காலமாற்றமும் -கிரக பலனும்: 4

1
அண்ணே வணக்கம்ணே !
காலமாற்றமும் -கிரக பலனும்ங்கற தலைப்புல ஒவ்வொரு பாவமா பலன் எப்டி மாறுதுன்னு அனலைஸ் பண்ணிக்கிட்டிருக்கம்.இதுவரை லக்ன,தன,சகோதர பாவங்களோட பலன் காலமாற்றதால எப்படி மாறுதுன்னு பார்த்தம். இன்னைக்கு நாலாம் பாவம்.

நாலுங்கறது தாய்,வீடு,வாகனம்,கல்வி,இதயம்ங்கற விஷயங்களை காட்டற பாவம். இந்த மேட்டர்ல காலமாற்றத்தால ஏற்பட்டிருக்கிற மாற்றங்கள் இந்த பாவ பலனை /இந்த பாவத்துல நின்ன கிரகங்களோட பலனை எப்படி மாத்துதுன்னு பார்த்துரலாம்.முக்கியமா யூத்துக்கு வாகன மேட்டர்ல வெறி,ஆண்மைக்குறைவு, திருமண தாமதம், கண்ணாலம் கட்டறதுக்கு மிந்தியே ஐ.எம் .இ ல அப்பார்ட்மென்டு,விகாரத்துக்கள், இதய நோய்கள் இதெல்லாம் காலமாற்றத்தால கிரக பலன்ல ஏற்பட்ட மாற்றங்கள் தான். எப்படின்னு இந்த பதிவுல பார்த்துரலாம்.

மொத காரகம் தாய். ஏதோ ஒரு தொ.கா நிகழ்ச்சியில ஆரோ ஒருத்தர் சொன்ன மேட்டர் இது ” அந்த காலத்துல அம்மாங்கள பிள்ளைங்க அது வேணம் இது வேணம்னு கேட்டா இருப்பா நாளக்கு செய்து தரேம்பாங்க. இப்ப உள்ள அம்மாங்க இருப்பா நாளைக்கு வாங்கி தரேங்கறாய்ங்க”
ரெண்டுக்கும் எவ்ளோ வித்யாசம் இருக்கு பாருங்க.

வேலைக்கு செல்லும் தாய்மார் தான் இப்டின்னு இல்லை. ஹவுஸ் வைஃப் மேட்டர்லயும் இந்த இழவுதான். நாம பொறந்தது 1967. அம்மா காலத்துலயே அப்பாவுக்கு 55 வயசு ஆன காலகட்டத்துல வீட்ல டிஃபன் பண்றதை விட்டுட்டாய்ங்க. இட்லிக்காரம்மா வீட்ல இருந்து வாங்கியாந்து வைக்க ஆரம்பிச்சுட்டாய்ங்க.

எங்கம்மாவோட மேக் அப்னா ஒரு பெரிய பாட்டில்ல ஸ்னோ இருக்கும். கிருஷ்ணர் கால் கட்டை விரலை வாய்ல வச்சிருக்கிற லோகோ போட்ட பவுடர் ஒன்னு போடுவாய்ங்க. அதுவும் அண்டை அசல்னு போறாப்ல இருந்தா தான். தலைக்கு? சாதாரண சீயக்காய் தூள், உடம்புக்கு அரப்பு பொடின்னு நினைக்கிறேன். சோப்பு? லைஃப் பாய்.

கண்ணாலமாகி பல காலம் எங்க அத்தை ,ரெண்டு சித்தப்பன் மார், கொசுறா எங்க பாட்டிக்கு அக்கா பையன் ஒருத்தன் வீட்டோடயே இருந்தாய்ங்க. எங்க பாட்டி ?

சாடிஸ்டுன்னு சொல்ல முடியாது .ஆனால் “இருப்பை” பற்றிய கவலை இருக்கலாமில்லையா? தன் இருப்பை உறுதிப்படுத்திக்க அப்பப்போ சைக்கிள் கேப்ல ஆப்பு வச்சிட்டே இருக்கும்.

அப்பா வாங்கிக்கிட்டு வர்ர புடவை தான் புடவை. திண்ணை டெய்லர் தைச்சு கொடுக்கிற ஜாக்கிட்டு தான் ஜாக்கிட்டு. ஏதோ சர்வீஸ் முடிய போகுது. எல்.டி.சி லாப்ஸ் ஆகுதுன்னு ஒரு தடவை செகண்ட் கிளாஸ் ரயில்ல ஒரு டூர் போய் வந்தாப்ல ஞா.

வீடு? மோல்டிங் போட்டு , சென்டரிங் அவுக்கிறதுக்கு மிந்தி போல இருக்கும் . மேட்டர் என்னடான்னா பழைய ஓட்டு வீடு எல்லா பனங்கழிக்கும் முட்டு கொடுத்து வச்சிருப்பாய்ங்க. வாகனம்னா ? சைக்கிள் தான். கடேசி காலத்துல டிஆர் டிஏ வுல அக்கவுண்ட்ஸ் ஆஃபீசரான பிறவு பிக் அப் பண்ணிக்க ஜீப் வரும் தட்ஸால்

இந்த மாதிரி வீட்ல இருக்கிற வரை அம்மாவும் ஓகே .கல்வியும் ஓகே. வீட்டு உறுப்பினர்களுக்கிடையில் இன்டராக்சன்,பந்தம்,பாசம் எல்லாம் ஓகே.
ஏ.சி நாயக்கர் சிமெண்ட் ஃபேக்டரி இருக்கிற தைரியத்துல சிமெண்ட்ல த்ராய் ,ஸ்லாப் போட்டு , அன் சோல்ட் மொசைக் எல்லாம் போட்டு வீடு கட்னாரு .செம பல்பு . (இடைக்காலத்துல கோழி பண்ணைக்கு போடற லைட் ரூஃப் போட்டது தனிக்கதை .)

யூட்ரஸ் கேன்சருக்கு அடையாளமா அம்மாவுக்கு மார்ல கட்டி . சி.எம்.சி காரவிக கல்லா கட்ட அந்த டெஸ்டு இந்த டெஸ்டுன்னு கோல்டன் செகன்ட்சை எல்லாம் விரயமாக்கி கேன்சர் வவுத்துக்கு பரவி , கேன்சரை விட கொடூரமான கீமோ தெரஃபிக்கு அம்மாவை பலி கொடுத்துட்டம்.

பெரிய அண்ணனுக்கு மாமன் மகளை முடிக்க, அண்ணனுக்கு வெளியூர்ல வேலைங்கற “நியாயமான” காரணத்தால அவிக பொட்டிய கட்ட ரூட்டர் இல்லாத கம்ப்யூட்டர்ங்க மாதிரி அண்ணன் தம்பில்லாம் சுயேச்சையா செயல்பட ஆரம்பிச்சு பொளப்பே நாறிப்போச்சு.

இது நடந்த கதை .இதுக்கான ஜோதிட காரண காரியங்களை சொல்றேன்.

நம்ம ஜாதகத்துல நாலாமிடத்துல செவ் +கேது சேர்க்கை (இத்தனைக்கும் கடகலக்னம் தான் -செவ் எங்கிருந்தாலும் தோஷமில்லேன்னு ஒரு ப்ரொவிஷன் இருக்கு )

நாலாமிடம் நாஸ்தின்னா தாய் காலி ஆகனும் (பாட்டி தீர்காயுசா இருந்தா செஞ்சுரிக்கு கொட்டு வாய்ல தான் டிக்கெட் ),வீடு சென்டரிங் அவுக்காத கணக்கா இருந்த வரை ஓகே. அதை கட்னதுமே பல்பு. வாகனம்? சைக்கிளா இருந்தவரை ஓகே.அது கெவுர்மென்டு ஜீப்பா மாறினதுமே பல்பு . கல்வி? பத்தாங்கிளாஸுல 72 % ,இன்டர்ல 50% ,டிகிரியில ஒரு சப்ஜெக்ட் தவிர்த்து (ஃபெயிலுங்கோ) 35 %.

செரி ..சொந்த கதை போதும்.மேட்டருக்கு வரேன்.

இன்னைக்கு இதய நோய்கள் சாஸ்தியாயிட்டே இருக்கு. இதுக்கு என்ன காரணம்னு பார்ப்பம். மொத பாய்ண்ட் தாய்.குழந்தைகளுக்கு முதலும்-முழுமையுமான புகலிடம்.

ஆனால் ஆஃபீஸ் கோயர்ஸ்,ஹவுஸ் வைவ்ஸ் எல்லாருமே தங்களை ஜஸ்ட் பெண்களா முன்னிறுத்திக்கறதுல தான் ஆர்வமா இருக்காய்ங்க. அதுவும் நிறைய பெண்கள் தங்களை உடலாகவே உணர்ராய்ங்க. உடலாவே வெளிப்படுத்தறாய்ங்க. அதை கட்டிக்காக்கவே துடிக்கிறாய்ங்க.

ஆண் ,பெண் யாரா இருந்தாலும் பேசிக்கலா ஒரு உயிர் தான். உயிருக்கு உணர்வு முக்கியம். உடலின் செயல்பாடு உங்கள் உணர்வு வழிதான் நடக்கும்.
அந்த காலத்துல ஒவ்வொரு ஆண் குழந்தையும் ஒரு கணவனாக -ஒரு தந்தையாக வடிவமைக்கப்பட்டது . ஒவ்வொரு பெண் குழந்தையும் மனைவியாகவும் -தாயாகவும் வடிவமைக்கப்பட்டது .

இப்பல்லாம் ஆண் ஒரு பொருளீட்டும் இயந்திரமாகவும்,பெண் அந்த இயந்திரத்தின் எக்ஸ்டென்ஷனாவும் தான் வடிவமைக்கப்படறாய்ங்க.
கணவன் -மனைவிங்கறதையாவது மேல் ஷேவனிஸ்ட் சொசைட்டியின் வெளிப்பாடுன்னு தள்ளிரலாம்.ஆனால் தாய்மை?இப்பல்லாம் இது பெண்ணோட ஆரோக்கியத்துக்கான சவால் போலவும் , அவளது ஃபிட்னெஸ்,அழகுக்கு ஆபத்தாவும் போதிக்கப்படுது.

இயற்கை விதியின் படி ஒரு ஆணோ -ஒரு பெண்ணோ உரிய காலத்துல உடலுறவுக்கோ – குழந்தை பிறப்புக்கோ இலக்காகலின்னா அவிக நாட் ஒன்லி சைக்கலாஜிக்கலி, ஃபிசிக்கலா கூட நார்மலா இருக்கவே முடியாது . இவிக சமூகத்துக்கே பேராபத்து.

இதை எல்லாம் ஆரு சொல்றது? செரி ஆரோ சொன்னாலும் கேட்க ஆரிருக்கா? இதன் விளைவு என்னாச்சுன்னா அனைத்து ஜாதகர்களுக்கும் தாய்ங்கற ஒரு கொடை மறுக்கப்படுது . உள்ளடக்கப்பட்ட செக்ஸ் எப்படி வன்முறையா வெடிக்குதோ அப்படி மறுக்கப்பட்ட தாயன்பு வாகன வெறியாவும் ,அப்பார்ட்மென்ட் வெறியாவும் மாறுது.இது ஆண்மைக்குறைவு , திருமண தாமதம், விவாகரத்து இத்யாதிக்கு காரணமாகி இட் லீட்ஸ் டு டிசாஸ்டர்ஸ்..
(தொடர்ந்து பேசலாம்)

உங்கள் ராசியும் -வாழ்க்கையும் : தனுசு

Mummy daddy 1

அண்ணே வணக்கம்ணே !
ஜஸ்ட் ராசிய அடிப்படையா வச்சு டோட்டல் லைஃப் ஸ்டைலை சொல்லிக்கிட்டு வர்ரம். இந்த பலன்லாம் மெட்டீரியலைஸ் ஆகலின்னா உங்க மைண்ட் செட் ,உங்கள் விருப்பங்கள்,உங்க முன்னோர் நிலை இதை போல இருக்க வாய்ப்பிருக்கு.( சந்திரன் மனோகாரகன் -சப் கான்ஷியஸ்லருந்து அன் கான்ஷியஸ் மைண்ட் வரை இவரோட ஆட்சி தான் -பூர்வ ஜென்ம ஞா உங்க சப் கான்ஷியஸ்ல இருக்கலாம்லியா?) இந்த வரிசையில இன்னைக்கு தனுசு ராசி.

1.லக்னாதிபதி குரு என்பதால்:
நல்ல ஞா சக்தி ,ப்ளானிங்,பக்தி , முன் யோசனைல்லாம் இருக்கும். எதிர்காலத்துல நாலு பேருக்கு நல்லது சொல்லப்போற பார்ட்டிங்கறதால -இளமையில கொஞ்சம் அப்படி இப்படி அனுபவங்களை சேர்த்திருக்கலாம். நல்ல நிறம்,நடுத்தர உயரம் இருக்கலாம்.

2.வாக்குஸ்தானாதிபதி சனி:
பேச்சு மட்டும் கொனஷ்டையா வந்துரும். சிலர் அமுக்கன் என்றோ -முத்து சிந்திருமோ என்றும் பெயர் வாங்கலாம்.கொடுக்கல் வாங்கல்ல தாமதம் ஏற்படும். சில்லறை வருமானத்தை கூட முதலீடு பண்ணிட்டு அவதிபடலாம். குடும்பம் அல்லது உடன் பிறந்தவர்கள் ஒரு வித வறுமை நிலையில் இருக்கலாம்.அல்லது அதீத சிக்கனர்களாய் இருக்கலாம்.

3.சகோதராதிபதி சனி:
தைரிய சாலிங்கதான்.ஆனால் ரெம்ப லேட்டா கொதிப்பாய்ங்க. கடைசி சந்தானமாவோ /கடைசி ஆண் சந்தானமாவோ இருக்கலாம்.உங்க உள்ளூர் பயணம் தொழிற்பேட்டைஅல்லது இரும்படிக்கிற இடம் ,எருமை வளர்க்கும் இடம் ,குல தெய்வ கோவில்களை தாண்டி செல்வதாய் இருக்கலாம்.

4.மாத்ருஸ்தானாதிபதி குரு:
அம்மாவுக்கும் உங்களுக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கும்.பெயர்,உடல் வாகு,நிறம்,முக ஜாடை இப்படி. அரசியல்,பொருளாதாரம், நிர்வாகம்,பேங்கிங் இத்யாதிய முக்கிய படிப்பா படிச்சிருக்கலாம். புராணம்,இதிகாசம்னு ரெம்ப மெனக்கெடுவிங்க. இதுக்கு அம்மாவும் ஒரு காரணமா இருக்கலாம். வீடு நிறைய சாமி படம்,சாம்பிராணி புகைக்கு வாய்ப்பு.வீடு கோவிலை ஒட்டி இருக்கலாம்,கோவில் இடத்துல இருக்கலாம்.கவர்ன்மென்ட்/கம்பெனி வாகனத்தை உபயோகிக்க வாய்ப்பிருக்கு. ஹெல்த் ரூல்ஸ் ஃபாலோ பண்ணலின்னா நடுவயசுல நெஞ்சு வலி கூட வரலாம்.

5.ஐந்துக்குடையவர் செவ்:
உங்கள் தோற்றம் உங்கள் வயதை விட 10 வயது கூடுதலா தோன்றலாம்.ஆனால் மைண்ட் செட்? செம யூத்து.அதுவும் போட்டி/விவகாரம்னு வந்துட்டா ரெம்ப சில்லறைத்தனமா இறங்கிருவிங்க.மனைவிக்கு குறை பிரசவம் நடக்கலாம். அல்லது குழந்தைகளில் ஒருவர் உடல் நலன் திடீர்னு காபரா பண்ணிரலாம். ரியல் எஸ்டேட்ல ஆர்வம் இருக்கும்.கை கொடுக்கும்.

6.ஆறுக்குடையவர் சுக்கிரன்:
ஒங்க சோஷியல் ஸ்டேட்டஸுக்கு சம்பந்தமே இல்லாத பெண்ணோட உங்க பேர் உச்சரிக்கப்படலாம்.டேக் கேர். அல்லது ஊருக்கு உபதேசம் பண்ணிட்டு நீங்க லக்சரி மாயையில சிக்கிருவிங்க.கைனகாலஜிக்கல் பிரச்சினைகள் கூட வரலாம்.

7.ஏழுக்குடையவர் புதன்:
எவ்ள உத்தமர்களா இருந்தாலும் -ஜஸ்ட் நட்புதானேனு டீல்ல விடாம டாக்டர்,ஆடிட்டர்,சோசியர்,சந்தேகத்துக்குரிய பெண்களின் சகவாசங்களை அவாய்ட் பண்ணிருங்க. பிசினஸ் உங்களுக்கு உதவாது .(நிர்வாகத்துல புலி -ஆனால் சேல்ஸ் ப்ரமோஷன்,பப்ளிக் ரிலேஷனுக்கு சரிப்பட்டு வரமாட்டிங்க)

8.எட்டுக்குடையவர் சந்திரன்:
பப்ளிக் ஒப்பீனியன் உங்களுக்கு சாதகமா இருக்காது .என்னருந்தாலும் நீங்க சுப்பீரியர்ஸை கையில வச்சுக்கிட்டு ரிமோட்கண்ட் ரோல் மூலமா ஒர்க் அவுட் பண்ண வேண்டியதுதான். மனம் -நுரையீரல்-சிறு நீரகம் இதுல ஏதோ ஒன்னு பாதிக்கலாம். டேக் கேர். மேலும் எதை எல்லாம் செய்யக்கூடாதுன்னு உங்களுக்கே உங்களுக்கு நல்லா தெரியும்.ஆனால் அன்னியன் மாதிரி அதை எல்லாம் செய்துக்கிட்டிருப்பிங்க.வெளிய தெரிஞ்சா இமேஜ் காலியாயிரும் பாஸூ.

9.ஒன்பதுக்குடையவர் சூரியன்:
அப்பா தொழிலை தொடர்ந்து செய்யலாம். அல்லது சுற்றி சுற்றி செய்யும் வேலை,ஓப்பன் ஏர்ல வேலை ,மலை,மலை சார்ந்த பகுதியில் வேலை செய்யவேண்டி வரலாம். லோக்கல் செல்ஃப் கவர்ன்மென்ட்ல பங்கெடுக்கவும் சான்ஸிருக்கு. எஸ்காம் கூட கை கொடுக்கலாம். இதே போல சூப்பர்வைசர், டீம் லீடர், குவாலிட்டி கண்ட் ரோல் இத்யாதிக்கும் சான்ஸ் இருக்கு. ஆனா இந்த மேட்டர்ல பொஞ்சாதி ,நண்பர்கள்,பார்ட்னர்ஸ் பேச்சை கேட்காதிங்க.

10.பத்துக்குடையவர் புதன்:
ஒங்களுக்கு யாவாரம் தெரியாது பாஸ். கமிஷன், டீலர் ஷிப்,ஏஜென்சி ,ஸ்கூல் நடத்தறதுலாம் வேண்டாம். ( வேணா நீங்க டீச் பண்ணலாம் ) உங்கள் மக்கள் தொடர்பெல்லாம் எம்.ஜி.ஆர் வேலைக்கு தான் உதவும்.

11.லாபாதிபதி சுக்கிரன்:
லேடீஸ் மேட்டர்ல பொம்மை பார்க்கலாம்னு நெருங்கினா தலையில கட்டிருவாய்ங்க. தாய்க்குலத்தோட ஈஷிக்கிறதும் வேணாம் முறுக்கிக்கிட்டு போறதும் வேணா. அவிக உங்களுக்குள்ள இருக்கிர ஜீனியஸை தான் விரும்பறாய்ங்க. உங்கள இல்லை.

12விரயாதிபதி செவ்:
உங்க கிட்டே எத்தனையோ ப்ளஸ் பாய்ண்ட் இருக்கு இண்டியா மிலிட்டரி,பாக்கிஸ்தான் மிலிட்டரிக்குஒரே நேரத்துல டேக்கா கொடுக்கிற ஸ்கெட்ச் இருக்கு. நிர்வாக திறமை இருக்கு.குட் வில் இருக்கு,ஜீனியஸ் இருக்கு, சமூகத்துல மதிப்பு மருவாதி எல்லாம் இருக்கு. ஆனால் உங்க கோபம் எல்லாத்துக்கும் ஆப்பு வச்சிருது. பத்து ரூவா உங்களுக்கு நஷ்டமேன்னாலும் ப்ரதர்ஸை சுமுகமா வச்சுக்கங்க. ஷுகர் வராம பார்த்துக்கங்க. வந்தா கால் காலி.(முக்கியமா பாதம்)

உங்கள் ராசியும் வாழ்வும்: கன்னி

Praஅண்ணே வணக்கம்ணே !
ஜஸ்ட் ராசி, ராசி வைஸ் அதிபதிகளை வச்சு சில விஷயங்களை சொல்லிக்கிட்டு வரேன். *கண்டிஷன்ஸ் அப்ளை. (விவரங்களுக்கு பார்க்க: கடந்த பதிவு).இப்ப கன்னி ராசிக்காரவுக  லைஃப்  எப்படி இருக்கும்னு ஒரு க்ளான்ஸ் பார்த்துரலாம்.
1.புதன் ராசியாதிபதி என்பதால்:
ஆணா இருந்தா கொஞ்சம் பெண்மை கலந்து ,பெண்ணா இருந்தா கொஞ்சம் ஆண்மை கலந்து இருக்கும். ஸ்கின் ப்ராப்ளம் இருக்கலாம். அல்லது ஜாய்ன்ட் பெய்ன், அல்லது டெஸ்டிக்கல்ஸ்ல பிரச்சினை. கம்யூனிகேஷன்ஸ் ஸ்கில்ஸ் இருக்கும்.(பேச்சு-எழுத்து) கணிதம், மருத்துவம்,ஜோதிடத்துல ஈடுபாடு. பல தரப்பட்ட மக்களோடு தொடர்பு இருக்கலாம்.ரிப்போர்ட்டிங்,கமிஷன் ,டீலர் ஷிப்,புத்தக வெளியீடு இத்யாதியில ஆர்வம் காட்டுவிக.
2.சுக்கிரன் தனபாவாதிபதி என்பதால்:
அழகா பேசுவிங்க. சப்ஜெக்ட் ? சாப்பாடு,ஆடம்பர வாழ்க்கை, வீடு,வாகனம் கில்மாவ சுத்தி சுத்தி வரலாம். கொஞ்சம்  ட்ரை பண்ணா பாடலாம். அழகு,வண்ணங்கள்,ஹவுசிங்,ஆட்டோமொபைல்ஸ், ஃபாஸ்ட் ஃபுட்,டெக்ஸ்டைல்ஸ்ல காசு பார்க்கலாம். நிறைவான குடும்பம் உண்டு.அழகான கண்கள் இருக்கும்.
3.செவ் சகோதராதிபதி என்பதால்:
குருட்டு தகிரியம், ரியல் எஸ்டேட் மேட்டர்ல மூக்கை நுழைப்பிங்க. காதுலகண்டதை போட்டு குடாயாதிங்க.டமாரம் ஆயிரும். தோள்பட்டை ஜாய்ன்ட் பத்திரம்.
4.குரு மாத்ருஸ்தானாதிபதி என்பதால்:
அம்மா பிராமண லட்சணங்களோட இருக்கலாம்.(பூசை ,புனஸ்காரத்தை சொன்னேன் பாஸ்) .உங்க செயல்பாடுகள் வேற மாதிரி இருந்தாலும் நாலு பேருக்கு நல்லது பண்ணனுங்கற எண்ணம் இருக்கும். வீடு அக்கிரகாரம்,சிவன் கோவில் ,வங்கி,கோர்ட்டை ஒட்டி இருக்கலாம். கம்பெனி வெயிக்கிள் யூஸ் பண்ற யோகம் சிலகாலம் இருக்கலாம். ஆர்ட்ஸ் க்ரூப் எடுத்திருக்க வாய்ப்பிருக்கு.
5.புத்ரஸ்தானாதிபதி சனி என்பதால்:
அகடமிக்கை விட டெக்னிக்கலா ஃபாஸ்ட் லெர்னிங் இருக்கும்.சந்தானம் தமாதமாகலாம் அல்லது அவிக மா நிறமா ,கால் தொடர்பான பிரச்சினை ,மந்த புத்தியோட இருக்கலாம். அடிப்படையில கொஞ்சம் சிக்கனவாதி ,சோம்பல் இருக்கலாம்.
6.ரோகாதிபதி சனி என்பதால்:
தலித்,பிற்படுத்தப்பட்டவர்களோட தகராறு வரலாம். கால்,நரம்பு,ஆசனம் தொடர்பான பிரச்சினைகள் வரலாம்.கொடுக்கல் வாங்கல்ல ரெம்ப தாமதம் ஏற்படும்.
7.குருவே  களத்ரஸ்தானாதிபதியுமா இருக்கிறதால:
மனைவி,அம்மா இடையில் ஒரு வித ஒற்றுமை இருக்கும். வடிவம்/பேச்சு/பாடி லாங்குவேஜ்.ஆனால் ரெண்டு பேருமே உபதேச மஞ்சரி மாதிரி பேசி உங்களை கடுப்படிப்பாய்ங்க. அம்மா மாதிரியே பொஞ்சாதி அமையற வாய்ப்பிருக்கு.
8.அஷ்டமாதிபதி செவ் என்பதால்:
உஷ்ண கோளாறு இருக்கலாம்.ரத்தம்,எரிச்சல்,கோபம் தொடர்பான வியாதிகள் வரலாம். மின்சாரம்,நெருப்பு இத்யாதியால் பிரச்சினை வரலாம். வீடு-வீட்டுமனை -ரியல் எஸ்டேட் தொடர்பா பிரச்சினை வரலாம்.  நடுவயதில் பெண்களுக்கு மா.வி பிரச்சினைகள் வரலாம். உங்களில் நிறைய பேர் ஒரே பிள்ளையாக இருக்க வாய்ப்பிருக்கு.
9.பாக்யாதிபதி சுக்கிரன் என்பதால்:
அப்பா வழியில வீடு,வாகன யோகம் அமையலாம். அப்பா அழகு,வண்ணங்கள்,ஹவுசிங்,ஹோம் நீட்ஸ், ஆட்டோமொபைல்ஸ், ஃபாஸ்ட் ஃபுட்,டெக்ஸ்டைல்ஸ் போன்ற துறைகளில் இருக்கலாம்.
10.ஜீவனாதிபதி புதன் என்பதால்:
கம்யூனிகேஷன்ஸ் ஸ்கில்ஸ் இருக்கும்.(பேச்சு-எழுத்து) கணிதம், மருத்துவம்,ஜோதிடத்துல ஈடுபாடு. பல தரப்பட்ட மக்களோடு தொடர்பு இருக்கலாம்.ரிப்போர்ட்டிங்,கமிஷன் ,டீலர் ஷிப்,புத்தக வெளியீடு இத்யாதியில பணம் பார்க்கலாம்.
11.லாபாதிபதி சந்திரன் என்பதால்:
வருமானத்துல ஏற்ற இறக்கம், நிச்சயமற்ற தன்மை இருக்கும். ஒரு வேளை நீங்க ஃபிக்சட் இன் கம் உள்ள ஆளா இருந்தா செலவு மேட்டர்ல பயங்கர ஃப்ளக்சுவேஷன் இருக்கும். மூத்த சகோதரம் லைஃப்ல செட்டில் ஆக தாமதமாகும்.
12விரயாதிபதி சூரியன் என்பதால்:
அதீத தன்னம்பிக்கை , தற்பெருமை , டாம்பீகத்துக்காக அள்ளி விட்டு அவஸ்தை படுவிங்க.பாதத்துல எலும்பு முறிவு ஏற்படலாம்.

நூல் விற்பனை: அதிரடி தள்ளுபடி 50% (பாதி விலைங்ணா)

Announcementநாம் இந்த வருடம் ஃபிப்ரவரியில் வெளியிட்ட 4 நூல்களும் (2000பிரதி) வேகமாய் விற்று தீர்ந்து வரும் நிலையிலும் விஜய தசமி அன்று புது ப்ராஜக்டுக்கு மூவ் ஆக வேண்டிய அவசியம் இருப்பதால் ……….

நம்பமுடியாத அதிரடி தள்ளுபடி தர முடிவு செய்திருக்கிறோம்.ரூ.200 விலையுள்ள 4 நூல்களையும் 50% தள்ளுபடியுடன் ரூ.100 க்கே தர முன் வந்திருக்கிறோம்.

பதிவு பார்சல் மூலம் அனுப்ப ரூ.50 சேர்த்து – ரூ.150 செலுத்தவேண்டும்.

நூல் விவரம் -விலாசம்-வங்கி கணக்கு விவரங்களுக்குஇங்கு  சொடுக்கவும்

தொடர்புக்கு:
swamy7867@gmail.com

ஜோதிடபாடம்: 10

Jun 6

அண்ணே வணக்கம்ணே !
வாத்யார் வேலை நமக்கு சின்ன வயசுலருந்து “அச்சுதல”யான வேலை தான். அதுல சந்தேகமே இல்லை. ஒன்னாங்கிளாஸ்லருந்து நாமதேன் சட்டாம்பிள்ளை.

ஆறு ஏழாங்கிளாஸ்ல சமூகம்,அறிவியலுக்கெல்லாம் தமிழ்ல டெக்ஸ்ட் புக் கிடையாது.ஆதி காலத்துல ஆரோ புண்ணியாத்மா இங்கிலீஷ்லருந்து தெலுங்குலருந்தோ டப்பிங் பண்ணி நோட்ஸ் கொடுத்து -பசங்க எளுதி வச்சிருப்பாய்ங்க போல. அது அப்படியே ரொட்டேஷன்ல இருக்கும்.

ஒவ்வொரு வருசமும் ப்ரமோட் ஆகி போற பசங்கள்ள எவன்/எவள் கை எழுத்து நெல்லாருக்கோ அதை வாத்யார் பிக் அப் பண்ணி வச்சுக்கிட்டு அடுத்த க்ளாஸ்ல எவன்/எவள் கொஞ்சம் ப்ரைட்டா இருக்கானோ அவன் கிட்டே கொடுத்து டிக்டேட் பண்ண வச்சுருவாரு.

இதுக்கு வருசம் முழுக்க பெசல் க்ளாஸ் உண்டு.அதுல நாம தேன் வாத்தியாரு. ட்ராக் ரிக்கார்ட் என்னவோ சூப்பராதான் இருக்கு.ஆனாலும் ஜோதிட வகுப்பு மட்டும் ஏன் நொண்டியடிக்குதுன்னு கேப்பிக சொல்றேன். வாத்யார் வேலையில ஒப்பேத்தனும்னா குரு நெல்லா இருக்கனும். நம்ம ஜாதகத்துல என்னவோ உச்சம் தேன்.ஆனால் கோசாரத்துல லக்னத்துக்கு விரயத்துல இருக்காரே. ஹும்..இன்னம் ரெண்டு வாரம்தானே சமாளிப்போம்.

கடந்த பதிவுகள்ள கேந்திர,கோண ஸ்தானங்களை பத்தி சொல்லி முடிச்சன்.லேட்டஸ்ட் பதிவுல பணபர ஸ்தானம்னு 2-11 ஆம் பாவங்களை பத்தி சொன்னேன். ஆனால் காலங்காலமா 6-8 பாவங்களையும் பண பரஸ்தானங்கள் ங்கற பட்டியல்ல தான் வச்சிருக்காய்ங்க. ஆனால் நான் இந்த 6-8 ஐயும் துஸ்தானங்கள்ங்கற பட்டியலுக்கு மாத்திரலாம்னு இருக்கன்.
இந்த ஆறாமிடத்தையே எடுத்துக்கங்க. எதிரி,கடன்,நோய் ,வழக்கு விவகாரங்களை காட்டற இடம் இது. இதனால எப்படி பணம் வரும்?

சந்திரபாபு நாயுடு மக்கள் எதிரி. நான் மக்கள் நண்பன். நண்பனுக்கு எதிரி நமக்கு எதிரி தானே.நாம இந்தாளு போக்கு சரியில்லை. விவசாயத்தை வெட்டிங்கறான். விவசாயி மகன் வேற வேலைக்கு போகனுங்கறான். கடன் தொல்லை தாங்காம விவசாயி தற்கொலை செய்துக்கிட்டா “அரசு நஷ்ட ஈட்டுக்காக ” சாகறாங்கறான்னு உண்மைய சொன்னா அவர் என்னவோ ஹை டெக் போலவும் நாமதேன் பழைய பஞ்சாங்கம் போலவும் சனம் நக்கலடிச்சாய்ங்க. நம்ம கிட்ட இல்லாதது என்ன? அந்தாளுக்கிட்ட இருக்கிறது என்னனு பார்த்தன். கொய்யால கம்ப்யூட்டர் தானேன்னு அதை பிடிச்சன்.
இன்னைக்கு கம்ப்யூட்டரும் இன்டர்னெட்டும் தான் நமக்கு அன்ன தாதா.

கடன் வாங்கினா காசு கிடைக்கும். நோய் வந்தா காசு வருமா? ஆந்திர மானிலம் நெல்லூர் மாவட்டத்துல 30 அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு வந்திருக்கே. மெடிக்கல் ரீ இம்பர்ஸ்மென்ட்ல “வேலை” காட்டி அரசுப்பணத்தை ஆட்டைய போட்டிருக்கானுவ. இன்னைக்கு 30 பேரும் சஸ்பெண்ட்.

வழக்கு நம்ம பக்கம் செயிச்சா பணம் வரும் .வராம போயிருமா?

இதோட விட்டிருந்தாலும் பரவால்ல. தாளி 8 ஆமிடத்தை கூட பண பர ஸ்தானத்துல சேர்த்திருக்காய்ங்க. எட்டுன்னா மரணம். மரணத்தால காசு வருமா?செத்தவருக்கு சொத்து பத்து இருந்து நேர் வாரிசு இல்லாம போயி, நமக்கு அவரு ஒன்னு விட்ட ரெண்டு விட்ட சொந்தமா இருந்தா சொத்தே வருமில்லையா?

எட்டுன்னா கொலை வெறி தாக்குதல். உசுரு தக்குச்சின்னா எக்ஸ்கிரேஷோ கிடைக்குமில்லை. எட்டுன்னா ரிஸ்க். ரிஸ்கோட அளவை பொருத்து காசு பணமும் கூடுமில்லையா? எட்டுன்னா சிறை. நம்மை தப்பான காரணத்தால ஐ மீன் சரியான காரணமில்லாம செயில்ல போட்டுட்டாய்ங்கனு வைங்க. நாம வழக்கு போட்டா பைசா கிடைக்குமில்லை.
இப்படியெல்லாம் விளக்கம் சொன்னாலும் இந்த பட்டியல்ல இருந்து 6-8 பாவங்களை நீக்கிர்ரன். இதே போல
அடுத்த பட்டியல் ஆபோக்லிமம். இதுல 3,12 பாவங்களை கொடுத்திருக்காய்ங்க.

12ங்கறது விரயத்தை காட்டும். திங்கறது,தூங்கறது,கில்மா இதெல்லாம் 12 ஆம் பாவத்தை பொருத்த மேட்டரு.
உணவுக்கு ருசிய கொடுக்கிறது நம்ம பசி, நம்ம உடல் ஆரோக்கியம். இது ரெண்டுமில்லாம எவ்ள பவித்ரமான பதார்த்தத்தை ,எவ்ள ருசியா பக்குவப்படுத்தி தின்னுன்னாலும் வேலைக்காகாது .வீண் விரயம் தான்.

அடுத்து தூக்கம். தூக்கத்தை கொடுப்பது இன்னிசையோ, அம்ச தூளிகா மஞ்சமோ ,ஏ.சியோ இல்லை. உடல் உழைப்பு. நாம எவ்ள கடுமையா உழைச்சோமோ அதுக்கேத்த தூக்கம் தான் கிடைக்கும்.

அடுத்தது கில்மா. கில்மாவுல மஜாவ கொடுக்கிறது கில்மாவா? நெவர். உங்க பிரம்மச்சரியம். நீங்க எந்த காஞ்சு கிடந்தா அந்தளவுக்கு மஜா. பார்க்கவே பார்க்காதவன் பார்த்தாலே போதும் ஆர்காசம்.

ஆக இதுக்கெல்லாம் அடிப்படை என்ன? அசலான உண்மை என்னன்னு தெரியாதவுக சோத்துக்கும்,தூக்கத்துக்கும் கில்மாவுக்கும் சகட்டுமேனிக்கு செலவழிச்சுக்கிட்டு கிடப்பாய்ங்க. அபப்டி செலவழிக்கிறதெல்லாம் வீண் விரயம் தானே. அதனால இந்த 12 ஆம் பாவத்தை இந்த பட்டியல்ல இருந்து நீக்கி துஸ்தானங்கள்ங்கற பட்டியல்ல சேர்த்துர்ரன். (ஜோதிட விதிகளை வகுத்த ரிஷிகள் மகரிஷிகள் மன்னிக்கட்டும்)

ஆக மிச்சம் இருக்கிறது 3 ஆம் பாவம். இதை வேணம்னா ஆபோக்லிம ஸ்தாங்கள்ங்கற பட்டியல்லயே விட்டுரலாம். 3ங்கறது இளைய சகோதரஸ்தானம்,கர்ண ஸ்தானம் (காது),சங்கீத ஞானம், பயணங்கள் இதை எல்லாம் காட்டுமிடம்.
தம்பி உடையான் படைக்கு அஞ்சான்னு சொன்னதெல்லாம் அந்த காலம். அப்படியும் ஏதோ ஒன்னு ரெண்டு தம்பி இருந்தா பரவால்ல.வத வதன்னு இருந்தா சொத்து தகராறுதேன்.

இசை ? அப்பப்போ ரிலாக்ஸ் பண்ணிக்க யூஸ் பண்ணிக்கிட்டா பரவால்ல.இல்லின்னா எல்லா உணர்வுகளும் மென்மையாகி -இந்த கொடூரமான யதார்த்த உலகத்தை புரிஞ்சுக்க முடியாம பொளப்பு நாறீரும். அடுத்து பயணங்கள். ஏதோ தினசரி அஞ்சு பத்து கிமீ னா பரவால்ல. தினசரி அம்பது கி.மீலாம் ட்ராவல் பண்ணா ஆசனத்துல கட்டி வந்துரும். ஆஸ்மா வந்துரும். அடுத்து இந்த 3 ஆம் பாவம் காட்டற மேட்டரு தகிரியம். அஞ்சுவதஞ்சுதல் அறிவுடைமைன்னு வள்ளுவரே சொல்லி வச்சிருக்காரு.

இதனாலதேன் ஜோதிட விதிகள்ள கூட 3 ஆமிடத்துல பாவி இருந்தா நல்லதுன்னு சொல்லியிருக்கு. ஸ் அப்பாடா .. இந்த பண பர ஆபோக்லிம ஸ்தான பஞ்சாயத்தை முடிச்சுட்டம். அடுத்தது துஸ்தானங்கள் இதை நாளையிலருந்து நோண்டி நுங்கெடுக்கலாம். உடுங்க ஜூட்டு

ஜோதிட பாடம்: 9

அண்ணே வணக்கம்ணே !
ஜோதிட பாடம்னு ஆரம்பிச்சம். ராசி நட்சத்திரம்,துவாதச பாவ காரகம் வரை வந்தம். இந்த துவாதச பாவங்கள்ள கேந்திர கோண ஸ்தானங்களை பத்தி பார்த்தம். கிரேடிங் வச்சுக்கிட்டா கோணம் ஃபர்ஸ்ட் கிரேட். கேந்திரம் செகண்ட் கிரேட்.

இதுக்கடுத்து வர்ரது பணபர ஸ்தானங்கள்: 2,11. இதை தேர்ட் கிரேட்னு வச்சுக்கலாம். இன்னாபா இது அக்குறும்பா இருக்கு. 2ங்கறது தனபாவம் தானே. வாயுள்ள பிள்ளை பிழைக்கும்ங்கறாய்ங்க. 11 ங்கறது லாப ஸ்தானமாச்சே . வாழ்க்கையில பத்து ரூவா லாபம் பார்க்கலின்னா பொளைக்கறது எப்படி? இதுக்கு போயி தேர்ட் கிரேட் கொடுத்திருக்காய்ங்களேனு ஒரு கேள்வி எழும். மேம்போக்கா பார்த்தா இது நெஜம் தான்.

ஆனால் பாருங்க நாம பைசா சம்பாதிக்க என்னெல்லாம் செய்யவேண்டியிருக்கு? ஒரு தாட்டி ஓட்டிப்பாருங்க. ஒவ்வொரு சமயம் நமக்கே ” த்தூத்தெறி இந்த பொளப்புக்கு “ன்னு தோனிருது. அந்தளவுக்கு ஈத்தரை,பிக்காலி,பீத்தரை வேலைல்லாம் பார்க்கவேண்டியிருக்கு.
கொஞ்சம் போல மானம்,ஈனம்,சூடு,சொரனை இதை எல்லாம் விட்டுட்டா கொஞ்சம் போல பைசா கிடைக்குதுன்னா பெஸ்ட் ஆஃபருப்பான்னு சம்மதிச்சுர்ரம்.பைசா கிடைக்குது.

ஆனால் நம்ம பேச்சுக்கு மருவாதி இருக்குமா? ( 2ஆம் பாவம் தான் வாக்குஸ்தானம் கூட தெரியும்ல)

நாம எதுவாச்சும் நீதி போதனை சொல்ல ஆரம்பிச்சா “ஆமாம் ஒன்னை பத்தி தெரியாதாக்கும் . நீ தினத்தந்தியில ரிப்போர்ட்டர் வேலை பார்த்த பார்ட்டிதானே”ன்னிருவாய்ங்க.

ரெண்டாம் பாவம் குடும்பத்தையும் காட்டுது. நாம பைசா தான் முக்கியம்னு கூட்டி கொடுத்து -காட்டி கொடுத்து பைசா புரட்டி குடும்பத்துக்கு செலவழிச்சா அவிக சேஃப்டி ஜோன்ல இருப்பாய்ங்க. அவிகளுக்குள்ள போராடும் குணமோ வல்லமையோ ஒரு ம..னாவும் ஜெனரேட் ஆகாது.

நாம ரெண்டு கையாலயும் “வாங்கி போட்டா” நல்லா திம்பாய்ங்க. கட்டை சேவேறி போயிரும். ச்சும்மா வர்ர பணம் தானேங்கற ஃபீல் வந்துரும். படக்குனு லஞ்ச ஒழிப்பு துறையில சிக்கி சின்னா பின்னமாயிட்டா குடும்பமே கொலாப்ஸ் ஆயிரும்.

இதுல இன்னொரு வில்லங்கம் என்னன்னா ரெண்டாமிடத்துல உள்ள எல்லா கிரகங்களும் அப்படியே ஏழாம் பார்வையா எட்டை பார்க்கும். எட்டுன்னா தெரியும்ல டிக்கெட் போடற இடம்.

நம்ம ரெண்டு டூ வீலரையும் லிங்க் பண்ணி மொபைல் புக் ஸ்டோர் செய்தம். எஸ்டேட்ல இருந்து டவுனுக்கு ஓட்டிக்கிட்டு வரும் போதே ஞம ஞமங்குது. என்னடான்னு பார்த்தா ஒரு வண்டியில பேக் வீல் பேரிங் காலி.

சாதாரணமாவே பஜாஜ் சன்னின்னா மெக்கானிக் எல்லாம் ‘போ போ”னு லெஃப்ட் ஹேண்ட்ல காக்கா விரட்டுவாய்ங்க. இதுல இது மேஜர் ப்ராப்ளம். கம்பெனி ப்ரொடக்சனே நிறுத்திருச்சு. அங்கே இங்கே பழைய சாமானாத்தான் பீராஞ்சு போடனும்.

மெக்கானிக் ரூ.350 கேட்டாரு. தரேன்னு தந்து அழுதம். அன்னாருக்கு லாபம் தான். ஆனால் லாபம் மட்டுமா அவர் கணக்குல சேரும்? நம்ம வவுத்தெரிச்சலும் தான் சேரும்.

நம்ம லாபம் அடுத்தவனோட நஷ்டமா இருக்கிறதால – நம்ம நஷ்டம் அடுத்தவனோட லாபமா இருக்கிறதால லாபம் கிடைச்சா கர்மம் கூடுது. நஷ்டம் வந்தா கர்மம் ஒழியுது. இதனாலத்தேன் 2-11 ஐ தேர்ட் கிரேட்ல போட்டிருக்காய்ங்க.

மேலும் 11 ங்கறது மூத்த சகோதரத்தை கூட காட்டும். இன்னைக்கு அண்ணாவோ அக்காவோ ஃபுல் ஃபார்ம்ல இருந்து தங்களுக்கு நமக்கு அள்ளி கொடுக்கிறாய்ங்கனு வைங்க. எதிர்காலத்துல சொத்து பிரிக்கிறச்சயோ – அல்லது அவிக கை ஓய்ஞ்சு போன நேரத்துலயே நம்ம பக்கத்துல இருந்து எதிர்ப்பார்ப்பாய்ங்களா இல்லையா?

இதனாலத்தேன் 2-11 ஐ தேர்ட் கிரேட்ல போட்டிருக்காய்ங்க. நாளைக்கு ஆபோக்லிமம் என்ற 3 ஆமிடத்தையும், துஸ்தானங்கள் என்ற 6-8-12 பாவங்களை பத்தியும் விலாவாரியா பார்க்கலாம். உடுங்க ஜூட்டு.

ராமேஸ்வரமும் -சனேஸ்வரமும்

49X49 MODI
அண்ணே வணக்கம்ணே !
எதுவும் மாறும்  – எந்த பிரச்சினையும் தீரும்னு பலரும் ( நான் உட்பட)  உறுதியா நினைக்கிறோம்.அதையே சொல்றம்.
நான் பல காலமா சொல்லிட்டு வர்ர மேட்டரு ஜெவும் -கலைஞரும் உட்கார்ந்து  தங்கள் காலத்துலயே திமுக -அதிமுக வை இணைக்க பேசனும். கு.பட்சம் மனம் விட்டு பேசி ஒரு பத்து மேட்டர்லயாச்சும் இணைஞ்சு செயல்படனும். இந்த விஷயங்கள்ள நோ பாலிட்டிக்ஸ்.
இன்னைக்கு உதட்டளவுலயோ -உள்ளபடியோ ரெண்டு பேரும் நோ காங்கிரஸ் -நோ பி.ஜே.பின்னு செயல்பட்டுக்கிட்டு வர்ராய்ங்க. சந்தோசம்.
இதையே “பேசி வச்சுக்கிட்டு ” செய்தா எவ்ளோ நெல்லாருக்கும். அட ஜஸ்ட் பத்து  கூட வேணாம் அஞ்சு மேட்டருல ஒத்திசைவோட செயல்படலாம்ல?
1.மீனவர் பிரச்சினை -கச்சத்தீவு-  இலங்கை தமிழர் பிரச்சினை
2.காவிரி -முல்லை பெரியாறு பிரச்சினை
3.மின்சாரம் -மது விலக்கு -இலவசங்கள்
4.அணு மின்சாரம், எரிவாயு குழாய் பதிப்பு ,மீத்தேன்
5.சட்டம் ஒழுங்கு பிரச்சினை
ஆனால் படமாட்டாய்ங்க. ஏன்னா ராமேஸ்வரம் போனாலும் சனேஸ்வரம் விடாதாம்.
மாற்றம் ஒன்றே மாறாததுனு சொல்லி வச்சிருக்காய்ங்க. இல்லேங்கல. ஆனால் கீழ் காணும் பழமொழிகளை பாருங்க
1. நாயை குளிப்பாட்டி நடு ஊட்ல வச்சாலும்
2.எலுக்க தோலு தெச்சி ஏடாதி உத்திக்கினா
3.நாய் வாலை நிமிர்த்தமுடியுமா
4.முதல் கோணல் முற்றும் கோணல்
5.ஆத்து நிறைய தண்ணி போனாலும் நாய் நக்கித்தான் குடிக்கனும்.
சரி தலைப்புக்கு வந்துரலாம் .பலருக்கும் ஒரு நம்பிக்கை என்னடான்னா ராமேஸ்வரம் போனா சனேஸ்வரம் விட்டுரும்.காள ஹஸ்தி போனா சர்ப்பதோசம் போயிரும்.
ஒரு ம..னாவும் போகாது.
ஒரு வேளை நீங்க பிச்சை எடுத்து ,அழுக்கும் கிழிசலுமான ஆடையோட ,கால் நடையா போனா சனியோட எஃபெக்ட் குறையலாம் (அதுவும் நிரந்தரமா இல்லை. டெம்ப்ரரியா)
இதே போல நீங்க லாலாபோடற பார்ட்டியா இருந்து லாலாவை முழுக்க நிப்பாட்டி அந்த காசுல மாசம் ஒரு தரம் காளஹஸ்தி வந்து போனா ஒரு வேளை ராகு -கேதுவோட எஃபெக்ட் குறையலாம்.
நீங்க என்னவோ அழுக்கு துணி போல -மேற்படி புண்ணியஸ்தலம்(?)லாம் வாஷிங் மெஷின் போல நினைச்சு ரெம்ப துடிக்காதிங்க.
ஒரு வேளை அங்க சுத்தப்படுத்தியே அனுப்பினாலும் -மறுபடி அழுக்கு சேர எவ்ள தேசாலம் ஆகும்?