மரணத்தை வெல்ல மரணமே வழி : செவ் தோஷ பரிகாரம்

அண்ணே வணக்கம்ணே !

நாங்கல்லாம் 1987 லயே காலேஜை விட்டு வெளிய வந்துட்டமா .. இதுல 1986 லருந்தே பாடம் நடத்த ஆரம்பிச்சுட்டமா அதுலயும் எட்டாங்கிளாஸ் படிக்கறச்சயே படம் வரைஞ்சு கெட்ட பாடங்க எல்லாம் நடத்தின பார்ட்டி நாம. ( ஹி ஹி .. தோஸ்துங்களுக்குத்தேன்.அதும் கடா குட்டிகளுக்கு தேன்) புதுசா எதையாச்சும் மண்டையில ஏத்தனும்னா ரெம்ப கஷ்டமா கீது. பாடம் நடத்தறது ஒரு வித அவுட்லெட்டுதான் இல்லேங்கலை.

புது மேட்டருன்னா அது ஏற்கெனவே நம்ம மைண்டுல ஸ்டோர் ஆகியிருக்கிற மேட்டருக்கு தொடர்ச்சியா இருந்தாகனும் – அல்லது நெஜமாலுமே மன்சங்க வாழ்க்கைய புரட்டி போடற மேட்டரா இருக்கனும் அப்பத்தேன் அது மண்டைக்குள்ளாற போகுது.

அது சரி திடீர்னு ஏன் இந்த புலம்பலுன்னு கேப்பிக சொல்றேன். நம்முது கடகலக்னமாச்சா நாலுல சனி வந்தப்பத்துலருந்தே தாளி எப்படியாச்சும் வீட்டை விட்டு வெளியேறனும். ஊர் ஊரா சுத்திக்கிட்டு வரனும்னு ஆசை வந்துருச்சு. லேப் டாப்பு – டேட்டா கார்டுன்னு புலம்பிக்கிட்டே இருந்தம். ஒன்னும் வேலைக்காகலை.

சமீபத்துல சனி வக்ரமானாரே அப்பம் நம்ம எண்ணம் கொஞ்சம் கொஞ்சமா செயலாக ஆரம்பிச்சிருச்சு. என்னென்னமோ நடந்து நேத்திக்கு மவ சென்னையில இருந்து புத்தம் புது லேப் டாப் வாங்கியாந்துட்டா. அது என்னா கம்பெனி என்னா இழவு எதையும் இன்னம் பார்க்கலை.( கேட் வேன்னு ஒரு கம்பெனி இருக்கா? – ஏமாந்துட்டமா? )

நம்ம ஆஸ்தான கம்ப்யூட்டர் காரரு கிட்டே ஓ.எஸ் போடச்சொல்லி அனுப்பினேன். அவரு யூத்தாச்சா. விண்டோஸ் 7 போட்டு விட்டுட்டாரு. நாம ஆதிகாலத்துலருந்தே எக்ஸ்பி தேன். கொய்யால கலர் கலரா இருக்கே தவிர கண்ணை கட்டுது.

லேப் டாப்லயா இந்த கீ போர்டுல என்னென்னமோ மாற்றம்லாம் செய்து விட்டிருக்காய்ங்க. நெட் கனெக்ட் ஆகி – நாம வழக்கமா பார்க்கிற சைட்டுங்களை பார்த்தாலும் கொஞ்சம் போல பழகும்னு பார்த்தா ரெம்பவே பே பே காட்டிருச்சு.

அப்பாறம் பொட்டு வச்ச பிறவு ஸ்பார்க் ஆகி லேப் டாப்போட கொடுத்திருந்த டிவிடியில இருந்த ஹார்ட் வேர்ஸ் எல்லாத்தையும் கொத்தா போட்ட பிறவு “கட்டின பசு” (சுஜாதா?)

பொஞ்சாதி முறுக்கிக்கிட்டா கூட சமாளிச்சுரலாம். இந்த கம்ப்யூட்டர் சமாசாரம் மட்டும் லொள்ளு பண்ணா செமை கடுப்பாயிருது.

( ஸ் ..அப்பாடா பந்தா பண்ணாம நாம லேப் டாப் வாங்கின கதைய சொல்லியாச்சு )

இப்பம் பதிவுக்கு போயிரலாமா/

நேத்திக்கு செவ் 7 ல இருந்து பண்ற அழும்பையெல்லாம் சொன்னேன்.அதுக்கு பரிகாரமும் ஓரளவுக்கு சொல்லியாச்சு.

இன்னைக்கு செவ் 8 ல் என்னா மாதிரி அலப்பறை கொடுப்பாருன்னு பார்ப்போம். லேடீஸ் ஃபர்ஸ்ட். இவிகளுக்கு 8 மாங்கல்ய ஸ்தானமாச்சா (அதே நேரம் ஆயுள் ஸ்தானமாவும் ஒர்க் அவுட் ஆகுதுங்கோ. என்னய்யா குழப்பறேன்னு கடுப்பாயிராதிங்க. வேணம்னா இதே வலைதளத்துல ஆண் பெண் வித்யாசம்னு ஒரு தொடர் எழுதியிருக்கேன். அதுல எட்டாம் பாவத்தை தேடி படிங்க புரியும்).

ஆக பெண் ஜாதகத்துல எட்டுல செவ் இருந்தா அவிக உசுரை மட்டுமல்லாது – அவிக ஆத்துக்காரர் உசுரையும் காப்பாத்தியாகனும். 8 = மரணம் ; செவ் = உடனடி மரணம். தெரியும்ல. காதலில் ரெண்டு வகை சைவம் ஒன்னு அசைவம் ஒன்னுன்னு ஒரு பாட்டு இருக்குது.

ஆனால் மரணத்துல மட்டும் அரை டஜனுக்கு மேலான ரகம் இருக்கு. இந்த மேட்டரை ஏற்கெனவே ஒரு தாட்டி செமை ஓட்டு ஓட்டினாப்ல ஞா. இருந்தாலும் புதுவரவுகளுக்காக சுருக்கமா ரிப்பீட்டு.

மரணத்தின் வகைகள்:

1.மன ரீதியிலான மரணம் 2.பண ரீதியிலான மரணம் 3.சமூக ரீதியிலான மரணம் 4.அரசியல் ரீதியிலான மரணம் 5.குடும்ப ரீதியிலான மரணம்.

1.மன ரீதியிலான மரணம்:

இதை எதிராளிகளின் துரோகங்கள் மட்டுமல்ல – நாம செய்ற குடி கெடுக்கும் வேலைகளும் தரலாம். ஒருவன் அடுத்தவனை கொல்லும் போது அவனிலும் ஏதோ செத்துப்போகிறது.

2.பண ரீதியிலான மரணம் :

நம்ம ஊர்ல ஒரு பார்ட்டி . ஏழை பாழைங்க கிட்ட தினசரி அஞ்சு பத்து சேகரிச்சு 100 ஆவது நாள் அதுக்கு உரிய மதிப்பிலான பொருட்களை தருவாரு. தம்மிடம் புரளும் ஊர் பணத்தை பெருக்க ஒரு தடவை ரியல் எஸ்டேட்ல போட்டுட்டாரு. (அது அந்தக்காலமுங்கோ) பணம் டம்ப் ஆயிருச்சு. அதுக்கப்பாறம் எத்தனை குரு -எத்தனை சனி மாறினாலும் மாற்றம்? ஊஹூம்.. நவகிரக தோசங்களுக்கும் அது அல்ட்டிமேட் பரிகாரமாயிருச்சு போல.

கடேசி காலத்துல ஊர் பணத்துல வாங்கி வச்சிருந்த நிலத்தை காசாக்கி அல்லாருக்கும் கொடுத்துட்டுத்தான் போனாரு மன்சன் இல்லேங்கலை. ஆனால் இடைப்பட்ட காலத்தில் அன்னாருக்கு நிகழ்ந்தது பண ரீதியிலான மரணம் .

3.சமூக ரீதியிலான மரணம்

ஒரு அரசியல்வாதிக்கும் -பத்திரிக்கையாளனுக்கும் இடையில என்ன மாதிரி உறவு இருக்கலாம்னு ஒங்க மைண்டுல ஒரு ஐடியா இருக்கலாம்.

ஆனால் ஒரு பார்ட்டி தலீவரு வெளி நாடு போனா தன் பொஞ்சாதியோட கிளம்பிருவாரு. அவிக தங்கற கெஸ்ட் ஹவுஸ்ல வாஸ்து விவகாரமா இருக்குமுங்கோ.. தலீவர் ரூமுக்கும் – பத்திரிக்கையாளர் ரூமுக்கும் இடையில ஒரே ஒரு கதவு இருக்கும். அதை அவிகவிக தாள் போட்டுக்க வேண்டியதுதேன்.

ராத்திரியில .. அந்த கச்சாடால்லாம் நமக்கெதுக்கு. தலீவரு என்னவோ கலக்கிட்டு போய் சேர்ந்துட்டாரு. அவரு ரேஞ்சு அப்படி. ஆனால் அந்த பத்திரிக்கையாளனோட சமூகம்? அதை பொருத்தவரை ஹி ஈஸ் டெட்.அப்படித்தானே

4.அரசியல் ரீதியிலான மரணம்

கலைஞரு தீர்காயுசா இருக்கிறது சிலருக்கு இமிசை .சிலருக்கு ஆறுதல் .ஆனால் இந்த மேட்டர்ல ஒரு சொலவடை இருக்கு .அருத்தம் சொல்லமாட்டேன் “பாபி சிராயு”

ஈழத்துல தமிழின படுகொலை நடந்தப்போ தலைவரு அடக்கி வாசிச்சு ..கொய்யால வயசுல இருந்தப்போ வீணா உ.வ பட்டு ரெண்டு தாட்டி ஆட்சியை இழந்தோம் இப்பம் முதிர்ச்சி வந்துருச்சு போலன்னு தன்னை தானே பாராட்டி கூட இருக்கலாம்.

ஆனால் அது அரசியல் ரீதியிலான மரணம்னு அரசியல் அரிச்சுவடி படிச்சவன் கூட சொல்லிருவான். அப்படி அவரு பொலிட்டிக்கலா டிக்கெட் போட்டுட்டதாலதான் தீர்காயுசா இருக்காரு.

5.குடும்ப ரீதியிலான மரணம்.

பொஞ்சாதி செத்து பிழைச்சு பெத்து போட்டு கிழிஞ்ச நாரா படுத்து கிடக்கா. வீட்டுக்காரரு ஒரு நாலணா பார்ட்டிய தள்ளிட்டு வந்து தெரு நடையில வேலை எடுக்கிறாரு. இதை பார்த்துட்டு அந்த மகராசி நல்ல தங்காள் கணக்கா எல்லா குழந்தைகளையும் இழுத்துக்கிட்டு பச்சை மண்ணை தூக்கிட்டு கிணத்தை தேடி போறா. நல்ல வேளையா சாகலை தான்.

ஆனால் அந்த ஆசாமிய பொருத்தவரைக்கு அந்தாளு குடும்ப ரீதியா செத்து போயிட்டாரு. பிள்ளைங்க தலை எடுத்து அந்தாளுக்கு உட்ட ரவுசை எல்லாம் சொன்னா சிரிச்சு சிரிச்சு வவுறே புண்ணா போவும்.
அதெல்லாம் இன்னொரு சந்தர்ப்பத்துல ..

இது மட்டுமில்லிங்கனா மரணமே போன்றவைன்னு ஒரு பட்டியல் இருக்கு. அதை கீழே பாருங்க..

1.சிறைப்படுதல் 2.தலைமறைவாதல் 3. நிராகரிப்பு 4.பிரிவு 5.அங்கீகாரமின்மை 6.இருட்டு 7. நெருங்கியவர்களை விட்டு வெகு தொலைவில் இருத்தல்

மேற்படி பட்டியல்ல ஏதேனும் ஒன்னு ரெண்டை வாலண்டியரா சூஸ் பண்ணிக்கிட்டு ஓன் பண்ணிக்கிட்டா போதும் செவ்வாய்க்கு டேக்கா கொடுத்துரலாம். இப்பயும் எரியாதவுக நாளை வரை காத்திருங்க.விளக்கி சொல்றேன்.

ஓகேவா ..உடுங்க ஜூட்டு ..