நாளிதழ்கள் வெளியிட வேண்டியது செய்திகளையா? கருத்துக்களையா?

நியூஸ் வ்யூஸ் நாளிதழ்கள் வெளியிட வேண்டியது செய்திகளையா? கருத்துக்களையா?
பத்திரிக்கைகளை பார்த்து செய்தியறிந்து கொள்ளவேண்டிய இழி நிலையில் இன்றைய வாசகர்கள் இல்லை. நிகழ்வுகள் ஒரு சில நிமிட வித்யாசத்திலேயே தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டுவிடும் இன்றைய நாட்களில் பத்திரிக்கைகளின் ப்ராபல்யம் ரொம்பவே குறைந்துவிட்டது. இருந்தாலும் கடந்த தலைமுறையின் எச்சங்கள்,இன்றும் நாளிதழ்களின் பால் போதையுடன் இருப்பதை மறுத்துவிட முடியாது. இன்றைய தலைமுறையினர் மட்டும் மாடல் கொஸ்டியன் பேப்பர்,சினிமா செய்தி,கிரிக்கெட் செய்தி தவிர மற்றெந்த செய்திகள் குறித்தும் ஆர்வம் காட்டுவதில்லை. இன்றைக்கு பத்திரிக்கைகளை வாசிப்பவர்கள் கூட ஏதோ பழக்க தோஷத்தில் தான் தொடர்கிறார்களே தவிர இன்றைய மாணவர்கள் திருமணமானவர்களாக மாறும்போது அவர்கள் பட்ஜெட்டில் செய்தி தாள் இருக்காது என்றே நினக்கிறேன்.

நிற்க..நாளிதழ்கள் வெளியிட வேண்டியது செய்திகளையா? கருத்துக்களையா? என்ப‌து குறித்து சில‌ வ‌ரிக‌ள். த‌லைய‌ங்க‌ம் ஒன்றை த‌விர‌ ம‌ற்றெந்த‌ ப‌குதியிலும் நாளித‌ழ் த‌ன் க‌ருத்துக்க‌ளை வெளியிட‌க்கூடாது என்ப‌தே ச‌ரி. ஆனால் நான‌றிந்த‌ த‌மிழ்,தெலுங்கு ப‌த்திரிக்கைக‌ளில் ஒரு தின‌த்த‌ந்தியை த‌விர‌ எல்லோரும் த‌ம் க‌ருத்துக்க‌ளை வாச‌க‌ர்க‌ளின் தலைக்குள் திணிக்க‌ பார்க்கிறார்க‌ள். இது ச‌ரியா ? த‌வ‌றா?

ப‌திவ‌ர்க‌ளே த‌ங்க‌ள் க‌ருத்தை ஆவ‌லுட‌ன் எதிர்பார்க்கிறேன்!

என்னகங்காரம் சுண்டைக்காய்

அம்மா உனை நான் போற்றிடவே
பாமாலை நூறு சாற்றிடவே
பிறப்பித்தாய் இன்று நானறிந்தேன்
சத்தியம் இதனை அறியாது தறிகெட்டுத்தானே நான் திரிந்தேன்
நீ வறுமை என்னும் வலை வீச வசமாய் நானும் சிக்கிவிட்டேன்
சிக்கிய என்னை சிக்கெடுத்து சிங்/காரமாக நீ பதித்தாய்
தாயே உந்தன் பொற்பாதம்

வேதம் யாவும் வெற்றெனவும், உன்னை மறத்தல் ஒன்றே கூற்றெனவும்
அறிந்திட அலைந்தேன் பலகாதம்
படைப்பின் ரகசியம் உணர்த்தி விட்டாய்
விதியின் கைகளை தளர்த்தி விட்டாய்
ஆயிரம் தந்தாய் அம்மாவே என் வறுமை தன்னை ஒழித்திட்டால்
எல்லா முடிச்சும் சும்மாவே
ஞான மொட்டிதைமலர்வித்தாய்
விழி நீர் தன்னை உலர்வித்தாய்

தாயே நானோர் பாத்திரமே
எனை ஆட்டிவைப்பதுன் சூத்திரமே
பாத்திரம் அறியா பதர்களிடை மணிபோலே கிடக்கும் என்னை அள்ளி சேர்ப்பாய் கலத்தினிலே
மரணம் தவிர மற்றெல்லாம் வாழ்வில் என்றும் சும்மாவே
ஞானம் ஒன்றே தொடர்ந்து வரும்
அருகாய் உயிரில் படர்ந்து வரும்
என் ஞான விளக்கின் ஒளியினையே
அகந்தை புகையது மூடிடினும்
அவமானம் ஒன்றே துடைத்திடுமே
புது சரித்திரம் தன்னை படைத்திடுமே

உன்னை அறிந்தேன் போதுமடி
வரும் பிறவிகள் யாவுக்குமாகுமடி
வாணியாக மனம் நின்று கலைகள் தந்திடும் கலைவாணி
வேதம் அறியா என் மனதில் வேத சாரம் இறைத்தாய் போதுமடி
அம்மா விதியை நான் அறிந்தேன்(முன்)
வினைகள் செய்யும் சதியறிந்தேன்
உன்னருளால் சிறக்கும் வழியறிந்தேன்
ஆதியந்தம் நீயென்ற அடிப்படை தத்துவம் நான்றிந்தேன்
கற்பகம் உந்தன் பொற்பதமே பணியும் பணியை நானறிந்தேன்
உன் திட்டம் தன்னை தானறிந்தேன்

என்னகங்காரம் சுண்டைக்காய்
என் செவிகள் தவிப்பதுன் தண்டைக்காய்
அது சிணுங்கிட சீறிடும் என் கவிதை
சுமக்கும் உனக்கே புது சிவிகை
வலித்தேன்,சலித்தேன் வ்ண்டியிதை
பிழைத்தேன் அம்மா அண்டியுனை

என் நாவில் நில்லடி நீ சத்தியம் சொல்லடி நீ

வாணீ ! கலை வாணீ ! என் நாவில் வா நீ!

தேன் தமிழ் தந்தது போதும், தேள் தமிழ் தா நீ

(ஈங்கிவர்) முழுக்கக் கொட்டி கவிழ்ப்பதற்குள்
கொட்டி பார்த்திடனும் அழிவைத் தடுக்க முயன்றிடனும்

பகுத்தறிவு பகலவனாம் ஈ.வெ.ரா தொகுத்தவர் தந்த கருத்தினையே கருவில் அழிக்க பார்க்கின்றார்.

காதல் பேசி இவர் நின்றார். பின்
பெண்ணுக்கு சாமரம் வீசி நின்றார்.

இன்றோ பார்ப்பனர் மனம் நொந்தால் வான் மழை பொழியாதென்று வேதம் கூறுகின்றார்.
வேடம் கலைகின்றார்.
புராண புருடாக்கள் புழுத்துப் போனதென்று
புதிதாய் இட்டு கட்டுகின்றார்
நோயென தொற்றுகின்றார்.
தாயே நீ உண்டு
நான் நின் அருள் தேன் உண்டு மயங்கிய பொழுதுண்டு

என் நாவில் நில்லடி நீ சத்தியம் சொல்லடி நீ

ஜோதிடம் குறித்தும்,கிரகங்கள் வேலை செய்யும் விதம் குறித்தும்

ஜோதிடம் குறித்தும்,கிரகங்கள் வேலை செய்யும் விதம் குறித்தும் சில வரிகள் சொல்லிவிட்டு அதன் பிறகு தங்கள் ஜாதக பலன் கூற ஆரம்பிக்கிறேன்.

ஒரு பிரதமர், தம் மந்திரிசபையில் உள்ள மந்திரிகளுக்கு இலாகா பிரித்து தருவதுபோல் இறைவன் தன் படைப்பில் உள்ளவற்றை 9 இலாகாவாக பிரித்து நவகிரகங்களின் கையில் ஒப்படைத்துள்ளார். உதாரணமாக:
தங்கம்: குரு
இரும்பு:சனி

உங்கள் ஜாதகத்தில் எந்த கிரகம் சுபபலமாக இருக்கிறதோ அந்த கிரகத்தின் இலாகாவில் நீங்கள் புகுந்து விளையாடலாம். எந்த கிரகம் சுபபலமாக இல்லையோ அந்த கிரகம் உங்கள் வாழ்வில் விளையாடிவிடும். இதுதான் ஜோதிடத்தின் அடிப்படை.

ஒரு கிரகம் சுபபலமாக உள்ளதா இல்லையா என்பதை நிர்ணயிக்க ஜோதிடத்தில் 1001 விதிகள் இருந்தாலும் ஜோதிடர்கள் உறுதியான‌ முடிவை எடுக்கவும்,உங்களுக்கு சொல்லவும் திணறுகிறார்கள். இதனால் நான் இந்த பேட்டைக்கு புதுசு என்பதால் குறிப்பிட்ட ஜாதகரின் அனுபவத்தை அடிப்படையாக கொண்டே பலன் சொல்லி வருகிறேன். உதாரணமாக:

ஒரு ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ளதா இல்லையா என்று நிர்ணயிக்க 1001 விதிகள் உள்ளன. இது குறித்து விவாதிக்க‌ வேண்டுமானால் வ‌ருட‌க்க‌ண‌க்கில் இழுக்கும். என‌வே நான் குறிப்பிட்ட‌ ஜாத‌ருக்கு செவ்வாய் தொட‌ர்பான‌ வியாதிக‌ள் உள்ள‌தா (பி.பி,ப்ள‌ட் ஷுக‌ர்,க‌ட்டிக‌ள்,க‌ண்க‌ள் சிவ‌த்த‌ல்,அதீத‌ சூட்டால் வ‌ரும் வ‌யிற்று வ‌லி), செவ்வாய் கெட்டால் இருக்க‌க்கூடிய‌ குண‌ந‌ல‌ன் க‌ள் உள்ள‌ன‌வா?(கோப‌ம்,அடி த‌டி, என்.சி.சி,ஸ்போர்ட்ஸ் வ‌கையில் ஆர்வ‌ம்) என்று பார்க்கிறேன். செவ்வாய் ஏற்ப‌டுத்த‌ கூடிய‌ விப‌த்துக‌ள்,தீ விப‌த்துக‌ள்,அங்க‌ ஹீன‌ம் ஏற்ப‌ட்டுள்ள‌தா என்று கேட்ட‌றிகிறேன். இவை ந‌ட‌ந்திருந்தால் செவ்வாய் தோஷ‌ம் இருப்ப‌தாக‌ நிர்ண‌யிக்கிறேன். மேற்ப‌டி தொல்லைக‌ள் க‌ட்டுக்குள் இருந்தால் தோஷ‌ ப‌ரிகார‌த்துக்கு கார‌ண‌மான‌ கிர‌க‌ம் ப‌ல‌மாய் உள்ள‌தாய் முடிவு செய்கிறேன். மேற்ப‌டி தொல்லைக‌ள் தொட‌ர்ந்து ந‌ட‌ந்து வ‌ருவ‌தாய் ஜாத‌க‌ர் கூறினால் அவ‌ர் ஜாத‌க‌ம் க‌டுமையான‌ செவ்வாய் தோஷ‌ ஜாத‌க‌ம் என்று நிர்ண‌யிக்கிறேன். இத‌னால் தான் என் முறைக்கு அனுப‌வ‌ ஜோதிட‌ம் என்று பெய‌ர் சூட்டியுள்ளேன்.

Relief From Rays

Which is Dosha?
The Evil effects of the planets are called as Doshas

Which are pariharas:
The remedies like pooja, yaga which are done for reducing the evil effects of the planets are called as pariharas

Three types of Pariharas:
1.Poojas,yaagas done to the Lord related with the specific planet.
2.Visiting the pilgrim centers related with the specific planet.
3. Donating things. Ie. Land, meal, gold etc

1.Yagas for Gods:
Which is yaga ? creating fire and throwing the valuable things in to it. Fire is ruled by Mars. So that you can control the evil effects of Mars. In the same way according the things thrown you can get relief from those planets which rule the things thrown in to fire. Ie. Gold is ruled by Jupiter, silk saris ruled by Venus.

Mangalik;
Especially yagas control the evil effects of mangalik Dosha (Mars in other than 3,6,10,11 th houses from lagna. That too there are some restrictions.
Example: Imagine that Mars is at 12th house. What is the result? You have to face loss due to fire. If you voluntarily through things in to fire.. you are voluntarily creating loss to your property in to fire.

But if the Mars is in 7th house? What is the result you have to be separated from your wife. If u through things in to fire will your wife return home? No..

(To be cont.)

யாது செய்ய திருவுளமோ..

தாயே நாயேன் நிலைகண்டும்
நாயகியின் மனம் இர‌ங்காதோ ?

அன‌லில் புழுவென‌ த‌ரை மேல் மீனென‌
உவ‌மைக‌ல் நூறு கூறிட‌லாம்.

ஆனால் என் நிலை நீ உண‌ர‌ அவை யேதும் உத‌வா அறியாயோ?
ப‌ட்டேன் ப‌ட்டேன் துளிர்க்க‌வில்லை

எனினும் உன் விழி ப‌னிக்க‌வில்லை
யாதே செய்வேன் யாகினியே !
மோகினி யோகினி டாகினியே

பாவிய‌ர் காற்றும் என் மீது வீசா நிலையை தாராயோ?
ஆவி சோர‌ அம்மா நின் நாம‌ம் த‌னையே ஜெபித்தேனே

அர்த்த ஜாம‌ம் வ‌ரையெல்லாம் ஜ‌க‌ன் மாதா உனை நான் நினைந்தேனே
என் வ‌றுமை த‌ன்னை எரிக்காது என்னை உன் விழி எரிப்ப‌துவோ?
அம்மா உனை நான் நாடிடினும்
பேடி போலே கிட‌ப்ப‌துவோ

அணு ஆயுத‌ம் பெற்று ஆண்,பெண்ணை அடியோடொழிக்க எண்ணுகின்றார்.
இதை தடுக்க எண்ணும் என் உயிரை பஞ்சு மிட்டாய் போலே உண்ணுகின்றார்.‌

ஜனநாயகம் வந்து பலகாலம் ஆகியும் வாரிசு மண்ணாள் இரவும் பகலும் தவிக்கின்றார்.
10 கோடி இளைஞர்களில் ஒருவரேனும் இங்கிலையோ பாரத தேசம் தனை யாள‌

மனித உயிர்கள் மலிவாகி ,மண்மிசை விழுகுது 100 பிணம்.
மற்றொரு பிணமாய் கிடக்கின்றேன் ..என்று என் குரல் இங்கொலிக்கும்

படைத்தாய் பிறந்தேன். வாழ்கின்றேன்
ஒரு நாள் எனை நீ உயர்த்துவை என்று கயவர் முன்பும் தாழ்கின்றேன்

யாது செய்ய திருவுளமோ..
உனக்கும் வரையனும் திருமுகமோ

சிட்டுக் குருவி போலத்தான் சிற்றின்பத்தை துய்க்கையிலே


கணபதி தாள் தொழுது,சண்டியவள் வாள் தொழுது,
என் நிலையை நினைந்த‌ழுது
தாளின்றி, ஒரு கோலின்றி நானெழுதும் மடலிதுவே !
மாலவனும் மண்மிசை மலர்மகளை இழந்த காலை/அவன்
விட்டதொரு கண்ணீரால் நிரம்பியது கடலதுவே
உன்னருள் தானின்றி அவள் மால் மார்பில் சேர்தல் கனவே
இதனால் தானன்றோ பார்ப்பனர் போற்றி நின்றார்
“ல‌க்ஷ்மீப்ர‌தாயை ந‌ம‌ஹ‌ ” என்றே !

சிட்டுக் குருவி போலத்தான் சிற்றின்பத்தை துய்க்கையிலே
சிறு நரியெனவே தந்திரம் வளர்த்து
சிர்கெட்டிருந்த நாட்களிலே
அண்ண‌ல் உந்த‌ன் உற‌வை நாடி நாளும் பொழுதும் உனை துதித்தேன்
குருவிர‌ல் தானே தெய்வ‌ம் சுட்டும் /
நீ தெய்வமே என்றாலும்
திக்கொன்றே திருமால் திருவடி என்று குருவாகி சுட்டினையே
என் பால் குருவும் நீயே தெய்வ‌மும் நீயே
கடலெல்லாம் கடந்த கப்பல்
கணவாயில் தவிப்பது போல் இன்றும் தவிக்கின்றேன்

சீதையை பிரிந்து ராமன் அனல் மிசை புழுவென துடித்துத் தான் கிடக்க
சேதிகள் தமை சுமந்தாய் ,சேது தனை சமைத்தாய்
ராமன் நானல்லேன் எனினும் திரு பிரிந்தாள் தெரு நாயாய் மிதிக்கின்றார்

இற‌ந்த‌வ‌ன் போல் கிட‌க்கின்றேன். சிர‌ஞ்சீவி நீ கொண‌ர்வாய்.
பிற‌ தெய்வ‌ம் என‌க்கு செய்ய‌ நானுன‌க்கு செய்தேன் துரோக‌ங்க‌ள்.
ம‌ன்னித்து நீ அருள்வாய்.
ம‌ண்மிசை என் ம‌ருள் அழிப்பாய்.

இன்றே வ‌ருவாய்
எனை புதிதாய் ஈன்று நீ த‌ருவாய்