பதிவர் சந்திப்பு:ஜோதிடம் 360 இலவசம்

அண்ணே வணக்கம்ணே !
தொழிலும் கில்மாவும் தொடர்ல அடுத்த அத்யாயத்தை போட வேண்டிய நான் இப்படி டைவர்ட் ஆக ஒரு முக்கிய காரணம் இருக்கு. நாளை (ஞாயிற்று கிழமை) சென்னை வந்து ஒங்களுக்கெல்லாம் ஜோதிடம் 360 புஸ்தவத்தை இலவசமா தரப்போறேன். ஏன் இந்த கொலை வெறின்னு கேப்பிக சொல்றேன்.

ஜோதிடம் -தோல்-மருத்துவம் -செய்தி- மக்கள் தொடர்புக்கு எல்லாம் புதன் காரகர் -புதனுக்குரிய கடவுள் கிட்ண பரமாத்மா.

நம்ம ஜாதகத்துல புதன் பிலோ ஏவரேஜுங்கறதால அப்பப்போ அவரை கவனிச்சுக்கறது வழக்கம். போன கிருஷ்ண ஜெயந்திக்கு கோவில் மல்ட்டி கலர் பாம்லெட்டுக்கு மேட்டர் நான் அடிக்க – மவள் டிசைன் பண்ணா. (ஃப்ரீ சர்வீஸுதேன்)

மேற்கொண்டு ஒரு ஸ்பான்சரரை பிடிச்சு பாக்கெட் புக் ஒன்னு போட்டு சனத்துக்கு இலவசமா வினியோகம் பண்ணினோம். (உள்ளடக்கம் : கண்ணன் துதி மாலை)
இந்த கிருஷ்ண ஜெயந்திக்கும் பாம்லெட் மேட்டர் ஓகே.ஆனால் பாக்கெட் புக் மேட்டர் ஸ்பார்க்கே ஆகலை. (ஹூம் ..வசதி தான் காரணம்) ஸ்பார்க் ஆன பிறவும் நேரம் ரெம்ப குறைவா இருந்ததால ஆத்மார்த்தமா எதையும் செய்ய முடியாத நிலையில – லூஸ்ல விட்டுட்டன்.

இதுக்கு மிந்தில்லாம் நம்ம லோக்கல் மேகசின் வேலைய ஆரம்பிச்சு -முடிச்ச பிறவு ரூ.50 அடக்கத்துல சுண்டல் பண்ணி கோவில்ல கொடுத்துர்ரது வழக்கம்.
இந்த தாட்டியும் அதே வேலை செய்துரலாம்னு ஏற்பாடு ஆச்சு. இதை சொன்ன கொஞ்ச நேரத்துக்கெல்லாம் டாட்டா ஸ்கை வேலை காட்ட ஆரம்பிச்சுருச்சு. நியூஸ் சானல்ஸ் எல்லாம் சுத்தம்.

ஒரு பக்கம் ஜகன் உண்ணாவிரத மேட்டர் வேற ஓடிக்கிட்டிருக்கு.கம்ப்யூட்டரே கதியா கிடக்கிறதால வெளி உலகத்துக்கும் நமக்கும் இருக்கிற தொடர்பே டிவி தான். டாட்டா ஸ்கை இல்லின்னா கொர்ரை தான் கேட்கனும்.

டெக்னீஷியனை கூப்பிடறோம் கூப்பிடறோம்.இதோ அதோங்கறானே தவிர வந்த மாதிரியா காணோம். மறு நாள் மாலை கிட்ணருக்கு சுண்டல் நிவேதனம் முடிஞ்சு பொஞ்சாதி வீட்டுக்கு வந்தாள்.

கொய்யால டிஷ்ஷே ஆடிப்போயிருக்குமோங்கற சந்தேகம் வந்தது. பார்த்தேன்.நெஜம். உடனே ஆட்டத்துக்கு ஒரு ஆப்பு வச்சு நிறுத்தினேன்.டிவி ஆன் பண்றேன். நியூஸ் சானல்கள் கிறிஸ்டல் க்ளியரா வருது.

கண்ணா நீ ஜெயிச்சுட்டே.. சாரி என்னை ஜெயிக்க வச்சுட்டேன்னு நினைச்சுக்கிட்டேன். ஜோதிடம் 360 நூலை பதிவர் சந்திப்பில் இலவசமா கொடுக்கப்போறதும் கிஷ்டன் மனசுல இடம் பிடிக்க போடற துண்டுதேன்…

பதிவர்கள் ஆரு? நர நாராயணர்களாச்சே.. அவாளுக்கு நிவேதனம் ஜோதிடம் 360. கண்ணன் அருள் பெற புத பல குறைவால் ஏற்படும் தீய பலனை தவிர்க்க நீங்களும் ஜெபிக்கலாம். ஓம் க்லீம் கிருஷ்ண க்லீம்.

தொழிலும் கில்மாவும் :5

அண்ணே வணக்கம்ணே !
நாம யூத்தா இருந்தப்பயே எல்லா மேட்டருக்கும் ஒரு விதியை வகுத்துருவம். உ.ம் நகம் கடிக்கிற குட்டி வெட்கப்படும் – விரலை கடிக்கிற குட்டி வந்துரும்.
ரெம்ப காலத்துக்கு பிறகுதான் விதிகள் போல(வே) தோன்றும் விதிவிலக்குகளின் தொகுப்பே வாழ்க்கைங்கற முடிவுக்கு வந்துட்டம்.
முள்ளை முள்ளால எடுத்த பிறவு ரெண்டு முள்ளையும் தூக்கிப்போட்டுர்ராப்ல .. இந்த வாழ்க்கையில விதிகளுக்கு இடமில்லைன்னு தெரிஞ்சுக்கவாச்சும் விதிகளை தெரிஞ்சுக்க வேண்டியதா இருக்கு.

இந்த மொக்கையெல்லாம் எதுக்குன்னா தொழிலும் கில்மாவும் தொடர்ல நிறைய விதிகளை சொல்லப்போறேன். இது எல்லா சனத்துக்கும் பொருந்துங்கற கியாரண்டி கிடையாது. விதி விலக்குகள் நிச்சயமா இருக்கும்.

ஏன்னா மன்சங்கள்ள பல ரகம் இருக்காய்ங்க.

1.உடலளவில் வாழ்வோர்
2.உள்ளத்துடன் வாழ்வோர்
3.புத்தியுடன் வாழ்வோர்
4.உள் உணர்வுகளால் வழி நடத்தப்படுவோர்

நாம வகுக்கும் விதிகள் மொத கேட்டகிரியில உள்ளவுகளுக்கு வேணம்னா சிக்குன்னு பொருந்தலாம். ரெண்டு,மூனு,நாலாவது கேட்டகிரின்னு வர வர நம்ம விதிகளோட தாக்கம் குறைஞ்சு போயிரும்.

ஹோல்டான் !

கடந்த பதிவுலயே ஜோதிட மேட்டர் சுத்தமா இல்லையேன்னு கம்ப்ளெயிண்ட் வந்துருச்சு. வரேன். ஜோசியமும் வருது.வெய்ட் அண்ட் சீ.
சாடிசம் -மசாக்கிசம்னா என்னனு தெரியாதவுக இருக்கமாட்டாய்ங்க.

ஆனாலும் புதிய வரவுகளுக்காக சிறுகுறிப்பு.
சாடிஸ்ட் : மற்றவரை துன்புறுத்தி -அதில் இன்பம் காண்பவன். மசாக்கிஸ்ட்: தன்னை தான் துன்புறுத்திக்கிட்டு மத்தவுகளை குஜிலியாக்கிறவன்.
ஒரு ஜாதகத்தை கையில எடுத்ததும் அந்த ஜாதகன் சாடிஸ்டா -மசாக்கிஸ்டா சொல்லமுடியுமான்னு கேப்பிக.சொல்லலாம்.

கிரகங்கள்ள ரெண்டு குரூப்பிருக்கு. நைசர்கிக சுபர்கள் ,நைசர்கிக பாபிகள் .
குரு, சுக்கிரன், தீய கிரகங்களுடன் சேராத புதன், வளர்பிறைச் சந்திரன் ஆகியோர் நைசர்கிக சுபகிரகங்கள்.

சூரியன், செவ்வாய், சனி, இராகு, கேது, தீய கிரகங்களுடன் சேர்ந்த புதன், தேய்பிறைச் சந்திரன் ஆகியோர் நைசர்கிக பாப கிரகங்கள்.

இந்த நைசர்கிக சுபர்கள் லக்னப்படியும் சுபர்களா இருந்து நற்பலன் தரக்கூடிய நிலையில இருந்தா இவிக சாடிஸ்டாவும் இருக்க மாட்டாய்ங்க. மசாக்கிஸ்டாவும் இருக்க மாட்டாய்ங்க.

எச்சரிக்கை:
இதுல குருவுக்கு மட்டும் விதி விலக்கு. இவர் நைசர்கிக சுப கிரகம். லக்னப்படியும் சுபனாயிருந்தாலும் – நற்பலன் தரக்கூடிய நிலையில இருந்தாலும் -தனிய நின்னா – ஜாதகர் கொஞ்சம் போல மசாக்கிஸ்டா இருக்க சான்ஸ் இருக்கு.

இந்த நைசர்கிக சுப கிரகங்கள் லக்னாத் பாபிகளா இருந்தா இந்த ஜாதகர்களுக்கு நெல்லவுகளை பார்த்தா இளிச்சவாயனுங்கன்னு தோனும். தான தருமங்கள் பண்றவனை ஊதாரிம்பாய்ங்க.பொஞ்சாதிகிட்ட அன்பா நடந்துக்கிட்டா வழியறான் -பொண்டாட்டி தாசன்ம்பாய்ங்க.

இப்படி நெல்ல மேட்டர் எல்லாம் கெட்ட மேட்டராவே படும். ஒலகத்துல அப்பன்,ஆயிலருந்து பிள்ளை குட்டி,தோஸ்துங்க வரை எல்லாரும் ஃப்ராடு பசங்க. நாம அலார்ட்டா இல்லின்னா ஆப்படிச்சுருவாய்ங்கன்ற ஃபீலிங் இருக்கும்.

இவிக மேற்சொன்ன காரணங்கள்/ஊகங்களை வச்சு இவிக வெறுக்கிற சனம் சமுதாயத்தை பொருத்தவரை அல்லாருக்கும் நெல்லது செய்துக்கிட்டிருப்பாய்ங்க. ஆனால் இவிகளுக்கு மட்டும் நெல்லது செய்றோங்கற துடிப்புல ஆப்படிச்சுருவாய்ங்க.அட அவிக நெல்லதே செய்தாலும் அது இவிகளுக்கு ஆப்பா முடியும்.

இப்படி ஒரு சில அனுபவங்கள் காரணமா இவிக மேற்சொன்ன கேட்டகிரி மக்களை விலக்கியே வைப்பாய்ங்க. அவிக கதி கெட்டு உதவின்னு வந்தா நோகடிப்பாய்ங்க. இந்த வகையில இவிகள்ள சாடிசம் இருக்க சான்ஸிருக்கு.

இதுலயே இன்னொரு கேட்டகிரி இருக்கு. ( நைசர்கிக சுபர்கள் லக்னாத் பாபிகளாய் இருக்கும் போது) இவிக என்னவோ சாஸ்திரம்,சம்பிரதாயம்,கோயில் ,குளம்,விரதம், சிக்கனம், சேமிப்புன்னு எல்லாத்தையும் ஃபாலோ பண்ணிக்கிட்டுதான் இருப்பாய்ங்க.ஆனால் இதுவே இவிகளுக்கு ஆப்பா முடியும். உ.ம் இவிக சேர்த்துவச்சதை ஆரு வாய்ல போட்டு தண்ணி ஊத்திருவாய்ங்க. இவிகள்ள கொஞ்சம் மசாக்கிசம் இருக்கும்.

இனி அடுத்த கேட்டகிரிய பார்ப்போம். நைசர்கிக பாபிகள் இவிக லக்னத்துக்கு சுபர்களா இருப்பாய்ங்க.

பொய்,பித்தலாட்டம்,லஞ்சம் ,கூட்டி கொடுக்கிறது காட்டிக்கொடுக்கிறதுல்லாம் செய்துட்டு வர்ர வரைக்கும் இவிக கேரியர் டாப்ல போயிட்டிருக்கும். (இதன் கொடிய விளைவுகள் இவிகள வேற ரூட்ல வந்து சாச்சுரும் அது வேற கதை- இங்கே நாம குறிப்பிடறது உலகியல் வாழ்வை -அதுவும் சமுதாயத்தின் பார்வைக்கு வர்ர வாழ்வை மட்டும் தான் ). இதனால இவிக உள்ளுணர்வு இவிகளை சாடிசத்துக்கே உசுப்பும். அடுத்தவனுக்கு ஆப்படிச்சாதான் லைஃபுங்கற ஃபீல் இவிகளுக்கு வந்துரும்.

ஆனால் இதே கேட்டகிரி சனத்துக்கு கெட்ட நேரம் வரும்போது “அய்யோ பாவம்”ங்கற ஃபீல் வந்து இரக்கம் காட்டின ஒரே காரணத்துக்காவ ஆப்படிச்சுக்கறதும் உண்டு.

ஆக சாடிசம் -மசாக்கிசம்ங்கறது ஜாதகப்படியே அமையுது. ஓகேவா.

இந்த பாபர்,சுபர் மேட்டர் மட்டுமில்லை. ஜாதகத்துல இந்த சுக்கிரன் ஆரு? லக்னாத் பாபியா? சுபனா? எங்க நின்னாரு ? ஆரோட சேர்ந்தாருங்கறதை பொருத்து இவிக செக்ஸ் லைஃப் இருக்கும். (இதுல 7க்குடையவர், 7 ல் நின்ற கிரகங்கள்,12 ஆமிடம் ,அங்கே நின்ன கிரகங்கள், எட்டு ,எட்டில் நின்ற கிரகங்கள் கூட செக்ஸ் லைஃபை இன்ஃப்ளுயன்ஸ் பண்ணும்)

காலாகாலத்துல கிடைக்க வேண்டியது கிடைச்சாச்சுன்னா -கில்மாவை சொன்னேன்பா – அடுத்து என்னன்னு மனசு முன்னோக்கி போகும். கிடைக்க வேண்டியது தொடர்ந்து லீகலா – எத்திக்கலா அவெய்லபிளா இருந்தா -மன்சன் உண்மையான உருவாக்குதலுக்கு ஷிஃப்ட் ஆயிருவான்.

1.திருப்தியா கிடைக்குது – கிடைக்கும் -கிடைச்சுட்டே இருக்கும்ங்கற நிலையில மன்சன் நார்மலா இருப்பான். நோ சாடிசம் -நோ மசாக்கிசம்

2.கிடைக்குது -ஆனா இல்லீகல் – எத்திக்ஸ் படி தப்புன்னு வைங்க. கொய்யால நான் “அதுக்காவ” எவ்ளோ அவஸ்தை படறேன்.இவன்லாம் பாரு கமுக்கமா முடிச்சுட்டு ரிலாக்ஸா இருக்காங்கற கடுப்புல சாடிஸ்டா மாறுவாய்ங்க.

3.இப்ப கிடைக்கலை -ஆனால் எதிர்காலத்துல நிச்சயமா கிடைக்கும்.
கண்ணுக்கு முன்னே பச்சை புல் கட்டை பார்த்து தலைய அசைச்சுக்கிட்டே வண்டியிழுக்கிற மாடு போல ஆர்வமா உழைப்பாய்ங்க. சமயத்துல மசாக்கிஸ்டு போல தங்களை தாங்களே துன்புறுத்திக்கிட்டும் உழைப்பாய்ங்க.

4.இப்ப கிடைக்கலை – எதிர்காலத்துல கிடைக்குமோ கிடைக்காதோ கூட தெரியாது
உழைப்புல ஆர்வமிருக்காது. ஆர்வமா உழைக்கிறவனை நக்கலடிப்பாய்ங்க.உழைப்புக்கேத்த பலன் கிடைக்காம அவன் நொந்துகிடக்கிறப்போ அவனை மேலும் நோகடிப்பாய்ங்க. மேயற மாட்டை நக்கற மாடு கெடுத்தாப்ல அடுத்தவன் வேலையையும் கெடுப்பாய்ங்க.

5.இப்ப கிடைக்கலை -எப்பயும் கிடைக்காது
இவிகளை மறுபடி ரெண்டு சப் கேட்டகிரியா பிரிக்கனும். நல்ல குடும்பம், நல்ல ஜீன்ஸ், நல்ல ஆசிரியர்கள், நல்ல கொலிக்ஸ் , சுமாரான ஜாதகத்துல பிறந்தவுக மசாக்கிஸ்டா மாறுவாய்ங்க. அடுத்தவன் லவ்ஸுக்கு தூது போறது – கொலிக்ஸுக்கு அல்லையன்ஸ் தேடறது-கல்யாண வேலையை இழுத்து தோள்ள போட்டுக்கிட்டு செய்றது -ஓடி வந்தவுகளுக்கு கண்ணாலம் கட்டி வைக்கிறது எட்செட் ரா..

இதுவே தத்தாரி குடும்பம் ,கேடு கெட்ட ஜீன்ஸ், குவார்ட்டர் வாங்கி வர சொன்ன ஆசிரியர்கள், களவாணி பயலுவ சகவாசம் – தரித்திர ஜாதகத்துல பிறந்தவுக சாடிஸ்டா மாறுவாய்ங்க.

இதையெல்லாம் சொல்லிட்டு வந்தது எதுக்கு? தொழில் -உத்யோகம் -வியாபாரத்துக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்னு கேப்பிக சொல்றேன்.

தொழில் -உத்யோகம்-வியாபாரம் ங்கற 3 சமாசாரத்துலயுமே பேர் தான் மாறுதே தவிர கவுண்டர் பார்ட் நிச்சயம் உண்டு.
தொழில்ல பார்ட்டி/கிராக்கி/கஸ்டமர்னு சொல்றோம், உத்யோகத்துல பாஸுன்னு ஒருத்தர் இருப்பார், வியாபாரத்துல வாடிக்கையாளர்,பையர்னு (Buyer) ஒருத்தர் இருப்பார்.

மன்சன் தன் வீட்டில் -கட்டில் அறையில் தான் எதை பெற்றானோ அதையே தன் கவுண்டர் பார்ட்டுக்கு வழங்க முற்பட்டுருவான்.

உ.ம்
சாடிஸ்ட் மனைவிகிட்டே டார்ச்சர் அனுபவிக்கிறவன் எதிராளிகளை டார்ச்சர் பண்ணிக்கிட்டே இருப்பான்.
மனைவி மசாக்கிஸ்டா அமைஞ்ச மன்சன் -மனைவியால ராஜசுகம் அனுபவிக்கிற மன்சன் எதிராளிகளையும் குஷிப்படுத்திக்கிட்டே இருப்பான்.

எச்சரிக்கை:
சாடிஸ்ட் பொஞ்சாதிக்கிட்டே படாத பாடு பட்டாலும் தெரு நாய்க்குட்டிக்கு கூட அன்பு காட்டற புண்ணியாத்மாக்கள் அங்கொன்னும் இங்கொன்னுமா இருப்பாய்ங்க. ஒன்னு இவிக அக்மார்க் மசாக்கிஸ்டுகளா இருப்பாய்ங்க. அல்லது பயங்கர ஹிப்பாக்கிரட்ஸா இருக்கலாம். அல்லது ஆரம்பத்துல சொன்னாப்ல புண்ணியாத்மாக்களா இருக்கக்கூடும்.

சாடிஸ்ட் பாஸ் -மசாக்கிஸ்ட் சர்வெண்ட் டபுள் ஓகே. சாடிஸ்ட் கஸ்டமர் -மசாக்கிஸ்ட் வியாபாரி டபுள் ஓகே. இந்த காம்பினேஷன் மாறினாத்தான் வம்பு .
தொடர்ந்து நோண்டி நுங்கெடுக்கலாம்.உடுங்க ஜூட்டு.

தொழிலும் கில்மாவும்: 4

ஒரு மன்சனுக்கு தொழிலும் -கில்மாவும் கரீட்டா சூட் ஆயிட்டா அவனால ஆருக்கும் எந்த ஆபத்தும் இருக்காது. இந்த ரெண்டுல ஒன்னு கெட்டாலும் அடுத்ததும் கெட்டுப்போயிரும் – ஒட்டு மொத்த வாழ்க்கையும் கெட்டுப்போயிரும்.அவனால யாருக்கு வேணம்னா எந்த ஆபத்து வேணம்னா வந்துரும்.

அதனாலதேன் இந்த டைட்டில் நம்ம மைண்ட்ல ஸ்பார்க் ஆச்சு போல . சரியான தொழில் அமைய -அவனுக்கு கில்மா மேட்டர்ல ஈடுபாடு இருக்கனும். கு.ப அடிமனசுலயாச்சும் அந்த ஈடுபாடு இருந்தா தான் -அவன் சரியான பாதையில செலுத்தப்படுவான். தொழில் அமைஞ்சு போச்சுன்னா சட்ட ரீதியிலான – எத்திக்ஸ் ரீதியிலான கில்மாவுக்கு அவன் குவாலிஃபை ஆயிர்ரான்.

அட .. மொதல்ல கில்மா கிடைச்சுருச்சுன்னே வைங்க. கொஞ்ச நாள் தேன் குடிச்ச நரிக்கணக்கா மயங்கி கிடந்தாலும் அவன் அடுத்த படியை நோக்கி -அதாங்க உண்மையான உருவாக்குதலை நோக்கி செலுத்தப்படுவது நிச்சயம்.

இதெல்லாத்துக்கும் அடிப்படையா அவனில் செக்ஸ் பவர் இருக்கனும். கடவுள் புண்ணியத்துல இந்த மேட்டர்ல பூட்டகேஸு ,பார்டர் கேஸ் எல்லாம் ரெம்ப ரெம்ப குறைஞ்ச சதவீதம் தான் இருக்கு. வருடங்கள் கரைய கரைய இந்த சதவீதம் அதிகரிக்கலாம்.அது வேற கதை.

அவன் ஸ்தூலமான உருவாக்குதலுக்கு வழி இருக்கும் செக்ஸுக்கே இழுக்கப்பட்டாலும் கொஞ்சம் போல சூட்சும புத்தி உள்ளவன் சீக்கிரமே புரிஞ்சுக்கறான். அடடா .. உருவாக்கறதுன்னா இது இல்லை. இன்னம் என்னமோ இருக்குன்னு தெரிஞ்சுக்கறான்.

அட அவன் செக்ஸுக்கே அடிமையாயிட்டாலும் அதுக்காகவாச்சும் ஏதோ ஒரு தொழில் -ஒரு உத்யோகம் -ஒரு வியாபாரத்துல தொடர்ந்துக்கிட்டே இருப்பான். தெரிஞ்சோ தெரியாமயோ சொசைட்டிக்கு பாரமா இல்லாம -பொருளாதார சங்கிலியில சின்ன கண்ணியா மாறிர்ரான்.

கதவு -வீடு,பெட் ரூம்,காம்பவுண்ட் ,தொழில் உத்யோகம் வியாபாரம் எல்லாமே கில்மாங்கற ரஸ்னா பவுடர்ல உருவான 22 கிளாஸ் ரஸ்னா தான்.
எப்போ ஒரு பையன் கில்மாவுக்கு ஆல்ட்டர்னேட்டிவ்ஸை தேடி போறானோ அங்கயே அவன் வழி தவறிப்போயிர்ரான். அப் நார்மலாயிர்ரான்.

அது சுய இன்பமா இருந்தாலும் சரி – ப்ராஸ்டிட்யூட்டை தேடிப்போறதாயிருந்தாலும் சரி -கள்ள உறவா இருந்தாலும் சரி/ இதெல்லாம் லைஃப்ல வர்ர சின்ன சின்ன கேப். இதை தாண்டி வந்துட்டா தப்பிச்சான். இல்லைன்னா சாப்டர் குளோஸ்.

சிகரட், டிரிங்க்ஸுக்கு காரணம் – நிப்பிள் காம்ப்ளெக்ஸ், வன்முறைக்கு காரணம் அடக்கி வைக்கப்பட்ட காமம். “ஆயிரம் தான் வாழ்வில் வரும் – நிம்மதி வருவதில்லை”ன்னு வாத்தியார் பாடுவாரு. தொழில் -கில்மாங்கற ரெண்டு மேட்டர் ஃபிட் ஆயிருச்சுன்னா 998 மேட்டர் ரிவர்ஸுல இருந்தாலும் வாழ்க்கை வண்டி குடை சாயறதில்லை. அங்க இங்க சைடுல கோடு விழுந்தாலும் டிங்கரிங் பண்ணி – ரீபெயிண்ட் பண்ணி ஒப்பேத்திரலாம்.

ஒவ்வொரு மன்சனுக்கும் சமகால அமைப்புகள் மேல விமர்சனங்கள் இருக்கு. வெளிய சொல்ற காரணங்கள் எதுவா இருந்தாலும் சொல்லப்படாத காரணம் வேற இருக்கு.

அது செக்ஸ்.செக்ஸ் குறித்த இந்த அமைப்புகளின் கருத்து.

பலர் இந்த அமைப்புகளை ஒட்டு மொத்தமா நெக்லெக்ட் பண்ணிர்ராய்ங்க.சிலர் ஜோக் எழுதறாய்ங்க. சிலர் கவிதை ,சிலர் லெட்டர் டு எடிட்டர்.
சிலர் தண்ணி ,சிலர் போதை மருந்து ,சிலர் கிரைம்ஸ் எல்லாரோட உள்ளார்ந்த நோக்கமும் சமகால அமைப்புகள் மேலான தங்கள் கருத்தை வெளிப்படுத்தறதுதான்.

அமைப்பை மாத்தனுங்கறது கட்டாயம்.ஆனால் அதுக்கு டைம் பிடிக்கும். எக்கு தப்பா எதுனா ஆச்சுன்னா வெடிகுண்டு கேஸை போட்டு போலீஸ் பிடிக்கும்.
அது மாறும் போது மாறட்டும் அல்லது முடிஞ்ச போது மாத்தலாம்.அதுவரைக்கும் இப்டியே வாழ்ந்துர வேண்டியதுதானா?

கேடு கெட்ட மைண்ட்லயும் ஒரு கிறிஸ்டல் க்ளியர் ஸ்பாட் இருக்கு. அது பெட்டர் லைஃப் – பெட்டர் சொசைட்டி -பெட்டர் ஜெனரேஷன்ஸ்-பெட்டர் கன்ட் ரி -விட்டா பெட்டர் வோர்ல்ட்னுட்டு கனவு காணுது.

பேசிக்கலா மன்சன் ஆப்டிமிஸ்ட். எதாச்சும் நல்லது நடக்கும். நல்லதா நடக்கும்னு தான் எதிர்பார்க்கிறான். அது நடக்கிற வரை ஒலகமோ , பொஞ்சாதிகளோ, காலமோ காத்திருக்கிறதில்லை.

இனி நல்லதை நான் தான் நடத்திக்கனுங்கற நிலைக்கு வந்துர்ரான். இந்த பர்சன்டேஜ் போக போக அதிகரிச்சுட்டே போகுது. இதுதான் லஞ்சம் ஊழல்,கிரைமுக்கெல்லாம் காரணமாகுது.

ஜன நாயகத்துல மட்டுமில்லை – எந்த சமூகத்துலயும் மெஜாரிட்டி கருத்து செல்லுபடியாயிருது. எழுதப்படாத சட்டமாயிருது.

ஒரு சினிமாவுல வில்லன் என்.டி.ஆரை தங்கள் ஊருக்கு கூட்டிப்போகும் போது அந்த எஸ்டேட்லாம் எங்களுது – இந்த நிலமெல்லாம் எங்களுதுன்னு சொல்லிட்டே வருவான். அப்போ என்.டி.ஆர் ” ஈ தேசமே நாதி”ம்பாரு ( இந்த நாடே என்னோடது).

நாம ஏதோ ஆக்சிடென்டலா என்.டி.ஆர் ஃபேன் ஆ இருந்ததால – அவரோட கேரக்டர்ஸோட பாசிட்டிவ் ஜூஸை கிராஸ்ப் பண்ணிக்கிட்டதால தப்பிச்சம். இல்லின்னா நாம வாழ்ந்த நாறிப்போன பொளப்புக்கு காட்டி கொடுக்கறதையோ -கூட்டி கொடுக்கிறதையோ முழு நேரத்தொழிலா மாத்தியிருக்கனும்.

செக்ஸுவல் ஆக்டிவிட்டி -செக்ஸ் லைஃப் சக்ஸஸ்ஃபுல்லா இருக்கனும்னா அந்த பார்ட்னர்ஸ்ல ஒருத்தர் சாடிஸ்டா ,அடுத்தவர் மசாக்கிஸ்டா இருக்கனும். பகல்ல இந்த ரோல்ஸை மாத்திக்கனும். அப்போ அவிக இரவு வாழ்க்கையும் பெட்டரா இருக்கும். பகல் வாழ்வும் பெட்டரா இருக்கும்.

செக்ஸ்லைஃப்ல பொஞ்சாதி மசாக்கிஸ்டா அமைஞ்சவுக தன் தயவை எதிர்ப்பார்ப்பவர்கள் எல்லாரையும் பொஞ்சாதி போலவே ட்ரீட் பண்ணி பயங்கர டார்ச்சர் கொடுப்பாய்ங்க.

ப்ரொஃபெஷ்னலா கன்சர்வேட்டிவா, ஹிப்பாக்கிரட்டா, மேல் சேவனிஸ்டா, சுய நலவாதியா ,மாறுவாய்ங்க.தான் பர்ஃபெக்சனிஸ்டோ இல்லையோ பிறர் தன்னத்தனை பர்ஃபெக்சனிஸ்டா இருக்கனும்னு கட்டாயப்படுத்தி சாடிஸ்டுன்னு பேர் வாங்குவாய்ங்க.

இதுவே செக்ஸ் லைஃப்ல பொஞ்சாதி சாடிஸ்டா அமைஞ்சவுக தன் தயவை எதிர்ப்பார்ப்பவர்கள் எல்லாரையும் இவன் எங்கே நமக்கு பொஞ்சாதியா மாறிரப்போறானோன்னு எட்டவே வச்சு மெயின்டெய்ன் பண்ணுவாய்ங்க.

ப்ரொஃபெஷ்னலா ரெம்ப ரேஷ்னலா, ஃப்ளெக்சிபிளா, ப்ராக்டிக்கல் பர்சனா , வாழு வாழ விடுங்கற மென்டாலிட்டியோட இருப்பாய்ங்க. தான் பர்ஃபெக்சனிஸ்டா இருந்தாலும் தன்னை சேர்ந்தவுகளும் அப்படித்தான் இருக்கனும்னு கட்டாயப்படுத்தமாட்டாய்ங்க.

தொழிலும் கில்மாவும் : 3

“தம்பி என்ன பண்றாப்ல?”
“தமிழ் ரைட்டருங்க”
“அது பொழுது போக்குக்கு..பிழைப்புக்கு என்ன பண்றாரு”
இந்த உரையாடல் ரெம்ப லாஜிக்கலா – ப்ராக்டிக்கலா இருக்கிறாப்ல தோனும். அடுத்து வர்ர உரையாடலை பாருங்க.

“தம்பி என்ன பண்றாப்ல?”
“நியூயார்க்ல டாக்டர்”
“அது தொழில்ங்க. மனசுக்கு பிடித்தமா எதையாச்சும் பண்ணனுமில்லையா ? அப்படி என்ன பண்றாரு”
இந்த கேள்விய பத்துவருசத்துக்கு மிந்தியே கேட்டு – அது அந்த தம்பிக்கு கன்வே ஆகி -மனசுக்கு பிடித்தமா எதுனா செய்ய ஆரம்பிச்சிருந்தா ஓப்பன் ஹார்ட் சர்ஜரியை அவாய்ட் பண்ணியிருக்கலாமோ என்னமோ?

ஆனால் அந்த மடம் இல்லின்னா சந்தைமடம். இதான் நம்ம லைஃப் ஸ்டைல். ரஜினி சார் ” இந்த ஆட்சி தொடர்ந்தா கடவுளால கூட தமிழ் நாட்டை காப்பாத்த முடியாது” ன்னு வாய்ஸ் கொடுப்பாரு. இல்லின்னா “வீரலட்சுமி”ன்னு லாலி பாடுவாரு.

உண்மை ,நிம்மதி,வெற்றி இப்பிடி நெல்ல நெல்ல மேட்டர் எல்லாம் சென்டர்ல கீதாம்பா. பிள்ளைகளுக்கு செல்லம் கொடுத்து நாஸ்தி பண்றதும் தப்பு. பசங்க நாஸ்தியாயிருவாய்ங்கன்னு மிலிட்டரி கணக்கா பெண்டு கழட்டறதும் தப்பு.

இந்த தொழில் மேட்டர் ஆவட்டும் -கில்மா மேட்டர் ஆவட்டும் ரெண்டுமே ஒன்னுக்குள்ள ஒன்னு அனுபவிச்சு செய்றவனுக்கு தொழிலே கில்மா. கடனேன்னு செய்றவனுக்கு கில்மாவும் தொழில்.

24 மணி நேரம் ,365 நாள் தொழில் தொழில்னு மாரடிச்சா தொழிலதிபர் மனைவி ட்ரைவருடன் ஓட்டம்னு தினத்தந்தியில செய்தி தான் வரும்.
அதுக்குன்னு 24 மணி நேரம் ,365 நாள் கில்மா கில்மான்னு இருந்தா விதையெல்லாம் தொங்கிப்போய் , வேகமா நடந்தாலும் வலிக்க ஆரம்பிச்சுரும். கை ,கால் எல்லாம் உதற ஆரம்பிக்கும். வாசம், சூடு, தொடுகைக்கே சிலிர்த்து கிளம்பின காலம்லாம் காலாவதியாகி இழந்த சக்தி வைத்தியர்களை நாட வேண்டியதாயிரும்.

சபரி மலைக்கு மாலை போட்டு ,ஒரு மண்டலம் பச்சைத்தண்ணியில குளிச்சு வெறுந்தரையில படுத்து வாழ்ந்து பாருங்க. ரெண்டு மூனு நாள் கொஞ்சம் கஷ்டமா இருக்கும். மிக்கா நாள்ளருந்து பழக்கமாயிரும். நாம சகட்டுமேனுக்கு வாழ்ந்துட்டு திருந்தி வாழ ஆரம்பிச்ச பிறவு மொத ரெண்டு மூனு நாள் தான் நிறைமாசம் மாதிரி அல்லாடினம். அதுக்கப்பாறம் 6 மாசம் வரை எந்த தொல்லையும் இல்லை. பாடி கேப்-ஐ ஃபில் அப் ஆரம்பிச்சுருச்சு.

” நமக்கு தினம் தினம் இருந்தாகனும்பா இல்லின்னா முடியாத்”துன்னுட்டு வசனம் விடறவுகளுக்கு தெரியாது. கொடவுன் மொத்தம் காலிங்கறதால இறங்கற சரக்கை எல்லாம் பாடி ஷோ ரூம்லயே ஸ்டோர் பண்ணுதுன்னு.

இஷ்டமா செய்யறியா.. இஷ்டம் போல செய். நோ ப்ராப்ளம். இல்லிங்க நான் இஷ்டமாத்தான் செய்றேம்பான். அதுவும் வருச கணக்கா.. கொய்யால இதெல்லாம் சாத்தியமா?

மன்சனுக்கு 4 மினட்டுக்கு ஒரு தபா லேசா மூட் மாறுதாம், 2 மணி நேரத்துக்கு ஒரு தபா தலைகீழா மாறுதாம். சோசியப்படி பார்த்தாலும் ஒரு நட்சத்திரம் 24 மணி நேரம் தான். அதை 4 பார்ட்டா பிரிக்கிறாய்ங்க. மொத,கடேசி பார்ட் அந்த அளவுக்கு எஃபெக்டிவா இருக்காதாம். மத்தியில வர்ர ரெண்டு பார்ட்டுதான் எஃபெக்டிவ்.
மனோகாரகன் சந்திரன். இவர் ரெண்டேகால் நாளைக்கு ஒரு தபா ராசி மாறிர்ராரு. 24 மணி நேரத்துக்கு ஒரு தபா நட்சத்திரம் மாறிர்ராரு. 14 நாட்களுக்கு ஒரு தபா இதன் நேச்சரையே மாத்திக்கிறாரு. அட கில்மாவுக்கு காரகரான சுக்கிரனும் – தொழில் காரகனாகிய சூரியனுமே மாசத்துக்கு ஒரு தபா ராசி மாறிர்ராய்ங்கப்பா.
கில்மாவுக்கு 1 பைசா பவர் தேவைன்னா தொழிலுக்கு 99 பைசா பவர் தேவை. கில்மாவுல செலவழிக்கிற பவரை சேமிச்சு -தொழில்ல செலவழிச்சு மிச்சம் மீதி உள்ளதை கில்மாவுல செலவழிச்சாலே போதும். நாடும் -வீடும் உருப்பட்டுரும்.

நடக்கிறது என்ன?

இருக்கிறதே ஒரு பைசா பவர். அதை கில்மாவுல – அதுவும் அன் மேரீட்னா சுய இன்பத்துல செலவழிச்சுட்டு வெறுங்கையோட நிக்கிறது.
ஓஷோ சொல்வாரு ” பூமி சூரியனின் குழந்தை – நாம் பூமியின் குழந்தைகள்” கொயந்தைக்கு தாயோட கனீக்சன் இருந்தாதேன் பவர் வரும். செருப்பு போட்டு நடக்கிறோம், பூமியுடனான தொடர்பு குளோஸ். ஒரு நாள்ள 23 மணி நேரம் இண்டோர் ஷூட்டிங்குதேன். சூரிய ,சந்திரர்களோட கனீக்சன் கட். நம்ம உணவு ,உடை ,பழக்க வழக்கங்கள் எல்லாமே இயற்கையிலருந்து விலகி விலகி அழிவை நோக்கி ஓடிக்கிட்டிருக்கம்.இதுல பவர் எங்கருந்து ஜெனரேட் ஆகிறது?

தலைமுறைக்கு தலை முறை உசரம் குறைஞ்சிட்டே வந்தாப்ல உரமும் குறைஞ்சு போச்சு. பல பதிவுகளில் சொல்லியிருக்கன். இயற்கை நம்ம கிட்டருந்து எதிர்ப்பார்க்கிறது ஜஸ்ட் உயிர் வாழ்தல் -மற்றும் பரவுதல் தான்.

எப்போ திருமண வயது 40 -50ன்னு எகிற ஆரம்பிச்சதோ – எப்போ கு.க சட்டமாகி வாழ்க்கை முறையா மாறிப்போச்சோ இயற்கை நம்மை கை விட்டுருச்சு. பவர் ஜெனரேஷன் குறைஞ்சு போச்சு. இருக்கிற கொஞ்ச நஞ்ச பவரையும் கில்மாவுல வீணாக்கிட்டு ப்ராக்டிக்கலா எதையும் உருவாக்கிற சக்தி போயி – வீடியோ கேம்ஸ், ஆன் லைன் ட்ரேடிங்குன்னு கதை பண்ணிக்கிட்டிருக்கம்.

உள்ளடக்கப்பட்ட காமம் வன்முறையா வெளிப்படும்ங்கறாய்ங்க. ஒருத்தன் ஏமாந்தா அவனை டஜன் பேரு கொத்துக்கறி போடறதுதான் வன்முறை. உள்ளடக்கப்பட்ட காமத்தின் சக்தி இவ்ளதான் போல.

ஆக இருக்கிறதை வச்சு ஒப்பேத்த நாம கொடுக்கிற ஸ்கெட்ச் சிம்பிள். இருக்கிற சக்தியை சேமிங்க. உருவாக்கிறதுல செலவழிங்க. அதுல மிஞ்சினதை கில்மாவுக்கு டைவர்ட் பண்ணுங்க.

கில்மாவை பத்தி நிறையவே எழுதியாச்சு. தொழிலை பத்தி கொஞ்சமாச்சும் சொல்லலாமேன்னு நினைக்கிறேன். கமெண்ட் ப்ளீஸ்..

தொழிலும் கில்மாவும் : 2

மொபைல் ஹவுஸ்

அண்ணே வணக்கம்ணே !
இப்படி பைசா அப்படி கில்மா ரெண்டையும் கேட்ச் பண்ணத்தேன் ஆண் உலகம் லோ லோன்னு லோல் படுது. குட்டிகளை பிக் அப் பண்ற பர்சனாலிட்டி – அட்வெஞ்சர் – நாலெட்ஜ் எதுவுமில்லாத சனம் சுத்தி வளைச்சு பைசா புரட்டிரலாம் .அப்பாறம் ஆட்டோமெட்டிக்கா நமக்குன்னு ஒன்னு வந்துருங்கற சப் கான்ஷியஸ் தாட்ல ஒர்க் அவுட் பண்ணுதுங்க.

இதுல இன்னாடா சிக்கல்ன்னா இவன் பணத்தை துரத்தி துரத்தி தொந்தி,தொப்பை,பிருஷ்டம் பெருத்து பாடியெல்லாம் பாடி போடற அளவுக்கு ஆயி, பேட்டரி வீக் ஆகி , மேற்படி சமாசாரத்தை அல்ப்ப சங்கியைக்கு மட்டும் உபயோகிச்சுக்கிட்டிருக்கிற காலத்துல பொஞ்சாதி மட்டும் வீட்டோட யூத்தா ,ஃப்ரெஷ்ஷா இருக்கிறதை பார்த்து வீட்டுக்கு வர்ர எலக்ட் ரீஷியன் மேல ப்ளம்பர் மேலல்லாம் சந்தேக படவேண்டி வர்ர காலத்துல கொய்யால தப்பு பண்ணிட்டமோன்னு இழந்த சக்தி வைத்தியர்களை தேடி ஓட வேண்டி வந்துர்ரது.

அதே நேரம் மேற்சொன்ன பர்சனாலிட்டி -அட்வெஞ்சர் – நாலெட்ஜ் எல்லாத்தையும் வச்சுக்கிட்டு மந்தை மந்தையா குட்டிகளை கட்டி மேய்ச்ச பார்ட்டிங்க குட்டிகளோட இன்செக்யூரிட்டி – எதிர்காலம் பற்றிய சிந்தனை இத்யாதி வெளிப்படும்போது நாக்கை கடிச்சுக்கிட்டு கொய்யால தப்பு பண்ணிட்டமே “இதுகளுக்கு கில்மாவ விட பைசா தான் முக்கியம் போல”ன்னு யு டர்ன் அடிச்சு பைசா புரட்ட கிளம்பிர்ராய்ங்க.

இந்த இழவையெல்லாம் ஓவர் கம் பண்ண முடியாதா? இது ரெண்டுத்துக்கும் இடையில உள்ள தொடர்பு தான் என்ன? எல்லாத்தையும் நோண்டி நுங்கெடுத்துருவமில்லை.
ஜாதகத்துல 10 ஆமிடம் தொழில்-உத்யோகம் -வியாபாரத்தை காட்டுது. எட்டாமிடம் மரணம் -இன உறுப்பை காட்டுது. இந்த இரண்டு அதிபதிகள் அல்லது பாவங்களுக்கு தொடர்பு ஏற்பட்டால் ரெம்ப நல்லது. தொழில்-உத்யோகம்-வியாபாரத்துல ஆர்வம்,பிடிப்புல்லாம் வரும்னு கடந்த பதிவுல சொன்னேன்.

இந்த தொடர்பால் மேற்படி நன்மைகள் ஏற்படும் அதே நேரத்துல பத்தாமிடம் கர்மஸ்தானம்ங்கறதால . கர்மங்கள் கூடும். எட்டாமிடம் இன உறுப்பை மட்டுமல்லாது பேரிழப்புகள்,விபத்துகள்,தனிமை உணர்வு, வீண்பழி,சிறை செல்லுதல், தலை மறைவாதல்,திவால் ஆதல் இத்யாதிய கூட காட்டும் என்பதால் இவையும் ஏற்படலாம்.
என்ன பாஸு இப்படி குழப்பறிங்கன்னு கோச்சுக்காதிங்க. உள்ளதை சொன்னேன் தட்ஸால். வாழும் உதாரணம் வேணம்னா சரவணபவன் அண்ணாச்சி.
தொழில் -கில்மா இரண்டுக்கும் தேவை பவர். ஹ்யூமன் பாடியில உள்ளது ஒரே பவர் அது செக்ஸ் பவர். அதனோட நோக்கம் உருவாக்குதல் (குழந்தை மட்டுமல்ல – புதிய உலகம் ,புதிய நாடு இப்படி எதை உருவாக்கனும்னாலும் இதே பவர் தான் தேவை)

எட்டு பத்து அதிபதிகள்னா கடகலக்னத்துக்கு சனி செவ் தான். இவிக ரெண்டு பேருக்கும் தொடர்பு ஏற்படும் போதெல்லாம் நாம ரெம்ப பிசியாயிர்ரம். இல்லேங்கலை. (இப்பவும் கடக செவ் நாலாம் பார்வையா துலாத்துல இருக்கிற சனியை பார்க்கிறாரு)

ஆனால் நமக்கு மட்டும் பேசிக்கல் மெடிக்கல் நாலெட்ஜ், ஹெல்த் கான்ஷியஸ் இல்லாம இருந்திருந்தா இன்னேரத்துக்கு பைல்ஸ் ,ஃபிஸ்டுலா எல்லாம் வந்திருக்கும். அதுக்குண்டான சிம்ப்டம்ஸ் எல்லாம் புஷ்கலமா வந்தாச்சு ( சனி = ஆசனம் , செவ் = ரணம்) .

ஒழுங்கு மருவாதியா ரத்ததானம் செய்துட்டம். கொசுறுக்கு ஒரு ஈத்தரை அரைலிட்டர் பெட் ரோலை ஆட்டைய போட்டுட்டு குழாயை செருகாம போனதால மறுபடி ஒரு முப்பது ரூவா பெட் ரோல் ஃபணால்.(செவ்= எரிபொருள்)

ஒரு ஃபோக்கஸ் லைட்டை ஆன் பண்றோம். எதிர்ப்பக்கம் தேஜோமயமாயிருது.ஆனால் பின் பக்கம்? இருட்டு தானே. அதைப்போல எட்டுபத்து அதிபதிகள் சேர்க்கை ,பார்வைல்லாம் தொழில் முன்னேற்றத்தை மட்டும் தந்துராது. கூடவே வேற எதையோ கூட தரும்.

டூ மச் ஈஸ் ஆல்வேஸ் பேட். அது தொழிலா இருந்தாலும் சரி.கில்மாவா இருந்தாலும் சரி. ரெண்டுக்கும் தேவை ஒரே பவர் -ஒரே இஸ்டிங்ட் . இந்த புரிதல் இருந்தாலன்றி ரெண்டுலயும் ஒரே நேரத்துல சாதிக்க முடியாது.

பவர் -இன்ஸ்டிங்ட் -புரிதல் இது மட்டும் சாதனைக்கு போதுமானதில்லை. உங்க இருப்பில் -உங்கள் உயிர்ப்பில் உங்களுக்கு சந்தேகம் இருக்கனும். உங்க இருப்பை -உங்களிலான உயிர்ப்பை கு.பட்சம் உங்களுக்காச்சும் நிரூபிச்சாகவேண்டிய கட்டாயம் இருக்கனும்.

அப்பத்தேன் பவர் ஜெனரேட் ஆகும். ஜெனரேட் ஆனது இத்துனூண்டு பவர்னு வைங்க அந்த பவரை நீங்க கில்மாவுல இழந்துட்டா தொழில்,உத்யோகம்,வியாபாரம்லாம் பெப்பே காட்டிரும்.

நீங்க உயிர் உள்ள வஸ்துங்கற ஃபீலே இல்லாம – நீங்களும் இருக்கிங்கங்கற ஞா கூட இல்லாம உங்க குடும்பம், உங்க தெரு , உங்க ஏரியா பிஹேவ் பண்ணனும். நான் இருக்கேனா இல்லையாங்கற சந்தேகம் உங்களுக்கே வந்துரனும்.டு பீ ஆர் நாட் டுபீ – வாழ்வதா? சாவதா?ங்கற கேள்வி வந்துரனும். அப்பத்தேன் எனாரமஸ் பவர் ஜெனரேட் ஆகும்.

அந்த பவரை உண்மையான உருவாக்குதலில் ஐ மீன் தொழில் உத்யோகம் வியாபாரம் இத்யாதியில செலவழிச்சும் அது கம்ப்ளீட்டா எக்ஸாஸ்ட் ஆகாம செக்ஸுக்கு உங்களை டைவர்ட் பண்ணும்.

தொழில் -கில்மா ஒற்றுமை:
1.நீங்க உங்க உயிர்ப்பை – இருப்பை உங்களுக்கும் கன்வே பண்ணி ஊருக்கும் பறை சாற்ற முடியும்.
2.உருவாக்க முடியும்
3உங்க மரணத்தை தள்ளி போட முடியும் ( நீங்க செத்துப்போகலாம் -ஆனால் நீங்க உருவாக்கினவை இருக்கும். கட்டி எழுப்பினவை இருக்கும்)

வேற்றுமை:
1.கில்மாவுல உங்கள் உயிர்ப்பு -இருப்பு உங்களுக்கு மட்டும் – மிஞ்சிப்போனா உங்க செக்ஸ் பார்ட்னருக்கு மட்டும் அஞ்சலாகும். தொழில்ல ? சொல்லனுமா என்ன?
2.கில்மாவுல நீங்க உருவாக்க முடிஞ்சதை (கொளந்தை -குட்டி) எல்லா உயிரும் உருவாக்கும் .ஆனால் தொழில்ல?
3. நீங்கள் பெற்ற குழந்தை ஆயுள் ஆரோக்கியத்துடன் வாழ்ந்து ஆளாகி -அது உங்க நிழலாவோ -நகலாவோ உருவானால் மட்டுமே – உங்க மரணத்தை ஒரு அந்தாஸா தள்ளிப்போடமுடியும். ஆனால் தொழில்ல?
அப்போ கில்மாவே வேஸ்ட் ஆஃப் டைமுங்கறியா? காலமெல்லாம் உழைச்சே ஓடா தேய சொல்றியாம்பிங்க. சொல்றேன். ப்ளீஸ் வெய்ட்..

தொழிலும் கில்மாவும்

அண்ணே வணக்கம்ணே !
“ல்வ் மூட் ஸ்டார்ட் ..அவ்வ்”ங்கற தலைப்புல ஒரு தொடரை கடந்த மே மாதம் 24 ஆம் தேதி ஆரம்பிச்சு ஆகஸ்ட் 14 ஆம் தேதி ஒரு வழியா முடிச்சுட்டம். ஒரு காலத்துல ஆனந்த விகடன் காரவுக படக்குன்னு விலைய லம்ப்பா ஏத்திட்டாய்ங்க. நாம இந்த பாடாவதி தமிழ் பத்திரிக்கைகளை துட்டு கொடுத்து வாங்கிறது ரெம்ப ரேர். இப்பம்லாம் ஞா கிழமைன்னா ஏதோ ஒரு இழவை வாங்கிர்ரம் அது வேற கதை .

என்னடா நம்ம பத்திரிக்கைய காசு கொடுத்து வாங்கனம்னாலும் காசு தேவையில்லியா? ரீடர்ஸுக்கு பணம் பத்தின பேசிக்கல் நாலெட்ஜையாவது கொடுக்கனுமில்லையான்னு நமக்கு தோனுச்சு. உடனே எடுத்தோம் காகிதத்தை .தீட்டினோம் மடலை. வந்தது நாணயம் விகடன் பக்கங்கள் பிறகு நாணயம் விகடன். நமக்கு? நன்றி சொல்லி நாலணா கார்டு கூட எழுதலை மவனுங்க. சரி உடுங்க. ராகதேவனுக்கே டெஸ்ட் வச்சு ஃபெயில் ஆக்கின பரம்பரையாச்சே..
சரீ. இ இந்த மொக்கயெல்லாம் இப்பம் எதுக்குன்னு கேப்பிக சொல்றேன்.

ஜோதிடங்கறது வாழ்க்கையோட நேரடி தொடர்பு கொண்ட சமாசாரம். நம்ம சைட்டை படிக்கிறவுகளுக்கு தினசரி ஒரு டிப்பாவது கட்டாயம் கிடைக்கும். உ.ம் கோபம் காரணமா ரெம்ப அவதியா செய்யுங்கள் ரத்ததானம்.

இருந்தாலும் நீங்க உங்க தொழில் உத்யோகம் வியாபாரத்துல ஹிட் அடிச்சாதேன் நம்ம சைட்டும் ஹிட் அடிக்கும். நீங்க பத்து காசு கூடுதலா சம்பாதிச்சு – இன்னம் கொஞ்சம் நிம்மதியா இருந்தா நம்ம எழுத்துக்களை இன்னம் நாலு பேருக்கு சொல்விங்களே. அதனாலதேன் இன்னைக்கு தொழிலும் -கில்மாவுங்கற இந்த தொடரை ஆரம்பிச்சிருக்கன்.

ஒரு ஆண் பெண் என்ன செய்தாலும் அடி மனதில் “அதை” செய்வதாக ஒரு உணர்வு இருக்கும். அல்லது “அதை” எப்போது துவங்கலாம் என்ற திட்டமிடலோ – எப்போது துவங்கும் என்ற எதிர்ப்பார்ப்போ இருக்கவே இருக்கும்.

ஆண் பெண் சேர்ந்து செய்யும் வேலைக்கு மட்டுமல்ல தனித்து செய்யும் செயலுக்கும் ஒரு விதி இருக்கிறது.
1.”அது” கிடைக்காததால் செய்யப்படுவது
2.”அது” கிடைக்கும் என்று செய்யப்படுவது
3.”அது” கிடைத்துவிட்டது போன்ற பிரமையில் செய்யப்படுவது
4.”அது” கிடைத்துவிட்டது இனியும் கிடைக்கும் என்ற நிறைவுடன் செய்யப்படுவது
5.”அது” கிடைக்காது. இனியும் கிடைக்கவே கிடைக்காது என்ற முடிவுடன் செய்யப்படுவது

இதுவரை நான் சொன்னது தனிப்பட்ட செயல்கள் குறித்தே. செய்தொழில்,உத்யோகம், வியாபாரம் என்று பார்த்தால் இந்த விதிகள் இன்னும் பக்கா.
இதில் ஜோதிடம் எங்கண்ணே வருதுன்னு என்று எரிச்சல் கிளம்புதுல்ல? வரும் நிச்சயம் வரும்.

ஜாதகத்தில் 10 ஆமிடம் செய்தொழில்,உத்யோகம், வியாபாரம் ஆகியவற்றை காட்டும். எட்டு என்பது இன உறுப்பை காட்டும் பாவம். எட்டும் பத்தும் தொடர்பு கொண்டால் தொழில் ஓங்கும்-செழிக்கும் என்று ஒரு விதி உண்டு.

ஏதோ ஒரு படத்தில் சிவாஜி டாக்டர். சரோஜாதேவி நர்ஸ். இருவருக்கும் லவ்ஸ். அதை எம்.ஆர் ராதா ” மேஸ்திரி சித்தாளை கண்ணாலம் கட்டறாப்ல” என்று நக்கலடிப்பார்.

எட்டு பத்து பாவங்களுக்குகிடையில் /8-10 அதிபர்களுக்கிடையில் தொடர்பு ஏற்பட்டால் தான் ஈடுபட்டுள்ள துறை சார்ந்த நபரிடம் காதல் /கில்மாவுக்கு சான்ஸ் ஏற்படும்.தம் தொழிலை உடலுறவே போல் கருதி ஆர்வமுடன் ஈடுபடலாம். பலன் இத்துடன் முடிந்துவிடவில்லை.

எட்டு மரணத்தை விபத்துக்களை காட்டும். பேரிழப்பு,தனிமை உணர்வு ,வீண் பழி ,சிறை செல்லுதல் இத்யாதி பலனையும் தரவல்லது.

மரணம், விபத்து,தனிமை உணர்வு ,வீண்பழி,சிறை இத்யாதிக்கும் செய்தொழில்,உத்யோகம், வியாபாரங்களுக்கும் என்ன தொடர்பு ? இதுக்கும் கில்மாவுக்கும் என்ன லிங்க்? எல்லாத்தையும் விரிவா பார்க்கத்தான் போறோம். அடுத்தடுத்த பதிவுகளில். ஓகேவா உடுங்க ஜூட்டு..

18 வகை காதல்: சுக்கிர காதல்- பரிகாரம்

அண்ணே வணக்கம்ணே !
தகவல் தொழில் நுட்ப புரட்சி ஆருக்கு நெல்லத பண்ணுச்சோ இல்லையோ நம்ம வாழ்க்கையில விளக்கேத்தி வச்சிருக்கு. மொத மொதலா ப்ளாக் ஆரம்பிச்சப்போ (ஜூலை 31,2000) நாம ப்ரெட் ஹன்டர். இன்னைக்கு தினத்தந்திய விட்டு கழண்டுக்கிட்டும் ஒரு மிடில் க்ளாஸ் ஃபேமிலிக்குண்டான மருவாதி,சௌகரியங்களோட வாழ்ந்துட்டிருக்கோம்னா அதுக்கு காரணம் இணையம் தான்.

நம்முது கடகலக்னமாச்சா -சுக்கிரன் பாதகாதிபதியாச்சா -இவரு அன்ன,பான சேவனத்தை காட்டும் ரெண்டாம் இடத்துலயே நின்னாரா தாளி எவ்ள உசரம் பறந்தாலும் படக்குன்னு சோத்துக்கில்லைங்கற நிலை வந்துரும். இது எப்பூடி சால்வ் ஆச்சுன்னு பார்த்தா இந்த கில்மா பதிவுகள் தான்.

ஆக்சுவலா ஜோதிடர்னா சீன் போடனும். நமக்கு இந்த ஜோதிடர் ரோல் டெம்ப்ரரிதான். நமக்குள்ள ஒரு சேகுவாரா இருக்காரு. ஒரு ஃபிடல் காஸ்ட் ரோ கிடைச்சா தாளி இந்தியாவை மட்டுமில்லை பாக்கிஸ்தானையும் -விட்டா பங்களா தேஷையும் கூட டெவலப் பண்ணி காட்டிருவம். அதனால இன்னைக்கு பிளைப்பு நடக்கிறதுக்காவ ஒரு ஃப்ரேம்ல நம்மை சிறை வைக்கிறது விருப்பமில்லாமையால தில்லா மனவியல் பாலியல் பதிவெல்லாம் போட்டுக்கிட்டு வந்தம். இதனால பலர் விலகியும் இருக்கலாம். முக்கியமா ஹிப்பாக்ரட் தாய்க்குலம். இதனாலதேன் சுக்கிரனோட எஃபெக்ட் எக்ஸாஸ்ட் ஆச்சு போல.

வந்துட்டன் வந்துட்டன். மேட்டருக்கு வந்துட்டன் . சுக்கிர காதலுக்கு பரிகாரம் சொல்லோனம். சொல்லிரலாம். நாளைக்கு நமக்கு சுகந்தர நாளு. நமக்கு சுதந்திரம் வந்த தேதி 15-08-1947. இதுல பிறப்பு எண் 6 – கூட்டு எண் 35/இதை சிங்கிள் நெம்பராக்கினா 8 .

போவட்டும் நாம குடியரசா மாறின நாளை எடுங்க. 26-01-1950 இதுல பிறப்பு எண் 8 கூட்டு எண் 24 இதை சிங்கிள் நெம்பராக்கினா 6. எட்டுன்னா சனி .ஆறுன்னா சுக்கிரன். சனி ஆசனதுவாரத்துக்கு காரகன். சுக்கிரன் இன உறுப்புக்கு காரகன். இது ஒத்துவருமா? இதனாலதேன் ஒரு ஹோமோ செக்ஸுவல் பிரதமரானாப்ல இருக்கு. நொண்டி முடம்லாம் நாடாள வந்துருச்சு. சனியோட சேர்ந்த சுக்கிரன் உருப்படுவாரா? நோ.. இந்திரா டிவோர்சி, சோனியா விடோ, வாஜ்பேயி பிரம்மசாரி (இன்னொரு பிரம்மசாரி க்யூவுல இருக்காரு)

காதல்,கண்ணாலம்,கில்மா இதுக்கெல்லாம் காரகனே சுக்கிரன் தான். இவரோட சனி லிங்க் ஆனாரு. என்ன ஆச்சு? அந்த நாள் முதல் இந்த நாள் வரை காதலுக்கு ஆப்படிக்கிறதே பொளப்பு. கண்ணாலம்னா சந்தையில எருமை வாங்கின கணக்குதான் (சனி=எருமை),கில்மான்னா ஒன்னு அது எதுக்கிருக்கோ தெரியாத வயசுல கண்ணாலம் பண்ணிர்ரது. இல்லின்னா அது சகட்டுமேனிக்கு மிஸ் யூஸ் ஆகி வளைந்து நெளிந்து செல்லும் பாதையான பிறவு பண்றது. மேலும் கில்மான்னா அது தீட்டு. ரகசியம். அசிங்கம். பல லட்சங்கள் செலவழிச்சு கக்கூஸு கட்டறானுவ ( சனி =ஆசனம்) . நாட்டை ஆள்றவன்ல எத்தீனி பேருக்கு பெட் ரூம் இருக்கு. அதுல எவ்ள நேரம் ஆக்டிவா இருக்கான்னு பார்த்தா ப்ர்ர்ர்.

எப்பூடி உருப்படும்? சந்தோசத்துல உள்ளவன் அடுத்தவனை சந்தோசப்படுத்தி பார்ப்பான். துக்கத்துல உள்ளவன்? துக்கப்படுத்தி தான் பார்ப்பான்.
ஆஃப்டர் ஆல் ஒரு தேதியில சுக்கிரன் கெட்டதுக்கே இத்தீனி ஆப்புன்னா.. ஜாதகத்துலயே சுக்கிரன் கெட்டா -அதுவும் அந்த பார்ட்டி லவ்வுன்னு போனா எந்தளவுக்கு பல்பு வாங்குவான் ரோசிங்க.

இதுக்கெல்லாம் பரிகாரமில்லையான்னா இருக்கு. சுக்கிரன்னா ருசி. உணவுக்கு ருசியை கொடுக்கிறது உப்பு,சர்க்கரை,காரம்,புளிப்பு தான். இதை பாதியா குறைச்சுக்கிட்டாலே 25% தோஷம் பரிகாரமாயிரும். அடுத்து சுக்கிரன்னா ரசனை. இசை,சங்கீதம்,நடனம்,நாட்டியம்,ஓவியம்லாம் சுக்கிர காரகம் தான் .இதையெல்லாம் வாழ்க்கையிலருந்து விரட்டி விட்டுருங்க.இன்னம் மேட்டருக்கு வரலைல்ல. வந்துட்டன். சுக்கிர காரகங்களில் தலையாயது கில்மா.

சுக்கிர பலம் இல்லாத ஜாதகர்கள் லவ் பண்றதே வித் அவுட்ல ரயிலேறின மாதிரி. இதுல கில்மான்னா வேற வினையே வேணாம். அதுக்குன்னு ஈர கோவணம் கட்டி கண்ட் ரோல் எல்லாம் பண்ணாதிங்க. கர்னாடகாகாரவுக மாதிரி பாடியே அணைய திறந்து விட்டுரும். அதுக்காவ ஒர்ரி பண்ணாதிங்க.

வேறுந்தரையில படுங்க. ஃபர்னிச்சர்ஸை அவாய்ட் பண்ணுங்க ( மேசை ,நாற்காலி உட்பட) . சொந்த வாகனத்தை யூஸ் பண்ணாதிங்க.பப்ளிக் ட்ரான்ஸ்போர்ட்டையே உபயோகிங்க.

பெண்கள் (உங்களுக்கு முறையாகக்கூடாது) மனம் குளிர அவிகளுக்கு சின்ன சின்ன பரிசுகள் கொடுங்க. அவிகளுக்கு உதவி செய்ங்க ( ஆனா ரெம்ப ஈஷிக்காதிங்க) தப்பித்தவறி கண்ணால மாயிருச்சுன்னு வைங்க. அழகு ,அலங்காரம்,ஃபேன்சி,நாவல்ட்டிக்கெல்லாம் தடா போட்டுருங்க. டிஃபனுக்கு என்ன, லஞ்சுக்கு என்னன்னு ப்ளான் பண்ணாதிங்க. மார்க்கெட்ல எது சீப்பா கிடைக்குதோ அதையே சமைச்சு சாப்பிடுங்க. உப்பு,காரம் ஏத்தக்குறைச்சலா இருந்தா பொஞ்சாதி மேல பாயாதிங்க. சூப்பர் கில்மா காத்திருக்குன்னு அருத்தம்.

மாதர் போகம் மாதமிருமுறைங்கறதெல்லாம் கண்ணாலமான புதுசுல கஷ்டம் தேன். அதனால மத்த ரெமிடீஸை கட்டாயம் ஃபாலோ பண்ணுங்க. பசிக்காக அல்லாது ருசிக்காக எதையும் திங்காதிங்க,குடிக்காதிங்க. தூக்கத்தை எந்தளவு குறைச்சா அந்தளவு நெல்லது.