சிகப்பு நாடா

சிகப்பு நாடாசிகப்பு நாடாத்தனத்தின் கொடுமையை அறிந்தவன்,அதனால் கொடூரமாக பாதிக்கப்பட்டவன் என்ற முறையில் இந்த வலைப்பூவை வலை மேயர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். இந்தியாவின் எல்ல பிரச்சினைகளுக்கும் தீர்வாக ஆப்பரேஷன் இந்தியா 2000 என்ற திட்டத்தை தீட்டினேன். இதன் 200 பிரதிகளை அன்றைய லோக்சபா சபாநாயகர் ஜி.எம்.சி பாலயோகிக்கு அனுப்பினேன்.(பதிவு தபால் மூலம் தான்). அவற்றை அன்றைய ஆளும் கட்சி கூட்டணியை சேர்ந்த எம்.பி.க்களுக்கு கிடைக்க செய்யுமாறு கோரினேன்.(11/6/98) .பல மாதங்கள் வரை பதிலில்லை. அந்த சமயம் என்.டி.ஆர்.ரசிகன் என்ற வகையில் தெலுகு தேசம் சார்பாக பூத் ஏஜண்ட்டாக உட்கார்ந்ததற்கான அடையாள அட்டை என்னிடம் இருந்தது. அதை இணைத்து எங்கள் தொகுதி எம்.பி.ராமகிருஷ்ணாரெட்டி காருவுக்கு இது விஷயமாகஒரு இன்லண்டு லெட்டர் போட்டேன்.
அவர் சபாநாயகர் அலுவலகத்தில் விசாரித்திருப்பார் போல.
சபாநாயகர் அலுவலகம் எம்.பி.க்கு நான் போட்ட கடிதத்தை மேற்கோள் காட்டி ஒரு கடிதம் போட்டது.”நீங்கள் சொல்லும் திட்ட பிரதிகள் அடங்கிய பார்சல் எங்களுக்கு வந்து சேரவில்லை”-என்பது அதன் சாரம். நான் பதறியடித்து ஓடி தபால் அலுவலகத்தில் மேற்படி பார்சல் டெலிவரி ஆனதற்கான அத்தாட்சியை பெற்று பதிவு தபாலில் அனுப்பினேன். மீண்டு சில மாதங்கள் மவுனம். இடைவிடாத நினைவூட்டு கடிதங்களுக்கு பிறகு சபாநாயகர் அலுவலகத்து அதிகாரிகள் ஒரு கடிதம் போட்டனர். அதன் சாரம்:
நீங்கள் அனுப்பிய கடிதம்,பார்சல் டெலிவரி ஆனதற்கான ஆதாரம் கிடைத்தது. தங்கள் பார்சலை இந்த அலுவலகத்தில் லொகேட் செய்ய முடியவில்லை.எனவே தங்கள் திட்டத்தின் மற்றொரு பிரதியை அனுப்பினால் தேவையான பிரதிகளை நாங்களே தயாரிப்பதில் பிரச்சினை இல்லை.
மனம் நொந்து உடனே திட்டத்தின் மற்றொரு பிரதியை அனுப்பினேன். பதிலில்லை. பலமாதங்கள் கழித்து வெறுத்துப் போய் திட்டப்பிரதியை திருப்பியனுப்பச் சொல்லி தபால் செலவுக்காக ரூ.50 க்கான அஞ்ஜலாணை கூட அனுப்பிவிட்டேன். நாளிதுவரை ஒரு இழவும் நடக்கவில்லை. நானும் தொடர்ந்து நினைவூட்டுக் கடிதங்களை அனுப்பிக் கொண்டேதானிருக்கிறேன். சிகப்பு நாடாத்தனம் என்றால் இது தான் .

ஈ.வெ. ராமசாமியின் வாக்கும் ராமனின் வாக்காகவே

ஒரு ஜோதிடன்,ராம பக்தன், அம்மனை வணங்கும் சாக்தேயன் பெரியாரை கொண்டாடுவதில் நிறைய பேருக்கு பல சந்தேகங்கள் வருகின்றன. ஆத்திகமோ நாத்திகமோ அதன் உச்சத்தில் இருக்கும்போது அதில் எவ்வித முரண்பாடும் தெரிவதில்லை. பெரியாரின் முழு பெயர் ஈ.வெ.ராமசாமி என்பதாகும். “அந்தா ராம மயம் ” என்று துவங்கும் ராமதாசர் கீர்த்தனை ராமசாமியின் வாக்கும் ராமனின் வாக்காகவே எனக்கு தோன்றுகிறது.
பார்ப்பணர்களின் விவாதத்திற்கப்பாற்பட்ட கீதை கூட வேத பண்டிதனையும், நாய் மாமிசம் உண்பவனையும் சமமாக பாவிப்பவனே உத்தமன் என்றுதான் கூறுகிறது.(அதே கீதையில் விஞ்ஞானத்திற்கு எதிரான நிறைய விசயங்கள் உள்ளன. அவற்றை பின்னொரு சமயம் கிழிக்கலாம்.)
நான் வணங்கும் ராமன் (பகவத் கீதையில் கிருஷ்ணனைப்போல்) என்னையே சரணடை என்றெல்லாம் சொன்னதில்லை.ராமன் என் லட்சிய புருஷன்.தான் ஒரு அவதாரம், என்ற பிரக்ஞை கூட ராமனில் இருந்ததில்லை. அவனை சுற்றியிருந்தவர்கள் தான் அவரை அவதார புருஷன் என்று கொண்டாடினார்களே தவிர ராமர் மட்டும் ஆராமாகத் தான் இருக்கிறார்.
இதே ராமன் புத்ரகாமேஷ்டி யாகம் மூலம் பிறந்ததாக பவுராணிகர்கள் கூறுகிறார்கள். (இதன் உண்மையான விளக்கத்தை “சகோதிரிகளை புணர்ந்து” என்ற தலைப்பிலான என் வலைப்பூவில் காணவும்) இதே ராமன் தவத்திலிருந்த சூத்திரனை பிராமணர்கள் பேச்சை கேட்டு கொன்றதாகவும் ஒரு கதை உள்ளது. அன்னப் பறவை போல் நான் ராமன் குறித்த பாசிடிவான விஷயங்களை மட்டும் எடுத்துக் கொள்கிறேன்.
காந்திக்கு உதவிய அதே ராம நாமம் எனக்கும் உதவுகிறது. என்னை பக்குவப் படுத்தி *யத்பாவம் தத்பவதி என்பது போல் ராமனாகவே மாற்றியுள்ளது.அதற்காக புராண புருடாக்களை வைத்து பிழைப்பு நடத்தும் உண்மை நாத்திகர்களான பிராமணர்களை இடித்துரைத்த ராமசாமியை என்னால் விட்டுவிட முடியாது. இருந்தானோ இல்லையோ, பிறந்தானோ இல்லையோ தெரியாத ராமனுக்காக ரத்தமும் சதையுமாய் பிறந்து , வளர்ந்து தன் சொல்லம்புகளால் பிராமண ராட்சதர்களை வதம் புரிந்த ராம சாமியை நான் விட்டுவிட்டால் வரலாறு என்னை மன்னிக்காது.
வேதமாகட்டும்,சாத்திரமாகட்டும்,ஜோதிடமாகட்டும் எல்லாமே மக்களுக்காகத்தான். *ஈஷ்வரோ மனுஷ்ய ரூப்பேணா. மனிதனை,மனிதத்தை மறுத்தால் வேதம்,புராணம்,பிராமணீயம்,பிராமணர்களை மட்டுமே அல்ல என் ராமனையும் எதிர்ப்பேன்.
ராமன் வாழும் காலத்தில் நானும் வாழ்ந்திருந்து, அவன் தவமிருந்த சூத்திரனை பார்ப்பனர் பேச்சைக் கேட்டு கொன்றிருந்தால் கு.ப. சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தையாவது மேற்கொண்டிருப்பேன்.
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள்மெய்ப்பொருள் காண்பதறிவு
என்பது வள்ளுவர் வாக்கு. பெரியார் ஜோதிடத்தை மறுத்திருக்கலாம். வேதத்தை நிராகரித்திருக்கலாம். அவருக்கு அவற்றை ஆழமாக அராய்ச்சி செய்யும் வசதி,வாய்ப்பு இல்லாதிருந்திருக்கலாம். இன்று எனக்கு அதற்கான வாய்ப்பு உள்ளது. நான் நோண்டி நுங்கெடுக்கிறேன். மக்கள் நலத்துக்காக அவற்றின் உண்மை அர்த்தங்களை வெளியிடுகிறேன் இது தவறா?
*பெத்தல மாட்ட சத்தி மூட்டா – என்பது தெலுங்கு பழமொழி. அதாவது பெரியோர் வாக்கு கட்ட்ச்சோற்றை போன்றது. கட்டுச்சோறு என்பது ஊர் போய் சேரும் வரை தான்.ஊர் சேர்ந்த பிறகு ஆக்கி தின்னவேண்டும். பெரியார் வாழ்ந்த காலத்தில் வேதம்,புராணம் எல்லாம் விமர்சனத்துக்கு அப்பற்பட்டவையாய் இருந்தன, அந்த நேரம் எல்லாமே புருடா என்றுதான் அடித்து பேசவேண்டும். அந்த சமயம் கொஞ்சம் விஷயமிருக்கு ஆனால் அய்யர் பசங்க நிறைய ரீல் விட்டு காசு பார்க்கிறாங்க என்று மென்று விழுங்க முடியாது.
இப்போது நிலைமை மாறியிருக்கிறது. நாத்திகம் அலுத்து , மனக் குரங்கு ஆத்திகத்தின் பக்கம் தாவ ஆரம்பித்திருக்கிறது. இந்த சமயம் பெரியாரைப் போல் எல்லாமே புருடா என்றால் ,ஆத்திகத்தின் காரணாமாய் சற்றேனும் பலன் பெற்றவன் நாம் சொல்லுவதைத் தான் புருடா என்பான். மீண்டும் அவனை பார்ப்பன மாயாவில் இருந்து வெளிக்கொணர முடியாது. எனவேதான் அய்யர்கள்
தம் அடுத்த தலைமுறைக்கு மாற்றும் போது கோட்டை விட்ட டீட்டெயில்களை நான் பிடித்து வைத்துள்ளேன். என்னிடம் விடச்சொல்லுங்கள் புராண புருடாக்களை. அவன் மனைவியை இவன் கொண்டு போனான் இவன் மனைவியை அவன் கொண்டு போனான் என்ற கதைகளை நம் வீட்டுப் பெண்கள் முன்னிலையில் சொல்லியதோடு, அவற்றை பாராயணமும் செய்யச்சொன்ன பாவிகள் நமக்கு ஏன் பவிஷ்ய புராணத்தை கூறவில்லை என்று கேளுங்கள். (முதலில் இந்த தலை முறை அய்யனுக்கு தெரியுமா கேளுங்கள்.

பத்திரிக்கை ஆசிரியர்களுக்கு பத்து கேள்விகள்

1.ஒரே நிறுவனத்தின் விளம்பரம் ஒரு பக்கத்திலும்,அது குறித்த செய்தி ஒரு பக்கத்திலும் வெளிவருவது ஏன்? நீங்கள் செய்தி போடுவதால் விளம்பரம் தருகிறார்களா? அல்லது அவர்கள் விளம்பரம் தருவதால் நீங்கள் செய்தி வெளியிடுகிறீர்களா?

2.விளம்பரங்களின் உண்மைத்தன்மைக்கு நாங்கள் பொறுப்பல்ல என்று ஒரு அறிவிப்பை சமீப காலமாய் வெளியிட துவங்கியுள்ளீர்கள். இந்த அறிவிப்பை வெளியிடுவதற்கு முன் வெளியிட்ட விளம்பரங்களுக்கெல்லா ம் நீங்கள் தான் பொறுப்பா?

3.மத்திய அரசு பதிவு பெற்ற பத்திரிக்கைகளுக்கு நியூஸ் ப்ரின்ட் காகிதத்தை கண்ட்ரோல் ரேட்டில் தருகிறது. ஆனால் எந்த பத்திரிக்கையும் நியூஸ் ப்ரின்ட் காகிதத்தில் வெளி வருவதில்லை. கண்ட்ரோல் ரேட்டில் அரசு தந்த காகிதங்கள் என்னவாகின்றன?

4.ஒரே குழுமத்திலிருந்து பல பத்திரிக்கைகள் வெளிவருகின்றன . பெரும்பாலும் ஆசிரியர் தவிர ஆசிரியர் குழு உறுப்பினர்கள் எல்லாம் அதே ஆசாமிகள் தான். இவர்களுக்கு எத்தனை பத்திரிக்கைக்கு வேலை செய்தால் அத்தனை சம்பளமா? அல்லது ஒரே சம்பளத்துக்கு இத்தனை இதழ்களுக்கும் பணி புரிகிறார்களா?

5.எஸ்.எம்.எஸ் மூலம் ஜோக்,வாசகர் கடிதம் இத்யாதி அனுப்பச் சொல்வதும் நடந்து வருகிறது. வாசகருக்கு செலவாகும் தொகையில் பத்திரிக்கைக்கு கிடைக்கும் பங்கு விவரம் என்ன?

6.எழுத்தாளர்கள் தங்களுக்கு அனுப்பும் படைப்புகள் முதலில் சுவற்றிலடித்த பந்தாக இருந்தன. பின் கிணற்றில் போட்ட கல்லாயின. தற்போது பிரதி வைத்துக்கொண்டு அனுப்புங்கள். திருப்பி அனுப்ப முடியாது என்று அறிவிக்கிறீர்கள். இந்த அறிவிப்பை தாங்கள் வெளியிடுவதற்கு முன் அனுப்பப்பட்ட படைப்புகளையாவது திருப்பி அனுப்பலாம் அல்லவா?

7.எழுத்தாளர் ராஜேஷ் குமார் எல்லா பத்திரிக்கைகளாலும் நிராகரிக்கப்பட்ட தன் குறுநாவல் மற்றொரு பத்திரிக்கையின் போட்டியில் பரிசு பெற்ற வரலாற்றை தம் சுய சரித்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். தேர்வு பெறாத படைப்புகளை திருப்பி அனுப்பினால் அவை வேறு ஏதேனும் போட்டியில் பரிசு பெற்றுவிட்டால் என்ன செய்வது என்ற தங்கள் நல்லெண்ணமே மேற்படி அறிவிப்புக்கு காரணமா?

8.ஒரு பத்திரிக்கையில் கோழிக்கறியின் தீமைகள் குறித்து கட்டுரை தொடர் வெளிவந்தது. பிறகு கோழிக்கறி சாப்டு மஜா பண்ணுங்கங்கற விளம்பரங்கள் தான் தொடர்ந்து வந்ததே தவிர கட்டுரை என்ன கேடு ஒரு துணுக்கு கூட மேற்படி விஷயத்தில் வெளிவரவில்லையே? அது என்ன சமாசாரம்?

9.பிராமணர்களால் நடத்தப்படும் பத்திரிக்கைகளில் வாய்தா போன பிராமண‌ பிரபலங்களை கூட இந்த தூக்கு தூக்கறிங்களே..பிராமணர்களுக்கு மட்டும் வித்து பத்திரிக்கை நடத்தறிங்களா? இல்லயே! சூத்திர‌னோட காசு வாங்கிகிட்டு பிராமண புகழ் பாடறிங்களே இது நியாயமா?

10.உங்கள் வலை தளத்தில் contacட்: என்பதை மட்டும் ஒளித்து வைத்துள்ளீர்களே அது ஏன்? தப்பித்தவறி மெயில் அனுப்புபவர்களுக்கு உங்கள் விளம்பரத்தை தான் அனுப்புகிறீர்களே தவிர பதில் தருவதில்லையே இதுதான் பத்திரிக்கை தர்மமா?

என் தாழ்மையான கருத்து.

தமிழ் அச்சு ஊடகம் தன் பிராமணீய அகங்காரத்தினால் என்னை புறக்கணித்த பிறகு தமிழ் வலைப்பதிவுகளை சரணடைந்தேன். சலூன் கள், தேனீர் கடைகளில் கூட பேச முடியாத மொழி வலைப்பூக்களில் தேவையில்லை என்பது என் தாழ்மையான கருத்து.

த‌மிழ் லிபியில் தெலுங்கு க‌விதை

நேனுநித்யம் அபத்ரதா பாவ‌ம்தோ

பாத படுதுன்னாஒ அத்ருஸ்ய ஹஸ்தம்

நன்னு காப்பாடுதூ வஸ்துன்ன

சங்கத்தினி நேனு அர்த்தம் சேஸுகோ கல்குதுன்னானு !

நா ஜீவிதபு பரமார்த்தான்னிஅர்தம் சேஸுகோ கல்குதுன்னானு !

நா ப்ரானாலனு காலிலோ கலிபெய்ய

கல சன்னிவேஸாலனு

தாட்டின்சின்தி ஆ ஹஸ்தமே!

அனுக்ஷனம் ஆத்ம க்ஷோப‌கு குரவுதுன்னா

தானி குரின்சி அரக்ஷனானிகி மின்சி

ஆலோசின்சனீயக நன்னு ரக்ஷின்சேதி ஆ ஹஸ்தமே!

யென்னி சார்லு மானசிகங்கா நேனு மரனின்சினா

நன்னு மல்லி மல்லி ப்ரதிகின்சின்தி ஆ அம்ருத ஹஸ்தமே!
ஈ தீபம் சுடிகாலிலோ ஆரிபோக காப்படின்தி

ஆ அத்ருஸ்ய ஹஸ்தமே!

நேனு நா கதான்னி தலச்சடம் நா

பவிதனுபங்காரம் செய்ய கல ரச குளிக

ஏதன்னா லபிஸ்துந்தேமோனன்ன கக்ருதி தோனே

ஆ ர‌ச‌ குளிக‌னு நா க‌த‌ம்லோனுன்டி த்ர‌வ்வி இவ்வ‌க‌லிகேதி கூட‌ ஆ ஹஸ்தமே!

இன்த‌ ஏல‌ ஆ குளிக‌னு அக்க‌ட‌ தாச்சி

உன்சின்தி கூட‌ ஆ ஹஸ்தமே!

த‌மிழ் லிபியில் தெலுங்கு க‌விதை

புலி மேல் பவனி வருகின்ற பவானி எனை நீ உடன் கவனி


தாயே தாயே கண் பாரு (குடை)
சாய்ந்து கிடக்குது என் தேரு
ஏனோ பிறந்தேன் அறிவில் சிறந்தேன்
ஞானம் பகிர நானும் துடித்தேன்
அனலில் புழுவாய் துடி துடித்தேன்
பாடிப்பாடி மகிழ்ந்தேனே
உயிர்வரை நாளும் நெகிழ்ந்தேனே
மாக்கள் போலே வாழ்கின்ற
உன் மக்கள்தானே வதைக்கின்றார்
உத்தமர் என்றே கதைக்கின்றார்
நியாயம் இதுவோ என் தாயே
என் கை உயர கை தாயேன்
சூக்கும் புத்தி உன் பிச்சை
இதில் ஏதடி எனக்கென்று ஓரிச்சை
உன் இச்சைப்படியே வாழ்கின்றேன்
பிச்சை ஏற்று தாழ்கின்றேன்
காசொடு கருமம் துணை
வந்து பிணைக்குது என்னை
அறுத்தெறிவாய்
மாதவன் சேவை என நம்பி
மக்கள் சேவை ஏற்றவன்
நான் ஏழ்மை ஒழிக்க வந்துற்ற
மகிஷம் அற்ற கூற்றுவன் நான்
என் நாவில் கலைமகள் நீயன்றோ
உன் செல்லப்பிள்ளை நானன்றோ
என் கவிதை கேட்க சிதையேற்ற
தாயே நீயே துடிப்பதுவோ
எழுதி எழுதி என்னாச்சு
அவை அழிந்திட என் மனம் புண்ணாச்சு
பாலையில் பனி மழை பொழிந்திடலாம்
என் மனதில் கவிதை வழிந்திடுமோ
நானும் மனிதன் தானல்லோ
கைப்பிடி இதயம் தானல்லோ
எத்தனை தானது தாங்குமடி
என்று என் கொடி ஓங்குமடி
தருமம் என் தலை காக்குமென்று
தரணியாளும் தலைவனையும்
உன் துணையாலே எதிர்த்திட்டேன்
ஐயம் ஏற்ற நாளுண்டு
கொண்ட கொள்கையில் ஐயம் உண்டோடி
அன்னை உண்டு பின் என்று
முன் பின் யோசனை இல்லதே
களம் புகுந்திட்ட பித்தன் நான்
நீ உளம் புகுந்திட்ட சித்தன் நான்
(ஒப்)பேற்றி என்னை வெளிக் கொணர்ந்தாய் இல்லை என்று மறுப்பேனோ (காப்)பாற்றி என்னை வைத்துள்ளாய் இல்லை என்றுனை வெறுப்பேனோ அசடர் கசடர் முன்பெல்லாம்
அலி போல் என்னை நிறுத்துவதோ
எலி போல் நானும் நடுங்குவதோ
புலி மேல் பவனி வருகின்ற பவானி எனை நீ உடன் கவனி
(வீர) சிவாஜி மட்டும் உன் பிள்ளை
என்றால் நீ ஒரு தாயில்லை
பிஞ்சில் பழுத்து வெம்பி விட்டேன்
உனையே நம்பி வந்து விட்டேன்
இன்னும் என்ன தயக்கமடி
தயங்குதலே உன் வழக்கமோடி
மென் மனம் புண்பட புல்லர்களே
புலி வேடம் கட்டி ஆடுகையில்
ஆடு போலே விழிக்கின்றேன்
ஏடு எடுத்து எழுதியதை முகர்ந்தும் பாரா உலகத்தில்
எழுதிவைத்து என் செய்வேன்
அம்மா நீயே மனம் வைத்தால்
என் எழுத்து உலகை ஆளாதோ
உலுத்தர் உவகை மாளாதோ
நாட்டின் ஏழ்மை நாளை மாறாதோ
என் லட்சிய தாகம் தீராதோ

காவலர்களின் பணிச்சூழலை மாற்ற என் ஆலோசனைகள்:

1.காவலர் தேர்வு என்பது போட்டியற்றதாகி விட வேண்டும். அதற்கு இப்போதுள்ள காவல் துறை அதிகாரிகள்,காவலர் எண்ணிக்கையை 3 மடங்காக்கி விடவேண்டும்.
2.காவலர் தேர்வு என்பது இயந்திரங்களால்,கணிணிகளால் ந்டத்தப்படவேண்டும்.
3.தேர்வான காவலர்களுக்கு விலை வாசியே தெரியவராத வகையில் அவர்களுக்கும்,அவர்கள் குடும்பத்தாருக்கும் தேவையான உயிர் பாதுகாப்பு,உணவு,உடை,இருப்பிடம்,செக்ஸ்,காப்பீடு,சேமிப்பு எல்லாவற்றுக்கும் அரசே பொறுப்பேற்க வேண்டும். அவர்களுக்கு தரப்படும் சம்பளம் என்பது அத்தியாவசிய,விபரீத சூழல்களில் மட்டுமே பயன் படவேண்டும்.(கிட்னாப்புக்குள்ளாதல் Etc.,)
4.காவலர்களின் உடல் நிலை,மன நிலை,பொருளாதார நிலை,(தாம்பத்திய வாழ்க்கை உட்பட) 3 மாதங்களுக்கு ஒருமுறையாவது அன்னிய நாட்டு சேவை நிறுவனங்களால் பரிசீலிக்கப் படவேண்டும்
5.காவலர்களுக்கான பதவி உயர்வு,இடமாற்றம்,பணிமாற்றம்,விடுப்பு,சகலமும் கணிணிகளால் நிர்ணயிக்கப்பட வேண்டும். மேலதிகாரிகளின் தயவை எதிர்ப்பார்க்கும் துரதிர்ஷ்டமான நிலை மாறவேண்டும்.(இவர்கள் மேலதிகாரிகளின் இம்சையால் மசாக்கிஸ்டுகளாகி, மக்கள் விஷயத்தில் வரும்போது சாடிஸ்டுகளாகி விடுகிறார்கள்.
6.எந்த அதிகாரியும்,எந்த காவலரும் எக்காரணம் கொண்டும் 8 மணி நேரத்துக்கு மேல் பணியாற்றக்கூடாது.
7.அனைத்து மானில போலீஸ் துறையையும் ஒரே குடைக்குள் கொண்டு வந்து விட வேண்டும்.((IAS & IPs, மாதிரி) நாடெங்கிலும் உலகத்தரத்தில் போலீஸ் குவார்ட்டர்ஸ் ,அவர்களின் பிள்ளைகள் படிப்புக்கான கல்வி நிலையங்கள்,ஹாஸ்டல்கள் கட்டப்பட வேண்டும்.பணிமாற்றம் என்பது அகில இந்திய அளவில் நடைபெறவேண்டும். பணிமாற்றம் என்பது காவலரை பாதிக்காத வண்ணம் நாடெங்கிலும் ஒரே பணிச்சூழல்,ஒரே விதி ஏற்படுத்த வேண்டும்
8.காவலன் என்பவன் மக்களுக்கு காவலனாக இருக்கும் வரை நாடு அவனுக்கு காவலாக இருக்க வேண்டும். அவன் அரசியல் விபச்சாரிகளின் தரகனாய் மாறிவிட்டால் நாடு கடத்த வேண்டும்