சாகும் வரை உண்ணாவிரதம்


ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டம் பற்றிய ஆந்திர முதல்வர் அலுவலகத்தின் அலட்சியப்போக்கை கண்டித்து சாகும் வரை உண்ணாவிரதம் இருந்த போது எடுத்த படம். எஸ்.பி ,எஸ்.ஐயின் செல் போனில் லைனுக்கு வந்து தாம் அனுப்பும் போலீஸ் ரிப்போர்ட்டில் ஆப்பரேஷன் இந்தியா பற்றி முதல்வர் அலுவலகத்துக்கு எடுத்து சொல்வதாய் கூறியதை அடுத்து பழரசம் பருகி 10 நாள் உண்ணாவிரதத்தை கை விடும் காட்சி. பழ ரசம் தருப‌வர் அந்நாளைய டூ டவுன் எஸ்.ஐ. பாஸ்கர் மற்றும் டூ டவுன் போலீசார்

குற்றமயமாகிவரும் சமுதாயம்

நான் 10 ஆம் வகுப்பு படிக்கும் காலத்தில் கூட எங்கள் ஊரில் (1982) குடிப்பவன் கெட்டவன் , லஞ்சம் வாங்குபவன் விரைவில் பிடிபடுவான்,வட்டி வியாபாரம் செய்பவன் விரைவில் முதலையும் இழந்து விடுவான் போன்ற நம்பிக்கைகள் இருந்தன. குடிப்பவன் நம்பத்தகாதவன், என்பதால் அவன் கிராம நீக்கம் செய்யப்பட்ட நிலையிலேயே தொடர்வான். அவனுடன் தொடர்பு கொள்பவர்கள் கூட அஞ்சி அஞ்சி தொடர்பு கொள்வார்கள். அவன் வாழ்வில் சகல நம்பிக்கைகளையும் இழந்த பிறகே,வேறு வழியின்றியே குடிக்க துணிவான். நான் 1984 ல் பீரை ருசி பார்க்க மெசானிக்கல் கிரவுண்டுக்கு போக வேண்டியிருந்தது. இப்போது குடிக்காதவனை விரல் விட்டு எண்ணிவிடலாம் போலிருக்கிறது. குடி,லஞ்சம்,வட்டி,தகாத உறவுகள் மிக மிக அதிகரித்திருப்பதை சமுதாயத்தால் மறைமுகமாகவேனும் அங்கீகரிக்கப்பட்டு விட்டிருப்பதை காண‌ முடிகிறது. முன்பெல்லாம் மேற்சொன்ன குறைகள் உள்ள குடும்பங்கள் தான் டாக் ஆஃப் தி டவுனாக இருக்கும். இன்றோ இவை யாவும் ஸ்டேட்டஸ் ஆகி விட்டிருக்கின்றன.

குற்றமயமாகாத குடும்பமே இல்லை என்று கூறுமத்தனை இழி நிலைக்கு வந்திருக்கும் ஊரை எப்படி திருத்துவது?

ஆண்களின் காதல்:காதலில் வெற்றிக்கு ஜோதிட,மனோதத்துவ டிப்ஸ்

ஆண் குழந்தை தன் தாயிடம் பெரும் ஒட்டுதலுட‌ன் வளர்கிறது. அந்த குழந்தை சிறுவனாகி,சிறுவன் டீன் ஏஜை அடைந்து இளைஞனாகும் போது தாய் எட்டிப் போகிறாள். முதிர்ச்சியற்ற ஆண் குழந்தைகள் இந்த சமயத்தில் தாய் தம்மை விலக்கி வைக்க காரணம் தந்தைதான் என்ற இனம் புரியாத காழ்ப்புணர்வுக்கும் உள்ளாவதுண்டு.தாயுடனான இந்த பிரிவால் அந்த இளைஞனின் மனதில் ஒரு வெற்றிடம் ஏற்படுகிறது. ஒரு ஆதர்ஸ பெண்ணின் பிம்பம் உருவாகி அதை நிரப்ப பார்க்கிறது. உண்மையில் கேட்க சற்று விரசமாக இருந்தாலும் அந்த ஆதர்ஸ பெண்ணின் உருவத்துக்கும்,அவனது தாயின் பிம்பத்துக்கும் அநேக ஒற்றுமைகள் இருக்கும். இதை அந்த இளைஞனே உணர்ந்திருக்க மாட்டான். ஆக ஒரு இளைஞன் உள்ளூற விரும்புவது தன் தாயைத்தான். அவள் அந்த இளைஞனை விலக்கி வைப்பதால் அவளுக்கு மாற்றாக ஒரு பெண்ணை விரும்ப ஆரம்பிக்கிறான். இது மனோதத்துவ உண்மை. ஜோதிடப்படி பார்க்கும் போது அவரவர் ராசிக்கு 4ஆமிடம் தாயை காட்டுவதாகும். எனவே இளைஞர்கள் அதிலும் முதிர்ச்சியற்று,தந்தை மீது காழ்ப்புணர்வு கொள்ளும் இளைஞர்கள் தம் ராசிக்கு நான் காவது ராசியை காதலிக்க ஆரம்பித்தால் அந்த காதல் நிச்சயம் அவர்களது அடிமனதிலான ஆவலை நிறைவேற்றும்.

அதே நேரத்தில் சில இளைஞர்கள் தமது ஜீன் காரணமாகவோ,வளர்ப்புச்சூழல் காரணமாகவோ இளம் வயதிலேயே ஒருவித முழுமையை முதிர்ச்சியை பெற்று விடுகிறார்கள். இவர்கள் தம் தந்தையை ஆதர்ஸ புருஷர்களாக வரித்து வாழ்வார்கள். இவர்களின் இந்த போக்கு தாய்மார்களின் மனதில் ஒரு வித பொறாமையை தோற்றுவித்து சிறுபிள்ளைத்தனமாக செயல்படவைப்பதும் உண்டு. தம் கணவ்ரை தம்மிடம் இருந்து பிரிப்பதாகவும் உள்ளூற கருதி குமைவார்கள். இந்நிலையில் மேலே குறிப்பிட்ட வகையை சார்ந்த இளைஞர்கள் தமது ராசிக்கு 5 ஆவது ராசியில் பிறந்த பெண்ணை காதலிப்பது நன்மை தரும்.

கோலியாத்துகளும் தாவீதாகிய நானும்

எனக்கென்று எதிரிகள் எவருமில்லை. எவன் மனைவியோடும் எனக்கு தொடர்பில்லை. என் மனைவிக்கு என்னை சமாளிப்பதே (பேச்சை சொல்றேங்க) பெரும்பாடாகி ஆண்கள் என்றாலே இப்படித்தானிருப்பார்கள் என்ற முடிவுக்கு வந்து விட்டிருப்பாள். பெண்கள் என்றால் இப்படித்தானிருப்பார்கள் என்ற முடிவுக்கு வந்து விட்ட நானோ, என் மனைவியோ வேலி தாண்டும் வாய்ப்பே இல்லை. எனவே தான் சொல்கிறேன். எவனோடும் எனக்கு தனிப்பட்ட விரோதம் கிடையாது. ஆனால் மக்களை அநாவசியமாக,அகாரணமாய்,சுரண்டி ,அவர்களது உயிர்,உணவு,உடை, இருப்பிடங்களை கூட பறித்து ஆட்டம் போடும் நர ரூப அரக்கர்களை கண்டால் மட்டும் என்னுள் விரோத பாவம் எகிறுகிறது. இதை விரோத பாவம் என்று கூட சொல்ல முடியாது ஒரு வித இர்ரிடேஷன். இதனால் மக்கள் விரோதிகளை என் விரோதிகளாக எண்ணி கொதிக்கிறேன்.

என் விரோதிகள் எல்லாம் ரொம்ப பெரிய மனிதர்கள். கன்ஷி ராம் சொன்னது போல் மணி,மீடியா,மாஃபியா பலம் கொண்டவர்கள்.

நான் சோற்றுக்கே அல்லாடும் பிழைக்க தெரியாதவன். என்றோ காலாவதியாகிப் போன தரும நியாயங்களை நம்பி அவர்களுடன் போராடி வருகிறேன். தம்ம பதா சொல்வது போல் கு.ப. அவர்களுடன் கூட்டுறவை, அவர்களை அங்கீகரிப்பதை தவிர்த்து வருகிறேன்.

என் படைப்புகள் யாவுக்கும் இந்த உணர்ச்சிதான் அடிப்படை. என்னதான் பலவீனனாய் இருந்தாலும் என் மக்களுக்காக , அவர்கள் என் பேச்சை,என் எழுத்தை செவிமடுக்க வேண்டும் என்ற ஒரேகாரணத்துக்காக லைம் லைட்டின் கீழ் வர நான் செய்யும் முயற்சிகள் சமீப காலமாய் ரொம்பவே சூடு பிடித்ததோடு,வெற்றியும் கண்டுவருவதை கூறத்தான் வேண்டும்.

ஒரே நாளில் இரண்டு கோணங்களில் என்னை நான் மக்களிடை கொண்டு செல்ல முயன்ற நாள் ஜனவரி 26. என் மக‌ள் பொறுப்பேற்று நடத்தி வரும் இண்டியன் பொலிடிகல் க்ளோசப் மாதமிருமுறை இதழில் சித்தூர்.முன்னாள் எம்.எல்.ஏ.சி.கே.பாபுவுக்கு குடியரசு தின வாழ்த்துக்கள் தெரிவித்து அவர‌து ஆதரவாளர்கள் கொடுத்த விளம்பரங்கள் பிரசுரமாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது. இத‌ற்கு அடியேன் தான் எடிட்ட‌ன்.

அடுத்து அதே தின‌ம் நான் எழுதி சித்தூர்.ப‌ஜார் தெருவில் உள்ள‌ ஸ்ரீ கிருஷ்ணா ஜ்வெல்ல‌ர்ஸ் வெளியிட்ட‌ மினி ஜோதிட‌ பூமியின் 3000 பிர‌திக‌ள் நாளித‌ழ்க‌ள் மூல‌ம் ம‌க்க‌ளை சென்ற‌டைந்துள்ள‌ன‌. வ‌ர‌வேற்பும் ப‌ல‌மாக‌வே இருந்த‌து. இது தொட‌ர‌ வேண்டும் என்று வாழ்த்துங்க‌ள். என‌து ஆப்ப‌ரேஷ‌ன் இந்தியா 2000 திட்ட‌ம் ஆள்வோர் பார்வைக்கு செல்ல‌ வேண்டுமானால் இது போன்ற‌ கிம்மிக்குக‌ள் தேவைதான் என்ப‌து என் முடிவான‌ முடிவு.

இவையாவும் ம‌க்க‌ள் விரோதிக‌ளான‌ கோலியாத்துக‌ளின் மீது க‌ல்லெறிய‌ நான் த‌யாரிக்கும் க‌வ‌ண்க‌ள்.

முத்தமிடக் கூட முடியாத துரித ஸ்கலித வாலிப வயோதிக அன்பர்கள்

முடியறவாளுக்கு எப்பவும் முடியும்.முடியறவாளுக்கும் காலத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லே
-லா.ச.ரா.

என் வாழ்வை சொன்னால் கண்ட தாழ்வையும் சொல்ல வேண்டும்
தாழ்வை சொன்னால் தரணி என்னை அங்கீகரிக்க மறுத்துவிடும்

நான் அங்கீகரிக்காத ஒரு அமைப்பு என்னை அங்கீகரிப்பதையே நான் அங்கேகரிக்க மாட்டேன்
மறுப்பதை எப்படி ஏற்பது

ஒரு மனைதன் எவ்வளவுதான் தோற்க முடியும்
தன் சவத்துணியை தானே நூற்க முடியும் என்பதற்கான வெள்ளோட்டம் என் வாழ்வு

ஆனால் நான் ஏசுவைப் போல் உயிர்த்தெழ தீர்மானித்துவிட்டேன்

நான் போர்த்திருப்பது சவத்துணியல்ல
சர்வேசன் எனக்கு போர்த்திய பொன்னாடை என்பதை உலகம்
உள்ளபடி உணரும் கணம் நெருங்கி விட்டது

என் மூளை ஒரு வைரச்சுரங்கம்
அதை கிளறும் வச்து எத்தனை அற்பமானதாக இருந்தாலும்
வைர வரிகளையே பிரசவிக்கிறது
அது ஆக்சிஜனோடு, அன்னை பூமியின் சரித்திர புகழையும் சேர்த்தே உட்கொண்டு
உழைக்கிறது

நான் சமைத்துண்ண நேரம் வரும் என்று காத்திருக்கும் நாயல்ல்
வேட்டை நெருங்க காத்திருக்கும் சிங்கம் நான்

திருமண வைபவத்திற்கு வந்தவனெல்லாம் மாப்பிள்ளை வேடம் கட்டுவதை
வேடிக்கையாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் மாப்பிள்ளை நான்.

புகழ் இவர்களை வரித்தாலும் அதை முத்தமிடக் கூட முடியாத துரித ஸ்கலித வாலிப வயோதிக அன்பர்கள் இவர்கள்
என் தாய்..என் தாய்…என் தாய் என்னோடிருக்க என்னை நெருங்காது மனநோய்
மன நோய் பிடித்த மாமேதைகள் இவர்கள், நோய் மனம் கொண்ட பேதைகள் இவர்கள்

நான் சந்திக்கு வருவேன்
இவர்களை நேருக்கு நேர் சந்திக்க வருவேன்

நான் சிந்திக்க வருவாள் அன்னை
அவளை வந்திக்க தருவாள் தன்னை

என் பிறப்பு அவளருள்
என் வறுமை அவளருள்
நான் கனவு காணும் இறுதிப்போர் தள்ளிப் போக காரணம் அவள்

நான் அவள் புகல்
நான் அவள் நகல்

நகல் என்ன நகல் நானே அவள்

தேதி: 16/2/2006 (9/2/2007 சி.கே மீது துப்பாக்கி சூடு)

சுஜாதாவை சுளுக்கெடுக்கவே இந்த பதிவு.

சுஜாதாவை சுளுக்கெடுக்கவே இந்த பதிவு. சும்மா சுற்றி வ‌ளைப்பானேன் ராம்ஜெத்ம‌லானி க‌ண‌க்காய் இதோ 5 கேள்விக‌ள்

1. உங்கள் இளமை காலத்து பொய் வேட‌ங்க‌ளை யெல்லாம் முதுமை க‌லைத்து விடுவ‌தை ஒப்புக் கொள்கிறீர்க‌ளா/

2.உங்க‌ள் க‌தைக‌ளில் வ‌ரும் ஹீரோக்க‌ள் எல்லாம் பிராம‌ண‌ர்க‌ளாக‌வும், வில்ல‌ன் க‌ள் எல்லாம் சூத்திர‌ர்க‌ளாக‌வும் இருப்ப‌தை க‌வ‌னித்தீர்க‌ளா?

3.சிவாஜிக்கு நீங்க‌ள் எழுதிய‌ க‌தை ய‌தார்த‌த்துக்கு விரோத‌மாக‌ இருப்ப‌து கிட‌க்க‌ட்டும். த‌ங்க‌ள‌து ப‌ழைய‌ க‌தைக‌ளை க‌ல‌ந்த‌ சுண்டு க‌றி செய்து ர‌ஜினியின் க‌ழுத்தை அறுத்த‌து நியாய‌மா? இதே வேலையை உங்க‌ள‌வ‌ர் க‌ம‌லுக்கு செய்வீரா?

4. ரோபோவுக்கு க‌தை கேட்டாலும் இதே போன்ற‌ சுண்டுக‌றிதானே த‌ர‌ப்ப‌டும். ச‌ற்றே வில‌கியிரும் பிள்ளாய்.

5.க‌னி மொழி,கார்த்திக் சித‌ம்ப‌ர‌ம் துவ‌ங்கியதாய் தாங்கள் டாம் டாம் போட்ட க‌ருத்து மொத்த‌மே டுபாகூராகி பார்ப்ப‌ன‌ அறிவு ஜீவிக‌ளால் ஆக்கிர‌மிக்க‌ப்ப‌ட்டிருப்ப‌தை ம‌றுக்க‌ முடியுமா?

உலகை உலுக்கும் தீவிரவாதம் முதல் மக்களின் மலச்சிக்கல் வரை யாவும் தீர்ந்து விடும்

அவனவன் கோடிகள் கொள்ளையடித்து ஜீரணம் செய்து விட்டு ஒன்றுமே நடக்காத மாதிரி இருந்து விடுகிறான். அது என்ன இழவோ என் விஷயத்தில் மட்டும் ஒரே ஒரு ரூபாய் சும்மா வந்தாலும் கிரகண காலத்தில் பறவைகள் போல் என் சிந்தனை ஒடுங்கி விடுகிறது. ஒரு வித அச்சம்,உதறல் வந்து விடுகிறது. ஜோதிடம் குறித்த 32 பக்க கையேட்டை கிருஷ்ணா ஜுவெல்லர்ஸ் ஸ்பான்ஸ்ர் செய்து 5000 பிரதிகள் அச்சிட்டு வழங்க உள்ளனர். பேப்பர்,பிரிண்டிங்,பைண்டிங் யாவும் ஒப்பந்த அடிப்படையில் நானே செய்தேன். மிஞ்சி மிஞ்சி போனால் ஒரு 200 ரூ மிச்சமாகியிருக்கும். இத்தனைக்கும் நானும் கூலிக்காரன் போல் கஷ்டப்பட்டேன். என் குறைந்த பட்ச கூலியாக கூட கொள்ளலாம். ஆனாலும் ஒரு கில்ட்டி.

ஏழை மக்களின் வரிப்பணத்தில் அர‌சு ம‌ருத்துவ‌ம‌னையில் பிற‌ந்து,அர‌சு ப‌ள்ளி,க‌ல்லூரியில் ப‌டித்துவிட்டு இந்த நாட்டின் முன்னேற்றத்திற்கு எதுவுமே செய்ய முடியாது,நடக்கும் அநியாயங்களை அலி போல்,கைகட்டி பார்த்துக் கொண்டிருக்க வேண்டியிருக்கிறதே என்று ஒரு வித ஆத்திரம்.

எனது ஆப்பரேஷன் இந்தியா அமலானால் உலகை உலுக்கும் தீவிரவாதம் முதல் மக்களின் மலச்சிக்கல் வரை யாவும் தீர்ந்து விடும். அந்த என் திட்டத்தை மக்கள் முன் வைக்க நான் எத்தனை பெரிய ஊழல் செய்தாலும் பாவம் சேராது என்ற எண்ணம் ஒரு புறம் இருக்க இது போன்ற வரவுகள் கூட என்னை குற்ற மனப்பான்மைக்கு ஆளாக்குவது விசித்திரமாக உள்ளது.