காசு பணம் துட்டு மணி மணி : 18 ( 7 ஆவது கேட்டகிரி பரிகாரம்)

ஓபாமா

அண்ணே வணக்கம்ணே !
உலகத்துல உள்ள மன்சங்களை 9 கேட்டகிரியா பிரிச்சு -ஒவ்வொரு கேட்டகிரிக்கும் உண்டான லட்சணங்களை சொல்லி – ஃபைனான்ஸ் மேட்டர்ல இவிகளுக்கு ஆப்பு எப்படி வரும்-அதுக்கு பரிகாரம் என்னன்னு சொல்லிக்கிட்டு வர்ரம்.

இதுவரை 6 கேட்டகிரிகளைபைசல் பண்ணிட்டம்.கடந்த பதிவுல 7 ஆவது கேட்டகிரிக்குண்டான லட்சணங்களை சொல்லிட்டம் . இந்த பதிவுல ஏழாவது கேட்டகிரிக்குண்டான பரிகாரங்களை சொல்லோனம்.

அர்ஜென்டா நீங்க ஞானம் பெறனும். இல்லின்னா ஞானம் ஒங்களுக்கு யதேஷ்டமா கிடைக்கும். ஞானம்னா என்ன? எல்லாமே வெட்டிங்கறத உணர்ரது தான் ஞானம்.

ஹ..என்ன பாஸ் .. நீங்க பிரதமராகனும் -நதிகளை இணைக்கனும்னெல்லாம் சொல்றிங்க.. எல்லாமே வெட்டியா? எல்லாம் வெட்டின்னா எதுக்கு மெனக்கெடனும்.பேசாம கிருஷ்ணா ராமான்னிட்டு இருக்கலாம்லனு கேப்பிக.
சொல்றேன்.

பெருசா தத்துவம்லா சொல்லி ஜல்லியடிக்க போறதில்லை. உங்களுக்கு தெரிஞ்சதை வச்சு தெரியாத மேட்டரை எப்படி கெஸ் பண்றதுன்னு சொல்லி தாரேன்.

எம்.ஜி.ஆர் எப்படியா கொத்த லெஜன்ட்? சமீபத்துல வந்த வெள்ளத்துல மியூசியம் கணக்கா வச்சிருந்த அவரோட ஜாமான் செட்டெல்லாம் அடிச்சிக்கிட்டு போயிருச்சாம்ல? ஏற்கெனவே அவரோட ராமாவரம் தோட்டம் சரக்கடிக்கிற இடமாவும் -ஒதுங்கற இடமாவும் தான் இருந்ததா கேள்வி.

அட இதை கூட விடுங்க.கடேசி காலத்துல மம்மியோட டபுள் கேமை எல்லாம் ஸ்மெல் பண்ணிட்டு கட்டம் கட்டிரனும்னு இருந்தப்போ படக்குன்னு செத்து போயிட்டாரு.

என்.டி.ஆர் எப்படியா கொத்த ஜூரி ? ஆனானப்பட்ட ஐரன் லேடி இந்திராகாந்தியையே கண்ல விரல் விட்டு ஆட்டின பார்ட்டி. சொந்த மாப்ளை ஆப்படிச்சுட்டான்.அப்படியும் ஓஞ்சு போயிராம மானிலம் முழுக்க டூர் அடிக்கிறேன் .மாப்ளைக்கு ஆப்படிக்கிறேன்னு கோதால இறங்கினாரு . படக்கு போய் சேர்ந்துட்டாரு .செத்த பிறவாவது நிம்மதி கிடைச்சுதா? ஊஹூம். அன்னார் வாழ்ந்த வீடு ராமாவரம் தோட்டம் கணக்கா சரக்கடிக்கிற இடமா? ஒதுங்கற இடமா ஆயிருச்சு.இப்பவும் அப்படியேதான் கிடக்கு.

அப்ப அவிக வாழ்ந்த வாழ்க்கைல்லாம் வெட்டி தானே. வெட்டின்னு தெரிஞ்சு வெட்டியா உட்கார்ந்திருந்தா வெட்டிபயன்னிருவாய்ங்க. இதுவே வெட்டின்னு தெரிஞ்சு – அதை மறக்காம -எதையாச்சும் செய்துக்கிட்டிருப்பம்னு செய்துக்கிட்டிருந்தா? எப்படி இருக்கும்? அதான்யா ஞானம்.

நம்ம கதைய எடுத்துக்குவம் . கவுன்சிலர் ஆவறதுதான் லட்சியம்னு வாழ்ந்தா ..கொய்யால ..எவனோ நம்ம வாஸ்து -ஜோதிஷ ஞானத்துக்கு பயந்து டிக்கெட் கொடுத்து -அவனே செலவழிச்சு செயிக்கவும் வச்சுட்டான்னு வைங்க. பொளப்பே நாறீரும்.
இதுவே பிரதமராவறதுதான் லெட்சியம்னு இருந்தா ஒரு ம..னாவும் நடக்காது .இப்டியே வர்ரவனை எல்லாம் கிளி கிளின்னு கிளிச்சுக்கிட்டு வாழ்ந்துட்டு போயிட்டே இருக்கலாம். இதான் பாஸ் ஞானம்.

வெட்டின்னு தெரிஞ்சு -அதை மறக்காம கமிட் ஆவறது ஞானம். வெட்டினு தெரிஞ்சு எட்டியே நிற்க அடைய மிடியாத டார்கெட்டை ஃபிக்ஸ் பண்ணிக்கிறது ??

அட..எப்டி பாஸ் ..எல்லாத்தையும் வெட்டின்னு பைசல் பண்ணிர்ரது ..வால்க்கையில எத்தனை சந்தோசம் இருக்குன்னு நினைக்கிறிங்களா? அப்ப ஞானம் கியாரண்டி .

ஆனால் அந்த ஞானம் . ..கிடைக்கிற ரூட்டிருக்கே..ஸ்..யப்பா நரகம்..!

ஞானம் எங்கெல்லாம் கிடைக்கும்? போலீஸ் ஸ்டேஷன்,கோர்ட் ,ஆஸ்பத்திரி ,சுடுகாடு . சினிமா பார்க்கனும்னா சத்யம் போறம்ல. அப்படி ஞானம் வேணம்னா மேற்படி இடத்துக்கெல்லாம் போகனும்.
இதுமட்டுமா?

தனிமை , தகுதிக்கேற்ற அங்கீகாரமின்மை ,தோல்வி , நிராகரிப்பு,பிரிவு ,வீண்பழி இப்படி எந்தெந்த கடையில ஞானம் கிடைக்குமோ அந்த கடைக்கெல்லாம் நம்ம விதி தள்ளிக்கிட்டு போயிட்டே இருக்கும்.

நாம என் கவுண்டர் (ஏட்டு) ஏகாம்பரம் மாதிரி . ஞானம்ங்கறது ரவுடி குத்துவேன்னு சொன்ன குத்து மாதிரி. நாம வாங்கிக்கிட்டாதான் என்னனு இருந்தம்னா ஒரு குத்தோட போவும். இடையில அர்ஜுன் ங்கற ஈகோ சிலிர்த்துக்கிட்டு வந்தா .. யு டர்ன் -டேபிள் உடைப்பு -ஸ்டேஷன் துவம்சம் -உபரியா அதே குத்து -அதே ரெத்தம்.

தத்துவம்ங்கற வார்த்தை இயற்கை குணத்தை தான் குறிக்கும்.ஜல தத்துவம்னா என்ன தண்ணீரின் இயல்பு ( பள்ளம் நோக்கி பாயும்) தீயின் குணம் என்ன? தலை கீழா பிடிச்சாலும் மேல் நோக்கி தான் எரியும்.

வாழ்க்கையின் குணம்/போக்கு/இயல்பு /இயற்கை என்னன்னு புரிஞ்சுக்கறதுதான் தத்துவம். இளமையின் முடிவு ? முதுமை .முதுமையின் முடிவு மரணம். இளமையை அனுபவிச்சுர்ரதுன்னு இறங்கினா முதுமை சீக்கிரமா வரும்.முதுமையிலயும் நிதானம் வல்லன்னா மரணம் சீக்கிரமா வரும்.

நான் இங்கே கடவுள்,சொர்கம் ,நரகம் மாதிரி மேட்டருக்கே போகல. நான் சொன்ன தெல்லாம் யதார்த்தம் . இந்த யதார்த்த நிலையை புரிஞ்சு வாழ்ந்தாலே இந்த கேட்டகிரி சனம் ஓரளவு நிம்மதியா வாழலாம்.

மத்த கேட்டகிரி மேட்டர் வேற மாதிரி.அவிகளும் இதை தெரிஞ்சு -அறிஞ்சு -மறக்காம வாழ்ந்தா நல்லதுதான்.ஆனால் இதை அவிக அறிய சந்தர்ப்பமே வராது .வந்தாலும் படக்குன்னு மறந்துருவாய்ங்க. சுத்தமா மறந்துருவாய்ங்க.

ஆனால் உங்க கேட்டகிரி ஞானம் பெறவே பிறப்பெடுத்த கேட்டகிரிங்கறதால ஞானத்துக்கு புறம்பா எப்பல்லாம் சைடு வாங்கறிங்களோ அப்பல்லாம் பல்பு வாங்கியே தீருவிங்க. பட்ட காலே படும்ங்கறாய்ங்களே அது எப்படி சாத்தியமாகுது?
உங்க கேட்டகிரி ஆளுங்களை ஞான வழிக்கு திருப்ப இயற்கை உங்க இளமை முதலே ட்ரை பண்ணிக்கிட்டிருக்கும் (பல்பு மேல பல்பு )ஆனால் லைஃப்ல நெல்ல நேரம் வரும் போது ஏற்கெனவே வாங்கின பல்புகளால் பெற்ற ஞானம் லைட்டா -லைட்டா தான் தேசலாயிருக்கும்.ஆனா சப் கான்ஷியஸ் மைன்டுல அது இருக்கும்.

எவன் பாம்புக்கு பயப்படறானோ அவன் கண்ணுக்கு தான் அடிக்கடி பாம்பு தென்படும். இதை போல பல்பு வாங்கி ஞானம் பெற்றவன் வாழ்க்கையில தொடர்ந்து பல்பு வாங்கிட்டே இருப்பான்.

ஆகவே பல்பு வாங்கித்தான் ஞானம் பெறனும்னு வெய்ட் பண்ணாம இப்பமே கோதாவுல இறங்கிருங்க. இந்த பதிவையே மறந்துட்டாலும் செரி ஒரே பாய்ண்ட் -ஒரே வரி -ஒரே வார்த்தைய ஞா வச்சுக்கோங்க .எல்லாமே வெட்டி.

இன்னைக்கு ராத்திரி மம்மி டிக்கெட் போட்டுட்டா ஒரு வாரம் வரைக்கும் மேட்டரே வெளிய வராது.கொய்யால கக்கூஸுல பதிச்ச கிரானைட் கல்லை கூட பெயர்த்து எடுத்துட்டு போயி சேஃப் பண்ணிட்டு பிறவு தான் அறிவிப்பானுவ.அப்பம் ஜெ போட்ட ஆட்டம்லாம் வெட்டி தானே..

இந்த தத்துவம் உங்களுக்கு செரிச்சு -ரத்தத்துல கலந்துருச்சுன்னா உங்க லைஃப் ஸ்டைலே மாறிரும். எளிமை -எளிமை -எளிமைங்கறதே உங்க தாரகமந்திரமாயிரும்.

தெலுங்குல கொத்த பிச்சகாடு பொத்தெரகடுன்னு ஒரு சொலவடை உண்டு.புதுசா பிச்சை எடுக்க வந்தவனுக்கு வேளை -நாழி தெரியாதாம்.அதை போல புதுசா ஞானம் பெற்றவிக வாயா -வார்த்தையா அள்ளி விட்டுக்கிட்டே இருப்பாய்ங்க.
உங்களுக்குள்ளே ஞான மலர் மலர ஆரம்பிச்சுட்டா அதன் வாசம் கி.மீ கிமீ பரவ ஆரம்பிச்சுரும்.பிறவு உங்க இருப்பே ஞானத்தை பேசும். நீங்க ளா எதையும் பேச தேவையில்லை.

ஆனால் ரூம் ஸ்ப்ரே யூஸ் பண்றவன் (செயற்கை ஞானம்) சன்னலையெல்லாம் சாத்தி வைக்கனும்.அப்பத்தேன் வாசம் ரூம்ல தங்கும்.அதை போல ஞானம்ங்கற வாசம் வாய்ங்கற சன்னல் வழியா போயிரப்படாது .ஆகவே தத்துவத்தை பேசாதிங்க.வாழ்ந்து காட்டுங்க.

வீடு ஏ.பி.நாகராஜன் சினிமால ஆசிரம செட் மாதிரி இருக்கட்டும். உங்க ஞான வாழ்க்கை உங்க தாயையும் பக்குவப்படுத்தட்டும். வாகனம்லாம் யாரோ இரவல் கொடுத்த நினைப்புலயே யூஸ் பண்ணுங்க. தியானம்,யோகம் பற்றிய புஸ்தவம் -யோக சாஸ்திரங்களை ,யோகிகளின் வாழ்க்கை வரலாறுகளை படிங்க.

யோகிகளின் உருவங்களை தியானம் பண்ணுங்க. உங்க ஞான வாழ்க்கை உங்க வாரிசுகளையும் பக்குவப்படுத்தட்டும். ஒருத்தன் உங்க கிட்டே வாங்கின கடனை திருப்பி தரலியா -உங்க கருமத்தை வாங்கிக்கிறான்னு அருத்தம்-ஒருத்தன் உங்களை விமர்சிக்கிறானா ? தோஷங்களை குறைக்கிறான்னு அருத்தம். இப்படி ஒரு மைன்ட் செட்டுக்கு வந்துருங்க.கடன் தானே திரும்பி வரும். விமர்சகன் உங்க ரசிகனா மாறிருவான்.

மனைவி ? உங்களை புரிஞ்சு நடந்துக்கிட்டா உங்க கருமங்களை கூட்டறாய்ங்கன்னு அருத்தம். எரிஞ்சு விழுந்தா கருமங்களை ஒழிக்கிறாய்ங்கன்னு அருத்தம்.

கொஞ்சம் உள்ளே பார்த்தா கூட்டத்துல தனிமையாவும் -தனிமையில கூட்டமாவும் இருக்கிறது தெரியும்.ஆகவே கூட்டமோ -தனிமையோ உங்களை பாதிக்கவே பாதிக்காது .

உங்க ஞான வாழ்க்கை உங்க அப்பாவையும் பக்குவப்படுத்தட்டும். அப்பா சொத்து அவர் கர்ம பலம். அது கிடைச்சா தான் சிக்கல்.அவர் ஜாதகத்துல அஞ்சாமிடத்தை லக்னமா வச்சுக்கிட்டு சொன்னா என்ன பலனோ அதெல்லாம் உங்க லைஃப்லயும் நடக்கும்.

குரு ? ஒலகத்துக்கெல்லாம் ஒரே குரு . அவர் வேற வேற வடிவத்துல அப்பப்போ விசிட் அடிப்பார். எப்ப வரனுமோ அப்ப கரீட்டா வருவார்.

கோவில்,குளம்,புண்ணிய க்ஷேத்திரம்லாம் ஸ்தூலமான விஷயங்கள்.சூட்சுமமா உங்களுக்கு இருக்கிற மேட்டரை வெளிய இருந்து ஞா படுத்தற விஷயங்க தான்.

வ்யாபாரம் த்ரோஹ சிந்தஹா அதாவது எந்த தொழிலா இருந்தாலும் பார்ட்டிக்கு/க்ளையண்டுக்கு ரவூண்டு துரோகமாச்சும் பண்ணனும். இல்லாட்டி பணம் பண்ணமுடியாது. நாம பணம் பண்றோம்னா கர்மத்தை பண்றோம்னு அருத்தம்.ஆகவே நான் ஏற்கெனவே சொன்ன எளிமை டு தி பவர் ஆஃப் த்ரீ லைஃபுக்கு எவ்ள தேவையோ அவ்ள பணம் மட்டும் பண்றது நல்லது .

உங்க முயற்சியே இல்லாம வருதா?வரட்டும். காந்தி தாத்தா சொன்னாப்ல அதுக்கு நீங்க ஒரு ட்ரஸ்டியா மட்டும் இருங்க. உணவுக்கு ருசியை தருவது உங்க பசி .தண்ணீருக்கு ? தாகம். செக்ஸுக்கு உங்க பிரம்மச்சரியம்.

குறிப்பு:
உலகியல் ரீதியா நீங்க சக்ஸஸ் ஆகனும்னு நினைச்சா உலகியல் வாழ்க்கையின் அர்த்தமற்ற தன்மையை உணர்ந்தாகனும்.அதை மறக்கப்படாது . இல்லின்னா உலகியல் வாழ்க்கை நாறி – வாழ்வின் அர்த்தமற்ற தன்மைய உணர்விங்க.

அடுத்த பதிவுல எட்டாவது கேட்டகிரி ஆட்களை பத்தி சொல்றேன். உடுங்க ஜூட்டு .