இன உறுப்பும் கேரக்டரும் – மீள்பதிவு

கேரக்டர்னா தெரியுமில்லியா ” நம்மளோட குண நலன்கள்”. இந்த பதிவுல உங்க கேரக்டரை உங்க செக்ஸ் (பால்) அதாவது ஆணா பெண்ணாங்கற ஃபேக்டர் எப்படி நிர்ணயிக்குதுனு பார்ப்போம்.

சொல்ல மறந்துட்டேங்கண்ணா இது தமிழ் மணம் தடை செய்ய மறந்த பதுவுங்கண்ணா. தாளி பிரபாகரன் சாகலைனு ஒரு ஜோதிஷ கணிப்பை போட்டதுமே பேதி புடுங்கிக்கினு நம்ம வலைப்பூவை தடை பண்ணிட்டாய்ங்க.

பாரதியார் பாரதமாதாவை “முப்பது கோடி முகமுடையாள்”னு பாடினாரு. அதாவது அப்போ இந்திய ஜனத்தொகை முப்பதுகோடி . அதனால அப்படி பாடினாரு. இப்போ 120 கோடிய தாண்டி மீட்டர் ஓடுது. மனித பிறப்பு எப்படி நிகழுதுன்னான்னுட்டு ஆரம்பிச்ச உடனே  செக்ஸை நுழைக்கிறான்பா என்று கடுப்பாகாதீர்கள். நான் என்னவோ நம்ம சொல்ற மடிசஞ்சி விஷயங்களை பத்துக்கு நூறு பேரா படிச்சா ஒருத்தர் ரெண்டு பேரு ஏத்துக்கிடு வாய்ங்களேங்கற ஆத்திரத்துல கில்மாவ நுழைக்க ஆரம்பிச்சேன். இன்னைக்கு பார்த்திங்கன்னா செக்ஸுக்காகவே செக்ஸு எழுதறாய்ங்க.இவிகளுக்கெல்லாம் நான் தான் இன்ஸ்பிரேஷனோன்னு ஒரு கு.உ.

நிற்க..இந்த பதிவு கம்ப்ளீட்டா உயிரியல். முடிஞ்சவரை சப்ஜெக்டை டைல்யூட் பண்ணி சுவாரஸ்யமாவே சொல்றேன்.

தந்தி (டெலிக்ராம்) பாஷைல சொன்னா ஆணும் பெண்ணும் சேர்வதால் மனித பிறப்பு நிகழுது. இதே ப்ராசஸ்ல நீங்க ஆணா பெண்ணா, உங்ககேரக்டர் என்னங்கறதும் நிர்ணயிக்கப்பட்டுருது.

ஆண்,பெண் உடல்களில் பல்லாயிரம் கோடிக்கணக்கான செல்கள் இருக்கின்றன.
ஒரு வீடு செங்கல்லால கட்டப்படற மாதிரி நம்ம உடல் செல்களால கட்டப்பட்டிருக்கு. ( பேசற செல் இல்லிங்கண்ணா) நம்ம உடம்புல கோடிக்கணக்குல இருக்கிற செல்கள் தேஞ்சு அழிய, அழிய அதுக்கு சமமா புதிய செல்கள் உற்பத்தியாகிறது. (ரீ ப்ளேஸ்மென்ட்?) வயசாக வயசாக அழிஞ்சு போன செல்லை விட உற்பத்தியாற செல்லோட நெம்பர் குறைஞ்சிட்டே போவும். அதுவேற விஷயம்

சரி நம்ம வீட்ல ஃப்யூஸ் போன பாத்ரூம் பல்பை மாத்தரப்பவே கலர் மாறிப்போவுது, கம்பெனி மாறிப்போவுது, ஓல்ட் மாறிப்போவுது. புது செல் உற்பத்தியாகனும்னா அது பழைய செல் மாதிரியே இருக்கனும். இல்லேன்னா வம்பாயிரும். உதாரணமா ஒரு வளர்ந்த ஆணோட உதட்டுல இருக்கிற செல் தன் சாதிய சேர்ந்த செல்லை காப்பிபண்ணிக்காம மேலுதட்டுல இருக்கிற செல்லை காப்பி பண்ணிருச்சுன்னா என்னாகும்? உதட்டுல மீசை வளரும்,கின்னஸ்ல போட்டோ வரும்.

அதுக்காக உடம்பு புது செல்களை தயாரிக்கும் போது ரொம்ப எச்சரிக்கையோட செயல்படுது. அது எப்படின்னு தெரிஞ்சுக்கனும்னா செல்லோட அமைப்பை பத்தி தெரிஞ்சுக்கனும். நமக்கு ஆதி மூலமான முதல் செல்லை பத்தியும் தெரிஞ்சுக்கனும்.

செல்லில உட்கரு இருக்கு. அதுல குரொமோட்டின் ரெட்டிகுலம்னு ( Reddy குலம் ,இல்லிங்கண்ணா Rettikulam) ஒரு வலை இருக்கு. . இந்த வலைலதான் சூட்சுமமே அடங்கியிருக்கு. (ப்ளூ ப்ரிண்ட்) இதை ஒரு ஃபிலிம் ரோலுன்னு வச்சுக்கிட்டா இதுல 46 ஷாட் ஷூட் பண்ணலாம்.

அதே நேரத்துல இந்த ஆறடி உடம்புக்கு பிள்ளையார் சுழி போட்ட ஆதி மூலமான முதல் செல்லை பத்தியும் தெரிஞ்சுக்கனும். இது நம்ம அப்பா அம்மாவோட கூட்டு முயற்சி. (இனி அப்பா அம்மானு சொல்லாம ஆண்,பெண் என்றே குறிப்பிடலாம்)

பெண்ணோட உட்கருல இருக்கிற செல்லுலயாகட்டும், ஆணோட வீரியத்துல இருக்கிற உயிரணுவுல(செல்)யாகட்டும் மேற்சொன்ன க்ரொமோட்டின் ரெட்டிக்குலம்ங்கற ஃபிலிம் ரோல்ல 46 ஷாட்டுக்கு பதில் 23 ஷாட்ஸ் தான் ஷூட் பண்ணமுடியும். (அதாங்க க்ரோமோசோம்)

உடலுறவின் போது விந்துவிலான உயிரணு விரைக்கு வந்து சேர்ந்து, இன்னும் சில திரவங்களோட சேர்ந்து ஆண் உறுப்பு வழியா புறப்பட்டு பெண்ணுறுப்பின் வாய் வழியாக அவளோட கருப்பைல இருக்கிற அண்டத்தை துளைக்குது. அப்போ 23+23 க்ரோமோ சோம் சேர்ந்து முதல் செல் உருவாகுது.

இந்த 23+23 க்ரோமோசோம்ல உடலுறவுல ஈடுபட்ட ஆண்,பெண்ணோட (அவிக முன்னோர்களோட டேட்டா கூட) கம்ப்ளீட் டேட்டா இருக்கு. தலையோட வடிவம், தலை முடியோட நிறம், நீளம், சுருட்டையா இல்லையா, கண்ணு பாப்பா கருப்பா,பிரவுனா, ப்ளூவா பராம்பரியமா வரக்கூடிய நோய்கள் இப்படி கம்ப்ளீட் டேட்டா பதிவாயிருக்கும்.

இதுல 22 ஷாட் யு சர்ட்டிஃபிகேட். 23 ஆவது ஷாட் தான் ஏ சர்ட்டிஃபிகேட். அதாவது இதுதான் உங்க பாலை (செக்ஸ்) நிர்ணயிக்குது. இது வெறும் பாலைத்தான் நிர்ணயிக்குதுன்னு நினைச்சிருந்தாங்க. (இப்போ தயிரை கூட நிர்ணயிக்குதானு கேட்டு நக்கலடிக்க கூடாது ஆமாம் சொல்ட்டேன்பா)

ஆனா இப்போ லேட்டஸ்ட் கண்டு பிடிப்பு என்னன்னா உங்க பாலை (செக்ஸ்) நிர்ணயிக்கிற அதே குரோமோஜோம் தான் உங்கள் குண் நலன் களையும் நிர்ணயிக்குது ” என்பதாகும்.

அப்போ ஆண்பாலுக்கு ஒரு கேரக்டர், பெண்பாலுக்கு ஒரு கேரக்டர் இருக்கும்னுதானே அர்த்தம்? செக்ஸுவல் பிஹேவியரும், நீங்க ஆணா பெண்ணாங்கறத பொருத்து தானே அமையும்? மனிதனின் பேசிக்கல் இன்ஸ்டிங்க்ட் செக்ஸ் தான். மனித உடலின் மையம் மட்டுமில்லே மனித மனதின் மையம் கூட செக்ஸ்தான். குளத்து மத்தியில கல்லெறிஞ்சா அது எப்படி குளத்து பரப்பு முழுக்க அலைகளை ஏற்படுத்துதோ அப்படியே பாலை நிர்ணயிக்கிற அதே ஜீன் உங்க கேரக்டரையும் நிர்ணயிக்குது பாஸு !

ஆண்,பெண் சைக்காலஜிய அவிக இன உறுப்பே சொல்லிருது. ஆண் உறுப்பு ஆக்கிரமிக்க துடிக்கிற மாதிரி தோணினாலும் அது இன் செக்யூர்டா ஃபீல் பண்ணுது தஞ்சமடைய இடம் தேடுது.

அதே மாதிரி தான் ஆண் இனம் பெரிய பிஸ்தா மாதிரி பில்டப் கொடுத்தாலும் சரண்டர் ஆயிர்ராங்க. ( என்ன பெண் கொஞ்சம் மதர்லி கேரக்டரோட , அவனோட பிஸ்தா பில்டப்பை சகிச்சுக்கனும். )

பெண்ணோட இன உறுப்பு பாதுகாப்பற்றதா திறந்து வச்ச கோட்டை கதவா தோணினாலும் அது இன்னொரு சமாச்சாரத்துக்கு பாதுகாப்பு கொடுக்கிற ஸ்டேஜ்ல தான் இருக்கு. ஸ்டார்ட்டிங் ஸ்டேஜ்ல ரிவர்ஸ் எஃபெக்ட் காரணமா பெண் தன்னை அபலையா உணரலாம். தட்ஸால்.

செக்ஸ் குறித்த உணர்வுகள் கிளம்பறதுக்கு முன்னாடி ஆண்,பெண் குழந்தைகள் ரெண்டோட பிஹேவியரும் ஒரே மாதிரிதான் இருக்கும். பெண் குழந்தை மரமேறி மாங்காய் பறிக்கும் . ஆண் குழந்தை நொண்டி விளையாட்டு விளையாடும். உணர்வுகள் லேசா தீட்டப்பட்டதுமே பிஹேவியர்ல மாற்றம் வந்துருது. அதுவரைக்கும் பிஹேவியர் மட்டுமில்லே ஃபிசிக்கல் ஸ்ட்ரக்சர் கூட ஏறக்குறைய ஒரே மாதிரிதான் இருக்கும். (இன உறுப்பை தவிர்த்து)

பால் நிர்ணயம் கருவிலேயே நிர்ணயிக்கப்பட்டூட்டாலும் அது ஜஸ்ட் ரஸ்னா பவுடர் மாதிரி /கான்சன்ட்ரேட்டட் ஃப்ரூட் பல்ப் மாதிரி தான் இருக்கு. குறிப்பிட்ட வயசு/பருவம் வந்த பிறகுதான் அது 22 டம்ளர்ல கலந்து வச்ச மாதிரி விஸ்தரிக்கப்படுது. அப்போதான் தன் பால் குறித்த உணர்வே அந்த குழந்தைக்கு வருது. அம்மா ” டேய் கண்ணா .. அந்த டீ கப்புகளை மட்டும் கழுவி கொடுரா “ன்னு கேட்டா பையன், ” போ போ.. “ன்னிட்டு போய்க்கினே இருப்பான். பரணைல இருக்கிற ஸ்டீல் அண்டாவை இறக்க வீடு பையனுக்காக காத்திருக்கறப்ப அவன் ஆம்பளையாயிர்ரான்.

சரி பால் (செக்ஸ்) டிசைட் ஆயிருச்சு. உணர்வுக்கு உயிர் வந்துருச்சு. அவன் தன்னை உணர ஆரம்பிச்சுட்டான். அடுத்தது என்ன ? இயற்கையின் பிரதான விதி வழியே அவன் மதி வேலை செய்ய ஆரம்பிக்குது . அதாங்க செக்ஸ், மற்றும் இனப்பெருக்கம்.

ஆண் குழந்தை எல்லாத்தயும் ஆக்கிரமிக்க பார்க்கிறது ஒரு பார்ட்.
தஞ்சமடையறது இன்னொரு பார்ட்.

ரெண்டு பார்ட் ஆஃப் ப்ராசஸும் அதன் இன உறுப்போட செயல்பாட்டை போலவே இருக்கும்

பெண் குழந்தை எல்லா ஆக்கிரமிப்புக்கும் ஈடுகொடுத்துக்கிட்டு “தேமே”ன்னு இருக்கும் இது ஒரு பார்ட்
படிப்படியா எல்லாத்தயும் தன் கட்டுப்பாட்ல கொண்டு வந்துரும். இது செகண்ட் பார்ட்.

ரெண்டு பார்ட் ஆஃப் ப்ராசஸும் அதன் இன உறுப்போட செயல்பாட்டை போலவே இருக்கும்.

பெண்ணுரிமை வாதிகளாகட்டும், ஆணாதிக்க வாதிகளாகட்டும் யாருமே குறை சொல்லமுடியாத வகைல இயற்கை இரு பாலாரையும் பேலன்ஸ் பண்ணி வச்சிருக்கு.

பின்னே எங்கடா வருது வில்லங்கம்னா இரு பாலாருமே தங்களோட க்ரோயிங்க் ப்ராசஸ்ல முதல் பார்ட்லயே நின்னுர்ராங்க.

அதாவது ஆண் சதா சர்வ காலம் ஆக்கிரமிக்கவே பார்க்கான்.
பெண் ஆக்கிரமிக்கப்படவே விரும்பறா.

ஸோ உங்க பால் நிர்ணயிக்கப்படும்போதே அதே க்ரோமோஜோமால உங்க கேரக்டரும் நிர்ணயிக்கப்பட்டுருது . உங்க கேரக்டரை உங்க இன உறுப்பே சிம்பாலிக்கா காட்டுது. க்ரோயிங்க் ப்ராசஸ்ல ரெண்டு பார்ட் இருக்கு. பழக்க தோஷத்துல நீங்க முதல் பார்ட்லயே நின்னுர்ரிங்க.

வாழ்க்கைல ரெண்டையுமே பார்க்கனும். ரெண்டுலயுமே சுகமிருக்கு. ஆக்கிரமிக்கறதுல இருக்கிற சுகம் டெம்ப்ரரி. அதை இழக்கறது உங்க கவுண்டர் பார்ட் கைல இருக்கு. ( புரட்சி வெடிச்சு எப்பவேணா எவிக்ட் ஆயிர்ர வாய்ப்பிருக்கு)

ஆக்கிரமிக்க படறதுல இருக்கிற சுகம் பர்மனென்ட். அதை நீங்களா முயற்சி பண்ணாதான் இழக்க முடியும்.

அதனாலதான் பெண்களுக்கு இதய நோய், பி.பி.ஷுகர்,சர்க்கரை வியாதியெல்லாம் குறைவா வருது.

காந்தி காலத்துலருந்து அதே புத்தி.

நிச்சயமா இந்த பதிவை நீங்க ஸ்க்ரால் பண்ணிருவிங்கனு தெரியும். ஆனால் ஒன்னுங்கண்ணணா இதை படிக்கலைன்னா நஷ்டம் உங்களுக்குதேன். ஏன்னா காங்கிரஸு த. நாட்ல கூட கீதுல்ல. இந்த பிக்காலிங்களுக்கு காந்தி காலத்துலருந்தே ஒரே புத்தி.ஏன் காந்திக்கே இந்த புத்தி இருந்தது. சுபாஷ் சந்திரபோஸ் கட்சி தலைவரா கட்சி தேர்தல்ல நின்னப்ப அவருக்கு  போட்டியா நின்ன பார்ட்டிய இவர் என் வேட்பாளர் .இவர் வெற்றி என் வெற்றி, இவர் தோல்வி என் தோல்வினு காந்தி தாத்தாவே சொன்னாராம்.

இன்னா நடந்தது? சுபாஷ் எலக்ட் ஆயிட்டாரு. ஒடனே காந்தி ஏரி மேல கோச்சுக்கின கதையா பில்டப் தர சுபாஷ் போங்கடாங்கொய்யாலனு ராஜினாமா பண்ணிட்டு தேசிய ராணுவம் ஏற்படுத்த பூட்டாரு.

தாளி சுபாஷ் மட்டும் கட்சிதலைவரா தொடர்ந்திருந்தா இந்தியாவோட தலை எழுத்தே மாறியிருக்கும். காங்கிரஸ் கட்சியோட வரலாறை 4  எபிசோடா பிரிக்கலாம் நேரு ரெஜிம், இந்திரா ரெஜிம்,ராஜீவ் ரெஜிம், சோனியா ரெஜிம்.

நேரு ஷோ மேன்.தனக்கிருந்த  நாடு தழுவிய இமேஜையும், தாத்தா கிட்டே தனக்கிருந்த நெருக்கத்தையும்  வச்சே கிழவாடிகளை இருட்டடிப்பு செய்து சமாளிச்சுட்டாரு (காந்தி தாத்தா கோட்சேவோட குண்டை வாங்கிக்கறதுக்கு மிந்தியே  வல்லப் பாய் படேலுக்கும் நேருவுக்கும் பஞ்சாயத்து பண்ணியிருந்தா இந்திய வரலாறே திசை திரும்பியிருக்கும்.

ஒரு டமாஸு: எங்கனயோ படிச்சேன். கட்சிக்கு யங் லீடர்ஷிப் தேவைனு மோதிலால் நேரு சொன்னா அது நேருவை குறிக்கும். இதே வசனத்தை  நேரு சொன்னா இந்திராவை குறிக்கும். இந்திரா சொன்னா ராஜீவை குறிக்கும்,சோனியா சொன்னா ராகுலை குறிக்கும். அடங்கொக்காமக்கா!

நேருவும் தில்லில உட்கார்ந்துதான் ஆட்சி பண்ணாரு. பல தடைகளை மீறி மக்கள் கருத்து லேசா  அவர் காதுக்குள்ள கசியவாவது வாய்ப்பிருந்தது. அவரும் ஏதோ ஒரு சால்சாப்பு சொல்லி அஜீஸ்மென்ட் ஃபார்முலால போய்க்கினிருந்தார்.

உ.ம் : 1 இந்தி திணிப்பு. தமிழர்கள் விரும்பும் வரை ஆங்கிலம் இணைப்பு மொழியா தொடரும்.

உ.ம்  : 2 தெலுங்கானா இணைப்பு . இது கட்டாய கல்யாணம் மாதிரி எப்பவாச்சும் டைவர்ஸ் வாங்கிக்கிரலாம்.

இந்திரா ரெஜிம்ல பார்த்திங்கன்னா அவிகளுக்கும் இன்செக்யூரிட்டி, கிழவாடிகளுக்கும் இன்செக்யூரிட்டி. ரெண்டு தரப்புமே வீக் . எப்படியோ அடிச்சு பிடிச்சு வங்கிகள் தேசீயமயம், தாழ்த்தப்பட்டோர்க்கு இட ஒதுக்கீடுன்னு இந்திரா தன்னை காபந்து பண்ணிக்கிட்டாய்ங்க.

ஈகோங்கறது ஆருக்கு அதிகம்னா எவன் இன் செக்யூரிட்டில இருக்கானோ,எவன் வீக்கா இருக்கானோ அவனுக்கு தேன் ஈகோ அதிகம். தாழ்வு மனப்பான்மை எப்ப வேணம்னா ஓவர் கான்ஃபிடன்ஸா மாறும். அப்படி இந்திரா மாறி சில சோமாறிங்க பேச்சை கேட்டுக்கிட்டு ஆந்திரால இல்லாத ஆட்டம்லாம் போட்டுது. என்.டி.ஆர் வந்தாரு ஆப்பு வச்சாரு.

இந்திராவுக்கு சந்திராசாமி, திரேந்திரபிரம்மசாரி மாதிரி ராஜீவுக்கும் ஒரு கிச்சன் கேபினட். எல்லா ஆஃபீஸ்லயும் ஒரு டப்பா (கம்ப்யூட்டர்) வச்சுட்டா தேசம் சுபிட்சமாயிரும்னு ஏத்திவிட்டாய்ங்க. ஆந்திரா மேட்டர்ல அவரும் கோட்டை விட்டாரு.

சோனியாம்மா ரெஜிமுக்கு வந்தா.. அவிக இந்த பூனையும் பால் குடிக்குமானு இருந்தாய்ங்க. இல்லேங்கலை. எதுவரைக்கும்? மத்தில யு.பி.ஏ அரசுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்கிற வரை.

தாளி ஒய்.எஸ்.ஆர் எல்லாம்  நேரு மாதிரி ஷோ மேன் கிடையாது. சரிஸ்மா கிடையாது. அக்மார்க் லோ பட்ஜெட்  டப்பிங் சினிமா ஹீரோ மாதிரி. என்.டி.ஆரை எதிர்த்தும் அரசியல் பண்ணாரு. சந்திரபாபுவை எதிர்த்தும் அரசியல் பண்ணாரு.

சந்திரபாபு காலத்துல அவர் காட்டின பூச்சிய பார்த்து பேதியாகி  காங்கிரஸ் கட்சி கிழவாடிங்கல்லாம் நேட்டிவ் விலேஜ்ல விவசாயம் பார்க்க பூட்டானுங்க. இல்லே ஃபாரீன் பேரன்ங்க வீட்டுக்கு ரெஸ்டுக்கு பூட்டானுங்க.

ஆனால் ஒய்.எஸ்.1999 எலக்சன்ல கொடுத்த தேர்தல் வாக்குறுதியையே மறுபடி குடுத்தாரு ( விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்) . 1600 கிமீ பாதயாத்திரை செய்தாரு.  பெராலிஸிஸ் ஸ்ட்ரோக் வந்து பெட் ரிடன் ஆ இருந்த காங்கிரஸ் கட்சிக்கு தன் ரத்தத்தை தடவி மசாஜ் பண்ணி உயிரூட்டினாரு.

அப்பல்லாம் சோனியாஜி சோனியாஜியா தான் இருந்தாய்ங்க. எப்போ மத்தில யு.பி.ஏ அரசுக்கு தனி மெஜாரிட்டி கிடைச்சதோ அங்கன இந்திராஜீயா மாற ஆரம்பிச்சுட்டாய்ங்க.

ஒய்.எஸ் சாகாம இருந்திருந்தாலும் அவரையும் ஒரு ரோசய்யாவாக்க கட்டாயம் ட்ரை பண்ணியிருப்பாய்ங்க. ரெட்டி காங்கிரஸ் மறுபடி வந்திருக்கும். ஆனால் அவர் பண்ண புண்ணியம் கௌரவமா போய் சேர்ந்துட்டாரு.

சாதாரணமா ஒரு கட்சி சட்டமன்ற தேர்தல்ல போட்டியிட்டு,மெஜாரிட்டி சீட்ஸ்ல செயிச்சா சட்டமன்ற கட்சி கூட்டத்தை கூட்டி வாக்கெடுக்கனும். ஆனால் காங்கிரஸ்ல மட்டும் முதல்வரை நியமிக்க தலைமைக்கு (சோனியாவுக்கு) அதிகாரம் கொடுத்து   ஒரு தீர்மானம் போடுவாய்ங்க. தில்லிலருந்து சீல்ட் கவர் அனுப்புவாய்ங்க. அதுல முதல்வர் பேர் இருக்கும்.

ஒய்.எஸ் ஐ சி.எம்மா எலக்ட் பண்ணதும் இதே மெத்தட்லதான். ஆனால் சீல்ட் கவர்ல ஒய்.எஸ்.பேர் இல்லைன்னா என்ன நடக்கும்னு தில்லிக்கு தெரியும். ஒய்.எஸ்.போய் சேர்ந்த பிறவு 152 எம்.எல்.ஏங்களோட சப்போர்ட் இருந்தும் ரோசய்யாவை ப்ரப்போஸ் பண்ணச்சொல்லி ஜகனை கட்டாயப்படுத்தினாய்ங்க. ஜகனும் காண்டு மாதிரி ப்ரப்போஸ் பண்ணாரு.

தாத்தா நிலைமை ரெம்ப மோசம். ஒன் பாத்ரூம் போகனும்னா கூட சோனியா மேடத்தை ஒரு பேச்சு கேட்டுக்க வேண்டிய  நிலை. சரி தாத்தாவால சமாளிக்க முடியலைன்னு கிரண்குமார் ரெட்டிய கொண்டு வந்தாய்ங்க. ஜகன் தாவாங்கட்டைய பிடிச்சு கெஞ்சி கூத்தாடி ப்ரப்போஸ் பண்ண வச்சிருந்தா  டிசம்பர் 31 வரைக்காச்சும் காலம் வெண்ணையா ஓடியிருக்கும் ( கிருஷ்ணா கமிஷன் ரிபோர்ட் வர்ரவரை).

அதையும் செய்யலை. சாட்சில ஏதோ அனலட்டிகல்ல் எஸ்ஸே வந்ததை பார்த்து இர்ரிடேட் ஆகி சோனியாம்மா ஜகனுக்கு ஆப்பு வைக்கனுங்கற ஆத்திரத்துல சிரஞ்சீவிக்கு ப்ராக்கெட் போட்டாய்ங்க.டெப்புட்டி சி.எம்., 6 மந்திரி பதவி வரை பேரம் பேசினாய்ங்க. கிரணை களமிறக்கினாய்ங்க. எல்லாத்துக்கும் மேல ஒய்.எஸ். சகோதரர் விவேகானந்த ரெட்டிக்கு அமைச்சர் வடைய வச்சு கூண்டுல அடைக்க பார்த்தாய்ங்க.

ஜகனும், அவரோட அம்மாவும் தங்கம் எம்.பி, எம்.எல்.ஏ பதவிக்கு  ராஜினாமா செய்துட்டாய்ங்க. அப்பாறம் பார்க்கனுமே கூத்தை . விவேகானந்த ரெட்டி மந்திரி பதவியும் வேணா ஒரு மசுரும் வேணானுட்டாரு. சிரஞ்சீவி மந்திரி சபைல சேரப்போறதில்லைனு அறிவிச்சுட்டாரு.

காங்கிரஸ் எம்.எல்.ஏங்க ராஜினாமா பண்ணாதிங்க. இந்த அரசு எங்க அப்பாவோட அரசு . இது கவிழக்கூடாதுனு ஜகன் அறிவிச்சுட்டாரு. ஆனால் எம்.எல்.ஏக்கள் தவிர 10,000 பேர் ஜகனுக்கு ஆதரவா  கட்சி, மற்றும் இதர பதவிகளுக்கு  ராஜினாமா பண்ணியிருக்காய்ங்க.

மொதல்ல 30 பேரோட மந்திரி பட்டியல் தயாரிச்சாய்ங்க. அப்பாறம் பதவி கிடைக்காதவன்லாம் ஜகனோட போயிரப்போறான்னுட்டு அதை 11+1 ஆ குறைச்சாய்ங்க.

விரிவாக்கத்துல பதவி கிடைக்கும்னு ஜொள்ளு விட்டுக்கினு வெய்ட் பண்ணுவாய்ங்கனு ஸ்கெட்ச். ஜூன் ஜூலைல உள்ளாட்சி தேர்தல்கள் வரப்போவுது. அப்ப பார்க்கனும் கூத்தை..

லேட்டஸ்ட்:

ஜகன் கடப்பாவை அடுத்துள்ள இடுப்புல பாயால இருக்காரு. கடப்பா ஹைதராபாத் தேசீய நெடுஞ்சாலையே மக்கள்,வாகன வெள்ளத்தால் திணறுது.  நாளைக்கு புதுக்கட்சி அறிவிக்கப்போறாருனு ஹஞ்ச்.

செக்ஸில் முன் விளையாட்டின் முக்கியத்துவம்: 2

கடந்த பதிவின் கடைசி பாரா:

” சாப்டாச்சு, சமையல் மேடைய கழுவி விட்டுட்டு ஒன்னும் தெரியாத பாப்பா மாதிரி வருவாய்ங்க.”

“இன்னாத்துக்கு அப்டி அர்ஜெண்ட் பண்றிங்க.. என்ன விஷயம்?”னுவாய்ங்க. இங்கருந்து காதல் நாடகம் ஆரம்பம்.

எச்சரிக்கை:
இந்த பதிவு ஆரோக்கியர்களுக்கு மட்டுமானது. உடல் குறை ,மனக்குறை உள்ளவுக இழந்தை சக்தி வைத்தியர்களையோ , நல்ல சைக்கியாட்ரிஸ்டையோ பாருங்க.

நிறைய பேரு இன்னா நினைக்கிறாய்ங்கன்னா செக்ஸுக்கு இவன் உடல்ல அந்த  ஒரு சமாசாரமும், பெண் உடல்ல அந்த ரெண்டு உருப்படியும் தான் தேவை.

உங்க பாடியோட அதி மூலம் ஒரு செல். அந்த செல்லுக்கான பேர் பாதி க்ரோமோசோம் கிடைச்சதே டாடி மம்மியோட செக்ஸ் க்ரோமோ சோம்லருந்துதேன். செக்ஸுல பிறந்து வளர்ந்த பாடி இது. அதனால செக்ஸுங்கறது ஒவ்வொரு அணுவுலயும் இருக்கு.

இதை நீங்க முழுக்க உணரணும்னா அதுக்கு பெஸ்ட் வே பிரம்மச்சரியம். என்னங்கடா இது அவுக்கிறதை பத்தி பேசுவாருனு பார்த்தா தண்ணில நனைச்சு கட்டறதை பத்தி சொல்றாருனு கோச்சுக்கிடாதிங்க. நெஜம் இதான்.

நீங்க ஒரு விருந்துக்கு தயாராகனும்னா , ஒரு கட்டு கட்டனும்னா அதுக்கு முன்னாடி ஒரு வேளையாச்சும் வயித்தை காய போட்டிருக்கனும். ஒரு லைம் அடிச்சிருக்கனும். விருந்துக்கு முந்தி தொண்டைக்குழில ஒரு மிடறு தண்ணீர் விடனும் ( இல்லாட்டி விக்கிக்கும்) .அவசரப்படாம நிதானமா சாப்பிடனும். இல்லாட்டி அடைச்சுக்கும்.

செக்ஸும் அதே மாதிரி தேன். நல்ல ஆரோக்கியமான வயசு புள்ளை ஒரு 15 நாள் பொம்பள வாசம் படாம இருந்தா அவனுக்குள்ள கிளர்ச்சியை உருவாக்க ஒரு பெண்ணின் குரல் கூட போதும். அவளோட உடலுக்கும் இவன் உடலுக்கும் 30 செ.மீ கேப் இருக்கும்போதே உடல் புல்லரிக்கும். ( விறைக்கும்னு சொல்லலை) ஒவ்வொரு செல்லும் இன்ப  அதிர்வுகளை உணரும். ஆனந்தத்தில் திளைக்கும்.

அதனால தான் சொல்றேன். செக்ஸுல வெற்றிக்கொடி நாட்டனும்னா பிரம்மச்சரியம் அவசியத்துலயும் அவசியம். ஆணுக்கு உண்மையில கிளர்ச்சியை தர்ரது பெண்ணுடல் அல்ல இவனுடல்தான். என்ன ஒரே ஒரு நிபந்தனைன்னா ரெண்டு முதலிரவுகளுக்கிடையில் அ சுய இன்பங்களுக்கு இடையில்  ஒரு உத்தேசமான கேப் இருக்கனும்.

சுய இன்பம் அனுபவிக்கிற பார்ட்டிகளுக்கு  ஆத்திரம்,அவசரம்,அச்சம்,குற்ற உணர்வு, சீக்ரசி மெயின்டெய்ன் பண்ணியாக வேண்டிய கட்டாயம் இத்யாதி காரணங்களால் சீக்கிரம் காரியத்தை முடிக்கும் வழக்கம் ஏற்பட்டுவிடும். இந்த காரியத்தில் ஜஸ்ட் இன உறுப்பு மட்டும் தூண்டப்பட்டு ,தீண்டப்பட்டு காரியம் நடப்பதால் இவர்களின் உணர்வு ஜஸ்ட் இன உறுப்பில் மட்டுமே மையம் கொண்டு மற்ற உணர்வு கேந்திரங்கள் எல்லாம் மழுப்பப்பட்டுவிடும். ( இவிகதேன் சிட்டிபஸ்ல முட்ட கொடுக்கிறது). இவிகளுக்கு தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டில்ங்கறாப்ல ஆஃப்டர் மேரேஜும் இந்த அவசரம் குறையாது. இவிகளா டிலே பண்ண நினைச்சாலும் முடியாத நிலை. இவிகளும் கொஞ்சம் போன மன,உடல் கட்டுப்பாடுகளை கடைபிடிச்சா  மம்முத ராசாக்களா மாறிரலாம் டோன்ட் ஒர்ரி.

(பெண்களுக்கும் இந்த விதி பொருந்தும். இவிக இன்னம் அட்வான்ஸ்ட் செயற்கை பொருட்களையெல்லாம் உபயோகிக்கிறதா கேள்வி.. இவிகளுக்கும் உணர்வுகள் இன உறுப்பிலேயே மையம் கொண்டுவிடும் – இவிகளும் நார்மலா மாற கொஞ்ச நாள் பிடிக்கும்)

செக்ஸ் பவர்ங்கறது டோட்டலா உங்க பாடி பவர் மேல டிப்பெண்ட் ஆகி இருக்கும். உடம்புல ஜீரண மண்டலம், இனப்பெருக்க மண்டலம்னு ரெண்டு இருக்கு. ஒன்னு ஒர்க் ஆகும்போது இன்னொன்னு ஒர்க் ஆகாது. ஆனால் பலவந்தப்படுத்தினா அம்மாவுக்கு தண்ணி கொண்டு போற குரங்கு மாதிரி வேலை செய்ய ஆரம்பிக்கும்.

இந்த பழக்கம் தொடர்ந்தா ரெண்டு மண்டலத்தோட செயல் திறனும் பாதிக்கும். செக்ஸுங்கறது வேற, சுய இன்பங்கறது வேற . செக்சுங்கறது அடுத்தவுக கோஆப்பரேஷனோட நடக்கறது. சுய இன்பம்ங்கறது தான் தோன்றித்தனமா நடக்கறது.

முறை எதுவா இருந்தாலும் உணவையும் செக்ஸையும் பிரிச்சு வைச்சுக்கறது நல்லது.
கரப்பான் பூச்சிக்கு ஆயுள் அதிகம்.ஏன்னா அது முதல்ல கில்மா அப்பாறம் தண்ணி அப்பாறம் உணவுனு ஷெட்யூல் வச்சிருக்கு.

அதனால உணவுக்கும் செக்ஸுக்கும், செக்ஸுக்கும் உணவுக்கும் இடையில குறைஞ்ச பட்சம் 3 மணீ நேரமாச்சும் கேப் கொடுக்கிறது உங்க செயல்திறனை அதிகரிக்கும்.

ஆங் இன்னா சொல்லிக்கினிருந்தேன். செக்ஸுல உடலிலான ஒவ்வொரு செல்லும், ஒவ்வொரு அணுவும் இன்பத்தில் திளைக்க முடியும். அதுக்கு தேவை பிரம்மச்சரியம்னு சொன்னேன்.

இந்த பாயிண்டை நிறைய பேர் குறை சொல்லலாம். ஆமா ஏற்கெனவே கேட் எல்லாம் வீக்கா இருக்க அணைய  நிரப்பினா  அசலுக்கு மோசம் வந்துராதானு கேப்பாய்ங்க.

பிரம்மச்சரியம்னா வெறுமனே விந்துவை வெளியேற்றாம இருந்துர்ரதுனு நினைச்சா அந்த இழவுதான் நடக்கும்.

பிரம்மச்சரியம்ங்கறது வேற ஸ்கூலு. லெசன் ப்ளானே வேற அதை இன்னொரு பதிவுல பார்ப்போம்.

இப்போ பொசிஷனுக்கு வந்துரலாம். பத்து பதினைஞ்சு நாள் பிரம்மச்சரியம் -அதுக்கப்பால ஹால் – அம்மா வராய்ங்க.

ஒடனே பெட் ரூமுக்கு ஓடப்படாது.லேசான தொடுகைகள்,சீண்டல், சுளுக்கெடுக்கறது,  சின்னதா முத்தங்கள்னு ஒரு 15 நிமிஷமாவது ஓட்டனும்.

அதுக்கப்பாறம் பெட் ரூம். இப்ப உங்க முன்னாடி இருக்கிறது ரெண்டே அஜெண்டா ஒன்னு உங்க உணர்ச்சிகளை ஒத்திப்போடறது. அடுத்தது அவிக உணர்ச்சிகளை தூண்டறது.

ஸ்ரீ ஸ்ரீ சொல்வாரு “கவிதகேதி காது அனர்ஹம்” அதாவது பாடு பொருளாகும் தகுதியற்ற வஸ்துவே கிடையாதாம். அப்படி பெண்ணின் உடலில் உணர்ச்சியை தூண்ட உதவாத அங்கமே கிடையாது. கூந்தல் , நெற்றி, மூக்கு,கன்னம், உதடு, கழுத்து இப்படி ஒன்னில்லை ரெண்டில்லை ஓராயிரம் இருக்கும்.

வாத்சாயனர் சொல்ற தொடுகை,தடவல், உருட்டல், பிடித்தல்,பிசைதல், கிள்ளல், கவ்வுதல்,கடித்தல் (லேசா..வலிக்கும்)  போன்ற ஐட்டங்களையெல்லாமொரு பாட்டம் முடிக்கவே ஒரு மணி   நேரமாகும். குறைஞ்ச பட்சம் அரை மணியாச்சும் முன் விளையாட்டு இடம் பெறலைன்னா இத்தீனி முஸ்தீபும் வீணாயிரும்.

அது சரி இத்தனை விஸ்தாரமா போறதுக்குள்ள காரியம் கை மீறிட்டா என்ன பண்றதுனு கேப்பிக.

முதற்கண் எதிர்காலத்தில் நான் போடப்போற பிரம்மச்சரியம் பத்தின பதிவுகளை படிச்சாகனும்.

ரெண்டாம் கண் (முதற்கண்ணுக்கு அடுத்தது இதானே) வாசனை பாக்கு (இதை எதுக்கு சொல்றேனு ரோசிச்சு பார்த்தா – ட்ரை பண்ணி பார்த்தா புரியும்) , இளவட்டங்களா இருந்தா பபுள் கம் யூஸ் பண்ணலாம். கில்மால இறங்கறதுக்கு முந்தி நிறைய தண்ணீர் எடுத்துக்கனும். ஐஸ்வாட்டர் இருப்புல வச்சுக்கனும். காரியம் கை மீறி போற மாதிரி இருந்தா ஒரு ஜலாபிஷேகம். அந்த பிரதேசம் வரை செஞ்சாலே போதும். எல்லாமே பேக் டு தி பெவிலியன் வந்துரும்  (குளிர்காலம்னா இன்னம் ஸ்ரேஷ்டம்).

இன்னொரு டெக்னிக் என்னன்னா உங்க கான்சன்ட் ரேஷன் எல்லாம் துகிலுறியறதுல  இருக்கலாமே தவிர நீங்க மட்டும் சர்வாலங்கார பூஷிதரா இருக்கனும். வாட்சை கூட கழட்டாதிங்க. மேலும் உங்க இடுப்பு பிரதேசத்தை பாதுகாத்துக்கனும். ( அதாவது உரசல்லருந்து)

 யோனியின் அமைப்பை புரிஞ்சிக்கிடனும். (ஒரு பாட்டம்  வெஜினான்னுட்டு கூகுல் இமேஜஸ்ல சர்ச் பண்ணிப்பாருங்க .படம் வரைஞ்சு பாகங்கள் குறிச்சிருப்பாய்ங்க. இதுல க்ளிட்டோரிஸ்ங்கற மதன பீடம்தான் முக்கியம்மேற்படி தொடுகை,தடவல், உருட்டல், பிடித்தல்,பிசைதல், கிள்ளல், கவ்வுதல் எட்ஸெட்ரா ட்ரீட் மெண்டை இங்கனயும் ஆரம்பிச்சுரனும்.

இந்த எடுப்பு,தொடுப்பு, பல்லவி,அனுபல்லவி, நாலு சரணம்லாம் முடிஞ்சதுக்கு அப்பாறம்தான் நீங்க பார்த்த பாடாவதி நீலப்படம்லாம் . அப்பத்தான் சமரதம்னு சொல்ற ஒரே நேரத்திலான உச்சம் சாத்தியம்.  நாளை மிக்கா நாளைக்கு ஹால்ல உட்கார்ந்து “ஆச்சா ஆச்சானு கேட்டாலே அங்கன பத்திக்கும்.

ஆழமான உடலுறவுன்னா இதான். உங்க உடலுறவு இப்படி அமைஞ்சா அடுத்த உடலுறவு பத்து பதினைஞ்சு நாள் தள்ளி போகும் இயல்பான பிரம்மச்சரியம் கைவரும்.

ஒரு நாளில்லை ஒரு நாள் இந்த ப்ராசஸ்லருந்து  நீங்க ஆன்மீகம்ங்கற ப்ராசஸுக்கு ப்ரமோட் ஆவிக.

ஓகே உடு ஜூட்..

செக்ஸில் முன் விளையாட்டின் முக்கியத்துவம்

நம்ம புள்ளைங்களுக்கு ( நடிகர் திலகம் பாணி) செக்ஸுன்னா என்னனு சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.  கண் பார்த்தா கை செய்யும்னு ஒரு பழமொழி உண்டு. கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்னு நாமக்கல் கவிஞர் சொன்னாரே அல்லாத்தயும் நம்ம புள்ளைங்க தப்பாவே புரிஞ்சிக்கிட்டாய்ங்க.

செக்ஸுன்னா என்னனு தெரியும். ஆனால் அதுல கிடைக்கிற “காலாதீத நிலை” “குட்டி மரணம்” “ப்ளாக் அவுட்”  ஜஸ்ட் ஒரு  சினிமா ஸ்லைடு. அசலான படம் வேற இருக்குனு தெரியாது.

இதுக்கு காரணம் என்னன்னா நின்னு விளையாடறதில்லை. சச்சினாச்சும் எப்பயும் டக் அவுட் ஆனாலும் அப்பப்போ செஞ்சுரி போட்டுர்ராரு. நம்ம புள்ளைங்க எப்பயும் டக் அவுட்டுதேன்.

நாம எப்ப கில்மாவை தொட்டோமோ அப்பத்துலருந்தே பிரபல பத்திரிக்கைலல்லாம் ஒரு காலமாச்சும்  கில்மா எழுத ஆரம்பிச்சுட்டாய்ங்க.

நாம பரிகாரம் எழுத ஆரம்பிச்சா அவிகளும். நாம அனைவருக்கும் தனயோகம் போட்டா அவிகளூம்.

அடங்கொய்யால உங்களுக்கு தில்லிருந்தா இந்த பதிவுல எழுத போற சமாசாரத்தை எழுதுங்கடி.

நம்ம புள்ளைங்களுக்கு 7 : 23 நெம்பர் நல்லா ஞா இருக்கும்னு நினைக்கிறேன். அசலான வேலைக்கு பின்னாடி அவள் உச்சம் பெற  அவளுக்கு 23  அசைவு தேவைப்படுது. இவன் 7 அசைவுலயே நாக் அவுட்.

இடைப்பட்ட 16 நெம்பரை இழுத்துப்புடிக்கத்தேன் இந்த பதிவு. ” அழுக்கு போக குளிச்சவனுமில்லை . ஆசை தீர ……வனும் இல்லை”னு சொல்வாய்ங்க. அதையெல்லாம் நம்பாதிங்க.

எல்லாத்துக்கும் ஒரு குன்ஸ் இருக்கு. ஒரு வியூகம் இருக்கு.  அதுல ஒரு பாகம் தான் இந்த முன் விளையாட்டு (இதுல ஏதும் டபுள் மீனிங் இல்லிங்கண்ணா)

இந்த ஃபோர் ப்ளேவோட நோக்கம் நிறைவேறனும்னா ஆண்,பெண் ரெண்டு பேருமே மேற்படி 7:23 வித்யாசத்தை புரிஞ்சிக்கிடனும்.

பெண் தன்னோட அச்சம்,  நாணம், வெட்கம்,மடம்,பயிர்ப்பு இத்யாதியையெல்லாம் ஓரளவாச்சும் ரிலாக்ஸ் பண்ணிக்கிடனும். டூ மச் ஈஸ் ஆல்வேஸ் பேட். மேற்படி ஐட்டம்லாம் ஓவராயிருச்சுன்னா அது அசலுக்கே மோசமாயிரும்.

பெண் தன் நிர்வாணத்தை மறைக்கவே விரும்பறா. ஆண் அதை தரிசிக்கவே விரும்பறான். இவள் மறைக்க மறைக்க அவன் அதிகம் உ.வசப்படறான். 7ங்கறது நாலு அஞ்சு அசைவுலயே அவுட்.

 நமக்கு டீ சாப்பிடனும்போல இருக்கும். அந்த நேரம் பார்த்து நம்ம கூட்டாளி “மாமூ.. ஒரு டீ அடிக்கலாமா” னு கேட்டா ஒடனே நம்ம மைண்ட் அவன் கேஸ் ஹிஸ்டரிய புரட்டி பார்க்கும்.

இவனோட டீ குடிச்சா  நம்ம சமூக கௌரவம் பாதிக்கப்படுமா? இவன் காசு கொடுப்பானா? நாம கொடுக்க வேண்டி வருமா? இங்க இவனுக்கு கணக்கிருக்கா ? நமக்கு கணக்கிருக்கா?

செக்ஸுல அதுவும் தம்பதிகளுக்கிடையில இந்த கணக்கெல்லாம் தேவையில்லாத மேட்டர். நான் “சயனேஷு ரம்பா”ன்னுட்டு அவாளே சொல்லியிருக்கா.  இதும்படி பார்த்தா பெட்ல உட்காரச்சொன்னா படுத்துக்கிடனும். அப்படி படுத்தா தாளி அவனுக்கு சப்த நாடியும் ஒடுங்கி போயிரும்.அரண்டு போயிருவான். அந்த ரேஞ்சுக்கு போகலைன்னாலும்..

வாரி சுருட்டிக்கிட்டு ஓடாம, மதியம் சாம்பார்ல உப்பை போட நோகுதானு கேட்டதை ஞா வச்சுக்கிட்டு மரவட்டை கணக்கா சுருட்டிக்காம , ரொட்டீனா ” சீ என்ன இழவு இதெல்லாம்”னுட்டு சொம்மா வேடிக்கை பார்த்தாலே போதும் ஆப்பரேஷன் பாதி சக்ஸஸ்.

இந்த ஃபோர் ப்ளேல ஆண் பெண் ரெண்டுபேருக்குமே மணீ ரத்னம் சினிமா மாதிரி ஒரு வரி வசனம் தேன். அவள் ” வேணாங்க.. ச்சீ நீங்க ரெம்ப மோசம்” இவன் ” ப்ளீஸ்டீ இன்னைக்கு ஒரே நாள்” பிரச்சினை தீர்ந்து போயிரும்.

எச்சரிக்கை:
இந்த டிப்ஸெல்லாம் சைக்காலஜிக்கலா, ஃபிசிக்கலா ஃபிட்டாயிருக்கிறவுகளுக்கு, அதுலயும் சாதாரண சந்தர்ப்பத்துக்குத்தேன். கண்ட நேரத்துல ,கண்டவுக கிட்ட அப்ளை பண்ணி அப்பள கட்டைல அடி வாங்கினா அதுக்கு நான் பொறுப்பில்லிங்கண்ணா.

7:23 க்கிடையில வித்யாசம் 16. இதை பாலன்ஸ் பண்றதுலதான் செக்ஸிலான வெற்றியே அடங்கியிருக்கு.

அந்த காலத்துல 10.30 மணிக்கு ஷோ ஆரம்பம்னா  9 மணிக்கே ரிகார்டு போட ஆரம்பிச்சுருவாய்ங்க. அதே குன்ஸுதான். செக்ஸுல ஆண் தான் முன் மொழியனும். பெண் வழி மொழியனும்.

அதனால ராத்திரி 10.30க்கு ஷோன்னா 10.15க்கு வீடு வந்து அள்ளிப்போட்டுக்கிட்டு பெண்டாட்டி மேல பாயறது முட்டாள் தனம்.

எட்டு எட்டரைக்கெல்லாம் மல்லிகை பூ இத்யாதியோட வீடு வந்து குளிச்சி டிவி பார்த்துக்கிட்டே.. ” த .. நீ ச்சொம்மா அது இதுனு நீட்டி முழக்கிக்கிட்டு இருக்காதே எதுனா உப்புமா அது இதுனு சுருக்கமா முடி”ங்கனும்.

“த இன்னும் நீ இந்த பூவை வச்சிக்கலயா”ன்னுட்டு சமையலறைக்கே போய் தேவையில்லாம உரசினபடியே வச்சு விடனும் .

சாப்டுட்டு டிவிய பார்த்துக்கிட்டே “ஆச்சா ஆச்சா.. இன்னம் என்னத்த உருட்டறே நீ”ன்னுட்டு கேட்டுக்கிட்டே இருக்கனும். அப்ப அவிக சைக்கலாஜிகலா பிரிப்பேர் ஆயிருவாய்ங்க.

உங்க மைண்டல் ஒரு பாய்ண்டை கரீட்டா ஃபீட் பண்ணிக்கனும். உங்களோட ஃபோர் ப்ளே அதாங்க முன் விளையாட்டு அவிகளை டெம்ப்ட் பண்ணனுமே தவிர  உங்கள டெம்ப்ட் பண்ணக்கூடாது.

செக்ஸுங்கறது ஒரு வித்யாசமான ரன்னிங் ரேஸ். இதுல ஆண் முயல். பெண் ஆமை.

முயல் தன் வேகத்தை குறைச்சிக்கிட்டு ஆமையோட வேகத்தை கூட்டியபடியே ஓடனும். ஆணோட காமம் பால் பொங்கின மாதிரி. பெண்ணோட காமம் அரிசி உலை மாதிரி .

மெல்ல மெல்ல மோகத்தீய கிளப்பி சுடர் விட்டு பிரகாசிக்க வைக்கனும். அரிசி முழுக்க வேகற வரை தீ தொடரனும். இல்லைன்னா நாளைக்கு நீங்க ஊட்டி மலர் கண்காட்சியையே பேர்த்து எடுத்துக்கிட்டு போனாலும் .. வேஸ்டு.

நிறைய பெண்களுக்கு செக்ஸ் மேல இன்டரஸ்ட் குறைய காரணமே ஆண்களோட டக் அவுட் சமாசாரம்தேன்.

சரி மேட்டருக்கு வருவோம். சாப்டாச்சு, சமையல் மேடைய கழுவி விட்டுட்டு ஒன்னும் தெரியாத பாப்பா மாதிரி வருவாய்ங்க.

“இன்னாத்துக்கு அப்டி அர்ஜெண்ட் பண்றிங்க.. என்ன விஷயம்?” இங்கருந்து காதல் நாடகம் ஆரம்பம்.

(மீதி அடுத்த பதிவில்

அதான் பி.கு: சுகுமார்ஜீ  நம்ம ஆப்பரேஷன் இந்தியா2000 (வல்லரசு கனவுகள்) ப்ளானை விஷுவலைஸ் பண்ணி ஒரு ஒளிப்படம் தயாரிச்சு விட்டிருக்காரு (பார்த்திங்கல்ல) அதை மஸ்தா பேரு பார்க்கனும்னு தான் இந்த கில்மா பதிவு

புட்ட பர்த்தி பாபாவும் ஆட்டோசங்கரும்

புட்ட பர்த்தி சாயி பாபாவோட பிறந்த  நாளுக்கு பராம்பரிய பத்திரிக்கைங்க எல்லாம் சிறப்பிதழ் போட்டாய்ங்க

( பின்னணி ஒரு இழவுமில்லை : விளம்பரம்தேன் – வாசகனை நம்பி பத்திரிக்கை நடத்தின காலம் போச்சு – இன்னைக்கு விளம்பர தாரனை நம்பி பத்திரிக்கை நடத்தற காலம்)

பிரதமர், முதல்வர்,கவர்னர் (  இந்தாளு சாஷ்டாங்கமா வேற கால்லவிழுந்தாரு ) . நான் ஒரே கேள்விதான் கேட்கறேன்.

இன்னைக்கு நீங்கல்லாம் போனிங்க வந்திங்க. கேட்டா சொந்த சமாசாரம்பிங்க. சரி நைனா நாளைக்கே பாபா ஆசிரமத்துல ஒரு கொலை நடக்குது . தற்கொலை நடக்குது. லோக்கல் போலீஸ் உள்ளார  நுழையுமா? ( நிறையவே நடந்திருக்கு-பாபாவையே சுடப்போனான் ஒருத்தன் -பாபா பாவம் அவசரத்துக்கு சங்கு சக்கரம்லாம் கிடைக்காம (அவர் தான் கடவுளாச்சே) அலாரத்தை அமுக்கி எஸ்கேப் ஆனாரு)  நுழைஞ்சாலும் தில்லா விஜாரிக்குமா?

பெரிய மனிதர்களை (அப்படி சமுதாயம் கொண்டாடும்) விமரிசிப்பது ஒரு மனோ வியாதி என்று யாரோ ஒரு பெரிய மனிதர் (?) எனக்கு அறிவுரை கூறியதுண்டு.  ஆனால் நெற்றிக்கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே என்ற நக்கீரன் வழி என் வழி ஆகும்.

அதிலும் சமுதாயத்தையே பாதிக்கும் நிலையில் உள்ள செலிப்ரிட்டீஸ் ஆதர்சமாக இல்லா விட்டாலும், தரம் தாழ்ந்து விடாதிருக்க முயற்சிக்க வேண்டும். அதை விடுத்து பெரிய மனிதன் என்ற போர்வையில் நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்று தவறுகளை தொடர்ந்தால்  என் கிழிப்பு தொடரும்.

நாம பாபா பத்தி பேசினா ஒடனே தண்ணி கொடுத்தாரு, கண் ஆப்பரேஷன் பண்ணாருங்கறாய்ங்க. ஆட்டோசங்கர் கூட அதைத்தானே பண்ணாரு. அவருக்கு தூக்கு. இவருக்கு ?

( கடந்த காலத்தில் அதிகாலை டாட் காம் விடுதலை டாட் காமில் வெளி வந்த புட்டபர்த்தி பாபாவின் புருடாக்கள் என்ற பதிவை லேசான எடிட்டிங்குடன் இங்கு வெளியிட்டிருக்கிறேன்.படிங்க. கமெண்ட் அடிங்க)

சரித்திரத்தில் முதலாம் ஜார்ஜ் இரண்டாம் ஜார்ஜ் போல, சங்கராச்சாரிகளில் சீனியர், ஜூனியர், சப் ஜூனியர் என்றிருப்பது போல சாயி பாபாவிலும் உண்டு. புலியை பார்த்து நரி சூடு போட்டுக்கொண்ட கதை தெரியுமா? அதுவேதான் ஷீரடி பாபாவின் கதையை கேள்விப்பட்ட சிறுவன் நான்தான் பாபா என்று பீலா விட புட்டபர்த்தி பாபா உருவானார்.

உங்களுக்கு தெரியுமோ தெரியாதோ புட்டபர்த்தி பாபாவுக்கும் ஒரு ஜூனியர் உள்ளார் (சப் ஜூனியர்) அவரை பாலசாயிபாபா என்கிறார்கள். அதே பரட்டை தலை. அதே சாயல். பால என்றால் பத்து பதினைந்து வயது என்று நினத்துவிடாதீர்கள் மனிதருக்கு 50- க்கு மேல் வயதிருக்கலாம்.

நிற்க!

புட்டபர்த்திக்காரர்  உங்க முதல்வர் வீட்டுக்கு வ்ந்து ஒரு மோதிரம் கூட வரவழைத்து (கூரியர்ல இல்லிங்கண்ணா) கொடுத்து சென்றார். இயற்கை கொடுத்த இளமையே போய்விட்ட நிலையில் பெரியார் கொடுத்த நாத்திகமும், பகுத்தறிவுமா நிலைத்திருக்க போகிறது. முதல்வரும் பாவம் தெய்வமே எனப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டார். உடனே கேரோ மீட்டரில் வைத்து அதன் தரத்தை பார்த்திருக்க வேண்டாமோ? உட்புறம் எந்த கடையின் பெயர் பொறிக்கப்பட்டிருக்கிறது என்று பார்த்திருக்க வேண்டாமோ? பாபா இருக்கையில் எதற்கு கோலார் தங்கவயல் எல்லாம்? இழுத்து பூட்ட வேண்டாமோ?

பல காலத்துக்கு முன்பு நான் பத்திரிக்கைகளில் படித்த செய்தி

ரஷ்ய குடும்பம் ஒன்று பாபா தரிசனத்துக்கு வருகிறது. அதி ஒரு (ரஷ்ய) சிறுவனும் இருக்கிறான். பாபா பந்தாவாய் அவன் தலை மேல் கை வத்து ஆசீர்வதித்து “உனக்கு என்ன வேணும் கண்ணா” என்றார். சிறுவன் கேஷுவலாக “கப் ஆஃப் காஃபி” என்றான். பாபா ஏன் அவனிடம் நிற்கிறார்? வுட் ஜூட் ! மோதிரம், செயின் என்றால் எப்படியோ ஒரு வழியா மேனேஜ் பண்ணலாம். காஃபிய எங்க வச்சுருந்து எப்படி கொடுக்கிறதாம்?

சுவர்க்கத்தில் அச்சிடப்பட்ட பைபிள்

கிறிஸ்தவர் ஒருவருடன் பாபா வாக்கிங் போகும்போது நடந்தது. ஓரிடத்தில் பாபா சடன் ப்ரேக் போட்டாற்போல் நின்றார். கூட வந்தவருக்கு ஒரு இடத்தை காட்டி இங்கே தோண்டு என்றார். அவரும் தோண்டினார். தோண்டியதில் ஒரு பைபிள் பிரதி கிடைத்தது. கிறிஸ்தவர் “பாபா இந்த பைபிள் எங்கே அச்சடிக்கப்பட்டது” என்று கேட்டார். “பாபா ஸ்வர்கத்துல”ன்னார். உடனே கூட வந்த ஆசாமி பைபிளை புரட்டி எந்த அச்சகத்தில் அச்சிடப்பட்டதோ கூறினார். பாவம் பாபா அந்த காலத்தில் மைக்கேல் ஜாக்சன் மாதிரி மூக்கு ஆப்பரேஷன் செய்யும் வசதியில்லாததால் உடைந்த மூக்குடனேயே ஆசிரமம் போய்ச்சேர்ந்தார்.

பாபாவுக்கு நொடில பைபிள் ப்ரிண்ட் செய்து தரும் சக்தி இருக்கும்போது அவர் ஏன் இந்தியன் கரன்சிய அரசாங்கத்துக்கு அடிச்சு தரக்கூடாது. குறைந்த பட்சம் தனக்காவது அச்சிட்டு கொள்ளலாம் அல்லவா? கேப்பையில் நெய் வடிகிறதென்றால் கேட்பவன் என்ன கேனையனா?

இவர் நான் தான் ஷீரடி பாபாவின் மறுபிறவி என்கிறார். அந்த பாபா ஈஸ்வர் ஏக் (கடவுள் ஒருவரே) என்றுதானே கூறினார். அல்லா மாலிக் (அல்லாஃஹ் தான் முதலாளி) என்றார். இவரோ நானே கடவுள் என்கிறாரே! சரி ஒழியட்டும் மகாராஷ்டிராவில் ஷிரடி பாபாவுக்கு கோவில் இருக்கிறது. கோடிக்கணக்கில் வருமானம் கொட்டுகிறது. இவர்தான் பாபா என்றால் போய் வாங்கிக்கிட வேண்டியதுதானே!

இவருடைய அருமந்த பக்தர் திருமலை திருப்பதி தேவஸ்தான போர்டு சேர்மன் (முன்னாள்) டி.கே.ஆதிகேசவுலு. சித்தூர் எம்.எல்.ஏ சி.கே.பாபு ஷீரடி பாபா பக்தர். ஷீரடி பாபாவுக்காக ஒரு கோயிலையே கட்டியுள்ளார். ஷீரடி பாபாதான் புட்டபர்த்தி பாபா என்றால் தன் பக்தர்கள் இருவரும் முட்டி மோதிக்கொள்ள விடுவாரா? மோதிக்கொண்டால் பரவாயில்லை ஆதிகேசவுலு சி.கே.பாபுவை இங்கிலீஷ் சினிமா மாதிரி மிஷின் கன்னுடன் ஆட்களை அனுப்பி சுட்டு தள்ள பார்ப்பதும், கண்ணி வெடி வைத்து கொல்லப் பார்ப்பதும் புட்டபர்த்திக்காரருக்கு தெரியாதா? தெரிந்தும் தடுக்கவில்லையா?

குற்றம் நிகழவிருப்பதை அறிந்தும் போலீசாருக்கு தகவல் கொடுக்காதிருப்பதும் குற்றம் தானே! (எப்படியோ சிறு கீறலும் இன்றி சி.கே.பாபு பிழைத்துக்கொண்டார். இரண்டு முறையும் அப்பாவிகள் இரண்டு பேர்தான் செத்தனர். அப்போ ஷீரடி காரர்தான் ஒரிஜினல் என்று பொருளோ?)

டீசல் இல்லாம கார் நின்னு போயிருச்சு:

ஒரு தரம் புட்டபர்த்திகாரர் பயணம் செய்த கார் டீசல் இல்லாம நின்னு போயிருச்சாம். உடனே பாபா இறங்கினாராம். டிக்கில தண்ணி கேன் இருக்கானு கேட்டாராம். இருக்குன்னாங்களாம். உடனே கேன் மூடிய திறந்து விரலை விட்டு தண்ணிய தொட்டாராம். இப்ப ஊத்தி ஓட்டுங்க என்றாராம். கார் ஓட ஆரம்பிச்சுருச்சாம்.

(இது கல்கி இதழ் ஒன்றில் நான் படித்த சம்பவம் – லேட்டஸ்ட் பிறந்த நாளுக்கு ஸ்பெஷல் கூட விட்டாய்ங்க – வாசனுக்கும் விட்டாய்ங்க – அப்போ பாபாவும் வாசனும் ஒரே ரேஞ்சா)

அட கூமுட்டைகளா! அப்படியே பாபாவை ஏரோப்ளேன்ல கூட்டிக்கிட்டு போய் இந்து மகா சமுத்திரத்துல தள்ளி விட்டுட்டா கடல் மொத்தமும் டீசலாயிராதா? கலைஞர் ஒரு ரூபாய்க்கு ஒரு லிட்டர் டீசல் திட்டத்தை கொண்டு வந்துர மாட்டாரா?

இவரது பக்தர் டி.கே.ஆதி கேசவுலு திருமலை திருப்பதி தேவஸ்தான போர்டு சேர்மனாக பதவியேற்றார். ஸ்ரீனிவாசர் திருக்கல்யாணத்தை மாநிலமெங்குமுள்ள கோவில்களில் நடத்த முடிவு செய்தார். இதில் தவறேதுமில்லை. நான் கடவுள் (சினிமா டைட்டில் இல்லிங்க) என்று சொல்லிக்கொள்ளும் பாபாவின் ஆசிரமத்தில் ஸ்ரீனிவாசர் திருக்கல்யாணத்தை நடத்தியது ஏன்? அதிலும் பாபா சோஃபாவில் அமர்ந்து கல்யாணத்தை பார்வையிட்டது ஸ்ரீ வாருவின் பக்தர்களை ரொம்பவே கடுப்படித்து விட்டது. ஆதி கேசவுலு செய்கிறேன் என்றாலும் பாபா அடச்சீ!

நானே கடவுள்… என் முன்னாடி அந்த பொம்மை கல்யாணம் எதுக்கு என்று தடுத்திருக்க வேண்டாமோ?

தூர்தர்ஷன் கேமரா கண்களுக்கு சிக்கிய மாயக்கரம்

அப்போது நரசிம்மராவ் பிரதமர். பாபா பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார். அந்த க்ளிப்பிங்கை தூர்தர்ஷன் ஒளிபரப்ப ஷூட் செய்தது. எடிட்டிங்கின்போது பார்த்தால் பாபா ஒரு தங்க செயினை வரவழைத்து (லலிதா ஜுவெல்லர்ஸ்லருந்து இல்லிங்க) தரும் காட்சியில் ஒரே ஒரு ஃப்ரேமில் ஒரு கை பின்னிருந்து தோன்றி மறைந்ததாம். உடனே தூரதர்ஷன் காரர்கள் பிரதமர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்டனராம். “அந்த ஃப்ரேமை கட் பண்ணிட்டு போடுங்க” என்று உத்தரவு வந்ததாம். காரணம் பி.வி.நரசிம்மராவும் பாபா
பக்தர்தான்.

கொலை முயற்சியின்போது பஸ்ஸரை அழுத்தியது ஏன்?

பாபா மீது ஒரு முறை கொலை முயற்சி நடந்தது. ஒரு ஆசாமி துப்பாக்கியுடன் பாபாவின் படுக்கை அறைக்குள் நுழைந்து விட்டான். பாபா கடவுள்தானே உடனே முப்புரம் எரி செய்த அச்சிவன் போல் புன்னகை பூத்திருக்கலாம், ஸ்ரீராமனைபோல் ஒரு அம்பு விட்டிருக்கலாம், அட அதுதான் வேண்டாம் குறைந்த பட்சம் காற்றிலிருந்து ஒரு துப்பாக்கி வர வழைத்து தன்னை சுட வந்தவனை சுட்டிருக்கலாம் அல்லவா? அதுதான் நடக்கவில்லை. பாபா உடனே அருகிலிருந்த செக்யூரிட்டியை அழைப்பதற்கான பஸ்ஸரை அழுத்தினார்.

வெளி நாட்டினர் தொடர்ந்து மர்ம சாவு

ஆந்திர மாநிலம், அனந்த புரம் மாவட்டத்திலாகட்டும், கர்நாடக மாநிலம், வைட் ஃபீல்டில் ஆகட்டும் பாபா பக்தர்களான வெளிநாட்டினர் தொடர்ந்து மர்ம சாவுக்கு இலக்காகி வருகின்றனர். நாட்டின் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய மந்திரிகள், அதிகாரிகள் எல்லாம் பாபா முன் மண்டியிட்டு கொண்டிருக்க இந்த வழக்குகளில் எல்லாம் பாரபட்சமற்ற விசாரணை நடத்த உள்ளூர் போலீசாருக்கு பைத்தியமா பிடித்திருக்கிறது?

குடி நீர் திட்டம்

ஆட்காட்டி விரலால் தொட்டு கேனிலான தண்ணீரை டீசலாக மாற்றிய பாபா வறட்சி பிரதேசமான அனந்தபுரம் மாவட்டத்தை பச்சை பசேலென்று மாற்ற பல்லாயிரம் கோடி ரூபாய் செலவில் கால்வாய் வெட்டி வருகிறார். ஒரு பக்தராவது பாபா நீங்கதான் கடவுளாச்சே.. நீங்களும் சாதாரண மனிதன் மாதிரி கால்வாய் வெட்டித்தானா தண்ணீரை கொண்டு வரணும்? என்று கேட்கிறமாதிரி இல்லை.

வெளிநாட்டை சேர்ந்த பெப்சி, கொக்கோ கோலா கம்பெனிகள் ஆகட்டும், புற்றீசலாய் கிளம்பிவரும் மினரல் வாட்டர் ப்ளாண்டுகள் ஆகட்டும், அரங்கேற்றி வரும் தண்ணீர் கொள்ளையை நிறுத்தலைனா அந்த நாட்டு பக்தர்களே என்னிடம் வரக்கூடாது என்று அழுத்தம் தரலாமே! நீர் வளங்களை சிதைக்கும் தொழிற்சாலைகளை நடத்தும் பண முதலைகள் இந்த இழி செயலை விட்டாலன்றி தன் அருள் கிடைக்காது என்று எச்சரிக்கலாமே! மணல் கொள்ளையை தடுத்து, மரங்களை லட்சக்கணக்கில் நடலாமே! (ஜக்கி வாசுதேவை இந்த விசயத்தில் பாராட்டியே தீர வேண்டும்).

முன்னாள் முதல்வர் சந்திரபாபுவின் 9 ஆண்டு கால ஆட்சியில் அவர் ஒரே ஒரு அணையை கூட கட்ட முனையவில்லை. அவரும் பாபா பக்தர்தானே. பாபுவுக்கு சொல்லி அணைகள் கட்டசெய்திருக்கலாமே! சரி அதுதான் ஒழியட்டும் மறைந்த ஆந்திர முதல்வர் டாக்டர் ஒய்.எஸ். ஒரு லட்சம் கோடி செலவில் அணைகள் கட்ட ஆரம்பித்தாரே  அதற்கு குறைந்த பட்சம் ஆசி (?) கூறி, ஆதரவு தெரிவித்திருக்கலாமே!

எங்கள் தொகுதியின் முன்னாள் எம்.பி. ஆதிகேசவுலு கூட இவரது பக்தர்தான். தன் மதுபான தொழிற்சாலையின் கழிவு நீரை பத்தாண்டு காலம் ஆற்றில் விட்டு அந்த நீவா நதியை நாஸ்தி பண்ணிட்டாரே தடுத்திருக்கலாமே! ஒரு காலத்தில் பளிங்கு போன்ற நீர் ஓடிய அந்த ஆற்றில் இன்று சாக்கடையை கூட பூதக்கண்ணாடி வைத்துதான் தேடவேண்டும். அந்த ஆற்றின் அருகாமை பகுதிகளில் எங்கு போர் (BORE) போட்டாலும் ப்ராந்தி நிறத்தில்தான் தண்ணீர் வருகிறது. அந்த பகுதி மக்கள் அனைவரும் இன்றுவரை தோல் வியாதியாலும், மஞ்சள் காமலை போன்ற வியாதிகளாலும் அவதிப்பட்டுக்கொண்டுதான் உள்ளனர். அந்த நீவா நதிக்கரையில் பெருமாளுக்கு கற்றளி சமைத்து வருகிறார் ஆதி கேசவுலு. அவர் முதல் முறையாய் அரசியலில் குதித்து காங். கட்சி சார்பில எம்.பி யாக போட்டியிட்ட போது புட்டபர்த்தி பாபாதான் தன் கையால் பிஃபார்ம் கொடுத்தார். கொடுத்து என்ன டி.கே .தோத்து போயிட்டாரே!

பாபா எவ்வழி பக்தர்கள் அவ்வழி

பாபா மேற்படி மோடி மஸ்தான் வேலைகளை செய்து வரும்போது பக்தர்கள் சும்மா இருப்பார்களா என்ன? அவர்களும் தம் பங்குக்கு பாபா படத்துல விபூதி கொட்டுது, தேன் வழியுது என்று பீலா விடுவது வழக்கமாகிப்போனது. இந்த மாதிரி கேஸ் எல்லாம் கொஞ்சம் டீப்பா சமீபத்துல பெரிய இழப்புக்கு ஆளான குடும்பமா இருக்கும். அந்த சோகத்துல இருந்து வெளிவர இந்த விபூதி புரளிய கிளப்பி விட்டிருப்பாங்க. இல்லாட்டி திவால் பார்ட்டியா இருக்கும் இல்லன்னா வீட்டு மேல ஏதாவது லிட்டிகேஷன் இருக்கும்.

இதையெல்லாம் பார்க்கும்போது இந்தமாதிரி டுபாக்கூர் ஆசாமிகளை அங்கீகரிக்கும் இந்து மதத்தை விட “லாயில்லாஹி இல்லல்லாஹி முகம்மது ரசூருல்லாஹி”(அல்லாவை தவிர தெய்வமேதுமில்லை முகமதுவை விட சிறந்த தூதருமில்லை) என்று போதிக்கும் இஸ்லாமே மேல் என்று படுகிறது.

ஆனால் இஸ்லாமில் கூட பாபாக்களை, தர்காக்களை பூஜிக்கும் அம்சம் பெருகி வருவது வேதனையை தருகிறது. ரஹ்மான் போன்ற பிரபலங்கள் விசிட் அடிக்கும் தர்காக்கள் மேலும் மேலும் மக்களை ஈர்ப்பது சோகம். இதற்கு ரஹ்மான் போன்றவர்கள் துணை நிற்பது சோகத்திலும் சோகம்.

ஒரு அணிலின் உதவி…

ஆப்ப‌ரேஷ‌ன் இந்தியா 2000 திட்ட‌த்தின் பாதையில் ஒரு அணிலின் பங்களிப்பு…

திரு. முருகேசன் அவர்களின் திட்டம்… ஒளிவாயிலாக…

புருசன் + கள்ளப்புருசனுக்கிடையில

புருசன் கள்ளப்புருசனுக்கிடையில பாலன்ஸ் பண்ணிக்கிட்டு லைஃபை ஓட்டறது எம்மாம் கஷ்டம்னு அவிகளுக்கு தான் தெரியும். பகவத் பக்தி பத்தி சொல்றச்ச ரா.கி பரமஹம்சர் சொல்வாரு ” ஒரு பொம்பளை தன் புருசனுக்கு தேவையானதை எல்லாம் பக்காவா செய்துக்கிட்டே இருப்பா. ஆனால் அவள் மனசு கள்ள புருசன் மேல, அவன் வரச்சொன்ன இடத்து மேல,அவன் தரப்போற சுகத்துமேலதான் கான்சன்ட் ரேட் ஆகி கிடக்கும். அதே போல ..

இந்த உலகம்ங்கற கணவனுக்கு செய்யவேண்டிய பணிவிடையையெல்லாம் பக்காவா செய்துட்டு இரு. ஆனால் உன் மனசு மட்டும் கள்ளப்புருசனான கடவுள் மேலயே கான்சன்ட்ரேட் ஆகியிருக்கனும்.

இந்த மேட்டர்ல  பேலன்ஸிங் கப்பாசிட்டி மட்டும் பொம்பளைகளுக்குதேன் அதிகம்னு ஒரு சம்சயம். எவனெல்லாம் உபரியா எவளை வச்சிருக்கானு பட்டுனு தெரிஞ்சுபோவுது. ஆனால் எவள் எவனை உபரியா வச்சிருக்காங்கறது கொலை,தற்கொலைனு எதுனா எக்குதப்பா நடந்தாதான் வெளி உலகத்துக்கு தெரியுது.

ரெண்டு பெண்டாட்டிக்காரவுக பொளப்பு நாறப்பொழப்பு. இவிகல்லாம் கள்ளக்காதல் மேட்டர்ல தாய்குலத்தை ஃபாலோ பண்ணிக்கிட்டா பெட்டர் போல.

கரகாட்டம் பார்த்துருப்பிங்க. ஆட்டம் பாட்டுக்கு நடந்துக்கிட்டிருக்கும்.வாண வேடிக்க ஒரு பக்கம், மேள தாளம் ஒரு பக்கம், சாமி ஊர்வலம் ஒரு பக்கம், வேடிக்கை பார்க்கிற கூட்டம் ஒரு பக்கம்  எவன் ஜாக்கெட்ல நோட்டு குத்துவான் , எவன்    நோட்டை மட்டும் குத்துவான், எவன் கப்பாசிட்டி என்னனு குன்சா கமனிச்சிட்டே இருக்கனும். இத்தீனி இழவுக்கும் இடையில தலையில வச்சிருக்கிற கரகம் விழுந்துராம பார்த்துக்கனும்.

நம்ம நிலையும் இதாண்ணேன்.அஷ்டாவதானம், சதாவதானம்லாம் தாய்க்குலத்துக்கு கை வந்த கலை. கைக்குழந்தைய வச்சிக்கிட்டி காஃபி,டிஃபன்,சோத்துக்கடைய பார்த்துக்கிட்டே ஆத்துக்காரருக்கு வென்னீர் போட்டு, ஷூவை  துடச்சி பாலிஷ் போட்டு  வச்சி, நாறிப்போன சாக்ஸை அவசரமா துவைச்சி ஃபேன் காத்துல உலர்த்தி
ய…….பாஆஆஆஆஆஆஆ

வெளியூர் போறச்ச நமக்கும் அந்த கப்பாசிட்டி வந்துருதுண்ணே. (ஊரை போய் சேரனுமேங்கற டெட்லைன் – தாளி இந்த உலகமும் வெளியூர்தானே.- ஒரு நாளில்லை ஒரு நா மேலூர் போக வேண்டியதுதானே -அதை மறந்துட்டதாலதான் இந்த குழப்படி -வெத்து அலட்டல்)..

என்னை பொருத்தவரை ரா.கியோட ஃபார்முலாவை விடாப்பிடியா ஃபாலோ பண்ணிக்கிட்டிருக்கேன்.

நமக்கு கள்ள புருசன் ஆப்பரேசன் இந்தியா2000. “ஆரிய கூத்தாடினாலும் தாண்டவக்கோனே காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோணே”னு நாம எது செய்தாலும் அது ஆ.இ க்காகத்தேன்.

நியூமராலஜிப்படி நவம்பர் 7 முதல் டிசம்பர் 7 வரை ( நமக்கு மட்டும்ணே) அல்லல்,அலைச்சல், சாகசயத்தனம்லாம் தூள் கிளம்பனும். கரீட்டா கீதுண்ணே. எட்டாம் தேதி வீடு மாத்தினேனா , எது எங்கன இருக்குனு தெரியவே ஒரு வாரம் ஆச்சு.

படக்குனு ஆஃபீஸ் போட ஷகரான பஜார் தெருவுல இடம் கிடைச்சது. அந்த வெலை ஒரு வாரம் இழுத்துருச்சு.  இத்தனைக்கும் ரொட்டீன் ஆக்டிவிட்டீஸ் எதுவும் விடலை. தமிழ்பதிவு, தெலுங்கு பதிவு, ஆன் லைன் ஜோதிட ஆலோசனையெல்லாம் தனி தனி ட்ராக்ல ஓடிக்கிட்டே இருந்தது.

இதுல லோக்கல் பாலிட்டிக்ஸ் வேற சூடாயிருச்சு.ஒரு புதுப்பணம், மந்திரி ஒத்தாசையோட  பயங்கர படம்லாம் காட்ட ஆரம்பிச்சிருச்சு. தமிழ் நாட்ல கதை எப்படியோ ஆந்திராவுல பிற்படுத்தப்பட்டோர் அரசியல்னு தனியே ஒரு பிட்டு தனி  ட்ராக்ல ஓடிக்கிட்டே இருக்கும். த. நா மாதிரி படு தேசல் இல்லைன்னாலும் சின்னபாம்பையும் பெரிய தடி கொண்டுதானே அடிக்க வேண்டியிருக்கு.

லோக்கல் எம்.எல்.ஏ ஓ.சி. அந்த ஒரு ஆசாமிக்கு ஆப்பு வைக்க BCகர்ஜனானு ஒரு ப்ரோக்ராம் பண்ணாய்ங்க.  BCக்கு அரசியல் அதிகாரம்ங்கறது அஜெண்டா. தாளி .. BCக்கு அதிகாரமா?, BC லீடர்ஸுக்கு அதிகாரமா?, அவிக வாரிசுகளுக்கு அதிகாரமா? தமிழ் நாட்ல தாத்தாவே BC தேன்..

த.நா BCங்க வீட்ல ரெண்டு குழாய் போட்டு ஒன்னுல பாலும்,இன்னொன்னுல தேனுமா வருது..

அரசுவேலைல ரிசர்வேஷன் கேட்டிங்க.. வந்தாச்சு. வானத்தை வில்லா வளைச்சுட்டிங்களா இல்லை. அரசுவேலைய நம்பி வாழற சனம் எத்தீனி சதவீதம்? விவசாயத்தை நம்பி வாழற சனம் எத்தீனி சதவீதம்.. விவசாயத்துக்கு அடிப்படை நிலம். ஜனத்தொகை அடிப்படையில நிலம் கேளு.

டைரக்ட் டெமாக்ரசி கேளுங்கப்பா. அட்லீஸ்ட் பிரதமர்,முதல்வர் பதவிக்கு டைரக்ட் எலக்சன் கேளுங்கப்பா அதை விட்டுட்டு எவனோ பத்து பேரு எம்.எல்.ஏ ஆகனும்னு சனத்துக்கு கொம்பு சீவி விட்டுக்கிட்டு அலப்பறை பண்ணாதிங்கனு  தலையங்கம் எழுதி கொஞ்சம் போல காசு பணம், சனம் மொபிலைஸ் பண்ணி ஒரு ஸ்பெஷல் இஷ்யூ போட வேண்டியதாயிருச்சு.

ஆ.இ வுல மொதல் பாயிண்டே நேரிடை ஜன நாயகம் தேன்.

நேத்து (24/11/2010) பீகார் தேர்தல் முடிவுகள் வெளியாச்சு. காங்கிரசுக்கு கல்தானு கூட சொல்ல முடியாது கல்லறையே கட்டிட்டாய்ங்க. இது உலகறிஞ்ச உண்மை. ஆனால் 21 ஆம் தேதி பாதி ராத்திரி ( 22 விடியலுக்கு பூர்வம்)   நமக்கு கொஞ்சம் ஞம ஞமங்கவே சோனியா டேட் ஆஃப் பர்த்தை பீராஞ்சு பார்த்தேன். 9/12/1946.

இப்ப இன்னா வயசு? அதை நேம் நெம்பரால டிவைட் பண்ணா 8. அடடா அப்போ எட்டாவது ரவுண்டா? 2009லயே ஸ்டார்டாயிருச்சா? அதான் தெலுங்கானா மேட்டர்ல கைவச்சு நாறிட்டாய்ங்களா அது இதுனு  கிராஸ் செக் எல்லாம் முடிச்சு சோனியாவுக்கு கஷ்ட (கண்ட) காலம்ங்கற தலைப்புல தெலுங்குல ஒரு பதிவ போட்டேன். அதைப்பார்க்க இங்கே http://sambargaadu.wordpress.com/2010/11/22/futuresoniya/
அழுத்துங்க.

நான் இந்த பதிவை போட்ட பிற்பாடுதான் பீகார்ல ஆப்பு, ஆந்திராவுல முதல்வர் மாற்றம். கிரண் குமார் ரெட்டி சித்தூர் மாவட்டம். ராயலசீமா கல்ச்சர். ஒய்.எஸ். சிஷ்ய கோடி. ஸ்ரீ கிருஷ்ணா கமிட்டி ரிப்போர்ட் கைக்கு வந்தா அப்ப இருக்கு கச்சேரி.

ஹய்யா .. யாரு அடுத்த சி.எம்ன்னுட்டு பெட்டிங்கே ஆரம்பிச்சுரலாம்.

9ன்னா செவ். செவ்வாய்க்குரிய காரகத்வங்கள் கீழே: (செவ்வாயே சொல்றாருங்கண்ணா)

வயதில் இளையவர்கள் போலீஸ், மிலிட்டரி, ரயில்வே, எரிபொருள், மின்சாரம், ரத்தம், ஆயுதங்கள், வெடி பொருட்கள், எலும்புக்குள் வெள்ளையணுக்களை (நோய்க் கிருமிகளை எதிர்த்துப் போராடுபவை இவையே – நோய்வராது காப்பவை) உற்பத்தி செய்யும் மஜ்ஜை. கோபம், நெருப்பு, தர்க்கம், வியூகம், தெற்கு திசை, பவழக்கல், சத்ரிய குலத்தினர், அறுவை சிகிச்சை, விபத்து, சமையல் இவை எல்லாவற்றிற்கும் நானே அதிபதி.சூட்டுக் கட்டிகள், ரத்தம், எரிச்சல் தொடர்பான வியாதிகள், போட்டி, ஸ்போர்ட்ஸ், என்.சி.சி. முருகக்கடவுள், பால், கொம்புள்ள பிராணிகள், மாமிசம், பலி இவையும் என் இலாகாவின் கீழ் வருபவையே.

எச்சரிக்கை: மேற்சொன்ன எல்லா மேட்டர்லயும் ஆப்புத்தேன். இதை எழுதற என் பேர் கூட முருகக்கடவுள் தொடர்பானதா இருக்கிறதை கவனிக்கவும்.