நாத்திகம் பேசவும் ஒரு "வில்" வேணம்

Coffee 7

“குடலேற்றம் தெரியாமல் கோடி பணம் செலவழிச்சான்”னு  ஒரு சொலவடை உண்டு. குடலேத்தங்கறது சிம்பிள் மேட்டர். விவரமான ஒரு பாட்டி கை வசம் இருந்தா மேட்டர் ஓவரு. இல்லின்னா பொளப்பு நாறீரும்.

ஜோசியத்துலயும் இந்த மாதிரி சில்லறை மேட்டர் நிறைய இருக்கு. ஆரா இருந்தாலும் இந்த மாதிரி சில்லறை மேட்டருகளை தெரிஞ்சு வாழ்ந்தா பிரச்சினையே இருக்காது. அல்லது எது தங்களை ரெம்ப இழுக்குதோ அந்த பக்கம் போகாம இருந்துரனும்.

நாம இந்த ரேஞ்சுல பரிகாரம் சொல்றதால  ஜோசியத்தை நக்கலடிக்கிறவுகளையும் கன்வின்ஸ் பண்ண வேண்டியிருக்கு. ஜோசியத்தை தெய்வ வாக்கா நினைச்சு வாழறவுகளையும் கன்வின்ஸ் பண்ண வேண்டியதா இருக்கு.

நான் என்னைக்கும் நாத்திக வாதத்தை இழிவா  நினைச்சதுமில்லை பேசினதுமில்லை. நாத்திகர்களை பற்றி சில மனக்குறைகள் உண்டு.

அரைவேக்காட்டு ஆத்திகர்கள் எப்படி சாமிய பிடிச்சு தொங்கறாய்ங்களோ -அப்படியே அரை வேக்காட்டு நாத்திகர்களும் சாமிய பிடிச்சு தொங்கறாய்ங்க.
நான் என்ன சொல்றேன்னா ரெண்டு க்ரூப்புமே கடவுளை விட்டு நகர்ந்து வாங்க மன்சனை பாருங்க.”ஈஸ்வரோ மனுஷ்ய ரூபேணா”.பெரியார் கூட “கடவுளை மற மனிதனை நினை”ன்னு சொல்லியிருக்காரு.

ஒரு “வில்” இல்லாத ஆத்திகர்கள் கடவுளை திராட்டுல விட்டுர்ராப்ல, “வில்” இல்லாத நாத்திகர்கள் நாத்திகத்தை திராட்ல விட்டுர்ராய்ங்க.
“வில்”ங்கற வார்த்தைக்கு என்ன அருத்தம்? “மன உறுதி?”

1997 ல நாம ப்ரெட் ஹன்டர். ஒரு சைன் போர்ட் பெய்ன்டர் கேராஃப்ல இருக்கம். ஏதோ தனியார் பள்ளியில ட்ராயிங் வாத்யார் வேலைய நம்பி கண்ணாலம் வேற கட்டிக்கிட்ட பார்ட்டி ஒருத்தர் கிராஸ் ஆனாரு.

திருஷ்டி சுத்திப்போட்ட எலுமிச்சம்பழத்துல தான் ஜூஸ் குடிப்பேன். தி.சு.போ தேங்காய்ல தான் சட்னி அரைப்பேன்னு ஒரே அலப்பறை.
நாம முடிஞ்சவரை நம்ம கொள்கைய சொன்னோம். ஊஹூம் கேட்கற மாதிரியே இல்லை. இதுல பிரம்மங்காருவ வேற நக்கலடிக்க ஆரம்பிச்சுட்டாரு. பிரம்மங்காரு எதிர்காலத்துல என்ன நடக்கும்னு ச்சொம்மா குத்து மதிப்பா கெஸ் பண்ணி சொல்லி விட்டுட்டாராம்.

செம கடுப்பாகி “பிடி சாபம்”னு  அந்தாளோட ராசிய வச்சு ஒரு பாய்ண்டை அள்ளி விட்டம்.
“மவனே காவா ஓரம் பெய்ண்ட் டப்பா  பிடிக்கிற  நேரம் கிட்டக்க இருக்கு. அப்பமும் இந்த நாத்திகம் பேசு நான் மதிக்கிறேன்”
அந்த  நேரம் வந்தது.ஆனால் அவரோட நாத்திகம்? போயே போச்.

இன்னொரு நண்பர் இடது சாரி சிந்தனைகள்,மனித உரிமை ஆர்வலர். எல்லாம் சரி .கடவுள் மேட்டர்ல நாத்திகவாதி.
அவரோட பொஞ்சாதிக்கு உலகத்துலயே லட்சத்துல ஒருத்தருக்கு வர்ர ப்ளட் கேன்சர் ஏதோ வந்துருச்சு. இவரும் ஆன மட்டும் எல்லாத்தையும் வித்து வைத்தியம் பண்ணாரு. வேலைக்காகல. அடுத்த கண்ணாலத்துக்கு நாம தேன் மோட்டிவேஷன், கன்சல்ட்டன்ஸி எல்லாம்.
இப்பம் நல்லா இருக்காரு. ஆனால் ஆராச்சும் திருப்பதி லட்டு கொண்டுவந்தா கூட செருப்பை கழட்டிட்டு கும்பிட்டுக்கிறாரு.

பெரியாரை பாருங்க. அவரு நாத்திக வாதத்தை விட்டு தொலைக்க எத்தனையோ காரணங்கள் அவர் வாழ்க்கையில கிராஸ் ஆச்சு. ஒரு வீசிங் ப்ராப்ளம் ஒன்னு போதும். ஆனால் அவருக்கு ஒரு ஸ்ட்ராங் வில் இருந்தது. நான் எல்லாம் வீசிங் மாட்டிக்கிட்டா டெம்ப்ரரியா நாத்திகனாயிர்ரது.
நான் என்ன சொல்றேன்னா

ஆத்திகர்களே ஆத்திகர்களே ! ஜோதிடம் -ஜோதிட பலன்லாம் ஒன்னும் கல்வெட்டு கிடையாது. கொஞ்சமே கொஞ்சம் வில் இருந்தா சரியான ஜோசியர் கிடைச்சா -அவர் சொல்ற பரிகாரங்களை கீப் அப் பண்ணா லேசா டிங்கரிங் பார்த்து கலர் மாத்திரலாம்.

இதே போல நாத்திகர்களுக்கு ..

நாத்திகர்களே நாத்திகர்களே !
கொஞ்சம் பொறுப்பா ஆராய்ச்சி பண்ணுங்க. கு.ப சந்திராஷ்டமம். இது எப்படிப்பட்ட எஃபெக்டை கொடுக்குது. ராசி நாதன் 6-8-12 ல வந்தா எப்படி இருக்கு? அஷ்ட ம சனி என்ன செய்யுது? கேது புக்தி என்ன செய்யுது. செவ் பல்பு வாங்கினா எப்படி இருக்கு? ராகு கேது கோசாரத்துல ஆப்படிக்கிற பொசிஷனுக்கு வரும் போது என்ன ஆகுது?

கு.ப அப்சர்வ் பண்ணுங்களேன். அனுபவங்களை வச்சு ஜட்ஜ் பண்ணுங்களேன்.ஏன் அவசரப்பட்டு நக்கலடிக்கிறிங்க?

Advertisements

நாத்திகம் பேசவும் ஒரு “வில்” வேணம்

வாங்க சனிக்கு டேக்கா கொடுக்கலாம் !

Feel 5அண்ணே வணக்கம்ணே !
தலைப்பை பார்த்துட்டு அடடே சனில்லாம் டம்மி பீஸு போல .ஈசியா டேக்கா கொடுக்கலாம் போலன்னு நினைச்சுராதிங்க.
சனியின் காரகங்களில் முக்கியமானது ஆசனம்.ஆசனம் என்பது மோட்டார் வண்டிக்கு சைலன்சர் மாதிரி. சைலன்சர் அடைச்சிக்கிட்டா பெட் ரோல்/ டீசல் புகை வெளிய போகாது. வண்டியே ஸ்டார்ட் ஆகாது.
சைலன்சர்ல ஏன் அடைப்பு வருது? பெட் ரோல்ல கலப்படமிருந்தா வரும். ச்சொம்மா ச்சொம்மா எக்ஸலேட்டரை கொடுத்து பெட் ரோலை கொட்ட வச்சாலும் வரும். அதிக அளவு ஆயிலை சேர்த்து பெட் ரோல் போட்டிருந்தா வரும்.
இதையே ஹ்யூமன் பாடிக்கு பொருத்தி பாருங்க. பளிச்சுன்னு புரியும்.
கக்கா போறத பத்தி ஆரும் பப்ளிக்ல பேசமாட்டாய்ங்க. ஏன்னா இது தங்கு தடை இல்லாம தினசரி நடக்கிற காரியம். இது தினசரி நடந்து கிட்டிருக்கிற வரை அதை பத்தி ரோசிக்க கூட மாட்டான். இதுவே சனி பிடிச்சா ( அதாவது 3,6,10,11 தவிர வேறு ராசிகள்ள என்டர் ஆனா)  வார் ஸ்டார்ட்.
மொதல்ல மலச்சிக்கல்ல ஆரம்பிக்கும். லேசா தலைவலி. வவுத்து வலி , ஆசன கடுப்பு, மூலம்,ஃபிஸ்டுலா இது கடைசியில எங்கே கொண்டு விடும்னா நரம்பு தளர்ச்சி வரை போகும்.
இன் கமிங் ,அவுட் கோயிங்  கரெக்டா நடக்கனும். இது ரெண்டுமே  ஒன்னோட ஒன்னு சார்ந்திருக்கும் விஷயம். ஒன்னுல பிரச்சினைன்னா அடுத்ததுலயும் பிரச்சினை வந்துரும்.
அது சரி .. இந்த சிக்கல் ப்ராக்டிக்கலா எங்கே -எப்படி ஆரம்பிக்குதுன்னு கேட்பிக.சொல்றேன். சனி அனுகூலமா இருக்கிற வரை ஸ்ட் ரெய்னுக்கு அஞ்ச மாட்டோம் .உழைக்க தயாரா இருப்போம்.ஆனால் ஸ்ட் ரெய்னே இல்லாம வேலை முடிஞ்சுரும்.
இதுவே சனி பல்பு கொடுக்க ஆரம்பிச்சா உழைக்க தயங்குவம். சுருக்கமா முடிக்க ப்ளான் பண்ணுவம். ஆனால் ஒத்தைக்கு ரெட்டியா தாவு தீர்ந்துரும்.
இதனால என்ன ஆகுது? ஆங்சைட்டி. மாட்டிக்குவமோங்கற கேள்வி,மாட்டிக்கிட்டமேங்கற டெப்ரஷன். இதெல்லாம் ஜீரண மண்டலத்தை உடனே எஃபெக்ட் பண்ணுதுங்கோ.
மேலும் இந்த சனி தான் கர்ம காரகன். அதாவது கடந்த பிறவியில நாம செய்த பாவத்துக்கெல்லாம் தண்டனை கொடுக்கிறவர்  ( அனுகூலமா வர்ர காலத்துல நாம செய்த புண்ணிய காரியங்களுக்கு பலன் கொடுக்கிறவர்னு சொல்லலாம்)
இவருக்கு நான் – நீங்க , ஆண் -பெண் ,திமுக -அதிமுக மாதிரி வித்யாசம்லாம் கிடையாது.எவனா இருந்தாலும் சனி பிடிச்சா பல்பு வாங்கித்தான் ஆகனும்.
கொய்யால வவுத்துல உள்ள கருவுக்கு சனி இருக்குன்னா அம்மா காரி போலீஸ் ஸ்டேசனுக்கு போய்த்தான் ஆகனும். அட பிறந்து தத்தக்கா புத்தக்கான்னு நடக்கிற குழந்தைன்னு வைங்க.
அதுக்கு சனி பிடிச்சா தெருவுல எதுனா கும்பல் போகும் போது கூடவே போயிரும். வழி தெரியாம அழுதுக்கிட்டு நிக்கும்.ஆருனா கொண்டு போயி ஸ்டேசன்ல ஒப்படைச்சுட்டு போயிருவாய்ங்க.
சனிக்கு டேக்கா கொடுக்கிற மேட்டரை சொல்றதுக்கு மிந்தி  சனி பகவான்  இந்த துலா ராசி சஞ்சாரத்துல நமக்கு எப்படில்லாம் வேலை கொடுத்துக்கிட்டிருக்காருன்னு சிம்பிளா சொல்லிர்ரன்.
நாம அடிப்படையில ஒரு குழந்தை . அதாவாது குழந்தை பருவ அறியாமையை,  சிந்தனைகளளை தாண்டிவராத பார்ட்டி.
ஏன் எல்லாரும் நல்ல வேலை வெட்டி,வீடு வாசல்,பொஞ்சாதி,பசங்கன்னு நிம்மதியா இருக்கக்கூடாது -இதான்  அன்று முதல் என்றும் மாறாத  நம்ம சிந்தனை. அந்த நிலையை கொண்டு வர வழி வகை தேடும் ஒரு சீக்கர் ( தேடுபவன்). இந்த தேடல் நம்மை ஜோதிடத்து பக்கம் தள்ளி வி்ட்டுது.
கூடவே   ஜோதிடத்தில் பதில் கிடைக்காத , மனித வாழ்வின் பல பதிலற்ற கேள்விகளுக்கான பதில்களை தேடும்  அசைன்மென்டும் மாட்டிக்கிச்சு.  ஜோதிடத்துலயே  தேங்கிர்ரது ஜோதிடத்தை அவமதிக்கிற மாதிரி.
அடுத்த ஸ்டெப் ஆன்மீகம். அதை  செலாவணிக்கு கொண்டுவரனும்னா லௌகீக வாழ்வின் அடிப்படை சிக்கல்களுக்காச்சும் நம்ம கிட்ட தீர்வு இருக்கனும்.  இப்படி ஒரு சுழல்ல மாட்டிக்கிட்டம்.
நம்ம பேச்சு -எழுத்து எல்லாத்துக்கும் அடிப்படை இதான். கொஞ்சம் பெட்டர்மென்ட். மனிதர்கள் வாழ்விலாகட்டும், நாட்டு நிர்வாகம் இத்யாதில ஆகட்டும்.கொஞ்சமே கொஞ்சம் பெட்டர்மென்ட்.
ஒளுங்கு மருவாதியா இந்த நோக்கத்தோட எழுதிக்கிட்டு பேசிக்கிட்டு இருக்கவேண்டிய பார்ட்டி ஊருக்கெல்லாம் சொல்லப்போறேன் -ஊர் ஊரா  போகப்பேறேன்னு மொபைல் புக் ஸ்டோர் பத்தி  பினாத்த ஆரம்பிச்சன்.
நம்முது கடகலக்னம் , நான்கில் சனி . நான்கு = வண்டி வாகனம்.நாலு தான் வித்யா ஸ்தானம். நாலு தான் சுக ஸ்தானம். மொத ஒன்னே கால் வருசம் பதவிசா ஏதோ வீட்டோட ஜி.டி நாயுடு வேலைகளை செய்ய வச்சாரு.
அடுத்த ஒன்னே கால் ஆரம்பிச்சது. ஊட்டுக்குள்ளயே நுழைஞ்சிட்டாரு. ஐ மீன் ஒரு நடமாடும் பிணம் -தெரிஞ்ச முகம் – தலைகால் தெரியாம ஆடி அலண்டு சோத்துக்கே லாட்டரி. தலையால தண்ணி குடிச்சு கம்ப்யூட்டர்ல அழகில தெலுங்கு டைப் அடிக்க கத்துக்கொடுத்து  ஊட்லயே சோத்தை போட்டு மேச்சுக்கிட்டிருந்தன். மாசத்துக்கு ஒரு தொகை.தினசரி ரெண்டு தொகை . ஒரு கட்டத்துல அதனோட சேஷ்டைகள் ரெம்ப கடுப்பாக்கிருச்சு சோத்தை கட் பண்ணிட்டன். வேலை இருந்தா கூப்பிட வேண்டியது.சோத்துக்கு காசு கொடுத்து துரத்திர வேண்டியது .
க்ளைமேக்ஸ் என்னடான்னா மவ கண்ணாலத்துக்கு அந்த பன்னாடைக்கு ஒரு சட்டை எடுத்து கொடுத்து இதை போட்டுக்கிட்டு வான்னு சொன்னம். அது சரக்கு போட்டுக்கிட்டு வந்து சப்பாத்தி பார்சல் கேட்டு டைனிங் ஹாலுக்கு ஆளனுப்புச்சு.
எப்போ சோத்தை கட் பண்ணேனோ அப்பமே  சனி பல்பு கொடுக்க ஆரம்பிச்சுட்டாரு. பெண்டிங்குல இருந்த மொபைல் புக் ஸ்டோர் ப்ராஜக்ட் சூடு பிடிச்சுருச்சு . டெய்லி ஃபைனான்ஸ் கணக்கா டெய்லி ஐ நூறு ,ஆயிரம்னு 11 ஆயிரத்து 111 ரூபாய்க்கு போயிருச்சுன்னா பாருங்களேன்.
பணத்தை பத்தி நாம என்னைக்கு கவலைப்பட்டதில்லை . ஏன்னா நமக்கு பத்தாயிரத்துலயும் வாழ தெரியும் பத்து ரூவாய்லயும் வாழ தெரியும். ஆனால் நம்ம நேரத்தை தின்ன ஆரம்பிச்சுருச்சு. செவ்வாய் டு செவ்வாய் எட்டு நாள் . புதன்,வியாழன் ரெண்டு நாள் டாக்டர் கணக்கா ஒரு நாளைக்கு ரெண்டு தபா எஸ்டேட் விசிட். தாங்குமா?
ஒரு வழியா ஃபேப்ரிக்கேஷன் முடிஞ்சு ஊட்டான்ட கொண்டாந்து பேனர் ஒட்டி தண்ணி தெளிச்சு விட்டுரலாம்னு பார்த்தா பேக் வீல் பேரிங் ஒன்னு ரெம்ப ஆடி போயி வண்டியே சாயுது. ஊருக்கு வெளிய நண்பர் வீட்டு பக்கத்து மைதானத்துல விட்டுட்டு பேரிங் மாத்த ரூ.500 க்கு கமிட் ஆகி ரூ150 அட்வான்ஸ். இதான் இன்னைய தேதிக்கு நிலவரம்.
நம்ம வால் எம்மாத்தம்? இந்த வாலை வச்சுக்கிட்டு இதெல்லாம் தாங்குமா என்ன? பேஸ்தடிச்சு கிடக்கன்.
இது சனி மகாத்மியம்.அடுத்த பதிவுல சனிக்கு எப்படி டேக்கா கொடுக்கலாம்னு சொல்றேன்.ஓகேவா உடுங்க ஜூட்டு.

ஜோதிட கருத்தரங்கு+கிரகங்களுக்கு டேக்கா: 6

Coffee 7அண்ணே வணக்கம்ணே!
கிரகங்களுக்கு டேக்கா தொடர் ஆரம்பிச்சு அஞ்சு நாளு முடிஞ்சுருச்சு. இன்னைக்கு ஆறாவது நாள். ஆரம்ப காலத்துல ஒரு நாளைக்கு ரெண்டு மூனு பதிவு போட்ட சரித்திரமெல்லாம் உண்டு. இடையில சனம் அம்ம ஆரம்பிச்சுருச்சு -ஆன்லைன் ஜோதிட ஆலோசனை தூள் பறக்க ஆரம்பிச்சிருச்சு.

கொஞ்சம் கொஞ்சமா வாரத்துக்கு ஒரு பதிவுன்னு ஆயிருச்சு.  இது நடுவுல தான் ஐடியா ஸ்பார்க் ஆச்சு. ஏழு நாள் தொடர்பே இல்லாம போறத விட கு.பட்சம் ஒரு ஸ்டேட்டஸ் போலவாச்சும் ஒரு பதிவு போட்டு டச்சுல இருக்கலாமே. இந்த ஐடியாவ தான் இப்பம் அப்ளை பண்ணிக்கிட்டிருக்கன்.

கடந்த பதிவுல சூ,சந்,செவ் ஜாதகத்துல வீக்கா இருக்கிறதை தெரிஞ்சுக்க சில டிப்ஸ் ,கூடவே அவற்றின் எஃபெக்ட்ல இருந்து எஸ் ஆறதுக்கு சில குன்ஸ் எல்லாம் சொன்னேன். இப்பம் ராகுவை பார்க்கலாம்.

உங்களுக்கு ஏற்கெனவே வாந்தி ,வயிற்று போக்குன்னு நடந்திருக்கா? விசம் கிசம் குடிச்சிருக்கிங்களா? (தவறுதலாவோ / கடுப்பாகியோ),மெடிக்கல் ரியாக்சன் எதுனா நடந்திருக்கா,  மதம் மாறி லவ் பண்ணியிருக்கிங்களா?  உங்க பாடி ஊளை சதையாவோ -ஒல்லி பீச்சானாவோ இருக்கா? கருப்புலயும் லேசா நீலம் கலந்தாப்ல கருப்பு நிறமா இருக்கிங்களா? சினிமா லாட்டரின்னு சீரழிஞ்சிருக்கிங்களா?

அப்படின்னா உங்க ஜாதகத்துல ராகு பல்பு வாங்கியிருக்காருன்னு அருத்தம் .

நீங்க மல்ட்டி நேஷ்னல் கம்பெனி ,சினிமா ,வைன்ஸ் சம்பந்தப்பட்ட தொழில்ல இருந்தா படக்குன்னு வெளிய வந்திருங்க. ஷேர் மார்க்கெட்லாம் மூச். வெளி நாடு போயி சம்பாரிச்சு குவிக்கலாம்னு நினைக்காதிங்க. 4 ஆம் நெம்பர், 4 கூட்டுத்தொகை வர்ர தேதிகளை அவாய்ட் பண்ணுங்க.

பாம்பு வடிவ மோதிரம் ஒன்னு போட்டுக்கங்க. கூடவே கோமேதகம் பதித்த மோதிரமும். சைனீஸ் ட்ராகன் படம் உங்க கண்ல படறாப்ல ப்ளான் பண்ணிக்கங்க.
அடுத்து குருவை பார்க்கிறதுக்கு மிந்தி ஜோதிட ஆய்வாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்த கருத்தரங்க செய்திகளை சுருக்கமா சொல்லிர்ரன்.

நான் பெல்லியப்பா பில்டிங்சை நெருங்கறேன். சங்க தலைவர் பால சுப்ரமணியன் ஐயா காரில் இருந்து இறங்கினார் ,உப தலைவர் ரெம்ப யூத்தா ஜீன்,வைட் ஷர்ட்ல ஸ்மார்ட், பேக் ட்ராப்பை அஜீஸ் பண்ணிக்கிட்டிருந்தவருதான் செயலாளராம். (போஸ்ட் மாஸ்டருங்க)

தலைவர் நம்மை பார்த்ததுமே ரெம்ப ஹார்ட் ஃபுல்லா ரிசீவ் பண்ணிக்கிட்டாரு. ஒரு ஓரமா உட்கார்ந்து லேப் டாப்பை நோண்ட ஆரம்பிச்சம்.

அந்த நேரம் காளி தாஸ்ங்கற யூத் வந்து சுய அறிமுகம். இலவசமா திருமண பொருத்தம் பார்க்கிறாராம். வாழ்க.

ஏற்கெனவே நாம வெளியிட்ட 4 புக்ஸோட 10 செட்  பால சுப்ரமணியம் ஐயா  அலுவலகத்தில்  சேர்த்திருந்தன். ஆறே செட் சேல் ஆகியிருந்தாலும் எப்படியும் மத்ததும் போயிரும்ங்கற நம்பிக்கையில அந்த பத்து செட்டுக்கான காசை கொடுத்தாரு.

பையில காசு விழுந்ததும் “பக்”குன்னு ஆயிருச்சு. தனபாவமா ஒர்க் அவுட் ஆயிருச்சே ..வாக்கு ஸ்தனாமா சொதப்பிருமோன்னு ஒரு பயம்.
வரவேற்புரை ,தலைவரின் அறிமுக உரையோடு கருத்தரங்கம் துவங்கியது. பாலசுப்பிரமணியன் ஐயாவோட பேச்சு ரெம்ப நெளிய வச்சுருச்சு. அந்தளவுக்கு  நம்மை தூக்கோ தூக்குன்னு தூக்கிட்டாரு. சித்தூர் சிருங்கார சித்தர்னு உபரியா பட்டம் வேற.

அந்த ரேஞ்சுக்கு நாம பேச முடியுமான்னு பேதி புடுங்க ஆரம்பிச்சிருச்சு. ஏற்கெனவே ஒளுங்கு மருவாதியா குறிப்பெல்லாம் எழுதி வச்சிருந்தம். ஆனாலும் இன்னொரு தபா ரெஃபர் பண்ணிக்க வேண்டியதாயிருச்சு.

பிறவு செயலாளர் தான் மலேசியா போய் சோதிட ஆலோசனை வழங்கிய அனுபவங்களை சொன்னார். அடுத்த ப்ரோக்ராம் நம்ம பேச்சு.
தலைப்பு ஞா இருக்கில்லை “மன்மத பீடாதிபதியின் மாயா ஜாலங்கள்” (எட்டாமிடம் பாஸூ).என்னதான் பக்காவா குறிப்பு வச்சு பேசினாலும் அங்கங்கே கேட்(டு) விழுது, ஜாம் ஆகுது. எப்படியோ ஒரு வழியா பேசி முடிச்சன்.

எதுக்கும் இருக்கட்டும்னு ஒரு எட்டு செட் புக்ஸ் கொண்டு போயிருந்தன். நம்புங்க. எல்லா செட்டும் காலி. இன்னம் தேவைப்படுமாம்.
என்னப்பா பேச்சு பேச்சுன்னு சொல்றியே கண்டி என்னத்த பேசினேன்னு கோடியாவது காட்டப்படாதானு கேப்பிக. மேட்டர் என்னடான்னா முடிஞ்ச வரை எல்லா பேச்சையும் நம்ம லேப் டாப்ல பதிவு பண்ணியிருக்கம்.

லேசா எடிட் பண்ணி டைட்டிலோட யூ ட்யூப்ல வைப்பம்ல. அதுவரை வெய்ட் ப்ளீஸ்.

ஓகே .இப்ப குருவோட கதைய பார்க்கலாம்.

கோவில்,குளம்னு போயி வந்தப்பல்லாம் வில்லங்கமா? எப்பவும் வட்டி கட்டிக்கிட்டே இருக்கிங்களா? வங்கி கணக்குல தகராறா? மனைவி/கணவர் குழந்தைங்க மேட்டர்ல கடுப்படிக்குதா? அஜீரணம்? வாயு கோளாறு ? இதய படபடப்பு?

அப்படின்னா உங்க ஜாதகத்துல குரு பல்பு வாங்கியிருக்காருனு அருத்தம்.

நீங்க தங்கம்,ஃபைனான்ஸ்,அரசியல் ,ஆசிரிய தொழில், என்டோன்மென்ட் போர்டு ,ட்ரசரி,வங்கி ஆகிய துறைகளில் இருந்தா உடனே விலகிருங்க. கையில லிக்விட் கேஷ் வச்சுக்காதிங்க. பப்ளிக் லைஃப் வேண்டவே வேண்டாம். அவனை தெரியும் இவனை தெரியும்னு பீத்திக்காதிங்க. ஜாய்ன்ட் ஷ்யூரிட்டில்லாம் நஹி.
மஞ்சள் நிற ஆடை அணிகலன் அதிகம் யூஸ் பண்ணுங்க. 3 ஆம் நெம்பர்,  3 கூட்டு தொகை வர்ர தேதிகள் , புனர்வசு,விசாகம்,பூரட்டாதி நட்சத்திரங்களை அவாய்ட் பண்ணுங்க.

எச்சரிக்கை:
சனி,புத,கேது,சுக்கிர கிரகங்களுக்கு எப்படி டேக்கா கொடுக்கிறதுன்னு  அடுத்த பதிவுல சொல்றேன்.

கிரகங்களுக்கு டேக்கா கொடுக்கலாம் : 5

Feel 5

அண்ணே வணக்கம்ணே !
தமிழ்ல கோனார் உரை,இங்கிலீஷுன்னா பூன் கைட். இப்படித்தான் காலம் போகுது. நான் எல்லாம் நாளன்னைக்கு எக்ஸாம்னா இன்னைக்கு டெக்ஸ்ட் புக் எடுத்து வச்சுக்கிட்டு புரட்டிக்கிட்டு பாய்ண்ட்ஸ் நோட் டவுன் பண்ணிக்கிட்டிருப்பன். அப்படியும் பிகாம்ல ஆடிட்டிங்குல சுகுரா 35 மார்க் அடிச்சம்ல.
கிரகங்களுக்கு டேக்கா கொடுக்கிற சமாசாரத்தை நம்ம ஸ்டைல்ல இல்லாம இன்னைய ஜெனரேஷன் ஸ்டைல்ல கொடுக்கனும்னு பார்க்கிறேன். என்னதான் டைல்யூட் பண்ணாலும் ஒன்னும் பேரல.
ஒரு கிரகம் நம்ம ஜாதகத்துல பெட்டர் பொசிஷன்ல இருக்கா இல்லையா? அது  நமக்கு அனுகூலமா இல்லையான்னு தெரிஞ்சுக்கனும்னா அதுக்கு மண்டை மசுரெல்லாம் உதிரனும்.
கிரகங்களை பொருத்து வாழ்க்கைன்னா -வாழ்க்கைய வச்சு கிரக ஸ்திதிய கெஸ் பண்ணலாம் தானே. இந்த அடிப்படையில தான்  இந்த சீரியலையே ஆரம்பிச்சன்.
ச்சொம்மா லக்னம் அதுவா இருந்து – குறிப்பிட்ட கிரகம் நீசமா இருந்து வக்ரமா இருந்துன்னு அடிச்சு விடறவுக இன்னமும் இருக்காய்ங்க
( நான் கூட ஆன் லைன் ஜோதிட ஆலோசனைக்கு பலன் சொல்றச்ச இப்படித்தான் சொல்றேன்.கிரெடியபிலிட்டிக்காக)
ஒரு கிரகம் உங்க ஜாதகத்துல ஸ்ட் ராங்கா வீக்கானு அனுபவத்துல பட்டு பட்டுன்னு சொல்லிரலாம். இதெல்லாம் படுபயங்கர தொழில் ரகசியம்.ஆனாலும் அவா மாதிரி ஒளிச்சு வைக்க நமக்கு மனசு இடம் கொடுக்கல. அதனாலதேன் அள்ளி விட்டுக்கிட்டிருக்கன். இதை படிக்கிற நீங்களும் பல்லாயிரக்கணக்கானோர் பயன் பெறும் படியா இந்த பதிவுகளை ஷேர் பண்ணி பிரபலப்படுத்துங்க.  மொக்கை போதும் மேட்டருக்கு வரேன்.

சூரியன்:
உங்களுக்கு ஒத்தை தலைவலி மண்டையில அடிபடறது,கை ,கால் வலி ,பேக் பெய்ன் அப்பாவோட விரோதம் இப்படி நிறைய இருக்கா?
வேற வழியில்லை. லீடர்ஷிப்பை விட்டு விலகிருங்க. ஈகோ வேண்டவே வேண்டாம். அப்பா சொத்து ? வேற வழியில்லின்னா டெம்ப்ரரியா இருங்க. தீப்பிடிச்ச வீட்ல இருந்து எவ்ள சீக்கிரம் எஸ் ஆவிகளோ அவ்ள சீக்கிரம் எஸ்ஸாயிருங்க. ஒன்னாம் நெம்பர்,ஒன்னாம் தேதி , கிருத்திகை,உத்தரம்,உத்திராடம் நட்சத்திரங்களை அவாய்ட் பண்ணுங்க. ஆரஞ்சு நிற ஆடை அணிகலன் அதிகம் யூஸ் பண்ணுங்க.

சந்திரன்:

உங்களுக்கு மனம்,நுரையீரல்,சிறு நீரகம் சம்பந்தப்பட்ட பிரச்சினை இருக்கா? திடீர் பயணம் ,ஸ்பாட் டெசிஷனுன்னு பல்பு வாங்கறிங்களா?

ஃப்ளோட்டிங் பாப்புலேஷனை நம்பியிருக்கிற தொழில்,வியாபாரத்துலருந்து விலகிருங்க. உ.ம் வார சந்தை,வெஜ் மார்க்கெட்,பஸ் ஸ்டாண்ட். ஃப்ரன்ட் டெஸ்க் ஜாப்ல இருந்தா அம்பேல் ஆயிருங்க. தண்ணீர் தொடர்பானது ,நேவி சம்பந்தப்பட்ட வேலைல்லாம் வேலைக்காகாது .கழண்டுக்கங்க.
2 ஆம் நெம்பர் ,2 ஆம் தேதி, ரோகிணி,ஹஸ்தம்,திருவோணம் நட்சத்திரங்களை அவாய்ட் பண்ணுங்க.  வெள்ளை நிற ஆடை அணிகலன் அதிகம் யூஸ் பண்ணுங்க.

செவ்வாய்:

உங்களுக்கு ரத்தம்,எரிச்சல்,கோபம் தொடர்பான வியாதி இருக்கா? ஏற்கெனவே கட்டி,கொப்புளம்,காமாலை இப்படி பாதிக்கப்பட்டிருக்கிங்களா? மாடு முட்டியிருக்கா? உசரத்துலருந்து விழுந்திருக்கிங்களா? அண்ணன் தம்பியோட ஒத்துபோகலியா?

போலீஸ்,மிலிட்டரி,ரயில்வே,மின் துறை,ரியல் எஸ்டேட் ஃபீல்டுல இருந்தா உடனே கழண்டுக்கங்க. ஹெல்த் ரூல்ஸ் ஃபாலோ பண்ணுங்க ரத்த விருத்தி,ரத்த சுத்தி ரெம்ப முக்கியம்.  9 ஆம் நெம்பர், 9ஆம் தேதி , மிருகசீர்ஷம், சித்திரை, அவிட்டம் நட்சத்திரங்களை அவாய்ட் பண்ணுங்க.

பி.கு: உங்க நிலைமைய பொருத்து இதர கிரகங்கள் பலமா இருக்கா பல்பு வாங்கியிருக்கா அதுக்கு என்ன பரிகாரம்னு அடுத்த பதிவுல சொல்றேன். இந்த மாதிரி மேட்டர்லாம் கொத்தா-ஹோல் சேலா எழுதி நாலு புக்ஸ் வெளியிட்டிருக்கன்.ஆர்வமுள்ளவர்கள் இங்கே அழுத்தி வாங்கி படிங்க ப்ளீஸ்.