மணியம்மையை அறைந்த பெரியார்


என்.டி.ஆர் கூட தம் மனைவியை அடித்திருக்கிறார். இதை அவரே (மனைவி) சமீபத்தில் ஒரு பேட்டியில் சொன்னார்.

அட இவ்வளவு ஏன் பெண்கள் சுதந்திரத்துக்காகவும், சம உரிமைக்காகவும் சமர் புரிந்த பெரியார் கூட மனைவியை அடித்திருக்கிறார்

எப்படியும் சனங்க பொங்கி எழுந்துருவாங்க. எப்போ? ஏன்? எப்படிங்கற விஷயம் அடுத்த பதிவில்

இந்த உலகத்திலேயே மனைவியை அடிக்காதவங்க ரெண்டு பேர்தான் .ஒருத்தன் பிறக்கவே இல்லை. இன்னொருத்தனுக்கு கல்யாணமே ஆகலை.

என்னைப் பொருத்தவரை எம்.ஜி.ஆர் மீது எத்தனை விமர்சனங்கள் இருந்தாலும் ரியலி ஹி ஈஸ் கிரேட். கடந்த பதிவில் நான் குறிப்பிட்ட சம்பவம் உண்மையிலேயே நடந்திருந்தாலும் ஹி ஈஸ் கிரேட் தான்.

ஒரு முறை கற்பனை செய்துகொள்ளுங்கள் எம்.ஜி.ஆரை புரட்சி தலைவர் என்று அவரது ரசிகர்கள் கொண்டாடியபோது கலைஞர் வகையறா ஏகத்துக்கு கிண்டலடித்தது உண்டு. ஆனால் இன்று திரும்பி பாருங்கள் அவர் வாழ்க்கையே ஒரு புரட்சிதான்.

ஆமாம்!
ஏதோஒரு திருமண நிகழ்ச்சியில் நடனமாட வந்த ஒரு நடிகையை தனியறையில் விசேஷ நடனம் ஆடச்சொல்லி இரண்டு முது பெரும் தலைவர்கள் ரசித்ததாகவும் (அதில் ஒருவர் மூப் படைந்து போய் சேர்ந்து விட்டார். இன்னொருவரும் மூப் படைந்து நாட்களை நகர்த்திக்கொண்டிருக்கிறார். இதற்கு பழி வாங்கவே அந்த நடிகை ஆக்டிவ் பாலிடிக்ஸில் தூள் பறத்தினார் என்று ஒரு ஸ்கூப் உண்டு இது எந்தளவு நிஜம் தெரியாது.

உண்மையில் நான் மனிதர்களிலான சூரிய சந்திர குணாம்சங்களை விவரிக்கவே மேற்படி பதிவை போட்டேன். அதென்னவோ பாவம் எம்.ஜி.ஆர் விஷயம் குறுக்கிட்டுவிட்டது. இருக்கட்டும். அதை தொடாமலிருந்திருந்தால் இத்தனை பேர் படித்திருக்கவே மாட்டார்கள். உனக்கு 22 எனக்கு 32 தொடர் படுத்தே விட்டது. மேற்படி பதிவு ஆக்சுவலி மேற்படி தொடரின் அத்யாய முயற்சிதான். ஓகே நான் சூரிய சந்திர மனிதர்களை பற்றி தனிப்பதிவு போடுவதாய் சொல்லியிருந்தேன் அல்லவா. அந்த விவரங்களை கீழே கொடுத்துள்ளேன் படியுங்கள். ஆதரவு தொடர்ந்தால் இந்த விஷயத்தை ஆழமாக ஆராயலாம். இல்லேன்னா ஜானகியை பின்னெயிடுத்த எம்.ஜி.ஆர் மாதிரி நிறைய ஸ்கூப் கைவசமிருக்குங்கண்ணா

.. Now Go Ahead with the Speacial feauture !

உனக்கு 22 எனக்கு 32 (OR) சூரிய சந்திர குணாம்சங்கள்.

வீட்டுக்கு வந்து ஜகன் கிட்டே பேசினதை எல்லாம் மாயாகிட்டே சொன்னேன். மாயா, “ஏய் நெஜமாவா சொல்றே. நான் சொன்ன ஒரே ஒரு வார்த்தைக்காக ஊருக்கே வீட்டை கட்டி கொடுத்தும் தங்களுக்கு சொந்த வீடு இல்லாம இருக்கிற கட்டிட தொழிலாளிகளுக்கு சொந்த வீட்டை தவணைல தர்ர மாதிரி இவ்ளோ பெரிய ப்ராஜக்டா? அதுலயும் போட்ட முதலுக்கு ஜஸ்ட் பாங்க் வட்டி கட்டுப்படியானா போதும்னு முடிவு பண்ணியா? “ன்னு மறுபடி மறுபடி கேட்டாள்.

நான் மார்புக்கு குறுக்கே கை கட்டிக்கிட்டு “யெஸ்”னேன். மாயா சட்டுனு என்னை இழுத்து அணைச்சிக்கிட்டு கன்னத்துல முத்தமிட்டாள்.

“ஏய் என்ன இது ?”

” நீ எனக்கு ஒரு பரிசு கொடுத்தே .. நான் அதுக்கு நன்றி சொன்னேன்”

“ஓஹோ .. நான் அப்படி நினைக்கல. நான் என்னவோ ஐடியல் ஹி அது இதுன்னு உன்னைவிட்டு விலகியே வந்துட்டாப்ல ஒரு ஃபீலிங். உனக்கு எப்படியாவது நெருக்கமாகனும்னு துடிச்சிக்கிட்டிருந்தேன். நீ நேத்து பேசினப்ப உன் தொலைதூர பார்வை, அதுல மிதந்த கனவு , தொனிச்ச சின்சியாரிட்டி இதெல்லாம் என்னை அசைச்சுருச்சு. இந்த ஒரு ப்ராஜக்டை மெட்டீரியலைஸ் பண்ணா போதும் மாயா குட்டி நாய் குட்டியா காலண்டை விழுந்து கிடப்பானு ஒரு நெனப்பு. அதனாலதான் கமிட் ஆனேன்”

“ச்சீய்.. உனக்கேண்டா இப்படி ஒரு நினைப்பு.. வந்தது.. நான் உன்னை இந்த நாட்டுக்கே ராசாவாக்கி பார்க்கனும்னு கனவு கண்டவள். ராசாவானா நீ என்னை விட்டு எந்தளவுக்கு விலகிப்போவேனு தெரியாதா எனக்கு?”

“அது கரெக்டுதான் கண்ணு ஆனால் நடுவுல ஒரு தடவை நான் என்.டி.ஆர் தோல்விக்கான காரணங்களை ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருந்தப்ப உனக்கு எதுக்கு இதெல்லாம்னு சொன்ன மாதிரி ஞா”

“அதுக்கு தான் பழைய தமிழ் சினிமா மாதிரி நீளமா வசனம் பேசி என்.டி.ஆர் என் வாழ்க்கைல குறுக்கிடலன்னா தெலுங்கு இல்லே. தெலுங்கு இல்லேன்னா உன்னோட காதல் இல்லேனு எஸ்டாப்ளிஷ் பண்ணிட்டயே”

“அப்போ நீ என்னவோ பதுங்கின மாதிரி இருந்ததே தவிர என் ப்ராஜக்ட்ல உனக்கேதும் இன்ஸ்பிரேஷன் இருந்ததா தெரியலியே?”

“அப்போ ஜஸ்ட் ஒரு தலைவனோட தேர்தல் தோல்விக்கு இந்தளவுக்கு ரியாக்ட் ஆகனுமா? இவன் ஓவர் ரியாக்ட் பண்றானு ஒரு மேம்போக்கான எண்ணம் உள்ளூற இருந்தது நிஜம்தான். ஆனால் என்.டி.ஆர் டெத் ஆனபிறகு பிரபலங்கள் அவரை பத்தி யும், அவருடனான தங்களோட அனுபவங்கள் பத்தியும் பேசினதை எல்லாம் டி.வில பார்த்துக்கிட்டிருந்தப்போதான் தெரிஞ்சது.. ரியல்லி ஹி ஈஸ் எ லெஜண்ட். மேலும் நீ ஜோஸ்ய புஸ்தகங்களை ஆராய்ச்சிபண்றப்ப மெயின்டெய்ன் பண்ண குறிப்பு நோட்டை பார்த்தேன். அதுல எவ்ரி மேன் ஈஸ் எ ப்லேனட்னு ஒரு சித்தாந்தத்தையும் என்.டி.ஆர் சூரியன், நீ சந்திரன் ங்கற உன் கஸ்ஸிங்கையும் படிச்சேன்”

“மொத்தத்துல நீ என் அலமாரிய குடையற வேலைய விடலே. இரு இரு பெரிய பூட்டா போட்டுர்ரன்”

“முதல்ல ஒழுங்கா உன் பேன்டுக்கு ஜிப் போட்டு பழகு .அப்புறம் அலமாரிக்கு பூட்டு”

“ச்சீ இதை முதல்லயே சொல்ல கூடாது”னு செல்லமா கோவிச்சுக்கிட்டு ஜிப் போட்டேன்.

மாயா, லேசா ஸ்மைல் பண்ணிக்கிட்டே மறுபடி என்னை கிட்டே இழுத்து “நீ இந்த நாட்டுக்கே ராசாவானாலும் சரி நான் இல்லாம உன்னால குப்பை கொட்ட முடியாது. அட்லீஸ்ட் நீ ஜிப் போட மறந்துட்டா ஞா படுத்த ஆள் வேணுமில்லியா?”ன்னாள்.

“அப்போ நீயும் என்.டி.ஆர் கேரக்டர்ல இம்ப்ரெஸ் ஆயிட்டே”

” நோ கண்ணா ! இன்னும் எத்தனை யுகம் போனாலும் ஆம்பளைங்களால பொம்பள மனச புரிஞ்சிக்க முடியாது. பொம்பளைக்கு எங்கயோ இருக்கிற சூரியன் , எங்கயோ இருக்கிற என்.டி.ஆர் எல்லாம் முக்கியமில்லை. அவளுக்கு மை மேன் னு சொல்லிக்க, அவளை காதலிக்க ஒரு மேன் வேணும். யாரோ சூரியன்னு தெரிஞ்சிக்கிட்டதுக்கு நான் கன்வின்ஸ் ஆகலை. அந்த சூரியனோட ஒளிய வாங்கி இதமா பிரதிபலிக்கக்கூடிய சந்திரன் நீனு தெரிஞ்ச பிறகு கன்வின்ஸ் ஆயிட்டன்.”

“த பார்ரா! பொம்பளையோட இந்த சைக்காலஜிக்கு காரணம் என்ன தெரியுமா? ஷி ஈஸ் வீக். பலவீனமே பாபங்களின் கங்கோத்ரினு விவேகானந்தர் சொல்றாரு”

“இருந்துட்டு போட்டுமே. எல்லாருமே என்.டி.ஆரா இருந்துட்டா போதாது. அது மாதிரி கேரக்டரை அட்மைர் பண்றதுக்கு உன்னை மாதிரி பெண்மை குணங்கள் கொண்ட கேரக்டரும் தேவை. நீ மட்டும் இருந்துட்டா போதாது. உன்னை அட்மைர் பண்ண என் மாதிரி ஒரு பொம்பளையும் தேவை. அப்போதான் லைஃப்ல மெலோ ட்ராமா இருக்கும். வாழ்க்கைன்னா முரண்பாடுகளோட கலெக்சன் தான். முரண்பாடுகள் இல்லேன்னா மனித வாழ்க்கையே போர்டம் ஆயிரும்”

“மாயா குட்டி இப்போ பைல இருந்து பூனை குட்டி வெளிய வந்துருச்சு. உன்னோட நம்பிக்கை என்னடான்னா சூரியன் மேற்கு திசைல மறைஞ்சுட்டான். இப்போ நம்மாளு சந்திரன் மாதிரி உதிப்பான்னு முடிவு கட்டிட்டயா? அந்த பப்பெல்லாம் வேகாது. லோக்கல்ல ஒரு சூரியன் இருக்கான். அதான் ஜகன் சார். அவருக்கு ஒரு சூரியன் இருக்கார் அது ஒய்.எஸ்.ஆர்.

சூரியன் இல்லேன்னா சந்திரனால ஒரு மயிரும் பிடுங்க முடியாது. சந்திரன் தன் ஓளியில சில அல்லிமலர்களை பூக்க வைக்க முடியும், ஜஸ்ட் ஒரு இன்ஸ்பிரேஷனை தர முடியும். ஆனால் சூரியன் அப்படி கிடையாது சோலார் பவர், விட்டமின் டி, விட்டமின் ஈ, கிருமிகளை நாசம் பண்ணும், தாவரங்கள் ஸ்டார்ச் தயாரிக்க உதவும். சூரியன் இல்லேன்னா பொழப்பே நாறிப்போயிரும். சூரியன் இருக்கிற வரை தான் சந்திரனுக்கு மரியாதை.

வேணம்னா ராமகிருஷ்ணரோட மறைவுக்கு பிறகு சாரதா அம்மையார் ஏத்துக்கிட்ட ரோலை ஏத்துக்கிட்டு இன்னொரு சூரியன் உதயமாற வரைக்கும் மக்களுக்கு ஆறுதல் தரமுடியும் தட்ஸால்”

“ஏய்.. இப்பத்தான் உன் அந்தரங்கமே எனக்கு புரியுது”

“அடடா.. என்ன நீ இப்படி கலாய்க்கிறே. இப்பத்தான் ஜிப் போடலன்னு சொன்னேன் .போட்டாச்சு. உள்ளாற டெண்டெக்ஸ் வேற இருக்கு. அதை மீறி அந்தரங்கம் தெரியுதுன்னா கலாய்ப்புதானே”

“அப்போ நான் சரியான பாயிண்டை பிடிச்சிட்டேனு அர்த்தம். உனக்கு என்.டி.ஆர் மேல இருக்கிற அட்மைரேஷனை விட சந்திரபாபு மேல இருக்கிற அட்மைரேஷன் தான் அதிகம்.. இரு இரு……….உணர்ச்சிவசப்படாதே. ஆக்சுவலா நீயும் சந்திரபாபுவோட கேரக்டர்தான். ஆனால் அதுக்கு மாறா என்.டி.ஆரை அட்மைர் பண்றே.இது ஆப்போசிட் போல்ஸ் அட் ராக்ட் ஈச் அதர் பிரின்ஸிபிள் படி சாத்தியம் தான். உனக்கும் யாரோ ஒருத்தரோட நேம் அண்ட் ஃபேமை உபயோகிச்சிக்கனும். யாரோ போட்ட பாதைய லேசா மராமத்து பண்ணிக்கிட்டு போயிரனும்னு ஒரு எண்ணம் இருக்கு. ஆனால் அவங்களை எக்காரணம் கொண்டும் விட்டுக்கொடுக்க கூடாதுங்கற மோரலும் இருக்கு. அவிக இல்லன்னா உன் பப்பு வேகாதுங்கற ப்ராக்டிக்காலிட்டி, இன்செக்யூரிட்டியும் இருக்கு”

நான் எழுந்து நின்னு படபடனு கை தட்டினேன். ” கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவி பாடும்ங்கற மாதிரி தூள் கிளப்பிட்டே மாயா ! ஓப்பனா சொன்னா நான் சகட்டு மேனிக்கு படிச்சு கிழிச்சு மாசக்கணக்கா அனலைஸ் பண்ணிக்கிட்டிருந்த விஷயத்தை படார்னு போட்டு உடைச்சே. யுவார் கிரேட்”

” எதிராளிய, அதுவும் மனைவிய க்ரேட்டுனு சொல்ற மனப்பக்குவம் இருக்கிற ஆண்தான் கிரேட். இப்போ சொல்லு.. என்.டி.ஆர் இல்லே. ஐ மீன் சூரியன் மேற்கு திசைல மறைஞ்சுட்டான். மிச்சமிருக்கிறது சந்திரன். சந்திரனா நீ என்ன பண்ணப்போறே”

” நான் தான் ஏற்கெனவே சொல்லிட்டேனே. ஒய்.எஸ்.ஆர். என்.டி.ஆர் கிட்டே இருந்த குண நலன்ல 70 சதவீதம் இவர்கிட்டே இருக்கு. இன்னும் சொல்லப்போனா என்.டி.ஆர் தன் பெயர் புகழுக்கு பங்கம் வர்ர மாதிரியிருந்தா தன்னையே நம்பினவங்களை கூட கழட்டிவிட்டுருவாரு.ஆனால் ஒய்.எஸ்.ஆர் அப்படியில்லே. அவர் ஆக்டர்,இவர் டாக்டர். அவர் ஸ்டேட்பார்ட்டி, இவர் சென்ட்ரல் பார்ட்டி இப்படி சின்ன சின்ன வித்யாசங்கள் தான் இருக்கு. என்.டி.ஆர் எல்லா விஷயத்திலும் ஸ்ட்ரெயிட் ஃபார்வோர்ட். ஆனால் ஒய்.எஸ்,ஆர் கில்லாடி. மாறிப்போன காலத்துக்கு என்.டி.ஆர் ஃபார்முலா ஒர்க் அவுட் ஆகாது. 1984ல பாஸ்கர்ராவ் எபிசோடுக்கும், 1994 சந்திரபாபு எபிசோடுக்கும் வித்யாசம் பார்த்தாலே தெரியும் காலம் மாறிப்போச்சு. சனத்துல நியாய உணர்வு குறைஞ்சிபோச்சு. ரெபல் ஆகிற தத்துவம் குறைஞ்சி போச்சு. இன்னைக்கு ஒய்.எஸ்.ஆர் தான் கரெக்ட். ஒரு தேசீய கட்சில ஆஃப்டர் ஆல் ஒரு பி.சி.சி. ( மானில கட்சி தலைவர்) சி.எல்.பி (சட்டமன்ற எதிர்கட்சி தலைவர்) லீடரோட இம்பாக்ட் பெரிசா இருக்க வாய்ப்பே இல்லை. ஆனா ஹி ஈஸ் டூயிங் பெட்டர். “

“அப்போ சாரதா அம்மையார் ரோலை ப்ளே பண்ண போறே. இன்னொரு விவேகானந்தர் அதாவது ஒய்.எஸ்.ஆர் வர வரைக்கும் “

“யெஸ். “

“ஒய்.எஸ்.ஆருக்கு அப்புறம்?”

“அவரோட சன் ஜகன் மோகன் ரெட்டி இருக்காரு . யங்க் சாப். சார்மிங் பர்சனாலிட்டி”

“அவருக்கு அப்புறம்?”

“அப்போ பார்க்கலாம்”

“ஏய் மொத்தத்துல நீ சந்திரபாபுவா மாறிட கூடாதுனு ரொம்ப கேர் எடுத்துக்கறே அப்படித்தானே.. ஆமா சந்திரபாபுன்னா உனக்கேன் இத்தனை வெறுப்பு?”

ஜானகியை பின்னியெடுத்த எம்.ஜி.ஆர்


எம்.ஜி.ஆர் தன் மனைவி ஜானகி எம்.ஜி.ஆரை பின்னியெடுப்பதை வழக்கமாய் கொண்டிருந்தார்.இது தொடர்பாக ஒரு மூன்றாவது நபர் தலையிட்ட போது அவருக்கு என்ன நேர்ந்தது இத்யாதி விசயங்கள் சர்வ நிச்சயமாக இந்த பதிவில் உள்ளன. பொறுமையாக படிக்கவும்.
மனிதர்கள் யாவரும் சமம் என்பது அவர்களின் அத்யாவசிய தேவைகள் நிறைவேற்றப்படும் வரையிலும்,உயிர் பாதுகாப்பு,செக்ஸ் தேவைகள் நிறைவேற்றப்படும் வரை மட்டுமே. பலருக்கு இவற்றை பெறும் தகுதி கூட இல்லாதிருக்கும். என்றாலும் மனிதாபிமான அடிப்படையில் இவை அவர்களுக்கும் வழங்கப்படவேண்டும் என்பதே என் பரிந்துரை.

மற்ற படி மனிதர்கள் யாவரும் சமம் என்பது உட்டாலக்கடி. பீலா. மனிதர்களில் பல்வேறு வகையினர் உள்ளனர்.சமீபத்தில் ஏதோ ஒரு பத்திரிக்கையில் ஒரு தொடரை பார்த்தேன். மனிதர்களை தாவர வகை, மிருக வகை, தாதுவகை என்று பிரித்து ஆய்ந்திருந்தார் கட்டுரையாளர். இதுவும் ஒரு கோணம் மட்டுமே. இதுவே முடிவானது அல்ல.

மனிதர்களில் பல்வேறு இழி குணங்கள் கொண்டவர்கள் உள்ளனர். அவர்களின் பிறப்பு,வளர்ப்பு,படிப்பு,பதவி,ஹோதா இவற்றிற்கும் அவர்களது இழி குணங்களுக்கும் எவ்வித தொடர்பும் இருக்காது. மேலும் இந்த குணங்கள் பகலில்,மக்கள் மத்தியில் வெளிப்படாது. அனைவரிடத்திலும் வெளிப்படாது.எவனொருவன் இவர்களை எதிர்க்கவே முடியாத நிலையில் உள்ளனரோ , எவனொருவன் திருப்பி அடிக்க முடியாத நிலையில் உள்ளானோ அவன் மீது இந்த இழிகுணங்கள் பாயும்.

எம்.ஜி.ஆரை பற்றி ஒரு விஷயம் கேள்விப்பட்டேன். சட்டசபையில் கலைஞர் ஏடாகூடமாக கேள்விக்கேட்டு லொள்ளுபண்ணிவிட்டாலோ அல்லது தலைவரின் மனசு பாதிக்கும்படி ஏதேனும் சங்கதி நடந்துவிட்டாலோ வீட்டுக்கு வந்து ஜானகி எம்.ஜி.ஆரை பின்னி எடுத்துவிடுவாராம்.

ஒருதடவை ஜானகி மதுரை முத்துவிடம் இந்த குணத்தை சொல்லி அழுதாராம்.”வயசாயிருச்சுப்பா அடி தாங்க முடியல”

அதிர்ந்து போன மதுரை முத்து வாத்தியார் மதுரை போனப்போ லேசா சப்ஜெக்டை தொட்டுக்காட்டி உங்களுக்கிருக்கிற இமேஜுக்கு இதெல்லாம் தகாது வாத்யாரே என்று சொல்லியிருக்கிறார்.

உடனே வாத்தியார் ” நானே உங்கிட்ட இது பத்தி பேசனும்னு இருந்தேன் . நீ ஒரு தரம் சென்னை வா பேசிரலாம்”னு சொல்லியிருக்கார். முத்துவும் உற்சாகமா போனார்.

வாத்தியார் கேட் கிட்டே நின்னு முத்துவை வரவேற்றிருக்கார். வீட்டுக்குள்ளே கூட்டிப்போனார். தனியறைக்கு போனாங்க. வாத்தியாரோட பாதுகாவலர்கள் இருந்தாங்க. முத்துவை போட்டு புரட்டி எடுத்துட்டாங்க. மூஞ்சி, முகம், உடம்பு, வேட்டி,சட்டை ,அண்டர் வேர் எல்லாமே நார் நாரா கிழிஞ்சுருச்சு. அடுத்த அறைக்கு வாத்தியார் கூட்டிப்போனாரு. அங்கே புது வேட்டி,சட்டை,அண்டர்வேர், எல்லாம் இருக்கு. “முத்து ! குளிச்சுட்டு வாப்பா.. சாப்பிடலாம்”னாரு வாத்யாரு.

டைனிங் டேபிள்ள வாத்தியார் கவனிச்ச கவனிப்பு முத்துவுக்கு மாமனார் வீட்ல கூட கிடைச்சிருக்காது. இப்போ வெளிய போய் முத்து என்ன சொல்வாரு. அடி உதை வாங்கினத சொல்வாரா? இல்லே வாத்தியார் விழுந்து விழுந்து கவனிச்சதையா?

இது எந்த அளவுக்கு நிஜம்னு யாமறியோம் பராபரமே. ஆனால் இப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தா ஆச்சரியமே படமாட்டேன். ஏன்னா நம்ம எக்ஸ்பீரியன்ஸ் அப்படி..

சிலரில் சில குணங்கள் மேஜராய் இருப்பதால் அதை அடிப்படையாக கொண்டு அவர்களை தனி குழுவாய் பிரித்து வைத்து வர்ணிப்பது எளிதான வேலை .ஆனால் இது தவறு என்பது என் கருத்து.

பின்னே நீ மட்டும் சூரிய,சந்திர மனிதர்கள்னு பதிவை ஆரம்பிச்சிருக்கியேப்பானு க்ராஸ் பண்ண துடிக்காதிங்க. இந்த சூரிய, சந்திர குணாம்சங்கள் மனிதர்களில் கலந்தே வெளிப்படுகின்றன.

ஒரு குணம் ஒரு பிரிவினரில் தூக்கலாகவும், மற்றொரு பிரிவில் மங்கலாகவும் தெரிந்தாலும் மேற்படி குணங்கள் ஒரே நிலையில் இருப்பதில்லை. தலைகீழாய் மாறிவிடுகின்றன. சூரிய மனிதன், சந்திர மனிதனாயும், சந்திர மனிதன் சூரிய மனிதனாகவும் மாறிவிடுகிறான். இந்த மாற்றத்துக்கு சில நேரங்களில் சில நிமிடங்கள் கூட போதுமானதாக உள்ளது.

சூரிய மனிதர்கள்:
முகத்தில் சீரியஸ் நெஸ், படபடப்பு, ஒளிவு மறைவற்ற தன்மை, தம்மிலும் கீழ்படியில் உள்ளவர்கள் பால் ஒரு வித அலட்சியம்+ கருணை. தான குணம், தனக்கென்று புதுப்பாதை அமைத்து முன்னேறவேண்டுமென்ற துடிப்பு, பாதிக்கப்பட்டவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தல், பிரதி பலன் எதிர்பாராது சேவை செய்தல். பெயர் புகழுக்கு ஆசைப்படுதல்.தவறுகளை தட்டி கேட்டல், தலையில் சொட்டை, பவர் க்ளாஸ் அணிதல், தூக்கமின்மை, ஒற்றை தலைவலி. மாலையானால் ஒரு வித பலவீனம். சுற்றி சுற்றி செய்யும் தொழிலில் இருத்தல். தன்னவரை மோட்டிவேட் செய்தல். லீடர் ஷிப் க்வாலிட்டீஸ், டிசிப்ளின், நியாயம் தீர்த்தல், தவறுகளுக்கு தண்டனை வழங்குதல். தன்னவர்கள் மீது மனதில் எல்லையற்ற பாசமிருந்தாலும் அதையும் எரிச்சலாகவே வெளிப்படுத்தும் தன்மை. இவர்கள் யாரை கண்ட படி திட்டுகிறார்களோ அவர்கள் மீது உண்மையான பாசம் வைத்திருக்கிறார்கள் என்று பொருள். லாங்க் டெர்ம் ப்ராஜக்டுகளை கலங்காது கை கொண்டு முடிக்கும் உற்சாகம். நம்பியவர்களுக்காக எத்துணை பெரிய தியாகத்துக்கும் தயாராகும் தீரம். சுருக்கமாய் சொன்னால் ஆண்மை நிரம்பிய குணம். ஃபாதர்லி நேச்சர்.

சந்திரமனிதர்கள்:
ஒருவித குளுமை, தன்னம்பிக்கை, புன்சிரிப்பு தவழும் முகம் ( மாதத்தில் ஒரு 15 நாள் தான் இப்படி. அடுத்த 15 நாள் இன்ஃபிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ், சட்ட விரோத செயல்பாடுகளில் ஆர்வம் ,சதிச்செயல்களில் ஈடுபடுதல் கூட இருக்கும். தவறு செய்தவர்களுக்கு ஆறுதல் வழங்குதல். ஒரு கனவுலகத்தை காட்டி மக்களை நம்பச்செய்தல், ஸ்தூல பிரச்சினைகளை விட மானசீக பிரச்சினைகளுக்கு அதிக முக்கியத்துவம் தருதல், கற்பனை,கவிதை, மனதை தாலாட்டும் பேச்சு., சீதள நோய்கள் ( அலர்ஜி, ஆஸ்மா, ப்ராங்கடைஸ்). சதா தன்னிலும் கீழான நிலையில் உள்ளவர்களை நோக்கி பாயும் மனம். தடைகள் எதிர்பட்ட போது உடைந்து போனாலும் தம்மை அறியாமலே அவற்றை தகர்த்து முன்னேறும் தன்மை. டென்ஷனில் உள்ளவர்களை கூல் செய்தல், மானசிக திருப்தியை தருதல். உடனடி லாட்டரிதனமான வழிகளே கவரும். எவரேனும் போட்டு வைத்த பாதையை சற்றே செப்பனிட்டு பயணம் செய்தால் போதும் என்ற மனோதத்துவம். எவரேனும் ஒரு ரோல் மாடலை ஆதர்சமாக கொண்டு அவர்களது இன்ஸ்பிரேஷனில் தம்மை தாம் மோல்ட் செய்து கொண்டால் இவர்களும் உயரிய குண நலன் கொண்டவர்களாக மாறலாம். சாதனைகள் புரியலாம். பெரிய பிரச்சினை வந்துவிட்டால் நம்பியவரை கைவிட்டு தப்பித்துக்கொள்ளுதல் இந்த சந்திரமனிதர்களின் இயல்பு. சிக்கனம். இன் செக்யூரிட்டி , சந்தேகம் இவர்களுடன் பிறந்தவையாகும். .குடும்பபாசம், க்ஷணிக காதல்கள் (கண்டதும் காதல்?). பெரிய மனிதர் வீட்டு பெண்கள் இவர்களால் சீக்கிரம் கவரப்படுவார்கள். சுருக்கமாய் சொன்னால் பெண்மை நிரம்பிய குணம். மதர்லி நேச்சர்.

இந்த குண நலன்கள் அமைய அவரவர் ஜாதகங்களும் ஓரளவு காரணமாகின்றன.

சந்திரன் கெட்டவர்கள் ( நீசம், 6,8,12 ல் நிற்க பிறந்தவர்கள், கேதுவுடன் சேர்ந்திருக்க பிறந்தவர்கள் ) சூரிய குணம் கொண்டவர்களாக வளருகின்றனர்.

சூரியன் கெட்டவர்கள் ( நீசம், 6,8,12ல் நிற்க பிறந்தவர்கள், ராகுவுடன் சேர்ந்திருக்க பிறந்தவர்கள். சந்திர குணம் கொண்டவர்களாக வளருகின்றனர்.

சூரிய சந்திரர்கள் இரண்டு பேருமே கெட்ட நிலையில் பிறந்தவர்கள் சிறையில், தலைமறைவு வாழ்வில் இருப்பர்.

ஆமா இந்த குணங்கள் எப்படி ஒரு நிமிடத்தில் மாறிவிடும் என்றால் சுவாசம் மாறும்போது. அதென்ன சுவாசம் மாறுவது?

அது மட்டுமே அல்லாது சூரிய சந்திரர்கள் ராசி மாறும்போதும், ராகு,கேதுக்களுடன் இணைவது உள்ளிட்ட பல காரணங்களாலும் இந்த குணங்களில் ஏத்த குறைச்சல் இருக்கும்.

உலக மக்களனைவரையுமே இந்த இரண்டு பிரிவில் அடக்கி விடலாம்.

இவர்களால் நாட்டுக்கு நன்மை ஏற்பட என்ன செய்யவேண்டும்.?

அவரவர் தனிப்பட்ட வாழ்வில் தோல்வியை தவிர்த்து வெற்றியை பெற என்ன செய்யவேண்டும்.?

இந்த கேள்விகளுக்கெல்லாம் அடுத்த பதிவில் பதிலை காண்போம்.

கிராமத்துல வளர்ந்த குட்டி

மாயா ஒரு குழந்தைக்கு தாயானதுமே அவளுக்குள்ள தந்தை பாசத்துக்கு ஏங்கற சிறுமி காணாம போயிட்டா. ஏற்கெனவே மதர்லி ஃபீச்சர்ஸ் இருந்த மாயா இப்போ எங்கப்பாவுக்கு கூட ஏன் பாட்டிக்கு கூட அம்மாவாவே பிஹேவ் பண்ண ஆரம்பிச்சுட்டா. அதை அவிகளும் ரெகக்னைஸ் பண்ணதுதான் ஆச்சரியம். பாட்டி சதா தன் மகளையே தியானம் பண்ற பார்ட்டி. அட ஒரு கருவாடு செய்தா கூட “ஹும்.. அந்த ராணி பொண்ணுக்கு நெத்திலி கருவாடுன்னா உயிரு .அதுக்கு கொடுத்து வச்சது அவ்ளதான்”னு புலம்பற பார்ட்டி. ஆனால் போகபோக அதுவும் வீடு துர்கா காலனிக்கு மாறின பிறகு மகளோட வருகை குறைஞ்சிக்கிட்டே போயிருச்சு. ஆட்டோவுக்கு இருபது ரூபா கொடுத்தா வீட்டண்டை விடுவான். அஞ்சு ரூபா கொடுத்தா காலனி என்ட் ரன்ஸ்ல விட்டுருவான். ஆனா அரை கி.மீ நடக்கனும். அத்தை சுகவாசி. நடக்க மாட்டாள். போக வர நாற்பது ரூபா ஆயிருமே.. மிஞ்சி போனா பாட்டி காய்,கறி அது இதுனு குடுத்து அம்பது ரூபா கொடுப்பாள். வரவும், செலவும் சமானமுன்னு நினைச்சாளோ இல்லே தன்னால முடிஞ்சவரை என்னென்னவோ சகுனி வேலையெல்லாம் பார்த்தும் பத்த வச்சது எதுவும் எரியாத போயிட்டதேனு வெறுப்போ தெரியாது தன் என்ட் ரிய குறைச்சுக்கிட்டே வந்துட்டா. மேலும் அத்தைக்கு வாயா வார்த்தையா பேசத்தான் தெரியுமே தவிர கையால ஒரு வேலையும் செய்ய தள்ளாது.

மாயா கிராமத்துல வளர்ந்த குட்டிங்கறதால அஞ்சரைக்கெல்லாம் எந்திரிச்சுருவா. பரபரனு வீட்டு வேலைகளை சூப்பர் வைஸ் பண்ணிக்கிட்டே தானும் குளிச்சு ரெடியாயிருவாள். இது என் வேலை, இது என் வேலையில்லைங்கற பாவத்து எல்லாம் இல்லை. மரியாதையா ஒரு தடவை சொல்லிப்பார்ப்பா இல்லேன்னா தானே களத்துல குதிச்சுருவா. உடனே அப்பாவோ நானோ அலறியடிச்சுட்டு செய்யனும். இதையெல்லாம் பார்த்து பார்த்து பாட்டிக்கு அத்தை மேல அத்துப் போச்சு. எப்பயாச்சு வந்தா “மாயா! ராணி வந்திருக்கா என்னன்னு பாரும்மான்னிட்டு ஸ்ரீராமை கொஞ்ச ஆரம்பிச்சுருவா.

நானும்,மாயாவும் காலைல ஆஃபீஸ் போனா ராத்திரி எட்டரை வரையாவது இருந்து ஸ்டுடியோ, டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸ், பத்திரிக்கை வேலை எல்லாத்தையும்
பார்த்து செட் ரைட் பண்ணிக்கிட்டே இருப்போம். எல்லாம் சுமுகமா ஓடிக்கிட்டிருந்தது.

அரசியல்ல பார்த்தா சந்திரபாபு கவர்ன்மென்டை ஏதோ ப்ரைவேட் லிமிட்டட் கம்பெனி மாதிரி நடத்த ஆரம்பிச்சாரு. ( சந்திரபாபுவோட ஆட்சி அவலத்தை பத்தி நாளைக்கு தனிப்பதிவே போட்டுர்ரேன். ஏன்னா அது பெரிய க(வ)தைங்கண்ணா)

1999 தேர்தல் வந்தது .லோக்கல்ல இருக்கிற தெ.தே லீடர்ஸ் ஜகனை பத்தி கண்டதையும் சொல்லி பாபுவை கிளப்பி விட்டுட்டாங்க போல. மேலும் கடந்த தேர்தல்ல மாவட்டத்துக்கெல்லாம் சேர்த்து எதிர்கட்சிலருந்து ஜெயிச்ச ஒரே எம்.எல்.ஏ வா இருந்ததால ஆட்டோமேட்டிக்கா இவரை ஸ்டேட் ப்லிட் பீரோலயே டார்கெட் பண்ணாங்க.

தேர்தல் நேரத்துல ஸ்பெஷலா போலீஸை குவிச்சு, ஷேடோ பார்ட்டி அந்த பார்ட்டி இந்த பார்ட்டினு செமர்த்தியா லொள்ளு பண்ணிட்டாரு. தேர்தல் நேரத்துல கூட அவரா பாக்கெட்ல இருந்து பத்து ரூபா எடுத்து செலவு பண்ணதில்லை. எல்லாமே ஃப்ரெண்ட்ஸ் ,ஃபாலோவர்ஸ்தான் பார்த்துப்பாங்க. அதையெல்லாம் மீறி ஜெயிச்சு வர்ரதுக்குள்ள நாக்கு தள்ளிருச்சு. ஜகன் பாடு தலை தப்பினது தம்பிரான் புண்ணியம்ங்கற மாதிரி ஆயிருச்சு. இருந்தாலும் ஜெயிச்சுட்டாரு.மேலும் ஜகன் ஃபுல் டைம் பொலிட்டிஷியன். அவருக்குன்னு எந்த தொழிலோ வியாபாரமோ கிடையாது. அப்பா காலத்து மாவு மிஷின் ஒன்னிருக்கு அப்பா காலத்துலருந்து .மார்க்கெட் கேட் கலெக்சன் காண்ட் ராக்டிருக்கு. அதை கூட வேற யாரோ தான் பார்த்துக்கறாங்க. இருபத்து நாலு மணி நேரமும் ஜனம் ஜனம்னு ஜனம் நடுவுலயே கழிக்கிற பார்ட்டி. ஏதோ பூர்விக சொத்துக்கள் மட்டும் இருந்ததாலே அரசு தரப்புல சந்திரபாபு வால கூட அவருக்கு பெரிசா பிரச்சினை கொடுக்க முடியலை.

அதுக்குள்ள நம்ம பர்சனல் லைஃப் டப்பா டான்ஸ் ஆடற கண்டிஷன் ஆயிருச்சு. அப்பா ரெண்டாவது தடவையா ரிட்டையர் ஆகியிருந்தாரு. பாட்டிக்கு வீல் சேரே உலகம். மாயாவுக்கு ஸ்ரீராமே உலகம். ஸ்டுடியோவ பார்த்துக்கற சந்தீப், டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸை பார்த்துக்கற மீரா, தன்ராஜ் எல்லாமே அவங்க வேலைய மட்டும் கரெக்டா பார்க்கிற பார்ட்டிங்க. அதுக்கு மேல அவிகனால ரோசிக்க முடியாது. லோக்கல் பேப்பர் விஷயத்துல மட்டும் அதீத கவனம் செலுத்தி பிரச்சாரத்துக்கு சகட்டு மேனிக்கு உபயோகிச்சுக்கிட்டேனே தவிர மத்ததெல்லாம் க்ரோத் ரேட்டே இல்லாம ஃப்ரீஸ் ஆயிட்டிருந்தது.ஒரு நார்த் இண்டியா டூர் ப்ரோக்ராம் போட்டதுல அமாவாசைனு நினைச்சு அமாவாசைக்கு மறு நாள்ள இருந்து ஸ்டார்ட் ஆறாப்ல போட்டுட்டிருக்காங்க. 52 சீட்டுக்கு 21 சீட்டுதான் ஃபில் அப் ஆகி, குட் வில் அடிவாங்கிரக்கூடாதுனு பிடிவாதமா போய் டூர் கண்டக்ட் பண்ணதுல 1 லட்ச ரூபா காலி. ட்ராக்ஸ் அனுப்பியிருக்காங்க. புக் பண்ண பசங்க ரோக்ஸ். ட்ரைவரை அடிச்சி போட்டுட்டு ட்ராக்ஸை எடுத்து கிட்டு கண்டபடி சுத்தி ரோட்டோர மரத்துல இடிச்சு ஆக்சிடெண்ட் பண்ணி அது தனி கதை.

தேர்தலுக்கு முன்னான இந்த 3 மாச இடைவெளில மாயாவுக்கும், எனக்கும் இடையிலே ரொம்பவே இடைவெளி. செக்ஸுங்கறது ஏதோ உடல் சூட்டை , டென்ஷனை தணிக்கிற உபாயமாவோ குற்றமனப்பான்மைல இருந்து ரிலீவ் ஆறதுக்கான செயலாவோ இருந்ததே தவிர பழைய இன்டிமசி எல்லாம் இல்லை. என்னமோ பெரிசா சாதிக்கனுங்கற வெறில செய்த முயற்சியெல்லாம் தோத்து போய் டீலாயிட்ட பிறகு தான் எதையெல்லாம் இழந்து திரிஞ்சோம்னு உறைச்சது. மாயாவும் ரொம்பவே ஏங்கி போயிருந்தாள். மாயாவா, கடமையானு கொஞ்சம் ஊசலாடி சரி முதல்ல கடமைய முடிப்போம்னு வரிஞ்சு கட்டி இறங்கினேன்.

ஸ்டுடியோ,ரூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸ் விவகாரங்கள்ள புகுந்து வந்ததுல பதினஞ்சு நாள் போனதே தெரியலை. எல்லாத்தயும் செட் ரைட் பண்ணிரனுங்கற வெறி. அப்பா கூட “ஏண்டா உனக்கு நார்மலா ஒர்க் பண்ணவே தெரியாதாடா.. ஒன்னு கண்டுக்கவே மாட்டே இல்லேன்னா ஒரேயடியா இறங்கி குட்டைய குழப்புறது ..டூ மச் ஈஸ் ஆல்வேஸ் பேட் கண்ணா”ன்னு கமெண்ட் அடிச்சாரு.

என் மனசுக்குள்ள ஒரு பிக்சர் வந்துருச்சு. ஸ்டுடியோ வேணம்னா கேல்குலேட்டட் ரிஸ்க். ஆனா டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸ்ல எல்லாமே ரிஸ்க் தான்.

அப்பாவுக்கு சொன்னேன்

“அப்பா! டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸை ஊத்தி மூடிரலாம்னு இருக்கேன்.”
“என்னடா திடீர்னு ஓகோ அந்த ஒரு லட்ச ரூபா நஷ்டத்துக்கு பயந்துட்டியா?”
“பயமா? அதுக்கு ஸ்பெல்லிங் கூட தெரியாது. சின்ன தப்புக்கு ஒரு லட்ச ரூபா நஷ்டம்னா யோசிக்க வேண்டிய விசயமில்லியா?”
“எவனோ ஏரிக்கு பயந்து கழுவாம போனானாம் . அந்த கதையா இருக்கு”
“அதுக்கு இல்லப்பா .. இத்தனை நாள் நீ இருந்தே நீ ஃப்ரண்ட் ஃபார் ஆல். எனிமி டி நன். ஆனால் நான் ஒரு கலரை பூசிக்கிட்டேன். நம்ம சொத்தை ரோட்டு மேல அனுப்பிட்டு வயித்துல நெருப்பு கட்டிக்கிட்டிருக்க முடியாது “
“பின்னே என்ன பண்ண போறே எல்லாத்தயும் வித்துட்டு பேங்க்ல போட்டுட்டு வட்டி வாங்கி சாப்பிட போறியா?”
“அந்தளவுக்கு நான் கோழையில்லேப்பா.. பேசாம அப்பார்ட்மெண்ட் ஒன்னு கட்டி வாடகைக்கு விடப்போறேன்.”
“அப்பார்ட்மெண்டா? உனக்கென்ன பைத்தியமா? இது சித்தூர்ரா”
” எல்லா சிற்றூரும் ஒரு நாள் நகரமாகித்தான் தீரும். நாம கொஞ்சமா முந்திக்கனும் தட்ஸால்”
” நீ அப்பார்ட்மெண்ட் கட்டறப்ப மட்டும் எதிர்கட்சி ஆளும்கட்சியாயிருமா?’
“நகராட்சி இன்னும் காங்கிரஸ் கைலதானே இருக்கு”

“எப்படியோ போய் தொலை. ஸ்டுடியோவ வச்சிக்கிரமாதிரிதானே”
“அதுல என்னப்பா ரிஸ்கிருக்கு. என்ன கொஞ்சம் கம்ப்யூட்டர், டிஜிட்டல் கேமரானு அப்டேட் பண்ணலாம்னு இருக்கேன்”
“சரி சரி .. அப்படியே இந்த பேப்பர் விஷயத்துல உன் ஆஸ்தான ப்ரிண்டர் கிராஃபிக் ரவி நிறையவே திருடறான். அவனாலயே ரொம்ப டென்ஷனாயிருதுனு மாயா சொல்றா”
“அந்த விஷயத்துலயும் கொஞ்சம் அப்டேட் ஆக வேண்டியிருக்குப்பா. லெட்டர் ப்ரஸ் எல்லாம் அவுட் டேட்டட் ஆகிட்டு வருது . அதையும் ஆஃப்செட் ப்ரிண்டுக்கு மாத்திர வேண்டியதுதான். வேணம்னா ஜாப் வொர்க் கூட செய்யலாம்”
“எல்லாம் சரி . மறுபடி நீ தேர்தல் பிரச்சாரம்னு போயிட்டா எப்படி?”
“அதுக்கு இன்னம் அஞ்சு வருஷம் இருக்கில்ல”

அப்பாகிட்டே க்ரீன் சிக்னல் வாங்கி என் பிரப்போசலையெல்லாம் மெட்டீரியலைஸ் பண்றதுக்குள்ள ரெண்டு 4 வருஷம் ஓடியே போயிருச்சு. அப்பார்ட்மெண்ட் விஷயத்துல ஆறு மாசம் வரை கொஞ்சம் உதறலாவே இருந்தது. கண்டுக்கற நாய்களே இல்லை. முத முதல்ல கிருஷ்ணா ஜுவெலர்ஸ் காரர் அட்வான்ஸ் பண்ணாரு. அதற்கடுத்து படபடனு புக் ஆயிருச்சு. நமக்கு ஜோசியம், வாஸ்துல இருக்கிற பரிச்சயம் பத்தின பிரச்சாரமும் இந்த பிசினஸுக்கு நல்லாவே உதவுச்சு. உற்சாகமா அடுத்த வென்சரை ஆரம்பிக்கலாமானு யோசிக்கிற சமயத்துல மாயா தடை போட்டா.

“இந்த வியாபாரம் வேணான்டா..”
“ஏன் மாயா?”
“அப்பார்ட்மெண்ட் கட்ட ஆரம்பிக்கிறப்ப கட்டிட வேலைக்கு வந்தாங்களே. ஆணும்,பெண்ணும், குஞ்சும் குளுவானுமா அவங்களுக்கு வீடு வாசல் எல்லாம் யார் கட்டி வைப்பாங்க. கட்டி வச்சாலும் அதை வாங்க அவிக கிட்ட காசு ஏது?”
“அது அவிக தலையெழுத்து .. ஒவ்வொரு மேஸ்திரி என்னா கூலி வாங்குறான் தெரியுமா? எல்லாத்தையும் குடிச்சே அழிச்சுர்ரான்”
“அதுல குடிக்காதவங்க எத்தனை பேர் இருப்பாங்க தெரியுமா? எத்தனை நாள் வேலையில்லாம இருப்பாங்க தெரியுமா? மேலும் நீ என்ன அவங்களை டைரக்டா வேலைல சேர்த்துகிட்டயா? இல்லியே. காண்ட் ராக்ட் தான் விட்டே. காண்ட் ராக்டர் என்ன கூலி தருவான்னு உனக்கு தெரியுமா?”
“இது யோசிக்க வேண்டிய விஷயம்தான்..”
“வெறுமனே யோசிச்சா போதாது முகேஷ் எதாச்சும் செய்யனும்”
“என்ன செய்யலாம் சொல்லேன்?”
“அவங்களுக்குனு ஒரு அப்பார்ட்மெண்ட் கட்டேன். சின்னதா,சிங்கிள் பெட் ரூம் இருந்தாலும்.. எல்லா வசதியும் இருக்கிறாப்ல கட்டேன்”
“கட்டலாம் … அதுல ட்ரங்கர்ஸ் இருப்பாய்ங்க. அவனுகளோட எவன் ஏகறது?”
“ஏன் ஜகன் சாரை கன்சல்ட் பண்ணேன். அவர் ஏதாச்சும் ஐடியா கொடுப்பாரு”

ஜகனை சந்திச்சு இந்த பிரப்போசலை சொன்னேன். திகைச்சு போயிட்டாரு. ஐடியா என்னவோ சூப்பர் ஐடியா தான் . இதுல நான் என்னப்பா செய்யமுடியும்? என் கிட்டே காசு கீசு கிடையாதே”

“அய்யய்யோ உங்க கிட்டே காசு கேட்கலை சார். என் கிட்டே இருக்கிற இன்வெஸ்ட்மென்ட்ல முதல் கட்டமா 500 குடும்பத்துக்கு ப்ளேஸ்மெண்ட் கொடுக்கலாம். இதுக்கு நீங்க செய்யவேண்டியது என்னன்னா உங்களுக்கிருக்கிற பப்ளிக் ரிலேஷன்ஸை வச்சு டவுனுக்கு அஞ்சாறு கிலோ மீட்டர் தூரத்துல மலிவான விலைல சைட் ஏற்பாடு பண்ணலாம். கட்டிட தொழிலாளர்களை மொபிலைஸ் பண்ணி ஒரு சங்கமா ஏற்படுத்தி அந்த சங்க நிர்வாகிகளே பெனிஃபிஷியரீஸை செலக் பண்ணி லிஸ்ட் தராப்ல பண்ணலாம்.”

“இதெல்லாம் நான் செய்யறேன்பா இல்லேங்கலை. ஆனால் நான் எதிர்கட்சி. அரசாங்க எனக்கு தொல்லை கொடுக்கிறதா நினைச்சு உனக்கு தொல்லை கொடுக்க ஆரம்பிச்சுட்டா தாங்குவயா?”

“இதெல்லாம் நகராட்சி சம்பந்தப்பட்டது. அது உங்க கைல தானே இருக்கு”

“அதெல்லாம் அதிகாரிங்க பார்த்துக்கறாங்க”

” நான் ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்க கூடாது. “

“பரவால்ல சொல்லு”

“நீங்க முதல் தடவை சுயேச்சையா ஜெயிச்சப்ப பம்பர் மெஜாரிட்டி, ரெண்டாவது தடவை கட்சி டிக்கட் கொடுத்தப்ப என்.டி.ஆர் அலைலயும் சுமாரான மெஜாரிட்டி வந்தது . ஆனா இப்போ ?”

” நீயே பார்த்தல்லப்பா..நம்மாளுங்களை போட்டு பிசிஞ்சு எடுத்துட்டாங்க..”

” நீங்க சொல்றதும் நிஜம் தான். ஆனால் ஃபைனான்ஷியலா கூட நிறைய பிராப்ளம் ஃபேஸ் பண்ண வேண்டியிருந்தது..”

“கரெக்டுதான் அந்த நேரம் பார்த்து நம்மாளுங்களுக்கு ஏதோ ஒரு பிரச்சினை”

“அப்படினு நீங்க நினைக்கிறிங்க.. நீங்க ஒரு ரேஸ் குதிரை மாதிரி. உங்க மேல பணம் கட்டினவங்க அப்படித்தான் நினைச்சாங்க. ஜெயிச்சு வந்தா ஜாக் பாட் அடிக்கலாம்னு
ஆனால் நீங்க முத தடவை சுயேச்சை. ரெண்டாவது தடவை எதிர்கட்சி,உங்களுக்காக தேர்தல் செலவை செய்தவங்களுக்கு எந்த லாபமும் கிடையாது. இப்பவும் எதிர்கட்சிதான். இந்த தடவையே அவனவன் கையை பின்னால கட்டிக்கிட்டு தான் பிரச்சாரத்துக்கு வந்தான் . அடுத்த தேர்தலுக்கு நிலைமை ரொம்ப மோசமாயிரும்.”

“அப்போ என்னை லஞ்சம் வாங்க சொல்றியா ?”

” நான் அப்படி சொல்லலே.. இப்போ நான் அப்பார்ட்மெண்ட் கட்டனும்னு வந்தேன். என்னதான் கட்டிட தொழிலாளிக்குனு கட்டினாலும், என் மார்ஜி எனக்கு இருக்கும், அதுலருந்து ஒரு 10%உங்களுக்கு தரேன்”

“அப்போ நான் உன் அடியாளா?”

“அப்படினு ஏன் நினைக்கிறிங்க. பிராண்ட் அம்பாசிடர் மாதிரி வச்சுக்கங்க. நம்மாளுங்கள்ள எவனெவன் உண்மையிலேயே போண்டியாயிட்டான். இருந்திருந்தா செலவு பண்ணியிருப்பான்னு ஒரு லிஸ்ட் எடுங்க. அவிகளுக்கும் பிழைக்க ஒரு வழி பண்ணுங்க. அஃபிஷியலாவே ஒரு 10% ஷேர் கொடுக்க சொல்லுங்க”

“இந்த பணத்துல இருந்து அடுத்த தேர்தலப்போ ஓட்டுக்கு இவ்ளோனு செலவு பண்ணி ஜெயிக்க சொல்றே”

” நான் ஓட்டுக்கு இவ்ளோனு கொடுக்க சொல்லலே. உங்க மேல இருக்கிற மரியாதைல உங்க பின்னாடி வந்தவன் போண்டியாயிர கூடாது. தேர்தல் நேரத்துல வண்டி வாடகைக்கும், டீசலுக்கும் நாம கைய பிசைய கூடாதுனு சொல்றேன்”

“மக்கள் மத்தில கெட்ட பேரு வந்துருமேப்பா”

“சுத்தமான தங்கத்துல நகை செய்ய முடியாது. வெறுமனே நல்ல பேரை வச்சி ஜெயிக்கிறாப்பல இருந்தா காமராஜ் ஏன் தோத்தாரு, அண்ணாதுரை ஏன் தோத்தாரு. எம்ஜிஆர் கட்சி ஏன் தோத்து போச்சு”

ஜகன் யோசனைல ஆழ்ந்தார். என் திட்டத்தை விவரிக்க ஆரம்பிச்சேன். அவர் இந்த திட்டத்துக்கு சம்மதிச்சது அந்த நேரத்துக்கு அற்புதமா இருந்தாலும், அவரோட செல்வ செழிப்பை பார்த்து வளர விட்டா இனி இவன் தான் வாழ் நாள் பூரா எம்.எல்.ஏ னு ஆளுங்கட்சி காரவுக வச்ச ஆப்பு இருக்கே ..அதை இப்ப நினைச்சா கூட திகிலா இருக்கு.

(தொடரும்)

என்றும் இளமை

நீ எழுது ! நீ எழுதியதில் எது பழுது ?
நீ அனாதியாய் இருந்து சனாதிகளால்
சாரம் சாகடிக்கப்பட்ட ஆன்மீக மரத்தின் விழுது.
அவர்கள் சேரி  பாலரை பட்டினி போட்டு
செய்தனர்  பாலபிஷேகம்
நீ..பாற்கடலே இறங்கி வந்தாலும்
சோமாலியா வரை அதை
அஞ்சல் செய்து மிஞ்சியதை கொட்டுங்கள்.
வாங்கிக்கொள்வது
சிலுவையா சிவலிங்கமா என்பது முக்கியமல்ல
கொட்டும் சமுதாயத்தின் சுபிட்சமும்,
அதன் பின்னான பாவமுமே முக்கியம்
என்பது உன் ஆணை

நீ எழுது ! நீ எழுதியதில் எது பழுது ?
மேலுலகின் அதிர்வுகள் உன்னை அண்டாத போது
தீண்டத்தகாதவனாய்  , நெஞ்சில் இருள் மண்டியிருந்ததுண்டு
அதிர்வுகள் துவங்கியது

பகிர்வுகள் துவங்குவது வழக்கம் தானே
உன் கவிதையின் இடைவெளிகளில் ஓங்கார முழக்கம் தானே

நீ எழுது ! நீ எழுதியதில் எது பழுது ?
உன் கவிக்கும் மக்கள் செவிக்குமான
கல்யாணத்தை நிறுத்த சீப்பை ஒளித்து மகிழும் மண்டூகங்கள்
மண்மூடிப்போகும்.
கண் மூடி யோசி
இறையருள் யாசி

காசியில் குடிபுகுந்தாலும்
பாவம் தொலையாத பாதகருக்கும் சேர்த்துத்தான் சுபிட்சம்
அதுதானே உன் மனோ பீஷ்டம்

பாவம் அவர்களது வானொலிகளில் வான் ஒலி அஞ்சலாவதில்லை
எனவேதான் உன் ஆணைகளை இவர்கள் கெஞ்சலாக பார்க்கின்றனர்

நீ எழுது ! நீ எழுதியதில் எது பழுது ?
நீ இந்த திரைக்கதையின் முடிவு தெரிந்தவன்.
மரை கழன்ற மந்தர்களின் செவியில் மறையின் மறை பொருள்  உணர்ந்த
உன் உரை புகுமோ?

மாவரைக்கும் மிஷின் களாய், துளை போடும் ட்ரில்லர்களாய்
தொந்தி கொழுத்து மூட்டுக்கள் கழன்று
சுவர்கத்து கதவுகளின் பூட்டுக்கான சாவிகளால்
காது குடையும் முடை நாற்றமெடுத்த கிடையில்
உன் விடைக்கு விலை ஏது?

நீ எழுது ! நீ எழுதியதில் எது பழுது ?

இணையம் கண்டாலும் இவர்களை பிணைத்த தளைகள் தளர்வதில்லை
வலைப்பூக்களே மலர்ந்தாலும் சூடிக்கொள்ள முடியாத “சோ” தலையர்கள்
ஆயிரம் பதிவுகள் போட்டாலும் கடந்த பிறவிகளின் பதிவுகளே
இவர்களை பாதிக்கின்றன.

ஊதும் சங்கை ஊதிவை.
விழிக்கும் மாந்தர் விழிக்கட்டும்.
மந்தர்கள் பழிக்கட்டும்
மண்ணுலகை அழிக்கட்டும்

நீ எழுது ! நீ எழுதியதில் எது பழுது ?
உன்னுள் உறை பரமனுக்கு முகமன் சொல்லி
முத்தமிழ் கடல் மூழ்கி முத்தெடுத்து வலைப்பூவில் பதித்து
பூக்களை தொடுத்து மாலையாக்கு
தேடிவந்த வார்த்தைகளை கவிதையாக்கு
கவிதைக்கு பொருள்
வாழ்க்கையில்
என்றரற்றி பொருளுக்காக வாழ்க்கையையும் வாக்கையும்
அடகு வைத்து வீண முத்தர்கள் ஆகிப்போன
வாணி புத்திரர்களை மறந்துவிடாதே
நெஞ்சக்கழல் துறந்துவிடாதே
மேகத்துக்கப்பாலிருந்து
கொட்டும் வார்த்தைகளை வாங்கி வை
நினைவில் தேங்க வை
பண்ணில் மானுடம் ஓங்க வை

நீயா எழுதுகிறாய்.
படியளுக்கும் பெருமான் கொட்ட
படியெடுக்கும் பணியாள் நீ
தரணிமிசை தவிக்கும் தனியாள் நீ
பார் முழுக்க பல்லாயிரம்
சாதியார்
ஆசை தணியார்
பரமனுக்கு பணியார்
அடக்கம் அணியார்
சற்றேனும் கனியார்

இவர்களுக்காக கண்ணீர் சிந்து
அவனிடம் கப்பறை ஏந்து

காத்தவன் இழப்பான்
இழப்பவன் பெறுவான் இதுதான் நியதி
உனக்கென்ன என்றும் இளமை பொங்கும் யயாதி

பிறப்புக்கு முன்பே திறப்பு
கருப்பை கிழிப்பு
மனிதமனத்து மாசாய் கருதி
உணவின் சத்து நீக்கி
சக்கையுண்டு இளமையில் முதுமை
எதிலும் இயலாமை
கருசுமக்க ஆள் தேடுவோர்
இனி கருவாக்கவும் தேடுவரோ?

சகதியை யொத்த சங்கதி பலவுண்டு
சக்தி இழந்துவிட்டார்.
சிவனார் போல் தானே
மண வாழ்வை மயானமாக்கி
சிவ தாண்டவம் புரிகின்றார்.

உனக்கென்ன வேடிக்கை பார்க்க வந்தாய்
வாடிக்கையாய் சில வாக்கியங்கள் கூறிவிட்டு
உன் இறை தேடி மறை புகுவாய்

வாழும் மாந்தரை பார்
வீழும் வீணரை பார்
ஆரும் இளைத்தாரில்லை
சகதியில் சலித்தாரில்லை

முள்ளை மேய்ந்திருக்கும் ஒட்டகம் போல் தானே
பெட்டகம் காக்கின்றார்
நோய்கள் தமக்கு தமை தாரை வார்க்கின்றார்
நீ எழுது ! நீ எழுதியதில் எது பழுது ?

நாளைய புதை பொருள் ஆராய்ச்சியாளர்களுக்காகவேணும்
எழுது
சமகாலர்கள் சமாதிகளின் மீதாவது
உன் கவிதைகள் அபாய விளக்குகளாய் ஒளிரட்டும்

நாளைய சமூகமேனும் செழிக்கட்டும்.

நீ எழுது ! நீ எழுதியதில் எது பழுது ?
ஆகப்போவதென்ன ஆண் பிள்ளை அழுது ……..
புதிதாய் பாழாகப்போவதென்ன
மனிதனே பழுது

காதலனை ஆசிட் வீசி கொன்ற பெண்

எதிர்வினைகள்
ஓஷோ என்னமோ எதிராளி வினைக்கு எதிர்வினை செய்தா நீ அவனுக்கு அடிமைனு அர்த்தங்கறார். என்ன செய்ய ? நம்மால எதிர்வினை செய்யாம இருக்க முடியமாட்டேங்குதே. நானும் ஓஷோ ஸ்டைல்ல சித்தம் போக்கு சிவன் போக்குனு தொடர் கதையும், வர்ஜியா வர்ஜியமில்லாம தனிப்பதிவுகளும் போட்டுக்கிட்டிருந்தேன். . இருந்தாலும்   நாட்டு நடப்புக்கு எதிர்வினை செய்யறது ஒரு சமூக பொறுப்புங்கற உத்தேசமும் ரெஸ்பாண்ட் ஆகாம இருக்கிறதுல ஒருவித கில்ட்டியும் இருக்கறதால இந்த பதிவை போட்டுக்கிட்டிருக்கேன்.

மகளிர் மசோதா:

இதை பத்தி விரிவா  ஒரு பதிவே போட்டதா ஞா. ஆண் ஆணாவும், பெண் பெண்ணாவும் வாழ்ந்தாலே போதுமானது. பெண்மை மிளிரும் ஆண்கள்,ஆண்மை மிளிரும் பெண்கள் விதிவிலக்கு. விதி விலக்குகளை மனதில் வைத்து இட ஒதுக்கீடு செய்வதெல்லாம் இயற்கையோடு விளையாடும் விபரீத விளையாட்டு.

மேலும் மசோதாவை எதிர்த்து ஓட்டு போட்ட ஒரே ஒரு ஆசாமி அயனான பாயிண்டை கொளுத்தி போட்டிருக்காரு.

ஆண் எம்பிக்கள் என்னைக்கோ ஒரு நாள் இந்த தொகுதியும் மகளிர் தொகுதியாக போகுதுனு நெக்லெக்ட் பண்ணிருவாங்கங்கறார். நிஜம் தானே!

இரட்டை உறுப்பினர்:

வேணம்னா ஒரே தொகுதிக்கு ஆண்,பெண் என்று இரண்டு எம்.பிக்களை தேர்ந்தெடுக்கலாம். ட்ரெயில் ரன் மாதிரி . யார் என்ன கிழிக்கிறாங்கனு பார்ப்பம். ஆண்,பெண் வித்யாசமெல்லாம் ரொம்ப ப்ரிலிமினரி. எஸ்.ஐன்னா எஸ்.ஐதான். பெண் எஸ்.ஐ இருக்கிற ஸ்டேஷன்லயும் லாக்கப் சாவு நடக்கலாம். எம்.பின்னா எம்பிதான். பெண் எம்பி கூட காசு வாங்கிக்கிட்டு கேள்வி கேட்கலாம்.
( எம்.பிங்க நெம்பர் டபுளாயிருச்சுன்னா செலவு இரட்டிப்பாயிருமேனு கேட்க சிலர் கமெண்ட் ஃபாரத்துக்கு போயிட்டது தெரியுது. தமிழக சட்டமன்றம்ங்கற தலைப்புல வச்சிருக்கேன் ஆப்பு. அதை பார்த்துட்டு வேணம்னா கிழிங்க.

சட்டப்படி:

நித்யானந்தா தன் மேலான குற்றச்சாட்டை  சட்டப்படி  எதிர்கொள்ளப்போறதா சொல்லிக்கிட்டிருக்கிற தருணத்துல சுப்ரீம் கோர்ட் லிவிங்க் டு கெதர் ( கண்ணாலம் கட்டிக்காம சேர்ந்து வாழறது ) சட்டப்படி குற்றம் கிடையாதுனு வியாக்யானம் பண்ணியிருக்கு.

நடிகை ரஞ்சிதாவோட சேர்ந்து “வாழ்ந்ததா” சொல்லிக்கிடலாம். ஆனால் அதே சுப்ரீம் கோர்ட் சேர்ந்து வாழறதை நீதிக்கு (மோரல்) புறம்பான  செயலா சொல்லியிருக்கு.
நித்யானந்தா சன்னியாசி ஆறதுக்காக குறிப்பிட்ட டிப்ளமா படிச்சு டிகிரி வாங்கி சன்னியாசி ஆகலே. ஜஸ்ட் மக்களோட மோரல் கன்செர்னோட சன்னியாசியா வலம் வந்தாரு.  பிரம்மச்சரியத்தை உபதேசிச்சாரு. தான் மட்டும் டீ ஷர்ட் ,ஜீன் போட்டுக்கிட்டு நைட் க்ளப்ல குத்தாட்டம் போட்டாரு. இது இம்மாரல் மட்டுமில்லே. இவர் தன் ஆகா ஓகோ கொள்கைகளை பிரச்சாரம் பண்ணித்தான் கூட்டம் சேர்த்தாரு. பைசா வாங்கினாரு. ஆனா அவர் அப்பாவி மக்களை மயக்க எடுத்துவிட்ட தத்துவத்தையெல்லாம்  காத்துல விட்டுட்டாரு. ( அதுக்குதான் கதவை திற காற்று
வரட்டும்னாரு போல) . மேலும் தான் அந்த பொறம்போக்கு வேலைய செய்யலைனு
வாதம் பண்ணல. அது தப்புன்னோ,தவறுன்னோ ஒத்துக்கிடவுமில்லே. அந்த அஜால் குஜால் வேலைக்கு ஆராய்ச்சினு கலர் வேற கொடுத்து கவர் பண்றார். ஜஸ்ட் அதுக்காக வருத்தம் கூட தெரிவிக்கல.

இதெல்லாம் சட்டப்படி குற்றமில்லேனு எந்த அடிப்படைல சொல்றாருனு தெரியலை. சாமியார் மடத்துக்கு ரூ 100 நன்கொடை  தந்த பார்ட்டி கூட கன்ஸ்யூமர் ஃபோரத்துக்கு போகலாம்.

சாமியார் ஆஃபர் பண்ண சர்வீஸ் என்ன? உங்களை ஸ்வர்கத்துக்கு அனுப்பறேன் சாரி.. இதெல்லாம் அந்த காலத்து சாமியாருங்க ப்ராமிஸ். இவரு உங்களுக்கு இங்கயே ஸ்வர்கத்தை காட்டறேன்னு தான் சொல்லியிருப்பாரு. கல்கியே மேல் தமிழ் சினிமால ரஜினி மாதிரி சொன்னதை செய்துட்டாரு போல (போதை மருந்து கொடுத்தாரோ பேதி மருந்து கொடுத்தாரோ அவிகள பார்த்தா ஸ்வர்கத்துல இருக்கிற மாதிரியே இருக்குது.)  ஆனால்.  நித்யானந்தா தான் மட்டும் ஸ்வர்கத்தை பார்த்துட்டாரு. இது ரெஃப்யூசல் ஆஃப் சர்வீஸ், டெஃபிஷியன்சி ஆஃப் சர்வீஸ்.

நம்ப வச்சு ஏமாத்தனதால இது 420 செக்சன் கீழவும் வரலாம். ப்ரீச் ஆஃப் அக்ரிமெண்டும் வருது. குறிப்பிட்ட மத நம்பிக்கையாளர்களின் நம்பிக்கைய சீர் குலைச்ச செக்சன்லயும் கொண்டுவரலாம்.

ஒரு நம்பிக்கை என்னடான்னா கர்னாடக ஹை கோர்ட்டு  நித்யாவோட முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி பண்ணியிருக்கு.

ஆமாண்ணே …குமுதத்தில் தொடரும் நித்யானந்தா தொடரை படிக்கிறிங்களா? ஹும்.. இதையெல்லாம் எழுதி என்ன பிரயோஜனம். ரஞ்சிதாவோட மேற்கொண்ட ஆராய்ச்சியை பத்தி எழுதினாலும் நல்லாருக்கும். நமக்கும் எதுனா லேட்டஸ்டா விஷயம் கிடைக்கும்.

வேறு ஒருத்தியை மணக்க இருந்த கள்ளக்காதலனை ஆசிட் வீசி கொன்ற திருமணமான  பெண்.இப்படி ஒரு செய்தி கடந்த வாரம் தெலுங்கு நியூஸ் பேப்பர்ல வந்தது.  பரவாயில்லை. மகளிர் இட ஒதுக்கீடு மசோதா அமலாறதுக்குள்ளவே மிச்ச சொச்ச விஷயத்துல எல்லாம் மகளிர் தாங்களே உரிய இடத்தை பிடிச்சுருவாங்க போல.

தினமணி அடித்த அபாயமணி:

தினகரனும்,தினத்தந்தியும் போடற போடுல எத்தை தின்னா பித்தம் தெளியுங்கற ஸ்டேஜுல ஒட்டு மொத்த வலைப்பூக்களுக்கு வர்ர ஹிட்ஸை மோனோபலியா சுட்டு வெப் எடிஷனையாவது நெம்பர் ஒன் ஆக்க  திட்டம் போட்டாப்ல இருக்கு.  இணையத்தால் தமிழ் பாழா போகுதுனு ஐட்டம் போட்டு பதிவர்கள்+வலைய்லக கவனத்தை கவர்ந்திருக்கு தினமணி.  ஒரு காலத்துல தினமணில வெளிவந்த வேலூர் டாக்டர் கண்ணப்பர் எழுதின நம் நாட்டு மூலிகைகள் தொடர் ஒரு புரட்சியையே கொண்டுவந்தது.

இப்ப ஞா இணைப்பா வர்ர தினமணி கதிரை ஒரு காலத்துல சனம் காசு கொடுத்து வாங்கிக்கிட்டிருந்தது எத்தனை பேருக்கு தெரியும்?

நல்ல நேரத்துல அடி முட்டாளுக்கு கூட அயனான யோசனைகள் வருமாம். கெட்ட நேரத்துல சித்தூர்.முருகேசனே உனக்கு22 எனக்கு 32 கதைல என்.டி.ஆரை கொண்டுவந்து மொக்கையாக்கிரலாம்.

என்ன தினமணி வலைதளத்துல உங்க வலைப்பூவை என்னை மாதிரியே  பதிவு பண்ணிட்டிங்க தானே.

ஸ்டாலின் அழகிரி பஞ்சாயத்துலருந்து அரசியல் கட்சிகள் தெரிஞ்சிக்க வேண்டிய ஒரு நீதி என்னன்னா கட்சில உள்கட்சி ஜன நாயகம்ங்கறது ரொம்ப முக்கியம். தலைவனை கட்சி தான் நிர்ணயிக்கனுமே தவிர , தலைவன் நிர்ணயிக்க கூடாது. இப்படி ஒரு பழக்கத்தை வச்சுக்கிட்டா ஸ்டாலின், அழகிரி மட்டுமே இல்லை நாளைக்கு இவிக பேரன் மார் காலத்துல கூட தொடரும்.

பென்னகரம் இடைதேர்தல். ஹும்னு ஒரு பெருமூச்சுதான் விட வேண்டியிருக்கு. பென்னகர வாசிகள் கொடுத்து வச்சவுக.

பாலகுமாரனின் மெர்க்குரிப்பூக்கள் நாவலை ஞா படுத்திக்கொள்ளுங்கள். அதன் மலிவுப்பதிப்பை  கண்ணன் அய்யங்காருக்கு  சமர்ப்பணம் செய்திருப்பது ஞா வருதா?
பாலகுமாரன் பெயரால் (?) நண்பர்கள் ஏற்படுத்திய வலைப்பூ ஒன்னு மலர்ந்திருக்கு. ஆமாம் பாலகுமாரன் டாட் நெட்னு ஒரு வெப்சைட் இருந்ததே என்னாச்சு?

தமிழகத்தின் புதிய சட்டமன்ற வளாகம் பத்தி எல்லாரும் எழுதி கிழிச்சிட்ட நேரத்துல அச்சாணியமா ஒரு கேள்வி. இப்பத்தான் ஐ.டி துறை கொடி கட்டி பறக்குதுல்லயா?
சட்டமன்ற கூட்டத்தை பேசாம வீடியோ கான்ஃப்ரென்சிங் முறையில்  நடத்தலாம்லியா? என்னத்துக்கு டம்மியா ஒரு கூரை உண்மையா ஒரு கூரைனு தண்டசெலவு?

தத்துவமா புடி…….

 நம்ம தத்துவம்:

1.ரெண்டு ஒதகாத நாய் சேர்ந்து எதாச்சும் பண்றேனு புறப்பட்டா தடை சொல்லாதே.உருப்பட்டா ரெண்டும் உருப்படும். இல்லேன்னா ரெண்டு நாசமுத்து போகும் நாட்டுக்கு நஷ்டமில்லே.
2.ஒரு ஒதகாத நாய் ஒரு  நல்ல மனுஷனோட சேர்ந்து எதானா பண்றேன்னு சொல்லுதா .. அந்த நல்ல மன்சனுக்கு சொல்லு ” தலீவா! சுத்த தங்கத்துல நகை செய்ய முடியாது. அதுக்குனு ஓவரா கலப்படம் பண்ணினா மதிப்பு குறைஞ்சுரும் பார்த்து நடந்துக்கனு சொல்லு.
3ஒவ்வொரு .மனுஷனும்  அவன் சேர வேண்டிய விலாசம் அச்சாகியிருக்கிற
போஸ்ட் கார்டு மாதிரி . அவனை இன்னொரு அட்ரஸுக்கு டைவர்ட் பண்றதெல்லாம் வேண்டாத வேலை. முடியாத வேலை
4. நீ சக்ஸஸ் ஆகனும்னு விதி இருந்தால் உன் கிட்டே இருக்கிற அத்தினி மைனஸ் பாயிண்ட்ஸோட சக்சஸ் ஆவே. நீ ஃபெயிலியர் ஆகனும்னு விதி இருந்தா உன் கிட்டே இருக்கிற அத்தீனி ப்ளஸ் பாயிண்ட்ஸோடவே ஃபெயிலியர் ஆயிருவ
5. நல்லவன் காஞ்ச திராட்சை மாதிரி . காஞ்சானா தெரிவான். ஆனால் லாங் லைஃப். கெட்டவன் பச்சை திராட்சை மாதிரி . தள தளனு இருப்பான்.ஆனால் அழுகிருவான்.
6.தண்ணி போடறியா தனியா போடு. பலான இடத்துக்கு போறியா நாலு பேரோட போ
7.தம்மடிக்கிறவனோட தம்மு மட்டும் அடி. டீ சாப்பிடறவனொட டீ மட்டும் சாப்பிடு .புட்டி போடறவனோட புட்டி, குட்டி போடறவனோட குட்டி மட்டும் போடு. ஒருத்தனோடவே டீ சாப்டு,அவனோடவே தம்மடிச்சு அவனோட புட்டி போட்டு ,குட்டி போட்டு வியாபாரமும் அவனோடவே பண்ணாதே
8.நம்மக்குனு நாலு பேர் இருந்தா போதும்னு நாலு பேரோட மட்டும் சகவாசம் பண்ணாதே. அது மூத்திர குட்டைல மீன் பிடிச்ச மாதிரி . சீக்கிரமே நாறிப்போகும். குறைஞ்சது 30 சர்க்கிள் இருக்கனும். லாட்ஜு வைத்தியர் மாதிரி ஒவ்வொரு சர்க்கிளுக்கு ஒவ்வொரு சாயந்திரத்தை அலாட் பண்ணு. அதுல ஒரு நாலு பேர் தேறினா தேறட்டும். அவிகளுக்கு கூட மாசத்துக்கு ஒரு நாள்தான்.
9.ஒவ்வொரு இதயத்துலயும் ஒரு ரணம் இருக்கு. மனுஷனோட பேச்சு டூ இன் ஒன். அதுவே ரோஜா , அதுவே முள். உன் பேச்சு ரோஜாவா இருந்தா ரிலேஷன் ஷிப் ஓகே .முள்ளா இருந்தா கோவிந்தா..
10.யாரோ ரெண்டு பேர் பிரிஞ்சிட்டா அவிகள சேர்த்து வைக்கபாரு. இல்லாட்டி அவிக என்னைக்கோ ஒரு நாள் சேர்ந்துருவாங்கனு நினைச்சி ரெண்டு பேரிட்டயும் பழகு
11. ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான செல் அழிஞ்சி போவுது. புது செல் உண்டாகுது. வயசு ஆக ஆக புது செல் உற்பத்தியாறது குறைஞ்சிக்கிட்டே வரும். முக்கியமா மூளையில உள்ள செல்கள். அதனால  100 வருஷ வாழ்க்கைக்கு தேவையான அறிவை  18 வயசுக்குள்ளவே மைண்ட்ல ஃபீட் பண்ணிவச்சுக்க. ஆக்சிடெண்ட் நடந்த பிறகு எந்த இன்ஷியூரன்ஸ் கம்பெனியும் பாலிசி தராது
12.ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதவாதும்பாங்க. புத்தகம் இன்னொருத்தன் நமக்காக செய்த தவத்தோட பலன். படி. சமைத்து பார் புஸ்தவம் மாதிரி. படிச்சி முடி. படிச்சதோட சாரத்தை புடி. அப்ளை பண்ணு. உன் அனுபவத்தை சேர்த்து மூளையில பத்திரப்படுத்து.
13.மனச்சிக்கலை விட மலச்சிக்கல் கொடுமை. ஏன்னா உனக்கு மனச்சிக்கல் வந்துட்டா அதன் விளைவை பிறர் தான் அனுபவிப்பாங்க. மலச்சிக்கல் வந்துட்டா அதன் விளைவை நீதான் அனுபவிக்கனும். மனச்சிக்கல் இலவச இணைப்பா வந்துரும்
14. நீ ஏதும் புது வாழ்வை வாழலை. கோடிக்கணக்கான சனம் வாழ்ந்த அதே உதவாக்கரை வாழ்வத்தான் வாழறே. உனக்கு வர இன்ப,துன்பம் எதுவும் புதுஸு கிடையாது.அதானால எது வந்தாலும் அலட்டிக்காதே!
15.உலகத்திலான மனித  வாழ்க்கைய பத்தின அராய்ச்சியோட  வெரி லாங்க் அண்ட் ஓல்ட் லேப் ரிப்போர்ட் தான் சரித்திரம்.  நமக்கு முன்னே வாழ்ந்தவங்க விட்டுட்டு போன இடத்துல இருந்து ஆராய்ச்சிய ஆரம்பிக்கனுமே தவிர முதல்ல இருந்து ஆரம்பிப்பேங்கறது முட்டா…..தி தனம்.  வேணம்னா ரேண்டமா செக் பண்ணிட்டு ஆராய்ச்சிய துவங்கலாம் தப்பில்லை.
16.புராணம், சரித்திரம் எல்லாத்தயும் ஒரு தாட்டி புரட்டுங்க. அதுல மனுஷன் பண்ணாட தப்பு ஏதாச்சும் இருந்தா பண்ணுங்க. அதனனோட விளைவ மனிதகுலம் தெரிஞ்சுக்கும். அதை விட்டுட்டு நான் புடுங்கி. அவனெல்லாம் தண்டம். நான் தப்பா செய்தாலும் சரியா வரும்னு நினைச்சா உன் வாழ்க்கைங்கற ரயில் ஒரு லைஃப் டைம் லேட்டாயிரும்.
17.ஒவ்வொரு தப்பையும் நாமே பண்ணி திருந்தனும்னா வாழ் நாள் போதாது.
18.மனுஷனோட குண நலனை  அவன் ஆணா,பெண்ணாங்கறது முதற்கொண்டு, அந்த சமயம் சாப்டானா இல்லையா? உச்சா போனானா இல்லையாங்கறது வரை  பாதிக்கும்.

சனங்க தத்துவம்:
1.கெட்ட பழக்கம் கெஸ்ட் மாதிரி வரும். போக போக நமக்கு ஓனராயிரும்.டேக் கேர்
2. எதிரிக்கு தெரியக்கூடாத விஷயத்தை நண்பனுக்கு கூட சொல்லாதே . முகம் தெரியாதவன் விரோதியாறதில்லே. இன்றைய நண்பன் தான் நாளைய எதிரி
3.பக்தி,காதல்ல நீ என்ன பண்றேங்கறது முக்கியமில்லே எந்த உணர்வோட பண்றேங்கறதுதான் முக்கியம்
4.துன்பத்துல இருக்கிறவன் துன்பத்தை தான் கொடுப்பான்.
5.பயத்துல இருக்கிறவந்தான் எதிராளிய பயமுறுத்துவான்.
6.எந்த வீட்லயாவது நாயையோ,பூனையையோ உயிரோட கொளுத்தினதா கேள்வி பட்டிருக்கிங்களா? ஆனால் பெண்ணை கொளுத்தறத ?
7.கணவன் மின் உபகரணம். மனைவி ஸ்டெபிலைசர் மாதிரி .சில கேஸ்ல அவன் ஃபேன் மாதிரி இருப்பான், மனைவி கண்டென்சர் மாதிரி இருப்பா. கண்டென்சர் புட்டுக்கிட்டாலும் பிரச்சினைதான். ஸ்டெபிலைசர் வேலை செய்யலன்னாலும் பிரச்சினைதான்.
8.பணம்,பேர்,புகழ்,நண்பர்கள்,படை,பலம் எல்லாம் இருக்கும் போது நீ எப்படி இருக்கியோ அது உண்மையான நீ இல்லே. அதெல்லாம் போன பிறகு நீ எப்படி இருக்கியா அதான் உண்மையான நீ
9.ஹீரோன்னா ஜெர்கின் கோட், ரேபான்  போட்டு லட்ச ரூபா பைக்ல பறக்கறவனில்ல. எவன் ஒருத்தன் தன்னவர்களுக்காக தன்னையே பலி செய்ய தயாராகிறானோ அவந்தான் ஹீரோ

நிர்வாணமும் பெண்களும்

வணக்கம் தலை ! வழக்கம் போல தலைப்பை பார்த்து என்ட்ரி கொடுத்த பார்ட்டியானா சிகப்புல இருக்கிறத மத்தும் படிச்சுருக..

தத்துவம்னு ஒரு தனிபதிவும் போத்திருக்கேன். அதை படிக்க CLICK HERE.

“ஏய் ! நீ தானே ஒரு சந்தர்ப்பத்துல சொன்னே .பெண் பலான நேரத்துல கண்ணை மூடி தனக்கு விருப்பமானவனை கற்பனை பண்ணிக்கிறான்னு”

“இந்த உலகத்துல எல்லாமே உண்மைதான். எல்லாமே பொய் தான்.ஆனால் எந்த பொய்யும் 100 சதம் பொய் கிடையாது. எந்த நிஜமும் 100 சதம் நிஜம் கிடையாது. எந்த பொய்யும் 24 மணி நேரம்,365 நாளும் பொய்யா இருக்க முடியாது. எந்த நிஜமும் 24 மணி நேரம்,365 நாளும் நிஜமா இருக்க முடியாது. மாறாதது எதுவுமில்லே மாற்றத்தை தவிர”

” ஏய் இந்த குழப்பற வேலையெல்லாம் வேணா உண்மைய சொல்லு. அந்த நேரத்துல பெண் ஏன் கண்ணை மூடிக்கிறா?”

“சமஸ்கிருதத்துல பஞ்சேந்திரியானாம் நயனம் பிரதானம்னு ஒரு வாக்கியம் உண்டு. மனிதனோட சக்தி பல வகைல வீணாகுது. அதிலயும் கண்வழியா அதிகம் வீணாகுது. உலகம் கடல் மாதிரி. மனித மனம் படகு மாதிரி. படகுக்கு கீழே கடல் நீர் இருக்கலாம். ஆனா படகுக்குள்ள கடல் வரக்கூடாது.மனித மனம்ங்கற படகுக்குள்ள உலகங்கற கடல் நீரை அனுப்பற முக்கிய,பெரிய ஓட்டை கண். கண் திறந்திருக்கும்போது ரேடியோல வர்ர வாய்ஸ் யாருதுனு கூட சரியா கெஸ் பண்ண முடியாது. அட் தி சேம் டைம் கண்ண மூடிட்டு கேட்டா பி.ஜி.எம்.ல வர்ரது வயலினா வீணையானு கூட கெஸ் பண்ணலாம். கண் மனிதனோட மனோ சக்தியை வெளியே அனுப்புது. சக்தி குறைஞ்சா உன்னால உன் பார்வைய உள் நோக்கி திருப்ப முடியாது. பெண் இன்ட்ராவர்ட் அவளுக்கு தனக்குள்ள ,தன் அறைக்குள்ள, தன் வீட்டுக்குள்ள என்ன நடக்குதுங்கறத கவனிக்கிறதுலதான் ஆர்வம். ஏன்னா அவளோட இன உறுப்பின் அமைப்பே அப்படி. செக்சுங்கறது மனித உடலோட மையம் மட்டுமில்லே. மனித மனதோட மையமும் அதான்.அதனால தான் தியானம் பண்றவங்க கண்களை மூடிக்கிறாங்க. ஊனக்கண்ணை மூடும்போது உன் கவனம் குவியுது. கான்சன்ட்ரேஷன் அதிகரிக்குது. ஷி வில் பிகம் மோர் ரெசிப்டிவ். அதாவது அவள் மேலும் உள்வாங்குபவளா மாறிர்ரா.பை தி பை பலான நேரத்துல பெண் மல்லாந்து படுத்திருக்கிறப்ப கண்ணை மூடினா அது மேல் நோக்கி செருகும். அப்போ அவளோட கவனம் ஆட்டோ மெட்டிக்கா ஆக்னா சக்கரத்து மேல போயிரும்.அப்போ உடலுறவு ஒரு யோகமா, தியானமா மாறுது. அதனால தான் உடலுறவுக்கு பின்னாடி கூட பெண் ஆக்டிவா இருக்கமுடியுது. “

” நீ உண்மைய சொல்றியா பீலா விடறியான்னே தெரியமாட்டேங்குது. நீ கண்ட புஸ்தவத்தையும் படிக்கிறியே தவிர நீ சொல்ற எதுவுமே அந்த புக்ஸ்ல இல்லே”

“த பார்ரா .. நான் இல்லாதப்ப அன் அலமாரிய எல்லாம் குடையறனு அர்த்தம்”

“சே .. போன வெள்ளிக்கிழமை நீ முன்னாடி போய்ட்டே .. உங்கப்பா சஷ்டி பஞ்சாங்கத்தை எடுத்து சஷ்டி எப்ப வருது பாரும்மான்னாரு. நான் பஞ்சாங்கத்தை பிரிச்ச உடனே கண்ல பட்ட முதல் பக்கத்துல சாந்தி முகூர்த்தம் பத்தி தான் போட்டிருந்தது. பெண் ருதுவாகி குளித்து சுத்தமான ஐந்து நாட்கள் கழித்துனு போட்டிருந்துச்சு. இதென்னடா தலையெழுத்துனு சஷ்டி எப்போனு பார்த்துட்டு மூடி வச்சுட்டேன். ஞாயிற்றுக்கிழமை நீ ஊர்ல இல்லாத நேரத்துல உன் புக்ஸை எல்லாம் புரட்ட ஆரம்பிச்சேன். “

“அப்படி போடு அரிவாளை.. மொத்தத்துல செக்ஸு சப்ஜெக்டுக்குள்ள இழுத்துருச்சுனு சொல்லு”

” சீ போ உனக்கு வேற எண்ணமே கிடையாது”

“மொத்தத்தையும் படிச்சு என்னதான் புரிஞ்சிக்கிட்டே “

“எனக்கு ஒன்னுமெ புரியலை. ச்சும்மா ஹிண்டு பேப்பர் படிக்கிற மாதிரி படிச்சேன் . நீ பேச பேச ………..”

“தினத்தந்தி மாதிரி புரியுதுங்கறே.. ஜெய் ஆதித்தனார்”

“நான் கேட்ட கேள்விக்கு பதிலே இல்லை. நீ சொல்றதெல்லாம் நிஜமா ? இல்லே பீலாவா?”

“அது எனக்கேதெரியாது..இந்த ஜோசிய புஸ்தகங்கள படிச்சதுல கொஞ்சமா குழம்பிட்டேன். எனக்கு லக்னத்துல குரு உச்சம். அதனால தெய்வீக ப்ரேரணை இருக்குமாம். சூரியன் ஆத்மகாரகன், புதன் வித்யாகாரகன் இவிக ரெண்டு பேரும் சேர்ந்ததால தெரியாத விஷயத்தையெல்லாம் தொட்டு கலக்குவேனாம். ஆத்மாலருந்து வித்தை அப்படியே இடைதேர்தல் நடக்கிற தொகுதில பணம் மாதிரி கொட்டுமாம்.தர்கத்துக்கு அதிபதியான செவ்வாய் ஜீவனாதிபதியாகி வித்யாஸ்தானத்துல ஞான காரகனான கேதுவோட சேர்ந்ததால வெறுமனே தர்க்கத்தை வச்சே சத்தியத்தை பிடிச்சுருவனாம். போன ஜென்மத்துல கத்துக்கிட்ட வித்தையெல்லாம் ஞா வந்துருமாம்……………..”

“அப்பாடாஆஆஆஆஆஆ ஆச்சா ..இன்னம் இருக்கா? எனக்கு அதெல்லாம் தேவையில்லை. நீ இந்த நாட்டுக்கு தலைவனாவியா?”

“ஆனாலும் ஆகலாம் உயிரோட இருந்தா”

“ஆர் யு ஜோக்கிங்?”

” நோ ..ஸ்டேட் போலீஸ்லருந்து ,இன்டலிஜென்ஸ் வரை என்னை வலை வீசி தேடப்போறாங்க”

“எப்படிடா இவ்ள கன்ஃபார்மா சொல்றே?”

“என்னோட கடக லக்னத்துக்கு குரு டூ இன் ஒன். சத்ரு ,ரோக ,ருண வாதைகள தரவேண்டியதும் அவர்தான். தூர தேசங்கள்ளருந்து உதவிய தந்து உயர்ந்த பதவிய தரவேண்டியதும் அவர்தான். என் ஜாதகத்துல பத்துல ராகு இருக்கார். அதனால தலைமறைவு வாழ்க்கை கூட வாழவேண்டி வரலாம். மேலும் 9ல சனி இருக்கிறதால முன்ன பின்ன தெரியாத பஞ்சை பராரிங்க என்னை போஷிப்பாங்க. லக்னாதிபதி ரெண்டுல இருந்து எட்டை பார்க்கிறதாலயும், பாதகாதிபதியோட சேர்ந்ததாலயும் வாழ்க்கைல பல தடவை செத்துருவனாம், ஆனால் அந்த பாதகாதிபதி சுக்கிரங்கறதால அவரு சஞ்சீவி மந்திரத்தை வச்சிருக்கிறவர்ங்கறதால பிழைக்க வச்சுருவாராம். நான் பீலா விட்டாகூட என் வார்த்தைகள் நிஜமாயிருமாம்.”

“அய்யோ அய்யோ என்ன நீ ஹோட்டல்ல சர்வர் லிஸ்ட் சொல்ற மாதிரி சொல்லிக்கிட்டே போற.முதல்ல இந்த புக்ஸையெல்லாம் பழைய பேப்பர் கடைக்கு போட்டுர்ரன். உனக்கு உன்………னத பதவியும் வேணா.. பஞ்சை பராரிகளோட தலைமறைவு வாழ்க்கை வாழறதும் வேணா”

“ஷிட் என்ன பேசறே நீ எனக்கு ஹெச்.ஐ.வி பாசிட்டிவ்னு டாக்டர் சர்ட்டிஃபிகேட் கொடுக்கிறார்னு வை. அந்த சர்ட்டிஃபிகேட்டை கிழிச்சு போட்டுட்டா ஹெச்.ஐ..வி நெகடிவ்னு ஆயிருமா?”

மாயாவை லாஜிக்கலா பேசி மடக்கினப்ப நான் சொன்னதெல்லாம் நடந்துர
போகுதுனு நெனச்சி கூட பார்க்கலை. ஆனா நடந்தது. தமிழக அரசியலையும்,ஆந்திர அரசியலையும் ஒப்பிட்டு எழுதும்போது ஒருதரம் என்.டி.ஆர் ஆந்திர எம்ஜி.ஆர் இல்லே ஆந்திரத்து பெரியார்னு நகர தூதால கட்டுரை எழுதினேன். தன்னிலிருந்த பெரியாரின் குண நலன் களுக்கு சிகரம் வச்ச மாதிரி என்.டி.ஆர் டிவோர்சி+ வளர்ந்த பையனுக்கு தாயான லட்சுமி பார்வதிய கல்யாணம் பண்ணிக்கிட்டாரு.

ஆளுங்கட்சில இருந்தும் கோஷ்டி அரசியல் காரணமா இந்த நாலு வருசத்துல ஜகன் சாரும் ரொம்பவே அல்லல் பட்டாரு. லோக்கல் இஷ்யூஸுக்காக (குடி நீர் , பஸ் ஸ்டாண்டை மாத்த கூடாது இத்யாதி) தொடர் உண்ணாவிரதமெல்லாம் இருந்தாரு. நான் கட்சி கிட்சியெல்லாம் தூர வச்சிட்டு போய் மாலை போட்டு வாழ்த்திட்டு வந்தேன்.

தேர்தல் வந்தது. என்.டி.ஆர் வெற்றி வாகை சூடினாரு. லோக்கல்ல மாவட்டத்துல நின்ன காங்கிரஸ் ஜாம்பவானெல்லாம் காலி. அடிச்சு பிடிச்சு சீட் வாங்கின ஜகன் சாரு மட்டும் ஜெயிச்சாரு. நானும் மாயாவும் போய் வாழ்த்திட்டு வந்தோம்.

“யோவ் ! உன் கேரக்டரே புரியலய்யா. எலக்சன் எதிர்த்து வேலை பார்க்கிறே . ஜெயிச்சா வாழ்த்த வந்துர்ரே. சரி உன்னை என்.டி.ஆர் நல்லா மயக்கி வச்சிருக்காரு .. நீ என்ன பண்ணுவே”ன்னு நக்கலடிச்சு அனுப்பினாரு.

ஆட்சிய பிடிச்ச என்.டி.ஆர் சந்திரபாபுவ நிதிமந்திரியாக்கினாரு. பிற்காலத்துல சி.எம்.ஆகிஅமல் படுத்தி செருப்படி வாங்கின பொருளாதார சீர்திருத்தங்களையெல்லாம் என்.டி.ஆர் முதல்வரா இருக்கிறப்பவே நிதி மந்திரிங்கற ஹோதால அமல் செய்ய பார்த்தார். என்.டி.ஆர் அந்த ஜீ.ஓக்களை நிறுத்தி வைக்க உத்தரவு போட்டார். பாபுவோட ஈகோ அடி வாங்கிருச்சு.

லட்சுமி பார்வதியை சாக்கா வச்சு கோஷ்டி சேர்க்க ஆரம்பிச்சாரு. இதுக்கு என்.டி.ஆரோட வெள்ளந்தியான குண நலனும் காரணம். முதல் தடவை அரசியல்ல குதிச்சு வேட்பாளர்களை தேர்ந்தெடுத்து அறிவிச்சுட்டு தன் பேச்சு பதிவு செய்யப்பட்ட ஆடியோ கேசட்டை ஆளுக்கொன்னா கொடுத்து அனுப்பிட்டாரு.
அப்போ இருந்த காங்கிரஸ் எதிர்ப்பு அலைல கண்டக்டர், டாக்சி ட்ரைவரெல்லாம் ஜெயிச்சு வந்துட்டாங்க.

1983க்கும், 1994க்கும் இடையில 11 வருஷம் கடந்து போயிருச்சே. அரசியல் எந்த அளவுக்கு கரப்ட் ஆகியிருக்கும். தேர்தல் செலவு எந்தளவுக்கு எகிறியிருக்கும். இதை யெல்லாம் யோசிக்காம மறுபடி ஆளுக்கொரு காசட்டை கொடுத்து அனுப்புவாராம்.

என்.டி.ஆர் சாம்பர்லருந்து “எப்படியோ சீட் கிடைச்சுருச்சு. தேர்தல் செலவுக்கு என்னடா பண்றதுன்னு கேண்டிடெட் நொந்து போய் வரப்ப தன் சேம்பருக்கு வரச்சொல்லி சந்திரபாபு கூப்டனுப்புவாராம். பணத்துக்கு “ஏற்பாடு” பண்ணுவாராம்.

இப்போ சந்திரபாபுவுக்கு அவிக ஈல்ட் ஆகித்தானே ஆகனும். இப்படியாக 1994 ஆகஸ்டுல ஜகத் பிரசித்தமான சந்திர பாபுவின் முதுகில் குத்தும் எபிசோட் நடந்தேறிச்சு. ஆட்சி போச்,கட்சி போச்.

நான் அவசர அவசரமா அவரோட ஜாதகத்தை ஆராஞ்சி தை மாசம் மூணாவது வாரத்துல உங்களுக்கு எதிரிகளே இருக்கமாட்டாங்கனு தந்தி கொடுத்தேன்.

ஜில்லா ஜில்லாவா போய் கூட்டம் போட்டு நடந்ததை மக்களுக்கு சொல்றேனு என்.டி.ஆர் சவால் விட்டாரு. கூட்ட செலவுக்கு செக் போட்டு அனுப்பினப்ப வங்கில அக்கவுண்டை நிறுத்தி வச்சிருக்கிறதா சொல்லிட்டாங்க.

அவர் அரசியலுக்கு வர்ரப்பவே பாக பிரிவினை எல்லாம் பண்ணிட்டு என் கிட்டே ஒன்னுமில்லேனு சொல்ட்டுதான் வந்தாரு. கட்சி மெம்பர்ஷிப் காசு டெப்பாசிட் ஆகியிருக்கிற வங்கிக்குதான் செக் அனுப்பினாரு. கோர்ட் லீவா இருந்தாலும் ஹவுஸ் மோஷனோ யூரினோ எல்லா தகிடுதத்தமும் செய்து செக் என் கேஷ் ஆறத நிறுத்திட்டாங்க.

ஜனவரி 18 ஆம் தேதி “என்.டி.ஆர் திடீர் மரணம்”னு தினசரிகள்ள செய்தி. கேவலம் ஒரு தேர்தல்ல அவரு தோத்துப்போனதுக்கே நொறுங்கி போன எனக்கு எப்படி இருக்கும்னு யோசிச்சி பாருங்க.

நான் ஒரு சாமானியன். ஜொள்ளு பார்ட்டி. குழப்ப வாதி. வில் பவர் இல்லாத ஆசாமி, சந்தேக கேஸு, மதில் மேல் பூனை, தாழ்வு மனப்பான்மை உள்ள பார்ட்டி. இதையெல்லாம் ஓவர் கம் ஆறதுக்குதான் என்.டி.ஆரை என் ரோல் மாடலா ஏத்துக்கிடேன். ஏதோ யத்பாவம் தத்பவதிங்கற மாதிரி ஓரளவுக்கு மோல்ட் ஆனேன்.. அவர் ஃபார்முலா சக்ஸஸ் ஃபார்முலான்னிட்டு அதுவே என் ப்ளூ ப்ரிண்ட்டுன்னு டிசைட் ஆயிட்டன். அந்த நேரம் பார்த்து கட்சி தோத்து போச்சு. இருந்தாலும் என்னை நான் தேத்திக்கிட்டேன். என் மனசை கொஞ்சமா உறுதிப்படுத்திக்கிட்டு பாசிட்டிவா யோசிச்சு அவரோட தோல்விக்கான காரணங்களை ஆராய்ச்சி பண்ணி தலைவர் வெற்றிக்கு ஒரு ப்ளூ ப்ரிண்ட் தயாரிச்சு அனுப்பினேன். எப்படியோ ஜெயுச்சுட்டார். ஆச்சு போச்சுனு இருந்தப்ப படக்குனு செத்தே போயிட்டாரு. தாளி அவரு ஒரு மூனு மாசம் உயிரோட இருந்திருந்தா சந்திரபாபுவுக்கு ஆனல் செக்ஸ் பண்ணியிருப்பாரு அது வேற கதை . செத்தே போயிட்டாரு.ஆட்டம் க்ளோஸ்.

என்.டி.ஆர்ங்கறது என்ன? மூணெழுத்தா? அவர் உடம்பா? அவர் உயிரா? அவர் கொள்கையா? எனக்கும் என்.டி.ஆருக்கும் என்ன சம்பந்தம்? இப்படி என்னென்னவோ யோசனைகள் குழப்பங்கள்.

கொஞ்ச நாள் அவர் சம்சாரம் லட்சுமி பார்வதி சில எம்.எல்.ஏக்களை வச்சுக்கிட்டு அரசியல் பண்ணுச்சி. எதுவும் போனியாவல.1999ல அடுத்த தேர்தல் வந்தது . தாளி எம்.எல்.ஏங்களை பிடிச்சி சி.எம் ஆயிர்ரது இல்லே கண்ணா இப்புடு சூடுனு களத்துல குதிச்சேன். ஜகன் சாருக்கு காங்கிரஸ் கட்சி சீட் கொடுத்தது. நான் நேர போய் “சார் ! நான் காங்கிரஸ் கொடிய பிடிக்க மாட்டேன். என்னோடது தனி ஆவர்த்தனம். சந்திரபாபு தலைமைல இருக்கிற தெ.தே. என்.டி.ஆரோட தெ.தேசமில்லை. அதை தோற்கடிங்கனு தான் பிரசாரம் பண்ணுவேன்”னு சொல்லிட்டு வந்தேன். சொன்னதை செய்யறது எவ்ளோ கஷ்டம், தடைகளை மீறி சொன்னதை செய்துட்டா எவ்ளோ கஷ்டங்கறதெல்லாம் அப்புறம்தான் புரிஞ்சது. ரோட்டுக்கு வந்த பிறகு…