உங்களுக்கும் ராஜயோகம் :16

Repar

அண்ணே வணக்கம்ணே !
2014 ல் மோடி மேட்டர் போலவே லேட்டஸ்டா ஜெயா மேட்டர்லயும் பல்பு வாங்கியாச்சு . அந்த சாதனையை இங்கே விளக்கியிருக்கேன். ஆகவே நேர பதிவுக்கு போயிரலாம்.

அரசியல்ல சக்ஸஸ் ஆகனும்னா ராஜகிரகங்கள் பலம் பெறனும்ங்கறது பொதுவிதி.ஆனால் அனுபவத்துல பார்த்திங்கனா ராஜகிரகம் பலம் பெறலின்னாலும் இதர கிரகங்கள் துணை கொண்டும் பலர் ராஜயோகத்தை அச்சீவ் பண்ணியிருக்காய்ங்க.

இதுவரை இந்த தொடர்ல சூரியன்,சந்திரன் பற்றி எழுதியாச்சு. இப்ப செவ் . இந்த தொடரின் நோக்கமே

1.ஒவ்வொரு கிரகமும் எந்த வகையில அரசியல் வாழ்க்கைக்கு உதவும்.
2.குறிப்பிட்ட கிரகம் அனுகூலமா இருந்தா எப்படியெல்லாம் பொலிட்டிக்கல் மைலேஜ் கிடைக்கும்.
3.ஒரு வேளை குறிப்பிட்ட கிரகம் பல்பு வாங்கியிருந்தா எப்படி பின்னடைவு ஏற்படும்.இதுக்கு என்ன பரிகாரம்
இந்த 3 மேட்டரையும் டிஸ்க்ளோஸ் பண்றதுதான்.

விகடன்ல ஒரு ஜோக் வந்தது.அதுக்காவ அதன் ஆசிரியர் செயிலுக்கெல்லாம் போனார். அந்த ஜோக் கீழே :
அவன்:மேடையில இருக்கிறதுல எம்.எல்.ஏ யாரு ?மந்திரி யாரு ?
இவன்: பிக்பாக்கெட் மாதிரி இருக்கிறவர் எம்.எல்.ஏ ,கொலைகாரன் மாதிரி இருக்கிறவர் மந்திரி .

பிக் பாக்கெட் ராகு காரகம் .கொலை ?செவ் காரகம். பிக் பாக்கெட் எல்லாரும் எம்.எல்.ஏ ஆயிர்ரதில்லை .கொலைகாரன் எல்லாரும் மந்திரியும் ஆயிர்ரதில்லை. எவனோ ஒரு பிக் பாக்கெட் எம்.எல்.ஏ ஆகியிருக்கலாம் (ஏன் ? பூலான் தேவி எம்.பி ஆகலியா) கொத்தா கொன்ன ஆளு பிரதமராவே ஆயிட்டதாவும் பேசிக்கிறாய்ங்க.
இங்கே ஏன் செவ் -ராகு ரெண்டு பேரையும் கொண்டு வந்துட்டேன்னா செய்ற வேலை செவ் வேலையா இருந்தாலும் அதை பகிரங்கமா செய்தா செவ் காரகம் . மூன்றாவது கண்ணுக்கு தெரியாம செய்ய வச்சா ராகு காரகம். இந்த வித்யாசத்தை நெல்லா புரிஞ்சுக்கோங்க.

செவ்வாய்னா வெறுமனே குத்து -கொலைதான்னு நினைச்சுராதிங்க.செவ் பூமி காரகன். அன்னை பூமி -அதன் மீதான பற்றுக்கு செவ் காரகம். புரட்சிக்கு செவ் காரகம். (ராஜயோகம் எப்படி லிங்க் ஆகுது பார்த்திங்களா?)

புரட்சிக்கு அடிப்படை கேள்வி .வாத்தியார் அப்படி கேள்வி கேட்டுத்தானே வெளிய வந்தார். கேட்கிற கேள்வியில தர்க்கம் இருக்கனும் ( தர்கத்துக்கு செவ் தான் காரகம்) வெறுமனே கேள்வி கேட்கிறேன் பாருன்னு சொதப்ப படாது.

கடேசியா ராஜீவ் காந்தி பிரதமரா இருக்கச்சொல்லோ ராம்ஜெத்மலானி டெய்லி பத்து கேள்வி கேட்டரா இல்லையா?
செவ் ரத்தத்துக்கு காரகன் .இப்பல்லாம் அரசியல் வாதி பிறந்த நாளைக்கு ப்ளட் கேம்ப் நடாத்தியே ஆகனும்.ஏன்னா இதுக்கான ரெஸ்பான்ஸ் அப்படி .
நம்ம கேஸையே எடுத்துக்கோங்க. நாட்டு பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பட்டியலிட்டு பிரதமர்,சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி முதல் /லோக்கல்ல கலெக்டர் வீட்டு கதவ வரை தட்டினம். சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தம்னு சொன்னப்பல்லாம் வராத ரெஸ்பான்ஸ் ரத்ததானம் செய்தேன்னு ஃபோட்டோவோட போட்டா உடனே வருது .

ஏ.சி ரூம்ல ஸ்டெரிலைஸ்ட் ஊசி குத்தி ரத்தம் சிந்தினாலே இப்படின்னா? சனத்துக்காவ -சனங்க பிரச்சினைக்காக ரத்தம் சிந்தினா எப்படியா கொத்த ரெஸ்பான்ஸ் இருக்கும்?

செவ்வாய்னா போலீஸ். அரசியல்ல பால பாடமே என்னன்னா சனத்தை போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து மீட்டுக்கிட்டு வர்ரது . இதே போல சனத்தை லொள்ளு பண்றவனை ஸ்டேஷன்ல குத்த வைக்கிறது .

என்னதான் ஷேர் சர்ட்டிஃபிகேட்/ நகை நட்டு / கிரெடிட் கார்ட்/டெபிட் கார்ட் எல்லாம் இருந்தாலும் நெலம் இருக்கிறது ஒரு கெத்து .அதுலயும் லம்பா இருந்தா அந்த ஏரியாவுலயே ஜூரி ஆயிரலாம். குடும்பத்துக்குள்ள வர்ர நில தகராறு / சொந்தக்காரவிக மத்தியில வர்ர தகராறு/ஏன் ஊர்க்காரன் தகராறு வரை பஞ்சாயத்து பேசற கெத்து ஆட்டோமெட்டிக்கா வந்துரும். மேலும் சனத்துக்கு வீட்டு மனை பட்டா வாங்கி கொடுக்கிறது நல்ல மைலேஜை கொடுக்கும்.

கோபத்துக்கு காரகன் செவ். ஒரு ஜாதகத்துல செவ் சரியான பொசிஷன்ல இருந்தா கோபமே இருக்காதுன்னுல்ல.இருக்கும்.
ஆனால் அது எப்போ /எங்கே /யார் மேல /எந்தளவு வெளிப்படனுமோ அந்தளவு வெளிப்படும்.செவ் சரியில்லாத பக்கிங்க தான் இடம் தெரியாம மோதி சின்னா பின்னமாயிர்ரது .

நமக்கு போட மாட்டானுவன்னு தெரிஞ்சா சேரியில உள்ள குடிசைகளை எரிச்சு பயம் காட்டறது /துடியா வேலை செய்ற எதிர்கட்சி ஆளுக்கு கோடு போட்டுர்ரது .இதெல்லாம் தற்காலிகமா ஒர்க் அவுட் ஆகும். லாங் ரன்ல பல்பை தான் கொடுக்கும்.
பாட்டாளி மக்கள் கட்சிக்கு மர வெட்டி கட்சின்னே பேர் வந்துருச்சு ஞா இருக்குல்ல.ஆத்தா செயிலுக்கு போனப்ப மாணவிகளை எரிச்சு போட்டானுவ.என்னாத்த வாரிக்கிட்டானுவ?

செவ் ஒரு ஜாதகத்துல சரியான இடத்துல உட்கார்ந்திருந்தா எனர்ஜி ஜெனரேட் ஆகும். ஸ்டோர் ஆகும்.தேவையானப்போ அதை செலவழிக்கலாம்.
ஆனால் செவ் ஜாதகத்துல பல்பு வாங்கியிருந்தா மேட்டர் வேற மாதிரி போகும். எனர்ஜி ஜெனரேட் ஆகும்.ஏதோ ஒரு வகையில உடனே அது டிஸ் சார்ஜ் ஆகனும்.இல்லின்னா பாடி காட்பாடி ஆயிரும்.
இந்த மாதிரி கேஸுங்க தேன் யுத்தம் இல்லாத சமயத்துல கூட பித்தம் தலைக்கேறி கண்டவளை படுக்க போட புருசங்காரனை மிரட்டறது /போட்டு தள்ளிர்ரது மாதிரி வேலைல்லாம் பார்க்கிறது .

அண்ணாவை பார்த்து எதிர்கட்சி காரரு “யுவர் டேஸ் ஆர் நெம்பர்ட்”ங்கறாரு . அண்ணாவுக்கு கேன்சர்னு தெரியும். ஆனாலும் பக்கி இப்படி ஒரு பிட்டை போடுது .
அப்பம் அண்ணா என்ன சொன்னாரு? “மை ஸ்டெப்ஸ் ஆர் மெஷர்ட்” இந்த மாதிரி ஒர்க் அவுட் பண்ணிக்கிட்டு போனா அரசியல்ல லாங் ரன்ல பொளைக்கலாம்.
செரி ..ஒரு பெரிய இடைவெளிக்கு பிறவு ஃபீல்டுக்கு வந்திருக்கம்.ஒரு பதிவை ஒப்பேத்திட்டம்.அடுத்த பதிவுல செவ்வாயை பற்றிய மிச்சம் மீதி மேட்டரை எல்லாம் சொல்றேன்.உடுங்க ஜூட்டு

ஜெ'வுக்கு ஒரு அக்னிபரீட்சை : மாற்றமா? ஏமாற்றமா?

cm cell

சித்தூர்,
27/05/2016

பெறுனர்
மாண்புமிகு .தமிழக முதல்வர்,
தமிழ் நாடு

விடுனர்
சித்தூர்.முருகேசன்,
17-201, கும்மரா தெரு ,
சித்தூர் ஆ.பி
517001

மதிப்பிற்குரிய அம்மா அவர்களுக்கு !
முதற்கண் ஆட்சியை தக்க வைத்து கொண்டமைக்கு வாழ்த்துக்கள். இந்த முதல்வரியை மட்டும் படித்துவிட்டு பொத்தாம் பொதுவாக “நன்றி” கடிதத்தை தள்ளி விடக்கூடிய பிரகஸ்பதிகள் உங்கள் கோட்டரியில் இருப்பதை நான் அறிவேன். (அனுபவம் அப்படி !)

எனவே முதலில் என் கண்டனங்களை பதிவு செய்து பிறகு என் கோரிக்கைகளுக்கு வருகிறேன். அதற்கு முன் என்னைப்பற்றி ஒரே வரி , கூகுள் ப்ளஸ்ஸில் என் ப்ரொஃபைலை பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை 6 வருடங்களில் ஜஸ்ட் 24 லட்சம் .

இந்த நாடும் ,மக்களும் வளம் பெற ஒட்டுமொத்த தீர்வுகளை கண்டறிந்து கடந்த 19 வருடங்களாக இந்திய பிரதமர்கள்,ஜனாதிபதிகள்,சபா நாயகர்கள்,முதல்வர்களுக்கு முன் மொழிந்துவருபவன் நான். எனக்கு இந்தியாவிலேயே 16 வருடங்களாக ரெஸ்பான்ட் ஆகாத ஒரே நபர் நீங்கள் தான். கிரவுண்ட் ரியாலிட்டி இல்லாத சந்திரபாபுவே 6 வருடங்களில் ரெஸ்பான்ட் ஆகிவிட்டார்.

ஆனால் 2014 ,பாராளுமன்ற தேர்தலின் போது மோடியா? லேடியா? என்ற கேள்வியை உங்கள் கட்சி முன்னெடுத்த போது தேசீய அளவில் உங்கள் உங்கள் இமேஜ் பூஸ்ட் ஆகும் /அதே சமயம் என் திட்டமும் கவனம் பெறும் என்ற எண்ணத்தில் திட்டத்தின் 234 பிரதிகளை சபா நாயகருக்கு அனுப்பினேன். நோ ரெஸ்பான்ஸ் !
தங்கள் இல்ல முகவரிக்கு மீண்டும் ஒரு 234 பிரதிகளை அனுப்பினேன். நோ ரெஸ்பான்ஸ் !இந்த விவரங்களை தங்கள் சிறப்பு பிரிவுக்கு ஆன்லைன் மூலம் தெரிவித்தேன்.கட்சி அலுவலகத்தை தொடர்பு கொள்ளும் படி அறிவுறுத்தப்பட்டது .

கட்சி அலுவலகத்துக்கும் அனுப்பினேன். நோ ரெஸ்பான்ஸ் ! அந்த நேரத்தில் உங்கள் குட் புக்ஸில் , தொடர்பில் இருந்த வீணை காயத்ரி அவர்களுக்கும் அனுப்பினேன். நோ ரெஸ்பான்ஸ் ! இதன் பிரதியை இக்கடிதத்தோடும் இணைத்துள்ளேன்.

எப்படியோ அந்த தேர்தலில் உங்கள் கட்சி 37 இடங்களை கைப்பற்றியது. ( நோ கமெண்ட்ஸ்). பிறகு பெங்களூர் சொ.கு.வழக்கில் பதவி இழந்து சிறை சென்றீர்கள் . சரி கார்டன்/தலைமை செயலகம்/கட்சி அலுவலகத்துக்கு தினசரி ஆயிரக்கணக்கான கடிதங்கள் வரும் போல. இதனால் தான் நம் கடிதம் கவனம் பெறவில்லை என்று சிறை முகவரிக்கே அனுப்பினேன். அது டெலிவரியும் ஆனது . நோ ரெஸ்பான்ஸ்.

இந்த விவரத்தை தங்கள் சிறப்பு பிரிவுக்கு ஆன்லைன் மூலம் தெரிவித்தேன். மனு நிராகரிக்கப்பட்டது .பிறகு நீங்கள் விடுதலையானீர்கள் .மீண்டும் அப்டேட் செய்தேன் .உங்கள் சிறப்பு பிரிவு அதிகாரிகள் என் ப்ரப்போசல்ஸை உரிய அதிகாரிக்கு அனுப்புவதாய் கூறி டாஸ்மாக் எம்.டிக்கு அனுப்பிவிட அவர் தரப்பில் இருந்தும் ” நன்றி” சொல்லி என்னோடு நாட்டையும்/மக்களையும் ஒரு சேர அவமானப்படுத்தி விட்டார்கள் .

இந்த கட்டம் வரை மட்டும் அல்ல – சென்னை மூழ்கும் வரை கட்சிகளை கடந்தவனாகவே இருந்த நான் அந்த நேரம் உங்கள் கட்சியும்/ஆட்சியும் செயல்பட்ட விதத்தை கண்டு விரக்தியுற்று இந்த ஆட்சி போனால் தான் விடிவு என்ற முடிவுக்கு வந்து மாற்று சக்திகள் வலிமையாக இல்லாத நிலையில் திமுக ஆதரவு நிலையை எடுத்தேன்.

முக நூல் ஒக்காபிலரியில் சொன்னால் “கழுவி கழுவி ஊற்றினேன்”. உங்களுக்கு யோசனைகள் தெரிவித்தால் டாஸ்மாக் எம்.டி நன்றி சொன்ன கதையை எக்கச்சக்க ஆதாரங்களுடன் வீடியோ ஆக்கி பதிவிட்டேன்.அதை திமுக ஆதரவாளர்கள் சகட்டுமேனிக்கு ஷேர் செய்ய 24+ஆயிரம் பேரால் பார்க்கப்பட்டது .சுமார் 1,313 பேரால் ஷேர் செய்யப்பட்டது .

முழு மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் – நீங்க மாறி விட்டீர்கள் – ஆரோக்கிய அரசியலை முன்னெடுக்கிறீர்கள், தமிழக முன்னேற்றத்துக்காக திமுகவுடன் இணைந்து செயல்பட போகிறீர்கள் என்று பேச்சாக இருக்கிறது .

பேச்சு செயலாகி இருக்கிறதா இல்லையா என்பதை என்னளவில் நான் அறிந்தால் தானே கருத்து சொல்ல முடியும் .எனவே என் யோசனைகளை மீண்டும் தங்களுக்கு அனுப்புகிறேன். இவற்றுக்கான தொடுப்பை சி.எம் செல்லுக்கு கன்வே செய்திருக்கிறேன். ஆனாலும் ஃபிசிக்கலாக அனுப்பவேண்டும் என்று இவற்றை மீண்டும் அனுப்புகிறேன்.

பார்க்கப்படும் .பரிசீலிக்கப்படும்.அமல்படுத்தப்படும் என்ற நம்பிக்கை இருந்தால் இன்னும் அக்கறையாக -இன்னும் அலுவல் ரீதியாக இவற்றை வடிவமைத்திருக்கலாம். ஆரம்பத்தில் சொன்னதை போல் 16 வருடங்களாக நடக்காத அற்புதம் நடக்கவா போகிறது என்ற எண்ணமே என் மனதில் இருக்கிறது .
ஆகவே என் திட்டங்களை என் வலைதளத்திலிருந்து தரவிறக்கி அப்படியே அனுப்புகிறேன்.

இப்போதாவது பார்க்கப்படும் .பரிசீலிக்கப்படும்.அமல்படுத்தப்படும் என்று நம்ப ஆசைப்படுகிறேன்.

நன்றி.

தங்கள் உண்மையுள்ள,

சித்தூர் முருகேசன்

பிரதி :
திரு.மு.க ஸ்டாலின்
மாண்புமிகு சட்டமன்ற எதிர்கட்சித்தலைவர்,
சென்னை

கிரகபலனும் -நடப்பும்

6

அண்ணே வணக்கம்ணே !
நம்முது ஞானி சார் ரேஞ்சு . நம்ம கேரக்டர் படி நாம ம.ந.கூவைத்தான் ஆதரிச்சிருக்கனும். மேட்டர் என்னடான்னா இங்கே என்.டி.ஆர் அரசியலுக்கு வந்த பிறவு நாம ஆக்டிவ் பாலிட்டிக்ஸ்லயே இருக்கம். க வுன்சிலர் எலீக்சன், முனிசிப்பல் சேர்மன் எலீக்சன், எம்.எல்.ஏ எலீக்சன்,எம்.பி எலீக்சன்னு வர்ஜியா வர்ஜியமில்லாம பார்ட்டிசிப்பேட் பண்ணியிருக்கம்.

வெறுமனே ஃபேஸ்புக்ல ஸ்டேட்டஸ் போடறதில்லிங்கோ .ஃபீல்டுல நத்தம்,நாடோடி ,பொறம்போக்கு , அரை டிக்கெட் ,கால் டிக்கெட் ,ஃபோர் ட்வன்டி எல்லாத்தையும் ஃபேஸ் பண்ணியிருக்கம். நம்ம ஆதர்சங்கள் எவ்ள உன்னதமானதா இருந்தாலும் – நிதர்சனத்தை புரிஞ்சுக்கிட்டு அந்த சமயத்துல சனத்துக்கு எது பெட்டர் சாய்ஸுனு பார்த்து டிசை ட் பண்ணி ஒர்க் அவுட் பண்றது நம்ம ஸ்டைல்.

அதனாலதேன் 2016,தமிழ் நாடு அசெம்ப்ளி எலீக்சன்லயும் அதிமுகவுக்கு ஆப்படிக்க ம.ந.கூ எல்லாம் தேறாதுன்னு நம்ம அனுபவம் சொல்ல திமுகவுக்கு ஆதரவா களமாடினம்.

ஏன் இப்படி மானிலம் கடந்து பல்பு வாங்கனும்னு கேட்டா காரணம் இல்லாம காரியம் கிடையாது காரணங்களை சொல்றேன்.

லோக்கல்ல பொருத்தவரை மத்த சமயங்கள்ள எப்படியோ ஆனா கு.பட்சம் தேர்தல் சமயங்கள்ள ஏதோ ஒரு சக்தி கழுத்துல கை வச்சு முன்னே தள்ளும்.
என்ன ஆச்சோ ஏதாச்சோ ? 2009 அசெம்ப்ளி எலீக்சன்ல பிரச்சாரத்துல தூள் பறத்தின நாம இங்கே கார்ப்பரேட் எலீக்சன் நடக்கறச்ச கரை ஒதுங்கி இருந்தம். எந்த பார்ப்பான் செத்தானோ எந்த சக்தியும் நம்மை கழுத்துல கை வச்சு முன்னே தள்ளல.

அடுத்து அசெம்ப்ளி எலீக்சன் வந்தது .அதுல நம்மாளு “தியாகம் “பண்ணி ஒரு பார்ட் டைம் பொலிட்டீஷியனுக்கு விட்டு கொடுத்துட்டாரு. அதுலயும் இந்த நிலை தொடர்ந்தது. தப்பித்தவறி ரெண்டு எலீக்சன்லயும் ஆக்டிவா இருந்திருந்தா ஊருக்குள்ள நடமாட முடியாத நிலை வந்திருக்கும்.

இங்கே நம்மை காபந்து பண்ண ஆத்தா – தமிழ் நாடு மேட்டர்ல திராட்டுல விட்டுட்டாப்ல இருக்கு .நம்முது கடகலக்னம் -சிம்ம ராசிங்கறதால அல்லாருக்கும் ராகு கேது ஒன்னரை வருசம் ஆப்பு வச்சா நமக்கு 3 வருசம் வைப்பாய்ங்க.

ஒரு ஒன்னரை வருசம் லக்னாத் 1-7 ல் ராகு கேது , அடுத்த ராசிக்கு 1-7 .ராகு கேதுக்கள் தமது பிற்பாதியில பலன் தருவாங்கன்றது விதி. லக்னாத் 1-7 ல் ராகு கேது இருக்கும் போது மோடி மேட்டர்ல பல்பு . ராசிக்கு 1-7 ல் ராகு கேது இருக்கச்சொல்லோ கலைஞர் மேட்டர்ல பல்பு .

இந்த ரெண்டு மேட்டர்லயும் நாம கத்துக்கிட்ட பாடம் என்னன்னா பலன் சொல்லும் போது மோடி பிரதமராக முடியாது – கலைஞர் முதல்வர் ஆவார்னு சொல்லாம ..
மோடி பிரதமர் ஆனாலும் பிரதமரா செயல்பட முடியாது .கலைஞர் முதல்வராக முடியலின்னாலும் சூப்பர் சி.எம் -ஆ பட்டைய கிளப்புவாருன்னு சொல்லியிருக்கனும்.

ஜோதிட பலன் சொல்லலாமே கண்டி -ஜோதிட பலன்லாம் எப்படி மெட்டீரியலைஸ் ஆகும்னு சொல்லவே முடியாது .

என்.டி.ஆருக்கு சந்திரபாபு ஆப்படிச்ச காலத்துல என்.டி.ஆருக்கு ஒரு தந்தி கொடுத்தேன் “இந்த தேதிக்கு பிறகு உங்களுக்கு எதிரியே இருக்கமாட்டாய்ங்க”என்னாச்சு? என்.டி.ஆர் டிக்கெட் போட்டுட்டாரு .

நிற்க உங்களுக்கும் ராஜயோகம் தொடரை எலீக்சன் ஃபீவர்ல ஆரம்பிச்சுட்டம். இதை தொடரலாம்? துண்டு துக்கடாவா எதையாச்சும் எழுதி கதை பண்ணலாமா? கொஞ்சம் உதைக்குது .பார்ப்பம்.

அடுத்த பதிவுல ராஜயோகம் தொடரும்னு நம்பறேன். உடுங்க ஜூட்டு

தொழில்-உத்யோகம்-வியாபாரம் (தனிப்பதிவு)

Exif_JPEG_420
Exif_JPEG_420

அண்ணே வணக்கம்ணே !

உங்களுக்கும் ராஜயோகம் தொடர் நிச்சயமா தொடரும். டோன்ட் ஒர்ரி . இன்னைக்கு அன் ஷெட்யூல்டா இந்த தனிப்பதிவு வருது . எல்லா ஜோசியரும் பத்தாமிடத்தை பத்தி சொல்லும் போது “தொழில் -உத்யோகம் -வியாபாரம்”னு குத்து மதிப்பா அடிச்சு விட்டுர்ரம்.

இதுல உத்யோகம்ங்கறது டிஃப்ரன்ட். தொழில்/வியாபாரம் என்பது டிஃப்ரன்ட். ரெண்டாவது கேட்டகிரில சொன்ன தொழில் டிஃப்ரன்ட் வியாபாரம் டிஃப்ரன்ட்.
ஜோதிட விதிகளின் படி பத்தில் (லக்னம் முதல் 10 ஆவது ராசியில்) ஒரு பாவியாவது இருக்கவேண்டும் அ ஒரு பாம்பாவது இருக்கவேண்டும்ங்கறாய்ங்க. பத்துல பாவி இருந்தா அவன் அகிம்சாவாதியாவா இருப்பான்? நோ. பத்துல பாம்பு இருந்தா அவன் சட்டப்படி வியாபாரம் பண்றவனாவா இருப்பான் ? நோ ..

இந்த பூமிக்கு வந்திருக்கிற ஒவ்வொரு உசுரும் கர்மாவ தொலைச்சு – பிறவிச்சக்கரத்துல இருந்து விடுபடத்தான் பிறப்பெடுத்து வந்திருக்கு .
செயல் என்பது கர்மத்தை கூட்டும். செயல் உங்களுக்கே உங்களுக்கானதா இருந்தா கர்மம் ஓவர் ஃப்ளோ ஆகி பிறவிகள் தவுசன்ட் வாலா கணக்கா வளர்ந்துக்கிட்டே போகும்.

செயல் உங்களுக்கானதா இல்லாம -உங்க பாஸ் /உங்க நிறுவனத்துக்கான செயல்னு வைங்க உங்க செயல்களால் கூடும் கர்மங்கள் எல்லாம் உங்கள் பாசையோ /நிறுவனத்தையோ போய் சேரும்.

நிபந்தனை :
ஒவ்வொரு கணமும் உங்க மைன்ட்ல நான் என்ன எனக்காகவா செய்யறேன்ங்கற ஃபீல் இருக்கனும்.காய்தல் ,உவத்தல் இன்றி மேலிடத்தின் ஆணைகளை ஃபாலோ பண்ணனும்.சொந்த சிந்தனை கூடவே கூடாது .

பத்தாமிடத்துல சுப கிரகம் இருந்தா ஜாதகன் செயலையே ப்ரிஃபர் பண்ண மாட்டான். ஆகவே நோ கர்மம் . நோ பிறவிகள். ஒரு வேளை பாவ கிரகம் இருக்கு.பெருசா பலம் பெறல ..அப்போ உத்யோகம் அவனை ஈர்க்கும்.

வேலை பார்க்கிறவங்கள்ளயே ரெண்டு கேட்டகிரி இருக்காய்ங்க இல்லையா? நிறுவனத்தையே தலையில தாங்கி நடத்தறவிக. “எவனோ செத்தான் எனக்கென்ன போச்சு”ன்னு கொடுத்த வேலைய “மட்டும்” செய்துக்கிட்டு கணக்கு பண்றவிக.

இவ்ளோ மேட்டரையும் ஒரே வார்த்தையில கொண்டுவரத்தான் 10 ஆமிடத்தை கர்மஸ்தானம்னு சொல்றாய்ங்க. செரி உத்யோக மேட்டரை விடுங்க.
உங்களுக்கு உத்யோகம் திருப்திய தரலை -மனசு சதா தொழில்/வியாபாரத்து மேல போகுதுன்னா பத்தாமிடம் பாவ கிரகத்தால இன்ஃப்ளுயன்ஸ் ஆகி இருக்குனு அருத்தம்.

ஏற்கெனவே சொன்னபடி பத்துங்கறது கர்ம ஸ்தானம்.அதாவது நீங்க என்………….னா தொழில் செய்தாலும் அது என்ன்ன்னாஆஆஆஆஆ நாணயமான தொழிலா இருந்தாலும் உங்களுக்கு வர்ர ஒவ்வொரு பைசா பின்னாடியும் அதை உங்களுக்கு கொடுத்தவனோட கருமமும் வந்து சேரும்.
மேலும் எந்த தொழிலிலும் வாடிக்கையாளனுக்கு மி.கிராமாச்சும் துரோகம் செய்தே ஆகனும்.அப்பத்தேன் பைசா பார்க்க முடியும். இதனாலதான் வ்யாபாரம் த்ரோஹ சிந்தஹனு ஒரு முதுமொழியே இருக்கு.

தொழில்/வியாபாரத்துல நீங்க சக்ஸஸ் ஆகனும்னா நீங்க செய்யவேண்டியதெல்லாம் ரெண்டுதேன். ஒன்னு எதிராளிய கொல்லனும் (ஃபிசிகலா இல்லிங்க பாஸ்..சைக்காலஜிக்கலா) இல்லை நீங்க சாகனும். தொழில்/வியாபாரத்துல நீங்க எந்த அளவுக்கு உங்களை சனம் கொல்ல அனுமதிக்கிறிங்களோ அந்த அளவுக்கு தொழில் வளரும் .வியாபாரம் செழிக்கும்.

கொல்றதுன்னா எதிராளியோட ஈகோவை கொல்றது கூட கணக்குதேன். நீங்க கொல்ல ஆரம்பிச்சா பணம் சம்பாதிக்கமுடியாது . உங்க ஈகோவை எதிராளிகள் கொல்ல அனுமதிச்சா சுராங்கனிக்கா சேக்கு ( செமை பணம்)

இதுக்கு சின்னதா ஒரு உதாரணம்:

கடைக்காரர்: என்னண்ணே .. ஒரே தாட்டியா நாலணா குறைக்க சொன்னா எப்டி? இதுல எனக்கு வர்ரதே அஞ்சு பைசாதேன்
வாங்க வந்தவர்:யோவ் நான் ட்ராயர் போட்ட வயசுலருந்து இப்படி அஞ்சு பைசா அஞ்சுபைசானு சொல்லியே அஞ்சு காம்ப்ளெக்ஸ் கட்டிட்டே.ஏன்யா இப்படி பீலா விடறே.சரி ஒழி ..இந்தா பணம் , சரக்கை அனுப்பி வை.

வாங்க வந்தவரோ கொல்லும் இச்சை நிறைவேறிட்டதால உபரியா காசை கொட்டி கொடுத்ததை மறந்து போயிட்டே இருப்பாரு .மறுபடி மறுபடி உங்க கடைக்கு வந்துக்கிட்டே இருப்பாரு .

இதையே கொஞ்சம் மாத்தி யோசிங்க.
நீங்களே ஈகோயிஸ்ட் .வந்தவனை ..இதான் ரேட்டு -பிடிச்சா வாங்கு -பிடிக்காட்டி போயிட்டே இருன்னுட்டா? தொழில்/வியாபாரம் ஊத்திக்கும்.(என்னமோ தெரியல பதிவு அந்தரத்துல தொங்குது -சனம் கேள்வி கீள்வி கேட்டா உபரியா பல தகவல்களை /விளக்கங்களை தரலாம் -நான் ரெடி ..நீங்க ரெடியா?)

உங்களுக்கும் ராஜயோகம் : 15

wrappers

அண்ணே வணக்கம்ணே !
உங்களுக்கும் ராஜயோகம்ங்கற இந்த தொடர்ல ராஜயோகம் வரதுக்கு சந்திர பலம் எவ்வளவு முக்கியமோ விரிவா சொல்லியாச்சு .இப்ப சந்திரபலம் இல்லாதவிக ஃபாலோ பண்ண வேண்டிய ரெமிடீஸை கொடுத்துர்ரன்.

1.சதா சர்வ காலம் பகல் கனவா?
அமாவாசைக்குப் பின்வரும் 14 நாட்கள் நிலவொளியில் உணவருந்துங்கள் (அதாங்க நிலாச்சோறு).. ஊஞ்சலாடுங்கள். மீன் தொட்டி வைத்து வண்ணமயமான மீன்களைப் பார்த்துக் கொண்டிருங்கள்.கடல் தொடர்பான உருவம் பொறித்த ஆடை அணிகலன் அதிகம் உபயோகியுங்கள் ( நிறம் : வெள்ளை அல்லது இள நீலம் )

2.கொடுத்த வாக்கை நிறைவேற்ற முடியலியா?
சந்திரபலம் இருக்கும் நாட்களில் மட்டுமே முக்கிய முடிவுகளை எடுங்கள். வாக்குக் கொடுக்காதீர்கள். காமராஜர் மாதிரி “பார்க்கலாம்” “பார்க்கலாம்” என்றே சொல்லிக் கொண்டிருங்கள்.பெண்கள் முத்து மாலை அணியலாம்.ஆண்கள் கடல் தொடர்பான உருவம் பொறித்த டாலர் அணியலாம்.

3.திடீர் தைரியம்-திடீர் திகில்
அருவி,கடலோசை இத்யாதிய ரிங் டோனா வச்சுக்கங்க. பெண்கள் முத்து பதித்த தோடு அணியலாம்.

4.அடிக்கடி வீடு /வீட்டுச்சூழல் மாறுதா?
தாய் கடல் தொடர்பான உருவம் பொறித்த ஆடை அணிகலன் அதிகம் உபயோகிக்கவும்.ஹால்ல ஒரு ஊஞ்சலை மாட்டுங்க. ஈசான்யத்துல அக்வேரியம் வைங்க. வண்டியை பார்க் பண்ற இடம் அல்லது போஸ்ச்சர மாத்துங்க.வண்டி மேல கடல் தொடர்பான உருவம் ஸ்டிக்கரிங் பண்ணிக்கோங்க (உ.ம் மீன்,படகு,மீனவன்). வடமேற்கில் சமையலறை கூடாது, பள்ளங்கள் கூடாது.

5.சஞ்சலம்?
கன்னியாகுமாரி அம்மனை தியானம் பண்ணுங்க.ஏரி,கடற்கரையில் வாரம் ஒரு முறையாவது ஒரு மணி நேரமாவது டைம் பாஸ் பண்ணுங்க. மற்ற நாளில் அந்த காட்சிகளை நினைச்சுப்பாருங்க.குழந்தைகளும் கடல் தொடர்பான உருவம் பொறித்த ஆடை அணிகலன் அதிகம் உபயோகிக்கவும்.

6.நுரையீரல்,சிறு நீரகம் தொடர்பான பிரச்சினையா?
உங்களுக்குத் தூசு, டென்ஷன், புகை, உதவாது. சுத்தமான குடிநீரையே அருந்துங்கள்.வெறும் வயிற்றில் அருகம்புல் சாறை அருந்துங்கள். நீச்சல், தலைக்குக் குளிப்பது, அதிக வெயில், அதிகக் குளிர் போன்றவற்றைத் தவிர்த்து விடுங்கள்.

7.கண்டதும் காதல்?
கண்களின் தண்டனைக் காதல்வழி என்ற கவிஞரின் வைர வரிகளை மறக்காதீர்கள். முக்கியமாய் மதர்லி லுக் /மதர்லி ஏஜ் உடைய பெண்கள் விஷயத்தில் எச்சரிக்கை.

8.காம்ப்ளெக்ஸ்?
தனிமையை தவிர்க்கவும். கடுப்பா இருக்கும் போது ஃபிசிக்கலா ஸ்ட் ரெய்ன் பண்ணிக்கங்க (வேக நடை ) மத்தவிகளை நினைச்சு நீங்க எப்படி பயப்படறிங்களோ அதுக்கு ரெண்டு மடங்கா அவிக உங்களை பார்த்து பயந்து நடுங்கறாய்ங்க.இதை மனசுல வைங்க.

9.ஏறுனா ரயிலு? இறங்கினா ஜெயிலு?
சொத்து சேமிப்புல கை வைக்காதிங்க. வச்சாலும் எதிர்காலத்துக்கு மினிமம் கியாரண்டியை விட்டுட்டு வைங்க.

தொழில்,உத்யோகம்,வியாபாரத்தை படக்குன்னு வைன்ட் அப் பண்ணாதிங்க.பழசயும் தொடர்ந்து கிட்டே புதுசுல முயற்சிகளை தொடருங்க. புதுசு புட்டுக்கினா பழசுக்கு வந்துர்ராப்ல.

10.திடீர் லாபத்துக்கு ஆசைப்பட்டா திடீர் நஷ்டத்துக்கு தயாரா இருக்கோனம்.டேக் கேர்

11.உணவு,உறக்கம்,கில்மா,செலவு இந்த நாலு மேட்டர்ல மனசு சொல்றதை கேட்காதிங்க.பாடியும் -ப்ராக்டிக்கல் பொசிஷனும் சொல்றதை கேளுங்க. ஒரு ரெகுலாரிட்டியை ஃபாலோ பண்ணுங்க.

மேற்படி 11 பாய்ண்டை 100% ஃபாலோ பண்ணா உங்க பொதுவாழ்க்கை ப்ரேக் டவுன் இல்லாம ஓடும். மக்கள் தொடர்புல பெருசா பிரச்சினை வராது .
உதவின்னு வர்ரவனை பற்றி மூளையால அசெஸ் பண்ணுங்க.அவன் பிரச்சினையை மனசால அசெஸ் பண்ணுங்க. ஸ்பார்க் ஆகிற தீர்வை உடனே இம்ப்லிமென்ட் பண்ணாம மொதல்ல ரிலீஃப் கொடுத்து பிறவு விட்டு பிடிச்சு சால்வ் பண்ண பாருங்க. உணர்ச்சி வசப்படாதிங்க.

உங்களுக்கும் ராஜயோகம் : 14

Buvan

அண்ணே வணக்கம்ணே !

இந்த தொடர்ல சூரியன் ,சந்திரனுக்கே 15 பதிவு ஆயிரும் போல .இனி தவளைப்பாய்ச்சல் நடைக்கு மாற வேண்டியது தான்.அடுத்த பதிவுல சந்திர பலம் இல்லாதவிகளுக்கு பரிகாரம் ,அடுத்த பதிவுல செவ் . இந்த பதிவுல சந்திரனை பத்தி கொஞ்சம் அடிஷ்னல் டீட்டெய்ல்ஸ் பார்த்துரலாம்.

சந்திரன் ஒரு மனிதனோட டோட்டல் சைக்கலாஜிக்கல் செட்டப்புக்கு காரகன். ஏன்னா இவர் தான் மனோகாரகன். நாம பிகாம் வரை படிச்சம் . பஸ்ஸுல செக்கிங்கா வேலை பார்க்க வேண்டி வந்தது (ஓனர் ப்ரொட்யூசர்- ஒரு படத்தோட ரெண்டாவது ஷெட்யூலுக்கு போற மூவ்மென்ட் -அப்பாவோட ஃப்ரண்டு -ச்சொம்மா வெய்ட்டிங்குல இருக்கிறதை விட பஸ்ஸுக்கு போய் வந்துக்கிட்டு இருடான்னாரு)

மத்தவிகளா இருந்தா ஆகா என் படிப்பென்ன? என் கலரென்ன? நான் செக்கிங்கான்னு ஃபீல் பண்ணுவாங்க. ஆனால் நாம என்ன நினைச்சம்மா கண்டக்டரா இருந்த ரஜினியே சூப்பர் ஸ்டாராயிட்டாரு .நாம செக்கிங். ரஜினியை பீட் பண்ணிருவம் போலனு நினைச்சுக்கிட்டு வேலை பார்த்தேன்.

இங்கே வேலை என்னமோ ஒன்னுதான் .ஆனால் எண்ணம்? பஸ் ஸ்டாண்டுல எப்படியும் 100 கண்டக்டர்,100 செக்கிங் இருந்திருப்பாய்ங்க.இல்லேங்கல.ஆனால் அவிய எண்ண ஓட்டம் என்ன?

இதான் பாஸ் ..சந்திரன் பண்ற மாயா ஜாலம். உங்க லைஃப் எப்படி போகனும்ங்கறதை மத்த கிரகங்கள் பார்த்துக்கும்.அதை நீங்க எப்படி எடுத்துக்கறிங்கங்கறதை சந்திரன் பார்த்துக்குவார்.

ஜாதகத்துல சந்திரன் ராகு,கேது சகவாசம் வாங்காம ,சனியோட சேராம , ஆட்சியாவோ உச்சமாவோ இருந்து தொலைச்சா – என்ன நடந்தாலும் பாசிட்டிவாவே எடுத்துக்கிட்டு போயிருவிங்க. சந்தோஷத்துல இருக்கிறவன் எல்லாரையும் சந்தோஷப்படுத்தி பார்ப்பான். துக்கத்துல உள்ளவன்? துக்கப்படுத்தி தானே பார்ப்பான்.

நல்ல வாழ்க்கையை வாழலின்னாலும் நாறிப்போன வாழ்க்கையையும் பாசிட்டிவா எடுத்துக்கிட்டு வாழ்ந்தவன் சமூகத்தை பார்க்கிறான். அய்யோ பாவம் இவியளுக்கு இந்த டெக்னிக் தெரியலையே சொல்லித்தருவம்னு நினைச்சா சாமியாராவோ ,மோட்டிவேஷ்ன்ல ஸ்பீக்கராவோ மாறிருவான்.
தத்..சின்ன சின்ன இல்லாமைகள் இந்த சனத்தோட வாழ்க்கையையே நரகமாயிருச்சே .. அந்த இல்லாமைகளை இல்லாம ஆக்கிரனும்டானு நினைச்சா அரசியலுக்கு வரான்.

ஷார்ட்டா சொன்னா ஈவு ,இரக்கம் ,கருணைல்லாம் தர்ரது சந்திரன். சந்திர பலம் இல்லின்னா இன்னைக்கும் டாஸ்மாக் எதிர்ப்பாளர்கள் மண்டைய உடைக்கிற பாட்டிக்கா மாதிரி தான் இருப்பம். இப்படி இருந்தா மக்கள் ஆதரவு எப்படி கிடைக்கும்?

எண்ணம் போல் மனம் -மனம் போல் வாழ்வும்பாய்ங்க. நல்ல எண்ணத்தை தர்ரது சந்திரன் பாஸ் ! அந்த எண்ணம் பேச்சாவது ,பேச்சு செயலாவதுல்லாம் மத்த கிரகங்களோட டிப்பார்ட்மென்ட்.ஆனால் ஒரு வகையில அரசியல் வாழ்க்கைக்கு மூலமே -ஸ்டார்ட்டிங் பாய்ண்டே சந்திரன் தான்.

சூரியன் பகலெல்லாம் காச்சு காச்சுன்னு காச்சறாரு .ஆனால் சோலார் பவர்ல என்னென்ன மேட்டர்லாம் இருக்குன்னு உங்களுக்கே தெரியும் ( தாவரம்லாம் ஸ்டார்ச் தயாரிக்குது ,நமக்கு விட்டமின் டி கிடைக்குது Etc) சந்திர ஒளியில என்ன கிடைக்குது? ஒரு ரிலீஃப் .அம்புட்டுதேன். சந்திர ஒளியில அல்லி மலருதுங்கறாய்ங்க. சந்திர ஒளியில என்ன “மசாலா” இருக்குன்னு ஆதாரப்பூர்வமா ஒன்னும் தெரியல.

ஆனால் மென்டலா டிஸ்டர்ப் ஆனவிகளுக்கு ஒரு மருந்து இருக்காம் (ச்சொம்மா படிச்சதுதேன்) ஆப்பிள்களை தோல் சீவி , துண்டு போட்டு தேன்,வினிகர்ல ஊற வைக்கனும்.மேற்படி துண்டுகளை ட்ரான்ஸ்பரன்ட் கண்ணாடி ஜார்ல போட்டு /மூடிக்கு பதிலா கண்ணாடி போட்டு வளர்பிறை சந்திரனோட ஒளி ஜார் மேல படறாப்ல வைக்கனுமாம். தேய்பிறை ஆரம்பிச்ச பிறகு ஜார்ல உள்ளதை பேஷண்டுக்கு கொடுக்கனுமாம்.

சந்திரனோட தீர்வுகள் உடனடி லாட்டரிகணக்கா இருக்கும் (சத்துணவு மாதிரி ) -அடித்தட்டு மக்கள் ஆதரவை உடனே பெறும் .ஆனால் லாங் ரன்ல சொதப்பவும் செய்யலாம்.

தவிச்ச வாய்க்கு தண்ணிங்கறாய்ங்க. அந்த தண்ணிய சுத்திகரிச்சு வீட்டுக்கு 20 லி ஃப்ரீயா தரோம்னா சனம் ஈல்ட் ஆவாய்ங்க. அதே சமயம் சொன்னதை செய்யாம டீல்ல விட்டா பல்பு கொடுத்துருவாய்ங்க. சந்திரன் தரக்கூடிய தீர்வுகள் டெம்ப்ரரியா ரிலீஃப் மட்டுமே கொடுக்கும் (கொடுத்துதான் ஆகனும் இல்லேங்கல) அதே சமயம் லாங் டெர்ம் ப்ளானும் வச்சுக்கிட்டு ஒர்க் அவுட் பண்ணனும்.இல்லின்னா வெட்டிச்செலவா -சிரிப்பா போயிரும்.

கலைஞர் காப்பீடு -சைக்கலாஜிக்கல் ரிலீஃப் தான்.அரசு மருத்துவமனைகளை மேம்படுத்தறது லாங் டெர்ம் ப்ளான்.ரெண்டையும் பேர்லலா கொண்டு போயி ஒரு கட்டத்துல காப்பீட்டை ஒழிச்சுரனும்.இதான்யா நிர்வாக சூட்சுமம்.

ஓகே பாஸ் ! ஆரம்பத்துல சொன்னாப்ல ரெண்டு கிரகமே 14 அத்யாயத்தை விழுங்கிருச்சு .அடுத்த பதிவுல சந்திர பலம் இல்லாதவிகளுக்குண்டான பரிகாரங்களை ச்சூ காட்டிட்டு செவ்வாய்க்கு போயிரலாமா? உடுங்க ஜூட்டு

உங்களுக்கும் ராஜயோகம் : 13

அண்ணே வணக்கம்ணே !
இந்த உங்களுக்கும் ராஜயோகம் தொடர்ல சந்திரனை பத்தி கடந்த பதிவுல சொல்லியிருந்தன் . அதுல சந்திரன் மனோகாரகனா, ஜலகாரகனா,அன்றாடங்காய்ச்சிகளுக்கு காரகனா எப்படில்லாம் ஒர்க் அவுட் பண்றாருன்னு பல உதாரணங்கள் சொல்லியிருந்தன்.

சந்திரபலம் இருந்தா உங்க மனசு எப்பவும் அன்னாடங்காய்ச்சிகளை நோக்கி பாயும். ஃப்ளோட்டிங் பாப்புலேஷன் உள்ள இடங்களை நோக்கி பாயும். உதாரணம் சினிமா தியேட்டர் ,வார சந்தை , காய்கறி மார்க்கெட். இதுமட்டுமில்லை கடல் ,நதிகள் ஏரி,குளம்,குட்டை தொடர்பான மேட்டர்லாம் கவரும்.

உங்க ஜாதகத்துல சூரியபலம் இருக்குன்னு வைங்க பிரபலங்கள் உங்களை நோக்கி கவரப்படுவாங்க. (உங்க வீர பிரதாபங்களை பார்த்து ) சந்திரபலம் இருந்தா பிரபலங்களோட மனைவியர் கவரப்படுவாய்ங்க. அவிக கண்ணுக்கு நீங்க அவிக தம்பி போலவோ ,மகனை போலவோ தெரிவிங்க பாஸூ ! எக்கு தப்பா மூக்கை நுழைச்சா மூக்கு பஞ்சர்.

சூரியன் பித்ருகாரகன் (அப்பா) சந்திரன் ? மாத்ருகாரகன்.ஒரு காரியம் நடக்கனும்னா அப்பனை அப்ரோச் பண்றவன் ஜாதகத்துல சூரியன் நல்லாருக்குனு அருத்தம்.அம்மா மூலமா ப்ரொசீட் பண்றவன் ஜாதகத்துல சந்திரன் பெட்டரா இருக்காருனு அருத்தம்.

நல்ல அம்மாவும் அமைஞ்சு (அமையலைன்னாலும் பரவால்ல) -அந்த அம்மாவோட குட் புக்ஸ்லல நீங்க இருந்திங்கனா அதுவே ஆயிரம் யானை பலம். இதுக்கு எங்கப்பாவையே ஒரு உதாரணமா காட்டலாம். எம்.ஜி.ஆர்,கலைஞர் மதர் சென்டிமென்ட் பத்தில்லாம் நான் சொல்லதேவையில்லை .

இது எப்படி சாத்தியமாகுதுன்னா ..தாய் அடிப்படையில ஒரு பெண் . வீக்கர் செக்ஸ். கணவனே ரட்சகன்ங்கற ஃபீல்ல இருப்பாள். பெண்ணின் உலகத்தில் அவள் மையப்புள்ளி கிடையாது .ஒரு கட்டம் வரை கணவன் மையப்புள்ளி , பிறகு மகன். இப்படி மனசெல்லாம் ஒரே எண்ணமா இருந்தாச்சுன்னா அவள் மனுஷ பிறவி கிடையாது தேவதையா மாறிர்ரா.

அந்த தேவதையின் எண்ணங்கள் உங்கள் வாழ்வை ,வளத்தை ,பெயர் புகழை சுற்றி சுற்றி வரும் போது நீங்க ஜெட் கேட்டகிரி செக்யூரிட்டிக்குள்ள போயிர்ரிங்க.
அடுத்து பிரபலங்களின் மனைவி மார் பற்றி சொல்லனும்னா கணவன் பிரபலம்னாலே அந்த பெண் கணவனை இழந்துர்ரா. அடுத்த சாய்ஸ் என்ன? மகன் தானே .மகனும் பிரபலம்னு வைங்க. அப்ப என்னாகும் ? அவளுக்கு கொஞ்சம் கவனம் கொடுத்து -அக்கறை காட்டினா அவமனசு உருகுது .உங்க பாசத்துக்காக தன் இன்ஃப்ளுயன்ஸை உபயோகிக்கவும் துணிஞ்சிர்ரா.

நிலத்துல /சைட்ல ஆழ்துளை கிணறு தோண்ட நாள் குறிச்சுக்க வருவாய்ங்க. அப்ப வீட்ல உள்ளவிக பேர் எல்லாம் சொல்ல சொல்லுவம். அதுல விருச்சிக ராசி பேர் வந்தா அந்த பார்ட்டிய 9 நாள் முன் கூட்டி வெளியூர் அனுப்பிர சொல்லுவன். ரிஷபராசி கடக ராசி பேர் சொன்னா அவிக கையால பூஜை போட்டு வேலைய ஆரம்பிக்க சொல்வேன். எதுக்குன்னு சொல்லுங்க பார்ப்பம்? இதுல பெரிய சூட்சுமம் இருக்கு.

இன்னைக்கு தமிழக அரசியல்ல மாற்று மாற்றுனு பினாத்தற சனத்தோட எண்ணிக்கை சாஸ்தியாயிருச்சு . மாற்றுங்கறதுக்கு அடிப்படை கற்பனை வளம். இது இப்படியே தான் போகனுமா? மாத்த முடியாதாங்கற எண்ணம் எல்லாருக்கும் வரும்.ஆனால் மாத்தி யோசிக்க கொஞ்சம் கற்பனையும் தேவை அதை தர்ரவரு சந்திரன்.

அதுக்காவ சந்திரனை மட்டும் நம்பி மாத்தியோசிக்க ஆரம்பிச்சா சீமான் கட்சியோட தேர்தல் அறிக்கை மாதிரி ஆயிரும் பொளப்பு .அதே சமயம் மாற்று பத்தி யோசிக்கவே மாட்டேன்னா மக்கள் உங்களை நோக்கி கவரப்பட வாய்ப்பே இல்லை . சந்திரன் கலாம் சொன்ன கனவை தருவாரு .அந்த கனவுக்கு ப்ராக்டிக்காலிட்டிய கொடுக்க இதர கிரகங்களோட பலமும் தேவை .

ஏன்னா சந்திரன் ரெண்டே கால் நாளைக்கொருக்கா ராசி மாறிருவாரு . சந்திரனோட பலத்துல ஒரு தொடர்ச்சி இருக்காது சூரியனுக்கு மாற்று சந்திரன். இந்த கான்டெக்ஸ்ட்ல எதுக்கும் ஒரு மாற்றை கற்பனை பண்ணனும்னா கூட சந்திர பலம் தேவை . நம்ம ஜாதகத்துல குருவும் உச்சம்ங்கறதால நாம கொஞ்சம் தொலைவா ரோசிச்சு தலிவருங்களுக்கு ஐடியா கொடுக்கறம்.இல்லின்னா மொக்கை தானே?

(தொடருவம்ல)