பைசா -டப்பு -ருப்யா வேண்டுமா?

அண்ணே வணக்கம்ணே !
2009,மே சமயம் ஒரு ஈழ இளைஞர் பேச்சு தமிழ்ல எழுத சொல்லி கேட்டாரு. அதுவரை இலக்கண சுத்தமா எழுதிக்கிட்டிருந்த நாம ரூட்டை மாத்தி பேச்சுத்தமிழுக்கு வந்துட்டம். இடையில சென்னை தமிழ் எப்படி பூந்ததுன்னு தெரியல.புகுந்துருச்சு.

இப்பம் நேயர் விருப்பத்துல “கோவைத்தமிழை” கேட்கிறாய்ங்க. பாக்யராஜ் தமிழ் தானேன்னு கேட்டன்.ஆமாம்னுட்டாய்ங்க. இனி டிவியில பாக்யராஜ் படம் வந்தா விடப்படாது.பதிவுக்கு போயிரலாமா?

சாதாரணமா நம்மாளுங்க தங்கள் ஜாதகத்தை ஜோசியர் கிட்ட கொடுத்ததும் இந்த ஜாதகம் எனக்கு என்ன கொடுக்கும்னு தான் கேட்கிறாய்ங்க. அல்லது இதுபடி எனக்கு என்ன கிடைக்கும்னு கேட்பாய்ங்க. அல்லது தங்கள் ஜாதகப்படி பலானது கிடைக்குமான்னு -பலான வேலை ஆகுமான்னு கேட்பாய்ங்க.

என்ன ஒரு அடிமைத்தனம் பாருங்க. கடவுள் நம்மை அவ்ள கேவலமான நிலையில பிறக்க வைக்கல. ஜாதகம் எழுதறச்ச அய்யரு ஒரு ஸ்லோகம் எளுதியிருப்பாரு.அதான் இது.

“ஜனனீ ஜன்ம சௌக்யானாம் வர்த்தனீ குலசம்பதாம்
பதவீ பூர்வபுண்யானாம் லிக்யதே ஜன்ம பத்ரிக்கா”

பூர்வ ஜென்ம புண்ணியங்களுக்கேற்ப எல்லாம் அமையும்ங்கறது இதன் பொருள். இதை நான் ஏத்துக்கறேன்.ஆனா பூர்வ ஜென்ம புண்ணியங்கள்ங்கறது கரன்சி மாதிரி. அதை ஒரே நாள்ள தீர்த்துர்ரதா? கால முச்சூடுக்கும் வராப்ல மெயின்டெய்ன் பண்றதா?
அதை வச்சு சோஷியல் லைஃப்ல தூள் பண்றதா? டொமஸ்டிக் லைஃப் போதுமாங்கறதெல்லாம் சாய்ஸ். இந்த சூட்சுமம் தெரியாம பிச்சைக்காரவுக மாதிரி ஜோசியர்ங்க கிட்டே மேற்படி கேள்விகளையே கேட்டுக்கிட்டிருக்கம்.

ஜாதகம் என்னவோ வங்கி மாதிரி ,பாவங்கள் என்னவோ கவுண்டர் மாதிரி, கிரகங்கள் என்னவோ டெல்லர் மாதிரி ஒரு ஃபீல். நாம கேட்டதுமே ஜோசியரும் நாட் நாட்லருந்து தான் தன் மண்டையில சேகரிச்சு வச்ச விதிகளை எல்லாம் அப்ளை பண்ணி இதெல்லாம் கிடைக்கும் -இதெல்லாம் கிடைக்காதுனு சொல்றாரு. நாமும் கேட்டுக்கிட்டு வந்துர்ரம்.

கொஞ்சம் சூட்சுமம் தெரிஞ்சா போதும். நமக்கு என்ன தேவையோ அதை பெறலாம். (ஒரே நிபந்தனை அதற்கு சமமான இழப்புக்கு நாம தயாராயிரனும்) இன்னைக்கு சனங்களுக்கு என்னெல்லாம் தேவைன்னு பார்த்தா கல்வி,வேலை,திருமணம்,குழந்தை,வீடு ,சுத்தி சுத்தி இதைத்தான் கேட்கிறாய்ங்க.

இதை விட பணம்,காசு,டப்பு,ருப்யா .. சனத்துக்கு என்னடா நினைப்புன்னா காசிருந்தா எல்லாத்தையும் களட்டிரலாம்.
உங்களுக்கு மேற்படி காசு பணம் டப்பு வரதுக்கு உங்க ஜாதகத்துல வழியே இல்லின்னாலும் வரவழைக்கலாம். இதனுடைய சைட் எஃபெக்ட் என்னாகும் தெரியுமா?

1.வாய் தொண்டை,கண் தொடர்பான பாதிப்புகள் வரலாம் -குடும்பத்துல பிளவு வரலாம்.
2.வயிறு இதயம் தொடர்பான மேஜர் ப்ராப்ளம்ஸ் வரலாம்.
3.பொஞ்சாதிக்கு உடம்பு சரியில்லாம போகலாம்
4.குழந்தையே இல்லாம போயிரலாம்.ஏற்கெனவே இருந்தா அவிகளுக்கு நோய் வரலாம்/ அவிக உங்களுக்கு விரோதியா மாறலாம்.
5.தூர பயணத்துல விபத்து நேரலாம், தொடை எலும்பு முறியலாம்.
6.கெண்டைக்கால் பிசகலாம் ,சுகர் வந்து அதுவரை எடுத்துர வேண்டியும் வரலாம்.

இதெல்லாம் நடக்கக்கூடாதுன்னு தான் கடவுள் – நீங்க நம்பி வணங்கற கடவுள் – நீங்க “கழுவி கழுவி ஊத்தினாலும்” பரவால்லன்னு உங்களுக்கு காசு கொடுக்காம அல்லாட வச்சிருக்காரு.

இதை படிச்சுட்டு அட போய்யா காசும் வேணா -பணமும் வேணாம்னு போயிராதிங்க. இந்தளவு மேஜர் எஃபெக்ட்ஸ் இல்லாம -கொஞ்சம் போல காசு பணம் வரவும் வழியிருக்கு. அதை எல்லாம் அடுத்த பதிவுல சொல்றேன்.

புரட்சிதலைவிக்கு ஒரு பகிரங்க கடிதம்

மாண்புமிகு புரட்சி தலைவி அவர்களுக்கு,
அம்மா !
சட்டமன்ற தேர்தல்களில் வெற்றிக்காக வாழ்வா சாவா என்ற தீவிரத்துடன் போராடிய நீங்கள் வெற்றிக்கு பிறகு அந்த வெற்றியை வழங்கிய சாமானிய தொண்டர்களையும், மக்களையும்,மக்கள் நலனையும் எப்படி எல்லாம்   புறக்கணித்தீர்கள்? ஒரு முறை எண்ணிப்பாருங்கள்.

அல்லும் பகலும் “உழைத்து ” கடந்த ஆட்சியே மேல் என்ற எண்ணத்தை உருவாக்கியிருக்கும் நிலையில் – இருப்பதை விட்டு பறப்பதற்கு பரபரக்கிறீர்கள். இதற்கு உங்கள் “எண்ண ஓட்டம்”புரிந்த அடிப்பொடிகளும் தூபம் போட்டு வரும் வேளையில்  – பெங்களூர் வழக்கு தலை மேல் கத்தியாக தொங்கும் இந்த வேளையில்

மத்திய அரசுடனான மோதல் போக்கால் -ஈழ ஆதரவு போக்கால் கிடைத்த மைலேஜையும் முள்ளி வாய்க்கால் முற்றத்தை இடித்து தள்ளி இழந்து விட்ட இந்த நிலையில் .. இந்த பகிரங்க கடிதத்தை எழுதுகிறேன். அதற்கு முன் என்னை பற்றி சில வரிகள்.

அடிப்படையில் நான் காங்கிரஸ் எதிர்ப்பாளன் .திமுக அனுதாபி. ஆனால் எங்கள் மானிலத்தில் ஒய்.எஸ்.ஆர் அவர்களின் சக்தி வாய்ந்த தலைமை காங்கிரஸ் எதிர்ப்பை கொஞ்சம் மழுங்க செய்துவிட்டது வேறு விஷயம்.

அதே போல் கலைஞரின் குடும்ப பாசம், காங்கிரசுடனான அவரது தன்மானம் சுயமரியாதையற்ற நெடு நாள் கூட்டு,ஈழத்தமிழர்கள் பால் அவர் காட்டிய அலட்சியம் ஆகியன அவரையும் காட்டமாக விமர்சிக்க செய்ய வைத்தது வேறு விஷயம்.

தற்போதைய அவரது பி.ஜே.பி -காங்கிரஸ் எதிர்ப்பு நிலை என் மனதை கொஞ்சம் இளகச்செய்திருப்பதையும் குறிப்பிட்டே ஆகவேண்டும். ( ஆனால் இவர் இந்த நிலையில் எத்தனை நாள் தொடர்வார் என்பதிலும் சந்தேகம் இருக்கிறது.)

இதை எல்லாம் நான் குறிப்பிட காரணம் நான் உங்கள் ஜால்ரா அல்ல என்பதை முதற்கண் தெளிவுப்படுத்தி விடத்தான்.

சமீபத்தில் ராஜ்ய சபா வேட்பாளர்களில் ஒருவரை மாற்றி அறிவித்துள்ளீர்கள். இந்த மாற்றங்களை  நான்  மறுபடி மறுபடி பார்க்கிறேன்.

என் ஊகம் என்னவென்றால் நீங்கள் தனித்தீவாக்கப்பட்டிருக்கிறீர்கள். இருட்டில் வைக்கப்பட்டிருக்கிறீர்கள். உங்களை சுற்றி சுய நலமிகளும் -துரோகிகளும் மட்டுமே இருக்கிறார்கள்.

அதே நேரம் இரண்டு நபர்கள் அல்லது இரண்டு குழுக்கள்/அமைப்புகள் உங்களுக்கு  முரண் பட்ட செய்திகளை தந்து கொண்டிருக்கிறார்கள். என்ன ஒரு பரிதாப நிலை.

உங்கள் முன் உங்களுக்கு  மீண்டும் மீண்டும் மண்டியிடும்   நபர்கள் உங்களுக்கு பின் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை அனுபவ பூர்வமாக தெரிந்து கொண்டேன். தெரிந்து கொண்டு உங்களுக்காக அனுதாபம் கொண்டேன்.

நீங்கள் என்ன மாதிரியான கையறு நிலைகளை சந்தித்து மீண்டு வந்துள்ளீர்கள் என்பதை நான் அறிவேன். நதியை தேடி வந்த கடலுக்கு பிறகும் – எம்.ஜி.ஆர் மறைவுக்கு பிறகும் -சேவல் புறா எப்பிசோடுக்கு பிறகும் – ஆட்சியை இழந்த பிறகும் – ஊழல் வழக்குகள் பாய்ந்த போதும் எத்தனையோ எத்தனையோ டிசாஸ்டர்ஸ். அவற்றிலிருந்து மீண்டு வந்துள்ளீர்கள்.

இதற்கெல்லாம் உங்கள்  தகுதிகள் திறமைகளை விட உங்கள் அரசியல் எதிரிகளின் தகுதியின்மையும்,திறமையின்மையுமே காரணங்களாக அமைந்துள்ளன.

ஆனால் நீங்களும் -உங்களுக்கு லாவணி பாடுபவர்களும் இந்த யதார்த்தத்தை முழுக்க மறந்து விட்டாற்போல் இருக்கிறது.

அவர்கள்  உங்களுக்கு லட்சார்ச்சனை செய்வதும். . நீங்கள் அவற்றை ரசிப்பதும்.. பார்வையாளர்களை தற்காலிக மூல நோயாளிகளாக மாற்றிவிடுகின்றன.

உங்களுக்கு பிரதமர் ஆகும் தகுதி இருக்கிறதோ? இல்லையோ? வாய்ப்பு இருக்கிறதோ இல்லையோ?  மூன்றாம் நபராகிய நான் – எவ்வித லாப நோக்கும் இல்லாமல் பிரதமர் பதவிக்கான களத்தில் உங்கள் கைவாளாக  -குறைந்த பட்சம் கேடயமாக சுழல வல்ல ஒரு ஆயுதத்தை சபா நாயகர் அலுவலகத்துக்கு அனுப்பினேன்.
ஆம்.. அந்த வாள்  இந்தியாவின் அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்க வல்ல எனது திட்டம். .

1986 முதல் 1997 வரையிலான எனது உழைப்பில் தீட்டப்பட்ட திட்டம்.
அடுத்து என் வாழ்விலான 7 வருடங்களை தின்று விட்ட திட்டம். என்னை வறுமைக்கும் -பசிக்கும் தின்ன கொடுத்த திட்டம். அன்றைய ஆந்திர முதல்வருடன் என்னை போராட செய்த திட்டம்.
அதனை அதுவும் 234 பிரதிகளை  கூரியரில் தான்  அனுப்பினேன்.(சாதா தபாலில் அல்ல) இதற்கெல்லாம் ஒரு ரெஜிஸ்டர் போல ஏதாவது இருக்கலாம்.

அது குறித்த என் கோரிக்கைகள் மூன்று
1.மேற்படி பிரதிகளை .சட்டமன்றத்தில்  அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் கிடைக்க செய்தல்.அது குறித்து சிறிய விவாதம் நடக்குமாறு செய்தல்
2.ஒரு தீர்மானம் போடப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்புதல்
3.உங்கள்  பாராளுமன்ற தேர்தல் அறிக்கையில் சேர்த்தல்

அரசியல் சாசனம் அந்த பதவிக்கு எத்தனை எத்தனை அதிகாரங்களை அள்ளி வழங்கியிருந்தாலும் சபா நாயகர் என்பவர் உங்கள் வீட்டுகொலு பொம்மை.
ஆனால் அந்த கொலு பொம்மைக்கு உங்கள் மீது எத்தனை அக்கறை என்றால் 2013 மார்ச்சில் அனுப்பப்பட்ட 234 பிரதிகள் பற்றிய தகவல் கூட தங்கள் பார்வைக்கு வைக்கப்படவில்லை.எம்.எல்.ஏ க்களுக்கு வழங்கப்படவில்லை. விவாதம்? தீர்மானம் ..உங்கள் தேர்தல் அறிக்கையில் சேர்க்கவும் படவில்லை.

இது போன்ற பொம்மைகளைத்தான் இன்னும் உங்கள் கொலுவில் வைத்திருக்கிறீர்கள் என்பதும்அந்த பிரதிகளை சபா நாயகர் அலுவலகத்து  அதிகாரி ஒருவர் தீவிரமாக அடைகாத்து வருகிறார் என்பது மட்டும் புரிகிறது.
சரி ஒழியட்டும் .. இந்த சங்கதியை உங்கள் தனிப்பிரிவுக்கு அனுப்புகிறேன்.அவர்கள் மேல் நடவடிக்கைக்காக “கட்சி அலுவலத்துக்கு அனுப்புகிறார்கள்”

கட்சி அலுவலகமோ பொறுப்பாக யாரிடமோ கொடுத்து அடை காக்க செய்திருக்கிறது. சீக்கிரமே குஞ்சு வெளிவரும் போல.

இந்த சங்கதியை தங்களை நேரில் சந்திக்கும் “வாய்ப்பு” பெற்ற வீணை காயத்ரி அவர்களுக்கு தெரிவிக்கிறேன். அதன் பிறகும் எந்த முன்னேற்றமும் இல்லை.
சரி ..அம்மா சிங்கம். அம்மாவின் குகையில் சிங்கங்களுக்கு மட்டுமே இடம் இருக்கும்.  அம்மாவின் இல்ல முகவரிக்கு அனுப்பினால் அம்மா பார்வைக்கு நிச்சயம் போகும்  ஏன் என்றால் அங்கு விசுவாசிகளே இருப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் மீண்டும் 234 பிரதிகளை அதே கோரிக்கைகளுடன் தங்கள் இல்ல முகவரிக்கு அனுப்பினேன் ( செப்ட ,2013)

அதையும் சீண்டுவார் இல்லை. உங்கள் மூக்குக்கடியில் நடப்பதே உங்கள் பார்வைக்கு வருவதில்லை எனும் போது .. யாரோ ஒரு ராஜ்ய சபா வேட்பாளர் பற்றிய  உண்மையான தகவல் உங்களுக்கு  எப்படி கிடைக்கும்.
Really I pity of you.

வே மதிமாறன் – மாறன்கள்.. தினகரன். மூவர் தூக்கு..ராஜிவ் கொலை – பதில். « கன்னிமரா லைப்ரரி

வே மதிமாறன் – மாறன்கள்.. தினகரன். மூவர் தூக்கு..ராஜிவ் கொலை – பதில். « கன்னிமரா லைப்ரரி

ஆரையும் நம்பாதிங்க : என்னையும் சேர்த்துதேன்

அண்ணே வணக்கம்ணே !
பேச்சாளர்கள்,எழுத்தாளர்கள்,சிந்தனையாளர்கள்,புரட்சியாளர்கள் மேல எல்லாம் நமக்கு பெருசா மருவாதி இல்லிண்ணே.ஏன்னா எல்லாம் ஃப்ரெஷ்ஷாத்தான் புறப்படறாய்ங்க. புரட்சி கரமாத்தான் வர்ராய்ங்க. ஒரு கட்டத்துல யதார்த்தம் பல்லிளிச்சதும் டைல்யூட் ஆயிர்ராய்ங்க.மாறிர்ராய்ங்க.

இந்த சோ ராமசாமியாகட்டும், ஜெயகாந்தனாகட்டும் எல்லாருக்குமே ஒரு அற்புதமான ஆரம்பம் இருக்கு. அவிக லட்சிய வெறி-சோதனை – மசாக்கிசத்துக்கெல்லாம் ஒரு எல்லை இருக்கு. அதை தாண்டினதும் காம்ப்ரமைஸ் ஆயிர்ராய்ங்க.

எங்கயோ ஏன் போறிங்க? நம்மையே எடுத்துக்கங்க. “எமக்கு தொழில் கவிதை -நாட்டுக்குழைத்தல்”னு இருந்தம்- வவுத்து பொளப்புக்காக ஜோதிடம். இதையாச்சும் மன்னிச்சுரலாம். அந்த காலத்துலயே கணியன் பூங்குன்றனார் எல்லாம் முன்னுதாரணமா இருக்காய்ங்க.

தினத்தந்தியில 2007 ஏப்ரல் கடேசி வாரத்துல இருந்து 2009 மே ரெண்டாவது வாரம் வரை குப்பை கொட்டினேன். ஏன்னா யதார்த்தம் அப்படி பயங்காட்டிருது. ச்சொம்மா ச்சொம்மா நாம லட்சியம் அது இதுன்னு சகட்டு மேனிக்கு ரிஸ்க் எடுத்துக்கிட்டிருந்தா பொஞ்சாதி,புள்ள குட்டில்லாம் ஓடிப்போயிருவாய்ங்க. ( போயிட்டாய்ங்க ஒரு தாட்டி 2003 லன்னு ஞா )

ஆக ஓஷோ சொன்னாப்ல எழுதினவன் எழுதினதுமே செத்துப்போயிர்ரான்.அவன் எழுத்து மட்டும் ஜீவிச்சு இருக்கும். ஆக நாம சிந்தனைய,எழுத்தை ,பேச்சை மட்டும் எடுத்துக்கனும். இது ஆரு மூலமா இந்த பூமிக்கு வந்ததோ அவிகளை மன்னிச்சு விட்டுரனும்.
வாத்யாரு கூட “அச்சம் என்பது மடமையடா”ன்னு பாடினாரு.ஆனால் அவரை செலுத்தின ஒரே சக்தி பயம் தேன். ஸ்ரீ ஸ்ரீ “ஏ சரித்ர சூசினா ஏமுன்னதி கர்வ காரணம்”பாரு. அதுதான் யதார்த்தம்.

நாளைக்கே நாம கூட மார்க்கெட் டல்லடிச்சு போயி சக்கரம்,தகடு,மாந்திரீகம்னு பாதாளத்துக்கு இறங்கிரலாம்.அதுக்காவ இன்னை வரை நாம எழுதினதுல்லாம் தப்பா போயிருமா என்ன? நிற்க.

புத்தக கண்காட்சி முடிஞ்சு போனது ஒரு வாசகனா-எழுத்தாளனா வருத்தத்தை தந்தாலும் ஒரு பதிப்பாளனா ஒரு ரிலீஃபை கொடுத்துருக்கு.
என்ன மேட்டருன்னா நாம கமிட் ஆன ப்ரஸ்காரவுக புத்தக கண்காட்சிய காரணமாக்கி தான் வாய்தா போட்டுட்டாய்ங்க. இப்பம் நம்ம வேலைதான் ஓடிக்கிட்டிருக்கு. எப்படியும் பிப்ரவரி 7 க்குள்ளவே நாலு புக்கும் கைக்கு வந்துரும்.

நம்மை நம்பி முன் கூட்டி பணம் போட்டவுகளுக்கு புக்ஸை கூரியர்ல அனுப்பி விட்டுட்டா “செஞ்சோற்று கடன் “தீர்த்த கர்ணன் கணக்கா ஒரு பெரிய ரிலீஃப் கிடைக்கும்.

நாம வெளியிடப்போற 4 புக்ஸ்ல எது எப்படியோ ஆண் பெண் வித்யாசங்கள் மட்டும் சரித்திரத்துல நின்னுரும்னு நினைக்கிறேன். அப்படி ஒரு மார்கமா செட் ஆகியிருக்கு. செக்சாலஜி,சைக்காலஜி,கைனகாலஜி எல்லா ஜியும் சேர்ந்து ஜீரா தடவின இஞ்சி முரபா மாதிரி வந்திருக்கு இணைய தோழமைகள் எல்லாருமே தங்களை சேர்ந்தவுகளோட திருமணம், மண நாள் இத்யாதிக்கு கேள்வி கேட்காம இந்த புக்கை கிஃப்டா அனுப்ப ஆரம்பிச்சுருவாய்ங்க.சந்தேகமே இல்லை.

அடுத்து பணம் பணம் பணம் . இதையும் சும்மா சொல்லக்கூடாது.

மொத அத்யாயத்தை மட்டும் விரிவா -மறுபடி-புதுசா எழுதினேன் பாருங்க.சிக்குன்னு உட்கார்ந்துருச்சு. மத்த அத்யாயம்லாம் அதனோட விரிவுரை மாதிரி தான். இந்த புக்ல நாம சொல்லியிருக்கிற மேட்டரை மட்டும் நமுக்கு 1987 லயே எதுனா ஒரு பெருசு நெத்தியடியா சொல்லியிருந்தா எப்பவோ உருப்பட்டிருப்பம். ம்.. என்ன பண்றது? கதம் ! கதம் !!

நாம லைஃப்ல ஒரு 20 வருசத்தை வீணடிச்சு கத்துக்கிட்ட மேட்டரை நோகாம கொடுத்திருக்கன். ஒரு அஞ்சு வருசம் களிச்சு ஆருனா ஒரு தொழிலதிபர் ஃபோனை போட்டு முருகேசண்ணே.. உங்க “பணம் பணம் பணம்”படிச்சுத்தான் இப்பம் தொழிலதிபர் ஆனேன்னு சொன்னாலும் நான் ஆச்சரிய படமாட்டேன்.அந்தளவுக்கு இதுல தம் இருக்கு.

அடுத்தது ஜோதிடமும் தாம்பத்யமும். இப்படி ஒரு தலைப்புல – கோணத்துல புக் வந்ததே கிடையாதுன்னு அடிச்சு சொல்லலாம். ஜோதிடம் 360 மறுபதிப்புன்னு தள்ளிரமுடியாது.ஏன்னா திருவாரூர் சரவணன் இதை மட்டுமில்லை நாலு புக்கையும் சூப்பரா ட்ரிம் பண்ணியிருக்காரு.
ஆக மொத்தத்துல நாலையும் வாங்கி படிச்சு ,புரிஞ்சு ,அப்ளை பண்ணா பிரச்சினைகளை பில்லு போட்டு வாங்க மாட்டோம், சொந்த செலவுல சூனியம் வச்சுக்க மாட்டோம். தானா வர்ர பிரச்சினைகளுக்கு சூப்பரா பாய்லா காட்டலாம்.

இந்த புத்தக வெளியீடு வெறுமனே யாவாரம் இல்லிங்ணா. இதுக்கு பின்னாலே பெரிய மாஸ்டர் ப்ளானே இருக்கு. அதை எல்லாம் பிப்ரவரி 7 க்கு பிறவு விவரமா சொல்றேன்.

“நம்மோட உண்மையான ஃபாலோயர் மரணம் தான்”னுட்டு ஒரு ஸ்டேட்டஸ் குங்குமத்துல படிச்ச்ன். எனக்கென்னமோ ” நம்ம எண்ணம்”தான்னு படுது.

அதுலயும் கடைசி நேர எண்ணம் இருக்கே? யப்பா..அதுதான் நம்ம அடுத்த பிறவியை தீர்மானிக்க போற விஷயம்.

24 மணி நேரம் -365 நாள் இறை நினைப்போட இருக்கனும் ,ஜேஜி கும்பிடனும்னு ஜல்லியடிக்கிறது கூட அந்த கடைசி கணத்துல பழக்க தோஷத்துல கடவுளை நினைச்சுரனும்னுதானோ? அந்த கடைசி எண்ணம் நம்ம அடுத்த பிறவியை தீர்மானிக்குமோ என்னமோ?
அதனால ஆரையும் நம்பாதிங்க. எதையும் முழுசா நம்பிராதிங்க.அதுவே உலகமா இருந்துராதிங்க. ஒலகத்தை “பான்”பண்ணி பாருங்க. வாழ்க்கையை ஒரு பறவை பார்வையில பாருங்க.

ஒரு எண்ணம் தான் இந்த பிறப்பை கொடுத்தது  . இதிலான கடைசி எண்ணம் தான் இன்னொரு பிறப்பை கொடுக்கப் போகுது. அதனால தொடர்ந்து நல்ல எண்ணங்களாலயே நம்ம மனசை நிரப்பலாமே.

இந்த பிறவியை தனி மனித துதிகளில் வீணடிக்காம -அதே நேரம் ஈகோ காரணமா வி.ஐ.பிக்கள் முதல் சக மனிதர்கள் வரை அவர்களோட கருத்துக்களை புறக்கணிக்காம கொஞ்சம் பாலன்ஸ்டா லேசா மாத்தி தான் வாழ்ந்து பார்ப்பமே.