எண் கணித ஆய்வு (2014-2015)

அண்ணே வணக்கம்ணே !
ஆங்கில புத்தாண்டுக்கு தமிழ் மாசம் கூட பிறக்கிறதில்லை. ஐ மீன் சூரியன் கூட ராசி மாறுவதில்லை.ஆனாலும் என்னமோ மாறிப்போச்சுன்னு என்னென்னமோ பண்றாய்ங்க. நாமளும் ட்ரென்ட்ல இருந்தாகனும்ல? அதனால முதற்கண் புத்தாண்டு வாழ்த்துக்கள் சொல்லீட்டு பதிவுக்கு போறேன்.

நம்ம பாஸ்..அதாங்க ஆஞ்சனேயரை பார்த்து ஆரோ இன்னைக்கு என்ன திதி என்ன நட்சத்திரம்னு கேட்டாய்ங்களாம் அதுக்கு அவரு எனக்கு ராம நாமம் ஒன்னை தவிர வேற ஏதும் தெரியாது போய்யான்னிட்டாராம். அந்த ரேஞ்சுக்கு போன பிறவு எண் கணிதம் என்ன, கிரக ஸ்திதிகள் கூட ஒன்னும் செய்யாது.
ஆனால் நம்மை பொருத்தவரை சொந்த வாழ்க்கையில வீடு,வாசல்,வண்டி ,வாகனம்னு லோகாயத லட்சியங்கள் ஏதும் இல்லின்னாலும் – நாட்டை பொருத்தவரை ஒரு சபலம் இருக்கு. எல்லாத்தையும் சரி பண்ணிரனும். சனத்துக்கு லோகாய வாழ்க்கையில சிக்கல்களே இருக்க கூடாது. அப்பம் அல்லாரும் ஆன்மீகத்துக்கு திரும்பிருவாய்ங்க. கு.பட்சம் மெஜாரிட்டி ஆஃப் தி பீப்புள் மாறிருவாய்ங்க. சில அப் நார்மல் பீயிங்ஸ் கொஞ்சம் முரண்டு பிடிப்பாய்ங்க. ஆனால் அவிகளும் பெருசா சிரமப்படவேண்டி இருக்காது. காத்து வாக்குல -ஆத்தோட போறாப்ல போயி ஆன்மீக கரையை சேர்ந்துரலாம். அட்மாஸ்ஃபியர் மாதிரி நூஸ்ஃபியர்னு ஒன்னிருக்குல்ல அது சப்ஜாடா மாறீரும்.

நம்ம லோகாயதம்னா நாலு பேரு நம்மை நம்பிக்கையா தேடி வந்து – நல்லது கெட்டது கேட்டு தெரிஞ்சுக்கிட்டு – வாழ்க்கையில முன்னேறி போயிட்டே இருக்கனும் – அவிக கொடுக்கிற சில்லறையில நாம ஏதும் கைமாத்து, கடன், பசி பட்டினி இல்லாம கவுரதையா காலத்தை ஓட்டிரனும் அதுவே யதேஷ்டம்.
இப்படி அப்பாவித்தனமா -அம்புலிமாமாத்தனமா வாழறதாலயோ என்னமோ ஒரு மாதிரியா வண்டி ஓடிக்கிட்டிருக்கு.இது எல்லாருக்கும் சாத்தியமான்னா இன்னைக்கிருக்கிற நிலையில நிச்சயமா சாத்தியமில்லை.

நம்ம ஆப்பரேஷன் இந்தியா 2000 நடை முறைக்கு வந்து -நதிகள் இணைக்கப்பட்டு -கூட்டுறவு பண்ணைவிவசாயம் இம்ப்லிமென்ட் ஆயிருச்சுன்னா ஒரு வேளை சாத்தியமாகலாம். இது சாத்தியப்படனும்னா ஸ்கில் இந்தியா அமலாகனும். இதெல்லாம் நடக்கற காரியமா? தெரியல.
என்னை பொருத்தவரை இந்த நிலைமைலயும் சனம் ஸ்தூல வாழ்க்கைக்காக ஒரு பத்துவருசம் கரெக்டா ப்ளான் பண்ணி உலகத்தோட ஒத்து வாழ்ந்தா போதும் செட்டிலாயிரலாம். பிறவாச்சும் மனசுக்கு பிடிச்சதை (மட்டும்) செய்துக்கிட்டு தேடுதலோட நல்ல வாழ்க்கைய வாழலாம் .அது என்னமோ தெரியல.சனத்துக்கு சலிப்பே வரமாட்டேங்குது.

இந்த கேடு கெட்ட நிலையில திதி,வாரம்,நட்சத்திரம்,கரணம்,யோகம்,ஜாதகம்,கோசாரம்,எண் கணிதம் எல்லாமே ஃபுட் பால் கணக்கா நம்மை அடிச்சு விளையாடிக்கிட்டே தான் இருக்கும்.

மொதல்ல 2014 ஐ எடுத்துக்குவம். கூட்டினா 7 வருது.ஏழுன்னா கேது. வாழ்க்கையே பாம்பு புத்தண்டை தலை வச்சு படுத்த கணக்கா ஆயிரனும் (மோதி ஆட்சி இப்படித்தான் போயிட்டிருக்கு) பாம்பு எப்ப வெளியவருமோ கொத்திருமோன்னே காலத்தை ஓட்டிட்டம். ஏழுன்னா கண்ணாலம்,காட்சி இல்லாத “சன்யாசி”னு அருத்தம். கேது வெளி நாடுகளை காட்டும். மோதி சாப் அப்பப்போ இந்தியா வந்து போறாரு அவ்ளதான். கேது நிம்மதியற்ற தன்மை,பாதுகாப்பற்ற தன்மையை காட்டும் கிரகம். ( நாட்டு நிலைமையும் அப்படித்தான் இருக்கு)

செரி 2015 எப்படி இருக்கும்னு கேட்பிங்க.சொல்றேன். இதை கூட்டினா 8 வருது .இது சனி காரகம். சனி கர்மகாரகன். நாம பண்ண கர்மங்களுக்கெல்லாம் (பாவ செயல்கள்) பலனை கொடுப்பவர். அய்யோன்னாலும் அம்மான்னாலும் விடமாட்டாரு.

அதுவும் எப்பூடி? அவனுக்கு அதை செய்தம் -அதனால இது நமக்கு நடந்திருக்குன்னு நீங்களே டாலி பண்ணிக்கிற அளவுக்கு பலனை கொடுப்பாரு.
உப்பை தின்னவுகல்லாம் தண்ணி குடிச்சே ஆகனும். தப்பு பண்ணவிகல்லாம் தண்டனை அனுபவிச்சே ஆகனும்.நீண்ட காலமா நிலுவையில் இருந்த லாங் டெர்ம் ப்ராஜக்ட்ஸ் துவங்கி வேகமா நடக்கும். சந்தடி சாக்குல நதிகள் இணைப்பு திட்டத்தை கூட தூசு தட்டலாம்.

உழைப்பாளிகள் உழைப்புக்கேற்ற பலனை பெறுவர். ஆனா சனி விருச்சிகத்துல இருக்கிறதால போராட்டம்,துப்பாக்கிச்சூடு ,வன்முறை இத்யாதிக்கு பிறகு தான் இந்த பலன் கியைக்கும்.

ச்சொம்மா ஃபோட்டோவுக்கு ஃபோஸ் கொடுத்து ,கேமராவ பார்த்து சிரிக்கிறவுகளுக்கு டங்குவார் அந்துரும். அப்பு கமல் மாதிரி ஸ்கேட்டிங் பண்ண வேண்டி கூட வரலாம்.

விவசாயம், தொழில் துறை ஐரன்,ஸ்டீல்,ஆயில்,கிரானைட்ஸ்லாம் சனி காரகம் தான்.ஒளுங்கு மருவாதியா வெட்டிப்பேச்சை எல்லாம் விட்டுட்டு இந்த மேட்டர்ல கவனம் செலுத்தினா அல்லாருக்கும் நல்லது. இல்லின்னா நமக்கு ஏன் பொல்லாப்பு. அம்பேல்

செம மேட்டரு : 12 (ஆறாம் பாவம் )

DSC_8123
அண்ணே வணக்கம்ணே !
கடந்த பதிவுல சொன்னது ஞா இருக்கலாம். நம்ம ஜாதகத்துல ஆறாம் இடத்துக்கு குரு அதிபதி.இவர் உச்சம். இந்த பாவம் தரும் சத்ரு ரோக ருண உபாதைகளை பற்றி நான் அல்லாது வேறு ஆரு சொல்ல முடியும்?
இத்தனைக்கும் மேற்படி குருவே 9க்குடையவர்.  நம்ம ஜாதகப்படி  கடனே மூலதனம், எதிரியே சொத்து , நோயே வழி பாடு.ஆனாலும் கொஞ்சம் நஞ்சமா படலை பாஸ் !
அனுபவத்துல சொல்றேன். எதிரியா மன்னிச்சுருங்க ,கடனா வாங்கவே வாங்காதிங்க.கொடுக்கவே கொடுக்காதிங்க. நோயா வரட்டும் பார்த்துக்கலாம்.
எதிரிகளை செயிக்க திட்டத்துக்கு மேல திட்டம் போட்டப்பல்லாம் அவிக செயிச்சாய்ங்களே கண்டி நாம செயிக்கல. எப்பம் ப்தூ போ ! ன்னு விட்டுட்டமோ ..அவிக கதை கந்தலாயிருச்சு. உபகதை வேணம்னா டஜன் டஜனா சொல்றேன்.
கடனும் இந்த கேட்டகிரி தான். நாம ஆருக்கிட்டே கடன் வாங்கறமோ அந்த பணம் நம்ம கையில இருக்கிறவரை (ஐ மீன் திருப்பி கொடுக்காதவரை ) நம்ம ராசிக்கு சோசியம் பார்க்கிறத விட கடன் காரன் ராசிக்கு சோசியம் பார்த்தா பக்காவா சூட் ஆகும். அவன் கருமம் மொத்தத்தையும் நாமதேன் அனுபவிக்கனும்.
நம்ம கிட்டே கடன் வாங்கிக்கிட்டு திருப்பி தராம பாய்லா காட்டறாய்ங்களே அவிக தான் உண்மையான தியாகிகள். நம்ம கருமத்தை எல்லாம் வாங்கிக்கிட்டு நமக்கு ரிலீஃப் தர்ர தியாகிகள்.
நோய்ங்கறிங்களா? எப்பவோ ஒரு காலத்துல இமிசை கொடுத்த வீசிங் தவிர நோய்னு வந்ததே கிடையாது.ஆனால் ஊரைசுத்தி கடன், குண்டிய சுத்தி சத்திராதிங்க. இப்பம் (ஐ மீன் 2007 க்கு பிறவு) உலகத்துல உள்ள நோய்களின் அறிகுறிகள் எல்லாம் தினம் தினம் ஒவ்வொன்னா வெளிப்படுது. ஆனால் கடன் இல்லை. இந்தியன் வங்கில மவளுக்காவ லட்ச ரூவா லோனுக்கு ட்ரை பண்ணது நெஜம் தான்.ஆனால் ஆத்தாவே வேண்டான்டா ராசான்னு ஆப்படிச்சுட்டா. (நிம்மதி)
எதிரிங்கறிங்களா? ரசினி காந்து,மம்மி,மோதி மட்டுமில்லை அவிகளோட கடை கோடி தொண்டர்கள் உட்பட நம்ம காமெடி பீஸுன்னு டிசைட் பண்ணிட்டாய்ங்க போல ஆரும் கண்டுக்கிடறதில்லை.
இந்த ஆறாமிடத்தை டாக்கிள் பண்ணனும்னா நோய்க்கு ரெடி ஆகி வழி விட்டுரனும் (அது டிக்கெட் போடற நோய்க்கு அறிகுறியா இருக்க கூடாதுங்கோ) , அல்லது தேவையே இல்லின்னாலும் ஒரு கடனை வச்சுக்கிட்டு ட்யூ கட்டிக்கிட்டு வரனும், ஊற வச்சே நாறடிச்சுருவான்னு தெரிஞ்சே எவனுக்காச்சும் கடன் கொடுத்து வைக்கனும்.
யப்பா.. நா டுபாகூரு, டம்மி ,உங்க ஆருக்கும் போட்டியில்லடா சாமீனுட்டு டிக்ளேர் பண்ணி ஒரு ஓரமா விளையாடிக்கனும்.
இதெல்லாம் மானம் உள்ளவன் செய்யற வேலையா என்னால முடியாதுங்கறிங்க. அப்ப என்னாகும்னும் சொல்லனுமில்லியா?
ஒரு பெரீ ஃபைனான்ஸ் காரன்.லைசென்ஸ்ட் கன் வச்சிக்கிற அளவுக்கு சவுண்டு பார்ட்டி. கஷ்டத்துக்கு கடன் வாங்கின ஃப்ரெண்டுக்கு நோட்டீஸ் விட்டுட்டான். மேட்டர் என்னடான்னா அன்னைக்கு ராத்திரியே தூக்கு போட்டு சாவு. ( ஃப்ரெண்ட் இல்லிங்கோ -ஃபைனான்ஸ் காரரு)
மணி மேட்டர்ல பர்ஃபெக்டா இருக்க நினைச்சா இப்டி கூட நடக்கலாம். பார்த்து சூதானமா நீக்கு போக்கா நடந்துக்கங்க வாத்யாரே..
விட்டு கொடுத்தவன் கெட்டுப்போறதில்லை.

செம்ம மேட்டரு: 11 (ஆறாம் பாவம்)

DSC_8111அண்ணே வணக்கம்ணே !
ஆறாம் பாவம் சத்ரு,ரோக,ருண உபாதைகளை காட்டற இடம். இந்த இடம் கெட்டு குட்டிச்சுவரா போகனும்.அப்பத்தேன் யோகம். உதாரணமா இந்த பாவத்துல எட்டுக்குடையவரோ /12 க்குடையவரோ இருக்கனும். அல்லது இந்த பாவாதிபதி எட்டு அல்லது 12 ஆம் பாவத்துல இருக்கனும்.
அப்பவும்   சத்ரு,ரோக,ருண உபாதைகள் சுத்தமா இருக்காதுன்னு சொல்ல முடியாது. வரும் எதிரி முளைப்பான் ஆரோ அறுவடை செய்துருவாய்ங்க. கடன் வாங்குவிங்க தீர்த்துருவிங்க அல்லது கடன் காரன் எமனுக்கு கடன் சொல்ல முடியாம போய் சேர்ந்துருவான். இதே போல தான் வழக்கும்.
தப்பித்தவறி இந்த பாவம் சுப பலமா இருந்தா டங்குவார் அந்துரும். அதாவது படிப்படியா வளரும்.கடன் அஞ்சாயிரத்துல ஆரம்பிச்சு அம்பது லட்சம் வரை போகும். விரோதம் ? கவுன்சிலரோட ஆரம்பிச்சு மந்திரி வரை போகும்.வழக்கு? முன்சீப் கோர்ட்ல ஆரம்பிச்சு சுப்ரீம் கோர்ட் வரை போகும்.
இந்த பாவாதிபதி உச்சமானா என்னாகும்? அதுவும் லக்னத்துலயே உச்சமானா என்னாகும்னா அதுக்கு நம்ம வாழ்க்கையே சரியான உதாரணம்.
வருசா வருசம் ஒருத்தன் கிட்டே சிக்கிர்ரனேன்னு வடிவேலு புலம்புவாரே அப்படி ஆகிப்போச்சு நம்ம பொளப்பு.ஏதோ 1987 முதல் 2007 வரைன்னாலும் ஏதோ ப்ரெட் ஹன்டிங் ,சர்வைவல்னு சொல்லலாம். இப்பம் நமக்கும் வெளி உலகத்துக்கும் சம்பந்தமே இல்லை. ஆனாலும் வருசத்துக்கு ஒருத்தன் கிட்டே சிக்கிர்ரம்.
போன வருசம் ஒரு நடை பிணத்துக்கு அடைக்கலம் கொடுத்து ஒப்பேத்த பார்த்து பொளப்பு நாறிப்போச்சு. இந்த வருசம் கஜினி கணக்கா ஒரு கேரக்டர்.
பால குமாரன் சொல்வாரு “கெட்டவனா கூட இரு ஆனா தத்தியா இருக்காதே”ன்னு.  நாம கெட்டவனா இருந்து புலி மேல சவாரி பண்ணி சட்டுன்னு ஒரு கிளை கிடைக்க தொத்திக்கிட்டு புலிய பள்ளத்தாக்கை நோக்கி ஓடவிட்ட பார்ட்டி.
கெட்டவனா இருக்கிறது அதுவும் கொஞ்ச நஞ்சம் நெல்ல ஜீனோட பொறந்துட்டு கெட்டவனா இருக்கிறது ரெம்ப குஷ்டமப்பா. உள்ளுக்குள்ள ஏதோ ஒன்னு ஞம ஞமன்னிட்டே இருக்கும்.
கொஞ்சம் கெட்ட ஜீனோட ,கெட்டவனாவே தொடர்ந்திருந்தா இந்த லொள்ளுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை. குரு சுபகிரகம்ங்கறதால நம்ம குட்னெஸ் காரணமாவே ஆப்பு வருது.
நான் சொல்லப்போற பார்ட்டி இன்டலக்சுவலா இருந்து லைஃப்ல டைவர்ட் ஆகி தன் தோல்விகளை மறைக்க சீன் போட்டு -சனம் சிம்பதி காரணமா கொஞ்ச காலம் ஏமாறவே சீனை கன்டின்யூ பண்ணிக்கிட்டிருக்கிற பார்ட்டி . இப்பம் ஆரும் ஏமார்ரதில்லை. ரஜினியும்-கே.எஸ்.ரவிகுமாரும் தங்கள் ஃபார்முலா மேல வச்சிருக்கிற நம்பிக்கைய விட தன்னோட சீன் மேல  கூடுதலான நம்பிக்கை அந்த பார்ட்டிக்கு இருக்கு.
அப்பா சர்வீஸ்ல இருக்கச்சொல்லோ டிக்கெட் போட்டுட்டாரு. பெரிய புள்ள இவன். இவனுக்கு அந்த வேலை கிடைக்கனும்.கிடைச்சாலும் செய்ற கண்டிசன்ல இவன் இல்லை.தம்பிக்காரன் தலையால தண்ணி குடிச்சு அந்த வேலைய வாங்கிக்கிட்டான்.
இந்த ஒரே லூப் ஹோலை வச்சுக்கிட்டு இன்னமும் ப்ளே பண்ணிரலாம்னு ப்ளான். இவன் பொஞ்சாதிக்கு பேட் உட்பட தம்பி ஸ்பான்சர் பண்ணிட்டாலும் அரை மணி நேரத்துக்கொரு க்ளைமேக்ஸ் கிரியேட் பண்ணி தாலியறுக்கறது இவன் ஸ்டைல்.
இதுல பேஜாராகிப்போன தம்பிக்காரன் வந்து நம்ம கிட்டே “சாமீ ! இவனை தின்னுட்டு ச்சொம்மா இர்ரா மாசாமாசம் படியளக்கிறேன்னாலும் சும்மா இருக்கமாட்டேங்கிறான்.வீட்ல உட்கார்ந்துக்கிட்டு பொஞ்சாதிய டார்ச்சர் பண்றான். மஹிளா ஸ்டேஷன்,ஃபேமிலி கோர்ட்டுன்னு என்னால அலைய முடியல. காசு நான் கொடுத்துர்ரன். இவனை டெய்லி 9 டு 5 உங்க கிட்டே வச்சுக்கங்கன்னு ரிக்வெஸ்ட் பண்ணான். நாமளும் பல்லாண்டுவாழ்க எம்.ஜி.ஆர் கணக்கா பொறுப்பேத்துக்கிட்டம்.
இருபது நாள் எப்டியோ சமாளிச்சுட்டம். நேத்திக்கு நம்ம புஸ்தவங்களை பதிவு பார்சல்ல புக் பண்ண சொல்லி அனுப்பினம். சாயந்திரமா ரசீதும்-சில்லறையும் கொண்டு வந்தா போதும்னு சொல்லியனுப்பினம்.  நம்மாளு செமர்த்தியான ரெக்லெஸ் பார்ட்டி. இது தாமதமா  நமக்கு ஸ்பார்க் ஆகி வேலை ஆச்சா இல்லையான்னு கிராஸ் செக் பண்றதுக்கு ஃபோன் போட்டா ஃபோனை என்னமோ செய்து வச்சிருக்கு குரங்கு. விடறதில்லைன்னு வீட்டன்டை போய் பார்த்தம்.பொஞ்சாதிக்காரி இப்பத்தேன் போஸ்ட் ஆஃபீஸ் போனாருங்குது .
சரி ஒழியட்டும் வந்தா ரசீதும் சில்லறையும் கொண்டு வந்து சேர்க்க சொல்லுங்கன்னுட்டு வந்துட்டன். ரெண்டு ஃபோனுக்கும் இதோ வரேன்ங்கறான். வந்த பாடில்லை. மூனாவது ஃபோனுக்கு “எதுனா அர்ஜென்டா”ன்னு கூலா கேட்கிறான்.
மன்மோகன் சிங் கணக்கா தீர்ப்பாட்டா வந்து நாளையிலருந்து நின்னுக்கறேங்கறான். மனசை கல்லாக்கிக்கிட்டு ” கொய்யா.. நீ ட்ரான்ஸ்லேட் பண்றேனுட்டு கிறுக்கி வச்சிருக்கிற கருமாந்திரம்லாம் குப்பை. ஒளுங்கு மருவாதியா சாஃப்ட் காப்பி கொடுக்கிற வழி பாரு. இல்லை நான் கொடுத்த காசை எல்லாம் கொண்டாந்து செட்டில் பண்ணு”ன்னுட்டு வந்துட்டன்.
அந்த புடுங்கி டைப்பிங் ப்ராக்டிஸ் பண்ண நண்பர் கிட்டே இருந்து டைப்ரைட்டிங் மிஷின்,மாப்ளை கிட்டருந்து கீபேட் எல்லாம் பிச்சை எடுத்து கொண்டு வந்து வச்சிருக்கம். இதுல டேபை வேற ரெடி பண்ணம். இதெல்லாம் தேவையா?
ஆக ஆறாமிடத்தோட சுபகிரகம் /அதுவும் உச்ச கிரகம் சம்பந்தப்பட்டா எவனோ குடுத்த பிள்ளைக்கு குண்டி கழுவ வேண்டி வந்துருங்கறத மட்டும் சொல்லி இந்த பதிவை முடிக்கிறேன்.
அடுத்த பதிவுல பாய்ண்ட் டு பாய்ண்ட் பார்க்கலாம்.

செம மேட்டரு :10 (ஆறாம் பாவம்)

அண்ணே வணக்கம்ணே !
எந்த யோக  ஜாதகத்துலயும் எந்த பாவமும்/எந்த கிரகமும் 100% ஃப்ரூட் ஃபுல்லா இருக்காது.அதே சமயம் 100% ஆப்பு ஃபுல்லாவும் இருக்காது (தாங்கமுடியாதில்லை) . இந்த யதார்த்தத்தை மனசுல வச்சுத்தான் இந்த தொடரை எழுதிக்கிட்டு வரேன்.
கரும்பு ருசியா இருக்குன்னு வேரோட பிடுங்கிட்டா அடுத்த நடவு கனவாயிரும். அட டீக்கடையில மட்டுமில்லை வீட்ல டீ சாப்டும் போது கூட கடைசியில கொஞ்சம் விட்டுரனும்.இல்லின்னா நாஸ்திதான்.
இதுவரை மொத அஞ்சு பாவங்களை பைசல் பண்ணிட்டம். இன்னைக்கு ஆறாம் பாவம். இது தாய்மாமனையும் -எதிரிய,கடனை  காட்டற இடம். இந்த 3 ஐட்டத்துக்கும் இடையில் உள்ள தொடர்பு என்ன?
ஆரம்பத்துல நம்முதெல்லாம் தாய் வழி சமுதாயம். அப்பா டம்மி பீஸு. தாய்மாமன் தான் கார்டியன். தாய்மாமன் நெல்லா ரன்னிங்குல இருந்து சவுண்ட் பார்ட்டியா இருந்தா அக்கேஷ்னலா நம்ம அம்மா கேட்ட சமயம் வந்து என்ட்ரி கொடுத்து வேண்டியதை செய்து கொடுத்துட்டு பூடுவாரு. இதுக்கு நம்ம ஜாதகத்துல புதன் ஃப்ரூட் ஃபுல்லா இருக்கனும்.
அப்படியே இருந்தாலும் தாய்மாமன் நமக்கு பண்றதெல்லாம் ஒரு கடன் மாதிரி தான். அவருக்கு மண்டை வீங்கின பொண்ணு இருக்கலாம், அவளை கண்ணாலம் கட்டி கடன் தீர்த்தாகனும். கடன் தீர்க்கலின்னா விரோதம் தான் வரும்.
ஒரு வேளை கடன் தீர்க்க மாமன் பொண்ணை கட்டிக்கிட்டாலும் இம்சை.அந்த இம்சையால நோய் பாதிப்பும் வரலாம்.
ஒரு வேளை பல சினிமாக்கள்ள வடிவேலு கணக்கா தண்ட சோறா இருந்து -இலவச இணைப்பா நம்ம அம்மாவோடவே “வாழ” வந்த பார்ட்டியா இருந்தா? நாளைக்கு பையன் படிச்சு பெரியாளாயிட்டா நாம கார்வார் பண்ண முடியாதுன்னு கூட இருந்தே பான்,பீடா,பீடி,சிகரட்,சரக்கு,சூது,சுந்தரிகள்னு நம்மை கெடுத்து குட்டிச்சுவராக்கவும் சான்ஸ் இருக்கு.
இந்த மாதிரி வெட்டியா சுத்தி காசு பணத்தை எல்லாம் வேட்டு விட்டுக்கிட்டிருந்தா கடன் ஆட்டோமெட்டிக்கா வரும்ல. கடன் காரனுக்கு சமயத்துக்கு செட்டில் பண்ணலின்னா விரோதமும் வரும்.இத்தினி ஆட்டம் போட்டா பாடி காட்பாடியாகாம இருக்குமா என்ன? (நோய் பாதிப்பு)
இப்பம் புரியுதா?  தாய்மாமனை ஏன் ஆறாம் இடத்துல சேர்த்தாய்ங்கன்னு? மத்த பாவங்களை பத்தி சொல்லும் போது பாவம் கெட்டிருந்தால்னு ஆரம்பிக்கலாம். ஆனால் இந்த பாவ மேட்டர்ல மட்டும் பாவம் பலம் பெற்றிருந்தான்னு ஆரம்பிக்கனும்.
இது துஸ்தானங்கறதால கெடனும்.கெட்டாதான் யோகம். புரியுதா?
இப்ப சரியா ஆரம்பிக்கிறேன். லக்னாத் ஆறாம் பாவம் பலம் பெற்றிருந்தா கடன்,நோய்,வழக்கு வில்லங்கம்லாம் பெண்டு கழட்டும். இந்த மேட்டர்ல எப்படி சாலாக்கா கழண்டுக்கறதுன்னு விரிவா அடுத்த பதிவுல சொல்றேன்.
முக்கிய அறிவிப்புகள்:
1.தவிக்க முடியாத காரணங்களால் கட்டண சேவைக்கான கட்டணங்கள் மா(ஏ)ற்றப்பட்டுள்ளன. விவரங்களுக்கு இங்கே அழுத்தவும்
2.ராமாயண காலத்துல பெரியார் வாழ்ந்திருந்தா? அப்படிங்கற கற்பனையோட ஒரு திரைக்கதைய ஆரம்பிச்சிருக்கன். தடை வர்ரதுக்குள்ள படிச்சுரனும்னா இங்கே அழுத்துங்க.
3.ரெட் பிக்ஸ் வழியாக வழங்கிய சனிப்பெயர்ச்சி பலனை பார்க்க இங்கே அழுத்துங்க.
4.நம்ம ஆன்மீக முயற்சிகள் பற்றி உங்களுக்கு ஒரு ஐடியா இருக்கும்னு நினைக்கிறேன். 1986 ஜனவரி முதல் ராம  நாம ஜெபம். 2000 டிச.23 முதல் புவனேஸ்வரி அம்மனின் மாயா பீஜத்தை ஜெபிச்சுக்கிட்டிருக்கம். இதை ஆரம்பிச்சு இன்னைக்கு 2014 டிச 23 க்கு எத்தனை வருசம் ? 14 முடிஞ்சு 15 ஆ ? 13 முடிஞ்சு  14 ஆ ? சின்ன கன்ஃபீஸ்.
உடுங்க ஜூட்டு

சனிப்பெயர்ச்சி பலன் (வீடியோ)

ரெட்பிக்ஸ்

அண்ணே வணக்கம்ணே !
புதிய தலைமுறை டிவிக்கு ஆடிஷனுக்கு ஒரு தரம் போனது (பிறவு அந்த ப்ரோக்ராமே ஷூட் ஆகல்ல) உரக்கச்சொல்லுங்கள் ப்ரோக்ராமுக்காக இன்னொரு தாட்டி போய் ஆங்கர் சொதப்பினதால ரீஷூட்டுக்கு கூப்டது.அதுக்கும் போனது -நம்ம பேச்சை எடிட்டர் சாப்பிட்டு ஏப்பம் விட்டது எல்லாம் தெரிஞ்ச கதை தானே.

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் கணக்கா ரெட் பிக்ஸ் காரவுக கூப்டதும் ஒடனே போனம்.இது ஒன்மேன் ஷோ. சனிப்பெயர்ச்சி பலன் சொல்ல கூப்டிருந்தாய்ங்க.

ஷூட் முடிஞ்சு வந்த பிறவும் ஞம ஞமன்னிக்கிட்டே இருந்தது . எங்கே எந்த ……செத்தானோ யு ட்யூப்ல அப்லோட் பண்ணியிருக்காய்ங்க. இங்கே அழுத்தி பாருங்க.

செம மேட்டரு தொடர்ல அஞ்சாம் பாவத்தை எப்டி சமாளிக்கிறதுன்னு இன்னைக்கு சொல்லனும்.சொல்லிர்ரன்.

புத்தி-குழந்தைகள்-பெயர் புகழ்-அதிர்ஷ்டம் (பூர்வபுண்ணியம்) மன அமைதி இதெல்லாம் ஜாதகத்துல அஞ்சாம் பாவத்துல அடக்கம்.இந்த விசயங்கள்ள அடக்கி வாசிச்சா மினிமம் கியாரண்டி கிடைக்கும். இல்லின்னா பல்பு தான்.

1.புத்தி:
கற்றது கையளவு கல்லாதது உலகளவு -லெர்னிங் நெவர் எண்ட்ஸ். எல்லாத்தையும் தெரிஞ்சுக்கிட்டா நிம்மதி போயிரும். புளியமரத்து கீழே எந்த செடியும் வளராதாம்.அது போல நம்ம குழந்தை குட்டில்லாம் இருட்டுக்கு போயிருவாய்ங்க. சரித்திரத்துல பார்த்திங்கனா பாபர் -பவர் ஃபுல் பர்சன் . அவரோட மகன் ஹுமயூன் ? டம்மி பீஸு. ஹுமயூன் டம்மியா இருந்தாலும் அக்பர் ஆலமரம் கணக்கா எஸ்டாப்ளிஷ் ஆனவரு. சத்ரபதி சிவாஜியோட மகன் நிலை என்ன?
நீங்க தோத்தாலும் உங்களோட சகல தகுதிகளோட தான் தோக்கறிங்க. செயிச்சாலும் உங்களோட சகல தகுதி இன்மைகளோட தான் செயிக்கிறிங்க.
லைஃப்ல எல்லாமே லாஜிக்கலா இருக்கிறாப்ல தோனும். இது வெறும் தோற்றம் தான். உண்மை என்னன்னா லைஃப்ல லாஜிக்கே கிடையாது.
திராவிட இயக்கம் பிராமண எதிர்ப்பில் சூல் கொண்ட இயக்கம். அந்த இயக்கத்தின் சார்பில் ஒரு பிராமண பெண் முதல்வராவார்னு சொல்லியிருந்தா அன்னைக்கு விழுந்து விழுந்து சிரிச்சிருப்பாய்ங்க. ஆனால் நடந்துருச்சா இல்லையா?

ரஷ்யா சிதறிப்போச்சு,அமெரிக்கா திவாலாயிருச்சு.எதுக்குமே லாஜிக் இல்லை.எதுவுமே நிரந்தரமில்லை. பேசிக்கலா நாம தெரிஞ்சுக்க வேண்டிய மேட்டர் என்னன்னா நம்ம வாழ் நாள் ரெம்ப ஷார்ட்டு. யூத்தா இருக்கிறச்ச சாகிறவரை யூத்தாவே இருப்பம்னு ஒரு பிரமை. காசு பணம் புழங்க ஆரம்பிச்ச வுடனே காலம் எல்லாம் இப்படியே வாழ்ந்துரலாம்னு ஒரு பிரமை .

லைஃப்ல எல்லாமே டெம்ப்ரரி தான். இளமை,காசு,பணம்,புகழ் ,உடல் நலம் எல்லாம் எல்லாம் டெம்ப்ரரி தான். புத்திங்கறது நம்ம பாடிய,மைண்டை ட்யூன் பண்ணிக்க உதவனும். இதுக்கு உதவாத மூளை வேஸ்ட். பாடி,மைன்டை ட்யூன் பண்ணிக்க தெரிஞ்சா காசு பணம் சம்பாதிக்கிறது ஜூஜுபி.

கிடைக்கும் போது அனுபவிக்க புத்தி தேவையில்லை. இழக்கும் போது ஸ்டெடி பண்ணிக்க புத்தி தேவை. இந்த உலகமே ஒரு பஸ் ஸ்டாண்ட் மாதிரி. மரணங்கற பஸ்ஸு எப்பவேணா வந்துரும். அதுக்கு ரெடியா இருக்கனும். ஏதோ கேம்ப் ஸ்டவ் வச்சு சப்பாத்தி சுடலாம்.

நம்ம செயல் திட்டம் கூட இப்படித்தான் ஷார்ட்டா இருக்கனும். நான் கூட டைரக்ட் எலீக்சன் வரட்டும் சனாதிபதியாகி இந்தியாவ வல்லரசாக்கிர்ரன்னு தான் பினாத்திக்கிட்டிருக்கன். ஆனால் நாளைக்கே டிக்கெட்டு போட்டுட்டா?

நம்ம ரேஞ்சுக்கு எந்தளவுக்கு நாலேட்ஜ் தேவையோ அதை மட்டும் சேகரிச்சுக்கறது பெட்டர். டூ மச் ஈஸ் ஆல்வேஸ் பேட். பல நேரங்களில் அறியாமையே நிம்மதி தரும். உ.ம் மோதி குசராத்தை டெவலப் பண்ண மாதிரி இந்தியாவ ஹோல்சேலா டெவலப் பண்ணிருவாரு.

குழந்தைகள்:
என்ன தான் பாசம் ,கீசம்னு பம்மாத்து பண்ணாலும் அம்மாவுக்கு தன்னை மலடி பட்டத்துலருந்து காப்பாத்தினதால ஒரு பாசம், அப்பன் காரனுக்கு தன் ஆண்மைய நிரூபிச்சதால பாசம் இல்லாம இருக்காது. குழந்தைங்கறது உங்கள் வாயிலா இந்த பூமிக்கு வந்த புதிய பிரஜை. ஆஃப்டர் ஆல் ஒரு சர்ட்டிஃபிக்கேட் கணக்காவா ட்ரீட் பண்றது.

இதுல இன்னொரு சிக்கல் என்னன்னா அவிகளை உங்களோட மறுபதிப்பா பார்க்கிறது. நீங்க ரஜினி நடிச்ச பில்லான்னா உங்க குழந்தை அஜீத் நடிச்ச பில்லா. லூஸ்ல விடனும். அதை விட்டுட்டு அச்சு அசலா அப்டியே தான் எடுப்பேன்னா உங்களால கூட பார்க்க முடியாது.
அடுத்த சிக்கல் உங்க லைஃப்க்கே இன்னொரு இன்னிங்ஸா நினைக்கிறது. என்னால படிக்க முடியல நீ படி.என்னால பாட முடியல நீ பாடு. இதெல்லாம் பை.தனம்.லூஸ்ல விடுங்க.

குழந்தைங்க மேட்டர்ல டிட்டாச்சுடா இருக்கனும்னா ஒரே வழி உங்க நண்பர்-விடோயர்- அவரு துபாய்ல வேலை பார்க்கிறாருன்னு வைங்க. அவர் தன்னோட குழந்தைய உங்க கஸ்டடில வச்சுக்க சொல்றாருன்னு வைங்க. உங்க பிஹேவியர் எப்படி இருக்கும்?

அப்படி பிஹேவ் பண்ணா போதும்.குழந்தையும் உருப்படும் உங்க அஞ்சாம் பாவத்தோட எனர்ஜியும் சேவ் ஆகும். தத்துவம்லாம் சொல்றிங்க. நீங்க மட்டும் மக புராணம் பாடலாமான்னு கேப்பிங்க.

என் மகள் சுயம்பு.ஏழ்மை,பசி,பட்டினி நம்ம பொறுப்பில்லாதனம்,நம்ம எஸ்கேப்பிசம் எல்லாத்தையும் மீறி நின்னு காட்டிக்கிட்டிருக்கா. அந்த வகையில ரெகக்னைஸ் பண்றமே தவிர பெத்தமகங்கற பாய்ண்ட்ல இல்லை.

ஒரு வேளை நாமளே செம சவுண்ட் பார்ட்டியா இருந்து அவளுக்கு க்ளாக் வைஸ் லைஃப் கொடுத்திருந்தா இந்த மவ புராணம்லாம் பந்த்.

பெத்தவுக என்ன நினைக்கிறாய்ங்கன்னா எந்த சாணிய தின்னாவது ரூவா சேர்த்துரனும், ஒரு வீட்டை கட்டிரனும்,பிள்ளைய டாக்டராக்கிரனும். உங்க குழந்தைக்கு அந்த தலை எழுத்து இருந்தா ஆரு தடுத்தாலும் நிற்காது. அதே நேரத்துல அது அழிஞ்சு பழஞ்சோறா போகனும்ங்கற தலை எழுத்து இருந்தா உங்க அட்டாச் மென்ட், நீங்க ஏற்படுத்தி கொடுக்கும் வசதிகள் எல்லாம் அதனோட அழிவை விரைவுப்படுத்தும் தட்ஸால்.

பெயர் புகழ்:
கழுதைன்னாச்சும் காத தூரத்துக்கு பேர் வாங்கனும் -இது பழமொழி. இந்த தகவல் தொழில் நுட்ப புரட்சி உச்சத்துல இருக்கும் இந்த காலத்துல பேரை வாங்கி ஒரு கட்டு கீரை கூட வாங்க முடியாது. ஏன்னா டாப் டென் சர்ச் தினம் தினம் மாறுது. எல்லாருமே ஒரு தினம் பிரபலமாத்தான் இருக்காய்ங்க.
பணம் எப்படி ஜஸ்ட் ஒரு டூலோ – பிரபலங்கறது கூட ஒரு டூல் தான் . அதை வச்சு நீங்க என்ன பண்ண போறிங்க.அதான் முக்கியம். அன்னை தெரசாவும் பிரபலம் தான் நமீதாவும் பிரபலம் தான். இந்த உலகமே அழிவை நோக்கி நாலு கால் பாய்ச்சல்ல ஓடுது. இந்தியாவ பத்தி சொல்லவே வேணா. இதை ஒரு மி.மீ தடுக்கமுடியுமா? ஒரு அரை செகண்டு தாமதப்படுத்த முடியுமா? பிராபல்யத்துக்கு ஆசைப்படுங்க.

உரிய தகுதி இருந்தா பெயரும் புகழும் தானா வரும். தகுதியில்லாம வர்ர பெயரும் புகழும் பைத்தியமாக்கிரும்,முட்டாளாக்கிரும்,பிள்ளை குட்டி உருப்படாம போயிரும். உங்க சொத்தையெல்லாம் அழிச்சுரும்.

உங்க நிலைமை வ.வா.சங்கம் படத்துல சத்யராஜ் கேரக்டர் மாதிரி ஆயிரும்.ஏதோ கடேசி செகண்ட்ல மூளை வேலை செய்து மவளை தனிய குடிவச்சுர்ராரு. இல்லேன்னா என்ன ஆயிருக்கும்.

மேட்டர் இதான்.புரியுதா? குழப்பறேனா?

செம மேட்டரு : 5 ஆம் பாவம்

weep 1

அண்ணே வணக்கம்ணே !
இந்த செனேரியோவுல இதுவரை மொத நாலு பாவங்களை பத்தி ஒப்பேத்தியிருக்கம் (எட்டு பதிவுகள்) இன்னைக்கு 5 ஆம் பாவத்தை பத்தி எழுதனும்.
இதை புத்தி,புத்திர,பூர்வபுண்ணிய ஸ்தானம்னு சொல்வாய்ங்க. மற்ற பாவங்களை போலவே இந்த பாவமும் ஆரு ஜாதகத்துலயும் 100% பலமா இருக்கிறதில்லை.

சுருக்கமா சில உதாரணங்களை பார்க்கலாம்:

எம்.ஜி.ஆர் பிள்ளைகளே இல்லை -ஆனால் புகழ் யதேஷ்டம் ,கலைஞர் வாரிசுகள் அனேகம் .புகழ் ? கேள்விக்குறி தான். ஜெ மேட்டரு தெரிஞ்ச கதை. தத்தெடுக்கறேன்னு இறங்கி பொளப்பு நாறிப்போச்சு.பாடகி சித்திராவோட கொளந்தை நீச்சல் குளத்துல தவறி விழுந்தது ஞா இருக்கா? என்.டி.ஆர் மேட்டர்ல புகழ் யதேஷ்டம். பிள்ளைகள்? ஒரு பிள்ளை சூசைட்,ஒரு பிள்ளை ஆல்க்கஹாலிக்.ஒரு பிள்ளை மென்டல்னு சர்ட்டிஃபிகேட் வாங்கி வெளிய இருக்கு. மத்த பிள்ளைங்க? ஆருக்கும் பெருசா தெரியாது.

நம்ம நண்பர் ஒருத்தரு 1986 ல நம்ம மென்டல் ஸ்டேட்டஸ் என்னமோ அதையே இன்னமும் மெயின்டெய்ன் பண்றாரு. ரெண்டு ஆண் பிள்ளைகள், அதுல ஒன்னு ஆக்சிடென்ட்ல போயிருச்சு.எங்க அப்பா கதைய எடுத்துக்கிட்டா நாலும் பிள்ளைங்க, சொசைட்டில செமர்த்தியான நல்ல பேர்.ஆனால் சின்ன மேட்டருக்கு கூட டென்சனாயி /இலவசமாவே நோய்களை வாங்கி வயசான காலத்துல-ரெம்ப அவசியமான காலத்துல பொஞ்சாதி தவறிப் போயி .
ஆக மொத்தத்துல செமர்த்தியான புத்திசாலிகளுக்கு பிள்ளை இல்லாம போயிரலாம், அல்லது ரெகக்னிஷன் கிடைக்காம போயிரலாம், அல்லது பெருத்த அவமானங்கள் நடக்கலாம். அடி முட்டாள்கள் உலகப்புகழ் பெறலாம் -முத்து முத்தா பிள்ளைகள் பெறலாம். இதெல்லாம் சாய்ஸ்.

பிள்ளைபிறந்த பிறவு ஜாதகருக்கு புத்தி மந்தமாயிரலாம், அல்லது இருட்டுக்கு போயிரலாம். பிள்ளைங்க தவறின பிறகு புத்தி விகசிக்கலாம்.பெரும் புகழ் கிடைக்கலாம். எல்லாமும் ஒரே நேரத்துல கிடைக்கிறது -தொடர்ரது மட்டும் இம்பாசிபிள்.

லேட்டஸ்டா ஒரு அனுபவத்தை சொல்லனும்னா புதியதலைமுறை விவாத நிகழ்ச்சிக்கு கூப்டாய்ங்க. மொத முறை போனம். நாள் எல்லாம் ஷூட் பண்ணிட்டு பிறவு டெக்னிக்கல் ப்ராப்ளம்னு ப்ரோக்ராம் ப்ராட் காஸ்டே ஆகல்ல. மகள் சேஃபா இருந்தா.

அடுத்த முறை மகளுக்கு ப்ரெய்ன் ஃபீவரோன்னு சஸ்பென்ஸுல வச்சு சி.எம்.சில அட்மிட். நாம பு.தலைமுறை ப்ரோக்ராம் ஷூட்டுக்கு போறம் ,மொவம் பேஸ்தடிச்சாப்ல இருக்கு, பொஞ்சாதி செத்தவன் மாதிரியே இருக்கு. நம்ம பேச்சும் எடிட்டிங்குல காலி. ரிசல்ட் என்னன்னா மவ சேஃப்.

ஸ்தூலமா பார்க்கிறச்ச இதெல்லாம் வேற வேற மேட்டருன்னு தோனும் ஆனால் ஜோதிடப்படி இதெல்லாம் ஒன்னுக்கொன்னு தொடர்புடைய விஷயங்கள்.
அறிவை பொருத்தவரை இன்னைக்கிருக்கிற எல்லா ஜூலு வேலைகளும் 1986 லயே நம்ம கிட்ட ஸ்டாக் இருந்தது. மஸ்தா இருந்தது. இன்னம் சொல்லப்போனா நம்ம ஆட்டிட்யூட் ரெம்ப அக்ரெசிவா இருந்தது.ஆனால் ரெகாக்னிஷன் இல்லை.

எப்பம் அப்பா டிக்கெட் போட்டு சோத்துக்கு லாட்டரி அடிக்க ஆரம்பிச்சமோ அங்கருந்து கொஞ்சம் கொஞ்சமா ரெகக்னிஷன் கிடைக்க ஆரம்பிச்சது. மவளை கட்டி கொடுத்த பிறகு (இழப்பு தானே) இன்னம் கொஞ்சம் பெட்டராச்சு.

சரி புத்தி,புத்திரர்கள்,பெயர்,புகழ்,அதிர்ஷ்டம் இதுல எது முக்கியம் எதை விட்டா எதை பிடிக்க முடியும்? இது எப்படி சாத்தியம்?
இதெல்லாத்தையும் அடுத்த பதிவுல பார்க்கலாமா?