சுஜாதாவின் சில படைப்புகள் குறித்து காட்டமான விமர்சங்களை முன் வைத்தவன் நான்.

சுஜாதாவின் சில படைப்புகள் குறித்து காட்டமான விமர்சங்களை முன் வைத்தவன் நான். ஜோதிடம் குறித்து போகிற போக்கில் அவர் சொன்ன கருத்துகளை கண்டித்தவ‌ன் ,கிண்டலடித்தவன். ஆனாலும் அவரது பெரும்பாலான படைப்புகள் (கனவு தொழிற்சாலை,அன்று உன்னருகில்,வைரங்கள் முதலானவை) எனக்கு இன்றுவரை கூட இன்ஸ்பிரேஷனாக இருப்பதை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். இது சம்பிரதாயமான மரண அஞ்சலி அல்ல . என் உயிரிலிருந்து வரும் கருத்து. நாட்டு பொருளாதாரம்,அரசியல்,சினிமா குறித்த அவரது விமர்சனங்கள் கூட எனக்கு சம்மதமே. ஆனால் பொருளாதார வளர்ச்சிக்கு அவர் கூறியுள்ள ‘சில’ தீர்வுகள் எனக்கு சம்மதமில்லாமலிருக்கலாம்.

அதே நேரத்தில் சமூகம்,பொருளாதாரம்,அரசியல் குறித்த குறைந்த பட்ச விழிப்புணர்ச்சி கூட இல்லாத தத்து,பித்து பிராமண குழுவில் சுஜாதா மிகவும் வித்யாசமாக சிந்தித்தார். எழுதினார். தமிழ் நவீன படைப்பியலில் சுஜாதாவின் முத்திரை மறுக்க முடியாதது. இன்று வரை கூட நான் உட்பட ஆயிரக்கணக்கான இளைய படைப்பாளிகளின் எழுத்தில் அவரது பாதிப்பு இருப்பதை நினைத்து பார்க்கிறேன். பாரத பீஷ்மர் போல் தான் சார்ந்திருந்த குழுவின் கட்டாயங்களுக்கு,ஃபோபியாக்களுக்கு (உ.ம் இட ஒதுக்கீடு எதிர்ப்பு ) சுஜாதா அடி பணியாதிருந்திருந்தால் அவரது எழுத்து நிச்சயம் ஒரு ஒட்டு மொத்த புரட்சிக்கு அடிகோலி சரித்திரம் படைத்திருக்கும்.

பல்லாயிரம் சிற்றிதழ்களையும்,புதிய படைப்பாளிகளையும் மாஸ் மீடியாவுக்கு அறிமுகம் செய்த,புலமைக்காய்ச்சல் தீண்டாத அன்னாரின் ஆன்மா சாந்தி அடைவதாக!

இனியாவது மத்திய ,மாநில,அரசுகள் சுஜாதா சமூக அக்கறையுடன் தெரிவித்த யோசனைகளையும்,திட்டங்களையும்(கலைச்சொல்லாக்கம்,தமிழ் எழுதுகருவிகள் முதலானவை) உபயோகித்துக்கொண்டால் நல்லது.

தமிழ் நாளிதழ்களின் வளர்ச்சிக்கு சில யோசனைகள்

க‌ன்ச‌ல்ட‌ன்ட்:
1999 முதலே பல்வேறு நிறுவங்களின் வளர்ச்சிக்கு யோசனைகள் தந்து,விளம்பரங்கள் வடிவமைத்து தந்து பணமும் பரிசும் பெற்ற சேல்ஸ் ப்ரமோஷன் கன்ஸல்டன்ட் என்றவகையில் தமிழ் நாளிதழ்களின் வளர்ச்சிக்கு என் யோசனைகளை முன் வைக்கிறேன்.

1. நிர்வாகத்தில் சிவப்பு நாடாத்தனம்,முடிவெடுப்பதில் தயக்கம் ,தாமதம் கூடவே கூடாது. நிருபர்கள் அனுப்பும் ந்யூஸ் கவர் பிக் அப் செய்யும் ஆஃபீஸ் பையனில் கூட தன்னம்பிக்கை,முடிவெடுக்கும் திறமை,சிக்கல்களை சமாளிக்கும் திறமை இருக்க‌ வேண்டும். இல்லாவிட்டால் லொள்ளுதான்
2.போன்,செல்,மெயில் இத்யாதி இருக்கையில் கூட செய்திகளை அடிச்சு அனுப்புவோம்,/ லெட்டர் டைப்படிச்சு அனுப்புவோம் என்ன சொல்றாங்க பார்ப்போம் போன்ற வார்த்தைகள் ஒலிக்கவே கூடாது . இதை கட்டுப்படுத்தினால் நிர்வாகத்தில் இன்னும் வேகம் கூட்டப்படும், போட்டியாளர்களை மேலும் திறமையுடன் எதிர்கொள்ளலாம்.

2.ஊழியர்களுக்கு பணிப்பாதுகாப்பு என்பது முக்கியம்தான். ஆனால் திறமையற்ற ஊழியர்களை கண்டறிந்து உரிய பயிற்சியோ,கல்தாவோ கொடுத்து சுத்தப்படுத்தினாலன்றி நிறுவனம் வேகமாக செயல்பட முடியாது. தேவைப்பட்டால் அனைத்து நிருபர்,செய்தி ஆசிரியர்கள் ,விளம்பர ஏஜெண்டுகளுக்கும் அவர்களின் திறமையை மறு பரிசீலனை செய்ய மறு தேர்வு ஒன்றை நடத்தினாலும் நலமே! தேர்வில் த‌வ‌றுப‌வ‌ர்க‌ளுக்கு 3 மாத‌ம் வ‌ரை டைம் கொடுத்து ம‌று தேர்வு நிக‌ழ்த்திப்பார்க்க‌லாம். அதிலும் த‌வ‌றினால் க‌ல்தா கொடுக்க‌ப்ப‌ட‌ வேண்டும்.

3.நிறுவனத்துக்கு சொந்தமான கம்ப்யூட்டர்களின் ராம் ரொம்ப குறைவாக இருக்கும். இதனாலும் பணிகளில் தாமதம் குழப்பம் ஏற்படும். முடிந்தவரை எல்லாகிளைகளிலும், அனைவருக்குமே கணிணி அறிவு இருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும். மேலும் நிர்வாக‌த்தில் வேலைக‌ளை பிரித்திருப்ப‌து நிர்வாக‌ வ‌ச‌திக்குத்தானே த‌விர‌ இன்னார் இன்ன‌ வேலைக‌ளைத்தான் செய்ய‌ வேண்டும், வேறு வேலைக‌ளை செய்ய‌க்கூடாது என்ப‌த‌ற்காக‌ அல்ல‌. செய்தித்துறை என்ப‌து அத்யாவ‌சிய‌ பிரிவில் வ‌ருவ‌தாகும். இதில் ப‌ணிபுரிப‌வ‌ர்க‌ள் யாராயிருந்தாலும் எந்த‌ வேலையானாலும் செய்தாக‌வேண்டும். என‌வே அனைவ‌ருக்கும் அனைத்து வேலைக‌ளிலும் கு.ப‌. அறிமுக‌மாவ‌து இருக்க‌ வேண்டும்.

4.ஐயா ஆதித்தனார் அவர்கள் எழுதிய இதழாளர் கையேடு நூலில் உள்ள சில விசயங்கள் காலப்போக்கில் தேவையற்றவையாகிவிட்ட நிலையில் அதை அடிப்படையாக கொண்டு ,அப்டேட் செய்து அந்த நூலின் அடிப்படையில் ஒரு தேர்வையும் நடத்தினால் நல்லது. சோகம் என்ன வென்றால் இதழாளர் கையேட்டில் ஐயா கூறியுள்ள , இன்றைக்கும் பொருந்தக்கூடிய விசயங்களை கூட நிருபர்கள் பின்பற்றுவதில்லை.

5.தமிழ் நாளிதழ் ஊழியர்கள் பலரிலும் ஒருவிதஅசமஞ்சத்தனம் உள்ளது. (மிஞ்சி போனால் ட்ரான்ஸ்பர் தானே என்ற எண்ணம்) இவர்கள் 1970 களிலேயே தேங்கி விட்டுள்ளனர். இடைக்காலத்தில் ஜர்னலிசம் முழுமையாகமாறிவிட்டுள்ளது. நேற்று நடந்தது இரவு 11 மணிக்கு டி.வி.யிலேயே பார்த்து விடுகிறார்கள். இன்னமும் போலீசார் கூறியதாவது என்றுதான் ஜூனியர் விகடனில் கூட‌ செய்தி எழுதுகிறார்கள். வாசகன் போலீசார் கூறும் கட்டுக் கதைகளை கேட்டு திருப்தியடையும் நிலையில் இல்லை. என‌வே போலீசார் பார்வைக்கு செல்லாத‌ விச‌ய‌ங்க‌ளை கூட‌ நிருப‌ர்க‌ள் வாச‌க‌ர்க‌ளுக்கு துப்ப‌றிந்து தெரிவிக்க‌ வேண்டும். அப்போதுதான் போட்டியை ச‌மாளிக்க‌ முடியும்.

6.என்னைக்கேட்டால் புதியதலைமுறையை நிறுவனத்துக்குள் கொண்டுவரவேண்டும். அதே போல் தற்போதுள்ளதலைமுறைக்கு கணிணி, மாறிவிட்டஜர்னலிசம் குறித்தபயிற்சியை அளிக்கவேண்டும். புதுமையும்,பழமையும் கை கோர்க்கவேண்டும். நிருபர்கள் யூனிகோட் தமிழ் தட்டச்சு கற்றுக் கொண்டுவிட்டால் அவரவர் இருந்தஇடத்திலிருந்தே செய்திகளை அனுப்பலாம்.(இதற்கு டெப்போ,கணிணி இத்யாதி தேவையில்லை தெருத் தெருவுக்கு இன்டர் நெட் சென்டர்கள் உள்ளன. நிருபர்கள் எழுதியதை செய்தி ஆசிரியர்கள் மீண்டும் எழுதுவதை விடதட்டச்சப்பட்டமேட்டரை கணிணியில் எடிட் செய்வது எளிது. இதனால் லேட் நைட் செய்திகளை கூடசேர்த்து வெளியிடவாய்ப்பு ஏற்படும். அந்தந்த நாளிதழ்களே ஸ்கூல் ஃபார் ஜர்னலிசம் ஒன்றை ஏற்படுத்தி தபால் மூலம் பயிற்சி அளித்து தேருபவர்களை அப்ரண்டிஸாக எடுத்து உபயோகிக்கலாமே.

7. ஆந்திரத்தில் பத்திரிக்கைகள் ரயில் மூலம் ,பஸ் மூலம் அனுப்புவதை நிப்பாட்டி பலகாலம் ஆகிறது.ஒப்பந்தஅடிப்படையில் தனியார் வாகனங்களில் தான் அனுப்புகிறார்கள். இதனால் தமிழ் பத்திரிக்கைகளில் ரயில் நேரத்துக்கு பக்கம் முடிக்கவேண்டியதலையெழுத்து இன்றும் இருக்கிறது.

8.மாவட்டஸ்பெஷல்கள் தெலுங்கு தினசரியில் சக்கை போடு போடுகின்றன. மெயினில் பாதி சைஸ் உள்ளஇந்தஸ்பெஷல்கள் 16 பக்கங்கள் வரை வெளியாகி வாசகர்களின் பேராதரவை பெற்றுள்ளன. மாவ‌ட்ட செய்திகளை கூட‌ ம‌ண்ட‌ல‌ம் வாரியாக‌ பிரித்து வெளியிடுகிறார்க‌ள். இத‌னால் குட்டித்த‌லைவ‌ர்க‌ளின் செய்திக‌ளுக்கும் இட‌ம் கிடைப்ப‌தோடு ,விள‌ம்ப‌ர‌ வ‌ருவாயும் பெருகும‌ல்லவா !

புகைப்படங்கள்:
தமிழ் நாளிதழ்களில் பிரசுரமாகும் படங்கள் போட்டோகிராஃபர் எடுத்தது எடுத்தபடியே வெளிவருகின்றன. அதை எடிட் செய்வதே இல்லை. கூட்டத்தை பெரிதாக காட்டி பேசும் தலைவரை உள்படத்தில் வைத்தல்,விபத்து காட்சியை பெரிதாக காட்டி காயமுற்றவரை உள்படத்தில் வைத்தல், ஒரே தலைவரிடம் பலர் பரிசு பெற்றால் தலைவர் படத்தை 1/8 பாகத்தில் வைத்து பரிசு பெற்றவர்களின் படத்தை 7/8 பாகத்தில் வரிசையாக வைக்கலாம். இதையெல்லாம் ஏன் செய்வதில்லையோ புரியவில்லை.

லே அவுட்:

லெட்டர் பிரஸ் கால‌த்தை போல் காலம் பிரித்து விடுகிறார்களே தவிர (மெயின் எடிஷன்) லே அவுட் என்பதே இல்லை. இண்டியா டுடேவில் போல தலைவர் கொலை இத்யாதி நடந்த போது கிராஃபிக்ஸ் படங்களை உபயோகிக்கலாமே. சிறப்பு பகுதிகள் போலவே மெயின் எடிஷனையும் லே அவுட் செய்து வெளியிட்டால் சூப்பராக இருக்கும்.

தமிழில் அடிப்படையே தகராறு:
மேலும் செய்திகளில் அசிங்க‌மான‌ எழுத்துப்பிழைக‌ள்,படிக்காதவன் கூட கண்டுபிடித்துவிடுமத்தனை இலக்கணப்பிழைகள் இடம் பெற்றுவிடுகின்றன. சொல் குற்றம்,பொருள் குற்றமும் அதிகம். நிருபர்களுக்கும்,செய்தி ஆசிரியர்களுக்கும் குறைந்த பட்சம் தமிழில் அடிப்படை அறிவையாவது கொடுத்தே ஆகவேண்டும்.

ஊழியர் தோற்றம்:

அலுவலக ஊழியர்கள்,நிருபர்கள்,செய்தி ஆசிரியர்கள் தோற்றப்பொலிவிலும் கவனம் செலுத்தியாக வேண்டும். எலக்ட்ரானிக் மீடியாவுடன் போட்டியிட வேண்டிய நிலை இருப்பதால் இது மிக அவசியமாகிறது. சீருடை அணிந்தாலும் நல்லதே. ஒரு நிருபன் தான் பத்திரிக்கை பெயரை மக்களிடையே எடுத்து செல்பவன் , செலவில்லாத ஹோர்டிங் என்பதை நினைவில் வைத்து யோசிக்கவும்

குறிப்பு:
என் யோச‌னைக‌ளை பின்ப‌ற்றும் நாளித‌ழ் அதிப‌ர்க‌ள்,ஆசிரிய‌ர்க‌ள் என‌க்கு 50 பைசா கார்டில் ஒரு ந‌ன்றி தெரிவித்தால் ம‌கிழ்வேன். என‌து விலாச‌ம்

எஸ்.முருகேச‌ன் (எ) முருக‌ன்,
7/85, பாணாலா தெரு,
சித்தூர் ஆந்திர‌மாநில‌ம்
517001
posted by chittoor.S.Murugeshan @ 7:09 AM

கடுப்பேற்றுவது என்றால்?

கடுப்பேற்றுவது என்றால்?

நான் தினத்தந்தி நிருபன் என்பது தங்களுக்கு தெரிந்தே இருக்கும். ப்ரசிடென்ட் ஆஃப் இண்டியா என்று சொல்லும் ரேன்ஜில் பலமுறை பல பதிவுகளில் சொல்லியிருப்பேன். 27 ஆம் தேதி தர்ணா நடத்துவதாய் ஒரு சாதியினர் 24 ஆம் தேதி அறிவித்தனர்.(பிரஸ் மீட் வைத்து). அந்த சாதியில் ஒரு இளைஞர் தினத்தந்தியில் விளம்பரதாரர். என் க்ளாஸ் மேட், என் அண்ணனுக்கு ஃப்ரண்டு எல்லாம் ஓகே. பிரஸ் மீட் நடந்த அன்று அவர் எனக்கு போன் செய்து “பார்த்துக்க முருகா” என்றார், ரொம்ப ஜோவியலாய்.

நானும் சென்றேன். செய்தி எழுதினேன் . தந்தியில் வரவில்லை. மறுநாள் வரும் என்று சமாளித்தேன். மறுநாளும் வரவில்லை. ( அய்யா ஆதித்தனார் எழுதிய இதழாளர் கையேட்டில் ஒரு விதி இருக்கிறது. பேச்சு செய்தியாகாது. தர்ணா நடக்கட்டும் போடலாம் என்று கூட முடிவு செய்திருக்கலாம்.) நானும் 4 முறை ரிமைண்ட் செய்தேன். எடிட்டர் டெஸ்க்ல பலானவர் இருப்பார்,நான் சொன்னேன்னு சொல்லுங்க என்றார், சொன்னேன். எல்லாம் ஆச்சு.

இதெல்லாம் லொள்ளு சமாச்சாரம் என்று முதலிலேயே தெரியும். அதனால் செய்தியை ஃபேக்ஸ் செய்துவிட்டு ரசீது,மேட்டரை அந்த இளைஞரின் டேபிளுக்கே அனுப்பிவிட்டேன்.

இந்த நிலையில் அதே சாதியை சேர்ந்த ஒரு பிரமுகர், எனக்கு டயல் செய்துவிட்டு பக்கத்திலிருக்கும் நபரிடம் பேசுகிறார்.” இந்த பத்திரிக்கைகார பயலுவளுக்கு ஒரு ஃபுல்,ஒரு பிரியாணி பொட்டலம் ஏற்பாடு பண்ணிரனும்பா , ….கிட்ட சொல்லிருங்க” (நான் சொன்ன விளம்பர தாரர்)

க‌டுப்பேற்றுவ‌து என்றால் இதுதான் போலும்.

ஃபுல்லும்,பிரியாணியும் எத்தனை பேருக்கு,எத்தனை முறை போட்டார்,போட்டு எழுத‌வைத்து இவ‌ர் என்ன‌த்தை கிழித்தார். இவ‌ர் க‌தை நீண்ட‌ க‌தை.

ஒரு ச‌ம‌ய‌ம் காசாவ‌து இருந்த‌து. இப்போ அந்த‌ …ம் கிடையாது.” நா காக்க‌” என்று வ‌ள்ளுவ‌ர் சொன்ன‌து இது மாதிரி பார்ட்டிக‌ளுக்காக‌த்தான் போலும்.

அப்புற‌ம் பாருங்க‌ ..ம‌றுப‌டி ட‌ய‌ல் ப‌ண்ணி ராஜா ..க‌ண்ணுனு பேசுது பார்ட்டி.

இந்த‌ பார்ட்டியோட‌ க‌தையை நிச்ச‌ய‌ம் அடுத்த‌ ப‌திவுல‌ எழுதியே தீர்ர‌ன். இது மாதிரி கேர‌க்ட‌ர் எல்லா ஊர்ல‌யும் ஒன்னு இருக்கு.

வெளியாகும் படைப்புகளுக்கு குமுதம் பத்திரிக்கை கூட சன்மானம் தந்ததில்லை

பத்திரிக்கைகளில் வெளியாகும் படைப்புகளுக்கு சன்மான (90 சதவீதம்) தரப்படுவதில்லை என்பது உங்களுக்கு தெரியுமா? சிற்றிதழ்கள் என்றில்லை குமுதம் பத்திரிக்கை கூட சன்மானம் தந்ததில்லை.(ஒரு தரம் ஜெயலலிதா அட்டை போட்ட குமுதம் இதழில்/1993 என்று ஞா. நான் எழுதிய ஜோக் ஒன்று பிரசுரமானது. அது வருமாறு:

” ஏண்டா மூட்டைப்பூச்சிக்கு அந்த பேர் வந்தது?”
“உனக்கு கூடத்தான் அறிவழகன்னு பேர் வச்சிருக்காங்க அதுக்கு என்ன பண்றது”

இந்த ஜோக்குக்கு எனக்கு சன்மானமே அனுப்பலை. இவன் என்ன ஆங்கிலேயர் காலத்துல மாதிரி லட்சியத்துக்கா நடத்த‌றான் என்று எரிச்சலாகி சன்’மானம்’ கேட்டு கார்டு ஒன்று தட்டி விட்டேன். அதிலிருந்து என் படைப்புகள் குமுதத்தில் பிரசுரமாவதில்லை.

எனக்கு ஒரு சம்சயம் பத்திரிக்கைகளில் துணுக்கு,ஜோக் எழுதும் நபர்கள் சன்மானம் எதிர்பாராது, தர்மத்துக்கு எழுதுகிறார்களா என்று.

அதே மாதிரி சன்மானம் கேட்காத நபர்களின் படைப்புகளை மட்டும் ஆசிரியன் கள் தேர்வு செய்கிறான்க‌ளா என்றும் மற்றொரு சம்சயம்.

நீங்கள் காணும் இந்த வித்யாசங்கள் கதையும் தர்ம கேசு தான்.

கெட்டவனுக்கு கடவுளை கெட்டவனாக்கனும்னா

ஆன்மீகம் கூட ஒரு விஞ்ஞானமே..நான் ஒரு ஆராய்ச்சியாளன்.

1967 ல் பிறந்த நான் 1984 வரை தந்தை,மற்றும் அண்ணன் மார்களால் வளர்க்கப்பட்டேன். 1984 முதல் 1986 வரை எப்படி எப்படியோ வாழ்ந்தேன்..1986 முதல் இப்படித்தான் வாழ வேண்டும் என்று உணர்ந்தேன். அந்த ஆதர்ஸ் வாழ்வுக்கு தொடர்ந்து முயன்று வருகிறேன். இதற்கு உதவி அனுமனும் அவன் இடைவிடாது ஜபிக்கும் அண்ணலின் கன்னலொத்த” ராம்” என்ற நாமமும் தான்.

நான் யோகியோ,சுவாமிஜியோ அல்லன். இன்றளவும் ஒருவித வெள்ளோட்டமாகவே தான் என் பக்தி பயணம் தொடர்கிறது. இந்த வெள்ளோட்டத்திலேயே உள்ளங்க பீட்ஸா போல் தெள்ளென புரிகிறது.

இறை சக்தியிருக்கிறது. அது கேட்கிறது,பேசுகிறது. அதை அகந்தை மறைக்கிறது. தன்னம்பிக்கை என்ற பெயரில் அது சுதி தவறி அகந்தையாகிவிட முற்றிலும் அழிந்த நான் அதன் ஆபத்தை முழுக்க உணர்ந்துவிட்டதால் அது ” முருகேசா ! உன் உள்ளத்துல வந்து உட்கார்ந்து ஒரு தம் போட்டுட்டு உடனே ஓடிர்ரன் ” என்று கெஞ்சி கூத்தாடினாலும் நோ என்ட்ரி போர்டு போட்டு வைத்துவிட்டேன்.

இதனால் எதிர்காலம் என் (ஞான) கண் முன் விரிகிறது, இறை சக்தியின் படம் வரைந்து பாகங்கள் குறிக்குமத்தனை “திமிர்” பிறக்கிறது. அந்த திமிரால் நான் கண்டுகொண்ட ஒரே ஒரு ரகசிய விதியை பகிரங்கப் படுத்துகிறேன்.

“கெட்டவங்க உங்களுக்கு கெட்டது பண்ணா , அவங்களுக்கு நீங்களும் கெட்டது பண்ண முயற்சி பண்ணா கடவுள் நியூட்ரலாயிருவார். கெட்டவனுக்கு கடவுளை கெட்டவனாக்கனும்னா நாம கெட்டவனுக்கு கெட்டதை நினைக்கக் கூட கூடாது. அட் லீஸ்ட் செய்யக்கூடாது ..இப்படி 9 நாள் விட்டா போதும் கெட்டவனுக்கு ,கடவுள் கெட்டவனாகி வெண்ணை எடுத்துருவார்”

இது என் கண்டுபிடிப்பு மட்டுமல்ல ..அனுபவமும் கூட‌

எம்.எல்.ஏ தூக்கிட்டு வாங்கடா என்றார் நான் எம்.எல்.ஏ. வை மிரட்டினேன்!

எம்.எல்.ஏ தூக்கிட்டு வாங்கடா என்றார் நான் எம்.எல்.ஏ. வை மிரட்டினேன்!

இப்போது நான் சொல்லப் போகும் விஷயங்களை நம்பவே முடியாது. ஆனால் அட்சர சத்தியம். இதற்கெல்லாம் நான் காரணமோ பொறுப்போ அல்ல ..யாவும் தெய்வாதீனம்.

இந்தியாவை பணக்கார நாடாக்க நான் திட்டம் தீட்டியதும்,சந்திரபாபுவுக்கு அனுப்பியது,அவர் அதை 5 வருடம் கிடப்பில் போட்டது,பதில் தர தபால் செலவுக்கு நான் ரூ 10 எம்.ஓ அனுப்பியது ,பிறகு கன்ஸ்யூமர் கோர்ட்டில் வழக்கு போட்டது,பத்திரிக்கைகள் மூலம் வழக்கு விவரம் அறிந்த சந்திரபாபு என் திட்டத்தை உரிய வகையில் உபயோகித்துக் கொள்வதாய் கடிதம் போட்டது / இந்த விசயமெல்லாம் தங்களுக்கு ஓரளவு தெரிந்திருக்கலாம்.(என் பதிவுகள் மூலம்)

என்.டி,ஆர் சிங்கம். சந்திரபாபு நரி. முதலில் என்.டி.ஆருக்காக நரி வேலைகள் செய்தார்.பின்பு என்.டி.ஆருக்கே நரி வேலை காட்டி அல்வா கொடுத்து முதலில் வீட்டுக்கும்,பின் எமப்பட்டணத்துக்கும் அனுப்பிய நரி சந்திரபாபு. அவர் 4 காலையும் தூக்கி,கடிதம் போட்ட உடனேயே எனக்குள் புளி கரைக்க ஆரம்பித்து விட்டது.(ரசம் வைக்க இல்லிங்க)

முதல்வர் அலுவலகத்திலிருந்தே மாவட்ட அரசு இயந்திரத்துக்கு நான் சப்மிட் செய்யும் எந்த வித மனு,புகார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படக்கூடாது என்று குறிப்பு கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். என்னதான் காந்தி,நேரு என்று இமேஜ் இருந்தாலும் எனக்குள்ளும் ஒரு ரஜினி இருக்கிறார். என்னை ரொம்பவே கடுப்படிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

என்னுடன் வந்து கொடுத்தார்கள் என்ற ஒரே காரணத்திற்காக ஒரு மிஸ்ஸிங் கம்ப்ளெயிண்ட் மீது நடவடிக்கை எடுக்க 6 மாதம் பிடித்தது. அதுவும் மனித உரிமைகள் கமிஷன் உத்தரவு பிறப்பித்த பிறகு.

ச‌ந்திர‌பாபு இடைத்தேர்த‌லுக்கு திட்ட‌மிட்டு ரேஷ‌ன் கார்டுக‌ளை அள்ளிவிட‌ உத்த‌ர‌விட்டார். ஊரில் ல‌ட்சாதிப‌தி,கோடீஸ்வ‌ர‌ன் எல்லாம் அரிசி கார்டு வாங்கிக் கொண்டிருக்க‌, ப‌ஞ்சை ப‌ராரியான‌ என‌க்கு அல்வா கொடுத்து விடுவார்க‌ளோ என்ற‌ அய்ய‌ம். அதுவும் ரேஷ‌ன் கார்டு என்ப‌து நாய்க்கு லைசென்ஸ் மாதிரி ஆகிவிட்ட‌ கால‌க‌ட்ட‌த்தில் நாட்டுக்காக‌ நாயாய் உழைக்கும் என‌க்கு கார்டு ம‌றுக்க‌ப் ப‌ட‌வே க‌டுப்பாகிவிட்டேன்.

எம்.ஆர்.ஓ வை பிடித்து எகிறினேன்.(1991 ந‌வ‌ம்ப‌ரில் காத‌ல் க‌டிம‌ண‌ம் கொண்ட‌ உட‌னேயே கார்டுக்கு ப‌திவு செய்த‌வ‌ன் நான். 2004 ல் கூட‌ ம‌றுத்தால் எப்ப‌டியிருக்கும்)
கோர்ட்டுக்கு போவேன் என்று மிர‌ட்டினேன். “அட‌ போய்யா” என்றார் அவ‌ர்.

கோர்ட்டுக்கு போக‌ ஆட்டோவுக்கே காசில்லாத‌ நான் வ‌க்கீல் பார்த்து ,வ‌ளைக்காப்பு ந‌ட‌த்துவ‌தெல்லாம் ந‌ட‌க்கிற‌ விஷ‌ய‌மா? லோக் அதால‌த்துக்கு த‌ட்டினேன் ஒரு புகார்.

அப்போது யாரோ க‌வுடு தான் மாவ‌ட்ட‌ நீதிப‌தி. பாவ‌ம் ம‌னுச‌ன் எங்கிருந்தாலும் வாழ்க‌ ரொம்ப‌வே ந‌க்க‌ல‌டித்தாலும் ” கார்ட் கொடுத்துருங்க‌ப்பா’ என்று க‌லெக்ட‌ருக்கு ஒரு க‌டித‌ம் அனுப்பினார், க‌லெக்ட‌ர் எம்.ஆர்,ஓ வை காய்ச்சினார். எம்.ஆர்.ஓ எம்.எல்.ஏ விட‌ம் ஓடி புகார் செய்தார்.

எம்.எல்.ஏ வுக்கு என்னை தெரியும். ப்ரைவேட் எலெக்ட்ரிக்க‌ல் வைர்மேன் ச‌ங்க‌ பி.ஆர்.ஓ வாக‌. உட‌னே சேர்ம‌னுக்கு போட்டார் போனை. ” எங்க‌யா உங்க‌ பி.ஆர்.ஓ? ப‌த்து நிமிஷ‌த்துல‌ என் முன்னாடி இருக்க‌னும். இல்ல‌ தூக்கிட்டு வ‌ர‌ச்சொல்லுவேன்” என்றார். சேர்ம‌னுக்கு வ‌யிற்றில் மிள‌காய்(புளின்னே சொன்னா போர‌டிக்கும்ல‌).

“த‌ பாருப்பா நீ இல்ல‌ன்னா ச‌ங்க‌ம் ந‌ட‌க்க‌ற‌து க‌ஷ்ட‌ம். காசு த‌ர்ரேன். எங்க‌னா போயிரு. நான் பேசிக்கிறேன்” என்றார். வ‌ர்ர‌ ல‌ட்சுமிய‌ ஏன் விட‌னும்னு சில்ல‌றை வாங்கி கிட்டு ஹைய‌ர் சைக்கிள் ஒன்னு எடுத்துக் கிட்டு எம்.எல்.ஏ வீட்டுக்கு போனேன்.

பாருங்க‌ ந‌ம்ம‌ நேர‌ம். எம்.எல்.ஏ.ஆஃபீஸ்ல‌ ந‌ம‌க்கு 4/5 கும்பிடு விழுந்துருச்சு. எம்.எல்.ஏ வே பேஜார் ஆயிருக்க‌னும். சுதி இற‌ங்கி போச்சு. ” என்ன‌யா நீ உன‌க்கு பிர‌ச்சினைன்னா என‌க்கு சொல்ல‌லாம்ல‌ ” என்று இற‌ங்கி வ‌ந்தார்.

” அய்யா! என‌க்கு ஏதோ நால‌ணா த‌மிழ்,நால‌ணா தெலுங்கு ,ப‌த்து பைசா இங்கிலீஷ் தெரியும் பி.ஆர்.ஓ ஆகிட்டேன்,உங்க‌ளை தெரியும். ஒன்னுமே இல்லாத‌வ‌னையும் இப்ப‌டித்தானே சார் லொள்ளு ப‌ண்ணுவாங்க‌ எல்லாருக்கும் ரெக்க‌ம‌ண்ட் ப‌ண்ணி கார்டு வாங்கி த‌ந்துருவிங்க‌ளா ” என்றேன் .

இவ‌ன் எங்க‌டா மாட்டினான் த‌மிழ் சினிமா மாதிரி பேசிக்கிட்டுன்னு எம்.எல்.ஏ. நினைச்சுருப்பாரு. ” அட‌ நீ கூட்டிட்டு வாயா நான் வாங்கித் த‌ரேன்” என்றார். மேட்ச் ட்ராவில் முடிந்த‌து.

வாழ்க்கையில் மாற்றவே முடியாத ஒரு குரூர விதி

வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
தோல்வியுற்ற மனிதரெல்லாம் முட்டாள்களில்லை

என்பது சந்திரபாபு திரைப்பட பாடல் வரி. ஆனால் யதார்த்தத்தில் ஆராய்ந்து பார்க்கும்போது வெற்றி பெற்ற மனிதரெல்லாம் முட்டாள்களில்லை என்பது தெரியவரும்.

வாழ்க்கையில் மாற்றவே முடியாத ஒரு குரூர விதியிருக்கிறது.

எதையாவது பெற வேண்டுமானால் எதையாவது (அதற்கு சமமானதை) இழந்து தான் ஆக வேண்டும்.

எல்லாவற்றையும் இழக்க துணிந்து விட்டால் எல்லாவற்றையும் பெறலாம்.

எதையும் இழக்க மாட்டேன் என்று எழுதி ரெட் இங்கில் அண்டர்லைன் செய்து வைத்து கொண்டு வாழ்ந்தால் ஒரு ….ம் பெற முடியாது.

வெற்றி பெற்றவன் சில சமயம் முட்டாளாக கூட இருக்கலாம். ஆனால் அறிவாளி இழக்க துணியாததை அவன் இழக்க துணிந்து விட்டான் என்பதால் தான் அவன் வென்றான்.

தோல்வியுற்றவன் சிலசமயம் அறிவாளியாக கூட இருக்கலாம். ஆனால் வெற்றிக்கு தடையாக பல அம்சங்கள் அவனில் இருக்கும்.

வெற்றி தோல்விக்கெல்லாம் அர்த்தம் வேறு.

பெரியார் சீடர் புத்ரகாமேஷ்டி யாகம் செய்து பிள்ளை பெற்றால் அது தோல்வி.

ஆத்திக நண்பர் ஒருவர் விஞ்ஞான முறைப்படி சோதனைக்குழாய் குழந்தை பெற்றுக் கொண்டால் அது அவருக்கு உறுத்தலை தான் தரும்.

வெற்றி தோல்விகள் என்பது இடம்,பொருள்,ஏவலை பொறுத்து தலை கீழாய் மாறிவிடும். நான் எனது ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டம் பற்றி பாராளுமன்ற கூட்டு கூட்டத்தில் பிரசங்கம் செய்யாது வேறு வேலையே கூடாது என்று வாழ்ந்தேன். இது என் பார்வையில் வெற்றி.

இன்று என் சபதத்தை கை விட்டு தினத்தந்தியில் வேலை செய்கிறேன். இது மக்கள் பார்வையில் வெற்றி. என் பார்வையில்?