செவ் காரக மனைவிகள்: தீர்வுகள்

goyya 3

அண்ணே வணக்கம்ணே !
சர்தார் வல்லபபாய் பட்டேல் ஒரு லாயர். ஒரு கேஸ்ல வாதம் பண்ணிக்கிட்டிருக்காரு.அந்த சமயம் அவருக்கு ஒரு டெலிகிராம் வருது. அதை வாங்கி பார்த்து -பாக்கெட்ல வச்சுக்கிட்டு வாதத்தை முடிக்கிறாரு. மேட்டரு என்னன்னா அவரோட மனைவி இறந்து விட்டார்.
இதை எல்லாம் படிச்சு இப்டியெல்லாம் கடமையே கண்ணா வாழனும்னு நினைச்ச பார்ட்டி தான் நாமளும். ஆனால் நமக்குன்னு வரும் போது எல்லாமே உதற ஆரம்பிச்சுருது.

எல்லாரும் ஒரே போல வாழ முடிஞ்சுட்டா வல்லபபாய் பட்டேல் கதை ஏன் பாட புஸ்தவத்துல வரப்போவுது -நாம ஏன் அதை படிக்க போறோம்? நிற்க மவளோட டெலிவரில காம்ப்ளிக்கேஷன் -அவளுக்கு பிறந்த மகனுக்கு ஹார்ட் ப்ராப்ளம் -மேஜர் சர்ஜரி எல்லாம் சேர்ந்து நம்மை பேதியாக்கிருச்சு. இதனால இந்த தொடர் கொஞ்சம் காலம் டீல்ல இருந்துருச்சு.

கடந்த வெள்ளியன்று எமன் வாய்ல இருந்து மீண்டு வந்தாப்ல மவ வீடு வந்து சேர்ந்துட்டா -க்ளீன் அண்ட் க்ரீன் ப்ராசஸை கன்டின்யூ பண்ணிக்கிட்டிருந்தம். வெட்ட வெட்ட முளைக்கும்பாய்ங்களே அப்படி எவ்ளதான் டிஸ்போஸ் பண்ணாலும் வந்துக்கிட்டே இருக்குப்பா.. தூத்தெறிக்க.
செவ் காரக மனைவிகளுக்கு பரிகாரங்களை கொடுத்தே ஆகனும்னு இந்த பதிவை ஆரம்பிச்சிருக்கன்.

ஒரு பெண் ஜாதகத்துல செவ் பிரதிகூலமான இடத்துல அமைஞ்சுட்டா அதன் எஃபெக்ட் என்னன்னு கடந்த பதிவுலயே பார்த்துட்டம்.இப்பம் ரெமிடீஸ் பார்ப்போம்.

1.அதி உஷ்ணம்:
இதை சொன்னா அல்லாபத்தி காரவுக சிரிப்பாய்ங்க. ஆனால் நெஜம் பாஸ்..நம்ம உணவுகளில் எதெல்லாம் சூடு, எதெல்லாம் குளிர்ச்சி – நம்ம பாடி கண்டிஷன் கூலா -ஹாட்டான்னு தெரிஞ்சாலே அனேக பிரச்சினைகள் ஓவர்.அதி உஷ்ணம் காரணமா எத்தனையோ பிரச்சினைகள் வரும்.
உ.ம் சொட்டு மூத்திரம், மலச்சிக்கல்,கட்டிகள்,கொப்புளங்கள்,மூக்குல ரத்தம் வர்ரது முதல் மூலம் வரை . இதை ஓவர் கம் பண்ணனும்னா…….
அ) சமையலுக்கு நல்லெண்ணெய் யூஸ் பண்ணலாம் (இது கூட அழகான பேக்ல வர்ர ப்ராடக்டா இல்லாம செக்குல ஆடி பழைய வாட்டர் பாட்டில்ல வர்ர எண்ணெய் சிரேஷ்டம்.
ஆ) கொலஸ்ட் ரால் பிரச்சினை இல்லின்னா நெய் சேர்த்துக்கலாம். கொ.பி.இருந்தா மோர் சேர்த்துக்கலாம்.
இ)அதிக அளவுல தண்ணீர் அருந்தலாம்.
ஈ)சூட்டை கிளப்பும் உணவுகளை தவிர்க்கலாம். உ.ம் கோழிக்கறி,பூமிக்கடியில் விளையும் விஷயங்கள்.
உ)ஃபைபர் அதிகம் உள்ள உணவை சேர்த்துக்கலாம் – நெல்லா வேக வச்சு – மென்று விழுங்கலாம் ( நொறுங்க தின்றால் நூறு வயசாம்ல)
ஊ)ப்ளட் ப்யூரிஃபிகேஷன்ல கான்சன்ட் ரேட் பண்ணனும். உ.ம் அருகம்புல் ஜூஸ் குடிக்கலாம்,ரேப்பிட் ப்ரீத்திங், பிராணயாமம் ,வியர்வை கொட்ட போதுமான உடற்பயிற்சி .

2.மாத விலக்கு சக்கரத்தில் குளறுபடிகள்:
முதற்கண் உடலில் தேவையான ரத்தம் இருந்தா அதது க்ளாக் வைஸ் நடக்கும். பாடில ப்ளட் ஷார்ட்டேஜ் இருந்தா இமிசை தான். இதனால ரத்த விருத்திக்குண்டான நடவடிக்கைகள் முக்கியம். உ.ம் சிகப்பு நிற காய்கறிகள் அதிகம் சேர்த்துக்கலாம். ஹெல்த் ரூல்ஸ் ஃபாலோ பண்ணனும். சரியான -சம விகித- சகால போஜனம்.
இந்த மா.வி.ச குளறுபடிகள் யூட் ரஸ் கேன்சர்ல கொண்டு விட்டுரும்.டேக் கேர் !

3.கோபம்:
கோபங்கறதே பலவீனத்தின் வெளிப்பாடுதான். நிலைமை கை விட்டு போயிருச்சுங்கற போதுதான் கோபமே வரும். தன் மீதான கோபம் பிறர் மீது வெளிப்படலாம். ஸ்ட்ரீட் ஃபைட்ல கவனிச்சு பாருங்க. நோஞ்சானா இருக்கிறவன் தான் மொதல்ல கைய நீட்டுவான்.செமர்த்தியா வாங்கி கட்டிக்குவான். உடல்,மன ரீதியிலான பலவீனங்களை விசாரித்து அறிஞ்சு அவற்றை ரெக்டிஃபை செய்தாலே கோபம் பெருமளவு குறைஞ்சுரும்.
கோபம் நடிக்கப்பட்டால் காரியம் நடக்க கொஞ்சமேனும் வாய்ப்பிருக்கு. நெஜமாலுமே கோபபட்டா? மொக்கை தான்.

4.விரோதங்கள்:
நீங்க ஒருத்தரை விரோதியா நினைக்கிறிங்கனா அவர் கிட்டே உங்களுக்கு நிறைய பிடிச்சிருக்கு.கொஞ்சமே கொஞ்சம் பிடிக்கலன்னு அருத்தம். அவர் கிட்டே எதுவுமே பிடிக்கலன்னு வைங்க பொஞ்சாதியோட போறச்ச குட்டிகளை பார்த்த கணக்கா “ப்ளர்ரா” பார்த்துட்டு முகத்தை திருப்பிக்குவிங்க.
உங்க முன்னேற்றத்துக்கு பலான பார்ட்டி தான் தடைன்னு நினைக்கிறது தப்பு. உங்க முன்னேற்றத்தை தடுக்க முடிஞ்ச ஒரே பார்ட்டி நீங்க தேன். நீங்க மட்டும் தடையா இல்லேன்னா எல்லா தடையும் காதலியோட உதட்டை நோக்கி நகரும் போது எதிர்படும் மேலாடை மாங்கனி தான். ஃப்ரீயா உடுங்க..
அட ஒரு எதிரி உங்களை -ஐ மீன் உங்க இடத்தை காலி பண்ணிட்டான்னு வைங்க.. பெரிய இடத்துக்கு அனுப்பறான்னு அருத்தம்.
எல்லாமே நம்ம பார்வையில தான் இருக்கு ப்ரோ !

5.நெருப்பு:
தீக்குள் விரல் வைத்தேன் நந்தலாலான்னு பாரதி பாடினாரு. இது ஏதோ அவருக்கு மட்டும் இருந்த நிறைவேறா ஆசை இல்லை, நம்ம எல்லாருக்குமே நெருப்புல விரலை வைக்கிற இன்ஸ்டிங்ட் இருக்கு. அவரு கவிஞருங்கறதால பாட்ல வச்சாரு. நாம ஸ்பாட்ல வச்சுர்ரம்.
இந்த காதல்,கத்திரிக்காய் எல்லாம் நெருப்பு அல்லாது வேறென்ன? ஒவ்வொரு எலக்ட் ரானிக் எக்விப்மென்ட்லயும் ஆன் -ஆஃப் ஆப்சன் இருக்கிறாப்ல ஒவ்வொரு உசுருலயும் தன்னை காப்பாத்திக்கற இன்ஸ்டிங்டும் இருக்கும் ,தன்னை கொன்னுக்கற இன்ஸ்டிங்டும் இருக்கும்.
இதெல்லாம் சைக்காலஜி.
கியாஸ் ஸ்டவ் நாபை ஆனுக்கு மாத்தினதும் -கொஞ்ச நேரம் அப்டியே விட்டா என்னதான் ஆகும்ங்கற எண்ணம் எல்லாருக்குமே வரும்.ஆனால் செவ் அனுகூலமா உள்ளவிக ஒரு உதறு உதறி ஆஃப் பண்ணிர்ராய்ங்க.

6.சகோதரம்:
ஒரே தாய் -ஒரே தந்தைக்கு பிறந்தாலும் அண்ணன் தம்பி தகராறெல்லாம் சகஜம். எவன் எனர்ஜெட்டிக்கா இருக்கானோ அவன் கான்ஃபிடன்டா இருப்பான் , அண்ணனோ தம்பியோ கெட் ஆன் ஆகும் போது அசால்ட்டா எடுத்துக்குவான்.
எவன் சோனியா இருக்கானோ அவன் தாழ்வு மனப்பான்மையில இருப்பான். கடுப்பாவான். லொள்ளு பண்ணுவான். இங்கே சகோதரம்ங்கறது சக உயிர் தான். ஒவ்வொரு உசுரும் சர்வைவலுக்காக என்னவேணா செய்யும்.அதுலயும் சோனியா இருக்கிற உசுரு?
இந்த செவ் மேட்டர்ல இன்னம் நிறைய மேட்டர் இருக்கு இதுக்கெல்லாம் சொல்யூஷனும் இருக்கு.அடுத்தடுத்த பதிவுகள்ள நிச்சயமா தரேன்.
தொடர்வோம் ..

பிரதமர் அலுவலகம் பதில் தந்தே உட்டது.

மோதிஜிக்கு பல யோசனைகளை 2014 ஜூலை ,16 ஆம் தேதி அனுப்பியது தெரிந்ததே.அதற்கு முன்பே இந்த யோசனைகளை சேஞ்ச் ஆர்க் வெப்சைட்ல வச்சப்ப 169 பேர் சைன் பண்ணி சப்போர்ட் பண்ணாய்ங்க. அவிகளுக்கெல்லாம் நன்றி.

இந்த மேட்டர்ல பி.எம்.ஓ ரெஸ்பான்ட் ஆகலன்னு 2015 ,ஜன ,6 ஆம் தேதி “கொய்யா ! ஸ்டாம்புக்கு காசில்லையாடான்னுட்டு அம்பது ரூவா போஸ்டல் ஆர்டர் அனுப்பினம்.அதுக்கும் நோ ரெஸ்பான்ஸ்.

பிறவு ஜனவரி 31 ஆம் தேதி ரைட் டு இன்ஃபர்மேஷன் ஆக்ட் படி பத்து ரூ. போஸ்டல் ஆர்டர் அவுட் ஆஃப் ஸ்டாக்னுட்டு இருவது ரூ போஸ்டல் ஆர்டர் வச்சு சில கேள்விகள் கேட்டம்.

என்னத்தை கேட்கப்போறம்?

பிரதமருக்கு நான் போட்ட லெட்டர் என்ன ஆச்சுன்னு தான் கேட்கப்போறோம். இந்த மேட்டர்ல பிரதமர் அலுவலக அதிகாரிகள் ஒரு மீட்டிங்கே போட்டு ரோசிச்சாப்ல இருக்கு.

நாம ஆர்.டி.ஐ படி கேள்வி கேட்டது ஜனவரி31. ஆனால் அதுக்கு மிந்தியே காறி துப்பி அம்பது ரூவா போஸ்டல் ஆர்டர் அனுப்பினது ஜனவரி 6.
இன்னைக்கு தந்திருக்கிற பதில்ல ஜனவரி 6 ஆம் தேதி போட்ட லெட்டரையே ( அம்பது ரூ போஸ்டல் ஆர்டரோட) ஆர்.டி.ஐ அப்ளீகேஷனா கணக்கு பண்ணி பதில் கொடுத்தே உட்டானுங்கோ.

கடிதத்தின் சாராம்சம்:
“உங்க அப்ளிகேஷனை உரியவிகளுக்கு அனுப்பினம் . நீங்க ஜூலை 15 ஆம் தேதி நீங்க பிரதமருக்கு போட்ட லெட்டரு பெறப்பட்டு -ரெகார்ட்ல வச்சிருக்காய்ங்க” (ஒரு வேளை வெயில் காலத்துல மொட்டை மாடியில காய வச்சு ஊறுகா போடுவாய்ங்க போல)

நாம அனுப்பினதே ஜூலை 16 தான்.ஆனால் ஜூலை 15ன்னு மென்ஷன் பண்ணியிருக்கானுவ. ஒரு வேளை வெத்திலைல மை போட்டு 15 ஆம் தேதியே பார்த்துட்டாய்ங்களோ?

அப்பல்லேட் அதிகாரியோட பேரு/ஹோதா எல்லாம் கொடுத்திருக்காய்ங்க.ஆனால் அப்பீல் பண்றதா வேணாமானு இன்னம் முடிவு பண்ணல.
இந்த மேட்டரை முக நூல்ல தொடர்ந்து ஷேர் பண்ணிக்கிட்டிருந்தப்போ அங்கன உள்ள ஜூரிங்க -போராளிங்க-தலீவருங்க -அறிவு ஜீவிங்க ஆருமே கண்டுக்கல்ல.

அப்பமே நினைச்சேன்.
அச்சாணியமா பிரதமர் அலுவலகமே பதில் கொடுத்துட்டா இவிகல்லாம் என்ன செய்வாய்ங்கன்னு ..நினைச்சேன். நடந்துருச்சு.

திருப்தி:
1.கடிதம் கிடைத்த தகவல் அஃபிஷியலா பதிவாயிருச்சு.
2.போஸ்டல் ஆர்டர் ஃபார்முலா சக்சஸ். ஆர்.டி.ஐ -ய விட பவர் ஃபுல் போல.ஆனால் ஆர்.டி.ஐ அப்ளீகேஷன் போன பிறவு தான் தோண்டி துறெடுத்து -போஸ்டல் ஆர்டரை கண்டுபிடிச்சிருக்காங்க- அலறியடிச்சு பதில் வந்துருக்கு.
3.இப்பம் “The Ball is not at my court” ஒரு மூனு மாசத்துக்கு பிறவு நம்ம ரோசனைகள் எந்தளவுக்கு அமலாகுதுன்னு பார்த்துக்கிட்டு -பொழுது போகாத சமயம் ஒரு ரிமைண்டர் அனுப்புவம்.

திட்டம்:
அடுத்து பன்னீர் செல்வத்துக்கு அம்பது ரூ அனுப்பலாம்னு இருக்கன்.

எச்சரிக்கை:
இந்த சைட்ல என்னமோ பிரச்சினை போல இமேஜ் போஸ்ட் பண்ண முடியல. மீடியா கேலரியே காணோம்.அதனால முக நூல்ல ஷேர் பண்றேன். சிரமத்துக்கு மன்னிக்கவும்.

ஜாதகம் ஒரு டெபிட் கார்ட்+கிரெடிட் கார்ட்

அண்ணே வணக்கம்ணே !
கனியாத காயை புகை போட்டு பழுக்க வைக்கலாம். தடி கொண்டு அடிச்சு கனிய வைக்கமுடியுமா என்ன? அப்படித்தான் எழுத்தும். அது தானா வரனும். நாமளா முயற்சி பண்ணா அது மொக்கையாத்தான் வரும்.ஆனாலும் ஒரு தொடர்ச்சி விட்டுரக்கூடாதுங்கறதுக்காவ இந்த வரிகளை அடிச்சுக்கிட்டிருக்கன்.
பேசிக்கலா நாம ப்ரொஃபெஷ்னல் ஜோதிடரா இருந்தாலும் -மத்தவிக சொல்றாப்ல கிரகம் கழுத்தை பிடிச்சு கொண்டு போய் தள்ளீரும்னெல்லாம் நாம சொல்றதில்லை (அனுபவம்)

ஒருத்தன் கோழையா இருக்கவும் -இன்னொருத்தன் வீரனா இருக்கவும் ; ஒருத்தன் மோடியா இருக்கவும் -இன்னொருத்தன் முருகேசனா இருக்கவும் அவன் ரத்தத்துல கலக்கற ரசாயனங்கள் தான் காரணம்ங்கறாய்ங்க.இவற்றை சுரப்பவை நாளமில்லா சுரப்பிகள். இந்த சுரப்பிகளை கட்டுப்படுத்துவது ஹைப்போத்தலாமஸ். இதை கட்டுப்படுத்தறது? நம்ம எண்ணம்.

கிரகம் எதைத்தான் மாத்துதுன்னா? எண்ணங்களைன்னு சொல்லிரலாம். மாத்திரும்னும் அடிச்சு சொல்ல முடியல.லேசா அசைச்சுபார்க்கும்னு வேணம்னா சொல்லலாம். நம்ம எண்ணம் வலிமையானதா இருந்தா கிரகம் அசைச்சு பார்த்துட்டு போயிட்டே இருக்கும்.

கிரகத்துக்கு பரிகாரம்னா அது அதன் பலனை தடுத்து நிறுத்தறதா இருக்க முடியாது. லாஜிக் உதைக்குமே. கிரகம் கடவுளின் படைப்பு – கிரகத்தை நிறுத்தினா கடவுளை நிறுத்தின மாதிரி தானே. கல்கியில காழியூரார் சர்ப்ப தோஷமா காளஹஸ்தி போங்கன்றாரு.

காளாஸ்திரி கோவிலுக்கு வர்ர சனத்துக் கிட்டே ஒரு சர்வே எடுங்க அவனவன் வரிசையா வந்துட்டே தான் இருக்கான். ரிப்பீட்டட் ஆடியன்ஸ்.அப்பம் தோஷம் போகவே இல்லையா?

இதெல்லாம் கப்ஸா! நம்பவே நம்பாதிங்க. உண்மையிலயே தோஷம் பரிகாரம் ஆகனும்னா அந்த தோஷத்தோட எஃபெக்டை நீங்க அனுபவிச்சிரனும். என்ன..முன் கூட்டி வாலண்டியரா ட்ரை பண்ணா சோசியல் லைஃப்,ஃபேமிலி லைஃப் டிஸ்டர்ப் ஆகாம அனுபவிக்கலாம்.
இதான் நம்ம பரிகாரத்தோட பெசாலிட்டி.

எவன் ஜாதகத்துலயும் – எந்த கிரகமும் 100 % ஃப்ரூட் ஃபுல்லா இருக்கிறதில்லை . இதான் நம்ம பரிகாரங்களுக்கு அடிப்படை.

என் மவ கேசையே எடுத்துக்கலாம். பத்துல சுக்கிர கேது சேர்க்கை இருக்கு. பியூட்டி பார்லருன்னு ஆரம்பிச்சாள். எதுக்குப்பா ..ஏற்கெனவே சுக்கிரன் பல்பு இதுல பார்லர் வேற எதுக்குன்னு சொன்னம். கேட்டா தானே.

இது மட்டுமா லவ்ஸ் வேற. அப்பங்காரன் ( என்னை தான் சொல்றேன்) ரேஷ்னல் டைப்புங்கறதால சக்ஸஸ் ஆயிருச்சு. கண்ணாலம். தாம் தூம்னு நடந்தது. சீமந்தம் அதுவும் இதே ரேஞ்சுதேன்.இதுல வயசு காரணமா இந்த ஃபேன்சி,லக்சரில எல்லாம் கொஞ்சம் மோகம்.
இப்பம் என்ன ஆச்சு?

ஃபிப்.15 டெலிவரி டேட் கொடுத்து ஆறாம் தேதியே பனிக்குடத்தை உடைச்சு லேசா கீறி பிரசவம் பண்ணிட்டானுவ. கொசுறா கொளந்தைக்கு ஹார்ட்ல ப்ராப்ளம்னு 6 மணி நேரம் சர்ஜரி வேற.

மவ,மாப்ள ரெண்டு பேருமே பத்து தாண்டல. (குரு பல்பு ) ஏதோ ஸ்டுடியோ -பார்லர்னு வச்சு பைசா புரட்ட ஆரம்பிச்சாய்ங்க. ஏரியாவுல ஒரு கெத்து ,பந்தா (குரு =செல்வாக்கு) பொறந்த கொளந்தையும் ஆண் குழந்தை (குரு) , மேலும் குரு =இதயம்.

நான் என்ன சொல்றேன்னா கிரகபலம்ங்கறது ஒரு பேலன்ஸ். அதை ஓவர் ட்ராஃப்ட் இல்லாம மெயின்டெய்ன் பண்ணுங்கங்கறேன்.சனம் கேட்குதா? ஊஹூம். சீமந்தத்துக்கு 3 சவரன் போடுங்கறாரு சம்பந்தி (குரு =ஸ்வர்ண காரகன்)

ஜாதகங்கறது டூ இன் ஒன். அடக்கி வாசிச்சா அதுவே டெபிட் கார்ட், அரக்க பரக்க செலவழிச்சா அதுவே கிரெடிட் கார்ட்.

என்னமோ போங்க பாஸ் ! கர்பமான நாள்ல இருந்தே சி.எம்.சி வேணா -எங்கம்மா கொன்னு போட்ட மவனுவன்னு தலைபாடா அடிச்சுக்கிட்டன்.கேட்கல.
இதுல அஞ்சாம் மாசம் ஜூரம்னு போனா ப்ரெய்ன் ஃபீவரா இருக்கலாம்னு பேதியாக்கி ஒரு 25 ஆயிரம் கலெக்சன் பார்த்துட்டானுவ.

இந்த முறையும் போனது டெஸ்டுக்குத்தேன். பெட் காலியா இருந்ததோ ? தியேட்டர் காலியா இருந்ததோ? இல்லை அந்த வார டார்கெட் ரீச் ஆகலியே போட்டு அறுத்து என் தாலியையும் சேர்த்து அறுத்துட்டானுவ. இதுக்கெல்லாமும் கிரகத்தை காரணமாக்கறது கேணத்தனமில்லையா?
இவ்ளோ அழும்புக்கும் காரணம் என்ன? சி.எம்.சிங்கற எண்ணம். அந்த எண்ணத்தை தந்தது வேணம்னா கிரகமா இருக்கலாம்.ஆக்செப்ட் பண்ணது? மாப்ளையோட ஈகோதானே.இதுக்கும் கிரகத்துக்குமென்ன சம்பந்தம்?

செரி அடுத்த பதிவுல 9 வகை பெண்கள்/மனைவிகள்+பிரச்சினைகள்+பரிகாரம் தொடரை தொரலாம். உடுங்க ஜூட்டு .

செவ் காரக மனைவியர் –பிரச்சினைகள் –பரிகாரம்

IMG_0027

அண்ணே வணக்கம்ணே !
செவ் காரக மனைவி –பிரச்சினைகள் –பரிகாரம் இதான் இன்னைக்கு பதிவு . உங்க மனைவி எந்த கிரக காரகம்னு தெரிஞ்சுக்கனும்னா பழைய பதிவுகளை தேடி பிடிங்க படிங்க.

செவ் காரக மனைவியால்/மனைவிக்கு வரக்கூடிய பிரச்சினைகள் அனேகம் இருக்கு.

சில உபகதைகளை பார்க்கலாம்.

1.கணவர் சர்க்கரை ஆலை சிப்பந்தி. சமைக்கிறச்ச பொஞ்சாதிக்கு நெருப்பு பிடிச்சுருச்சு. அதை அணைக்க இவர் போயி இவருக்கும் மார், கை எல்லாம் வெந்து போச்சு. பொஞ்சாதி டிக்கெட்டு.இவரு சில பல வருசம் கோர்ட்டுக்கு அலைஞ்சாரு.

2.கணவர் கலைத்துறையை சேர்ந்தவர் .பொஞ்சாதி கிரானிக் அனிமிக் பேஷண்ட். தன் வருமானத்துல 90 சதவீதம் பொஞ்சாதி மெடிக்கல் பில்லுக்கே வச்சாகனும்.

3.கணவன் ஈ.பி சிப்பந்தி. பக்கத்து காம்பவுண்ட்ல இவர் மாமா சிகரட் பிடிச்சா இவரை பிடிச்சு ஏறும் பொஞ்சாதி. மாமங்காரன் லேசா சுதி ஏத்திக்கிட்டு கூவ ஆரம்பிச்சா இவருக்கு சிவராத்திரி. கடேசில சொந்த வீடிருக்க வாடகை வீட்டுக்கு போயி அந்த ஆங்க்சைட்டில இவருக்கு ப்ளட் ஷூகர் வந்து போயே போயிட்டாரு.

4.புது பொஞ்சாதி என்னங்க கியாஸ் லீக் ஆகறாப்ல இருக்கு கேஸ் கம்பெனிக்கு சொல்லி விடுங்கன்னாள். நம்மாளு அதை டீல்ல விட்டுட்டான். சிறு தீ பெருந்தீ ஆகி டைவர்ஸ் வரை போயிருச்சு.

5.ஒரு ஹவுஸ் ஓனர் .தன் வீட்டு கரண்டு பில்லை குடித்தனக்காரவிக தலையில போடறதுல ஜித்தன். ஒன் டே அன்னாருக்கு ஓப்பன் ஹார்ட் சர்ஜரி நடந்தது.

இன்னும் ஆயிரமாயிரம் கதை இருக்கு. சுருக்கமா சொன்னா செவ் காரக பெண்ணுக்கு /அந்த பெண்ணால் செவ் காரக பிரச்சினைகள் வரும்.

அதென்ன செவ் காரக பிரச்சினை?

ரத்தம் எரிச்சல்,கோபம்,உஷ்ணம் தொடர்பான பிரச்சினைகள்.

ரத்தம் போதாம இருக்கலாம். (மாத விலக்கு சக்கரம் அவுட் ஆஃப் ஆர்டராயிரும்) அல்லது ரத்தத்துல எதுவோ போதாம இருக்கலாம். (ஹீமோ குளோபின்/ வெள்ளை அணுக்கள்) அடிக்கடி மூக்குல ரத்தம் வரலாம், பைல்ஸ் இருக்கலாம். ப்ளட் ஷூகர், பிபி வரலாம்.

ரத்த சுத்திகரிப்பில் பிரச்சினை இருந்து வீசிங் வரலாம், கட்டி ,கொப்புளம் வரலாம். இதெல்லாம் ரத்தம் தொடர்பானவை .

அல்சர்,பெப்டிக் அல்சர் வரலாம். உள்ளங்கையில் எரிச்சல்,உள்ளங்காலில் எரிச்சல் வரலாம். இதெல்லாம் எரிச்சல் தொடர்பானது.

கோபத்துல தனக்கு தீங்கு விளைவிச்சுக்கலாம், பிறருக்கு தீங்கு விளைவிக்கலாம். வீட்டை விட்டு வெளியேறலாம், மஹிளா ஸ்டேஷனுக்கு போயி ரிப்போர்ட்டு கொடுத்துரலாம். இதெல்லாம் கோபம் தொடர்பானவை.

வீட்ல ஷாக் சர்க்யூட் நடக்கலாம்,தீ விபத்து நடக்கலாம்,வாகனவிபத்துல சிக்கலாம்.

அக்கம்பக்கம் உள்ளவிகளோட வாய் சண்டை கைச்சண்டையாகி போலீஸ் ஸ்டேஷன் வரை போகலாம்.

புருசங்காரனுக்கு தெரியாம தன் அண்ணன் தம்பிகளுக்கு ஏறப்போட்டு அதுல சிக்கல் வரலாம்.

சின்ன வயசு பசங்களோட வெள்ளந்தியாவோ –வில்லங்கமாவோ பழகலாம். அதனால பிரச்சினை வரலாம்.

போலீஸ், மிலிட்டரி,ரயில்வே, ஈபி குடும்பத்தாரோட தகராறு வரலாம்.

புருசங்காரனுக்கு தெரியாம வீட்டுமனைக்கு தவணை கட்டி ஏமாறலாம்.

முணுக்குன்னா கோபம் வந்து தலையை கிரோசின்ல நனைச்சுக்கிட்டு தீ வச்சுக்கலாம்.

அல்லது மணிக்கட்டுல ப்ளேட்ல கீறிக்கலாம். ஆடுமாடு முட்டிரலாம். இப்படி பல பிரச்சினைகள் செவ் காரக மனைவியால் வர வாய்ப்பிருக்கு.

செவ்வாய்னா என்ன நவகிரகத்துல ஒரு கிரகம் அவ்ளதானேன்னிராதிங்க. நம்ம மக்கள் முதல்வர் இருக்காய்ங்க. அவிக ஜாதகத்துல சுக்கிரன் உச்சம். கலைஞர் மாதிரி மானாட மயிலாட ரசிச்சுக்கிட்டு லைஃபை எஞ்ஜாய் பண்ண வேண்டியதுதானே. நெவர்.

அவிக கோபத்துக்கு பயப்படாதவனே கிடையாது. அந்த கோபத்தை தங்களுக்கு சாதகமா பயன் படுத்தி இடை தரகர்களாகி பலரும் சில காலம் ஆதாயமடைஞ்சதையும் நாடு பார்க்குது.

ஏன் இந்த நிலை? அந்தம்மாவுக்கு செவ் 2ல் நின்று (நீசமா) எட்டை பார்க்கிறாரு.

செவ்வாய்க்குரிய கடவுள் முருகன். இவருக்கு இன்னொரு பெயர் குமார சுவாமி. இப்பம் சொ.கு வழக்கை விஜாரிக்கிற ஜட்ஜய்யா பேரும் குமார சுவாமியாம். என்னமோ போங்க.

அட இந்த முருகேசனையே எடுத்துக்கங்க. மம்மியோட ஆள்,அம்பு,படைகளோட ஒப்பிட்டா நாம அவிக கால் தூசுக்கு கூட ஆகமாட்டோம்.

ஆனால் நம்மால ஒரு வில்லங்கம் புதுசா வந்திருக்கு மம்மிக்கு.ஆமாங்ணா நாம கார்டன்,ஜெயில்,மறுபடி கார்டன்னு துரத்தி துரத்தி லெட்டர் போட்டுக்கிட்டிருந்தமா ..எல்லாம் தமிழ் நாட்டோட இழி நிலைய மாத்தற தீர்வுகள் பற்றித்தான்.

ஆரும் கண்டுக்கல. என்ன ஆச்சு? ச்சும்மானாங்காட்டியும் -போது போகட்டுமேன்னு மத்திய அரசுக்கு ஒரு புகாரா அனுப்பினம்.அதை அவிக பர்ஸ்யூ பண்ணி தமிழ் நாடு தலைமை பொறியாளருக்கு அனுப்பியிருக்காய்ங்களாம். ஸ்க்ரீன் ஷாட் கீழே

Modi Vs Lady

மவளோட லோன் மேட்டர்ல இப்டித்தான் புகார் அனுப்பினம் -அது ஏ.பி .சி.எம் செல்லுக்கு வந்ததும் போன் எல்லாம் போட்டு விஜாரிச்சானுவ..
அது ஏதோ பர்சனல் இஷ்யூங்கறதால நாம பெருசா கண்டுக்கல. ஆனால் இது பொது விஷயம் பாஸ் ! கிளிச்சுருவம்ல.

இதுக்கு காரணம் மம்மி ஜாதகத்துல 2 ஆமிடத்துல நின்ன செவ் தான். இவர் தற்சமயம் ராசிக்கு 7 ல். சீக்கிரமே எட்டில் வரப்போறாரு. ஏற்கெனவே ரத்தம் தொடர்பா ஏதும் பிரச்சினை இருந்தா ஒரு ஆட்டு ஆட்டி வச்சிரும்.மம்மி ப்ளீஸ் டேக் கேர் !

மம்மிக்கு நாம அனுப்பின பூரா கன்டென்டும் இங்கே இருக்கு.

ஆருனா புண்ணியாத்மாங்க மானிலகனவுகளை மட்டுமாச்சும் இங்கிலீபீஸுல டப் பண்ணி போட்டா சேஞ்ச் ஆர்க் வெப்சைட்ல ஒரு மனுவா போட்டு நாஸ்தி பண்ணலாம்.

நிற்க கருவுற்றிருந்த என் மகள் வெள்ளியன்று (06/02/2015) இரவு 8.24 மணிக்கு ஆண் குழந்தையை ஈன்றெடுத்தாள் .சுக பிரசவம். தாயும் சேயும் நலம்.
இந்த பதிவுல செவ் காரக மனைவியரால்/மனைவிக்கு வரக்கூடிய பிரச்சினைகளை பார்த்தோம் இதை எல்லாம் ஓரளவுக்கு ஓவர் கம் பண்ணனும்னா என்ன பண்ணனும்? அடுத்த பதிவுல பார்க்கலாம்.