காதல் பிறக்க சரியான இடம்

மனம் என்றொரு வெங்காயம் – இரண்டு 

 காதல் பிறக்க சரியான இடம்…   இந்த பிரபஞ்சம் முழுவதும் எண்ணங்கள் நிரம்பியிருகின்றன என்றும்  பார்த்தோம். கடற்கரை, கல்யாண மண்டபம், பக்கத்துக்கு வீடு, மொட்டை மாடி, நிறுவனத்தில் இருக்கிற லிப்ட்,  சாலையில் வேகமாக இரு சக்கர வாகனம் நாம் மேலாக இடித்தபிறகு… பேருந்து, இப்படி நிறைய இருக்கிறது. இடம் முக்கியமானால் , அப்படி ஒரு இடம் இருந்தால் எல்லோருமே அங்கே போய் நின்று விடுவோம். (இப்பொழுது கூட)

மனத்தில் இருக்கிற காதல் முக்கியம்.  கடற்கரைக்கு உங்கள் மனைவியை அழைத்துசெல்லுங்கள்… புதிதாக காதலிக்க தோன்றும். வானில் முழு நிலவை பார்த்துக்கொண்டே இருங்கள்… காதலின் புது விஷயங்கள் தோன்றும். நீங்கள் பார்க்கும் அதே வேளையில் எத்தனை ஆயிரம் காதலர்கள் பார்த்து கொண்டிருப்பார்கள். அவர்களின் எண்ணங்களை வான் நிலவு உங்களிடம் பாய்ச்சலாம் அல்லவா?

 அடுத்த முறை காதலை சொல்லும் பொது சரியான நபரை மட்டுமல்ல, இடத்தையும் தேர்ந்து எடுங்கள் .

நாம் சுவாசிக்கிற காற்று போல, எங்கெங்கும் மனதின் எண்ண அலைகள் மிதக்கின்றன. நமக்குள் ஏற்படுகிற வெற்று  இடத்தில்  தானாகவே வந்து அமர்கின்றது. தனக்குள்ளே பிறந்த ஓன்று வெளிச்சென்று மீண்டும் நமக்குள்ளே வலிமையோடு வந்து அமரும்.

கீழே கிடந்த காசை ஏன்டா எடுத்தேன் என்று எப்போதாவது நினைத்து இருகிறீர்களா?
கண்டிப்பா யாராவது வந்து காப்பாதுவங்கன்னு  நினைச்சேன் அதே நடந்தது….

நல்லவருக்கு நல்லவன் உதவுவதும், கெட்டவனுக்கு கேட்டவன்  உதவுவதும் இதன் அடிப்படைதான்.  அந்த அடிப்படை நீங்கள்தான்.  வெங்காயத்தை உறிக்க, உறிக்க வெங்காயம் தான் வெளித்தெரியும்… உங்கள் மனதை உறிக்க, உறிக்க நீங்கள்தான் வெளிவருவீர்கள்… யாரேனும் ஒருவரோடு பேசிகொண்டிருக்கையில் முதல் 10 நிமிடம் பொது   விசயமாகவே   பேசப்படும்,  அப்படியே காலம் கடக்க ஒரே விஷயத்தை  இருவருமே   பேசிக்கொண்டிருப்பதை   காண முடியும்.

அதோடு நீண்ட பேச்சின் உடே சில போது விஷயங்கள், பேசிக்கொண்டிருக்கிற அந்த இடத்தின் பொதுவான தன்மை கலந்த விஷயங்கள் வரும். சில வெட்டு குத்துக்கள் அதே இடங்களில் நடப்பதை உணர முடியும். சில நட்பு அதே இடங்களில் உருவாக கூடும். சில காதல் திடீரென அந்த இடத்தில் மட்டும் பிறக்க கூடும். சில கல்யாண நடவடிக்கைகள் அங்கே முடிவு செய்யப்படும்.

சில சேவல் பண்ணைகளில் ஒரே நேரத்தில் உற்சாக விழாவும், பெண்கள் ஹாஸ்டல்களில் ஒரு சேர விலக்கம் ஆவதும் இப்படித்தான். சில எதிர்பாரத விஷயங்கள் நடக்கும் போது ” எப்படி இது தோணிச்சுன்னு தெரியல்ல, எல்லாம் சுமுகமா நடந்தது” என்பதெல்லாம் நம்மை சுற்றி இருக்கிற எண்ணங்கள் தன் இயக்கத்தை உணர வைக்கின்றன.

மனிதனின் இயக்கம் மனம், மனதின் இயக்கம் எண்ணம், எண்ணத்தின் இயக்கம் மனிதனின் செயல்பாடு. இப்பொழுது ஒரு வட்டம் வந்து விட்டது. 


ஒவ்வொரு மனிதனுடைய எண்ணம், சொல், செயல் எல்லாமே மனதிலே அடக்கம். மனமே மனிதனின் அகமும் புறமும்.  அவனின் தோற்றம் மட்டுமே அவனை சொல்லுவதில்லை. ஒருவனை பற்றி, அவனை உரித்து பார்க்கவேண்டுமானால் அவனின் சில சொல், செயல் கவனித்தால் போதும்.

ஆக, நாம் சரியான  அலை வரிசையில் இயங்க வேண்டுமானால் நாம், நம்மை செம்மை படுத்தியாக வேண்டும்.

ரொம்ப சீரிஸ் பேசிட்டோம்… கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணுவோம்…

மருத்துவமனையில்
செவிலி: ஒரு அரை மணி நேரம் தாமதமா வந்திருந்தா  நோயாளியை பொழைக்க வச்சிருக்கலாம்…
ஒருவர்: எப்படி சொல்றிங்க?
செவிலி : டாக்டர் வீட்டுக்கு போயிருப்பார்

கடற்கரையில்
காதலன்: டியர்… எனக்கு ஆச்சரியமா இருக்கு, எனக்கு வேலை  இல்லன்னு தெரிஞ்சும் எப்படி உங்க வீட்ல கல்யாணத்துக்கு ஒத்துகிட்டாங்க?
காதலி: பையன் என்ன பன்றாணு கேட்டாங்க… வயித்தில எட்டி ஒதைக்கிரான்னு  சொன்னேன்

🙂

மனம் என்றொரு வெங்காயம்

மனம் என்றொரு வெங்காயம்

நமது உடலுறுப்பு அனைத்தையும் பெயரிட்டு, அதைக்கண்டும், சரி செய்தும் வருகிறோம். ஆனால் மனம் என்ற ஒன்றை எப்படி குறிப்பிட முடியும்? மனதை பறிக்கிறாள் என்று சொல்லுகிறோமே… அல்லது சொன்னோமே ;)அப்படியாக பறிக்க கூடியதா, கசக்கி பிழியக்கூடியதா? அல்லது இல்லாத ஒன்றா? இருக்கிற ஒன்றா?

எனக்குத் தெரிந்ததெல்லாம் மனம் ஒரு வெங்காயம்… அவ்வளவுதான்…

என்னடா…வெங்காயம்? என கேள்வி பிறக்கிறதா?

ஆமாங்க… வெங்காயம் தான்… வெங்காயத்தை உறிக்க, உறிக்க வெங்காயம் தான் வெளித்தெரியும்… உங்கள் மனதை உறிக்க, உறிக்க நீங்கள்தான் வெளிவருவீர்கள்…

நமக்குள் ஏற்பட்ட, ஏற்றப்பட்ட அடுக்கடுக்கான நினைவுத் தொகுப்புகள்… அது தன்னாலும், பிறராலும் செய்யப்படலாம். காலம் கடந்தோ, இந்த கணத்திலோ, தற்காலிகமாகவோ நிகழ்த்தப்படலாம்… இந்த நிகழ்வின் காரணகர்த்தாவே மனம் என்று அழைக்கப்படுகிறது.

நீதான் செய்கிறாய் என்று சொன்னால் நான் (நான்தாங்க… நீங்க இல்லை) தன்முனைப்பாக செயல்பட்டு விடுவேன் என்பதனாலேயே மனம் என்ற ஒரு குழுஉரிச்ச சொல்… மூலமாக நமக்கு உணர்த்தப்பட்டு வருகிறது…

நாம் செம்மையானால், மனமும் செம்மையாகும்.

திரு. முருகேசன் தனது பதிவில் சொல்லியிருக்கிறபடியே இந்த பிரபஞ்சம் முழுவதும் எண்ணங்கள் நிரம்பியிருகின்றன. நாம் புதிதாக யோசிக்க ஏதுமில்லை… இருப்பதை வானொலி போல ஒத்த அலை பெற்று செயல்படுகிறோம்…

ஒரு பரிசோதனை….. அப்படியே ஒரு நிமிடம் யோசியுங்கள்… இதை படித்த பிறகு…
இப்பொழுது கவிதை07 படித்துக்கொண்டிருப்பதை சற்று விலக்கி…

1) இப்பொழுது நான் என்ன விரும்புகிறேன்?
2) எனக்குள் என்ன யோசனை ஓடிக்கொண்டிருக்கிறது?
3) எதன் பொருட்டு இந்த யோசனை?
4) காரணம் என்ன?
5) இது, இந்த யோசனை என்னால் இயக்கப்பட்டதா?

சரியான பதிலை பின்னூட்டத்தில் தரவும்…

விகடன் நிருபர் என்னை பேட்டி கண்டாரோச்!

என்னங்கடா இது நம்ம முருகேசனோட கொசுத்தொல்லை தாங்கமுடியாம விகடன்லருந்து நிருபரை அனுப்பிட்டாய்ங்களானு நினைச்சு இந்த பதிவை காண (அதாங்க படிக்க) வந்த உங்களுக்கு நிச்சயம் ஏமாற்றம் தரமாட்டேன். விகடன் நிறுவனம் நிருபரை என்னிடம் அனுப்பியது நிஜம்.அவர் பேட்டிகண்டது நிஜம். அதைப்பற்றித்தான் இந்தபதிவே

பீடிக்கட்டு,சிகரட் பாயிட்டு மேல வெளியிடறமாதிரி தமிழ் பத்திரிக்கைகள் மேலயும் எச்சரிக்கை வாசகம் வெளியிட வேண்டியது எத்தனை அவசியம்னு இந்த பதிவு சுட்டிக்காட்டும் .

பதிவுக்கு போகலாமா அதாங்க பதிவுக்கான மேட்டருக்கு ..

(மற்ற பத்திரிக்கைகள் எல்லாம் ஓக்கியம் ஒரு குளத்து நண்டு என்று கூறவில்லை. அவற்றையும் உப்பு மிளகாயை போட்டு கிண்டுவது விரைவில் நடை பெறும் . )

எந்த கதாநாயகன் எங்கே எந்த கதாநாயகியை எப்படி,எங்கே வைத்து  கவிழ்த்தான் என்ற அரிய செய்திகளை தரவே ஒரு தொடர் வருகிறது. (நல்ல காலம் எந்த ப்ராண்டு காண்டோம் உபயோகித்தான் போன்ற விவரங்களை தருவதில்லை. இன்னும் கொஞ்ச காலம் போனால் அவற்றையும் வெளியிடுவாய்ங்க போல .

தற்போது 43 வயது காரனாகிய நான் என் இளமையில் இது போன்ற பலான விஷயங்களை படிக்க சித்தூர் பஸ் ஸ்டாண்டின் இருட்டு மூலைகளிலான பங்க் கடைகளில் தேடுதல் வேட்டை நடத்த வேண்டியிருந்தது. ஆனால் இப்போ விகடன் குழுமம் இன்றைய தலைமுறைக்கு அந்த சிரமத்தை எல்லாம் கொடுக்கிறதில்லை.  அந்த தொடரில் வெளி வரும் அஜால் குஜால் வார்த்தைகளை எந்த பலான புத்தகத்திலும் நான் படித்ததில்லை. ரிப்போர்ட்டர்/உங்கள் ஹீரோ இப்படி தோடர் தலைப்பு வேறாக இருந்தாலும் உள்ளடக்கம் மட்டும் ஒன்னுதான்.

இப்படி ஒன்றல்ல இரண்டல்ல ஓராண்டு இதழ்களை என் முன் வைத்தால் ஆயிரம் விஷயங்களை முன் வைக்க நான் தயார். பதில் தர விகடன் குழுமம் தயாரா ?

அய்யய்யோ இம்சை தாங்கமுடியலை. மேட்டருக்கு வாங்க முருகேசன் .. என்ன பேட்டி எதைப்பத்தி பேட்டி இதானே உங்க ஃபீலிங் வந்தே உட்டேன்

என் ப்ளாகை படிப்பவர்களுக்கு இந்தியாவை வல்லரசாக்க நான் தீட்டியுள்ள ஆப்பரேஷன் இந்தியா 2000 பற்றி தெரிந்திருக்கலாம்.

இந்த திட்டத்தின் முழுவடிவத்தை ஒரு ஆடியோ கேசட்டில் பதிவு செய்து 1999 வாக்கில் ஆனந்த விகடனுக்கு அனுப்பினேன். ஏதோ 10 கோடி வாலிபர்களாம்/சிறப்பு ராணுவமாம்/கங்கை காவிரி இணைப்பாம்.. ஆ..மா நாட்டுக்கு ரெம்ப  தேவைன்னுட்டு  கிடப்புல போட்டுட்டாய்ங்க

நான் அந்த கேசட்டிருந்தால் வேறு யாருக்காவது அனுப்பலாமேஎன்ற உத்தேசத்தில் கேசட்டை திருப்பியாவது அனுப்பும்படி தபால் செலவுக்கு ரூ.10 எம்.ஓ அனுப்பினேன்.

இந்த சமயத்தில் அன்றைய என் பொருளாதார நிலைமையையும் சொல்லிரனும். அந்த கம்பெனி கேசட்டோட விலை 31 ரூபானு ஞா. ஏதோ பூர்வீக வீட்டை வித்து லட்ச ரூபா காசு வந்த தைரியத்துல ஆப்பரேஷன் இந்தியா2000 ஐ நாடறிய செய்ய என்னென்னமோ பண்ணி தொலைச்சுட்டு சோத்துக்கே ததிங்கணத்தோம் போடற நேரம் அது.

மறுபடி ஒரு வாக்மேன் வாங்கி மறுபடி ஒரு கம்பெனி கேசட் வாங்கி பதிவு பண்ணி இன்னொரு பத்திரிக்கைக்கு அனுப்பற அளவுக்கு வசதியில்லாத ஒரே காரணத்தால கேசட்டை திருப்பி அனுப்பசொல்லி எம்.ஓ அனுப்பினேன்.

ஆனாலும் விகடன் தரப்பிலிருந்து பதிலில்லை. இவிக அரசு இயந்திரத்தோட மெத்தனத்தை கிழிக்கிறாய்ங்க. கடுப்பாகி  காட்டமாக ஒரு போஸ்டு கார்டு எழுதினேன் . அது அந்த நாள்ள  ஆசிரியராக இருந்த திரு பாலசுப்பிரமணியன் கண்கள்ள  பட்டிருக்கு.

உடனே அவர் ஜே.வி.நாதன் என்ற நிருபரை என்னிடம் அனுப்பினார். வந்த ஜே.வி.நாதன் கேசட்டு ஓஞ்சு போனதை பற்றியும் அதை எப்படி காம்பன்சேட் பண்ணுவது என்பதை பற்றித்தான் பேசினார். அதில் என்ன பதிவாகியிருந்தது. அதற்கும் இந்த நாட்டிற்கும் என்ன சம்பந்தம் இதெல்லாம் டாபிக்ல வரவே இல்லை.

நான் காந்தி தாத்தா  டைப்ல  (மொக்கை பென்சில் ஞா இருக்கா) என் கேசட்டை எனக்கு கொடுக்கிற வழியப்பாருங்கப்பானு பேசிட்டிருந்தேன்.

வெளிய போய் யாரோடவோ ஃபோன்ல பேசினாரு. அப்புறம் பந்தாவாய் ஆப்பரேஷன் இந்தியா 2000  பத்தி பேட்டியெல்லாம் எடுத்தார் .

அப்புறம் என்னாச்சு ? ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ! விகடன் க்ரூப் பத்திரிக்கைகளுக்கு தலா ஒரு இதழோட விற்பனை அதிகரிச்சிருக்கும்.

நான் தான் மடையன் மாதிரி வாங்கி வாங்கி பார்த்துக்கிட்டிருந்தேனே.. வருசம் 1999ங்கோ. அப்பாறம் எப்பனா என் பேட்டியை  கேப் ஃபில்லிங்ல போட்டு விட்டுட்டாய்ங்களா தெரியாது.

உங்கள்ள யாருக்காச்சும் தெரிஞ்சிருந்தா சொல்லுங்கண்ணா..

டோண்டுவின் பத்தினி (?) கூச்சல்

ஒரு ஏரியாவுல ஒரு பலான பார்ட்டி வந்து சேர்ந்ததுனு வைங்க.  அதும்பாட்டுக்கு தொழில் பண்ணிக்கிட்டு போகாது. ஏரியால இருக்கிற  பொம்பளைகளோட நடத்தையையெல்லாம் ஓன் மேக்  லென்ஸ் வச்சு பார்க்கும்.  அய்யோ அய்யோ இந்த அ நியாயத்தை பாரேன் இந்த அக்கிரமத்தை பாரேனு கூச்ச போட்டுக்கிட்டே இருக்கும். இதைத்தான் சுருக்கமா பத்தினி கூச்சல்ங்கறது. இப்ப இது மேல பேட்டண்ட் ரைட் எனக்கே எனக்குத்தான்னு டோண்டு சார் கிளம்பியிருக்காரு

பார்ப்பனீயத்தை எதிர்க்கிற மத்தவுகளுக்கும் எனக்கும் ஒரு வித்யாசம் உண்டு. அது இன்னாடான்னா “ஒத்தனை ஜெயிக்க முடியலியா காப்பியடிச்சிரு”ங்கறது என் ஸ்டைல்.

ஜாதகப்படி, வாழ்க்கை முறையின் படி நானே ஒரு பிராமணந்தான். அதனால உங்க பப்பெல்லாம் வேகாது அய்யா!

பெரியார் சொல்வாரு “எங்கயோ குலைக்கிற நாய்க்கெல்லாம் நான் பதில் சொல்லமாட்டேன்னு”

நமக்கு அந்த ரேஞ்சில்லையே அதனால பதில் சொல்ல வேண்டியதாயிருக்கு. நீங்க போற போக்குல உச்சா அடிச்சிட்டு போயிட்டிங்க ஓகே. அட்லீஸ்ட் அதனோட லிங்கை எனக்கு அனுப்பியிருக்கலாம்.

மொதல் கடுப்பு இதான். அடுத்த கடுப்பு நீங்கல்லாம் மெத்த படிச்சவுக அறிவாளிங்க. நானெல்லாம் பிக்காலி. குன்ஸுல ( அண்டை வெளியின் அகன்ற பாத்திரத்து அமுதம்) காலத்த ஒட்டற பார்ட்டி  உங்களுக்கு  தெரியாதது என்ன?

டோன்டு டோன்டு தான் முருகேசன் முருகேசன் தான். நீங்க என்னை மாதிரி ரோசிக்க முடியாது. நான் உங்களை மாதிரி ரோசிக்க முடியாது.

என்னுது பண்ணையாள் மென்டாலிட்டி. “அய்யா வேட்டி கொடுத்தாரு ,சட்டை கொடுத்தாருன்னுட்டு அய்யாவுக்கு எது ஒன்னுன்னாலும் அரிவாள தூக்கிருவன். என்னை இந்த சனம் ஃபீட் பண்ணாய்ங்க. இவிக ரத்தத்தை,உழைப்ப எனக்கு கொடுத்து என் பசியாத்தினாய்ங்க.

உங்களாவா மாதிரி என் பார்ப்பன பாத்திரம் எனக்கு சுப்பீரியாரிட்டி காம்ப்ளெக்ஸை தரலை. இன்ஃபிரியரா ஃபீல் ஆனேன். என் வயித்த நிரப்பின இவிக வாழ்க்கைய வெளிச்சத்துல நிரப்பனும்னு துடிச்சேன்.

உங்களுது அசலான அய்யர் மென்டாலிட்டி. நீங்க உ.வ படமாட்டிங்க.  இருட்டை சபிப்பிங்க. அப்பாறம் உங்க வேலைய பார்த்துக்கிட்டு போயிருவிக. ஆனால் நான் என் கொழுப்பையெல்லாம் எடுத்து திரி போட்டு ஒரு விளக்கை ஏத்தி வச்சிருக்கேன்.

நான் என்ன சொல்லவரேன்னா உங்களுக்கு புரியாதப்ப – சீரியஸ்னெஸ் உறைக்காதப்ப அம்பேலுன்னுட்டு போயிரனும். அதைவிட்டுட்டு உங்க மேதைமைய ப்ரூவ் பண்ணிக்க என்னை மட்டம் தட்ட வேண்டிய அவசியமே இல்லை.

ஒரு சீனியர் ப்ளாகரா உங்களுக்கு என்னை விமர்சிக்க முழு உரிமை இருக்கு. ஆனால் அதை நேர்மையா செய்யனும். முதுகுல குத்த கூடாது.  உங்க ப்ளாக்ல கீழ்காணும் பத்தியோ அதற்கான லிங்கோ  வெளியிடப்பட்டிருக்கு

சித்தூர் சோசியன் ஒருத்தன் இருக்கான்… அவன்கூட இந்த மாதிரி பல திட்டங்கள் வச்சிருக்கான்னு அப்பப்போ சனாதிபதிக்கு எல்லாம் தந்தி அடிப்பானாம். அதுல எதையாவது படிச்சிட்டு இவன் ஒரு மறை கழண்ட கேஸுன்னு நினைக்காதவங்க கைதூக்குங்க பாப்போம். பொது புத்தி அப்படித்தான் நினைக்கும். அது மாதிரி பலருக்கும் பல நினைப்பு வரத்தான் செய்யும்.. உடனே ஓவரா அதுக்கு செண்டிமெண்ட் பீலிங் கொடுக்காதீங்க.

இது ஒரு பெரிய மன்சன் பண்ற வேலையா?  ஏதோ ஒரு நாய் எங்கயோ குலைச்சிட்டுத்தான் இருக்கும்னு விட்டுர நான் என்ன பெரியாரா? சிறியன்.

//இம்மாதிரி பார்ப்பன குசும்பு என பொதுப்படையாக லேபல் போட்டு என்ன சாதிக்கப் போகிறீர்கள்?//

பாஸ்!
ஓஷோ சொன்ன மாதிரி சாவியையே பூட்டா மாத்திட்டிங்களே அதுக்குண்டான கஜானாவை கண்டுபிடிச்சு கொள்ளையடிச்சு ராபின் ஹுட் மாதிரி என் சகோதரர்களுக்கு வாரி வழங்கபோறேன்.

வைக்கோல் போர் மேல படுத்த நாய் மாதிரி கிடக்கிற உங்க இனத்தை விரட்டி ஞான செல்வத்தை பகிரப்போறேன்.

நாணயஸ்தன் வரான் இரும்பு பெட்டிய பூட்டும்பாய்ங்களே அதே கதைதான். உசாரய்யா உசாரு ஓரம் சாரம் உசாருன்னு உசார் பண்றதுதான் நம்ம சாதனை.
இதுக்கு காரணம் பல யுகத்து வேதனை.

//முன்பு ஒரு முறை பார்ப்பன துபாஷிகள் பற்றி ப்ரூவ் செய்வதாகச் சொன்னீர்கள்.அதன் பிறகு ஒன்றையும் காணோம். //
ஆஹா.. என்னே உங்க ஞா சக்தி. நான் மொத்தம் 1500 பதிவுகளுக்கு மேல எழுதியிருக்கன். அது ராம் மந்திர் விவகாரத்துல உங்களாவாவோட சுய லாபம் மாதிரி எங்கனயோ ஒளீஞ்சிருக்கு.  அதுக்குண்டான லிங்கை தாங்க 24 மணி நேரத்துல ப்ரூவ் பண்றேன்.

//திறமை உண்மையில் இருந்தால் எல்லா எதிர்ப்புகளையும் தாண்டி வருவீர்கள். //

பாஸ் ! எதிர்ப்பெல்லாம் நமக்கு முந்திரி பருப்பு மாதிரி நொறுக்கி தள்ளிருவம். தாளி சனத்தையும் நம்ம எழுத்தையும் சல்லாத்துணி கட்டியில்ல மறைக்கிறானுவ.. ஓப்பனா கேட்கிறேன். என்னோட 1,500 பதிவுகள்ள ஒரு பதிவு கூட உருப்படியானது இல்லியா? ஹிட்ஸ் குறைவா? ரேங்குல குறைவா? ஏன் இதுவரைக்கும் ஒரு தமிழ் பத்திரிக்கை கூட என் ப்ளாகை தொட்டு பார்க்கலை.

(தினமணில பாவம் தெரியாத்தனமா “தத்துவமா புடி”ங்கற ஐட்டத்தை கோட் பண்ணீட்டாய்ங்க. அது எங்க ஆத்தா பண்ண மாயை)

//வரவில்லை என்றாலும் முயற்சி செய்து கொண்டே இருக்கவும். அதுதான் ஒரே அவ்ழி.//

என்ன வச்சி காமெடி கீமிடி பண்ணலையே . கதவிருக்க வேண்டிய இடத்துல சுவத்தை கட்டிவச்சிருக்கானுவ. அடிச்சு தூள் பண்ணி நுழைய வேண்டிய சமாசாரம் தலைவா.. தட்டிக்கிட்டே இருக்க சொல்றியா? – இதைத்தான்  உங்க குசும்புன்னு சொல்றது.

//பார்ப்பனர்களால் என் குடியே கெட்டது என நீங்கள் சொல்வது உங்கள் மனதுக்கு ஆறுதலாக வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் அதனால் காலணா பிரயோசனம் இல்லை.//

நான் தனி மனிதனா இருந்திருந்தா – பிழைப்புக்கே பிறந்தவனா இருந்தா ஓகே. நான் என் தாய் நாட்டை தட்டி எழுப்பி வல்லரசாக்க வந்தவன்.

20- – ல் இந்தியாவை  வல்லரசாக்கி காட்டிய  முருகேசன் 1997 லேயே தம் முயற்சியை துவக்கியும் அது தாமதமானதற்கு என்ன காரணம்?

இப்படி ஒரு கேள்வி எழுப்பப்படும். அப்போ இதுக்கு சரித்திரம் பதில் சொல்லும்.

“அச்சு ஊடகம் மற்றும் அரசு தலைமை செயலகங்களில் நிலவிய பார்ப்பன ஆதிக்கம்”னுட்டு.

பாஸ்!
கடவுளே உங்க இனத்தை கை விட்டுட்டாரு.  நீங்க எதுக்கு வக்காலத்து வாங்கிக்கிட்டிருக்கிங்க வீணா..

எச்சரிக்கை:
“என் வழியில நான் போறேன். உங்க வழில நீங்க போங்க. உங்க வழிக்கு நான் வரலை. என் வழிக்கு நீங்க வராதிங்க”

வந்தாலும் புல்டோசரோட வாங்க சார்.. இதென்ன சார்  சாணி நாத்தம் அடிக்கிற புல்லுக்கட்டெல்லாம் கொண்டாந்து போட்டுக்கிட்டு ..

ரஜினி சொல்வது அச்சத்தால் நான் சொல்வது தங்கள் நலம் கருதி, தங்கள் இனத்தின் நலம் கருதி..

செம்மொழி பாலியல் கல்வி …..( -18)

 

அன்பு மாணவச்  செல்வங்களே ….
தெரு வோர தண்ணீர் குழாயடி
சண்டையின் போதும் ….
பொது கழிவறை ,ரயில்வே
கழிவறை செந்தமிழ் கிறுக்கல்களிலும்….

மானாட மயிலாட தொலை காட்சி நிகழ்சிகளிலும் ….

திரையுல குத்து பாடல்களிலும்,
இரட்டை  அர்த்த வசனங்களிலும் ….

நாகரிக மங்கைகளின் டீ -சர்ட்  வாசகங்களிலும் …

தள்ளு வண்டி புத்தக கடைகளில்
கிடைக்கும் கில்மா கதை புத்தகங்களிலும் … 

திரையரங்குகளில் ஓடும்
“வயது வந்தோர் மட்டும்” படங்களிலும் …
கணினி வலை யுலகிலும் …

கற்று கொள்ளுங்கள்..பாலியல் கல்வி…
வகுப்பறையில் பாலியல் கல்வி
என்பது ஆபாசம் ….புரிந்து கொள்ளுங்கள் ….

பண்பாடு  காப்போம் …

18 (+) "Miss" Understanding

 18 (+) “Miss” Understanding  ஆமா! “மிஸ்” அண்டர்ஸ்டான்டிங் தான் 🙂
 சுகுமார்ஜிக்கு சும்மா அட்வைஸ் மாதிரி எழுதுறத தவிர வேற ஏதும் தெரியாதா? அப்படின்னு சிலர் நினைக்க கூடாதில்ல , அதனால் தான் ஒரு ஹாட்…. திரு முருகேசன் அவர்களின் அடியொற்றி   கொஞ்சமாவது   வரணுமில்லையா அதான்.

விசயத்திற்கு வரலாம் …

 சில நேரங்கள், என்னை நான் நிரூபனம் செய்ய முற்படும் போது பலவீனமாக உணர்கிறேன். உணர்ந்துமிருக்கிறேன்.

இது அறிவாளியாக இருப்பதின் அல்லது இருக்கமுயற்சிப்பதின் சாபக்கேடு. இது சில நேரங்களில் ”உன்னைவிட” என்பதாகக்கூட அமையும். ஆனால் பல ஆண்டுகள் அநுபவங்களுக்குப்பின் நான் முட்டாளாகவும் நடந்து கொள்கிறேன். ”எனக்கு எதுவும் தெரியாதப்பா!” என்று சொல்லவும் செய்கிறேன்.

அநேகமாக கிராமங்களில்… அவையெல்லாம் இப்போதேங்கே இருக்கின்றன? சிறிய நகரங்களில் நிறைய நபர்கள் ”எனக்கு எதுவும் தெரியாதப்பா!” என்று சொல்லக்கேட்டிருக்கிறேன். இப்படி சொல்லுபவர்களை நான் ஏளனம் செய்திருக்கிறேன். “என்னப்பா இது கூட தெரியாத உனக்கு?” என்று. அது நீண்ட அநுபவங்களுக்குப்பிறகானதாக அப்போது தெரியவில்லை.

சென்னை போன்ற பெரு நகரங்களில் “I don’t know” மிக குறைவாகவே ஒலிக்கும்.

நிறைய நபர்கள் பெரும் விடாமுயற்சியோடும், மன அழுத்தத்தோடும் நான் முட்டாளில்லை என நிரூபிக்கவே முயற்சிக்கிறார்கள்.

அதன் மூலமாக அவர்கள் பெறும் சுமை, காலமுழுதுக்கும், காலன் வருமளவும் தொடரும்.

”எனக்கு எதுவும் தெரியாதப்பா!” என்று சொல்வதற்கு கூச்சமோ, தயக்கமோ தேவையில்லை. ஆனால் வயதாக ஆக தானாகவே இயல்பாக சொல்லக்கூடிய காலம் நிச்சயமாக வரும்.

அப்போதுதான் ”எனக்கு எதுவும் தெரியாதப்பா!” என்ற வாக்கியங்களின் உண்மை, தன்மை அறிய வரும். அதோடு தனக்கு தானே புரிந்து கொள்ளுதல், அல்லது அறிந்து கொள்ளுதல் வரமா இல்லை சாபமா?

என் வாழ்வு முழுதும் எனக்கு விடை கிடைக்காது போலும். ஒவ்வொரு நிகழ்வும் ஒவ்வொரு வரத்தையும், சாபத்தையும் தருகின்றன. சாபமாக இருக்கும் போது நான் என்னை முட்டாளாக உணர்கிறேன், வரமாய் இருக்கும் போது என்னை நானே புகழ்ந்து கொள்கிறேன். ஆனால் பொதுவாக என்ன நிலை என்றால் நாயகன் கமல் போல “தெரியலயேப்பா !”.

சரி, நீங்கள் எப்படி அறிந்து கொள்கிறீர்கள்? 

தொடக்கத்திலேயே இதை 18 (+) என்று சொல்லி பிரித்திட முடியாது.. நீங்கள் அப்படி நினைத்தால் அதற்கு நான் பொறுப்பாக முடியாது…என்ன, பீடிகை அதிகமாக இருக்கிறதா?

எனக்கு ஒரு நண்பர் மின் அஞ்சலில் அனுப்பிய ஒரு விஷயத்தை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

தகவல் தொடர்பியலில் ஒற்றை சொல்லும்போது அதுவாகவே அதை புரிந்து கொள்ளுதல் என்பது இல்லவே இல்லை. நூறு சதம் அப்படி புரிந்துணர்வு ஏற்படுவதே இல்லை.

நமக்கு வாழ்வில் ஏற்பட்ட, ஏற்பட்டுக்கொண்டிருகிற அனுபவங்கள் வாயிலாக நாமே ஒரு கணக்கு போட்டு, ” ஆகா!, இப்படி இருக்குமோ, ஆமா, இதுவாகத்தான் இருக்கும் ” என்று முடிவு செய்து விடுகிறோம். அப்படி ஒரு நிகழ்வை இப்போது நீங்கள் உணரும் ஒரு வாய்ப்பு.

இல்லை நானா கில்லாடி. எதையும் என்ன சொல்லவருகிரர்களோ, அதை அப்படியே அறிந்து, உணர்ந்து கொள்ளும் சிறப்பு தன்மை என்னிடம் உண்டு என்று சொல்லுபவர்களும் இதை படிக்க முயலுங்கள்.

ஆங்கிலத்தில் இதை தருவதற்கு உணர்த்துதல்தான் காரணம், நல்லது தொடருங்கள்…

இதோ…

A beautiful Madam was having trouble with one of her students in 1st Grade class. Madam asked,’Boy. What is your problem?’

Boy answered, ‘I’m too smart for the first-grade. My sister is in the third-grade and I’m smarter than she is! I think I should be in the 4th Grade!’

Madam had enough. She took the Boy to the principal’s office. While the Boy waited in the outer office, madam explained to the principal what the situation was. The principal told Madam he would give the boy a test and if he failed to answer any of his
questions he was to go back to the first-grade and behave.She agreed.

The Boy was brought in and the conditions were explained to him and he agreed to take the test.

Principal: ‘What is 3 x 3?’

Boy.: ‘9’.

Principal: ‘What is 6 x 6?’

Boy.: ’36’.

And so it went with every question the principal thought a 4th grade should know. The principal looks at Madam and tells her, ‘I think Boy can go to the 4th grade.’

Madam says to the principal, ‘I have some of my own questions.

Can I ask him ?’ The principal and Boy both agreed.

Madam asks, ‘What does a cow have four of that I have only two of’?

Boy, after a moment ‘Legs.’

Madam: ‘What is in your pants that you have but I do not have?’

Boy.: ‘Pockets.’

Madam: What starts with a C and ends with a T, is hairy, oval, delicious and contains thin whitish liquid?

Boy.: Coconut

Madam: What goes in hard and pink then comes out soft And sticky?

The principal’s eyes open really wide and before he could stop the answer, Boy was taking charge.

Boy..: Bubblegum

Madam: What does a man do standing up, a woman does sitting down and a dog does on three legs?

The principal’s eyes open really wide and before he could stop the answer…

Boy.: Shake hands

Madam: You stick your poles inside me. You tie me down to get me up. I get wet before you do.

Boy.: Tent

Madam: A finger goes in me. You fiddle with me when you’re bored. The best man always has me first.

The Principal was looking restless, a bit tense and took one large Patiala Vodka peg.

Boy.: Wedding Ring

Madam: I come in many sizes. When I’m not well, I drip. When you blow me, you feel good.

Boy.: Nose

Madam: I have a stiff shaft. My tip penetrates. I come with a quiver.
Boy.: Arrow

Madam: What word starts with a ‘F’ and ends in ‘K’ that means lot of heat and excitement?

Boy.: Fire truck

Madam: What word starts with a ‘F’ and ends in ‘K’ & if u don’t get it, u have to use ur hand.

Boy.: Fork

Madam: What is it that all men have one of it’s longer on some men than on others, the pope doesn’t use his and a man gives it to his wife after they’re married?

Boy.: SURNAME.

Madam: What part of the man has no bone but has muscles, has lots of veins, like pumping, & is responsible for making love ?

Boy.: HEART.

The principal breathed a sigh of relief and said to the teacher,

‘Send this Boy to
IIM AHMEDABAD, I got the last ten questions wrong myself!’.

கேள்விகள்

அண்டை மாநிலம் ஆந்திராவில் இருக்கும் மக்கள் எல்லாம் ரொம்ப நல்லவர்கள் போல, இரண்டு முறை கூகுள் டாக்கில் பேசியதற்கே என்னை சகோதரன் என விளித்து இப்பொழுது தனது வலைப்பதிவிலும் எழுத வாய்ப்புக்கொடுத்துள்ளார் முருகேசன் ஜி. அவர் கொடுத்த அனுமதியுடன் எனது ஜோதிடம் சார்ந்த சந்தேகம் மற்றும் கேள்விகளை இங்கே பதிவு செய்கிறேன். ஆந்திரா மக்கள் உணவில் பச்சை மிளகாய் அதிகம் சேர்த்துக்கொள்வதை பார்த்திருக்கிறேன். இன்று முருகேசன் ஜி பச்சை மிளகாய் சாப்பிட்டிருக்கக்கூடது என ஆசைப்படுகிறேன், ஒரு சில கேள்விகள் எனக்கே ஓவராக தெரிந்தாலும் பலமுறை என் மனதில் தோன்றியதால் இங்கே கேட்டுவிடுகிறேன். தவறாக தெரிந்தால் குறிப்பிட்ட கேள்வியை நீக்கி விடுங்கள் முருகேசன் சார். தனிப்பட்ட கேள்விகள் எதுவும் இல்லை, சந்தேகங்களுக்கு 🙂 போகலாம்,
1. ஒவ்வொரு கிரகங்களின் திசை ஆண்டுகள் (உடுமகாதிசை) எதன் அடிப்படையில் வரையறுக்கப்பட்டுள்ளன? உதாரணமாக கேதுவிற்கு 7 வருடம் என பயன்படுத்துகிறோம், 7 வருடம் என்பது எதன் அடிப்படையில் வந்தது?
2. ஜோதிடத்தில் லக்னமே பிரதானமானது, லக்னத்துடன் சந்திராலக்னத்தையும் சேர்த்து பார்க்க துல்லியமான பலம் கிடைக்கிறதென்பது அடிப்படை மற்றும் அனுபவம். ஆனால் மற்ற கிரகங்களுக்கில்லாத தனித்தன்மை (இரண்டாம்நிலை லக்னம்) சந்திரனுக்கு ஏற்பட காரணமென்ன?
3. திரேக்காணம், சதுர்த்தாம்சம் போன்ற தசவர்க்கங்கள் மற்றும் இன்ன பிற வர்க்கங்களை கணித்து கொண்டு பலன் கூறுவது துல்லியம் தரும் என்பது ஜோதிடவியல், ஆனால் 30 நிமிட, 60 நிமிடங்களில் ஜோதிட பலாபலன் கூறி முடிக்கும் தற்பொழுதைய நிலவரத்தில் இந்த கட்டங்களை அமைக்க மற்றும் பலாபலன் தெரியாத ஜோதிடர்கள் தானே இனி உருவாகமுடியும்? ( நவாம்சம் கூட அமைக்க தெரியாத ஜோதிடர்களை நான் பார்த்திருக்கிறேன், இவர்களால் ஜோதிடத்திற்கு அவமானம் தானே).
4. அபிஜித் என்ற ஒரு நட்சத்திரம் இருப்பதாக கேள்விப்பட்டிருக்கிறேன் (திருவோணம் அவிட்டம் இடையில் சரிதானே) அதை ஏன் பயன்படுத்துவதில்லை?
5. சுக்கிரன் ஒரு நீர்க்கிரகம், குளுமையானது என்பது ஜோதிடம், ஆனால் சுக்கிரன் 460 டிகிரி செல்சியஸ் வெப்பமுள்ள ஒரு வெப்பக்கிரகம் என்பது விஞ்ஞானம். முரண்பாடுதானே!
6. மாந்தி(TITAN) சனியின் துணைக்கிரகம் எனில் சனிக்கு இருக்கும் 60 க்கு மேற்பட்ட துணைக்கிரகங்கள் என்ன ஆனது? இதுபோல குருவிற்கும் அதிக துணைக்கிரகங்கள் உள்ளதே, இதனையெல்லாம் ஏன் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை?
7. ராகு, கேதுக்கள் ஆரம்ப கால ஜோதிடங்களில் பயன்படுத்தவில்லை என முன்னோர்களின் நூல்களில் இருந்து தெரிகிறது. எனில், தற்பொழுது கூட ராகு கேதுக்கள் தவிர்த்தால் துல்லியமான் பலன் கிட்டுமா?
8. நடக்கவேண்டியவை நடந்தே தீரும், அதனை நடத்தி வைக்கவே கிரகங்கள் எனில் நாம் ஜாதகம் பார்த்து அதன் படி நடந்து கொள்வதால் ஒன்றும் மாறிவிடாதல்லாவா?
9. பரிகாரம், பல ஜோதிடர்கள் போலி ஜோதிடராக மாற பரிகாரம் மட்டுமே காரணம் என்பது உலகறிந்தது, இதனாலயே ஜோதிடம் பொய் என்கிற மனநிலைக்கு வர வேண்டி இருக்கிறது. கொஞ்சம் யோசித்துப்பார்த்தால் கிரகங்கள் தன் வேலைகளை செய்யும்போது அதனை தடுக்க அல்லது சரிசெய்ய பரிகாரம் செய்வது என்பது கிரகங்களுக்கு எதிராக செயல்படுவது என்பதாகத்தானே அர்த்தமாகிறது. நாம் இங்கே இரண்டு வாழைப்பழம் ஒரு தேங்காய் வைத்து வணங்குவதால் பல லட்சம் மைல் தூரத்தில் நம் பூமியை விட பல மடங்கு பெரிய கிரகங்களும் நட்சத்திரங்களும் நம் வழிக்கு வந்து நமக்கு சாதகமாக வேலை செய்யும் என நினைக்கும்போது நகைப்பாக தானே இருக்கிறது.
10. கிரகங்கள் தான் உலக நிகழ்விற்கு காரணமெனில் இறைவன் என்பது கேள்விக்குள்ளாப்படுகிறதே.
11. எண் கணிதம் என்ற ஒரு கொடுமையை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? வெறும் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் வந்த மொழியின் வரி வடிவங்களை மாற்றுவதன் மூலம் மனித வாழ்வு மாறும் என்பது நினைக்க மடமையாக உள்ளதே. ( எண் கணிதத்திற்கு எந்த ஒரு வரலாறும் இல்லையென நினைக்கிறேன்).
12. ஒரு நாட்டிற்கு ஜாதகம் பார்க்கும் முறை எப்பொழுது வந்தது? இந்தியாவிற்கு சுதந்திரமடைந்த தேதியை ஜாதகமா கணிப்பதை பார்த்திருக்கிறேன். சுதந்திரமடைவதற்கு முன் இந்தியா என்ற ஒரு நாடு இல்லையா? அதற்கு முன் இந்தியாவிற்கு ஜாதகம் பார்க்க எந்த முறை உபயோகப்படுத்தியிருப்பார்கள்?
இன்னும் நிறைய சந்தேகங்கள் இருக்கிறது, இன்னொரு நாள் அதையும் கேட்கிறேன்.
இப்படிக்கு,
ராஜா – திருப்பூர்