ரிமோட் குண்டு வெடித்ததில் முன்னாள் எம்.எல்.ஏ.சி.கேபாபு பயணம் செய்த கார் நசுங்கியது.

ரிமோட் குண்டு வெடித்ததில் முன்னாள் எம்.எல்.ஏ.சி.கேபாபு பயணம் செய்த கார் நசுங்கியது. வட்டமிட்ட இடத்தில் தான் குண்டு புதைத்து வைக்கப்பட்டு இருந்தது. உள் படத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் சி.கே.பாபுவை பார்க்கலாம்.

நேற்று ஒரு கதை . பெண்ணின் கதை.

கதை கேளுங்க !

ஒவ்வொரு மனிதனும் கதை சொல்ல தயார். ஆனால் நாம் கேட்க தான் தயாரில்லை. 7 ஆம் வகுப்பு காலத்திலிருந்தே தெரிந்தோ தெரியாமலோ ஊர் பஞ்சாயத்து செய்ய ஆரம்பித்துவிட்டதால் என்னால் ஓராயிரம் கதை கள் சொல்ல முடியும். நேற்று ஒரு கதை . பெண்ணின் கதை. அவள் பி.படுத்தப்பட்டவள். தலித் இளைஞன் ஒருவனை காதல் கடிமணம். ஏற்கெனவே ஒரு பெண் குழந்தை இருக்கிறது. தற்போது 5 மாதம் கர்பம். இவள் ஒரு பிரபல நர்சிங் ஹோமில் ஃப்ரண்ட் டெஸ்க் எம்ப்ளாய். பணம் போக்கு வரத்து எல்லாம் பார்த்துக்கொள்ளவேண்டிய வேலை. சம்பளம் ரூ.1800 .டைமிங்ஸ் காலை 8 முதல் இரவு 10. இவளோடு சேர்த்து 25 பேர் வேலை பார்க்கிறார்கள்.

தேனை எடுப்பவன் புறங்கையை நக்கித்தீருவான் என்பது போல் கடைசி 4 மாதங்கள் தினசரி ரூ.1000 வரை ஒதுக்கி இருக்கிறாள். தன் கணவன் பேரிலான வங்கி கணக்கில் டெப்பாஸிட் செய்து வந்திருக்கிறாள். கணக்கு வழக்கில் எந்த வித்யாசமும் கிடையாது. கொள்ளையடிப்பவனுக்கு கணக்கு பார்க்க நேரம் ஏது?

ஒரு நாள் தன் சக ஊழியை ஒருவளிடம் பணம் கொடுத்து வங்கியில் போட்டு வரச் சொல்லியிருக்கிறாள். அந்த பெண் டாக்டரிடம் ஊதியிருக்கிறது. பற்றிக்கொண்டுவிட்டது. டாக்டர் பந்தாவாய் அந்த தனியார் வங்கி மேனேஜருக்கு போன் போட்டு விஷயத்தை சொல்லவும், வங்கி இவள் கணக்கை முடக்கி விட்டது.

மேலும் டாக்டர் ஒன் டவுன் எஸ்.ஐ க்கு ஓரலாக கம்ப்ளெயிண்ட் கொடுத்துவிட்டார். இந்த நிலையில் என் உதவி கேட்டு வந்தனர். நான் என்ன செய்திருப்பேன்? வேலைக்கு ஆகியதா? இல்லையா? ட்டட்ட டாய்ங் அடுத்த பதிவில் சந்திப்போம்

பெனாசிர் புட்டோ மரணம் : பாவத்தின் சம்பளம்

பாவத்தின் சம்பளம் மரணம் என்பது விவிலிய வாக்கு. பெனாசிர் புட்டோவின் மரணத்தை பாவத்தின் சம்பளமாகத்தான் கூற வேண்டும். அவர் தம் மதத்துக்கோ,நாட்டுக்கோ ,பெண்மைக்கோ ஒரு நாளும் உண்மையாக இருந்ததில்லை.

இந்தியா பாக்கிஸ்தான் இரண்டும் ஒரு கொடியில் பூத்த இருமலர்கள். இவற்றினிடையில் வேறுபாடுகளை வளர்த்த,வளர்க்கும் எவரையும் சரித்திரம் மன்னிக்காது. இன்று நிலவும் தகவல் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு அகண்ட பாரதம் அல்ல வெல்ஸ் கனவு கண்ட உலக அரசு கூட சாத்தியமே. தொலைநோக்குடன் யோசிக்காது,உழக்கில் கிழக்கு மேற்கு பார்க்கும் எந்த தலைவருக்கும் இதே கதி தான்.

இன்றைய உலகத்தின் பொது எதிரி தீவிரவாதம். தீவிர வாதத்துக்கு எதிராக உலகமக்கள்(அமெரிக்காவின் தலைமையில் அல்ல) திரண்டெழ வேண்டிய காலகட்டம் இதுதான். தீவிரவாதத்தின் ஆணி வேர் வறுமை. வறுமை உலகிலிருந்து ஒழிக்கப்பட்டுவிட்டால் தீவிரவாதம் தானே மறைந்து விடும்.

அதை விடுத்து குறுகிய நோக்கங்களுடன் மக்களை பிரித்தாண்டு , ஆட்சியை கைப்பற்ற நினைக்கும் தலைவர்கள் பரிதாபத்துக்குரியவர்கள்.

உலக நாடுகள் ஒன்று கூடி தம் ராணுவத்தை உருப்படியான வேலைகளில் ஈடுபடுத்தினால் வறுமை தலை தெறிக்க ஓடும்.

உல‌க‌ ம‌க்க‌ள் காலை 6 ம‌ணிக்கு விழித்து,மாலை 6 ம‌ணிக்கு ப‌டுக்க‌ச்சென்றாலே போதும் மின்சார‌ம்,எரிபொருள், விநியோக‌ம் க‌ட்டுப்ப‌டுத்த‌ப்ப‌ட்டு விடும். இத‌னால் க்ளோப‌ல் வார்மிங் குறைந்து ஜ‌ல‌ப்பிர‌ள‌ய‌ம் த‌டுக்க‌ப்ப‌டும். அணு ஆயுத‌ங்க‌ள்,அணு மின் ச‌க்திக்கு விடை கொடுக்க‌ வேண்டும். ந‌திக‌ள் இணைக்க‌ப்ப‌ட்டு விவ‌சாயம்,கால் நடை வளர்ப்பு, ஆக்ரோ தொழிற்சாலைகள்,பால் பொருள் உற்பத்தி மட்டுமே தொழிலாக‌ கொள்ள‌ப்ப‌ட‌ வேண்டும். இர‌சாய‌ண‌ உர‌ங்க‌ள் ,பிளாஸ்டிக் ஒழிக்க‌ப்ப‌ட‌ வேண்டும்.

போதும் போதும் இப்பிறவி

அம்மா!
இதுவும் உந்தன் விதியென்றே விழுங்கி வைத்தேன் வருந்தாதே
காளி யாகி என் உதிரம் நாளும் பொழுதும் அருந்தாதே

மனிதன் என்றே பிறந்திட்டேன்
விதிக்கு புறம்பாய் சுய நலமே புவிமிசை நானே துறந்திட்டேன்

கலைகள் யாவிலும் சிறந்திட்டேன்
விதியின் ரகசியம் அறிந்திட்டேன்

செவிடர் காதில் சங்கெனவே ஆனது எந்தன் தமிழ் பேச்சே
பிணப்புகை யானது என் மூச்சே

தொண்டை வறள பேசிவிட்டேன்
பேனா முனையும் தேய எழுதிட்டேன்

மாற்றம் தானே வரவில்லை
ஏமாற்றம் இன்னும் மாறவில்லை

யாதே செய்வேன் புவனேசி
இனியேனும் நீயே எனை யோசி

பாவியர் பலரும் புவிமிசையே பவிசாய் தானே வாழ்ந்தாச்சு
என் நிலை தானே தாழ்ந்தாச்சு

உயிர்கள் செய்வது இரு வேலை
கொல்வது அன்றேல் சாவது தான்
கொன்றால் கருமம் தொடர்ந்து வரும்
மீண்டும் மீன்டும் பிறவி தரும்

மனித பிறவி அற்பம் என்று அறிந்தேன் புரிந்தேன்
அறிந்ததனால் விட்டேன் கொல்வதை அம்மாவே
மக்கள் என்னை கொல்லட்டும்
என் கருமம் யாவும் தொலையட்டும்
நித்தம் தேசம் முன்னேற எழுதி வந்த என கரத்தை
அரிவாள் கொண்டே வெட்டட்டும்
அனுதினம் அகில மாந்தரெலாம் உயர்ந்திட உழைத்த என் உடலை
நெருப்பிலிட்டு மகிழட்டும்
வருந்தேன் திருந்தேன் அம்மாவே
போதும் போதும் இப்பிறவி
வற்றாதெந்தன் தமிழருவி

12 ராசியினருக்கும் காதலில் வெற்றி

காதலில் வெற்றிக்கு முதல் வழி சரியான ராசிக்காரரை காதலிப்பதுதான். சரியான ராசி என்றால் உங்கள் ராசிக்கு வசியமாகும் ராசி என்று பொருள்.

யாருக்கு/யார் வசியம்:
மேஷத்துக்கு சிம்ம,விருச்சிக ராசியினர் வசியம். எனவே மேஷ ராசியினர் சிம்மம் அல்லது விருச்சிக ராசிக்காரரை காதலிக்கலாம். இதே போல் ரிஷப ராசியினர் கடகம் அல்லது துலா ராசியினரையும்,மிதுனராசிக்காரர் க்ன்னி ராசிக்காரரையும்,கடக ராசிக்காரர் விருச்சிக ,தனுசு ராசிக்காரரையும்,சிம்ம ராசிக்காரர், துலா அல்லது மகர ராசிக்காரரையும் காதலிக்கலாம். இதே போல் கன்னி‍க்கு மீன,மிதுன‌ம் வசியம், துலாத்துக்கு மகரம்,கன்னி வசியம். விருச்சிகத்துக்கு கடகம்,தனுசுக்கு மீனம்,மகரத்துக்கு கும்பம்,கும்பத்துக்கு மீனம், மீனத்துக்கு மகரம் வசியம்.

மேலும் உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம் என்பது கவிஞர் வாக்கு. எனவே உங்கள் ராசியின் ப்ளஸ்,மைனஸ் பாயிண்டுகளை அறிந்து நடக்க வேண்டும். இதே போல் தங்கள் காதலர் ராசியின் ப்ளஸ்,மைனஸ் பாயிண்டுகளை அறிந்து நடக்க வேண்டும்.

மேலும் உங்கள் ராசிக்கு குருபலம் உள்ளதா பார்த்துக் கொள்ள வேண்டும். குருபலம் இருந்தால் தான் உங்கள் கவர்ச்சி பெருகும், வசிய ராசிக்காரரானாலும் உங்களுக்கு குருபலம் இருந்தால் தான் உங்களை நாடுவார்.

ஜாத‌க‌மே இல்லாது தங்களுக்கோ, த‌ங்க‌ள் காத‌ல‌ருக்கோ செவ்வாய் தோஷ‌ம் உள்ள‌தா என்ப‌தை அறிய‌ வ‌ழியிருக்கிற‌து. தோஷ‌ம் இருந்தால் இருவ‌ருக்கும் இருக்க‌ வேண்டும், இல்லாவிட்டால் இருவ‌ருக்கும் இருக்க‌க்கூடாது. ஒருவ‌ருக்கு இருந்து,அடுத்த‌வ‌ருக்கு இல்லையென்றால் பிரிவு நிச்ச‌ய‌ம்.

மேலும் காத‌லில் வெற்றிக்கு சுக்கிர‌ ப‌ல‌ம் முக்கிய‌ம். ஜாத‌க‌த்தையே பார்க்காது உங்க‌ள் ஜாத‌க‌த்தில் சுக்கிர‌ ப‌ல‌ம் உள்ள‌தா இல்லையா என்ப‌தை அறிய‌வும் வ‌ழியுண்டு.

அடுத்த‌ ப‌டியாக‌ த‌ங்க‌ள் காத‌லை சொல்லும் நேர‌ம் முக்கிய‌மான‌து. உங்க‌ள்/அடுத்த‌வ‌ர் ராசிக்கு ச‌ந்திராஷ்ட‌ம‌ கால‌த்தில் காத‌லை சொல்லாதீர்க‌ள். சுக்கிர‌ன் 7,10ல் இருக்கும்போதும் கூடாது. குரு ப‌ல‌ம் இல்லாத‌ போது காத‌லை சொன்னால் தோல்வி நிச்ச‌ய‌ம்.

யாரை காத‌லிக்க‌ கூடாது:

த‌ங்க‌ள் ராசிக்கு 6,8,12 ஆவ‌து ராசிக்கார‌ரை காத‌லித்தால் க‌ட‌ன்,விரோத‌ம்,நோய்,பிராண‌ க‌ண்ட‌ம்,விப‌த்து,வீண்விர‌ய‌ம் உறுதி.

அடுத்த‌ ப‌திவில் விரிவாக‌ பார்க்க‌லாம்.

பல்துறை திறமைகளின் உறைவிடம் சித்தூர்.எஸ்.முருகேஷன்

பல்துறை திறமைகளிபல்துறை திறமைகளின் உறைவிடம் சித்தூர்.எஸ்.முருகேஷன்
ன் உறைவிடம் சித்தூர்.எஸ்.முருகேஷன்

சித்தூர்(டிச‌ம்ப‌ர்29)
தமிழ்,தெலுங்கு மொழிகளில் எழுத்து,கவிதை,விளம்பர வடிவமைப்பு,கணிணி போன்ற பல் துறை திற‌மைக‌ளின் உறைவிட‌ம் சித்தூர்.எஸ்.முருகேஷ‌ன் என்று ஆந்திர‌மாநில‌ம்,சித்தூர் ந‌க‌ர‌ ம‌க்க‌ள் கூறுகின்ற‌ன‌ர். வ‌ல்ல‌வ‌ர்க‌ள் எல்லாம் ந‌ல்ல‌வ‌ர்க‌ளாக‌ இல்லாத‌தால் தான் ந‌ம் நாடு ப‌ல்வேறு துறைக‌ளிலும் பின் த‌ங்கி வ‌ருகிற‌து என்ப‌தை நாட‌றியும். பல துறைகளில் வ‌ல்ல‌வ‌ராக‌ இருப்ப‌தோடு ந‌ல்ல‌வ‌ராக‌வும் இருப்ப‌தே முருகேஷ‌னின் புக‌ழுக்கு கார‌ண‌ம் என்று வேலூரை அடுத்துள்ள‌ சித்தூர் ந‌க‌ர‌ ம‌க்க‌ள் சொல்வ‌தை கேட்க‌ முடிகிற‌து. 1967 ல் ஓய்வு பெற்ற மாவட்ட க‌ருவூல‌ அதிகாரியின் 3 ஆவ‌து ம‌க‌னாக‌ பிற‌ந்த‌ முருகேஷ‌ன்
1987 க‌ல்லூரி தேர்த‌ல்க‌ளில் ஃபைன் ஆர்ட்ஸ் செக்ர‌ட‌ரியாக‌ போட்டியிட்டு 468 வாக்குக‌ள் பெற்று த‌ம‌து ச‌ரித்திர‌த்தை துவ‌க்கி இந்த‌ 20 ஆண்டுக‌ளில் பிர‌ப‌ல‌ தெலுங்கு நாளித‌ழ் வார்த்தாவில் அரைப் ப‌க்க‌ அள‌வில் த‌ம்மை ப‌ற்றி செய்தி வெளிவ‌ரும‌ள‌வுக்கு வ‌ள‌ர்ந்துள்ள‌து குறிப்பிட‌த்த‌க்க‌து. இவ‌ர‌து சாத‌னைக‌ளில் குறிப்பிட‌த்த‌க்க‌வை வ‌ருமாறு:

1984லேயே க‌ல்லூரி ஆண்டு ம‌ல‌ரில் முத‌ல் க‌விதை பிர‌சுர‌ம்
1987ல் பாக்யாவில் முத‌ல் சிறுக‌தை பிர‌சுர‌ம். 1990 க்குள் வாசுகி,க‌ல்கி,க‌விதாச‌ர‌ண் இத‌ழ்க‌ளில் க‌தைக‌ள் பிர‌சுர‌ம்.

1991 ல் க‌ல‌ப்புத்திரும‌ண‌ம். முத‌ல் குழ‌ந்தை வ‌யிற்றிலிருக்கும்போதே சமூக பொறுப்புடன் கு.க‌. செய்து கொண்ட‌மை

1992 முத‌ல் ஆண்டுக்கு ஒருமுறையாவ‌து ர‌த்த‌தான‌ம் செய்து வ‌ருவ‌து.

இந்தியாவின் எல்லா பிர‌ச்சினைக‌ளுக்கும் தீர்வாக‌ ஆப்ப‌ரேஷ‌ன் இந்தியா 2000 என்ற‌ திட்ட‌ம் தீட்டி அத‌ன் பிர‌ச்சார‌த்துக்கும்,அம‌லுக்கும் தொட‌ர்ந்து உழைத்து வ‌ருவ‌து

விள‌ம்ப‌ர‌ வ‌டிவ‌மைப்பில் ஈடுபாடு கொண்டு முத‌ல் 6 மாத‌ங்க‌ளிலேயே சென்னை,விவேகான‌ந்தா க‌ல்வி நிலைய‌ம், அபிசாரிக்கா தெலுங்கு மாத‌ இத‌ழ் நிர்வாக‌ங்க‌ளிட‌மிருந்து ரொக்க‌ப் ப‌ரிசு பெற்ற‌து
1986 முதல் தமது காம நினைவுகளிலிருந்து விடுதலை பெற அனுமனின் அருள் வேண்டி ராம நாமம் ஜெபித்து வருகிறார். குண்டலி விழிப்பு நிலைக்கு சென்றால் காலஞானம் ஏற்பட வேண்டும் என்பது யோகசாஸ்திர வாக்கு.

எந்த குருவிடமும் அப்பியாசம் செய்யாது ஜோதிட வியலை பயின்று தேர்ச்சி பெற்றதோடு அனுபவ ஜோதிடம் என்ற பெயரில் தனியொரு கலையை உருவாக்கியிருப்பது சிறப்பு.

நவகிரக தோஷங்களுக்கு சம்பிரதாய பரிகாரங்களோடு, தமது கண்டுபிடிப்பான நவீன பரிகாரங்களையும் பரிந்துரைத்து பேரும் புகழும் பெற்று வருகிறார்.

தமது ஆன்மீக வாழ்விலும் தொடர்ந்து முன்னேறி 2000 டிசம்பர் 23 முதல் ஹ்ரீம் என்ற மாயா பீஜத்தை ஜெபித்து வருகிறார். இறையருளை பொறிவைத்து பிடிப்பது எப்படி என்று நூல் எழுதுமத்தனை அனுபவங்களை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

திருவேங்கடன் தீந்தமிழ் பாமலர் மாலை என்ற தலைப்பில் எளிய,அழகு,பழகு தமிழில் காவியம் எழுதி திருப்பதி திருமலை தேவஸ்தான ஆய்வுக்குழு தலைவர் டாக்டர் . ராகவாச்சாரியின் பாராட்டைப்பெற்றது

ஒரே நேர‌த்தில் ஆன்மீகம்‌ மாத‌ இத‌ழில் 2 தொட‌ர்க‌ள் எழுதிய‌மை.(ந‌வ‌கிர‌க‌ தோஷ‌ங்க‌ளுக்கு ந‌வீன‌ ப‌ரிகார‌ங்க‌ள்,ஸ்ரீ பிர‌ம்ம‌ங்காரு)
ஜோதிட பூமி மாத இதழில் தமது கண்டுபிடிப்பான ந‌வ‌கிர‌க‌ தோஷ‌ங்க‌ளுக்கு ந‌வீன‌ ப‌ரிகார‌ங்களை எழுதி முடித்து, அனைவருக்கும் தனயோகம் என்ற தொடரை ஜனவரி இதழில் துவக்க உள்ளார்.

தமிழனாய் இருந்து, தெலுங்கை கற்றுத் தேர்ந்து தெலுங்கிலும் இலக்கியங்கள் படைப்பதோடு 2 ஆண்டுகள் ஆந்திர பிரபா தெலுங்கு நாளிதழின் நிருபராகவும் பணியாற்றியுள்ளார்.

தற்போது தினத்தந்தி நாளிதழின் சித்தூர் நிருபராக பணியாற்றிவருகிறார்.