கழிவறையும் இருக்கும். படுக்கையறையும் இருக்கும்

தமிழனின் ரசனை இதுதானா?

என்னடா இது தமிழகத்துக்கு வந்த சோதனை.. என் வலைப்பூ கங்கை மாதிரி. இதில் பிணமும் மித‌க்கும், ஒற்றேழுத்தும் மிதக்கும். கரையோரம் புனிதத்தலங்களுமிருக்கும். ஆனால் என் வலைப்பூவுக்கு வருகை தரும் தமிழ் கூறு நல்லுலகம் பிணங்களையும்,ஒற்றெழுத்தையும் மட்டுமே தின்பதாக ஃபீட்ஜெட் சைட் ட்ராஃபிக் கூறுகிறது.

வீடு என்றால் அதில் கழிவறையும் இருக்கும். படுக்கையறையும் இருக்கும். அதற்காக இவற்றிலேயே குடியிருக்க முடியுமா?

போன வருடம் எழுதிய சுய இன்பம்,உடலுறவு இன்னபிற விஷயங்களை பற்றி இன்றைக்கும் மாய்ந்து மாய்ந்து படிக்கும் நண்பர்களை என்னென்பது?

இப்ப‌ கீழே பாருங்க‌ என் தெலுங்கு வ‌லை த‌ள‌த்தோட‌ ஜாத‌க‌ம்

Pages displayed : 1460
Unique visitors : 770
Pages displayed in last 24 hours : 181
Unique visitors in last 24 hours : 81

உதய சூரியனே நீ உதிர்ந்து போ !

ஏ தாழ்ந்த தமிழகமே!
தெலுங்கர் ஒருவர் வெளிநாட்டில் கொலையுண்டால் அவர் பிணம் ஆந்திரம் வந்து சேரும் வரை, கொலையாளி அங்கு கைதாகும் வரை பத்திரிக்கைகள் விடுவதில்லை. என் நினைவு தெரிந்த நாள் முதலாய் இலங்கையில் தமிழன் செத்துக்கொண்டே இருக்கிறான். தானாட வில்லையென்றாலும் சதையாடு என்பது வெள்ளை சாம்பார்களே உங்கள் விஷய்த்தில் பொய்த்துவிட்டது.

தமிழனின் தாய் என்ன 5 மாதத்திலேயே குழந்தையை பெற்றுவிடுகிறாளா? அல்லது யோனி வழியாயன்றி ஆசன வழியாய் கழித்து விடுகிறாளா? இனமானம் தன்மானம் என்று அண்டாவில் அளக்கும் தலைவன் கள் என்ன ஆனான் கள் (இவனுகளுக்கு மரியாதை ஒரு கேடா?)

அடைந்தால் திராவிட நாடு இல்லா விட்டால் சுடுகாடு என்ற அண்ணாவின் வழி வந்த தம்பிகளே ! அண்ணாவிடம் இரவலாய் கேட்டுப்பெற்ற எதையும் தாங்கும் இதயம் இதயம் இதையும் தாங்குமென்றால்
தேவையில்லை அந்த இதயம் தூக்கி எறியுங்கள்.

சொந்த இதயம் இற்று விழட்டும். நாயோ நரியோ விழுங்கட்டும். இந்தி பேசும் மக்களுக்கு ஒரு நீதி..

கிழக்கு வங்காளத்தில் அவர்கள் செத்தால் இந்திய ராணுவம் விரையும். தனி நாடு உதயமாகும். தமிழனின் வாழ்வில் மட்டும் நித்தம் நித்தம் அஸ்தமனம் தான். இந்த கையறு நிலயிலும் உதிக்காத உதய சூரியனே நீ உதிர்ந்து போ ! தமிழினம் நடிகர்களுக்கெ நலங்கு வைக்கட்டும். மானம் வேட்டி,பதவி துண்டு என்ற இனமானம் என்னவாயிற்று.. தூக்கி எறி ..அந்த மஞ்சள் சால்வையையும், மூணு பைசாவுக்கும் உதவாத முத‌ல்வர் பதவியையும். நீ என்றுமே முதல்வன் தான்.. கடலக்குடி கொண்டானே உன் சரித்திரத்தை இந்த இளைய சமுதாயம் மீண்டும் ஒருமுறை தரிசிக்கட்டும்.

நினைத்தது நடக்கும்போது

ஓஷோ சொன்னது கரெக்டுப்பா..எதிர்ப்பார்ப்புலதான் வாழ்க்கையே ஓடுது. நினைத்தது நடக்கும்போது த்ரில் காலி

ஹ்ரீங்கார பீஜாக்ஷரீ ஹ்ரீம் மயீ தேவி அபயவரத ஹஸ்தினி,பாசாங்குஸ தாரிணி ஸ்ரீ சக்ர வாசினி பால பீட அதிரோஹினி
மாதா மாத்ருமயீ அம்ருதமயீ
மாதா கால கரணீ தேஹீ தக்ஷணம் த்ரிகால ஞானம் தேஹீ தக்ஷணம் அஷ்ட ~ஐஸ்வர்யம் மாதா தேஹீ தக்ஷணம் யத்ன காரிய சித்தி

ஸ்ரீ ராம ராம ராமேட்டி ரமே ராமே மனோரமே சஹஸ்ர நாம தத்துல்யம் ஸ்ரீராம நாம வரானனே
* * *

ஓம் நமோ பகவதே சூர்யாய ஹ்ரீம் சஹஸ்ர கிரணாய
ஐம் அதுல பல பராக்ரமாய
நவகிரக தச திக்பாலகாய
லக்ஷ்மீ தேவதாய
தர்ம கர்ம சஹிதாய சர்வ ஜன நாத யனாதாய மோஹாய மோஹாய ஆகர்ஷ ஆகர்ஷ
தாசானுதாசம் குரு குரு பட் ஸ்வாஹா

நீங்க கொல்ட்டிங்கன்னிட்டு கேவலமா பேசறிங்களே அந்த தெலுங்கு சகோதரர்களுடைய பதிலடி


எனது தெலுங்கு வலை தளம் : ஒரு அறிமுகம்

தமிழில் தேன்கூடு,தமிழ்மணம் போல தெலுங்கில் ப்ளாகு.காம் உள்ளது. இதில் ஸ்வாமி7867 என்ற பெயரில் ஒரு வலை தளத்தை துவக்கினேன்.(கடந்த மாதம்)

பெயர் விளக்கம்:

ஸ்வாமி என்பது இந்து மதம் தொடர்பான பெயர். இதற்கு எஜமானர் என்று பொருள். எவனொருவன் (ஜெயேந்திரர் போன்ற ஜொள் பார்ட்டிகள் அல்ல) தனக்கு தானே எஜமானனாக உள்ளானோ அவனை ஸ்வாமி என்பார்கள்.

(நம்ம கதை எப்படின்னு எதிர்காலம் தான் நிர்ணயிக்கனும்)

786:

இது முஸ்லீம்களுக்கு புனிதமான எண் என்று கூறப்படுகிறது. நாத்திகர்கள் இதை அல்லாவின் போன் நெம்பரா என்று கிண்டலடித்ததும் உண்டு. ஆனால் இது என் பிறந்த தேதி. இந்த தேதியில் பிறந்ததாலோ என்னவோ எனக்கு இஸ்லாம் மீது ஆழ்ந்த அக்கறை உண்டு. வாணியம்பாடியில் டுபாகூர் டாக்டர் அக்பர் கவுசரின் தெய்வீக மருத்துவம் பத்திரிக்கைக்கு உதவி ஆசிரியனாக குப்பை கொட்டிய சமயம் ,அவரது கம்ப்யூட்டர் பிரிவி ஆலோசகர் திப்புசுல்தான் கூறினார்.

“Islam is the best religion & the muslims are the worst followers”

ஔரங்கசீப்,திப்பு சுல்தான்,பாபர் முதலிய சரித்திர நாயகர்கள் பற்றிய பல உண்மைகளை திப்பு மூலம் தான் அறிந்தேன் .
உ.ம்: ஔர‌ங்க‌சீப் இந்து கோவில்க‌ளை ம‌ட்டும் இடித்துத்த‌ள்ள‌வில்லை. இவ‌ர் செல்லும் த‌ர்காவில் அட‌க்க‌மாகியிள்ள‌ சாதுவுக்கு சலாம் செய்வார். அந்த சாதுவிட‌மிருந்து பிர‌தி ச‌லாம் வந்தால் ச‌ரி. இல்லாவிடில் அந்த‌ த‌ர்காவும் காலி. இடிக்க‌ப்ப‌ட்டுவிடும்.

நிற்க‌ தெலுங்கு வலைத‌ள‌ வீச்சு ப‌ற்றி:

என‌து முடிவான‌ ல‌ட்சிய‌ம்

“Hardy baody,windy mind,holy soul”

இதனை இந்திய அளவில் சாத்தியமாக்கத்தான் ஆப்பரேஷன் இந்தியா 2000 . இதன் முக்கிய நோக்கம் 10 கோடி வேலையற்ற வாலிபர்களை கொண்டு சிறப்பு ராணுவம் அமைத்து நதிகளை இணைத்தல். எங்கள் முதல்வர் ராஜ சேகர ரெட்டி பல லட்சம் கோடிகள் செலவில் புதிய அணைகளை கட்டி வருகிறார். மேலு பல நல திட்டங்களையும் அமல்படுத்தி வருகிறார்.

தேர்தல் நெருங்கி வரும் சமயம் எனது ஐடியாலஜிக்கு சற்று அருகே வந்து (விவசாயம்,நீர்பாசனம்)அதனை அமல் படுத்தும் எங்கள் முதல்வர் ராஜ சேகர ரெட்டிக்கு உதவுவதை என் கடமையாக கருதுகிறேன்.

தேர்தல் நடந்து முடியும் வரை ஆப்பரேஷன் இந்தியா 2000க்கு லீவு. (காரணம் இது உடனடியே அமல்படுத்தப்படும் சூழல் இல்லை. ஆனால் எங்கள் முதல்வர் ராஜ சேகர ரெட்டி மீண்டும் முதல்வரானால் குறைந்த பட்சம் அணைகளாவது கட்டி முடிக்கப்படும்.

அதில் ஊழல் என்று ஓட்டை சொல்லும் கூட்டத்துக்கு தெரியும். ஊழல் என்பது புதிதல்ல. ஒரு எம்.எல்.ஏ தான் வெற்றி பெற குறைந்தது 1 கோடி ரூ. செலவழிக்கணும். 4 எம்.எல்.ஏ தொகுதி சேர்ந்தது எம்.பி. தொகுதி ,மொத்தம் எத்தனை தொகுதி,ஒரு தொகுதிக்கு மூன்று பேர் போட்டின்னு வைங்க மொத்தம் எத்தனை லட்சம் கோடி தேர்தல்ல செலவாகுது.

இதெல்லாம் நம் அமைப்பிலே உள்ள குறைபாடு. வேட்பாளர்களின் செலவை அரசே ஏற்கும் முறை அமலுக்கு வரட்டும், முதலில் மக்கள் காசு வாங்காது ஓட்டு போடட்டும்

இவ்ள எதுக்கு பிரஸ் க்ளப்புகள் கட்டணம் வாங்காது ப்ரஸ் மீட் நடத்தட்டும் அப்புறம் ஊழலை பற்றி பேசுவோம்.

ஆக நம்ம வலை தளத்தோட முக்கிய நோக்கம் ஆந்திரத்தில் காங்கிரஸ் ஆட்சி அமல் படுத்திய வளர்ச்சி நல திட்டங்களை பிரச்சாரம் செய்வதே ..

குறிப்பு: என்ன ஒன்னுனா.. நீங்க கொல்ட்டிங்கன்னிட்டு கேவலமா பேசறிங்களே அந்த தெலுங்கு சகோதரர்களுடைய பதிலடி இருக்கே ..உங்க வீட்டு அடியா எங்க வீட்டு அடியா. தமிழ் மகாஜனங்களே !
உங்களுக்கு தெலுங்கர் தான் முதல்வர். கன்னடர் தான் சூப்பர்ஸ்டார். வாழ்க வளர்க. நல்லா தூங்குங்க.. (ஹும் இந்த பவர் கட்டுல அந்த இழவும் முடியாது அப்படித்தானே)