இறைவன் உலகச்சிறையின் ஜெயிலர்

இறைவா !
நீ அழுத்தக்காரன் .உன்னை நீ வெளிப்படுத்திக்கொள்வதே இல்லை
நான் நெஞ்சழுத்தக்காரன் .உன்னை நான் வெளிப்படுத்தாது விடுவதாயில்லை
நீ ராமனிலும் ராவணனிலும்
ஒரே நேரத்தில் செயல்பட்ட பொறி நீ
உன்னை பொறி வைத்து பிடிப்பதே எனது ஐம்பொறிகளுக்கு
நான் கொடுத்துள்ள செயல் திட்டம்

புராண புருடாக்களையும் மீறி படைப்பின் ஒரே புருஷன் நீ என்று உணர்கிறேன்
பௌராணிகர்கள் புராண புருஷன் என்றாலும்
ஜோதிடர்கள் கால புருஷன் என்றாலும்
நீ சிங்கிளாக இருக்கும் சிங்கம் என்று அவதானிக்கிறேன்

ஒரே சத்தியத்தை வெவ்வேறானதாய்,புதிதே போல்
வெவ்வேறு ஆசாமிகளுக்கு வெளிப்படுத்திய உன் கற்பனை வளம் பேஷ் !
அதானால் ஆனது உலக அமைதி ஸ்மாஷ் !

“பிட்டா பிடி” என்று நீ அவ்வப்போது கொடுத்த சூசகங்களை
சூட்டிகை தனத்துடன் செட்டாக்கி படித்தவன் நான்

இறைவா ! எங்கும் உறைபவா !
என் முக விலாசத்தை எம் அக விலாசத்தில் ஒளித்தவா !

ஓருயிராய் இறங்கி வந்து பல்லுயிராய் பிரிந்து எம்மில்
ஒளிர்ந்தவா !

நீ உலகச்சிறையில் ஜெயிலராக இருக்கிறாய்
ஆயுள் தண்டனை கைதிகளுக்கு
ஆர்டர்லி பதவி கொடுத்து என் போன்ற
பிக்பாக்கெட்டுகளுக்கு டின் கட்ட வைக்கிறாய்
இது உனக்கு ஃபன் ! இதன் பின்னான காரணம் எங்கள் ஸின் !

நீ ஒரு நல்ல தகப்பனை போல் இருக்கிறாய்
கெட்ட குமாரர்கள் வீடு திரும்பும்போது விருந்து வைக்கிறாய்
உன்னை அண்டியே வாழ்ந்த எம்மை உண்டியில்லை உனக்கு
பட்டினியே மருந்து என்கிறாய்

நீ என் கப்பலின் தலைவன்
ஓட்டை வழியே கடல் நீர் குபு குபுக்கும்போது
கப்பலையே காலி செய்கிறாய்
நான் உன்னை மெட்ராஸ் பாஷையில் வைதாலும்
செவிடனாய் நடிக்கிறாய்

ஆம் நீ ஒரு செவிடன்
உனக்காக எத்தனை எத்தனை கச்சேரிகள்

நீ ஒரு ஊமை
உன் மவுன மொழிக்குத்தான் எத்தனை எத்தனை அகராதிகள்

நீ ஒரு அம்பயர்
விளையாட்டு வீரர்கள் உன்னை பணியும்போது
பாப்கார்ன் சாப்பிடுகிறாய்
அவர்கள் உன்னை புகழ்ந்து பாடும்போது
காது குடைகிறாய்
இவர்கள் எதையேனும் ஆட முற்படும்போது
ஆயிரம் கண்களுடன் பார்க்கிறாய்

இறைவா !
நீ ஒரு நல்ல செவிலித்தாய்
ஒவ்வொரு முறையும் நான் பிரச்சினைகளால்
பிரசவிக்கப்படும்போது
தலை கீழாய் தொங்க விட்டு
புட்டத்தில் அறைகிறாய்

இறைவா !
நான் அனுபவப்பள்ளிக்கு போக மறுத்து அடம் பிடிக்கும்போதெல்லாம்
என் சட்டைப்பையில் ஒரு ASA சாக்லெட்டை திணித்து ஆசை வாகனத்தில் ஏற்றுகிறாய்

மரணத்தின் நிழல் கூட மனிதர்களை விரட்டுவது போல்
உன் குறித்த கற்பனைகள் கூட சிதறிக்கிடக்கும் என் சிந்தனைகளை
திரட்டுகின்றன

நழுவும் காலமானாய். ஒரு நாள் நானும் காலமாவேன்
என்று புரிவித்தாய்
காதலியர் விழி மொழியறியவே அகராதி தேடிய எனக்கு
உன் மொழியற்ற மொழியும் புரியும் நிலை தந்தாய்
என்னில் நிகழும் ரசவாதத்தை கணிணிக்கு ரைட் செய்யும்
கலை தந்தாய்

கனவாய் கலைந்தாலும் விடியல் கனவாய் நாள் முழுக்க இதம் தந்தாய்
உன் பாதம் பணிதலும்
உனை ஏற்றி புகழ்தலும் வெற்று என்று ஒற்றறிந்த பின்னும்
நன்றி என்ற வார்த்தையின் கனம் போதாதோ என்ற தலைகனத்தில் கர்த்தாவே
உன்னை கவிதையில் கனம் பண்ணுகிறேன்

நான் தட்டாமலே திறந்தாய்
நான் கேளாமலே தந்தாய்

அதற்கொரு நன்றியுரைக்கும் மடமையையும் தந்தாய்

********
நீ ஒரு ஆசிரியன் .
கடைசி வரிசைக்காரர்களை கண்டு கொள்வதே இல்லை
முன் வரிசையில் இருக்கும் என்னை முட்டிக்கு முட்டி தட்டுகிறாய்

நீ ஒரு பொற்கொல்லன்
தகரங்களை புறந்தள்ளி தங்கங்களைத்தான் சுடுகிறாய்
நீ ஒரு ரசவாதி இரும்புகளை தங்கமாக்குகிறாய்
தங்கங்களை ஈயமாக்கி இரும்புகளின் முன் இளிக்க வைக்கிறாய்

நீ ஒரு சதிகாரன்
உன்னை மறக்கடிக்கும் பலதையும் எமக்கு நினைவூட்டி
உன்னை நினைவுறுத்தும் சிலதையும் நினையாது அம்னீஷியாவுக்கு
அடிகோலுகிறாய்

நீ ஒரு நல்ல நடிகன்.
நயவஞ்சகர்களிடம் இளித்தவாயனாய் நடந்து கொள்கிறாய்
அவர்களை அழிவுப்பள்ளத்தாக்கை நோக்கி செலுத்துகிறாய்

துவைத்த துணிகளை வெள்ளாவியில் வைத்து சுடுகிறாய்
அழுக்கு துணிகளையோ வெள்ள நீரில் நனைக்கிறாய்

நீ ஒரு விவரமான சவரத்தொழிலாளி
ஒருவனுக்கு உபயோகித்த அனுபவ ப்ளேடை மற்றொருவனுக்கு
உபயோகிப்பதே இல்லை

நீ ஒரு நல்ல வங்கி காசாளன்
எம் கணக்கில் காசு இருந்தால் நீ கொடுக்காதிருப்பதில்லை
உனக்கு முகமன் கூறாவிட்டாலும்

நீ ஒரு நல்ல இயக்குனன்
கடந்த பிறவியில் பூத உடலிழந்து
ஆன்ம வடிவில் அழுது அரற்றி
நாங்கள் முக்தியே நோக்கமாய் எழுதிக்கொடுத்த
கதைக்கு தான் திரைக்கதை எழுதி இயக்குகிறாய்
இன்றோ புக்தியை நோக்கமாய் கொண்டு உன்னை
சகட்டு மேனிக்கு சவட்டுகிறோம்

நீ ஒரு நல்ல நீதிபதி
நீ வழங்கும் பிறருக்கான தீர்ப்புகள்
பத்தாம் வாய்ப்பாடு தனமாய் புரிந்து விடுகின்றன

நீ மோசமான நீதிபதி (?)
எனக்கான உனது தீர்ப்புகள் மட்டும் புரிவதே இல்லை
அல்ஜீப்ரா கணக்காய்

செக்ஸுக்கு மாற்று பணம்,புகழ்,அதிகாரம்

“மனிதர்கள் ஸ்தூலமாக எந்த செயலில் இறங்கினாலும் சூட்சுமத்தில் அவன் செய்வது கொல்வது அ கொல்லப்படுவது என்ற இரண்டு செயல்களையே”

மேலும் குழந்தையின் மனதில் கலக்கப்பட்ட தான் என்ற எண்ணம் அதன் ஆத்மாவுக்கு (செல்ஃப்) மாற்றாக வலுப்படுகிறது. இதனால் சற்றே விழிப்புற்ற மனிதர்களின் ஆழ்மனதில் தமது ஒத்திசைவுக்கு ,இயற்கையுடனான ஒருங்கிணவுக்கு தத்தமது அகந்தையே காரணம் என்ற எண்ணமும் ஏற்படுகிறது. அகந்தை ஒழிந்தால் தம்மில் ஒத்திசைவுக்கும் ,இயற்கையுடனான ஒருங்கிணவுக்கும் வழி ஏற்படும் என்ற எண்ணத்தால் மனிதர்கள் ஒருவர் ஈகோவை அடுத்தவர் காயப்படுத்தி அழிக்கப்பார்க்கின்றனர். அகந்தையே தாம் என்ற எண்ணத்தில் வாழும் மனிதர்கள் தம் ஈகோ சற்று உரசிப்பார்க்க பட்டாலும் உயிரே போய்விட்டதாய் எண்ணி தவித்து போகின்றனர்.

ஆனால் சற்றே விழிப்புற்ற மனிதர்களாகட்டும் மந்தமான மனிதர்களாகட்டும் அறிந்து கொள்ளாத ஒரு ரகசியம் இருக்கிறது. அது ஏற்கெனவே அவர்கள் பரஸ்பர ஒத்திசைவுடன் தான் இயங்குகிறார்கள். இயற்கையுடன் பிணைக்கப்பட்டேதான் இருக்கிறார்கள் என்பதே

மனிதன் எப்போது (நாகரிகமடைந்த பின் வந்த தலைவலி இது) தான் இந்த படைப்பின் மையம் என்று பிரமிக்க துவங்கினானோ எப்போது அவனில் அகந்தை வலுப்பெற்றதோ அது முதல் அவனை மரண பயம் துரத்த ஆரம்பித்துவிட்டது. படைப்பின் மடியில் நிற்சிந்தையாக வாழ்ந்த மனிதன் கால கிரமத்தில் படைப்பின் மடியிலிருந்து இறங்கி தளர் நடை பயின்று ஓடினான் ஓடினான் செயற்கையின் எல்லைக்கே ஓடினான். இயற்கையின் குழந்தையாய் வாழ்ந்த போது மரணம் என்பது
அக்கணத்தில் நிகழக்கூடிய ஒரு சாதாரண நிகழ்வாக இருக்க, செயற்கை வாழ்வில் அகந்தை விஸ்வரூபம் எடுத்து விட்ட நிலையில் மரணம் ..அட சட் மரணம் குறித்த எண்ணமும் தாங்கொணாத துயரை தர ஆரம்பித்தது. மரணம் குறித்த நினைவுகள் அவன் வாழ்வை பாதிக்க துவங்கி விட்டன.

பாரதம் சுதந்திரம் பெறுவதற்கு சற்று முன் ப்ளேக் வியாதி பரவிய போது கூட மக்கள் லட்சக்கணக்கில் செத்தனர். ஏனென்றால் அது மனிதனில் அகந்தை வலுப்பெறாத காலம் அது. இப்போதும் சரி ஒரு கோழிப்பண்ணையில் ஒரு கோழிக்கு நோய் கண்டால் அந்த பண்ணையில் உள்ள அனைத்து கோழிகளுக்கும் வியாதி பரவி செத்துப்போகின்றன். எஸ்.டி.க்கள் வாழும் தாண்டாக்களில் தொற்று நோய் வேகமாக பரவுகிறது. ஏனென்றால் அவர்களில் அவர்களிடையே ஊண கண்களுக்கு தென்படாத ஒரு இணைப்பு இருக்கிறது. அவர்கள் தமக்கு நிகழ்வதை எள்ளத்தனை கூட மன அளவில் எதிர்ப்பதில்லை. தொற்று நோய்கள் கிராமங்களில் பரவுமத்தனை வேகமாய் நகரங்களில் பரவுவதில்லை ஏனென்றால் நம்மிடையே அந்த ஒத்திசைவும்,ஒருங்கிணப்பும் இல்லை. அந்த லிங்க் கட் ஆகிவிட்டது. அதை கட் செய்தது நம் அகந்தை தான்.

புனரபி மரணம் புனரபி ஜனனம்:
மரணம் என்பது ஒரு சாதாரண நிகழ்வு. புனரபி மரணம் புனரபி ஜனனம். ஆனால் அகந்தை நிறைந்த மனது மரணத்தை எதிர்க்கிறது. இந்த எதிர்ப்பினால் மரணம் வலிமையானதாக மாறியது. இவ்வாறாக விஸ்வரூபம் எடுத்த மரணம் மனிதனை, மனித மனத்தை விரட்டுகிறது. இந்த மரண பயத்திலிருந்து விடுதலை பெற ஒரே வழி மரணமடைதல் தான். மரணமுற்றவனுக்கு தான் மரண பயமிருக்காது. ஒரு புறம் மரண பயம் நடு நடுங்க செய்தாலும், மறுபுறம் இயற்கையுடனான ஒருங்கிணைப்புக்கு தடையாக தான் கருதும் உடல் மரணத்தால் உதிர்ந்து போகும் என்ற எண்ணம் மனிதனை மரணம் நோக்கி நடத்த ஆரம்பித்தது.

இருள் மரணத்தின் அடையாளம். தனிமை மரணத்தின் நிழல். இதரருடன் தொடர்பு கொள்ள முடியாது போவதும் மரணத்தின் நகலே. அதனால் தான் மனிதன் நெருப்பை பூசித்தான். சூரிய சந்திரர்களை பூசித்தான். கும்பலாகவே வாழ்ந்தான். காடுகள் அவன் அந்தரங்கத்திலான விருப்பத்தை (கொல்லுதல் அ கொல்லப்படுதல்) முழுமையாக நிறைவேற்றியது. இயற்கையுடனான ஒத்திசைவு, மரணத்துடனான அந்த கண்ணாமூச்சி ,எக்கணமேனும் மரணம் என்ற நிலை ,கும்பலாக வாழும் தன்மை ஆகியனஅவனை அமைதிப்படுத்தின.

காலமே காலன் – காலாதீத நிலையே சுவர்கம்:

செக்ஸின் போது வீரியம் நழுவும் போது கிட்டும் காலாதீத நிலை (ப்ளாக் அவுட்) மரணம் போன்றே இருந்ததால் அதன் மீதான ஆர்வம் மனிதனை செக்ஸில் இறங்க செய்தது.

——————-
ஆண் பெண்களில் சுய பால் தனமையுடன் எதிர்பால் தன்மையும் உண்டு. சுய பால் தன்மை பதிக்கு சற்று அதிகமாகவும் (60 %)எதிர்பால் தன்மை சற்றே குறைவாகவும் இருக்கும். உதாரணமாக பெண்ணில் ஆண் தன்மை 40 %(10 சதம் குறைவு) , ஆணில் பெண் தன்மை 40% (10 சதம் குறைவு). இதன் படி பார்த்தால் எந்த ஆணும் முழு ஆண்மகன் கிடையாது. எந்த பெண்ணும் முழு பெண் கிடையாது.ஒரு ஆணும் பெண்ணும் இணையும்போது இந்த பற்றாக்குறை நிறைவு செய்கிறது. இவனில் உள்ள ஆண் தன்மையும் அவளில் உள்ள ஆண் தன்மையும், இவளில் உள்ள பெண் தனமையும், அவனில் உள்ள பெண் தன்மையும் இணையும் போதுதான் நிறைவு ஏற்படுகிறது . இதுவும் இணைப்புக்கான துடிப்பை அதிகரிக்கிறது

——————-
மனிதன் சஞ்சார வாழ்க்கையை மேற்கொண்டிருந்த வரையில் பெரிதாக பிரச்சினைகள் ஏதுமின்றி மனிதனின் ஆழ் மனதின் அடிப்படை இச்சைகள் நிறைவேறிவந்தன.(கொல்லுதல் /கொல்லப்படுதல்)

ஸ்திரவாசம்:
பின்பு ஏற்பட்ட ஸ்திரவாசம் தான் மனித வாழ்வின் எதிர்கால பிரச்சினைகள் அனைத்துக்கும் அடிக்கல் நாட்டியது. விவசாயத்துக்கு ஏற்றதாய் சீர்திருத்திய நிலம், அதிகப்படி விளை பொருள் ஆகியன தனியார் சொத்தாக உருவாகின. இவை தனது வாரிசுகளுக்கே சேர வேண்டும் என்ற ஆணின் எண்ணம் பெண்ணடிமைக்கு அடிகோலியது. குடும்ப அமைப்பு தோன்றியது. செக்ஸ் இரண்டாம் பட்சமாக மாறி வாரிசை உருவாக்குவதே முதல் லட்சியமானது. செக்ஸ் என்பது ஏறக்குறைய தடை செய்யப்பட்டுவிட்டது. (அந்த காலத்தில் மருத்துவத்துறையில் இன்றைய அளவுக்கு முன்னேற்றம் இல்லாததால் குழந்தை பேறின் போது மரணங்கள்,குழந்தை மரணங்கள் அதிகம். யுத்தங்களில் போரிட, விளை நிலங்களில் பாடுபட மனித வளம் பெரிய அளவில் தேவைப்பட்டது. மேலும் குடும்ப கட்டுப்பாடு முறைகளும் கிடையாது. எனவே பெண் குழந்தைகள் பெறும் இயந்திரமாக மாறினாள் . செக்ஸுக்கு வாய்ப்பு மேலும் குறைந்தது.

யுத்தங்கள் எதிர் குழுக்களின் தாக்குதலின் போது தவிர மனிதனின் கொல்லும், கொல்லப்படும் இச்சை நிறவேறும் வாய்ப்பும் குறைந்தது .மனிதனின் அடிப்படை இச்சைகளான கொல்லும்,கொல்லப்படும் இச்சைகள் நிறைவேறாத நிலை ஏற்பட்டது

ஆணின் வாரிசு மோகத்தால் பெண் கைதியானாள். காட்டில் வாழ்ந்த வாழ்வில் ஆணுக்கு சமமான உடல் பலம், துணிச்சல் கொண்டவளாக இருந்த பெண் நாட்டிலான வாழ்வில் உடல் பலத்தை இழந்தாள். இயற்கை அந்த நசிவை ஈடுகட்ட அவளை மானசிகமாக வலுப்படுத்தியது. அவளில் பாதுகாப்பற்ற தன்மை அதிகரித்தது. உடல் ரீதியான, (+மன ரீதியான ) பலவீனமே பாவங்களின் கங்கோத்ரி என்பதால் பெண் சதிகாரியாக மாறினாள்.இதனால் ஆண்,பெண்கள் திருமண பந்தத்தையும் மீறி தனிமையை அனுபவிக்க வேண்டியதாகி விட்டது. இயற்கையுடன் இணையத்துடித்த ஆண் பெண்கள் தமக்குள்ளேயே தனிமைப்பட்டு போனார்கள் .தனிமை மரணத்துக்கொப்பானது என்பதை ஏற்கெனவே கூறியுள்ளதை நினைவு படுத்திக்கொள்ளவும்.

செக்ஸுக்கு மாற்று:

கொல்லுதல்/கொல்லப்படுதல் அதற்கு மாற்றான செக்ஸ் ஆகியன ஏறக்குறைய தடை செய்யப்பட்டுவிட்ட நிலையில் தனது அடிப்படை கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்ள மனிதனுக்கு மாற்று ஏற்பாடு தேவைப்பட்டது.

அதே சமயத்தில் ஒரு குழு விளைவித்த அதிகப்படியான விளை பொருட்களை கொடுத்து மற்றொரு குழுவினரிடம் உள்ள த்மக்கு தேவையான விளை பொருட்களை பெற பண்ட மாற்று முறை ஏற்பட்டது, பின் தங்க,வெள்ளி நாணயங்கள் அமலுக்கு வந்தன. பணம் உருவானது. செக்ஸில் கிடைக்கக்கூடிய அனைத்து உணர்வுகளும் பணத்தில் கிடைப்பதை மனிதனின் ஆழ்மந்து உணர்ந்து கொண்டது. செக்ஸுக்காவது மற்றொரு துணை தெவைப்படுகிறது. பண விஷயத்தில் அதுவும் கிடையாதே..

நேரிடையாக கொல்லவும்,கொல்லப்படவும் உடல் பலம், தைரியம் தேவைப்பட்டது. செக்ஸில் இவற்றின் தேவை குறைவுதான் என்றாலும் கட்டாயம் தேவை. ஆனால் பணம் சம்பாதிக்க இது ஏதும் தேவைப்படாத நிலை ஏற்பட்டது. எதிரியின் அகந்தையை திருப்தி படுத்தினாலே பணம் சம்பாதிக்க வாய்ப்பு இருந்தது. சில காலம் தன் ஈகோவை கொன்று (தன்னை) பணம் சம்பாதித்து விட்டால் பிறகு பணம் பணத்தை சம்பாதிக்க துவங்கிவிடுவதை கண்டான் அப்போது தன்னை கொன்று தான் ஈட்டிய பணத்தை கொண்டு பிறரை கொல்லும் சுகம் கிடைத்தது. செக்ஸுக்கு மாற்றாக மனிதன் உணர்ந்த பணத்தின் பாதிப்பு எந்த அளவுக்கு உயர்ந்ததென்றால் எதற்கு மாற்றாக பணத்தை ஈட்ட ஆரம்பித்தானோ அந்த செக்ஸையே மறந்து போகுமத்தனைக்கு பணம் மனிதனை பாதித்தது.

இதுவரை படித்த பதிவின் சாரத்தை மீண்டும் ஒரு தரம் ஓட்டிப்பாருங்கள்:

1.சகல உயிர்களும் முதலில் ஓருடல் ஓருயிர் என்ற நிலையில் இருந்தன.
2.பின் பரிணாம வளர்ச்சியில் பல உடல் பல்லுயிராக பிரிந்தன
3.மீண்டும் ஒன்று சேர துடிக்கின்றன.
4. அந்த மறு இணைப்புக்கு தத்தமது உடலே தடை என்று பிரமிக்கின்றன.
5. உண்மையில் அனைத்து உயிர்களையும் கண்ணுக்கு தெரியாத ஒரு தங்க நூல் சரிகை பிணைத்துத்தான் வைத்துள்ளது.
6.ஆனால் ஈகோ அதை உணர மறுக்கிறது. தான் பிரிந்தே இருப்பதாய் எண்ணச்செய்கிறது. ஒன்றிணைய துடிக்கச்செய்கிறது. அதற்கு தடை உடல் என்று பிரமிக்கச்செய்கிறது.
7.எனவே தான் மனிதர்கள் தம் உடலை உதிர்க்க துடிக்கின்றனர். அதனால் எச்செயலுக்கு பின்னும் மனிதனின் கொல்லு அல்லது கொல்லப்படும் இச்சையே இருக்கிறது
8.சற்றே விழிப்புற்றவர்கள் இணைவுக்கு தடை அகந்தை தான் என்பதை உள்ளூர உணர்ந்து தம் அகந்தையை உதிர்க்கும் தைரியம் போதாது (அது தான் தான் என்ற எண்ணம் ஈகோவை உதிர்க்கும் செயலை தற்கொலையாகவே எண்ணி நடு நடுங்கி போகிறாது.) பிறரின் ஈகோவை உதிர்க்க முயற்சி செய்கின்றனர். முட்டாள்கள் சதா சர்வகாலம் எதிராளியின் ஈகோவை உரசி பார்ப்பதில் திருப்திய்ற்று விடுகின்றனர். இதனால் தத்தமது ஈகோ மேலும் வலுப்பெறுகிறது என்பதையும் மறந்து விடுகின்றனர்
9.மனிதன் காடுகளில்வசித்தபோது சுதந்திரமாய் கொல்வதும் கொல்லப்படுவதுமாய் வாழ்ந்தான்.
10. ஓரளவு நாகரீகம் அடைந்த பிறகு கொல்வதும்,கொல்லப்படுதலும் குறைந்து போயின. பிறகு செக்ஸில் கிடைக்கும் மரணமொத்த காலாதீத நிலை மீது கவர்ச்சி கூடியது.
11. ஸ்திரவாசம், நாகரிகம்,வாரிசுக்கான தவிப்பால் செக்ஸ் பெறுதலில் பிரச்சினை ஏற்பட்டது .
12. கூடுதல் விளைபொருட்கள்/பண்டமாற்று/தங்க வெள்ளி நாணயங்கள் /பணம்/செக்ஸுக்கான மாற்றாக பணம்/ தற்போது செக்ஸையே மறக்கடிக்குமளவுக்கு பணத்தின்கவர்ச்சி

ரஜினியின் கட்டக்கடைசி சரணாகதி சன் மூவீஸிடம்

பெரிய மனிதர்களை (அப்படி சமுதாயம் கொண்டாடும்) விமரிசிப்பது ஒரு மனோ வியாதி என்று யாரோ ஒரு பெரிய மனிதர் (?) எனக்கு அறிவுரை கூறியதுண்டு.

ஆனால் நெற்றிக்கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே என்ற நக்கீரன் வழி என் வழி ஆகும். அதிலும் சமுதாய்த்தையே பாதிக்கும் நிலையில் உள்ள செலிப்ரிட்டீஸ் ஆதர்சமாக இல்லா விட்டாலும் , தரம் தாழ்ந்து விடாதிருக்க முயற்சிக்க வேண்டும்.

அதை விடுத்து பெரிய மனிதன் என்ற போர்வையில் நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்று தவறுகளை தொடர்ந்தால் என் விமர்சனம் தொடரும்.

இந்த பதிவில் கிழிக்க எடுத்துக்கொண்ட நபர் சூப்பற ஸ்டார் ரஜினி காந்த்.
இவரை ஆள் காட்டிவிட்டது வேணும்னா ஒரு பார்ப்பனரா இருக்கலாம். ஆனால் ஆளாக்கி விட்டது சூத்திர பசங்க ,சேரி பசங்க . ஆனால் ஆசாமி பார்ப்பனர்களோட விளையாட்டு பொம்மையாவே ஆய்ட்டாரு.

நேட்டிவிட்டியை பொறுத்தவரை ரஜினியின் நிலையும் என் நிலையும் ஒன்றுதான் காரணம் நானும் ஆந்திரம் வாழ் தமிழன் தான். ஆனால் நான் பேசும் தெலுங்கை கேட்டால் தெலுங்கு பண்டிதர்கள் கூட மயங்கிவிடுவார்கள். ரஜினி பேசும் தமிழை கேட்டால்?

நான் என்.டி.ஆர் ரசிகன். இன்று என்.டி.ஆரின் ஆதர்ஸ் திட்டமான 2 ரூ.க்கு கிலோ அரிசிமுதல் ஏழை மக்களுக்கு ப‌யன் தரும் பல திட்டங்களை ஒய்.எஸ் அமல் அமல் படுத்தி வருவதால் நிபந்தனையற்ற ஆதரவை தந்து வருகிறேன். (மாதமிருமுறை தெலுங்கு பத்திரிக்கை நடத்தியபடி). என்.டி.ஆர் உயிரோடு இருந்தவரை , ஒய்.எஸ்.ஆர் ஜல யக்னம் என்ற பெயரில் அணைகளை கட்டத்துவங்கும் வரை நான் என்.டி.ஆர் புகழைத்தான் பாடிவந்தேன்

ஆனால் ரஜினி?

ஆந்திராவுக்கு வந்தா நான் என்.டி.ஆர் ரசிகன்னுவார்.. நாகேஸ்வர்ராவும் பிடிக்கும்னுவாரு. அப்புறம் சந்திரபாபு என்.டி.,ஆருக்கு ஆப்பு வைக்கும்போது ஜால்ரா போடுவார்.

கர்நாடகத்துக்கு போனா ராஜ்குமார் ரசிகன்னுவார் இங்கே காவிரி தண்ணி கேட்டு நடிகர்கள் நெய்வேலிக்கு போனா இவர் தனியே உண்ணாவிரதமிருப்பார். இன்னைக்கு கன்னடனை உதைக்கனும்னுவார் நாளைக்கு மன்னிப்புன்னுவார் மறுபடி இல்லை வருத்தம் தெரிவிச்சேன்னுவார்.

அட போங்கய்யா நீங்களும் உங்கள் சூப்பற ஸ்டாரும்.

one cannot serve two bosses

one cannot raid 2 horses

கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசைன்னா எப்படி?

கர்நாடகால படம் வெளி வராட்டா ரோமமே பொச்சு அந்த நஷ்டத்துக்கு என் சம்பளத்துல வெட்டு விதிச்சுருங்கன்னனும் அதான் ஆம்பளைக்கு அழகு. வேறு மாதிரியா சொன்னா வில்லங்கமாயிரும் புரிஞ்சுக்கங்க.
ரஜினி பாவம் என்ன செய்வார் அவர் வெற்றியே இரவல் வெற்றிதான் எந்த படம் எந்த பாஷைல சக்ஸஸ் ஆனாலும் தூக்க வேண்டியது தான் .
அதுலயும் ரொம்ப மோசம் ரஜினியின் நல்லவனுக்கு நல்லவன் சினிமா சிவாஜி நடித்த ஹிட்லர் உமாநாத்தின் உல்ட்டா என்பது தெரியுமா?
“ஹிட்லர் உமாநாத்” ல சிவாஜி கோழை, மனைவி ஹிட்லரோட கதையை சொல்லி ஜும் ஏற்றி வீரனாக்கி,பணக்காரனாக்குவார். இதை தெலுங்குல உல்ட்டா அடிச்சு ஹீரோவை பயங்கர ரவுடியாக்கி “தர்மாத்முடு” னு ஒரு படம் எடுத்தானுங்க..

அதைத்தான் ரஜினியை போட்டு ஏவிஎம் நலாவனுக்கு நல்லவன் எடுத்தாங்க .

பார்ப்பனர் கூட்டத்தின் கைதி ரஜினி:

பாஷா பட டிஸ்கஷனின் போது உ.வ.பட்டு பேசிக்கொண்டே பாலா ரஜினியின் சீட்டில் உட்கார்ந்துட்டாராம்.(சி.எம்.நாற்காலி பாருங்க !) ரஜினி மறுபடி அந்த நாற்காலியில் உட்காரவே இல்லையாம். டெட்டாயில்,ஃபெனாயில் போட்டு கழுவிட்டு உட்காரலாம்னு நினைச்சாரோ என்னவோ. பாலா ! ஜால்ரா சத்தம் சகிக்க முடியலை ..கொஞ்சம் அடக்கி வாசியும் பிள்ளாய்!

ரஜினிக்கு கிடைத்த தகுதிக்கு மீறிய அங்கீகாரம் ஒரு விபத்து. ஒரு காலத்தில் வேண்டுமானால் ரஜினி ஒரு வித்யாசமான நடிகராக இருந்திருக்கலாம். வர வர மாமி கழுதைப்போலானாள் என்பது போல் அவரது பாத்திர படைப்பு ஏறக்குறைய ஒரு எம்.ஜி.ஆர் தனமாகிவிட்டது.அக்மார்க் அரைத்தமாவாகி விட்ட பிறகும் காலி பெருங்காய டப்பா மணப்பது போல் மணந்து வருகிறார். அந்த பெருங்காயத்துக்கு ஜல் ஜக் போட்டு என்ன லாபம்? ஒரு வேளை சுஜாதாவின் இடத்தை பிடிக்க ரோபோ ரயிலில் தொற்ற ஒரு முயற்சியா?

ரஜினியின் கட்டக்கடைசி சரணாகதி சன் மூவீஸிடம் தான் . ரோபோவுக்கு மூட்டை அவிழ்க்க கார்ப்போரேட் கம்பெனி யோசிக்க ஆரம்பித்துவிட சன் மூவீசிடம் நாலு காலையும் தூக்கிவிட்டார் ரஜினி.

என்னை பொருத்தவரை என் கையில் இன்றிருப்பது கப்பறையாகவேகூட இருக்கலாம். அவர்கள் தலைகளில் இருப்பது கிரீடங்களாகவே கூட இருக்கலாம். இந்த கப்பறைக்கான நோக்கம் என் எதிர் காலத்தில் தெளிவு பெறும்.

என் இருண்ட காலத்தில் என்னை நானே வெளுத்து சுத்திகரித்துக்கொண்டுவிட்டேன். இவர்களோ லைம் லைட்டின் வெளிச்சத்தில் அழுக்காகிவிட்டார்கள்.

என் அளவு கோல் ரொம்ப சிம்பிள். வெற்றிக்கும் திறமைக்கும் தொடர்பு கிடையாது. இந்த நவீனயுகத்தில் வெற்றி என்பது ஒரு விபத்து மாதிரி. நம்மை விட தகுதி படைத்தவர்கள் ஆயிரக்கணக்கில் ஒரு துண்டு பீடிக்கு கூட கதியில்லாமல் இருப்பார்கள். இதை மறந்து என் வெற்றிக்கு காரணம் என் தகுதி,உழைப்பு என்று ஜல்லியடிப்பது மதியீனம்.

ரஜினியை மக்கள் அங்கீகரித்துவிட்டார்கள். இதற்கு நன்றி தெரிவிக்க ரஜினி செய்ய வேண்டியது என்ன? எந்த கட்சிக்கு ஓட்டு போடவேண்டும் என்று சொல்வதா ? நிச்சயமாக இல்லை. ரஜினியை ரஜினியாக்கி உய்ரத்தியது சினிமா. ஆனால் அந்த சினிமாத்துறைக்கு ரஜினியால் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் அவர் நினைத்தால்

சினிமாவுக்கு ஏதோ செய்யவேண்டும் என்ற தவிப்பில் இருப்பவர்களுக்கு உதவலாம். இதுஒன்றுதான் ரஜினி செய்யக் கூடியது. ஆனால் அவரோ மீண்டும் மீண்டும் மற்றொரு சிவாஜிக்கு முயற்சி செய்தபடி சர்வைவல் பிரச்சினைகளிலேயே மூழ்கியிருக்கிறார்.

வென்றவன் அதிர்ஷ்டத்தால் வெல்கிறான். திறமையால் வெல்ல முடியாதவர்களுக்கு அவன் வழி காட்ட வேண்டும் அதுதான் அவன் அவனை வாழவைத்த‌ துறைக்கு காட்டும் நன்றி.

ஆனால் ஒன்று ரஜினியுடன் சிரஞ்சீவியை ஒப்பிட்டால் ரஜினி பெட்டர். காரணம் ரஜினி தம் மகளை நடிகையாக்கவில்லை. அவரது காதலை அங்கீகரித்து சைடு கொடுத்து பெரியமனிதராகிவிட்டார். ஆனால் சிரஞ்சீவி மகள் விஷ்யத்தில் சொதப்பி வில்லனாகி , தன் மகனை சினிமாவி திணித்து அதுவும் தன் ஜிராக்ஸ் பிரதியாக.

ரஜினி காந்த் ரசிகர்கள் அவரது படங்களில் இயக்குனர்கள் உருவாக்கி காட்டிய பிம்பத்தையே ரஜினியாக புரிந்து கொண்டார்கள்.

இதனால் தான் ரஜினியால் தமது ரசிகர்களை திருப்திப்படுத்த முடியாமல் போனதோடு அவர்கள் பார்வையிலேயே கோயானாகவும் மாறிவிட்டார். இந்த தவறான புரிதலுக்கு காரணம் ரஜினி செட்டில் மட்டுமல்லாது வெளி உலகத்திலும் சினிமாத்தனமாகவே நடந்து கொண்டது தான் ( நதி நீர் இணைப்புக்கு ஒரு கோடி நன்கொடை அறிவித்தது)

ரங்கா படத்தில் ரஜினி பேசிய வசனம் (இதோ பார் குரு! உங்களை மாதிரி 100 வயசு வாழனும்னுல்லாம் நான் ஆசைப்பட மாட்டேன் என் இஷ்டப்படி 40 வயசு வரை வாழ்ந்துட்டு போறேன்) இன்னும் எனக்கு நினைவிருக்கிறது. ஆனால் எத்தனை ஆயிரம் ரசிகர்கள் ரஜினி காட்டிய வழியில் புகையும்,போதையுமாக நாசமாகிப்போனார்கள். எனது புகைப்பழக்கத்துக்கு கூட ரஜினி தான் காரணம்.

நீண்ட ஆயுள் கொண்ட லெஜென்டுகளின் வாழ்க்கை இப்படி சந்தி சிரிப்பது சரித்திரத்தில் சகஜமான ஒன்று தான். லேட்டஸ்டாக அந்திமழை யில் அன்னார் உதிர்த்த முத்துக்களை படித்தேன். அரிக்குதுய்யா! புல்லரிக்குது..

இடம்:சிவாஜி பட வெள்ளி விழா

கபில முனி என்பவர் சொன்னாராம் (அதை ரஜினி எடுத்து கூறுகிறார்)

“ஆசைப்படு.ஆசைப்பட்டதை அடைவதற்கு விஷயத்தை சேர்த்து வை.அப்படி சேர்த்து வைத்த விஷயத்தை , சரியாக செயல்படுத்து…அது கொடுக்கும் பலனை முதலில் நீ அனுபவி…அதில் கொஞ்சம் நீ வைத்துக்கொள் . மீதியை மற்றவர்களுக்கு கொடுத்து விடு “

இத‌ற்கும் யோக‌த்துக்கும் என்ன‌ ச‌ம்ப‌ந்த‌ம்? சாங்கிய‌ யோக‌ம் இதைத்தான் கூறுகிற‌தா? என்ன‌ இழ‌வு இது?

ஆசை என்ப‌து தோன்ற‌ கார‌ண‌ம் ம‌னித‌னையும் ,இந்த‌ ப‌டைப்பையும் வேறுப‌டுத்தும் அக‌ந்தைதான். நான் த‌னியில்லை. இந்த‌ ப‌டைப்பின் பிரிக்க‌ முடியாத‌ பாக‌ம் நான். என்ற‌ உண‌ர்வுட‌ன், ப‌டைப்பில் த‌ன்னையும், த‌ன்னில் ப‌டைப்பையும் பார்ப்ப‌வ‌ன் ம‌ன‌தில் ஆசை என்ப‌து தோன்றாது. என்.டி.ஆர் சினிமாவில் வில்லன் ” டேய் இந்த ஊரே என‌க்கு சொந்தம் என்று சொல்வார் . அதற்கு என்.டி,.ஆர் “ஈ தேச‌மே நாதி”(இந்த‌ நாடே என்னுடைய‌து) என்று ப‌தில் சொல்வார். ஒரு நாட்டை என்னுடைய‌து என்ற‌ எண்ண‌மே இத்த‌னை பெருமித‌த்தை,திருப்தியை த‌ரும்போது இந்த‌ ப‌டைப்பே என்னுடைய‌து என்ற‌ உண‌ர்வும், அனுப‌வ‌மும் ஏற்ப‌ட்டு விட்டால் அந்த‌ உன்ன‌த‌ நிலையை த‌ங்க‌ள் க‌ற்ப‌னைக்கே விட்டு விடுகிறேன்.

இந்த‌ ப‌டைப்பே தான், தானே இந்த‌ ப‌டைப்பு என்று உண‌ர்ந்துவிட்ட‌ யோகி , அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உண்டு, இந்த பிண்டத்தில் உள்ளதை கொண்டு அண்டத்தை கட்டுப்படுத்தும் கலையறிந்த ஒரு யோகி “ஆசைப்படு” என்று சொன்னதாக ர‌ஜினி சொல்வ‌தை ப‌டித்த‌து சிரித்து விட்டேன். அடுத்து பாருங்க‌ள் க‌பில‌ முனி சொல்கிறாராம் ஆசைப்பட்டதை அடைவதற்கு விஷயத்தை சேர்த்து வை. எதை சேர்த்து வைப்ப‌து உண்மையிலேயே புரிய‌வில்லை. ஆசையையா இல்லை. ஆசைப்ப‌ட்ட‌தை அடைவ‌த‌ற்கு விஷ‌ய‌த்தை சேர்த்து வைக்க‌ வேண்டுமாம். (என் குறுகிய‌ மூளைக்கு ஆசை என்ற‌துமே பெண்ணும், விஷ‌ய‌த்தை சேர்த்து வைத்த‌ல் என்ற‌தும் பிர‌ம்ம‌ச்ச‌ர்ய‌மும் தான் ஸ்பார்க் ஆகிற‌து.(அபிஷ்டு..)

அப்புற‌ம் பாருங்க‌ ம‌றுப‌டி குழ‌ப்ப‌ம்.

அப்படி சேர்த்து வைத்த விஷயத்தை , சரியாக செயல்படுத்த‌ வேண்டுமாம். இவ‌ர் என்ன‌த்தை சொல்கிறார். ஒருவேளை ஓஷோ கூறும் காம‌த்திலிருந்து க‌ட‌வுளுக்கா ?

அப்புற‌ம் பாருங்க‌ ம‌றுப‌டி குழ‌ப்ப‌ம்.

அது கொடுக்கும் பலனை முதலில் நீ அனுபவிங்கறார்….அதில் கொஞ்சம் நீ வைத்துக்கொள் என்றும் சொல்கிறார். மீதியை மற்றவர்களுக்கு கொடுத்து விடு என்று முடிக்கிறார்.

துன்ப‌ம் வ‌ருகையிலே சிரிங்க‌ என்ப‌து க‌ண்ண‌தாச‌ன் வாக்க‌ல்ல‌வா?

க‌பில‌ முனி(?) அழ‌கே இத்த‌னை அழ‌காக‌ இருக்கிற‌து. இதில் ர‌ஜினியும் கொட்டேஷ‌ன் விடுகிறார்.(என்ன‌ங்க‌டா இது த‌மிழ் நாட்டுக்கு வ‌ந்த் கேடு)

அடுத்து ர‌ஜினி கோட்டேஷ‌னை பார்ப்போம்

சாப்பிட்டதை எல்லாம் உடம்பில் வைத்துக் கொண்டால் , உடம்பு கெட்டுப்போய்விடும் . சம்பாதித்ததை எல்லாம் நாமே வைத்துக்கொண்டால் , வாழ்க்கை கெட்டுப்போய்விடும்.

இதை ரஜினி தனது டேபிள் கண்ணாடி கீழே தட்டச்சி வைத்திருந்தால் ரஜினி 25 விழாவில் 75 ரூபாய் வாட்ச் ர‌ஜினி ப‌ட‌ம் போட்டு 250 ரூபாய்க்கு விற்ற‌ கொடுமை ந‌ட‌ந்திருக்காதே…
ரஜினி ரசிகனா இருப்பது என்பது சுய இன்பம் காண்பது மாதிரி ஒரு வயசு கோளாறுதான்

நானும் ஒரு காலத்துல ரஜினி ரசிகன் தான். ரஜினி ரசிகனா இருப்பது என்பது சுய இன்பம் மாதிரி ஒரு வயசு கோளாறுதான்
அதை தாண்டி வரணும். வராதவங்க இன்னும் ரஜினி ரசிகராவே இருந்துர்ராங்க. என்னதான் நான் மானசீகமா முதிர்ச்சி அடைஞ்சு ரஜினியை சீரியஸா எடுத்துக்க கூடாதுனு நினைச்சாலும் அவருக்கு அவமானம் நடக்கும்போது நான் நடை பழகிய நடை வண்டியை யாரோ அடுப்பெரிக்க உபயோகிக்கறாப்ல ஒரு ஃபீலிங்க். ரஜினிக்கு ஒரே வார்த்தை சொல்ல விரும்பறேன்.
ரஜினி சார்..சைலன்ஸ் ப்ளீஸ் ! ஏன் இப்படி வாயை கொடுத்து எதையோ புண்ணாக்கிக்கிறிங்க.

தெலுங்கில் ஒரு சூப்பர் பழமொழி உண்டு. *நோரு மஞ்சிதைதே ஊரு மஞ்சிதி. அதாவது
வாய் நல்லதாயிருந்தா ஊர் நல்லதாவே இருக்குமாம். மிஸ்டர்.பாரத் சினிமால காமராஜர் மாதிரி ஒரு கெட்டப்,ராஜீவ் மாதிரி ஒரு கெட்டப்,இவரோட அம்மாவுக்கு இந்திராகாந்தி மாதிரி பில்டப் எல்லாத்தயும் பார்த்ததுலயே ஜகா வாங்கிகிட்டது நல்லதா போச்சு. இல்லாட்டி இன்னைக்கு ரஜினி உளர்ர உளறலுக்கெல்லாம் வக்காலத்து வாங்கி செத்து சுண்ணாம்பாயிருக்கனும். பார்ப்பன,மேற்கத்திய கலாச்சாரத்தை தமிழர்கள் மேல் திணித்து காசு பொறுக்கிய மணிரத்தினத்துக்கு வக்காலத்து வாங்கினது முதல் இன்றைய சித்தர் ஆட்சி வரை ரஜினியில் லொள்ளு தாங்க முடியாததாக இருக்கிறது.

அன்றைய ஜெயலலிதா ஆட்சியில் உழைத்து வாழும் சாமானிய மக்களுக்கு சமாதி கட்டப்பட்ட போதெல்லாம் கட்டின பசுவாய் இருந்த ரஜினி சீறியெழுந்ததும், காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதையாய் ஆட்சி மாறியதும் சாதனை என்று ரஜினியும்,ரஜினி ரசிகர்களும் இன்றுவரை நினைத்து வருகிறார்கள். முதல் கோணல் முற்றும் கோணல் என்பது போல் ரஜினியின் சாதனைகள்(?) தொடர்கின்றன.

நம் வீட்டில் வைத்து சில காலம் போஷித்த பிறகு லொள்ளு தாங்க முடியாமல் துரத்திவிட்ட தூரத்து சொந்தமான கிழம் ஒன்று ஆற்றங்கரையில் நாயடி பேயடி வாங்கும் போது மனசு அடித்துக் கொள்ளுமே அது போல் என் மனசு அடித்து கொள்கிறது. கடைசி வேண்டு கோள் ! மிஸ்டர் ரஜினி கொஞ்சம் பொத்திக்கிட்டு இருங்க‌
சிவாஜி படம் ரிலீசான புதிதில் உள்ளிட்ட என் வலைப் பதிவுக்கான சுட்டியை கீழே கொடுத்துள்ளேன் .படித்து பாருங்கள்.

http://kavithai07.blogspot.com/2007/08/blog-post_18.html

தெரிந்த்தோ தெரியாமலோ எல்லோரும் தவறு செய்பவர்களே..நம்மை பொறுத்த வரை சிறு தவறாக இருக்கக் கூடிய ஒன்று அடுத்தவரின் வாழ்வையே கூட சீரழித்து விடலாம் .
“தவறு செய்தவன் திருந்த்தியாகனும்,தப்பு செய்தவன் வருந்த்தியாகனும்”
இது ஒன்றே என் எழுத்தின் நோக்கம்.

பணம் பற்றிய ரகசியங்கள்

சச்சித்தானந்த ஸ்வரூபனின் உண்மை வாரிசுகளே !

பணம் பற்றிய மர்மங்களை இந்த பதிவில் படிக்க முனைந்திருப்பதே நான் மேற்சொன்ன சத்தியத்துக்கான சாட்சி ! ஏனென்றால் பணத்தால் ஆனந்தம் கிட்டும். இந்த பூமியில் பிறந்த ஒவ்வொரு உயிருமே ஆனந்தத்தை வேண்டுகிறது. காரணம் இந்த பூமியில் பிறந்த ஒவ்வொரு உயிரும் சச்சித்தானந்த ஸ்வரூபனின் உண்மை வாரிசுகளே உங்களில் பலதரப்பட்டவர்கள் இருக்கிறீர்கள். பணம் இல்லாதவர்கள் கூட இருக்கின்றனர். ஆனால் பணத்தேவை இல்லாதவர்கள் மட்டுமில்லை.காரணம் உங்களில் (பதிவை படிக்க முன் வந்திருப்பவர்களில்) ஒவ்வொருவரும் ஆனந்தத்தை கோருகிறீர்கள் அந்த ஆனந்தம் பணத்தால் கிட்டும் என்று நம்புகிறீர்கள். அதனால்தான் பணம் பற்றிய ரகசியங்கள் குறித்த இந்த பதிவை படிக்க முன் வந்துள்ளீர்கள். பணவிஷயத்தில் அப்படி என்ன ரகசியம் வாழ்கிறது. என்று அலுத்துக்கொள்ளாதீர்கள் . பணம் என்பதே ரகசியத்தின் மறு பெயர்தான் .அது எப்போர்து வரும் ? வந்தாலும் எத்தனை நிமிடம் நம்மிடம் இருக்கும் . எப்போது போகும்? போனால் திரும்பி வருமா ? இப்படி எல்லாமே ரகசியம் தான். பணம் இப்படி நம்மை நிச்சயமற்ற தன்மையில் (நினைத்தாலே இனிக்கும் படத்துல ஜெயப்ரதா மாதிரி) வைத்திருப்பதால் தான் பணம் பற்றிய ரகசியங்கள் என்ற இந்த பதிவை இதுவரை படித்து படித்துவிட்டீர்கள். இதற்கு மேலும் உங்கள் பொறுமையை சோதிப்பதாயில்லை. பணம் பற்றிய முழு உண்மைகளை இந்த பதிவில் உங்களோடு பகிர்ந்து கொள்ளத்தான் போகிறேன்.

ஆமாம் பணத்தின் மீது மனிதனுக்கு ஏனித்தனை கவர்ச்சி என்று நான் கேட்டல் பணம் என்பது அத்யாவசியம் ,தேவைகளை தீர்த்து வைக்கிறது என்பீர்கள். நான் கேட்கிறேன் நீங்கள் கூறுவது உண்மை என்றால் ஒவ்வொருவரும் அவருக்கு எத்தனை பணம் தேவையோ அத்தனை பணத்தை மட்டும் தானே சம்பாதிக்கவேண்டும். உண்மை நிலை அப்படி இல்லையே ! தேவையற்றவன் தானே மேலும் மேலும் சம்பாதிக்கிறான். தன் தேவைகளை /அத்யாவசிய தேவைகளை தீர்த்துக்கொள்ளாது பிணம் காக்கும் பூதம் போல் பணத்தை ஈட்டி காக்கின்றானே ஏன்? இந்த செயலுக்கு பின்னுள்ள காரணம் தான் என்ன ?

நம்மில் ஒவ்வொருவரும் பில்கேட்ஸ்,அம்பானி ரேஞ்ச்சுக்கு சம்பாதிக்காவிட்டாலும் கொஞ்சமோ நஞ்சமோ சம்பாதித்து கொண்டே தானே இருக்கிறோம். அட நம்மை விடுங்கள் ஸ்கூலுக்கு போகும் உங்கள் மகனுக்கு ஒரு நாள் பாக்கெட் மணி இல்லேனு சொன்னா அவன் என்னமா ஆர்பாட்டம் பண்றான் ? புரண்டு புரண்டு அழறான். எதுக்கு ?

தேவைகளை நிறைவேற்றுகிறது என்று நாம் கூறிக்கொள்ளும் பணம் , செலவழிக்கத்தான் என்று கூறிக்கொள்ளும் பணம் பல நேரங்களில், பல மனிதர்கள் விசயத்தில் உப்பு ஜாடிகளிலும், புடவைகளின் கீழும், டப்பாக்களிலும், வங்கி கணக்குகளிலும்,இரும்புப்பெட்டிகளிலும் தூங்கிக்கொண்டுதானே இருக்கிறது. இப்படி செத்து சுண்ணாம்பாகி ,தேவைக்காக ஈட்டிய பொருளை கூட மக்க வைக்கச்செய்யும் சைக்காலஜியின் மர்மம் என்ன?

பணம் மனித வாழ்விலானபிரிக்க முடியாத அங்கமாகி பல காலமாகிவிட்டது. ஒரு பொருளை ப்பற்றிய உண்மைகளை தெரிந்து கொள்ளாது அதை கைப்பற்றுவதோ, பற்றியதை பிடித்து வைப்பதோ முடியாதவேலை.மனிதன் உருவாக்கிய பணம் இன்று மனிதனையே ஆட்டிப்படைக்கிறதே அது ஏன் ? இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் சரித்திரத்திலும் இல்லை,பொருளாதாரவியலிலும் இல்லை. பின் எங்கே இருக்கிறது என்றால் படைப்பின் ஆரம்பத்தில் இருக்கிறது.

எனவே நாம் படைப்பின் ஆரம்பத்தில் இருந்து இந்த பதிவை தொடங்காவிட்டால் பணத்தின் தோற்றம், அது மனிதனை ஆட்டிப்படைக்கும் நிலைக்கு வந்தது எப்படி போன்ற விசயங்களை தெரிந்து கொள்ளவே முடியாது.

இந்த படைப்பு ஒரு மகா வெடிப்பில் துவங்கியது ..வெடிப்புக்கு பல கோடி ஆண்டுகளுக்கு பின் அந்த வெடிப்பால் ஏற்பட்ட சொல்லொணாத வெப்பம் தணிந்த பின் சமுத்திரத்தில் அமீனோ அமிலங்களின் சேர்க்கையால் முதல் முதலாக ஒரு செல் அங்க ஜீவி ஒன்று தோன்றியது அதுதான் அமீபா. அது கொழுத்து இரண்டாக பிளந்தது. இரண்டு உடல். இரண்டு உயிரானது . ஒரு செல் மற்றொரு செல்லை பிரதியெடுப்பதில் ஏற்பட்ட தவறுகள் காரணமாய் புதிய புதிய ஜீவ ராசிகள் தோன்றின. குரங்கு ஏற்பட்டது. குரங்கிலிருந்து மனிதன் உருவானான்.

ஒரு செல் அங்கஜீவியில் இருந்த அதே உயிர்தான் இன்று பல லட்சம் கோடி உயிர்களிலும் இருக்கிறது . ஒரே உயிராய், ஒரே உடலாய் இருந்த அந்த காலம், அதில் இருந்த அமைதி,போட்டியின்மை,அச்சம்,இலக்கற்ற தன்மை ,காலமற்ற தன்மை எல்லா உயிர்களிலும் பசுமை நிறைந்த நினைவுகளாக இருக்கிறது. அந்த நினைவுகள் உயிர்களை பரஸ்பரம் இணைந்து ஓருயிராக தூண்டுகின்றன. இயற்கையுடன் இணைய தூண்டுகின்றன. இந்த தூண்டுதல் மிருகங்கள் விசயத்தில் Success ! Success ! என்ற ஏ.வி.எம் பட ஓப்பனிங்க் சீனாக ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. வளர்ப்பு பிராணிகள் உட்பட வெவ்வேறு ஆட்களால் வளர்க்கப்பட்டாலும் அவை ஒரே உயிராய் செயல்படுகின்றன. அவற்றின் செயல்பாட்டில் பயாலஜிக்கல் க்ளாக்கில் எவ்வித வேறுபாடும் ஏற்படுவதில்லை. பூகம்பம், கிரகணம் போன்ற இயற்கை நிகழ்வுகளின் போது அவற்றின் செயல்பாடுகள் ஒன்றே போல் உள்ளன. இதற்கு காரணம் தான் என்ற எண்ணம், அகந்தை, ஈகோ என்பது அவற்றில் இல்லை.
ஆனால் மனிதன் விசயத்தில் மட்டும் இந்த இணைப்பு துடிப்பு இருக்கிறதே தவிர…செயல்பாட்டுக்கு வரும்போது வெவ்வேறாக மாறிவிடுகிறது.காரணம் இந்த பூமிக்கு அகந்தை என்பது எள்ளளவும் இல்லாத யூனிவர்சல் மைண்டுடன் வரும் மனிதனில் அவனது பெற்றோரும்,ஆசிரியர்களும் அகந்தையை உற்பத்தி செய்கிறார்கள் .இந்த அகந்தை அவனை இயற்கையிலிருந்து பிரிப்பதோடு, இணையத்துடிக்கும் ஆழ் மனதுக்கும் தவறான வழியை காட்டிவிடுகிறது. ஆம்
மனிதன் இயற்கையுடனான தன் இணைப்புக்கு, ஓருயிராக மாறுவதற்கு தன் உடலே தடை என்று தவறாக நினைத்து விடுகிறான். அந்த உடலை உதிர்த்துப்போட தற்கொலை,கொலை என்று இறங்கி விடுகிறான். ஆடு ,கோழி, மீன் , நண்டு என்று உள்ளே தள்ளுபவனின் உள் நோக்கமும் இதுவே.அவற்றை , அதாவது அவற்றின் உடல்களை தன்னுள் ஐக்கியம் செய்து கொண்டால் அவை ஓருயிராக மாறும் என்ற பிரமையே அவனை இப்படி செய்யத்தூண்டுகிறது.ஒரேயடியாய் தற்கொலை அ கொலை செய்யும் தகிரியம் போதாதவன் அதை தவணையில் செய்கிறான்.
இவையெல்லாம் நான் கூறுவன அல்ல . மனோதத்துவ இயலின் சாரம் இது.

“மனிதர்கள் ஸ்தூலமாக எந்த செயலில் இறங்கினாலும் சூட்சுமத்தில் அவன் செய்வது கொல்வது அ கொல்லப்படுவது என்ற இரண்டு செயல்களையே”

(To be continued

வைரமுத்துவுடன் போட்டி போட்டு சினிமாவுக்கு பாட்டு

வைரமுத்துவுடன் போட்டி போட்டு சினிமாவுக்கு பாட்டு எழுதினவனாக்கும் என்று
கித்தாப்பாக சொல்லிக்கொள்ள முடியுமாக்கும்.அது எப்படினு இந்த பதிவுல சொல்லத்தான் போறேன்.

கல் தோன்றி மண் தோன்றா காலத்தே தோன்றிய மூத்தகுடி தமிழ் குடினு சொல்றோமே..அப்படிப்பட்ட தமிழ் குடியில பிறந்த என் தாத்தா ஆரணி துரைசாமி முதலியார் அங்கிட்டு
பிழைக்க முடியாம சித்தூர் வந்துட்டாராம்.(இங்கயும் ஒன்னும் பிழைச்சமாதிரி தெரியலை. அரசியல் வாதி மாதா மாதம் கறை வேட்டி (த பார்ரா ! அரசியல் வாதிக்கு கைலதான் கறைன்னா வேட்டிலயும் அதே இழவு) மாத்தின மாதிரி வியாபாரத்தை மாத்தினா எப்படி பிழைக்க முடியும். பாட்டிதான் இட்லி சுட்டு அப்பனை “கவர்மிட்டு ” வேலை பண்ணி வச்சாளாம். அப்பாவுக்கு கவர் மிட்டு வேலை வர ஒரு பெண் காரணம்.அவள் கலெக்டர் மகளாம். எங்க அப்பனுக்கு க்ளாஸ் மேட், (பார்த்திங்களா ! அந்த காலத்துல கலெக்டர் மகளும், இட்லி விக்கிறவ மகனும் ஒரே ஸ்கூல்ல படிச்சுருக்காங்க ..

ஆக தமிழ்குடியான நாங்க எப்படி ஆந்திரா பக்கம் வந்துட்டோம்னு சொல்லியாச்சில்ல ..இப்போ வைரமுத்துவோட போட்டி போட்டு சினிமா பாட்டு எழுதின கதைய சொல்றேன். வைர முத்து அடிக்கடி அழுதுக்கிட்டு (இரவு முழுதும் அழுது என் இரண்டு கண்ணும் பழுது) தமிழ் திரையுலகத்தின் ஆஸ்தான கவிஞராக கோலோச்சினாலும் அப்பபோ டப்பிங் படத்துக்கும் பாட்டு எழுதுவாரு. உதாரணம்: சலங்கையொலி .

அப்படியாக அவர் சிரஞ்சீவியின் ராட்சஸுடு என்ற படத்துக்கும் பாட்டு எழுதினார். அந்த படம் தெலுங்குல வந்து சில காலம் கழிச்சுத்தானே தமிழ்ல டப் ஆயிருக்கும்.

ஆனால் புதுசா பாட்டெழுத ஆரம்பிச்சிருந்த நான் ஆடியோ ரிலீஸான அன்னைக்கே எல்லாப்பாட்டையும் டப் பண்ணிருவேன்.அப்படித்தான் ராட்சசன் படத்துல வர்ர “மள்ளி மள்ளி இதி ரானி ரோஜு” என்ற பாட்டுக்கும் தமிழ்ல எழுதினேன்.

தெலுங்குல இப்படி தமிழ்ல இருந்து வர டப்பிங் படத்துக்கு எழுதறதுக்குன்னே ஒரு ஆசாமி உண்டு அவர் பேர் வீட்டூரி சுந்தரரமமூர்த்தி. தெலுங்கு ஃபீல்டுல ஒரிஜினல் பாட்டு எழுதுறவர் பேரு வேட்டூரி சுந்தரராமமூர்த்தி
அந்த வரிகள் இன்னம் ஞா இருக்கு. நீங்க எப்பயாவது தமிழ்ல வெளி வந்த ராட்சசன் பட ஆடியோவை கேட்டிருந்தா வைரமுத்துவோட பாட்டு வரிகளையும்,கீழே
கொடுக்கப்பட்டிருக்கும் என்னோட பாட்டுவரிகளையும் ஒப்பிட்டு ஒரு வரி எழுதினால் “புளங்காகிதம்” எய்துவேன்.

“மீண்டும் மீண்டும் இந்த நாள் வராது
எங்கு சென்றாய் கண்ணே தேன் தராது
நந்தவனம் மங்கை சொந்த மனம் தேறி விடும் இந்த மன்னன் மனம்.
கண்ணே இந்த நேரமே..கண்ணில் ஒரு தாகமே
பூவே உன்னை தொட்டால்
கன்னமெல்லாம் வர்ணஜாலம் கோலம் போடும்
கன்னியுன்னால் உள்ளம் பாடாதோ ஜீவனுள்ள புது கீதம்
கண்களில் காண்கிறேன் காந்தமே (மீண்டும்

பூக்கள் கோடியிருந்தால் என்ன பாரிஜாதம் நீ எங்கே ?
பாக்கள் கோடியிருந்தால் என்ன கண்ணதாசன் கவியெங்கே ?
வெண்ணிலா வாழ்வது கன்னியுன் கண்ணிலா
(மீண்டும்
குறிப்பு:
ஆனால் ஒன்னுங்க தமிழ்,தெலுங்கு ரெண்டும் தெரிஞ்சவங்கிற முறையில சொல்றேங்க ..
கண்ணதாசன் காலத்துக்கப்புறம் தமிழ் திரை இலக்கியம் சோனியாயிருச்சு. சோனியாவே
கிடக்கு . ஆமா தில்லில சோனியாம்மா பவர் ஃபுல் லேடியாயிட்டாங்களே இன்னம் ஏன்
சோனியான்னு சோனியான பேரு

புட்டபர்த்தி சாயி பாபா குறித்த புருடாக்கள்- 2

இவரது பக்தர் டி.கே.ஆதி கேசவுலு திருமலை திருப்பதி தேவஸ்தான போர்டு சேர்மனாக பதவியேற்றார்.ஸ்ரீனிவாசர் திருக்கல்யாணத்தை மானிலமெங்குமுள்ள கோவில்களில் நடத்த முடிவு செய்தார். இதில் தவறேதுமில்லை. நான் கடவுள்(சினிமா டைட்டில் இல்லிங்க) என்று சொல்லிக்கொள்ளும் பாபாவின் ஆசிரமத்தில்
ஸ்ரீனிவாசர் திருக்கல்யாணத்தை நடத்தியது ஏன் ? அதிலும் பாபா சோஃபாவில் அமர்ந்து கல்யாணத்தை பார்வையிட்டது ஸ்ரீ வாருவின் பக்தர்களை ரொம்பவே கடுப்படித்து விட்டது. ஆதி கேசவுலு செய்கிறேன் என்றாலும் பாபா அடச்சீ நானே கடவுள் என் முன்னாடி அந்த பொம்மை கல்யாணம் எதுக்கு என்று தடுத்திருக்க வேண்டாமோ ?

தூரதர்ஷன் கேமரா கண்களுக்கு சிக்கிய மாயக்கரம்:
அப்போது நரசிம்மராவ் பிரதமர். பாபா பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார். அந்த க்ளிப்பிங்கை தூர்தர்ஷன் ஒளிபரப்ப ஷூட் செய்தது. எடிட்டிங்கின் போது பார்த்தால் பாபா ஒரு தங்க செயினை வரவழைத்து (லலிதா ஜுவெல்லர்ஸ்லருந்து இல்லிங்க) தரும் காட்சியில் ஒரே ஒரு ஃப்ரேமில் ஒரு கை பின்னிருந்து தோன்றி மறைந்ததாம்.. உடனே தூரதர்ஷன் காரர்கள் பிரதமர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்டனராம். “அந்த ஃப்ரேமை கட் பண்ணிட்டு போடுங்க” என்று உத்தரவு வந்ததாம். காரணம் பி.வி.நரசிம்மராவும் பாபா பக்தர்தான்.

கொலை முயற்சியின் போது பஸ்ஸரை அழுத்தியது ஏன்
பாபா மீது ஒரு முறை கொலை முயற்சி நடந்தது. ஒரு ஆசாமி துப்பாக்கியுடன் பாபாவின் படுக்கை அறைக்குள் நுழைந்து விட்டான்.பாபா கடவுள் தானே உடனே முப்புரம் எரி செய்த அச்சிவன் போல் புன்னகை பூத்திருக்கலாம், ஸ்ரீராமனை போல் ஒரு அம்பு விட்டிருக்கலாம், அட அதுதான் வேண்டாம் குறைந்த பட்சம் காற்றிலிருந்து ஒரு துப்பாக்கி வர வழைத்து தன்னை சுட வந்தவனை சுட்டிருக்கலாம் அல்லவா ? அதுதான் நடக்கவில்லை. பாபா உடனே அருகிலிருந்த செக்யூரிட்டியை அழைப்பதற்கான பஸ்ஸரை அழுத்தினார்.

வெளி நாட்டினர் தொடர்ந்து மர்ம சாவு:
ஆந்திர மானிலம் ,அனந்த புரம் மாவட்டத்திலாகட்டும், கர்னாடக மானிலம் ,வைட் ஃபீல்டில் ஆகட்டும் பாபா பக்தர்களானவெளினாட்டினர் தொடர்ந்து மர்ம சாவுக்கு இலக்காகி வருகின்றனர். நாட்டின் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய மந்திரிகள், அதிகாரிகள் எல்லாம் பாபா முன் மண்டியிட்டு கொண்டிருக்க இந்த வழக்குகளில் எல்லாம் பாரபட்சமற்ற விசாரணை நடத்த உள்ளூர் போலீசாருக்கு பைத்தியமா பிடித்திருக்கிறது .

குடி நீர் திட்டம் :
ஆட்காட்டி விரலால் தொட்டு கேனிலான தண்ணீரை டீசலாக மாற்றிய பாபா வறட்சி பிரதேசமான அனந்தபுரம் மாவட்டத்தை பச்சை பசேலென்று மாற்ற பல்லாயிரம் கோடி ரூபாய் செலவில் கால்வாய் வெட்டி வருகிறார். ஒரு பக்தராவது
பாபா நீங்கதான் கடவுளாச்சே ..நீங்களும் சாதாரண மனிதன் மாதிரி கால்வாய் வெட்டித்தானா தண்ணீரை கொண்டு வரனுமா என்று கேட்கிறமாதிரி இல்லை.

வெளி நாட்டை சேர்ந்த பெப்சி,கொக்கோ கோலா கம்பெனிகள் ஆகட்டும் , புற்றீசலாய் கிளம்பிவரும் மினரல் வாட்டர் ப்ளாண்டுகள் ஆகட்டும், அரங்கேற்றி வரும் தண்ணீர் கொள்ளையை நிறுத்தலைனா அந்த நாட்டு பக்தர்களே என்னிடம் வர கூடாது என்று அழுத்தம் தரலாமே ! நீர் வளங்களை சிதைக்கும் தொழிற்சாலைகளை நடத்தும் பண முதலைகள் இந்த இழி செயலை விட்டாலன்றி தன் அருள் கிடைக்காது என்று எச்சரிக்கலாமே ! மணல் கொள்ளையை தடுத்து , மரங்களை லட்சக்கணக்கில் நடலாமே ! (ஜக்கி வாசுதேவை இந்த விசயத்தில் பாராட்டியே தீர வேண்டும்)

முன்னாள் முதல்வர் சந்திரபாபுவின் 9 ஆண்டு கால ஆட்சியில் அவர் ஒரே ஒரு அணையை கூட கட்ட முனையவில்லை .அவரும் பாபா பக்தர்தானே . பாபுவுக்கு சொல்லி அணைகள் கட்டசெய்திருக்கலாமே ! சரி அதுதான் ஒழியட்டும் இன்றைய முதல்வர் டாக்டர் ஒய்.எஸ். ஒரு லட்சம் கோடி செலவில் அணைகள் கட்டுகிறாரே அதற்கு குறைந்த பட்சம் ஆசி (?) கூறி , ஆதரவு தெரிவித்திருக்கலாமே

எங்கள் தொகுதியின் முன்னாள் எம்.பி. ஆதிகேசவுலு கூட இவரது பக்தர்தான். தன் மதுபான தொழிற்சாலையின் கழிவு நீரை பத்தாண்டு காலம் ஆற்றில் விட்டி அந்த நீவா நதியை நாஸ்தி பண்ணிட்டாரே தடுத்திருக்கலாமே! ஒரு காலத்தில் பளிங்கு போன்ற நீர் ஓடிய அந்த ஆற்றில் இன்று சாக்கடையை கூட பூதக்கண்ணாடி வைத்துதான் தேடவேண்டும். அந்த ஆற்றின் அருகாமை பகுதிகளில் எங்கு போர் (BORE) போட்டாலும் ப்ராந்தி நிறத்தில்தான் தண்ணீர் வருகிறது. அந்த பகுதி மக்கள் அனைவரும் இன்று வரை தோல் வியாதியாலும், மஞ்சள் காமலை போன்ற வியாதிகளாலும் அவதிப்பட்டுக்கொண்டுதான் உள்ளனர். அந்த நீவா நதிக்கரையில் பெருமாளுக்கு கற்றளி சமைத்த் வருகிறார் ஆதி கேசவுலு .அவர் முதல் முறையாய் அரசியலில் குதித்து காங். கட்சி சார்பில எம்.பி யாக போட்டியிட்ட போத் புட்டபர்த்தி பாபாதான் தன் கையால் பிஃபார்ம் கொடுத்தார் கொடுத்து என்ன டி.கே .தோத்து போயிட்டாரே

பாபா எவ்வழி பக்தர்கள் அவ்வழி:
பாபா மேற்படி மோடி மஸ்தான் வேலைகளை செய்து வரும்போது பக்தர்கள் சும்மா இருப்பார்களா என்ன அவர்களும் தம் பங்குக்கு பாபா படத்துல விபூதி கொட்டுது ,தேன் வழியுது என்று பீலா விடுவது வழக்கமாகிப்போனது. இந்த மாதிரி கேஸ் எல்லாம் கொஞ்சம் டீப்பா சமீபத்துல பெரிய இழப்புக்கு ஆளான குடும்பமா இருக்கும் . அந்த சோகத்துல இருந்து வெளிவர இந்த விபூதி புரளிய கிளப்பி விட்டிருப்பாங்க .. இல்லாட்டி திவால் பார்ட்டியா இருக்கும் இல்லன்னா வீட்டு மேல ஏதாவது லிட்டிகேஷன் இருக்கும்

இதையெல்லாம் பார்க்கும்போது இந்தமாதிரி டுபாக்கூர் ஆசாமிகளை அங்கீகரிக்கும் இந்து மதத்தை விட “லாயில்லாஹி இல்லல்லாஹி முகம்மது ரசூருல்லாஹி”(அல்லாவை தவிர தெய்வமேதுமில்லை முகமதுவை விட சிறந்த தூதருமில்லை ) என்று போதிக்கும் இஸ்லாமே மேல் என்று படுகிறது. ஆனால் இஸ்லாமில் கூட பாபாக்களை, தர்காக்களை பூஜிக்கும் அம்சம் பெருகிவருவது வேதனையை தருகிறது. ரஹ்மான் போன்ற பிரபலங்கள் விசிட் அடிக்கும் தர்காக்கள்
மேலும் மேலும் மக்களை ஈர்ப்பது சோகம். இதற்கு ரஹ்மான் போன்றவர்கள் துணை நிற்பது சோகத்திலும் சோகம்.

புட்டபர்த்தி சாயி பாபா குறித்த புருடாக்கள்

சரித்திரத்தில் முதலாம் ஜார்ஜ் இரண்டாம் ஜார்ஜ் போல, சங்கராச்சாரிகளில் சீனியர்,ஜூனியர்,சப் ஜூனியர் என்றிருப்பது போல சாயி பாபாவிலும் உண்டு. புலியை பார்த்து நரி சூடு போட்டுக்கொண்ட கதை தெரியுமா ? அதுவே தான் ஷீரடி பாபாவின் கதையை கேள்விப்பட்ட சிறுவன் நான் தான் பாபா என்று பீலா விட புட்டபர்த்தி பாபா உருவானார். உங்களுக்கு தெரியுமோ தெரியாதோ புட்டபர்த்தி பாபாவுக்கும் ஒரு ஜூனியர் உள்ளார் (சப் ஜூனியர்) அவரை பாலசாயிபாபா
என்கிறார்கள். அதே பரட்டை தலை.அதே சாயல். பால என்றால் பத்து பதினைந்து வயது என்று நினத்துவிடாதீர்கள் மனிதருக்கு 50க்கு மேல் வயதிருக்கலாம்.

நிற்க புட்டபர்த்திக்காரர் சமீபத்தில் முதல்வர் வீட்டுக்கு வ்ந்து ஒரு மோதிரம் கூட வரவழைத்து (கூரியரிலல்ல) கொடுத்து சென்றார். இயற்கை கொடுத்த இளமையே போய்விட்ட நிலையில் பெரியார் கொடுத்த நாத்திகமும், பகுத்தறிவுமா நிலைத்திருக்க போகிறது. முதல்வரும் பாவம் தேமே பார்த்துக்கொண்ட்ருந்துவிட்டார்.

உடனெ கேரோ மீட்டரில் வைத்து அதன் தரத்தை பார்த்திருக்க வேண்டாமோ? உட்புறம் எந்த கடையின் பெயர் பொறிக்கப்பட்டிருக்கிறாது என்று என்று பார்த்திருக்க வேண்டாமோ? பாபா இருக்கையில் எதற்கு கோலார் தங்கவயல் எல்லாம் ? இழுத்து பூட்ட வேண்டாமோ ?

பல காலத்துக்கு முன்பு நான் பத்திரிக்கைகளில் படித்த செய்தி :
ரஷ்ய குடும்பம் ஒன்று பாபா தரிசனத்துக்கு வருகிறது. அதி ஒரு (ரஷ்ய )சிறுவனும் இருக்கிறான். பாபா பந்தாவாய் அவன் தலை மேல் கை வத்து ஆசீர்வதித்து “உனக்கு என்ன வேணும் கண்ணா” என்றார். சிறுவன் கேஷுவலாக ” கப் ஆஃப் காஃபி” என்றான்.பாபா ஏன் அவனிடம் நிற்கிறார் ? வுட் ஜூட் ! மோதிரம், செயின் என்றால் எப்படியோ ஒரு வழியா மேனேஜ் பண்ணலாம். காஃபிய எங்க வச்சுருந்து எப்படி கொடுக்கிறதாம்

சுவர்கத்தில் அச்சிடப்பட்ட பைபிள்:
கிறிஸ்தவர் ஒருவருடன் பாபா வாக்கிங் போகும்போது நடந்தது. ஓரிடத்தில் பாபா சடன் ப்ரேக் போட்டாற்போல் நின்றார் . கூட வந்தவருக்கு ஒரு இடத்தை காட்டி இங்கே தோண்டு என்றார். அவரும் தோண்டினார். தோண்டியதில் ஒரு பைபிள் பிரதி கிடைத்தது. கிறிஸ்தவர் “பாபா இந்த பைபிள் எங்கே அச்சடிக்கப்பட்டது” என்று கேட்டார். “பாபா ஸ்வர்கத்துல”ன்னார். உடனே கூட வந்த ஆசாமி பைபிளை புரட்டி எந்த அச்சகத்தில் அச்சிடப்பட்டதோ கூறினார். பாவம் பாபா அந்த காலத்தில் மைக்கேல் ஜாக்சன் மாதிரி மூக்கு ஆப்பரேஷன் செய்யும் வசதியில்லாததால் உடைந்த மூக்குடனேயே ஆசிரமம் போய் சேர்ந்தார்

பாபாவுக்கு நொடில பைபிள் ப்ரிண்ட் செய்து தரும் சக்தி இருக்கும்போது அவர் ஏன் இந்தியன் கரன்சிய அரசாங்கத்துக்கு அடிச்சு தரக்கூடாது. குறைந்த பட்சம் தனக்காவது அச்சிட்டு கொள்ளலாம் அல்லவா ? கேப்பையில் நெய் வடிகிறதென்றால்
கேட்பவன் என்ன கேனையனா ?

இவர் நான் தான் ஷீரடி பாபாவின் மறுபிறவி என்கிறார். அந்த பாபா ஈஸ்வர் ஏக் (கடவுள் ஒருவரே) என்று தானே கூறினார். அல்லா மாலிக் (அல்லாஃஹ் தான் முதலாளி) என்றார் . இவரோ நானே கடவுள் என்கிறாரே ! சரி ஒழியட்டும் மகாராஷ்டிராவில் ஷிரடி பாபாவுக்கு கோவில் இருக்கிறது. கோடிக்கணக்கில் வருமானம் கொட்டுகிறது. இவர்தான் பாபா என்றால் போய் வாங்கிக்கிட வேண்டியது தானே!

இவருடைய அருமந்த பக்தர் திருமலை திருப்பதி தேவஸ்தான போர்டு சேர்மன் டி.கே.ஆதிகேசவுலு. சித்தூர் எம்.எல்.ஏ சி.கே.பாபு ஷீரடி பாபா பக்தர் ஷீரடி பாபாவுக்காக ஒரு கோயிலையே கட்டியுள்ளார். ஷீரடி பாபாதான் புட்டபர்த்தி பாபா என்றால் தன் பக்தர்கள் இருவரும் முட்டி மோதிக்கொள்ள விடுவாரா ? மோதிக்கொண்டால் பரவாயில்லை ஆதிகேசவுலு சி.கே.பாபுவை இங்கிலீஷ் சினிமா மாதிரி மிஷின் கன்ஸுடன் ஆட்களை அனுப்பி சுட்டு தள்ள பார்ப்பதும் கண்ணி வெடி வைத்து கொல்லப்பார்ப்பதும் புட்டபர்த்திக்காரருக்கு தெரியாதா ? தெரிந்தும் தடுக்கவில்லையா? குற்றம் நிகழ விருப்பதை அறிந்தும் போலீசாருக்கு தகவல் கொடுக்காதிருப்பதும் குற்றம் தானே ! (எப்படியோ சிறு கீறலும் இன்றி சி.கே.பாபு பிழைத்திகொண்டார். இரண்டு முறையும் அப்பாவிகள் இரண்டு பேர்தான் செத்தனர். அப்போ ஷீரடி காரர்தான் ஒரிஜினல் என்று பொருளோ? )
டீசல் இல்லாம கார் நின்னு போயிருச்சு:
ஒரு தரம் புட்டபர்த்திகாரர் பயணம் செய்த கார் டீசல் இல்லாம நின்னு போயிருச்சாம். உடனே பாபா இறங்கினாராம். டிக்கில தண்ணி கேன் இருக்கானு கேட்டாராம். இருக்குன்னாங்களாம். உடனே கேன் மூடிய திறந்து விரலை விட்டு தண்ணிய தொட்டாராம். இப்ப ஊத்தி ஓட்டுங்க என்றாராம். கார் ஓட ஆரம்பிச்சுருச்சாம். (இது கல்கி இதழ் ஒன்றில் நான் படித்த சம்பவம்) அட கூமுட்டைகளா ! அப்படியே பாபாவை ஏரோப்ளேன்ல கூட்டிக்கிட்டு போய் இந்து மகா சமுத்திரத்துல தள்ளி விட்டுட்டா கடல் மொத்தமும் டீசலாயிராதா ? கலைஞர் ஒரு ரூபாய்க்கு ஒரு லிட்டர் டீசல் திட்டத்தை கொண்டு வந்துர மாட்டாரா ?

(அடுத்த பதிவில் நிறைவு செய்கிறேன்)