ரஜினி : ஒரு ஜோதிட ஆய்வு

தெலுங்குல கீடெஞ்சி மேலெஞ்சுனு ஒரு சொலவடை இருக்கு. அதாவது ஒரு காரியத்தை செய்யறதுக்கு மிந்தி இதனால என்னெல்லாம் கெடுதல் நடக்கும்னு எண்ணி பார்க்கிறது. இது யாருக்கு உபயோகமோ இல்லையோ ஜோதிடருக்கு ரெம்ப யூஸ் ஃபுல். இந்த உருப்படாத ஜாதகத்தை பத்தி எழுதினால் என்ன நடக்கும்னு சின்னதா கணக்கு போட்டு பார்த்துட்டுதேன் தகிரியமா எழுதறேன்.( எல்லாத்தயும் ஆத்தாளே பார்த்துப்பான்னு ஒரு நினைப்பு)

ஜனனம்: 12/12/1950 நட்சத்திரம்: திருஓணம் ராசி: மகரம் ,லக்னம் : சிம்மம்.முதல்ல கிரக நிலைய பார்ப்போம்:
2 ஆவது இடத்துல கேது சனி, நாலாவது இடத்துல சூரியன், அஞ்சுல சுக்கிர புதன், ஆறுல சந்திரன்,செவ்வாய், 7ல குரு, எட்டுல ராகு

அல்லாரும் இவர் ஜாதகத்துல ஹைலைட் பண்ற மேட்டர் காலசர்ப்பதோஷம்.(எல்லா கிரகமும் ராகு கேதுக்களுக்கிடையில சிக்கியிருக்கிறது) இந்த தோஷத்துல உள்ள ப்யூட்டி என்னன்னா ராகு கேதுவோட வேற எதாச்சும் கிரகம் சேர்ந்தா அது பங்கமாயிரும். இல்லாட்டி 45 வயசு வரை பிச்சைதான்.

சிம்ம லக்னம்னாலே ஆகா ஓகோ தானா:
ஒரு பையன் பத்தாங்கிளாஸ் படிச்சு தேறனும்னா அல்லா சப்ஜெக்டுலயும் 35 மார்க் வாங்கனும்.அப்பத்தான் அவன் பாஸு.இல்லாட்டி டப்பாஸு. ஒரே ஒரு சப்ஜெக்டுல நூத்து பதினாறு வாங்கிட்டு ( நாம கணக்குல கொஞ்சம் வீக்குங்கண்ணா -என்ன நூறுக்கு மேல மார்க்கே கிடையாதா ? அதுசரி ) என்னை பாஸாக்குன்னா டப்பாசாக்கலாம் அவ்ளதான்.

அந்த மாதிரி தான் ஒரு பாயிண்டை எடுத்துக்கிட்டு அனலைஸ் பண்றதும். சிம்ம லக்னம்னா என்ன கொம்பா? நம்மாளுங்க (ரிஷிகள் -மகரிஷிகள்) குமுதங்காரன் போடறானே சம்பந்தா சம்பந்தமில்லாத டொபனேர் தனமான படங்களை அப்படி அவிக ராசிக்கான உருவத்தை உருவாக்கலை.அதுல ஆயிரம் அர்த்தம், உள்ளர்த்தமெல்லாம் இருக்கு.

ஆண் சிங்கம் சோம்பேறி. கில்மால வேணம்னா ஜூரியா இருக்கலாம். ஆனால் பெண் சிங்கம்தான் வேட்டைக்கு போகும். ஆண் சிங்கம் குழந்தை குட்டிய பார்த்துக்கிட்டு வர்ர ஃபோனை அட்டெண்ட் பண்ணிக்கிட்டு குகையோட கிடக்கும்.

இதுலர்ந்து என்ன புரியுது? ஆண்கள் சிம்ம லக்னத்துலயோ,ராசிலயோ பிறந்தா பெருசா பயனில்லே. கலைஞரை விதவையாக்கின அதே அமைப்பு இவர் ஜாதகத்துல கூட கீது பாருங்க.

ரெண்டுல கேது – எட்டுல ராகு.

ரெண்டுல கேது இருக்கிறதாலதான் தத்துவங்கற பேர்ல தத்து பித்துன்னு உளறி என் போன்றவர்கள் கிட்ட கூட வாங்கி கட்டிக்கிறாரு. சொன்ன சொல்லு ஒன்னு கூட நிறைவேர்ரதில்லை. (லேட்டஸ்ட்: மகள் திருமணத்துக்கு ரசிகர்களுக்கு விருந்து) பாபா படம் ஊத்திக்கவும் இது தான் காரணம்.( கேது மீன்ஸ் சன்னியாசி -பாபாவுல சன்னியாசிகளோட டீல் பண்றாருல்லை – மகா அவதார் பாபாவும் ஒரு சன்னியாசிதானே)

ரெண்டு தனபாவம். இங்கன ராகு. ராகுன்னாலே திருட்டு தான்.ப்ளாக் மணி தான். சமீபத்துல தெஹல்கா விட்ட லிஸ்ட்ல அய்யா பேரு கூட கீதாமே நெஜமாலுமா? நிஜமே சொன்னாலும் பொய்யா போயிரும். தான் பேசினதை தானே மாத்தி பேசவேண்டி வரும்.

ஒரு சமயம் ஜெ ஆட்சி தொடர்ந்தா தமிழ் நாட்டை ஆண்டவனால கூட காப்பாத்தமுடியாதுனு கர்ஜனை. மறு சமயம் பார்த்தா வீரலட்சுமி ,தீர லட்சுமின்னு அர்ச்சனை. இதெல்லாம் கேது பண்ற லொள்ளுதேன்.

ஆந்திரால வந்தா ஏ என் ஆர்,என்.டி.ஆர், தமிழ் நாட்ல இருந்தா எம்சியார் ,சிவாஜி, கர்னாடகா போனா அங்கன வெற சால்ரா.

மேலும் இதை கத்திரியோகம்ங்கறாய்ங்க. இது தனிமைப்படுத்திரும். (ரசிகர்கள் கிட்டருந்து -மக்கள் கிட்டருந்து -சக சினிமாக்காரர்கள் கிட்டருந்து -அட குடும்பத்துல கூட பார்ட்டி தனி தானே-அப்பப்ப தானே மரியாதையா கட் பண்ணிக்கிட்டு நாடோடி மாதிரி போயிட்டுதானே வராரு)

இது மட்டுமில்லிங்கண்ணா ஒரு காலத்து ஜரிதா, போதை பழக்கம் எல்லாத்துக்கும் இந்த ராகு கேதுவோட ஸ்திதிதான் காரணம்.

இந்த அமைப்பு ஃபுட்பாய்சனிங், மர்ம சாவு, விடமருந்தி சாவு, பாம்பு கடித்து சாவு,மெடிக்கல் அலர்ஜி, அன் வாரன்டட் மோஷன்ஸ், வாமிட்டிங்சுக்கும் காரகமாகுது.

6-7 க்கு அதிபதியான சனியோட வேற சேர்ந்தாரு. 7ன்னா மனைவி . 7ஆவது இடத்துல பிராமண கிரகமான குரு நின்னதால பிராமண குலத்தோன்றலான லதா மனைவியானார். ஆனால் அவரோட பாப் விதேசியத்தை காட்டுது ( அப்பாடா கேதுவுக்கு பரிகாரம்) ஆனால் இவரோட லக்னதுக்கு குரு டபுள் ஆக்ட் . மரணத்தை தரவேண்டியதும் இவரே. பெரும்புகழை தரவேண்டியதும் இவரே.இவர் மனைவிய காட்டற இடத்துல நின்னதால வீட்டம்மானால அப்பப்போ சிக்கல்ல மாட்டிக்கிறாரு.

ரஜினி 25 விழா ஞா இருக்குங்களா? சமீபத்துல பிராமண சம்பிரதாயங்களோட கண்ணாலம். (இவரை வளர்த்துவிட்டது மாத்திரம் சேரிக்காரன்- கிண்டலடிச்சவுக அவாள் – ஆனால் அய்யா அவாளோட சாங்கியங்களை தலை மேல சுமந்தார் )

நம்மாளை ஆராச்சும் கிண்டலடிச்சா ஒடனே அவிகளுக்கு கேடு காலம் ஆரம்பிச்சுரும் . ஒரு தாட்டி இப்படித்தான் மனோரமா மாட்டினாய்ங்க. 6ன்னா எதிரி. ஆறுக்கதிபதியோட கேது சேர்ந்ததால இந்த கதி.

அப்ப உங்க கதியும் அதேவானு கேப்பிக. சொல்றேன். கேதுன்னா சன்னியாசி. சன்னியாசிய நம்ம சனம் சாமினு தான் கூப்பிடறாய்ங்க. அதிர்ஷ்டவசமா நமக்கும் அந்த டைட்டில் உண்டுங்கோ.

மேலும் நான் பிறந்த தேதிலயே 786 வருது. நான் பாதி பாய். கேதுன்னா அதான். மேலும் நமக்கு பூனைக்கண். பப்பு வேகாதுங்கோ..

கடன் கொடுத்தவனும் நாஸ்திதேன். அவரோட வாரிசுக்கு கடன் கொடுத்துட்டு அய்யா உதிர்ப்பாருன்னு பார்த்து பார்த்து ஜப்தி வாரண்டெல்லாம் கொண்டாந்தாங்களாமே. சனி என்றால் நெர்வஸ் செட் அப் கேதுன்னா பிரச்சினை. ரோகாதிபதியோட கேது சேர்ந்து 2 ல நின்னதால பெரும்பண செலவுடன் சிகிச்சை -சிகிச்சைக்கு பின் குணம்.

சூரியன் 4 ல்:
உலகை விழிக்க வைப்பது சூரியன். மனுசன் தூங்கி ரிலாக்ஸ் ஆறது வீட்ல. வீட்டை காட்டற இடத்துல சூரியன். இதுல என்னாத்த ரிலாக்ஸ் ஆறது ? என்னாத்த ரோசிக்கறது ? என்னாத்த தியானம் பண்றது?

4ங்கறது நிலம், நீச்சையெல்லாம் கூட காட்டுது. வழக்கமா நம்மாளு லேண்ட் ஓனருக்கு பணம் பட்டுவாடா பண்ணமாட்டாரு. ரோட்டுல போறவனுக்கு கொடுத்திருவாரு.ஓனர் கோர்ட்டுக்கு போவான். இதுக்கு இந்த அமைப்புத்தேன் காரணம்.

4ங்கறது வித்யாஸ்தானம். சூரியன் ஆத்ம காரகன். இதனாலதான் இவரு தியானம்,யோகம்னு “மலை மலையா”ஏறி இறங்கறாரு. ( மலைக்கு சூரியன் தேன் காரகம்)

ஐந்தில் புத சுக்கிரன்:

அஞ்சுங்கறது புத்தி ஸ்தானம். இங்கன ஆரு இருக்கா தன,லாபாதிபதியான புதன். ஆக இவர் புத்தி எல்லாம் தன் வருமானத்தை லாபத்தை உசத்திக்கிறதுல தான் மையங்கொண்டிருக்கும். 2ன்னா குடும்பம். இவர் சிந்தனை சதா தன் குடும்பத்தை தான் வட்டமிடும்.

மேலும் புதன் வியாபாரகாரகன். வைசியன். நம்மாளு சரியான வியாபாரிங்கோ. (புதனுக்கு இன்னொரு காரகத்வமும் உண்டு : அது வேசி) ஒரு வேசி எப்படி தன் க்ளையண்டை டீல் பண்ணுவாளோ அப்படி இவர் சனத்தை டீல் பண்ணுவாரு. மொத்தத்துல யூஸ் அண்ட் த்ரோ.

அப்பாறம் இங்கன சுக்கிரனும் கீறாரு. இவரு தைர்ய ஸ்தானாதிபதி . இவரோட தகிரியம்லாம் ஏவிஎம்மோட முடிஞ்சுரும்ங்கண்ணா. சுக்கிரனுக்கு ஜீவனஸ்தானாதிபத்தியமும் கிடைச்சிருக்கு அதனாலதான் கலைத்துறைல குப்பை கொட்டறாரு.

அதே நேரத்துல சுபகிரகமான சுக்கிரனுக்கு கேந்திராதிபத்யம் கிடைச்சது. இதுக்கு மின்னே லதா மேடத்தை ( எம்.சியார் காலத்து லதாங்கண்ணா) ட்ரை பண்ணி நாறினாருன்னு கூட அப்பத்துல சேதி வந்ததே அது நிஜமா இருந்தா அதுக்கு இந்த கிரகஸ்திதிதான் காரணம்.

ஆறில் செவ் சந்திரன்:

4,9க்கு அதிபதியான செவ் உச்சம் பெற்றார். 9ன்னா அப்பா, செவ்வான்னா போலீஸ். ( கணக்கு சரியா போச்சா) செவ்வாயோட சந்திரன் சேர்ந்ததால ( அதுவும் விரயாதிபதி) தாய்,வீடு,வாகனம்,கல்வி, அப்பா,அப்பாவழி சொத்து எல்லாத்துக்கும் ஆப்பு. ஆனாலும் செவ் உச்சம் பெற்றதால மனோகாரகனான சந்திரன் அவரோட சேர்ந்ததால லாபம் இருக்கோ இல்லியோ – மெட்டீரியலைஸ் ஆகுதோ இல்லியோ இவரோட மனம் சதா தாய், வீடு,வாகனம், நிலம், நீச்சு, தன் சகோதரர்கள் மேலயே வட்டமிட்டுக்கிட்டு இருக்கும். இந்த வகையறாவில் பகிர்ந்துக்க முடியாத மனத்துயர் இருக்கும்.

செவ் எதிரிக்கு காரகன். 6 எதிரிகளை காட்டுமிடம். இங்க இவர் உச்சம் பெற்றார். இதனாலதான் செவ் காரகம் வகிக்கும் வன்னியர் தலைவரான ராமதாஸ் கிட்டே பல்பு வாங்கினாரு.

இங்கன செவ் மட்டும் இருந்திருந்தா அரசியல் கட்சி என்ன மிலிடெண்ட் போராட்டமே நடத்தியிருப்பாரு. சந்திரன் சேர்ந்து செவ்வாயோட சூட்டை ஒன்னுமில்லாம பண்ணிட்டாரு. செவ் 8 ஆம் பார்வையா லக்னத்தை பார்க்கிறதால தான் இவருக்கு கௌமார ஸவரூபம் கன்டின்யூ ஆகுது.

7 ல் குரு:
ஆர்.எம். வீரப்பன், அம்ப்ரீஷ் மாதிரி பார்ட்டிகளோட டச் ஏற்பட இதான் காரணம். அவிக மொக்கையாகி போகவும் இதான் காரணம். குருவுக்கு அட்டமாதிபத்யமும் இருக்கே. ( கலைஞர் தோத்தா அதுக்கு ரஜினியோட சகவாசமும் ஒரு காரணம்)

இத்தீனி ஓட்டைகளை வச்சுக்கிட்டு – இவர் எங்கன அரசியலுக்கு வர்ரது . தப்பித்தவறி வந்தா இத்தனை நாள் சேர்த்த பணமெல்லாம் சூதாட்டத்துல சேர்த்தமாதிரி நில் பேலன்ஸுக்கு வந்துருங்கண்ணா.

கோசாரப்படி பார்த்தா சனி 9ல ( படம் நடிச்ச காசே வர்ரது கஷ்டம் – யந்திரனுக்கு வாங்கியாச்சா) அப்படியே சனி 10க்கு வந்தாலும் “பொழப்ப” பார்க்க போயிருவாரு. ( 12/12/2012)

குரு மே 8 வரை 3 ல (அரசியல்னாலே பே.. சாரி பீதி கிளம்பும்) அப்படியே நாலுக்கு வந்தாலும் குடும்ப கலகத்தை டீல் பண்ணவே சரியா போயிரும்.

மே 16 க்கு அப்பாறம் கேது அஞ்சுல ராகு 11 ல . ஒரு சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து சில்லறை அள்ளுவார். கூடவே பயங்கர அவப்பேர் வரும். வாரிசுகள்/அவர்களின் வாரிசுகள் மேட்டர்ல சோகப்பட்வேண்டி வரலாம்.

2007 முதல் 2009 வரை அஷ்டமசனியெல்லாம் தாண்டி 2009 செப் 9 முதல்தான் ஏதோ “ஒரு மாறியா” போய்க்கினு கீது. அரசியலாவது மண்ணாவது..

என் சாளரம் வழியே வானம்_ Sugumarje

அன்பர்களே, ஜோதிட வல்லுனர்களே, ஆர்வலர்களே உங்களோடு நானும் கலந்திருப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். வாய்ப்புக்களுக்காக ஏங்கும் நிலையில், தானகவே என்னையும் ஆசிரியராக ஆக்கிய சித்தூர் முருகேசன் அவர்களுக்கு வணக்கமும், நன்றியும்.

சுகுமார்ஜியான நான் கற்றுக்கொள்ளத்துடிக்கும் ஒரு மாணவன். யாருமே அந்த நிலையில் தான், வாழ்நாள் முழுதும் வாழ்க்கையை பயணிக்க வேண்டிவரும். நான் கற்றுக்கொண்டது என்ன என்பது என் வாழ்க்கைக்குப்பிறகே தெரியவரும், அதன் செய்திகள், உங்களுக்கு மட்டுமேயானது.

பத்திலிருக்கும் கேதுவும், பதினொன்றில் இருக்கும் புதனும் எனக்கு ஜோதிட அறிவியலை தூண்டினர். வீட்டிலிருந்த, தாள்களை மடக்கினாலே ஒடிந்துவிடும் பல தலைப்பிலான நூல்கள் தூபம் இட்டன. ஆர்வமும், அதற்கான கல்வியும் கிடைத்தது. ஆனால் தொழில் முறை ஜோதிடனாக மாறும் எண்ணம் எனக்கில்லை… ஏன்? காரணம்… இரண்டாமிடம்… 🙂 யாராவது கேட்டுக்கொண்டால் மட்டுமே அவர்களுக்கான ஜோதிடம் எழுதுவதும் ( கணிணி உதவியின்றியும் கூட), ஆலோசனைகள் வழங்குவதும் ஆகும். பரிசோதனை செய்ததில் கிட்டதட்ட 60 சதவிகித பலன் ஒத்துப்போவதாக அறியவருகிறேன். ஒவியம், கணிணி வரைகலை, வலைமனை துறையை தொழிலாக கொண்டமையால் சில நேரம் அதிலேயே மூழ்கிவிடுவதும் நடக்கும். அதனாலேயே அவ்வப்பொழுது காணாமல் போவதும் 🙂 சில நேரம் என்னால் சரியாக ஜோதிட பலன் சொல்ல இயலாது என்ற தடுமாற்றமும் எனக்கு வரும்… ஆக எனக்கெல்லாம் தெரியும் என்று சொல்லுவதற்கில்லை.

திரு. சித்தூர் முருகேசனோடு கலக்கும் ஒவ்வொரு சாட்டிலும் கண்டிப்பாக சில சோதிட செய்திகள், கருத்து பரிமாற்றங்கள் இடம் பெறும். இப்பொழுது கூட என் ஜாதகம் அவர் கையிலும், அவர் ஜாதகம் என் கையிலும் இருக்கிறது… அட… உண்மைதாங்க 🙂 முருகேசன் என்றாலும் சுகுமாரன் என்றாலும் அவர் தமிழ் கடவுள் முருகனைத்தான் குறிக்கிறார் என்பது பொது ஒற்றுமை 🙂

வானியலில் ஒரு விளக்கம் காண்போம்.

நம் வானத்தில், நமக்கு அமையும் ஜோதிட அமைப்பு சக்கரம். காண்க… விருச்சிகத்துக்கும், தனுசுக்கும் இடையிலே இன்னொரு ராசி அமைப்பு இருப்பதையும் காணலாம். (ophiuchus) இந்திய புராதன ஜோதிட அறிவியலில் இந்த பதிமூன்றாவதான இல்லம் ஜாதக கணிதத்தில் இல்லை. அந்த கணக்குக்கள் எல்லாம் இன்று வரை தெளிவாகவே இருப்பதால் நாமும் அதை அப்படியே வைத்துக்கொள்ளலாம். புதிதாக சேர்த்துக்கொள்ள நினைப்பவர்கள் குறித்து எனக்கொன்றும் யோசனையில்லை.

பதிவின் தலைப்பு “என் சாளரம் வழியே வானம்” என்பதை நீண்ட யோசனைக்குப்பிறகு முடிவுசெய்தேன். ஆம் நான் இன்னமும் கதவைத்திறந்து வானம் பார்க்கவில்லை. இந்த தலைப்பு எத்தனை பகுதிகள் தரும் என்பதெல்லாம் சொல்லுவதற்கில்லை. எழுதும் ஒவ்வொரு பதிவும் ஒரு பகுதிதான்… இதை நான் எழுதத்துவங்கும் பொழுது துலாராசி கிழக்கு அடிவானில் முடிந்து விருச்சிகராசி எழும்பியிருக்கிறது.

இயேசு “நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை” என்று சொன்னது போலவே கிரகங்களும் நம்மைவிட்டு விலகுவதுமில்லை. ஒரு உயிரின் தனிப்பட்ட ஜாதக அமைப்பு எப்பொழுது உருவாகிறது தெரியுமா?

கவனியுங்கள்…
கிட்டதட்ட நான்கு நிலைகள்… 1) தலைமட்டுமே வெளிவந்த நேரம் 2) தனித்த உயிராக ஆனால் தொப்புள் கொடியுடன் 3) தொப்புள் கொடி வெட்டப்பட்ட நிலை… முற்றிலும் தனித்த உயிர் 4) சுவாசமும், அழுகையும் முதன் முதலாக…

இந்த நிலைகள் எல்லாமே முழுதுமாக, இரண்டு முதல் ஐந்து நிமிடங்களுக்குள் நிகழும் சாத்தியம் உண்டு. இந்த நிமிடங்களில் எது பிறந்த நேரம்?

அதிகமான நபர்கள் நிலை ஒன்றையே தெரிவு செய்கின்றனர். என் இன்னொரு நண்பரோ அழுகையை குறிக்கிறார். அவர் சொல்வது “இங்கே தானய்யா… மூச்சும், அழுகையும் ஆரம்பமாகிறது”

ஆக நிலை ஒன்றும், நிலை நான்கும் சரியா? இல்லை ஏதாவது ஒன்றா?

என் பரிந்துரை என்னவென்றால்… நிலை மூன்று… ஏன்? அங்கேதான் ஒரு மனித உயிரின் தனி ஆவர்த்தனம் ஆரம்பிக்கிறது.

ஆனால் குழந்தை பிறப்பின் சரியான நேரத்தை அறிவிப்பதில் அருகிலிருந்த செவிலியரையோ, மருத்துவரையோ பொறுத்தது என்றாலும் நிமிடக்கணக்கு தடுமாற்றம் தருவதில்லை. எனக்குத்தெரிந்தவகையில் நிமிடக்கணக்குகளில் தடாலடியாக ராசிமாற்றமோ, நட்சத்திர மாற்றமோ, லக்கின மாற்றமோ எல்லா நேரமும் ஏற்படுவதில்லை… ஆனால் சில விதிவிலக்கு. நட்சத்திர பாதம் மாறலாம், அதன் வழியே ராசியும் மாறலாம். லக்கனம் அப்படியே இருந்தாலும், அதன் பாதமும் மாறலாம். ஆனால் ஒரு வயதிற்குப்பிறகே குழந்தைக்கு ஜாதகம் எழுதும் பழக்கமிருப்பதால், அப்பொதைக்கு ஒரு குறிப்போ, நாள்காட்டியின் அன்றைய தாளோ பதிவாக இருக்கிறது.

குழந்தையின் ஜாதக அமைப்பின்படி கோள்களின் பாதிப்பில் பல, குறிப்பிட்ட வயதுவரை தன் பெற்றோரையே சேருகிறது. கருணை காட்டுகிறார்களோ?

நல்ல ஜாதகம் அமையவேண்டும் என்பதற்காக, நேரம் பார்த்து வயிற்றில் கத்திவைக்கும் வேலையும் அங்கங்கே நடந்து கொண்டுதான் இருக்கிறது 😦 இதன் பாதிப்பை இன்னொரு பதிவாக பார்க்கலாம்.

வழிவழியாக நமக்கெல்லாம் ஜோதிட அறிவியலை தந்த முன்னோர்களை வாழ்த்தி வணங்கி… அடுத்த பதிவிலும் பேசுவோம்.

ஜெ -கலைஞர் – ஒரு ஜோதிட ஒப்பீடு

அண்ணா வணக்கம்ணா,
வழக்கமா பேர்பாதி போஸ்டை இங்கே போட்டு மீதிக்கு சைட்டுக்கு லிங்க் கொடுப்பேன். இன்னைக்கு ஐட்டத்துல தொடுப்புகள் அதிகம் . வெறுமனே கட் பேஸ்ட் பண்ணமுடியாது .அதனால அங்கயே ஆரம்பிச்சுருவம். அதுக்கு இங்க அழுத்துங்க.

ஜெ -கலைஞர் – ஒரு ஜோதிட ஒப்பீடு

கி.பி.2000 ஆம் வருடம் .அப்ப நான் வாணியம்பாடில இருக்கேன்.தெய்வீக மருத்துவம் இதழுக்கு கோஸ்ட் ரைட்டர் கம் ட்ரான்ஸ்லேட்டர். பேரென்னவோ பெத்த பேரு சப் எடிட்டர். ஆனா மேட்டர் இதான்.

அங்கன டாக்டர் அக்பர் கவுசருக்கு ஆரோ கொடுத்த அன்பளித்த ஜோசிய புஸ்தவம் ஒன்னு கண்ல பட்டுது. மல்ட்டி கலர் ரேப்பர் எல்லாம் போட்டு தூளா இருந்தது . அதுல சோசியர் அல்லார் ஜாதகத்தையும் போட்டு அடுத்த முதல்வர் யாருன்னு அனலைஸ் பண்ணி கலைஞர் தான்னு சொல்லியிருந்தாரு. பாவம் ஆசிரியரோட ஜாதகம் சரியில்லை போல.

அவரு கொடுத்திருந்த அதே ஜாதகத்தை நம்ம ஸ்டைல்ல அனலைஸ் பண்ணி ” நீங்கதான் அடுத்த முதல்வர்”னுட்டு அம்மாவுக்கு கூரியர்ல லெட்டர் போட்டேன். அவிகளும் ராமர் கோவில்ல சுண்டல் மாதிரி ஒரு தேங்ஸ் கார்டு அனுப்பியிருந்தாய்ங்க. இந்த மேட்டரை எல்லாம் ஏற்கெனவே நம்ம நிர்வாண உண்மைகள்ள பதிவா போட்டாச்சுங்கோ. அதை படிக்கணும்னா இங்கே அழுத்துங்க.

அப்பாறம் இந்த வாரம் போட்ட “ஜெ தலைமையில் கூட்டணி ஆட்சி” பதிவை படிச்சுட்டு மஸ்தா பேரு நான் என்னவோ வி.காந்த் கட்சி கூட்டு சேரட்டும்னு காத்திருந்து பதிவு போட்டாப்ல நினைச்சிருப்பாய்ங்க. ஆக்சுவலா அது பழம் பதிவு. லேசா ரீரைட் பண்ணி போட்டேன்.

உண்மைய சொன்னா மொத கணிப்புக்கப்பாறம் ஜெயாம்மாவோட ஜாதகம் – பர்த் டீட்டெய்ல்ஸ் எதுவும் நம்ம கிட்ட (கிடையாது.இன்னைய தேதிவரை ) கட்டுச் சோத்தை பிரிச்சு பரிமாறின கணக்கா அப்பப்போ அதே மேட்டரை கொஞ்சம் அப்டேட் பண்ணி பதிவு போட்டுக்கிட்டு வந்தேன்.

இன்னைக்கு நம்ம விஜய் சார் ஜெயாவோட உண்மையான ஜாதகம்னு பீதிய கிளப்பினாரு. அலறியடிச்சு போய் பார்த்தா அங்கன அம்மாவோட பிறந்த நாளா: 1946.05.09 ஐ குறிப்பிட்டிருக்காய்ங்க. மேலும்

//அரசியல் சம்பந்தப்பட்டவர்களுக்கு உயிர்திசை சூரியனைக்கொண்டு கணிக்கப்படவேண்டும்.//னு புது விதியெல்லாம் சொல்லியிருந்தாய்ங்க.ஏன்னா சூரியன் ராஜகிரகம்னு ஒரு கணக்கு.

காலம் மாறிப்போச்சுங்கண்ணா .. இன்னைக்கு எவனாச்சும் தலைவனாகனும் , முதல்வராகனும்னா சனியோட பலம் தான் தேவை.ஏன்னா அவர்தான் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு காரகர். முக்கியமா ராகு கேது நல்லாருக்கனும்.அப்பத்தான் சாலிடா விழக்கூடிய மைனாரிட்டிகளோட ஓட்டு கிடைக்கும்.

அதனால நாம அம்பேல். ஒரு பார்ட்டி ஜெ ஜாதகமே டுபுக்கு. கலைஞர் ஜாதகம் தூள் ஜாதகம்னு கமெண்ட்ல சொல்லியிருக்கவே ஒரு தாட்டி ரெஃபர் பண்ணிரலாம்னு தான் இந்தபதிவு.

சரி ரெம்பவே மொக்கை போட்டாச்சு ஜெ -கலைஞர் – ஒரு ஜோதிட ஒப்பீட்டுக்கு போயிருவமா?

லக்னாதிபதி:
கலைஞர்: இவரோட லக்னாதிபதி சந்திரன் உச்சம் பெற்றிருக்கிறார்தான். இல்லேங்கலை.ஆனால் ரெண்டேகால் நாளைக்கு ராசி மாறிருவாரே .மாசத்துல பாதி நாள் ஓகே (வளர்பிறை நாட்கள்ள) மீதி நாள்? தேர்தல் எப்ப வருமோ? வளர்பிறையோ? தேய் பிறையோ?

மேலும் இது பாதகாதிபதியான சுக்கிரனோட ராசிங்கோ. வாக்கு ஸ்தானாதிபதியான சூரியனோட சேர்ந்தது ஒன்னுதான் பலம்.

ஜெயலலிதா:இவருக்கு புதன் லக்னாதிபதி. இவர் 9 ல உட்கார்ந்தது சூப்பர் யோகம். தைரிய ஸ்தானாதிபதியான சூரியனோட சேர்ந்தது தான் ஆப்பு . ( ஓவர் கான்ஃபிடென்ட் – ஈகோ)

தோஷங்கள்:
கலைஞர்:
தனிமைப்படுத்திவிடக்கூடிய , தன் வலி, துணை வலி எல்லாத்தையும் வெட்டிவிடக்கூடிய பாப கத்திரி யோகம் இருக்கு ( சர்ப்பதோஷம்) 2/8ல ராகு கேது உள்ளதால இவர் பேச்சே இவருக்கு ஆப்பாயிரும்.

செவ் போய் ஏழுல உட்கார்ந்தாரு. அதுவும் உச்சம். சிலர் கடகத்துக்கு செவ் எங்கன இருந்தாலும் தோஷமில்லைன்னு வாதம் பண்ணுவாய்ங்க. ஆனால் கலைஞருக்கு மைனஸே பல காலம் இரு தாரம் , இன்னைக்கு ஸ்பெக்ட் ரம் தானே. மேலும் இது தோழமை கட்சிகளே எதிரிக்கட்சிகளா வேலை பார்க்கக்கூடிய அமைப்பை தருது.

ஜெயலலிதா:
இவிக ஜாதகத்துல கேது அஞ்சுல உட்கார்ந்து புத்திய குழப்பி விடறது. சந்தேக புத்தி . நம்பவேண்டியவுகளை சந்தேகப்பட்டுர்ரது, சந்தேகப்படவேண்டியவுகளை நம்பிர்ரது மாதிரி தீயபலனை தர்ராரு

செவ் 3 ல் உட்கார்ந்ததால எந்த தோஷமுமில்லை

6,8,12 பாவங்கள்:
இவை காலியாயிருக்கனும். அல்லது இந்த பாவாதிபதிகளே ஒருத்தர் வீட்ல இன்னொருத்தர் உட்காரனும்.அப்பத்தான் நல்லது.

கலைஞர்:
குரு ஆறுக்கதிபதி.இவர் அஞ்சுல உட்கார்ந்தார். அஞ்சுன்னா பிள்ளைகள். அந்த காலத்துல ஸ்டாலின் இந்த காலத்துல அழகிரியால ஆப்புத்தானே

சனி எட்டுக்கதிபதி. இவர் நாலாமிடத்துல உட்கார்ந்தாரு. எட்டுன்னா மரணம். நாலுன்னா வீடு. கழகத்தை வீடா நினைச்சாரு அண்ணா, வீட்டையே கழகமா நினைக்கிறாரு கலைஞரு. இதானே ஆப்பு. கடக லக்னம் ராசிச்சக்கரத்துல 4 ஆவது ராசிங்கறதால இவிகளுக்கு வீட்டுலதான் -வீட்டாளுங்களாலத்தான் வெடியே.

புதன் விரயாதிபதி.இவர் விரயத்துல போய் பலம்மா உட்கார்ந்தாரு. “தூ…………..ங்க கூடாதில்லை”

ஜெயலலிதா:
இவிக ஜாதகத்துல 6க்கு அதிபதி செவ் 3 ல உட்கார்ந்தாரு. செவ் மீன்ஸ் சகோதர காரகன். 3 மீன்ஸ் சகோதர ஸ்தானம். உடன் பிறவா சகோதிரினால தானே இத்தனை நாளும் ரெஸ்ட்ல இருந்தாய்ங்க. மேலும் இவிக லக்னமான மிதுனம் ராசிச்சக்கரத்துல 3 ஆவது ராசி. இதனால இவிக லைஃப்ல நல்லது கெட்டது எல்லாமே சகோதர ,சகோதிரிகளாலயே நடக்கனும்.

எட்டுக்கதிபதி சனி வாக்குல போய் உட்கார்ந்தாரு ( சனி நீச கிரகம்ங்கறதால திடீர்னு குழாய் சண்டையில பேசறாப்ல பேச ஆரம்பிச்சுர்ராய்ங்க. அங்கன மொக்கையா போயிருது)

விரயாதிபதி சுக்கிரன் 10ல உச்சம். பத்துங்கறது பதவிய காட்டுது. விரயாதிபதி அதுலயும் சுக்கிரன் இங்கன உச்சம் பெற்றதால ஆடம்பரம்,வாகன அணி வகுப்பு , படாடோப கல்யாணம்லாம் சேர்ந்து பதவிய தாரவாந்து விரயமா போக வச்சுருச்சு.

கலைஞர்:
நல்லதை செய்யவேண்டிய கிரகங்கள் சூரியன், சந்திரன், செவ்வாய், குரு . இதுல சூரியன் 11ல கரீட்டா உட்கார்ந்தாரு, சந்திரனும் ஓகே தான். ஆனால் இவரை நம்பி கோதாவுல இறங்கறது உப்புக்குதிரைய நம்பி கடல்ல இறங்கின மாதிரிங்கோ.அடுத்தது செவ்வாய் 7ல உச்சமானாரு. கூட்டு வச்சாதான் வேலைக்காகும். ஆனா கூட்டுவச்ச கட்சியே எதிரியாகி ஆப்பும் வச்சிருமே. அடுத்து குரு .இவருக்கு ரெண்டுவிதமான ஆதிபத்யங்கள் உள்ளதால 50:50 தான் ஒர்க் அவுட் ஆகும். அதுவும் அஞ்சுல இருக்கிறதால ஜாதகரோட புத்தி/புத்திரர்களாலயே நல்லதும் நடக்கும். பொல்லாப்பும் வரும்.

ஜெயலலிதா:
நல்லதை செய்யவேண்டிய கிரகங்கள் புதன்,சனி,சுக்கிரன். புதன் சூரியனோட சேர்ந்து ஆய் பையனாயிட்டாரு. ( ஓவர் கான்ஃபிடென்டாக்கி வலுச்சண்டைக்கு போக வைக்கிறாரு) சனி வாக்குல நின்னு வாக்காலயே சீப்பாக்கிர்ராரு. (இப்பக்கூட பார்த்துத்தானே படிக்கிறாய்ங்க) மிச்சமிருக்கிறது சுக்கிரன். இவர் உச்சமானது நல்லதுதேன்.ஆனால் ஏற்கெனவே சொன்ன மாதிரி படக்குனு லக்சரிக்கு திருப்பி விட்டு ஆப்பு வச்சிர்ராரு.

தசை:
கலைஞர்:
இப்ப கலைஞருக்கு கேது தசை .இவர் எட்டுல இருக்காரு.

ஜெயலலிதா:
இப்ப ராகு தசை இவர் 11ல இருக்காரு.

கோச்சாரம்;

கலைஞர்:
ரிஷபத்துக்கு அஞ்சுல சனி. சோத்துக்கில்லாதவுகளோட சொத்து சீப்பா சேரலாம் ( அடங்கொய்யால ஸ்பெக்ட்ரம்லாம் ப்ரூவ் ஆகாதா? கோவிந்தாவா?) ஆனால் அவர் அஞ்சுல இருக்கிறதால 30 வருசத்துக்கு முந்தின காலத்துல நடந்த அவமானம் இப்பமும் நடக்கும். கேது , ராகு மே 16 ஆம் தேதி 1-7 க்கு வரப்போறாய்ங்க. இது 3 மாசம் முன்னாடியே வேலை செய்யனும். காங்கிரஸு ஆப்பு வைக்கிறது நிச்சயம்டி!
குரு மே8 வரை 11 ல் அதற்கு மேல் விரயம். (ஆட்சி கோவிந்தா) சனி டிசம்பர் 12க்கு 6 க்கு வரார். இது 6 மாசம் முன்னாடி வேலை செய்யனும். அதாவது ஜூன் 12 முதலே. 6ல சனி வந்தா எதிராளிக்கு பேதியாகனும். இதை எதிர்கட்சி தலைவரா ரெம்ப நல்லா செய்வாரு தலைவரு.

ஜெயலலிதா:
சிம்மத்துக்கு 2 ல சனி. பேசக்கூடாததை பேசி கோர்ட், வழக்கு,விவகாரம் வரலாம் (ஓட்டும் மஸ்தா வரும்லே) ராகு – கேது 6-12க்கு வராய்ங்க. போன ஒன்னரை வருசம் 5-11 ல இருந்ததோட ஒப்பிட்டா தூள். இது 3 மாசம் முன்னாடியே வேலை செய்யனும்.மே8 வரை குரு 8 ல , அதுக்கப்பாறம் 9க்குவரார். (சின்னதா விபத்து நடக்கலாம் தட்ஸால் -அனுதாப ஓட்டு வரும்ல) இது 2 மாசம் முந்தி வேலை செய்யனும்

அம்மாவுக்கு ஒரே ஒரு வேண்டுகோள் தான். தப்பு செய்யாதிங்கனு சொல்லமாட்டேன். அரசியல்ல அது அசாத்தியம். பழைய தப்புகளை மீண்டும் பண்ணாதிங்க. (புலி தடை எட்செட்ரா – தமிழகமே கொதிச்சுக்கிடக்கு -உங்க ஸ்டைல்ல அந்த மக்களுக்கு – நம்ம தொப்புள் கொடி சொந்தங்களுக்கு எதுனா செய்ங்க. புதுசா எதுனா தப்பு பண்ணுங்க. அப்படியே ஜெயேந்திர சரஸ்வதி மேட்டரை கொஞ்சம் தூசு தட்டுங்க.

பெண்ணுக்கு “அந்த” இடம் எதை காட்டுகிறது

பெண்ணுக்கு “அந்த” இடம் எதை காட்டுகிறதுங்கற தலைப்பை பார்த்ததுமே உங்க மைண்ட்ல என்னென்னவோ வந்து போயிருக்குமே.

அஸ்கு புஸ்கு! பெண்ணோட ஜாதகத்துல எட்டாமிடம் அவள் மாங்கல்யத்தை காட்டுதா அ அவளோட ஆயுளை காட்டுதாங்கற கேள்வியை தம்பி மணி கண்டன் எழுப்பியிருந்தாரு. அதற்கான பதிலாத்தான் இந்த பதிவு

பெயர்: சு.மணிகண்டன்
( இவர் கச்சா முச்சான்னு கேள்வி மழையே பொழிஞ்சிருக்காரு. அதனால ஹி ஹி தவணையில் பதில்)
வணக்கம் திரு. சித்தூர் முருகேசன் அவர்களே நான் தவறாமல் தங்கள் தளத்தினை
படிக்கும் வழக்கம் உடையவன்.

தங்களது ஜோதிட கட்டுரைகள் மிகவும் எளிமையாக விளையாட்டாக சொல்வது போல
இருந்தாலும் கருத்தாழம் மிக்கவை என்பதை என்னைப் போன்ற ஜோதிடத்தை
தொடர்ந்து படித்து, ஆய்வு செய்து வருகின்றவர்கள் நன்கு உணர்ந்தே உள்ளோம்.

தங்களது தளத்தில் உள்ள கேள்வி பதில் பகுதியை படித்தவுடன் எனக்கிருக்கும்
சில ஐயங்களை தங்களுக்கு எழுதி தெளிவுபடுத்திக் கொள்ள விரும்புகிறேன்.
உங்களுக்கு நேரம் இருக்கும் போது பதில் எழுத வேண்டுகிறேன். தங்கள்
பதிவில் விளக்கினாலும் சம்மதமே.

வினா 1. (அ)
ஜோதிடத்தில் பொதுவாக ஆயுள் ஸ்தானமாக குறிப்பிடும் 8-மிடம் பெண்கள்
ஜாதகத்தில் மாங்கல்ய ஸ்தானமாக குறிப்பிடப்படுகிறது அதாவது கணவரது
ஆயுளைக் குறிக்கிறது. இங்கு தீய கிரகங்கள் வலுப்பெற்றால் அவள்
விதவையாவாள் என்பது ஜோதிட விதி அல்லவா.

பெண்களின் ஆயுள் பலத்தை நிர்ணயிக்கும் ஸ்தானமாக 8-ம்மிடத்தை நாம்
கணக்கில் எடுத்துக் கொள்வதா அல்லது கணவரது ஆயுள் பலத்தை காண எடுத்துக்
கொள்வதா என்றொரு ஐயம் எனக்கு ஏற்படுகிறது தயவு செய்து விளக்கவும்.

பதில்:
ஜோதிட விதிகள் தீர்மானிக்கப்பட்ட காலத்தை மனசுல வச்சு ரோசிங்க. அந்த காலத்துல 100% மேல் ஷேவனிஸ்ட் சொசைட்டி. பெண்ணுக்கு கணவனை விட்டா வேற நாதி இல்லை. புருசன் தான் கதி. புருசன் போய் சேர்ந்துட்டா இவ ஸ்க்ராப். இப்படி ஒரு நிலையில மேற்படி விதி ஏற்பட்டிருக்கும். இன்னைக்கு நிலைமை ஓரளவாச்சும் மாறியிருக்கு.

ஆஃபீஸ் கோயர்னு வைங்க இந்த பலன் மாறலாம். ( அதாவது இவிக மாங்கல்யம் – ஐ மீன் இவிக வாழ்வு – கணவனோட ஆயுளோட முடிச்சு போடப்பட்டிருப்பது- அவன் செத்தா இவள் லைஃப் முடிஞ்சு போறது)

அட ..அவிக அப்பா சவுண்ட் பார்ட்டி மகள் பேர்ல ஒரு காலனியே எழுதி வச்சிருக்காருனு வைங்க. இது கூட வேணா புருசன் கவர்ன்மென்ட் சர்வெண்ட் அவன் செத்தா பல்க்கா பெனிஃபிட்ஸ் வரும்னு வைங்க அப்ப புருசனோட ஆயுள் முடிஞ்சு போனா இவ வாழ்க்கை முடிஞ்சுருமா? முடியாது.

அவன் இருந்த காலத்தை விட இறந்த காலத்துல பெட்டராவே ப்ளான் பண்ணி வாழலாமே. புரட்சிகரமா இந்த கருத்தை முன் வச்சாலும் நம்மாளுங்களை ( ஜோதிட விதிகளை நிர்ணயித்தவர்களை) லோ எஸ்டிமேட் பண்றதுக்கில்லை.

ஒரு ஃப்ரெண்டோட 15 நாள் வெளியூர் போய் சுத்திட்டு வர்ரிங்கனு வைங்க. அவனும் நீங்களும் ஒன்னா ஒரே பஸ்ல பயணம் செஞ்சு ஒரே லாட்ஜுல ஒரே ரூம்ல ஒரே பெட்ல படுக்கறிங்க. ஒரே டீக்கடையில தண்ணி சாப்டு , டீ சாப்டு, ஒரே ஓட்டல்ல டிஃபன் சாப்டு ,ஒரே மெஸ்ல லஞ்ச் சாப்பிடறிங்கனு வைங்க.

அப்ப ஒரு கட்டத்துல ரெண்டு பேருக்கும் ஒரே நேரத்துல ஒரே விதமான உணர்வுகள் ஏற்பட ஆரம்பிக்கும் ( அட மூச்சா,கக்காலருந்து ஆரம்பிங்களேன்) .அப்படியிருக்க இரண்டற கலக்கும் கணவன் மனைவியரின் கலப்பு என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும்னு எப்படி ஜட்ஜ் பண்ணமுடியும்.

அதுலயும் ஜாதக பொருத்தம் , நாடி பொருத்தம் அது இதுன்னு பார்த்து பார்த்து சேர்த்து வச்ச சோடியா இருந்தா ?

60 ஆம் கல்யாண சோடிகளை பார்த்திங்கன்னா ஒரு ஐடியா வரும். தாத்தா ரெம்ப சாஃப்டா மாறியிருப்பார்.பாட்டிக்கு லேசா தாடி கூட வந்திருக்கும். ஆண் பெண்ணா ,பெண் ஆணா மாற அத்தனை வருட தாம்பத்யம் தேவைப்படுது. உடலுறவுங்கறது கொடுக்கறதோ ,எடுக்கறதோ மட்டுமில்லிங்கோ . கொடுக்கல் வாங்கல் ரெண்டுமே நடக்குது.

இந்த கோணத்துல ரோசிச்சா அவளோட மாங்கல்யம் இவனோட ஆயுள் ரெண்டுமே பின்னிப்பிணைஞ்சிருக்கலாம். ஆனால் பல சோடிகளை பார்க்கறச்ச எலி -பூனை கணக்கா இருப்பாய்ங்க.ஒருத்தர் மீதான அடுத்தவரது உள்ளார்ந்த எதிர்ப்பே கூட இந்த ஃபார்முலாவை /விதியை உடைச்சுரலாம்னு தோணுது.

வேணம்னா இப்படி வச்சுக்கலாம் . வள்ளுவர் சொன்னாப்ல வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்ங்கற ஸ்டைல்ல வாழறவிக,

ஈருடல் ஓருயிரா வாழறவிக மேட்டர்ல ஒர்க் அவுட் ஆகலாம். புருசன் ஆன் ட்யூட்டி செத்தா என்ன வரும் .. லீவுல செத்தா என்ன வரும்னு கேட்கிற பதிவிரதைகள் மேட்டர்ல, பொஞ்சாதி பிள்ளை பெத்து உடம்பு நாரா கிழிஞ்சு ஹால்ல படுத்திருக்க நடையில வேலைக்காரிய படுக்கப்போடற பிக்காலிங்க மேட்டர்ல ஒர்க் ஆகாம போயிரலாம்.

சக பதிவன்பர்களே! வாசக தெய்வங்களே!
கீழ் காணும் கேள்விகளுக்கு தங்களுக்கோ தங்கள் குடும்ப ஜோதிடருக்கோ விடை தெரிந்தால் நீங்களும் பதிலளிக்கலாம். (ஜோதிடரின் பதில் என்றால் அவரது பெயர் விலாசம்,ஃபோன் நெம்பர் அனைத்துக்கும் அனுமதி உண்டு)

(8-ம்மிடம் 7-மிடமான கணவர் ஸ்தானத்திற்கு 2-மிடமாக வருவதால் மாரக
ஸ்தானமாகிறது என்று கொண்டால் அவ்வாறு ஆண்கள் ஜாதக்திலும் 8-மிடத்தை
மனைவியின் மாரக ஸ்தானமாக எடுத்துக் கொண்டு பலன் கூறலாமா என விளக்கவும்)

வினா 2.
ஒரு ஜாதக்ததை பார்த்து அது இறந்தவருடைய ஜாதகம் என்று உடனே கண்டறிய எதாவது
விதிமுறைகள் உள்ளதா அல்லது தசா புத்தி கணக்கிட்டு தான் அவர் உயிருடன்
இல்லை என்று கூற வேண்டுமா? ஆயுளை கணிக்க பல விதிமுறைகள் உள்ளதால் இவ்வாறு
உடனே சரியாக கண்டறிந்து பின்னர் பலன்களை கூற ஜோதிடத்தில் வழிகள் உண்டா
என்ற ஐயம் எழுகிறது. விளக்க வேண்டுகிறேன்.

வினா 3
ஜாதகத்தை பார்த்து ஆண் அல்லது பெண் ஜாதகம் என்று சொல்ல விதிமுறைகள் என்ன?
லக்னத்தில் பெண்கிரகங்கள் வலுத்தாலும் பெண்களது குணாதிசயத்தை உடைய ஆணாக
இருந்தால் எப்படி கண்டறிவது விளக்க முடியுமா. மற்ற விதிகள் எதுவும்
சரியாக வரவில்லை.

வினா 4.
ஜாதகத்தை பார்த்து பிள்ளைகள் மற்றும் சகோதரர்கள் எண்ணிக்கையை சொல்லும்
விதிமுறைகள் பல சரியாக வருவதில்லை. தங்கள் அனுபவத்தில் ஏதாவது
வழிமுறைகளை கண்டறிந்துள்ளீர்களா என விளக்கவும்.

வினா 5.
ஒரு கிரகம் தனது தசா புத்தியில் எந்த வரிசைப்படி பலன்களை தரும்.

1. தான் நின்ற வீட்டின் ஆதிபத்ய பலன்
2. அக்கிரகத்தின் சொந்த வீட்டிற்குரிய ஆதிபத்ய பலன்
3. அக்கிரகத்தின் காரக பலன்
4. அக்கிரகம் தன்னோடு இணைந்த கிரகத்தின் பலன்
5. அக்கிரகம் பார்த்த வீட்டின் பலன்
6. அக்கிரகத்தை பார்த்த கிரகத்தின் பலன்
7. அக்கிரகம் நின்ற நட்சத்திர அதிபன் நின்ற வீட்டின் பலன்

மேலே கொடுத்துள்ள வரிசையில் திருத்தம் அல்லது ஏதேனும் விடுபட்டு
இருந்தால் சரியாக தர வேண்டுகிறேன்.

வினா 6.
ராகு கேதுக்களின் தசா புக்தி பலன்களை எவ்வாறு நிர்ணயம் செய்வது ராகு
தசாவில் கேது புக்தி என்று வருகிறது இருவரும் தனியாக பாவங்களில் நின்று
தங்களது நட்சத்திரங்களில் மாறி அமர்ந்து உள்ளனர் சரியாக பலன் கூற
முடியவில்லை விளக்க முடியுமா.

வினா 7.
ஒரு கிரகத்தின் தசாவின் சுயபுக்தியில் பலனளிக்காது என்று ஜோதிடத்தில்
கூறப்பட்டுள்ளதே பலருக்கு சுயபுக்தி காலம் வருட கணக்கில் வரும் அந்த
காலகட்டங்களில் ஏற்படும் பலன்களை எவ்வாறு நிர்ணயம் செய்வது.

ஜெ தலைமையில் கூட்டணி ஆட்சி

அண்ணே வணக்கம்ணே!
தி.மு.க வட்டாரத்துக்கு குலை நடுக்கத்தை தரப்போற இந்த பதிவை வருத்தத்தோடதான் போடறேன். ஆனை படுத்தாலும் குதிரை மட்டங்கற மாதிரி கலைஞர் என்னதான் நொந்து கிடந்தாலும் , நோகடிச்சாலும் தாத்தா மேட்டர்ல ஒரு சாஃப்ட் கார்னர் இருக்கத்தான் செய்யுது. இன்னைக்கு ராத்திரி தாளி மஞ்ச துண்டை உதறிட்டு கருப்பு சால்வைய போட்டுக்கிட்டு பெட்டிப்படுக்கையோட “வீடு வரை உறவு – வீதி வரை மனைவி – காடு வரை பிள்ளை -கடைசி வரை மக்கள்”னு பாடிக்கிட்டே அறிவாலயத்துக்கு வந்து தங்கிட்டாருனு வைங்க.ஸ்டாலினா அழகிரியா தொண்டன் முடிவு செய்யட்டும்னு கட்சிக்குள்ள ஓட்டிங் அறிவிச்சுட்டாருனு வைங்க. இனி பெரியார் அண்ணா கொள்கைய பிரச்சாரம் பண்றதுதான் என் முழு நேர வேலைனு அறிவிச்சிட்டாருனு வைங்க.

சேப்பாக்கத்துலருந்து ஒண்டியா கெலிச்சாரே அந்த மாதிரி தோத்தாலும் அது வெற்றிதான்.வெற்றியை தவிர வேறில்லை. அதை விட்டுட்டு மானம்,மரியாதை எல்லாத்தயும் சோனியா ,ராகுல் காலடியில போட்டுட்டு எத்தீனி தகிடு தத்தம் பண்ணாலும் பல்பு வாங்கறது வாங்கறதுதான்.இங்கனதான் கிரகங்கள் நின்னு விளையாடுதுங்கோ.

ஏற்கெனவே ஜெயலலிதாம்மாவோட ஜாதகத்தை அனலைஸ் பண்ணி சக்ஸஸ்ஃபுல்லா அவிக வெற்றிய ப்ரிடிக்ட் பண்ணி அவிக கிட்டருந்து தேங்க்ஸ் கார்டு கூட (ராமர் கோவில்ல சுண்டல் கொடுத்தாப்ல – கும்பல்ல கோவிந்தா) வாங்கியிருக்கிற தைரியத்துல ஏற்கெனவே போட்ட இந்த பதிவை திருத்திய பதிவா இன்னைக்கு போடறேன்.

அம்மாவோட ஜாதகத்தையும், அவிக வாழ்க்கையையும் எந்தளவுக்கு அனலைஸ் பண்ணியிருக்கேனு அதை படிச்சா புரியும்.அதனால இந்த பதிவை சுருக்கமாவே போடறேன்.

அம்மாவோட ஜாதகம் :
மிதுனலக்னம், மக நட்சத்திரம்,சிம்மராசி. லக்னத்துக்கு ரெண்டாவது வீட்ல சனி, 3ல சந்திரன் செவ், அஞ்சுல கேது, 7ல குரு,9ல சூரிய,புதன், பத்துல சுக்கிரன், 11ல ராகு.

2011-ஃபிப்ரவரி 3 முதல்2012/8/3 வரை நடக்க உள்ள ராகு தசையிலான சந்திர புக்தி என்ன மாதிரியான பலனை தரும்னு இப்போ பார்ப்போம். தசா நாதனான ராகுவுக்கும், புக்தி நாதனான சந்திரனுக்கும் பகை கிடையாது. இவர் மிதுனத்துக்கு தன,வாக்கு,குடும்ப நேத்திரஸ்தானாதிபதி. இதனால அம்மாவோட லைஃபே ஏறினா ரயிலு இறங்கினா ஜெயிலு கணக்கா மாறிரும்.

சந்திரன் 3 ல நின்னு வளர்பிறைல பயத்தையும், தேய் பிறைல தைரியத்தையும் மாத்தி மாத்தி கொடுப்பாரு. மேலும் சந்திரன் கூட செவ்வாயும் சேர்ந்திருக்கிறதால அம்மாவோட பேச்சுல பொறி பறக்கும். (கருணா நிதி அண்ட் கோவுடைய மானமும் தான்)

செவ்வாய் 6,11 க்கு அதிபதியாகி வாக்குல நின்னதால தொண்டையே ரணமாகிற அளவுக்கு பேசுவாய்ங்க.

அவிக வாக்கு வளர்பிறைல சௌம்யமாவும், தேய்பிறைல ரௌத்ரமாவும் வரும். சில சமயம் தேவைக்கு குறைச்சலாவும், சில சமயம் தேவைக்கு அதிகமாவும் பேசுவாய்ங்க. டெசிபல்ஸும் இதே மாதிரி மாறும். மிமிக்ரி எல்லாம் பண்ணுவாய்ங்க பாருங்களேன்.

ஜாதகத்துல வாக்குல உள்ள சனி மிதுனத்துக்கு 8 க்கு அதிபதிங்கறதால அம்மாவோட வாக்கு கல்லடி,வக்கீல் நோட்டீஸ், சிறைவாசத்தை கூட பெற்றுத்தரலாம். அதே நேரம் அதே சனிக்கு பாக்யாதிபத்யமும் இருக்கிறதால ராஜயோகத்தையும் பெற்றுத்தரும்.

இப்படி பார்த்தா அவிக ராசியான சிம்மத்துக்கு வாக்குல சனி. ( 2011, டிசம்பர் 12 வரை) வாக்கு ஸ்தானத்துல (கோசாரம்) உள்ள சனி எதிரிகளை எப்படியெல்லாம் கொல்லாம கொல்லப்போகுதோ நினைச்சாலே குலை நடுங்குது.

அதே நேரம் கைக்கெட்டினது வாய்க்கெட்டலை கதையா போகவும் வாய்ப்பிருக்கு. அதனாலதான் கூட்டணி ஆட்சினு சேஃப் சைடாயிட்டன்.

சந்திரன் ஜல கிரகம். ஜலத்தோட நேச்சர் என்ன பள்ளத்தை நோக்கிபாயறது. அது மாதிரி அம்மா இறங்கி வந்து கூட்டணி எல்லாம் வைக்கப்போறாய்ங்க. அதே நேரம் சந்திரன் இன்ஸ்டெபிளிட்டிக்கு காரகர்ங்கறதால நிறைய இழு பறிகளுக்கு பிறவு அம்மா தலைமையில கூட்டணி மந்திரி சபையே அமையும். அதுவும் நித்ய கண்டம் பூர்ணாயுசா தான் இருக்கும்.

2012 ஆகஸ்டு, 3க்கு மேல ( ராகு தசை செவ் புக்தி, செவ் 3ல இருக்காரு) கவர்ன்மென்ட் ஓரளவு ஸ்டெடியாயிரும்.ஆனால் 2013 ஆகஸ்ட்,21 க்குள்ள அம்மா தன்னோட அதீத தைரியத்தால இடைத்தேர்தலுக்கு போனாலும் ஆச்சரிய பட மாட்டேன்.

அம்மாவுக்கு ஒரு வேண்டு கோள்:
போன தாட்டி கூரியர்ல அனுப்பினேன். தேங்க்ஸ் கார்ட் அனுப்பினிங்க. இந்த தாட்டி சொந்த சைட்ல போஸ்ட் பண்ணியிருக்கேன். சொன்னது ஒர்க் அவுட் ஆகி உங்க தலைமைல கூட்டணி ஆட்சி அமைஞ்சா நம்ம ஃபீஸை மட்டும் செட்டில் பண்ணிருங்க தாயீ..( 25000 பைசா – அதாங்க ரூ 250)

ஜெ தலைமையில் கூட்டணி ஆட்சி நிச்சயம்


அண்ணே வணக்கம்ணே!
தி.மு.க வட்டாரத்துக்கு குலை நடுக்கத்தை தரப்போற இந்த பதிவை வருத்தத்தோடதான் போடறேன். ஆனை படுத்தாலும் குதிரை மட்டங்கற மாதிரி கலைஞர் என்னதான் நொந்து கிடந்தாலும் , நோகடிச்சாலும் தாத்தா மேட்டர்ல ஒரு சாஃப்ட் கார்னர் இருக்கத்தான் செய்யுது. இன்னைக்கு ராத்திரி தாளி மஞ்ச துண்டை உதறிட்டு கருப்பு சால்வைய போட்டுக்கிட்டு பெட்டிப்படுக்கையோட “வீடு வரை உறவு – வீதி வரை மனைவி – காடு வரை பிள்ளை -கடைசி வரை மக்கள்”னு பாடிக்கிட்டே அறிவாலயத்துக்கு வந்து தங்கிட்டாருனு வைங்க.ஸ்டாலினா அழகிரியா தொண்டன் முடிவு செய்யட்டும்னு கட்சிக்குள்ள ஓட்டிங் அறிவிச்சுட்டாருனு வைங்க. இனி பெரியார் அண்ணா கொள்கைய பிரச்சாரம் பண்றதுதான் என் முழு நேர வேலைனு அறிவிச்சிட்டாருனு வைங்க.

சேப்பாக்கத்துலருந்து ஒண்டியா கெலிச்சாரே அந்த மாதிரி தோத்தாலும் அது வெற்றிதான்.வெற்றியை தவிர வேறில்லை. அதை விட்டுட்டு மானம்,மரியாதை எல்லாத்தயும் சோனியா ,ராகுல் காலடியில போட்டுட்டு எத்தீனி தகிடு தத்தம் பண்ணாலும் பல்பு வாங்கறது வாங்கறதுதான்.இங்கனதான் கிரகங்கள் நின்னு விளையாடுதுங்கோ.

ஏற்கெனவே ஜெயலலிதாம்மாவோட ஜாதகத்தை அனலைஸ் பண்ணி சக்ஸஸ்ஃபுல்லா அவிக வெற்றிய ப்ரிடிக்ட் பண்ணி அவிக கிட்டருந்து தேங்க்ஸ் கார்டு கூட (ராமர் கோவில்ல சுண்டல் கொடுத்தாப்ல – கும்பல்ல கோவிந்தா) வாங்கியிருக்கிற தைரியத்துல ஏற்கெனவே போட்ட இந்த பதிவை திருத்திய பதிவா இன்னைக்கு போடறேன்.

அம்மாவோட ஜாதகத்தையும், அவிக வாழ்க்கையையும் எந்தளவுக்கு அனலைஸ் பண்ணியிருக்கேனு அதை படிச்சா புரியும்.அதனால இந்த பதிவை சுருக்கமாவே போடறேன்.

அம்மாவோட ஜாதகம் :
மிதுனலக்னம், மக நட்சத்திரம்,சிம்மராசி. லக்னத்துக்கு ரெண்டாவது வீட்ல சனி, 3ல சந்திரன் செவ், அஞ்சுல கேது, 7ல குரு,9ல சூரிய,புதன், பத்துல சுக்கிரன், 11ல ராகு.

2011-ஃபிப்ரவரி 3 முதல்2012/8/3 வரை நடக்க உள்ள ராகு தசையிலான சந்திர புக்தி என்ன மாதிரியான பலனை தரும்னு இப்போ பார்ப்போம். தசா நாதனான ராகுவுக்கும், புக்தி நாதனான சந்திரனுக்கும் பகை கிடையாது. இவர் மிதுனத்துக்கு தன,வாக்கு,குடும்ப நேத்திரஸ்தானாதிபதி. இதனால அம்மாவோட லைஃபே ஏறினா ரயிலு இறங்கினா ஜெயிலு கணக்கா மாறிரும்.

சந்திரன் 3 ல நின்னு வளர்பிறைல பயத்தையும், தேய் பிறைல தைரியத்தையும் மாத்தி மாத்தி கொடுப்பாரு. மேலும் சந்திரன் கூட செவ்வாயும் சேர்ந்திருக்கிறதால அம்மாவோட பேச்சுல பொறி பறக்கும். (கருணா நிதி அண்ட் கோவுடைய மானமும் தான்)

செவ்வாய் 6,11 க்கு அதிபதியாகி வாக்குல நின்னதால தொண்டையே ரணமாகிற அளவுக்கு பேசுவாய்ங்க.

அவிக வாக்கு வளர்பிறைல சௌம்யமாவும், தேய்பிறைல ரௌத்ரமாவும் வரும். சில சமயம் தேவைக்கு குறைச்சலாவும், சில சமயம் தேவைக்கு அதிகமாவும் பேசுவாய்ங்க. டெசிபல்ஸும் இதே மாதிரி மாறும். மிமிக்ரி எல்லாம் பண்ணுவாய்ங்க பாருங்களேன்.

ஜாதகத்துல வாக்குல உள்ள சனி மிதுனத்துக்கு 8 க்கு அதிபதிங்கறதால அம்மாவோட வாக்கு கல்லடி,வக்கீல் நோட்டீஸ், சிறைவாசத்தை கூட பெற்றுத்தரலாம். அதே நேரம் அதே சனிக்கு பாக்யாதிபத்யமும் இருக்கிறதால ராஜயோகத்தையும் பெற்றுத்தரும்.

இப்படி பார்த்தா அவிக ராசியான சிம்மத்துக்கு வாக்குல சனி. ( 2011, டிசம்பர் 12 வரை) வாக்கு ஸ்தானத்துல (கோசாரம்) உள்ள சனி எதிரிகளை எப்படியெல்லாம் கொல்லாம கொல்லப்போகுதோ நினைச்சாலே குலை நடுங்குது.

அதே நேரம் கைக்கெட்டினது வாய்க்கெட்டலை கதையா போகவும் வாய்ப்பிருக்கு. அதனாலதான் கூட்டணி ஆட்சினு சேஃப் சைடாயிட்டன்.

சந்திரன் ஜல கிரகம். ஜலத்தோட நேச்சர் என்ன பள்ளத்தை நோக்கிபாயறது. அது மாதிரி அம்மா இறங்கி வந்து கூட்டணி எல்லாம் வைக்கப்போறாய்ங்க. அதே நேரம் சந்திரன் இன்ஸ்டெபிளிட்டிக்கு காரகர்ங்கறதால நிறைய இழு பறிகளுக்கு பிறவு அம்மா தலைமையில கூட்டணி மந்திரி சபையே அமையும். அதுவும் நித்ய கண்டம் பூர்ணாயுசா தான் இருக்கும்.

2012 ஆகஸ்டு, 3க்கு மேல ( ராகு தசை செவ் புக்தி, செவ் 3ல இருக்காரு) கவர்ன்மென்ட் ஓரளவு ஸ்டெடியாயிரும்.ஆனால் 2013 ஆகஸ்ட்,21 க்குள்ள அம்மா தன்னோட அதீத தைரியத்தால இடைத்தேர்தலுக்கு போனாலும் ஆச்சரிய பட மாட்டேன்.

அம்மாவுக்கு ஒரு வேண்டு கோள்:
போன தாட்டி கூரியர்ல அனுப்பினேன். தேங்க்ஸ் கார்ட் அனுப்பினிங்க. இந்த தாட்டி சொந்த சைட்ல போஸ்ட் பண்ணியிருக்கேன். சொன்னது ஒர்க் அவுட் ஆகி உங்க தலைமைல கூட்டணி ஆட்சி அமைஞ்சா நம்ம ஃபீஸை மட்டும் செட்டில் பண்ணிருங்க தாயீ..( 25000 பைசா – அதாங்க ரூ 250)