ப்ரஸ் க்ளப் மீது தாக்குதல் -மேசை நாற்காலிகள் துவம்சம்

அண்ணே வணக்கம்ணே !

காலையில 8.30 டு 10.30 பவர் கட் .மறுபடி மதியம் 1.30 டு 2.30 பவர் கட். காலையில பவர் கட் நேரத்துல அவுட்டோர் ஷூட்டிங் போயிட்டம்னா பொளப்பு நாறிரும். (இல்லாத பொல்லாத கமிட்மென்ட்ஸ்) அதுக்காவ ரெண்டு பேப்பரை வாங்கிட்டு வந்து ச்சொம்மா டைம் பஸ் பண்றது வழக்கமாயிருச்சு.

நியூஸ் பேப்பருங்கறது படிக்கிறவுக -வேலை தேடறவுக – அரசியல்ல உள்ளவுக – எதுனா வேலை வெட்டியில இருக்கிறவுகளுக்கு எந்தளவு உபயோகமோ நமக்கு தெரியாது.ஆனால் நம்மை பொருத்தவரை நம்ம தொழிலுக்கு நியூஸ் பேப்பருக்கும் ஸ்னான ப்ராப்தி கூட கிடையாது. நியூஸ் பேப்பர்ல வர்ர ராசிபலன்லாம் சோசியத்துல சேர்த்தியில்லை.

இருந்தாலும் சில செய்திகள் நம்மை கவரும். இந்த செய்திகளை நீங்க படிச்சிருக்க வாய்ப்பில்லை.தவற விட்டிருப்பிங்க. அப்படியாகொத்த செய்திகளை இந்த பதிவுல தரேன். சாகாமல் சாக 12 வழிகள் தொடரை அடுத்த பதிவுலருந்து தொடரலாமா? உடுங்க ஜூட். இப்போ செய்திகள்:

மொதல்ல பதிவோட தலைப்புக்கான செய்தி :

சாதாரணமா காதல் கண்ணாலம் செய்தவுக ப்ரஸ் க்ளப்க்கு வந்து ஒரு ப்ரஸ் மீட் வச்சிட்டு போவாய்ங்க. இது ரொட்டீன். இதே மாதிரி சித்தூரில் உள்ள ப்ரஸ் க்ளப்புக்கு நேத்தும் ஒரு சோடி வந்திருக்காய்ங்க. எவனோ கரீட்டா போட்டு கொடுத்திருக்கான். பெண்ணோட உறவினர்கள் ப்ரஸ் க்ளப் மேல படையெடுத்து எல்லாத்தையும் கவுத்து போட்டு சூறையாடியிருக்காய்ங்க.மாப்பிள்ளைக்கு லேசான கத்தி குத்து .

வடிவேலுவோட ஒக்காபிலரியில சொன்னா சித்தூர் ரெத்த பூமி.ஆனால் எம்மாம் பெரிய ஃப்ராக்சன் லீடரு கூட ப்ரஸ் க்ளப் மேல அட்டாக் பண்ணதில்லை. இனிமே காதல் சோடியோட ரிப்போர்ட்டருகளும் பாதுகாப்பு கேட்கனும் போல..

1.டெக்கான் க்ரானிக்கல் க்ரூப் (இங்கிலீஷ் நியூஸ் பேப்பருங்கண்ணா) திவாலாகற நிலைமை வந்திருக்காம். ஏற்கெனவே 54 சதவீதம் ஷேர்களை அடகு வச்சு 200 கோடி புரட்டியிருக்காய்ங்க. இப்பம் மேலும் 14.46 சதம் ஷேர்ஸ் அடகு வைக்கிறாய்ங்களாம்?

2.ரிப்போர்ட்டரா உள்ளவுக விளம்பர பணத்தை போட்டு திருப்பறதெல்லாம் சகஜம்.ஆனால் ஆல் இண்டியா ரேடியோன்னா அது மத்திய அரசு நிறுவனம். இதெல்லாம் அசாத்தியம்னு நினைச்சிருந்தேன். 1995 ஏப்ரல்லருந்து 1998 ஏப்ரல் வரைக்கு 37 லட்சத்து 7 ஆயிரத்து 794 ரூபா கையாடியிருக்காய்ங்க.

3.வருசம் 1987. உத்திரபிரதேசம் மீரட் , ஹஷிம்புரா பகுதியில 40 முஸ்லீம்கள் பயங்கர ஆயுதங்கள் வச்சிருந்ததா படுகொலை செய்யப்பட்டாய்ங்க. இந்த வழக்கில் ஐபிசி 319 ன் படி ஹோம்மினிஸ்டரான சிதம்பரத்தின் பெயரையும் பெயரையும் சேர்க்கனும்னு நம்ம சுப்பிரமணியம் ஸ்வாமி மனு போட்டாரு. மனு ஏற்கப்பட்டு வழக்கு விசாரணையை 2012, ஆகஸ்ட் 17 க்கு தள்ளி வச்சிருக்காய்ங்க..

4.ஒரிசாவில் சாரி ஒடிசாவில் ப்ளாட்டின சுரங்கத்தை ஐடென்டிஃபை பண்ணியிருக்காய்ங்க

5. புட்டப்பர்த்தி தெரியும்ல .. மேற்படி பஞ்சாயத்து எலக்ட் ரிசிட்டி போர்டுக்கு 1.04 கோடி மின் கட்டண பாக்கி.புடுங்கி விட்டுட்டாய்ங்க. தெரு லைட்டு கூட எரியலியாம்.

6.குஜராத்ல ஒரு வருசத்துக்கு பிறவு எல்லா காரும் கியாஸ்லதான் ஓடனுமாம். டீசல்,பெட்ரோ கார்களுக்கு தடை விதிக்கப்போறாய்ங்களாம்.

7.சீதான்னா தெரியும் (புதிய பாதையில பார்த்திபனுக்கு சோடியா நடிச்ச பார்ட்டியில்லிங்ணா.. w/o RAMA)
SITAன்னா தெரியுமா? செக்ஸுவல் இம்மாரல் ட்ராஃபிக் ஆக்ட்.

Advertisements

சாகாமல் சாக 12 வழிகள் (சாகாவரம்)

அண்ணே வணக்கம்ணே ! உங்கள் ஆயுள் பலம் எப்படின்னு ஒரு மினி தொடரை எழுதிக்கிட்டு வந்தம். அதுதான் லேசா ட்ராக் மாறி சாகாவரம் சாத்தியமான்னு தலைப்பை மாத்திக்கிருச்சு. சாகாம இருக்க ஒரே வழி -மரணத்தை வெல்ல ஒரே வழி செத்துப்போறதுதான். ஆனால் செத்துப்போயி மரணத்துலருந்து தப்பிக்கறது பை.தனமில்லியா? ஆக சாகாம சாக ஒரு வழியை தேடியாகனும்.

இது தியானம் மற்றும் ஆழமான -விழிப்புணர்ச்சியுடன் கூடிய உடலுறவுங்கற ரெண்டு விஷயத்துல தான் சாத்தியம். இது எத்தீனி பேருக்கு சாத்தியம்?

தியானம்:

ஓஷோவை படிக்கிற வரைக்கும் நானும் தியானம்னா ஒரே பொருள்/எழுத்து மேல மனதை குவிக்கிறதுன்னு நினைச்சிருந்தேன். ஒரு பொருளை அதன் புவியீர்ப்பு மையத்துல விரல்/கடப்பாறைய முட்டுக்கொடுத்து தூக்கி நிறுத்தறது ஈஸி. ஏன்னா இப்டி செய்யும் போது அதனோட எடை குறையும். அந்த வகையில ஒரே பொருள் /எழுத்தின் மீது மனம் குவிப்பது ஒரு முயற்சிதான்.

(பு.ஈ.மையம்னா தெரியாதவுக வட்டவடிவை தட்டு ஒன்னை சுட்டுவிரல்ல தாங்கி பிடிக்க ட்ரை பண்ணுங்க. சுட்டு விரல் எந்த பாய்ண்ட்ல இருக்கிறச்ச உங்க முயற்சி வெற்றியடையுதோ அதான் பு.ஈ.மையம்)

ஆனால் தியானம்னா எண்ணங்களை கவனித்தல். கொஞ்சம் போல பாலன்ஸ் கிடைச்ச பிற்காடு எண்ணங்களின் இடையிலான இடைவெளியை கவனித்தல் – பிக் அப் ஆன பிற்காடு எண்ணங்களின் இடையிலான இடைவெளியை அதிகரித்தல். அந்த இடைவெளியிலயே நின்னு விளையாடறது.

படைப்பையும் நம்மையும் பிரிக்கிறது நம் எண்ணம். உடலுக்கும் -மனதுக்கும் எடைய தர்ரது எண்ணம். எண்ணங்கள் அற்ற நிலையில இயற்கையின் ஒரு பாகமா மாறிர்ரம். அந்த அனுபவத்தை 24 மணி நேரமும் தொடர – கொஞ்ச நாழி எக்ஸர்சைஸ் பண்றோம்.அதான் தியானம். கு.ப அந்த அனுபவத்தை தியானத்தில் இல்லாத மத்த 23 மணி நேரங்களில் நமக்கு நாமே ஞா படுத்திக்கிட்டே இருந்தாகனும். இதான் தியானத்தின் நோக்கம் -இலக்கு.

இது எத்தீனி பேருக்கு சாத்தியம்னு ட்ரை பண்ணிட்டு சொல்லுங்க. சாகாம சாக உள்ள அடுத்த வழி ஆழமான -விழிப்புணர்ச்சியுடன் கூடிய உடலுறவு. இது தியானத்தை விட காம்ப்ளிக்கேட்டட் ப்ராசஸ். விலாவாரியா எழுதலாம் தான்.ஆனால் இதெல்லாம் ஏற்கெனவே எழுதப்பட்டு விட்ட மேட்டருங்கண்ணா. ஐ டோன்ட் வான்ட் டு ரிப்பீட். லேட் கமர்ஸ் இங்கே அழுத்தி படிச்சுருங்க.

மேற்படி ரெண்டு வழியுமே சாத்தியமில்லாதவுகளுக்கு சாகாம சாக வழி சொல்றதா கடந்த பதிவுல சொல்லியிருந்தன். ஐ மீன் ” என்னா..ஆஆ.. து டாஸ்மாக்கை மூடப்போறாய்ங்களா” பதிவுக்கு முன் பதிவில்.
அந்த வழிகளை கோடிகூட காட்டாம க்ழண்டுக்கிட்டா நீங்க கடுப்பாயிருவிங்க..

அந்த வழிகளை நீங்களே கண்டுக்கறதுக்கு சில க்ளூசாச்சும் கொடுத்துர்ரன்.

1.நான் உசுரோட தான் இருக்கேன்னு நீங்க எப்டி தெரிஞ்சுக்கறிங்க?

ஒவ்வொரு நாளும் நான் புதுப்பதிவு போடறதால . நான் அப்டேஷனை விட்டுட்டா உங்களை பொருத்தவரை நான் செத்தவன் தானே

2.உங்க ஆஃபீஸ் கொலிக்ஸ் நீங்க உசுரோட தான் இருக்கிங்கன்னு எப்டி தெரிஞ்சுக்கறாய்ங்க?
நீங்க தினசரி ஆஃபீஸ் வர்ரதை வச்சு -வேலை செய்யறதை வச்சு -லீவுல இருந்தாலும் செல்ஃபோன்ல அவெய்லபிளா இருக்கிறதை வச்சு தெரிஞ்சுக்கறாய்ங்க

மேற்படி ரெண்டு கேள்விகளுக்கும் பதிலை நானே தந்துட்டன். பவர் கட் நேரம் நெருங்கிருச்சுங்ணா.அதனால மற்றதுக்கு கேள்விகள் மட்டும் இங்கே. நீங்களே பதில் சொல்ல ட்ரை பண்ணலாம். டோன்ட் ஒர்ரி. முடியலின்னா நாளைக்கு நான் தீர்த்துவச்சுர்ரன்.

3.உங்க மனைவி நீங்க உசுரோட தான் இருக்கிங்கன்னு எப்டி தெரிஞ்சுக்கறாய்ங்க?
4.உங்க பிள்ளைகள் நீங்க உசுரோட தான் இருக்கிங்கன்னு எப்டி தெரிஞ்சுக்கறாய்ங்க?

5.அப்பா,அம்மா
6.கடன் காரன்,எதிரி
7.அண்ணன் தம்பி
8.உங்க காம்ப்ளெக்ஸ்ல குடியிருக்கிறவுக
9.உங்க தெருவாசிகள்
10.உங்க நண்பர்கள்
11.உங்க ஊர் காரவுக

இவிகல்லாம் நீங்க உசுரோட தான் இருக்கிங்கன்னு எப்டி தெரிஞ்சுக்கறாய்ங்க? இந்த கேள்விகளுக்கான விடை தெரிஞ்சுட்டு அவிக நாம உசுரோட தான் இருக்கம்னு தெரிஞ்சுக்க இருக்கிற வழிகளையெல்லாம் அடைச்சுட்டா அவிகளை பொருத்தவரை நாம செத்துப்போன மாதிரி தானே..

இதான் சாகாமல் சாக -மரணத்தை வெல்ல இருக்கிற வழிகள். இந்த வழிகள் .. வெறுமனே மரணத்தை வெல்ல மட்டுமில்லை – வறுமைய ஒழிக்க – நோயை குணப்படுத்த – சிறையிலிருந்து தப்ப – சாலை/தீ விபத்துகளில் இருந்து தப்பவும் உதவும்..

நாளைக்கு தொடர்வோம்.. உடுங்க ஜூட்டு..

இன்னா…து டாஸ்மாக்கை மூடப்போறாய்ங்களா?

அம்மா தமிழ் நாட்ல டாஸ்மாக்கை மூட போறாய்ங்கனு ஒரு பதிவு கண்ல பட்டுது. எளுதினவரு ஞான திருஷ்டியில பார்த்து எழுதியிருக்கமாட்டாரு .இது நிச்சயம். ஆனால் ஒன்னுங்ணா டாஸ்மாக்கை மூடறதுன்னா அது தமாஸில்லை. கிளிஞ்சிரும். வெளி மானில சரக்கு ஒரு பக்கம்,கள்ளச்சாராயம் ஒரு பக்கம், விஷச்சாராயம் ஒரு பக்கம்னு நெஜமாலுமே கிளிஞ்சிரும்.

அம்மா டாஸ்மாக்கை மூடப்போறாய்ங்களோ இல்லியோ ..தப்பித்தவறி மூடிர்ரதா ஒரு நெனப்பிருந்தா இந்த பதிவை படிச்சே ஆகனும்.

இங்கே இந்த ஒலகத்துல எல்லாமே பொய். மரணம் ஒன்றுதான் சத்தியம். அந்த மரணத்தை தாண்டி நிலைக்க கூடியது புகழ் ஒன்னுதேன்.

அதுலயும் நாம செத்த பிற்காடு நாம பண்ண பை.தனத்தை எல்லாம் சனம் மறந்துருவாய்ங்க. நாம செய்த ஒன்னு ரெண்டு நெல்ல வேலைகளை நினைச்சு வாழ்த்திக்கிட்டே இருப்பாய்ங்க.

போலீஸு, சி.ஐடி, மிலிட்டரி, லஞ்ச ஒழிப்பு போலீஸ், வருமானவரித்துறை, இப்டி எத்தீனி இருந்தாலும் எல்லாமே மன்சனை ஸ்தூலமா கட்டுப்படுத்ததான் பார்க்குதே தவிர அவன் மனசை மாத்த முடியறதில்லை.

தப்பு பண்றவன் மாட்டின என்னாகும்னு நினைக்கிறதே இல்லை. அப்டியே நெனச்சாலும் தனக்கு மிந்தி மாட்டி வெளிய வந்தவனை சேர்த்தே நினைச்சுப்பார்க்கிறான்.அதனால தப்பு குறையவே குறையாது.

மனசு மாறனும். எண்ணம் போல் மனம். மனம் போல் வாழ்வு. மனித எண்ணங்கள் நல்லெண்ணங்களாக இருக்க மனிதனின் குறைந்த பட்ச அத்யாவசிய தேவைகள் கட்டாயம் நிறைவேற்ற ப்படவேண்டும். உணவு,உடை,இருப்பிடம் ஆகியவற்றுடன் செக்ஸையும் அத்யாவசிய தேவைகளின் பட்டியலில் சேர்த்துக்கொள்ள வேண்டும். செக்ஸ் கல்வி கட்டாயமாக்கப்படவேண்டும். மனிதன் தன் அத்யாவசிய தேவைகளை உழைப்பின் மூலமே வென்றெடுக்க வாய்ப்புகள் வழங்கப்படவேண்டும். அவன் உழைப்பின் பலனை டாஸ்மாக் மாதிரி ஐட்டங்க உறிஞ்சிராம பார்த்துக்கனும்.

இந்த டாஸ்மாக் சமாசாரம் நாம சொன்ன எல்லா மேட்டருக்குமே தடையாயிருது. அதுக்கு ஒரு தடை போட்டு -அந்த தடையை கரீட்டா மெயின்டெய்ன் பண்ணா -ஒரு பத்து வருசத்துல எல்லாமே பளிங்கு மாதிரி ஆயிரும்.

இதை தடை பண்றதுல ரெண்டு பிரச்சினை இருக்கு. ஒன்னு அமலாக்கம். இன்னொன்னு இதனால் ஏற்படும் வருமான இழப்பு. இந்த தடைய அமலாக்க மொதல் தேவை சரியான மெஷினரி. எந்த மதமும் மதுவை ஆதரிக்கலை.

மதவேறுபாடு , அமைப்பு வேறுபாடு இல்லாம சன்னியாசி – நன்ஸ் – முத்தவல்லி -இமாம் இப்படி இருக்கக்கூடிய ஃபுல் டைமர்சை கொண்டு புதுசா ஒரு மெஷினரியை உருவாக்கனும். இவிகளுக்கு சரியான பயிற்சி கொடுக்கனும்.

1.இவிக மது அடிமைகளை கண்டறியனும். அவிகளை சரியான சிகிச்சைக்கு அனுப்பனும் .அரசாங்கம் சரிய்யான சிகிச்சைக்கு தேவையான் இன்ஃப்ரா ஸ்ட் ரக்சரை உருவாக்கனும்.

2.டாஸ்மாக்கை நம்பி -அதை சுற்றி இயங்கினவுகளுக்கு ஆல்ட்டர்னேட்டிவ் சோர்ஸ் ஆஃப் இன்கம் காட்டியாகனும்.

3.உதாரணமா எத்தனால் உபயோகத்தை அதிகப்படுத்தலாம் – ஆல்க்கஹாலை எரிபொருளா உபயோகிக்கிற வழிகளை கண்டறிஞ்சு அமலாக்கனும்.

4. இன்னைக்கிருக்கிற எக்ஸைஸ் டிப்பார்ட்மென்டை ஆஃபீஸோட வச்சு – மேற்சொன்ன மெஷினரியோட உத்தரவுப்படி இயங்கும் வாட்ச் டாக் ஆ மாத்தனும்.

5.கடந்த காலத்துல கள்ளச்சாராய உற்பத்தியில ஈடுபட்டிருந்தவுகளை முன் கூட்டியே கண்டறிஞ்சு அவிகளுக்கு ஆல்ட்டர்னேட்டிவ் சோர்ஸ் ஆஃப் ஜாப்,பிசினஸ் ,இன்கம் காட்டியாகனும்.

இதெல்லாம் செட் ஆக குறைஞ்ச பட்சம் 3 மாசமாச்சும் பிடிக்கும். இந்த இடைப்பட்ட காலத்துல (குடி) மக்களை சைக்கலாஜிக்கலா ப்ரிப்பேர் பண்ணனும்.

அடுத்து டாஸ்மாக்கை தடை செய்வதில் உள்ள பிரச்சினை அரசுக்கான வருவாய் இழப்பு. இதுக்காவ ஆதிகாலத்துலயே நாம ஒரு பாக்கேஜ் ரெடி பண்ணியிருக்கம்.அது மீள் பதிவாக இங்கே.

மானில அரசு தன் நிர்வாக செலவை குறைக்க -மக்கள் மீது பாரம் சுமத்தாது வருவாயை உயர்த்திக்கொள்ள சில வழி முறைகள்:

நிபந்தனை:
இந்த யோசனைகள் எனக்கு மட்டுமே சொந்தம்.(Intellectual property) எனது ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்ட அமலுக்கு இந்திய அரசு மானில அரசு நிர்வாகங்கள் மூலம் நிதி திரட்டவே தீட்டப்பட்ட திட்டம் இது . அதற்காக அல்லாது சுயேச்சையாக இந்த யோசனைகளை அமல்படுத்த விரும்பும் மாநில அரசு(கள்) என் அனுமதியை பெற்ற பிறகே அமல் படுத்த வேண்டும். (இந்த பதிவின் பிரிண்ட் அவுட்டை என் விலாசத்துக்கே சீல் வைத்து ரிஜிஸ்டர் தபாலில் அனுப்பிக்கொண்ட பிறகே இங்கு பதிகிறேன். டேக் கேர்.)

1.அரசு ஊழியர்களின் பல்வேறு தகுதிகள் மறு சோதனைக்குள்ளாக்கப்பட வேண்டும்.
உடல் சார்ந்த சோதனைகள் முழுக்க முழுக்க வேறு மானிலங்களில் மட்டுமே நடக்க வேண்டும். நமது மானிலத்தில் கிளைகள் இல்லாத வேற்று மானிலத்து தனியார் மருத்துவ மனைகளிலேயே நடக்கவேண்டும்.

புத்தி சார்ந்த சோதனை கம்ப்யூட்டரைஸ்ட் ஆப்ஜெக்டிவ் டைப்பில் நடக்க வேண்டும், மதிப்பெண்களை கம்ப்யூட்டரே நிர்ணயிக்க வேண்டும். அது ஆட்டோ மெட்டிக்காக அரசு வலைதளத்தில் பதிப்பிக்கப்பட்டுவிட வேண்டும். மன நலம் தொடர்புள்ள சோதனைகளும் இவ்விதத்திலேயே நடை பெறலாம். இச்சோதனைகளில் தகுதிபெற்றவர்களுக்கு மட்டுமே பணியில் தொடர அனுமதி.

தகுதியிழந்தவர்களுக்கு தகுதிகளை வளர்த்துக்கொள்ள/தேவையான சிகிச்சை பெற லாஸ் ஆஃப் பேயில் 3 மாதம் லீவு கொடுத்து மறுபடி சோதனைக்குட்படுத்தி அதிலும் தோற்றால் கட்டாய ஓய்வில் அனுப்பவேண்டும்.

இந்த அறிவிப்பை வெளியிட்டதுமே அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் குதிக்க வாய்ப்பிருப்பதால் முன் கூட்டியே எம்ப்ளாய்மென்ட் எக்ஸ்சேஞ்ச் மூலம் மூப்பு அடிப்படையில் தற்போதுள்ள அரசு ஊழியர்களின் எண்ணிக்கைக்கு இரட்டிப்பு எண்ணிக்கையில் டெண்டர் அடிப்படையில் ( ஒரே தகுதி, குறைந்த பட்ச சம்பளம்) இளைஞர்/இளைஞியரை முன் கூட்டியே அப்பாயிண்ட் செய்து ரிசர்வில் வைத்து கொள்ள வேண்டும்.

ஏற்கெனவே உள்ள காலியிடங்களுக்கும், மேற்சொன்ன மறு தேர்வில் டப்பாஸான (பாஸுக்கு ஆப்போசிட் தலைவா!) பார்ட்டிகளால் ஏற்படும் காலியிடங்களையும் டெண்டர் அடிப்படையில் அதாவது தேவையான தகுதியிருக்க வேண்டும்/குறைந்த சம்பளத்துக்கு பணியாற்ற முன் வருபவர்களை கொண்டு வேலையிடங்களை நிரப்ப வேண்டும்.

பி.கு: மிச்சம் , மீதி உள்ளவர்களுக்கு நிறைய வேலை இருக்கிறது. அதெல்லாம் இந்த பதிவில் அவ்வப்போது சொல்லப்படும்.

2. பட்டப்படிப்பில் இறுதியாண்டு படிக்கும் மாணவ மாணவியருக்கு ஓய்வு நேரத்தில்/ லீவு நாட்களில் (அரசு நிறுவனங்களுக்கல்ல) அரசு அலுவலகங்கள்,மருத்துவ மனைகள்,காவல் நிலையங்களை பார்வையிட்டு அறிக்கை தர தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்க வேண்டும். ஆய்வு நடத்தவேண்டிய அலுவலகத்தை நிர்ணயிக்க ஜம்ப்ளிங் முறையை பின்பற்ற வேண்டும்.(இப்பத்தான் செல் ஃபோன் இருக்கே சரியா அவிக பணியிடத்தை போய் சேர பிடிக்கும் நேரத்துக்கு 5 நிமிடம் முன்பு மட்டுமே எஸ்.எம்.எஸ் மூலமா தெரிவிச்சா போதும். எஸ்.எம்.எஸ் ரிசீவ் ஆன 3 ஆவது நிமிடம் அந்த ஃபோன் ப்ளாக் செய்யப்படவேண்டும். இதை கூட அவிக பயோடேட்டாவ அனலைஸ் பண்ணி அவிக சாதி,சனம் இல்லாத ஏரியாவா அவிகளுக்கு டச் / அறிமுகமிருக்கிற துறையை ஐடென்டிஃபை செய்து கம்ப்யூட்டரே பணியிடத்தை டிசைட் பண்ணி எஸ்.எம்.எஸ் அனுப்பறாப்ல ஏற்பாடு செய்யனும்.

3.மக்களில் 18 வ‌ய‌து நிறைந்த‌ ஆண்,பெண் அனைவ‌ருக்கும் குறுகிய கால /45 நாட்கள் போலீஸ் ப‌யிற்சி க‌ட்டாய‌மாக்க‌ ப‌ட‌வேண்டும். போலீஸ் பயிற்சி பள்ளியிலான அக்கிரமங்கள் குறையலாம்/வெளிச்சத்துக்கு வரலாம்/ போலீஸ் வேலையிலான ரிஸ்க்/ சீரியஸ் நெஸ் புரியலாம். எட்டணா போஸ்ட் கார்டிலோ /எஸ்.எம்.எஸ்ஸிலோ கபாலிக்கும், ஏட்டுவுக்கும் நடக்கும் சம்பாஷணையாக ஜோக் எழுதி அனுப்பாமல் இருப்பார்கள் அல்லவா. மேலும் இவர்களது பயோடேட்டாக்கள் டேட்டா பேசில் ஏறிவிடும். நாளை இவர்கள் க்ரைமில் இறங்கினால் ட்ரேஸ் செய்வது எளிது. போலீஸ் துறை முழு வீச்சில் பணி செய்ய வேண்டுமானால் இப்போதுள்ள ஸ்டாஃபை போல் இன்னும் 2 செட் ஆட்கள் தேவை. ஷிஃப்ட் சிஸ்டத்தில் வேலை செய்ய வேண்டும். சின்ன மூவ் மெண்ட் கூட கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட வேண்டும். அப்பத்தானே அடுத்த ஷிஃப்ட் ஆளு தொடர முடியும்.

4.வேலைய‌ற்றோர்/அர‌சு ஊழிய‌ர்க‌ளில் எவ‌ரை எந்த‌ ப‌ணிக்கு வேண்டுமானாலும் அர‌சு ப‌ய‌ன்ப‌டுத்திக்கொள்ள‌ வ‌ழி வ‌கை செய்ய‌ வேண்டும். ஒரு மேன் பவர் பூல் கிரியேட் பண்ணி அதை கம்ப்யூட்டரைஸ் பண்ண வேண்டும். அவன் /அவள் தகுதிகளை/விருப்பங்களை வைத்து எவன் எங்கே வேலை செய்யவேண்டும் என்று கம்ப்யூட்டர் முடிவு செய்யவேண்டும்.

5.ம‌க்க‌ள் த‌ங்க‌ளை குறித்த‌ விவ‌ர‌ங்க‌ளை க‌ம்ப்யூட்ட‌ர் புரிந்து கொள்ளும் வ‌கையிலான‌ ,10 ரூ. முத்திரை தாளில் அச்சிட‌ப்ப‌ட்ட‌ ப‌டிவ‌த்தில் அர‌சுக்கு அளிக்க‌ ஏற்பாடு செய்ய‌ வேண்டும். இந்த‌ விவ‌ர‌ங்க‌ள் அட‌ங்கிய‌ டேட்டா பேஸ் அடிப்ப‌டையில் அர‌சு திட்ட‌ங்க‌ள் வ‌குக்க‌ப்ப‌ட‌ வேண்டும். அமல் செய்வது உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். தேவையான தொழில் நுட்பம், மேன் பவரை தருவதும், சூப்பர் வைஸ் செய்வதும் மட்டுமே மாவட்ட இயந்திரத்தின் வேலையா இருக்கனும்.

6.அரசு விளம்பரங்கள் எக்காரணம் கொண்டும் பத்திரிக்கை,ரேடியோ , டி.வி சேனல்களில் வெளியிடப்பட கூடாது.(காசு செலவழித்து) அரசு சார்பில் வெளிவரும் பத்திரிக்கையில் மட்டுமே வெளியிடப்படவேண்டும். மானில முழுவதிலுமான மக்களுக்கு தேவைப்படும் விளம்பரங்கள் மெயினாகவும் , மாவட்ட அளவில் மட்டுமே தேவைப்படும் விளம்பரங்கள் தனி இணைப்பாகவும் வெளியாக வேண்டும். தேவைப்பட்டவர்கள் வாங்கி படிக்கலாம் அ இணையத்தில் பார்த்துக்கொள்ளலாம். மேற்படி அரசிதழுக்கு ஜம்ப்ளிங் முறையில் தினம் ஒரு பிரபல பத்திரிக்காசிரியர் ஆசிரியத்வம் வகிக்கலாம்.

7.அரசு அலுவலகங்கள், பள்ளிகள்,கல்லூரிகள் அனைத்தும் டைம் ஷேர் முறையில் வேலை செய்யவேண்டும். அரசு வேலை நேரமல்லாத நேரத்தில் தனியார் அங்குள்ள இன்ஃப்ரா ஸ்ட் ரக்சரை வாடகை செலுத்தி பயன் படுத்திக்கொள்ள வழிவகை செய்யவேண்டும். (அதிக பட்ச காஷன் டெப்பாசிட்/ பேங்க் கியாரண்டி வசூலித்துக்கொண்டு)

8.அதற்கு முன்பாக மேற்சொன்ன ஸ்தலங்களின் அமைப்பை பொருத்து காலை 6.30 முதல் மதியம் 2.30 வரை போதிய சூரிய வெளிச்சம், காற்று வரும்படி ஆல்ட்டர் செய்யவேண்டும். ஷாபிங்க் காம்ப்ளெக்ஸ், மரம் நடுதல் , காற்றாலை அமைத்தல், சோலார் பவர் யூனிட் ஸ்தாபித்தல் இத்யாதி மார்கங்கள் மூலம் கூடுதல் வருவாய்க்கு வழி செய்யவேண்டும். வாய்ப்புள்ள இடங்களில் கூடுதல் தளம் (ஸ்டேர்) அமைக்கலாம். அது ஆடும் பல்லாயிருந்தால் இடித்து தள்ளி புதிய கட்டிடமே கட்டலாம். BOT முறையில் ( Build-Operate-Transfer) புதிய கட்டிடம் கட்டுவதாயின் அண்டர் கிரவுண்டில் பார்க்கிங் ஏற்பாடு செய்யலாம். இந்த ஒப்பந்தம் டைம் பவுண்டடாக இருக்கவேண்டும். காலம் தவறினால் (புயல் மழை தவிர்த்து இதர காரணங்களால் ஒப்பந்த காரரின் சொத்து ஜப்தி செய்யப்படவேண்டும்)

9.வாரத்துக்கு ஒரு தினத்தை சுற்று சூழல் தினமாக அறிவித்து அன்று அனைத்து தனியார் வாகனங்களையும் ( பஸ்ஸு, கூட்ஸ் கேரியர் லாரி வரை விட்டுடலாம் பாஸ். எஸ்காம் தெரிஞ்ச கதைதானே) தடை செய்யலாம். மீறி போய் தான் ஆவேன்னா ஒரு மரம் நட்டு அதை பராமரிக்கிற செலவை அந்த பார்ட்டிக்கிட்டருந்து வசூலிக்கலாம்.

10.காவல் துறை உட்பட அரசு துறைகளுக்கு எழுத/அனுப்பப்படும் விண்ணப்பங்கள்/புகார்கள் அஃபிடவிட்டுடன் அனுப்ப வழி செய்யவேண்டும். பொய்/தவறான தகவல் என்று நிரூபணமானால் ரூ.500 வரை அபராதம் விதிக்கலாம்.

11. சாதா தந்தி,அவசர தந்தி போல 1 மணி முதல் 24 மணி நேரத்தில் தீர்வு தேவைப்படும்/கோரப்படும் ரெப்ரசன்டேஷன்ஸ் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க ரூ.500 காஷன் டெப்பாசிட்டாக செலுத்தப்படவேண்டும். அதில் தவறு/பொய் இருந்தால் கா.டெப்பாசிட் ஸ்வாஹா

12.பஞ்சாயத்து மீட்டிங் ஹால் முதல் சட்டமன்றம் ஈறாக கூட்டம் நடக்காத காலங்களில் தனியாருக்கு வாடகைக்கு விட்டு பணம் பார்க்கலாம். என்னைக்கேட்டால் சட்டமன்ற கூட்டமே வீண் வேலை .வெறுமனே மேசையை தட்டிக்கொண்டு , கண்ணாடியை பறித்துக்கொண்டு, சேலையை உறித்துக்கொண்டு.. பேசாமல் வீடியோ கான்ஃப்ரன்ஸ் முறையில் கதையை முடிக்கலாம். (இது சட்டமன்ற உரிமைக்குழு நடவடிக்கைக்கு இலக்காகாதில்லிங்களா?)

13.காவல்,மருத்துவம், தீயணைப்பு தவிர மற்ற அனைத்து வாகனங்களையும் க்ளோபல் டெண்டர் அழைத்து விற்றுத்தொலைக்க வேண்டும் . பேசாமல் கி.மீ க்கு இவ்வளவு என்று காண்ட் ராக்டில் அமர்த்திக்கொள்வது பெஸ்ட் ஆஃபர்.

14. நாள் முழுக்க அலர்ட்டில் இருக்க வேண்டிய துறைகளை தவிர மற்ற துறைகள் அனைத்தும் தினம் காலை 6.30 முதல் மதியம் 2.30 வரை உண்மையாக வேலை செய்தால் போதும். என்ன டேபிளுக்கே டீ, நிகோடின் சாக்லெட்,சிக்லெட்,டிஃபன், லஞ்ச், ஒழுங்கான கழிவறை வசதி ஏற்பாடு செய்யவேண்டும்.(இவிக 10 மணிக்கு வந்து 12 வரை டீ கடைல இருந்துட்டு மறுபடி டீ கடைக்கு போய் ராத்திரியெல்லாம் வேலை பார்க்கிறதா பம்மாத்து பண்ண அரசு செலவழிக்கிறதை விட இது ஒன்னும் வீணில்லா)
15.முதற்கண் எல்லா பேப்பர்ஸையும் டிஜிட்டலைஸ் பண்ணிரனும். அதை ஒட்டு மொத்த மானில அரசு இயந்திரத்துக்கு அவெய்லபிளா வைக்கலாம். 15 நாளைக்கு முந்தைய காகிதம் கேட்டு யாராச்சும் வந்தா சர்ச் ஃபீ ரூ 10 வசூலிச்சிக்கிட்டு சூடா ஒரு ப்ரிண்ட் அவுட் கொடுத்துரலாம். ( லெட்டர் காபி கேட்டு சென்னைக்கு எழுதியிருக்கோம்ங்கற பருப்பெல்லாம் வேகாதில்லை). இவிக ஆஃபீசுகளுக்கு திரிஞ்சு திரிஞ்சு தேஞ்சு போற 12 ஜோடி செருப்போட விலையோட ஒப்பிட்டா பத்து ரூபால்லாம் ஜுஜுபி.

16.அரசு பள்ளி, கல்லூரி,ஐ.டி.ஐ,பல்கலை இதெல்லாம் படிப்படியா சொந்த கால்ல நிக்க (அரசு க்ராண்ட் எதிர்பார்க்காம) வழிவகை செய்யனும். உ.ம் வாய்ப்புகளை பொருத்து ஷாப்பிங் காம்ப்ளெக்ஸுகள், டைம் ஷேர் சிஸ்டம், சோலார் பவர், பயோ கேஸ் யூனிட்ஸ்,காற்றாலைகள்.

17.அரசுத்துறையில் நட்டம் வந்தால் துறை அதிகாரி முதல் ஊழியர் வரை அனைவருக்கும் அவரவர் சம்பள விகிதப்படி ஷேர் பண்ணிரனும். அதே போல இதுவரை வந்த லாபத்தை விட கூடுதலா லாபம் வந்தாலும் கூடுதல் லாபத்தை பிரிச்சு (சம்பளங்களின் விகிதத்துல ) கொடுத்துரனும்.

18.ஆடி,மார்கழி மாதத்திலான சொத்து விற்றல்,வாங்கல் பதிவுகளுக்கு பத்திர செலவு, பதிவு கட்டணத்தில் 10% தள்ளுபடி.(இது ஏதுக்குனு கேட்டா பதில் அப்புறமா சொல்றேண்ணா)

19.மேற்படி பல வழிகள்ள செலவுகள் குறைஞ்சு, வருவாய் அதிகரிக்கும்போது ஏழை மக்களுக்கு கு.ப வாடகையில் வீடுகள், கடைகள் கட்டித்தரவேண்டும். எவரும் 2 1/2 வருடங்களுக்கு மிஞ்சி அதே வீட்டில் அ கடையில் இல்லாதவாறும் குலுக்கல் முறையில் பந்தாடிக்கொண்டே இருக்கவேண்டும். அலாட்மென்டும் இதே முறையில் நடக்க வேண்டும். (இதனால அரசுக்கு மெடிக்கல் பில் குறையும், க்ரைம் ரேட் குறையும், வரி வசூல் அதிகமாகும்)

20.திருமலைல சிறப்பு தரிசனம் மாதிரி ஸ்பெஷல் பவர் கனெக்சன் கொடுக்கலாம். கொழுத்தவங்கள் வாங்கிக்குவாங்க. ஒரு நாளைக்கு 24 மணி நேரமும் குவாலிட்டி கரண்ட் வித்தவுட் இன்டரப்ஷன் கொடுக்கலாம். டபுள் சார்ஜ் போடலாம். அப்போ சாதா பவருக்கு தர்ர சப்சிடியும் ஓரளவு கவர் ஆகும். எதிர்கால முதலீட்டுக்கும் வழி ஏற்படும். இலவச மின்சாரம்னு வழங்கறோம் . கணக்கில்லை.வழக்கில்லை. ஜெயலலிதா அம்மையார் அடையாள சம்பளம் வாங்கிக்கிட்ட மாதிரி அடையாள கட்டணமா ஒரு ரூபாயாச்சும் வசூல் பண்ணனும். அப்போ எல்லா பயனாளியோட ஜாதகமும் டேட்டா பேஸுக்கு வந்துரும். லட்ச ரூபா பைக் வாங்கறவன் யாரு, ரஹ்மான் ஸ்டார் நைட்டுக்கு போறவன் யாருனு மொத்த டேட்டாவையும் கலெக்ட் பண்ணி பயனாளி பட்டியல்ல இருந்து தூக்கிக்கிட்டே வரவேண்டியதுதான்.

21.அரசு அதிகாரிகள் இன்ஸ்பெக்சனுக்கு போனா தங்க ஜனதா கெஸ்ட் ஹவுசஸ் கட்டனும். பராமரிப்பு பொறுப்பை ஆண்கள் சுய உதவி குழுக்களுக்கு தரலாம். பெண்கள் குழுவுக்கு தந்தா நித்யானந்தா சமாசாரம் எதுனா நடந்துரலாம்னு ஒரு முன்னெச்சரிக்கைதான்.

22.அரைப்பக்கத்துக்கு மிஞ்சி விளம்பரம் தர்ர எந்த நிறுவனமா இருந்தாலும் வரி வசூலிக்கனும். அன் ப்ரொடக்டிவ் விளம்பரங்கள் கட்சி, கருமாந்திரம், பிறந்த நாள் வாழ்த்து, விளம்ப்ரம் தரக்கூடாத விஷயங்களுக்கு விளம்பரம் தந்தாலும் டாக்ஸு
எதுவானாலும் இதான் ரூலு.

23.ஞாயிறு கடை திறந்துக்க. வேலையாட்கள் கிட்டேருந்து என்.ஓ.சி கொடு. டாக்ஸ் கட்டு.

24.ஒரு படம் 100 நாள் ஓடினா டாக்ஸ் ( மனித வேலை நாட்களை வீணாக்கினதுக்கு நஷ்ட ஈடு)

25.அன் ப்ரொடக்டிவ் ஃபங்க்சன் பண்ணா (மண்டபத்துல வச்சி) டாக்ஸு உ.ம்:. கண்ணாலம், சீமந்தம்,பாப்பாவுக்கு பிறந்த நாள்.

26.ஃப்ளெக்ஸ் வச்சா ஒரு நாளைக்கு இவ்ளோனு டாக்ஸு

27.ஊர்வலம், கூட்டம் ,தர்ணா,கடையடைப்பு நடத்தினா டாக்ஸு.

28.அனைத்து அரசுத்துறை ஊழியர்களுக்கும் செல்ஃபோன். பரஸ்பர ஃப்ரீ கால் வசதியுடன். (டெலிஃபோன்ஸ் எல்லாம் வாபஸ்)

29.அரிசி அட்டை வச்சிருந்து தனியார் நர்சிங் ஹோம்ல குழந்தை பெத்தா டாக்ஸு.
(அதுக்கு மின்னாடி இன் குபேட்டர் ஷார்ட் ஆயிராம, ஆக்சிஜன் சிலிண்டருக்கு பத்தாக்குறை வராம பார்த்துக்கனும்ணா இல்லேன்னா ஆஸ்பத்திரியை பத்தவச்சுருவாய்ங்க)

30. ரெண்ட் அக்ரிமெண்ட் விஷ்யத்துல (ஷாப் /ஹவுஸ்) ரீஃபண்டபிள் அட்வான்ஸ்ல 40% அரசு சேமிப்பு பத்திரமா தான் வழங்கப்படனும். பெண்ணை பெத்தவங்க பெண்ணுக்கு பரிசா ( வரதட்சிணை?) தர்ர கோல்டை கோல்ட் இன்வெஸ்ட்மென்ட் ஸ்கீம் மூலமாவும், கேஷை அரசாங்க சிறு சேமிப்பு பத்திர மூலமாவும் தான் தரணும்)

31அரசாங்க வெப்சைட்டில் மேட் ரி மோனி, ஆன் லைன் ஜாப்ஸ், சாட் வித் இன்டெலெக்சுவல்ஸ்,ப்ரொஃபெஷ்னல்ஸ் எல்லாம் வைக்கலாம். அரசே ஒரு சர்ச் இஞ்சின் வைக்கலாம். ஒரு திரட்டி வைக்கலாம் . ப்ரவுசர்ஸ் கருத்துப்படி சிறந்த பதிவுகளுக்கு தினசரி 1000, 500, 250 ரூ பரிசு தரலாம்.

32.லைசென்ஸ் இத்யாதில கூட அர்ஜெண்ட் ஆர்டினரினு வச்சி டபுள் சார்ஜ் பண்ணலாம். அவசரத்துக்கு பிறந்த பயலுவ செலவழிக்கட்டுமே.

33. கொரியர் கம்பெனிகளோட ஒப்பந்தம் வச்சிக்கிட்டு கேஸ்ட்,இன் கம், சாதி சர்ட்டிஃபிகேட்டையெல்லாம் டோர் டெலிவரி தரலாம். அட் ரசும் ப்ரூவ் ஆகும்.பைசாவும் பெயரும்.

34.பொல்யூஷனை க்ரியேட் பண்ற தொழிலுக்கெல்லாம் அந்த பொல்யூஷனை ரெக்டிஃபை பண்ண எத்தனை மரம் நடனும், அதுக்கு என்ன செலவாகும்னு கணக்கு போட்டு வசூலிக்கலாம்.

35.கல்யாணமாகாத, வேலையில்லாத ஆண் பெண்களை கெஜட்டட் ஆஃபீசர் ஒருத்தர் ஐடென்டிஃபை பண்ற மாதிரி ஏற்பாடு பண்ணனும் .அவிகளுக்கு அரசே ஐ.டி வழங்கனும். விடோயர்ஸ், டைவோர்ஸீஸ், நோயாளி பெண்டாட்டி, நோயாளி கணவனுள்ளவங்களையும் இப்படி ஐடென்டிஃபை பண்ணி ஐ.டி கொடுக்கிறது நல்லது. இந்த விவரங்களை அந்தந்த ஏரியா ஸ்டேஷனுக்கு அவெய்லபிள்ள வைக்கனும். (செக்ஸ் க்ரைமுக்கு இதான் அடிப்படை ) இவிகளுக்கு கவுன்சலிங் தர ஏற்பாடு பண்ணனும் . இவிகளுக்கு சங்கம் வச்சு கூட்டி சாரி கூடி பழக வழி செய்தாலும் ஓகே. ஊத்தி கொடுக்கிறதை விட இது பெட்டர். ஏன்னா நிப்பிள் காம்ப்ளெக்ஸால தான் குடிக்கவே ஆரம்பிக்கிறாய்ங்களாம்.

36.ஊருக்கொரு ஜனதா மீட்டிங் ஹால். வாடகை ஒரு மணி நேரத்துக்கு ரூ 100+ பவர் சார்ஜ்

37.கல்யாணமாகாம சேர்ந்து வாழ விரும்பறவுகளுக்கு டெம்ப்ரரி ரெஜிஸ்ட் ரேஷன் செய்யலாம்.

38. ஐம்பது பேருக்கு மேல சாப்பிடற மெஸ்,ஹோட்டல், கல்யாண மண்டபம் எல்லா இடத்துலயும் பயோகேஸ் யூனிட் அமைக்கறத கட்டாயமாக்கனும்.

39.குக்கர் இல்லாத வீடுகளுக்கு குக்கரும், கேஸ் இல்லாத வீடுகளுக்கு கேஸும் கட்டாயமா கொடுத்தாகனும். இதனால தண்ணீர் வினியோகம், எரிபொருள் வினியோகம்,பொல்யூஷன் மானாவாரியா குறையும்.

40.லாரி மூலம் தண்ணி சப்ளை பண்றாய்ங்க. ஃபில்லிங்க் பாயிண்ட்லருந்து பைப் லைன் போட்டு அழனும்.

41.பஸ் ஸ்டாண்ட் , பொது இடங்கள் மேல மத்தில ஓப்பன் வராப்ல (வெண்டிலேஷன்/ ஏர் பர்ப்பஸ்) கான் க்ரீட் கூரை அமைச்சு நடை பாதை பார்ட்டிகளுக்கெல்லாம் கழிவறைல பாதி சைஸ்ல கடை போட்டு கொடுக்கனும்.

42. வருமான வரி வசூலை அந்தந்த வியாபரிகள் சங்கங்கள் கிட்டயே ஒப்படைச்சுரனும். என்ன ஒரு வருஷ வரி முன் பணமா கட்டனும். அரசு கொடுத்த டார்கெட்டை கவர் பண்ணனும் .ஆண்டுக்கு குறிப்பிட்ட சதவீதம் டார்கெட் உயர்ந்துகிட்டே போகுங்கற கண்டிஷனை ஏத்துக்கனும்.

43.அரசு ஃபிலிம் இன்ஸ்டிட்யூட் பிள்ளைங்களை வச்சி நியூஸ் ரீல் மாதிரி இல்லாம ஸ்வாரஸ்யமா நோய் தடுப்பு, கருத்தடுப்பு, வன்முறை தடுப்பு,குற்றத்தடுப்பு மாதிரி சமாசாரங்களை படமா எடுக்க செய்து சி.டி.போட்டு வினியோகம் பண்ணனும். கலர் டிவியே கொடுத்தாச்சு அடுத்த ஸ்டெப் குட்டியா (சி)மடி ப்ளேயர் தான் .

44.அரசு ஊழியர்களுக்கு (ஆண்- பேண்ட் சட்டை ,பெண்-சுடிதார் சீருடை) தொந்தி போட்டு,பின் பக்கம் பெருத்துப்போன பார்ட்டிகள் மட்டும் வேட்டி,புடவை கட்டிக்கிட்டு அழட்டும் அதை பார்த்து யார் அழறது. ஆஃபீசுக்குள்ளாற எந்த ரூமுக்கும் கதவே இருக்க கூடாது. இருந்தா கச முசா ஆரம்பிச்சுர்ராய்ங்க. கண்ணாடி கதவுதான் .சன் ஃபிலிமும் ஒட்டக்கூடாது. புதுசா கட்டற ஆஃபீசெல்லாம் நவகிரக சன்னிதி மாதிரி இருக்கனும். ஒருத்தன் மூதியை அடுத்தவன் பார்க்க கூடாது. மத்தில இருக்கிற அதிகாரி மட்டும் எல்லாத்தையும் பார்க்க சுழல் நாற்காலி. சவுண்ட் பொல்யூஷனுன்னா எஸ்.டி.டி பூத்மாதிரி கண்ணாடி,கொடுக்கல் வாங்கலுக்கு (பேப்பருங்கண்ணா) கவுண்டர். முக்கியமான சேதி ஆஃபீசுக்குள்ளாற வந்தபிறவு ஆண்களோட பாக்கெட் ட்ரான்ஸ்பரண்டா இருக்கனும். பெண்களோட பர்ஸு, ஹேண்ட் பாகு எல்லாமே ட்ரான்ஸ்பரண்டா இருக்கனும். (மிஞ்சி போனா ரெண்டு பேட் இருக்கப்போவுது அவ்ளதானே. டிவில பார்த்து பார்த்து 3வயசு குழந்தைக்கு கூட என்ன சமாசாரம்னு தெரிஞ்சு போனபிறவு என்னத்த சீக்ரெட்டு.

45.துட்டு போனா …ரே போச்சுன்னு எல்லா கம்ப்யூட்டருக்கும் இன்டர் நெட் கனெக்சன். அவன் ப்ரவுசிங் ஹிஸ்டரியை டெலிட் பண்ண முடியாம லாக்கு.

46. தேவையான எல்லா இடத்துலயும் ஆண் பெண்களுக்கு தனித்தனி கழிவறை. கழிவிலிருந்து பயோ கேஸ் தயாரிக்க யூனிட்.

47. என்னை மாதிரி ஐடியா ஐயா சாமிகளுக்கு கொஞ்சம் சில்லறை , வெத்திலை பாக்கு

48.இந்த மாதிரி அறுவையை தாங்கிக்கிட்டு தொடர்ந்து படிக்கிற உத்தமர்களுக்கு ஜண்டு பாம் தைலம் ஒரு டப்பா

49.இதை அமல் படுத்த ஆரம்பிக்கும்போது வாய் திறக்கற ஆசாமிகளோட வாயை மூட பவர்ஃபுல் சலஃபைன் டேப்

50.சகட்டு மேனிக்கு ஸ்டே கொடுத்து தள்ளி தீர்ப்பு எழுதிராம எல்லா ஜட்ஜுகளுக்கும் மூடியே திறக்காத பேனா.

51.பகவத்கீதை ஒரு உட்டாலக்கடி என்று அடிமடியிலயே கை வச்சாலும் இத்தனை பாயிண்ட்ஸை ஞா வரவச்சு, புதுசாவும் எடுத்து கொடுத்த கிட்ணமூர்த்திக்கு அரட்டை அரங்கம் ஸ்டைல்ல நன்றி நன்றி நன்றி

மரணத்தை செயிக்கலாம் வாங்க !

மன்சன் எதை எதையோ செயிச்சாலும் கடேசில மரணம் அவனை செயிச்சுருது. 100 வயது வாழ்வது எப்டின்னு புஸ்தவம் போட்ட தமிழ்வாணனும் பூட்டாரு, “காலா என் காலருகே வாடா”ன்னு சவால் விட்டபாரதியார் பூட்டாரு. ” நான் செத்து பிழைச்சவண்டா”னு பாடின வாத்தியாரும் போய் சேர்ந்துட்டாரு. விஷ்ணுவோட கட்டுப்பாட்ல தான் நவகிரகிங்கள் இருக்காம். அதனாலதேன் விஷ்ணு கோவில்ல நவகிரக சன்னிதி கடியாதாம். சொன்னாங்க. கொய்யால .. செத்தவனை உயிர்ப்பிக்கிர அமுதம் பிறந்த பாற்கடல்லயே டேரா போட்டிருந்தாலும் கிட்ணரா வந்தப்போ டிக்கெட் போட வேண்டியதா போயிருச்சு. ஆயுள் காரகனோ -ஆயுள் ஸ்தானாதிபதியோ பெயில்ல வெளியவந்து போட்டுட்டாய்ங்க போல.

அந்த கிட்ணரு இப்டித்தான் இருப்பாருன்னு நமுக்கு காட்டி “தேவுடு”வா இருந்த என்.டி.ஆரும் பூட்டாரு. அந்த என்.டி.ஆர் பூட்டாலும் அவரோட ஐடியாலஜி உசுரோட தாண்டா இருக்கு -அதுக்கு மரணமில்லைன்னு காட்டி சகட்டுமேனிக்கு நல திட்டங்கள் கொண்டு வந்து பேதவாரி தேவுடுவா (ஏழைகளின் கடவுள்) இருந்த ஒய்.எஸ்.ஆரும் பூட்டாரு.

ஆக காலத்தை வென்றாலும், ஞாலத்தை வென்றாலும் மரணத்தை மட்டும் வெல்லவே முடியாது. ஆனால் கொஞ்சமே கொஞ்சம் வில் பவர் இருந்தா பாயலா காட்டலாம். அதைத்தேன் பந்தாவா மரணத்தை செயிக்கலாம் வாங்கன்னுட்டு தலைப்புல சொல்ட்டேன். சாரி மிஸ்டர் எம்.டி.ராஜ் !

இங்கன இந்த பதிவுல நான் சொல்லப்போற மேட்டர்லாம் பக்கா தான்.ஆனால் பத்து வட்டி பரதேசிங்க, கூட்டிக்கொடுக்கிற காட்டிக்கொடுக்கிற கஸ்மாலங்க, ஊரை அடிச்சு உலையில போடற உலுத்தங்களுக்கெலலம் ஒர்க் அவுட் ஆகாது. இன்னம் சொல்லப்போனா நாம மரணத்தை செயிக்க கொடுக்கிற டிப்ஸை அவிக ஃபாலோ பண்ணா அவசரமா டிக்கெட் போட்டாலும் போட்டுருவாய்ங்க. டேக் கேர். ( மேற்படி லிஸ்டுல இன்னம் நிறைய பீத்தரை,பிக்காலிங்கல்லாம் இருக்காய்ங்க அதெல்லாம் நம்ம பதிவுகளை தொடர்ந்து படிக்கிறவுகளுக்கு சொல்லாமலே தெரியும்)

மேட்டருக்கு போயிருவமா? மரணத்தை செயிக்கனும்னா ஒரே வழி நாம செத்துப்போயிரனும். இப்பம் ஜாதகப்படி ஒரு பார்ட்டி டிக்கெட் போட்டே ஆகனும்னு இருக்குனு வைங்க. அந்த பார்ட்டி மேற்படி பட்டியல்ல வரலைன்னு வைங்க. அந்த பார்ட்டியோட டிக்கெட்டை போஸ்ட் போன் பண்ண முடியும்.

எப்டின்னா? ஒடனே செத்துப்போயிரனும். ( எம்.சி.யாரு குண்டடி பட்டு கிடந்தப்போ பூட்டாருன்னு ரேடியோலயே சொல்ட்டாய்ங்களாமே நெஜமா?)

கொய்யால சாவை செயிக்க ஸ்கெட்ச் தரேனுட்டு சாகச்சொல்றிங்களேண்ணேனு நொந்துக்காதிங்க. மரணத்தை செயிக்க ஒரே வழி செத்துப்போயிரனும். இதான் ஒரே வழி.

சாகும் வழிகள்;

மன்சனுக்குள்ள இருக்கற நான் என்ற எண்ணம் – சுயம் – ஈகோ இது அல்லாத்தையும் தாண்டி இன்னம் ஏதோ இருக்கு. அதை ஆத்மா – ஆமைவடை -ஆண்ட்ராய்டுன்னு எந்த பேரால குறிப்பிட்டாலும் மொத்தத்துல இருக்கு.

ஆனால் அது நம்ம மன்மோகன் சிங் கணக்கா பார்க்காது -கேட்காது- பேசாது -செயல்படாது. இப்டியா கொத்த பி.எம் கீறப்போ சோனியா மாரி பார்ட்டி அவரை ஓரங்கட்டிட்டு ஆடலியா அந்த மேரி ஆத்மா கோமால இருக்கிறதால ஈகோ நம்மை ஆட்டி வைக்குது.

பை மிஸ்டேக் அந்த ஈகோ தான் நாமன்னு ஒரு பிரமையிலயே வாழ்ந்துக்கிட்டிருக்கம். இதனாலதேன் அந்த ஈகோ லேசா அடிவாங்கினா கூட ” இல்லை மச்சான்.. அவன் ஒரு பார்வை பார்த்தாம் பாரு கொய்யால உசுரே பூட்ச்சி -செத்துபோயிரலாமான்னு ஆயிருச்சு”ங்கறோம்.

ஆக அசலான சமாசாரம் ஒழியலின்னாலும் நாம அசலுன்னு நினைச்சிட்டிருக்கிற போலி ஒழிஞ்சாலே போதும் அசலானது பூட்டாப்ல – உசுரு போனது போல டீலாயிருவம்.

ஒரு படத்துல விவேக்கு பெரீ தாதா மாரி பில்டாப் கொடுப்பாரு.சுமன் கிட்டே கூப்டு காலை அமுக்க சொன்னா ஒடனே அமுக்குவாரு. ஏன்டான்னா பில்டாப்பை காப்பாத்தறதை விட உசுரை காப்பாத்திக்கிறது முக்கியம்.

இங்கன நம்ம ஈகோ கூட அப்டித்தான். சுயம் கூட அப்டித்தான். அசலான உசுரு பூடப்போவுதுன்னா நாலு காலையும் தூக்கிருது..

டஜன் கணக்கா கொலை பண்ணவுனை தூக்குல போட்டா ஒன் பாத்ரூம்,டூ பாத்ரூம்லாம் போயிருவாய்ங்களாம்.

நான் சாகனும்னு சொன்னது ஈகோ தான். சுயம் தான். மேலும் நாம சாகாம செத்துப்போக உன்னதமான வழி தியானம். இன்னொரு வழி செக்ஸிலான ஆர்காசம் -ப்ளாக் அவுட் – குட்டி மரணம்.

சாவு நெருங்கறச்ச கில்மா பண்ணனுமான்னு கேட்கப்படாது. ஆனால் நிறைய கேசுகள்ள மரணத்தின் போது வீரியம் ஸ்கலிதமாகுதாம்.

ஜஸ்ட் கில்மா ஈஸ் நாட் எனஃப். அந்த குட்டி மரணத்தை ஃபீல் பண்ணனும். ஒடனே ஈகோ டூட்டி மாத்திக்காம டீல்ல விடனும். இதெல்லாம் அவசரத்துக்கு வேலைக்காகிற மேட்டர் இல்லை. இதுக்கு நீண்ட பயிற்சி தேவை.அதுக்குத்தேன் கண்ணாலம்னு ஒரு ப்ராஜக்ட்டையே வச்சிருக்காய்ங்க. பத்துப்பதினைஞ்சு வருசம் கரீட்டா ஒர்க் அவுட் பண்ணா ஒரு வேளை ஒர்க் அவுட் ஆகலாம். அதனால இதை விட்டுருவம்.

மேற்சொன்ன ரெண்டு வழி மட்டுமில்லாம சாகாம சாக இன்னம் சில வழில்லாம் இருக்கு. அதையெல்லாம் நாளைக்கு சொல்றேன். ஏன்னா மரணத்தை செயிக்க ஒரே வழி செத்துப்போறது..

ஆயுளை கணிக்க ஒரு ஷார்ட் கட்

அண்ணே வணக்கம்ணே !
லைஃப் டைம்ல ஒரு தாட்டி ஆடி கிருத்திகை தினம் முருகர் கோவிலாண்ட இருந்து எம்.ஜி.ஆர் ஸ்ட்ரீட் வரை ஓடியிருக்கம். அதுவும் சாலையில இல்லை.மலைலருந்து புதுப்பாதை கண்டுபிடிச்சு. மேட்டர் இன்னாடான்னா திடீர்னு ரெண்டு பார்ட்டிங்க மோதிக்கிட்டாய்ங்க. அது அத்தோட நிக்கிறாப்ல இல்லை. பெரிய கலவரமே வெடிக்கும் போல சந்தர்ப்பம்.

ஒடனே நம்மாளுங்களை அலார்ட் பண்றதுக்கு ஓட வேண்டியாதிருச்சு. எக்ஸ்பார்ட்டிங்க கும்பலா
கம்பு, பட்டாக்களோட மிலியன் மார்ச் பண்ணிட்டு பூட்டாங்க. செட்டில்மென்ட். இல்லின்னா என்னாகியிருக்குமோ?

சொல்ல வந்த மேட்டர் இன்னாடான்னா ஓட்டப்பந்தயத்துல நீங்க எப்டி டேக் ஆஃப் ஆறிங்கங்கறது ரெம்ப முக்கியம்.

உங்க ஒட்டு மொத்த ஓட்டத்தையும் அந்த டேக் ஆஃப் தான் இன்ஃப்ளுயன்ஸ் பண்ணும். அதே போல கடக்க வேண்டிய தொலைவுல மத்ய பாகத்துல ச்சொம்மா ஓடினாப்ல கதை பண்ணனும். மாரால முட்டி கிழிக்க வேண்டிய ரிப்பன் கிட்டக்க போறச்ச.. இன்டியன் மிலிட்டரியும் -பாக்கிஸ்தான் மிலிட்டரியும் கூட்டா துரத்தின கணக்கா பிச்சுக்கிட்டு ஓடனும்.

இந்த ஆயுள் சமாசாரத்துல கூட இதான் நடக்கனும். டேக் ஆஃப் ரெம்ப முக்கியம். விதையின் வீரியம் -ஆத்தாவோட ஹெல்த் -அந்த காலகட்டத்துல அவிக எடுத்த உணவு – எதிர்கொண்ட பிரச்சினைகள் – நாம பிறந்து ஒரு ஒன்னரை வருச காலம் அம்மாவோட மார்பு சூடு – தாய்ப்பால் – உணவு இத்யாதில்லாம் சேர்த்தா அதான் டேக் ஆஃப்.

இந்த டேக் ஆஃப் செரியில்லின்னா அது நிச்சயமா ஆயுளை பாதிக்கும். நாம ஆயுர்தாயம் பண்றதில்லை. ஆனால் ஒரு சில க்ளூஸ் கொடுக்கிறதுண்டு. உங்க ஆயுளை எக்ஸ்னு வச்சுக்குவம்.அதை 12 பாகமா பிரிங்க.

லக்ன பாவம் உங்க வாழ்க்கையிலான மொத பாகத்தை காட்டறதா வச்சுக்கிருவம். லக்னத்துல லக்னாத் பாவ கிரகம் இருக்கிறது -லக்னாதிபதி புதனாய் இல்லாத பட்சத்துல சூரியனோட சேர்ரது – அல்லது துஸ்தானங்கள்,மாரகஸ்தானங்கள்ள இருக்கிறதுன்னு இருந்தா உங்க இளமையில ஒரு குறிப்பிட்ட ஆண்டுகள் குடும்பத்தை வறுமை வாட்டறதோ நோய் நொடிகள் பாதிக்கிறதோ வயதுக்கேத்த வளர்ச்சி -ஐக்யூ உட்பட இல்லாம போறதோ நடக்கும்.

இப்படி கழிந்த ஆண்டுகள் எத்தனைன்னு உங்க அனுபவத்தை வச்சு சொல்லிரலாம். அந்த குறிப்பிட்ட ஆண்டுகளை 12 ஆல பெருக்கினா வர்ர நெம்பர் தான் உங்கள் ஆவிசு (இது கொள்கை அளவு முடிவுதான்)

செரி.. உங்க லக்னம் சூப்பர்.லக்னாதிபதி சூப்பரு. மேற்சொன்ன எந்த பிரச்சினையும் இல்லைன்னு வைங்க. இப்பம் ரெண்டாம் பாவத்தை பாருங்க .அது பல்பு வாங்கியிருந்தா குறிப்பிட்ட வருசங்கள் சுகவாழ்வு -அதுக்கு பிறவு இம்சைங்க ஆரம்பிச்சிருக்கும். நீங்க எத்தனை ஆண்டுகள் சுக வாழ்வு வாழ்ந்திங்களோ அத்தீனி வருசத்தை 12 ஆல பெருக்கினா அதான் உங்க ஆவிசு.ஒரு வேளை உங்க ரெண்டாம் பாவமும் ஓகேன்னா மூணாம் பாவத்தை பார்க்கனும்.

வாழ்க்கைங்கற ரன்னிங் ரேஸ்ல டேக் ஆஃப்ல பிரச்சினை வந்துரக்கூடாதுன்னுதான் லக்னம் -லக்னாதிபதியை இந்த அளவுக்கு ஹைலைட் பண்ணுது ஜோதிடம்.

இன்னொரு ஆங்கிளுக்கு வருவம். இந்த மருந்து மாத்திரைக்கெல்லாம் எக்ஸ்பைரி டேட்டுன்னு ஒன்னு கொடுத்திருப்பான்.

அதை எப்பம் டிசைட் பண்றாய்ங்க? ஃபேக்டரியில ப்ரொடக்சனின் போதே டிசைட் பண்ணிர்ராய்ங்க. அப்படி ஒரு கரு உருவாகும் போதே அதனோட ஆயுசு டிசைட் ஆயிருது.

அந்த டப்பா மேல கீப் இன் கூல் அண்ட் ட்ரை ப்ளேஸ்னு போட்டிருக்கான்னு வைங்க. நீங்க பாத்ரூம்லயோ -அடுப்பாங்கரையிலயோ வைக்கிறிங்கன்னு வைங்க என்ன ஆவும்? சீக்கிரமா எக்ஸ்பைரி ஆயிரும்.

இன்னொரு ஆங்கிளுக்கு வருவம். கம்ப்யூட்டர் மவுஸ் இருக்கே இதனோட எக்ஸ்பைரி நெம்பர் ஆஃப் க்ளிக்ஸ்ல கொடுத்திருப்பான். அந்த குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கிளிக்ஸ் முடிய பத்துவருசம் ஆனாலும் பிரச்சினை இல்லை.மவுஸ் ஃபங்சன் ஆகும்.

ஆட்டோ மொபைல் ஃபீல்டுல கியாரண்டி -வாரண்டி எல்லாம் இத்தீனி ஆயிரம் கிமீ அ இத்தீனி மாசம்னு கொடுப்பான்.

அய்யய்யோ நிறைய தூரம் பயணிச்சுட்டா கியாரண்டி முடிஞ்சுருமேன்னு ஷெட்ல பூட்டி வச்சாலும் கியாரண்டி பீரியட் முடிஞ்சுரும்.

வண்டியை ஷோ ரூம்ல கொண்டு வந்து அப்டியே ஷெட்ல பூட்டி வச்சுட்டாலும் பிரச்சினைதான். அதுல ஓடவேண்டியது ஓடி – சுத்த வேண்டியது சுத்தி -சூடாக வேண்டியது சூடாகி -சார்ஜ் ஆகவேண்டியது சார்ஜ் ஆனாதான் நார்மல் ஃபங்சனுக்கே வரும்.

ஹ்யூமன் பாடி கூட அவ்ளோதான்.இன்னைக்கு இது போதும் .திஷ்டியாயிர போகுது. நாளைக்கு தொடருவோம்..

3 மனைவியரால் கற்பழிக்கப்பட்டு கணவன் மரணம்


அண்ணே வணக்கம்ணே !
நைஜீரியா நாட்டின் பென்யூ மானிலத்தை சேர்ந்தவர் உரோகோ ஒனோஜா. பெரும்பணக்காரரான இவருக்கு மொத்தம் 6 மனைவியர். ஒனோஜா லேட்டஸ்டா கண்ணாலம் கட்டின குட்டியோடயே கூத்தடிச்சிக்கிட்டிருந்தாரு. மத்த 5 மனைவியர் இதுக்கு எதிர்ப்பு தெரிவிச்சுக்கிட்டிருந்தாய்ங்க.ஆனால் பார்ட்டி கண்டுக்கலை.

தசரதன் கைகேயி மேல வச்சிருந்தது போல 6 ஆவது மனைவி மேல “பாசம்” வச்சிருந்தாரு. கடந்த வாரம்
ஒனோஜா 6 ஆவது மனைவியுடன் கில்மாவில் ஈடுபட்டிருந்த சமயம்.. மத்த 5 மனைவியரும் கூட்டு சேர்ந்து பயங்கர ஆயுதங்களோட படுக்கையறையுள் நுழைந்தனர்.

தங்களோடும் உடலுறவில் ஈடுபடவேண்டும் என்று தாக்கினர். 5,4,3 ஆவது மனைவிகள் அவரை கற்பழித்தனர்(?) அவிக காரியத்தை முடிச்சு 2 ஆவது மனைவிக்கு சான்ஸ் கொடுத்தாய்ங்க. அதுக்குள்ர அண்ணாச்சியோட “கதை” முடிஞ்சு போச்சு.

ஒடனே கூட்டு கற்பழிப்பில்(?) ஈடுபட்ட 5 மனைவியரும் காட்டுக்குள்ளே ஓடிட்டாய்ங்களாம். ஆறாவது மனைவி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஓடிப்போன மனைவியரை வலைவீசி தேடி வர்ராய்ங்களாம்.

இந்த சம்பவம் நைஜீரிய பத்திரிக்கையான டெய்லி போஸ்ட்டில் பிரசுரமாகியுள்ளது

ஆதாரம்: சாட்சி ,தெலுங்கு தினசரி

விரைவில் பிரதமராகிறார் சரத் பவார்?


அண்ணே வணக்கம்ணே !
சுதேசி பத்திரிக்கையில ரெம்ப நாளைக்கு மிந்தி சுதேசி காங்கிரசுன்னு ஒன்னு உருவாகப்போறதா எளுதியிருந்தாய்ங்க. நானும் இதெல்லாம் வேலைக்காகவா போகுதுன்னு கண்டுக்கிடலை.ஆனால் இன்னைக்கு பல அதிர்ச்சிகரமான சமாசாரம்லாம் தெரியவந்தது..

ஒரு வெளி நாட்டு கார பொம்பளை பி.எம் ஆகக்கூடாதுன்னு போர்க்குரல் எழுப்பி வெளிய வந்த கட்சி பவாரோட என்.சி.பி ( நேஷ்னலிஸ்ட் காங்கிரஸ் பார்ட்டி)

நேஷ்னலிஸ்டுக்கு எதிர்பதம் என்ன? அப்ராட் ?

சமீப காலமா பவார் சோனியாவை பேதியாக்கிக்கிட்டிருக்கிறது தெரிஞ்ச மேட்டருதேன். சோனியா ஒத்துக்கமுடியாத டிமாண்டையெல்லாம் வச்சு – கடுப்பாக்கி சோனியாவே வெளியே அனுப்பறாப்ல பண்றது பவாரோட ப்ளான்.

வெளிய வரும்போது நாலஞ்சு கூட்டணி கட்சிகளையும் கிளப்பிக்கிட்டு வர்ரது அவரோட ஸ்கெட்ச். அதுக்கு கொஞ்ச நாளாச்சும் கூட இருந்து தானே ஆகனும்.அதனாலதேன் இந்த கண்ணாமூச்சி.

அதுவும் ஸ்டேட்ல காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி – முதல்வரை மாற்ற டிமாண்டு இத்யாதிக்கு பின்னணியில இருக்கிறதே பவாருதானாம். நீங்க சென்டர்ல பலசாலின்னு தானே எங்களை இன்சல்ட் பண்றிங்க. ஸ்டேட்ல நாங்க பலசாலி உங்களை இன்சல்ட் பண்றோம்னு சொல்லாம சொல்றாரு பவார்.

1.மகாராஷ்டிராவுக்கு போன பிரணப் முகர்ஜி “என்னை ப்ரபோஸ் பண்ணதே சரத் பவார் தான்”ன்னு சொல்லியிருக்காரு. பவாரோட சிவசேனா தலைவர் பால் தக்கரே வீட்டுக்கு போயிருககருங்கோ.. இதுக்கு பின்னணியில உள்ள வியூகம்லாம் பின்னாடி வருது.

2.சோனியா, நாம பிரணப்பை ஜனாதிபதி வேட்பாளரா அறிவிச்சதுமே தாளி யுபிஏவுக்கு வெளிய இருந்து கூட ஆதரவு பிச்சுக்கிச்சுன்னு நினைச்சுருப்பாய்ங்க போல. மேட்டர் இன்னாடான்னா ராகுல் காந்திக்கு பட்டம் கட்ட ஆரம்ப கட்ட பேச்சு வார்த்தைகள் நடந்தப்பயே – ஒன்னரை மாசத்துக்கு மிந்தியே சரத் பவார் சோனியா அம்மாவுக்கு காராசாரமா ஒரு லெட்டர் ரெடி பண்ணி வச்சிருந்தாராம். ஆனால் பிரணப் தான் கைய காலை பிடிச்சு ஸ்டாப் பண்ணாராம். அப்பத்தேன் பவாருக்கு பிரணப்புக்கும் அண்டர்ஸ்டாண்டிங் ஏற்பட்டிருக்கு. இதன் விளைவுதான் சரத்பவார் பிரணப்பை ப்ரப்போஸ் பண்ணது. பரண்ல போட்டு வச்சிருந்த அந்த லெட்டரைதேன் சமீபத்துல மேடத்துக்கு அனுப்பினாரு பவாரு.

3.வெறுமனே ப்ரப்போஸ் பண்றது மட்டுமில்லை மண்ணின் மைந்தரான (?) சிவசேனா தலீவரை ப்ராக்கட் பண்ணி ஆதரவு தேடி கொடுத்திருக்காரு, முலாயம் ,மம்தா ஆதரவு தரவும் சரத்பவார் தான் காரணமாம்.

இன்னாடா டீலுன்னா : சோனியா ராகுலை கொண்டுவரப்போறாய்ங்க. யு.பி.ஏ உருப்படாது. நான் வெளிய வந்துரப்போறேன். இன்னொரு தேர்தல் இல்லாமயே அதிகார மாற்றம் நடக்கும் -அதுக்கு நாம ஒத்துமையா இருந்து பிரணப்பை ஜெயிக்க வைக்கனும்.. அதிகார மாற்றத்துக்கு ஒரு ஜனாதிபதியாக பிரணப் நமக்கு உதவுவாருங்கறதுதேன்.

4.காங்கிரசுன்னாலே கண் சிவக்கிற ஜகனோட அப்பா ஒய்.எஸ்ஸுக்கும் -பவாருக்கும் ஆதி நாட்கள்ளருந்தே நல்ல அண்டர்ஸ்டாண்டிங். விவசாயிகளுடைய பிரச்சினைகளை பத்தி தில்லியில போராட்டம் நடத்தின ஜகன் அப்பமே பவாரை சந்திச்சு மனுல்லாம் கொடுத்ததை ஞா படுத்திக்கங்க. இதுவே இல்லிங்ணா பவாரை சந்திச்சுட்டு நேஷ்னல் சானல்ஸுக்கு பேட்டி கொடுத்த ஜகன் சென்டர்ல யுபிஏவை சப்போர்ட் பண்ணுவம்னு வேற சொன்னாரு.

நான் கூட சோனியா சேர்மனா இருக்கிற யு.பி.ஏவுக்கு இந்த புள்ள என்னாத்த சப்போர்ட் கொடுக்கிறதுன்னு குழம்பிட்டேன். இப்பத்தேன் புரியுது சோனியா இல்லாத யு.பி.ஏங்கறதுதான் இதனோட அருத்தம்.

அல்லாரும் என்ன நினைச்சாய்ங்கன்னா ஓஹோ ஜகன் சி.பி.ஐ கேஸுக்கு பயந்துக்கிட்டாரு. இங்கன பிரணப்புக்கு ஓட்டுப்போட்டு அங்கன பெயில் வாங்க பார்க்கிறாருன்னு நினைச்சாய்ங்க.

ஆனால் பெயில் பெட்டிஷன் விசாரணைக்கு வர இருந்த தினமே ஜகன் தன் ஜாமீன் மனுவை வாபஸ் வாங்கிட்டாரு.

இதுலருந்து என்ன தெரியுது? கொய்யால .. நாளைக்கு சென்டர்லயே எங்காளுக்கு பவர் வரப்போவுது. அப்பம் பார்த்துக்கறேன்னு தானே அருத்தம்.

இன்னொரு ஹஞ்சும் மைண்ட்ல சிறகடிக்குது. பவாரும் -சங்மாவும் பேசி வச்சிக்கிட்டு நாடகமாடினாய்ங்களோங்கறதுதான். சங்மா புண்ணியத்துல என்.டி.ஏலருந்து சிவசேனா வெளிய நின்னு பிரணப்பை சப்போர்ட் பண்ணது ஒரு ஷாக் ட்ரீட்மென்டா இருக்கலாம்.

அதுவுமில்லாம சங்மா வேற புதுசா ஒரிசாகாரரான நவீன் பட் நாயக், ஜெயலலிதா அம்மாவோட ஆதரவை வேற திரட்டிட்டாரு.

பவார் பக்கம் யுபிஏ கூட்டணி கட்சிகளில் சில + சிவசேனா + சங்மாவுக்கு ஆதரவளித்த நவீன் பட்னாயக், ஜெயலலிதா இருக்காய்ங்க.

மதவாதமா? செக்யூலரான்னாதான் பா.ஜ.க தீண்டத்தகாத கட்சி. இதுவே விதேசி காங்கிரஸா, சுதேசி காங்கிரசான்னு வரும்போது ?

பட்சி சொல்றது நெஜமா இருந்தா சோனியா அம்மா சீக்கிரமே பல்பு வாங்கப்போறாய்ங்க. மஹாராஷ்டிரால காங்கிரஸை பிளந்தாப்ல சென்டர்லயும் பிளக்கப்போறாரு பவாரு.

சோனியா இல்லாத காங்கிரஸ் , காங்கிரஸ் இல்லாத யுபிஏ தத் என்னென்னமோ மைண்ட்ல ஓடுது. அம்பேல்.

ஆனால் ஒன்னு என்னமோ நடக்குது மர்மமா இருக்குது. நடக்கிறது எதுவோ நாட்டுக்கு நல்லதா நடந்தா செரி..