ஏழ்மை -வறுமை-இல்லாமை

அண்ணே வணக்கம்ணே !
ஏழ்மை -வறுமை-இல்லாமைங்கற பதிவை பார்த்துட்டு மூனும் ஒன்னுதானடா மூதேவின்னு கடுப்பாயிருப்பிங்க. ஆனால் தமிழ் வளமான மொழி. மேற்படி 3 வார்த்தைக்கும் இடையில் உள்ள வித்யாசத்தையே 3 பதிவா எழுதலாம். ஆனால் நம்ம நோக்கம் தமிழ் மொழியின் இலக்கிய வளம் குறித்த ஆராய்ச்சி இல்லை.

கடந்த 12 நாட்களாக எப்படியோ 12 ராசிகளுக்குமான புத்தாண்டுபலனை அடிச்சு முடிச்சுட்டம். என்னதான் சோதிடம் விஞ்ஞான பூர்வமானது -அனுபவத்துல ஒர்க் அவுட் ஆகுது – நாம சைன்டிஃபிக்காதானே சொல்றோம் -பதிவுகளால பல பேர் பயனடைஞ்சதா சொல்றாய்ங்களே அது இதுன்னு அஜீஸ் பண்ணிக்கிட்டாலும் வெறுமனே சோதிடப்பதிவா போட்டுட்டு போறதுக்கும் -வெறுமனே ஆன்லைன் ஜோதிடத்தொழிலை மட்டும் கவனிக்கிறதுக்கும் ஒரு மாதிரியாத்தான் இருக்கு.

ஜன்ம குரு நம்மை இப்படி ஏகத்துக்கும் “நெல்ல” மாதிரி ரோசிக்க வச்சுர்ராரு போல. இந்த வறுமையை ஒழிப்போம்ங்கறது (கரீபி ஹட்டாவ்) காங்கிரஸோட ஸ்லோகன்.ஏழ்மையை ஒழிக்கிறாய்ங்களோ இல்லையோ ஏழைகளை ஒழிச்சுக்கிட்டே வர்ராய்ங்க.வாழ்க.

வறுமைல்லாம் ஒரு பொருட்டே கிடையாது. பணம் என்ன பெரிய பணம் , மனம் இருக்கனும். விரிந்த மனம் உள்ளவனே பணக்காரன் அது இதுன்னு ஜல்லியடிச்சுரலாம். ஆனால் ப்ராக்டிக்காலிட்டின்னு ஒன்னிருக்கே. உலகமெங்கும் முருகேசன்கள் மட்டுமே அ முருகேசன் போல ரோசிக்கிறவுக மட்டுமே இருந்தா இதெல்லாம் சரி. உலகத்துல இன்ன பிற கேரக்டர்ஸும் இருக்காய்ங்களே. அவிகளையும் ஃபேஸ் பண்ணவேண்டியதா இருக்கே.

உலக மக்கள் ஒரு நாய்க்கூட்டம்.இவிகளுக்கு தேவை பணம்ங்கற எலும்பு. ஒனக்காவ இல்லின்னாலும் -இந்த நாய்ங்க மேல விழுந்து பிடுங்காம இருக்கவாச்சும் ஒரு ஏர் பேக்ல சேர்த்து வச்சுக்க லேசா நாறினாலும் பரவால்லைங்கறது எனக்கு நானே செய்துக்கிட்ட உபதேசம்.

கொய்யால வறுமையை ஒழிக்க ரோசனை சொல்ல உனக்கென்ன தகுதி இருக்குன்னு கேப்பிக. மேக்ரோ லெவல்ல நாட்டு வறுமையை ஒழிக்கவே வல்லரசு கனவுகள் தந்த பார்ட்டி நாம. அந்த கனவுகளை நனவாக்கிற முயற்சியே நம்ம வறுமைக்கும் ஒரு காரணமாயிட்டது நல்ல முரண்பாடு.

1991 லருந்து 2007 வரைக்கும் ( இடையில -அடிக்கடி இடைவெளிகளோட – நாலைந்து வருடங்கள் தவிர ) வறுமைய க்ளோசப்ல,லாங் ஷாட்ல ,மிட்ஷாட்ல இப்படி பலப்பல கோணங்கள்ள பார்த்த அனுபவம் நமக்கிருக்கு. இன்னைக்கும் அதோ அந்த கரையிலருந்து “என்ன ராசா..கூப்டாப்ல இருக்கு”ன்னு வறுமை குரல் கொடுக்கத்தான் செய்யுது. நாமதேன் ஏதோ விளம்பரத்துல தனுஷ் போல காது கேட்காம நடிச்சுட்டு இருக்கம்.

நாம ஃபேஸ் பண்ண வறுமையை அதனோட விவித அளவைகளை இப்பம் சொல்றது அதுக்கு காரணமான நம்ம தவறுகளை பட்டியல் போடறதுதேன்.

நாம பண்ண தவறை ஆரும் செய்து வறுமைய வலுக்கட்டாயமா வெல்கம் பண்ணிரக்கூடாது
ங்கறதுக்காவத்தேன்.

வறுமைக்கு பல காரணம் இருக்கு. அது தொடர ஒரே காரணம் வறுமை நம்ம மைண்ட் செட்டையே மாத்திர்ரது தான். ( அதுக்கு நாம அனுமதிக்கப்படாது -அது முடியாதுங்கறது வேற விஷயம்)

வறுமை வந்து ஷேக் ஹேண்ட் கொடுக்கவும் நாம தான் காரணம். வறுமைக்காக நாம கட்டி வைக்கிற பேனர்கள், வைக்கிற ஃப்ளெக்ஸி போர்டுகள் தான் வறுமைய கூட்டிட்டு வருது.

சைக்கலாஜிக்கலா / சப் கான்ஷியஸா நாம வறுமைய வெல்கம் பண்ணாத வரைக்கும் வறுமை வரவே வராது. அப்படி வந்த வறுமைக்கு நாம பழகிப்போற வரைக்கும் வறுமை தொடரவே தொடராது.

நம்முது மொதல்ல லோயர் மிடில் க்ளாஸ் ஃபேமிலி.அப்பாறம் ஹையர் மிடில் க்ளாஸ் ஃபேமிலியா மாறிட்டு வந்தது. அப்பா கெஜட்டட் ஆஃபீசர். அவரு வெளியூர்ல வேலை செய்துக்கிட்டு இருந்த சமயம் ரெண்டு குடித்தனமா போயிர்ரதால செலவு அதிகமா இருந்தது போல.அவரு உள்ளூருக்கே மாத்தலாகி வந்த பிற்காடு இந்த மிடில் க்ளாஸ் பம்மாத்துகள் ,சுய ஏமாற்றுகள், ஹிப்பாக்கிரசி எல்லாம் அதிகமாயிருச்சு.

இதையெல்லாம் பார்த்து பார்த்து செமை கடுப்பு. கொய்யால இதைவிட ஒரு கூலி,சித்தாளுக்கு மகனா பிறந்திருக்கலாமே வறுமையே இருந்தாலும் அது தன் சுயரூபத்தோட வரும். ஒரு கை பார்க்கலாம். இதென்னடா இது .. வறுமையா..ஹ..எங்களுக்கான்னு சொல்லிக்கலாம்போல பில்டப் இருக்கு. அதாவது குல கவுரவம்,குடும்ப கவுரவம், சொந்த வீடு அப்பாவுக்கு ஆஃபீசர் ஹோதா இத்யாதி. ஆனால் பார்ட் டைமா கோணி வியாபாரம் பண்ற க்ளாஸ் மேட் அருஞ்சுனை பாண்டியன் தன் சொந்த சைக்கிளை பூம்பூம் மாடு மாதிரி அலங்கரிச்சு கொண்டுவரான். வீட்ல ரெண்டு சைக்கிள் இருந்தும் நமக்கு வேணம்னா சைக்கிளுக்கு தொங்கனும். டிவி பார்க்கனும்னா பஜார்ல அப்பாவோட ஃப்ரெண்டான செட்டியார் வீட்டுக்கு போய் பார்க்கனும்.

இந்த இரட்டை தன்மை நம்ம சைக்காலஜிக்கு ஒத்துவரலையா.. அப்பமே நம்ம சப் கான்ஷியஸ் மைண்ட் ஏழ்மைய விரும்பி வரவேற்க ஆரம்பிச்சுட்டாப்ல இருக்கு. ஆனாலும் ஜீன்,வம்சாவளி குண நலன் காரணமா “மிடில் க்ளாஸ்”பாதுகாப்பை விட்டுர்ர தகிரியம் வந்ததில்லை. இது வந்தது 1987 லதேன். அதுவும் தகிரியமா பீடி குடிக்க ஆரம்பிச்ச பிற்காடுதேன் இந்த தகிரியம் ஸ்திரமாச்சு.

கொய்யால சிகரட்டு குடிக்க வசதியில்ல. ஓசி வாங்க -எச்சி சிகரட் குடிக்க மனசில்லை -என் காசுல நான் பீடி குடிக்கிறேன் போங்கடா ங்கோத்தா என்ற சைக்காலஜி. இது வறுமைய நான் சப்கான்ஷியஸா வரவேற்ற கதை.

1991 நவம்பர் வரைக்கும் எப்படியோ போச்சு . இதுக்கப்பாறம் தான் காதல் -கலப்பு மணம். உள்ளூர்ல இருந்தவரை கூட பரவால்லை. சத்தியவேடு – அங்கருந்து தமிழ் நாடு கும்மிடிப்பூண்டி போனம்பாருங்க.அங்கன வறுமைய நெல்லா டைட் க்ளோசப்ல பார்த்தேன்.

மொத மாசம் சம்பளம் வர்ர வரைக்கும் தினசரி ஒரு பாண்டு ரூ10க்கும், சட்டை ரூ 5 க்கு வித்துதேன் நாளை ஓட்டனும். 1989 ல மொத சோசியரை சந்திச்சு 1990 மார்ச்ல ஆஃபீஸ் போட்ட சோசியரா இருந்தாலும் கும்மிடி பூண்டியில பப்பு வேகனும்லா?

மொத மாசம் செக்யூரிட்டியா – அடுத்த மாசம் அட்டென்டரா வேலை பார்த்துட்டு கர்பமாயிருக்கிற பொஞ்சாதிக்கு தடுப்பூசி போட போனா ரேசன் கார்டு கேட்டானுவ .. தபார்ரா அப்பம் பிரசவத்துக்கு இன்னம் என்னெல்லாம் கேட்பானுவளோன்னு பயந்து சித்தூர் வந்தாச்சு.

தெய்வாதீனமா அந்த நேரம் பார்த்து நம்ம மாமன் ஒரு ஆளு ஆஸ்பத்திரியில கிடக்க நாம மொத மொதலா ரத்த தானம் கொடுக்க – பத்து பதினைஞ்சு நாள்ள அந்தாளு டிக்கெட் போட்டுர -சாவுக்கு அப்பா போயிருக்காரு.

அங்கன சாதி சனம் நம்ம ரத்த தானம் பத்தி சொல்ல அப்பாவுக்கு “அடடே நம்ம பையனுக்கு இம்மாம் பேரா”ன்னு ஒரு குஜிலி ஆகி உறவுக்கு கை கொடுக்க வந்துட்டாரு.

அவனவன் எக்கனாமிக்கலா கொஞ்சம் லிஃப்ட் கிடைச்சா போதும் ரிலாக்ஸ் ஆயிருவான். அடுத்து லக்சரிக்கு ப்ளான் பண்ண ஆரம்பிச்சுருவான்.

ஆனால் நமக்கு ? கொய்ட் டிஃப்ரண்ட். தாளி .. சோத்து பிரச்சினை இல்லை.பெருசா ஏதாச்சும் செய்து நம்மை நாம ப்ரூஃப் பண்ணியாகனுங்கற எண்ணம் வந்துரும். அதுக்காவ நம்மை நாம வதைச்சுக்கறது ஆரம்பிச்சுரும்.

வறுமையின் போது வறுமை பிரச்சினை.வறுமைக்கு கொஞ்சம் போல வெட்டு விழுந்து அது தடுமாற ஆரம்பிச்சதும் ஒரே போடா போட்டு முடிச்சுரவேண்டியதுதாங்கற வெறி-அதனால வதை.

எல்லாத்துக்கும் அடிப்படை நம்ம சோசியம் . ஆரம்பத்துல நம்ம டார்கெட் நம்ம படைப்புகளை பத்திரிக்கைகளுக்கு அனுப்பி “லச்சம் லச்சமா ” சம்பாதிக்கிறதுதேன்.

காமெடி ட்ராக்ல கவனிச்சுருப்பிங்க. ( மொத்தமா 25 ரூபா வரும்.அதுல போஸ்ட் மேனுக்கு அஞ்சு ரூபா தரனும் – பத்து வட்டிக்கு வாங்கி செலவழிச்சுக்கிட்டிருக்கேன் எட்செட் ரா)

இந்த பத்திரிக்கைகள் – இலக்கியம் -இடியாப்பம் பற்றிய பிரமைகள் விலக ரெம்ப நாளாச்சு ( அப் டு 1997) அதுக்கப்பாறம் ஆப்பரேஷன் இந்தியா 2000 . இது காரணமா ஒரு 7 வருசம் செமை அல்லாட்டம். சத்திய சோதனையில காந்தி போவாரே ஒவ்வொரு பத்திரிக்கை ஆஃபீஸுக்கா .. அதைப்போல ஃபைல் ஒன்னை தூக்கிக்கிட்டு போகவேண்டியது .பாதிரியார் பரலோக ராஜ்ஜியம் பத்தி சொல்றாப்ல ஆப்பரேசன் இந்தியாவை பத்தி சொல்லவேண்டியது.

அதுக்காவ காசு பணம் வேணாம்னு மடியா இருந்ததில்லை. காசு பணம் வந்ததுமே அத்யாவசிய தேவைகளுக்கு கிள்ளி கொடுத்துட்டு லட்சியபயணத்தை ஆரம்பிச்சுர்ரது. இப்படி மேற்படி ரெண்டு விசயங்கள் ரெம்பவே டிஸ்டர்ப் செய்துக்கிட்டிருந்தது.

நல்லதுக்கோ கெட்டதுக்கோ ஒய்.எஸ்.ஆர் ஜலயக்னம் மேற்கொள்ள நம்ம மனசு அவர் பக்கமா சாய லட்சியம் லங்கோடுல்லாம் கொஞ்சம் பின்னணிக்கு போயிருச்சு.

1991 டு 2004 நாம நாசமா போனதுக்கு காரணம் மேற்படி இலக்கிய வேட்கை ,லட்சிய வெறின்னு சொல்லி முடிச்சுரலாம்.ஆனால் வறுமை நிலை தொடர அது ரெண்டுக்கும் இடையில நம்ம சைட்லருந்தும் பல காரணங்கள் இருக்கு…

அந்த காரணங்கள் மட்டும் தெரிஞ்சா உங்கள்ள பலரும் உசாராயிரலாம்.வறுமைக்கு சிரச்சேதம் பண்ணிரலாம் – கழுவிலேற்றிரலாம். அந்த காரணங்களை அடுத்தடுத்த பதிவுகள்ள பார்ப்போம்.