சனி பிடிச்சா ஆரை வணங்கனும்?

அண்ணே வணக்கம்ணே !

இன்ன நோய்க்கு இன்ன வைத்தியம்ங்கறாப்ல இன்ன கிரகம் சரியில்லின்னா இன்ன தெய்வத்தை வணங்குன்னு சொல்லி வச்சிருக்காய்ங்க. இதெல்லாம் போது போகாம சொல்லி வச்ச மேட்டரு இல்லிங்ணா.
செம மேட்டரு கீது.

முந்தா நாளு பொஞ்சாதி ஊர்ல இல்லின்னு நம்மூரு முனியாண்டி விலாஸுக்கு போனேன். மழையும் -கிழையுமா இருந்துதா சிலோன் பரோட்டா கொடுப்பாண்ணேன். அதை தின்னு முடிக்கிறதுக்குள்ள ஆண்டவன் தெரிஞ்சாரு.. தின்ன பரோட்டாவும் – சேர்வாவும் பாதி ராத்திரி தொண்டை வரைக்கும் வந்து களுக்குன்னு எட்டிக்கூட பார்த்துருச்சு. இந்த இழவெடுக்கிறதுக்கு ரூ.34 கழுத்துல துண்டை போட்டு வாங்கிட்டானுவ.

( எமெர்ஜென்சி கால கலைஞருக்கும் கனிமொழியை தியாகிங்கற கலைஞருக்கும் வித்யாசம் இருக்கில்லியா.. அப்படி மேற்படி மு.வி நாறிப்போன கால கட்டம் போல – நாம லாலா போடறதும் இல்லை – லாலா பார்ட்டிகளோட போனாலும் வெறுமனே திங்கலாமேன்னுட்டு பொணமும் திங்கறதில்லை -புரோட்டாவும் திங்கறதில்லை.. அதான் மேட்டரு தெரீலை. ஒரு காலத்துல பத்து நாள் ஜூரம் அடிச்சு எத்தனா காராசாரமா தின்னா நல்லாருக்குமேன்னு தோனும் போது மு.வி பரோட்டா ரெண்டு அடிச்சா போதும் ஜூரம் ஓடிப்போயிரும். அப்படி ஒரு காரம் -மணம்-குணம் )

இன்னாபா ஏதோ கெரகம் – சாமின்னு ஆரம்பிச்சு பரோட்டா தின்ன கதைக்கு பூட்டேன்னு பேஜார் படாதிங்ணா. மேட்டருக்கு வரேன்.

பொஞ்சாதி ஊர்ல இருந்திருந்து ” ஆமா.. நீ வயசுக்கு வந்த புதுசுல எவனோ கோலத்து மேல லவ் லெட்டர் வச்சுட்டு போவான்னு சொன்னியே அவன் பேரென்ன”ன்னு கலாய்ச்சுக்கிட்டே மேற்படி ரூ.34 + இன்னொரு 34 மூட்டை அவுத்துருந்தா நாலு சுக்கா ரொட்டியும் -சிக்கன் ஃப்ரையும் பண்ண சொல்லிட்டு பெரிய நாயக்கரம்மாவும் (பொஞ்சாதி) ,சின்ன நாயக்கரம்மாவும் சிக்கனை ஒரு பிடி பிடிக்கிறதை பார்த்துக்கிட்டே மசாலாவை மட்டும் தொட்டு தின்னிருந்தா மழை கொடுத்த -மச மச எஃபெக்ட் ஓடியே போயிருக்கும்.

பரோட்டா -சேர்வா , சுக்கா ரொட்டி -சிக்கன் ஃப்ரை. ரெண்டுக்கும் பெரிய வித்யாசம் எதுவுமில்லை. பரோட்டா சேர்வா “ஊருக்காவ பண்ணது” ,சுக்கா ரொட்டி -சிக்கன் ஃப்ரை பேசிக்கல் ஃபார்முலாவை என்ரிச் பண்ணி நமக்காவ ப்ரிப்பேர் பண்ணது. எது சுரத்தா இருக்கும்?

இன்ன கிரகத்துக்கு இன்னா சாமிய கும்பிடனும்ங்கற மேட்டர்ல ஒரிஜினலா என்ன சொல்லி
வச்சாய்ங்களோ நமக்கு தெரியாது. (புள்ளி விரப்புலிகள் மேட்டர் எதுனா இருந்தா அவுத்து விடலாம்) . கீதைய என்ன கதி பண்ணிட்டாய்ங்கன்னு ஒரு தொடர்பதிவே போட்ட ஆசாமி நாம இந்த மேட்டர்ல “அவாளை” அவ்ளோ ஈசியா நம்பிடுவமா என்ன?

ஒரிஜினலில் உள்ள படி சனி பிடிச்சா நீங்க ” சாஸ்தா”வை வணங்கனும். சாஸ்தான்னதும் ஐயப்பனுக்கு தாவிராதிங்க..சாஸ்தாங்கறது வேற கேரக்டர். விவரமானவுக அவுத்துவிடுங்கப்பு. மனோகராவுல “ஆண்டவன் கட்டளைக்கே காரணம் கேட்கிறார்கள்”ங்கறா மாதிரி பெரியவுக சொன்னதாவே இருந்தாலும் காரண காரியத்தை பார்க்கனும்ல.

அப்படி பார்த்து “ஏன் “என்ற கேள்வியோடா ஆராய்ச்சி பண்ணினதுல அவிகளோட அடிப்படை லாஜிக்கை கேட்ச் பண்ணி சனி பிடிச்சா ஆரை வணங்கனும்ங்கறதை மட்டுமில்லே அந்த கிரகம் கெட்டால் எந்த தெய்வத்தை வணங்கனும்னு பாய்ண்ட் டு பாய்ண்ட் சொல்லிர்ரன்.

அதுக்கு மிந்தி சின்ன க்ளேரிஃபிகேஷன். ஒன்றே குலம் ஒருவனே தேவன்ங்கறாய்ங்க -விவேகானந்தரோ உன் பிரார்த்தனைக்கு பலன் கிடைச்சா அது வேற எங்கே இருந்தோ வந்தது இல்லே. உனக்குளே இருந்துதான் வந்தது”ங்கறாரு.

அப்பாறம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியில இன்னின்ன நாள்ள இன்னின்ன ஸ்பெஷலிஸ்டுக வருவாய்ங்கனு போர்டு போட்டாப்ல இது இன்னாபா லிஸ்டை நீட்டறேன்னு கேப்பிக.சொல்றேன்.

புவனா ஒரு கேள்விக்குறியில நடிச்சதும் ரஜினிதேன் -பைரவி ,சதுரங்கத்துல நடிச்சதும் ரஜினிதேன். பில்லா ரங்காவும் ரஜினிதேன், பாட்சா,அண்ணாமலையில நடிச்சதும் ரஜினிதேன் , சந்திரமுகியில ,நடிச்சதும் ரஜினிதேன் ,சிவாஜி,ரோபோல நடிச்சதும் ரஜினிதேன் .ஆனால் சிலருக்கு சிலது பிடிக்கும்.சிலது அறவே பிடிக்காம இருக்கலாம். ஒவ்வொரு படத்துல ரஜினியோட ஒவ்வொரு கோணம் வெளிப்பட்டிருக்கும். ஒவ்வொரு விதமான வைபரேஷன் கிடைச்சிருக்கும். ரஜினிக்கே இத்தீனி கோணம், இத்தீனி வைபரேஷன் இருக்குன்னா கடவுளுக்கு?

கரண்டு ஒன்னுதேன். டிவிடியில பாய்ஞ்சா பலான படம் பார்க்கலாம், கம்ப்யூட்டர்ல பாய்ஞ்சா ட்ரிபிள் எக்ஸ் வீடியோ பார்க்கலாம், ஏ.சியில பாய்ஞ்சா ஜில்லு , ஹீட்டர்ல பாய்ஞ்சா ஊ.. அந்த மாதிரிதேன் தெய்வீக சக்தியும்.

தற்சமயத்துக்கு இன்ன கிரகம் சரியில்லின்னா இன்ன தெய்வத்தை வணங்கனும் ..ஐ மீன் தெய்வத்தை இன்ன வடிவத்துல வணங்கனும்ங்கற பட்டியலை மட்டும் தந்துர்ரன். நாளைக்கு காரண காரியங்களை விளக்கறேன்.

1.சூரியன்:

சூரியன்,சூரிய நாராயணன்,காயத்ரி (நான் படிச்ச புஸ்தவங்கள்ள சிவன்)

2.சந்திரன்:
ஆயுதம் தரிக்காத அம்மன் சிறப்பாக கன்னியாகுமாரி அம்மன் ( நான் படிச்ச புஸ்தவங்கள்ள பார்வதி)

3.செவ்வாய்:
சுப்பிரமணியர்

4.ராகு:
துர்கை

5.குரு:
பிரம்மா ,தட்சிணா மூர்த்தி

6.சனி
ஆஞ்சனேயர் , கிராம தேவதைகள், காவல் தேவதைகள், பிதுர்கள் ( நான் படிச்ச புஸ்தவங்கள்ள சாஸ்தா )

7.புதன்
கிருஷ்ணர் ( நான் படிச்ச புஸ்தவங்கள்ள விஷ்ணு )

8.கேது

வினாயகர்

9.சுக்கிரன்

லட்சுமி

எதுக்கு பலான சாமிய கும்பிடசொன்னாய்ங்க/சொல்றேன்னு கொஞ்சம் ரோசிச்சு வைங்கண்ணா..தில்லு துரைகள் கமெண்டாவும் போடலாம். நாளைக்கு காரண காரியங்களை சொல்றேன்.

பி.கு:
ஹி ஹி நேத்து கண்ணால நாளாச்சா .. கானிப்பாக்கம் போயிருந்தம். அங்கன ஃபோட்டோ எடுத்ததுல பரதேசி மாதிரி வந்துருச்சு. இன்னாங்கடா இது கு.ப சின்னத்திரையில சித்தப்பா ,மாமா ரோலுக்கு கூட அன்ஃபிட் ஆயிட்டாப்ல இருக்குன்னு ஒரே ஒர்ரியா போச்சு.

அதனால இன்னிக்கு ஆன தகிடுதத்தம்லாம் பண்ணி யூத்தா மாறி ஃபோட்டோ பிடிச்ச பிற்காடுதேன் மனசு ஆறுதலாச்சு. ஃபோட்டோவுல உள்ள கேரக்டருங்க ரெண்டும் நாமதேன். பயந்துக்காதிங்க..

பகவத்கீதை ஒரு உட்டாலக்கடி: தொகுப்பு

அண்ணே வணக்கம்ணே !

எப்பயோ 2010 காலக்கட்டத்துல எழுதின தொடர் இது. இதை இன்னைக்கு எடுத்துக்கொடுக்க ஒரு பலமான காரணம் இருக்கு. இன்னைக்கு ராத்திரி துக்ளக் படிக்கவேண்டியாதா போச்சு. நமக்கென்னவோ சோவுக்கு மண்டைமேல மசுருதான் இல்லைனு நினைச்சம் மண்டைக்குள்ள மூளை கூட இல்லை போலிருக்குன்னு ஞானோதயம் ஆயிருச்சு.

ஆனாலும் புதுசா பத்திரிக்கை படிக்க ஆரம்பிக்கிற சூத்திர பசங்க அவிகளோட எழுத்தை மட்டும் படிச்சா அடடே சரியா இருக்குமோன்னு குழம்பிர கூடிய வாய்ப்பிருக்கு.அதனாலதேன் என்னைக்கோ எழுதின தொடரோட அத்யாயங்களுக்கான சுட்டிகளை இங்கே தந்திருக்கேன்.

இனம் -குணம் – சரித்திரம் -பூகோளம் எல்லாத்தையும் போட்டு உடைச்சிருக்கேன். நாமதேன் ( 30-40) லேட்டா முழிச்சுக்கிட்டம். அடுத்த தலைமுறையாவது விழிப்போட களம் காணட்டும். பை தி பை துக்ளக்கோட பை.தனமான எழுத்தையும் கிழிச்சு ஒரு தனிப்பதிவே போட்டிருக்கேன். நேரம் இருந்தா இங்கே அழுத்தி ஒரு ஓட்டு ஓட்டிருங்க.

தொடரின் அத்யாயங்களுக்கான தொடுப்புகள் கீழே :

இந்த தொடரை எழுதிக்கிட்டிருந்தப்ப ஹிட்ஸ் 420 ஐ எட்டிப்பிடிச்சா ஒரே குதூகலம்.ஆனால் இன்னைக்கு வித் அவுட் அப்டேட்ஸ் ஆயிரம் பேரு படிக்கிறாய்ங்க. அப்டேட் பண்ணா தடுக்கி தடுக்கி இந்த எண்ணிக்கை ரெட்டிப்பாயிருது. அதனாலதேன் இந்த மீள் பதிவு.

http://kavithai07.blogspot.com/2010/05/blog-post_10.html

http://kavithai07.blogspot.com/2010/05/2.html

http://kavithai07.blogspot.com/2010/05/blog-post_11.html

http://kavithai07.blogspot.com/2010/05/3.html

http://kavithai07.blogspot.com/2010/05/blog-post_14.html

http://kavithai07.blogspot.com/2010/05/2_14.html

http://kavithai07.blogspot.com/2010/05/5.html

http://kavithai07.blogspot.com/2010/05/blog-post_2475.html

http://kavithai07.blogspot.com/2010/05/6.html

http://kavithai07.blogspot.com/2010/05/6_16.html

http://kavithai07.blogspot.com/2010/05/8.html

http://kavithai07.blogspot.com/2010/05/9_17.html

http://kavithai07.blogspot.com/2010/05/blog-post_19.html

http://kavithai07.blogspot.com/2010/05/10_19.html

http://kavithai07.blogspot.com/2010/05/11.html

http://kavithai07.blogspot.com/2010/05/blog-post_20.html

http://kavithai07.blogspot.com/2010/08/blog-post_09.html

http://kavithai07.blogspot.com/2010/08/blog-post_3884.html

http://kavithai07.blogspot.com/2010/08/blog-post_22.html

http://kavithai07.blogspot.com/2010/08/blog-post_8146.html

http://kavithai07.blogspot.com/2010/08/blog-post_6267.html

http://kavithai07.blogspot.com/2010/08/blog-post_25.html

http://kavithai07.blogspot.com/2010/08/16.html

விடுபட்ட பதிவுகள்

அண்ணே வணக்கம்ணே !
நீங்க இந்த சைட்டை மட்டும் பார்க்கிற பார்ட்டியா இருந்தா கீழ் கண்ட பதிவுகளை மிஸ் பண்ணியிருப்பிங்க.

உங்க வசதிக்காக விடுபட்ட பதிவுகளுக்கான தொடுப்புகள்

ஜாதகத்தை க்ளோசப்ல பார்க்க..

உலகம் இப்படித்தான் இயங்குகிறது !

ஜூ.ஐஸ்வர்யா ஜாதகம் : தாத்தாவுக்கு ஆப்பு

ஜாதகம் சாதகமா இல்லேன்னாலும் ஜமாய்க்கலாமே

ஆமாணே ஜாதகம் சாதகமா இல்லேன்னாலும் சமாளிக்கறதே இல்லை ஜமாய்க்கவும் செய்யலாம்.
அல்லாரும் அம்பானி ஆகலாம். அதுக்குத்தேன் இந்த பதிவு.

ஜோதிடவியல் அவரவர் பிறந்த நேரத்து கிரக நிலைப்படி இன்னாருக்கு தனயோகம்,இன்னாருக்கு தனயோகமில்லை என்று வரையறுக்கிறது. அனைவருக்கும் தனயோகம் என்பது ஜோதிடவியலின்படி கனவிலும் அசாத்தியமான ஒன்றுதான் .

ஆனால் ஜாதகச்சக்கரத்தில் உள்ள 12 பாவங்கள்,9 கிரகங்களில் காரகத்துவம், அவை மனித வாழ்வில் ஏற்படுத்தும் பாதிப்புக்களை ஆழமாக,கூர்ந்து பார்க்கும்போது அனைவருக்கும் தனயோகம் என்பது சாத்தியமே என்று ஆணித்தரமாக கூறலாம். எத்தனை மோசமான ஜாதகத்தை எடுத்துக்கொண்டாலும் ஒரே ஒரு பாவமாவது, ஒரே ஒரு கிரகமாவது நற்பலன் களை வழங்கும் நிலயிலே உள்ளது.

எத்தனை மோசமான ஜாதகத்தில் பிறந்திருந்தாலும் கெட்ட பலன் களை வாரி வழங்கும் நிலையில் உள்ள கிரகங்கள்,பாவங்கள் காரகத்வம் வகிக்கும் விசயங்களை விட்டு விலகி/ தம் ஜாதகத்தில் நற்பலன் களை வழங்கும் நிலையில் உள்ள ஒரே கிரகம் அல்லது ஒரே பாவம் காரகத்வம் வகிக்கும் விசயங்களோடு மட்டும் தொடர்பு கொண்டு வாழ்ந்தால், அனைவரும் தனயோகம் பெறலாம் என்பது என் கண்டு பிடிப்பு. இதை என் கண்டு பிடிப்பு என்று மார் தட்டிக் கொள்வதைவிட அநேகர் வாழ்வில் தெய்வத்தின் திருவருளாலும்,பெற்றோரின் புண்ணிய பலத்தாலும், நடந்து வருகிறது என்று கூறுவதே மிகச்சரியானதாகும்.Read More

தவறவிட்ட பதிவுகள்

அண்ணே வணக்கம்ணே!
நீங்க இந்த சைட்டை மட்டும் பார்க்கிற பார்ட்டியா இருந்தா கடந்த சில தினங்களில் ப்ளாக்ல போட்ட ஐட்டங்களை (பதிவை சொன்னேங்க)தவற விட்டிருப்பிங்க.

உங்கள் வசதிக்காக கீழே அவற்றிற்கான தொடுப்புகளை தந்திருக்கேன்.

உங்கள் ராசிக்கு சனிப்பெயர்ச்சி பரிகாரங்கள்

வறுமைக்கு மிஞ்சிய செல்வமில்லை

கனிமொழிக்கு ஜாமீன் – பத்திரிக்கைகள் வக்காலத்து

வறுமைக்கு மிஞ்சிய செல்வமில்லை

தாய்மொழியின் அடிப்படை இலக்கணம் நமக்கு ஜீன் வழியாவே வந்துருதுன்னு எங்கயோ படிச்சேன். குழந்தை கருவில் இருக்கும்போதே சொல் -பொருள் -வார்த்தை,வாக்கிய அமைப்புல்லாம் ஃபைனலஸ் ஆயிரும் போல.

நம்ம வாக்கிய அமைப்புகள்ள 99.99 சதவீதம் ஆக்டிவ் வாய்ஸாவே இருக்கும். ( இதுக்கு தமிழ்ல என்ன?)
உ.ம்: கலைஞர் அண்ணா நூற்றாண்டு நூலகம் கட்டினார்

இதை பாசிவ் வாய்ஸுக்கு மாத்தினா அண்ணா நூற்றாண்டு நூலகம் கலைஞரால் கட்டப்பட்டது.

எனக்கென்னமோ இந்த ரெண்டு வாய்ஸுமே ஈகோயிஸ்டிக்கா இருக்குன்னுதான் தோனுது. மனித குலமே ஈகோயிஸ்டிக் தான். வாய்ஸும் அப்படித்தானே இழவெடுக்கும்.

அண்ணா நூற்றாண்டு நூலகம் கலைஞரை கொண்டு தன்னை கட்டிக்கொண்டதுன்னு நான் சொன்னா பைத்தியக்காரத்தனமா நினைப்பிங்க. கால வெள்ளத்தின் ஓட்டத்தை – அதிலான சம்பவ கோர்வைகளை பார்க்கும் போது நான் சொன்னதுதான் கரெக்டுன்னு தோனுது. Read More

உங்கள் ராசிக்கு சனிப்பெயர்ச்சி பரிகாரங்கள்

அண்ணே வணக்கம்ணே,
சனிப்பெயர்ச்சி பலன்லாம் தந்தாச்சு. அதை வச்சு ஹிட்ஸ் அள்ள இருக்கிற ஒரே வழி பரிகாரங்கள் தான்.

உங்க ராசிக்கு சனி 3,6,10,11 ல இருந்தா பரிகாரம் தேவையில்லை. நீங்க இந்த பக்கத்தை மூடிட்டு டாட்டா காட்டிரலாம்.

மத்தவுக உங்க ராசிக்கு சனி எத்தனையாவது வீட்ல இருக்காருன்னு பார்த்து வச்சுக்கிட்டு ( உங்க ராசிக்கு சனி எத்தனையாவது ராசியில இருக்காருங்கறதை உங்க ராசிக்கு பக்கத்துல ப்ரா’க்கெட்’ல தந்திருக்கேன்.)அப்பாறம் அடியில உள்ள ப்ளேயர்ல ப்ளே பட்டனை அழுத்தி ஆடியோ கேளுங்க‌.

1. மேஷம் (7)
2. ரிஷபம்(6)
3. மிதுனம்(5)
4. கடகம்(4)
5. சிம்மம்(3)
6. கன்னி (2)
7. துலாம்(1)
8. விருச்சிகம்(12)
9. தனுசு(11)
10. மகரம்(10)
11. கும்பம் (9)
12. மீனம் (8)

http://www.archive.org/flow/flowplayer.commercial-3.2.1.swf