.உடலுறவின் மீது மனிதனுக்கு ஏன் இத்தனை ஆர்வம். மனிதர்கள் பல்வேறு

1.உடலுறவின் மீது மனிதனுக்கு ஏன் இத்தனை ஆர்வம். மனிதர்கள் பல்வேறு போர்வைகளில் செய்வது 2 வேலைகளைத்தான். ஒன்று சாவது, இரண்டு சாகடிப்பது . இது இரண்டுமே உடலுறவில் சாத்தியமாகிறது. 2.ஒவ்வொரு ஆண் பெண்ணிலும் பாதி ஆண், பாதி பெண் தான் உள்ளனர். இந்த பற்றாக்குறை தீருமோ என்ற நப்பாசையில் தான் பெண், ஆணை /ஆண் பெண்ணை நாடுகின்றனர்.
3.உடலுறவின் உச்சக்கட்டம் என்பது நிகழும்போது காலம் நின்று போகிறது. இது மரணத்துக்கான சேம்பிள் பேக் தான். மனிதனுக்கு துன்பத்தை தருவது நகரும் காலம் தான். காலம் நகரும் போது எல்லாம் மாறிவிடுகிறது.மாற்றம் மரணத்துக்கு ஒப்பானது.
4.ஒவ்வொரு மிஷினிலும் ஆன்,ஆப் சுவிட்ச் இருப்பது போலவே ஒவ்வொரு உயிரிலும் தன்னை காத்துக்கொள்ளும் காப்பாற்றிக்கொள்ளும் உணர்வை போலவே தன்னை தான் அழித்துக் கொள்ளும் உணர்ச்சியையும் இயற்கை ஒளித்து வைத்துள்ளது. அந்த உணர்வு உடலுறவுக்கு தூண்டுகிறது..இது உள்ளார்ந்த வகையில் பார்க்கும் போது தவணை முறையிலான தற்கொலைதான்.
அதே நேரம் தான் சாவதை (அழிவதை) எவ்வாறேனும் தடுக்கும் உணர்வும் உடலுறவில் அடங்கியுள்ளது. தன் சாயலில் மற்றொரு உயிரை படைத்தல்.
இவையெல்லாம் தத்துவ,மனோ தத்துவ காரணங்கள். யதார்த்தத்தில் பார்க்கும்போது மற்றொரு காரணம் உள்ளது. இந்த பகுதியை இதர வலைதள ஆசிரியர்கள் தூக்கிவிடாதிருந்தால் உங்கள் ஜாதகம் யோக ஜாதகம் தான்.
ஆணும் பெண்ணும் உடலுறவில் ஈடுபடும்போது யோனியினுள் ஆணுறுப்பு நுழைக்கப் பட்டபிறகு ஆணுக்கு 7 அசைவுகளில் உச்ச நிலை ஏற்பட்டு இந்திரியம் நழுவி விடுகிறது. பெண்ணுக்கோ 23 முறைகள் அசைக்கப் பட்ட பிறகே உச்ச நிலை ஏற்படுகிறது. இது ஒவ்வொரு ஆணுக்கும்,பெண்ணுக்கும் அனுபவத்தில் தெரிந்தே இருக்கும். இதை எப்படியாவது தவிர்க்க வேண்டும் என்ற கஜினி தனமான ஆசை மனிதனை மீண்டும்,மீண்டும் உடலுறவில் ஈடுபட செய்கிறது. இந்த ஒரு மேலோட்டமாக பார்க்கும் போது பிரச்சினைகள் வெவ்வேறாக இருந்தாலும் உடலுறவிலான இந்த பிரச்சினை தான் தம்பதிகளை காவல் நிலையம்,கோர்ட்டு,தற்கொலை,கள்ளக்காதல்,ஓரின காதல்,வரதட்சினை கேட்டு மனைவியை இம்சித்தல் போன்ற நிலைகளுக்கு விரட்டுகிறது.(உடலுறவில் திருப்தியுறாத மனைவியை கண்ணால் பார்க்காதிருக்க இது ஒரு சாக்கு)

ஜெயலலிதாவுக்கு ஜாதகம் சொன்னேன் -3

அம்மாவுக்கு தற்போது ராகு தசையில் சுக்கிர புக்தி நடை பெறுகிறது. (இது குறித்து ஏற்கெனவே 2 ஆம் பாகத்தில் சொல்லியுள்ளேன். சுக்கிரன் மிதுன லக்கினத்துக்கு யோககாரகன். இவர் கோண ஸ்தானங்களில் இருந்தால் தான் நல்லது.

அம்மையாரின் ஜாதகத்தில் இவர் கேந்திரம் பெற்றுள்ளார். இவர் சுப பலன் களை தருவதாயின் அவருக்கு காலாகாலத்தில் திருமணமாகியிருக்கும்,மகாலட்சுமி போன்ற மகள் உறுதுணையாக இருந்திருப்பார். வீடுகள் ரெயிடுக்குள்ளாவது,கொடைக்கானல் குற்றச்சாட்டுக்கள், வெளிநாட்டுக் கார் அன்பளிப்பு போன்ற சம்பவங்கள் நடந்திருக்காது.

எனவேதான் அடித்து சொல்கிறேன்.2006 மார்ச்,9 ஆம் தேதி ஆரம்பமான சுக்கிர புக்தி 2009 மார்ச் 9 ஆம் தேதி வரை நடக்கும். மற்ற ஜோதிடர்கள் கூறுவது போல் சுக்கிரன் யோகத்தை தருவதாயிருந்தாலும் 2009 மார்ச்சுக்குள் தேர்தல் வந்தால் தானே முதல்வராகமுடியும்.

கலைஞர் ஸ்டாலினை முன்னிலைப் படுத்திவருவதற்கு கட்சி,தொண்டர்கள்,பத்திரிக்கைகள் தரப்பிலிருந்து எதிர்ப்பு ஏதுமில்லை. மேலும் ஸ்டாலினுக்கு பட்டம் கட்டுவதில் ஏனிந்த தாமதம் என்ற கேள்வி தான் எழுந்து வருகிறது. எனவே அம்மாவுக்கு நிராசை தான் மிஞ்சப் போகிறது.

ராசிக்கு 11 ல் ஸ்தம்பித்துள்ள செவ்வாய் பலத்தில் ஏதேனும் குடைச்சல் கொடுத்துக் கொண்டிருக்க முடியும் அவ்வளவு தான். 2007,நவம்பர் 11 ல் ராசிக்கு 5ல் வ‌ர‌ உள்ள‌ குரு ,ஜ‌ன்ம‌த்தில் உள்ள‌ ச‌னி,கேதுவை மிஞ்சி என்ன‌ செய்துவிட‌முடியும்.

எது எப்ப‌டியானாலும் அம்மையார் //www.nilacharal.com//ல் வெளிவ‌ந்து கொண்டிருக்கும் என‌து ஆய்வு தொட‌ரை ப‌டித்து உரிய‌ ப‌ரிகார‌ங்க‌ள் செய்து கொண்டால், என‌து ஆப்ப‌ரேஷ‌ன் இந்தியா 2000 அம‌ல் ப‌டுத்த‌ப்ப‌ட‌வேண்டும் என்று குர‌ல் கொடுத்தால் நாட்டில் உள்ள‌ 40 கோடி ஏழைம‌க்க‌ள், 10 கோடி வேலை‌ய‌ற்ற‌ வாலிப‌ர்க‌ள், 70 கோடி விவ‌சாயிக‌ள் அம்மையாரை பிர‌த‌ம‌ராக‌வே ஆக்கிவிடுவார்க‌ள் என்ப‌தில் என‌க்கு ச‌ந்தேக‌மில்லை.

ஜோதிட‌ப்ப‌டி ச‌னி எந்த‌ ராசியில் இருந்தாலும் 4 ராசியின‌ருக்கு அனுகூல‌ ப‌ல‌ன் க‌ளை த‌ருவார். அம்மையார் என் திட்ட‌த்துக்கு குர‌ல் கொடுத்தால் ஜ‌ன‌த்தொகையில் 12ல் 4 பாக‌ம் ம‌க்க‌ளின் கிர‌க‌ப‌ல‌ன் க‌ள் அம்மாவுக்கு கை கொடுக்கும். இது உறுதி

ஜெயலலிதாவுக்கு ஜாதகம் சொன்னேன்‍-2

5ல் உள்ள கேது, தனித்து நின்ற குரு அம்மையாருக்கு கெட்ட பெயரை தருவதில் நீயா நானா என்று போட்டியிடுகின்றனர். குரு 7 ல் உள்ளார். 7 என்பது கணவனை காட்டுமிடம். குரு தான் நின்ற இடத்தை நசிக்கச் செய்வார் என்பது எளிய விதி. இவர் 7,10 இடங்களுக்கு ஆதிபத்தியம் பெற்றதால் தான் அம்மையாருக்கு கோயில் குளங்கள் மீது அதீத ஈடுபாடு ஏற்பட்டு அவப்பெயரும் ஏற்பட்டது.

லக்னாதிபதியான புதன் (4க்கு அதிபதியும் இவரே/ 4 என்றால் தாய்,வீடு,வாகனம்) 9ஆமிடத்தில் 3க்கு அதிபதியான சூரியனுடன் சேர்ந்துள்ளார். இதனால்தான் அடிக்கடி முகாம் மாற்றும் பழக்கம் உள்ளது. 1+3= அலைச்சல் தான். 3 என்பது தைரியத்தை காட்டுமிடம். இதன் ஆதிபத்தியம் சூரியனுக்கு கிடைத்திருப்பதால் தான் இவரது தன்னம்பிக்கை ஓவராகி அகங்காரமாக காட்சி அளிக்கிறது.

ஒன்பது என்பது வாழ்வில் வழிகாட்டியாக அமையும் குருவைக் காட்டுமிடம். லக்கினாதிபதி புதன் இங்கு அமர்ந்ததால் இவரது அரசியல் குருவான எம்.ஜி.ஆர் வழியில் அதிகாரம் கிடைத்தது. 5,12க்கு அதிபதியான சுக்கிரன் 10ல் உச்சம் பெற்றதைத்தான் எல்லா ஜோதிடர்களும் புகழ்ந்து பேசுகிறார்கள். என்னைப் பொறுத்தவரை சுக்கிரன் கேந்திரம் பெற்றதால் தான் அம்மையார் இன்று தனிமரமாக நிற்கிறார்.

ஆடம்பரம்,படாடோபம்,கிலோ கணக்கில் வெள்ளி இதற்கெல்லாம் இந்த சுக்கிரன் தான் தூண்டி விட்டார். சுக்கிரன் கிருக காரகன்,வாகன காரகன். அம்மையாருக்கு சுக்கிரன் யோகம் தருவதாயிருந்தால் ஏன் அவருக்கு வீடு,வாகனம் தொடர்பாகவே தொல்லைகள் வருகின்றன. விளக்குவார்களா ஜோதிடர்கள்?

10ல் உள்ள‌ ராகு ச‌ட்ட‌த்திற்கு புற‌ம்பான‌வ‌ர்க‌ளின் உற‌வை த‌ருகிறார். அம்மையாருக்கு த‌ற்போது ந‌ட‌ப்ப‌து ராகு த‌சையாகும். இது 1994/8/21 அன்று துவ‌ங்கிய‌து. இத‌ன் முத‌ல் பாதி 21/8/2003 ல் முடிந்துவிட்ட‌து. 6,11 க்கு அதிப‌தியான‌ செவ்வாயின் வீட்டில் ராகு (ப‌த்தில்) நின்றுள்ளார். முத‌ல் 9 வ‌ருட‌ங்க‌ள் ஓர‌ள‌வு ந‌ல்ல‌ ப‌ல‌னை கொடுத்துவிட்ட‌ ராகு த‌ன் இர‌ண்டாம் பாதியில் எந்த‌ அள‌வு ப‌ல‌ன் கொடுப்பார் என்ப‌து ஆராய்ச்சிக்குரிய‌ கேள்வியாகும்.

கோச்சார‌ப்ப‌டி சிம்ம‌த்துக்கு 4ல் உள்ள‌ குரு கொடைக்கான‌ல் குடைச்ச‌லை கொடுத்துக் கொண்டே இருக்கிறார். ஜ‌ன்ம‌த்தில் வ‌ந்த‌ ச‌னி அங்குள்ள‌ கேதுவுட‌ன் சேர்ந்து மூன்றாவ‌து அணியிலிருந்து பிரித்துவிட்டார். 2007 ந‌வ‌ம்ப‌ர் 11 க்கு 5ல் வ‌ர‌விருக்கும் குரு ஜ‌ன்ம‌ ச‌னி,ஜ‌ன்ம‌ கேதுவை மீறி என்ன‌ செய்துவிட‌ முடியும்.

அம்மையாருக்கு இப்போதுள்ள‌ ஒரே ஆறுத‌ல் மிதுன‌த்தில் ஸ்த‌ம்பித்துள்ள‌ செவ்வாய்தான். (இது ராசிக்கு 11 ஆமிட‌ம்.செவ்வாய் இங்கு 2008 ஏப்ர‌ல் வ‌ரை த‌ங்குகிறார்)

மொத்த‌த்தில் அம்மையார் இப்போதாவ‌து நிலாச்சார‌லில் வெளிவ‌ரும் என் ப‌ரிகார‌ தொட‌ரை ப‌டித்து பின்ப‌ற்றினால‌ன்றி தேறுவ‌து க‌ஷ்ட‌ம் தான். (அப்ப‌டி போடு அறுவாளை)

குறிப்பு: என் ஆப்ப‌ரேஷ‌ன் இந்தியா 2000 திட்ட‌த்துக்கு ஆத‌ர‌வு த‌ர்ர‌தாயிருந்தா பார‌த‌ நாட்டின் 40 கோடி த‌ரித்திர‌ நாராய‌ண‌ர்க‌ளும் அம்மாவுக்கு க‌வ‌ச‌மாகி விடுவார்க‌ள். பிறகு நாள் என்செய்யும்? கோள் என்செய்யும்?

ஜெயலலிதாவுக்கு ஜாதகம் சொன்னேன்?-1

ஜெயலலிதாவுக்கு ஜாதகம் சொன்னேன்?ஆம். கூரியரில் சொன்னேன். நான் சொன்னது நடந்தது. அதற்கு ராமர் கோவிலில் சுண்டல் தருவது போல் ஒரு தேங்க்ஸ் கார்டும் அம்மையாரின் விலாசத்திலிருந்து வரப்பெற்றேன். என் ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டத்திற்கு பெரிய மனிதர்களின் ஆதரவை திரட்ட பார்ப்பனர்கள் பாணியில் என் ஜோதிட ஞானத்தை பயன் படுத்துவது வழக்கம். ஆனால் பப்பு வேகவில்லை.
நான் கூரியரில் சொன்ன ஜோதிடம் பலித்த கதையை சரித்திர நாயகி இதழுக்கு எழுதினேன். அதன் ஆசிரியர் வழக்கு விஷயம் என்னவாகும் என்று கணிக்கச்சொன்னார். கணித்து எழுதி கொடுத்தேன் . அது பிரசுரமுமானது. நான் எழுதியது நடக்கவும் நடந்தது. அம்மையார் பணிக்கரை நம்பினாரே தவிர ” பால ஜோதிஷ்ய,வ்ருத்த வைத்ய்” என்ற சுலோகத்தை பின்பற்றவில்லை.
சந்திரபாபு மீதான கொலை முயற்சியை முன் கூட்டி கணித்து என் ஆதர்ஸ புருஷரின் மகளும்,பாபுவின் மனைவியுமான புவனேஸ்வரிக்கு கூரியர் மூலம் தெரிவித்தேன். கலைஞர் தலைமையில் மைனாரிட்டி அரசு அமையும்,ராமதாஸ் கலைஞரை தலையால் தண்ணி குடிக்க வைப்பார் என்று தினகரனுக்கு எழுதினேன். பிரசுரம் தான் ஆகவில்லை.
ஆந்திர மானில அ.இ.அ.தி.மு.க அமைப்பாளர் திரு.பக்கரின் கடிதத்தோடு லாயிட்ஸ் ரோடு அ.தி.மு.க. அலுவலகத்துக்கும் போனேன். கைப்ப‌ண‌ம் செல‌வ‌ழிந்த‌துதான் மிச்ச‌ம். அங்கிருந்த‌வ‌ர்க‌ள் அழுத‌ பிள்ளைக்கு வா.ப‌ழ‌ம் (கெட்ட‌ வார்த்தை இல்லிங்க‌) கொடுத்த‌து போல் பேசினார்க‌ள். எல்லாத்த‌யும் எழுதி கொடுங்க‌ அம்மா கூப்பிடுவாங்க‌..சால்வை போடுவாங்க‌,ப‌ண‌ம் கொடுப்ப‌ங்க‌ என்றெல்லாம் சொன்னார்க‌ள். அம்மா த‌லையில் துண்டு தான் போட்டார்க‌ள். ச‌ரி ஒழிய‌ட்டும்..
இனி அம்மா எதிர்கால‌ம் எப்ப‌டி? பார்ப்போம்.
அம்மா ஜாத‌க‌ம்:மிதுன‌ ல‌க்கின‌ம்,இர‌ண்டில் ச‌னி,மூன்றில் ச‌ந்திர‌ன்,செவ்வாய்,5ல் கேது,6ல்குரு,8ல்சூரிய‌ன்,புத‌ன், ஒன்ப‌தில் சுக்கிர‌ன்,ப‌த்தில் ராகு.
முத‌லில் ந‌ட‌ந்த‌ க‌தையை பார்ப்போம். த‌ன‌,வாக்கு,குடும்ப‌ நேத்திர‌ ஸ்தான‌த்தில் ல‌க்ன‌த்துக்கு 8,9க்கு அதிப‌தியான‌ ச‌னி இருப்ப‌தால் குடும்ப‌ம் என்ப‌து ப‌ணால் ஆகிவிட்ட‌து. வேலைக்கார‌ ப‌ட்டாள‌ம் ம‌ட்டும் உட‌னிருக்கிற‌து.(வேலைக்கார‌ர்க‌ளுக்கு ச‌னி கார‌க‌ன்).வாக்கும் அவ்வ‌ப்போது எல்லை மீறிவிடுகிற‌து..(நான் பாப்ப்பாத்தி தான் )
சோத‌ர‌,தைரிய‌ ஸ்தான‌மான‌ மூன்றில் ச‌ந்திர‌ன் இருந்து கொண்டு அவ்வ‌ப்போது தைரிய‌ம், அவ்வ‌ப்போது கோழைத்த‌ன‌த்தை கொடுக்கிறார். உட‌ன் பிற‌வா ச‌கோதிரியான‌ ச‌சிக‌லாவுட‌னான‌ தொட‌ர்பும் ஏற்ற‌ இறக்க‌த்துட‌ன் தான் தொட‌ர்கிற‌து.

ஐந்தில் கேது காரணமாகவே வ‌ள‌ர்ப்பு ம‌க‌ன்(5 ஆமிட‌ம்) விஷ‌ய‌மும் இட‌ம் பெற்ற‌து.
(தொட‌ரும்)

நல்லதொரு குடும்பம்

நல்லதொரு குடும்பம் பல்கலைகழகம் என்றார் கவியரசு (வைரமுத்து இல்லிங்க) என் குடும்பம் மட்டும் நிச்சயமாக பல்கலைகழகம் அல்ல. என் தாத்தா ஒரு டுபாகூர் பார்ட்டி. 3 மாதத்துக்கு மேல் எந்த வியாபாரமும் செய்ததில்லை. கணேஷ் பீடி குடித்துக்கொண்டு, இட்லி சுட்டு பிள்ளைகளை வளர்த்துக் கொண்டிருன்ந்த என் பாட்டியை மிரட்டிக் கொண்டிருந்தார்.

என் பாட்டி என் ப்ள்ளை தான் எனக்கு மட்டும் தான் என்று அராஜகம் செஇது என் அம்மாவை ஓரங்கட்டிக் கொண்டே இருந்தாள். என் அப்பா வழா வழா,கொழா கொழா சமாச்சாரம். கொள்கைகள் என்னவோ சூப்பர்தான். நியாயம், தர்மம்,கடமை உணர்ச்சி எல்லாம் ஓ.கே. ஆனால் அநியாயத்துக்கு பயந்த சுபாவம். வளைந்து கொடுக்காத காரணத்தால் கண்ட ஊருக்கும் தூக்கியடிக்கப் பட்டு, ஓட்டல் சாப்பாடு, அதிலும் ஒரு கேரியரை இரண்டு வேளைக்கு சாப்பிட்டு அல்ஸர் வாங்கிக்கொண்ட காந்தீயவாதி.

எங்களுக்கெல்லாம் (4 மகன் களுக்கு) ஜனதா புடவையில் தான் தீபாவளிக்கு சட்டை தைப்பார். ஒவ்வொரு முறை ஊருக்கு வரும்போதும் எத்கனாவது படிக்கிறடா என்று கேட்பார். 3 மாதத்துக்கு ஒரு தரம் அவர் ஊருக்கு வரும்போது தான் எனக்கு கட்டிங்க்(முடி வெட்டுங்கோவ்) அட்டெண்டரெல்லாம் பெரிய வண்டி மெயின்டெயின் செய்யும் இந்த நாளில் மாவட்ட கருவூல அதிகாரியான என் அப்பா சைக்கிளில் சென்றார் என்றால் நம்ப முடியாது தான்.

என் சித்தப்பாக்கள் கதை வேறு விதம். பெரியவர் ஊரில் உள்ள பெண்ணையெல்லாம் பார்த்து நிராகரித்து கடைசியில் மாட்டினாரய்யா ஒரு கூனி மந்தாரையிடம்.பிள்ளைக்கு கால் ஊனம்,மகள் பிஞ்சில் பழுத்து கலப்பு திருமணம். மனைவி முன் பின் தெரியாத மிலிட்டரி ஆfஈஸர் ஒருவனை நம்பி ஏமாந்து (பணம் மட்டும் தான்) குடும்பத்தை நாசமாக்கிகொண்டிருக்க இவர் தலையனை சைஸில் தெலுங்கு நாவல்கள் படித்துக் கொண்டிருந்தார்.

ஆராய்ச்சியின் இடைக்கால முடிவு

நான் பிராமணன் அல்லன். இன்றுவரை ஜோதிடம்,வாஸ்து போன்றவைகளை ஆராய்ந்து வருகிறேன். என்னை நாடி வருவோருக்கு “இது என் ஆராய்ச்சியின் இடைக்கால முடிவு” என்று குறிப்பிட்டே ஆலோசனை வழங்குகிறேன்.
தெருக்குத்து என்ற ஒரே ஒரு அம்சத்தைப் பற்றி மட்டும் கூறி என் கருத்தை முடிக்கிறேன். தெருக்குத்து என்றால் கட்டிடத்தின் நேர் எதிரில் சாலை இருப்பதாகும். இது தீமை தரும் என்பது வாஸ்து.
ஒருவன் மற்றொருவனை கொல்ல விரட்டி வருகிறான் என்று வைய்யுங்கள். அவன் நேர் எதிரில் உள்ள நம் வீட்டுக்குள் தான் நுழைவான். அட ஒரு லாரி ப்ரேக் ஃபெயில் ஆகி அந்த சாலையில் வந்தால் அது நம் வீட்டுக்குள் தான் நுழையும்.
இந்த பிராமணர்களின் அறிவு மிக மிக கூர்மையானது. என்ன பிரச்சினை என்றால் அவர்கள் எதை இட்டு கட்டுகிறார்கள், எது சத்தியம் என்று நாம் தான் பகுத்தறிவுடன் யோசிக்க வேண்டும். அவர்கள் சொல்வதை அப்படியே எடுத்துக் கொண்டால் கதை கந்தல் தான்.
ஜோதிடம் குறித்த என் கருத்துக்களை மேலும் அறிய:
www.tamilvasam.blogspot.com

வெகுஜன பத்திரிக்கைகளின் யுகம் முடிந்துவிட்டது

வெகுஜன பத்திரிக்கைகளின் யுகம் முடிந்துவிட்டது, இதையறியாது அதன் எஜமானர்களும்,ஆசிரியர்களும் அவற்றை இழுத்து மூடாது,குறுக்கு வழிகளில் ஆதாயம் தேடி பம்மாத்து செய்து வருகிறார்கள். விஷுவல் மீடியாவுடன் போட்டியிட வேண்டும் என்ற தவிப்பில் பக்கங்களை வண்ண,வண்ண ஆபாச படங்களைக் கொண்டு நிரப்பி, கவைக்குதவாத எஃப் டி.வி கலாச்சாரத்தையும் பரப்பிவருகிறார்கள்.

ஓரளவு யோசிக்கும் திறன் படைத்த வாசகர்கள் யாவரும் வலைதளங்களுக்கு தாவி விட்ட இந்த சந்தர்ப்பத்தில் கூட மேற்படி பிரகஸ்பதிகள் யதார்த்தத்தை உணர்வதாயில்லை. அட ஆயிரம் டி.வி சேனல்கள் இருக்கட்டுமே..நீங்கள் வாசகனுக்கு உபயோகமானதை தந்தால் அவன் ஏன் வாங்கி படிக்காமலிருக்க போகிறான்.

அதைவிடுத்து அந்த காலம் மாதிரியே சூத்திரர்கள் பணத்தில் தமது ரகசிய அஜெண்டாக்களை நிறைவேற்றிக் கொள்ள பார்த்ததால் தான் இந்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது. விசு, எஸ்.வி.சேகர்,சோ,சுப்ரமணியம் சுவாமி போன்ற பிராமணோத்தமர்களின் சாதனைகளை(?) அறிய இங்கே எவனும் காத்திருக்கவில்லை.

விள‌ம்ப‌ர‌ங்க‌ளின் த‌ய‌வில் கால‌ம் த‌ள்ள‌, த‌ம‌து மான‌ம்,ம‌ரியாதைக‌ளை த‌ள்ளிவைத்துவிட்டு நாக்குத் தள்ள‌ ப‌த்திரிக்கை ந‌ட‌த்துவ‌தைவிட‌ இழுத்து மூடுவ‌தே மேல்.

இனியாவ‌து த‌ம்மை மாற்றிக் கொண்டு வாச‌க‌ர்க‌ளுக்கும்,அவ‌ர்க‌ள‌து க‌ருத்துக்க‌ளுக்கும்,தேவைக‌ளுக்கும் ஏற்ப‌ விஷ‌ய‌தான‌ம்(?) செய்ய‌ப் பார்ப்ப‌து ந‌ல்ல‌து. இப்போதும் திருந்தாவிட்டால், காரிய‌ம் கை மீறிப் போன‌ பிற‌கு வ‌ருந்துவ‌தை த‌விர‌ வேறேதும் செய்ய‌ முடியாது