அண்ணே வணக்கம்ணே !
சனிக்கிழமை ஒரு நீண்ட நெடும் பயணம் மேற்கொண்டேன். இதன் சாரத்தை //நாம் வெளியிட்ட 4 புத்தகங்களும் காட்பாடி,வேலூர்,ராணிப்பேட்டை,காஞ்சிபுரத்திலும் கிடைக்கும்.வாங்கி படித்து பயன் பெறலாம்.//னு முக நூல்ல ஒரு ஸ்டேட்டஸா தான் போடமுடியும்.
விட்டா இன்னொரு ஸ்டேட்டஸ் போடலாம். //நதிகள் இணைப்புக்காக ஓசூர் டு சென்னை பாதயாத்திரை மேற்கொண்டுள்ள ஐ.ஏ.எஸ்.சர்தார் குழுவினரை காஞ்சிபுரத்துல சந்திச்சன்.அன்னாரின் கட்டுரை இடம் பெற்ற “பணம் பணம் பணம்”புத்தகத்தை கொடுத்தேன்….//
ஜோதிடப்படி பயணங்களை காட்டும் இடங்கள் இரண்டு. மூன்றாமிடம் ஷார்ட் டிஸ்டன்ஸ் பயணங்களையும் -ஷட்டில் பயணங்களையும் காட்டும். ஒன்பதாமிடம் தூர பயணங்கள்,தூர தேச பயணங்களை காட்டும். மூன்றாமிடத்துல பாவ கிரகம் இருந்தால் (லக்னாதிபதியை தவிர) சலிக்காம எத்தீனி தபா வேணம்னா ஷட்டில் அடிச்சு வேலைய முடிப்பிங்க. இதுவே ஒன்பதாமிடத்துல சுப கிரகம் இருந்தா பேக்கேஜ் டூர் அதுவும் ஸ்பான்ஸர்ட் டூர் எல்லாம் சான்ஸ் அடிக்கும்.
பயணம் பத்தி ஜோதிடத்துல என்னல்லாம் இருக்குன்னு ஒரு ஹின்ட் கொடுக்கிறேன். கீழ் காணும் பாடலை பாருங்க
ஆதிரை பரணி ஆரல் ஆயில்ய முப்பூரம் கேட்டை தீதுறு விசாகம் சோதி சித்திரை மகம் ஈராறும் மாதனம் கொண்டார்தாரார் வழிநடைப்பட்டார் மீளார் பாய்தனிற் படுத்தார் தேறார் பாம்பின் வாய்த்தேரைதானே
(முப்பூரம்: பூரம் , பூராடம், பூரட்டாதி) ]
இத்தீனி நட்சத்திரங்கள்ள பயணமே கூடாதுங்கறாய்ங்க. இதை அப்படியே ஃபாலோ பண்ணா கூட போதும் க்ளோபல் வார்மிங்லாம் ஜூஜுபி. விபத்துகள் பாதியா குறையும்.ஆனால் இதெல்லாம் நடைமுறைக்கு ஒத்துவருமா தெரியல. அடுத்து சனம் ராகு காலம்,எமகண்டம்,சூலம் இத்யாதில்லாம் பார்க்கிறாய்ங்க. நம்மை பொருத்தவரை ஞா கிழமை ராகு காலம்னா மட்டும் ஒரு உதறல்.
சுகமான பயணத்துக்கு நிபந்தனைகள்:
மேற்சொன்ன 3,9 ஆமிடங்கள் அனுகூலமா இருக்கனும். கோசாரத்துலயும் பெட்டரா இருந்தா நல்லது. மேற்படி கிரகங்களோட நட்சத்திரத்துல புறப்படறது நல்லது. பொஞ்சாதியே கூட வந்தாலும் கொஞ்சி மகிழாம ரிசர்வ்டா வே பயணம் பண்ணனும் ( கில்மா+பயணம்லாம் சுக்கிர காரகம் தான்.) ஏற்கெனவே சொன்னதை போல ப்ரைவேட் வெயிக்கிளை விட பப்ளிக் ட்ரான்ஸ் போர்ட் பெஸ்ட். சொந்த வாகனமா இருந்தா – நீங்களே ட்ரைவ் பண்றதா இருந்தா “மப்பு”கூடாதுங்கோ.
மலைப்பகுதி, மையப்பகுதிக்கு போகும் பயணங்கள் சூரிய காரகம். பிரபல புண்ணிய சேத்திரங்கள்,கடல் இருக்கிற ஊரு, வடமேற்கு திசையில் உள்ள ஊரெல்லாம் சந்திர காரகம். எதுக்காக வேணம்னாலும் ரயில்ல போனா செவ் காரகம், போலீஸ் ,ரயில்வே,மிலிட்டரி ,எலக்ட் ரானிக்ஸ் தொடர்பான பயணம்,தெற்கு நோக்கிய பயணம்னா செவ் காரகம்.
டிக்கெட் இல்லாம போனா -பொய் பேர்ல ட்ராவல் பண்ணா, நெம்பர் டூ பிசினசுக்கு , சினிமா சான்ஸுக்கு பயணம் செய்தா ராகு காரகம். வட கிழக்கு திசையில போனா,கோயில் குளம், மத குரு சந்திப்பு, முதலீடு,சேமிப்பு தொடர்பான பயணம்னா குரு காரகம்.
மேற்கு திசையில போனா -அதுவும் அடிமை வேலைக்கு போனா , ஐரன்,ஸ்டீல்,ஆயில்,விவசாயம், வெட்டினரி தொடர்பான வேலையா போனா சனி காரகம். (இதுவே மாடு வாங்க, மில்க் டயரி துவங்க போனா செவ் காரகம்)
அல்லது முந்தா நேத்து நாம போனாப்ல ஏஜென்சி,யாவாரம்,ஜோதிடம் தொடர்பா போனா புத காரகம். ஆடிட்டரை பார்க்க,டாக்டரை பார்க்க ,பிள்ளைக்கு காலேஜ் சீட்டு மேட்டரா போனாலும் ,வடக்கு திசையா போனாலும் புத காரகம்.
எச்சரிக்கை: ஆருனா கமெண்டுல கெட்டா கேது சுக்கிர காரக பயணங்களை பத்தி சொல்றேன்.
பயணம்னா ச்சொம்மா இல்லிங்கோ. நீங்க வீட்டை விட்டாலே நாலாமிடத்து தோஷம் குறையும். (வீடு) பப்ளிக் ட்ரான்ஸ்போர்ட் உபயோகிச்சா ஃபுல் கியாரண்டி. அப்படியில்லாம சொந்த வாகனத்துல ஆயிரம் தயாரிப்புகளோட போனா தோஷம் குறையாதது மட்டுமில்லை,அதிகமாகி விபத்து கூட நடக்கலாம்.
ஒரு பயணத்தின் பின்னாலே ஒரு வாழ் நாளின் தயாரிப்புகளும் , பிற்சேர்க்கைகளும் அடங்கி இருக்கு. நம்ம பயணத்தை பத்தி ரெம்ப விஸ்தாரமா இல்லாட்டாலும் சுருக்கமா இந்த பதிவை போட ட்ரை பண்றேன்.
பிப்ரவரி 16,17 தேதிகளில் மவளோட கண்ணாலம் நடந்து முடிஞ்சது. கடந்த 5 வருசமாவே (அவள் காதலில் விழுந்த பிறவு- மாப்பிள்ளையோட ப்ரிமிசஸ்ல ப்யூட்டி பார்லர் நடத்த ஆரம்பிச்ச பிறகு ) மவ நமக்கு அவெய்லபிளா இருந்ததே காலை8 முதல் 9 வரை , இரவு 9க்கு மேல் 10.30 க்குள்ளத்தான். என்ன ஒரு சவுகரியம்னா எதுனா வேலை இருந்தா கூப்பிடலாம். அல்லது ஃபோன்லயே எண்டார்ஸ் பண்ணலாம்.
அவ படி ஏறி வரும்போது லேசான விசில் சத்தம் கேட்கும் ( நெஜம் பாஸ்) கொலுசு சத்தம் கேட்கும். அவளோட வண்டி தெரு முனைக்கு வரும் போதே வீட்ல உள்ள நாய் கத்தி ஊரை கூட்ட ஆரம்பிக்கும். இதுவும் இல்லாத போயிட்டதால வீடே எம்ப்டியாயிட்ட மாதிரி ஒரு ஃபீல். பொஞ்சாதி மேட்டரு ? ஊஹூம்.சொல்லிக்கிறாப்ல ஒரு ம..னாவும் கிடையாது.
இதெல்லாம் ஒரு பக்கம்னா அதே சமயம் ரீ ப்ரிண்ட் ஆகி வந்த புத்தக பிரதிகள் வேற வவுத்த கலக்கிக்கிட்டிருந்தது. கண்ணாலத்துக்கு வந்திருந்த இரண்டு சிறுமிகள் பந்த் காரணமா லாக் ஆகியிருந்தாய்ங்க. நம்ம வயசுக்கு 18+ கூட சிறுமி மாதிரி தானே. இதாண்டா சான்ஸுன்னு மார்க்கெட்டிங்குக்கு ப்ரிப்பேர் ஆக ஆரம்பிச்சன்.
புஸ்தவங்களை எல்லாம் ப்ளாஸ்டிக் கவர்ல போட்டு சீல் பண்ணி , பத்து பத்தா எண்ணி கட்ட வச்சேன். ஒரு ரெண்டாயிரம் பாம்லெட் அடிச்சு வச்சுக்கிட்டன். புஸ்தவ கட்டை தூக்கிக்கிட்டு பயணம் பண்றதும்,மார்க்கெட்டிங் பண்றதும் இம்சை . அதனால வயசானாலும் ஜஸ்ட் உடலாலயே வாழும் பார்ட்டி ஒன்னை பிக் அப் பண்ணிக்கிட்டன். (எதையும் ப்ளான் பண்ணி செய்யனும்ல)
அந்த பார்ட்டி ரீச் ஆக கொஞ்சம் போல லேட்டாச்சு. அதுக்குள்ற தாடிய ட்ரிம் பண்ணனும்ங்கற மேட்டர் ஞா வர சலூனுக்கு போற வழி தானேன்னு சித்தூர், கே.எம்.எர்ராய்யா ஷாப்புக்கும், பழைய பஸ் ஸ்டாண்டுல கார்னர் ஷாப் ஒன்னத்துக்கும் தலா பத்து பிரதிகள் தள்ளி விட்டன். ஆஸ்தான ஹேர் ட்ரசர்ஃபோனை லிஃப்ட் பண்ணவே இல்லை.
வேற இடத்துல காரியத்தை முடிச்சன். ஏற்பாடு பண்ணி வச்ச வெயிட்லிஃப்டர் வந்துட்டாரு. இன்னொரு ரவுண்டு புறப்பட்டு விஜய லட்சுமி தியேட்டர் சந்திப்புல ஒரு ஷாப், எம்.எஸ்.ஆர் தியேட்டர் பக்கத்துல ஒரு ஷாப்புன்னு தலா 10 புக்ஸ் மார்க்கெட் பண்ணேன். ஆக சித்தூர்லயே ஒரு கடைக்கு 40 பிரதி கணக்குல அஞ்சு கடைய ரீச் பண்ணியாச்சு. மொத்தம் 200 பிரதி.
அடுத்து ரெண்டு பார்சலோட வேலூர் பஸ் பிடிச்சு காட்பாடியில இறங்கினம். 2004 ல ஒரு பஞ்சாயத்து செய்ததுல அங்கன ஒரு பார்ட்டிய தெரியும். அவிக வீட்டுக்கு போயி ஒரு பார்சலை அங்கன லேண்ட் பண்ணிட்டு அண்ணா சிலை எதிர்ல ஒரு கடை (1) , படக்குன்னு ஷேர் ஆட்டோ ஏறி வேலூர் புதிய பஸ் நிலையம் .
உள்ளாற ஒளிச்சு வச்சிருந்த கடைய எப்பமோ நோட் பண்ணி வச்சிருந்தன் .பக்கத்துலயே ஆவின் பால் வேற . டீ சாப்டா ,தம் போடனும்,தம் போட கடைக்கு வரனும். தம் அடிச்சுக்கிட்டே புஸ்தவங்களை பார்க்க தோனும். வாங்கவும் தோனுமில்லையா? அங்கே தலா பத்து பிரதி. மேட்டர் இன்னாடான்னா கடை அண்ணனோடது தம்பி தான் இருந்தாப்ல. ஆனாலும் கன்வின்ஸ் பண்ணி தள்ளினன். (2)
பிறவு மறுபடி ஆட்டோ பிடிச்சு பழைய பஸ் ஸ்டாண்டு. பெங்களூர் ரோட்ல புக் ஷாப் கணக்கா ஒரு கடை அங்கே தலா ஒரு பத்து பிரதி (3) பழைய பஸ் ஸ்டாண்ட் என்ட் ரன்ஸுல ஒரு கடை .அங்கே தலா ஒரு 10 பிரதி. (4) இதுவரை மார்க்கெட்டிங் ரெம்ப ஜோரா நடந்தது. அதுக்கு பிறவு நொண்டியடிக்க ஆரம்பிச்சது.
சி.எம். சி ன்னா உலக நாடுகள்ளருந்துல்லாம் வருவாக. நம்ம புஸ்தவம் ஒலகமெல்லாம் போயிரும்னு பார்த்தா ஒரே ஒரு புஸ்தவகடை கூட இல்லை. இருந்ததெல்லாம் நாலு பேப்பர் விக்கிற கடை.புஸ்தவம்னா வெறும் இந்தி,இங்கிலீஷ் விக்கிற கடை தான் இருந்தது. மத்தபடி எல்லாமே ஹோட்டல்,ஜூஸ் லேண்ட், இதர கடைகள் தான்.
கடுப்பாகி பழைய விஸ்வாசத்துல தினத்தந்தி ஆஃபீஸ். மேனேஜர் இன்னம் வரல. செக்யூரிட்டி கிட்டே ஒரு செட் கொடுத்துட்டு மறுபடி சி.எம்.சி. கொஞ்சம் உன்னிப்பா ஃபாலோ பண்ணதுல ஒரு சின்ன கடை -நிறைய புஸ்தவங்களோட இருந்தது. அந்த கடைக்கு ஒரு செட் இறக்கிட்டம் (4)
பசி வவுத்தை கிள்ளவே நம்ம முக நூல் நண்பரோட ஸ்டேட்டஸ் ஞா வந்தது . வெஜிட்டேரியனை விட நான் வெஜிட்டேரியன் தான் சிக்கனம். சிக்கன் பிரியாணி அடிச்சம். இன்னம் கொஞ்சம் ஹாட்டா இருந்திருந்தா அனுபவிச்சிருக்கலாம். பெட்டர்.
பிறவு சி.எம்.சி சந்திப்புலயே ஒரு ப்ரவுசிங் சென்டரை பார்த்து நாம செட்டில் ஆகிட்டு,கூட வந்தவரை காட்பாடிக்கு விரட்டி அங்கே உள்ள பார்சலை பிக் அப் பண்ணிக்கிட்டு புது பஸ் ஸ்டாண்ட் வர சொல்லிட்டம்.
பிரவுசிங் சென்டர் “அவா” ளோடது போல. பாவம் ..ஒரே கம்யூனிட்டிக்குள்ள தலை முறை தலைமுறையா மேரேஜ் செய்து செய்தா .. அல்லது அவிக முன்னோர் குல அகங்காரத்துல செய்த அலப்பறையா காரணம் என்னன்னு தெரியல. இருந்தது ஐயரம்மா. அவிகளுக்கு கம்ப்யூட்டர் பற்றிய அரிச்சுவடி கூட தெரியல.
கம்ப்யூட்டருக்கு ஃப்ரீ சர்வீஸு பண்ணிட்டு ச்சொம்மா மெயில் செக் பண்ணீட்டு புது பஸ் ஸ்டாண்ட் . நண்பரும் வந்து சேர ராணிப்பேட்டைக்கு ஏறிட்டம். ஏதோ குழப்பத்துல முத்துக்கடையில இறங்கினம். அங்கன ஒரு ஹை கிளாஸ் வெஜ் ரெஸ்டாரன்ட்.வாசல்ல ஒரு பெரிய ஷாப். அங்கன மார்க்கெட் பண்ணவே ஒரு காஃபி சாப்டம்.ஆனாலும் ஒன்னும் பேரல.
மறுபடி ஆட்டோ பிடிச்சு ராணிப்பேட்டை, அங்கே சேகர் புக் ஸ்டால். எஸ்கிமோ கிட்டே ஃப்ரிட்ஜ் வித்திருக்கலாம்.அந்தளவுக்கு கன்வின்ஸ் பண்ண வேண்டியதாயிருச்சு. ஆள விடுங்கப்பான்னுட்டு காஞ்சிபுரம் ஏறிட்டம்.
அங்கே தலப்பா கட்டு பிரியாணி ஸ்டால் பக்கத்துல ஒரு கடை தினமலர் போர்டெல்லாம் இருந்தது.அங்கே தலா பத்து பிரதி (5)
அடுத்து நதிகள் இணைப்பு இயக்கத்தலைவருக்கு ஃபோன் போட்டு அவரையும், அவர் பாதயாத்திரை குழுவினரையும் சந்திச்சம்.ஏதோ மவ கண்ணாலம், நூல் வெளியீடு,மறு அச்சுன்னு கஷ்ட காலத்துல இருந்தாலும் எளிய பங்களிப்பா ரூ.500 கொடுத்துட்டு வெளிய வந்தம்.
மறுபடி காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டுல ரமேஷ் காஃபி பார்ல தலா பத்து பிரதி இறக்கி விட்டம் (6) அங்கிருந்து வேலூர்.வேலூர்லருந்து சித்தூர். நேரம் நள்ளிரவு 12.30 .
அடுத்து சென்னை வேற போகனும். பார்சல் தூக்கிக்கிட்டு அலைய முடியும்னு தோனலை.அதுனால ஒரு பார்சல் கட்டி லாரி சர்வீஸுல அனுப்பிட்டு சென்னை நண்பரை லிஃப்ட் பண்ணி வைக்க சொல்லிரனும். பிட்டு பிட்டா மார்க்கெட்டிங் பண்ணனும். பார்ப்பம்.
பின் குறிப்பு:
ஜோதிடம்360 முதல் பதிப்பின் விமர்சனத்தை வெளியிட்ட ஒரே இதழ் ஜோதிடபூமி. இதன் ஆசிரியர் ஒரு பிராமணர் என்பது அப்போதைக்கு பெரும் அதிர்ச்சியை தந்தது. இம்முறையும் நான்கு நூல்களையும் அனுப்பியிருக்கன். பார்ப்போம்.