ஜோதிடர்களுக்கு சில யோசனைகள்

28.74

அண்ணே வணக்கம்ணே !

ஆர் ஆருக்கோ ரோசனை சொல்றம்.அப்படியே சோசியம் கேட்க போற சனங்களுக்கும் -ஜோதிடம் சொல்ற ஜோதிடர்களுக்கும் யோசனைகளை அள்ளி விட்டா என்னனு ஒரு கெட்ட எண்ணம் வந்துருச்சு.

இந்த பதிவில் ஜோதிடர்களுக்கான யோசனைகள் கீழே ..

சோசியம் சொல்ல…
1) எதிர்காலம்ங்கறது தேவரகசியம். அது தானா தன்னை வெளிப்படுத்திக்கிட்டாலே தவிர எந்த கொம்பனாலயும் அதை அறிய முடியாது.

2) சோசியராக கண்டதையும் படிக்கணும், மனப்பாடம் பண்ணணும். ஆனா எதிர்காலம் கணிக்க இதெல்லாம் உதவாதுங்கறதை காலப்போக்கில் உணர்வீங்க. அப்படி உணர்ந்த நாள்தான் நீங்க முழுமையான சோதிடராக மாறின நாள்.

3) சோதிடத்தை மோட் ஆப் லிவிங்ஆ வச்சுக்க கூடாது. குறைந்தபட்சம் ஜோதிடமல்லாது ரெண்டு மூணு சோர்ஸ் ஆஃப் இன்கம் வச்சுக்கணும். தெய்வம் ஒரு சிலருக்கு அவிக எதிர்காலத்தை அறிவிக்க நினைச்சு என்னை ஒரு மீடியமா சூஸ் பண்ணியிருக்குன்னு நினைக்கணும்.

4) ஜாதகம் என்பது ஒரு சாக்கு மட்டுமே. கிரகபலங்கள் பல்வேறு விதிகளை கொண்டு நான் கணக்கிடறதும் ஒரு சாக்கு மட்டுமே. பலன் சொல்வது நானா இருந்தாலும் சொல்ல வைக்கிறது தெய்வம். அந்த பலனை தரப்போறதும் தெய்வம்தான்னு நினைக்கணும்.

5) ஜாதகத்தை கையில் வாங்கும்போதே தெய்வமே, எனக்கு ஒரு இழவும் தெரியாது. இந்தாளு எனக்கு ஏதோ தெரியும்னு வந்துட்டாரு. அவரை ஏமாத்தாதேன்னுட்டு நினைச்சு வாங்கணும்.

6) ஜாதகத்துல உள்ள கிரகங்களை பார்த்து பலாபலங்களை நிர்ணயிக்கும் போதே யப்பா, நீங்கலாம் தெய்வத்தோட படைப்பு, நான் சாதாரண மன்சன். இந்தாளு என்னை நம்பி வந்துட்டார். இவனை என்னத்தான் செய்யப்போறீங்க? கொஞ்சம் சொல்லுங்கப்புன்னு கிரகங்களோட பேசணும்.

7) உங்களை நீங்க ஒரு தாயா உணரணும். ஒரு பசுவா உணரணும். குருவா, தந்தையா உணரணும். யத்பாவம் தத்பவதி நீங்க எப்படியா கொத்த டகால்ட்டியா இருந்தாலும் காலப்போக்குல தாயா, தந்தையா, குருவா, பசுவா மாறுவீங்க. அதாவது எக்ஸ்பார்ட்டி உங்களை இன்சல்ட் பண்ணினாலும் எக்ஸ்பிளாய்ட் பண்ண பார்த்தாலும் அந்த கசப்பு உங்க மனசுக்குள்ள இறங்கவே இறங்காத நிலை வந்துரும்.

8) வாக்பலிதம் ஏற்பட:
ஏ) உண்மையையே பேசுங்க
பி) குறைவா பேசுங்க
சி) இதம்மா பேசுங்க
டி) காசுபணம் வந்தா வச்சுக்கங்க. பட் உபரி காசு பணத்துக்கு பிளான் பண்ணாதீங்க. முடிஞ்சா செலவழிக்கவும் ஒரு ஆள் இருந்தா நல்லது.
ஈ) ஜோதிடம் சொல்லி காசு வந்துட்டா கருமம் வந்திருக்குன்னு பயப்படுங்க. அதை தொலைக்க வழி தேடுங்க.

(உம்) உங்க ஜாதகத்துல புதன், வாக்கு ஸ்தானாதிபதி, ரோகாதிபதி இந்த மூன்று பேரில் யார் பலகீனப்பட்டிருக்காய்ங்களோ அந்த கிரக காரகம் கொண்ட மனிதர்களுக்கு முடிஞ்ச வரை உதவி செய்யுங்க.

எப்) கணபதி, குலதெய்வம், இஷ்ட தெய்வம் கலைவாணி அருள் இருந்தா வாக்பலிதம் நிச்சயம்.

ஜோதிடம் கேட்போருக்கு சில விதிகள்

DSC_9123 - Copy

அண்ணே வணக்கம்ணே !

மாத சோதிடம் காரவுக தர்ம சாஸ்திரத்துலயிருந்து ஒருபுஸ்தகம் போட்டாய்ங்க. இதுல சோசியம் கேட்கப் போறப்ப எப்படி நடந்துக்கணும்னு சில பாய்ண்ட்டெல்லாம் தந்திருந்தானுவ. ஆனா அந்த த.சா.ஐ தொகுத்தது ஒரு கிராஸ் பெல்ட்டு. அந்தாளு மைண்ட்ல சோசியர்னா ஒரு ஐயருங்கற கான்செப்தான் இருந்திருக்கு. எனவே அது சோசியருக்கு மரியாதை என்பதை விட ஐயருக்கு மரியாதையாகிவிட்டது. ஆனா நாம இந்த பதிவுல சொல்லப்போற விதிகள் எந்த சோசியர்கள்கிட்ட (ஐ மீன் அவர் ஒரு தலித்தா இருந்தாலும்) போறவுகளும் பின்பற்ற வேண்டிய விதிகள்.

1) நீங்க சந்திக்க நினைக்கிற சோசியரை பத்தி தீர விசாரிங்க. முக்கியமா ஏற்கனவே அவர்கிட்ட போய் வந்தவுகளை விசாரிங்க.

2) உங்களுக்கு அவசியமிருந்தா மட்டுமே சோசியரை சந்திக்க போங்க (உ.ம்) பிரச்சினை, குழப்பம், புது முயற்சி, தசையில் மாற்றம்.

3) நீங்க போறது உங்க எதிர்காலத்தை தெரிஞ்சுக்க… சோசியரோட புலமையை பரிட்சிக்க அல்ல.

4) இடம், பொருள், ஏவல் எல்லாத்தையும் பார்த்து முடிவு பண்ணுங்க.

அ) சோசியர்கிட்ட கூட்டம் அம்முதுன்னா அங்கே போய் கேட்கிறதை விட அவரை உங்க இடத்துக்கு அமுக்குறது பெஸ்ட். அதுக்குன்னு தாதா, குண்டர்கள் மூலம் பிரசர் கூடாது.

ஆ) சோசியர் ஈ ஓட்டினா முன்கூட்டியே அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிகிட்டு அவரோட இடத்துக்கே போகலாம்.

இ) பல சோசியர்கள் சலூன் மாதிரி கட்டண பட்டியலை தொங்க விட்டிருப்பாய்ங்க. வெகு சிலர் இப்படி செய்யறதில்லை. அறிமுகம் செய்தவுக கிட்டயே கட்டண விபரங்களை தெரிஞ்சுக்கிடறது நல்லது.

ஈ) சில்லறையா முன்கூட்டியே மாத்தி வச்சிருங்க. சோசியரோட அலுவலகத்துக்கு போறதா முடிவு பண்ணிட்டா ஜாதகங்களை மறக்காம கொண்டு போங்க. கம்ப்யூட்டர் ஜாதகம் பெஸ்ட்.

உ) ஆன் தி வே போறது, அடுத்தடுத்து செட்யூல் போட்டுக்குறது நல்லதில்லை.

ஊ) உங்க வாகனத்தை சரியான இடத்துல பார்க் பண்ணுங்க… ஒழுங்கா பூட்டுங்க…

எ) தனியா போங்க, தம்பதி சமேதரா போங்க, குழந்தைகள், மச்சான், வேலைக்காரன், அல்லக்கை, பெரியாரிஸ்டுன்னு கூட கூட்டிப்போகாதீங்க.

ஏ) சிலர் மேற் சொன்ன வகையறா பார்ட்டிகளை அனுப்பி சோசியர் ஃப்ரீயா இருக்காரா பார்த்துட்டு வான்னு அனுப்புவாங்க. (நம்மை இப்படி விசாரிக்க ஆள் அனுப்பினா மதுரை பக்கம் போய்கிட்டிருக்கேன். வர 10 நாளாகும்னு சொல்லிர்றது)

ஐ) சிலர் சோசியருக்கே ஃபோன் போட்டுருவாங்க. வரலாமான்னு மட்டும் கேட்டா போதும். சோசியரும் வாங்கன்னுட்டு கட் பண்ணிரணும். அதை விட்டுட்டு ஜல்லியடிக்கக்கூடாது. நீங்க போட்ட காலை சோசியர் கட் பண்ணா அவர் ஆபீஸ்ல இருக்காரு. சோசியம் சொல்லிகிட்டிருக்காருன்னு அர்த்தம். மறுபடி மறுபடி போட்டு லொள்ளு பண்ணக்கூடாது. (நம்மை இப்படி கடுப்படிச்சா ரோமிங்ல இருக்கேன். நாளைக்கு கூப்டுங்கன்னிறது)

ஏ) சோசியர்கிட்ட என்ன கேட்கிறதுன்னு முதல்லயே முடிவு பண்ணிரணும்.

ஓ) உங்க டர்ன் வரும் வரை உங்க செல்ஃபோனை சைலண்ட்ல போட்டுருங்க. உங்க டர்ன் வந்த பிறகு பாக்கெட்ல போட்டுருங்க.

ஓள) நீங்க பார்க்கப்போனது சரியான சோசியரைன்னு வைங்க, நீங்க எதையுமே சொல்லத்தேவையில்லை, உங்க ஜாதகமே சொல்லிரும். அதனால ஜாதகத்தை அவர்கிட்ட வச்சுட்டு வளவளன்னு பேசாதீங்க.

5) ஜாதகத்தை சோசியர்கிட்ட கொடுக்கும்போதே உங்க மைண்டை பிளஸண்டா வச்சுக்குங்க.

6) உங்க இஷ்ட தெய்வத்தை மனசுல நினைச்சு இந்த சோசியர் மூலமா என் எதிர்காலத்தை எனக்கு தெரிவிக்கணும், எனக்கு ஒரு நல்ல வழியை காட்டணும்னு வேண்டிக்கங்க.

இதுவரைக்கும் சொன்ன டிப்ஸ் எல்லாம் கொடுக்கப்பட்டதுக்கு முக்கியமான காரணம் உண்டு. நீங்க சோசியம் கேட்க போகும்போது உங்க மைண்ட்லயே, சோசியர் மைண்ட்லயோ ஈகோ தலை தூக்கக்கூடாது.

மிஸ்கம்யூனிகேசன் வந்துடக்கூடாது. முக்கியமா உங்க மைண்ட்ல உங்க பிரச்சனை + எதிர்காலம் குறித்த கேள்வி தவிர வேறு எந்த டிஸ்டர்பன்சும் இருக்கக்கூடாது.

(உம்) உங்க டூவீலரை நோ பார்க்கிங்ல நிறுத்திட்டீங்கன்னு வைங்க. உங்க மைண்ட் டூவீலர் மேல இருக்குமே தவிர உங்க எதிர்காலத்தின் மேல இருக்காது.

நீங்க இந்த டிப்சை எல்லாம் ஃபாலோ பண்ணினா நீங்க பார்க்கப் போனது சுமாரான ஜோசியரா இருந்தாலும் உங்களுக்கு பெட்டர் ரிசல்ட் கிடைக்க வாய்ப்பிருக்கு.

உங்களுக்கும் ராஜயோகம் :19

Gopalapuram

அண்ணே வணக்கம்ணே ! ராஜயோகம்னா தெரியும்ல? ஆட்சி/அதிகாரம். இந்த ராஜயோகத்தை ராஜகிரகங்கள் மட்டும் தர்ரதில்லை . எல்லா கிரகங்களும் தரமுடியும். ஏன்னா காலமாற்றம் அப்படி இதை எல்லாம் ஏற்கெனவே சொல்லி தொலைச்சுட்டதால ஐ டோன்ட் வான்ட் டு ரிப்பீட்டு.

கடந்த பதிவுல செவ் பல்பு வாங்கியிருந்தா என்னெல்லாம் நடக்கும்? நடக்கறதை நடக்க விட்டா அதுவே எப்படி பரிகாரமா ஒர்க் அவுட் ஆகுதுன்னு சொல்லியிருந்தேன் ( நம்ம வாழ்க்கையில இருந்தே )

இந்த பதிவுல பாய்ண்ட் டு பாய்ண்ட் பரிகாரங்கள் தான். பதிவுக்கு போயிரலாமா?

1.போலீஸ் ஆஃபீசர் போன்ற கெட் அப்,ஹேர் ஸ்டைல் ,மீசை என்று மாறவும். சஃபாரி சூட் அணியலாம்.(பாக்கு நிறம்) கூலிங் க்ளாஸ் அணியும் வழக்கம் இருந்தால் பிரவுன் கலர் .தொப்பி அணியும் வழக்கம் இருந்தால் பிரவுன் கலர் .மார்ஷல் ஆர்ட்ஸ் பழகவும்.கு.பட்சம் ட்ராக் சூட் போட்டு நடை பயிற்சி .

2.கழுத்தில் முருகன் கையில் உள்ள வேல் டாலர் /பாக்கு நிற கயிற்றில் கோர்த்து அணிதல்.கந்தர் சஷ்டி கவசத்தில் “குத்து குத்து கூர்வடிவேலால் என்று துவங்கும் பகுதியை மட்டுமாவது மனப்பாடம் செய்து அவ்வப்போது சொல்லி வரவும்.ரத்த தானம் செய்க. பிரவுன் கலர் பர்சில் 12 கைகளிலும் ஆயுதம் தாங்கிய முருகன் படம். மொபைல்/பிசி/லேப்டாப்ல எரிமலை,தீவிபத்து ,யுத்தம் தொடர்பான ஸ்க்ரீன் சேவர் வச்சுக்கங்க.
4.வீட்டு ஹாலில் போர்க்கள காட்சி கொண்ட போஸ்டர்.போர் வீரன் சிலை .ஹாலில் உள்ள சோஃபா கவர் /ஸ்க்ரீன்ஸ் எல்லாமே பிரவுன் நிறம். இந்த பதிவில் வரிசை எண் 1 க்கு சொல்லப்பட்டுள்ள பரிகாரங்களை தாயும் செய்தல் நலம்.கூட்டு தொகை 9 வர்ர வாகனங்களை தவிர்க்கவும்.வண்டி நிறம் பிரவுன் எனில் நல்லது . வண்டியில் எங்கேனும் ஏதேனும் ஒரு ஆயுத வடிவத்தை ஸ்டிக்கரிங் செய்து கொள்ளவும்.

5.முதல் குழந்தையை உடனே பெற்றுக்கொள்ளவும் (ப்ளான் பண்றது /தள்ளி போடறதுல்லாம் வேண்டாம்) .மனைவி கருவுற்றிருக்கிறார் என்று தெரிந்த பின் டேக் ஆல் ப்ரிக்காஷன்ஸ்.ஒரு வேளை முதல் கரு அபார்ட் ஆயிட்டாலும் பொஞ்சாதிக்கு நல்ல பூஸ்ட் கொடுத்து அடுத்த முயற்சியில் குழந்தை பெற்றுக்கொண்டு விடவும்.முருகன் கை வேலை தியானிக்கவும்.வேல் பூசை செய்யவும்.குழந்தைகளுக்கும் முருகன் பெயர்களையே சூட்டவும்.இந்த பதிவில் வரிசை எண் 1 க்கு சொல்லப்பட்டுள்ள பரிகாரங்களை குழந்தைகளும் செய்தல் நலம்.

7.சமையலுக்கு நல்லெண்ணெய் (செக்கு) உபயோகிக்கவும்.ரத்த விருத்தி -ரத்த சுத்திகரிப்புக்காக ப்ராக்டிக்கலாக சில நடவடிக்கைகள் மேற்கொள்ளவும்.(மருத்துவர் ஆலோசனை பெற்று) உ.ம் சிகப்பு நிற காய்கறிகள் அதிகம் சேர்ப்பது ,ரேப்பிட் ப்ரீத்திங்,பிராணயாமம், வியர்வை வெளிப்படும்படி நடை பயிற்சி ,யோகா இப்படியாக. இடுப்பில் ஏதேனும் ஆயுதம் ( ஃபேன்சி ஸ்டோர்ல கிடைக்கும் -கழுத்துல போட்டுக்க விற்பாங்க. அதை இடுப்புல அரை ஞான் கயிற்றில் கட்டி கொள்க)இந்த பதிவில் வரிசை எண் 1 க்கு சொல்லப்பட்டுள்ள பரிகாரங்களை மனைவி/கணவரும் செய்தல் நலம்.

8.வயதில் இளையவர்கள் போலீஸ், மிலிட்டரி, ரயில்வே, எரிபொருள், மின்சாரம், ரத்தம், ஆயுதங்கள், வெடி பொருட்கள், கோபம், நெருப்பு, தர்க்கம், வியூகம், சத்ரிய குலத்தினர், சமையல் , போட்டி, ஸ்போர்ட்ஸ், , பால், கொம்புள்ள பிராணிகள், மாமிசம் ஆகிய விஷயங்களில் முடிந்தவரை விலகி இருங்கள் தவிர்க்க முடியாத பட்சம் அலார்ட்டா டீல் பண்ணுங்க.

வருடம் ஒரு முறை / தேர்தலுக்கு 45 நாட்களுக்கு முன் ஒரு சேவல் ஒன்றை விலைக்கு வாங்கி முருகன் கோவிலுக்கு சென்று 9 சுற்று சுற்றி -9 ஆவது சுற்றில் அந்த சேவலை அங்கேயே விட்டு விட்டு /அல்லது கோவில் மேலாளரிடம் ஒப்படைத்து விட்டு வந்துவிடவும்.

9.சொத்து, சேமிப்புக்க‌ள்,முதலீடு ,தூர‌பிர‌யாண‌ங்க‌ள்,வெளி நாட்டுப் ப‌ய‌ண‌ங்க‌ள்தொடர்பான டாக்குமென்ட்ஸ் பாக்கு நிற ஃபைல்ல போட்டு ஃபைல் மேல வேல் ஸ்டிக்கர் ஒன்னு ஒட்டி வைங்க. தூரப்பயணத்தின் போது பிரவுன் கலர் ஏர் பேக் . கூட்டு தொகை 9 வர்ர வாகனங்களை தவிர்க்கவும்.இந்த பதிவில் வரிசை எண் 1 க்கு சொல்லப்பட்டுள்ள பரிகாரங்களை தந்தையும் செய்தல் நலம்.

12.படுக்கையறையில் போர்க்கள காட்சி உள்ள போஸ்டர், போர் வீரன் சிலை .படுக்கை அறையின் பெயிண்ட்,பெட் ஸ்ப்ரெட்,பில்லோ கவர் அனைத்தும் பாக்கு நிறம். செருப்பும் இதே நிறம்.

(குறிப்பு: என்னடா சீரியல் நெம்பர் எகிறியிருக்கேனு கன்ஃபீஸ் ஆயிராதிங்க. இது சீரியல் நெம்பர் இல்லிங்ணா செவ் ஜாதகத்துல லக்னாத் எத்தனையாவது வீட்ல நிற்கிறாருனு காட்டுதுங்ணா)
ஸ்..அப்பாடா அடுத்த பதிவுல ராகு ஜாதகத்துல வலிமையா இருந்தா எப்படி ராஜயோகம் கொடுப்பாரு..பல்பு வாங்கியிருந்தா எப்படி ஆப்படிப்பாருன்னு பார்ப்பமா?
உடுங்க ஜூட்டு

உங்களுக்கும் ராஜயோகம் : 18

mythryi

அண்ணே வணக்கம்ணே !
நம்ம வாழ்க்கையில எதுவுமே சில காலம் தான். ஒரு கட்டத்துல அதுவே வாழ்க்கை போல இருக்கும்.ஆனால் அடுத்த கட்டம் வரும் போது அப்படி ஒன்னு இருந்ததாங்கற ஞாபகமே இருக்காது .

இந்த பட்டியல்ல இந்த வலைப்பதிவும் சேர்ந்துருமோன்னு ஒரு சந்தேகம் வந்துக்கிட்டே இருக்கு . வலைப்பூ காலத்துலயே ஒரு நாளைக்கு ரெண்டு மூனு பதிவெல்லாம் போட்டிருக்கம்.

இப்ப என்னடான்னா..

உதிரியா எழுதினா தான் தொடர முடியறதில்லைனு தொடர்பதிவு போட்டுக்கிட்டிருக்கம்.இதுவும் ரெம்ப ரப்சர் பண்ணுது .

இன்னைக்கு ஜாதகத்துல செவ்வாய் பல்பு வாங்கியிருந்தா என்ன பரிகாரம் பண்ணா ராஜயோகம் பெற முடியும்னு சொல்லோனம்.

என் லேப்ல நான் தான் முதல் எலிங்கற நம்ம பஞ்ச். ஆகவே என்னை வச்சே தொடருவம். நம்ம ஜாதகத்துல நான்கில் செவ். கூடவே கேது (லக்னம் கடகம் ஞா இருக்குல்ல)

நான்கு என்பது தாய்,வீடு,வாகனம் ,கல்வி இதை எல்லாம் காட்டும்.செவ் கடகலக்னத்துக்கு 5 ,10 க்குடையவர்.
அஞ்சுன்னா புத்தி/புத்ர /பூர்வபுண்ணியஸ்தானம் .பத்து ?தொழில்/உத்யோகம்/வியாபாரத்தை காட்டற இடம்.

மொதல் 17 வருசம் வரை நம்ம படிப்பு சிறப்பா கன்டின்யூ ஆச்சு . பிறவுதான் ஆப்பு மேல ஆப்பு . `1984ல் இன்டர்ல அக்கவுண்ட்ஸ் புட்டுக்கிச்சு (23 மார்க்) மறுபடி கட்டி எழுதினம் 72.அம்மாவுக்கு யூட் ரஸ்ல கேன்சர். டிக்கெட்டு.

அம்மா இருக்கும் போதே ஒரு தரம் (வயசு ஞா இல்லை.ரெம்ப சின்ன வயசு ) பல் தேய்க்காம டிஃபன் சாப்டதுக்கு அண்ணன் திட்ட வீட்டை விட்டு போயிட்டம். கையில ரெண்டு ரூவா இருந்தது .வேலூர் போயாச்சு .டிக்கெட்டு ரூ.1.90. (4=வீடு)

அம்மாவுக்கு பிறகு வீடே நரகமாயிருச்சு .1989லயே லவ்ஸ் பண்ணி கண்ணாலம் கட்டி பிரிச்சுட்டானுவ. இல்லின்னா அன்னைலருந்தே உஞ்ச விருத்தி பண்ணியிருக்கனும்.பிரிச்சு போட்டதால அதுல இருந்து எஸ்கேப் .ஒரு ரெண்டு வருஷம் எக்ஸ்டென்ஷன் கிடைச்சது

ஆனாலும் என்ன 1991ல மறுபடி லவ்ஸ் . கண்ணாலம் .இந்த முறை எவனும் பிரிக்கல. 1994 வரையாவது அப்பாவோட மறைமுக ஆதரவு இருந்தது .அவரும் காலி .பிறவு என்ன? பூர்விக வீட்டை வித்து காசு கொடுக்கிறவரை உஞ்ச விருத்திதான்.

வறுமைன்னா தமிழ் சினிமா மாதிரி தொடர்ச்சியான வறுமைல்லாம் கிடையாது .இடையிடையே ஓயாசிஸ்களும் உண்டு .

வருமானம் இருந்ததே தவிர -நிரந்தரவருமானம் கிடையாது .பட்டுக்கோட்டையாரை விட அதிகமான வேலைகள் செய்த பார்ட்டின்னா பார்த்துக்கங்களேன் ( 10= தொழில்ஸ்தானம்) மணி மேனேஜ்மென்ட் தெரியாது -உலகம் தெரியாது -கற்பனைகள் அதிகம்.

1997 நவம்பர் 10 ஆம் தேதி ஒரு லட்சத்து ரெண்டாயிரம் ரூவா வருது . 1998 பிப்.23 ஆம் தேதி அரிசி வாங்க பணமில்லை .வீட்ல அரிசி இல்லை.
மறுபடி இங்கேருந்து 2007 வரை இதே நிலைதான்.(இடையிடையே ஓயாசிஸ்கள் உண்டு) .இந்த 2007 தான் நமக்கு டர்னிங் பாய்ண்ட்.

தினத்தந்தில வேலை .அன்னைய தேதிக்கு நம்ம வயசு 40.கொய்யால இந்த நாற்பது வயசுல கூட லைஃப்ல செட்டில் ஆகலின்னா பொளப்பு நாறிரும்னு கிரிமினல் தனமா ப்ளான் பண்ணேன்.

கரெக்டா ரெண்டே வருஷம் . இனி வேலை இல்லைன்னாலும் புவ்வாவுக்கு பயமில்லைங்கற நிலையை கொண்டு வந்துட்டன்.

கூடவே இந்த ரெண்டு வருஷத்துல நாம போட்ட பதிவுகள் கபாலி தீம் சாங் மாதிரி “நெருப்புடா”ரகம். ஹிட்ஸ் பிச்சுக்கிச்சு . கட்டண ஆலோசனையை ஆரம்பிச்சிருந்தம்.அதுவும் பத்திக்கிச்சு . -வேலைய விட்டுட்டன்.

இடையில என்ன ஆச்சு? என்னதான் பரிகாரம் செய்து தொலைச்சன்? எப்படி ஒர்க் அவுட் ஆயிருச்சுன்னு கேப்பிக சொல்றேன்.

1.கடந்த 24 வருசமா தொடர்ந்து ரத்த தானம் பண்ணிக்கிட்டிருக்கன். ஆரம்பிச்சப்ப உடல் எடை 48 கிலோ .இப்ப கு.பட்சம் 60 கிலோ .(ரத்தத்துக்கு காரகன் செவ்)

2.அம்மா போயாச்சு.வீடும் போயாச்சு. அரை டஜன் சைக்கிள் போயாச்சு. மூனு வண்டி போயாச்சு.இதுல மொத ரெண்டு வித்து மசூதிக்கு நன் கொடையா கொடுத்துட்டன்.கொசுறு ஒரு வாஷிங் மிஷின்.( எலக்ட் ரிக்கல் =செவ்) இப்பம் மவளுக்காவ ஒரு டிவி எஸ் எக்செல் செகண்ட் ஹேண்டி வாங்கி தந்திருக்கன் . ராத்திரி 7 மணிக்கு மேல அஞ்சு நிமிட் ஓட்டினா சாஸ்தி .

மொபைல் புக்ஸ்டோர் பண்றேன்னு நெல்லா இருந்த ரெண்டு டூ வீலரை இணைச்சு நாஸ்தி பண்ணி அது மேல ஒரு டப்பா வச்சு அதுக்கு கதவு வச்சு ..ஒரு பத்தாயிரம் ரூவா வரை வட்டம். ( நல்ல டைம் பாஸ்.மவளுக்கு கண்ணாலமான புதுசு – இந்த ப்ராஜக்ட் செம பிசியாக்கிருச்சு – பூமுடிப்பு /சீமந்தம் தவிர மவ வீட்டுபக்கம் அடியெடுத்து வைக்கலின்னா பாருங்க)

3.இருந்ததெல்லாம் வாடகை வீடு (இருப்பதும்) . கரண்ட் பில்லுக்கு வூட்டுக்காரன் சொல்ற அமவுண்டை படக்குனு எடுத்து வச்சுர்ரது . தனி மீட்டர் இருந்தா ஃபைன் போட்டுதான் கட்டறது .

4.மவ லவ் பண்ண ஆரம்பிச்சதுமே கொய்யால இதுவும் போச்சான்னு டிசைட் ஆயிட்டன் ( 5=புத்ரஸ்தானம்)

5.ஒரு சீசனல் ஃபீவர் போல திடீர்னு கார்ப்பென்டரிங்குல இறங்கிருவன்.அமெச்சூர்ங்கறதால செமயா ஏமாத்துவானுவ. பல நேரம் செய்த உருப்படி எதுக்கும் உபயோகமில்லாம போகும்.அல்லது திடீர்னு ஆருமேலனா அன்பு பொங்கி தூக்கி கொடுத்துருவன்.

6.ஒரு காலத்துல திடீர் திடீர்னு லைம் லைட்டுக்கு வந்துருவம். ( அஞ்சு = பெயர் புகழ்) வார்த்தா மாதிரி மேஜர் டெய்லில அரைப்பக்கம் ஸ்டோரில்லாம் வந்திருக்குண்ணே. இப்பம்? ஒரு ம..னாவும் கிடையாது .மோடி /ஜெ மேட்டர்ல பல்புல்லாம் செம பரிகாரம்ணே.அதுவும் கலைஞர் ஆதரவு நிலையை எடுத்த பிறவு செம பரிகாரம். (ஒரு சீக்ரெட் சொல்லவா .. கலைஞர் தான் முதல்வர்னு நாம சொல்லி -அது நடக்காம போன பிறவு தான் நம்ம கிராஃப் இன்னொரு பீக்குக்கு போயிருக்கு )

இத்தீனி இழவும் இழவெடுத்து போனதால தான் பொளப்பு ப்ரேக் இல்லாம ஓடுது .

அதுவும் இப்பம் இருக்கிற வீட்டை பத்தி சொல்லனும்னா தெற்கு பார்த்த வீடு (வாஸ்துப்படி இது நல்லதில்ல.ஆனால் தெற்கு செவ்வாய்க்குரிய திசை ) ஹால்ல போட்டிருக்கிற கிரானைட் பாக்கு நிறம்.

ஜாய்ன்ட் மீட்டர் இருந்தப்போ ஒரு கோ டெனன்ட் அச்சானியமா நான் 150 ரூ தான் கொடுப்பேன்னு அழிச்சாட்டியம் பண்ண அ நி யாயத்துக்கு அவன் உபயோகிச்ச உபரி கரண்டுக்கும் நானே கட்டி தொலைச்சன் (இப்பம் தனி மீட்டர் தான்)

அழிச்சாட்டியம் பண்ண கேஸு வேலை போயி /சொந்தமா கிளிக்கிறேன்னு இறங்கி ஷெட் ஆகி மறுபடி எங்கயோ வேலைக்கு போயிட்டிருக்கு . ( நம்ம கருமத்தை எல்லாம் இப்படி கழிச்சதுக்கு/ட்ரான்ஸ்ஃபர் பண்ணிக்கிட்டதுக்கு அன்னாருக்கு நன்றி )

இத்தனை பரிகாரத்துக்கு பிறவு நம்ம புத்தி சரியான ரூட்ல வேலை செய்யுது .லாஜிக்கலா திங்க் பண்றம்.தில்லா கருத்து சொல்றம் ( டாக்சி வரும் /ஆட்டோ வரும்னுல்லாம் எக்ஸ்பெக்ட் பண்ணினானும் எதுவும் நடக்கல. தொழில் ஜரூரா நடக்குது .மவளும் கீழேயே வந்து சேர்ந்துட்டா.

ஒரு வேளை ஆத்தா நம்மை தூக்கி உள்ள வச்சாலும் பொஞ்சாதிக்கு மவ -மாப்ள துணை . பேரன் ? நல்ல பொழுது போக்கு.

இதெல்லாம் தானா நடந்த மேட்டரு தான். ஏதோ 1989 ல ஜோசியம் கத்துக்க ஆரம்பிச்ச பிறவு பல ஆயிரம் ஜாதகங்கள் -அந்த ஜாதகர்களின் வாழ்க்கைகளை பார்த்த பிறவு நானா மைண்டுல தொகுத்து வச்சிருந்தது ..இப்ப வெளிய வருது .

தானா நடந்ததை ப்ளான் பண்ணியும் நடத்திக்கலாம்ல? அதைத்தான் இன்னைக்கு சொல்ல நினைச்சேன்.இப்படி ஒரு பதிவு சொந்த கதையில பாழா போயிருச்சு .சாரிங்ணா..அடுத்த பதிவுல பாய்ண்ட் டு பாய்ண்ட் பரிகாரம் தான்.உடுங்க ஜூட்டு ..

உங்களுக்கும் ராஜயோகம் :17

wrapper

அண்ணே வணக்கம்ணே !

இன்னைக்கிருக்கிற அரசியல்ல ராஜகிரகங்கள்னு சொல்ற சூரியன், குரு ,செவ் மட்டுமே ராஜயோகத்தை கொடுக்கும்னு சொன்னா அது உட்டாலக்கடி . அப்படி சொல்ற பார்ட்டி தன்னை அப்டேட் பண்ணிக்கவே இல்லேனு அருத்தம்.

சாணக்கியர் ஆரு?பிராமணர். (குரு காரகம்) சந்திரகுப்தன் தன்னம்பிக்கை + வீரம்/போர்த்திறமை கொண்டவன். ( சூரிய/செவ் காரகம் ) இந்த காம்பினேஷன் அந்தகாலத்துல சூப்பர் ஹிட் அடிச்சுருச்சு .

ஆனால் இதுஇன்னைக்கு வேலைக்காகுமா? சாணக்கியரு வேணம்னா தப்பிச்சுக்கலாம்.சந்திர குப்தன்? ஆயுதத்தடை சட்டத்துல உள்ளே தூக்கி வச்சுருவாய்ங்க. நிற்க.

பழங்கால கிரந்தங்கள்ள சுக்கிரனை கூட ராஜகிரகம்னு சொல்லியிருக்காய்ங்க. அதுக்குண்டான காரண காரியங்களை ஆராய்ஞ்சம்னா டெக்காமெரான் கதைகள் மாதிரி போயிரும் .ஆகவே அம்பேல். இது மட்டும் இன்னைய தேதிக்கும் ஒர்க் ஆகுதாங்கற டவுட்டு எனக்குண்டு . இந்த தொடரின் கடைசி பதிவுல இதை எல்லாம் டச்சு பண்றேன்.

அன்னைக்கிருந்தது மன்னராட்சி .ஆகவே முன் சொன்ன 3 கிரகங்கள் /பின் சொன்ன சுக்கிரனை வச்சு ராஜயோகத்தை ஆட்டைய போட்டுட்டானுவ. இன்னைக்கு அப்படியா?

நம்ம நாட்ல எஸ்.சி/எஸ்.டி/பி.சி/மைனாரிட்டி மக்கள் மட்டும் 52% பேர் இருக்காய்ங்க. இவிகள்ள குறிப்பிட்ட சதவீதத்தினர் ஆதரிச்சாதான் எந்த கட்சியுமே ஆட்சிக்கு வரமுடியும்/எந்த வேட்பாளருமே செயிச்சு வரமுடியும்.

எஸ்.டி மக்களை சூரிய காரகம்னு சொல்லலாம். எஸ்.சி ? சனி காரகம். மைனாரிட்டி ? ராகு /கேது காரகம்.

பிசி? கண்ட சாதிகளையும் இந்த பட்டியல்ல சேர்த்து சொதப்பி வச்சிருக்காய்ங்க.ஆகவே அம்பேல். அந்தந்த சாதி /அதன் பின்புலம் /அவிக ஜீன்ஸ்ல பதிவாகியிருக்க கூடிய விஷயங்களை பொருத்து காரகங்களை நிர்ணயிக்கனும்.

பா.ம.க வன்னியர் ஓட்டு அன்னியர்க்கில்லைன்னு இறங்கினாய்ங்க. கிடைச்சுதா? இல்லை . இவிக செவ் காரகம்னு வச்சுக்கிட்டா எல்லா வன்னியரும் அன்புமணிக்கு தானே ஓட்டு போட்டிருக்கனும்?ஏன் போடல.

ஒரு வேளை அன்பு மணி ஜாதகத்துல செவ் பல்போ?

ஒரு சாதியில பிறந்ததாலயே அந்த சாதி மக்கள் எல்லாரையும் ஒரு கிரக காரகத்துவத்துல அடக்கிர முடியாது . அவிகவிக மென்டல் மெச்சூரிட்டி/கல்வி /என்விரான்மென்டை பொருத்து /அவிக ஜாதகத்துல பலம் பெற்ற கிரகங்களை பொருத்து அவிக காரகம் மாறீரும்.
புரியுதா?

இந்த பதிவுல செவ்வாய் பலம் பெறாத ஜாதகர்கள் செவ் வழங்கும் ராஜயோகத்தை பெறனும்னா என்ன செய்யனும்னு சொல்லோனம்.

ஆனால் செவ்வாயை சாக்கா வச்சுக்கிட்டு கிரகங்களை பற்றிய ஒட்டு மொத்த புரிதலை ஏற்படுத்திரனுங்கற கெட்ட எண்ணம் பலம்மா எழுந்துக்கிட்டிருக்கு.ஆகவே பரிகாரங்கள் அடுத்த பதிவில்.

ஒரு ஜாதகர் அல்பாயுசுனு வைங்க. அவர் ஜாதகத்துல நல்ல பலனை தரவேண்டிய கிரகங்கள் படபடனு பலன் தந்துக்கிட்டிருக்கும் (ஃபாஸ்ட் ஃபார்வார்ட் பண்ண மாதிரி ) .

இதுவே ஒரு ஜாதகர் தீர்காயுசுன்னு வைங்க. நல்ல பலனை தரவேண்டிய கெரகம்லாம் கவர்ன்மென்ட் ஆஃபீஸ் க்ளர்க் மாதிரி ஸ்லோ மோஷன்ல வேலை செய்துக்கிட்டிருக்கும்.

ஆயுசை பொருத்து 2 ரகம் இருக்காப்ல யோகங்களைபொருத்தும் 2 ரகம் இருக்கு. முன் யோக ஜாதகம்/பின் யோக ஜாதகம்.

அஃதாவது முப்பது வயசுக்கு மிந்தியே பலன் கொடுத்துர்ர ஜாதகம் முன் யோகம். முப்பது வயசுக்கு பின்னாடி / 55 வயசுக்கு பின்னாடி பலன் தர்ர ஜாதகம் பின் யோக ஜாதகம்.

முன் யோக ஜாதகர் வாழ்க்கையில நல்ல பலன்லாம் ஃபாஸ்ட் ஃபார்வார்ட் பண்ண மாதிரி ஓடும். கேக் வாக் கணக்கா. யோகம் முடிஞ்சு போச்சுன்னா ? அம்பேல் .

பின் யோக ஜாதகர் வாழ்க்கையில நல்ல பலன்லாம் ஸ்லோ மோஷன்ல நடந்துக்கிட்டிருக்கும். முப்பது / அம்பது வயசு டச் பண்ணிட்டா பிச்சுக்கும். எங்க பக்கத்துல ஒய்.எஸ்.ஆர்லாம் சி.எம் ஆகறப்ப வயசு 55.

இந்த செவ் மேட்டர்க்கு வந்தா செவ் ஒரு ஜாதகத்துல பல்பு வாங்கியிருந்தா திடீர் மரணம் ஏற்பட வாய்ப்பிருக்கு . அந்த மரணம் குத்து -கொலை – குண்டு வெடிப்புன்னும் நடக்கலாம். அல்லது என்விரான்மென்ட்/வளர்ப்பு காரணமா அப்பிராணியா ஹார்ட் அட்டாக்.

இதெல்லாம் ஒரே நாள்ள நடக்கிற மேட்டரா? ஊஹூம்.. ஓஷோ சொல்றாப்ல இறப்பு பிறப்புக்கு முன்னமே துவங்கிருது.
நான் பார்த்தவரை ஒருத்தன் ஜாதகத்துல செவ் பக்காவா உட்கார்ந்தாச்சுன்னா அவன் பாட்டுக்கு தேமேனு இருப்பான்.

வடிவேலு கணக்கா சில காலம் அடிவாங்காத ஏரியாவே இல்லேங்கற ரேஞ்சுக்கு அடி கூட வாங்கலாம். இதெல்லாம் ரிவர்ஸ் எஃபெக்ட். செவ் சம்பந்தப்பட்ட தசையோ /புக்தியோ சிக்கியாச்சுன்னா சீன் தலைக்கீழா மாறும்.

திடீர் வளர்ச்சி / கிடு கிடு வளர்ச்சிங்கறாய்ங்களே இதெல்லாம் செவ் பல்ப் வாங்கின ஜாதகம் அல்லது ராகு கேது பல்ப் வாங்கின ஜாதகமாவே இருக்கும்.

செவ் எப்படியா கொத்த முடிவை கொடுப்பாருன்னு சொல்லிட்டன். இந்த ராகு கேது? படக்குனு ஓவர் நைட்ல காணாம போயிருவாய்ங்க (வேந்தர் மூவிஸ் காரர் மாதிரி) அல்லது விஷமருந்தி தற்கொலை இத்யாதி .

செரிங்காணும் ..செவ் ஜாதகத்துல செரியில்ல.ஆனாலும் நான் செவ் தர்ர ராஜயோகத்தை டேஸ்ட் பண்ணியே ஆகனும்.அதுக்கு ஒரு வழியை சொல்லும்னு சலிச்சுக்கறேளா?
வெய்ட் பண்ணுங்கோ ..அடுத்த பதிவுல பாய்ண்ட் டு பாய்ண்ட் கொடுத்துர்ரேன்.

செக்ஸ் குறித்த பெண்கள் கருத்து ( வீடியோ )

அண்ணே வணக்கம்ணே !
இந்த வீடியோவோட குவாலிட்டிய பார்த்தா ஏற்கெனவே பெரிய ரவுண்டா வந்திருக்கும்னு தெரியுது .ஆனாலும் பலர் மிஸ் பண்ணியிருப்பிங்க.ஆகவே வீடியோவுக்கான தொடுப்பை கடைசியில தந்திருக்கன்.

அதுக்கு மிந்தி ஒரு சின்ன ஸ்கூப். நம்ம இமிசை தாங்க முடியாம சி.எம்.செல்லுக்கு புதிய பொறுப்பாளரை மம்மி போட்டிருக்கு.

ஆன் லைன் சி.எம்.செல்லுல மனுவோட சாதி அட்மின் ரிஃபார்ம்ஸ்னு கொடுத்திருக்கம். ஆனாலும் மக்கள் மீது பாரம் சுமத்தாம/ அரசு வருவாயை கூட்டி பெட்டர் கவர்னென்ஸ் கொடுக்க உதவ நாம கொடுக்கிற ஆலோசனைகள் மட்டும் மிக சரியா டாஸ்மாக் எம்.டிக்கே போகுதே?

ஏன்டா? ஏன்டா இப்படி ??

டாஸ்மாக்

Tasmac MD 2

ஏற்கெனவே இந்த வேலைய பண்ணதுக்கு தான் கயிவி கயிவி ஊத்தினம். இப்ப மறுபடி மே 26 ஆம் தேதி நாம இதே மேட்டர்ல அனுப்பின மனுவை அதே டாஸ்மாக் எம்.டிக்கு அனுப்பியிருக்கானுவ.

நோட் திஸ் பாய்ண்ட் யுவர் ஆனர் !

நிற்க ஏதோ கிளுகிளு வீடியோங்கறானேனு ஒரு எட்டு பார்க்க வந்த உங்கள வச்சு செஞ்சதுக்கு சோரி . நீங்க பார்க்க வந்த வீடியோ இங்கே