கால மாற்றமும் -கிரக பலனும் : 7 ஆம் பாவம்

classroom

அண்ணே வணக்கம்ணே !
“எதை எல்லாம் மாத்தமுடியுமோ அதை எல்லாம் மாத்தற சக்திய கொடு . எதையெல்லாம் மாத்த முடியாதோ அதை எல்லாம் ஏத்துக்கிட்டு வாழற புத்திய கொடு . எதை மாத்த முடியும் -எதை மாத்த முடியாதுங்கறதை அசெஸ் பண்ற அறிவை கொடு ” -இது ஒரு பிரார்த்தனை .
மத்த மேட்டர்ல எல்லாம் இது எந்தளவுக்கு பொருந்துதோ பொருந்தாதோ ஆனா இந்த 7 ஆம் பாவத்துக்கு மட்டும் சிக்குன்னு பொருந்துது .ஏழாம் பாவம் மனைவிய காட்டும்ங்கற மேட்டரை சொல்லனுமா என்ன?

சமீபத்துல ஒரு கண்ணாலம் அட்டென்ட் பண்ணியே ஆகவேண்டிய கண்ணாலம். விதியில்லாம போயிருந்தன். கொய்யால கல்யாண பொண்ணை (?)பார்த்தா வாழவந்த பொண்ணு மாதிரியே தெரீல. வாழ்ந்து முடிச்சு வந்த மாதிரி இருக்கு .

எங்க பீரியட்ல எல்லாம் பொண்ணு வயசுக்கு வந்துட்டா அடுத்தது கண்ணாலம் தேன் ( ரெம்ப ஓவரு -கொளந்தைங்கல்லாம் பிள்ளையாண்டுக்கிட்டிருக்கும்) .கு.பட்சம் படிப்பை நிப்பாட்டிருவானுவ.

அந்த குட்டிய அங்க ஏன் நிக்கிற , இங்க ஏன் நிக்கிற, அங்க என்ன பார்வை ? இங்க என்ன பார்வைன்னு ..ஒன்னும் தெரியாத கொளந்தைக்கு கூட அட நம்ம கிட்ட என்னமோ இருக்குடாங்கற ஃபீலை உண்டு பண்ணிருவாய்ங்க.

அததும்பாட்டுக்கு அம்மி அரைச்சு ,கோலம் போட்டு ,உரல்ல மாவாட்டி ஃபெல்விக் போன் எல்லாம் வலுவாகி ஃபிசிக்கலா,சைக்கலாஜிக்கலா கண்ணாலத்துக்கு + தாயாராக தயாராயிட்டிருக்கும். கண்ணாலம்+குழந்தை பெத்துக்கறது ரெண்டு தேன் லைஃப் டைம் அச்சீவ்மென்ட்.

இன்னைக்கு என்ன நிலைமை? கண்ணாலங்கறது கடேசி பட்சமாயிருச்சு. பெண்களுக்கு மெனோஃபஸும் -ஆண்களுக்கு விறைப்பு பிரச்சினையும் வந்த பிறவு தான் கண்ணால பேச்சையே ஆரம்பிக்கிறாய்ங்க. நாம என்னதான் காட்டை அழிச்சு ,மலைய மொட்டை போட்டு ,ஆற்று மணலை சுரண்டி நாறடிச்சாலும் இயற்கை என்னமோ தட்டுத்தடுமாறி தன் வேலைய ஒழுங்கா செய்யத்தான் ட்ரை பண்ணுது .

ஆனால் லைஃப் ஸ்டைல் மாறிப்போச்சே.

க்ளோபலைசேஷன், ப்ரைவைட்டைசேஷன், லிபரலைசேஷன் காரணமா காஸ்ட் ஆஃப் லிவிங் எகிறிப்போச்சு .கூடவே கன்ஸ்யூமரிசம் கொய்யால பார்த்ததை எல்லாம் வாங்கிரனும்.ஒரு சம்பளம் போதல. ரெண்டு சம்பளம் வேணம்.பொஞ்சாதியும் சம்பாதிக்கனும். சம்பாதிச்சே ஆகனும்.

ஜோதிடப்படி ஆண் ராசி -பெண் ராசி ; ஆண் கிரகம்-பெண் கிரகம்னு க்ளாசிஃபிகேசன் இருக்கு . சர்வைவல் பிரச்சினை காரணமா பெண்கள் ஜாதகத்துல “மேல் ” டாமினேஷன் சாஸ்தியிருதா என்ன தெரியல. நாலு பஸ்ஸு மாறி போயாகனும், சைக்கிள் மிதிக்கனும், டூ வீலர் ட்ரைவ் பண்ணனும், தெருமுனையில உள்ள சோம்பேறிகளை டாக்கிள் பண்ணனும்.எத்தனை எத்தனை கெண்டம்?

எண்ணம் போல் மனம் .மனம் போல் வாழ்வு மட்டுமில்லை .பாடியும் அவ்ளதேன். உட்கார்ந்த வாக்குல பல்லாங்குழி,தாய பாஸு ஆடிக்கிட்டிருந்தா பாக்ஸு பெருசாவும். ஆடி ஓடி காலேஜு,ஆஃபீஸுன்னு திரிஞ்சுக்கிட்டிருந்தா என்னாகும்? அந்தந்த பார்ட்டுக்கு தேவையான ரத்தத்தை ஹார்ட் பம்ப் பண்ணித்தானே ஆகனும். இதனால என்னாகுது?உடலின் இனப்பெருக்க மண்டலத்துக்கான கோட்டா குறையுது . தெரு தெருவுக்கு ஃபெர்ட்டிலிட்டி சென்டர் , கைனகாலஜிஸ்டுங்க ஓவர் டைம் பண்ண வேண்டி இருக்கு.

அந்த காலத்துல பொண்ணெடுக்கிறவன்லாம் ஏதோ வீட்டுக்கு உபயோகமா பொங்கி போட்டுக்கிட்டிருந்தா போதும்னு தேடுவான். இன்னைக்கு? மாடு பிடிக்க போறவன் கூட ஒத்தையா போவான்.ஆனால் பொண்ணு பார்க்க கும்பலா போவாய்ங்க. ஒவ்வொரு பார்ட்டி ஒவ்வொரு மேட்டர்ல ஜூரியா இருப்பாய்ங்க.
பார்க்க வந்த பொண்ணை தனிய ரூமுக்குள்ள தள்ளிக்கிட்டு போயி மேல கீழ எல்லாம் அழுத்தியே பார்த்துருவாய்ங்களாம். பேட் எல்லாம் வச்சு ஏமாத்த முடியாதுங்கோ ! ஏழு தலைமுறைய விஜாரிப்பாய்ங்க. எல்லாம் ஒழுங்கா வாழ்ந்திருக்குங்களா?பெத்து இறக்கியிருக்குங்களா? ஆயிரம் கேள்வி .ஆயிரம் டெஸ்டு .சாமுத்ரிகம்,ஹஸ்த சாமுத்ரிகம், டி.என்.ஏ டெஸ்ட் தவிர எல்லாமே நடக்கும்.

இன்னைக்கு பொம்பள புள்ளைங்க நிலைமை ரெண்டுபக்கமும் ஏத்தின மெழுகு வர்த்தி கணக்கா ஆயிருச்சு. பொம்பளயா லட்சணமாவுமிருக்கனும் – தாளி ..ஸ்டேட் ஃபர்ஸ்ட் வரனும் -கேம்பஸ் இன்டர்வ்யூல வேலை கிடைச்சுரனும் – தன் கண்ணாலத்துக்கு தானே நகை நட்டு சேர்த்து அப்பார்ட்மென்ட் தவணையும் கட்டிக்கனும். என்னங்கடா இது அ நி யாயம்?குங்கும பரணி மாதிரி ஒரு டப்பால டிஃபன். இல்லையா பீசா,பர்கர் ,பன்றி மலம்.

இன்னைய தேதிக்கு ஆணுக்கு என்னெல்லாம் கெட்டப்பழக்கம் இருக்கோ எல்லாமே பெண்ணுக்கும் வந்திருச்சுன்னு பேசிக்கிறாய்ங்க. கெட்ட பழக்கம் மட்டுமில்லிங்க பழக்க வழக்கம் – முட்டி வலி – கோபம் -டென்ஷன் ஒன்னில்லை எல்லா இழவும் வந்தாச்சு.

இந்த காலகட்டத்துல 7 ஆம் பாவாதிபதியும் -அந்த பாவத்துல நின்ன கிரகங்களும் – கங்கண காரகனான குருவும் -களத்ர காரகனான சுக்கிரனும் தர்ர பலன்ல என்னா மாதிரி மாற்றம்லாம் ஏற்பட்டிருக்கும்? கொஞ்சமா கெஸ் பண்ணி வைங்க.அடுத்த பதிவுல நொங்கெடுக்கலாம். உடுங்க ஜூட்டு .