ரஜினி முதல்வராகனும்னா

ரஜினிக்கும் நமக்கும் உள்ள உறவு தெரியாதவுகளுக்கு மட்டும் சின்ன விளக்கம். சிவப்பு விளக்கை எரியவிட்டு தொழில் பண்ற பாலியல் தொழிலாளிக்கு கூட ஆதரவு தெரிவிச்சு பாலியல் தொழிலை சட்டப்பூர்வமானதாக்க வேண்டும்னு குரல் கொடுக்கிற கேரக்டர் நாம. அதே நேரத்துல பத்து பேரை முந்தானையில வச்சுக்கிட்டு பத்தினி வேஷம் போட்டா மட்டும் கடுப்பாயிருவம். இதான் நம்ம  கேரக்டர்.

ரஜினி மட்டும் பாரதியார் கணக்கா “நடிப்பு எமக்கு தொழில்+வீட்டுக்குழைத்தல்”னு சொல்லிட்டு பெர்ஃபார்ம் பண்ணியிருந்தா “ஒழிஞ்சு போவட்டும் வயித்து பொளப்பு”ன்னு விட்டிருப்பம்.

ஆனால் இவரு எம்.ஜி.ஆர் கணக்கா -வாலி /வைரமுத்து -மற்றும் வசன கர்த்தாக்கள்  உபயத்துல கொள்கை முழக்கம்லாம் செய்துக்கிட்டிருந்து “அதெல்லாம் வசனம்யா -அந்த கேரக்டர் பேசின வசனம்யா”ன்னு அடிச்சு விட்டாரு பாருங்க. அங்கதான் ஏதோ படத்துல செந்திலை கனவுல கண்டு தலைகீழா குதிச்ச கவுண்டர் ஆயிட்டாரு ரஜினி.

என்னடா இது எல்லாம் கழுவி ஊத்தறதா இருக்குன்னு கழண்டுக்காதிங்க நெஜமாலுமே ரஜினி முதல்வராகனும்னா என்ன பண்ணனும்னு ஒரு ப்ளூ ப்ரிண்டும் கொடுத்துர்ரன்.

இன்னைக்கு புதியதலைமுறையில ஒருத்தர் மளிகை ஜாமான் லிஸ்டு கணக்கா போட்டாரு. ரஜினியோட அரசியல் எதிர்வினைகள் எல்லாமே தன்னை-தன்னவர்களை சார்ந்த விஷயத்துக்கானதா தான் இருந்தது. மம்மிக்கு எதிரா வாய்ஸ் கொடுத்ததுலருந்து – முந்தா நாள் “மோடி நெல்ல நிர்வாகி”ன்னு கேன்வாஸ் பண்ணதுவரை எல்லாமே தன் நலம் அல்லது தன்னவர் நலம் தான்.

(அதே விவாதத்துல எம்.ஜி.ஆரை விட ரஜினி பெரிய ஆள்னு ஒரு பார்ட்டி சொன்னதை சீரியசா எடுத்துக்கல. இல்லின்னா இந்த பதிவே அதை பத்தி தான் வந்திருக்கும்)

செரி செரி மேட்டருக்கு வந்துர்ரன்.ரஜினி முதல்வராகனும்னா அவரு என்ன பண்ணனும்னு சொல்லி விட்டுர்ரன்.

1.ஏற்கெனவே தனக்கு சொத்துக்களை வித்தவுகளை எல்லாம் காண்டாக்ட் பண்ணி ஒரு இடத்துல கூட்டி   மீடியா முன்னே “எக்காரணம் கொண்டும் நில ஆக்கிரமிப்பு வழக்கு போடமாட்டோம்”னு சொல்ல வச்சிரனும்.

2.ஐஸ்வர்யாவோட கடனை எல்லாம் பைசல் பண்ணி நோ ட்யூ சர்டிஃபிக்கேட் வாங்கிக்கனும்.

3.அரசாங்கத்துக்கும் தனக்கும் உள்ள டீலிங்கெல்லாம்  கரெக்டா இருக்கா. பார்த்துரனும். ( விதி மீறல்)  அதை எல்லாம் பைசல் பண்ணிரனும். மொதல்ல ஓட்டர் லிஸ்டுல பேர் இருக்கா பார்த்துரனும் -ஒவ்வொரு வாக்காளர் சேர்ப்புலயும் இதை ஃபாலோ அப் பண்ணிக்கனும்.

4.ரசிகர்களுக்கு வாக்களிச்ச கல்யாண விருந்தை ஒடனே நடத்திரனும்.( எவனும் அதுல பல்லி,பூரான்னு போட்டுவிட்டுராத பார்த்துக்கனும்.

5.நதி நீர் இணைப்புக்கு வாக்களிச்ச ஒரு கோடி ,கும்ப கோணம் பள்ளி பிள்ளைகளுக்கு வாக்களிச்ச உதவித்தொகை எல்லாம் பைசல் பண்ணிரனும்

6.முழு மேக்கப்போட ஒரு செட் போட்டு  ஒரு ஸ்பீச்சை ஷூட் பண்ணிக்கனும்.அதுல மொத அஞ்சு மினட் தான் எடுத்த தப்பான ஸ்டாண்டுக்கெல்லாம் மன்னாப்பு கேட்டுக்கனும். (முக்கியமா குசேலன் வசனத்துக்கு)  என் படத்துல வந்த எல்லா வசனம் – பாட்டுக்கு நான் தான் பொறுப்பு. நான் தான் ஓகே பண்ணேன்னு சொல்லனும்.

பாஜகவுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது . எனக்கு சாதி இல்லை.மதம் இல்லை.மொழி இல்லை. நான் மனிதன். என் கொள்கை மனிதம் . என் இயக்கம் /கட்சி தனியானது. தேர்தலுக்கு பிறவு என்னால தனிச்சு ஆட்சி அமைக்க முடியாம போனா பா.ஜ.கவை தவிர ஆரு என் கட்சி கொள்கைகளை ஏத்துக்கிட்டு சனத்துக்கு நல்லது பண்ணுவாய்ங்களோ அவிகளை ஆதரிப்பேன்.மந்திரிசபையில சேர மாட்டேன்னு எச்சி மீஞ்சி சத்தியம் பண்ணனும்.

கட்சியோடகொள்கைகள்னு ஜஸ்ட் பத்து பாய்ண்ட். மட்டும் சொல்லனும்.
அ)எல்லா பிரச்சினைக்கும் அடிப்படை ஏழ்மை -அதற்கு காரணம்  விவசாயத்தை கைவிட்டது. பாசன வசதிகளை மேம்படுத்தாதது.  உண்மையான ப்ரொடக்டிவிட்டி இருக்கிற துறை விவசாயம் ஒன்னுதான். அதுக்கு டாப் மோஸ்ட் ப்ரியாரிட்டி கொடுப்பேன். தமிழக நதிகளை இணைப்பேன். இந்திய நதிகள் இணைப்புக்காக போராடுவேன்.
ஆ)வறுமை ஒழிய நதிகள் இணைக்கப்படனும்- இதனால் விவசாயம் செழிக்கும். படிப்படியா இயற்கை விவசாயத்துக்கு திருப்புவேன். விவசாய உற்பத்திகளை மதிப்பு கூட்டு முறைகளை அமலாக்கி விவசாயிகள் துணையுடன் மானில அரசே மார்க்கெட் பண்ணும்.  லாபத்துல விவசாயிக்கு சம பங்கு.

இ)மேற்படி மிஷன் நிறைவேற தடையா இருக்க கூடிய எல்லா நிர்வாக சீர்கேட்டையும் ஒழிச்சு கட்டிருவன். இந்த மிஷனோட பலன் எல்லா மக்களுக்கும் கிடைக்க வழி செய்வேன்.
இந்த செனேரியோல பத்து பாய்ண்ட் -அதையும் ஒரு அஃபிடவிட்டா ரிலீஸ் பண்ணனும்.

மேற்படி ஷூட்டோட டிவிடியை மீடியாவுக்கு ரிலீஸ் பண்ணி விட்டுரனும். எல்லாம் பேசி பேசி மாய்வானுங்க. இந்த கேப்ல கட்சி பதிவு-உறுப்பினர் பதிவு வேலையை எல்லாம் முடிச்சுரனும்.

விஸ்தாரமா ஒரு பிரஸ் மீட் (காலை 10 முதல் மதியம் 2 வரை ) 

7.கண்ணாலத்துக்கு வந்தவுகல்லாம் மொய் எழுதறாப்ல இந்த ஸ்பீச் -குறைஞ்ச பட்சம் ஹைலைட்சாவது எல்லா சேனல்லயும் டெலிகாஸ்ட் ஆயிரும்.

-இதுக்கப்பாறம் தேர்தலுக்கு ஆறுமாசம் வரை தமிழக  நதிகளை பக்கவாட்ல கவர் பண்றாப்ல ஒரு பொலிட்டிக்கல் டூர்.

தேர்தல் அறிவுப்பு வந்தபிறவு எல்லா ரசிகர்களையும் திரட்டிக்கிட்டு நதிகளை இணைக்க நானே கால்வாய் வெட்டறேன்னு மம்முட்டி,கடப்பாறையோட கிளம்பி கைதானா  சிரேஷ்டம்.

(ரஜினி மேல லவ்ஸ் இருக்கிற பார்ட்டிங்க கிண்டிவிட்டா மேலும் அவிழ்த்து விடுவேன்.இல்லின்னா அம்பேல்)

மரணமும் இன உறுப்பும்

obama withஅண்ணே வணக்கம்ணே !
ஜாதகத்துல எட்டாமிடம் மரணத்தை காட்டுது.இதே எட்டாமிடம் தான் இன உறுப்பையும் குறிக்குது. சாதரணமா/பேச்சு வழக்குல  இன உறுப்பை உயிர் நிலைன்னு கூட சொல்றாய்ங்க. மரணம் -இன உறுப்பு இந்த ரெண்டுக்கும் நிறைய தொடர்பிருக்கு.
மன்சங்க பல முகமூடிகள் அணிந்து செய்ற காரியம் ரெண்டே தான்.ஒன்னு கொல்றது.அடுத்து கொல்லப்பட எதிராளிய தூண்டறது. இது ரெண்டுமே செக்ஸ்ல சாத்தியம். (எப்படின்னு கேட்டா சொல்றேன்) இன உறுப்பு இல்லாம இது ரெண்டும் சாத்தியமா பாஸ்?
நம்ம ஆன்மீக வாழ்க்கைய பத்தி பல முறை சொல்லியிருக்கன். அதுக்கு நம்மை தள்ளிக்கிட்டு போனதே கில்மா தான். ஜஸ்ட் 2 வருசம் வர்ஜியா வர்ஜியமில்லாம எந்த குற்ற உணர்வும் இல்லாம 1984 -86 தூள் பண்ணதுல  நாற்பது வயசு ஆளுக்கு வரவேண்டிய கவலை -யோசனைல்லாம் அந்த 19 வயசுலயே வந்துருச்சு போல.
ச்சீ ச்சீ இந்த பழம் புளிக்கும் ரேஞ்சுக்கு போயிட்டமா ஒடனே மறுமுனை கவர்ந்தது. அதாங்க பிரம்மச்சரியம். ஒத்தாசையா ஆஞ்சனேயரை கூட வச்சுக்கிட்டம். ஒரு ஆறுமாசத்துக்கு மேல தாக்கு பிடிக்க முடியாதது வேற விசயம்.
ஆனால் அந்த அனுபவம் இருக்கு பாருங்க. அப்பம் கிடைச்ச இன்ஸ்பிரேஷன்ஸ்,ஸ்பார்க், தாட்ஸ் எல்லாத்தையும் அப்படியே பொத்திவச்சிருக்கன் .
பேசிக்கலா க்ளவரா-ஆக்டிவா இருக்கிற குழந்தை ஆட்டோமெட்டிக்கா செக்ஸுவலாவும் ஆக்டிவா அக்ரசிவா இருக்கும். செக்ஸுவல் அலர்ட் வந்த பிறவுதான் அறிவே  வளரும் (அறிவுன்னா இந்தியாவின் தலை நகரம் என்னங்கற  ஜாதி இல்லை)
இதுக்கு என்ன காரணம்னா மூளையில பாலியல் மையமும் -அறிவு மையமும் ரெம்ப கிட்டக்க இருக்காம்.அதுல ஏற்படற அதிர்வு இதற்கும் இதுல ஏற்படற அதிர்வு அதுக்கும் பரவுமாம்.
பாலுணர்வு அறிவை கூட்டும். சிந்தனையை கூட்டும் .சிந்தனை ? கேள்விகளை எழுப்பும்.பதில்களுக்காக உயிரை பணயம் வைக்க தூண்டும்.
ஒருத்தன் பாலுணர்வை பாலுணர்வு வேட்கையை எப்படி ஃபேஸ் பண்றாங்கறதை பொருத்து அவனோட ஒட்டு மொத்த கேரக்டரும் எதிர்காலமும் வடிவமைக்கப்படுது.
பாலுணர்வை தைரியமா அங்கீகரிச்சு -அதை மதிக்கிறவன் லைஃப் வேற. குற்ற உணர்ச்சி கொள்றவன் லைஃப் வேற. குறுக்கு வழி தேடறவன் லைஃப் வேற.
இன உறுப்பும் மரணமும்னு டைட்டில் வச்சிருக்கம். டைட்டிலை விட்டு விலகாம இந்த பதிவை கொண்டு போகனும்னு நினைக்கிறேன். பார்ப்பம்.
ஒரு பெரிய களி மண்ணாலான வினாயகர் சிலை. அதுலருந்து கொஞ்சம் கொஞ்சம் மண் எடுத்து புதுசு புதுசா  குட்டி குட்டியா வினாயகர் சிலை  செய்துக்கிட்டே போறம்னு வைங்க .பெரிய வினாயகர் என்ன ஆவாரு?
மொதல்ல தொந்தி காலி. பிறவு பிருஷ்டம் காலி. கொஞ்சம் கொஞ்சமா சிக்ஸ் பேக்குக்கு வந்துருவாரு. அப்பம் அவரு வினாயகராவா இருப்பாரு?
இதே போல ஒரு மன்சன்  செக்ஸ்ல ஈடுபட ஈடுபட “எதுவோ” ஒன்னு குறை பட்டுக்கிட்டே போகுது. (ஒரு சில அடிப்படை விஷயங்கள் மாறாது அது வேற கதை)
“கல்யாணமான புதுசுல உங்கப்பனுக்கு ஒரு கோவம் வரும் பாரு ” – இதையும் கேட்டிருக்கம். அதே போல “இந்த வயசுக்கு இவ்ள கோவம் இருக்குன்னா வயசு காலத்துல எவ்ள இருந்திருக்கும்” இதையும் கேட்டிருக்கம்.
மரணத்தில் மொத்தமா இழந்துர்ரம்.செக்ஸ்ல ? எதையோ கொஞ்சமா இழக்கறோம்.அவ்ளதான் வித்யாசம். தாத்தாவுங்க குரல் எல்லாம் ஸ்வீட்டா மாறுவதும்,பாட்டிங்களுக்கு லேசா தாடி மீசை வர்ரதும் இதைத்தான் காட்டுது.
தாத்தா ஆண்மைய இழக்கறாரு.பாட்டி பெண்மையை இழக்கறாய்ங்க.
அது செரி அப்பம் செக்ஸே கூடாதானு கேப்பிக. ஏற்கெனவே ஒரு பதிவுல சொன்னாப்ல சிஸ்டம் ஹேங் ஆகிற சமயம் கொடுக்கிற ரீ ஸ்டார்ட் மாதிரி உபயோகிச்சா நோ ப்ராப்ஸ். மனசு ,பாடி எல்லாம் வெள்ளிக்கிழமை பீதாம்பரி போட்டு துலக்கின பித்தளை பாத்திரம் மாதிரி ஆயிரும்.
தினம் தினம் துலக்கினா?

 

இந்த தலைப்புல சொல்ல வேண்டிய மேட்டர் மஸ்தா கீது நைனா. ஆருனா நம்மை கிண்டி விட்டா அள்ளி விட தயார்.
பார்ப்போம் .. இதை சனம் எந்தளவுக்கு ஏத்துக்கறாய்ங்க -எந்தளவுக்கு எதிர்க்கிறாய்ங்கனு பார்ப்பம்.

கிங்கராச்சாரி வழக்கு அப்பீலுக்கு சூனா பானா கட்டை

பெரியர்அண்ணே வணக்கம்ணே !
நீங்க ஜோதிடபதிவை எதிர்ப்பார்த்து வந்திருந்தால் சாரி. இந்த கிங்கராச்சாரிய பத்தின பதிவு இது .( எமனோட தூதர்களை கிங்கரர்கள்னு சொல்வாய்ங்க. ) நாம எல்லாத்தையும்  மறந்து கொஞ்சம் ரிலாக்ஸ்டா இருக்கலாம்னு பார்த்தா ஊஹூம்.
நுணலும் தன் வாயால் கெடும்ங்கற மாதிரி எதையோ ஒன்னை செய்து நம்ம வாய்க்கு அவல் கொடுத்துர்ராய்ங்க. பாண்டிச்சேரி சிறப்பு நீதிமன்றத்துல நடந்த சங்கர்ராமன் கொலைவழக்குல நவம்பர் 27 ஆம் தேதி தீர்ப்பு வருது. பிப்ரவரி 27 க்குள்ளே அப்பீல் செய்திருக்கனும். செய்யல.
அந்த வழக்கை நடத்திய அரசு வக்கீல் தீர்ப்பு வந்த உடனே அப்பீல் செய்யனும்னு குறிப்பெழுதிப்புட்டாரு.ஆனாலும் அப்பீல் செய்யப்படல. தாமதமா கவர்னருக்கு ஃபைல் அனுப்பறாய்ங்க.அன்னார் கை எழுத்து போடறாரு. போட்டதும் அவருக்கு ஆப்பு வருது. பதவி காலி.
பதவி இழந்த பிறவு இன்னா மேட்டருன்னே தெரியாது .கை எழுத்து வாங்கிட்டாய்ங்கனு நாலு காலையும் தூக்கிர்ராரு.ஆனாலும் மோதி அரசு கவர்னர் பதவியை ரீஸ்டோர் பண்ணல.
கொய்யால மானமா போயிருந்தா சரித்திரத்துல சின்ன பாரா கிடைச்சிருக்கும்.விபிசிங்குக்கு கிடைச்சாப்ல. சரி ஒழிஞ்சு போவட்டும். இப்பம் லேட்டஸ்ட் டெவலப்மென்ட் என்னடான்னா  நம்ம சூனா பானா சனாதிபதிய சந்திச்சு மனு கொடுக்கிறாரு.
கிங்கராச்சாரி வழக்கை அப்பீல் செய்யக்கூடாதுன்னு ஒரு மனு. (மொதல்ல இந்த மனுங்கற வார்த்தைய தூக்கனும் -நமக்கு மனுஸ்மிருதிதான் ஞா வருது) .ஒடனே சனாதிபதி அதை லா மினிஸ்ட் ரிக்கு அனுப்பறாரு.அவிக உடனே லீகல் ஒப்பீனியன் கேட்டு அட்டர்னி ஜெனரலுக்கு அனுப்பறாய்ங்க.
முதல் கோணல் முற்றும் கோணல்னு ஒரு பழமொழி இருக்கு. மம்மி காலத்துல  நடக்குது சம்பவம். பெசல் ஃப்ளைட் போட்டு அன்னாரை அள்ளிட்டு வர்ராய்ங்க.
காந்தி தாத்தா சொல்லி வச்சிருக்காராம். நோக்கம் மட்டும் இல்லை நோக்கத்தை அடைவதற்கான வழியும் பர்ஃபெக்டா இருக்கனும்னு. இங்கே நோக்கமும் டுபாகூர். ஜெயேந்திரரோட என்னமோ பிரச்சினை. அந்த கடுப்புல -அவரை வழிக்கு கொண்டு வரது தான் நோக்கம்.
சரி நோக்கம் தப்பா கூட இருக்கட்டும். அதை செயல்படுத்தும் போதாச்சும் பர்ஃபெக்டா செய்திருக்கலாம். மம்மிக்கு எதிலயும் அவசரம் (இப்போ ராமசாமி மாதிரி)
நேர் பட பேசுல ஒருத்தர் சொல்றார். அவர் என்ன ஓடிப்போயிர போறாரா? எதுக்கு அந்த அவசரம்?” ஒடனே தியாகு சார் கவுண்டர் கொடுக்கிறாரு. ஏற்கெனவே ஒரு தாட்டி ஓடிப்போனவருதானே. வரலாறு முக்கியம் அமைச்சரே.
அவரே இன்னொரு மேட்டரை சொல்றாரு ஆந்திரா ஹை கோர்ட்ல இதே பார்ட்டி மேல ஒரு கேஸ் விசாரணையின் போது ஜட்ஜு சொன்னாராம் “பாவம் ஜெயேந்திரர் திரௌபதி வஸ்திராபரண ஸ்டேஜ்ல” இருக்காருன்னு.
தியாகு சொன்னார் ” வஸ்திராபரணம் பண்ணதே அன்னார் தானு அனுராதாரமணன் சொல்லியாச்சு” வரலாறு முக்கியமில்லையா?
தூத்தெறிக்க இந்த கிராக்கிய பத்தில்லாம் எழுதினா  நம்ம ரேஞ்சு காலியாயிரும் போல. அதனால பழைய பதிவுகளின் தொடுப்புகளை கீழே கொடுத்து தொலைச்சுர்ரன்.
மன்சன்னா மாறனும் பாஸ்.. இந்த பழைய பதிவுகளை படிச்சிங்கனா நாம எந்தளவு மாறியிருக்கம்னு தெரியும்.எவ்ளதான் ட்ரை பண்ணாலும் அதை மாதிரி எழுதமுடியாதுனு தோனிருச்சு.அதான் பழைய பதிவுகள்.

பதிவு: 1

பதிவு:2

பதிவு:3

பதிவு:4

பதிவு:5

பதிவு:6
வண்டவாளங்களை தண்டவாளத்தில ஏத்தியிருக்கேன். இதை எல்லாம் சும்மா ஒரு க்ளான்ஸ் பார்த்தாலே போதும். உடனே வலது கைய வித்தாவது சுப்ரீம்ல ஒரு பில் போட்டுரலாம்னு தோனும்.

உடுங்க ஜூட்.

நொடிக்கு நொடி மாறும் வாழ்க்கை

16 Laks
அண்ணே வணக்கம்ணே !
கண்டம்ங்கற வார்த்தைக்கு அசலான அர்த்தம் துண்டு . உலகின் நிலத்துண்டுகளை கண்டம்னு சொல்றம். நாட்டின் கண்டங்களை மானிலம்னு சொல்றம். இந்த தொடர்ல உபயோகப்பட்டிருக்கிற வார்த்தைக்கு விபத்துக்கள்னு ஒரு அருத்தம்  செலாவணியில இருக்கு. ஆனால் இதையும் வாழ்வின் துண்டுகள்னு எடுத்துக்கலாம்.
இங்கே எந்தெந்த கிரகத்தால கெண்டம்னு சொல்லியிருக்கோ ..அந்தந்த கிரகத்தின் -அந்த கிரகம் சம்பந்தப்பட்ட கிரகத்தின் தசா/புக்தி காலத்துல – இது ஒரு துண்டு தானே. அந்த துண்டுல கொஞ்சம் சிரமம் இருக்கும்னு  சொல்லலாம்.
தசாபுக்தி காலம்னா அது லாங் பீரியடாச்சேன்னு பயந்துக்காதிங்க. அந்த கிரகத்துக்குரிய-அந்த கிரகங்கள் தொடர்பு கொண்டிருக்கிற கிரகங்களின்  நட்சத்திரங்களில் தான் எஃபெக்ட் அதிகமா இருக்கும். அந்த கிரகத்துக்குரிய எண் கூட்டுத்தொகையா வர்ர தேதிகள்ள எஃபெக்ட் இருக்கலாம்.
2.ஐந்தில் சனி,ராகு/கேது இருந்தால் கெண்டம்னு சொல்லியிருக்கு.
இதுல சனிக்குரிய நட்சத்திரங்கள் பூசம்,அனுஷம்,உத்திரட்டாதி. இந்த  நட்சத்திர காலங்கள்ள பிரச்சினை வரலாம்.
ராகுவுக்குரிய நட்சத்திரம்னா திருவாதிரை,ஸ்வாதி,சதயம். கேதுவுக்குரிய நட்சத்திரம்னா அஸ்வினி,மகம்,மூலம்.
எல்லாம் சரி அஞ்சுல சனி இருந்தாலே லொள்ளுதானானு கேப்பிக சொல்றேன். என் மகள் கன்யா லக்னம். அஞ்சாமிடத்துல சனி. அஞ்சுங்கறது? புத்தி ஸ்தானம். சனின்னாலே டிலே. டெக்னிக்கல் நாலெட்ஜு கிடைக்கலாமே தவிர அகடமிக் கஷ்டம் தான். ஏழாங்கிளாஸு ரெண்டு தபா ஃபெயிலு. இது அதிர்ஷ்டத்தை காட்டற இடம். இங்கே சனி இருந்ததால ..அதிர்ஷ்ட கட்டைன்னு சொல்லனும். இது புத்ர ஸ்தானங்கறதால குழந்தை பிறப்புல தாமதம் ஏற்படனும்.
ஆனால் இங்கே சனி வக்ரம். வக்ரமானதால நாம  சின்ன வயசுல ச்சூ காட்டிவிட்ட எம்.எஸ்.பெய்ண்ட் ஃபோட்டோஷாப்ல போய் முடிஞ்சது. அதே வயசுல நாம கையில கொடுத்த பாக்ஸ் கேமரா ஃபோட்டோ கிராஃபர்ல கொண்டு விட்டுது. இந்த வருசம் பிப்ரவரியில கண்ணாலம் .இப்பம் நாலாவது மாசம் கர்பம்.ஏன்னா சனி வக்ரம்.
கிரகங்கள் வக்ரமா நின்னப்போ பலன் கணிக்கிறதுல ஒரு சூட்சுமம் இருக்கு. அது சாதாரணமா  நின்னா என்ன பலனோ அதுக்கு கொய்ட் ஆப்போசிட்டா பலன் தரனும். இது விதி.ஆனால் ஆரம்ப கட்டத்துல சாதாவா நின்னா என்ன பலனோ அந்த பலன் நடக்கும்.
இப்பம் என் டாட்டர் கேஸ்லயே அஞ்சுல சனி =வித்யா பங்கம். அதிர்ஷ்ட கட்டை . நாலஞ்சு வருசமா லவ்ஸு ஆனா விபரீதமா (ஐ மீன் கன்சீவ் ) எதுவும்  நடக்கல. இப்பம் புரியுதா வக்ர கிரக பலன் எப்படி ஒர்க் அவுட் ஆகும்னு?
சரி வக்ரமா போச்சு தப்பிச்சுட்டாய்ங்க. சனி சாதாவா நின்னிருந்தா என்ன பலன்னு கேப்பிக. சொல்றேன். அதுக்கு மிந்தி ஒரு  முக்கியமான மேட்டர் என்னடான்னா வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும் தான் அடுத்த நொடியை தீர்மானிக்குது.

ஆரோ தெரியாம காலை மிதிச்சுட்டு சாரிங்கறாய்ங்க. பரவால்ல விடுங்கன்னு இந்த நொடி சொன்னா அடுத்த நொடி சுமுகம். இதுவே “இன்னாடா சாரி..பூரி உருளை கிழங்கு எருமை ..எருமை மாதிரி மிதிக்கிறே”ன்னுட்டா அடுத்த நொடி?
அஞ்சுல சனி இருக்கு. குடும்பமே பிசினாறி குடும்பம். கறிக்குழம்பை ஒருவாரம் வரைக்கும் ஃப்ரிட்ஜுல வச்சு திங்கற கேரக்டருங்கனு வைங்க. எட்டணா மூக்கு பொடிய கூட அக்கம் பக்கம்  ஓசி வாங்கி போட்டுக்கற தாத்தா ,சட்டை காலரை மட்டும் சோப்பு போட்டு அலசி போட்டுக்கிற அப்பா, ஒரே நைட்டிய மாசம்லாம் போட்டுக்கற மம்மி இப்டி ஒரு என்விரான்மென்ட்ல ஜாதகர் வளர்ராருன்னா அஞ்சுல சனி அவரை ஒன்னுமே செய்யாது.
அட கதை வேற மாதிரி போகுது பத்து வட்டிக்காச்சும் வாங்கி வெட்டிசெலவு பண்ற குடும்பத்துல ஜாதகர் பிறந்துட்டாருனு வைங்க . ஸ்கூலுக்கே போக மாட்டாரு. போனாலும் படிக்க மாட்டாரு. நிலைமை இப்படி இருந்தா மேட்டர் ஓவர்.
இல்லை. வேற ஏதோ கிரக பலத்துல ஜாதகர் ஒழுங்கா படிக்கவும் செய்றாருன்னு வைங்க .ஃபீஸ் கட்ட பணம் இருக்காது.(துரதிர்ஷ்டம்) வேற ஏதோ கிரக பலத்துல ஃபீஸ் கட்டவும் ஆள் வந்துருச்சுனு வைங்க. பரீட்சையில பிட் அடிச்சிக்கிட்டிருந்தவன் ஸ்க்வாட் வர்ர நேரமா பார்த்து பிட்டை இவன் மேல வீசிருவான்,அவமானம் நடக்கும்.
பத்தாங்கிளாஸ் வரை ஒப்பேத்திட்டு டெக்னிக்கல் ஸ்டடீஸுக்கு போயிட்டா நோ ப்ராப்ளம். இல்லின்னா அரியர்ஸு. சார் வைட் காலர் ஜாப்ல இருந்தா கண்ணாலம் டிலே,குழந்தை பிறப்புல டிலே. வேற ஏதோ கிரக பலம் காரணமா கொளந்தையே பிறந்துருச்சுன்னு வைங்க அது கருப்பா பயங்கராமா-பயங்கர கருப்பா பிறக்கலாம். அட வெள்ளையாவே பிறந்துருச்சுன்னு வைங்க கால் தொடர்பான ஊனம் ஏற்படலாம். அடி முட்டாளா இருக்கலாம்.
லைஃப் ஈஸ் ஆப்ஷன்ஸ். இந்த நொடி அடுத்த நொடியை டிசைட் பண்ணுது பாஸ்.. சரி அஞ்சுல ராகு/கேதுவை பத்தி இன்னொரு பதிவுல பார்ப்போம்.
உடுங்க ஜூட்டு.

நீண்ட இரவுகள்

Eetti நம்முது கடகலக்னமாச்சா ..அதிபதியான சந்திரன் ரெண்டேகால் நாளைக்கொருக்கா ராசி மாறிர்ராரா மத்த 11 ராசிக்காரவுகளோட வாழ்க்கையும் எப்படி இருக்கும்னு அனுபவபூர்வமா தெரிஞ்சுருது. நம்ம வாழ்க்கை முறையும் ரெண்டே கால் நாளைக்கொருக்கா மாறிருது. அதுலயும் இந்த தூக்கம் இருக்கே..இது ரெம்ப பெசல்.
சின்ன கொளந்தையிலயே நம்ம கேஸ் இவ்ளதானாம். சாதாவா தூங்கினதா சரித்திரமே கிடையாது. அப்பா தான் தோள்ள தூக்கிக்கிட்டு ரோட்டுக்கு வீட்டுக்கும் நடப்பாராம். சீதோஷ்ண நிலையிலான உச்ச பட்ச மாற்றங்களை ஆக்செப்ட் பண்ற கப்பாசிட்டி ரெம்ப குறைவு .
இதுல சந்திரன் வேற ரெண்ட்ல இருந்து எட்டை பார்க்கிறாரா அடிக்கடி ஜல்ப். ஃப்ரீ ப்ரீத்திங் இருக்காது. இதனாலயும் தூக்கம் கெடும். வாலண்டியரா கண் முழிக்க ஆரம்பிச்சது இந்த பத்தாங்கிளாஸ் பரீட்சை சமயத்துல தான்னு நினைக்கிறேன்.
நமக்கு அனேக பொறுப்புகள் .க்ளாஸ் லீடர் .  நோட்ஸ் டிக்டேட்டர் . அசைன்மென்ட் திருத்தறது ,டெஸ்ட் பேப்பர் திருத்தறதுன்னு அனேக பொறுப்புகள் . இதுல பரீட்சைக்கு படிக்கிறது கடைசி பட்சமாயிரும்.
பகல் நேரம் கூட ஒரு ஃப்ளாஸ்க் நிறைய டீ போட்டு பூஜை ரூம்ல போட்டு அம்மா பூட்டிருவாய்ங்க. ராத்திரியில சொல்லவே தேவையில்லை.இது இப்படியே இன்டர் ,டிகிரின்னு தொடர்கதையாயிருச்சு.
மத்தபடி சாதா சீசன்ல கண் விழிச்சதா ஞா இல்லை. சிவராத்திரி-வைகுண்ட ஏகாதசில்லாம் எக்செப்ஷன் ஒரே டிக்கெட்டு சினிமா காட்டுவாய்ங்க. அப்பம் கம்பெனி எங்க அத்தை மகன் தான்.
படிக்கிற பழக்கம் ஐ மீன் கதை/கட்டுரை இத்யாதி சின்ன வயசுலயே இருந்தாலும் அப்பா வீடு கட்டறச்ச மாடியில ஒரு ரூம் தனியா போட்டு கொடுக்க -அந்த சமயம் பார்த்து நம்ம கொலிக் லெண்டிங் லைப்ரரி வைக்க  நீண்ட இரவுகள் ஆரம்பம்.
அதுவும் 1984 -1986 கட்டத்துல ரெம்ப காஞ்சானா – கம்பங்கொல்லையில விழுந்து அலுத்து 1986 லயே பிரம்மச்சரியம்னு ஆரம்பிச்சு ஒரு 3 மாசம் தாக்கு பிடிச்ச காலத்துல இது ரெம்ப ஓவர். படுக்கவே பயம்.
இந்த காலகட்டத்துல ஆசுகவி கணக்கா எழுதி தள்ளிக்கிட்டிருந்தம்.துண்டு துண்டா இல்லாம எதுகை மோனையோட -ஒரு ரிதம் இருக்கும். ஒரே ராத்திரியில நாவல் எழுதின ரிக்கார்ட் எல்லாம் கூட உண்டு.
1991 ல கண்ணாலம் . 1992 ல சத்திய வேடு,கும்மிடி பூண்டி . பத்தாக்குறை பட்ஜெட்டை பேலன்ஸ் பண்ண சித்தூர் வந்தே ஆகனும்.  எல்லாம் நம்ம அஜெண்டா படியா நடக்கும். அன் டைம்ல ட்ராவல் பண்ண வேண்டியிருக்கும். லாரி,வேன்,கோழி வண்டி . நாம ஊர் போய் சேர்ரதுக்குள்ள விடிஞ்சுரும். ஊருக்கு போனாலும் செக்யூரிட்டியா இருந்தப்போ டே ஷிஃப்ட் நைட் ஷிஃப்ட் மாறி மாறி வரும்.
தூக்கமில்லா இரவுகள் எப்பவும் கஷ்டமா இருந்ததே இல்லை .(லக்ன சூரியன்)
சாதாரணமா அல்லாரும் (ஆண்கள்) பலான மேட்டரை தூக்க மருந்தா யூஸ் பண்ண நமக்கு அது ஊக்கமருந்தா போச்சு. காரணம்? தெரியலனு தான் சொல்லனும்.
சொன்னா கோவிச்சுக்குவாய்ங்க. ஒவ்வொரு மனிதன்லயும் ஒரு பவர் .அதனோட நோக்கம் கிரியேட்டிவிட்டி. சனம் அதை குழந்தைய கிரியேட் பண்றதுலயே செலவழிச்சுர்ராய்ங்க போல. நமக்கு ?  தூண்ட ப்பட்ட பவர் கில்மாவுல கம்ப்ளீட்டா  எக்ஸாஸ்ட் ஆகாம மேலும் மேலும்  படைக்க சொல்லும். படைச்சிக்கிட்டு தான் இருந்தம். ( இரண்டில் சுக்கிரன் -சொந்த நட்சத்திரம் -எட்டை பார்க்கறாரு -இதனால ஆயுள் குறையனும் போல )
மவ பிறக்க ஏதுவா சித்தூர் வந்துட்டம். வாடகை வீடு தான். பத்து மணிக்கு விளக்கணைக்கனும்ல. ஜீரோ வாட்ஸ்லயே படிக்கிறது -எழுதறது. மறுபடி திருப்பதி -பாகாலான்னு அல்லாடினம். அப்பவும் அன் டைம் ட்ராவல் –   நீண்ட இரவுகள்.
அன்றைய நீண்ட இரவுகளை இரண்டு மூன்று வகையா பிரிக்கலாம். 1.தொழில் 2. அன் டைம் ட்ராவல் 3. திடீர் வசதி. கையில காசிருந்தா நள்ளிரவு 3-4 வரை தான் வீட்டுக்குள்ள இருக்க முடியும். பிறவு நேர பஸ் ஸ்டாண்ட் . சமயத்துல பேப்பர் வர லேட்டாகி -நேத்திக்கு பேப்பர்லாம் வாங்கி படிச்சிருக்கன்.
இன்றைய நீண்ட இரவுகள்? ஒரே காரணம் தான் தொழில். சாதாரணமா தூங்க போறதே ஒன்னரை ரெண்டாயிரும். இதுல வேலை பென்டிங்ல இருந்தா அப்படியே கன்டின்யூ பண்ணிர்ரது. நாம பலன் களை ஒலிப்பதிவு செய்தாகனுமே. டிஸ்டர்பன்ஸ் இருந்தா வேலைக்காகாது. இரவு தான் நமக்கு  உறவு.
இப்படி ராக்கண் விழிக்கிறதுல நிறைய பிரச்சினை இருக்கு. பாடி ஆரம்பத்துல என்னோட பஜாஜ் சன்னி போல ஸ்டார்ட் ஆகவே  தகராறு பண்ணும். தாளி ஸ்டார்ட் ஆயிருச்சுன்னா நிக்கவே நிக்காது. நம்ம வண்டியிலயாச்சும் ப்ளக் ஒயரை பிடுங்கி விட்டுரலாம். மூளைய எப்படி நிறுத்தறது?
சில சமயம் மன்சனுக்கு தூக்கமே தேவையில்லையோனு தோனும். பதிவு ஒரு செஷன்- பதிவுகளை மெயில் பண்றது ஒரு செஷன் -ரெம்ப சுஸ்தாயிட்டாப்ல இருக்கும். படுத்துக்கிட்டு எதையாச்சும் புரட்டிக்கிட்டே இருப்பம். ஒரு பதினைஞ்சு நிமிசம் அ அரைமணி நேரத்துல ஒரு வேக்குவம் வந்துரும். மறுபடி வேலை ஆரம்பிச்சிரும்.
இந்த நீண்ட இரவுகள் உடல் உஷ்ணத்தை கிளறிவிட்டுருது. கான்சிட்டிப்பேஷன் ஒரு பக்கம். மெயின் ட்ரா பேக் மெமரி லாஸ். ஏதோ ஒரு எஞ்சைம் இருட்ல தான் சுரக்குமாம். அது சுரக்கலின்னா கஜினி சூர்யா மாதிரி ஆயிருவமாம்.
நம்ம பழக்கம் இப்படி இருக்குதே கண்டி இதை ஆருக்கும் ரெக்கமெண்ட் பண்ண மாட்டேன். விடியல் 3- 4க்கு கூட எந்திரிச்சு வேலை செய்யலாம்.அந்த வேலையே தனி. இந்த சிவராத்திரி மேட்டர்லாம் செகண்டரி தான்.
பீடி கணக்கே இல்லை. ஆனா சிகரட்? ஒரு நாளைக்கு  4 தான் மருவாதி. இதுல ஒன்னு சாஸ்தியானாலும் சிவராத்திரி ஆயிருது. அதே போல டீ. மாலை 6 -7 வரைக்கும் ஓகே அதுக்கு மேல ஒரு டீ சாப்டாலும் தூக்கம் காலி.
இதே போல வேலையிலயும்  கடவுள் நமக்குன்னு ஒரு கோட்டா வச்சிருக்காரு போல. ஒரு நாளைக்கு ஒரு வேளை தான் வேலை. அதுவும் மூன்றே சாதகம். ஒரு நாள் வெறி பிடிச்சு ஆறு பண்ணிட்டா மறு நாள் ஒன்னும் பேராது.
என் சிபாரிசு என்னனா?
மாலை 6-7 லருந்தே ப்ளான் பண்ண ஆரம்பிச்சிரனும்.  நோ டீ, நோ சிகரட். இரவு லேசான-ஈசியா  செரிக்க கூடிய டிஃபன் . இதையும் ஒரு வென்னீர் குளியலுக்கு அப்புறம்  எட்டு எட்டரைக்கெல்லாம் முடிச்சுரனும். லைட் ரீடிங். ( சுஜாதாவின் மாஸ் ரைட்டிங்ஸ் -ஆரம்ப காலரைட்டிங்ஸ் பெட்டர். ராஜேஷ்குமார் ,பட்டுக்கோட்டை பிரபாகர் பெஸ்ட்) ஒன்பது ஒன்பதரைக்கெல்லாம் படக்குனு தூங்கிரலாம்.
என்.டி.ஆர் கணக்கா விடியல்ல 3 -4 மணிக்கு கூட எந்திரிச்சு வேலை செய்யலாம்.அந்த வேலையே தனி.

கீழ் காணும் பதிவுகளை படிக்கலின்னா இதுகளையும் ஒரு ஓட்டு ஓட்டிருங்க
எத்தீனி கெண்டம்டா சாமீ !

மனைவிகளின் எதிர்ப்பார்ப்பும்-கணவர்களின் எதிர்ப்பும்