ஜோதிட பாடம்: 9

அண்ணே வணக்கம்ணே !
ஜோதிட பாடம்னு ஆரம்பிச்சம். ராசி நட்சத்திரம்,துவாதச பாவ காரகம் வரை வந்தம். இந்த துவாதச பாவங்கள்ள கேந்திர கோண ஸ்தானங்களை பத்தி பார்த்தம். கிரேடிங் வச்சுக்கிட்டா கோணம் ஃபர்ஸ்ட் கிரேட். கேந்திரம் செகண்ட் கிரேட்.

இதுக்கடுத்து வர்ரது பணபர ஸ்தானங்கள்: 2,11. இதை தேர்ட் கிரேட்னு வச்சுக்கலாம். இன்னாபா இது அக்குறும்பா இருக்கு. 2ங்கறது தனபாவம் தானே. வாயுள்ள பிள்ளை பிழைக்கும்ங்கறாய்ங்க. 11 ங்கறது லாப ஸ்தானமாச்சே . வாழ்க்கையில பத்து ரூவா லாபம் பார்க்கலின்னா பொளைக்கறது எப்படி? இதுக்கு போயி தேர்ட் கிரேட் கொடுத்திருக்காய்ங்களேனு ஒரு கேள்வி எழும். மேம்போக்கா பார்த்தா இது நெஜம் தான்.

ஆனால் பாருங்க நாம பைசா சம்பாதிக்க என்னெல்லாம் செய்யவேண்டியிருக்கு? ஒரு தாட்டி ஓட்டிப்பாருங்க. ஒவ்வொரு சமயம் நமக்கே ” த்தூத்தெறி இந்த பொளப்புக்கு “ன்னு தோனிருது. அந்தளவுக்கு ஈத்தரை,பிக்காலி,பீத்தரை வேலைல்லாம் பார்க்கவேண்டியிருக்கு.
கொஞ்சம் போல மானம்,ஈனம்,சூடு,சொரனை இதை எல்லாம் விட்டுட்டா கொஞ்சம் போல பைசா கிடைக்குதுன்னா பெஸ்ட் ஆஃபருப்பான்னு சம்மதிச்சுர்ரம்.பைசா கிடைக்குது.

ஆனால் நம்ம பேச்சுக்கு மருவாதி இருக்குமா? ( 2ஆம் பாவம் தான் வாக்குஸ்தானம் கூட தெரியும்ல)

நாம எதுவாச்சும் நீதி போதனை சொல்ல ஆரம்பிச்சா “ஆமாம் ஒன்னை பத்தி தெரியாதாக்கும் . நீ தினத்தந்தியில ரிப்போர்ட்டர் வேலை பார்த்த பார்ட்டிதானே”ன்னிருவாய்ங்க.

ரெண்டாம் பாவம் குடும்பத்தையும் காட்டுது. நாம பைசா தான் முக்கியம்னு கூட்டி கொடுத்து -காட்டி கொடுத்து பைசா புரட்டி குடும்பத்துக்கு செலவழிச்சா அவிக சேஃப்டி ஜோன்ல இருப்பாய்ங்க. அவிகளுக்குள்ள போராடும் குணமோ வல்லமையோ ஒரு ம..னாவும் ஜெனரேட் ஆகாது.

நாம ரெண்டு கையாலயும் “வாங்கி போட்டா” நல்லா திம்பாய்ங்க. கட்டை சேவேறி போயிரும். ச்சும்மா வர்ர பணம் தானேங்கற ஃபீல் வந்துரும். படக்குனு லஞ்ச ஒழிப்பு துறையில சிக்கி சின்னா பின்னமாயிட்டா குடும்பமே கொலாப்ஸ் ஆயிரும்.

இதுல இன்னொரு வில்லங்கம் என்னன்னா ரெண்டாமிடத்துல உள்ள எல்லா கிரகங்களும் அப்படியே ஏழாம் பார்வையா எட்டை பார்க்கும். எட்டுன்னா தெரியும்ல டிக்கெட் போடற இடம்.

நம்ம ரெண்டு டூ வீலரையும் லிங்க் பண்ணி மொபைல் புக் ஸ்டோர் செய்தம். எஸ்டேட்ல இருந்து டவுனுக்கு ஓட்டிக்கிட்டு வரும் போதே ஞம ஞமங்குது. என்னடான்னு பார்த்தா ஒரு வண்டியில பேக் வீல் பேரிங் காலி.

சாதாரணமாவே பஜாஜ் சன்னின்னா மெக்கானிக் எல்லாம் ‘போ போ”னு லெஃப்ட் ஹேண்ட்ல காக்கா விரட்டுவாய்ங்க. இதுல இது மேஜர் ப்ராப்ளம். கம்பெனி ப்ரொடக்சனே நிறுத்திருச்சு. அங்கே இங்கே பழைய சாமானாத்தான் பீராஞ்சு போடனும்.

மெக்கானிக் ரூ.350 கேட்டாரு. தரேன்னு தந்து அழுதம். அன்னாருக்கு லாபம் தான். ஆனால் லாபம் மட்டுமா அவர் கணக்குல சேரும்? நம்ம வவுத்தெரிச்சலும் தான் சேரும்.

நம்ம லாபம் அடுத்தவனோட நஷ்டமா இருக்கிறதால – நம்ம நஷ்டம் அடுத்தவனோட லாபமா இருக்கிறதால லாபம் கிடைச்சா கர்மம் கூடுது. நஷ்டம் வந்தா கர்மம் ஒழியுது. இதனாலத்தேன் 2-11 ஐ தேர்ட் கிரேட்ல போட்டிருக்காய்ங்க.

மேலும் 11 ங்கறது மூத்த சகோதரத்தை கூட காட்டும். இன்னைக்கு அண்ணாவோ அக்காவோ ஃபுல் ஃபார்ம்ல இருந்து தங்களுக்கு நமக்கு அள்ளி கொடுக்கிறாய்ங்கனு வைங்க. எதிர்காலத்துல சொத்து பிரிக்கிறச்சயோ – அல்லது அவிக கை ஓய்ஞ்சு போன நேரத்துலயே நம்ம பக்கத்துல இருந்து எதிர்ப்பார்ப்பாய்ங்களா இல்லையா?

இதனாலத்தேன் 2-11 ஐ தேர்ட் கிரேட்ல போட்டிருக்காய்ங்க. நாளைக்கு ஆபோக்லிமம் என்ற 3 ஆமிடத்தையும், துஸ்தானங்கள் என்ற 6-8-12 பாவங்களை பத்தியும் விலாவாரியா பார்க்கலாம். உடுங்க ஜூட்டு.

2014குரு பெயர்ச்சி பலன் :கடக குரு என்ன செய்வாரு?

ஜெயலலிதாஅண்ணே வணக்கம்ணே !
நம்ம பதிவுகளை தொடர்ந்து படிக்கிறவுகளுக்கு தெரியும். நாம இந்த ராசிபலனுக்கெல்லாம் பெருசா முக்கியத்துவம் தர்ரதில்லை.
ஆனாலும் நிறைய பேரு மெயில்ல,ஃபோன்ல “குரு பெயர்ச்சிபலன் எழுதலியான்னு” உரிமையா கேட்கிறப்போ நமக்கே கில்ட்டி வந்துருது.அதனால இந்த குரு பெயர்ச்சி பலனை ஆடியோவா தந்திருக்கன்.
கீழே உள்ள ப்ளேயர்லயே நீங்க கேட்கலாம். இதுல வெறும் பலன் தான் சொல்லியிருக்கன். நம்ம ஸ்பெசாலிட்டியே பரிகாரம் தானே.
அதை தரலின்னா எப்படி .
குரு அனுகூலமா இல்லின்னா காசு சமயத்துக்கு வராது, அடகு வச்ச தங்கத்தை மீட்க முடியாது, பெரீ மன்சன்லாம் நமக்கு ஆப்படிக்கிறதுலயே இருப்பாய்ங்க. பொஞ்சாதி ,புள்ள குட்டி சொல் பேச்சு கேட்காது. இல்லின்னா நம்மையே எதிர்த்து புரட்சி பண்ணும். டை ம் கீப் அப் பண்ண முடியாது. ஃபோன் போட்டு சொன்னாலே வேலை செய்ற பக்கிங்க நேர்ல போயி தொங்கினாலும் செய்யாது.புனர்வசு,விசாகம்,பூரட்டாதி நட்சத்திரங்கள்ள அடக்கி வாசிங்க. ஊர் பஞ்சாயத்துக்கெல்லாம் போகாதிங்க.
இதை எல்லாம் முன் கூட்டி சொல்றதால அடக்கி வாசிங்க.  இந்த பதிவின் கடேசியில சில பரிகாரங்கள் சொல்லியிருக்கன்.அதையும் ஃபாலோ பண்ணிக்கங்க.
குரு அனுகூலமா இருந்தா வானத்தை கீறி வைகுண்டத்தை காட்டிரலாம்னு நினைச்சுராதிங்க. குரு சுபகிரகம். ஜஸ்ட் ஒரு புல்லட் ப்ரூஃப் மாதிரின்னு சொல்லலாம். குரு பலத்தை வச்சு உங்களை நீங்க பலப்படுத்திக்கலாம்,வளப்படுத்திக்கலாம். பாசிட்டிவ் அப்ரோச் இருந்தாதான் குரு பலம் உங்களுக்கு உதவும். அதை விட்டுட்டு கண்டவன் கிட்டே சகட்டுமேனிக்கு மோதறேன்னு இறங்கினா வேலைக்காகாது.ஏதோ காசு பணம் புரளும், நாலு காசு மிச்சம் பிடிக்கலாம்,பொன்னோ பொருளோ வாங்கி சேர்க்கலாம். பொஞ்சாதி,புள்ளக்குட்டிய திருப்தி படுத்தலாம். மேலதிகாரி,பெரீ மன்சங்க கொஞ்சம் அனுகூலமா இருப்பாய்ங்க. இதான் மேட்டரு.
குருவோட டிப்பார்ட்மென்ட் என்னென்னனு சொல்றேன். குரு அனுகூலமா உள்ளவுக இந்த மேட்டர்ல எல்லாம் ஆர்வம் காட்டி ஒர்க் அவுட் பண்ணிக்கங்க. குரு பிரதிகூலமா உள்ளவுக இந்த மேட்டர்ல எல்லாம் அலார்ட்டா இருங்க.விலகி இருங்க (குருவே சொல்றாப்ல எழுதியிருக்கன்)
மொதல்ல என் காரகத்வத்தை பார்க்கலாம்.
நான் தங்கம், பைனான்ஸ், அரசியல், மதம், மதம் சார்ந்த நிறுவனங்கள், தேவஸ்தானங்கள், வடகிழக்குத் திசை அகியவற்றிற்கு அதிகாரி, நானே புத்திரக்காரகன், பௌத்திரக்காரகன் (பேரன்கள்), நீதிமன்றம், கரூவூலம், புஷ்பராகம், பிராமணர், சான்றோர், இதயம், வயிறு, ஞாபகசக்தி, புராணம், வேதம், சேவை நிறுவனங்கள், ஆட்சி மொழி, அரசு தரும் வீட்டு வசதி, காசாளர், கண்டக்டர், முன்யோசனையுடன் திட்டமிட்டு செயல்படுதல், இது எல்லாம் என் இலாகாவின் கீழ் வருபவை. தட்சிணாமூர்த்தி, சாயிபாபா, ஸ்ரீராகவேந்திரரர் ஆகியோரும் எனது பிரதி ரூபங்களே!
குரு பிரதி கூலமா உள்ளவுக செய்துக்க வேண்டிய பரிகாரங்கள்:
1. வியாழக்கிழமை மஞ்சளாடை அணிந்து தட்சிணாமூர்த்திக்கோ வேறு எவரேனும் குருவுக்கோ விரதமிருங்கள்.2. தங்கத்தை லாக்கரில் வையுங்கள். 3. வட்டிக்கு ஆசைப்படாதீர்கள்.4. அஜீரணத்தைத் தவிர்த்து விடுங்கள்.5. பிராமண நண்பர்களுக்குச் சாப்பாடு போடுங்கள்.6. மஞ்சள் நிறப் பொருட்களை அதிகம் உபயோகியுங்கள்.7. கோயில், குளம், ஆசிரமம், திருப்பணி சேவைகளுக்குப் பணம் கொடுங்கள். ஆனால் நீங்கள் அங்கு செல்வதோ, ஈடுபாடு காட்டுவதோ வேண்டாம்.8. பெரிய மனிதர்களுடன் அளவோடு பழகுங்கள்.9. வங்கி, கோர்ட்டு, தேவஸ்தானங்களைத் தவிர்த்து விடுங்கள்.10. வெறும் வயிற்றில் வில்வ இலையை மென்று விழுங்குங்கள். 11. வடகிழக்கில் மேடு, படிகள், மாடிப்படிகள் இருந்தால் நீக்கி விடுங்கள்.

ஜோதிடபாடம்: 8

vlrஅண்ணே வணக்கம்ணே !
லக்னம் முதலான 12 பாவங்களுக்கு கிரேடிங் கொடுத்து விலாவாரியா சொல்லிக்கிட்டு வரன். இன்னைக்கு செகண்ட் கிரேட் பாவங்களை பார்க்கலாம்.
அதாவது கேந்திர ஸ்தானங்கள். லக்னம் முதல் 4-7-10 பாவங்களை தான் கேந்திர ஸ்தானம்னு சொல்றம்.
இங்கே பாவகிரகங்கள் இருந்தா நல்லது. சுபகிரகங்கள் இருந்தா ஏதோ பரவால்லை.
குறிப்பு:
தற்சமயம் பாவங்களை பத்தித்தான் ஓடிக்கிட்டிருக்கு. இந்த பஞ்சாயத்தை முடிச்சுட்டு கிரகங்களை பத்தி சொல்லும் போது சுபகிரகம் எது பாப கிரகம் எதுங்கற விலாவாரிய சொல்றேன்.அதுவரைக்கும் கொஞ்சம் தம் கட்டிக்கிட்டு இருங்க.
கேந்திர ஸ்தானங்கள்ள முதல் ஸ்தானம் மாத்ருஸ்தானம்.(அம்மா) இங்கன போயி பாவகிரகம் இருக்கனும்ங்கறானே அவனை பாம்பு புடுங்கனுட்டு ராஜ்கிரண் சினிமா கணக்கா சாபம் உடாதிங்க.
மேட்டரை சொல்றேன் கேளுங்க. நாலாமிடம் தாய்,வீடு,வாகனம்,கல்வி ,இதயம் ஆகிய  விஷயங்களை காட்டுது. இங்கே சுப கிரகம் இருந்தா என்ன? பாப கிரகம் இருந்தா என்னனு சுருக்கமா பார்ப்பம்.
நாலாமிடத்துல சுபகிரகம் இருந்து -அதுவும் உச்சமா இருந்து -இன்னொரு சுபகிரகம் பார்த்து  அந்த இடம் ஏக புஷ்டியா இருக்குன்னு வைங்க. அப்போ என்னாகும்?
அம்மா சூப்பர் ஸ்காலரா இருப்பாய்ங்க. ஆஃபீசர் கிரேட்ல வேலை/அரசியல் பின்னணி, காலை எந்திரிச்சதுல இருந்து பிசி பிசி. காலையில ஜாகிங், கண்ட களிம்புகளை முகத்துல பூசிக்கிட்டு சகட்டுமேனிக்கு ஃபோன் பேசிக்கிட்டு இருந்தா குழந்தையோட நிலைமை -அதான் பாஸ் உங்க நிலைமை  என்னாகும்?
அடுத்தது வீடு. நாலு சாதி சனம் வந்துபோயிக்கிட்டு ,வேலைக்காரவுக அங்கிட்டும் இங்கிட்டு திரிஞ்சுகிட்டு குஞ்சு குளுவான்னு குழந்தைங்க அங்கங்கே கக்கா போயிக்கிட்டு ச்சூ ச்சூ போயிக்கிட்டு நாறடிக்கனும். அப்பத்தேன் அது வீடு.  இங்கே போயி சுபகிரகம் உட்கார்ந்தாச்சுனு வைங்க. கட்டின வீடு கட்டின மாதிரியே இருக்கும்.
இதே விதியை வாகனத்துக்கும் அப்ளை பண்ணி பாருங்க. அடுத்து கல்வி. ஏதோ காலேஜுக்கு போனோம். நாலு குட்டிங்கள கலாய்ச்சோம், லெக்சரருங்க  தாலியறுத்தோம்னு ஜாலியா டைம் பாஸ் பண்ணிட்டு காலேஜை விட்டு வெளிய வந்தா பிச்சை எடுக்கனும்.
இதை இதயத்துக்கும் அப்ளை பண்ணுங்க. ஷாக்குக்கு  அது இம்யூன் ஆகனும். ட்ரம்ஸ் மணி கணக்கா அதை இம்சை பண்ணனும் அப்பத்தேன் லாங் ரன்ல அது எல்லாத்தையும் சமாளிச்சுக்கிட்டு நிற்கும்.
இதனாலதேன் பெரியவுக இந்த பாவத்துல பாவ கிரகம் இருக்கனும்னு சொல்லியிருக்காய்ங்க.
அடுத்த கேந்திர ஸ்தானம் 7. இது மனைவியை காட்டற இடம். நாமளும் குடுமியா இருந்து பொஞ்சாதியும் குடுமியா இருந்தா ஓட்டாண்டி ஆயிர வேண்டியதுதான்.
புருசங்காரன் கொஞ்சம் தத்தியா,இளிச்சவாயனா இருந்தாலும் 7 ஆமிடத்துல பாப கிரகம் இருந்தா பொஞ்சாதி கொஞ்சம் கெட்டியா இருந்து குடும்பத்தை நெட்டிக்கிட்டு வரலாம். அங்கயும் சுபகிரகம் இருந்தா சான்ஸே கிடையாது.
சில பாராக்களுக்கு மின்னே அம்மா மேட்டரை சொன்னேன்.அதை இங்கே ஓட்டிப்பாருங்க. மேலும் இங்கே சுபகிரகம் இருந்தா புருசன் காரன் அலுவாலியா கணக்கா ரூவாயை பிச்சிக்கொடுத்தாலும் குடும்பத்தை நடத்திக்கிட்டு இருப்பா. இப்படி இருந்தா குடும்பம் எப்படி முன்னேறும்?

அடுத்த கேந்திர பாவம் 10 . இது செய்தொழில்,உத்யோகம் ,வியாபாரத்தை காட்டும். இந்த மேட்டர்ல எவ்ள மடியா இருந்தா அந்தளவுக்கு ஆப்பு. புவாவுக்கு கூட கிடைக்காது. இங்கே சுபகிரகம் இருந்தா இதான் நடக்கும். இங்கே பாவ கிரகம் இருந்தா சுய நலம் இருக்கும். சுபகிரகம் இருந்தா எம்.ஜி.ஆர் வேலைகள் செய்துக்கிட்டு குடும்பத்தை பட்டினி போட வேண்டியதுதான்.
பத்து ரூவா சம்பாதிக்கனும்னா பொய் சொல்ல வேண்டி வரலாம், புரட்டி பேச வேண்டி வரலாம், சில சமயம் காட்டி கொடுக்க வேண்டி வரலாம். சில நேரம் வாக்கு தவற வேண்டி வரலாம். இதை எல்லாம் செய்தாதான் காசு புரளும். இதுக்கு இங்கன பாவகிரகம் இருந்தாதான் வேலைக்காகும்.

இத்தோட இன்னைக்கு க்ளாசை முடிச்சுக்குவம். அடுத்த பதிவுல அடுத்த கிரேடிங்கை பார்ப்போம். உடுங்க ஜூட்டு.

ஜோதிடபாடம்: 7

1.49அண்ணே வணக்கம்ணே !
கடந்த பதிவுல 1,5,9 பாவங்களை பத்தி சொல்லிக்கிட்டிருந்தன். கிரேடிங் முறைய அமல்படுத்தினா இந்த 3 பாவமும் ஃபர்ஸ்ட் கிரேட். ஏன்னா எவனும் தன் முன்னேற்றத்தை விரும்பாதவனா இருக்கமாட்டான் (லக்னம் ) அதுக்காவ தன் புத்திய செலவழிக்காம இருக்க மாட்டான் ( 5 ஆம் பாவம்)  எந்த அப்பனும் தன் பிள்ளை கெட்டுப்போகனும்னு நினைக்க மாட்டான்(பித்ருபாவம்) .
இந்த செனேரியோல  1-5 பாவங்களை பத்தி கொஞ்சம் விரிவாவே சொல்லியாச்சு. இந்த 9 ஆம் பாவம் தான் பாவம் ரிப்போர்ட்டர்களுக்கு கவர் கொடுக்காத அரசியல் வாதி கணக்கா ஹைலைட்டே ஆகல.
அதை இன்னைக்கு பார்ப்பம்.
ஒன்பதாம் பாவ காரகம் என்ன? த‌ந்தை, ,த‌ந்தைவ‌ழி உற‌வு, த‌ந்தை சொத்து, சேமிப்புக்க‌ள்,தூர‌பிர‌யாண‌ங்க‌ள்,வெளி நாட்டுப் ப‌ய‌ண‌ங்க‌ள்.பப்ளிஷிங்,தூர தேச தொடர்புகள், கோவில் ,குளம்,சேவை அமைப்புகள் நிர்வாகம் தொடை பகுதிகள் -இதெல்லாம் ஒன்பதாம் பாவ காரகங்கள்.

இதுல ஒன்னு ரெண்டு பல்பு வாங்கிட்டாலும் மத்த மேட்டர்லாம் அனுகூலமாத்தான் இருக்கும்..  ஏன்னா இந்த உலகத்துல எந்த ஜாதகமும் 100% யோக ஜாதகம் கிடையாது. ஃபுல் வோல்ட்டேஜ் இருந்தா எல்லா எக்விப்மென்டும் நெல்லா வேலை செய்யும். வோல்ட்டேஜ் லோவா இருந்தா? ஒன்னு ரெண்டை ஆஃப் பண்ணிட்டா மத்தது ஒழுங்கா வேலை செய்யும்.

அப்பா இருக்காரு. சவுண்டா இருக்காரு. அப்போ அப்பா கொஞ்சம்  சொத்தும் சேர்த்து வச்சிருப்பாரு. இதனால அப்பா வழி உறவும் உங்களுக்கு கொஞ்சம் ஜல் ஜக் போடும்.  உங்க பேர்ல சேமிப்பும் நிச்சயமா இருக்கும்.

அப்பா சொத்து பிதுரார்ஜித சொத்துன்னு வைங்க .அப்பாவழி உறவுல கொஞ்சம் வில்லங்கம் இருக்கும். சித்தப்பா பெரியப்பா பசங்க உங்களையும் விரோதியாத்தான் பார்ப்பாய்ங்க.

சேஃப்ட்டி ஜோன்ல இருக்கிறதால  வெளி உலகமே தெரியாம குண்டு சட்டியில குதிரை ஓட்டிக்கிட்டு இருப்பிங்க.

இதுவே அப்பா இல்லை. ஐ மீன் உசுரோட இல்லை, அவர் வழியில சொத்து எதுவும் இல்லைனு வைங்க. ஆட்டோமெட்டிக்கா அப்பா வழி உறவெல்லாம் உங்களுக்கு துணையா  நிற்கும்.

அது உள்ளவனுக்கு இது  இருக்காது -இது உள்ளவனுக்கு அது இருக்காது. எல்லாம் இருக்கிறவனுக்கு ஆயுசு இருக்காது.

சரி சப்ஜெக்ட் டைவர்ட் ஆயிருச்சு. மேட்டருக்கு வரேன்.

ஒன்பதாம் பாவத்துக்கு ஏன் ஃபர்ஸ்ட் கிரேட் கொடுத்திருக்காய்ங்கனு சொல்றேன். தூரதேச தொடர்புகள் ,பயணங்கள் , தூரதேச தொடர்புகளால் அமையும் தொழில் வியாபாரங்கள், வெளி நாட்டிலான உத்யோகம் இத்யாதியை எடுத்துக்கங்க.

ராபர்ட் க்ளைவ்லருந்து நம்ம காலத்து சிவாஜிராவ் கெய்க் வாட் வரை (ரஜினி காந்துங்கோ) லோக்கல்ல யூஸ்லெஸ் ஃபெல்லோஸ்.ஆனால் ஜியாக்ரஃபி மாறினதும் தூரதேசம் வந்ததும் அவிக பிஹேவியரே மாறிப்போச்சு. மத்த பாவங்கள்  கெட்டு லோக்கல்ல அப்படி இப்படி இருந்தாலும் ஒன்பதாம் பாவம் கொஞ்சம் பெட்டரா இருந்து தூர தேசம் போயிட்டா தலை எழுத்து மாறிருது.

இதுமட்டுமில்லிங்ணா..நாம சொந்த ஊர்ல, சொந்த பந்தம் நடுவுல வாழவே நம்ம ஜாதகத்துல உள்ள பாதி பலம் செலவாயிருதுங்ணா.  பட்டுன்னு அத்து விட்டுட்டு வெளிய போயிட்டிங்கனா பாதி தோஷம் குறைஞ்சு போயிருதுங்ணா.

மேலும் லோக்கல்ல நீங்க என்னதான் மனம் திரும்பி வாழனும்னு துடிச்சாலும் சனம் வாழ விடாது. அவிக எண்ண அலைகள் உங்களை மறுபடி மறுபடி பழைய வாழ்க்கைக்குத்தான் தள்ளும்.

இதே போல சேமிப்பை எடுத்துக்கங்க. ஒன்பது கிரகமும் கெட்டுக்கிடக்கிற காலத்துல கை கொடுக்கும்.  முதலீடும் இப்படித்தான். இதனாலதேன் 9 ஆம் பாவத்துக்கு ஃபர்ஸ்ட் கிரேட் கொடுத்து வச்சிருக்காய்ங்க.

விதி:
இந்த பாவங்கள்ள சுபகிரகம் இருந்தா சூப்பரு. பாப கிரகம் இருந்தாலும் பரவால்ல.
அட 6,8,12 ங்கற துஸ்தானாதிபதிகள் மற்றும் 3 ஆம் பாவாதிபதி இல்லின்னாலே சமாளிச்சுரலாம்.

குறிப்பு:
கிரகங்களை சுபம் அசுபம்னு டிசைட் பண்றதுக்கு நிறைய விதிகள் இருக்கு. கிரகங்களை பத்தி சொல்லும் போது இதை பார்க்கலாம்.

அடுத்து கேந்திர ஸ்தானங்களை பத்தி சொல்லனும் ஞா இருக்குல்ல? லக்னாத் 4,7,10 இங்கே பாவகிரகங்கள் இருந்தா பெஸ்ட், சுபகிரகங்கள் இருந்தா பெட்டர்னு சொல்லி இந்த சாப்டரை முடிக்கிறேன்.  இன்னொரு நாளைக்கு விவரமா பார்க்கலாம்.