நல்லதுக்கு காலமில்லையே ஏன்?

அண்ணே வணக்கம்ணே !
நான் ஆருக்கும் எந்த துரோகமும் பண்ணலியே எனக்கே ஏன் இவ்ள கஷ்டம் வருது? நான் எவன் வவுத்தெரிச்சலையும் கொட்டிக்கலையே எனக்கு பிறந்தது ஏன் உருப்படாம போகுது? இப்படி சில வில்லங்கமான கேள்விகளை நாமளும் ஃபேஸ் பண்ணி மெர்சலானது உண்டு.

மத்தவிக கதை எப்டியோ நமக்கு தெரியாது. நம்மை பொருத்தவரை கேள்வின்னு ஒன்னு வந்துட்டா அதுக்குண்டான பதிலை ஏழு மலை ஏழு கடல் தாண்டி தேட வேண்டியதில்லை. ஊறுகா பானை கணக்கா மண்டைய குலுக்கினா போதும் மேட்டர் வெளிய வந்துரும்.

லக்னத்துல சூரியன் :
ஈகோன்னா என்னன்னு தெரியாத காலத்துல எம்.ஜி.ஆர் சிவாஜி சண்டை போட்டு முன் பல் மொக்கை. எப்பப்பாரு மண்டையில அடிபட்டு தையல் . மொகத்துல அடிப்பட்டு தையல். அல்லது கண்ல கட்டி வந்துரும்.

எப்போ நாம திமிர் பேச்சு , அகங்கரத்துல நாய் மேல ஏறி கோலம் வர்ரதுன்னு வாழ்ந்து வந்தமோ அப்பல்லாம் ஒன்னமே கிடையாது. (ஆனால் பத்து பத்து ரூவாய்க்கு லாட்டரி) பிறவு இதெல்லாம் வெட்டின்னு பேக் டு தி பெவிலியன் போய் சின்ன பசங்களை கூட ” அண்ணா.. செரிங்ணா..அப்டியேண்ணா. வரங்ணா”ங்கற ரேஞ்சுக்கு வந்துட்டம். பைசா புரள ஆரம்பிச்சுருச்சு .ஆனால் ..

ஆறங்குல கன மரத்துல செய்து வச்சிருந்த அஞ்சுக்கு அஞ்சு அடி சன்னல் விழுந்து நடு நெத்தி ஓப்பன் ஆயிருச்சு.

நீதி: லக்னத்துல சூரியன் இருந்தா அகங்காரத்துல அழியனும். இல்லின்னா மண்டை ஒடையும்.

லக்னத்துல குரு: ( 6-9 க்குடையவர்)
சதா சர்வ காலம் உஞ்ச விருத்தி , அசல் பார்ப்பான் போல ” நல்லது கெட்டது ” சொல்லி வவுறு வளர்த்துக்கிட்டிருந்தம். எப்பவும் பொருளாதார பற்றாக்குறை -குண்டிய சுத்தி கடன்.

எப்படி மாட்டிக்கிச்சு என்னன்னு சொன்னா விடிஞ்சுரும். தூரத்து -பெரீ மன்சனை ஜன்ம விரோதியா பாவிச்சு “லொள்ளு பண்ண ஆரம்பிச்சம்” (ஆருன்னு கேட்கலியே -எங்க ஊரு சந்திர பாபு நாயுடுங்கோ)

என்னாச்சு? தூர தேசத்துலருந்தெல்லாம் காசு பணம் புரள ஆரம்பிச்சுருச்சு . அவரை ரோகாதிபதியா செயல்பட விட்டதால பாக்யாதிபதியாவும் செயல்பட ஆரம்பிச்சாரு.

நாம சாதாவா இருந்தப்போ கியாஸ் ட்ரபுள்,அஜீர்ணம்,பிச்சைக்கார பொளப்பு. கொஞ்சம் சோதாவா மாறினதும் எல்லாமே மாறிப்போச்சு.

ரெண்டுல சுக்ரன்:(பாதகாதிபதி)
ஆரம்ப காலத்துல செக்ஸ் அதுவும் முக்கியமா இந்த சுய இன்பம்னா செம ஷை ஆயிருவம்,ஜென்மமே செத்துப்போயிரும். அதுக்குன்னு ஒரு பார்ட்டி கிராஸ் ஆனான். எல்லா பிரமையும் போச்சு . புரட்சி கவிஞர் பாரதி தாசன் கணக்கா பச்சை பச்சையா பேச ஆரம்பிச்சம். தோஷம் போச்சு. பைசா புரள ஆரம்பிச்சுருச்சு.

ரெண்டுல சந்திரன்: (லக்னாதிபதி)
பத்தாங்கிளாஸ் சமயத்துல ஷேவிங்குக்கு போனா நாவிதர் உற்சாக மிகுதியில பையனுக்கு நெல்லா வளரட்டும்னு மீசையையும் எடுத்து விட்டுட்டாரு. அது மறுபடி வளர்ர வரை அஞ்ஞாத வாசம் செய்தம். பேச்சும் அப்டித்தான் .ஒரு பேச்சுன்னு கொடுத்தா அதுக்கு கமிட் ஆகி நாறிப்போறது வழக்கம்.
ஆருனா ஏம்பா நேத்திக்கு இப்டி சொன்னே இன்னைக்கு இப்டி சொல்றியேன்னு கேட்டா ” கடந்த கணத்தோடோ -அடுத்த கணத்தோடோ எனக்கு எந்த தொடர்புமில்லை. நான் அந்தந்த கணத்தில் வாழ்பவன்”னு சொல்ட்டு போயிக்கினே கீறம். சைன்ஸ்,வீசிங், சஞ்சலம், டெப்ரஷன், ஸ்ட் ரெஸ் எல்லாம் போயே போச்.

இப்டி எல்லா கிரகத்தை பத்தியும் டீட்டெய்லா சொல்ல முடியும். நான் என்ன சொல்லவரேன்னா நாம கெட்டவன்னு முத்திரை குத்தற பார்ட்டி அவன் விதி வழியே போயிட்டே இருக்கான். கெட்டதை நடக்க அனுமதிக்கிறான். ஆகவே அடுத்து நல்லதும் நடந்துருது.

நெல்லவன் விதிக்கு எதிரா போராடறான். கடவுளே தொங்கல்ல விட்டுர்ராரு .லக்னத்துல சனின்னா கஞ்சனா இருக்கனும்.அழுக்கா இருக்கனும். நாத்தம் பிடிச்சு கிடக்கனும்.புதுப்பொஞ்சாதி சொல்றாளேன்னு “சொந்த தர்மத்தை “விட்டுட்டா நொண்டி ஆகலாம்,பைல்ஸ் வரலாம், நெர்வஸ் ப்ரேக் டவுன் ஆகலாம்.
லக்னத்துல ராகுன்னா சதி செய்யனும்.இல்லின்னா அடுத்தவன் சதிக்கு பலியாயிருவான். ரெண்டுல ராகுன்னா பாம்பு விசம் மாதிரி பேசனும். ஏமாத்தனும்.இல்லின்னா எவனாச்சும் ஏமாத்திருவான்.

மாத்தி ரோசிங்க. கணக்கு கரீட்டா வரும். இன்னொரு சந்தர்ப்பத்துல டீடெய்லா பார்ப்பம். உடுங்க ஜூட்டு.