவனை யார் தடுத்தாலும் விடேன்னு ஒரு மேட்டர் இருக்கு. டாக்டர் ஷாலினி ஒரு தொடர்ல அம்மாங்கறவ பையனை எப்படில்லாம் உபயோகிச்சுக்கிறான்னு எழுதியிருக்காய்ங்க. செம மேட்டரு. சில அம்மாக்கள் தன் எதிரிகளை ஒழிச்சுக்கட்டவோ /தன் எதிரிகளை மகனோட எதிரியா எஸ்டாப்ளிஷ் பண்ணவோ ரெம்பவே மெனக்கெடுவாங்க.அந்த மாதிரி அம்மா வவுத்துல பிறந்து தொலைச்சா நாஸ்தி தான்.

எங்க பக்கத்துல ஒரு க்வாக் (போலி டாக்டரு) ஊர்ல உள்ள ரெண்டு அடிதடி க்ரூப் தலைவனையும் தன் க்ளினிக்ல வச்சு டீல் பண்ற பார்ட்டி .ஆனால் என்னாச்சு? வீடு கட்டறப்ப பக்கத்து வீட்டுக்காரன் இடத்துல சில அடிகள் சேர்த்து கட்டிக்கிட்டாரு. மேற்படி ரெண்டு க்ரூப் லீடர்ஸுல ஒருத்தன் கொஞ்சத்துல கொஞ்சம் நியாயம் பார்த்து ஒரு ஸ்டாண்ட் எடுக்க அவன் கட். இவருக்கு ஆதரவா இருந்தவன் வளரவே இல்லை.இவர் கட் பண்ணி விட்டவன் முடி சூடா மன்னனாயிட்டான். ஆக வீடு மேட்டரும் ஒரு ஆப்பு தான்.

அடுத்தது வாகனம். பார்க்கிங்ல ஆரம்பிச்சு ,ஷோ ரூம் டீலர், சர்வீஸ் சென்டர்,மெக்கானிக்,சக வாகன ஓட்டி ,ட்ராஃபிக் போலீஸ்னு எத்தனை பிரச்சினைக்கு வாய்ப்பிருக்கு? இந்த கேட்டகிரி சனத்துக்கு இந்த எல்லா பிரச்சினையும் வந்து ஆப்படிக்க வாய்ப்பிருக்கு .
டிகிரி ஃபைனல் இயர் எக்ஸாம்ஸ் நடக்குது. அன்னைக்கு பேங்கிங் எக்ஸாம். ஹால்ல உட்கார்ந்திருக்கம்.இன்விஜிலேட்டர் ஹால் டிக்கெட் கேட்கிறாரு .பிக் பாக்கெட்ல கைய விட்டா காணம். செரி ஒரு ஃபோட்டோ ஒட்டி விவரம் எழுதி க்ளாஸ் டீச்சர் கிட்டே ஒரு கை.எ வாங்கி ப்ரின்சிப்பல் கிட்டே ஒரு கை .எ வாங்கிட்டு வான்னாங்க.

க்ளாஸ் டீச்சர் இதான்டா சான்ஸுன்னு பெருசா பில்டப்லாம் கொடுத்தாரு ( நீ என் க்ளாஸா? நான் பார்த்ததே இல்லையே எட்செட் ரா) போங்கடா கொய்யால ..யுவர் காலேஜ் மை ஃபுட்.மை செல்ஃப் வாக்கிங் யூனிவர்சிட்டின்னு பஞ்ச் விட்டுட்டு வந்துட்டம்.

ஒரு சாதாரணர் லைஃப்ல இப்டி நடந்தா அவர் கதி என்ன?

4.காந்தி,இந்திராகாந்தி, மொரார்ஜி தேசாய்,விபிசிங்,நரசிம்மராவ்லாம் தங்கள் வாரிசுகளோட மேட்டர்ல என்னெல்லாம் அவதி பட்டாங்கனு ஒரு ஓட்டு ஓட்டிப்பாருங்க. இவிக விஐபிங்கறதால சமாளிச்சுட்டாய்ங்க. இதுவே ஒரு சாதாரணனோட வாரிசுகள் இப்படி அச்சானியமா எதுனா பண்ணி தொலைச்சா அந்த ஜாதகர்கள் கதி என்ன?

ஒரு பார்பர். ஒரு வீணா போன வெட்டி முண்டம். பார்பர் வேலையா இருக்கான் (ஷேவிங்) இந்த தண்டம் வந்து ஓசி டீ கேட்டு லொள்ளு பண்ணுது .பார்பர் ஒரு செகண்ட் உ.வ பட்டுட்டான். கையில இருக்கிறது கத்திங்கறத மறந்துட்டான்.கையில உள்ளதை உதறி ஓடிப்போ நாயேன்னான். கத்தி அந்த தண்டத்தோட உதட்டுல மாட்டிக்கிச்சு .பொள பொளனு ரத்தம்.இப்டில்லாம் இவிக லைஃப்ல அப்பப்போ நடக்கும்ணே.என்னாகும்?

5.அந்த காலத்துல வாத்யாரு சி.எம் .மம்மியோட ப்ரப்போசலை டிஸ் அப்ரூவ் பண்ணிட்டு கேன்வாயோட தலைமை செயலகம் புறப்படுவாராம்.இடையில வயர்லெஸ் தகவல் வரும்.மம்மி மணி கட்டை அறுத்துக்கிட்டாய்ங்க.ஒடனே சி.எம் கேன்வாய் யு டர்ன் போட்டு ரிட்டர்ன் ஆகுமாம். செல்லாவிடத்து சினம் தீது -அதுக்காவ வாயில்லாத பூச்சிகளை நசுக்கிரலாம்னுல்ல. அவிக மேட்டர்லயும் அடக்கி வாசிச்சா உடம்புக்கு நல்லது . இல்லின்னா பொளப்பு நாறிரும்ல?
ஒரு தலை காதல்/ அல்லது காதலியை மணந்து அவரால் /அவருடன் பிரச்சினைகள் வந்து அவதிப்படுவாங்க . அல்லது எதிரிகள் குடும்பத்தில் பெண் எடுப்பாங்க. அல்லது பெண்ணெடுத்த வீட்டுடன் விரோதம் வரும்.

6. நம்ம நண்பர் ஒரு நாட் நாட் பில்டிங் வாங்கினாரு (சைட் வேல்யூதான்) டிப்பரை காட்டினா போதும் பொல பொலனு உதிர்ந்துரும்.அதுல வில்லங்கம். நம்மாளு துணிஞ்ச கட்டை தான்.ஆனாலும் லீகலாவே போவம்னு இருக்க-ஆக்கிரமிப்பாளர் மராமத்துக்கு செங்கல்,மண் ஓட்டி வைக்க இவரு போய் வேணாம்டா இதெல்லாம் ஓவரு .மொத்தமா உட்கார்ந்துக்கிட்டா என்ன தான் உள்ள வச்சுருவாய்ங்கனு சொல்ட்டு வந்தாரு.என்ன ஆச்சு? நாலு எலைங்க வந்து கடையில கவுண்டர்ல இருந்த ஆளை பட்டிப்பார்த்துட்டு பூட்டாங்க.கோர்ட்ல கேஸு நடக்குது .பில்டிங் வேல்யூ ஒரு கோடி .வட்டி என்னாச்சு பாருங்க. இவிக லைஃப்ல அப்பப்போ நடக்கும்ணே.என்னாகும்?

7.நம்மாளு சோஃபா தயாரிப்பாளர். ராத்திரி பூட்டிக்கிட்டு வீட்டுக்கு போனாரு .காலையில 8 மணிக்கு கடையிலருந்து புகை வருதுப்பான்னு ஃபோன் வந்தது .கடைய திறந்து பார்த்தா எல்லாம் கருகி கிடக்கு. நிலம் விரயமாகும். சகோதரர் வழியில் நட்டம். ரத்தம்-ரத்த சுத்திகரிப்பில் பிரச்சினை வரலாம்.போலீஸ் பிரச்சினையும் வரலாம். அதி உஷ்ணம்,நெருப்பு,மின்சாரம்,அமிலம்,கூர்மையான ஆயுதங்கள்,கொம்புள்ள பிராணிகளால் பிரச்சினை வரலாம். கோபத்தால் சில பிரிவுகள்கூட ஏற்படலாம்.இதெல்லாம் இவிக லைஃப்ல அப்பப்போ நடக்கும்ணே.என்னாகும்?

8.ராஜீவ் காந்தி ராத்திரி வெடிச்சு சிதறப்போறாரு (கடக லக்னம் சிம்ம ராசி ) அன்னைக்கு ராத்திரி நம்ம லைஃப்ல நடந்த இன்சிடென்ட் இது . ( நம்முதும் கடக லக்னம் சிம்ம ராசி )

அந்த காலத்துல நாம பேச்சிலர் .குப்பைக்கு டஸ்ட் பின்லாம் போதாதுன்னு அரிசி டின்னை வச்சிருந்தம்.தம் அடிச்சுட்டு சரியா அணைக்காம போட்டுட்டாப்ல இருக்கு. நள்ளிரவு ரூம் எல்லாம் ஒரே புகை /மூச்சு திணறுது .

நடிகை மஞ்சுளா கட்டில்லருந்து விழுந்துதானே செத்துப்போனாங்க?இவிக லைஃப்ல இதெல்லாம் அப்பப்போ நடக்கும்ணே.என்னாகும்?
செரி இவிக பொருளாதார ரீதியா ரிலீஃப் ஆகனும்னா என்ன பண்ணனும். பரிகாரங்களையும் இந்த பதிவுலயே பார்த்துரலாம். இந்த தொடரை இந்த பதிவோட முடிச்சுட்டு அடுத்த தொடரை ஆரம்பிச்சுருவம்.

தலைப்பு:அரசியலும் -நவகிரகங்களும்

ஜாதகத்துல சூரியன் உள்ளிட்ட 9 கிரகங்கள் எந்தெந்த நிலையில இருந்தா பிரதமராகலாம் கு.பட்சம் கவுன்சிலராகலாம்னு பார்ப்பம். இந்த தொடர்ல உள்ள சிறப்பு என்னன்னா ஜாதகமே இல்லாட்டியும் உங்க வாழ்க்கை நிலையை வச்சே குறிப்பிட்ட கிரகம் உங்க ஜாதகத்துல வலிமையா நின்னிருக்கா இல்லையான்னு தெரிஞ்சுக்க முடியும்.

ஓகே ..இப்ப 9 ஆவது கேட்டகிரி சனத்துக்குண்டான பரிகாரத்தை பார்த்துரலாம்.

போலீஸ் ஆஃபீசர் போன்ற கெட் அப்,ஹேர் ஸ்டைல் ,மீசை என்று மாறவும். சஃபாரி சூட் அணியலாம்.(பாக்கு நிறம்) ரத்த தானம் செய்க.ஆண்,பெண் இருபாலாருமே கராத்தே ஜூடோ மாதிரி மார்ஷல் ஆர்ட்ஸ் கற்கலாம். கு.பட்சம் ஸ்போர்ட்ஸ் ட்ரஸ் /வாக்கிங் அல்லது ஜாகிங்.
சமையலுக்கு நல்லெண்ணெய் (செக்கு) உபயோகிக்கவும்.ரத்த விருத்தி -ரத்த சுத்திகரிப்புக்காக ப்ராக்டிக்கலாக சில நடவடிக்கைகள் மேற்கொள்ளவும்.(மருத்துவர் ஆலோசனை பெற்று) உ.ம் சிகப்பு நிற காய்கறிகள் அதிகம் சேர்ப்பது ,ரேப்பிட் ப்ரீத்திங்,பிராணயாமம், வியர்வை வெளிப்படும்படி நடை பயிற்சி ,யோகா இப்படியாக.
வாகனங்களை/வீட்டின் மின்சார உபகரணங்களை உரிய வகையில் பராமரிப்பது – கவனத்துடன் கையாள்வது நல்லது .வியர்வை வெளிப்படும்படி நடை பயிற்சி யோகா,அதிகளவு சுத்தமான குடி நீர் அருந்துதல்

கழுத்தில் முருகன் கை வேல் உருவ டாலர் -பாக்கு நிற கயிற்றில் அணிக. யூத்தா இருந்தா ஃபேன்ஸி ஸ்டோர்ல கிடைக்கும் புலி,சிங்கம் மாதிரி டாலர்கள் /ஏதேனும் ஆயுதவடிவ டாலர் அணியலாம்.பெண்கள் இவற்றை தமது கீ செய்ன்ல கோர்த்துக்கலாம்.இடுப்பில் அணியலாம்.

கந்தர் சஷ்டி கவசத்தில் “குத்து குத்து கூர்வடிவேலால் என்று துவங்கும் பகுதியை மட்டுமாவது மனப்பாடம் செய்து அவ்வப்போது சொல்லி வரவும்.
ஜாதகர் பர்ஸ் பாக்கு நிறத்தில் இருக்கட்டும் அதில் தேவ சேனாதிபதி வடிவில் இருக்கும் முருகன் படம் இருக்கட்டும்.கண்,தொண்டை குறித்த முன்னெச்சரிக்கை அவசியம் (உ.ம் விட்டமின் ஏ கொண்ட உணவுகள்,பொன்னாங்கண்ணி போன்ற கீரை வகைகள். அதிக சூடு,குளிர்ச்சி உள்ள பானங்களை தவிர்த்தல் .
இதுவரை சொன்ன பரிகாரங்களை தாயும் செய்யவும். வீட்டு ஹால்ல போர்க்கள காட்சி உள்ள போஸ்டர், போர் வீரன் சிலை . ஹால் சோஃபா கவர்,ஸ்க்ரீன்ஸ் பாக்கு நிறம். வண்டி வாகனத்தில் முருகன்,வேல் ஸ்டிக்கரிங், யூத்துன்னா சேகுவாரா ஸ்டிக்கர் போட்டுக்கங்க.

மாணவர்கள் பாக்கு நிற ஸ்கூல் பேக் யூஸ் பண்ணுங்க.அதுமேல ஏதேனும் ஆயுதம் அல்லது புலி சிங்கம் மாதிரி உருவம் இருந்தா பெஸ்ட்.புக்ஸுக்கு பாக்கு நிற அட்டை போட்டுக்கோங்க. அண்டர்லைன் பண்ண பாக்கு நிற ஸ்கெட்ச் யூஸ் பண்ணலாம்.

இதுவரை சொன்ன பரிகாரங்களை உங்க வாரிசுகளும் மேற்கொள்ளனும்.நீங்க தேவசேனாதிபதி ,நரசிம்மர் ,வேல் இத்யாதிகளை தியானம் செய்யலாம்.
இதுவரை சொன்ன பரிகாரங்களை உங்க மனைவியும் மேற்கொள்ளனும். இடுப்பில் பாக்கு நிற கயிற்றை அணியலாம்.அல்லது பெல்ட் .பெல்ட்டின் முகப்பில் ஆயுதம்/புலி/சிங்கம் உருவம் இருந்தா பெஸ்ட். திருமணமான பெண்கள் தம் தாலியில் பவழக்கல் பதித்துக் கொள்ளலாம்.

இதுவரை சொன்ன பரிகாரங்களை உங்க அப்பாவும் மேற்கொள்ளனும்.அப்பா,அப்பா வழி உறவு,சொத்து,சேமிப்பு,முதலீடு,வெளி நாட்டு தொடர்பு சம்பந்தப்பட்ட டாக்குமென்ட்ஸ் எல்லாம் ஒரு ப்ரவுன் கலர் ஃபைல்ல போட்டு வைங்க.மேல தேவசேனாதிபதி ஸ்டிக்கர் ஒட்டி வைக்கவும்.

தூரப்பயணம் போகும் போது பாக்கு நிற ஏர் பேக்-அது மேல தேவசேனாதிபதி உருவத்தை ஃபேப்ரிக் பெய்ண்ட்ல எழுதி வச்சுக்கோங்க.

படுக்கையறையில் போர்க்கள காட்சி உள்ள போஸ்டர், போர் வீரன் சிலை . இடுப்பில் ஏதேனும் ஆயுதம் ( ஃபேன்சி ஸ்டோர்ல கிடைக்கும் -கழுத்துல போட்டுக்க விற்பாங்க. அதை இடுப்புல அரை ஞான் கயிற்றில் கட்டி கொள்க) தேவ சேனாதிபதி வடிவில் இருக்கும் முருகன் படத்தை படுக்கையறையில் வைத்து வணங்கி வரவும்.வேல் பூஜை செய்யவும்.செப்பல்ஸ் /ஷூஸ் ப்ரவுன் கலர் பெஸ்ட்.

ஸ்..அப்பாடா டீல்ல விட்ட எத்தனையோ தொடர்கள் மாதிரியில்லாம இதை முடிச்சுட்டம்.அடுத்த தொடர் விரைவில் ஆரம்பம்.
உடுங்க ஜூட்டு .

சனி செவ் சேர்க்கை : திகீர் பலன் (பிப் 20 முதல் செப் வரை)

kalaingar

அண்ணே வணக்கம்ணே !
ஜாதக/கோசார பலன்ல இந்த சனி செவ் சேர்க்கை, விவாக பொருத்தத்துல ரஜ்ஜு பொருத்தம்னு வந்தா மட்டும் நானே டர்ராயிருவன். ஏன்னா நம்ம அனுபவம் அப்படி ..

நிற்க ..இந்த சனி செவ் சேர்க்கை காலம் 2016, பிப்,20 முதல் ,2016,ஏப்ரல் 8 வரை .(இது செப் வரை கூட தொடரலாம் என்று தகவல் -நாம இன்னம் புதுப்பஞ்சாங்கம் வாங்கலிங்கோ)

மேஷாதி 12 ராசிகளுக்கு இந்த கிரக ஸ்திதி எந்த மாதிரி பலனை கொடுக்கும்னு ஒரு குன்ஸா கெஸ் பண்ணி நம்ம முக நூல்பக்கத்துல இங்கிலிபீசுல போட்டம். அது 6 ராசிய தாண்டமாட்டேன்னு அடம் பிடிக்குது .இப்பமே 11 நாள் லேட்டு.ஆகவே தமிழ்லயே மேட்டரை முடிச்சுரலாம்.

சனி செவ் என்றாலே கசாப்பு தான் -கொத்துக்கறி தான் .அது நம்ம சேர்ந்தவிகள்ள யாருக்கு /எந்த பார்ட்டுலன்னு டேட்டா கொடுக்கப்போறம் அம்புட்டுதேன். பாசிட்டிவ் திங்கர்ஸ்லாம் ஜூட் விட்டுக்கினு கிளம்புங்கப்பு .

இந்த சேர்க்கை எந்தளவுக்கு டிசைடிங் ஃபேக்டர்னா தமிழ் நாடு எலீக்சன்ல நேருக்கு நேரா மோதும் திமுக அதிமுக தலைமைகளில் தசா பலன் -கோசாரம்னு பார்த்தா ரெண்டுமே சமமா தான் இருக்கு .ஆனால் இந்த சனி செவ் சேர்க்கை தலீவரை நின்னு விளையாட வைக்கப்போகுதுன்னா பார்த்துக்கங்களேன்..
இந்த சனி செவ் சேர்க்கை பலனை வச்சே எலீக்சன் ரிசல்ட்டை கெஸ் பண்ணிரலாம் பாஸ்..

தாத்தா =ரிஷபராசி ,கடகலக்னம்
மம்மி =சிம்மராசி ,மிதுன லக்னம்
கேப்டன் =துலா ராசி ,கும்ப லக்னம்.

நான் ச்சொம்மா அந்தந்த ராசிக்கு சனியும் செவ்வாயும் எந்தெந்த பாவத்துக்கு ஆதிபத்யம்? இவிக சேர்ந்தா என்ன நடக்கும்? எங்கே சேர்ந்திருக்காங்க. இதனால என்ன நடக்கும்னு எக்ஸ்பிரஸ் மாதிரி அடிச்சு விட்டுட்டன். ஆனால் ரெம்ப அலார்ட்டா ஆழமா ஆராய்ச்சி பண்ண வேண்டிய சேர்க்கை இது .

சனிக்கு 3-7-10 ஆம் இடத்து பார்வை உண்டு . சனி இப்ப இருக்கிறது விருச்சிகத்துல ..இவரோட பார்வை மகரம்,ரிஷப ,சிம்ம ராசிகள் மேல விழுது . இவை உங்க ராசிக்கு எத்தனையாவது ராசின்னு பார்க்கனும். எட்டாவது ராசியா இருந்தா நோ ப்ராப். ஆயுள் கூடும். 3,6,10,11 ஆவது ராசியா இருந்தாலும் சேஃப் தான். (நீங்க)
இதே போல செவ்வாய்க்கு 4-7-8 ஆமிடத்து பார்வை உண்டு. செவ் இப்ப இருக்கிறது விருச்சிகத்துல .இவரோட பார்வை கும்ப,ரிசப ,மிதுன ராசிகள் மேல விழுது .இந்தராசிகள் உங்க ராசிக்கு எத்தனையாவது ராசின்னு பார்க்கனும். 3,6,10,11 ஆவது ராசியா இருந்தாலும் சேஃப் தான். (நீங்க)

இதுலயே ஒரு சிக்கல் வருது . ரிஷப ராசி மேல சனி செவ் இருவரின் பார்வையும் விழுது .ஆக ரிஷப ராசிகாரவிக ரெம்ப கேர்ஃபுல்லா இருக்கோனம்.
செவ்=தெற்கு
திசை சனி =மேற்கு

ஆகவே இந்த கிரக சேர்க்கை பிரதிகூலமா உள்ளவிக தெற்கு மற்றும் மேற்கு திசையில போகும் போது ரெம்ப கேர்ஃபுல்லா இருக்கனும்.
மேக்ரோ லெவல்ல பார்த்தா நம்ம நாட்டின் தெற்கு,மேற்கு பகுதிகள் அதிகமா பாதிக்கப்படும் . இதை அப்படியே மானிலம்,மாவட்டம்னு அப்ளை பண்ணி பார்க்கலாம்.

செவ் -சனி சேர்க்கைக்கு நான் அறிந்த பரிகாரம்:
ரத்ததானம் , தீவிபத்து /ஆசிட்வீச்சில் சிக்கி குரூபியான நபர் / அங்கம் அறுபட்டவர் / உடல் ஊனமுற்றவர்களுக்கு அசைவ விருந்து கொடுத்தல் – வாய்ப்பிருந்தால் குல தெய்வத்துக்கு பலி பூஜை -சொந்தபந்தத்துக்கு அசைவவிருந்து ,காளியை வணங்குதல் ,தியானித்தல்.காளிக்குரிய பீஜம் க்லீம். இதை தொடர்ந்து ஜெபிக்கலாம்.
எச்சரிக்கை:இதை சாதாரணமாக நான் யாருக்கும் சிபாரிசு செய்வதில்லை -சனி செவ் சேர்க்கையின் உக்கிரம் அறிந்தவன் என்ற முறையில் இந்த முறை மட்டும் இதை சொல்கிறேன்
.
மேஷம்
சனி 10/11 க்குடையவர், செவ் 1/8 க்குடையவர் சேர்க்கை நடந்திருப்பது 8ஆம் இடத்தில்.ஆகவே
தொழில்/உத்யோகம் /வியாபாரம் ,லாப நோக்கு கொண்ட செயற்பாடுகள் மீது அதி கவனம் செலுத்தி இதனாலேயே சனி செவ் சேர்க்கை தரும் தீயபலனை அனுபவிக்க வேண்டிவரலாம்.
உ.ம் அம்மை ,காமாலை,கட்டி,கொப்புளம், வெட்டு காயம்,தீ காயம், விபத்து ,எதிரிகளால் தாக்குதல்,காவல் நிலையம் செல்லுதல். இன உறுப்பில் மேற்படி பாதிப்புகள் நிகழவும் வாய்ப்பு.

ரிஷபம்
சனி 9/10 க்குடையவர், செவ் 7/12 க்குடையவர் சேர்க்கை நடந்திருப்பது 7ஆம் இடத்தில் எனவே அப்பா,அப்பா வழி உறவு,சொத்து,சேமிப்பு,முதலீடு,வெளி நாட்டு தொடர்பு ஆகிய விஷயங்களில்,தொழில்/உத்யோகம் /வியாபாரம் ஆகிய விஷயங்களில் மனைவியின் யோசனைகளால்/அழுத்தத்தால் பின்னடைவுகளை சந்திக்க நேரலாம். மனைவிக்கு அம்மை காமாலை,கட்டி,கொப்புளம், வெட்டு காயம்,தீ காயம், விபத்து ,எதிரிகளால் தாக்குதல்,காவல் நிலையம் செல்லுதல் ஆகியவை நடக்கலாம். தொப்புள் பகுதிக்கு மேற்சொன்ன பாதிப்புகள் வரலாம். மனைவி காளியின் உருவத்தை தியானம் செய்க ( ஆரம்பத்தில் சொன்ன பரிகாரத்துக்கு உபரியாக)

மிதுனம்
சனி 8/9க்குடையவர், செவ் 6/11க்குடையவர் சேர்க்கை நடந்திருப்பது 6ஆம் இடத்தில். அப்பா,அப்பா வழி உறவு,சொத்து,சேமிப்பு,முதலீடு,வெளி நாட்டு தொடர்பு ஆகிய விஷயங்களில் சத்ரு ரோக ருண உபாதைகள் ஏற்படலாம்.அதே நேரம் லம்ப்பா கடன் வாங்கி சில்லறை கடனை எல்லாம் ஒழிச்சுரலாம். மூத்தசகோதரத்துக்கும் ,ஜாதகரின் கணுக்கால் பகுதிக்கு பாதிப்பு வரலாம்.தந்தை வழி உறவு /தந்தை வயது மனிதர் உதவ முன் வரலாம். அவர் கிட்டேயும் முட்டல் மோதல் வந்துராம பார்த்துக்கங்க. தாய்மாமனுக்கு பல்பு .அல்லது அவரால் உங்களுக்கு பல்பு . வயிறு தொடர்பா ஒரு திகிலான பிரச்சினை வரலாம். டேக் கேர்.

கடகம்
சனி 7/8க்குடையவர், செவ் 5/10க்குடையவர் சேர்க்கை நடந்திருப்பது 5ஆம் இடத்தில். கடந்த பிறவியின் காதலி/மனைவியை ஒரு திகீர் சூழலில் சந்திக்கலாம். பிள்ளைகளுக்கு ஒரு திகீர் சம்பவம் நடந்து அதன் மூலம் அவர்களுடன் நல்ல தோழமை ஏற்படலாம். நெருங்கியவர்களின் மரணம் விரக்தியுற செய்யலாம். கை நிறைய வேலை வரும். குண்டக்க மண்டக்க செய்தா பாடிக்கு சேதாரம் கூட வந்திரும்.டேக் கேர். வாரிசுகளில் ஒருவர் மற்றும் மனைவியின் போக்கு /நிலை கவலைக்கிடமாகலாம். சேர்க்கை நடந்திருப்பது 5 ஆமிடத்தில் எனவே காளியின் உருவத்தை தியானம் செய்க ( ஆரம்பத்தில் சொன்ன பரிகாரத்துக்கு உபரியாக)

சிம்மம்
சனி 6/7க்குடையவர், செவ் 4/9க்குடையவர் . இவர்களின் சேர்க்கை காரணமாக தாய்,வீடு,வாகனம்,கல்வி வகையறாவில் சத்ரு ரோக ருண உபாதைகள் ஏற்படும். அப்பாவுக்கும் இந்த உபாதைகள் ஏற்படலாம்.தூர பயணம் போகும் போது எச்சரிக்கை தேவை.
சிலருக்கு தாய் வழி உறவில் அல்லது தந்தை வழி உறவில் பெண் அமையலாம்.இந்த சேர்க்கை நடந்திருப்பது 4ஆம் இடத்தில். தாயின் நிலை கவலைக்கிடமாகும். உங்களுக்கும் வாகன விபத்துக்கு வாய்ப்பு. வீட்டிலேயே விழுந்து காயமுறுதல் /மின் விபத்து/தீவிபத்துக்கு வாய்ப்புண்டு .டேக்கேர்.

கன்னி
சனி 5/6க்குடையவர், செவ் 3/8க்குடையவர். எனவே மனைவிக்கு கருச்சிதைவு இத்யாதி அல்லது குழந்தைகள் காரணமாய் அல்லல் அலைச்சல் நேரலாம். ரெம்ப அட்வென்சரஸா திங்க் பண்ணி பல்பு வாங்குவிங்க. தசாபுக்திகள் அனுகூலமாக இருந்தால் சிலருக்கு பெயர் புகழ் கிட்டலாம்.ரெம்ப லோன்லியா ஃபீல் பண்ணுவிங்க. மரணம் பற்றி கூட யோசிப்பிங்க. தசாபுக்தியும் சரியில்லைன்னா தற்கொலை எண்ணங்கள் கூட வரலாம் (செயல்படுத்திராதிங்கய்யா -ஏழேழு சன்மத்துக்கும் பாவம்-மேலும் உங்க செயல் அடுத்து வரக்கூடிய எழேழு தலைமுறையை பாதிக்கும்) சேர்க்கை நடந்திருப்பது 3ஆம் இடத்தில்.இளையசகோதரத்துக்கு கடும் பாதிப்பு.சிலருக்கு ஸ்பீக்கர் அவுட் ஆயிரலாம் .தோள் பட்டையில ஃப்ராக்சர்/கட்டி/கொப்புளம் வர்ரது கூட நடக்கலாம்.பீ கேர்ஃபுல்.

துலாம்
சனி 4/5க்குடையவர், செவ் 2/7க்குடையவர் சேர்க்கை நடந்திருப்பது 2 ஆம் இடத்தில். தாய்,வீடு,வாகன வகையில் காசு பணம் புரளும். அதிர்ஷ்டவசமா ஜாக் பாட் கூட அடிக்கலாம் .(இது கேப்டனோட ராசி .வீடு =கட்சி)இது நாள் வரை கட்டிக்காத்த பெயர் புகழ் பலன் தரும் காலம் இது .வீட்ல மாமியா -மருமக சண்டை இருந்தா அது ஓய ஒரு வாய்ப்பு. பூர்வ புண்ணியங்களின் காரணமா சரியான துணையை சென்றடைவீர்கள்/பூர்வ ஜன்மபந்தம்னும் சொல்லலாம்.ஆனால் இந்த சேர்க்கை ரெண்டாமிடத்துல ஏற்பட்டிருக்கு.ஆகவே கண்,கழுத்து ,வாய் பகுதியில் திடீர்னு ரணம்/கட்டின்னு திகிலை கிளப்பலாம். இந்த சேர்க்கையின் பார்வை அப்படியே எட்டாமிடத்து மேல விழுது.ஆகவே ஒரு ஆப்பரேஷன்/ஆக்சிடென்டுக்கும் வாய்ப்பிருக்கு.டேக் கேர்.பரிகாரம் கட்டாயம்.

விருச்சிகம்
சனி 3/4க்குடையவர், செவ் 1/6க்குடையவர் சேர்க்கை நடந்திருப்பது ராசியிலேயே. அல்லல் அலைச்சல். அட்வென்சரஸ் தாட்ஸ்.திடீர்னு வீடு கட்டப்போறேன் ,வாகனம் வாங்க போறேன்னு இறங்குவிங்க.அவதிப்படுவிங்க. இளைய சகோதரத்தோட முட்டிக்குவிங்க.அல்லது சாகச செயல்களால் கடன் வாங்க வேண்டி வரும்.ஸ்பீக்கர் ,ஷோல்டர் பிரச்சினை கொடுக்கலாம்.வாகன கடன்,வீட்டுக்கடன் வாங்கி சிக்கி அவதிப்படுவிங்க. இந்த அவதிகளால ஹெல்த் எஃபெக்ட் ஆகி கட்டி ,கொப்புளம்,ரணம்னு அவதிப்படவேண்டி வரும்.அல்லது ஒரு விபத்து ,சர்ஜரி வரை கூட போகலாம்.

தனுசு
சனி 2/3 க்குடையவர், செவ் 5/12 க்குடையவர் சேர்க்கை நடந்திருப்பது 12 ஆம் இடத்தில். ஒரு ஜாக்பாட் என்னமோ வெய்ட்டிங்.ஆனால் கூடவே இலவச இணைப்பா படுத்த படுக்கையா இருக்கவேண்டிய நிலையும் வரலாம்.முக்கியமா பாதம் எஃபெக்ட் பண்ணிரலாம். கொஞ்சம் ரிஸ்க் எடுத்து பைசா கூட பார்ப்பிங்க.ஆனால் ஏதும் மிஞ்சாது .காசு,பணம்,வாக்குவன்மை ,உங்க தகிரியம், பெயர் புகழ்,புத்திசாலித்தனம் எல்லாமே வீண் விரயமா போயிரும்.டேக் கேர் பரிகாரம் கட்டாயம்.

மகரம்
சனி 1/2 க்குடையவர், செவ் 4/11 க்குடையவர் சேர்க்கை நடந்திருப்பது 11 ஆம் இடத்தில். ஹவுசிங்,ஆட்டோமொபைல் துறையில் உள்ளவர்களுக்கு அனுகூலமான காலம் தான். சொந்தத்துக்கு வண்டி வாகனம்,வீடு ,வாசல்னு ப்ளான் பண்ணாலும் சக்ஸஸ் ஆகலாம். என்ன சிக்கல்னா சேத்துல எருமை கணக்கா எவனோ செத்தான் எனக்கென்ன போச்சுன்னு மந்தமா (ஜல்சாவா ) இருந்த நீங்க ஆங்ரி யங் மேன் மாதிரி பஞ்ச் டயலாக்லாம் பேசுவிங்க. நிறையவே பேசுவிங்க. ரெம்ப கோபப்படுவிங்க. ஏறக்குறைய செப் வரை இதே கிரக நிலை இருக்கிறதால ரத்தகொதிப்பு,பைல்ஸ் மாதிரி பிரச்சினை வரலாம். மூத்த சகோதரத்துக்கு ஒரு திகீர் சம்பவம் நடக்கலாம்.உங்களுக்கே கூட கணுக்கால் பகுதியில ஒரு பாதிப்பு வந்து டர்ராக்கலாம்.

கும்பம்
சனி 1/12 க்குடையவர், செவ் 3/10 க்குடையவர் சேர்க்கை நடந்திருப்பது 10 ஆம் இடத்தில். அல்லல் அலைச்சலை தவிர்க்க முடியாது.எதுலயும் ஆற அமர லாபம் பார்த்து இறங்கற நீங்க திடீர்னு இறங்கி கலக்க பார்ப்பிங்க. லாப நஷ்டம்லாம் பிறவு வேலை ஓடனும்னு விரட்ட ஆரம்பிச்சுருவிங்க. ப்ராஜக்டு கடேசியில கைய கடிக்கும். ஒங்க தைரியம் சாகசம்லாம் லாபத்தை குறைச்சுரும்.அடக்கி வாசிங்க.ப்ரஸ்டிஜ் பார்க்காதிங்க. ஒரு வித உணர்ச்சி வசப்பட்ட நிலையில ஃபீல்டுல இறங்கி கலக்கும் போது கவனக்குறைவால விபத்து -காயம்லாம் கூட ஏற்பட வாய்ப்பிருக்கு. உசாரய்யா உசாரு .

மீனம்:
சனி 11/12 க்குடையவர், செவ் 2/9 க்குடையவர் சேர்க்கை நடந்திருப்பது 9 ஆம் இடத்தில். கடந்த சனிப்பெயர்ச்சியில இருந்து நிலுவையில இருந்த சில விவகாரங்கள் பைசலாகும் . முக்கியமா அப்பா தொடர்பானவை ,சொத்து,முதலீடு தொடர்பானவை . எல்லாத்தையும் வேட்டு விட்டுராதிங்க.. கொஞ்சம் சேஃப் பண்ணுங்க. முடியும். உங்க பேச்சுத்திறமையால வருமானம் கூடும்.(ரெம்ப அடிச்சு பேசிராதிங்க பாஸ்! – டூ மச் ஈஸ் ஆல்வேஸ் பேட் ஆச்சே ! ) அப்பாவோட கேரியர்ல அவர் புதிய உச்சங்களை தொடலாம். தொடை பகுதியில சிக்கல் வரலாம். அப்பாவுக்கு தையல் போட வேண்டி வரலாம். அல்லது அப்பாவுக்கு லைஃப் த்ரெட் மாதிரி கூட வரலாம் . டேக் கேர்.அவரையும் அலார்ட்டா இருக்க சொல்லுங்க.