ராகு காதல் : நெகட்டிவ்

ஸ்னேக் விமன்

அண்ணே வணக்கம்ணே !
காதலில் 18 வகை . 9 கிரகங்களின் பாசிட்டிவ் இம்பாக்டோட 9 வகை ,நெகட்டிவ் இம்பாக்டோட 9 வகை ஆக மொத்தம் 18 வகை காதல்கள் இருக்கு. இதுல சூரியன்,சந்திரன்,செவ் இம்பாக்டுடனான பாசிட்டிவ் ,நெகட்டிவ் காதல்கள் மற்றும் அவற்றுக்கான பரிகாரங்களை பார்த்துட்டம்.
ராகு -கேது வகை காதல்களை ஒரே கல்லுல ரெண்டு மாங்கான்னு அடிச்சு தள்ளிட்டம். இதுல நெகட்டிவ் இம்பாக்ட் பத்தி பெருசா சொல்லலியோன்னு ஒரு ஆதங்கம். இதை லேசா டச் பண்ணிட்டு பரிகாரங்களுக்கு போயிரலாம்.

1.சினிமா பின்னணி:
சினிமாவே ஒரு சூதாட்டம் மாதிரி . அந்த காலத்து சாவித்திரியம்மால இருந்து இந்த காலத்துல நயன் தாரா வரை எத்தனையோ சோக கதைகள்.

2.லாட்டரி:
அந்த காலத்துல அண்ணா பூரண மதுவிலக்கை கொண்டு வந்து அதனால் ஏற்படக்கூடிய வருமான இழப்பை ஓரளவுக்காச்சும் ஈடு கட்ட லாட்டரி டிக்கெட்டை கொண்டு வந்தார்.”அடித்தால் வீட்டுக்கு..அடிக்காவிட்டால் நாட்டுக்கு”ன்னாரு

அது என்ன ஆச்சு ? கலைஞர் வழங்கும் இளைஞன் வரை போயாச்சு. லாட்டரி கிங் மார்ட்டின் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகார பூர்வ பத்திரிக்கைக்கு ஒரு கோடி ரூவா டொனேட் பண்ண மேட்டர் லீக் ஆகி திருப்பி கொடுத்துட்டாய்ங்க.

ஆனால் லாட்டரி பைத்தியத்துல திவால் ஆகிப்போன குடும்பங்கள் எத்தனை எத்தனை? ஒரு பெயிண்டிங் காண்ட் ராக்டர்.. இப்பம் அவரே ப்ரஷ் பிடிச்சு பெயிண்ட் அடிச்சிட்டிருக்காரு. காரணம் வந்த பணத்துக்கெல்லாம் லாட்டரி டிக்கெட் வாங்கிட்டு லேபருக்கு லேபர் கொடுக்கலின்னா எவன் வருவான்.
பில்டிங் காரன் கொடுத்த அட்வான்ஸ் பணத்துக்கு டிக்கெட் வாங்கிட்டு மறுபடி மறுபடி காசு கேட்டா எவன் வருவான்?
இப்படி ஆயிரம் கதை இருக்கு. இவிக லவ்ஸ்,தாம்பத்யம்லாம் ராகுவோட இம்பாக்ட். நெகட்டிவ் இம்பாக்ட்.

சாராயம்:
ஒரு மவராசி சென்னையிலருந்து வந்து ஜாதகத்தை கொடுத்து என் பிள்ளைக்கு எப்ப கல்யாணம் ஆகும் பார்த்து சொல்லுங்கன்னுச்சு.
நாம தேன் கில்லர் ஆச்சே. நடந்த உரையாடல் அப்படியே
“யம்மா ..ஏற்கெனவே உனக்கு ஒரு தடவை ஃபுட் பாய்சன் நடந்திருக்கனுமே”
“ஆமாங்க”
“உங்க வீட்டுக்காரருக்கு மெடிக்கல் ரியாக்சன் ?”
“அதுவும் ஆச்சுங்க”
“அவருக்கு நீங்க ஒன்னாவதா ரெண்டாவதா”
“நான் மூனாவதுங்க”
“சரி இந்த ஜாதகத்தை அப்படியே பத்திரமா வச்சிருங்க.. பையனுக்கு முப்பது முடியட்டும் அப்பாறம் பார்க்கலாம்”

இன்னாடா மேட்டருன்னா அந்தம்மாவோட ஆத்துக்காரர் ஏதோ சின்ன சைஸ் அரசியல் வாதி போல. நாலஞ்சு கடை ,பார் எல்லாம் வச்சு கொழிச்சிருக்காரு.
அவரோட ஜாதகத்துலயே ராகு 5 ல கேது 11 ல . ராகு கொடுக்கிற வரை கொடுத்தாரு. மனைவி ஜாதகத்துல 2-8 ,பையன் ஜாதகத்துல எட்டுல நின்ன லக்னாதிபதியோட ராகு .

இன்னம் ஷேர் மார்க்கெட்,ஊக வணிகம், கள்ளக்கடத்தல்,பதுக்கல், ஏற்றுமதி இறக்குமதி, புகையிலை ,ஃபோட்டோகிரஃபி, டூப்ளிக்கேட் தயாரிக்கிறது, ஃபோர்ஜரி டாக்குமென்ட் தயாரிக்கிறது இப்படி பலதும் இருக்கு. இந்த பின்னணியில உள்ளவுக காதலிச்சா என்ன ஆகும்?

ஆளை உருக்கும். இல்லின்னா ஊளை சதையை பெருக்கும். சந்தேக புத்தி வந்துரும். ஒருத்தர் மேல ஒருத்தர் விஷ பிரயோகத்துக்கு முயற்சி பண்ணுவாய்ங்க.பிரியலாம்.ஆயுள்ஸ்தானம் வீக்கா இருந்தா டிக்கெட்டும் போடலாம்.

இதெல்லாம் ராகுவோட இம்பாக்ட். கேதுவோட இம்பாக்ட்?

ஸ்வாமி நித்யானந்தாவோட கிளு கிளு வீடியோவுக்கு காரண பூதமா இருந்தாய்ங்களே திவ்யாவா பேரு? அப்பாறம் அந்த கில்மா வீடியோல இருந்த நடிகை பேரு என்ன? ஆங் ரஞ்சிதா. இதெல்லாம் கேது காதல்.

ஒரு மவராசி .ஏதோ மூதாதையர் சொத்தா ஒரு மாடி வீடு. ஊட்டுக்காரரு ஒரு பார்ல கேஷியர் (ராகு) இந்தம்மாவுக்கு மந்திர தந்திரம் மேல அதீத நம்பிக்கை. எந்த மந்திர காரன் என்னா சொல்லி உசுப்பேத்தினானோ தெரியாது. ஏற்கெனவே ரெண்டு பெண்குழந்தைகள் இருந்தும் மூனாவதா ஒரு பெண்குழந்தைய கொண்டு வந்து வளர்த்துக்கிட்டிருந்தாய்ங்க. அதுக்கு ராஜோபசாரம். மேஜரானதும் அதும்பாட்டுக்கு அவிக குடும்பத்தோட பேட்ச் அப் ஆகி கண்ணாலம் கட்டி நிம்மதியா இருக்கு.

இங்க என்னமோ ரெவின்யூ இன் கம் சூனியம் (வாடகைல்லாம் ஆறுமாசம் அட்வான்ஸாவே வாங்கி தீர்த்திருப்பாய்ங்க) ஆனால் குறி சொல்றவுக ,மந்திரம் பண்றவுகன்னு ஆரை பத்தி கேள்விப்பட்டாலும் ஒரு பயணம் போகாம இருக்க மாட்டாய்ங்க. இன்னைக்கு சொந்த வீட்டுல இட்லி சுட்டு வவுத்தை கழுவிட்டிருக்காய்ங்க.
இதுவும் கேது காதல்தான். இதுக்கெல்லாம் பரிகாரம் என்னன்னு அடுத்த பதிவுல பார்ப்போம்.உடுங்க ஜூட்டு.