தமிழுக்கு தடை விதிப்போம் : 2


தமிழுக்கு தடை விதிப்போம் : 2

1.தஷிண பாரத் ஹிந்தி பிரச்சார சபா என்று ஒரு அமைப்புள்ளது. இவர்கள் நாடெங்கிலும் மையங்கள் அமைத்து ( அவுட் சோர்ஸிங் மாதிரி) ஹிந்தி கற்பிக்கிறார்கள். சான்றிதழ்கள் வழங்குகிறார்கள். ( நான் கூட ப்ரவேஷிகா வரை தேறியுள்ளேன்) . இதே போன்று தமிழுக்காக தமிழக அரசு ஒரு அமைப்பை ஏற்படுத்தலாம். (இந்தியாவில் மட்டுமல்ல வெளி நாடுகளிலும்)

பயன்:
தமிழ் பரவும். இதர மொழியினர் பயில்வர். அப்போது அவர்கள் மொழிக்கும் , தமிழ் மொழிக்கும் உள்ள வேறுபாடுகள், சிம்ப்ளிசிட்டி, டிஃபிக்கல்டி தெரிய வரும்.

அவர்கள் எழுத/பேச முன் வரும்போது தமிழ் புதுவடிவமெடுக்கும்.

அந்த மொழியில் உள்ள கலைச்செல்வங்கள் தமிழுக்கும், தமிழில் உள்ளவை அந்தந்த மொழிகளுக்கும் செல்லும்

இந்த அமைப்பு ஒரு 6 மாதங்கள் செயல்பட்ட பிறகு இந்தியாவின் அனைத்து மானிலங்களிலும் அங்குள்ள தமிழ் மக்கள் அந்த மானிலத்தின் அரசியல்,இலக்கியம்,கலாச்சாரங்களை அறிந்து இரண்டற கலக்க முன்வரும் வகையில் மாதமிருமுறை பத்திரிக்கையும் நடத்தலாம். இதற்கு விஷயதானமும் மாணவர்களே கூட செய்ய வகை செய்யலாம்.
மேலும் தமிழகத்தில் “வாலும் தமிளர்கள் ” தமிழ் கற்க வகை செய்யும் வகையில் சிறப்பு டிப்ளமோ படிப்புகளையும் வழங்கலாம்

மேற்சொன்ன அமைப்பில் தற்கால பத்திரிக்காசிரியர்கள்/ சீனியர் ஜர்னலிஸ்டுகள் மட்டும் இடம் பெற வேண்டும். தயவு செய்து ஆசிரியர்களை தவிர்க்கவும்
சில எச்சரிக்கைகள்:

குழம்பி (காபியாம்) ,அடி ரொட்டி (பரோட்டா) போன்ற விஷ பரீட்சைகளை தடை செய்யவும்

தூய தமிழ் என்று தம்பட்டம் அடித்தவாறு பேச்சுத்தமிழிலிருந்து விலகிவிடக்கூடாது.
அதே நேரம் பேச்சு தமிழ் எழுதுகிறேன் என்று ஆபாசத்துக்கோ ,கொச்சைக்கோ இறங்கி விடக்கூடாது (இதை ஆதித்தனார் கூட சொல்லியிருக்காருண்ணே)

நடை முறையில் இல்லாத ஐயன்மீர், அய்யகோ போன்ற பிரயோகங்களுக்கு தடை

ரஜினி,( வருமுடியுமானு கேட்டேல்ல தோ பார் வன்டேன்) விஜய காந்த் (தமில் நாட்ல வால்றவன்) போன்றவர்கள் டப்பிங் பேச தடை
கலைஞர் கவிதை ,கடிதம் எழுத தடை (அய்யய்யோ அந்த நடைய பார்த்தா எவனாச்சும் புதுசா தமிழ் படிக்க வருவானா)

அவசியமற்ற இடங்களில் எதுகை மோனை புகுத்த தடை

ஒரு வாக்கியத்தை பாரா அளவுக்கு எழுத தடை . ஆறு வார்த்தைக்கு மேல் ஒரு வாக்கியத்தில் இருக்க கூடாது.

தமிழில் சமையல், ஜோதிடம் (முக்கியமாய் ராசிபலன்), வாஸ்து, புராணம், வெளியிட தடை. (கு.ப. 5 வருடங்களுக்கு)

தன்னிலையிலான படைப்புகளில் தவிர வட்டார வழக்கு உபயோகிக்க தடை. படர்க்கையில் எழுதுகையில் மட்டும் கொட்டேஷனில் உபயோகிக்க அனுமதி.

எளிய தமிழில் செக்ஸ் எஜுகேஷன். அப்போதான் விகடன் மாதிரி “எழுச்சி” க்கு எழுதற வழக்கம் போகும்.

சிறுவர் இலக்கியம் செழிக்க வேண்டும். ஆனை,ஆட்டுக்குட்டி எல்லாம் ஓரங்கட்டி விட்டு பெரியவர்கள் சிறுவர்களுக்கு எழுதுவதை குறைத்து சிறுவர்கள் சிறுவர்களுக்கு எழுதும் பழக்கத்தை அதிகரிக்க வேண்டும்

இதையெல்லாம் பட்டியலிட காரணம் தமிழன்னை பிச்சையெடுப்பாள் என்றுமல்ல. அவளை காப்பாற்றியே ஆகவேண்டும் என்றுமல்ல.

அவள் நித்ய கல்யாணி. ஆயிரமாயிரம் அன்னியர் படையெடுப்புகள், துபாஷிகளாக அவதரித்த பார்ப்பனர்களின் துரோகம் அனைத்தையும் மீறி பூத்து குலுங்கிக்கொண்டுதான் இருக்கிறாள்.

தாய் மொழியில் படித்து தாய் மொழியில் சிந்தித்து, தாய் மொழியில் எழுதமுடிந்தால் தான் கட்டக்கடைசி தமிழனின் மேதைமையும் இந்திய மறு கட்டமைப்புக்கு பயன்படும். தமிழன் உருப்படுவான். தமிழ் பேசும் விபச்சாரிகள் குறைவர்.

தமிழுக்கு தடை விதிப்போம்

தமிழை கச்சா முச்சானு வளர்க்கனும்னா சின்ன வேலை செய்தா போதும். தமிழுக்கு தடைவிதிக்கனும். விபச்சாரம் தடை செய்யப்பட்டிருப்பதாலேயே எப்படி அது தழைக்கிறதோ அது போல் தமிழ் கற்க தமிழர்கள் தம் டீக்கடை பெஞ்சுகளையும் , தமிழ் பெண்கள் சீரியல்களையும் துறந்து தமிழ் கற்க முன் வருவார்கள் இப்படித்தான் இந்த பதிவை ஆரம்பிக்கனும். அப்பத்தான் என்னை திட்டவாவது கண்ணுல விளக்கெண்ணை விட்டுக்கிட்டு படிப்பாங்க..

1.முதலில் தமிழர்கள் தொழிலதிபர்களாக ,பணக்காரர்களாக வளர வேண்டும். தமது தொழில் தொடர்புகளை, வியாபார தொடர்புகளை தமிழிலேயே செய்ய வேண்டும். மேலும் த‌மிழிலிருந்து ஆங்கில‌த்திற்கு, ஆங்கில‌த்திலிருன்து த‌மிழுக்கு நொடிகளில் மொழி பெ‌ய‌ர்க்கும் சாஃப்ட் வேரை த‌யாரித்தாக‌ வேண்டும்.

2.ஒரு இனத்தை ஒழிக்க முதலில் அதன் மொழியை ஒழிக்க வேண்டும் என்பது பாஸிஸ தத்துவம். மொழி அழிந்தால் இனம் அழியும் என்பதை மக்களுக்கு உணர்த்த வேண்டும். அல‌ட்சிய‌த்தை காட்டிலும் எம‌ன் ஒரு மொழிக்கு வேறு ஏதுமில்லை என்று உறைக்கும்ப‌டி செய்ய‌ வேண்டும். எங்க‌ள் ஊரில் ம‌க்க‌ள் தெலுங்கு ப‌டிச்சா உட‌னே வேலை (?) என்ற‌ பிர‌மையில் த‌ங்க‌ள் வாரிசுக‌ளை தெலுங்கில் போட‌ ஆர‌ம்பித்தார்க‌ள். இப்போ நிறைய‌ ப‌ள்ளிக‌ளில் த‌மிழ் செக்ஷ‌னே மூட‌ப்ப‌ட்டு வ‌ருகிறது

3.மொழி அழியாதிருக்க அது வளைந்து கொடுக்கும் தன்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதாவது நேரிடை பொருளை தரும் வார்த்தை கிடைக்காத பட்சத்தில் வேற்று மொழி வார்த்தையை அப்படியே வரித்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக பெயர் சொற்களை அப்படியே உபயோகிக்க வேண்டும்.

4.இலக்கணம் எளிமைப் படுத்தப் படவேண்டும். கம்ப்யூட்டரில் பிழை திருத்தம் செய்ய ஏதுவாக விதிகளை எளிமைப் படுத்த வேண்டும்.விதிக‌ள் எத்த‌னை எளிமையாக‌ இருந்தால் அத்த‌னை பேர் அதை பின்ப‌ற்ற‌ விரும்புவார்க‌ள்.

5.முக்கியமாக மொழி சோறு போடும் நிலையை ஏற்படுத்த வேண்டும். அதற்கு அரசு,தனியார் நிறுவனங்கள் அதை தம் நிர்வாகத்தில் விரிவாக உபயோகிக்க வேண்டும். அதே நேரம் உலக சமுதாயத்திலிருந்து இனம் துண்டிக்கப்பட்டு விடக் கூடாது.(இதர மானிலங்கள், நாடுகளுடனான் தொடர்புக்கு ஏற்கெனவே சொன்னபடி உலகத்தரம் வாய்ந்த கச்சிதமான மொழி பெயர்ப்பு மென் பொருளை தயாரித்தாக வேண்டும். தமிழன், தமிழ் நிறுவனம் தமிழர்களுடன் தொடர்பு கொள்கையில் தமிழை ம‌ட்டுமே தொட‌ர்பு மொழியாக‌ உப‌யோகிக்க‌ப் ப‌ட‌ வேண்டும். பொறுக்கி என்ற‌ பெய‌ர் த‌மிழ் பெய‌ர் என்ப‌த‌ற்காக‌ ஒரு திரைப்ப‌ட‌த்துக்கே வ‌ரி வில‌க்கு வ‌ழ‌ங்கும் போது த‌மிழை தொட‌ர்பு மொழியாக‌ கொண்ட‌ நிறுவ‌ன‌த்துக்கு த‌ருவ‌தில் த‌வ‌றே இல்லை.

6.ஐந்தில் வ‌ளையாத‌து ஐம்ப‌தில் வ‌ளையாது..என‌வே ம‌ழ‌லைய‌ர் வ‌குப்பிலிருந்தே த‌மிழ் க‌ட்டாய‌மாக்க‌ப் ப‌ட‌ வேண்டும். மொழி என்ப‌து வாழ்க்கைப் போராட்ட‌த்தில் ஒரு ஆயுத‌மாக‌,உண‌வைப் பெற்றுத்த‌ரும் தூண்டிலாக‌ செய‌லாற்றும் சூழ‌ல் அர‌சு நிர்வாக‌ம்,நிதி அமைப்புக‌ள், வியாபார‌ம், ச‌மூக‌ம்,அர‌சிய‌லில் ஏற்ப‌டுத்த‌ப் ப‌ட‌வேண்டும்.

7.த‌மிழில் நாளிதுவ‌ரை எழுத‌ப்ப‌ட்ட‌ ப‌டைப்புக‌ள் அனைத்திலும் தேடி ப‌டிப்ப‌த‌ற்கான‌ டேட்டா பேஸ் ஒன்று ஏற்ப‌டுத்த‌ வேண்டும்.

8.த‌மிழில் உள்ள‌ ஞான‌ செல்வ‌த்தை உட‌ல் ந‌ல‌ம்,நிதி நிர்வாக‌ம்,நீதி நிர்வாக‌ம், இப்ப‌டி த‌லைப்பு வாரியாக‌ தேடி,ப‌டித்து ம‌கிழ‌வும் வ‌ழி வ‌கை செய்ய‌ வேண்டும்.

9.இத‌ற்காக‌ குளோப‌ல் டெண்ட‌ர் அழைத்து அர‌சு சாரா அமைப்பு ஒன்றை ஏற்ப‌டுத்த‌ வேண்டும். மழலையர் முதல் முதியவர் ஈறாக தமிழ் போதனை,நூல் அச்சிடுதல்,பத்திரிக்கை வெளியிடுதல் ,நூல் நிலைய‌ங்களின் நிர்வாகம் போன்றவற்றை , அத‌ன் பொறுப்பில் விடலாம். இத‌ற்கான‌ நிதியாதார‌த்தை ப‌ல‌ வ‌கைக‌ளில் ஏற்ப‌டுத்த‌லாம். (உ.ம் ) த‌னித் த‌மிழை காற்றில் விட்டு ச‌க‌ட்டு மேனிக்கு க‌ல‌ப்ப‌ட‌ம் செய்யும் பெரிய‌ ம‌னித‌ர்க‌ள்,ப‌த்திரிக்கைக‌ள்,அர‌சுத் துறைக‌ள்,த‌னியார் நிறுவ‌ன‌ங்க‌ள்,க‌ல்வி நிறுவ‌ன‌ங்க‌ளுக்கு அப‌ராத‌ம் விதிப்ப‌த‌ன் மூல‌ம்

10.குறிப்பிட்ட‌ கால‌த்துக்கு அர‌சு விள‌ம்ப‌ர‌ங்க‌ளை இத‌ர‌ ப‌த்திரிக்கைக‌ளில் வெளியிட‌ சுய‌த‌டை விதித்துக் கொண்டு முன்ன‌ர் கூறிய‌ அர‌சு சாரா நிர்வாக‌த்தின் கீழ் வெளிவ‌ரும் ப‌த்திரிக்கையில் ம‌ட்டும் வெளியிட்டாலே போதும். அந்த‌ ப‌த்திரிக்கையை சில‌ கால‌த்திற்கு அர‌சு ப‌ள்ளிக‌ள்,ரேஷ‌ன் க‌டைக‌ள் மூல‌ம் இல‌வ‌ச‌மாக‌ வினியோகிக்க‌ வேண்டும்.வேண்டு மானால் ஒவ்வொரு வார‌மும் ஒவ்வொரு பிர‌ப‌ல‌த்தைக் கொண்டே அதை வெளியிட்டாலும் ந‌ல்ல‌தே..

11. உலகெங்கிலும் வாழும் எந்த‌ த‌மிழ‌னும் ட்யூட்ட‌ர் கிடைக்க‌வில்லை என்று த‌ன் வாரிசை வேறு மொழியில் ப‌யிற்றுவிக்க‌ கூடாது

ஆவிகள் இருப்பது உண்மையா? ,இந்த பதிவில் ஆவிகள் இருப்பது உண்மையா? என்ற விஷயம் பற்றியும், செக்ஸ் லைஃப் மட்டும் சரியாக திட்டமிடப்படுமானால் தலையெழுத்துக்கே டேக்கா கொடுக்கலாம் என்பது பற்றியும் விவரித்துள்ளேன். ஆவிகள் உங்கள் லட்சியப்போராத்தில் துணை நிற்க நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் ஒன்றே ! உங்கள் லட்சியத்தில் உறுதியாக நிற்பது

இந்த படைப்போ இந்த உலகமோ , நாமோ இல்லாத காலமே கிடையாது. புனரபி மரணம் புனரபி ஜனனம். இன்று விஞ்ஞானிகள் வரையறுத்திருப்பது ஒரு பிக் பாங்க் மற்றும் ஒரு ஸ்ருஷ்டியையே. ஆனால் ஆயிரக்கணக்கான முறை இந்த படைப்பு சுருங்கி விரிந்திருக்கிறது. இதற்கு ஒரு அஜெண்டா இருக்கிறது. விதியற்ற விதி என்று சொல்லலாம். ஆண்டவன் என்றால் இது கடந்த காலத்தை ஆண்டவன் என்ற பொருளை தருகிறது. அப்போ இப்ப ஆள்றது யாருனு கேட்கிறிங்க இல்லியா ? நம்மை ஆள்றது வானவெளியில் நிறைந்துள்ள நம் மூதாதையரின் எண்ணங்களே.

இதை நிரூபிக்க ஒரு சின்ன சர்வே செய்யுங்க. உங்களுக்கு தெரிஞ்சு நாசமாகிப்போன 10 குடும்பங்கள் கதைய பாருங்க. அவங்க முன்னேறியதற்கான காரணங்களை பட்டியல் போடுங்க. அப்படியே ஈன நிலையிலிருந்து முன்னேறிய 10 குடும்பங்களோட பட்டியலை போடுங்க. அவங்க முன்னேற்றத்துக்கான காரணங்களை பட்டியல் போடுங்க.

கெட்டுப்போன குடும்பங்கள் முன்னேற பத்து பனிரண்டு காரணங்களே இருப்பதை போல் , வசதியான குடும்பங்கள் கெட்டு நலியவும் ஒரு பத்து பனிரண்டு காரணங்களே காரணங்களாய் அமைந்ததை பார்க்கலாம்.

நம் தலைமுறையில் வாழ்ந்து /கெட்டு செத்துப்போனவர்களுடைய எண்ணங்கள்/ஆவிகள்னு கூட வச்சிக்கலாம் .இவர்கள் தமது வமிசத்தில் அடுத்து பிறப்பவர்களின் வாழ்வுகளை அம்பயர் கணக்காய் பார்த்துக்கொண்டே இருக்கின்றன. இவற்றில் கெட்டழிந்தவையும் உண்டு. வாழ்வாங்கு வாழ்ந்தவையும் உண்டு.

ஒருத்தன் நாசமா போறதுனு முடிவு பண்ணி ( இது அவன் புத்திக்கு உறைக்காது) முதலடி எடுத்து வச்சிட்டான்னா அவனை க்ளைமேக்ஸுக்கு கொண்டு சேர்த்து பிச்சை எடுக்க வைக்கிறது கடந்த பிறவியில் கெட்டழிந்த ஆத்மாக்களின் எண்ணங்கள் அ மனிதர்களின்ஆவிகளே.

அதே மாதிரி ஒருத்தன் உருப்படறதுனு முடிவு பண்ணி முதலடிய எடுத்து வச்சிட்டான்னா அவனை க்ளைமேக்ஸுக்கு கொண்டு சேர்த்து வெற்றி சிகரத்தை அடைய வைக்கிறதும் அவன் வமிசத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்த மூதாதையரின் எண்ணங்கள் அ ஆவிகளே.

இங்கே உங்களுக்கு நல்லா புரியணுங்கறதுக்காக முன்னோர், மூதாதையரை மட்டும் குறிப்பிட்டேன். (இந்த பாதிப்பு ஜீன் களின் வழி நடக்கிறதுனு சொல்லிரலாம்) ஆனால் அனுபவத்துல பார்க்கும் போது வாழ்வாங்கு வாழ்ந்தவனுடைய ஆத்மாவுக்கு வசதியா எவனும் அவனோட வம்சத்துல பிறக்கலைன்னா அவன் ஆத்மா வேறு குடும்பம்/வேறு ஜாதி/வேறு மதம்/வேறு நாட்டை சேர்ந்தவைனையும் தேடிப்போயிருது.

இதையெல்லாம் படிச்சா விட்டலாச்சாரியா படம் மாதிரி இருக்கும் ஆனால் இதெல்லாம் நிஜம். ஒரு கட்டத்துல ஒரு ….ரும் தெரியாது அறியாமையில்ம்,அகங்காரத்துலயும் அழிஞ்ச நான் ( அதே ஆசாமி, அதே ஜீன், அதே படிப்பு ,அதே ஜாதகம்) சரியா 19 வயசுல பாதை மாறி (வாதைகள் பட்டு) அடுத்த 19 வயசுல படைப்பின் மர்மங்களை கூட இரண்டாம் வாய்ப்பாடு மாதிரி சொல்லமுடியுதுன்னா நான் சொன்ன தியரிக்கு இதைவிட ஆதாரம் என்ன தேவை.

என் பிறந்த தேதி 7/8/1967 இதில் உள்ள இலக்கங்களை கூட்டினா 38 வரும் . இதில் பாதி 19 . இந்த விதிய உங்க விஷயத்துல அப்ளை பண்ணி பாருங்க. உங்க முடிவை மறுமொழியா போடுங்க பார்ப்போம்.

ராத்திரிகள் வந்து விட்டால்

நாம் 100 சதவீதம் பரிபக்குவமடைந்து விட்ட மகாத்மாக்கள் இல்லை. நமது ஆடைகளுக்குள் மிருகமாக வே இருக்கின்றோம். எனவே செக்ஸ் என்பது நம்மை 99 % வரை பாதிக்கிறது. செக்ஸுக்கு தகுதியான உடல் வலிமை, உள்ள் இளமை இருக்கும் வரை இந்த சதவீதம் மாறுவதில்லை.

இதை இயற்கை கொடுத்த சாபமாக பாவிப்பதைவிட சாபத்தை வரமாக மாற்றிக்கொள்ள முயற்சிக்கலாமே. அர்ச்சுனனுக்கு ஊர்வசி கொடுத்த சாபம் அவனது அஞ்ஞாத வாசத்துக்கு உதவியது. அதை போல் மிருக நிலையில் உள்ள நமக்கும் 99 சதவீத பாதிப்பு வரமாக உதவ வாய்ப்பிருக்கிறது.

கண்ணதாசன் “ராத்திரிகள் வந்து விட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும்” என்று எழுதியிருப்பதை எண்ணிப்பாருங்கள். அவர் வர கவி. இயற்கையின் ரகசியங்கள் அவர் கவிதைகளில் கொட்டிக்கிடக்கின்றன. உடலுறவு எண்ணம் ஏற்பட்ட பிறகு, அ உடலுறவுக்கு இறங்கி விட்ட பிறகு முன் சொன்ன பூர்வ ஜென்ம பாப ,புண்ணியங்கள், ஜாதகம், வாஸ்து, ஜீன் கள், முன்னோர் மூதாதையரின் எண்ணங்கள் அ அவர்தம் ஆவிகள், சுற்றுப்புற சூழல் இப்படி எதுவுமே பாதிக்காத நிலை ஏற்படுகிறது.

இதற்கு காரணம் அந்த நேரத்தில் மனித மனம் ஒரு புள்ளியில் குவிவதே. இந்த உடலுறவு நேரத்தை நீட்டித்து தம்பதிகள் ஒருவரை ஒருவர் கிளர்ந்தெழச்செய்து தம் உச்சத்தை தள்ளிப்போட்டு ஆழமாக செல்லும்போது
அங்கு சக்தி வட்டம் தோன்றுகிறது.

நீளவாக்கில் ஓடும் மின்சாரத்தை விட சுற்றி சுற்றி பாயும் மின்சாரத்துக்கு சக்தி அதிகம் . மோட்டார்களிலான வைண்டிங்கை பார்த்தால் இது புரியும். மேலும் உடலுறவில் ஆழம் அதிகரிக்கும்போது எண்ணீக்கையும் நாளடைவில் குறைந்து விடும்.

இதில் ஆழ திருப்தியுற்ற தம்பதிகளின் மனம் நன்றியுணர்வால் பொங்குகின்றன. பின் கலர் டிவியா/ப்ளாக் வைட் டிவியா போன்ற அம்சங்கள் இரண்டாம் பட்சமாகிவிடுகின்றன. முடிச்சுகள் அவிழ்ந்து போகின்றன. செல்ஃப் பிட்டி காணாமல் போகிறது. துக்கத்தில் இருப்பவன் அடுத்தவரை துக்கப்படுத்தி பார்ப்பான். சந்தோஷத்தில் உள்ளவன் பிறரை சந்தோஷ ப்படுத்தி பார்ப்பான். ஆழமான செக்ஸ் லைஃப், குடும்ப வாழ்க்கையையும். குடும்ப வாழ்க்கை சமூகத்தையும் மாற்றும். அரசியல் எல்லாம் பளிங்குமாதிரி ஆகிவிடும். ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். அழுத்தி வைக்கப்பட்ட செக்ஸ் கோரிக்கைகளே வன்முறையாகவும், லஞ்ச லாவண்யம்,பதவி வெறி இத்யாதியாக மாறுகிறது. வரதட்சிணை கொடுமைக்கு கூட இதுவே காரணமோ என்னவோ? எப்படியும் நீ அதுக்கு லாயக்கில்லை பணமாவது வாங்கிட்டு வா என்ற மனோதத்துவம் இதன்பின் இருக்கலாம். இல்லத்தரசிகள் கணவர்கள் ஃப்ரிட்ஜ், கலர் டிவி கேட்டு குடைச்சல் கொடுப்பதற்கு பின்னும் “எப்படியும் நீ அதுக்கு லாயக்கில்லை ..இதையாவது வாங்கிக்கொடு” என்ற மனோதத்துவம் இருக்கலாம்.

எனவே ” ஆதலினால் காதல் செய்வீர் காதலினால் கலவி உண்டாம்
கவலைகள் போம்

எமன் Vs மேன்

சின்னவயதில் நான் படித்த மாயாஜாலக்கதைகளின் எச்சம் இன்னும் என் அடி மனதில் இருந்ததா? விட்டலாச்சார்யாவின் படங்கள் தான் ஆழமான முத்திரையை போட்டுவிட்டனவா தெரியாது. பூமியில் கால் பாவாத சமாச்சாரங்கள் என்றால் இப்போதும் ஒருவித கிளு கிளுப்பு இருக்கிறது.

நான் ஜோதிடத்தின் மர்மங்களை ப்ளாஸ்ட் செய்யவும், ஆன்மீகத்திலான குழப்பங்களை ,குளறுபடிகளை மீறி தெளிவை பெறவும், மூன்றே மாதங்களில் கணிணியை இயக்க கற்கவும், எனக்கு கு.ப.அறிமுகம் கூட இல்லாத வேலைகளையும் குன்ஸிலேயே செய்து முடிக்கவும் (சில நேரம் அவற்றில் எக்கு தப்பாய் மாட்டி முழித்ததும் கூட உண்டு) சில அமானுஷ சக்திகள் உதவியதாகவே நம்பும் ஆசாமி நான்.

இந்நிலையில் பல வருடங்கள் கழித்து சந்தித்த பால்ய நண்பன் ஒருவன் பாபா படம் கணக்காய் ஒரு மந்திரத்தை கொடுத்து இதை ஒரு லட்சம் முறை ஜபித்தால் ஆத்மா உடலிலிருந்து பிரியும். நீ நினைத்த இடத்துக்கு போகலாம் என்று கூறியதையும், நான் ஜெபிக்க ஆரம்பித்ததையும் ஆச்சரியத்துக்குரிய விஷயமாக கருததேவையில்லை என்றே கருதுகிறேன்.

மந்திரம் ஜெபிக்க ஆரம்பித்த 10 ஆவது நாளான நேற்று நள்ளிரவு மேற்படி மந்திரத்தை ஜெபித்துக்கொண்டிருந்த போது உண்மையிலேயே
கலவரம் வெடித்தே விட்டது. திடீர் என்று வலது மார்பில் ஊசி குத்துவது போன்ற வலி துவங்கியது. “என்னங்கடா இது ஹார்ட் லெஃப்ட் சைட்லதான இருக்கும். 1987 ல யிருந்து 22 வருசமா போட்ட தம் இப்படி வேலை செய்யுதா? ஒரு வேளை ரமண மகரிஷி சொன்னமாதிரி வலப்பக்கம் இருக்கிற ஆன்மீக இதயத்துலதான் கலாட்டா நடக்குதா? ஒரு வேளை வாயு கோளாறா இருக்குமோ? இல்லையே இன்னைக்கு ராத்திரி 8.30க்கெல்லாம் சாப்பிட்டுட்டு ஜிண்டாக் கூட போட்டாச்சே” இத்தனை யோசனைகள் ஒரே நொடியில் சீறிக்கிளம்பினாலும் ஒரு ட்ராக்கில் மந்திரம் ஓடிக்கொண்டே இருந்தது.

ஊசிக்குத்தலும் அதிகரித்துக்கொண்டே இருந்தது. “தாளி என்னதான் நடக்குது பார்ப்போம்” என்று மந்திர ஜபத்தை உக்கிரமாக்கினேன். கடந்த காலத்தில் என்னென்ன மந்திரங்கள் ஜெபித்தேன் அவை எப்படியெல்லாம் பலன் கொடுத்தன என்பதை ஒரு முறை ஒட்டிப்பார்த்தபடி மந்திரத்தை ஓட்டிக்கொண்டே இருந்தேன்.

வாயு கோளாறு இருப்பவர்கள் உடலில் வாய் நகர்வதை உணர முடிவது போல் ஊசிக்குத்து நகர்வதை உணர முடிந்தது. மெல்ல கழுத்து ,தொண்டை என்று நகர்ந்த ஊசிக்குத்து நடு நெற்றியில் சென்று முட்ட ஆரம்பித்தது. டாக்டர் ஊசியில் மருந்தை ஏற்றிக்கொண்டு லேசாக பீச்சிப்பார்ப்பாரே அதை போல் நடு நெற்றி ஸ்தானத்து ஊசி எதையோ பீச்சியது.

அவ்வளவுதான்.ஆறுமணி நேரம் ஒன் பாத்ரூம் அடக்கி வச்சிருந்து விடும்போது உடம்பு சிலிர்க்குமே அதுமாதிரி சிலிர்த்துப்போச்சு. பீக் ஹவர்ல சிட்டி பஸ் நெரிசல்லருந்து விடுபட்டு நம்ம ஏரியா பஸ் ஸ்டாப்ல உதிர்வோமே அப்படி ஒரு ஃபீலிங். நான் சவாசனத்தில் படுத்திருந்த என்னை பார்க்க முடிந்தது. குளிர். தாங்க முடியாத குளிர் . இதெல்லாம் கனவானு ஒரு சம்சயம். குளிருக்கு இதமா ஒரு தம் போடலாம்னு பார்த்தா கை துழாவுதே தவிர காத்துதான் கிடக்குது.

மந்திரம் மட்டும் தொடருது. சில நிமிடங்கள் கழிச்சு புரிஞ்ச்சுக்கிட்டேன். மந்திரம் ஒர்க் அவுட் ஆயிருச்சு. பாடிலருந்து வெளிய வந்தாச்சு. இப்ப எங்கே போலாம். அந்த சமயம் பார்த்து முண்டகோபனிஷத் ஞா. வந்தது. எத்தனையோ தமிழ் படங்கள்ள பார்த்த எமனை ஒரு தடவை பேட்டி எடுத்து ப்ளாக்ல வச்சா எப்பயிருக்கும்? நினச்சதுதான் தாமதம் எமலோகம். பாவம் எமதர்மர் ரெஸ்ட்ல இருக்காரு. பக்கத்துல அவுங்க சம்சாரம் ஒரு ஓரமா ஒண்டியிருக்கு.

இதென்னடா லொள்ளுனு வெளிய வந்து குரல் கொடுத்தேன். எமதர்மர் பெரிய கோட்டாவியோட வந்து கதவை திறந்தார்.

“ஏய் யார் நீ இந்த நேரத்துல வந்திருக்கே..உன்னை யாரு கொண்டு வந்தது?”
“சே .. நான் என்ன எலும்பு துண்டா யாரோ கொண்டாந்து போட , நமக்கு பூலோகம், ச்சும்மா உங்களை ஒரு பேட்டி எடுக்கலாம்னு வந்தேன்”
எமன் தலைக்குள்ள ஸ்டாருங்க. ” நம்பவே முடியலை எப்படி வந்தேப்பா”
இந்த கதையின் முதல் அத்யாயத்தை சொன்னேன்.

“தபாரு இப்படியெல்லாம் அகாலத்துல ,சாகறதுக்கு முந்தி இங்கே வரக்கூடாது. உன் வீட்ல வேற எலித்தொல்லை ஜாஸ்தி . முக்கியமான எதையாவது கடிச்சு வச்சுரபோவுது. “

“கடிச்சா கடிச்சுட்டு போவுது ஆந்திரால ஆரோக்கிய ஸ்ரீ ப்ளான் இருக்கு தெரியுமா? வேற ஒன்னு வச்சிக்குவன்”

“என்னடா இது தலைவலியா போச்சு..பேட்டில்லாம் முடியாது . மேலிடத்துல பர்மிஷன் வாங்கனும். ஆஃப்தி ரிக்கார்டா வேணும்னா பதில் சொல்றேன்”

“அஸ்கு புஸ்கு இவ்ளோ தூரம் வந்துட்டு ஆஃப் தி ரிக்கார்டு பதில் எல்லாம் வாங்கிகினு போமுடியாது தலை ! வேணம்னா டேக் யுவர் ஓன் டைம் . அதுவரைக்கும் ச்சும்மா டைம்பாஸ் பண்ணிக்கிறேன்”

இவன் என்னடா சேல்ஸ் ரெப் கணக்கா இருக்கானே என்றோ என்னவோ எமன் டெலிப்பத்தியில் மும்மூர்த்திகளுடன் பேசினார். பிறகு “சரிபா ..பெர்மிஷன் க்ரேண்ட்டட் கேள்விய கேளூ” என்றார்.

“ஆன் வாட் க்ரவுண்ட்ஸ் பர்மிஷன் க்ரேண்ட்டட். உன் ப்ளாக் சரியான லொடக்கானி ப்ளாகுனு மிஸ்டர் சிவா சொன்னார். ஒரு நாளைக்கு ஆயிரம் பேர் கூட பார்க்கறதில்லயாமே..அதுல வேற உன் ப்ளாக் 12 ஆவது ரேங்குல இருந்து ஜீரோ ரேங்குக்கு விழுந்துருச்சாமே”
“அட பாவிகளே.. பேட்டி குடுக்குறவன் நிறைய பேர் படிக்கனும்னு ஆசைப்படுவான். இதென்ன உட்டாலக்கடியா இருக்குது”
“இதெல்லாம் தேவரகசியம்பா நீ பத்தாங்கிளாஸ் கொஸ்டியன் பேப்பர் மாதிரி அவுட் பண்ணிட்டா கமிஷன் போட்ருவாங்கப்பா..தலைவலி”
“சார் !தமிழ் தெலுங்கு சினிமாலல்லாம் பார்த்தப்ப ஆள் நல்லா ஸ்டவுட்டா இருந்திங்க இப்ப என்ன வெயிட்லாஸ் ட் ரீட்மெண்ட்லைருக்கிங்களா.. அதெல்லாம் வேணா சார் ரிஸ்கு “
“அட போப்பா .. நீ வேற சும்மா லொள்ளு பண்ணிக்கிட்டு என்னை பார்த்தவன் எவன்? ஏதோ அவனவனுக்கு தோணின மாதிரி காட்டி உட்டுட்டான்”
“அ..ச்சும்மா வுடாத தலை எங்க வாத்தியாரு நான் செத்து பிழைச்சவண்டா நு பாட்டெல்லாம் பாடியிருக்காரு”
“என்ன நீ பாதிராத்திரி பேட்டினு வந்து ஒதகாத விஷயம்லாம் கேட்டுக்கிட்டிருக்கே”
“சரி சார் . சீரியஸ் “
“அப்போ சி.எம்.சிக்கு போயா”
“பார்த்தியா என்னை சீரியஸ்னுட்டு இப்ப நீங்களே ஜோக் கட் பண்றிங்க”
“ஆமா அது பர்த்டே கேக்கு கட் பண்றேன்/ எல்லாம் சகவாச தோஷம் தான். பன்னியீட சேர்ந்த கன்னும் கதை”
“ஏன் பூவோட சேர்ந்த நாரும் கதையா இருக்க கூடாதா”
“எப்பா நீ கேட்க வேண்டியத கேட்டுட்டு போ..”
“சரி போன ஜென்மத்துல என் கிட்ட பத்து ரூபா கை மாத்து வாங்கிகினிங்களே அதை குடுங்க”
“அய்யயோ என்ன விட் ருப்பா”
“அந்த பயம் இருக்கட்டும். அந்த நாள்ள நசிகேதனை சத்தாச்ச மாதிரியெல்லாம் வெண்டைக்கா பதில் தரக்கூடாது. பாயிண்ட் டு பாயிண்ட் பதில் வரனும் சரியா”
“சரிப்பா”
” இந்த படைப்பு எப்படி ஆரம்பமாச்சு”
“இதுக்கு ஆரம்பமும் கிடையாது. முடிவும் கிடையாது. படார்னு ஒரு வெடி. அந்த அதிர்வுல ஒரு பக்கம் விரிவடைஞ்சுட்டே போகுது. மறுபக்கம் சுருங்கிகிட்டே போகுது”
“இத மாதிரி பீலா விடறதாலதான் பெரியார் வாங்கு வாங்குனு வாங்கினாரு”

“யாரோ வைவாங்கனு உண்மைய மாத்தி சொல்லமுடியுமா என்ன? பெரியார் காலத்துல ஐயருங்க கடவுளை வச்சு மனுஷங்களை பிரிச்சாங்கப்பா ..பிரிச்சவங்களை படிக்க விடாம ,முன்னேற வுடாம தடுத்தாங்கப்பா. அவன் உயிரும் என் மயிரும் ஒன்னுன்னு பேசினாங்க. இதுக்கெல்லாம் மூலம் கடவுள்ன்ற கான்செப்டு தானே அதுவே பெரிய பொய் போடா பொங்கினு பெரியார் ஒரே அடியா அடிச்சார். கடவுளைபத்தி தெரியாதவன் , கடவுளோட தொடர்பில்லாதவன், அப்படி
நெத்தியடி அடிக்க முடியுமா என்ன ? ஈஸ்வரோ மனுஷ்ய ரூப்பேணா. மானவ சேவா மாதவ சேவா இதெல்லாம் தெரியாதா என்ன? “

“சரி ஓஞ்ச்சு போவட்டும். இந்த படைப்பு கான்ஸ்டன்டா இருக்குன்றிங்க”

“ஆமாம் பா”

“சரி இதுல பிறப்பும் இறப்பும் எப்படி நடக்குது/”

“கூச்சமா கீதுப்பா “
“யோவ் பெருசு இந்த லொள்ளுதானே வேணாங்கறது . நான் கேட்ட விதம்தப்போ என்னவோ மனுஷன் ஏன் பிறக்கறான்?”

“முக்தியடைய”

“முக்தின்னா என்ன தலை”

“மனுஷன் இந்த படைப்புல பிரிக்க முடியாத ஒரு பாகம். ஆனால் இவன் தான்
இந்த படைப்புல இருந்து வேறுபட்டவன்னு நினைக்கிறான். இந்த படைப்புக்கு தன்னை மையப்புள்ளியா நினைக்கிறான். தன்னை மையமா கொண்டு இந்த படைப்பை டிஃபைன் பண்ணரான். இது அவனை போராட்டத்துக்கு தள்ளுது. அந்த போராட்டத்துல வெற்றி கண்டா துள்ரான், தோற்றா துவண்டு போரான்”

“அடிச்சக்கைன்னானாம் ! அப்போ எவனோ செத்தான் எனக்கென்ன போச்சுனு வாழ்ந்தா அதுதான் முக்தியா..”

“இல்லடா கண்ணா தான் செத்தா கூட எவனோ செத்தான் எனக்கென்ன போச்சுனு இருக்கனும் அதுதான் முக்தி நிலை “

“மரணம்னா என்ன ?”

“இந்த உடம்புலருந்து நீ பிரியறே”

“உடம்புக்கும் உயிருக்கும் என்ன தொடர்பு ?”
“உன் உடம்பு கம்ப்யூட்டர் மாதிரின்னா உன் ஆத்மா ஹார்ட் டிஸ்க் மாதிரி.”

“யப்பா லேட்டஸ்ட் உதாரணமெலாம் தரீங்க”

” மூணு மாசத்துக்கு முன்னாடி தாம்பா எமலோகம் கணிணி மயமாச்சு”

” அட்றா சக்க அட்றா சக்க அட்றா சக்க !”

“அது ஏன் மனுஷன் முக்தியடைஞ்சு தான் தீரனுமா?”

“சபாஷ்ரா கண்ணா .. இத்தினி யுகத்துல இப்படி ஒரு கேள்விய கேட்டதே இல்ல எனக்கு ஸ்ட் ரைக் ஆனதை சொல்றேன். இதுவும் மறுபடி மறுபடி நடக்கிற கதைதான். கடவுள்னு ஒரு பார்ட்டி இருக்காரே..அவரு சும்மா இல்லாம இந்த படைப்போட ஆரம்பத்துல ஆகாயத்துல இருந்து ஒரு மின்னல் வடிவமெடுத்து கடலுக்குள்ள பாய்ஞ்சாரு.”

“என்ன சார் திடீர்னு அம்புலிமாமா ரேஞ்சுக்கு போயிட்டிங்க”

“சரி முதல்வரிய விட்டுரு அடுத்த வரிய பாரு முதல்ல ஒரு செல் அங்கஜீவி ஒன்னு உருவாச்சு. அது கொழுத்து ரெண்டா பிரிஞ்சது. ரெண்டு நாலாச்சு. ஒரு செல் இன்னொரு செல்லை பிரதியெடுக்கிறப்ப எர்ரார் வந்து புது ஜீவராசி ஏற்பட்டுச்சு. இப்படியே குரங்கு வரை வந்துது. குரங்குல இருந்து மனுஷன் வந்தான். “

“இதையெல்லாம் டார்வின் சொல்லியிருக்காரே”
“சொல்லட்டுமே.. நானும் ஒரு தரம் சொல்றேன்”
“சன் டீவில இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையானு பழைய படத்தை போட்டு அறுக்கிறாப்ல”

“இல்லே கண்ணா இது ரீ மேக்னு வச்சுக்கயேன்”

“ஒழியட்டும் சொல்லுங்க”

“இத்தினி புது ஜீவ ராசி வந்தாலும் தான் ஒரே உயிரா/ஒரே உடம்புலருந்த ஞா. மட்டும் செல் காப்பி காரணமா அப்படியே தொடர்ந்து வந்தது. தான் ஒரே உயிரா/ஒரே உடம்புல இருந்தப்ப “போட்டி கிடையாது, அபத்திரம் கிடையாது, கம்யூனிகேஷன் ப்ராப்ளம் கிடையாது, காலம் கிடையாது, தூரம் கிடையாது.. இதனால வர்ர டென்ஷன் கிடையாது வாழ் நாள் முழுக்க நிம்மதி நிம்மதி நிம்மதி இது தவிர வேறில்லைங்கற நினைவும் , மறுபடி அந்த நிலைய அடையனுங்கிற துடிப்பும் ஒவ்வொரு ஜீவ ராசிலயும் இருக்கு”

“எப்படி சொல்றிங்க”

“மனுஷன் ஏன் கொலை பண்றான் , ஏன் தற்கொலை பண்றான் , ஏன் தண்ணி போடறான் , குடலை எரிக்கிற மிளாகா பஜ்ஜி சாப்பிடறான் . ஏன் உன் ப்ளாகை கூட படிக்கிறான். சாகனுங்கற வெறி. எதுக்கிந்த வெறி . தன் உடலை உதிர்க்கனும். ஒரே உயிரா ஒரே உடலா மாறனுங்கற வெறி”

“தபார்ரா இது ஏதோ புதுசா இருக்கு “

“என்னை பேச விடு இல்லேன்னா ஃப்ளோ கட்டாயிரும். ஒரு தமாசு என்னா தெரியுமா மனுஷன் மட்டுமில்லே இந்த ஒட்டு மொத்த இயற்கையே ஓருடல் ஓருயிரா தான் இருக்கு. நம்ம எல்லாரையும் , இந்த படைப்பையும் உள்ளடக்கின kaalapurushan it self GOD

இளமையின் இன்னிசை

உயிர்திரிக்கு வைக்கப்பட்ட நெருப்பு உயிர் குழி நோக்கி விரைகிறது
பாதி வயசு போயாச்சு
மீதி வயசு பாஞ்சாலி அரை சேலையாச்சு
அறியாமையும், அந்திச்சுகம் குறித்த அறிவுடைமையும்
பாதி ஆயுளை பருகியிருக்க
மரணத்தின் மணியோசை கேட்காவிடிலும்
இளமையின் இன்னிசை தேய்ந்து வருகிறது
காலனின் கருப்பு வாகனம் எனை நோக்கி பாய்ந்து வராவிடினும்
அரசு இயந்திரமாக வேனும் எனை நோக்கி நகர்வதை உணரமுடிகிறது

அறியாமை அரசாண்ட காலத்தில் கேள்விகளே இல்லை
பின் கேள்விகளே வேள்விகளாக நிம்மதி நிவேதனமாகி அதுவே கிடைத்தது
அவிர்பாகமாய்
அந்தி சுகம் குறித்த அறிவுடைமை மன முடிச்சுக்களில் இருந்து காத்திருப்பினும்
மரண முடிச்சை அவிழ்க்க கற்பிக்கவில்லை.
ஒரே கதை பாத்திரங்களும் அஃதே
அவற்றை ஏற்போரே வேறு
முதுகிழவனின் புலம்பல் போலே இதில்
இல்லையொரு மாற்றம்

ஏடெடுத்து பாடனுமோ பஞ்சப்பாட்டுதனை
ஓடெடுத்து வந்த சிவன் சீவன் குளிர்ந்திடவே
பசி தீர்த்த பாவையே
நின் மகளாம் மலர் மகளின் அருளெனக்கு தேவையே
நான் கேட்டு மறுத்ததில்லை என்றேனும் நீயே
நீ தரும் வரை பொருத்ததில்லை நானே
ஏனிந்த விளையாட்டு
எனை வளைத்துவிட்ட வறுமை தனை வாலை நீ வாட்டு
சங்கமேந்தும் வைஷ்ணவி நின் சாங்கத்தியம் கிட்டி விட்டால்
முடவனும் வென்றிடுவான் கைப்பந்து ஆட்டத்தில்
பாற்கடலில் பர்த்தாவின் பதம் பற்றும் பாவை பார்வை
பட்டவுடன் வெல்வானே
நொண்டியும் ஓட்டத்தில்

கையிருந்தும் முடமானேன்
உயிர்ப்பிருந்தும் ஜடமானேன்
காசு பணம் இல்லாது ஏசு ஜனம் பெருத்தாச்சு
பொன் மகளே பொறுமை விடு
பொறுக்கும் வரை பொறுத்தாச்சு
என்னிடத்தில் உண்டன்றோ
உனக்கோர் ராச பாட்டை
நேர் வழியில் சேர்ந்திடலாம்
நேர்மையாளர் பணப்பையில்
குறுக்கு பாதை குறுகலாமே
வழியெங்கும் நரகலாமே
அம்மா நான் ஏதுமில்லை
எனக்கிரு காதுமில்லை

ஊருலகம் பேசட்டும்
கல்லெடுத்து வீசட்டும்

நீ உண்டு நின் அருள் உண்டு
அது நீங்கிய கணம் தானே மனம் நிறைய மருள் உண்டு
அம்மா நான் கொதிக்கின்றேன்
என் பாட்டை பண்ணிதிலே பாங்குறவே பதிக்கின்றேன்

முன்னம் ஒரு தினமே அன்னையுனை போற்றிட்டேன்
பாமலை சாற்றிட்டேன்
ஆண்டிரண்டு போன வழி எனக்கின்னும் புரியலை
அன்றெழுந்த கோட்டை தானே இன்று வ்அரை சரியலே
அகழி வற்றியாச்சு
முதலைகள் செத்தாச்சு
மதில் சுவரே பிளக்குதடி
கோட்டை கதவிரண்டும் சன்னமாய் உளுக்குதடி

அம்மா நின் விழி மலர்ந்தால்
என் பொழுதுபுலர்ந்திடுமே
என் வறுமை நிலை மாற்றிவிடு இக்கணமே
நின் பாச பார்வை மாறலாமோ ஓர் கணமே
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் ஹ்ரீம் நமஹ
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் ஹ்ரீம் நமஹ
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் ஹ்ரீம் நமஹ

சுய இன்பம் உடலுறவு வித்யாசம்

சுய இன்பம்:
தன் கையே தனக்குதவி என்பதான வாழ்வாகும். சிலர் கண்டதையும் கருவிகளாக்கிக்கொள்வதும் உண்டு . இவை இன உறுப்பு மட்டுமல்லாது உயிருக்கே ஆபத்தாகவும் முடிவதுண்டு. உம்: பெண்கள் டெஸ்ட் ட்யூபை கூட உபயோகிக்கிறார்களாம். ஆண்கள் சுவற்றில் ஓட்டை போட்டு கூட முயல்வதுண்டு. சுய இன்பம் மனிதர்களை ஒருவித கழிவிரக்கம், குற்ற மனப்பான்மை போன்றவற்றிற்கு ஆளாக்குகிறது.உலகில் மற்ற அனைவரும் எடுக்க கூட நாழியில்லாது அனுபவிப்பதாகவும் தாம் மட்டும் இப்படி அல்லாடுவதாகவும் தன்னிரக்கம் ஏற்படும். மேலும் சில உதவாக்கரை புத்தகங்கள் ,உபதேச மஞ்சரிகள் காரணமாய் விட்டொழித்துவிட வேண்டும் என்ற ஆவேசமும், விட முடியாத கையறு நிலையும் இரட்டை மனப்பான்மையை வளர்க்கும். தன் மீதே தனக்கு கோபம். அந்த கோபம் சமூகம்,பெற்றோர் , காதலர்கள் தம்பதிகள் மீதும் திசை திரும்புவதுண்டு. சுய இன்பம் காண்பவன் வளர்ப்பு சூழல், ஜீன் கள் வழி நடத்துவதை பொறுத்து சேடிஸ்டாகவோ, மசாக்கிஸ்டாகவோ மாறிவிடுகிறான்.
சேடிஸ்டாக மாறினால்:
1.பெண்ணை வெறும் துளையாக பார்க்கும் மனப்பான்மை ஏற்படும்
2.காதலை பிரிப்பான்
3.தம்பதிகளை பிரிப்பான் (தன் பெற்றோரையும் கூட)
மசாக்கிஸ்டானால்:
1.உடலுறவே வீண் என்ற முடிவுக்கு வருவான். திருமணமானவர்கள் எல்லாம் பாவிகள், பெண்கள் எல்லாம் அழுக்கானவர்கள் சுய இன்பம் அனுபவிப்பதே ஆரோக்கியம் , ஆபத்தற்றது போன்ற எண்ணங்களை வளர்த்துக்கொள்வான்
2.பிறர் விஷயத்தில் மட்டும் காதலுக்கு தூது செல்வான். நண்பர்களுக்கு அல்லையன்ஸ் பார்ப்பான். திருமண வேலைகளை இழுத்துப்போட்டு செய்வான்

இரண்டு பிரிவினரும்:
பெண்ணை புரிந்து கொள்வதில் தோற்றுப்போகிறார்கள். பெண் ஒரு மனுஷி. அவளுக்கும் ஒரு மனம் உண்டு. விருப்பம் உண்டு. லட்சியங்கள் உண்டு. என்ற எண்ணம் வருவது கடினம்.

ஆண்டுக்கணக்காய் தொடரும் சுய இன்பங்களில் மற்றொரு சிக்கலும் இருக்கிறது. இதில் உச்சம் பெற அடுத்தவரின் ஒத்துழைப்பென்ன, அடுத்த ஆசாமியே தேவையில்லைஅடுத்தவரின் உச்சக்கட்டத்துக்காக தன் . உச்சத்தை தள்ளிப்போடவோ, அவசியமில்லாது போகிறது.
இதனால் இவர்கள் சுய நலமிகளாகவும், சமூக உணர்வுகள் அற்றவர்களாகவும், இன்ட்ராவர்டுகளாகவும் மாற வாய்ப்பிருக்கிறது.

மேலும் இவர்களில் நிறையபேர் டிப்பெண்டென்டுகளாகவோ அ மேன்சன் ஹவுஸ்களில் அறை பகிர்ந்து வசிப்பவர்களாகவோ இருக்கவே வாய்ப்பு அதிகம். எனவே ரகசியம் காக்க வேண்டியிருக்கிறது. அவசரமாக முடிக்க வேண்டியிருக்கிறது. பலர் கழிவறைகளை கூட பயன் படுத்த வேண்டியிருக்கிறது. துரித கதியிலான உச்சத்துக்கு பழக்கப்பட்டுவிடலால் துரிதஸ்கலிதத்துக்கு இலக்காகி விடுகின்றனர். நாளை திருமணமானால் மனைவியை திருப்தி படுத்த முடியாது அவஸ்தை படுகிறார்கள். ( ஞா.படுத்திக்கங்க 7 /23 )

காம சுகம் என்பது உடலின் ஒவ்வொரு செல்லும் அனுபவிக்க வேண்டிய விஷயம். சுய இன்பத்தின் போது இதர உறுப்புகள் அதை எள்ளளவும் அனுபவிப்பதில்லை. காம உணர்வுகள் இன உறுப்பையே மையமாக கொண்டுவிடுகின்றன. நகரப்பேருந்துகளில் முட்ட கொடுப்பவனெல்லாம் இந்த ஜாதிதான்.

சுய இன்பம் கூடவே கூடாதா?
காமம் தலைக்கேறி கற்பழிப்புக்கோ,கள்ள உறவுக்கோ, தகாத உறாவுக்கோ வழி கோலும் வாய்ப்பிருக்கும்போது அணை உடையும் நிலையில் காவிரி நீரை திறந்து விடும் கர் நாடக அரசை போல் திறந்து விடலாம். உள்ளடக்கி வைக்கப்பட்ட காம எண்ணங்கள் சாகசங்களுக்கும் ,போதைக்கும், குற்றத்துக்கும்,வன்முறைக்கும், தூண்டும் போது ஒரு அவுட் லெட்டாக , எமர்ஜென்சி கேட்டாக உபயோகிக்கலாம். அல்லது அவரவர் உடல் நிலையை பொருத்து மாதம் ஓரிருமுறை எந்த வித குற்ற உணர்ச்சியுமின்றி, நிதானமாக , ஆழமாக இதில் ஈடுபடும்போது உடலுறவு போலவே இதுவும் பயன் தரும்.

இவர்களில் அதிக சதவீதம் முழுதாய் ஒரு பெண் வந்து நான் உனக்கே என்றால் ” நண்டு பிடிக்க போன ஐயர் மாதிரி ” தடுமாறிவிடுவார்கள்

ஆழமான உடலுறவு விதியை வெல்லும்

செக்ஸ் பற்றிய விழிப்புணர்ச்சி,புரிதல் ,சூட்சுமம் தெரிந்தால் உங்கள் வாழ்க்கையின் பாதையை /விதியை உடைத்து திருப்பலாம் , லோகாயதமாக மட்டுமல்லாது ஆத்யாத்மிகமாகவும் வாழ்வாங்கு வாழலாம் என்பதை இந்த பதிவில் விவரிக்க உள்ளேன். பொறுமையாக படித்தால் இன்றோடு உங்களை பிடித்த பீழை ஏழையாயிரும். உங்கள் தலையெழுத்தே மாறிப்போயிரும்.

இந்த படைப்போ இந்த உலகமோ , நாமோ இல்லாத காலமே கிடையாது. புனரபி மரணம் புனரபி ஜனனம். இன்று விஞ்ஞானிகள் வரையறுத்திருப்பது ஒரு பிக் பாங்க் மற்றும் ஒரு ஸ்ருஷ்டியையே. ஆனால் ஆயிரக்கணக்கான முறை இந்த படைப்பு சுருங்கி விரிந்திருக்கிறது. இதற்கு ஒரு அஜெண்டா இருக்கிறது. விதியற்ற விதி என்று சொல்லலாம். ஆண்டவன் என்றால் இது கடந்த காலத்தை ஆண்டவன் என்ற பொருளை தருகிறது. அப்போ இப்ப ஆள்றது யாருனு கேட்கிறிங்க இல்லியா ? நம்மை ஆள்றது வானவெளியில் நிறைந்துள்ள நம் மூதாதையரின் எண்ணங்களே.

இதை நிரூபிக்க ஒரு சின்ன சர்வே செய்யுங்க. உங்களுக்கு தெரிஞ்சு நாசமாகிப்போன 10 குடும்பங்கள் கதைய பாருங்க. அவங்க முன்னேறியதற்கான காரணங்களை பட்டியல் போடுங்க. அப்படியே ஈன நிலையிலிருந்து முன்னேறிய 10 குடும்பங்களோட பட்டியலை போடுங்க. அவங்க முன்னேற்றத்துக்கான காரணங்களை பட்டியல் போடுங்க.

கெட்டுப்போன குடும்பங்கள் முன்னேற பத்து பனிரண்டு காரணங்களே இருப்பதை போல் , வசதியான குடும்பங்கள் கெட்டு நலியவும் ஒரு பத்து பனிரண்டு காரணங்களே காரணங்களாய் அமைந்ததை பார்க்கலாம்.

நம் தலைமுறையில் வாழ்ந்து /கெட்டு செத்துப்போனவர்களுடைய எண்ணங்கள்/ஆவிகள்னு கூட வச்சிக்கலாம் .இவர்கள் தமது வமிசத்தில் அடுத்து பிறப்பவர்களின் வாழ்வுகளை அம்பயர் கணக்காய் பார்த்துக்கொண்டே இருக்கின்றன. இவற்றில் கெட்டழிந்தவையும் உண்டு. வாழ்வாங்கு வாழ்ந்தவையும் உண்டு.

ஒருத்தன் நாசமா போறதுனு முடிவு பண்ணி ( இது அவன் புத்திக்கு உறைக்காது) முதலடி எடுத்து வச்சிட்டான்னா அவனை க்ளைமேக்ஸுக்கு கொண்டு சேர்த்து பிச்சை எடுக்க வைக்கிறது கடந்த பிறவியில் கெட்டழிந்த ஆத்மாக்களின் எண்ணங்கள் அ மனிதர்களின்ஆவிகளே.

அதே மாதிரி ஒருத்தன் உருப்படறதுனு முடிவு பண்ணி முதலடிய எடுத்து வச்சிட்டான்னா அவனை க்ளைமேக்ஸுக்கு கொண்டு சேர்த்து வெற்றி சிகரத்தை அடைய வைக்கிறதும் அவன் வமிசத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்த மூதாதையரின் எண்ணங்கள் அ ஆவிகளே.

இங்கே உங்களுக்கு நல்லா புரியணுங்கறதுக்காக முன்னோர், மூதாதையரை மட்டும் குறிப்பிட்டேன். (இந்த பாதிப்பு ஜீன் களின் வழி நடக்கிறதுனு சொல்லிரலாம்) ஆனால் அனுபவத்துல பார்க்கும் போது வாழ்வாங்கு வாழ்ந்தவனுடைய ஆத்மாவுக்கு வசதியா எவனும் அவனோட வம்சத்துல பிறக்கலைன்னா அவன் ஆத்மா வேறு குடும்பம்/வேறு ஜாதி/வேறு மதம்/வேறு நாட்டை சேர்ந்தவைனையும் தேடிப்போயிருது.

இதையெல்லாம் படிச்சா விட்டலாச்சாரியா படம் மாதிரி இருக்கும் ஆனால் இதெல்லாம் நிஜம். ஒரு கட்டத்துல ஒரு ….ரும் தெரியாது அறியாமையில்ம்,அகங்காரத்துலயும் அழிஞ்ச நான் ( அதே ஆசாமி, அதே ஜீன், அதே படிப்பு ,அதே ஜாதகம்) சரியா 19 வயசுல பாதை மாறி (வாதைகள் பட்டு) அடுத்த 19 வயசுல படைப்பின் மர்மங்களை கூட இரண்டாம் வாய்ப்பாடு மாதிரி சொல்லமுடியுதுன்னா நான் சொன்ன தியரிக்கு இதைவிட ஆதாரம் என்ன தேவை.

என் பிறந்த தேதி 7/8/1967 இதில் உள்ள இலக்கங்களை கூட்டினா 38 வரும் . இதில் பாதி 19 . இந்த விதிய உங்க விஷயத்துல அப்ளை பண்ணி பாருங்க. உங்க முடிவை மறுமொழியா போடுங்க பார்ப்போம்.

நாம் இதுவரை இந்த பிறவியிலான நம் வாழ்க்கையை நமது முன்னோர் மூதாதையரின் எண்ணங்கள் அ அவர்தம் ஆவிகள் பாதிக்கின்றன என்பதை பார்த்தோம்.

உங்கள் ஒட்டு மொத்த வாழ்வையும் உங்கள் பூர்வ ஜென்ம பாப ,புண்ணியங்கள், ஜாதகம், வாஸ்து, ஜீன் கள், முன்னோர் மூதாதையரின் எண்ணங்கள் அ அவர்தம் ஆவிகள், சுற்றுப்புற சூழல் இப்படி பல விஷயங்கள் பாதிக்கின்றன. இந்த பட்டியலில் மிக முக்கியமான அம்சத்தை வேண்டுமென்றே குறிப்பிடவில்லை. அதுதான் உங்கள் செக்ஸ் லைஃப். செக்ஸுக்கு அதிபதியான சுக்கிரன் ஆண்டின் பத்து மாதங்கள் உங்களுக்கு அனுகூலமாகவே இருக்கிறார். மேலும் நாம் 100 சதவீதம் பரிபக்குவமடைந்து விட்ட மகாத்மாக்கள் இல்லை. நமது ஆடைகளுக்குள் மிருகமாக வே இருக்கின்றோம். எனவே செக்ஸ் என்பது நம்மை 99 % வரை பாதிக்கிறது. செக்ஸுக்கு தகுதியான உடல் வலிமை, உள்ள் இளமை இருக்கும் வரை இந்த சதவீதம் மாறுவதில்லை.

இதை இயற்கை கொடுத்த சாபமாக பாவிப்பதைவிட சாபத்தை வரமாக மாற்றிக்கொள்ள முயற்சிக்கலாமே. அர்ச்சுனனுக்கு ஊர்வசி கொடுத்த சாபம் அவனது அஞ்ஞாத வாசத்துக்கு உதவியது. அதை போல் மிருக நிலையில் உள்ள நமக்கும் 99 சதவீத பாதிப்பு வரமாக உதவ வாய்ப்பிருக்கிறது.

கண்ணதாசன் “ராத்திரிகள் வந்து விட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும்” என்று எழுதியிருப்பதை எண்ணிப்பாருங்கள். அவர் வர கவி. இயற்கையின் ரகசியங்கள் அவர் கவிதைகளில் கொட்டிக்கிடக்கின்றன. உடலுறவு எண்ணம் ஏற்பட்ட பிறகு, அ உடலுறவுக்கு இறங்கி விட்ட பிறகு முன் சொன்ன பூர்வ ஜென்ம பாப ,புண்ணியங்கள், ஜாதகம், வாஸ்து, ஜீன் கள், முன்னோர் மூதாதையரின் எண்ணங்கள் அ அவர்தம் ஆவிகள், சுற்றுப்புற சூழல் இப்படி எதுவுமே பாதிக்காத நிலை ஏற்படுகிறது.

இதற்கு காரணம் அந்த நேரத்தில் மனித மனம் ஒரு புள்ளியில் குவிவதே. இந்த உடலுறவு நேரத்தை நீட்டித்து தம்பதிகள் ஒருவரை ஒருவர் கிளர்ந்தெழச்செய்து தம் உச்சத்தை தள்ளிப்போட்டு ஆழமாக செல்லும்போது
அங்கு சக்தி வட்டம் தோன்றுகிறது.

நீளவாக்கில் ஓடும் மின்சாரத்தை விட சுற்றி சுற்றி பாயும் மின்சாரத்துக்கு சக்தி அதிகம் . மோட்டார்களிலான வைண்டிங்கை பார்த்தால் இது புரியும். மேலும் உடலுறவில் ஆழம் அதிகரிக்கும்போது எண்ணீக்கையும் நாளடைவில் குறைந்து விடும்.

இதில் ஆழ திருப்தியுற்ற தம்பதிகளின் மனம் நன்றியுணர்வால் பொங்குகின்றன. பின் கலர் டிவியா/ப்ளாக் வைட் டிவியா போன்ற அம்சங்கள் இரண்டாம் பட்சமாகிவிடுகின்றன. முடிச்சுகள் அவிழ்ந்து போகின்றன. செல்ஃப் பிட்டி காணாமல் போகிறது. துக்கத்தில் இருப்பவன் அடுத்தவரை துக்கப்படுத்தி பார்ப்பான். சந்தோஷத்தில் உள்ளவன் பிறரை சந்தோஷ ப்படுத்தி பார்ப்பான். ஆழமான செக்ஸ் லைஃப், குடும்ப வாழ்க்கையையும். குடும்ப வாழ்க்கை சமூகத்தையும் மாற்றும். அரசியல் எல்லாம் பளிங்குமாதிரி ஆகிவிடும். ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். அழுத்தி வைக்கப்பட்ட செக்ஸ் கோரிக்கைகளே வன்முறையாகவும், லஞ்ச லாவண்யம்,பதவி வெறி இத்யாதியாக மாறுகிறது. வரதட்சிணை கொடுமைக்கு கூட இதுவே காரணமோ என்னவோ? எப்படியும் நீ அதுக்கு லாயக்கில்லை பணமாவது வாங்கிட்டு வா என்ற மனோதத்துவம் இதன்பின் இருக்கலாம். இல்லத்தரசிகள் கணவர்கள் ஃப்ரிட்ஜ், கலர் டிவி கேட்டு குடைச்சல் கொடுப்பதற்கு பின்னும் “எப்படியும் நீ அதுக்கு லாயக்கில்லை ..இதையாவது வாங்கிக்கொடு” என்ற மனோதத்துவம் இருக்கலாம்.

எனவே ” ஆதலினால் காதல் செய்வீர்”