காலமாற்றம் – கிரகபலன் :(7 ஆம் பாவம் :பகுதி 4)

JF

அண்ணே வணக்கம்ணே !
காலம் மாறிக்கிட்டே வருது . காலசக்கரம் ஓட ஓட ஆண் -பெண் இருபாலாருடைய வாழ்க்கை நிலையும் மாறிக்கிட்டே வந்துருச்சு . கணவன் -மனைவி மேல அந்த காலத்துலயும் நவகிரகங்களுடைய இம்பாக்ட் இருந்திருக்கும். ஆனாலும் இந்த காலம் போல சந்தி சிரிக்கலியே? ஏன் ? அப்படி என்னதான் மாறிப்போச்சு? இதுக்கு என்னதான் தீர்வு?

வாங்க ஜிந்திப்பம்.

இந்த புருசன் பொஞ்சாதி மேட்டர்ல சூரியன் முதலா சுக்கிரன் ஈறாக என்னென்ன கிரகம் எப்படி வேலை கொடுக்கும்னு பொத்தாம் பொதுவா சொல்லிட்டே போயிரலாம். ஆனால் இந்த தொடரோட தலைப்பு ஜஸ்டிஃபை ஆகாது (காலமாற்றம் – கிரகபலன்) ஆகவே ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம் போல -புருசன் பொஞ்சாதிக்கிடையில் பிரச்சினைக்கு காரணம் சூரியன்னா அது அந்த காலத்துல என்ன செய்திருக்கும்? இந்த காலத்துல என்ன செய்யுதுன்னு பார்ப்பம். அடுத்தடுத்த கிரகங்க மேட்டர்ல ஜஸ்ட் பிரச்சினை-பரிகாரம்னு சல்லீசா போயிரலாம் .

புருசன் பொஞ்சாதி மத்தியில ஈகோ மோதல்கள் , அப்பன் மாரோட இன்ஃப்ளுயன்ஸ் ஓவரா இருக்கிறது . ராத்திரி பூரா தூங்காம கண்டதையும் உருட்டிக்கிட்டிருந்து சூரியன் உச்சிக்கு வர்ர வரை தூங்கறது ,ஒத்தை தலைவலி, கான்சிட்டிபேஷன்னு அவதிபடறது . இந்த எரிச்சல்ல சிடு சிடுப்பு,படபடப்பு.ஓவர் கான்ஃபிடன்ஸ், புகழ்ச்சிக்கு மயங்கி குண்டக்க மண்டக்க செய்துட்டு மாட்டி முழிக்கிறது , எதிராளிய கொஞ்சம் கூட ரிலாக்ஸ் ஆக விடாம சதா முடுக்கிக்கிட்டே இருக்கிறது ,ஊர்வேலைன்னா ஓடியோடி செய்யறது ,வீட்டு வேலைன்னா பம்மறது,எப்பப்பாரு லாட்ஜு வைத்தியர் மாதிரி ஜர்னியிலயே இருக்கிறது. இதெல்லாம் சூரியனால வரக்கூடிய பிரச்சினைகள்.

இந்த பிரச்சினைகள் அந்த காலத்துல பெருசா பாதிச்சிருக்காது .ஏன்னா?

1.ஈகோ மோதல்கள்
கூட்டுக்குடும்பம்ங்கறதால ஆரோ ஒருத்தரு தான் கேப்டன்.மத்தவிகல்லாம் ப்ளேயர்ஸ் தான். ப்ளேயர்ஸை பொருத்தவரை ஒபே பண்ணியே ஆகனும். இல்லின்னா புவ்வா கிடைக்காது . இன்னைக்கு மாதிரி புரட்சில்லாம் பண்ண முடியாது . கேப்டனா இருக்கிற ஆளுக்கு சூரிய பிரச்சினை இருந்தாலும் அது ஒரே ஆள போட்டு காய்ச்சாம (பொஞ்சாதி) சகலருக்கும் டிவைட் ஆயிரும்.

2.அப்பன் மாரோட இன்ஃப்ளுயன்ஸ் ஓவரா இருக்கிறது
அந்த காலத்துல இது இல்லின்னா தான் பிரச்சினை . இவனுக்கு அம்பது வயசு ஆயிட்டாலும் உங்க அப்பாவை ஒரு பேச்சு கேட்டுருங்கன்னு பொஞ்சாதியே சொல்லிருவா.

3.ராத்திரி பூரா தூங்காம கண்டதையும் உருட்டிக்கிட்டிருந்து சூரியன் உச்சிக்கு வர்ர வரை தூங்கறது ,ஒத்தை தலைவலி, கான்சிட்டிபேஷன்னு அவதிபடறது .
ராத்திரி தூங்கினமோ இல்லையோ “வைகறை துயிலெழுந்தே” ஆகனும். எந்திரிச்ச நிமிட்லருந்து டங்குவார் அந்துரும். போது சாயறதுக்குள்ளே கண்ண சுழட்டி தூக்கம் வந்தே தீரும். ஆகவே பிற பிரச்சினைகளும் காலப்போக்குல ரெக்டிஃபை ஆயிரும். இது எப்படி ஒர்க் அவுட் ஆகுதுன்னா அந்த காலத்துல விவசாயம் ஒன்னுதேன் பிரதான தொழில். ஓப்பன் ஏர்ல சன் லைட்லயே உழைக்கிறதால சூரிய தோஷம் பரிகாரம் ஆயிருதுங்கோ .

4.இந்த எரிச்சல்ல சிடு சிடுப்பு,படபடப்பு
கூட்டுக்குடும்பத்துல இதெல்லாம் வேலைக்காகாது . “என்னப்பா அங்கே சத்தம்”னு அப்பாவோ அண்ணனோ ஒரு குரல் கொடுத்தா “ச்சும்மா பேசிக்கிட்டிருந்தம்பா”ங்க வேண்டியதுதான்.

5.ஓவர் கான்ஃபிடன்ஸ்
அந்த காலத்து லைஃப் சின்ன வட்டத்துக்குள்ள ஓடிக்கிட்டிருந்தது . நாலு பேர் மின்னே கவுரதையா வாழனுங்கற ஃபீல். ஆகவே கெட்டுப்போன சூரியன் என்னதான் ஓவர் கான்ஃபிடன்ஸ் கொடுத்தாலும் டிஃபென்ஸே ப்ளே பண்ணிக்கிட்டிருக்க வேண்டியதுதான். அகல கால் வைக்கிறதுக்கெல்லாம் தில்லு வராது .

6.புகழ்ச்சிக்கு மயங்கி குண்டக்க மண்டக்க செய்துட்டு மாட்டி முழிக்கிறது
புகழ்ச்சிங்கறது வேலை வெட்டி இல்லாதவனோட ஒரே ஆயுதம்.அந்த காலத்துல இந்த ஆயுதத்தை ஜஸ்ட் அவா மட்டும் தேன் யூஸ் பண்ணியிருப்பாய்ங்க. அதுவும் வருசத்துக்கு ஒரு தரமோ ரெண்டு தரமோ (திருவிழா/திதி) .

7.எதிராளிய கொஞ்சம் கூட ரிலாக்ஸ் ஆக விடாம சதா முடுக்கிக்கிட்டே இருக்கிறது
கூட்டுக்குடும்பத்துல உறுப்பினர் எண்ணிக்கை அதிகம்ங்கறதால கிராமமே ஒரு குடும்பம் போல வாழ்ந்த காரணத்தால இந்த ஃபீச்சர் டிவைட் ஆயிருது . ஆரும் பெருசா இர்ரிட்டேட் ஆகமாட்டாய்ங்க.

8.ஊர்வேலைன்னா ஓடியோடி செய்யறது ,வீட்டு வேலைன்னா பம்மறது
கூட்டுக்குடும்பம்ங்கறதால வீட்டுக்கு நாலு ஊருக்கு ஒன்னுன்னு லூஸ்ல விட்டுருவாய்ங்க.

9.எப்பப்பாரு லாட்ஜு வைத்தியர் மாதிரி ஜர்னியிலயே இருக்கிறது.
பெருசா வண்டி வாகனம் இல்லாத காலங்கறதால மிஞ்சிப்போனா 18 பட்டிக்குள்ள சுத்திட்டு ரிட்டர்ன் ஆஃப் தி ட்ராகன் ஆயிருவம்.ஃபேமிலி மெம்பர்ஸ் சாஸ்திங்கறதால பெருசா சிக்கல் வராது -முக்கியமா பொஞ்சாதிக்கு இன் செக்யூரிட்டி/தனிமை இத்யாதில்லாம் எஃபெக்ட் ஆகாது .

சூரியனால வரக்கூடிய பிரச்சினைகள்னு நான் சொன்ன பிரச்சினைகள் இன்றைய தனிக்குடித்தனத்தில் -நகர்மய ஜீவிதத்தில் எப்படியா கொத்த கிரைசிஸை கொடுக்கும்னு கற்பனை பண்ணி பாருங்க. கிளிஞ்சுரும் ( நானும் அடுத்த பதிவுல கொஞ்சம் விரிவா சொல்றேன் -பரிகாரங்களையும் தான் )