சவாசனம் : அற்புதபரிகாரம்

லக்னாதிபதி 6- 8- 12 ல் இருப்பதை வைத்து நானே பலமுறை திகில் படம் காட்டியிருக்கன். அப்ப சொன்னதெல்லாமும் நெஜம் தான். இப்ப சொல்லப்போறதும் நெஜம் தான்.

ஆருனா போதிய தகுதி இல்லாம அங்கீகாரத்துக்கு அலைஞ்சு பறை சாத்தி ஒரே மாதிரி முயற்சிகளை செய்றாய்ங்கன்னு வைங்க. அப்பம் “ஓட்டை சட்டிய வச்சுக்கிட்டு போட்ட தாளத்தை போடாதே”ம்பாய்ங்க.

சட்டின்னாலே அது “கடம்” தான். தாளம் போடத்தான்னு நினைச்சுர்ரம். அல்லது பானைன்னதுமே அதை தண்ணி ஸ்டாக் பண்ணத்தான்னு நினைச்சுர்ரம்.
அதனால ஓட்டை சட்டின்னு கேவலப்படுத்திர்ரம். இதுவே அந்த ஓட்டை சட்டியை வச்சுக்கிட்டு உபயோகமா என்ன பண்ணலாம்னு ஸ்கெட்ச் பண்ணா எத்தனையோ வகையில யூஸ் பண்ணலாம். இந்த நொடி ஸ்பார்க் ஆறதை மட்டும் இங்கன சொல்றன். உங்களுக்கு எதுனா ஸ்பார்க் ஆனா கமெண்ட்ல சொல்லுங்க.
சொட்டு நீர் பாசனத்துக்கு யூஸ் பண்ணலாம். செடி வைக்கலாம் (புதுசா ஓட்டை போடற வேலை மிச்சம்) ஒரு ஆளையே மூளை ரீதியில தீர்த்துக்கட்டிரலாம் , ஒன்னுமில்லை ஒரு ஆளை அசைய முடியாம லாக் பண்ணிட்டு அவன் தலை மேல சொட்டு சொட்டு தண்ணி விழறாப்ல செய்தா போதுமாம். ஒரே நாள்ள மென்டலாயிருமாம்.

ஆக லக்னாதிபதி 6 ல இருக்காரா -எட்டுல கீறாரா – 12 ல லாக் ஆயிட்டாராங்கறது பிரச்சினையே இல்லை. அந்த சிச்சுவேஷனை நீங்க எப்படி டாக்கிள் பண்றிங்கங்கறதுதான் முக்கியம்.

இந்த சீரிஸ்ல ஜோதிடம் முற்றிலும் புதிய கோணம் தொடர் வரிசையில சில விஷயங்களை சொல்லலாம்னு இருக்கன்.
லக்னாதிபதி எட்டில் இருந்தால் கெட்டது குடின்னு நானே சொல்லியிருக்கன். ஆனால் கொஞ்சம் டீப்பா ரோசிங்க. எட்டுங்கறது மரணத்தை காட்டும் இடம். ஜாதகர் மரணத்தை பத்தி யோசிக்க ஆரம்பிச்சுட்டா என்ன ஆகும்? அவரோட வாழ்க்கை சூப்பர் டூப்பர் சக்ஸஸ் ஆகும்.

ஆனால் நம்மாளுங்க நார்மல் பர்சன்ஸுக்காக வச்ச ரூல்ஸை எல்லாம் இவிகளும் ஃபாலோ பண்ணா தான் பிரச்சினை. உதாரணமா அறச்சொல் பேசக்கூடாதுன்னு ஒரு மேட்டர்( அபசகுனமா பேசறது -சாவு -என் கருமாதிக்கு வா).

ஆரோ பாடகர் ” கையில வாங்கினேன் பையில போடல”ன்னு பாடினாராம். பர்ஸ் போச்சு. டி.எம்.எஸ் ” நான் ஒரு ராசியில்லா ராஜா”ன்னு பாடினார். மார்க்கெட் போச். கண்ணதாசன்”ஊமை என்றால் அதில் ஒரு அமைதி”ன்னு எளுதினாரு.அதான் அவரோட கடைசி பாட்டு. இப்படி நிறைய டேட்டா இருக்கு. இல்லேங்கல. ஆனால் இதை லக்னாதிபதி எட்டுல உள்ளவுக ஃபாலோ பண்ணப்படாது.

இதுக்கு பரிகாரமா மரண கானா பாட்டு கேட்க சொல்றேன்.ஏன்னா அப்படியாச்சும் மரணத்தை பத்தி சிந்திக்கனும்னுதேன்.

“சவாசனம் “பண்ண சொல்றேன். உங்கபாடிய கொண்டு சுடுகாட்ல வைக்கிறாய்ங்க. கட்டை அடுக்கறாய்ங்க. நெருப்பு வைக்கிறாய்ங்கன்னு இமேஜின் பண்ண சொல்றேன்.
இப்படி செய்யும் போது ப்ரக்ஞை உடலை கடக்குது. ஆக்சிடென்டலாம் ஞானமே கூட பெறலாம்.ஆனால் லக்னாதிபதி எட்டில் என்ற தோஷத்துக்கு பரிகாரம் மட்டும் கியாரன்டி.ஆனால் எத்தனை பேர் ஃபாலோ பண்ணி சக்ஸஸ் ஆனாய்ங்கன்னு தெரீல.

இதுமட்டுமில்லை சொந்த பந்தம்,நட்பு வட்டத்துல சாவு விழுந்தா போய் கலந்துக்கங்க.சுடுகாடு வரை போய் வாங்கன்னு சொல்றேன்.
ஆராச்சும் அனாதை பிணங்களுக்கு சம்ஸ்காரம் பண்ற வேலைய சேவையா செய்துக்கிட்டிருந்தா அவிகளுக்கு கான்ட் ரிப்யூட் பண்ணுங்க.
விட்டா உங்கள மாதிரியே லக்னாதிபதி எட்டுல கேஸுங்களை தேடிப்பிடிச்சு ஒரு மார்ச்சுவரி வேன் ரன் பண்ணுங்க. ஏழைக்கு இலவசம்னு வைங்க.
உங்க ஏரியா கவர்மென்டு ஆஸ்பத்திரிக்கு போயி ஏழை பாழைங்க கிட்டே மார்ச்சுவரில லஞ்சம் வாங்காதிங்கடா – நாங்க வேணா காசு கொடுக்கறோம்னு செட்டில்மென்ட் பண்ணிக்கங்க. நான் கோடு போட்டுவிட்டேன். நீங்க ரோடு போடுங்க. அப்பால லக்னாதிபதி எட்டுல உட்கார்ந்து என்ன செய்யமுடியும்?
சரிங்ணா நாளைக்கு (அதாவது அடுத்த பதிவுல ) லக்னாதிபதி ஆறுல இருக்கிறதை எப்படி டேக்கிள் பண்ணலாம்னு சொல்றேன்.

குறிப்பு:
லக்னாதிபதி எட்டுக்குரியவரோடு சேர்ந்தாலும்,அவர் இவரை பார்த்தாலும் -இவர் அவரை பார்த்தாலும் கும்பம்,மகரம் தவிர்த்த மத்த லக்னக்காரவுகளுக்கு லக்னாதிபதியோட சனி சேர்ந்தாலோ இந்த மேட்டரை ஃபாலோ பண்ணுங்க.

Advertisements

ஜோதிடர் மாநாட்டில் பேச்சு (வீடியோ)

அண்ணே வணக்கம்ணே !
ஆதியோடந்தமா ஒரு கல்யாண விருந்து மாதிரி -சூடும் சுவையுமா பதிவுக போடனுங்கறதுதான் நம்ம விருப்பம். ஆனா மனசோட வேகத்துக்கு பாடி கோ ஆப்பரேட் பண்ண மாட்டேங்குது. நாமும் நமக்கு தெரிஞ்ச ட்ரிக் எல்லாம் ப்ளே பண்ணிக்கிட்டுதான் இருக்கம். லேட்டஸ்டா நடனப்பயிற்சி.

உடற்பயிற்சியை விட இது பெட்டர்னு தோனுது. பாடியோட -மைண்டும் ரிலாக்ஸ் ஆகுது. அங்கீகாரத்துக்காவ ஏங்கிக்கிட்டிருந்தம் .அது கிடைச்சிருக்கு. இல்லேங்கல. ஆனாலும் ஒரே தாவா தாவ துடிக்கிறம். இதுக்கும் நம்ம நெல்ல எண்ணம் தான் காரணம்.

நாம நினைச்சிருக்கிற வேலைகளை எல்லாம் செய்யனும்னா பெரிய டீமே தேவை. அவிகளுக்கு கொடுக்கவாச்சும் காசு வேணம்.

புதன் நமக்கு ஆப்படிக்கிற பார்ட்டி. (புதன்=ஜோதிடம்) ஆன்லைன் ஜோதிட ஆலோசனைல்லாம் விசப்பரீட்சை .தற்சமயம் ஸ்கின் ப்ராப்ளத்தோட நின்னிருக்கு.(புதன் = ஜோதிடம்) புதனை ரெம்ப டார்ச்சர் பண்ணா அவரு நம்மை டார்ச்சர் பண்ணிருவாரு.

புத்தகம் -பேச்சு -பத்திரிக்கை எல்லாமே புதன் தான். இந்த வகையில நமக்கு எந்தளவு காசு வருதோ அந்தளவுக்கு நம்ம பெர்ஃபார்மென்ஸ் டப்ஸாயிரும்.
பின்னே வேற என்ன ஆல்ட்டர்னேட்டிவ் இருக்குன்னா சினிமா. ஒரு காலத்துல சினிமா மேலான நம்ம எதிர்ப்பார்ப்புகள் வேற .இப்பம் காசு -பணம் -துட்டு -ருப்யா.
எவனோ பண்றான்.காசு வாங்கறான். என்னென்னமோ பண்றான்.அதே காசு நம்ம கைக்கு வந்தா ? அவன் பண்றதை கொஞ்சம் தம் கட்டினா நாமளும் செய்யமுடியும். அதே காசை வச்சு மக்கள் ..கு.ப அடுத்த தலைமுறையாச்சும் பெட்டரா மாற ஒர்க் அவுட் பண்ண முடியும்.

Hardy body -windy mind -Holy soul -இதுக்கு ஒரு வழி நதிகள் இணைப்பு – அதுக்காவத்தேன் ஆப்பரேஷன் இந்தியா 2000 .அது நடக்கறதுக்குள்ள சனம் மன நோயாளிகளா மாறிராம இருக்க நம்ம எழுத்தும் -பேச்சும். இதை எல்லாம் ஒர்க் அவுட் பண்ணனும்னா பெரிய டீமே வேலை செய்யனும்.

நம்ம பேச்சும் -எழுத்தும் மக்களை போய் சேரனும் .கு.ப 18 மொழிகள்ள டப் பண்ணனும். இதுக்கெல்லாம் காசு வேணம்ல. அதை புரட்ட முதல் வேணம்ல . அதுக்குத்தேன் பொங்கல் ரிலீஸ் -ஒரே தவணையில் 4 புக்ஸ்.

இந்த புக்ஸ் நம்ம ரேஞ்சுக்கு மெகா பட்ஜெட். இதை ப்ரமோட் பண்ணத்தேன் என்னென்னமோ செய்துக்கிட்டிருக்கம். (அதெல்லாம் தொழில் ரகசியமுங்கோ)
இடையில பாவாதிபதிகள் நின்ற பலன் தொடரை ஜரூரா எழுதிக்கிட்டிருந்தம். ஏன்னா அது டூ இன் ஒன். ஊரை சுத்தினமாதிரியும் இருக்கும்.அண்ணனுக்கு பொண்ணை பார்த்தமாதிரியும் இருக்கும். பொங்கலுக்கு வெளிவர இருக்கும் ஜோதிடம்360 புக்ல இதை பிற்சேர்க்கையா கொடுத்தாகனும்னு ஓடி ஓடி எழுதிக்கிட்டிருந்தம். எப்படியும் அடிச்சாச்சு சனமும் மின் கூட்டி படிக்கட்டுமேன்னு சைட்லயும் போட்டாச்சு,

அதுக்கப்பாறம் கன்னிமராவுல சில பதிவுகள் போட்டோம். லேட்டஸ்ட் பதிவுல வேலூர்ல நடந்த ஜோதிடர் மா நாடு பற்றி சொன்னதா ஞா. அதைப்பற்றி சில வரிகள்.

நாம மா நாடு திடலை அடையறோம். எங்க பார்த்தாலும் டிஜிட்டல் பேனர். ஆளுயர கட் அவுட்.போஸ்டர்கள் . ஜோதிட ஓஷோ -வலையுலக மாத்ருபூதம்னு என்னென்னமோ அடைமொழில்லாம் போட்டு பேனர். ஒரு பெரிய கும்பலே மாலையும் கையுமா காத்திருக்குன்னு பீலா விட தயாரா இல்லை.

நாம போனது ஒரு விசிட்டராத்தான் போனோம். கைவசம் ஜோதிடம் 360 மொதபதிப்பு இருந்ததா அதை மேடைக்கு அனுப்பி வச்சோம்.தெரியாத்தனமா கூப்டுட்டாய்ங்க.நாலு வரி பேசினம்.கைவசம் நண்பரோட கேமரா இருந்ததா வீடியோ எடுத்தாச்சு. அதை யு ட்யூப்ல போட்டிருக்கன்.

நாம ஒரு வேலையா எடுத்து அதை மட்டும் செய்தா பரவால்லை. லக்னாதிபதி சந்திரன் எந்தெந்த ராசியில நிக்கிறாரோ அந்த ராசி குணம்லாம் வந்துருது.எல்லாம் அந்த ரெண்டே கால் நாள் வரைக்கும் தேன். மறுபடி சந்திரன் அதே ராசிக்கு வரும்போது அந்த ப்ராஜெக்டை கன்டின்யூ பண்றோம்.

இந்த ஜல்லி எல்லாம் ஜனவரி 15 வரை தான். அந்த நாலு புக்கும் ப்ரிண்ட் ஆகி பார்சல் வீட்டை வந்து சேர்ந்துட்டா தினசரி ஆதியோடந்தமா புதுபுது மேட்டரா போட்டு தாக்கலாம்.அதுவரை கொஞ்சம் அஜீஸ் பண்ணிக்கங்க பாஸ்.

செவ்வாயும் கில்மாவும் (மீள்பதிவு)

ஜோதிடமும் கில்மாவும் புக்ல வர வேண்டிய ஐட்டங்களை தொகுத்துக்கிட்டிருக்கன்.ஃபான்ட் ப்ராப்ளம்.அதனால இந்த மீள் பதிவு .

இன்னாபா இது யுத்தகிரகத்தை போயி கில்மாவோட அநியாயத்துக்கு சேர்க்கிறேனு உ.வ பட்டுராதிங்க. பல யுத்தங்கள் வரதுக்கு கில்மாதான் காரணமா இருந்திருக்கு. யுத்தத்துல வேற்றி கிடைச்சாச்சுன்னா கில்மாவுக்கு குறைவே இருக்காது.

செவ்வாய்னா ரத்தம். பலான இடத்துக்கு ரேப்பிட் ஃபோர்ஸ் மாதிரி ரத்தம் பாயலைன்னா அதை அல்பசங்கியைக்கு மட்டும் தான் உபயோகிக்கமுடியும்.

ஆண்,பெண்கள் சுய இன்பம் இத்யாதியில் இறங்காம, பெண்கள் சாகசங்கள் புரியாம இருந்தா முதல் உறவின் போது கருமுத்துக்களை பார்க்கலாம். ( இது எல்லாருக்கும் கட்டாயமில்லிங்கோ) சிவப்புதுளிகள் ஜீரோ வாட்ஸ்ல கரு முத்தாதான் தெரியும்.

பெண்கள் விசயத்துல ஒவ்வொரு மாதவிலக்குக்கப்பாறம் தான் புதிய எக் செல் ஓவரிலருந்து புறப்பட்டு வந்து கருப்பையில தன் காத்திருப்பை துவங்குது . அப்பத்தேன் அவிக “உணர்ச்சிகள்” தீட்டப்பட்டிருக்கும்.

சாமுத்ரிகா லட்சணத்துல சிவந்திருக்க வேண்டிய இடங்கள்னு ஒரு லிஸ்டே இருக்கு. இதனோட அடிப்படை என்ன? ரத்த ஓட்டம் கரீட்டா நடக்குதா இல்லியாங்கறதுதேன்.

(ஜாதகததை வைத்து உடல் அமைப்பை சொல்வது போல் (உ.ம் : லக்னம் = தலை,முகம்) உடல் அமைப்பை வைத்து சாதகம் சொல்லமுடியாதா என்பதே சாமுத்ரிகா லட்சணத்தின் அடிப்படை போலும். ஆனால் பாவகிரகங்கள் ஜஸ்ட் உடலை மட்டும் பாதிப்பதில்லை. மனதையும் பாதிக்கின்றன.

சிலர் விஷயத்தில் பாவ கிரகங்கள் உடலை பாதிக்காது (இவர்கள் பார்க்க சுந்தர புருஷர்களாய் இருப்பர்) ஆனால் மனதை கோரமாக பாதித்திருக்கும். ( சாடிஸ்டிக் சார்மிங் வில்லனாக இருப்பார்கள்)

எச்சரிக்கை: இதெல்லாம் என் கருத்து /ஊகம்/அனுபவம் மட்டுமே

இவ்ளோ டீட்டெயில்டா போவானேன் செவ்…….வாய்ங்கற பேரை பாருங்க. ஒடனே சால்னா கடையில நமீதா கணக்கா ஒரு கேரக்டர். வெற்றிலை போட்டு சிவந்த வாய் ஞா வரலை. மத்த கிரகங்கள் செரியில்லைன்னா அது சரியில்லை இது சரியில்லைனு தான் சொல்வாய்ங்க. இவரு சரியில்லைன்னா மட்டும் ( லக்னம் முதற்கொண்டு 3,6,10,11 தவிர வேறு இடங்களில் இருத்தல்) செவ் தோஷம்னு ஒதுக்கி வச்சிர்ராய்ங்க.

இன்னாபா இது அக்குறும்புனு பொங்கி எழுந்துராதிங்க. மேட்டர் கீது வாத்யாரே. மன்சனுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தர்ரது வெள்ளயணுக்கள். அது உற்பத்தியாகிறது எலும்புக்குள்ள இருக்கிற மஜ்ஜையில. அந்த மஜ்ஜைக்கு காரகன் செவ்வாய். தாளி நோ.எ.ச இல்லாத பார்ட்டிக்கு எந்த ரோகம் தான் வராது?

மேலும் செவ் சரியில்லின்னா ரத்த சுத்தி சரியா இருக்காது. சொறி சிரங்கு கட்டி எல்லாம் வரும். இப்படி காட்பாடியா போன பாடி கொண்டவன் பலவீனனாதான் இருப்பான். கோபத்துக்கு காரணம் இயலாமை. பலவீனனுக்கு இயலாமை அதிகம். கோபமும் அதிகம்.

இப்ப கில்மாவுலயே பாருங்க. எத்தினியோ சந்தர்ப்பத்துல விட்டுக்கொடுக்கவேண்டி வரும். ” விளக்கை அணை” “அம்மா தூங்கட்டும் – ஆட்டுக்குட்டி தூங்கட்டும்” செவ் தோஷமுள்ளவன் சீக்கிரத்துல கோபப்படுவான். கோபப்பட்டவனுக்கு காரியம் நடக்காது.

செவ்வாய் காரகத்தின் கீழ் வரும் அம்சங்களையும் அதனால கில்மாவுக்கு வரக்கூடிய ஆப்பையும் இப்ப பார்ப்போம்.
வயதில் இளையவர்கள்:
ஜாதகத்துல செவ் நல்ல இடத்துல உட்கார்ந்தா ஆண்டொன்று கூடுமே தவிர வயதொன்று கூடவே கூடாது. பார்ட்டி சொம்மா நச்சுனு இருப்பாப்டி. சப்போஸ் பார்ட்டி ஜாதகத்துல செவ் சரியில்லைனு வைங்க. சின்னப்பசங்களை எல்லாம் தனக்கு போட்டியா நினைக்கிற சைக்காலஜி வந்துரும். டிஷ் பையன், பால் பாக்கெட் போடற பையன் மேல கூட சந்தேகம் வரும்.( காரணம் உற்சாகத்தை தர்ரது செவ். உற்சாகம் குறைஞ்சிக்கிடக்கறச்ச துடியா இருக்கிற பசங்களை பார்த்தா இன்ஃபிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் வருமா வராதா?)
போலீஸ், மிலிட்டரி, ரயில்வே:
செவ் நல்ல இடத்துல இருந்தா இந்த மாதிரி டிப்பார்ட்மென்ட்ல வேலை கிடைக்கும். ( செவ் சரியில்லாத ஜாதகத்துல பிறந்து லஞ்சம் கொடுத்து இந்த வேலையெல்லாம் வாங்கினா செவ்வாயின் இதர காரகங்களான ஆயுதங்கள், வெடி பொருட்கள், அறுவை சிகிச்சை, விபத்து, தீ விபத்து இத்யாதிக்கு பலியாகவேண்டி வரும்ங்கோ. மேற்படி உத்யோகங்கள்ள இருந்தா கண்ணாலம் கன்னா (சீக்கிரமா) ஆகும். அப்பாறம் என்ன கில்மாதான்.
எரிபொருள், மின்சாரம்:
வீட்ல கியாஸ் ஆயிருச்சு. கெரசின் இல்லை. எலக்ட்ரிக் ஓவன்ல ஆக்கி முடிச்சுரலாம்னு பார்த்தா வீராசாமி புண்ணியத்துல கரண்டு வாரா சாமி ஆயிருச்சு. சமையல் எப்படி முடியும். பெட் ரூமுக்கு எப்படி போகமுடியும். செவ் நல்லா இருந்தாதான் எல்லாமே கணக்கா முடியுங்கோ. எரிபொருள் தொடர்பான துறையில வேலை,தொழில் அமைஞ்சாலும் சுராங்கனிக்கா சேக்குதேன். தினம் தினம் அல்வா மல்லிப்பூதேன்..
தர்க்கம், வியூகம்:
அட என்ன பாஸ் எதுலதான் தர்க்கம் பார்க்கிறதுனு விவஸ்தையே இல்லையானு கேப்பிக சொல்றேன். ஆன்மீகத்துல மட்டும் தேன் தர்கம் நாலு காலை தூக்கிரும். உ.ம்: இழப்பவன் பெறுவான். காப்பவன் இழப்பான்.
கில்மாங்கறது உலகியல் வாழ்க்கையில ஒரு அங்கமே. அதனால ஜஸ்ட் ஒரே ஒரு தர்கத்தை கேட்ச் பண்ணினா ஊடல் கீடலையெல்லாம் ஊதித்தள்ளிட்டு காம் நகர்ல அப்பார்ட்மென்டே கட்டிரலாமுங்கோ.
அடுத்தது வியூகம். இதென்ன யுத்தமா வியூகம் வகுக்கனு கேப்பிக சொல்றேன். அச்சம், நாணம்,மடம்,பயிர்ப்பு அது இதுனு சொல்றாய்ங்கல்ல இதெல்லாம் என்னவாம் ஒவ்வொன்னும் ஒரு கோட்டை .இந்த கோட்டைகளுக்கெல்லாம் வேட்டு வைக்கலைன்னா நோ கில்மா. ஒவ்வொரு கோட்டைக்கும் ஒரு வியூகம் வகுத்து டமார் பண்ணாதான் கில்மா.
அறுவை சிகிச்சை:
செவ் சரியில்லைன்னா அறுவை சிகிச்சைக்கு வாய்ப்பு ஏற்படுது. போதாதகுறைக்கு அவருக்கு சனியோட பார்வை தொடர்பு ஏற்பட்டுதுனு வைங்க அது எவ்ள தூரத்துக்கு போவும்னு சொல்லமுடியாது. அட ஒரு சிசேரியனை எடுத்துக்கங்க. லேடி டாக்டர் ” ஒரு ஆறு மாசத்துக்கு பொஞ்சாதிய தங்கச்சி மாதிரி பார்த்துக்கங்க”னு சொல்ட்டா கில்மாவாவது வேறொன்னாவது. இன்னம் ஓவரிய தூக்கறது, யூட் ரஸை தூக்கிர்ரதுனு கதைபோச்சுன்னா ஹார்மோன் சுரப்புலயே பிரச்சினை வந்து சம்சாரத்துக்கு மீசை தாடியெல்லாம் வர ஆரம்பிச்சுரும்.
சமையல்:
யுத்த காரகனான செவ்வாயை சமையலுக்கும் காரகம்னு சொல்லியிருக்காய்ங்க.ரெண்டுக்கு என்ன சம்மந்தம்? யுத்தம்னா மொதல்ல எதிரி நாட்டை வேவு பார்க்கனும், எதிராளியோட படைபலம் ,வியூகம் தெரியனும். அதுக்கேத்தமாதிரி நம்ம படைய பலப்படுத்தனும். சமையல்னா நாம யாருக்கு சமைக்கப்போறோம், அவிக காஞ்சு கிடக்காய்ங்களா?, ஓஞ்சு கிடக்காய்ங்களா? பசியேப்பமா? புளியேப்பமா தெரிஞ்சிக்கிடனும். அப்பாறம் கிச்சன்ல என்ன இருக்கு என்ன இல்லைனு (முக்கியமா கியாஸ்/கரண்ட்) பார்த்துக்கனும்.
யுத்தம்னா மொதல்ல ஏர் பாம்பிங்கா, காலாட்படையா, கடல் வழி தாக்குதலா முடிவு பண்ணனும். சமையல்னா மொதல்ல கொறிக்க ஏதாச்சும் கொடுத்துரலாமா? இல்லை அவசர அடியா பிரியாணி பண்ணி அதுக்கு தயிர் சட்னி கொடுத்துட்டு அதுக்குள்ளாற கோழிகுருமாவ ஒப்பேத்தமுடியுமானுல்லாம் ஸ்கெட்ச் பண்ணனும்.
இப்படி யுத்தத்துக்கும் சமையலுக்கும் நிறைய சம்பந்தமிருக்குங்கோ. சமைக்கிற கணவன் மாரை வச்சு நிறைய ஜோக்கெல்லாம் எழுதறாய்ங்க. ஆனால் சமைக்க தெரிஞ்ச கணவனா இருக்கிறதுல நிறைய லாபம் இருக்கு பாஸ்.
பொஞ்சாதி ஏகத்துக்கு பில்டப் கொடுக்கமுடியாது ( ஸ்டவ்வு கிட்டே நின்னு பாருங்க தெரியும்) – நெஜமாலுமே பொஞ்சாதிக்கு முடியாத சமயம் கோதாவுல இறங்கி கேட்டு கேட்டு செஞ்சா அவிகளுக்கும் ஈகோ சேட்டிஸ்ஃபேக்சன் ஆகும். மனசுல நன்றி உணர்ச்சி பொங்கும். அது கில்மாவுல கூட முடியலாம்.
ரத்தம், எரிச்சல் தொடர்பான வியாதிகள்:
செவ் சரியில்லைன்னா இதெல்லாம் வந்து கழுத்தறுக்க ஆரம்பிக்கும். லோ பிபி,ஹை பிபி உள்ளவுக,அல்சர் ,பெப்டிக் அல்சர் உள்ளவுக கில்மாவுக்கும் இந்த வியாதிகளுக்கும் என்ன தொடர்புனு சொல்லலாம்.
மார்ஷல் ஆர்ட்ஸ் ,போட்டி, ஸ்போர்ட்ஸ்:
இதுல வெறி கொண்டு ,வெற்றியே குறியா உள்ளவுகளுக்கு மைண்ட் கில்மா பக்கம் போகவே போகாது. உடம்பு கெட்டுரும்ங்கறதெல்லாம் சொம்மா சாக்கு. மனுஷன் பேசிக்கலா பண்றது ரெண்டுதேன். கொல்றது,கொல்லப்படுவது.இது செக்ஸுல சாத்தியம். ஆனால் இது ரெண்டுமே மேற்படி மார்ஷல் ஆர்ட்ஸ் ,போட்டி, ஸ்போர்ட்ஸ்ல சைக்கலாஜிக்கலா -சுத்தி வளைச்சு நடந்துருது -அதனாலதான் மேற்படி ஃபீல்டுல உள்ள பார்ட்டிங்க கில்மா பக்கம் திரும்பறதில்லை. ஆனால் தமாசு என்னடான்னா அதுகள்ள சாதனை பண்ணி முடிஞ்ச பிற்பாடு பலான மேட்டர்ல ஆர்வம் பீறிட்டு கிளம்பும். சில பிக்காலிங்க (முக்கியமா கோச்சுங்க) “ஏடாகூடமா”பிஹேவ் பண்றாய்ங்கனு கேள்வி. இதுக்கு காரணம் அவன் வெறி கொண்டு ,வெற்றியே குறியா செயல்படலைங்கறதுதேன்.
பால்:
மேட்டருக்கு மின்னாடி ஒரு தம்ளர் பால் (முடிஞ்சா ஒரு சில மசாலாக்கள் சேர்த்து) அடிச்சா தெம்பா இருக்கும்.
கொம்புள்ள பிராணிகள்:
மஞ்சு விரட்டு தெரியும்ல. மஞ்சு விரட்டுல குடல் சரியாம தப்பிச்சா குட்டிக மேலாடை சரிக்கும்னு சரித்திரம் சொல்லுதுல்ல .
மாமிசம்:
இது காம உணர்வை தூண்டும்.

ஆக ஒடனே உங்க குடும்ப ஜோதிடரை சந்திச்சு சாதகத்துல செவ் சாதகமா இல்லியானு ஒடனே தெரிஞ்சிக்கிடுங்க. சாதகமா இல்லாட்டி கீழ்காணும் பரிகாரங்களை ஆரம்பிச்சுருங்க.

1. ரத்ததானம் பற்றி உங்களுக்கிருக்கும் பிரமைகளைப் போக்கிக் கொண்டு உங்கள் குடும்ப டாக்டரை கலந்தாலோசித்து வருடத்திற்கு ஒரு முறையாவது ரத்ததானம் செய்ய ஆரம்பியுங்கள். எப்படியும் ரத்த சேதம் உறுதி என்னும் போது ரத்த தானம் கொடுத்தால் விபத்து தவிர்க்கப்படும்.புண்ணியமும் வரும் அல்லவா?
2. நீங்கள் மாமிச உணவைத் தவிர்த்து நண்பர்களுக்கு ஆக்கியோ வாங்கியோ போடுங்கள் (காவல்துறை, மின்துறை ஊழியர்களுக்கு என்றால் உத்தமம்).
3. பள்ளிகள், நூலகங்கள், பள்ளி வாசல்கள், கோயில்கள், சேவை நிறுவனங்களுக்கு மின்சாதனப் பொருட்களைத் தானம் செய்யுங்கள்.
4. உங்களுக்கு உடற்பயிற்சி என்பது மிக முக்கியம். முடிந்தால் கராத்தே ஜுடோ போன்ற தற்காப்புக் கலைகளை பயிலுங்கள்.
5. உங்கள் வீடு (அ) வியாபார ஸ்தலத்தில் தெற்கு (அ) தென் கிழக்குப் பகுதியில் பள்ளங்கள் இருந்தால் முதலில் மூடிவிடுங்கள்.
6. மலை மேல் உள்ள சுப்ரமணியரை வழிபடுங்கள்.
7. தியானம் பயிலுங்கள். கோபம் என்பது கையாலாகாத்தனத்தின் வெளிப்பாடு என்பதை உணர்ந்து திறமையை வளர்த்துக் கொள்ளப்பாருங்கள்.

10-11-12 அதிபதிகள் நின்ற பலன்

அண்ணே வணக்கம்ணே !

ஜோதிடம் 360 புதிய பதிப்புல பிற்சேர்க்கையா வெளியிட துவாதச பாவாதிபதிகள் நின்ற பலன் எழுதிக்கிட்டிருக்கம்.இதுல 10,11,12 பாவாதிபதிகள் நின்ற பலனை கன்னிமராவுல போட்டிருக்கன். ஒரு ஓட்டு ஓட்டிருங்க.