காசு பணம் துட்டு மணி மணி :20 (ஒன்பதாவது கேட்டகிரி)

stalin

அண்ணே வணக்கம்ணே !
உலகத்துல உள்ள மன்சங்களை 9 கேட்டகிரியா பிரிச்சு -ஒவ்வொரு கேட்டகிரிக்கும் உண்டான லட்சணங்களை சொல்லி – ஃபைனான்ஸ் மேட்டர்ல இவிகளுக்கு ஆப்பு எப்படி வரும்-அதுக்கு பரிகாரம் என்னன்னு சொல்லிக்கிட்டு வர்ரம். இதுவரை எட்டு கேட்டகிரி ஃபினிஷ் பண்ணியிருக்கம்.இன்னைக்கு ஒன்பதாவது கேட்டகிரி. இந்த தொடரை முடிச்சுட்டா அடுத்து என்னத்த எழுதறது? இது ஒரு திகில் .பேசாம நம்ம பழைய ட்ரெண்டுக்கு போயிரலாம்னு பார்க்கிறேன். அதான் பாஸ் ..கில்மா .ஹிட்ஸ் அள்ளும்ல? இதே போல சனத்தை 9 கேட்டகிரியா பிரிச்சு லவ்ஸ்/கண்ணாலம்/கில்மா மேட்டர்ல எந்த மாதிரி பிரச்சினைகள் வரும்? அதுக்கு என்ன தீர்வுகள்னு அள்ளி விடலாம்ல?

நிற்க சொந்தகதை பேசி பலகாலமாச்சு.ஆகவே ஃபில் அப் தி ப்ளாங்க்ஸ் பண்ணிர்ரன்.பிறவு பதிவுக்கு போகலாம்.
ப்ரெட் ஹன்டரா இருந்த நம்மை ஏதோ ஒரு மிடில் க்ளாஸ் லெவலுக்கு கொண்டு வந்து நிப்பாட்டின ப்ளாக் யுகம் முடிஞ்சு போச்சு போல. அந்த காலத்துலயே தமிழ் மணம் காரவிக ஜோதிட பதிவு எழுதக்கூடாதுன்னு கட்டைய போட்டப்போ – சமாளிச்சம். ஏன்னா அன்னைய தேதிக்கு திரட்டிகள் அதிகம். பிறவு ஒவ்வொன்னா புட்டுக்குச்சி .ஆனாலும் பிடிவாதமா தொடர்ந்து எளுதிக்கிட்டிருக்கிறதால இந்த சைட்டுக்கு ஒரு 250 , வோர்ட்ப்ரஸ் தளங்கள் இரண்டுக்கும் தலா 250, ப்ளாகர் வலைப்பூவுக்கு ஒரு 500 இப்படி இன்னமும் 1250 பேர் நம்ம எழுத்துக்களை படிச்சுக்கிட்டு தான் இருக்காங்க. இதுவும் எத்தனை நாளைக்கோ?தெரியல.

இந்த முக நூல் யுகம் கூட கடைசி கட்டத்துல இருக்காப்ல இருக்கு .தேர்தலுக்கு பிறகு நிச்சயமா இதுவும் ஈயடிச்சுரும்னு நினைக்கிறேன். ஏற்கெனவே கட்டண ஆலோசனைக்கும் மங்களம் பாடிட்டம். இங்கிலீஷ்ல சைட் வச்சு ஆட்சென்ஸ் மூலமா வயித்து பாட்டைபார்த்துக்கலாம்னு டிசைட் பண்ணி இறங்கினம்.

காசு கொடுத்து இங்கிலீஷ்ல எழுத வைக்கிறது ஒரு மலைன்னா அதை நம்ம டச்சோட -ஓரளவுக்காச்சும் தப்பில்லாம திருத்தி போடறது இமயமலையா இருக்கு .ப்ரொஃபெஷ்னல்ஸை பிடிக்கலாம்னா பட்ஜெட் ப்ராப்ளம். ஏதோ ஆத்தா புண்ணியத்துல வருமானம் கூடலின்னாலும் செலவுகள் கூடாம வண்டி ஓடிக்கிட்டிருக்கு .இதுல எப்படிரா பொழுதை போக்கறதுன்னு ஒரு கேள்வி வேற.

மல்ட்டி பர்ப்பஸ் ப்ராஜக்ட் மாதிரி ஒரு வாய்ப்பு கிடைச்சுது . ஸ்கை டிஜிட்டல் காரவிக சேனல்ல த்ரீ இன் ஒன்னா சிக்கியிருக்கம். நியூஸ் ரீடர்-காப்பி ரைட்டர் -ஜோதிடர். கட்டமைப்பு வேலைகள் ஜரூரா நடக்குது .நம்பிக்கைதானே வாழ்க்கை ?

அரசியலை பொருத்தவரை நம்ம ஆதர்சங்கள் எல்லாம் எவரெஸ்டு ரேஞ்சு. அதே சமயம் நமக்கு நிதர்சனங்களும் தெரியும். தமிழ் நாடு இன்னைக்கிருக்கிற சோதனையான கால கட்டத்துல சோதனை முயற்சிகளுக்கெல்லாம் போகற அளவுக்கு நாம ஒன்னும் முட்டாளில்லை.ஆகவே கலைஞரையே தற்காலிகமா மன்னிச்சு ஏத்துக்கிட்டு பதிவுகள் போட்டுக்கிட்டிருக்கன்.ஆட்சிக்கு வந்த பிறவு பழைய குருடி கதவை திறடின்னு மாறினா .. நமக்கு சொல்லியா தரனும்..மீள் பதிவு போட்டே இமிசை பண்ணிருவம்ல?

சேனல் மேட்டர்ல ஒரு தர்ம சந்தேகம். இவிக லோக்கல்ல நாம சப்போர்ட் பண்ணிக்கிட்டிருந்த சி.கே ஆட்கள் தான்.ஆனால் இப்பம் ஆளுங்கட்சிக்கு ஆதரவா சேனலை கொண்டு போறதா கேள்வி. நமக்கும் செனலுக்கும் உள்ள தொடர்பே அந்த ரெண்டு மணி நேரம் தான். நாம என்ன ஆளுங்கட்சிக்கு ஆதரவா உரை வீச்சா நிகழ்த்த போறம் ? தொழில்முறை நியூஸ் காப்பி ரைட்டர் , ப்ரோக்ராம் கன்டென்ட் ரைட்டர் அவ்ளதானே..

இன்னொரு மேட்டரை சொல்லோனம் இந்த வலைதளத்துல திமுக வெற்றிக்குன்னு நாம தெரிவிச்சிருந்த ரோசனைகளை எல்லாம் ரீரைட் பண்ணி தொகுத்து கலைஞர் & ஸ்டாலினுக்கு தபால் மூலம் அனுப்பியிருக்கன். எப்படியோ நாட்டுக்கு நல்லது நடந்தா செரி ..

கடேசியா ஒரு மேட்டர் புஷ்டியான ஒரு மீடியா க்ரூப்பின் சோனி பத்திரிக்கையில நம்ம நக்கல் பேட்டி ஒன்னு வெளிவரலாம். (மெயில் மூலமே காரியத்தை முடிச்சுட்டம்)

ஓகே பதிவுக்கு போயிரலாமா?

சிவந்த நிறம், ஆண்டொன்று போக வயதொன்று குறையும் இளமை தோற்றம். ஸ்லிம்மா இருந்தாலும் உறுதியான உடற்கட்டு .உற்சாகம், தைரியம்.வடிவேலு சொல்றாப்ல இடம் தெரியாம மோதிட்டு -விழுப்புண்களை நக்கிக்கிட்டே கருவிக்கிட்டு கிடக்கிறது அந்த கோபத்தை சொந்த சனம் மேல காட்டறதும் உண்டு.

நல்ல அட்வைசர்+கமாண்டர் கிடைச்சா எந்த யுத்தத்துலயும் செயிச்சுருவாய்ங்க. சில நேரம் அட்வைசர் மேலயே விழுந்து கடிச்சு வைப்பாங்க.

ரியல் எஸ்டேட் போலீஸ்,மிலிட்டரி,ரயில்வே,கெமிக்கல்ஸ்,ரியல் எஸ்டேட்ஸ்,மெட்டல் ஃபோர்ஜிங்க், செம்பு,ஹோட்டல், எரிபொருள்,ஹோட்டல் ,கேட்டரிங் இத்யாதி தொழில்களில் ஆர்வம் அனுகூலம் இருக்கலாம்.

நல்ல ரத்த ஓட்டம் .பெண்களா இருந்தா ஒழுங்கான மாதவிலக்கு சக்கரம், லேசில் நோய் வாய்படாத தன்மை. ஆனால் ஹெல்த் ரூல்ஸை ஃபாலோ பண்ணாம திராட்ல விட்டுட்டா ரத்தம் எரிச்சல் கோபம் தொடர்பான வியாதிகளால் அவதிப்பட நேரலாம்.

வாழ்க்கையையே ஒரு போர்க்களமாக்கி தொடர்ந்து போராடறதால முதுமையில ரத்தம் சுண்டி ரத்த சோகை வீசிங் மாதிரி தொல்லைகளாலும் அவதிப்படலாம்.

போட்டிகளை சமாளிக்கும் சேலஞ்சிங்க் கேரக்டர். அத்தெலட்டிக் போன்ற தோற்றம்.சகோதர வகையில் நல்லாதரவு.

லேசான முன் கோபம், நெருப்பு,மின்சாரம் ,சுட்ட எண்ணெய், வென்னீர் வகையறாவால சின்ன வயசுல பல்பு .ஒரு முறை உசரமான இடத்துலருந்து விழுந்து வைத்திருக்கலாம். காதல். கலாட்டா கல்யாணம் இத்யாதிக்கும் வாய்ப்புண்டு .அல்லது காதலிச்ச பார்ட்டியயே அப்பா அம்மா ஒப்புதலுக்காக போராடி மணக்குற தில்லு,போராட்ட குணம்.

நிலம் நீச்சு இருக்கும். குறைஞ்ச பட்சம் க்ளெய்ம் இருக்கும்.இவிக பேர்லயே நெருப்பு இருக்கலாம் அல்லது குமாரி,சிட்டி,புஜ்ஜி, சின்னி,குட்டி மாதிரி பேர்கள் அல்லது ஏதானும் ஆயுதத்தோட பேரு உ.ம் வேலன் யுத்தம் தொடர்பான பேர்கள் இருக்கலாம்.

இவிக வீட்டுக்கும் 9ங்கற நெம்பருக்கும் தொடர்பிருக்கும். உ.ம் டோர் நெம்பர் ,கிராஸ் நெம்பர்,பின் கோட், டேட் ஆஃப் பர்த் .

இவிக வீட்டுக்கு போற வழில போலீஸ் ஸ்டேஷன், உலைக்களம்,லேத், மாதிரி நெருப்பு தொடர்பான தொழிலகங்கள் இருக்கலாம். முருகன் கோவில் இருக்கலாம்.

இவிக பேச்சே ஒரு நீண்ட விவாதத்துக்கான அழைப்பா -யுத்தத்துக்கான துவக்கமா கூட அமையலாம். தாய் சமையல் கலை நிபுணரா இருக்கலாம். இவிக கெமிஸ்டரி ,எலக்ட் ரானிக்ஸ்ல ஸ்பெஷலைஸ் பண்ணலாம்.ஸ்கவுட் ,கைட்,என்.சி.சி இத்யாதில ஆர்வமா இருப்பாங்க.

கல்யாணத்துக்கு பிறகு சில காலம் லைஃப் பார்ட்னரோட மோதல் போக்கு கருச்சிதைவு இத்யாதி ஏற்படலாம். போலீஸ் ஸ்டேஷன்? நிச்சயமா அடி வச்சிருப்பாங்க.ஆனால் வெற்றி வீரரா திரும்பவே வாய்ப்பு

எதிரி குடும்பத்து பெண் மனைவியாதல்/அல்லது மனைவியே எதிரியாக மாறுதல் நடக்கலாம். கு.பட்சம் மனைவி வழி உறவுகள் மேட்டர்ல முட்டல் மோதல் இருக்கும்.

அம்மை,கட்டி,கொப்புளம்,ரத்தகொதிப்பு,மூலம் மாதிரி வியாதிகள் தொல்லைகொடுக்கலாம். ஏதோ சந்தர்ப்பத்துல சின்னதா தையல் போட்டிருக்கலாம்,சிறு விபத்து ? நிச்சயம்.

அப்பா? போலீஸ்,மிலிட்டரி,ரயில்வே போன்ற ஃபீல்டுல இருக்கலாம்.அல்லது சண்டியரா இருக்கலாம். இவிகளுக்கும் இந்த துறைகளில் ஒரு வாய்ப்புண்டு.சகோதரர்களில் ஒருவர் (காரணம் எதுவானாலும் ) சொத்துல பங்கு வேணாம்னிரலாம். அல்லது சகோதரர்களில் ஒருவரது பங்கு இவருக்கு உபரியா கிடைக்கலாம்.

இது இவிக கேரக்டர் -என்விரான்மென்ட். இவிகளோட பொருளாதார நெருக்கடிக்கும் இவையே காரணமாக இருக்கும். எப்படின்னு அடுத்த பதிவுல சொல்றேன்.
உடுங்க ஜூட்டு ..

ஏன் கலைஞர் முதல்வராக வேண்டும்?

kalaingar Palm

அண்ணே வணக்கம்ணே !

ஒன்பது கேட்டகிரி மனிதர்களை பற்றிய காசு பணம் துட்டு மணி மணி தொடர்ல இறுதி கட்டத்துல இருக்கம். கடேசியா 9 ஆவது கேட்டகிரிய பத்தி சொல்லோனம்.அடுத்த பதிவுல சொல்றேன். நிற்க..

இந்த பதிவை படிச்சுட்டு அதிமுக காரவிக திட்டறாய்ங்களோ இல்லையோ திமுக காரவிக நிச்சயமா திட்டி தீர்க்கப்போறாய்ங்க. ஆனாலும் தமிழ் நாட்டோட எதிர்காலம் கருதி இந்த பதிவை போடறேன்.

நீ இருக்கிறது ஆந்திராவுல ஒனக்கென்ன தமிழ் நாட்டு நலன்ல அக்கறைன்னு கேப்பிக. அரசியல் தலைவர்கள்ள ஒருத்தர் ஆணாவும் -இன்னொருத்தர் பெண்ணாவும் இருக்கும் போது ரெம்ப கேர்ஃபுல்லா வரையனும்னு பாலாவுக்கு ரோசனை சொன்னதுக்கு கார்ட்டூனிஸ்ட் பாலாவின் அடிப்பொடி ஒருத்தரு கூட நீ போயி ஆந்திராபாலிட்டிக்ஸை கவனின்னு இலவச ஆலோசனை கொடுத்தாச்சு .

ஆகவே தான் இந்த விளக்கம். இன்னைக்கு ஆந்திராவுல அரசியல்ங்கறது (அரசியல் அதிகாரம் இல்லேன்னாலும் ) எஸ்.சி,எஸ்.டி,மைனாரிட்டி,பி.சி -க்களுக்கெல்லாம் நெருக்கமா இருக்குன்னா அதுக்கு காரணம் என்.டி.ஆரின் அரசியல் பிரவேசம்.

ஒரு புயல் மாதிரி என்ட்ரி கொடுத்தாரு . காலேஜ் லெக்சரர்,பஸ் கண்டக்டர், டாக்சி ஓனர்லாம் எம்.எல்.ஏ ,மந்திரின்னு ஆயிட்டாங்க. . அதுக்கு மிந்தில்லாம் தேர்தல் பிரச்சாரம்ங்கறது சாஸ்திரத்துக்கு நடக்கும். தாளி என்.டி.ஆர் என்டர் ஆன பிறகு தான் வாக்காளனோட டிமான்டே சாஸ்தியாச்சு. இன்னம் பலதும் சொல்லலாம்.ஆனால் சப்ஜெக்ட் வேறங்கறதால பாய்ண்டுக்கு வந்துர்ரன்.

இந்த என்.டி.ஆர் வருகைக்கே இன்ஸ்பிரேஷனா இருந்தது எம்.ஜி.ஆரும் -அவரை செயிக்க வச்ச தமிழ் நாட்டு மக்களும் தான். ஒரு காலத்துல எங்களுக்கு இன்ஸ்பிரேஷனா இருந்த தமிழ் நாடு ..இன்னைக்கு இப்படி ஆயிருச்சேங்கற ஃபீல் எனக்குண்டு.

செரி இன்னைக்கிருக்கிற நிலையில ஆல்ட்டர்னேட்டிவ் தான் என்னன்னு லாஜிக்கலா ரோசிச்சு கலைஞரை ஆதரிச்சிக்கிட்டிருக்கன். அஸ்ட் ராலஜிக்கலா ரோசிச்சு ஜெவுக்கு ஒன்னு கலைஞருக்கு ஒன்னுன்னு பதிவுகள் போட்டிருக்கன்.அது வேற கதை.ஆனால் கலைஞருக்கான ஆதரவு மட்டும் அஸ்ட்ராலஜிக்கலானதல்ல.லாஜிக்கலானது .

இவன் தொலைவுல இருக்கான்.நம்ம மானிலத்தோட நிலை இவனுக்கென்ன தெரியும்னு நினைப்பிங்க.தப்பில்லை. ஆனால் எங்களுக்கு படிக்க கிடைக்கிற எல்லா பத்திரிக்கையிலயும் தமிழ் நாடு மேட்டர் தானே சீப்படுது.ஆகவே உங்களுக்கு என்ன தெரியுமோ அதெல்லாம் எனக்கும் தெரியும்.

ஆனால் தொலைவா இருக்கிறதுல ஒரு ப்ளஸ்ஸும் இருக்கு.அது என்னன்னா உணர்வுகளுக்கு இடம் கொடுக்காம லாஜிக்கலா ரோசிக்க முடியறது .

ஜெ வை பத்தியோ -அதிமுக ஆட்சி பத்தியோ – அதுவும் வெள்ளத்துக்கு சற்று முன்னான , வெள்ளத்துக்கு பிறகான நடவடிக்கைகள் பத்தியோ நான் சொல்லி நீங்க கேட்டு புதுசா ஒன்னும் ஜெ வை புறக்கணிக்க போறதில்லை . இது முடிவு பண்ணிட்ட மேட்டர்.

ஆனால் அடுத்த ஸ்டேஜ்ல தான் பஞ்சாயத்தே. ஜெ ஆட்சி மோசம் . அதுக்காவ மோசமான ஆட்சிய கொடுத்த கலைஞரை கொண்டு வந்துர்ரதா -அதான் மாற்றா -மாற்றையே கொள்கையா கொண்ட ம.ந.கூ இருக்கே -அவிகளுக்கும் ஒரு வாய்ப்பு கொடுக்கலாமேன்னு ஒரு வாதம் செலாவணியில இருக்கு.
முக நூல்லபல விஷயத்துல நம்மோட ஒத்துப்போற சனம் கூட இந்த கலைஞர் ஆதரவு மேட்டரை செரிக்க மிடியாம பாட்டில் பாட்டிலா ஜெலுசில் குடிச்சிட்டிருக்காங்க.

நாம எத்தனை வடிவத்துல நம்ம லாஜிக்கை சொன்னாலும் -அது ஜஸ்ட் ஒரு ஸ்டேட்டஸா இருக்கிறதால மின்னி மறைஞ்சுருதா மறுபடி மறுபடி நீ எப்படி கலைஞரை ஆதரிக்கலாம்னு கேட்கிறாய்ங்க.டீட்டெய்லா ஒரு வலைப்பதிவா போட்டு வச்சுக்கிட்டா தொடுப்பை கொடுத்து ச்சூ காட்டிரலாமேன்னு ஒரு கெட்ட எண்ணம் வந்தது .அதுக்கு தேன் இந்த பதிவு.

தமிழ் நாடு இன்னைக்கிருக்கிற நிலையில அடுத்த 5 வருசமாச்சும் கலைஞர் முதல்வரா இருந்து – எம்.ஜி.ஆர் கிட்டருந்தும் -புலிகள் மேட்டர்ல ரெண்டு தாட்டி ஆட்சி இழந்தும் கத்துக்கிட்ட மத்திய அரசுடனான இணக்கமான போக்கோட ஒர்க் அவுட் பண்ணி ஆட்சி செய்தா தான் 35% ஆச்சும் தமிழ் நாடு பேர் சொல்ல வாய்ப்பிருக்கு .
இதை சொன்னதுமே கொய்யால ..கலைஞர் போன சென்மத்துல என்ன பண்ணாரு தெரீமா? கலைஞர் 3 வயசுல என்ன பண்ணாரு தெரீமான்னு நவீன சித்திர குப்தர்கள் அனுமார் வால் மாதிரி ஒரு பட்டியலை கொண்டு வந்துர்ராங்க.

என் வாதம் ரெம்ப சிம்பிள். ஏறக்குறைய 13 வருசம் எம்.ஜி.ஆர் தானே ஆட்சி செய்தாரு ? அதுக்கு மிந்தின கலைஞர் ஊழலை எல்லாம் விஜாரிச்சு தூக்குல போட்டிருக்கலாம்ல?

இதே போல எம்.ஜி.ஆருக்கு பிறவு அஞ்சு அஞ்சுவருசம் கேப்புல மம்மி தான் ஆண்டிருக்காங்க. அதுக்கு மிந்தின கலைஞர் ஆட்சி கால ஊழலை எல்லாம் விஜாரிச்சு தூக்குல போட்டிருக்கலாம்ல?

இல்லையே ஏன்?

ஆனால் 1991-96 காலத்து மம்மி ஊழல் மட்டும் தீர்ப்பு வரை போயிருக்கு.நோட் திஸ் பாய்ண்ட். தலை தப்பினது தம்புரான் புண்ணியம்னு வெளிய வந்தும் வராம ஆயிரம் கோடிக்கு தியேட்டர் வாங்கறாய்ங்கன்னா என்னா அருத்தம்?

அவிக மாற போறதில்லை.மாறவே போறதில்லை.

ஆனால் கலைஞர் ஒவ்வொரு தேர்தல் தோல்விக்கு பிறகும் மாறியிருக்காரு .(ரத்தத்துல ஊறிப்போன சிலது மாறவே இல்லை அது வேற கதை -அதை எல்லாம் கடேசியில லிஸ்ட் அவுட் பண்றேன்)

உதாரணமா எம்.ஜி.ஆர் கிட்டே வரிசையா தோத்து இலவசம்,சத்துணவு இத்யாதிகளை சகிச்சுக்கற அளவுக்கு மாறியிருக்காரு. அவரோட இயற்கை குணம் /திறமை – திறமையான நிர்வாகம் தான்.

புலிகள் மேட்டர்ல ரெண்டு தாட்டி ஆட்சி இழந்து -கொய்யால இவனுவ சகவாசமே வேணாம்டான்னு மாறியிருக்காரு. எம்.ஜி.ஆர் எப்படி இந்திராவுக்கு ஜெய் -மொரார்ஜிக்கு ஜெய்னு மத்திய சர்க்காரோட இணக்கமா “சர்வைவ்” ஆனாரோ அந்த ரூட்டை கலைஞரும் பிடிச்சுட்டாரு .
நான் கேட்கிறது ரெம்ப சிம்பிள். சிறந்த நிர்வாகியா இருப்பதுதான் வெற்றிக்கு வழின்னு ஆண்டார். ஆனால் சனம் நிர்வாகம்னா என்னன்னே தெரிஞ்சிருக்காத (அதுவரை) எம்.ஜி.ஆரை தான் ஆதரிச்சாங்க.

எமர்ஜென்சிய எதிர்த்து ஆட்சி இழந்தார்.சனம் அவரை ஆதரிச்சாங்களா? இல்லை. புலிகளுக்காக ரெண்டு தாட்டி ஆட்சி இழந்தார்.சனம் அவரை ஆதரிச்சாங்களா? இல்லை.

பிறவு அவரையே போட்டு காச்சு காச்சுன்னு காச்சிக்கிட்டே இருக்காங்க. அரசியல் வாதிய பொருத்தவரை தேர்தல் தோல்வி/அதிகார இழப்பை விட பெரிய தண்டனையே கிடையாது .

உடனடி லாட்டரி மாதிரி ஆட்சி இழப்பை கொடுத்து “பழைய பாவங்களுக்கெல்லாம்” (ஒரு வாதத்துக்கு சொல்றேன்) தண்டனை கொடுத்தாச்சுல்ல.
மறுபடி நை நைன்னு பழைய பேப்பரையே படிச்சுக்கிட்டிருந்தா எப்பூடி?

2004-2011 ஆட்சி காலத்துல சில மேட்டர்லாம் ஓவரா போயிருச்சு இல்லேங்கல.மறுக்கல.ஆனால் கலைஞர் இந்த தபா நாம நல்லாட்சி கொடுத்தா சனம் அடுத்த முறை ஃபுல் மெஜாரிட்டி கொடுப்பாங்கன்னு பம்மி பம்மிதான் ஆண்டார்.சனம் அடுத்த தபா ஆதரிச்சாங்களா? இல்லே.

(உறுத்தல் பாசத்தலைவனுக்கு பாராட்டு விழாக்கள்-இது ரத்தத்துல ஊறினசமாசாரம்-ஆகவே மாறல)
கலைஞர் மேல வைக்கிற முக்கிய குற்றச்சாட்டுகள்:

1.குடும்ப பாசம்:
கலைஞருக்கு எதிரான முதல் வாதம் கு.பா. அந்த பக்கம் என்ன வாழுதுன்னு பார்த்தா அங்கயும் ஒரு பெரிய கும்பலே இருக்கு. இன்னய தேதிக்கு கலைஞர் மேட்டர்ல இந்த குடும்ப மேட்டர் 99.99% இல்லேன்னே சொல்லலாம். ஸ்டாலினை ஆருமே ஜஸ்ட் ஃபேமிலி மெம்பரா பார்க்கிறதில்லை . எதிரிகள் உட்பட.

2.ஊழல்:
என் வாதம் ரெம்ப சிம்பிள். ஏறக்குறைய 13 வருசம் எம்.ஜி.ஆர் தானே ஆட்சி செய்தாரு ? அதுக்கு மிந்தின கலைஞர் ஊழலை எல்லாம் விஜாரிச்சு தூக்குல போட்டிருக்கலாம்ல?
இதே போல எம்.ஜி.ஆருக்கு பிறவு அஞ்சு அஞ்சுவருசம் கேப்புல மம்மி தான் ஆண்டிருக்காங்க. அதுக்கு மிந்தின கலைஞர் ஆட்சி கால ஊழலை எல்லாம் விஜாரிச்சு தூக்குல போட்டிருக்கலாம்ல?
இல்லையே ஏன்?

ஆனால் 1991-96 காலத்து மம்மி ஊழல் மட்டும் தீர்ப்பு வரை போயிருக்கு.நோட் திஸ் பாய்ண்ட். தலை தப்பினது தம்புரான் புண்ணியம்னு வெளிய வந்தும் வராம ஆயிரம் கோடிக்கு தியேட்டர் வாங்கறாய்ங்கன்னா என்னா அருத்தம்?
அவிக மாறவே போறதில்லை.ஆனால் கலைஞர் மாறியிருக்காரு .மாறுவாரு .(எப்படி மாறினா நல்லதுன்னு என் ரோசனைகளையும் கடேசியில தரேன்)

3.ஈழம்:
இந்த மேட்டரு தேர்தல் மேட்டர்ல ஒரு இஷ்யூவே இல்லேன்னு 2009 பாராளுமன்றதேர்தல்லயே ப்ரூஃப் ஆயிருச்சு .ஆனாலும் ஒரு வாதத்துக்கு கேட்கிறேன்.அன்னைய தேதிக்கு கலைஞருக்கிருந்த சாய்ஸ் ரெண்டு தான் ஒன்னு மத்திய அரசுக்கு ஆதரவை வாபஸ் வாங்கறது -ரெண்டு முதல்வர் பதவியை ராஜினாமா பண்றது .

மத்திய அரசுக்கு ஆதரவை வாபஸ் வாங்கியிருந்தா ஒடனே மம்மி ஓடிப்போயி டீ பார்ட்டியில கலந்துக்கிட்டிருப்பாங்க. முதல்வர் பதவிக்கு ராஜினாமா செய்ததும் தேர்தல் வந்திருக்கும். 2 வருசம் மிந்தி மம்மி பம்பர் மெஜாரிட்டியோட சி.எம்.ஆகியிருப்பாங்க. (கலைஞர் ஜாதகராசி அப்படி )

ம.ந.கூ:

இவிக இப்பத்தேன் குச்சி நட்டு கவர் பால்ல கிரிக்கெட் விளையாட ஆரம்பிச்சிருக்காங்க. நிதானமா வளரட்டும் 2021 ல பார்க்கலாம்.
ரெண்டரை லட்சம் கோடி கடன்ல அரசே தள்ளாடுது .அஞ்சு வருசமா காட்சி தான் நடந்திருக்கு .மம்மி ரெண்டு விரல் காட்டி ஓட்டு கேட்டப்போ நான் கூட ரெட்டை இலை/ விக்டரி மிஞ்சிப்போனா நானும்-சசியும்னு தான் நினைச்சேன்.இப்பத்தான் புரியுது .. அந்த ரெண்டு விரலுக்கு அருத்தம் கரப்ஷன்-கமிஷன்.
இந்த ஆபத்தான சூழல்ல சோதனை முயற்சில்லாம் ரிஸ்கு பாஸ்.

ஊழல்:
வைகோ ஏன்போராட்டங்களை ஆரம்பிக்கிறாரு.படக்குன்னு ஏன் டீல்ல விட்டுர்ராருன்னா நான் புதிய போராட்டத்தை கையில் எடுத்துர்ராருன்னு சொல்றேன்.ஆனால் பெட்டி வாங்கிர்ராருன்னு சொல்லவும் ஆளிருக்குங்கோ

ஒரு வாதத்துக்கு கலைஞர் ஊழல் பண்ணாருன்னு வச்சுக்கிட்டாலும்..குற்றம் ப்ரூவ் ஆனா ரெக்கவரி பண்ணிரலாம். ஆனால் …ஆனால் வைகோ .
அரைவேக்காட்டுத்தனமா புலிகளை ரேக்கி விட்டு லட்சக்கணக்கான தமிழர்களுக்கு டிக்கெட்டே போட்டுட்டாரே..அந்த உசுருல ஒரு உசுரை திருப்ப முடியுமா?

ஈழம்:
இந்திய அரசு சரணடைஞ்சுருங்க ..பேசி தீர்த்துக்கலாம் -நாங்க இலங்கை அரசோட பேசறம்னு .. சொல்லிக்கிட்டிருக்க..
வைகோ ..இல்லை இந்த கவர்ன்மென்ட் காலி ..அடுத்து வர்ர கவர்ன்மென்ட் நம்ம கவர்ன்மென்டுன்னு ரேக்கி விட்டாராம்ல. எல்லா மேகசின்லயும் வந்த கதைதானே இது..

ம.ந.கூவுக்கு ரோசனை:
ஜெவுக்கு உதவவே – ஜெவுக்கு எதிரான வாக்குகளை சிதறடிக்கவே ம ந கூ என்ற வாதத்தை பொய்யாக்க எனக்கொரு யோசனை வந்திருக்கு.
கடந்த சட்டமன்ற தேர்தல்ல எங்கெல்லாம் ம ந கூ கட்சிக்காரவிக செயிச்சாங்களோ ,இரண்டாம் இடத்தை பிடிச்சாங்களோ அங்க மட்டும் போட்டியிடலாம்.
மற்ற இடங்களில் திமுக கூட்டணியை ஆதரிக்கலாம்.அல்லது போட்டியில் இருந்து விலகி நிற்கலாம்.. செய்வாங்களா? செய்வாங்களா?

டிஸ்கி:
கலைஞர் மீது மட்டும் ஏன் இத்தனை கடுமையான விமர்சனங்கள்? சனத்தோட சைக்காலஜி என்னன்னா கோவத்தை ஒடனே காட்டுவான். அன்பை நிதானமா காட்டுவான் .இல்ல மனசுல வச்சுக்குவான்.

கோவத்தை ஆருமேல காட்டுவான் தெரீமா? திருந்த வாய்ப்புள்ள,தனக்கு உரிமையுள்ளவன் மேல தான் காட்டுவான்..

வேண்டுகோள்:

வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் கலைஞர் முதல்வராக வேண்டும். இது காலத்தின் கட்டாயம்.கலைஞரின் நிர்வாக திறமை -உழைப்பு தமிழகத்துக்கு அவசியம் தேவை.

மானிலமே கையறு நிலையில் இருக்கையில் ஒரு “மித்” போன்ற தலைமுறை தலைமுறையாக திராவிட இன எதிரிகள் மேற்கொண்ட பிரச்சாரங்களை நம்பி கலைஞரை நிராகரிக்க பார்த்தால் சரித்திரம் உங்களை மன்னிக்காது ..

காந்தியை பத்தி ஆரோ சொன்னாய்ங்களாம் “இப்டி ஒரு பார்ட்டி எலும்பும் சதையுமா இருந்தாருன்னு சொன்னா எதிர்காலத்துல ஆரும் நம்பமாட்டாய்ங்க”
காந்தி குறித்த அன்னார் கருத்தின் பின்னணி வேறாக இருந்தாலும் .. உழைப்பு -சிந்தனை -நிர்வாக திறன் ஆகியவற்றை பொருத்தவரை இது கலைஞர் விஷயத்திலும் பொருந்தும்.

கலைஞர் ஒரு லிவிங் லெஜன்ட்.. வாழும் காலத்துல யூஸ் பண்ணிக்காம .. பிறவு தூக்கி வச்சு கொண்டாடி என்ன புண்ணியம்?

கலைஞருக்கு சில யோசனைகள்

kalaingar

அண்ணே வணக்கம்ணே !

மம்மிக்கு தான் ஐடியா கொடுத்துக்கிட்டிருந்திங்க. இப்ப தாத்தாவுக்குமா? அப்ப மம்மிய விட்டாச்சான்னு கேட்டுராதிங்க. பிறவு தலை நகரம் வடிவேலு மாதிரி மம்மி கூட எப்படா வாழ்ந்தேன்னு கேட்க வேண்டி வரும்.

இருந்தாலும் நாம ஏன் திடீர்னு கலைஞரை ஆதரிக்கிறோம்னு ஒரு விளக்கத்தை பதிவா போட்டிருக்கன். இங்கே அழுத்தி படிச்சுட்டு வந்தாலும் செரி .. இதை படிச்சுட்டு அதை படிச்சாலும்செரி .

ஓவர் டு கலைஞர்….

(வரும் சட்டமன்ற தேர்தல்களில் கேப்டன் வந்தாலும் -வராட்டாலும் -திமுக அல்ட்டிமேட் மெஜாரிட்டி பெற கட்சி /பிரச்சாரம் /தேர்தல் அறிக்கை அளவில் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் பற்றிய யோசனைகள்)

முன்னுரை:

மதிப்பிற்குரிய கலைஞர் அவர்களே !

என்னை பற்றி, நாடும்,இந்திய மானிலங்களும் வளம் பெற -நலம் பெற நான் 1986 முதல் மேற்கொண்ட முயற்சிகள் பற்றி -என் பிராபல்யத்தை பற்றி -இந்த பிரச்சினையில் 13 நாட்கள் வரை சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டதை பற்றி – கூகுள் ப்ளஸ்ஸில் என் ப்ரொஃபைல் 26+ லட்சம் மக்களால் பார்வையிட்டதை பற்றி – இதில் நான் குறிப்பிட்டிருக்கும் திட்ட அமலுக்காக ஜெ வை துரத்தி துரத்தி அவரை வெளிச்சம் போட்டது பற்றி சொல்லத்தான் எனக்கும் ஆசை .

ஆனால் நோ ஃப்ளாஷ் பேக்ஸ்/நோ ஹிஸ்டரீஸ்னு உங்களுக்கே யோசனை சொல்லிட்டு நான் எழுதிக்கிட்டிருந்தா என்ன புண்ணியம்.ஆகவே லேட்டஸ்ட் அப்டேட் ஒன்னை மட்டும் சொல்லிட்டு மேட்டருக்கு வந்துர்ரன்.

ஒரு மானிலத்தை மக்கள் மேல பாரம் சுமத்தாம எப்படி பக்காவா டெவலப் பண்ணமுடியும்னு நம்ம ரோசனைகளை எல்லாம் கார்டன்/கட்சி தலைமை அலுவலகம்/தலைமை செயலகம்னு மாத்தி மாத்தி அனுப்பினம். கண்டுக்கல.
பரப்பண அக்கிரகாரா செயிலுக்கு அனுப்பினம்,டெலிவரியும் ஆச்சு. கண்டுக்கல.

சி.எம்.செல்லுக்கு மனு அனுப்பினம். உரிய அதிகாரிக்கு அனுப்பறம்னு டாஸ்மாக் எம்.டிக்கு அனுப்பிட்டானுவ.
அவரு கர்னாடகத்துக்கு அனுப்பின ரோசனைகளுக்கு நன்றின்னு பதில் கொடுக்கிறாரு .தமிழ் நாட்டின் முதல்வர் /நிர்வாக முடிவுகளை பரிசீலித்து இறுதி முடிவெடுப்பவர் ஜெவா? டாஸ்மாக் எம்.டியா?

ஜெவுக்கு நான் அனுப்பிய கன்டென்ட் யாவும் இங்கே https://archive.org/details/swamy7867_gmail

#மோதி
மோதிக்கு கீழ் காணும்நம்ம யோசனைகளை அனுப்பினம் -ஆர்.டி.ஐபடி கேட்டதில் “ரிசீவ்ட் -கெப்ட் ஆன் ரிக்கார்ட்”னுட்டு பதில் கொடுத்துட்டானுவ.

அதை எல்லாம் பாக்கெட் புக்காக்கி முடிஞ்சவரை “அகுடு”பண்ணம். மேற்படி பாக்கெட் புக்ஸை லோக்சபா ஸ்பீக்கருக்கு அனுப்பி தமிழ்/தெலுங்கு எம்.பிக்களுக்கு கிடைக்க செய்யுமாறு கேட்டம். பதில் இல்லை. ஆர்.டி.ஐ படி கேட்டதுல ரிப்ளை பாக்ஸை காலியா விட்டு பதில் கொடுத்துட்டானுவ.

இந்த ரெண்டு மேட்டரையும் நீங்களோ ஸ்டாலினோ ஒரு அறிக்கையா கொடுத்தா கூட அவியளுக்கு கிளிஞ்சிரும். செய்விங்களா? செய்விங்களா?

1.எனக்கு தெரிஞ்சு ஒரு கட்சியிலருந்து இன்னொரு கட்சிக்கு மாறி ஓட்டுப்போடறதெல்லாம் கிராமம்/ ஒன்றியம் ரேஞ்சுல தலைவனா இருந்த கும்பல் தான். மத்தபடி ஆரும் ஓட்டை மாத்திப்போடற மாதிரி தெரியல. (ஏறக்குறைய தாலி கட்டிக்கிட்ட ரேஞ்சுல தான் ஒரே கட்சிக்கு போடறாய்ங்க -சின்ன எட்ஜுல தான் ஒரு கட்சி தோற்குது -இன்னொரு கட்சி ஜெயிக்குது )

ஆகவே கடந்த கால பெரும்போக்கு, ஆட்சி அவலம்,முறைகேடுகள் காரணமா விலகி நிற்கிற கட்சிக்காரன், விலகி நிற்கிற அனுதாபிகள் , உண்மையான நடு நிலையாளர்களை கவரும் வகையில் ஆட்டிட்யூடை மாத்திக்கிட்டாலே போதும்.தூள் பண்ணலாம் !

2.மதுவிலக்கை எப்படி பக்காவா அமல் பண்றது -சைட் எஃபெக்ட்ஸ் இல்லாம எப்படி மெயின்டெய்ன் பண்றது ..வருவாய் இழப்பை எப்படி ஈடுக்கட்டறது

– இந்த கேள்விக்கு பதிலா ஒரு மாக் பட்ஜெட்டையே கூட தேர்தலுக்கு முந்தியே வெளியிடலாம். என் பங்குக்கு என் யோசனைகள் இங்கே தனிப்பதிவாக..
http://anubavajothidam.com/?p=12055

3.பா.ஜ.க மாதிரி வயசான கட்டைகளை எல்லாம் தூக்கி -ஒரு அட்வைசரி போர்டுல போட்டுரனும்.ஆனால் அதுக்கு வீட்டோ பவர் . இருக்கனும்.ப்ரப்போஸல்ஸ் கொடுக்கிற அதிகாரமும் இருக்கனும்.எம்.எல்.ஏ =அம்பது வயசுக்கு கீழே எம்.பி =60 வயசுக்கு கீழே

எச்சரிக்கை: கலைஞர்,ஸ்டாலினுக்கு மட்டும் விதிவிலக்கு

தேர்தலுக்கு பிறகு நிரந்தர அனைத்து கட்சி குழு . கட்சிகள் பெற்ற வாக்கு சதவீத ரேஷோவில் மெம்பர் ஷிப். கூடவே ஒவ்வொரு துறையிலும் விவாதத்துக்கு அப்பாற்பட்ட – நிபுணர்களுக்கும் இதுல இடம் கொடுக்கனும். கட்சியின் அட்வைசரி போர்ட் கொடுத்த ப்ரப்போசல்ஸை இங்கயும் வச்சு பேசனும். இவிகளும் ப்ரப்போசல்ஸ் கொடுக்கலாம். எல்லாத்தையும் கன்வின்ஸ் பண்ணி பாலிசி டெசிஷன் எடுக்கனும்.

எங்க பக்கத்துல ஜகன் மோகன் ரெட்டி சொன்னாப்ல ஒட்டு மொத்த ப்ளானையும் சுப்ரீம்கோர்ட்டுக்கு கொடுத்து “ஐயா சாமீ ! ஏற்கெனவே நொந்து நூடுல்ஸாயிருக்கம். இதுல நெல்லவன் எவன்னா வந்து வில்லங்கம் பண்ணிட்டா வம்பா போயிரும்.ஆகவே நீங்களே பார்த்து ஓகே பண்ணிருங்க..பிறவு வேணம்னா நாங்க ப்ளானை இம்ப்ளிமென்ட் பண்ணிக்கிறோம்னு கேட்டரலாம்.

4.மானில அளவுல வேலையில்லாம இருக்கிறவிகளோட டேட்டா பேஸ் கலெக்ட் பண்ணி வச்சுக்கனும். பக்காவா அப்டேட் பண்ணிக்கிட்டே இருக்கனும்.

இதை அரசு/அரசு சார்/தனியார் துறைகள் பயன்படுத்திக்கலாம். மேலும் சமீபத்திய வெள்ளம் மாதிரி சம்பவங்கள் நடக்கும் போது இது பெருசா உதவும்.

சிட்டிசன் சார்ட்டர்னு ஒரு மேட்டர். அரசு துறைகள் மக்களுக்கான இன்னின்ன வேலைய இன்னின்ன நாட்கள்ள முடிக்கனும்னு இருக்கும். உரிய காரணம் இல்லாம லேட் ஆனா லேட் ஆன ஒவ்வொரு நாளைக்கும் இவ்ளன்னு நஷ்ட ஈடு தரனும். அதுவும் குறிப்பிட்ட ஆஃபீசரின் சம்பளத்துலருந்து பிடிச்சு ..

5.பிரச்சாரம் /போஸ்டர்/துண்டு பிரசுரம்/பேட்டி வரை

1.எம்.ஜி.ஆரை லூஸ்ல விட்டுரனும்.
2.எம்.ஜி.ஆருக்கு ஜெவுக்கும் இருந்த முரண்பாடுகளை வெளிச்சம் போடலாம்.
3.ஜெ’வை கூட தனிப்பட்ட வகையில விமர்சிக்க கூடாது
4.ஜெவையும் -சசியையும் ஒரே தட்டுல வச்சு எடை போட கூடாது .சசி ஒரு பலிகடாங்கறாப்ல கொண்டு போகனும்.
5.அதிமுகவை சனம் வெறுக்க என்னெல்லாம் காரணம் இருக்கோ அதை எல்லாம் வைப் ஆஃப் பண்றதுக்கு ட்ரை பண்ணனும்.

6.ஒன்றியம் முதல் மா.செக்கள் வரை ஐ-பேட்/லேப்டாப் வரை கொடுத்து தொழில் நுட்ப உதவியாளர்ங்கற பேர்ல கம்ப்யூட்டர் நாலெட்ஜ் உள்ள ஆட்களை தலைமைகழகமே நியமிக்கனும்.

7.கலைஞரின் பேச்சு- அறிக்கையில முடிஞ்சவரை வரலாறை தவிர்க்கனும் -அல்லது பாய்ண்ட் டு பாய்ண்ட் சின்ன சின்ன வாக்கியமா அடிச்சு விடனும். மொத்தையா இருக்குப்பா ! முக்கியமா முரசொலியில தலைப்பு செய்தி தலைப்பே ஒரு பாரா அளவுக்கு வருது .மாத்தி யோசிங்கப்பா. ஒரு காலத்துல குமுதம் காரன் பண்ண மாதிரி முரசொலி எடிட்டர் ஷிப்பை தினசரி ஒரு பிரபலத்துக்கு கொடுக்கலாம்.

8.அம்மா உணவகங்கள் அரசு/கார்ப்பரேஷன் மேன் பவர் இல்லாம மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் நடக்க ஏற்பாடு . -வேணம்னா மதுவிலக்கு காரணமா ஏற்படும் வருமான இழப்பை காரணமா காட்டி விலையை கூட்டிரனும்.

9.இருக்கிற தனியார் பள்ளி,கல்லூரி கல்விதந்தைகள் விரையை நசுக்கி ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்தி அரசு பள்ளி-கல்லூரிகளோட பெர்ஃபார்மென்ஸுக்கு அவிகள பொறுப்பாக்கனும்.உள் கட்டமைப்பு/ஃபேக்கல்ட்டி/

10.வார்டுக்கு ஒரு மினரல் வாட்டர் யூனிட் வச்சு குடும்பத்துக்கு ஒரு கேன் தண்ணி . மதுவிலக்குக்கு பிறவு நிதி நிலையை பொருத்து கேனுக்கு ரூ.5 ,முதல் ரூ.10 வரை விலை வைக்கலாம்.

11.போக்குவரத்து கழகம்: 1999-2004 ல சந்திரபாபு அரசு போக்குவரத்து கழகத்தை ஒழிச்சே தீருவேன்னு இருந்தப்ப நமக்கு ஸ்பார்க் ஆகி அனுப்பி வச்ச ப்ளான்லாம் அப்டியே மைண்டுல இருக்கு. தூள் பண்ணலாம்.. அறிவாலயத்துலருந்து கேட்டா ஒடனே ஃபேக்ஸ் பண்றேன்.

12.அசலான மேட்டரை உட்டுட்டன். தேர்தல் அறிக்கையின் முன்னுரையிலேயே கடந்த ஆட்சி காலத்து “நலதிட்டங்கள்” யாவும் -அதே பெயர்களில் – குற்றம் குறைகள் மட்டும் களையப்பட்டு -உண்மையான பயனாளிகளுக்கு – அனைத்துக்கட்சி குழுவின் மேற்பார்வையில் அப்படியே அமலாக்கப்படும்னு அறிவிச்சுரனும்.
நல திட்டங்கள் தொடரும் -பெயர் மாற்றம் இல்லைன்னு சொல்றமே தவிர லோகோவ மாத்திருவம்ல? அதுக்காவ அஞ்சுகத்தம்மாள் ஃபோட்டோவ வச்சுராதிங்க தலை !

13.விட்டா ..கடந்த ஆட்சி கொடுத்த லொடக்கானி மிக்சி,கிரைண்டர்,ஃபேனுக்கு எக்சேஞ்ச் ஆஃபரும் கொடுத்துரனுமுங்கோ ..

14.திருமலா விஷன் 1900 . இது திருப்பதிக்காக தீட்டிய திட்டம். இதில் உள்ள பொருத்தமான அம்சங்களை தமிழகத்தில் உள்ள பிரபல புண்ணிய சேத்திரங்கள் விஷயத்தில் அமல் செய்யலாம்.மதுவிலக்கால் ஏற்படும் வருவாய் இழப்பையும் ஈடு செய்ய முடியும்.எதிர்வரும் தலைமுறைகளுக்காக மேற்படி புண்ணிய சேத்திரங்களின்
புனிதத்தை காப்பாற்றிய புண்ணியமும் வரும். திட்டம் இங்கே.
http://focuson2morrows.blogspot.in/2009/05/tirumala-vision-1900.html

15.தமிழ் நாட்டில் உள்ள வேலையற்ற வாலிபர்கள்/வாலிபியரை கொண்டு ஊர்க்காவல் படை கணக்காக ஒரு படையை ஏற்படுத்துதல்.ஏற்கெனவே சொன்ன டேட்டா பேஸ்ல உள்ளவிக முன் வந்தா அவிகளையும் சேர்த்துக்கலாம். மேற்படி சிறப்பு படையை கொண்டு தமிழகத்தில் உள்ள நதிகளை இணைத்தல்.

16.தமிழ் நாடெங்கும் கிராம அளவில் விவசாயிகளின் கூட்டுறவு சங்கங்களை ஏற்படுத்தி திட்டத்தை ஏற்று முன் வருவோரின் விளை நிலங்கள் அனைத்தையும் அதற்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் உரிமையாக்குதல். கூட்டுறவு பண்ணை விவாசாய முறையை அமல் படுத்துதல்.

17.எப்படியும் கலைஞர் தான்னு ஆயிருச்சு.அதனால நாம ஏற்கெனவே மத்திய ,மானில அரசுகளுக்கு ப்ரப்போஸ் பண்ண மேட்டர் எல்லாம் இங்கே https://www.change.org/p/sri-narendramodi-suggestions-to-modi-for-skill-india

தேச கனவுகள் -மானில கனவுகள்னு ரெண்டா பிரிச்சு தயாரிச்சதை க்ளப் பண்ணி இப்படி கொடுத்திருக்கம்.தனித்தனியா வேணம்னா கீழே :

தேசகனவுகள் http://kavithai07.blogspot.in/p/blog-page.html மானிலகனவுகள் http://kavithai07.blogspot.in/p/blog-page_5106.html

18.எப்படியும் தேர்தல் அறிக்கைக்குன்னு ஒரு கமிட்டி போட்டிருக்கிறதா ஞா .மேற்படி கமிட்டி இந்த குப்பைகளை எல்லாம் ஜல்லிச்சு பொறுக்கி எடுத்து தேர்தல் அறிக்கையில் சேர்க்கவும்….

19.அரசு துறை விளம்பரங்களை ஒதுக்க ரீடர்ஷிப் தான் அளவு கோல். இதை கூட மன்சங்க மேன்யுவலா டிசைட் பண்ணாம ஒரு சாஃப்ட் வேர் போட்டுட்டா பெஸ்டு .

20.கட்சி சாரா நபர்களை கொண்டு சலூன்,டீக்கடைன்னு ரகசிய ரெய்டு அடிச்சு யார் எல்லாம் கலைஞர் படத்தை வச்சிருக்கானோ விலாசத்தோட அவன் பட்டியலை எடுத்து கலைஞர் /ஸ்டாலின் கையெழுத்தோட ஒரு கடிதம். டேட்டா பேஸ்ல வச்சு உரிய கவனிப்பு ..

21.அதிமுகவில் பழகருப்பையா போல் பலரும் உள்ளுக்குள் புழுங்கி கிடக்கிறார்கள்.அவர்கள் தைரியமாக உண்மைகளை வெளியிடவேண்டும். அவர்களுக்கு கழக செயல்வீரர்கள் உரிய பாதுகாப்பை வழங்குவார்கள்னு ஒரு அறிக்கையை அடிச்சு விடனும்.(திராட்டுல விட்டுராம அப்படி யாராவது வாயை திறந்தா அவிகளுக்கு உரிய பாதுகாப்பை கொடுக்கனும்)

22.கட்சிக்காரவிகளை உற்சாக படுத்த கிராம லெவல்ல இருந்து பேச்சு/கட்டுரை/ஃபோட்டோ/பாட்டு போட்டிகள் வச்சு அசத்தலாம். பரிசு பெற்றவர்களுக்கு ஸ்டாலின் கையால பரிசு .கலைஞரோட ஃபோட்டோ
மோடி ஸ்டைல்ல ஸ்டாலின் வாரத்துல ஒரு நாள் கூகுள் டாக்ல தொண்டர்களோட சாட் பண்ணலாம்
ஜெவுக்கு மந்திரிகள் பாடும் லாலியால் சனம் செம கடுப்புல இருக்காய்ங்க. ஆகவே லாலி பாட கட்சியினருக்கு தடா.

23.சார்ஜ் ஷீட் பெயரில் ஜெ மீதான குற்றச்சாட்டுகளை எழுத்து /ஆடியோ/வீடியோவாய் பார்ட் பார்ட்டா வெளியிடலாம். அன்றைய ராம்ஜெத்மலானி போல ஜெவுக்கு தினசரி 10 கேள்விகளை அள்ளி விடலாம்.

24.இந்திய பிரதமர் இலங்கை பிரதமர்கிட்டே அப்பாய்ண்ட்மென்ட் வாங்கி ஒரு பயணம் போயி மீனவர் மேட்டரை வலியுறுத்தலாம்.

25.பேட்டி/ஃபோட்டோ செஷன்ல செட் ப்ராப்பர்ட்டி மாதிரி கூட (வே) இருக்கிற ஆளுங்களை அதிகமாக்கி 1×7 வாரம் ஒரு நாள் வாய்ப்பு கொடுக்கலாம்.

26.ஃபோன் இன் ப்ரோக்ராம். வேணம்னா தேர்தல் அறிவிப்பு வர்ர வரைக்கும் ஸ்டாலின்/கலைஞர் வெர்சஸ் மக்கள்+தொண்டர்களுக்காக ஒருஃபோன் இன் ப்ரோக்ராம் பண்ணலாம்

27.நாம மாறிட்டோங்கறது முக்கியமில்லை.மாறிட்டோங்கறதை மக்கள் நம்பனும் அதான் முக்கியம்.அதுக்கு சில பல மாற்றங்களை உடனடியா செய்து காட்டனும்.
உ.ம் ஸ்டாலின் ட்ரஸ் அப்

இதே போல கலைஞர் பேச்சு தமிழை ட்ரை பண்ணலாம்(கு.பட்சம் பேட்டிகளில்)

28.கூட்டணிக்கு வராத கட்சிகளை எல்லாம் திட்டி டைம் வேஸ்ட் பண்ணாம பாசிட்டிவாவே கொண்டு போறது பெஸ்ட்.கொக்குக்கு ஒன்றே மதிங்கறாப்ல மொத்த சக்தியையும் ஜெவை வெளிச்சம் போடறதுல செலவழிக்கனும். பா.ஜ.க மேட்டர்ல பம்மிராம கட் அண்ட் ரைட்டா பதில் கொடுக்கனும்.
(மற்றபடி சகோதர யுத்தம் வேணாம்ங்கறது பாடம்)

கேப்டன் வந்தாலும் வராட்டாலும் நமக்கு அனுகூலம் தேன் .ஏன் ?

தனியா நின்னாலும் திமுகவுக்கு அனுகூலம் தான். ஏன்னா கலைஞர் மேலும் -திமுக மேலும் சில தலைமுறைகளாக ஒரு காழ்ப்புணர்ச்சி கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

புதிய வாக்காளர்கள் என்ன? பழைய வாக்காளர்கள் கூட இதற்கு விதி விலக்கல்ல.

இந்த நிலையில் கேப்டன் தனித்து நின்றால் கலைஞர் எதிர்ப்பு வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் அதிமுகவுக்கு செல்வதை கேப்டன் தடுப்பார்.

மாற்று வேண்டும் என்று எண்ணி மா.ந.கூ பக்கம் சாய எண்ணும் அரசியல் தெளிவில்லாதவர்களையும் கேப்டன் தன் இமேஜ் மற்றும் சரிஸ்மாவால் பிளப்பார்.

அதிமுகவை வீட்டுக்கு அனுப்ப யாருக்கு வாக்களிக்கவேண்டும் என்ற தெளிவுள்ளவர்களின் வாக்குகள் நிச்சயமாக திமுகவுக்கு தான் வரும்.

விஜய்காந்த் கூட்டணிக்கு வந்தால் கிடைக்க கூடிய எட்ஜ் -இப்போது ஜெ கும்பலாலேயே திமுகவுக்கு கிடைத்து விடும் போல.தீயா வேலை செய்றாய்ங்கல்ல.

மேலும் கேப்டனுடன் கூட்டணி அமைந்து விட்டால் ஜெ எந்த நிலைக்கும் கீழிறங்குவார். பலமான கூட்டணி அமைய வாய்ப்பிருக்கிறது .திமுகவுடன் சேர்ந்து செயல்படும் போது தேமுதிக தொண்டர்கள் பெரும் அழுத்தத்துக்குள்ளாவார்கள் (அரச பயங்கர வாதம்). கேப்டன் தனிய நின்னா கொஞ்சம் லூஸ்ல விட்டுருவாங்க.

29.மன்மோகன் கால கொடுமைகளை மோடி மறக்கடிச்சாப்ல கடந்த கால ஆட்சியின் குளறுபடிகளை ஜெ மறக்கடிச்சுட்டாய்ங்க.இனி அதை செய்தோம் இதை செய்தோம்ங்கற கதைல்லாம் இல்லாம இனி என்ன செய்யப்போறோம்ங்கறதை லாஜிக்கலா சொல்லனும்.

பாசிபிலிட்டீஸ் -ரெவின்யூ சோர்ஸ்லாம் விரிவா சொல்லனும்..- இந்த ப்ராசஸ்ல வேணம்னா கடந்த காலத்துல அதை செய்தாப்ல இதை செய்தாப்லன்னு சொல்லிக்கலாம் .

30.தமக்கு பிறகு கோபாலபுரம் வீட்டை மருத்துவமனையாக்குவதாக அறிவித்தது நல்ல விஷயம் தான்.
ஆனால் யாருக்கு புண்ணியம்? படக்குன்னு வீட்டை காலி பண்ணிட்டு மருத்துவமனையா ஆக்கிரனும்.
புதிய தலைமுறை வாக்காளர்களுக்காகவாவது திறந்தமனதுடன் கடந்த காலத்தில் நிகழ்ந்து விட்ட “தவறுகள்” குறித்து ஒரு வெள்ளையறிக்கை வெளியிட்டு பகிரங்க மன்னிப்பு கோரவேண்டும்

30. கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க எண்ணும் தொகுதிகள் தவிர மற்ற தொகுதிகளுக்கு ஒன் ப்ளஸ் ஒன் வேட்பாளர்களை அறிவித்து விடவேண்டும்.

31.கட்சியின் மையப்புள்ளியாக அறிவாலயமோ -கோபாலபுரம் -சி.ஐ.டி காலனியோ இருக்க கூடாது .
மக்களை தேடி சென்றது போல கட்சியினரை தேடி மாவட்ட கட்சி அலுவலகங்களுக்கு ஸ்டாலின் செல்லவேண்டும். மா.செக்கள் கிராமம் வரை சென்று தொண்டர்களுடன் ஒட்டும்-உறவும் ஏற்படுத்தி கொள்ளவேண்டும்.

32.உட் கட்சி ஜன நாயகம் வலுப்பெறவேண்டும். வேட்பாளர் தேர்வு உட்பட கடைக்கோடி தொண்டனும் பங்கு பெறும் வாய்ப்பு அளிக்கப்படவேண்டும். இதுக்காவ ஒரு மொபைல் அப்ளிகேஷனை ரிலீஸ் பண்ணலாம். அவர்னா ஒன்னை அழுத்துங்க. இவர்னா ரெண்டை அழுத்துங்க.. யாரையும் பிடிக்கலன்னா மூன்றை அழுத்துங்க.

33.இனி வெறுமனே பெரியார்,அண்ணா,தமிழ் என்று ஜல்லியடிப்பதை நிறுத்தியாக வேண்டும். .பெரியார் என்றால் பகுத்தறிவு -பகுத்தறிவுக்கொவ்வாத வேலைகள் கு.பட்சம் அரசு துறைகளில் தடை செய்யப்படும் என்று அறிவித்தல்.

அண்ணா என்றால் எளிமை. தலைவர் முதல் கவுன்சிலர் வரை இதை பின்பற்றியாகவேண்டும். தமிழ் வாழவேண்டுமென்றால் தமிழ் சோறு போடவேண்டும்.தமிழன் சோறு போடும் நிலைக்கு வரவேண்டும்.இதுக்கு என்ன செய்ய போறம்னு தேர்தல் அறிக்கையில சொல்லலாம்.பிரச்சாரம் பண்ணலாம்.

34.கலைஞர், ஸ்டாலின் தவிர அனைத்து குடும்ப உறுப்பினர்களும் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பதவிகளில் இருந்து விலகுதல். வரும் ஐந்தாண்டு காலத்தில் கலைஞர்-ஸ்டாலின் தவிர மற்ற குடும்ப உறுப்பினர்கள் எவருக்கும் எந்த பதவியும் தரப்படாது என்ற உறுதியான முடிவை எடுத்து அறிவித்தல்

மேலதிக விவரங்களுக்கு:
சித்தூர்.முருகேசன்,
17-201,கும்மரா தெரு ,
சித்தூர் ஆ.பி
517001
மொபைல்: 9397036815
மெயில்: swamy7867@gmail.com
முகநூல்: https://www.facebook.com/swamy7867

இணைப்புகள்:
என் தேசம் -என் கனவு தலைப்பில் நான் வெளியிட்டு இலவசமாக வினியோகித்து வரும் சிறு நூல். மற்றும் நான் வெளியிட்ட நான்கு நூல்கள் . “பணம் பணம் பணம் ” நூலில் என் தேச கனவு அச்சு வடிவத்திலேயே இருக்கிறது ..

காசு பணம் துட்டு மணி மணி :20 ( எட்டாவது கேட்டகிரி)

lazyman

அண்ணே வணக்கம்ணே !
உலகத்துல உள்ள மன்சங்களை 9 கேட்டகிரியா பிரிச்சு -ஒவ்வொரு கேட்டகிரிக்கும் உண்டான லட்சணங்களை சொல்லி – ஃபைனான்ஸ் மேட்டர்ல இவிகளுக்கு ஆப்பு எப்படி வரும்-அதுக்கு பரிகாரம் என்னன்னு சொல்லிக்கிட்டு வர்ரம். இதுவரை ஏழு கேட்டகிரி ஃபினிஷ் பண்ணியிருக்கம்.கடந்த பதிவுல எட்டாவது கேட்டகிரிக்குண்டான லட்சணங்களை சொன்னம்.மேற்படி லட்சணங்களால மானிட்டரி லாஸ் எப்படி வரும்? பொருளாதார நெருக்கடி எப்படி வரும்? அதுக்கு என்ன பரிகாரம்னு இந்த பதிவுல பார்த்துரலாம்.

//கருப்பா பயங்கரமா அல்லது பயங்கர கருப்பா இருப்பாய்ங்க. வயசு சின்னதா இருந்தாலும் ஹேர் ஸ்டைல்,ட்ரஸ் அப் , பாடி லேங்குவேஜ்,பேச்சு ஸ்டைல் எல்லாமே இவிக வயசுக்கு எட்டு வயசு கூடுதலா இருக்கும்.தலையில வெள்ளை முடி இருக்கலாம். முகம் வாடி,கண்ணெல்லாம் உள் வாங்கி இருக்கலாம்.முகத்துல எண்ணெய் வடியலாம். .//

இந்த லெட்சணத்துல உள்ளவருக்கு -அவரோட சாதனைகள் ஏதும் தெரியாத புது ஆள் கிட்டே என்னாத்த காரியம் நடக்கும்?

ஹேர் ஸ்டைல்,ட்ரஸ் அப் , பாடி லேங்குவேஜ்,பேச்சு ஸ்டைல் எல்லாமே இவிக வயசுக்கு எட்டு வயசு கூடுதலா இருக்குன்னா ..அன்னாருக்கு வாழ்க்கையின் அசலான தத்துவம் தெரிஞ்சிருக்குன்னு அருத்தம் .ஆனால் இந்த மேட்டர் எத்தனை எம்ப்ளாயருக்கு தெரிஞ்சிருக்கும்?

//கலை,அலங்காரம், வாசனை பொருட்களில் ஈடுபாடு இராது. வெற்று ஆடம்பரங்களில் இறங்க மாட்டார்கள். .இவிகள பொருத்தவரை பேக்கிங் முக்கியம் கிடையாது ரீஃபில் பேக்னாலும் ஓகே செகண்ட்ஸா இருந்தாலும் ஓகே. ஆனா ப்ராடக்ட் உழைக்கனும்.//

இன்னைக்கு உலகம் எந்த ரூட்ல போவுதுன்னு தெரியும்ல? உலகமயம்-தாராள மயம்-தனியார் மயம்னு எல்லாமே மாயாஜாலமா போயிட்டிருக்கும் போது இவிக எங்கருந்து முன்னேற முடியும்?

//கொஞ்சம் மந்தமாதான் இருப்பாய்ங்க. ஆனால் கடுமையா உழைப்பாங்க.எளிய உணவிலேயே திருப்தி அடைவாங்க. //
இன்னைய தேதிக்கு கையில வேலை இருக்கோ இல்லையோ அனல் காட்டனும்.சீன் போடனும். கொய்யால கிரெடிட் கார்டை ஸ்வீப் பண்ணியாவது ஸ்டார் ஹோட்டல்ல திங்கனும்.

//ஃபைனான்ஸ் பொசிஷனை பார்த்தா எல்லாமே லேட் ,அல்லது வில்லங்கத்துல இருக்கும். தப்பிதவறி கை/பையில இருந்தாலும் சாதாரணமா வெளிய எடுக்க மாட்டாங்க.//

இன்னைக்கு ட்ரென்டு என்னடான்னா வெத்தலைய வச்சு பித்தள எடுக்கனும்.இவிக என் வெத்தலைய நான் வச்சுக்கறேன்.உன் பித்தளையை தொடமாட்டேன் கேஸு .வேலைக்காகுமா?

//பேச்சு ? ரெம்ப பட்டவர்த்தனமா ,யதார்த்தமா,குதர்க்கமா இருக்கலாம். நல்ல வேளையா குறைவா பேசுவாங்க. //

நம்ம தமிழ் நாடு பாலிட்டிக்ஸையே பாருங்க. விஜய்காந்த் பாவம் யதார்த்தமா பேசறாரு.ஆனால் விவரம் தெரிஞ்சவிக கூட இதை பாராட்டாம நக்கலடிக்கிறாய்ங்க.லாவணிபாடறவன்லாம் மந்திரி .உள்ளதை சொன்னா எந்திரி .

//வீடு இடிஞ்சு விழ தயாரா இருக்கலாம்.அல்லது இன்னைய ட்ரென்டுக்கு பேய் படம் எடுக்க தோதானதா இருக்கும். அல்லது சேரி,தொழிற்பேட்டைய ஒட்டி அமைஞ்சிருக்கலாம். //

தாமரை சேத்துல தான் இருக்கு.ஆனால் தேனி தேடிவரல? அப்படி இவிகளையும் வாய்ப்பு தேடி வரும். என்ன கொஞ்சம் லேட்டு. அதுக்குள்ள மனைவி,மக்கள்ளாம் இவிகளை ஹிட்லிஸ்டுல வச்சுட்டிருப்பாங்க.

// செகண்ட்ஸா இருக்கலாம்.அல்லது ரெம்ப பழைய மாடலை பல காலம் வச்சிருப்பாங்க. //
ஓ.எல்.எக்ஸ் விளம்பரத்துல பார்த்திருப்பிங்க. வித்துடு கண்ணு வித்துடுங்கறாய்ங்க. எல்லாரும் வித்துக்கிட்டே இருந்தா அப்ப வாங்கறதுக்கு ஒரு கேணை தேவையில்லையா? செகண்ட்ஸ் வாங்கறது ஒரு வித்தை . அதுல என்னல்லாம் லாபமிருக்குன்னு இவிகளை கேட்டா சொல்வாங்க.

//கல்வி? டெக்னிக்கல் லைனுக்கு மாறியிருப்பாங்க.//
ஸ்கூல் ஃபைனல் முடிச்சதுமே மாறியிருந்தா காலேஜ் லைஃப், லான்ல பாதாகானி,லவ்ஸு ,ஃபேர்வெல் எல்லாமே போச்சு. இதனால “மூடி”யாவே இருப்பாங்க போல.

//கண்ணாலமாகி கொளந்தை இல்லாம கோவில் கோவிலா ஏறி இறங்கி ஏழெட்டு வருசம் களிச்சு பெத்துக்குவாய்ங்க.உடனே பிறந்தா குழந்தைகளுக்கு கால்,நரம்பு,ஆசனம் தொடர்பான உடல் நல கோளாறுகள் இருக்கலாம்.//

அதது காலாகாலத்துல நடந்தா மனசு அடுத்து என்ன அடுத்து என்னன்னு பரபரக்கும். இல்லின்னா? எல்லாமே மந்தமாயிரும்ல. இதுல எங்கருந்து பண வேட்டை ?

//கொடுக்கல் வாங்கல்? வாங்கினதை திருப்ப மாட்டாங்க.கொடுத்ததை கேட்க மாட்டாங்க. கோர்ட்ல குடியிருக்கிற கேஸ்லாம் இந்த கேட்டகிரியா இருக்க சான்ஸ் இருக்கு. //

இந்த பாய்ண்டை மட்டும் அச்சாணியமா/அடாவடியா அடிச்சு விட்டுட்டாப்ல இருக்கு. முக்கியமா சொல்லவேண்டிய மேட்டர் என்னடான்னா “இது போதும் நமக்கு ” னு வாழ்ந்துட்டே வருவாங்க.ஒரு எமர்ஜென்சிங்கறப்ப கைய நீட்டிருவாங்க.

பிறவு?பழைய குருடி கதவை திறடின்னு ஆயிரும். கடன் தானே..திருப்பிதராமலா போயிரப்போறம்..தந்துருவம் தந்துருவம்னு தள்ளிப்போட்டுக்கிட்டே வருவாங்க.(கொடுக்க கூடாதுங்கற எண்ணம்லாம் இருக்காது)எதிராளி வென்னீர் கேஸா இருந்தா படக்குனு கேஸை போட்டு தொலைச்சுருவான்.

மத்த 8 கேட்டகிரியும் போட்டு புரட்டிப்புடனும்னு ஆலா பறக்கச்சொல்லோ இவிக இப்படினு தெரிஞ்சா எவன்னா சீந்துவானா? ஊஹூம்.

//இதே போல தீர்க நோய்கள் பாதிக்கும்.( தொடர்ந்து ட்ரீட்மென்ட்)//

என்ன தான் மேலுக்கு ஜென் நிலையில இருந்தாலும் சப் கான்ஷியஸா ஒரு துடிப்பு இருந்துக்கிட்டு தானே இருக்கும். அது உள்ளூர வேலை செய்து வேலை செய்து நோயா வெளிப்படும்.இதுக்கு ட்ரீட்மென்டு ,லீவு ,வேலைகாலின்னு தனிய ஒரு இமிசை.

// தலித் இன மக்கள், தொழிலாளர்களுடன் முட்டல் மோதல் வரும்.அல்லது இவர்களால் கடனுக்குள்ளாவார்கள்.//

இது எப்படி? ஏறக்குறைய இவிக மென்டாலிட்டி தான் நம்மாளோடதும்.எதிரெதிர் துருவங்களுக்கிடையில தானே கவர்ச்சி இருக்கும். கவர்ச்சி இல்லாத இடத்துல கை பட்டா குத்தம் கால் பட்டா குத்தம் தானே..

//மனைவிக்கும்/கணவருக்கும் இவிகளுக்கும் இடையில வயசு வித்யாசம் அதிகமா இருக்கலாம். (கு.ப தோற்றமாவது அப்படி இருக்கும்) படிப்பு,அந்தஸ்தும் இவிகளை விட ஒரு மாத்து குறைவா இருக்கலாம். //

லேட் மேரேஜ்ல இதெல்லாம் சகஜம் பாஸ்! சம அந்தஸ்துல பார்த்தா பொஞ்சாதி முதிர்கன்னியா இருக்கும். ஒரு ஸ்டெப் இறங்கிப்போனா இளசா கிடைக்கும். ஆனால் இவிக லைஃப்க்கு முதிர்கன்னியே பெஸ்ட் .இளசெல்லாம் ஸ்லைஸ் போட்டுரும்.

//ஆயுசு மட்டும் யதேஷ்டம் (எல்லாமே ஸ்லோவாச்சே -பேலன்ஸ் ஆகனும்ல) .அப்பா மேட்டரும் இவிகள போலவே இருக்கலாம்.
அவர்வழியில வர்ர சொத்தெல்லாம் ஒன்னு Non functioning property யா இருக்கும் (அதான் பாஸ்! வாடகை வராத வீடு /குத்தகை பணம் வராத நிலம்) அல்லது ஏதேனும் துர்சம்பவம் நடந்ததா இருக்கும்.(கொலை தற்கொலை போல)//

இந்த நிலையில எங்கருந்து முதலை தேடறது ? எங்கருந்து ரிஸ்க் எடுத்து பணம் பண்றது?

// நீண்ட கால திட்டங்கள், விவசாயம், கிரானைட்,சுரங்கத்தொழில், எண்ணெய் செக்கு, எருமைவளர்ப்பு , இரும்பு, கருங்கல், கிரானைட், எண்ணெய் வித்துக்கள், துர்நாற்றம், தூசு கிளப்பும் தொழில்கள், கைகள், உடைகளைக் கறையாக்கும் தொழில்கள், மக்களை கசக்கிப் பிழியும் தொழில்கள் (கந்துவட்டி-கொத்தடிமை), வழக்கறிஞர், பழைய பொருட்கள், ஸ்கிராப் -போன்ற துறைகளில் இருப்பார்கள்.//

விதி வழியே மதிங்கறாப்ல இவிக மேற்படி தொழில்ல இருந்தா ஓகே. இல்லின்னா நாஸ்திதான்.

//இவிகளோட லாபம்ங்கறது எருமையை முன்னாலே பிடிச்சு பின்னுக்கே தள்ளிக்கிட்டு வந்து கொல்லையில கட்டின கதையா இருக்கும்.//
பண மேட்டர்ல எல்லாம் லிக்விடிட்டிய வச்சுத்தான் மருவாதியே..தெரியும்ல?

//டிஃபன் 12 மணி, லஞ்ச் 4 மணி ,டின்னர் ? விடிஞ்சுரும். கில்மா மேட்டர்ல கூட “வேலை”முடிஞ்சா செரின்னு வேலைக்காரிய கூட படுக்க போட்டுருவாங்க. சிலர் ஆனல் செக்ஸ்/அல்லது ஓரல் செக்ஸ்ல ஆர்வம் உடையவர்களா இருப்பாங்க.//

மன்சனை பணத்தை நோக்கி விரட்டறதே பலான மேட்டர் தான்.இந்த பலான மேட்டர்லயே சூடும் சுவையும் தேவையில்லைன்னு முடிவு கட்டிட்டா என்னாத்த காசு பணங்கற ஃபீல் தானே இருக்கும்.

பரிகாரம்:
1.சஃபாரி சூட் அணியலாம்.அல்லது பேண்டும் ஷர்ட்டும் ஒரே நிறம் (இத கூட புதுசா வாங்கினதும் மாட்டிக்க கூடாது . தண்ணியில போட்டு வாஷ் பண்ணி பிறவுதான் போடனும்) பார்க்க ஒரு க்ளாஸ் ஃபோர் எம்ப்ளாயி போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்திக்கிட்டா சூப்பர் நோ ஹேர் டை. தன் வயதை விட 8 வயது மூத்தவராக காட்சியளிக்கும் வகையில் தன் ஹேர் ஸ்டைல்,ட்ரஸ் அப் , பாடி லேங்குவேஜ்,பேச்சு ஸ்டைல் இத்யாதியை மாற்றிக்கொள்ளவும்.போறச்ச குளிச்சுட்டு போகாம வீட்டுக்கு வந்த பிறகு குளிக்கலாம்.
2. நாட்டுப்புற பாடல்/மரண கானா பாடல்களை முனுமுனுக்கலாம். கழுத்துல ஸ்டீல் செயின் (அதுல எருமை தலை இத்யாதி அபசகுனம் பிடிச்ச மேட்டர் இருந்தா சூப்பரு). சென்னை ஸ்லாங் பெஸ்ட்(அட்லீஸ்ட் ஊட்ல நட்பு வட்டாரத்துல ) .ஆருனா யூஸ் பண்ணி தூக்கி எறிஞ்ச பர்ஸு /கேஷ் பேக்
3.நாட்டுப்புற பாடல்/மரண கானா பாடல்களை கேட்கலாம் (ரிங் டோனா வச்சுக்கலாம்ல) பறையிசை பெஸ்ட்.
4.தூசும்,தும்புமாக விடவும். வீட்டு உபயோக பொருள் வாங்கும் போது செகண்ட்ஸா / லோக்கல் ப்ராடக்டா வாங்கறது நலம்.
5.கொளந்தைகளுக்கு முனியா,குப்பா மாதிரி பேர்களை செல்லப்பேரா வச்சு கூப்டலாம். ஜாதகத்துல குரு +ராகு/கேது/சனி சேர்க்கை இல்லைன்னா வாராஹி அம்மன்,வராஹ மூர்த்தி தியானம்.
6.ஹ்யூமன் பாடிக்கு வரக்கூடிய ஹீட் எஃபெக்ட்,கூல் எஃபெக்ட் /அதுக்குண்டான காரணங்களை தெரிஞ்சுக்கிட்டு பேலன்ஸ் பண்ணிக்கிட்டே இருக்கோனம்.
7.வயதில் மூத்தவரை அல்லது அது போன்ற தோற்றம் கொண்டவரை மணக்கலாம்.அல்லது தம்மை விட கீழ் சாதியினர் எனப்படுவோரை /உடல் ஊனமுற்றவரை மணக்கலாம்.
8.நடை பயிற்சி அவசியம், மன அழுத்தம் கூடவே கூடாது (லூஸ்ல விட்டுரனும்)
9.சொத்து சேமிப்பு முதலீடு ,வெளி நாட்டு தொடர்பான டாக்குமென்ட்ஸ் எவரோ உபயோகித்து தூக்கி எறிந்த நீல நிற ஃபைலில் வைக்கவும்.அதன் மீது வராக மூர்த்தி/வராகி அம்மன் ஸ்டிக்கர் ஒட்டி வைக்கவும்.
10.உங்களுக்கு விதிக்கப்பட்ட தொழிலையே செய்யவும் (இதே பதிவில் சொல்லியிருக்கன்)
11.கட்டில் செகன்ட்ஸ்ல வாங்கியிருந்தா சூப்பர். அல்லது பெட் ஸ்ப்ரெட்,பில்லோ கவர்லாம் நீல நிறத்துல ப்ளான் பண்ணிக்கங்க. செருப்பு/சாப்பாட்டு தட்டும்.

கலைஞர் : வெற்றி நிச்சயம்?

kalaingar

அண்ணே வணக்கம்ணே !
சோசியரா இருக்கிறதுல ஒரு சிக்கல் என்னன்னா குரு பெயர்ச்சி,ராகுகேது பெயர்ச்சி,சனி பெயர்ச்சில்லாம் வந்தா தூங்கவே மிடியாது .இதெல்லாம் கோசாரம்யா ..இதெல்லாம் உன்னை எஃபெக்ட் பண்ணுதுன்னா உன் ஜாதகத்துல சரக்கே இல்லேன்னு அருத்தம்னு தலை தலையா அடிச்சுக்கிட்டாலும் ஊஹூம்.. நீ எழுதி போடு வாத்யாரே நடக்குதா இல்லையா நாங்க பார்த்துக்கறோம்னிருவாங்க.

இதே போல தேர்தல் .ஆரு வருவாய்ங்க ..சொல்லுங்க பாஸ்னு மெயில்,ஃபேஸ்புக்ல இன்பாக்ஸ் மெசேஜ்னு குடைய ஆரம்பிச்சுருவாங்க. கோசார பலன்னாலும் பரவால்ல. எவனோ செத்தான் எனக்கென்ன போச்சுன்னு சொல்லி விட்டுரலாம்.ஆனால் இந்த தேர்தல் மேட்டர்ல நமக்குன்னு ஒரு கொள்கை ,குல்ஃபி ஐஸ்லாம் இருக்கா ..இதெல்லாம் வந்து நம்ம அசெஸ்மென்டை டிஸ்டர்ப் பண்ற ரிஸ்க் ஒன்னிருக்கு .
அதையும் மீறி இந்த பதிவை போடறேன்.

கடந்த பதிவுகள்ள ஜெ ஜாதகத்தை அனலைஸ் பண்ணம். இந்த பதிவுல கலைஞர் ஜாதகம். கடக லக்னம் -லக்னாதிபதி உச்சம் .தலீவருக்கு மினிமம் கியாரண்டி தர்ரதே இதான். ஆனால் இது சந்திரங்கறதாலதான் ஏறினா ரயிலு இறங்கினா ஜெயிலு கணக்கா லைஃப் போகுது. 14 வருஷம் வனவாசத்துக்கும் இதான் காரணம். (வளர்பிறை -தேய் பிறை) லக்னாதிபதிக்கு தன,வாக்கு ,குடும்பஸ்தானாதிபதியோட சேர்க்கை – இதனால தான் அவரு குடும்பத்தை பிரிய , அட்லீஸ்ட் விட்டுக்கொடுக்க மறுக்கறாரு. (அழகிரிய தலைமுழுகி தொலைச்ச பிறவு ஒரு ஃப்ரெஷ்னெஸ் வந்திருக்கு கட்சியில .தொடருதா பார்ப்பம்)

மேலும் கலைஞர்னாலே பேச்சுன்னு ஆயி போச்சு. இதே போல கலைஞர்னா பணம்,காசையும் சேர்த்தே பேசறாய்ங்க.(அடிச்சாரோ இல்லையோ -எவனுக்கும் தெரியாது -எம்.ஆர்.ராதா சொன்ன நாய் கதை தான் -மம்மி மேட்டர்ல இதெல்லாம் ஊரறிந்த ரகசியம்ங்கறது வேற கதை )
லக்னாதிபதி =ஜாதகர் , தனபாவாதிபதி=பணம் காசு . ரெண்டு பேரும் சேர்ந்துதானே இருக்காய்ங்க.

ஆனால் ரெண்டு எட்டுல இருக்கிற ராகு கேது அப்பப்போ ஒரு மெம்பரை வெட்டி விட்டுக்கிட்டே வருது .முக முத்து,அழகிரி,கனிமொழி ,சில காலம் மாறன் ப்ரதர்ஸ்.
மேலும் தலீவரு அந்த நேரத்துக்கு உண்மைன்னு பேசற மேட்டரை எல்லாம் அவரே மாத்தி பேச வேண்டி வந்துருது . உ.ம் எமர்ஜென்சி காலத்துல இந்திராவை கிளி கிளின்னு கிளிச்சுட்டு பிறவு நேருவின் மகளே வருக எட்செட்ரா.. அன்று முதல் இன்று வரை தேவையில்லாத வார்த்தைகளை விட்டு பல்பு வாங்கறதும் அன்னாருக்கு இயல்பே.

அடுத்து இந்த லக்னத்துக்கு 7,8 க்கு அதிபதியான சனி 4 ஆவது இடத்துல உச்சம். 8ங்கறது மரணத்தை காட்டற இடம் – 4ங்கறது ” வீடு மற்றும் தன்னவரை” காட்டற இடம் . ராசா ஒரு தலித். அவரை தன்னவருன்னு சேர்த்ததால செமபல்பு. ஒடனே ஆகா 2ஜியில டக் அவுட்டு தான்னு டிசைட் பண்ணிராதிங்க.

இந்த சனி வக்ரமா இருக்காருங்கோ. இந்த கிரக வக்ரம் கேஸ்ல ஒரு விதியிருக்கு .ஒரு கிரகம் சாதாரணமா நின்னா என்ன பலனை தரனுமோ அதுக்கு கொய்ட் ஆப்போசிட் பலனை தரும்.

அஷ்டமாதிபதி 4 ல் நின்னா என்ன பலன்? நிற்க நிழல் இருக்க கூடாது .ஆனால் தலீவருக்கு ரெண்டு வீடு இருக்கு . இதே போல வாகனம் இருக்க கூடாது .ஆனால் வாகன யோகம் அமோகம்.

வக்ரமான கிரகம் தலைகீழ் பலனை தர்ரதுக்கு மிந்தி டெஸ்டிங் டோஸ் கணக்கா தான் சாதாரணமா நின்னா தரவேண்டிய பலனை தரும்.(அனுபவம் பாஸ் !)
ஏழுக்க்குடையவர் 4 ல் நின்றால் தாய்வழி உறவில் திருமணம் நடக்கனும். அப்படியா நடந்தது? நோ . ஏழுக்குடையவர் சனின்னா பொஞ்சாதி பாட்டி மாதிரி இருக்கனும். ஒரு மவராசி அப்டி இருந்தாலும் நெம்பர் டூ ? நோ..

6,9க்கு அதிபதியான குரு அஞ்சுல கீறாரு. அஞ்சுன்னா புத்திஸ்தானம், பெயர் புகழை காட்டற இடம். 6ன்னா சத்ரு ரோக ருணங்களை காட்டற இடம். குரு ரோகாதிபதியா வேலை செய்தா “இந்திராவுக்கு பென்ஷன் தரோம்” பாணில வார்த்தைய விட்டு ஆப்பு.

அவரு பாக்யாதிபதியா வேலை செய்தா ஜூப்பரு.இதுக்கு உதாரணமா .. தூர திருஷ்டியோட பெரியாருக்கு டாட்டா காட்டிட்டு அண்ணாவோட பார்சல் ஆனதை சொல்லலாம்.

இதுல பெசல் என்னன்னா இந்த குருவும் வக்ரமுங்கோ ..குரு அஞ்சுல நின்னா புள்ளை குட்டியே கிடையாது.முக்கியமா ஆண் குழந்தை கிடையாது .இவர் வக்ரமா கீறதால உண்டு .ஆனாலும் ஒன்னு ரெண்டு உருப்படாம போகும். ஸ்டாலின் இன்னைக்கு தளபதியா வளர்ந்து நிற்க காரணமே இந்த வக்ர குரு தான்.
ஆறுக்குடையவர் அஞ்சுல வக்ரமானா எதிரிகளை நண்பர்களாக்கிக்கலாம்.ஆனால் அவர் 9க்குடையவராவும் இருக்காரே.ஆகவே குறுகிய கால நலனுக்காக எதிர்காலத்தை சிக்கலாக்கிக்கிற நேச்சர் இருக்கும். கொளந்தைகளுக்கும் இந்த நேச்சர் வந்திரும்.

உ.ம் 2004 -2014 கால கட்டத்துல சோனியாஜியை விரட்டி விரட்டி மந்திரி பதவி வாங்காம இருந்திருக்கலாம். இங்கே காங்கிரஸுக்கு பவர் ஷேர் கொடுத்திருக்கலாம். செய்தாரா இல்லை. குருன்னா அவாள். அவிக என்னதான் ஆப்படிச்சாலும் இவரு சேர்த்து பிடிக்க காரணம் இதான். .

ஏழுல செவ் உச்சம்.7ங்கறது ஃப்ரெண்ட்,லவர்,பார்ட்னர்,வைஃபை காட்டற இடம். செவ்வாய்னா எதிரி. பாவம் தலீவரு ஆரை நண்பர்னு நினைக்கிறாரோ அவிகளே ஆப்பு வைக்க இதான் காரணம். அதே போல ஃப்ரெண்ட்,லவர்,பார்ட்னர்,வைஃப் எல்லாருமே குழி தோண்டவும் இதான் காரணம்.

இவர் உச்சம் பெற்றதால மனைவி மார் சேஃப் .இல்லின்னா டிக்கெட்டு தான். இவர் 7லருந்து ஜன்மத்தை பார்க்கிறதால சட்டுனு கோவம் வந்துருது. ஆருனா ரிப்போர்ட்டர் வில்லங்கமா கேள்வி கேட்டா ” எந்த பேப்பரு”ன்னு சீறவும் இதான் காரணம்.

இந்த ஜாதகத்துக்கு செவ்வாய் தான் யோககாரகன்.இவர் 7ல உட்கார்ந்து உச்சம் பெற்றார். அதனால பெரியா(ரோட)ளுங்களோட சகவாசம் ஏற்பட்டுது. செவ்வாய் சகோதர காரகர் (அண்ணா தம்பி) அதனாலதான் அண்ணா ஒரு லைஃப் கொடுத்தார். உடன்பிறப்புங்க கொடுத்துக்கிட்டே இருக்காய்ங்க.

4/11 க்கு அதிபதியான சுக்கிரன் விரயத்துல உட்கார்ந்தாரு. அதாவது வீடு வாசல் எல்லாம் விரயமா போயிரனும். இந்த பாய்ண்டை ஆரோ கிட்னி உள்ள ஜோசியர் கேட்ச் பண்ணி சொன்னதால வீட்டை “தானம்” பண்ணிட்டாரு போல.(பேப்பர்ல -இதை ஃபிசிக்கலாவும் செய்து தொலைச்சா சூப்பரு )

தானம்னா என்ன ? தாரை வார்த்து கொடுத்துட்டு துண்டை உதறி தோள்ள போட்டுக்கிட்டு இறங்கிரனும்.அதான் தானம். அதை விட்டுட்டு…………….( வேணம்பா பெரிய இடத்து பொல்லாப்பு நமக்கெதுக்கு -சென்னை டு சித்தூர் எவ்ள நேரம் ஆயிரப்போவுது)

அப்பாறம் பாருங்க சோதரஸ்தானாதிபதியான புதன் விரயத்துல போய் பவர் ஃபுல்லா இருக்காரு. எம்.ஜி.ஆரையும் சகோதரர்னு தானே விளிச்சிட்டிருந்தார் ( பேச்சு -எழுத்துல) புதனுக்குரிய கடவுள் விஷ்ணு. ராம -சந்திரன்னா அது வைஷ்ணவ நாமம்தானே. அதான் பாவம் வாத்யாருகிட்டே செமர்த்தியா வாங்கி கட்டிக்கினாரு.
கம்யூனிகேஷன்ஸுக்கு அதிபதியான புதன் பலம் பெற்றார். இதனால தான் ஒரு பக்க வசன காலம் முதல் ஒரு வார்த்தை வசனம் வரை குப்பை கொட்டறாரு.அந்த புதன் விரயத்துல உள்ளதால தன் பக்கத்து வாதத்தை எடுத்து வைக்கிறப்ப மாத்திரம் மொக்கையாயிருது. (லேட்டஸ்ட் உதாரணம்: ஸ்பெக்ட்ரம் ஜி). அதே போல டாக்டர்கள், எழுத்தாளர்கள்,கவிஞர்கள் யாராலயும் உபயோகமில்லாம போக இதான் காரணம்.

இப்பம் அசலான மேட்டருக்கு வரேன். . கடகலக்னத்துக்கு வுமன் தான் எமன். (ஜெயலலிதா ) இவரு ஆரம்ப காலத்துல பால்கனி பாவை அது இதுன்னு வாய விட்டப்போ செம பல்பு . இப்பம்லாம் “அம்மையார்”னு தான் சொல்றாரு பாவம். செரி ஜாதகபலன் ஓவரு .இப்பம் தசாபலனை பார்த்துருவம்.

சுக்கிர தசை ராகு புக்தி 11/May/2014 => 11/May/2017 :
ஹய்யா சுக்ரன் பாதகாதிபதி -ராகு கேது 2/8 ல். தாத்தா க்ளோஸுன்னு துள்ளி குதிக்காதிங்க வாத்யாரே. பாதகாதிபதி 12 ல தானே கீறாரு. சுக்கிரன்னா கில்மா . அந்த மேட்டர்ல பிரச்சினை வரனும்.( ஹி ஹி 93வயசுக்கு இதெல்லாம் நடக்கிற் கா……..ரி..ய..மா?) வாகன மேட்டர்லயும் பிரச்சினை வரனும். இப்பல்லாம் போராட்டம்னுட்டு ரயிலையே கொளுத்திர்ரானுவ. தலீவர் வேற அந்த காலத்து பார்ட்டியா ரயிலை விடமாட்டேங்கிறாரு . அந்த வகையில எதுனா டென்ஷன் ஏற்படலாம். அடுத்து சுக் =களத்திரகாரகன். மனைவி நிலை கவலைக்கிடமாகலாம்.

இப்டி எத்தனையோ நடக்க வாய்ப்பிருக்கு . சுக் =பெண் , ஜெவும் பெண் தானே , அந்த மவராசியை செயிக்க வீடு வாசலை விட்டுட்டு லோ லோன்னு அலையப்போறாரில்லை .

4/11 க்குடைய சுக் 12ல் இருப்பதால் கட்சிக்காரவிக வெளியேறனும். ஒரு வேளை வெற்றி வாய்ப்பையே அளவுகோலா கொண்டு சீட் கொடுத்தாங்கன்னு வைங்க. பலரும் கட்சியை விட்டு வெளியேறலாம்ல? இப்படியும் தோஷங்கள் கழியலாம்.

நாம சொன்னாப்ல தேர்தல் அறிவிப்பு வர்ரதுக்கு மிந்தியே வீட்டை ஆஸ்பத்திரியா மாத்திட்டு வீட்டை விட்டு வெளியேறிட்டாருன்னு வைங்க தோஷம் போயே போச் ( சுக் -கிருக காரகன்) .

அடுத்து இந்த புக்தி நாதனான ராகுவை பார்ப்பம்.

பொதுவாக ராகு தசை/ராகு புக்தில்லாம் முதல் பாதி ஒரு விதம் ,மறுபாதி வேறு விதமாக இருக்கும் (பாசிட்டிவ் நெகட்டிவ்) இப்போதைக்கு முதல் பாதி முடிஞ்சுட்டதால அது பாசிட்டிவா நெகட்டிவான்னு நீங்களே அசெஸ் பண்ணிக்கலாம்.

அது பாசிட்டிவா இருந்திருந்தா இப்ப நடக்கிற மறுபாதி நெகட்டிவா இருக்கும்.ஒருவேளை அது -முதல்பாதி நெகட்டிவா இருந்திருந்தா இப்ப நடக்கிற மறுபாதி பாசிட்டிவா இருக்கும்.

பாவம் பார்லிமென்ட் எலீக்சன்ல பல்ப் ஃபேக்டரியே வாங்கி டர்ராகி -கிர்ரடிச்சு தானே இருந்தாரு .ஆகவே இந்த பாதி -இரண்டாம் பாதி பெட்டரா இருக்க அதிக வாய்ப்பிருக்கு .

தலைவரோட அந்த நாளைய பேச்சுக்கும் -இந்த நாளிலான பேச்சுக்கும் வித்யாசம் எவ்ள இருக்கு? பாவம் ரெம்பவே ரோலிங் ஆகுது.இது 2-8 ல் உள்ள ராகு கேதுவுக்கு நேச்சுரல் ரெமிடிங்கோ..

அப்டியே அப்பப்போ மெட் ராஸ் பாஷையில இருந்து ஒரு சில கொட்டேஷன்லா எடுத்துவிட்டா யூத்தும் அட் ராக்ட் ஆகும் -ராகுவுக்கு பரிகாரமாவும் இருக்கும்.

கோசாரம்:
முக நூல்ல நாம பூச்சாண்டி காட்டிக்கிட்டிருக்கிற சனி செவ் சேர்க்கை தலீவருக்கு செம ஃபேவர். 5/10+7/8 . இதுல

5+8 னு பார்த்தா மம்மி பேலன்ஸ் மிஸ் ஆகி ஸ்டாலின் மேட்டர்ல குண்டக்க மண்டக்க எதுனா செய்யலாம். அல்லது அழகிரி.

5+7னு பார்த்தா மகனோட செம கம்யூனிகேஷன் வரலாம். பூர்வபுண்ணியங்களின் காரணமாவும் – தலைவரோட மதியூகத்தாலயும் ஒரு வலுவான கூட்டணி அமையலாம்.செவ் = இளையவர்கள்.விஜய்காந்த் தலைவரை விடசின்னவர்தானே.மேலும் அன்னாரை கேப்டன் ங்கறாய்ங்கல்ல (செவ்காரகம்)

10+8னு பார்த்தா கை நிறைய வேலை கிடைக்கனும். இதை ஜெ தான் கொடுக்கனும். சோகம் என்னன்னா 5+8 னு பார்த்தா மரண துக்கம் . வாரிசுகளில் ஒருவர் நிலை கவலைக்கிடமாகலாம்.

சனி செவ் சேர்க்கை காலத்துலயே அதாவது பிப் 20 முதல் ஏப்ரல் 2 க்குள்ளயே ஒரு நல்ல திருப்புமுனை ஏற்பட வாய்ப்பிருக்கு . அதை வாயால கெடுத்துராம இருந்தா செரி ..

பெஸ்ட் ஆஃப் லக் தலை !

காசுபணம்துட்டுமணிமணி 19 (8 ஆவது கேட்டகிரி)

Bath

அண்ணே வணக்கம்ணே !
உலகத்துல உள்ள மன்சங்களை 9 கேட்டகிரியா பிரிச்சு -ஒவ்வொரு கேட்டகிரிக்கும் உண்டான லட்சணங்களை சொல்லி – ஃபைனான்ஸ் மேட்டர்ல இவிகளுக்கு ஆப்பு எப்படி வரும்-அதுக்கு பரிகாரம் என்னன்னு சொல்லிக்கிட்டு வர்ரம். இதுவரை ஏழு கேட்டகிரி ஃபினிஷ் பண்ணியிருக்கம்.இன்னைக்கு எட்டாவது கேட்டகிரி.

இவிகளை பார்த்ததுமே சொல்லிரலாம் அந்தளவுக்கு டீட்டெய்ல்ஸ் தரப்போறேன். கருப்பா பயங்கரமா அல்லது பயங்கர கருப்பா இருப்பாய்ங்க. வயசு சின்னதா இருந்தாலும் ஹேர் ஸ்டைல்,ட்ரஸ் அப் , பாடி லேங்குவேஜ்,பேச்சு ஸ்டைல் எல்லாமே இவிக வயசுக்கு எட்டு வயசு கூடுதலா இருக்கும்.தலையில வெள்ளை முடி இருக்கலாம். முகம் வாடி,கண்ணெல்லாம் உள் வாங்கி இருக்கலாம்.முகத்துல எண்ணெய் வடியலாம். .
கலை,அலங்காரம், வாசனை பொருட்களில் ஈடுபாடு இராது. வெற்று ஆடம்பரங்களில் இறங்க மாட்டார்கள். .இவிகள பொருத்தவரை பேக்கிங் முக்கியம் கிடையாது ரீஃபில் பேக்னாலும் ஓகே செகண்ட்ஸா இருந்தாலும் ஓகே. ஆனா ப்ராடக்ட் உழைக்கனும். கொஞ்சம் மந்தமாதான் இருப்பாய்ங்க. ஆனால் கடுமையா உழைப்பாங்க.எளிய உணவிலேயே திருப்தி அடைவாங்க.

ஃபைனான்ஸ் பொசிஷனை பார்த்தா எல்லாமே லேட் ,அல்லது வில்லங்கத்துல இருக்கும். தப்பிதவறி கை/பையில இருந்தாலும் சாதாரணமா வெளிய எடுக்க மாட்டாங்க.

பேச்சு ? ரெம்ப பட்டவர்த்தனமா ,யதார்த்தமா,குதர்க்கமா இருக்கலாம். நல்ல வேளையா குறைவா பேசுவாங்க. இவிகளே கடைசி சந்தானமா இருக்கலாம்.அல்லது இவருக்கு பிறகு ஆண் சந்தானம் இல்லாம இருக்கலாம். பெரிய குடும்பமா இருக்கும்.

தாய் தீர்காயுசா இருப்பாங்க. வீடு இடிஞ்சு விழ தயாரா இருக்கலாம்.அல்லது இன்னைய ட்ரென்டுக்கு பேய் படம் எடுக்க தோதானதா இருக்கும். அல்லது சேரி,தொழிற்பேட்டைய ஒட்டி அமைஞ்சிருக்கலாம். அங்கன எண்ணை செக்கு, எருமைகள் , ஸ்க்ராப் ,காயலான் கடைகள் கூட இருக்கலாம் .இவிக வீட்டுக்கும் 8 ங்கற நெம்பருக்கும் தொடர்பிருக்கும். உ.ம் டோர் நெம்பர் ,கிராஸ் நெம்பர்,பின் கோட், டேட் ஆஃப் பர்த் .இவிக குடும்பம் ஐரன்,ஸ்டீல்,ஆயில் ,ஃபேக்டரி ,விவசாயம்,வெட்டினரி துறைல இருக்கலாம். வாகனம் ? செகண்ட்ஸா இருக்கலாம்.அல்லது ரெம்ப பழைய மாடலை பல காலம் வச்சிருப்பாங்க. கல்வி? டெக்னிக்கல் லைனுக்கு மாறியிருப்பாங்க.

கண்ணாலமாகி கொளந்தை இல்லாம கோவில் கோவிலா ஏறி இறங்கி ஏழெட்டு வருசம் களிச்சு பெத்துக்குவாய்ங்க.உடனே பிறந்தா குழந்தைகளுக்கு கால்,நரம்பு,ஆசனம் தொடர்பான உடல் நல கோளாறுகள் இருக்கலாம்.எதுக்கும் ஒடனே ரெஸ்பான்ட் ஆகமாட்டாங்க. எதிராளி ரொய்ய ரொய்ய கேட்டாலும் எருமாட்டு மேல மழை பேஞ்ச மாதிரி இருப்பாங்க.

கொடுக்கல் வாங்கல்? வாங்கினதை திருப்ப மாட்டாங்க.கொடுத்ததை கேட்க மாட்டாங்க. கோர்ட்ல குடியிருக்கிற கேஸ்லாம் இந்த கேட்டகிரியா இருக்க சான்ஸ் இருக்கு. இதே போல தீர்க நோய்கள் பாதிக்கும்.( தொடர்ந்து ட்ரீட்மென்ட்) தலித் இன மக்கள், தொழிலாளர்களுடன் முட்டல் மோதல் வரும்.அல்லது இவர்களால் கடனுக்குள்ளாவார்கள்.

மனைவிக்கும்/கணவருக்கும் இவிகளுக்கும் இடையில வயசு வித்யாசம் அதிகமா இருக்கலாம். (கு.ப தோற்றமாவது அப்படி இருக்கும்) படிப்பு,அந்தஸ்தும் இவிகளை விட ஒரு மாத்து குறைவா இருக்கலாம்.

ஆயுசு மட்டும் யதேஷ்டம் (எல்லாமே ஸ்லோவாச்சே -பேலன்ஸ் ஆகனும்ல) .அப்பா மேட்டரும் இவிகள போலவே இருக்கலாம்.
அவர்வழியில வர்ர சொத்தெல்லாம் ஒன்னு Non functioning property யா இருக்கும் (அதான் பாஸ்! வாடகை வராத வீடு /குத்தகை பணம் வராத நிலம்) அல்லது ஏதேனும் துர்சம்பவம் நடந்ததா இருக்கும்.(கொலை தற்கொலை போல)

நீண்ட கால திட்டங்கள், விவசாயம், கிரானைட்,சுரங்கத்தொழில், எண்ணெய் செக்கு, எருமைவளர்ப்பு , இரும்பு, கருங்கல், கிரானைட், எண்ணெய் வித்துக்கள், துர்நாற்றம், தூசு கிளப்பும் தொழில்கள், கைகள், உடைகளைக் கறையாக்கும் தொழில்கள், மக்களை கசக்கிப் பிழியும் தொழில்கள் (கந்துவட்டி-கொத்தடிமை), வழக்கறிஞர், பழைய பொருட்கள், ஸ்கிராப் -போன்ற துறைகளில் இருப்பார்கள்.

இவிகளோட லாபம்ங்கறது எருமையை முன்னாலே பிடிச்சு பின்னுக்கே தள்ளிக்கிட்டு வந்து கொல்லையில கட்டின கதையா இருக்கும்.
டிஃபன் 12 மணி, லஞ்ச் 4 மணி ,டின்னர் ? விடிஞ்சுரும். கில்மா மேட்டர்ல கூட “வேலை”முடிஞ்சா செரின்னு வேலைக்காரிய கூட படுக்க போட்டுருவாங்க. சிலர் ஆனல் செக்ஸ்/அல்லது ஓரல் செக்ஸ்ல ஆர்வம் உடையவர்களா இருப்பாங்க.

இந்த கேரக்டரிஸ்டிக்ஸ் எல்லாம் இவிக பொருளாதாரத்தை எப்படி எல்லாம் பாதிக்கும்னு ரோசிச்சு வைங்க.நானும் அடுத்த பதிவுல விவரிக்கிறேன். ஓகேவா உடுங்க ஜூட்டு ..