ஜோதிடம் முற்றிலும் புதிய கோணம்: 4

அண்ணே வணக்கம்ணே !
ஒரு படத்துல வடிவேலு பேரு கல்யாண சுந்தரம். ஆனால் கல்யாணமே ஆகியிருக்காது. இது ஒரு கேட்டகிரி. யோகி,மோக்ஷித்னு பேரு வைப்பாய்ங்க.ஒன்னு பிள்ளை உருப்படாம போயிரும். இல்லின்னா கண்ணாலம் அமையாது. இல்லின்னா சீக்கிரமா டிக்கெட் போட்டுரும் இது ஒரு கேட்டகிரி.

பேர்ல என்ன சார் இருக்குங்கறதும் தப்பு. பேர்லதான் எல்லாமே இருக்குங்கறதும் தப்பு.உண்மை நடுவுல இருக்குங்ணா.

பல தடவை நான் சொல்லி வச்சிருக்காப்ல ஒரு மேட்டர் ஒர்க் அவுட் ஆகனும்னா ஒரு ரெண்டு மூனு ஃபேக்டர்ஸ் கோ இன்சைட் ஆகனும்.
சிலர் நட்சத்திரத்தை வச்சே எல்லாம் முடிச்சுருவாய்ங்க. சமீபத்துல முக நூல்ல பார்த்தாப்ல ஞா பலான நட்சத்திரத்துல டிக்கெட் போட்டா பேயா அலைவாய்ங்க. எல்லாரையும் பலிவாங்கிருவாய்ங்கன்னு ஒரு மேட்டர். இதையெல்லாம் சீரியஸா எடுத்துக்கப்படாது.
.
பஞ்சாங்கம்னா திதி ,வாரம்,கரணம்,யோகம்,நட்சத்திரம்னு அஞ்சு மேட்டர் இருக்கு. இந்த அஞ்சையும் பார்த்து முடிவு பண்ணனும்.
ஏதோ பேர்ல ஆரம்பிச்சதா ஞா. ஆங் கல்யாண சுந்தரம். இவருக்கு கண்ணாலமே ஆகாது. நம்ம கிங்காங் சொல்வாரு “ஒரே ஒரு பெண்ணை தான் பார்த்தேன். ஃபிக்ஸ் ஆயிருச்சு . சில தரித்திரம் பிடிச்சவனுக்கெல்லாம் எத்தனை பெண்ணை பார்த்தாலும் ஒன்னும் ஆகாது”

ஆனால் பாருங்க இந்த திருமணத்தடைங்கற ஒரே ஒரு கான்செப்ட் இல்லின்னா எத்தனை இண்டஸ்ட்ரி வந்தே இருக்காது. உ.ம். பத்திரிக்கைகள்ள மேட்ரிமோனி விளம்பரங்கள், மே.மோ சைட்ஸ்,

இதுமட்டுமில்லை திருமண தடைங்கற பிரச்சினையால விட்டுப்போன சொந்தத்தை எல்லாம் டச் பண்றோம். -கெட்டுப்போன தூரத்து சொந்தத்துலருந்து ,பிழைக்கத்தெரியாம தேங்கிப்போன க்ளாஸ்மெட் வரை காண்டாக்ட் பண்றோம்.

நிறைய சாதியில நெல்லா வாழ்ந்து கெட்டுப்போன பெருசுகளுக்கு இது ஒரு மெயின் சோர்ஸ் ஆஃப் இன் கம். கிழவாடிகளுக்கு தங்கள் சர்வைவல் மற்றும் இம்பார்ட்டன்ஸை மெயின்டெய்ன் பண்ண ஒரு வாய்ப்பு கிடைக்குது.

இதை எதுக்கு சொல்றேன்னா ஒரு ஜாதகத்தை தனிப்பட்ட ஜாதகமா பார்க்கும் போது -உலகியல் வாழ்க்கையின் பார்வையிலயே பார்க்கும் போது கிடைக்கிற பலன் ஒன்னு. இதுவே சமூக பார்வையில் பார்க்கும் போது கிடைக்கிற வாழ்க்கை வேறு.

திருமண தாமதத்தையே எடுத்துக்கங்க .கண்ணாலம் ஆகலின்னா தாளி ஒரு பிரச்சினை தான்.ஆயிருச்சுன்னா? அதுவும் பிரச்சினை உள்ள ஜாதகத்துக்குன்னா எவ்ளோ பிரச்சினை ..

இந்த மாதிரி பிரச்சினை உள்ள ஜாதகங்களுக்கு கண்ணாலம் ஃபிக்ஸ் ஆகிறதுக்கு மிந்தி சில கசமுசாவெல்லாம் நடந்து தொலைஞ்சுருச்சுன்னா மேரீட் லைஃப் பெட்டரா இருக்க வாய்ப்பிருக்கு.

ஒரு வெடிகுண்டு ரெண்டு தடவை வெடிக்க முடியாதில்லையா ? ( தவுசண்ட் வாலா அமைப்பெல்லாம் உண்டு .அதை பிறகு பார்ப்போம்)
நான் பார்த்தவரை கெட்டவுகளா வாழவேண்டிய ஜாதகத்துல பிறந்து நெல்லவுகளா இருக்கிறவுகளுக்குத்தான் வரலாறு காணாத பிரச்சினைங்க வருது.
அப்படி இப்படி இருக்க வேண்டிய பெண் ..ஐ மீன் .. ஒடனே கள்ள உறவு ரேஞ்சுக்கு கற்பனைய விரட்டாதிங்க. நான் சொல்லவர்ரது கொஞ்சம் மாடர்னா -வெளி ஆண்களுடன் இயல்பா பேசி பழக வேண்டிய ஜாதகத்துல பிறந்தும் ஃபோன்சாய்க் கணக்கா வாழற பெண்கள் நிறைய பிரச்சினைகளுக்கு ஆளாகிறாய்ங்க.
குனிஞ்ச தலை நிமிராத பெண்ணுக்கு மொடாக்குடியன் புருசனா வரான் .போட்டு நிமிர்த்தறான். இதுவே மாசத்துக்கு ஒருத்தனோட அலைஞ்சதுக்கு பின்னாடியே பைய தூக்கிட்டு வர்ர புருசன் அமையறான்.

இதெல்லாம் பெரிய ஆராய்ச்சிக்குரிய விஷயம்.

பலருக்கும் என்னடா குறைன்னா? பொஞ்சாதி ஹெல்த்தியா இல்லை, அழகா இல்லை. நாகரீகமா இல்லை, அய்யா ..சாமீ ! உங்க ஜாதகத்துல 7 ஆமிடம் கேந்திரஸ்தானம் . இங்கன பாபகிரகம் இருந்தாதான் பொஞ்சாதி உங்க கைக்கு அடக்கமா இருப்பாய்ங்க. (ஏன்னா அந்த பாபகிரகம் அவிகளொட அழகு-கவர்ச்சி எல்லாத்தையும் குறைச்சுட்டே வரும்.

இந்த கேது புக்தி ஆரம்பிச்சதுலருந்து எல்லாம் கொஞ்சம் தத்துவமாவே போவுதுப்பா -ஒரு ஃப்ளோ இல்லை .ஒரு கோர்வை இல்லை. சரி ஒழியட்டும். நாம எதை எழுதினாலும் சகிச்சுக்க நீங்க இருக்கிங்கங்கற தகிரியத்துல இதை தொடர்ரன்.

“சொன்னதைத்தான் செய்வேன் -சொல்றதைத்தான் செய்வேன் ” இது ரஜினியோட பஞ்ச் டயலாக்னு நினைப்பிங்க.
அரசியல் ஆர்வம் உள்ளவுக இது திமுகவோட தேர்தல்விளம்பரங்கள்ள வந்த வாசகமாச்சேன்னு நினைப்பிங்க. கொஞ்சம் போல வயசான கட்டைங்க இது ஏதோ பழைய சினிமா பாடல்வரியாச்சேம்பிங்க.

மேட்டர் இன்னாடான்னா நீங்க சொன்ன எல்லா மேட்டரும் கரெக்டுதேன். ஒரே விஷயம் மூன்று வகையில தன் வடிவத்தை மாத்திக்கிருச்சு. விஷயம் தெரியாதவுக வேற வேறம்பாய்ங்க. அவிக சொல்றதும் தப்பில்லை.அவிகள பொருத்தவரை அது கரீட்டு.
ஒரு தொடர்ச்சி டிஸ்டர்ப் ஆகாம தொடரனும். அப்பம் இலக்கை அடையறது ஈஸி. அந்த தொடர்ச்சிய காப்பாத்த உதவும் ஜாதகத்துல தான் பிறக்கிறோம். அதுவும் சில சமயம் பல நூறு வருடங்கள் காத்திருந்து.

ஆனால் இதுல ஒரு சிக்கல் . நாம வெய்ட்டிங்ல இருந்தப்ப நம்ம நோக்கம் முக்தி. பிறப்புக்கு பிறகு? புக்தி.. அதாவது பொளப்பு.
அல்லாரும் எல்லாம் நேரம்ப்பா.. எல்லாம் விதிப்படி தான் நடக்கும்னு ஜல்லியடிக்கிறாய்ங்க. அப்படி நடந்தா – நடக்க விட்டா நம்மில் யாரும் ஜோதிடத்தையோ – ராசிக்கல்லையோ -வாஸ்துவையோ தேடி ஓடவேண்டிய இழவே இருந்திருக்காது.

பின்னே என்ன ஆச்சு?
நாம எப்படி வாழனுமோ அப்படி ஒரு வாழ்க்கைய நாம நினைச்சுக்கூட பார்க்கிறதில்லை. விட்டா அதுக்கு நேர் எதிரான வாழ்க்கைய வாழறோம் -அதை தக்கவச்சுக்கறதுக்காவ உடல் நலம்,மன நலம்,பொஞ்சாதி,பிள்ளை,குட்டி எல்லாத்துக்கும் ஆப்பு வச்சுக்கறோம்.
பீத்திக்கிறதா நினைக்காதிங்க. 1990 மார்ச் லருந்து ஜாதகங்கள் பார்க்கிறேன். ஒரு நாளைக்கு ஒரு ஜாதகம் (?) மட்டும் பார்த்திருந்தாலும் 2013 மார்ச் வரைக்கும் 13×365= ?? ஜாதகங்கள் பார்த்திருக்கேன். இதுல சனம் கெட்டு கீரை வழி ஆக என்னடா காரணம்னு பார்த்தா ..அவன் ஜாதகத்துக்கு சம்பந்தமே இல்லாத வாழ்க்கைய வாழ்ந்துக்கிட்டிருப்பான். நாயடி.

நம்ம கிட்ட ஜாதகத்தை கொடுத்ததும் கேட்கிற மொத கேள்வி . “என்னங்க..ஜாதகம் பரவால்ல தானே” கொய்யால ஜாதகம் என்ன வயாக்ராவா ஸ்ட் ராங் -டபுள் ஸ்ட் ராங் எல்லாம் வரதுக்கு.

பிறந்து எவ்ள மோசமான ஜாதகமா இருந்தாலும் அது நம்மை எப்படி வாழச்சொல்லியிருக்கோ அப்படி ஒரு வாழ்க்கைய வாழ்ந்தா பிரச்சினையே கிடையாது. அப்படி வாழ ஆரு ரெடி? ஊஹூம்.

அதனாலதேன் இப்படியா கொத்தவுகள கடுப்பேத்தி நம்மை லைனுக்கு இழுக்கத்தேன் நக்கலும் நையாண்டியுமா இந்த தொடரை எழுதிக்கிட்டிருக்கேன்.
நீங்க நெல்லா வாழனுமா?

உங்க ஜாதகம் எப்படி வாழச்சொல்லியிருக்கோ அப்படி வாழுங்க.

உங்களால ஊரும் ,நாடும்,சமூகமும் வளம்பெறனுமா உங்க விருப்பம் போல வாழுங்க.
(இன்னம் நிறைய மேட்டர் இருக்கு வரேன்..