ஜோதிடமும் பயணங்களும்

அண்ணே வணக்கம்ணே !
சனிக்கிழமை ஒரு நீண்ட நெடும் பயணம் மேற்கொண்டேன். இதன் சாரத்தை //நாம் வெளியிட்ட 4 புத்தகங்களும் காட்பாடி,வேலூர்,ராணிப்பேட்டை,காஞ்சிபுரத்திலும் கிடைக்கும்.வாங்கி படித்து பயன் பெறலாம்.//னு முக நூல்ல ஒரு ஸ்டேட்டஸா தான் போடமுடியும்.

விட்டா இன்னொரு ஸ்டேட்டஸ் போடலாம். //நதிகள் இணைப்புக்காக ஓசூர் டு சென்னை பாதயாத்திரை மேற்கொண்டுள்ள ஐ.ஏ.எஸ்.சர்தார் குழுவினரை காஞ்சிபுரத்துல சந்திச்சன்.அன்னாரின் கட்டுரை இடம் பெற்ற “பணம் பணம் பணம்”புத்தகத்தை கொடுத்தேன்….//

ஜோதிடப்படி பயணங்களை காட்டும் இடங்கள் இரண்டு. மூன்றாமிடம் ஷார்ட் டிஸ்டன்ஸ் பயணங்களையும் -ஷட்டில் பயணங்களையும் காட்டும். ஒன்பதாமிடம் தூர பயணங்கள்,தூர தேச பயணங்களை காட்டும். மூன்றாமிடத்துல பாவ கிரகம் இருந்தால் (லக்னாதிபதியை தவிர) சலிக்காம எத்தீனி தபா வேணம்னா ஷட்டில் அடிச்சு வேலைய முடிப்பிங்க. இதுவே ஒன்பதாமிடத்துல சுப கிரகம் இருந்தா பேக்கேஜ் டூர் அதுவும் ஸ்பான்ஸர்ட் டூர் எல்லாம் சான்ஸ் அடிக்கும்.

பயணம் பத்தி ஜோதிடத்துல என்னல்லாம் இருக்குன்னு ஒரு ஹின்ட் கொடுக்கிறேன். கீழ் காணும் பாடலை பாருங்க
ஆதிரை பரணி ஆரல் ஆயில்ய முப்பூரம் கேட்டை தீதுறு விசாகம் சோதி சித்திரை மகம் ஈராறும் மாதனம் கொண்டார்தாரார் வழிநடைப்பட்டார் மீளார் பாய்தனிற் படுத்தார் தேறார் பாம்பின் வாய்த்தேரைதானே
(முப்பூரம்: பூரம் , பூராடம், பூரட்டாதி) ]

இத்தீனி நட்சத்திரங்கள்ள பயணமே கூடாதுங்கறாய்ங்க. இதை அப்படியே ஃபாலோ பண்ணா கூட போதும் க்ளோபல் வார்மிங்லாம் ஜூஜுபி. விபத்துகள் பாதியா குறையும்.ஆனால் இதெல்லாம் நடைமுறைக்கு ஒத்துவருமா தெரியல. அடுத்து சனம் ராகு காலம்,எமகண்டம்,சூலம் இத்யாதில்லாம் பார்க்கிறாய்ங்க. நம்மை பொருத்தவரை ஞா கிழமை ராகு காலம்னா மட்டும் ஒரு உதறல்.

சுகமான பயணத்துக்கு நிபந்தனைகள்:
மேற்சொன்ன 3,9 ஆமிடங்கள் அனுகூலமா இருக்கனும். கோசாரத்துலயும் பெட்டரா இருந்தா நல்லது. மேற்படி கிரகங்களோட நட்சத்திரத்துல புறப்படறது நல்லது. பொஞ்சாதியே கூட வந்தாலும் கொஞ்சி மகிழாம ரிசர்வ்டா வே பயணம் பண்ணனும் ( கில்மா+பயணம்லாம் சுக்கிர காரகம் தான்.) ஏற்கெனவே சொன்னதை போல ப்ரைவேட் வெயிக்கிளை விட பப்ளிக் ட்ரான்ஸ் போர்ட் பெஸ்ட். சொந்த வாகனமா இருந்தா – நீங்களே ட்ரைவ் பண்றதா இருந்தா “மப்பு”கூடாதுங்கோ.

மலைப்பகுதி, மையப்பகுதிக்கு போகும் பயணங்கள் சூரிய காரகம். பிரபல புண்ணிய சேத்திரங்கள்,கடல் இருக்கிற ஊரு, வடமேற்கு திசையில் உள்ள ஊரெல்லாம் சந்திர காரகம். எதுக்காக வேணம்னாலும் ரயில்ல போனா செவ் காரகம், போலீஸ் ,ரயில்வே,மிலிட்டரி ,எலக்ட் ரானிக்ஸ் தொடர்பான பயணம்,தெற்கு நோக்கிய பயணம்னா செவ் காரகம்.
டிக்கெட் இல்லாம போனா -பொய் பேர்ல ட்ராவல் பண்ணா, நெம்பர் டூ பிசினசுக்கு , சினிமா சான்ஸுக்கு பயணம் செய்தா ராகு காரகம். வட கிழக்கு திசையில போனா,கோயில் குளம், மத குரு சந்திப்பு, முதலீடு,சேமிப்பு தொடர்பான பயணம்னா குரு காரகம்.

மேற்கு திசையில போனா -அதுவும் அடிமை வேலைக்கு போனா , ஐரன்,ஸ்டீல்,ஆயில்,விவசாயம், வெட்டினரி தொடர்பான வேலையா போனா சனி காரகம். (இதுவே மாடு வாங்க, மில்க் டயரி துவங்க போனா செவ் காரகம்)
அல்லது முந்தா நேத்து நாம போனாப்ல ஏஜென்சி,யாவாரம்,ஜோதிடம் தொடர்பா போனா புத காரகம். ஆடிட்டரை பார்க்க,டாக்டரை பார்க்க ,பிள்ளைக்கு காலேஜ் சீட்டு மேட்டரா போனாலும் ,வடக்கு திசையா போனாலும் புத காரகம்.
எச்சரிக்கை: ஆருனா கமெண்டுல கெட்டா கேது சுக்கிர காரக பயணங்களை பத்தி சொல்றேன்.

பயணம்னா ச்சொம்மா இல்லிங்கோ. நீங்க வீட்டை விட்டாலே நாலாமிடத்து தோஷம் குறையும். (வீடு) பப்ளிக் ட்ரான்ஸ்போர்ட் உபயோகிச்சா ஃபுல் கியாரண்டி. அப்படியில்லாம சொந்த வாகனத்துல ஆயிரம் தயாரிப்புகளோட போனா தோஷம் குறையாதது மட்டுமில்லை,அதிகமாகி விபத்து கூட நடக்கலாம்.

ஒரு பயணத்தின் பின்னாலே ஒரு வாழ் நாளின் தயாரிப்புகளும் , பிற்சேர்க்கைகளும் அடங்கி இருக்கு. நம்ம பயணத்தை பத்தி ரெம்ப விஸ்தாரமா இல்லாட்டாலும் சுருக்கமா இந்த பதிவை போட ட்ரை பண்றேன்.

பிப்ரவரி 16,17 தேதிகளில் மவளோட கண்ணாலம் நடந்து முடிஞ்சது. கடந்த 5 வருசமாவே (அவள் காதலில் விழுந்த பிறவு- மாப்பிள்ளையோட ப்ரிமிசஸ்ல ப்யூட்டி பார்லர் நடத்த ஆரம்பிச்ச பிறகு ) மவ நமக்கு அவெய்லபிளா இருந்ததே காலை8 முதல் 9 வரை , இரவு 9க்கு மேல் 10.30 க்குள்ளத்தான். என்ன ஒரு சவுகரியம்னா எதுனா வேலை இருந்தா கூப்பிடலாம். அல்லது ஃபோன்லயே எண்டார்ஸ் பண்ணலாம்.

அவ படி ஏறி வரும்போது லேசான விசில் சத்தம் கேட்கும் ( நெஜம் பாஸ்) கொலுசு சத்தம் கேட்கும். அவளோட வண்டி தெரு முனைக்கு வரும் போதே வீட்ல உள்ள நாய் கத்தி ஊரை கூட்ட ஆரம்பிக்கும். இதுவும் இல்லாத போயிட்டதால வீடே எம்ப்டியாயிட்ட மாதிரி ஒரு ஃபீல். பொஞ்சாதி மேட்டரு ? ஊஹூம்.சொல்லிக்கிறாப்ல ஒரு ம..னாவும் கிடையாது.
இதெல்லாம் ஒரு பக்கம்னா அதே சமயம் ரீ ப்ரிண்ட் ஆகி வந்த புத்தக பிரதிகள் வேற வவுத்த கலக்கிக்கிட்டிருந்தது. கண்ணாலத்துக்கு வந்திருந்த இரண்டு சிறுமிகள் பந்த் காரணமா லாக் ஆகியிருந்தாய்ங்க. நம்ம வயசுக்கு 18+ கூட சிறுமி மாதிரி தானே. இதாண்டா சான்ஸுன்னு மார்க்கெட்டிங்குக்கு ப்ரிப்பேர் ஆக ஆரம்பிச்சன்.

புஸ்தவங்களை எல்லாம் ப்ளாஸ்டிக் கவர்ல போட்டு சீல் பண்ணி , பத்து பத்தா எண்ணி கட்ட வச்சேன். ஒரு ரெண்டாயிரம் பாம்லெட் அடிச்சு வச்சுக்கிட்டன். புஸ்தவ கட்டை தூக்கிக்கிட்டு பயணம் பண்றதும்,மார்க்கெட்டிங் பண்றதும் இம்சை . அதனால வயசானாலும் ஜஸ்ட் உடலாலயே வாழும் பார்ட்டி ஒன்னை பிக் அப் பண்ணிக்கிட்டன். (எதையும் ப்ளான் பண்ணி செய்யனும்ல)

அந்த பார்ட்டி ரீச் ஆக கொஞ்சம் போல லேட்டாச்சு. அதுக்குள்ற தாடிய ட்ரிம் பண்ணனும்ங்கற மேட்டர் ஞா வர சலூனுக்கு போற வழி தானேன்னு சித்தூர், கே.எம்.எர்ராய்யா ஷாப்புக்கும், பழைய பஸ் ஸ்டாண்டுல கார்னர் ஷாப் ஒன்னத்துக்கும் தலா பத்து பிரதிகள் தள்ளி விட்டன். ஆஸ்தான ஹேர் ட்ரசர்ஃபோனை லிஃப்ட் பண்ணவே இல்லை.

வேற இடத்துல காரியத்தை முடிச்சன். ஏற்பாடு பண்ணி வச்ச வெயிட்லிஃப்டர் வந்துட்டாரு. இன்னொரு ரவுண்டு புறப்பட்டு விஜய லட்சுமி தியேட்டர் சந்திப்புல ஒரு ஷாப், எம்.எஸ்.ஆர் தியேட்டர் பக்கத்துல ஒரு ஷாப்புன்னு தலா 10 புக்ஸ் மார்க்கெட் பண்ணேன். ஆக சித்தூர்லயே ஒரு கடைக்கு 40 பிரதி கணக்குல அஞ்சு கடைய ரீச் பண்ணியாச்சு. மொத்தம் 200 பிரதி.
அடுத்து ரெண்டு பார்சலோட வேலூர் பஸ் பிடிச்சு காட்பாடியில இறங்கினம். 2004 ல ஒரு பஞ்சாயத்து செய்ததுல அங்கன ஒரு பார்ட்டிய தெரியும். அவிக வீட்டுக்கு போயி ஒரு பார்சலை அங்கன லேண்ட் பண்ணிட்டு அண்ணா சிலை எதிர்ல ஒரு கடை (1) , படக்குன்னு ஷேர் ஆட்டோ ஏறி வேலூர் புதிய பஸ் நிலையம் .

உள்ளாற ஒளிச்சு வச்சிருந்த கடைய எப்பமோ நோட் பண்ணி வச்சிருந்தன் .பக்கத்துலயே ஆவின் பால் வேற . டீ சாப்டா ,தம் போடனும்,தம் போட கடைக்கு வரனும். தம் அடிச்சுக்கிட்டே புஸ்தவங்களை பார்க்க தோனும். வாங்கவும் தோனுமில்லையா? அங்கே தலா பத்து பிரதி. மேட்டர் இன்னாடான்னா கடை அண்ணனோடது தம்பி தான் இருந்தாப்ல. ஆனாலும் கன்வின்ஸ் பண்ணி தள்ளினன். (2)

பிறவு மறுபடி ஆட்டோ பிடிச்சு பழைய பஸ் ஸ்டாண்டு. பெங்களூர் ரோட்ல புக் ஷாப் கணக்கா ஒரு கடை அங்கே தலா ஒரு பத்து பிரதி (3) பழைய பஸ் ஸ்டாண்ட் என்ட் ரன்ஸுல ஒரு கடை .அங்கே தலா ஒரு 10 பிரதி. (4) இதுவரை மார்க்கெட்டிங் ரெம்ப ஜோரா நடந்தது. அதுக்கு பிறவு நொண்டியடிக்க ஆரம்பிச்சது.

சி.எம். சி ன்னா உலக நாடுகள்ளருந்துல்லாம் வருவாக. நம்ம புஸ்தவம் ஒலகமெல்லாம் போயிரும்னு பார்த்தா ஒரே ஒரு புஸ்தவகடை கூட இல்லை. இருந்ததெல்லாம் நாலு பேப்பர் விக்கிற கடை.புஸ்தவம்னா வெறும் இந்தி,இங்கிலீஷ் விக்கிற கடை தான் இருந்தது. மத்தபடி எல்லாமே ஹோட்டல்,ஜூஸ் லேண்ட், இதர கடைகள் தான்.

கடுப்பாகி பழைய விஸ்வாசத்துல தினத்தந்தி ஆஃபீஸ். மேனேஜர் இன்னம் வரல. செக்யூரிட்டி கிட்டே ஒரு செட் கொடுத்துட்டு மறுபடி சி.எம்.சி. கொஞ்சம் உன்னிப்பா ஃபாலோ பண்ணதுல ஒரு சின்ன கடை -நிறைய புஸ்தவங்களோட இருந்தது. அந்த கடைக்கு ஒரு செட் இறக்கிட்டம் (4)

பசி வவுத்தை கிள்ளவே நம்ம முக நூல் நண்பரோட ஸ்டேட்டஸ் ஞா வந்தது . வெஜிட்டேரியனை விட நான் வெஜிட்டேரியன் தான் சிக்கனம். சிக்கன் பிரியாணி அடிச்சம். இன்னம் கொஞ்சம் ஹாட்டா இருந்திருந்தா அனுபவிச்சிருக்கலாம். பெட்டர்.
பிறவு சி.எம்.சி சந்திப்புலயே ஒரு ப்ரவுசிங் சென்டரை பார்த்து நாம செட்டில் ஆகிட்டு,கூட வந்தவரை காட்பாடிக்கு விரட்டி அங்கே உள்ள பார்சலை பிக் அப் பண்ணிக்கிட்டு புது பஸ் ஸ்டாண்ட் வர சொல்லிட்டம்.

பிரவுசிங் சென்டர் “அவா” ளோடது போல. பாவம் ..ஒரே கம்யூனிட்டிக்குள்ள தலை முறை தலைமுறையா மேரேஜ் செய்து செய்தா .. அல்லது அவிக முன்னோர் குல அகங்காரத்துல செய்த அலப்பறையா காரணம் என்னன்னு தெரியல. இருந்தது ஐயரம்மா. அவிகளுக்கு கம்ப்யூட்டர் பற்றிய அரிச்சுவடி கூட தெரியல.

கம்ப்யூட்டருக்கு ஃப்ரீ சர்வீஸு பண்ணிட்டு ச்சொம்மா மெயில் செக் பண்ணீட்டு புது பஸ் ஸ்டாண்ட் . நண்பரும் வந்து சேர ராணிப்பேட்டைக்கு ஏறிட்டம். ஏதோ குழப்பத்துல முத்துக்கடையில இறங்கினம். அங்கன ஒரு ஹை கிளாஸ் வெஜ் ரெஸ்டாரன்ட்.வாசல்ல ஒரு பெரிய ஷாப். அங்கன மார்க்கெட் பண்ணவே ஒரு காஃபி சாப்டம்.ஆனாலும் ஒன்னும் பேரல.
மறுபடி ஆட்டோ பிடிச்சு ராணிப்பேட்டை, அங்கே சேகர் புக் ஸ்டால். எஸ்கிமோ கிட்டே ஃப்ரிட்ஜ் வித்திருக்கலாம்.அந்தளவுக்கு கன்வின்ஸ் பண்ண வேண்டியதாயிருச்சு. ஆள விடுங்கப்பான்னுட்டு காஞ்சிபுரம் ஏறிட்டம்.

அங்கே தலப்பா கட்டு பிரியாணி ஸ்டால் பக்கத்துல ஒரு கடை தினமலர் போர்டெல்லாம் இருந்தது.அங்கே தலா பத்து பிரதி (5)
அடுத்து நதிகள் இணைப்பு இயக்கத்தலைவருக்கு ஃபோன் போட்டு அவரையும், அவர் பாதயாத்திரை குழுவினரையும் சந்திச்சம்.ஏதோ மவ கண்ணாலம், நூல் வெளியீடு,மறு அச்சுன்னு கஷ்ட காலத்துல இருந்தாலும் எளிய பங்களிப்பா ரூ.500 கொடுத்துட்டு வெளிய வந்தம்.

மறுபடி காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டுல ரமேஷ் காஃபி பார்ல தலா பத்து பிரதி இறக்கி விட்டம் (6) அங்கிருந்து வேலூர்.வேலூர்லருந்து சித்தூர். நேரம் நள்ளிரவு 12.30 .

அடுத்து சென்னை வேற போகனும். பார்சல் தூக்கிக்கிட்டு அலைய முடியும்னு தோனலை.அதுனால ஒரு பார்சல் கட்டி லாரி சர்வீஸுல அனுப்பிட்டு சென்னை நண்பரை லிஃப்ட் பண்ணி வைக்க சொல்லிரனும். பிட்டு பிட்டா மார்க்கெட்டிங் பண்ணனும். பார்ப்பம்.

பின் குறிப்பு:
ஜோதிடம்360 முதல் பதிப்பின் விமர்சனத்தை வெளியிட்ட ஒரே இதழ் ஜோதிடபூமி. இதன் ஆசிரியர் ஒரு பிராமணர் என்பது அப்போதைக்கு பெரும் அதிர்ச்சியை தந்தது. இம்முறையும் நான்கு நூல்களையும் அனுப்பியிருக்கன். பார்ப்போம்.

Advertisements

ஓஹோஹோ மனிதர்களே !

“ஓஹோஹோ மனிதர்களே ! ஓடுவதெங்கே கூறுங்கள் ! ” இப்படி ஒரு பாடல் வரி படக்குனு ஸ்பார்க் ஆச்சு. நெஜமாலுமே மன்சங்க ஓடிக்கினே கீறோம். பையன் சீக்கிரமா பெரியவனாயிரனும்னு மீசை வரைஞ்சு பார்க்கிறான்.
கரு கருன்னு மீசை வந்துருச்சுன்னா அதை ட்ரிம் பண்ணியாகனும் இல்லின்னா இமிசை. நாற்பது வயசுல நரைச்ச முடிக்கு கெமிக்கல் டை போட்டு கருப்பாக்கிறான்.

என்னங்கடா இது ? பால்யத்துல பால்யத்தையும்,யூத்துல யூத்தையும், நடுவயசுல அந்த வயசுக்குண்டான நிதானத்தையும், கிழவாடி ஆன பிறவு அந்த வயசுக்குண்டான விட்டேத்தி தனத்தையும்அனுபவிக்காம எதையோ விட்டு எதையோ நோக்கி ஓடிக்கிட்டே இருக்கமே. பொளப்பா இது?

நமக்கு 22 வயசு இருக்கும். அந்த சமயத்து காதலிக்கு ஒரு ப்ரசன்ட் பண்ண ஒரு சாரி வாங்கினேன். அதை கொடியில போட்டு,குப்பையா சேர்ல போட்டு ,கட்டில் மேல போட்டுன்னு ரசிச்சு ரசிச்சு பார்த்தன். இதுவே கண்ணாலமான பிறவு .. வீட்ல எந்த மூலையில ,எந்த நிலையில சாரியை பார்த்தாலும் செம கடுப்பு .

ஏன்? ஏன் ? இப்படி?

இந்த கல்யாண குணங்கள்ளாம் நமக்கும் இருந்தாலும் -லக்ன குரு உச்சத்துல இருக்கிறதாலயோ என்னமோ கொஞ்சம் போல அதிருப்தி -எதையோ நோக்கி ஓடனுங்கற வெறி வந்தாலும் படக்குன்னு நம்மை நாமே பாலன்ஸ் பண்ணிக்கிறோம்.
ஃப்ளாஷ் பேக்ல என்னென்னமோ அட்வெஞ்சர்லாம் பண்ணி பஞ்சர் ஆனப்போ வடிவேலு மாதிரி நம்ம முகத்துக்கு நேர நம் ஆட்காட்டி விரலை காட்டி “தேவையா ..இது உனக்கு தேவையா”ன்னு கேள்வி கேட்டிருக்கம்”

அப்பம் நாம நமக்கு சொல்லிக்கிட்ட பதில் என்னன்னா “கொய்யால ..ஒரு காலம் வரும்.ஒரு நேரம் வரும்.அப்பம் ஒன்னமே செய்ய முடியாத போகலாம். அந்த சமயத்துல ஈசிச்சேர்ல சாஞ்சு படுத்துக்கிட்டு நெனச்சு பார்க்கவாச்சும் இப்பம் எதையாவது செய்யனும் இல்லையா? அதுக்கு இது தேவைதான்”

நடப்பு கொஞ்சம் கசப்பா இருந்தாலும்,வறுமை,நிராகரிப்பு,துரோகம், அவமானம் எதிர்ப்பட்டாலும் “கண்ணா .. நீ கடவுளோட செல்ல பிள்ளை. ஒனக்கு எது நெல்லதோ அதைத்தான் அவரு கொடுப்பாரு. நீ அதை கெட்டதுனு நினைச்சு கடுப்பாகி அவரை கெட்ட வார்த்தையில திட்டினாலும் செரி “னுட்டு கண்டிஷனிங் செய்துக்குவம்.

ஆரோ ஒரு பதிவுல சொல்லியிருந்தாய்ங்க. சித்தூர் முருகேசன் கமலஹாசன் மாதிரி எல்லாத்துலயும் புகுந்து வருவாரு. வாழ்க்கையிலயும் நம்ம ரோல் அதான் போல .ஆப்போசிட் போல்ஸ் அட் ராக்ட்ஸ் ஈச் அதர்ங்கறாப்ல ரஜினி ரசிகனா இருந்திருக்கம். (வெட்கம் !)

புகுந்து வர்ரது பெருசுல்ல நாம எதுல புகுந்தமோ அதுல உள்ள ஒட்டடை, அழுக்கு நம்ம மேல படியப்படாது. எப்படி போனமோ அப்படியே மீண்டு வரனும்.அதான் முக்கியம்.

ஒரு காலத்துல நாம ஃபோக்கஸ் லைட் மாதிரி. நாம எதை நோக்கி கவரப்படறமோ அதை தவிர மத்ததை எல்லாம் டார்க் அவுட் பண்ணிருவம்.அவுட் ஆஃப் ஃபோக்கஸ்ல காட்டிருவம்.

பிரம்மச்சரியத்தை ஃபாலோ பண்ணப்போ நம்ம ஸ்பீச்சை கேட்டு அவனவன் கைக்கும் -பலானதுக்கும் பேச்சு வார்த்தை இல்லாம போச்சுன்னா பார்த்துக்கங்க.

பிறவு முத்தின வெண்டைக்காய் கணக்கா கண்ணாலம் காட்சி இல்லாம கட்டு கட்டா பணத்தை வச்சுக்கிட்டு ஊட்டைக்கட்டி,கியாஸ் கனெக்சன் வாங்கி கையில பிடிச்சுக்கிட்டு சுத்திக்கிட்டிருந்தவனை பார்த்தா பரிதாபமா இருக்கும்.
அப்பம் நம்ம ஸ்பீச்சை கேட்டு கல்யாணம் கட்டினவுக அனேகம். எனக்கு நடக்கிறது சரிங்கறது சரி.அது மத்தவுகளுக்கு நடக்கலின்னா அது தப்புங்கறது தப்பில்லையா?

வாழ்க்கையில ஓரு பெரிய ரவுண்டு வந்தபிறவுதான் எல்லாத்துக்கும் இடையில ஒரு ஒத்திசைவு இருக்கிறதை உணர்ந்தேன்.
கிடைச்சதை கிடைச்சப்போ வச்சுக்கனும். போகுதுன்னா விட்டுரனும். கிடைச்சதை கிடைச்சப்போ விட்டுர்ரது,போனதை போனப்போ வெரட்டிக்கிட்டு ஓடறதெல்லாம் வெட்டி.

அததுக்கு ஒரு நேரம் இருக்கு. அந்தந்த நேரத்துல அதது கிடைக்கும். கிடைச்சதெல்லாம் போறதுக்கும் ஒரு நேரம் வரும்.
மன்சன் தன்னை ஒரு மொஃபசல் பஸ்ஸ்டாண்டா நினைச்சுக்கனும். சகட்டுமேனிக்கு பஸ்ஸுங்க வரும் போகும்,சனம் வருவாய்ங்க போவாய்ங்க.

2007 க்கு மிந்தி கூட ஒரு ஜோல்னாபை,அதுல பஞ்சாங்கம்,எழுத வேண்டிய ஜாதகங்கள் ,ஒரு லேடீஸ் குடை ஒரு அம்பதோ நூறோ கிடைச்சு -இதை வச்சு உபயோகமா என்ன பண்ணலாம்னு நிதானமா தலை குனிஞ்சுக்கிட்டு ,ஒரு கையில குடையோட கைப்பிடிய பிடிச்சுக்கிட்டு நடந்தா -அந்த குடை உடை வாள் ஆயிரும். நாம தாய் நாட்டை காக்க எழுந்த வீரன் கணக்கா ஃபீல் இருக்கும்.

இன்னைக்கு ப்ர்ர்ர்.

அன்னைக்கு அந்த நிலைமைக்காக அழுததும் இல்லை. இந்த நிலைக்காக ஏங்கினதுமில்லை. ஏன்னா ரெண்டுமே நம்ம அஜெண்டாவுல இல்லை.

இருபத்து ரெண்டு வயசுலயே இந்த மிடில் க்ளாஸ் ஹிப்பாக்கிரசின்னா செம கடுப்பு நமக்கு . அதனாலதேன் மொத முயற்சி எடுத்தம்.அது மட்டும் சக்ஸஸ் ஆகி இருந்தா ஏழ்மையோட பிடியில நிம்மதியா வாழ்ந்துட்டு போயிருப்பம். ரெண்டாவது முயற்சி செம நாஸ்தியாகி இன்னை வரைக்கும் செம ட்ராகிங்.

நம்ம அஜெண்டாவுல இந்த மிடில் க்ளாஸ் வாழ்க்கை கிடையவே கிடையாது.ஏறினா ரயிலு இறங்கினா ஜெயிலு. இதான் நம்ம அஜெண்டா. ஏதோ மவ கண்ணாலத்துக்கு இருக்காளேன்னு அடக்கி வாசிச்சுட்டம். நமக்கு தடுத்து விளையாடறதெல்லாம் பிடிக்காது.அடிச்சு விளையாடறது தேன் நம்ம ஸ்டைல்.

அதுல மொத எபிசோட் தான் ஒரே நேரத்துல 4 புத்தகங்களை வெளியிட்டது. இன்னம் நிறைய காரம்,மணம்,குணம் நிறைந்த மசாலால்லாம் வரத்தான் போகுது.வெய்ட் அண்ட் சீ.

பை தி பை இந்த பதிவோட மெஸேஜ்.. இருக்கிறதை ஏத்துக்கங்க. இல்லாதது வரும் போது ஏத்துக்கலாம்னு லிபரலா இருங்க.
சதா சர்வ காலம் எதற்காகவோ காத்திருக்கிறதும்,எதற்காகவோ தயாரிப்புகள்ள மூழ்கி இருக்கிறதோ வெட்டி . இன்னைக்கு முடிஞ்சதை இன்னைக்கே செய்துரனும்.இல்லின்னா என்னைக்குமே செய்ய முடியாம போயிரலாம்.

குறிப்பு:
நான் எல்லாம் என்.டி.ஆர் ஃபேவரட்டுங்கறதால ரிஷி கெட் அப்ல என்.டி.ஆரா நம்மை கற்பனை பண்ணிக்கிட்டு அவரைப்போலவே அர்த பத்மாசனம் போட்டு நெஞ்சு வரை இல்லாத வெள்ளை தாடியை தடவி கனவெல்லாம் கண்டிருக்கன். நம்ம அந்திம இலக்கு துறவு தான்.ஆனால் அது எஸ்கேப்பிசமா இருக்காது.

செயிச்சுட்டுதேன் துறவு.ரஜினி மாதிரி சீன் போடறதெல்லாம் இல்லை. தாளி உலக மேப்லருந்தே காணாம போயிருவம்.
இப்பயும் வெற்றியை கனவு காணும் போது வெள்ளை ஜிப்பா ,பைஜாமா , நெஞ்சு வரை தாடி,வாக்கிங் ஸ்டிக்கோட பீச்சுல நடந்து போறாப்ல தான் கற்பனை செய்வன்.

என்னைக்கோ ஒரு நாள் அது கியாரண்டி.ஆனால் அதுக்கு மிந்தி ஒரு ஆட்டம் ஆடிப்பார்க்கனும். சரித்திரத்தை உடைச்சு திருப்போனம்.

நெல்லவுகல்லாம் ரெம்ப நெல்லவுகளா இருந்ததாலதேன் – தாயோளிங்கல்லாம் லைம் லைட்ல.நாம ஒன்னும் 100 சதம் உத்தமன்லாம் இல்லை. அந்த நெல்லவுகள போல நாலு நெல்ல காரியத்தை ஸ்ட் ராங்கா செய்யலாமேங்கற நப்பாசை தான் . கொய்யால ..அதுக்காவ தப்பாட்டமும் ஆடுவம்ல.

விற்பனையை உயர்த்த :2

அண்ணே வணக்கம்ணே !

கடந்த பதிவுல விற்பனைய உயர்த்த சில க்ளூஸ் கொடுத்திருந்தேன். நீங்க குறிப்பிட்ட கிரக காரகம் கொண்ட பொருளை விற்பனை செய்தே ஆகவேண்டும் என்ற நிலை இருந்து -உங்க ஜாதகத்துல மேற்படி கிரகம் பல்பு வாங்கியிருந்தா என்ன பண்றதுங்கற மேட்டரை இன்னைக்கு பார்க்கலாம். அதுக்கு எந்த பொருள் என்ன கிரகத்தோட காரகம்னு தெரியனும்.

விலாவாரியா பட்டியல் போட்டா பதார்த்த குண சிந்தாமணி கணக்கா ஆயிரும்.அதனால சில அடிப்படை விஷயங்களை சொல்லிர்ரன். இதை வச்சு நீங்க விக்க துடிக்கிற ஐட்டம் எந்த கிரக காரகம்னு தெரிஞ்சுக்கங்க. அட ஒரு வீடு மேட்டரையே எடுத்துக்கங்களேன்.

தொத்தல்,இடிஞ்சு விழ தயாரா இருக்கு, மனை மதிப்பு தான் போடுவாய்ங்கன்னா செவ் காரகம். ரெம்ப பழைய வீடுன்னா சனி காரகம், அடுத்தவுக வீடு அதை விக்கப்பார்க்கிறிங்கன்னா புத காரகம், பொய்ப்பத்திரம் தயாரிச்சு விக்க பார்க்கிறிங்கன்னா ராகு காரகம்.

அதுல 1008 வில்லங்கம் இருக்கு. நீங்களும் மூக்கை நுழைக்கிறிங்கன்னா கேது காரகம். வீடு ஒரு குக்கிராமத்துல இருக்கு,மலைப்பாங்கான பகுதியில இருக்குன்னா சூரிய காரகம், ஏரிக்கரை,குளக்கரையை ஒட்டியிருக்குன்னா சந்திர காரகம், வங்கி ஜப்தி பண்ணி ஏலத்துல எடுத்த வீடுன்னா குரு காரகம், அதை வித்து உங்க பட்லிக்கு ஒரு கார் வாங்கி ப்ரசன்ட் பண்ணப்போறிங்கனா சுக்கிர காரகம்.

நீங்க அதுல குடியிருக்கிங்க.ரெம்ப சவுகரியமா இருக்கு .அதை வித்துட்டா ரெம்ப அவதிப்படுவிங்கன்னா 4 ஆம் பாவத்தை பாருங்க, நீங்க அதுல குடியில்லை. வாடகைக்கு விட்டிருக்கிங்க. அந்த வீடு உங்க சொந்த சம்பாத்தியத்துல வாங்கினதுன்னா ரெண்டாம் இடத்தை பாருங்க. அப்பா சொத்துன்னா 9ஆம் வீடு, அதை வித்து தொழில் செய்யப்போறிங்கன்னா 10 ஆம் வீடு.
இப்படி இடம் பொருள் ஏவலை பொருத்து காரகம் மாறும். திங்கள் கிழமை மகளுக்கு கண்ணாலம். நாளைக்கு ரிசப்ஷன் .இந்த நிலைமையிலயும் இத்தனை வரிகள் அடிச்சேன்னா அது என் தாய் கலைவாணி போட்ட பிச்சை. அந்த மவராசியை ரெம்ப லந்து பண்ண விரும்பல.கழண்டுக்கறேன். இந்த சுப காரியம் நெல்லபடி முடியட்டும் ஃப்ரஷ்ஷா ஃபீல்டுக்கு வரேன்.ஆதியோடந்தமா ஒரு தொடராவே எழுதிருவம்.

எச்சரிக்கை:
1.திரு.விமலாதித்தன் ஸ்பான்சர் செய்த லைப்ரரி பிரதிகள் தவிர -ஒரு யு.கே நண்பருக்கு தவிர ரூ.500 செலுத்தி முன்பதிவு செய்து கொண்ட மற்ற அனைவருக்கும் நான்கு நூல்களும் 1+1 செட் அனுப்பியாச்சு. கிடைக்க பெற்றவர்கள் ஒரு வரி மெயில் போட்டால் ஒரு நிம்மதி.

2.மேற்படி நான்கு நூல்களையும் பெற விரும்புப்பவர்கள் படத்தை பாருங்க. மேலதிக விவரங்களுக்கு மெயில் பண்ணுங்க swamy7867@gmail.com

அரசு / வங்கி ஊழியர் ஊதிய உயர்வு போராட்டம் – பொது மக்களுக்கு இழைக்கும் துரோகம். « கன்னிமரா லைப்ரரி

அரசு / வங்கி ஊழியர் ஊதிய உயர்வு போராட்டம் – பொது மக்களுக்கு இழைக்கும் துரோகம். « கன்னிமரா லைப்ரரி