
அண்ணே வணக்கம்ணே !
சனிப்பெயர்ச்சி பலன் பதிவை போட்டம். பரிகாரம் பிட்டு பிட்டா தரேன்னு சொன்னம். ஆனால் அது உதிரியா போயிரும்னு தனிப்பதிவா போடத்தான் இந்த பதிவு.
2000,ஜூலை 31 ஆம் தேதி ப்ளாக் ஆரம்பிச்சன். 2011 பிப்ரவரில சைட். முக நூல்ல 3000 ஐ நெருங்கும் நண்பர்கள் எண்ணிக்கை. ஆல் இன் அழகு ராஜா மாதிரி பல மேட்டர்ல புகுந்துவர்ரம் .ஆனால் ஜோதிடம் -கில்மா தவிர வேற எதுவும் போனியாக மாட்டேங்குது.
வெறுமனே பொளப்பை பார்க்கலாம்னா ராத்திரியில தூக்கம் வரமாட்டேங்குது .பதினாலு வருசமா ஒவ்வொரு சனி பெயர்ச்சி -குரு பெயர்ச்சிக்கும் பலன் ,பரிகாரம் கொடுத்து ரெம்ப போர் அடிக்குது. எல்லா ராசிக்கும் எல்லா நாளும் நல்ல நாளா இருக்க நம்ம கிட்டே ஒரு மாஸ்டர் ப்ளான் இருக்கு.அதை நீங்களோ நானோ அமல் படுத்த முடியாது. மோடி நினைச்சா செய்யலாம். அதை இங்கே போட்டிருக்கன். இதுவரை 161 பேர் சைன் பண்ணி ஆதரவு தெரிவிச்சிருக்காய்ங்க. நீங்களும் சைன் பண்ணலாம்.
மோடி கேடி. அவரு ஒன்னத்தையும் கழட்ட மாட்டாருன்னா இப்பம் மோடிக்கும் -லேடிக்கும் முட்டிக்கிச்சாம். இந்த மேட்டர் லேடி காதுக்கு போனா அட்லீஸ்ட் குடைச்சல் கொடுக்கவாச்சும் இதை கையில எடுப்பாய்ங்கனு பல முயற்சிகள் செய்தேன்.வேலைக்காகல.
கடேசியில கொஞ்சம் ரிஸ்க் எடுத்து ஜெயில் விலாசத்துக்கே அனுப்பிட்டன். டெலிவரியும் ஆயிருச்சு. ப்ரூஃப் ஆஃப் டெலிவரியும் கையில இருக்கு. இந்த எம்.ஜி.ஆர் வேலைய 1986 லருந்து செய்யறேன்.பப்பு வேகல.மேட்டர் என்னனா நேர்ல போக வசதி கிடையாது. லாபி கிடையாது.லெட்டர் மூலமா அனுப்பினா அது சீக்ரட். இவன் என்னத்தை செய்துரமுடியும்னு ஊறப்போட்டுர்ராய்ங்க.
இந்த மேட்டர் தீயாபரவிருச்சுன்னா வழிக்கு வருவாய்ங்க. இந்த மேட்டர்லாம் விவரமா இங்கே போட்டிருக்கேன். இந்த பதிவை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க ப்ளீஸ். இல்லின்னா அம்மா நாம அனுப்பின கடிதாசிய ஜெயில்லயே விட்டுட்டு போயிருவாய்ங்க.
ஆப்ளிகேஷன் ஓவர்.இப்பம் சனிப்பெயர்ச்சியால 12 ராசியினருக்கு ஏற்படக்கூடிய பலனையும் -தீய பலனை குறைக்க சில நச் பரிகாரங்களையும் பார்த்துரலாம்.
1.மேஷம்:
இவிகளுக்கு சனி 10,11 க்குடையவர். சனி எட்டில் வருவதால் வேலை அழுத்தம் அதிகரிக்கும். இதனால் கால்,நரம்பு,ஆசனம் தொடர்பான பிரச்சினைகள் வரலாம். மூத்த சகோதரம் பாதிக்கும். மூ.சகோதரத்தால் இவிகளுக்கு பாதிப்பு வரவும் வாய்ப்பு . கெண்டைக்கால் பகுதியில் பிரச்சினை வரலாம்.(நரம்பு தொடர்பான) பெரிய/சிறிய இரும்பு பொருள் காணாமல் போய் அதனால் பெரும் சிக்கல்கள் வரலாம். விபத்து/தாக்குதலுக்கும் வாய்ப்பு .வீண் பழி விழலாம். இவிக சொத்த பிறர் அனுபவிக்க -ஊரார் கடனுக்கு இவிக ஜவாப் சொல்ல வேண்டி வரலாம்.
பரிகாரம்:
சமையலுக்கு நல்லெண்ணெய். நடை பயிற்சி, மனசுக்கு விருப்பமில்லாத வேலைகளுக்கு குட் பை. காக்கி, நீல நிற ஆடைகள் -கு.பட்சம் உள்ளாடைகள் அணியலாம்.ஸ்டீல் ஆர்னமென்ட்ஸ் யூஸ் பண்ணுங்க. கோர்ட்,போலீஸ் ஸ்டேஷன்,ஆஸ்பத்திரி சுடுகாட்டை ஒட்டின பகுதியில ஒரு டீ சாப்டுங்க. பழக்கமிருந்தா தம் போடுங்க.
2.ரிஷபம்:
இவிகளுக்கு சனி 9,10 க்குடையவர் . சனி ஏழுக்கு வருவதால் அன் மேரீட் சனத்துக்கு அப்பா வழி உறவில் திருமணம் நடக்கலாம். மேரீட் சனம் வயதில் மூத்த பெண்ணுடன் நெருக்கம் காட்டலாம். சிலர் பார்ட்னர் ஷிப்ல எதையாவது செய்ய போயி முட்டிக்கிட்டு அவதிப்படலாம். அகால போஜனம்,அகால நித்திரை,சோம்பல் படுத்தி எடுக்கும். முடி உதிரும்,முகத்துல எண்ணெய் வடியும். உங்களுக்கும் உங்கள் வாழ்க்கை துணைக்கும் கால்,நரம்பு ,ஆசனம் தொடர்பான பிரச்சினைகள் வரலாம்.
பரிகாரம்:
மேஷ ராசிக்கு சொன்ன அதே பரிகாரங்களை நீங்களும் உங்கள் மனைவி/காதலி செய்வது நல்லது. தனித்திருக்க ட்ரை பண்ணுங்க. லைஃப் பார்ட்னரோட தேவையில்லாத பேச்சு வேண்டாம்.
3.மிதுனம்:
இவிகளுக்கு சனி 8,9 க்குடையவர் .இவர் ஆறில் வருவதால் சத்ரு ஜெயம்,ரோக நிவர்த்தி,ருண விமுக்தி நடக்கும். அப்பா/அப்பாவழி உறவு நோய் வாய்படலாம்/அல்லது அவருக்கு சிக்கல்/அல்லது அவருடன் தங்களுக்கு முட்டல் மோதல் ஏற்படும். மேற்கு திசை நோக்கிய தூர பயணத்தில் சிக்கல் வரலாம். முதலீடு முடங்கலாம், சொத்து ,சேமிப்பு மீது கடன் வாங்க வேண்டி வரலாம். அல்லது வில்லங்கம் வரலாம். பணத்தை இப்படி போட்டு அப்படி புரட்டிரலாம்னு அவசரப்பட்டு இறங்க கூடாது. தொடை பகுதியில் பிரச்சினை வரலாம்.
பரிகாரம்:
சொத்து,முதலீடு,சேமிப்பு விவகாரங்களில் புது முயற்சி,அடிஷ்னல் இன்வெஸ்ட்மென்ட் வேண்டாம் . கட்டாயம் செய்தே ஆகவேண்டும் என்றால் கடன் வாங்கின காசை கொஞ்சம் கூட போட்டு செய்ங்க. அந்த நபர் தலித் என்றால் -கால் தொடர்பான ஊனமுள்ளவர் என்றால் நலம். மேற்கு திசை நோக்கிய தூர பயண விஷயத்திலும் இதே ஃபார்முலாவ ஃபாலோ பண்ணிக்கங்க.
4.கடகம்:
இவிகளுக்கு சனி 7-8 க்குடையவர் இவர் ஐந்தில் வருவதால் அவமானம்,அவப்பெயர்,குழந்தைகளுக்கு உடல் நலக்கேடு வரலாம். பிள்ளைகள் உங்களுக்கு எதிராய் திரும்பலாம்.கடந்த பிறவியின் காதலி /மனைவி தற்சமயம் லாஜிக் இல்லாம லைஃப்ல என்டர் ஆகி பல்பு வாங்கலாம். இதை உலகம் நீச ஸ்த்ரீ சகவாசம்னு பார்க்கும். அன் மேரீட் சனம் தங்கள் தகுதிக்கு மிக குறைந்த பெண்ணை மணக்க வேண்டிய கட்டாயம் வரலாம். மனைவி,மனைவி வழி உறவுகளால் ஒரு நான் ஃபங்க்சனிங் ப்ராப்பர்ட்டி அல்லல் அலைச்சலுக்கு பிறகு கிடைக்கலாம்.
பரிகாரம்:
கையில அழுக்கு தூசு,எண்ணெய் பிசுக்கு,கிரீஸ் படறாப்ல எதுனா வேலை செய்ங்க. சாயம் போன,கிழிந்த ஆடை அணியலாம்(இப்பதான் இதுவும் ஃபேஷனாம்ல) பெரிய கம்பெனிக்காரன் இலவசமா கொடுக்கிற டீ ஷர்ட் போட்டா சிரேஷ்டம். ஹேர் டை போடாதிங்க.பந்தா பண்ணாதிங்க. ஊர் பஞ்சாயத்துக்கு போகாதிங்க. எவனுக்கும் முன்ன நின்னு வக்காலத்து வாங்காதிங்க. குழந்தைங்க மேட்டர்ல பொறுமையா எச்சரிக்கையா இருங்க. பொம்பள மேட்டர் மூச்.. கூடவே கூடாது. நட்பு உறவில் மரணம் ஏற்பட்டால் ஃப்யூனரல்ஸ்ல கலந்துக்கங்க.
5.சிம்மம்:
இவிகளுக்கு சனி 6-7 க்குடையவர். இவர் 4 ல் வருவதால் தாய்க்கு நோய், வீட்டுக்கடன்,வாகன கடன் சிக்கல் தரலாம். அன் மேரீடா இருக்கிற சிலருக்கு தாய் வழி உறவில் வரன் அமையலாம். அம்மாவும் பொஞ்சாதியும் திடீர்னு கூட்டணி அமைச்சு பல்பு கொடுக்கலாம்.பிரிந்து வாழும் தம்பதி ஒன்று சேர வாய்ப்பு. டூ வீலர்ல டபுள்ஸ் ஏத்தாதிங்க. வீட்டு ஓனர் கிட்டே சூதானமா நடந்துக்கங்க. மொத வேலையா டூ வீலரை சர்வீஸுக்கு விட்டு சரிபார்த்துக்கங்க.
பரிகாரம்:
அம்மா கிட்டே வட்டிக்கு கடன் வாங்கலாம். ஒரு தாட்டி ஜெனரல் செக் அப்புக்கு கூட்டு போங்க. வீட்டுக்கடன்,வாகனக்கடன் புதுசா வாங்கறதா இருந்தா நாலு தடவை ரோச்சு இந்த மேட்டர்ல ஜூரியா இருக்கிறவுக சஜஷனோட செய்ங்க. காசு வருதேனு மனைவிய வேலைக்கு அனுப்பாதிங்க. அவிக லீவ் போடறேன்னா தாராளமா போட சொல்லிருங்க.
6.கன்னி:
இவிகளுக்கு சனி 5-6 க்குடையவர். இவர் 3 ல் வருவதால் அட்வென்சரஸா,அக்ரசிவா ரோசிப்பிங்க. செயல்படுவிங்க. அதனால அல்லல் அலைச்சல் ஏற்படும். குழந்தைகளுக்கு மன அழுத்தம் கூடலாம். வளர்ந்த பிள்ளைகள் இருந்தால் அவர்களுக்கு ட்ரான்ஸ்ஃபர் (பதவி உயர்வோடு கூடிய) கிடைக்கும். இதனால உங்க மனோ தைரியம் கூடும்.இளைய சகோதரம் நோய் வாய்படலாம்/அல்லது அவர்களுடன் /அல்லது அவர்களுக்கு சிக்கல் வரலாம். உங்க காது டமாரம் ஆகலாம்.
பரிகாரம்:
எதிரிகள்,போட்டியாளர்கள் விவகாரத்துல விட்டுப்பிடிங்க.முடிஞ்சவரை சமாதானமா போயிருங்க.ஸ்டேஷன்,கோர்ட்டுன்னு போனாலும் அப்பர் ஹேண்ட் தான்.ஆனால் அல்லல் அலைச்சல் , செலவுல்லாம் தேவையா? இளைய சகோதரம் விஷயத்துல கொஞ்சம் எட்டியே இருங்க. உதவலாம், நல்லது கெட்டதுல கலந்துக்கலாம்.ஸ்பான்சர் பண்ற வேலை வேண்டாம். காதுல பிரச்சினை இருந்தா ஈ .என்.டி ஸ்பெஷலிஸ்டை பார்த்திருங்க.
(துலாம் முதல் மீனம் வரை உள்ள 6 ராசிக்காரர்களுக்கு பரிகாரங்கள் அடுத்த பதிவில்)