ஜிந்திப்பது எப்படி? (நானா ஜிந்திச்சன்)

karl marks

நாமளா சிந்திச்சு ஒவ்வொரு முத்தா உதிர்க்கிறதை விட எப்படி ஜிந்திக்கிறதுன்னு கத்துக்கொடுத்துரலாம்னு இருக்கன்.

கற்காலத்தில் தோள்வலி (நோவில்லிங்கோ) உடையவன் தலைவன்.

தலைவனுக்கு “ஆலோசனை”வழங்க ஒரு கேரக்டர். இங்கதான் பிராமணீயத்துக்கான வித்து விதைக்கப்படுது.

வேட்டையும்-பொறுக்கி தின்னலுமே வாழ்வாக இருந்தபோது வியாபாரமே இல்லை.இதனால் வைசியனும் இல்லை.

சஞ்சார வாழ்வில் விவசாயம்- உபரி உற்பத்தி -இதரகுழுக்களுடன் ஊடாடுதல் துவங்கியபோது வைசியன் வருகிறான்.
ஸ்திர வாழ்வு துவங்கிய பின் தலைவன்/தலைவனின் தளபதிகள் சத்திரியர்கள், ஆலோசனை வழங்குவோர் பிராமணர்கள், கொடுக்கல் -வாங்கல் செய்வோர் வைசியர் என்று உருவெடுக்கிறார்கள்

ஸ்திரவாழ்வில் மொத 3 க்ரூப்பும் “சேஃப் ஜோன்ல” இருக்க சொல்லோ இவிகளுக்கு “சேவை” செய்ய ஒரு அடிமை
கூட்டம் உருவாகுது. இவிக தான் சூத்திரர்கள் .

சத்திரியனுக்கும்-பிராமணனுக்கும் டைரக்ட் டீல். பிரமாணனனுக்கும் வைசியனுக்கும் டைரக்ட் டீல். வைசியன் பிராமணன் மூலமா சத்திரியனோட டீல் வச்சுக்குவான் .

ஆனால் 3 க்ரூப்பும் டைரக்டா நாலாவது க்ரூப்பை எக்ஸ்ப்ளாய்ட் பண்ணுவாய்ங்க.
ஸ்திர வாழ்க்கை-சேஃப் ஜோன் -சுகானுபவங்களில் நாட்டம்.

இதுக்கு ஒரு “ஆத்தரைசேஷன்” வேணம்ல. இதனால சத்திரியனும்-பிராமணனும் ம்யூச்சுவல் அண்டர் ஸ்டான்டிங்கோட மூவ் பண்றாய்ங்க. ராஜா விஷ்ணு ஸ்வரூபம் -பிராமணன் சூத்திரச்சியை தக்ஜம் பண்ணிட்டா குடுமியை மட்டும் வெட்டனும்.(செலவுக்கு காசு கொடுத்து அனுப்பிரனும்) சூத்திரன் பிராமணத்திய கில்மா பண்ணிட்டா கொன்னு போடனும்.
இந்த ரூல் எல்லாம் ஜஸ்ட் டீல் தான். நீ என்ன வேணா பண்ணிக்க .நான் என்ன வேணா பண்ணிக்குவன். ஏன்னா உன் ஆட்டத்துக்கு நான் கடவுள்,புராணம் ,இதிகாசம் பேர்ல ஓகே சீல் போடறன்ல.

இதுக்கு கைமாறா நீ எனக்கு பாதுகாப்பு கொடு. இதான்யா டீல்.
எப்போ உபரி உற்பத்தி – தரை வழி/கடல் வழி வாணிபம்லாம் டெவலப் ஆகுதோ அப்போ வைசியனோட ரோல் டாமினேட் பண்ண ஆரம்பிக்குது.
வைசியன் சத்திரியனுக்கும்-பிராமணனுக்கும் எதிரா திரும்பாத வரை போனா போகுதுன்னு ஏறக்குறைய பிராமணன் கணக்கா ட்ரீட் பண்ண ட்ரீட் கையெழுத்தாகுது. மொத 3 க்ரூப்பும் எண்ணிக்கையில ரெம்ப குறைவு. நாலாவது க்ரூப்புதான் மெஜாரிட்டி.

என்ன ஒரு டேஞ்சரஸ் கண்டிஷன் பாருங்க. சூத்திரன்லாம் ரோசிக்க ஆரம்பிச்சுட்டா என்ன ஆகும்?இதனால சூத்திரனை ரோசிக்க விடாம இருக்க கலர் கலரா கதைகள்,புராணங்கள்,தர்ம சாஸ்திரங்கள். எண்ணிக்கையில மெஜாரிட்டியா- உடல் பலத்துல டாமினேட்டிங்கா இருக்கிற க்ரூப்பை ஃபிசிக்கலா கட்டுப்படுத்தறது ரெம்ப கஷ்டம்.

மேலும் எஸ்.ஐக்கு சர்வீஸ் பண்ணி ஸ்ட் ரெஸ்ஸுக்குள்ளான ஹெட் கான்ஸ்டபிள் தன் ஸ்ட் ரெஸ்ஸை குறைச்சுக்க ஏறி இறங்க கான்ஸ்டபிள் இருந்தா நல்லதில்லையா?

இதனால அஞ்சாவதா ஒரு க்ரூப் ஃபார்ம் பண்றாய்ங்க(பஞ்சமர்) .இவிக நாலாவது க்ரூப்புக்கு சர்வீஸ் பண்ணோனம்.

இது நாலாவது க்ரூப்ல இருந்து ஃபார்ம் ஆகுது.

நாலாவது க்ரூப்பை உடைச்சு அஞ்சாவது க்ரூப் ஃபார்ம் பண்ணாலும் நாலாவது க்ரூப் மெஜாரிட்டியா தான் இருக்கு.

இவனுவ ரோசிக்க ஆரம்பிச்சு -ஒன்னு சேர்ந்து தொலைச்சா சத்திரியன்-பிராமணன்லாம் கெத்தா வாழ முடியாது.

இதனால சாதி வருது. ஈகோ சேட்டிஸ்ஃபேக்சன். பிராமணன் உயர்சாதிக்காரனை எப்படில்லாம் இன்சல்ட் பண்றானோ அப்டிலாம் சூத்திரனும் தனக்கு கீழே உள்ளவனை இன்சல்ட் பண்ணிக்கிட்டு “க்ரூயல் சேட்டிஸ்ஃபேக்சனோட “வாழலாம்ல.

எப்பல்லாம் சத்திரியன்-பிராமணன் ரிலேஷன் ஸ்மூத்தா இருக்கோ வைசியன் லைஃப் -ம் சேஃப்.

ஆனால் சூத்திரன் பொளப்பு நாய் பொளப்பாயிரும்.

எப்போ சத்திரியன் இவனுவளுக்கு என்ன பங்குன்னு பிராமணனை விலக்கி வைக்கிறானோ அப்போ பிராமணன் வைசியர்களோட இன்டராக்ட் ஆக ஆரம்பிச்சுருவான். (ஃபைனான்ஸ் பிராப்ளம் பாஸ் !

வைசியன் சூத்திரர்களோட இன்டராக்ட் ஆக ஆரம்பிப்பான் (ஆள் பிடிக்கனும்ல)

காட்டு வாழ்க்கை முடிஞ்சு ,ஸ்திர வாழ்க்கை ஸ்திரப்பட்டு ,சேஃப்டி ஜோனுக்கு வந்ததுமே பிராமணனுக்குள்ள “ஆசை”கிளம்பும் .நம்ம யோசனைப்படி தானே ஆட்சி நடக்குது. நாம ஆள முடியாதா?

சாந்தி காலத்துல ராஜாவுக்கு ஆப்படிச்சோ அல்லது யுத்தகாலத்துல பலமான எதிரிக்கு காட்டிக்கொடுத்தோ கூட்டிக்கொடுத்தோ தன் பொசிஷனை பலப்படுத்திக்குவான் பிராமணன்.

மோனார்க்கி போயி ஜன நாயகம் வந்தது அவாளுக்கு ரெம்ப வசதியா போச்சு நாமளே ஆளனும்ங்கற முடிவுக்கு வந்துட்டாய்ங்கோ..

ஃபைனான்ஸ் ப்ராப்ளத்துக்காக வைசியாளை கோர்த்துக்கிட்டு ஒர்க் அவுட் பண்ண ஆரம்பிச்சுட்டாய்ங்க.

இப்போ வைசியாளோட டர்ன். கொய்யா எங்க டப்புல நீங்க என்னடா நாட்டாமை .நாங்களே ஃபீல்டுக்கு வர்ரோம்னு வந்துட்டாய்ங்க.

அதானி,அம்பானி எட்செட் ரால்லாம் தெரியும்ல

இந்த செட் அப்லயே சூப்பரான ஆப்பு என்னடான்னா கண்ணாலம். சாதிக்குள்ற கண்ணாலம்னானுவ பாருங்க அங்கே நிற்கறானுவ.

அடிமைக்கு பிறந்தவன் அடிமையாவே இருக்க அற்புதமான ஏற்பாடு.

ஜஸ்ட் ஒரு 21 வருசம் சாதிகளுக்குள்ளான திருமணத்தை தடை செய்ய சொல்லுங்க.

ஒட்டு மொத்த புரட்சி கியாரண்டி.
வர்ணாசிரம தர்மம்- சாதீய அமைப்புல்லாம் சனங்க ரத்தத்துல எந்தளவுக்கு ஊறிப்போயிருக்குன்னா தன் கீழ் படியில உள்ளவனை அடக்க பார்ப்பானே தவிர மேல் படியில உள்ளவனை கேள்வி கேட்கிறத கூட நினைச்சுக்கூட பார்க்க மாட்டான்.

சத்திரியர்களை பிராமணர்கள் ரீ ப்ளேஸ் பண்ணிட்டாய்ங்க, பிராமணர்களை வைசியர்கள் ரீப்ளேஸ் பண்ணிட்டாய்ங்கன்னு சொல்லிர முடியாது.

ஆள்றவன் எவனா இருந்தாலும் ஏதோ ஒரு வேக்குவம் கிரியேட் பண்ணி சைக்கிள் கேப்ல ஆப்படிக்கிற ஒரே ஒரு க்ரூப்??

சொல்லனுமா என்ன?

நாட்ல உள்ள பி.சி,எஸ்.சி,மைனாரிட்டி ஒன்னு சேர்ந்தா 52% . இதுல பாதி பேர் 26% நேஷ்னல் லெவல்ல ஒரு புரிதலோட -கு.பட்சம் தேர்தல் சமயத்துல மட்டுமாவது “உட்கார்ந்து பேசி” ஆருக்கு ஓட்டுன்னு முடிவு பண்ற நிலை வந்தா போதும்.

சொல்லி அடிக்கலாம் !

அரசியல் அதிகாரத்துக்கு மணி,மாஃபியா,மீடியால்லாம் தேவையாச்சேம்பிங்க.

மணி எங்கருந்து போகுது ? நம்ம கிட்டேருந்துதானே, மாஃபியா நாமதானே ! மீடியாவோட ஆக்சிஜனே நாம தானே .. நிறுத்திருவம். நிறுத்திக்காட்டுவம்..

சத்ரியனும் (ஆள்வோர்) பிராமணனும் (ஐ.ஏ.எஸ்,லருந்து பி.எஸ் வரை) கை கோர்த்தாலே சூத்திரனுக்கு ஆப்புதான்.
இப்போ வைசியனும் கை கோர்த்தாச்சு. இப்பமாச்சும் அலார்ட் ஆயிக்கோங்க

அதானிக்கு,அம்பானிக்கு கொட்டி கொடுக்கிறது ஒரு ஸ்டேஜ், அடுத்த ஸ்டேஜுல இவிகளுக்கு ஏன் கொட்டி கொடுக்கனும் , நாமளே யாவாரம் பண்ணா என்னங்கற எண்ணம் வந்துரும்.

அப்பம் வைசியாளுக்கும் ஆப்புதேன்.

இங்கே உள்ள சோ கால்ட் அறிவு ஜீவிகளால் கொண்டாடப்படும் ஜர்னலிசம்,இலக்கியம்,சினிமால்லாம் ஃபாரின் சரக்கு தேன்.
விவசாயம்+தொழில்,கிராமம்/சேரி சார்ந்த படைப்புகள், பாடல்கள்,பழமொழிகளுக்கு விதி விலக்கு.
சத்திரியன்-பிராமணன்-வைசியன் இந்த க்ரூப்பும் வெட்டி மடிஞ்சா தேன் சூத்திரனுக்கு கொஞ்சமாச்சும் ஹோப்.

சூத்திர கூட்டம் ரோசிக்க ஆரம்பிச்சு -போர்கொடி தூக்கினா ஆரம்பத்துல மேற்படி 3 க்ரூப்பும் ஃபெவிக்கால் போட்ட கணக்கா ஒட்டிக்கும்.
போராட்டம் தீவிரமானா புட்டுக்கும். அவனவன் சேஃப்டி அவனவன் பார்க்க ஆரம்பிப்பான்.ஃபாரின் சரக்கோட சூழல் என்ன?
வருசத்துல 9 மாசம்/ 6 மாசம் வீட்டோட முடங்கியிருக்க வேண்டியிருக்க வேண்டிய சீதோஷ்ண நிலை.
மிச்சமிருக்கிற மாசங்கள்ள பொளப்ப பார்த்து “சேர்த்து”வச்சுக்க வேண்டிய நிலை.

இங்கே நிலவிய வர்ணாசிரம தர்மம்/ கல்வி மறுப்பு காரணங்களால் ஃபாரின் சரக்கு பஹுஜனங்களுக்கு அவெய்லபிலிட்டியில இல்லை.

ஊர் உழைப்புல நோகாம நோன்பு கும்பிட்ட க்ரூப்பு -ஜஸ்ட் மனப்பாட திறன் -பிழைப்பு வாதமே உசுரா வாழ்ந்த க்ரூப்பு ..புதுமொழிகள் கற்று -புதிய ஆட்சியாளர்களுக்கு பூர்ண கும்பம் சுமந்து தங்கள் “பொளப்புக்கு” பங்கம் வராம பார்த்துக்கிட்டு

எக்கச்சக்க ஃப்ரீ ஹவர்ஸ்ல உலக இலக்கியம்லாம் கரைச்சு குடிச்சு போலி செய்து இங்கே திணிச்சுருச்சு.

ஃபாரின் சரக்கு உள் நாட்டு சரக்கா செலாவணி ஆச்சு. அதை அப்படியே இம்போர்ட் பண்ணியிருந்தாலும் பரவால்ல -அவிக தங்கள் “படைப்புகள்ள(?)” கொஞ்சம் நேட்டிவிட்டி கலந்து , வேதங்களையும்-மனுதர்மத்தையும் போண்டாவுல விசம் மாதிரி வச்சு சனங்க நடுவுல புழங்க விட்டுட்டாய்ங்க.
அன்னியர் படையெடுப்பால் (முகமதியர்கள்/கிறிஸ்தவர்கள்) அவா இன்ஃப்ளுயன்ஸ் கொஞ்சம் ஆட்டம் கண்டதும் -ராஜாராம் மோஹன் ராய்லருந்து ,அம்பேத்கர்,பெரியார் போன்ற சீர்த்திருத்த வாதிகளின் வரவாலும் நம்மாளுங்களும் கல்வியை பெற்று – இலக்கியம்,படைப்புன்னு ஃபார்ம் ஆனாய்ங்க.

சோகம் என்னடான்னா அவாளுக்கு ஃபாரின் சரக்கு ஆதர்சம், நம்மாளுங்களுக்கு அவா சரக்கு ஆதர்சம்.

இதனால அவா செய்யவேண்டிய படைப்புகள் -சூத்திராள் கையாலயே உருவாக ஆரம்பிச்சிருச்சு.

இன்னைக்கு அவா படைப்புக்கும் -சூத்திராள் படைப்புக்கும் வித்யாசமே இல்லாது போக காரணம் எல்லாருமே போலிகள் .

ஆந்த்ரபாலஜிலருந்து வந்தாதான் செரியா சிந்திக்க முடியும். ஏதோ நமக்கு தெரிஞ்ச அடிப்படைகளை இதுவரை தந்தாச்சு.

ஒரு அரை டஜன் பேர் இந்த அடிப்படைய கேட்ச் பண்ணி ரோசிக்க ஆரம்பிச்சுட்டாலே முக நூல் உருப்படும்.

இதுவரை போட்ட பதிவுகளுக்கு அவா சைட்லருந்து எந்த விமர்சனமும் வராது.
ஆனால் அவா குளவி கணக்கா கொட்டி குளவிகளா தயாரிச்சு வச்சிருக்கிற நம்மாளுங்க தேன் ஃபீல்டுக்கு வருவாய்ங்க.

அவா சர்ட்டிஃபிக்கேட்டுக்கு அலையற இந்த நேச்சருக்கு காரணமே ஜாதிகளுக்குள்ளான திருமணங்கள் தான்.

வெளிய வாங்கடே.. கலப்பின பசுக்களாலயே அவ்ளோ லாபம்/இவ்ளோ லாபம்னு வயலும் வாழ்வும் நிகழ்ச்சியில சொல்றாய்ங்களே .. கலப்பின மனிதர்கள் உருவானால் எவ்ளோ லாபம்?

சுப்ரீம்கோர்ட்டா? டென்னிஸ் கோர்ட்டா?

Bomb

அண்ணே வணக்கம்ணே !

லெஜிஸ்லேச்சர்-எக்ஸிக்யூட்டிவ்-ஜுடிஷியரி. இந்த மூனும் ஆட்டோவுக்கு 3 சக்கரம் மாதிரி. சுதந்திர போராட்ட ஜூரம், புதுசா உருவான தேசத்தோட சர்வைவல் மாதிரி விஷயங்கள் கிரீஸாவும்,பேரிங்காவும் வேலை செய்ய 3 சக்கரமும் ஒரு மதிரியா சுழன்றுக்கிட்டு தான் இருந்தது.
மேலும் லெஜிஸ்லேச்சர், ,எக்சிக்யூட்டிவ்ங்கற ரெண்டு சக்கரமும் ஒழுங்கா வேலை செய்துக்கிட்டிருந்ததால ஜுடிசியரிங்கற சக்கரத்துக்கு ஓட்டம் குறைவு. அதனால அதனோட ரேஞ்சு -கண்டிஷன்லாம் ஆருக்கும் தெரியவல்ல.

எப்போ லெஜிஸ்லேச்சர், ,எக்சிக்யூட்டிவ்ங்கற ரெண்டு சக்கரமும் நொண்டியடிக்க ஆரம்பிச்சதோ நோ என்ட்ரிய பார்த்தாதான் பாயும்ங்கறது வழக்கமாயிருச்சோ ஜுடிஷியரிங்கற சக்கரத்துக்கு வேலை சாஸ்தியாயிருச்சு.

ஜுடிஷியரிங்கற சக்கரத்துக்கு பேரிங் மாத்தவேண்டியது,கிரீஸ் போட வேண்டியது,காத்தடிக்க வேண்டியதுல்லாம் மத்த ரெண்டு சக்கரங்களோட வேலைன்னு ஆயிட்டதால..மெயின்டெய்னென்ஸ் மேட்டர்ல அவிக அடக்கி வாசிக்க ஆரம்பிச்சாங்க.

மொத மொதல்ல ஜுடிஷியல் ஆக்டிவிசம்னா அது அலஹாபாத் ஹை கோர்ட் மேட்டருதான். “இந்திரா அம்மையாரோட தேர்தல் செல்லாது”ன்னு ஒரு தீர்ப்பை கொடுத்து கணக்கை துவங்கியது ஜுடிஷியரி.

நெல்லவிகளோ இல்லையோ ஆனால் இந்திரா,ராஜீவ் பெற்றிருந்த மக்கள் ஆதரவுங்கறது நரசிம்மராவுக்கு லேது. இதுல மைனாரிட்டி சர்க்கார் வேற. ஜுடிஷியல் ஆக்ட்விசம்ங்கறது இங்கே தான் முழு வேகத்தோட ஆரம்பிச்சது.

நரசிம்ம ராவ் பம்ம ஆரம்பிச்சாரு. அங்கே இருந்து போன வருசம் மோதி சர்க்கார் வரை எல்லாமே ஒன்னு கூட்டணி ஆட்சி/இல்லேன்னா மைனாரிட்டி சர்க்கார் தான்.

பொலிட்டிக்கலா டிசைட் பண்ண வேண்டிய மேட்டரை எல்லாம் கூட போலீஸ்,மிலிட்டரிக்கு கொடுத்து ‘எஸ்” ஆகறாப்ல கோர்ட்டுங்கற இன்னொரு எஸ்கேப் பாயிண்ட் கிடைச்சதுடான்னு அரசியல் வாதிங்க துள்ளி குதிச்சாய்ங்க.

ஆனா போக போக யானை இளைச்சா எலி வந்து தக்ஜம் பண்ண கூப்டுமாம் போல ஆயிருச்சு. கோர்ட்டுகளே பரிபாலனம் பண்ண ஆரம்பிச்சுட்டாய்ங்க.
விசயம் புரியாத சனம் ரெம்பவே சந்தோசப்பட்டாய்ங்க. இந்த சந்தோசத்தை ஜுடிஷியரி ரெம்ப தப்பா புரிஞ்சுக்கிட்டு லெஜிஸ்லேச்சர்,எக்ஸிக்யூடிவோட ஜூரிஸ்டிக்சன்ல எல்லாம் புகுந்து வர ஆரம்பிச்சது. மானங்கெட்ட அரசியல் வாதிங்களும் சகிச்சுக்க ஆரம்பிச்சுட்டாய்ங்க.

ஒரு காலத்துல பி.ஹெச் .பாண்டியன் வானளாவிய அதிகாரம்னு கொக்கரிச்சாப்ல இப்போ ஜுடிஷியரியும் செயல்பட ஆரம்பிச்சிருக்கு.
ஒரு ஜன நாயக நாட்ல இதெல்லாம் சரிப்பட்டு வராதுன்னு ஆரு சொல்றது?வரவர மாமி கழுதைப்போல் ஆனாள்ங்கற மாதிரி ஜுடிஷியல் ஆக்ட்விசம் ரூட்டு மாற ஆரம்பிச்சுட்டது. (ஓவர் ஆக்சன்) எப்படியோ நல்லது நடந்தா செரின்னு சோ கால்ட் அறிவு ஜீவிகள் கூட இதை சகிச்சுக்க ஆரம்பிச்சுட்டாய்ங்க.

இதனோட விளைவு குமாரசாமி தீர்ப்பு (சனம் அடிச்சு துவைச்சு காயப்போட்டுட்டதால டீட்டெய்லுக்கு போகல) .ஆக்சுவலா நாம ஜன நாயக வாதி. ஜன நாயக நாட்ல நெல்லதோ கெட்டதோ மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலீவர்களால நடக்கனுமே கண்டி இங்கிலீஷ் மீடியம் ஸ்கூல்ல படிச்சு – துரிதமா செலாவணி ஆகக்கூடிய க்ரூப்பு கிடைக்காம -விதியில்லாத குறைக்கு லா படிச்சுட்டு காலம் முச்சூடும் பொய்யா பேசி -களவாணிகளுக்கு வக்காலத்து வாங்கிக்கிட்டிருந்த ஒரு தனி மனிதனால -ஒது வாழ்க்கைக்கு தொலைவா , குவார்ட்டர்ஸ்ல அடைஞ்சு கிடக்கிற ஒரு ஆசாமியால (அவரு நீதி அரசரா இருந்தாலும் செரி) நெல்லது நடந்தாலும் அது ஜன நாயகத்துக்கே ஆபத்து.

இதை சந்தர்ப்பம் வரும் போதெல்லாம் சொல்லிக்கிட்டே தான் இருக்கன்.ஆனால் சனம் கண்டுக்கிடல. இதனோட விளைவு? ஜெ அப்பீல் மனு மேல ஜெட் வேக விசாரணை +குமார சாமி தீர்ப்பு . தீர்ப்புக்கு பிறவும் – அதில உள்ள ஓட்டைகளை நாடே வெளிச்சம் போட்டும் சுப்ரீம் கோர்ட்டின் கள்ள மவுனம்.
சுப்ரீம் கோர்ட்டுக்கு நான் சொல்ல விரும்பறது என்ன்னா? கொய்யா .. நாங்கல்லாம் டீசர் பார்த்தே கதை சொல்ற கிராக்கி. நாம நேர்ல பார்த்த நாலஞ்சு கோர்ட் சீனே போதும். கோர்ட்டெல்லாம் எப்பூடி வேலை செய்யுது,வேலை செய்யும்னு அவதானிச்சுட்டம்.

நீங்க எக்கேடு கெட்டுப்போனாலும் ஒரு ஜன நாயகவாதியா எனக்கு சந்தோசம் தான்.ஆனால் ஒன்னு இனி ஜுடிஷியல் ஆக்டிவிசம். வெங்காயம்னா எவனும் வாயால சிரிக்க மாட்டான்.

கொஞ்ச காலத்துக்காவது ஜுடிஷியல் ஆக்ட்விசம் பப்பு வேகனும்னா மொத வேலையா கர்னாடக ஹை கோர்ட் கொடுத்த தீர்ப்பை சுமோட்டாவா பரிசீலைனைக்கு எடுத்துக்கிட்டு -தீர்ப்பை நிறுத்தி வச்சுருங்க -அந்த தீர்ப்பை அடிப்படையா வச்சு பதவி ஏத்துக்கிட்ட மம்மிய வீட்டுக்கு போக சொல்லுங்க.
இல்லின்னா ..இல்லின்னா தில்லியில இருக்கிறது சுப்ரீம்கோர்ட்டா? டென்னிஸ் கோர்ட்டா?ன்னு போனியாகாத சேனல் எல்லாம் பட்டிமன்றம் நடத்த ஆரம்பிச்சுருவாய்ங்க.

நிறைய கோர்ட் அவமதிப்புவழக்குகளை நீங்க விஜாரிக்க வேண்டி வந்துரும். ஜெயில் எல்லாம் ஹவுஸ் ஃபுல் ஆயிரும்.அப்பாறம் உங்க இஷ்டம்.

ஜெயலலிதா என்னசெய்யலாம்?

jj sworn in

அண்ணே வணக்கம்ணே !
முக நூல்ல ஜெ பதவியேற்கும் நேரத்துக்கு ஆரூடம் போட்டு பலன்லாம் சொல்லிட்டன். ஆனாலும் நாம வெறும் ஜோதிடர் இல்லையே ! ஜோதிட ரீதியா என்ன நடக்கும்னு சொல்லியாச்சு. (சொல்ற வரைதான் நம்ம ரோல். நடத்தி காட்டறது ஆத்தா ரோல்)
முக நூல் பக்கம் ஒதுங்காதவர்களுக்காக அந்த கணிப்புகள் பதிவின் கடைசியில்..
அதே நேரத்துல ப்ராக்டிக்கலா இந்த இக்கட்டான சூழல்ல ஜெ என்ன செய்தா அவிகளுக்கு நெல்லது -மக்களுக்கும் நெல்லதுன்னு நாலு வார்த்தை சொல்லிர்ரன்.

மம்மி 2011 ல பதவி பிரமாணம் செய்தப்பமே ” அன் செர்ட்டெனிட்டி -அப் அண்ட் டவுன்ஸ், இன்ஸ்டெபிலிட்டி” இருக்கும்னு வாய வச்சாச்சு. இந்த இடத்துல கொஞ்சம் நம்ம ஈகோ கிராஸ் ஆக கூட்டணி ஆட்சின்னு உளறி வச்சுட்டம்.அது வேற கதை .

அந்த அன் செர்ட்டெனிட்டி -அப் அண்ட் டவுன்ஸ், இன்ஸ்டெபிலிட்டில்லாம் ஜூஜுபி. குமாரசாமி தீர்ப்புல உள்ள குளறுபடிகளுக்கு நித்ய கண்டம் தான். பதவியில இருக்கிற ஒவ்வொரு செகண்டும் கோல்டன் செகண்ட். இந்த நாட்களை ( நெல்லா கவனிங்க..நாட்கள்) நல்ல முறையில உபயோகிச்சுக்கிட்டா சுப்ரீம் தீர்ப்பு வேற மாதிரியா வந்து நிரந்தர சிறை வாசத்துல இருந்தாலும் ஜெயில்ல இருந்தே வீடியோ கான்ஃபிரன்ஸ் மூலம் பொதுக்குழு செயற்குழு கூட்டம்லாம் நடத்தலாம். இல்லின்னா? இல்லின்னா? கொஞ்சம் கொஞ்சமா ஊதுவத்தி செய்யவே விட்டுருவாய்ங்க.

ஜெ செய்ய வேண்டியவை:
1.பதவியேற்பு முடிஞ்சதுமே – ப்ரஸ் மீட். இறுதி தீர்ப்பு வந்த பிறவுதான் பதவியேற்புன்னு இருந்தன்.ஆனால் பாருங்க எங்காளுங்க என் மேல வச்சிருக்கிற அன்பே ஆப்பா முடிஞ்சுரும் போல இருக்கு. எல்லாமே ஸ்தம்பிச்சு போயிருக்கு. வேறா வழியில்ல. மக்கள் நலனுக்காக இந்த பழியை ஏத்துக்கறேன்.
2.கர்னாடக ஹை கோர்ட் எல்லா சொத்தையும் எனக்கே ஹேண்ட் ஓவர் பண்ண சொல்லி தீர்ப்பு கொடுத்துட்டாலும் இறுதி தீர்ப்பு வர்ரவரை அதை எல்லாம் டச் பண்றாப்ல இல்லை. இந்த மேட்டர்ல என் வழக்கறிஞர்கள் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுப்பாங்க.
3.போயஸ் கார்டன் வீடும் இந்த வழக்குல லிங்க் ஆகியிருக்கிறதால இறுதி தீர்ப்பு வர்ர வரை அதுல தங்கறதா இல்லை. பதினைஞ்சு நாள்ள காலி பண்ணிட்டு வாடகை வீட்டுக்கு போயிரப்போறேன்.
4.வழக்குல மத்த 3 பேர் என்னோட தங்கியிருந்ததாலதான் கூட்டு சதி அது இதுன்னு பேச்செல்லாம் வந்தது.அதனால அவிகளையும் காலி பண்ண சொல்லிட்டன். அவிகளுக்கு என் புது வீட்லயும் இடமில்லை.
5.நான் தனி மனுஷி. தனி மனுஷிய விட கட்சி முக்கியம். ஒரு வேளை இறுதி தீர்ப்பு வேற மாதிரியா வந்தாலும் கட்சிக்கு எந்த பாதிப்பும் வந்துரக்கூடாது. இதனால கட்சியில 100% ஜன நாயகத்தை அமலாக்கப்போறேன். பொதுக்குழு கூடி ஜன நாயக முறையில அடுத்த “வாரிசை” தேர்ந்தெடுக்கும். இருக்கிற கொஞ்ச நாள்ல அந்த பார்ட்டிய ட்ரெய்ன் பண்ணப்போறேன். நான் மட்டுமில்லை. கட்சிக்கு அப்பாற்பட்டு சீனியர் பொலிட்டீஷியன்ஸ் அவரை ட்ரெய்ன் பண்ணுவாய்ங்க.
6. தமிழக நலன் என்று வரும்போது கட்சி அரசியலுக்கு இடமே இல்லை. காவிரி இத்யாதி மேட்டர்ல கலைஞர் தலைமையில் செயல்படவும் தயங்க மாட்டேன். இதுக்காக அனைத்து கட்சி குழுவை ஏற்படுத்தி கலைஞர் அல்லது ஸ்டாலின் தலைமையில் அந்த குழு மத்திய அரசு தலைகள், அகில இந்திய அரசியல் தலைகள சந்திச்சு ப்ரஷர் கொடுப்பாய்ங்க.
7.நிதி நிலைமை ரெம்ப மோசமா இருக்கு. ஒரு ஆறுமாசம் ” வெட்டி செலவு – இலவசம்லாம்’ நிறுத்தி வச்சுட்டு நிதி நிலையை சீராக்குவேன். இதற்கு கலைஞர் ,ராமதாஸ் போன்றவர்களின் ஆலோசனைகளையும் கேட்டு ப்பெறுவேன்.
8.நிதி நிலை சீரான பிறகு படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவேன். இலவச திட்டங்களை முழு வீச்சுடன்- 100%தகுதியுடையோருக்கு மட்டும் அமல் படுத்துவேன்.
9.தமிழகத்தில் மத,சாதி அரசியலுக்கு இடமே கிடையாது. இதற்காக என் பதவியை மட்டும் அல்ல உயிரையும் பணயம் வைக்க தயார்.
10. சித்தூர் முருகேசனின் மானில கனவுகளை ஹை பவர் கமிட்டி போட்டு அமல் படுத்துவேன். அவரது தேச கனவுகளை நனவாக்க மோடி அரசுக்கு அழுத்தம் கொடுப்பேன். (ஹி ஹி பக்கத்து இலைக்கே பாயாசம் கேட்டா எப்படி பாஸ்?)

ஜெ பதவியேற்பு ஆரூட லக்ன பலன்:
எண் கணித பலன்:
உயிர் எண் 23 .குரு சந்திர காம்பினேஷன். 14 நாள் அ 14 மாதம் அ 14 வருசம் ஆப்பு. சிங்கிள் நெம்பர் ஆக்கினா 5.புதன். புதன் இப்போ வக்ரம். ப்ரோக்கருங்க வேலை கொடுத்துருவாய்ங்க. கூட்டு எண் 9 .இது செவ் காரகம். இதுக்கு மின்னே ஆடிட்டர் மேட்டர்ல ஏதோ கசமுசா நடந்தாப்ல இந்த முறை ஒரு ப்ரோக்கருக்கு பூஜை காத்திருக்கு போல . புதன்=தோல் , செவ் =நெருப்பு . என்னமோ போடா முருகேசா .. எல்லாம் பேதியாக்கறாப்லயே இருக்கு

கத்திரி பலன்:
கத்திரின்னா என்ன? சூரியன் கிருத்திகையில தன் சொந்த நட்சத்திரக்கால்ல சஞ்சரிக்கிறது. ஆரூட லக்னமான மகரத்துக்கு சூரியன் அஷ்டமாதிபதிங்கோ?அஷ்டமம்னா தெரியும்ல? மரணம். இவரு அஞ்சுல நின்னிருக்காரு.
சூ,சந்திரன்லாம் உயிர்களுக்கு டாடி -மம்மி மாதிரிம்பாய்ங்க. அதனால சாவை தராம போகலாம். ஆனால் மரணத்துக்கு சமமான கண்டங்களை தரலாம். சூ =இதயம், சூ =தலை
என்.டி.ஆர் மே 28 ஆம் தேதி பிறந்தவர்.(கத்திரி முடியற கடேசி நாள்) ஆனால் இப்படி சி.எம் ஆனதுமே ஆட்டு வேலை கொடுத்துருச்சு. ரிப்பேருக்கு ஃபாரின் போனா இங்கே நாதேன்ட்ல பாஸ்கர் ராவ் வேலை கொடுத்துட்டாரு.
கடேசி காலத்துல ஆர்ட் அட்டாக் தான் டிக்கெட் போட்டுச்சு ..கடேசி நாள்ள பிறந்ததுக்கு இந்த ஆப்புன்னா.. இன்னம் 5 நாள் இடையில இருக்கிற நேரத்துல பதவியேற்பா?

ஆரூட லக்ன பலன்:
லக்னம் மகரம் .இது சரம் என்பதால் மீண்டும் மீண்டும் நடக்க வேண்டி வரலாம்
லக்னாதிபதி சனி 11 ல் வக்ரம் .எனவே ப.ஏ நஷ்டத்தில் முடியலாம்.சனி 2 க்குடையவராவும் இருக்காரு. எனவே பேச்சு இருக்காதுன்னே சொல்லலாம்.

தப்பி தவறி பேசினாலும் அது செயலாக முடியாது
மூன்றில் கேது. கடேசி வரை (அடுத்த ராகு கேது பெயர்ச்சி வரை) தைரியத்தை இழக்கமாட்டார்
அஷ்டமாதிபதி சூரியன் அஞ்சுல இருக்காரு. ஏறக்குறைய இது ஒரு அரசியல் தற்கொலை
8+ 4/11. எட்டுக்குடையவர் நாலில். எனவே தாய் வழி உறவு கட்டீஃப். அவ்வழியில் ஒரு மரணம்.

வீடு மாற்றம் (ஒரு வேளை மறுபடி பரப்பன அக்ரஹாராவா?) வாகன விபத்து. இதய கோளாறு.

மூத்த சகோதர/ரி வழி உறவுல ஒரு டிக்கெட்டு? எதிர்பார்த்த லாபம்லாம் நஷ்டமா மிடியறது..
ஆறுக்குடைய புதன் எட்டுல நின்னது புறக்கடை வழி யோகம்னு நினைச்சு வச்சிருக்கலாம்.

ஆனால் அவரு பாக்யாதிபதியும் கூட என்பதால் இந்த சேர்க்கை புத்தி ஸ்தானமான ஐந்தில் ஏற்பபட்டதால் தன் எதிர்காலத்தை தானே குழி தோண்டி

பு
தை
க்
கு
ம்

வேலையை இந்த முகூர்த்தத்துல செய்யப்போறாய்ங்க
ஐந்து பத்துக்குடைய சுக்ரன் 6 ல். இவர் புத்தியில் உதிப்பதெல்லாம் சத்ரு,ரோக,ருண,விவகார பெருக்கத்துக்கே காரணமாகும்.

ஒரு வேளை தத்து புத்திரர் எதுனா தத்து பித்துன்னு பண்ணிருவாரோ? மறுபடி மொதல்ல இருந்தா……………….ஆஆஆஆஆஆஆஆ.

10-6
எதிரிகள்,டாக்டர்கள், ஆடிட்டர்கள்,வழக்கறிஞர்கள்,கடன் காரர்களை தவிர வேறு யாரையும் சிந்தித்து கூட பார்க்க முடியாதுங்கோ?
ஏழில் குரு சந்திர சேர்க்கை. இது இருந்ததாலதான் ஸ்ரீராமர் வனவாசம் போனாராம்.

மொதல் 14 நாள்ளயே வனவாசம் டிக்ளேர் ஆயிருமோ?

ஏழுக்குடைய சந்திரன் ஏழில் நின்று என்பதால் நண்பர்கள், தோழிகள் மாறிக்கொண்டே இருப்பர்.

குரு 3/12 க்குடையவர் என்பதால் எல்லாமே அக்ரசிவ், அஃபென்சிவ்,அட் ராசிட்டிகளான ரோசனைகள் தான் ஸ்பார்க் ஆகும்.

இதனால லாபம் இருக்குமான்னா? ஊஹூம்.. வீண் விரயம் தான்.

தானே ஒரு அவா’வாக இருந்தாலும் அவான்னா என்னன்னு தெரிஞ்சுக்க ஒரு அற்புதமான வாய்ப்பு
ஒன்பதில் ராகு. தூரத்துல இருக்கிற பெரீமன்சங்க ஆதரவுங்கறது லாட்டரி கணக்கா தான் கிடைக்கும்.

அது எம்மாந்தூரம் கிடைக்கும்ங்கறது டவுட்டுதான். இதனால மம்மியோட எதிர்காலமே கருப்பா பயங்கரமா,பயங்கர கருப்பா மாறிரும் போல

காலமாற்றமும்-கிரக பலனும்: 3

1

அண்ணே வணக்கம்ணே !
காலம் மாறிப்போச்சு.இதனால கிரக பலனும் எக்கு தப்பா மாறிப்போச்சுங்கற தலைப்புல ஒரு தொடர் (போல) ஆரம்பிச்சு எழுதிக்கிட்டிருக்கம். ஒரு கொயர் பேப்பரும் இங்க் பேனாவும் -ஒரு பாய் தலையணையும் கொடுத்துட்டா மாருக்கு தலைகாணிய வச்சுக்கிட்டு எழுதிதள்ளிரலாம். (அதை டைப் பண்ண ஒரு ஆள தேடனும்ங்கறது வேற கதை) .

கம்ப்யூட்டர் மின்னே உட்கார்ந்தா மஹிளா ஸ்டேஷனுக்கு போன புருசன் கணக்கா சகலமும் ஒடுங்கிப்போயிருது.ஆனாலும் விடறதா இல்லை. மேட்டருக்கு வந்தே உடுவன்.

இப்பம் தர்ம சந்தேகம் என்னடான்னா ஒன்னுக்கொன்னு சம்பந்தமில்லாத நாலு மேட்டர் மைண்ட்ல சக்கர் அடிக்குது. ஆனால் நாலு மேட்டருக்கும் இடையில ஒரு லிங்க் இருக்கு.

மோதி-ஜெட்லி-மம்மி-குமார சாமில்லாம் வேற வேற பார்ட்டி தான் .ஆனால் அண்டர் கிரவுண்ட்ல கனெக்ட் ஆயிருச்சுங்கறாய்ங்கல்ல.அதை போலத்தான்.
ஒரு வாசகர் கிளி ஜோசியம் உண்மையான்னு கேட்டுக்கிட்டே இருக்காரு.அதை வேற தீர்த்து வைக்கனும். போதாக்குறைக்கு பேக் யார்ட்ல இருக்கிற தகர கொட்டகைக்கு கட்டிவிட்டிருந்த கற்றாழை தானா சுழல ஆரம்பிச்சுது. காத்தடிக்கிற ஃபீலே இல்லை. ஆனா பாருங்க அதை அடிச்சு பார்த்துக்கிட்டிருந்த சமயம் பாத்ரூம் கதவு ஆரோ அடிச்சு சாத்தின கணக்கா மேல் உதடு மேல பட்டுது.

கொய்யா பிச்சுக்கிச்சுடான்னு நினைச்சுட்டன். நெல்ல வேளையா இல்லை. முன் பல் சிவாஜி எம்.ஜி.ஆர் சண்டையில அடிபட்டு மொக்கையாகி -பல காலமா லொள்ளு பண்ணிக்கிட்டிருக்க போன வருசமோ அதுக்கு மிந்தின வருசமோதான் அந்த பக்கம்+இந்த பக்கம் பற்களை கூராக்கி கப் கணக்கா 3 போலி பல்லை பொருத்தி விட்டிருக்கு.அதுவும் போச்சுடானு நினைச்சேன் . நெல்ல வேளையா இல்லை.

இதுமட்டுமில்லிங்ணா மாப்ளை நேத்திக்கு ஒரு மேட்டர் சொன்னாரு . பார்ட்டி பக்கா மெட்டீரியலிஸ்டுதான்.ஆனால் மவனுக்கு பிறந்த 3 ஆவது நாள் ஆறரை மணி நேரம் ஓப்பன் ஹார்ட் சர்ஜரி நடந்து டாரா கிளிஞ்சு கிடக்காரா -கொஞ்சமா நம்ம ஸ்கூல் பக்கம் திருப்பியிருக்கன்.

அவர் சொன்னதோட சாரம் விழிப்பு நிலையில வலது கை சொல் பேச்சு கேட்காமா பாம்பா நெளியுது.காலம் மாறிப்போச்சுங்கறது அல்லாருக்கும் தெரிஞ்ச மேட்டருதான். நேத்திக்கு வெளிவந்த பத்தாங்கிளாஸு ரிசல்ட்டுலயே எவ்ளோ மாற்றம்.போன பத்துவருசத்துக்கும் இந்த பத்துவருசத்துக்கும் எம்மாம் வித்யாசம் இருக்கு?

இந்த மாற்றங்கள் கிரக பலனில் எப்படியெல்லாம் மாற்றங்களை ஏற்படுத்தியிருக்குன்னு பார்க்கலாம். கடந்த பதிவுல தலை,முகம் பத்தி சொல்லிக்கிட்டிருந்தன்.

எங்கப்பா மாவட்ட கருவூல அதிகாரி .ஆனால் வீட்ல நமுக்கு மட்டும் தான் பேஸ்டு. பல் நோவு இருந்தாதான்யா பேஸ்ட் அப்பல்லாம். இப்போ?
தாத்தா பங்க் கடை வச்சிருந்தப்போ வாங்கின தகர டப்பா முன் பக்கம் கண்ணாடி இருக்கும்.அது நிறைய சீயக்காய் அரைச்சு வச்சிருவாய்ங்க.தலைக்கு அதான். இன்னைக்கு எங்க பாத்ரூம்ல நாலு ரகம் ஷாம்பூ தொங்குது. நாய்க்கு ஒன்னு,நமுக்கு ஒன்னு,பொஞ்சாதிக்கு ஒன்னு,மவளுக்கு ரெண்டு.
தலை சொட்டையா போனதாலயோ என்னமோ எங்க அப்பா 6 மாசத்துக்கு ஒரு தரம் சலூன் போறது கூட டவுட்டுதான். நமுக்கு மாடியில தனி அறை. அப்பா கையகல கண்ணாடி வச்சுக்கிட்டு பித்தளை ரேசர்ல மொன்னை ப்ளேடு போட்டு வரட்டு வரட்டு.

அந்த காலத்துல சலூன்ஸ் தான் நமுக்கு கேர் ஆஃப். நமக்குத்தான் கண் பார்த்தா கை செய்யுமே ரெண்டு பக்கமும் காது மேல வாரி விட்டு குன்ஸா கட் பண்ணி ,பின்னாடி ரவுண்ட் எடுத்து விடுவன்.

இன்னைக்கு? சோத்துக்கில்லாத காலத்துல தான் சலூனுக்கு நிறைய செலவழிச்சிருக்கன். இப்பவாச்சும் ஆத்திரம் அவசரத்துக்கு செல்ஃப் .

இதெல்லாம் என்ன பண்ணுதுன்னா? லக்ன பாவத்தோட சுபபலனை எல்லாம் எக்ஸாஸ்ட் பண்ணிருது. அடுத்து ரெண்டாமிடம் . இது தன,வாக்கு,குடும்ப நேத்திர ஸ்தானம். குடும்பத்துக்குள்ள ஏறக்குறைய பேசிக்கிறதே இல்லை.(ரெண்டுல அஷ்டமாதிபதி இருந்தாலும் தோஷம் காம் கர்த்தே நஹீ) வெளிய ஜமாவுல பேசறதெல்லாம் தமிழே கிடையாது (ரெண்டு எட்டுல ராகு கேது இருந்தாலும் தோஷம் போயே போச்)

இருபத்து நாலு மணி நேரம் டிவி/கம்ப்யூட்டர்/லேப் டாப்/ஸ்மார்ட் ஃபோன்.ரெண்டு கண்ணும் டப்ஸு. இதனால ரெண்டாமிடத்து தோஷம்லாம் பரிகாரமாகி பீசா,பர்க்கர்னு அடிச்சு தள்றாய்ங்க.காசு பணம் தாராளமா புழங்குது.

இதுல சிக்கல் என்னன்னா ரெண்டுல உள்ள பாப கிரகம்/அஸ்தங்கத கிரகங்களை/ராகு/கேதுவை மீறி மேற்படி மேட்டரை எல்லாம் எஞ்சாய் பண்றதால அந்த கிரகம் வேலை செய்றதை நிறுத்திராதிங்கோ?

அப்டியே எட்டை பார்க்குமுங்கோ. இதனால ஆவிசு குறைஞ்சு அல்பாயுசுங்கோ ! பொட்டுனு போயிரவும் சான்ஸ் இருக்கு.

இப்டியே முக்கி முக்கி 12 பாவத்தையும் – 9 கிரகங்களையும் பத்தி பார்க்கலாம்.

இப்பம் கிளி ஜோசிய மேட்டருக்கு வந்துரலாம். மன்சனுக்கு ஆறு அறிவுங்கறாய்ங்க. மிருகங்களுக்கு அஞ்சாம், அப்பம் கிளிக்கெல்லாம் எத்தனைனு தெரியல. மன்சனுக்கு ஆறாவதா இருக்கிற அறிவால என்ன நன்மைன்னு புரியல. நாய்க்கு அஞ்சுதானே .
கில்மா மேட்டருக்கு மின்னே பெண் நாயோட உறுப்பை முகர்ந்து பார்க்குமாம்.அதனோட கருப்பை ஏற்கெனவே லோட் ஆகியிருந்தா கழண்டுக்குமாம்.
ஆனால் நம்மாளுங்க அப்டியா? பொஞ்சாதி கன்சீவ் ஆயிருக்கான்னு லேடி டாக்டர் கன்ஃபார்ம் பண்ணதுமே ஃபேமிலி லைஃப் வச்சுக்கலாம்லனு கேட்கிறாய்ங்க.
ஜெ மேட்டரையே எடுத்துக்கங்க. சோத்தாங்கை பக்கம் அவிக சொத்துக்கள்,செலவு -பீச்சாங்கை பக்கம் வருமானம்னு ஒரு லிஸ்டு போட்டாலே மேட்டர் அவுட் ஆயிரும்.

ஆனால் குன்ஹா என்னடான்னா கணக்கு தப்புன்னு டிஃபென்ஸ் தரப்பு கூக்குரலிட்ட உடனே தள்ளுபடி கொடுக்கிறாரு – குமார சாமி என்னடான்னா விண்ட் ஃபால் கெயின்ஸை எல்லாம் நிலத்துல இருந்து வந்ததா ட்ரீட் பண்ணி போனஸ் கொடுக்கிறாரு. வருமானத்துக்கும் சொத்துக்கும் 10% கூடுதலா இருந்தா பரவால்லையாம்.

அப்பம் இனி நாட்ல உள்ளவன் பொஞ்சாதி எல்லாம் 10% அப்டி இப்டி இருந்தாலும் பரவால்லன்னு விளக்கு பிடிச்சுக்கிட்டிருக்க வேண்டி வந்துரும் போல. முப்பது நாள்ள 10% எவ்ள பாஸ்? நாம கணக்குல வீக்கு.

மன்சனோட 6 ஆவது அறிவால என்ன லாபமோ என்ன இழவோ? ஆனால் ஜெ வருமானத்துக்கும் சொத்துக்கும் இடையில “கேப்” கணக்கா இயற்கைக்கும் மன்சனோட மைண்டுக்கும் இடையில பெரிய “கேப்” வந்துருச்சு.

இந்த கேப் மட்டும் இல்லின்னா காலதேவனின் மூவ் எல்லாம் மூவ் ஆயின்ட்மென்ட் ட்யூப் மாதிரி நம்ம கைவசமே இருக்கும். நாம என்ன செய்யனும் -செய்யக்கூடாது நமக்கு என்ன நடக்கப்போகுதுங்கற மேட்டர் எல்லாம் ஷகீலாவோட மலையாள சினிமா குளியல் காட்சியில போல பளிச்சுன்னு தெரிஞ்சுரும்.

இந்த ஸோ கால்ட் பகுத்தறிவு வந்து ப்ளாக் அவுட் பண்ணிருச்சு.

இந்த ஆறாவது அறிவு இல்லாத மிருகங்கள்,பட்சிகளுக்கெல்லாம் எதிர்காலம் பெசல் தரிசனம் போல காட்சி கொடுத்துருது போல.
ஒரு வீட்ல ஒரு டிக்கெட் விழப்போகுதுன்னா அது அந்த வீட்டு நாய்,பூனை,மாடு,கன்னு எல்லாத்துக்கும் ஒரு மாசம் ,15 நாள் முன்னாடியே தெரிஞ்சுருது.
உங்களுக்கு உங்க எதிர்காலம் தெரியலின்னாலும் நீங்க போயி உட்கார்ந்தப்போ -உங்க எதிர்காலம் தண்ணியில எண்ணெய் கணக்கா உங்க மூளையில மிதக்க ஆரம்பிச்சுரும். சோசியர் மைண்ட்ல சொந்த பிரச்சினைகள் முண்டியடிக்காம இருந்தா அவரால ரெம்ப ஈசியா கேட்ச் பண்ண முடியும்.உங்களுக்கு சொல்லவும் மிடியும்.

இந்த கிளி மேட்டருக்கு வந்துருவம். அறிவு எண்ணிக்கை குறைவு (அதாவது இயற்கைக்கும் அதுக்கும் இடையில கேப் இல்லை) இதனால வந்தவனோட எதிர்காலம் பச்சக்குன்னு அது மைண்ட்ல போயி ஒட்டிக்கும்.

கிளி அட்டை பொறுக்கும் போது கிளி சோசியக்காரர் தரைய தட்டறது இத்யாதி சிக்னல் /மேனிப்புல்லேஷன் இல்லாம லூஸ்ல விட்டா அது செரியான அட்டைய எடுக்கும்.

இது ஒரு கண்டம்.அடுத்தது கிளி சோசியக்காரரோட இன்டர்ப்ரிட்டேஷன். ஈகோ கலக்காம , காசு பிடுங்க ஸ்கெட்ச் பண்ணாம அட்டைய பார்த்து தனக்கு தோனினத்டை சொன்னாலே போதும்.

(ஸ்..அப்பாடா கிளி மேட்டர் ஓகே )

அடுத்து மாப்ளை மேட்டருக்கு வருவம். விழிப்பு நிலையில இருக்கும் போது திடீர்னு கை சுதந்திரம் பெற்று தானா இயங்குது. இதுக்கு என்ன அருத்தம்?
பாடி -மைண்ட் இதுல மைண்டோட கம்பேர் பண்ணா இயற்கையில இருந்து டிஸ்கனெக்ட் ஆகாம இருக்கிறது பாடிதான். மழை வருவது மயிலுக்கு தெரியும்னு பாட்டு இருக்கில்ல. மன்சனுக்கு தெரியாதா? நிச்சயமா தெரியனும்.ஆனால் தெரியறதில்லை. என்ன காரணம் ஈகோ . தனக்குன்னு ஒரு உலகம்.அந்த உலகத்துல தானே மையப்புள்ளியா இருக்கிறதுதான்.

நெல்ல வேளையா பாடி கொஞ்சம் கனெக்டடாவே இருக்கு. பாடிக்கு ஈகோல்லாம் கிடையாது. ஏரியா ரவுடியோட பொஞ்சாதி -அவளை பார்த்தாலே முழிய பிதுக்கிருவான்னு தெரிஞ்சாலும் கண் பார்க்கும். வீரியம் புரளும்.எழுச்சி கூட நடக்கலாம்.

இதே போல நான் வெஜ் பிரியர்களுக்கு பிரியாணி சாப்டு நாலு நாள் ஆச்சுன்னா பிச்சைக்காரன் தட்ல இருக்கிற பிரியாணி கூட எச்சி ஊற வைக்கும்.
ஆகவே இயற்கை மைண்டை விட -பாடிய ரெம்ப ஈசியா அப்ரோச் பண்ண முடியுது.அங்கம் துடிக்கிறது ,கண் துடிக்கிறது இதெல்லாம் இந்த கேட்டகிரி தான்.
இது நல்லதுக்கா கெட்டதுக்காங்கற மேட்டரை டிசைட் பண்ண கொஞ்சம் போல சோசிய அறிவும் இருந்தாகனும். அது வேற மேட்டர்.

அடுத்து இந்த கத்தாழை _காத்து _ பாத்ரூம் கதவு மேட்டருக்கு வந்துரலாம். ஒரு அறிவு குறைஞ்சாலே பவிஷ்ய தரிசனம்னு சொல்லியாச்சு. இதுல “சுயமே” இல்லாத மேட்டர்ல என்னத்தை சொல்ல. புரியுதுல்ல?

உடுங்க ஜூட்டு ..

ராசிபலனும்-ஜாதகபலனும்

2

அண்ணே வணக்கம்ணே !
கால மாற்றமும் கிரக பலனும்னு ஒரு பதிவு போட்டேன். ரெம்ப நாளைக்கு பிறவு நெல்ல ரெஸ்பான்ஸ். ஜாதகம் பார்க்க வந்தவிகள ஜாதகம் கொண்டு வந்திங்களான்னா “ஏஞ்சாமி அந்த காலத்துல எல்லாத்தையும் ஜாதகம் பார்த்தா செய்தம் – ச்சொம்மா பேர் ராசிய வச்சு சொல்லுங்க”ம்பாய்ங்க.

செம கடுப்பாகும். ஆனாலும் இந்த மேட்டரை நிறுத்தி நிதானமா ரோசிச்சதுல பல மேட்டர் ஸ்பார்க் ஆச்சு. அவிக சொல்றதும் உண்மை தானே. இப்போ கம்ப்யூட்டர் ஜாதகம் வந்துருச்சு . படக்குனு பத்து ரூவா கொடுத்து ஜாதகம் போட்டுக்கிடறம். இதுக்கு மிந்தி?

ஜோதிட தொழில்ங்கறது மோனோப்பலியா இருந்த காலம் ஒன்னிருக்கில்ல. அய்யரு ஏதோ ரெட்டி ,நாயுடு, தேவர், நாடார், நாயக்கர்னா கொஞ்சம் பயந்துக்குனு எளுதி கொடுப்பார். அவரும் எத்தனை ஜாதகம் எழுதுவாரு?

எங்க ஊருல ஒரு சோசியர் செம பிசி. ( நான்-பிராமின் தான்) கிடைக்கிற கேப்ல கூட ஜாதக நோட்டு ஒன்னை எடுத்து எழுத ஆரம்பிச்சுருவாரு. ஜாதக நோட்டுங்க (எம்ப்ட்டி) குமிஞ்சி கிடக்கும்.

அன்னாரு எழுதி கொடுக்கிறதுக்குள்ள ஜாதகர் கழுத்து நின்னு , கவுந்துகிட்டு, சுவற்றை பிடிச்சு நடந்து பிறவு நடை வண்டியோட நடந்து ஸ்கூலுக்கே போக ஆரம்பிச்சுருவாரு.

அதுவரை என்ன பண்றது? ச்சும்மா பேர் ராசிய வச்சு கதை பண்ண வேண்டியது தான்.ஆனால் அதெல்லாம் பக்காவா ஒர்க் அவுட் ஆகியிருக்கே?
இப்பல்லாம் ஜாதகத்தை வச்சு மாஞ்சு மாஞ்சு கணக்கு போட்டு சொன்னாலும் ஒன்னு ரெண்டு உதைக்குதே என்னா மேட்டரு?

மேட்டருக்கு வரேன்.

அந்த காலத்துல பால்ய விவாகம். அணை நிரம்புதோ இல்லையோ நீர் பாய்ச்ச நிலம் ரெடியா இருக்கும். இயற்கையோட நெருங்கிய தொடர்புள்ள வாழ்க்கை (விவசாயம் -கருக்கல்ல முழுக்கிறது என்ன? இருட்னதும் தூங்கிப்போறதென்ன?)

அந்த காலத்து விதை எல்லாம் ( நான் எதை சொல்றேன்னு புரியுதுல்ல?) செம வீரியம். மொத டிக்காஷன்ல காஃபி மாதிரி அப்டி இறங்கும். தாத்தாவோட கலர் ஜெராக்ஸ் பையன், பையனோட கலர் ஜெராக்ஸ் பேரன்னு ஈயடிச்சான் காப்பியா இறங்கியிருக்கும்.

இன்னைக்கு நிலைமை அப்படியா இருக்கு?

எப்பம் பசி மந்தமாயிருதோ அப்பத்தான் மன்சன் ருசிக்கு அலைவான். எப்ப மன்சனோட தாக்கத் குறைஞ்சு போகுதோ அதை பேலன்ஸ் பண்ண தன் தனித்துவத்தை காட்ட ஆரம்பிப்பான். (சர்வைவல்). அந்த காலத்துல தாக்கத் சூப்பர். சர்வைவல் பிரச்சினையே கிடையாது.

பாடி ஃபிட்னஸ் சூப்பர், சனம் கம்மி, நிலம் சாஸ்தி, தண்ணி ஃப்ரீ, எரி பொருள் ஃப்ரீ ,காஸ்ட் ஆஃப் லிவிங் குறைவு .இதனால தனித்தன்மை குறைவு . அதை மந்தத்தனம்னு சொல்லக்கூடாது . வேணம்னா மந்தை தனம்னு சொல்லலாம்.

இப்பம் என்னாச்சு. சின்ன சின்ன குட்டீஸுக்கெல்லாம் தனி டேஸ்ட் என்ன? டோன்ட் டிஸ்டர்ப் மீ போர்ட் என்ன? தனி ரூம் என்ன?
நாம நட்சத்திரப்படி பார்த்தா 27 க்ரூப்புதேன், ராசி படி பார்த்தா 12 க்ரூப்பு தேன். மன்சங்களுக்குள்ள -அவிக டேஸ்டுகளுக்கிடையில வித்யாசம் ரெம்ப குறைச்சல். ஆனால் இன்னைக்கு நிலைமை அப்படியா இருக்கு?

உதாரணத்துக்கு லக்ன பாவத்தை எடுத்துக்குவம். இது நம்ம தலை,முகம் , ஆடை,அணிகலன்,எண்ணம் ,உள்ளம் இத்யாதிய காட்டுது.
குழந்தை பிறக்கும் போது தலையோட ஷேப்பு அது இஷ்டாத்துக்கு இருக்கும். பாட்டியோ,விதவையா போன அத்தையோ ஆரோ ஒரு பார்ட்டி தண்ணிய கொதிக்க கொதிக்க ஊத்தி அமுக்கி அமுக்கி ஒரு ஷேப்புக்கு கொண்டுவருவாய்ங்க.

இன்னைக்கு?
தாய்ப்பாலில் வீரம் கண்டேன்னு வாத்யாரு பாடினாரு. இன்னைக்கு தாய்ப்பால்ல டயாக்சின், டை கன்டென்ட் தான் இருக்கும் போல.

அப்பன் ஆத்தா ,அவிக அப்பன் ஆத்தாவுக்கு அடங்கி நடந்திருந்தா இதுவும் நடக்கும். அதுக அடங்கலின்னா அந்த அடங்காமை தானே அந்த தாய்ப்பால்லயும் ,அவன் போட்ட விதையிலயும் வரும்?

இதெல்லாம் இப்ப சொன்னா ஹய்யா நம்ம முருகேசன் சாருக்கு வயசாயிருச்சும்பாய்ங்க. சொல்லிட்டு போவட்டும் , நமக்கு சப்ஜெக்ட் முக்கியம்.
அன்னைக்கு ராசிக்கு சொன்னா நடந்தது -இன்னைக்கு ஜாதகத்துக்கு சொன்னாலே உதைக்குது ஏன்? இதான் சப்ஜெக்ட். இன்னைக்கு மக்களோட தனித்தன்மை வளர்ந்துருச்சு. சகட்டுமேனிக்கு ரோசிக்கிறான், சகட்டு மேனிக்கு கற்பனைகள்.ஆனால் மேற்படி ரோசனைகளை செயலாக்கற தாக்கத் இல்லை, கற்பனைகள் நிஜமானாலும் அதை அனுபவிக்கிற “மஸ்த்” இல்லை.

ஒருவன் மனது ஒன்பதடா -அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடான்னு கவிஞர் எழுதிட்டாரு. இன்னைக்கு எழுத சொன்னா ட்ரில்லியன்,மில்லியன் கணக்குலதான் எழுதனும்.

ஒரு வண்டி -பேசிக்கலா லொடக்கானி, பெட் ரோலும் சரியில்லை, அளவும் ரெம்ப குறைச்சலா இருக்கு, ஓட்டறவனும் செரியில்லை, ஒன்பது திசைப்பக்கமும் குண்டக்க மண்டக்க அலையுதுன்னு வைங்க அந்த வண்டி எந்த இலக்கை போய் அடையும்னு கரீட்டா சொல்ல முடியுமா? நெவர் !
நான் எல்லாம் சின்ன வயசா இருக்கும் போது குப்பன்ங்கற நாவிதர் காலையில வீட்டுக்கே வருவாரு . வெட்ட ஆரம்பிச்சா கொய்யால குளிச்சுட்டு சோறே சாப்பிட்டுரலாம். அவ்ளோ நேரம் வெட்டுவார். கூலி ? ஒரு ரூவாயா ரெண்டு ரூவாயா தெரியாது.

பிறவு கொஞ்சம் பெரிய பசங்க ஆன பிறவு அப்பா கூப்டு போயி கடையில விடுவாரு, அப்பா ஒரு மாசத்துக்குண்டான காய் கறி எல்லாம் வாங்கிட்டு வர்ர வரை வெட்டிக்கிட்டே இருப்பாய்ங்க. கட்டணம்? அஞ்சு ரூவாயா இருக்கலாம்.

இன்னைக்கு ? மொதல்ல ஃபோன் போட்டு கடை திறந்திருக்கா? ஹேர் ட்ரசர் கடைக்கு வந்திருக்காரா? வந்திருந்தாலும் ஃப்ரீயா இருக்காரா? தெரிஞ்சுக்கிட்டு போவனும். அப்படியே போனாலும் முன்னாள் கவுன்சிலரோ ,இ ந் நாள் பிகில் ரவுடியோ கிராஸ் ஆயிட்டா நாம வெயிட்டிங்குல இருக்கனும்.

ஒரு தலை மேட்டருக்கே இவ்ளோ கதை .இன்னம் முகம்? விடிஞ்சுரும் (இப்பமே 4.29) நான் என்ன சொல்ல வரேன்னா வாழ்க்கைய கிரகத்தோட போக்குல , பாவத்தோட போக்குல விடாம கிரக பலன்/பாவ பலன்ல ஓவர் ட்ராஃப்ட் பண்ணி “ஷோக்” பண்ணிக்கிறம். மத்த மேட்டர்லாம் எப்படி ஒர்க் அவுட் ஆகும்?

மொதல்ல தனியோ தனின்னு ஆயிட்ட பார்ட்டிக்கு ராசிபலன் எப்படி பொருந்தும்? ஜாதகமே இருந்தாலும் நொடிக்கு நொடி மனம் மாறி ,மனம் போன போக்குல போற வாழ்க்கைய எப்படி கணிக்க முடியும்?

இன்னொரு சந்தர்ப்பத்துல தொடர்ந்து பேசுவம்

'ஜெ' தீர்ப்பு செரி -அடுத்தது என்ன?

75d8a188

அண்ணே வணக்கம்ணே !
நாம சொன்னதெல்லாம் நடந்துருச்சுன்னு பீத்திக்க முடியாது. (சொத்து மதிப்பீட்லயே 15% தள்ளுபடி கொடுக்கிற காலத்துல அப்டேட்டே இல்லாம “பொளப்பா” மாறிப்போன சோசிய பலிதத்துக்கு கிரேஸ் மார்க் கொடுக்க கூடாதா என்ன?

ஆனால் போன தேர்தல்ல ஜெ தலைமையில் கூட்டணி சர்க்கார்ல ஆரம்பிச்சு – மோதி மேட்டர்ல செம பல்பு வாங்கின பிறவு லேட்டஸ்டா ஜெ சொ.கு மேல் முறையீடு விவகாரத்துல பல்பு ஃப்யூஸ் போனது வரை ஒவ்வொரு எழுத்தும் அச்சா ஞா இருக்கு.

நாம வெறுமனே சோசியர்னா அண்டர் கிரவுண்டுக்கு போயிரலாம். ஆனா 1986 லயே நாட்டை பத்தி சிந்திக்க ஆரம்பிச்சு 1992 லயே ஒரு தெளிவான முடிவுக்கு வந்துட்ட பார்ட்டி . ( நம்ம ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டம் 1992லயே ஜனசக்தி இதழ்ல வெளி வந்துருச்சுங்கோ)
1997 லருந்தே செவிடன் காதுல சங்கு ஊதின கணக்கா ஆட்சியாளர்களை “உஷார்” பண்ணிக்கிட்டிருக்கிற பார்ட்டி.அதுலயும் தமிழ் நாடு மேட்டர் ரெம்ப சீரியஸ்.

மம்மி வெளிய இருந்தப்பயே 110 பிரிவின் கீழ் குப்பையா (எண்ணிக்கை அடிப்படையில சொல்றன்) வெளி வந்த அறிக்கைகள் தான் லாபமே தவிர ப்ராக்டிக்கலா ஒன்னத்தையும் காணோம். அம்மா உணவகம்,ஆடு,மாடு,கோழின்னு பட்டியல் போடலாம்.ஆனால் அதெல்லாமும் சேர்ந்துதேன் தமிழ் நாட்டை திவால் ஆகிற நிலைக்கு கொண்டு வந்துருச்சு.

ஏரிக்கு பயந்து கழுவாத போன கதையா மத்தியில எந்த சர்க்கார் வந்தாலும் குடுமிப்பிடிதான். செரி சனங்க மேல பாரம் ஏத்தாம – சாணக்கியமா அரசு வருவாயை கூட்டற டெக்னிக்காவது உண்டான்னா அதுவும் இல்லை. அதுவும் ஒழியட்டும் அரசோட வெட்டி செலவுகளை குறைச்சு ,நிர்வாகத்தை முடுக்கி விடற முயற்சியாவது ..ஊஹூம் நெவர்.

இன்னைக்கு நிலை என்னன்னா மம்மி சி.எம் ஆகப்போறாய்ங்க. கர்னாடக அரசு நிச்சயமா அப்பீலுக்கு போகும்.அவிக தூங்கினாலும் அன்பழகன் தரப்பு விடாது. சுப்ரமணியம் சாமிக்கு ஏதாவது ஹெவியா ஆஃபர் பண்ணாலே தவிர அந்த ஆசாமியும் அடங்கமாட்டான் ( மிந்தி மதுரையை தூக்கி கொடுத்தாப்ல)
தலை மேல கத்தி கியாரண்டி. சிறப்பு நீதிமன்றதீர்ப்பு ஹைகோர்ட்ல மாறினாப்ல, ஹை கோர்ட் தீர்ப்பு சுப்ரீம்ல தலைகீழா மாறாதுன்னு ஆரும் கியாரண்டி கொடுக்க முடியாது.

குமாரசாமி எந்த அடிப்படையில தீர்ப்பு கொடுத்தாரோ நமுக்கு தெரியாது.வெறுமனே பேப்பர் படிக்கிற,டிவி பார்க்கிற நமக்கே தெரியுது ஹெவியா ஊழல் நடந்திருக்குன்னு. வங்கி கடனை சொத்தா காட்டிட்டாய்ங்களாம். செரி கடனை திருப்பி கட்டியாச்சுல்ல ( இன்சால்வென்ட்னா எலீக்சன்ல நிற்கவே முடியாதே)

மம்மி வாத்யார் காலத்துலயே நதியை தேடி வந்த கடல் ரேஞ்சுக்கு வந்துட்டாய்ங்க. மேலும் அந்த காலத்துல இன்னைக்கு மாதிரி சீரியல் பிசினஸும் கடியாது.அதுக்கு மிந்தி என்னதான் சம்பாதிச்சு வச்சுருந்தாலும் குந்தி தின்றால் குன்றும் மாளும்.
செரி அந்த இழவுக்குள்ள எல்லாம் நான் போக விரும்பல. மறு தீர்ப்பு வர்ர வரைக்கும் அது 3 மாசமோ -அல்லது 6 மாசமோ மம்மி சி.எம் நாற்காலியில உட்கார்ரது ஷ்யூர்.

இந்த 3/6 மாசத்துல என்ன செய்யலாம்னு இங்கே விவரமா கொடுத்திருக்கன். மோசமான விருந்துக்கு பிறவு நெல்ல ஸ்வீட் பீடா மாதிரி இந்த வேலைகளயாவது செய்து எலீக்சனுக்கு ப்ரிப்பேர் ஆகறாய்ங்களா பார்ப்பம்.

மம்மி செயில்ல இருக்கச்சொல்லோ கூரியர்ல அனுப்பி டெலிவரியும் ஆயிருக்கு. போதாக்குறைக்கு செயிலுக்கு போறதுக்கு மிந்தி ஒரு தபா, போய் வந்த பிறவு ஒரு தபா கார்டனுக்கே அனுப்பியிருக்கம்.

வழக்கமா உடுங்க ஜூட்டுன்னு பதிவை முடிப்பம். இன்னைக்கு ஊஹூம்..அம்பேல் ..

‘ஜெ’ தீர்ப்பு செரி -அடுத்தது என்ன?

75d8a188

அண்ணே வணக்கம்ணே !
நாம சொன்னதெல்லாம் நடந்துருச்சுன்னு பீத்திக்க முடியாது. (சொத்து மதிப்பீட்லயே 15% தள்ளுபடி கொடுக்கிற காலத்துல அப்டேட்டே இல்லாம “பொளப்பா” மாறிப்போன சோசிய பலிதத்துக்கு கிரேஸ் மார்க் கொடுக்க கூடாதா என்ன?

ஆனால் போன தேர்தல்ல ஜெ தலைமையில் கூட்டணி சர்க்கார்ல ஆரம்பிச்சு – மோதி மேட்டர்ல செம பல்பு வாங்கின பிறவு லேட்டஸ்டா ஜெ சொ.கு மேல் முறையீடு விவகாரத்துல பல்பு ஃப்யூஸ் போனது வரை ஒவ்வொரு எழுத்தும் அச்சா ஞா இருக்கு.

நாம வெறுமனே சோசியர்னா அண்டர் கிரவுண்டுக்கு போயிரலாம். ஆனா 1986 லயே நாட்டை பத்தி சிந்திக்க ஆரம்பிச்சு 1992 லயே ஒரு தெளிவான முடிவுக்கு வந்துட்ட பார்ட்டி . ( நம்ம ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டம் 1992லயே ஜனசக்தி இதழ்ல வெளி வந்துருச்சுங்கோ)
1997 லருந்தே செவிடன் காதுல சங்கு ஊதின கணக்கா ஆட்சியாளர்களை “உஷார்” பண்ணிக்கிட்டிருக்கிற பார்ட்டி.அதுலயும் தமிழ் நாடு மேட்டர் ரெம்ப சீரியஸ்.

மம்மி வெளிய இருந்தப்பயே 110 பிரிவின் கீழ் குப்பையா (எண்ணிக்கை அடிப்படையில சொல்றன்) வெளி வந்த அறிக்கைகள் தான் லாபமே தவிர ப்ராக்டிக்கலா ஒன்னத்தையும் காணோம். அம்மா உணவகம்,ஆடு,மாடு,கோழின்னு பட்டியல் போடலாம்.ஆனால் அதெல்லாமும் சேர்ந்துதேன் தமிழ் நாட்டை திவால் ஆகிற நிலைக்கு கொண்டு வந்துருச்சு.

ஏரிக்கு பயந்து கழுவாத போன கதையா மத்தியில எந்த சர்க்கார் வந்தாலும் குடுமிப்பிடிதான். செரி சனங்க மேல பாரம் ஏத்தாம – சாணக்கியமா அரசு வருவாயை கூட்டற டெக்னிக்காவது உண்டான்னா அதுவும் இல்லை. அதுவும் ஒழியட்டும் அரசோட வெட்டி செலவுகளை குறைச்சு ,நிர்வாகத்தை முடுக்கி விடற முயற்சியாவது ..ஊஹூம் நெவர்.

இன்னைக்கு நிலை என்னன்னா மம்மி சி.எம் ஆகப்போறாய்ங்க. கர்னாடக அரசு நிச்சயமா அப்பீலுக்கு போகும்.அவிக தூங்கினாலும் அன்பழகன் தரப்பு விடாது. சுப்ரமணியம் சாமிக்கு ஏதாவது ஹெவியா ஆஃபர் பண்ணாலே தவிர அந்த ஆசாமியும் அடங்கமாட்டான் ( மிந்தி மதுரையை தூக்கி கொடுத்தாப்ல)
தலை மேல கத்தி கியாரண்டி. சிறப்பு நீதிமன்றதீர்ப்பு ஹைகோர்ட்ல மாறினாப்ல, ஹை கோர்ட் தீர்ப்பு சுப்ரீம்ல தலைகீழா மாறாதுன்னு ஆரும் கியாரண்டி கொடுக்க முடியாது.

குமாரசாமி எந்த அடிப்படையில தீர்ப்பு கொடுத்தாரோ நமுக்கு தெரியாது.வெறுமனே பேப்பர் படிக்கிற,டிவி பார்க்கிற நமக்கே தெரியுது ஹெவியா ஊழல் நடந்திருக்குன்னு. வங்கி கடனை சொத்தா காட்டிட்டாய்ங்களாம். செரி கடனை திருப்பி கட்டியாச்சுல்ல ( இன்சால்வென்ட்னா எலீக்சன்ல நிற்கவே முடியாதே)

மம்மி வாத்யார் காலத்துலயே நதியை தேடி வந்த கடல் ரேஞ்சுக்கு வந்துட்டாய்ங்க. மேலும் அந்த காலத்துல இன்னைக்கு மாதிரி சீரியல் பிசினஸும் கடியாது.அதுக்கு மிந்தி என்னதான் சம்பாதிச்சு வச்சுருந்தாலும் குந்தி தின்றால் குன்றும் மாளும்.
செரி அந்த இழவுக்குள்ள எல்லாம் நான் போக விரும்பல. மறு தீர்ப்பு வர்ர வரைக்கும் அது 3 மாசமோ -அல்லது 6 மாசமோ மம்மி சி.எம் நாற்காலியில உட்கார்ரது ஷ்யூர்.

இந்த 3/6 மாசத்துல என்ன செய்யலாம்னு இங்கே விவரமா கொடுத்திருக்கன். மோசமான விருந்துக்கு பிறவு நெல்ல ஸ்வீட் பீடா மாதிரி இந்த வேலைகளயாவது செய்து எலீக்சனுக்கு ப்ரிப்பேர் ஆகறாய்ங்களா பார்ப்பம்.

மம்மி செயில்ல இருக்கச்சொல்லோ கூரியர்ல அனுப்பி டெலிவரியும் ஆயிருக்கு. போதாக்குறைக்கு செயிலுக்கு போறதுக்கு மிந்தி ஒரு தபா, போய் வந்த பிறவு ஒரு தபா கார்டனுக்கே அனுப்பியிருக்கம்.

வழக்கமா உடுங்க ஜூட்டுன்னு பதிவை முடிப்பம். இன்னைக்கு ஊஹூம்..அம்பேல் ..