காலியாகும் முக நூல் கூடாரம்?

அண்ணே வணக்கம்ணே !
இன்னைக்கு முக நூல் தெரியாத சனமே இல்லை. மோடியிலருந்து ஸ்டாலின் டாடி வரைக்கும், சந்திரபாபுவிலிருந்து அவர் மகன் லோகேஷ் வரைக்கும் முக நூல்ல இருக்காய்ங்க. இதுல எத்தனையோ கோல் மால். ஏதோ படத்துல செந்தில் துட்டு கொடுத்து “தில்லான மோகனாம்பாள் சிவாஜி ” மாதிரி இருக்குன்னு புகழசொல்வாரே அது போல சில்லறை வெட்டினா லைக்ஸ் அள்ளலாம். நிற்க.
அலெக்ஸா பத்தி கேள்விபட்டிருப்பிங்க. சைட் இன்ஃபர்மேஷன் கம்பெனி. எந்த ஒரு ஒரு சைட் பற்றியும் விவரங்களை தெரிஞ்சுக்க உதவும் தளம்.
இதுல அசால்ட்டா ஃபேஸ்புக் பத்தி தெரிஞ்சுக்க ட்ரை பண்ணேன்.பயங்கர அதிர்ச்சி . பவுன்ஸ் ரேட்: 20.60% அதிகமாகியிருக்கு.( ஒரே பக்கத்தோடு போடாங்கொய்யாலன்னு கழண்டுக்கறவுக)

ஒவ்வொரு பாவனையாளராலும் சராசரியாக தினசரி பார்க்கப்படும் பக்கங்கள் 14.33 இது 21% குறைந்திருக்கிறது
பாவனையாளர்களால் முக நூல் தளத்தில் தினசரி செலவழிக்கப்படும் நேரம் 13% குறைந்து வருகிறது. இது சதவீதத்துல இருக்கிறதால இத்துனூண்டா தெரியுது. முக நூலுக்கு கிடைக்க கூடிய ஹிட்ஸை வச்சு ரோசிச்சு பாருங்க. கோடிக்கணக்குல ஹிட்ஸ் ஃபணால் ஆகியிருக்கும்.

ஆனை படுத்தாலும் குதிரை மட்டம்னு இன்னம் நெம்பர் ஒன்னாத்தான் இருக்குங்கறது வேற மேட்டர்.ஆனால் எத்தனை நாளைக்குங்கறதுதான் கேள்வி.
இந்த பரபரப்பான பதிவை போட்டதுக்கு ஒரு காரணம் இருக்கு. முக்கிய அறிவிப்புகள் சிலத வெளியிட வேண்டியிருக்கு.

1.இனி நம் பதிவுகள் கன்னிமரா லைப்ரரி தளத்தில் தான் வெளிவரும். இன்று இங்கே வெளியாக வேண்டிய ஜோதிட மர்மங்கள் தொடரின் 8 ஆவது அத்யாயமே அங்கே தான் வெளியாகியிருக்கு.ஏன்னா இந்த சைட்டு ஹவுஸ்ஃபுல் ஆயிருச்சு. ஒரு ஃபோட்டோ போடனும்னா கூட இருக்கிறதை டெலிட் பண்ணிட்டுதான் போடனும்.மேலும் ஹிட்ஸ் கூடிக்கிட்டே போறதால பேண்ட் விட்த் எக்சீட் ஆகி திறக்காம போயிருது.

எச்சரிக்கை:
புதுவாழ்வு தந்த வலையுலகத்துக்கு காணிக்கையாகத்தான் இந்த சைட்டை உருவாக்கினோம்.
தளங்களின் தளம்னு அறிவிச்சோம். பிடிச்ச பிடிக்காத தளங்களை அறிமுகப்படுத்தவே இந்த தளம்னு சொன்னோம்.
ஆனால் துடிமன்னன்,வினோத்ஜீ மாதிரி புண்ணியாத்மாக்களை தவிர ஆரும் கண்டுக்கலை .
அதனாலதேன் இந்த முடிவு . தேவை சின்ன புரிதல். இன்னைக்கும் ஆருனா தளங்களை பற்றி எழுத முன் வந்தால் வெளியிட தயார்.

2.நம்ம ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டத்தின் முக்கிய நோக்கமான இந்திய நதிகளின் இணைப்பை வலியுறுத்தி நாடு தழுவிய மொபெட் யாத்திரை மேற்கொண்ட ஐ.ஏ.எஸ் சர்தார் அவர்களின் நட்பு கிடைச்சிருக்கு. அவரோடும் அவர் இயக்கத்தோடும் கை கோர்த்து இயங்க முடிவு செய்திருக்கேன்.

3.பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் இந்த வேளையில் மோடி -ராகுல் என்ற தீய சக்திகளை அடையாளம் காட்டும் நோக்கத்தோட இந்த முக நூல் பக்கத்தை ஆரம்பிச்சிருக்கேன். ஒரு லைக் போட்டு புண்ணியம் கட்டிக்கோங்க.

ஜோதிட மர்மங்கள்: 7

அண்ணே வணக்கம்ணே !
இன்னைக்கு ஜோதிட மர்மங்கள் வரிசையில அல்லாருக்கும் அன்ன தாதாவா இருந்து ஜீவனம் நடத்த தொழில் உத்யோகம் வியாபாரங்களில் வெற்றி தோல்விகளை நிர்ணயிக்கிற பத்தாமிடத்து பலனை எப்படில்லாம் மிஸ்யூஸ் பண்றோம். மேற்படி ஜீவனபாவம் ஜாதகத்துல பல்பு வாங்கியிருந்தாலும் அந்த பாதிப்புகளை எப்படி சமாளிக்கிறது இத்யாதி மர்மங்களை ப்ரேக் பண்ண போறோம். நிற்க.

2009 வாக்குல நம்ம சைட்டுக்கு 400+ ஹிட்ஸ் வந்தா ஒரே குஜிலி. ஆனா இன்னைக்கு பதிவு போட்டு பத்தாவது நாள் கூட 700+ வருது. பதிவு போட்ட ரெண்டு நாள் 1000 ஐ தாண்டுது. ஆரம்பத்துல புரியலைங்கற கம்ப்ளெயிண்ட் மஸ்தா வரும்.

இப்பல்லாம் அப்படி ஒன்னும் காணோம். ஒன்னு சனம் நம்ம ஒக்காபிலரிக்கு பழக்கப்பட்டு போயிருக்கனும்.இல்லின்னா தாளி இவன் திருந்த போறதில்லை. என்ன ம.. னாவுக்கு கமெண்ட் போடறதுன்னு விட்டிருக்கனும்.

இதை ஏன் இங்கே சொல்றேன்னா “பத்தில் ஒரு பாம்பாவது இருக்கவேண்டும் -ஒரு பாவியாவது இருக்கவேண்டும்”னு சொல்றாய்ங்களே அதுக்கான விளக்கத்தை கொடுக்கத்தேன்.

2000 முதல் 2009 வரை ஒழுங்கு மருவாதியா -இலக்கண தமிழ்ல சாஸ்திரோக்தமா-பவித்ரமா எழுதிக்கிட்டிருந்தம். ஆனால் கிடைச்ச ஹிட்ஸ் ஜஸ்ட் 2006 தேன்.

ஆனால் அங்கன ஆரோ ஒரு தம்பி சொல்லுச்சுன்னு இந்த ஸ்லாங்கை பிடிச்சு எழுத ஆரம்பிச்சம். இந்த 4வருசத்துல பத்து லட்சம் ஹிட்ஸை தாண்டியாச்சு.

பத்துல சுபகிரகம் இருந்தா நாம 2000 முதல் 2009 வரை என்ன செய்தோமோ அதைத்தான் செய்ய முடியும்.
இதுவே ஒரு பாவ கிரகமோ – ஒரு பாம்பு கிரகமோ இருந்தா எப்படி இருக்கும்?

பத்துல சுப கிரகம் உள்ளவுக அய்யோ பாவம் பார்ப்பாய்ங்க (ரஜினி ஐயோ பாவம்னு நினைச்சா 38 வருசம் தமிழ் நாட்ல வாழ்ந்த பிறவும் மாறாத அவரோட கன்னட உச்சரிப்பை கிழிக்க முடியுமா?)

பத்துல சுப கிரகம் உள்ளவுக ஒரு வேலையை ஒரே அட்டெம்ப்ட்ல பக்காவா – முழுசா செய்துருவாய்ங்க.

நாம போடற பதிவுகளை எல்லாம் பார்த்தா அப்படியா கீது. இல்லை. ஏதோ அந்த நேரத்துக்கு உங்கள்ள மஸ்தா பேரு நான் எழுதனும்னு நினைக்கிறிங்களோ அது ஸ்பார்க் ஆகும் அதை டச் பண்றதுக்குள்ளயே பதிவு முடிஞ்சுரும். அப்பத்தேன் மறுபடி மறுபடி பதிவெழுதற வெறி வரும். உங்களுக்கும் படிக்கற ஆர்வம் தொடரும்.

பத்துல சுப கிரகம் உள்ளவுக நெல்லவுகளா இருப்பாய்ங்க. நெல்லதையே செய்வாய்ங்க. எதையும் அல்லாரையும் நெல்லவுகளா நினைச்சு ப்ளான் பண்ணுவாய்ங்க.பல்பு வாங்குவாய்ங்க.

நாம அப்படியா நோ ..? நாட்ல உள்ள நத்தம், நாடோடி, புறம்போக்கு, அரை டிக்கெட்டு ,கால் டிக்கெட்டு ,பிக் பாக்கெட்டு ,அடுப்பூதி,அன்னக்காவடி,திண்ணத்தூங்கி எல்லாத்தையும் பார்த்திருக்கம். இதனாலத்தேன் நம்ம பதிவுகள் ஹிட் ஆகுது. உங்க ஹார்ட்டை டச் பண்ணுது.
இப்பம் புரியுதா? பத்துல ஏன் பாவியிருக்கனும்னு?

அடுத்து இந்த பாம்பு கிரகங்களை பார்ப்போம். இவை நிழல் கிரகங்கள் . நிழலுக்கும் நகலுக்கும் கொஞ்சம் போல வித்யாசம் இருக்கும்னு நினைக்கேன். ஆனால் நீங்க ஆருக்கு நிழலா இருக்கிங்கங்கறது முக்கியம். அதே போல எதை நகல் எடுக்கறிங்கங்கறதும் முக்கியம்.
அல்லா கிரகமும் க்ளாக் வைஸ் சஞ்சரிக்க இவிக ஆன்டி க்ளாக் வைஸ் சஞ்சரிக்கிறாய்ங்க. இதனால புதுமை -புரட்சி -வெரைட்டி – டிஃப்ரன்ஸ்லாம் யதேஷ்டமா வந்துரும்.

இதுமட்டுமில்லிங்ணா நீங்க ஒரு பெரமுடா முக்கோணம் மாதிரி இருப்பிங்க. உங்களுக்கு நுழைஞ்சவுக வெளிய போகவே மாட்டாய்ங்க.
நமக்குள்ள என்.டி.ஆர்,ஒய்.எஸ்.ஆர் ( ரஜினியை எவ்ள விரட்டினாலும் – இந்த ஃபோட்டோ ஷூட்ல ஏதோ ஒரு கோணத்துல வெளிப்பட்டுர்ராரு -அதுவும் சனம் ஐடென்டிஃபை பண்ணிர்ர அளவுக்கு )

பத்துல பாம்பு இருந்தா நீங்க வாலி மாதிரி -எதிரியோட பலத்துல பாதி உங்களுக்கு வந்துரும். இதுமட்டுமா? ராகு கேதுக்களுக்கு இரவில் பலம் அதிகம். இரவு -மனிதர்கள் தூக்கம்ங்கற மரணத்துல இருக்கிற நேரம்.

யாரோட வில் பவரும் – யாரோட வைப்ரேஷனும் வேலை செய்யாது – நீங்க மட்டும் வேலை செய்விங்க. எதிரிங்களுக்கும் -போட்டியாளர்களுக்கு கிழிஞ்சுரும்.

போட்டியாளர்களே இல்லாத சமயம் ட்ராக்ல நீங்க ஓடிக்கிட்டிருப்பிங்க. மேலும் மற்ற கிரகங்கள் தர்ரது முறையான முறை. ராகு கேதுக்கள் தர்ரது முறையற்ற முறை.

எவ்ளோ பெரிய ராணுவம் கூட கொரில்லா தாக்குதல்ல பல்பு வாங்கிருது. புலிகள் ராணுவமா மாறின பிறகுதான் பின்னடைவே ஏற்பட்டது.
ஓகே ஓகே ..பத்துல பாம்பு இருந்தா என்ன லாபம்? பத்துல பாவி இருந்தா என்ன லாபம்னு பார்த்தோம். அடுத்த பதிவுல பத்துல சுப கிரகம் உள்ளவுக – பத்தாமிடத்துக்குண்டான ஆதிபத்யம் நைசர்கிக சுபர்களுக்கு கிடைச்சவுக அந்த வேக்குவத்தை எப்படி குறைச்சுக்கறதுங்கற விஷயங்களை பார்ப்போம்.
கடேசியா பத்தாம் பாவம் பலமாவே இருந்தாலும் அந்த பலத்தை நம்மில் பலரும் எப்படில்லாம் மிஸ்யூஸ் பண்ணி எப்டில்லாம் நாசமா போறோம்னு பார்க்கலாம்.
ஓகேவா உடுங்க ஜூட்

ஜோதிட மர்மங்கள் : 6

கடந்த சில பதிவுகளில் லக்னம் உள்ளிட்ட 12 பாவங்களின் பலத்தை எப்படியெல்லாம் விரயமாக்குகிறோம் என்று பார்த்து வருகிறோம். நேற்று ஐ மீன் கடந்த பதிவுல ஆயுள்பாவத்தை பத்தி பார்த்தோம். இன்னைக்கு பித்ரு பாக்ய ஸ்தானம்.

இது அப்பா, அப்பாவழி சொந்தக்காரவுக, ,முதலீடு,சேமிப்பு,தூர தேச தொடர்புகள்,தீர்த்தயாத்திரை,
கோவில்,குளம் இத்யாதிகளை காட்டுது.பெண்கள் ஜாதகத்துல திருமணத்துக்கு பிறகு கணவரையும் காட்டும்.

கெவுர்மென்டுல அரசு ஊழியர்கள் பதவியில இருக்கும்போது செத்துப்போனா அப்பாவேலைய பிள்ளைக்கு கொடுக்க ஒரு ப்ரொவிஷன் வச்சிருக்காய்ங்க.
நம்ம ஜாதகத்துல 9 ஆம் பாவம் சுப பலமா இருந்து அந்த வேலையில சேர்ந்தா பிரச்சினை இல்லை. ஒரு வேளை நம்ம ஜாதகத்துல 9 ஆம் பாவம் பல்பு வாங்கியிருந்தா?

நண்பரோட அப்பா பயங்கர சிக்கன பேர்வழி. கெவுர்மென்ட்டு எம்ப்ளாயி.ஆனாலும் பீடி தான் புடிப்பாரு. அதுவும் ஒரு தாட்டிக்கு எட்டணாவுக்கு மேல வாங்க மாட்டாரு. ஆட்டோ வச்சு ஓட்டினாரு. கூல் ட்ரிங்க்ஸ் ஏஜென்சி,ப்ரெட் ஏஜென்சி என்னென்னமோ பண்ணாரு.
நாளு கிழமையில வாழையில கொஞ்சம் ரேட் அதிகம் தான்.அதுக்கு தலீவரு என்ன பண்ணாரு தெரீமா? ஸ்டீல்ல வாழை இலை ஷேப்ல இருக்கிற தட்டுங்க வாங்கியாந்துட்டாரு.

இப்படில்லாம் மிச்சம் பண்ணி சேர்த்து வச்ச பணம் என்ன ஆச்சு? அந்த காலத்து சிரிப்பழகியோட புருசன் ஒரு சிட் ஃபண்ட் வச்சிருந்தாரு அதுல தன் சேமிப்பையெல்லாம் போட்டு வச்சாரு .பட்டை நாமம்.

ஒரு காலத்துல சிக்கன நடவடிக்கையா அவர் என்னெல்லாம் செய்தாரோ அதை கட்டாயத்துக்கு செய்ய வேண்டியதாயிருச்சு.
ஆக அவரோட ஜாதகத்துல 9 ஆம் பாவம் பல்புனு அருத்தம் ஆகுதா? சேமிப்பு கைகொடுக்காமயே ஒரு வழியா போய் சேர்ந்தாரு. வாழையடி வாழை மாதிரி அவரோட மகனுக்கும் இதே இழவு தான்.

உள்ளூர்ல சரியா படிக்க மாட்டேங்கிறான்னு வெளியூர்ல வச்சு படிக்க வச்சாய்ங்க. அப்பயும் ஒன்னும் பேரலை (வெளியூர் = 9 ஆம் பாவம்) அப்பா செத்துப்போன பிறவு அவரோட வேலை இவனுக்கு வந்தது. (இதை ஓவர் ட்ராஃப்ட் பலன்னு சொல்றது வழக்கம்)

அதுக்கு முந்தியாச்சும் ஒரு மாதிரியா போயிட்டிருந்த லைஃப் வேலை வந்தபிறவு செமர்த்தியா நாறிப்போச்சு. இன்னொருத்தன் பொஞ்சாதியோட தொடர்பு ஏற்பட்டு அது வில்லங்கமாகி ஊரை விட்டே போயிட்டான். இந்த இடைவெளியில லாலா பழக்கம் வந்து ஒட்டிக்கிச்சு – வெளியூர்ல போய் வாழ்ந்தப்போ அங்கன கண்ணாலம் ஃபிக்ஸ் ஆச்சு. கண்ணாலம் ஆச்சு.

அதுக்குள்ள ஆல்க்கஹாலிக்காவே மாறியிருந்தான் போல. பொஞ்சாதி என்னங்க கியாஸ் லீக் ஆறாப்ல இருக்கு கேஸ் கம்பெனிக்கு ஃபோன் பண்ணுங்கன்னு சொல்ல , நம்மாளு ஒரு வாரம் பீர்லயே குளிச்சு குவார்ட்டர்ல வாய் கொப்பளிச்சு வந்து சேர்ந்தான் .லைஃப் கொலாப்ஸ் ஆயிருச்சு.
ஆக 9 ஆமிடம் சுப பலமா இருந்தாத்தான் சேமிப்பு கை கொடுக்கும், அப்பனோட உழைப்பு ,வேலை ஜாதகனுக்கு பயன் படும். இல்லின்னா அதுவே அவனை -அவன் வாழ்க்கைய அழிச்சுரும்.

அடுத்து இந்த பாவம் காட்டறது தூர தேச தொடர்புகளை. நம்மை உலகத்தோட பல நாடுகள்ளருந்து க்ளையன்ட்ஸ் கன்சல்ட் பண்றாய்ங்க.காசு வருது .பிழைப்பு நடக்குது.ஆனால் எல்லாருக்கும் இப்படியே நடக்குதா? ஊஹூம்.

அட நானே கெட்ட நேரத்துல பல ஊர்களுக்கு போய் சீரழிஞ்சிருக்கன். தலை தப்பினது தம்பிரான் புண்ணியம்னு ரிட்டர்ன் டு தி பெவிலியன்.
இப்பல்லாம் ஆஃப்ரிக்கா, அமெரிக்கான்னு கண்டம் விட்டு கண்டம்லாம் வந்தா கண்டம் பண்ணிர்ராய்ங்களாம்.

சமீபத்துல ரத்னாகட் நெரிசல் சம்பவத்துல டிக்கெட் போட்டவுக நிலை என்ன? இந்த 9 ஆம்பாவம் தான் தீர்த்தயாத்திரை,கோவில்,குளம்,கும்பாபிஷேகம்,ஹோமம்,யாகம் இத்யாதிகளை காட்டுது. இந்த 9 ஆம் பாவம் பல்பு வாங்கியிருந்தா ரத்னாகட் சம்பவங்கள் நடக்கலாம்.

“அடுத்தாத்து அம்புஜத்தை பார்த்தேளா”னுட்டு ஆரையோ பார்த்து நாமும் கோவில் கமிட்டியில இடம் பிடிக்கிறது, வீட்ல ஹோமம் பண்றதுன்னு இறங்கப்படாது.

ஒரு வேளை உங்க ஜாதகத்துல 9 ஆம் பாவம் பல்பு வாங்கியிருந்து இதையெல்லாம் வீம்புக்கு செய்திங்கன்னு வைங்க. அசலுக்கே மோசமாயிரும்.

அப்பா டிக்கெட் போடலாம். அல்லது அப்பாவோட விரோதம் வந்துரலாம். தொடை எலும்பு முறிஞ்சு போகலாம். சர்க்கரை வந்து தொடை வரைக்கும் எடுத்துர வேண்டி வரலாம். சொத்து மேல வில்லங்கம் வரலாம்.அல்லது ஆக்கிரமிக்கப்படலாம். நீங்க பணம் போட்ட சிட் ஃபண்ட் திவாலாகலாம். தீர்த்த யாத்திரை போய் அது மீளா யாத்திரையா மாறலாம்.

சமீபத்துல முக நூல்ல ஒரு ஸ்டேட்டஸ் போட்டேன். “ஒரு கிரகமோ -பாவமோ பலன் தர ஆரம்பிச்சுட்டாதான் வம்பு. அந்த பலன் நமக்கு கிடைக்க கிடைக்க அதோட வாக்குவம் குறைஞ்சுக்கிட்டே வரும். ஒரு கட்டத்துல அதனோட பலம் தீர்ந்து போனாலும் பலன் கிடைக்கும். கொஞ்ச நாளைக்கு ஆனால் அது ஓவர் ட்ராஃப்ட் மாதிரி. சீக்கிரத்துலயே அதை திருப்பி கட்ட வேண்டி வரும்.

உ.ம் நமக்கு ஜோதிடம்,லோக்கல் பேப்பர்,வெப் சைட்,புத்தக பிரசுரம்னு காசு மேல காசு வந்தது.ஆனால் படக்குன்னு ஸ்கின் ப்ராப்ளம் மாட்டிக்கிச்சு.
ஆகையினால நீங்க இந்த அத்யாயத்துல தெரிஞ்சுக்க வேண்டிய மர்மம் என்னன்னா அப்பாவை சார்ந்து இருக்காதிங்க. முடிஞ்சா அவருக்கு உங்களால முடிஞ்சதை செய்ங்க (ஃபிசிக்கலாவோ -ஃபைனான்சியலாவோ)

அப்பா வழி சொந்தக்காரவுக மேட்டர்லயும் இதே ஃபார்முலா ஃபாலோ பண்ணுங்க. முதலீடு,சேமிப்பு மேட்டர்ல லாபம்,வட்டின்னு மனசை அலைய விடாதிங்க. செக்யூரிட்டி முக்கியம். அதுவும் ப்ராக்டிக்கலா பார்த்தா ஒலகமே ஒரு கிராமமாயிருச்சு (குளோபல் வில்லேஜ் ) .இதுல எங்க அடிப்பட்டா எங்க நெறி கட்டும்னு சொல்லவே முடியாது.

அடுத்து இந்த கோவில் ,குளம் மேட்டர். இதெல்லாம் பேபி க்ளாஸ் மாதிரி .கொஞ்ச நாள் போனா பரவால்லை. சாகிற வரை போறிங்கன்னா நீங்க வளரவே இல்லைன்னு அருத்தம். அதுவும் இப்பம் எல்லாமே கமர்ஷியலைஸ் ஆயிருச்சு. கொஞ்ச நஞ்சம் உங்க மனசுல இருக்கிற பக்தி கூடஃபணால் ஆயிரும். அதுவும் இந்த ஹோமம்,யோகம்லாம் பெரிய உட்டாலக்கடி .

நெஞ்சம் ஆலயம் – நினைவே தேவதை . ஈஸ்வரோ மனுஷ்ய ரூப்பேணா. மானவ சேவா -மாதவ சேவா ,ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் – சமாஜமே தேவாலயம் பேத ப்ரஜலே தேவுள்ளு ( சமுதாயமே கோவில் -ஏழைமக்களே தெய்வங்கள்)

இதை மனசுல பதிய வைங்க. இதுக்கு மாறா செயல்பட்டா பல்பு வாங்கறது கியாரண்டி.ஓகேவா உடுங்க ஜூட்டு.

மோடியின் எதிர்காலம் :பர பர கணிப்புகள்

அண்ணே வணக்கம்ணே !
நாட் நாட்லயே நாம மோடி ஜாதகத்தை நோண்டி நுங்கெடுத்துட்டம். என்னடான்னா அப்போ தெலுங்கானா அஜிடேஷன் காரணமா வரலாறு காணாத மின் வெட்டு. எனவே குரல் பதிவா போட்டிருந்தம்.

கிளி ஜோசிய காரவுக மாதிரி மோடியோட பேர் ராசிய வச்சு சனம் ஆகா ஓகோன்னு புலம்பியிருக்காய்ங்க. கொய்யால ..ஒட்டு மொத்த ஜாதகத்தை வச்சு சொன்னாலே ஒன்னு ரெண்டு தவறிப்போகுது. இதுல பெயர் ராசியாம்.

இதை பார்த்ததும் கடுப்பாயிட்டு நம்ம குரல் பதிவை கேட்டோம். அப்பம் நண்பர் ஒருவர் ஆன்லைன்ல பீராய்ஞ்சு கொடுத்த பர்த் டீட்டெய்ல்ஸை வச்சு ஜாதகம் கணிச்சு சொல்லியிருக்கம். ( 17/10/1950 ,காலை 10.10)

இதன்படி மோடி ஜாதக விவரம்:
விருச்சிக லக்னம்,தனுசு ராசி. லக்னாதிபதி லக்னத்துலயே ஆட்சி. பாக்யாதிபதி சந்திரன் 2 ல் ,2/5 க்கு அதிபதியான குரு 4 ல் , ராகு 5 ல் , 8/11,7/12,3/4 அதிபதிகள் கேதுவுடன் சேர்ந்து 11 ஆமிடத்துல இருக்காய்ங்க. இதுகளுக்குண்டான பலனை சுருக்கமா பார்ப்போம்.

விருச்சிகலக்னம்:
ராசிகளுக்குண்டான சிம்பலை பெரியவுக ஏனோ தானோன்னு ஃபிக்ஸ் பண்ணல. அதுக்குள்ள ஆயிரம் அருத்தம் இருக்கு. விருச்சிகம்னா தேளுன்னு அருத்தம். தேள் இருட்ல இருக்கனும்.சனங்க கண்ல படப்படாது. பட்டா காலி.( ஐ மீன் பப்ளிக் லைஃப்ல வரப்படாது – ராகுல் காந்தி ராசியோ லக்னமோ கூட விருச்சிகம் தான்) ஏன்னா இவிக பேச்சு தேள் கொட்டறாப்ல வந்துரும்.

இதுல போனசா மோடியோட ராசி தனுசு. இவிகளை பத்தி தமாசா ஒன்னு சொல்லுவன். ஒரு பஞ்சாயத்து பத்து நாள் பேசி முடிவுக்கு வந்து டீ சாப்டுட்டு கிளம்ப வேண்டியதுதாங்கற சிச்சுவேஷன்ல ஒரு தனுசு ராசி வாய வச்சா மொதலுக்கு வந்துரும். அந்தளவுக்கு வெகண்டையா பேசிப்புடுவாய்ங்க.
குஜாராத் கலவரங்களை பத்தி பேசும் போது செத்துப்போனவுகளை சாரி கொல்லப்பட்டவுகளை நாய் குட்டின்னு சொல்லிட்டு வாங்கி கட்டிக்கிட்டது ஞா இருக்கலாம்.

லக்னாதிபதி லக்னத்துலயே ஆட்சி. இது பொதுவிதிப்படி நல்லதுதான்.ஆனால் ஆட்சியானது ஆரு செவ். இந்த கேட்டகிரியில உள்ளவுகளை போலீஸுக்கோ ,மிலிட்டரிக்கோ அனுப்பிட்டா பெருசா பிரச்சினை வராது .சிவிலியனா இருந்தா மட்டும் நாஸ்திதான். ஒன்னு அவிகளுக்கு கொட்டும்.இல்லின்னா மத்தவுகளுக்கு கொட்டும்.ரத்தத்தை சொன்னேங்க.

இவரு 7 ஐ பார்க்கிறதால தேன் பொஞ்சாதி மேட்டர் காலி. நாலை பார்க்கிறதால கட்சிக்குள்ளயே பல்பு.எட்டை பார்க்கிறதால ? எதிரிகள் எல்லாம் ஒன்னு சேர்ந்துருவாய்ங்க. பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வந்த பிறவு பா.ஜ.க தவிர்த்த இதர கட்சிகளை ஒட்ட வைக்கப்போற ஃபெவிக்காலே மோடிதானுங்கோ.

பாக்யாதிபதி சந்திரன் 2 ல் ,இதனாலதே ஜஸ்ட் பீலா விட்டே பி.எம் ஆயிரலாம்னு கனவு காணுறாரு. சந்திரனோட எஃபெக்ட் எல்லாம் ரெண்டேகால் நாள் தேன். தேர்தல் இப்பல்லாம் ஒரு நாள்ள எங்கே நடக்குது. எல்லா ஃபேஸும் முடியவே மாசமாயிருது. அதனால இதுவும் பெருசா கை கொடுக்காது.
2/5 க்கு அதிபதியான குரு 4 ல் வக்ரம்.இவரு சாதாரணமா நின்னிருந்தா வாக்கு,புத்திய வச்சு கட்சிக்குள்ள-கூட்டணிக்குள்ள தனக்கு எதிர்ப்பே இல்லாம செய்துக்கிட்டிருக்கலாம்.ஆனால் குரு வக்ரமாச்சே. இதனாலதேன் நித்தீஷ் டாட்டா சொல்லிட்டாரு. மேலும் குரு இதயத்துக்கு காரகன் .எனவே என்.டி.ஆர் கணக்கா ஒரு பை பாஸ் கூட நடக்கலாமுங்கோ..புதன் வக்ரம்ங்கறதால இதயத்தின் இணைப்புகளில் பிரச்சினை வரலாம்.

ராகு 5 ல் நின்னதால புத்தி குழப்பம் ,கற்பனை உலகில் சஞ்சரிப்பது,மோடி மஸ்தான் வேலை காட்டி ஜாக்பாட் அடிக்கலாம்னு நினைக்கிறதுதான் நடக்கும். ஜாக்பாட் கிடைக்குமான்னா .. அவமானம்-அவப்பேர் தான் மிஞ்சும்.

அடுத்து 8/11,7/12,3/4 அதிபதிகள் கேதுவுடன் சேர்ந்து 11 ஆமிடத்துல இருக்காங்க. எட்டு மரணத்தை காட்டும்.இவரு 6லயோ 12லயோ இருந்தா சேஃப். ஆனால் இவரு 3 வேளை ஹார்லிக்ஸ் சாப்டாப்ல 11 ஆமிடத்துல வலிமையா உட்கார்ந்திருக்காரு. புதன் தோல்,கீல்,அண்டம் சம்பந்தப்பட்ட பிரச்சினைய கொடுக்கலாம். புத்தி குழப்பத்தை கொடுக்கலாம்.இவ்ள எதுக்கு சுரப்பிகளின் செயல்பாடே கூட மாறுபட்டு மேஜர் பிரச்சினைகள் கூட வரலாம்.
ஒரே கிரகத்துக்கு ரெண்டு ராசி (பாவ)களுக்குண்டான ஆதிபத்யம் கிடைச்சு அவர் ஒரு ராசியில ஆட்சி பெற்றால் அவர் ஆட்சி பெற்ற வீட்டின் பலனை மட்டும் தருவாருன்னு ஒரு விதி இருக்கு. (அப்போ மேற்படி நோய் பிரச்சினை எல்லாம் வராது).

ஆனால் இங்கே புதன் தனிய இல்லை .கூட கேது இருக்காரு. கேது ஆன்மீக வாழ்வுக்கு துணை செய்வாரே தவிர லௌகீக,அரசியல் வாழ்க்கைக்கெல்லாம் ஆப்புதான் அடிப்பாரு.

7+கேது காரணமா பொஞ்சாதி மேட்டர் டப்ஸு. 3/4+கேது சேர்க்கை காரணமாத்தான் தலீவரு அசட்டு தைரியத்தோட வலம் வராரு. கட்சிக்குள்ளயே பெரிய ஆப்பா ரெடி பண்ணிட்டிருக்காய்ங்கன்னு நினைக்கிறேன்.

ஆலமரத்தடி பஞ்சாயாத்துல மோடிக்கு எதிரா தீர்ப்பு வந்தாலும் மோடி கதை கந்தல்தான். கட்சிக்காரவுகளே அவரை வீட்டுக்கு அனுப்பிருவாய்ங்க.
ஏன்னா ஜீவனாதிபதி சூரியன் விரயத்துல கடக்காரு. இதனாலதேன் மோடி தலைக்கு மேல கத்தி தொங்கிட்டே இருக்கு.அவரை தூங்க விடாம பண்ணிட்டிருக்கு. சூரியன் சமத்துவத்தை -அபேத பாவத்தை தரக்கூடியவர்.அவரு விரயம் பெற்று நீசத்துல இருக்கிறதாலதான் மோடி ஒன் சைட் பாலிட்டிக்ஸ் செய்துட்டு வராரு. (இப்பம் கொஞ்சம் போல சைடு வாங்கினாலும் டார்கெட் மட்டும் அதுதான்)

தசாபலன்:
இவர் 2001 ,அக்டோபர்ல தன் இன்னிங்சை துவக்கினப்போ ராகு தசையில சூரிய புக்தி நடந்திருக்கு. (03/May/2002 => 27/Mar/2003) இதுல புக்தி நாதனாகிய சூரியனை தசா நாதன் ராகு டாமினேட் பண்ணதால -அவரு அஞ்சுல நின்னதால “ஒரு பெரிய அவமானம்” நடக்கவே இவருக்கு மேற்படி நாற்காலி கிடைச்சதுங்கோ. இவருக்கு சம சப்தகத்துல கேது 11ல நின்னதால மோடிஜிக்கு ஞானம் கிடைச்சிருக்கனும்.(எத்தனை மி.கி கிடைச்சதுன்னு அவருதான் சொல்லனும்-கிடைச்சதையும் அவரு துடைச்சு போட்டுட்டாருன்னு அவரோட பிற்கால செயல்பாடுகள் காட்டுது)

அடுத்து என்ன.. இவருக்கு இப்போ என்ன தசை ,புக்தி நடக்குது.இவரோட எதிர்காலம் என்ன? இதானே உங்க கேள்வி? உங்க கேள்விகளுக்கான பதிலை இங்கே அழுத்தி இந்த முக நூல் பக்கத்துல படிச்சுருங்க. பிடிச்சிருந்தா ஒரு முக நூல் பக்கத்துக்கு ஒரு லைக் போடுங்க (பிரச்சினை வராதுன்னா) இன்னைக்கு சாயந்தரத்துக்குள்ள 100 லைக் எதிர்பார்க்கிறேன்.

எச்சரிக்கை:
விக்கி பீடியாவுல மோடியோட பர்த் டீட்டெய்ல்ஸ் 17/9/1950ன்னு தந்திருக்காய்ங்க.இன்னொரு ஜோதிட வலைதளம் இந்த தேதிய வச்சு பர்த் டைம் காலை 11னு வச்சு ஜாதகம் கணிச்சிருக்கு. பார்ப்போம்.காசா பணமா இந்த பர்த் டீட்டெய்ல்ஸையும் பேஸ் பண்ணி இன்னொரு பதிவு போடறேன். எனக்கென்னமோ நண்பர் கொடுத்த பர்த் டீட்டெய்ல்ஸ் தான் கரெக்டோ என்னவோன்னு தோனுது,ஏன்னா பலன்லாம் பச்சக்குன்னு பொருந்துது. லெட் அஸ் வெய்ட் அண்ட் சீ

ஜோதிட மர்மங்கள்:5

அண்ணே வணக்கம்ணே !
லக்னாத் எட்டாவது பாவம் தான் மரணத்தை காட்ட கூடிய பாவம் . சனி தான் ஆயுள் காரகன். எட்டாமிடம் ரெம்ப டிஃப்ரன்ட். மத்த பாவங்களுக்கு வேணம்னா சுபர்களால் நிறைந்து -சுபர்களால் பார்க்கப்பட்டுன்னு அள்ளி விடலாம்.இது எட்டாம் பாவ விஷயத்துல வேலைக்காகாது.

இந்த பாவத்துல சுபர்கள் இருந்தா -பார்க்கப்பட்டால் அனாயாச மரணம் கூட ஏற்படலாம். (ஆயாசம் =களைப்பு,அனாயாசம் = களைப்பே இல்லாத)

இந்த விதி 6 ஆ ம் பாவத்துக்கும் பொருந்தும். இங்கே சுபர்கள் நின்றால் கடன் கூடிக்கிட்டே போகும்,நோய் வளர்ந்துக்கிட்டே போகும்,விரோதம் கூடிக்கிட்டே போகும்.

அப்போ எட்டாம் பாவத்துல பாவர் இருந்தா பரவால்லியான்னு கேப்பிக.கம்பேரிட்டிவ்லி பரவால்லை.சுபர்கள் இருந்து உடனடி லாட்டரி மாதிரி டிக்கெட் போடறதை விட – நாண்டு பேண்டுக்கிட்டு சாகறது பெட்டர் தானே.

அதுக்குத்தேன் ஒரு ஜாதகத்துல 6,8,12 ஆம் பாவங்கள் காலியா இருக்கனும்னு சொல்றது. அப்படி காலியாவே இருந்தாலும் மேற்படி பாவங்களின் அதிபதிகள் வேலை கொடுத்துருவாய்ங்களே.அதுக்கு என்ன ஆல்ட்டர்னேட்டிவ்னா…..

மேற்படி 6-8-12 பாவாதிபதிகள் ஆறுக்குடையவர் எட்டில்,எட்டுக்குடையவர் 12 ல், 12 க்குடையவர் ஆறில்னு மாறி மாறி அமையனும்.பரிவர்த்தனம் கூடாதுங்கோ (அவர் வீட்ல இவர் இவர் வீட்ல அவர்) .

எது எப்படியோ எட்டாமிடம் பல்பு வாங்கிருச்சு. மரணம் தயா நிதி மாறனை சிபிஐ மாதிரி துரத்துதுன்னு வைங்க. என்ன பண்ணலாம்?
கடமைகளை முடிச்சிட்டிருந்தா போய் சேரலாம்.உத்தமம். கொய்யால ஒரே ஒரு ஆறு மாசம். நம்ம மண்டையில உள்ளதையெல்லாம் தமிழ்,தெலுங்கு,இந்தி ,ஆங்கிலத்துல கொட்டி 108 புஸ்தவங்க/சிடி பண்ணிட்டா போய் சேர நாம ரெடி.

இன்னைக்குள்ள ஜகன், ஸ்டாலின்,மோடி ,ராகுலை விட மோசமானவந்தேன் எதிர்காலத்துல வருவாய்ங்க. இன்னைய விட நிறைய எழுத்துப்பிழைகளோடத்தேன் ஸ்டேட்டஸ் போடப்போறாய்ங்க.

எவ்ள காலம் வாழ்ந்தாலும் செத்துத்தான் ஆகனும். அது ஏதோ அரைகுறையா போகாம கச்சிதமா காரியத்தை முடிச்சுட்டு ரிசர்வ்ட் கம்பார்ட்மென்ட்ல ஏறிப்போறாப்ல நடந்தா சந்தோசம்.

நிற்க.கடமைகள் முடியலை. சின்ன வயசு . வாழ்ந்தே ஆகனும் என்னதான் பரிகாரம்? இதைத்தான் இந்த பதிவுல பார்க்கப்போறோம்.
எட்டாமிடம் என்பது வெறும் மரணத்தை மட்டும் காட்டறதில்லை.வெல்ல முடியாத‌,உயிருக்கு ஆப‌த்து விளைவிக்க‌கூடிய‌சத்ரு, தீராத‌ரோகம், தீர்க்கமுடியாத‌ ருணம்(கடன்),சிறைப் ப‌டுத‌ல், ம‌ஞ்ச‌ள் க‌டிதாசு கொடுத்த‌ல்,அடிமையாத‌ல்,மேஜ‌ர் விப‌த்து, மேஜர் ஆப்ப‌ரேஷன்,மர்மஸ்தானம் (இன உறுப்பு) ,கடுமையான உடல் உழைப்பு ஆகியவற்றையும் காட்டும் .

எட்டாமிடம் கெட்டால் …சாரி பலம் பெற்றால் தீர்க்க முடியாத கடன் ஏற்படும் .மஞ்ச கடிதாசு கொடுத்துட்டு கழண்டுக்கிட்டா நீங்க சோசியலா செத்துப்போறிங்க.அதனால ஃபிசிக்கலா இன்னம் கொஞ்ச காலம் வாழலாம்.

அந்த கடனை தீர்த்தே ஆகனும்னு யோசிச்சா? பி.பி,அல்சர்,செஸ்ட் பெய்ன்,ஹார்ட் அட்டாக் இத்யாதின்னு டெவலப் ஆகி டிக்கெட் போட்டுருவிங்க. எது பெட்டர்? டிசைட் யுவர் செல்ஃப்.

எட்டாமிடம் பலம் பெற்றால் உயிருக்கு ஆப‌த்து விளைவிக்க‌கூடிய‌சத்ருக்கள் உருவாவார்கள். இது ஜோதிட கோணம்.

ப்ராக்டிக்கலா இந்த நிலை ஏற்பட என்ன காரணம்? நீங்க இன்னொரு உயிருக்கு ஆபத்து விளைவிச்சிருக்கலாம் . அல்லது இன்னொரு உயிர் உயிரா மதிக்கிற மேட்டர் மிதிச்சிருக்கலாம்.அல்லது நீங்க பறிச்சிருக்கலாம். ஆருக்கோ சொந்தமான இடத்தை ( நாட் ஒன்லி லேண்ட் பட் ஆல்ஸோ பொசிஷன்) நீங்க ஆக்கிரமிச்சிருக்கலாம். நீங்க போய் சேர்ந்தா அந்த இடம் அவிகளுக்குத்தாங்கற நிலை இருக்கலாம்.

இப்படி ஆயிரத்தெட்டு காரணங்கள் இருக்கு. எனவே அஹிம்சா மூர்த்தியா மாறிருங்க.வள்ளலார் பக்தரா மாறுங்க. ( நான் வெஜ்க்கு தடா) .மேற்படி சில்மிஷங்களை செய்யாதிங்க. எதிரிகளுக்கு வெற்றியை பரிசா கொடுங்க. மெயின் ஸ்ட் ரீம்ல இருந்து கழண்டுக்கங்க.

அடுத்து எட்டாமிடம் சிறைப் ப‌டுத‌லையும் காட்டும். வீட்டுக்குள்ள/உங்க அறைக்குள்ள சிறைப்படுங்க (கு.ப தினசரி 1 மணி நேரம் -வாரத்துல ஒரு நாள்)

அடுத்து வர்ரது அடிமையாத‌ல். ஓப்பனா பார்த்தா நாம எல்லாருமே அடிமைகள் தான். எம்.பி,எம்.எல்.ஏ உட்பட ,அட முதல்வர்கள்,பிரதமர் உட்பட அடிமைகள் தான்.
ஆனால் இந்த உண்மையை நாம உணர்ரதில்லை.

நான் சுதந்திரமானவன்னு பீத்திக்கிறோம். யதார்த்தமா ரோசிச்சு நீங்க எந்தெந்த வகையில யாருக்கெல்லாம் அடிமையா இருக்கிங்கன்னு ஒரு பட்டியல் தயாரிச்சு டேபிள் கண்ணாடி கீழ வச்சுக்கங்க. மரணம் தள்ளிப்போகும்.

அடுத்தது மேஜ‌ர் விப‌த்து அல்லது மேஜர் ஆப்பரேஷன். விபத்து நிச்சயம்.ரத்த சேதம் நிச்சயம்னு உறுதியான பிறவு என்னைக்கோ -எங்கேயோ -எப்படி எப்படியோ நடக்கப்போற ரத்த சேதம் நம்ம கண் முன்னாடியே நடக்கட்டும்னு துணிஞ்சுருங்க. ரெகுலரா 6 மாசத்துக்கொரு தரம் ரத்த தானம் செய்ங்க.

அடுத்து எட்டாவது பாவம் மர்மஸ்தானத்தையும் (இன உறுப்பு) குறிக்கிறது. மேல் படிப்பு, வேலை, ரெப்புட்டேஷன் என்று திருமணத்தை தள்ளி போடாமல் காலாகாலத்துல கண்ணாலம் கட்டி ஒளுங்கு மருவாதியா “தக்ஜம்” பண்ணா இந்த தோஷம் கழிஞ்சுரும்.

எச்சரிக்கை: அதே அஜெண்டாவோட தொடர்ந்தா இழந்த சக்தி வைத்தியர்களை அணுக வேண்டி வந்துரும்.அதனால ரெண்டு மூனு மாசத்துல அவிகவிக பாடி நேச்சரை பொருத்து ஒரு நிதானத்துக்கு வந்துரனுமுங்கோ..

எட்டாம் பாவத்தின் ஜூரிஸ்டிக்சன்ல கடேசியா வர்ரது கடுமையான உடல் உழைப்பு . உங்கள் தொழில்,உத்யோகம் ,வியாபாரத்துல உடல் உழைப்புக்கே இடமில்லைன்னாலும் தோட்ட வேலை அது இதுன்னு இழுத்து போட்டுக்கிட்டு ஃப்ரை யுவர் செல்ஃப். அப்போ இந்த தோஷமும் கழிஞ்சுரும்.

அதுமட்டுமில்லிங்ணா.. தனிய வந்தம், நாளைக்கு உசுரு போனா தனியத்தான் போகப்போறோம். இந்த உலகத்துல உள்ள உறவெல்லாம் ரயில் சினேகம் தான். படகு தண்ணியிலயே இருந்தாலும் தனக்குள்ளே (படகுக்குள்ளே) தண்ணி வந்துராம எப்படி அலார்ட்டா இருக்கோ அப்படி உறவுகளுக்கிடையில நாம வாழ்ந்தாலும் உறவுகள் நமக்குள்ள வராம அலார்ட்டா வாழ்ந்தாலே இந்த தோஷம் பெருமளவு குறையும்.

எதுலயும் நம்மை முன்னிறுத்திக்காம ,அழகு,அலங்காரம், டாம்பீகம்,படாடோபம்,அலப்பறை இத்யாதிகளை கை விட்டு நாலு பேருக்கு உபயோகமா -கிருஷ்ணா ராமான்னுட்டோ – அல்லது நக்மா நமீதான்னுட்டோ வாழ்ந்தா இந்த தோஷங்கள் எல்லாம் கழிஞ்சுரும். டிக்கெட் போடாம கூடுதலா நாலு நாள் உசுரோட இருக்கலாம்.

ஜோதிட மர்மங்கள் : 4

ஏழாமிடம் தொப்புள் – மனைவி – நண்பர்கள் ஆகியோரை காட்டும். தொப்புள் தாய்க்கும் மகனுக்கும் இடையிலான கேபிள். சப்ளை சானல் .

நல்ல அம்மா நல்ல ஆரம்பம். “மாதா செய்தது மக்களுக்கு” “எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே -அவன் நல்லவன் ஆவதும் -தீயவன் ஆவதும் அன்னை வளர்ப்பதிலே”

அம்மாவிடம் “அம்மா சுகத்தை “அனுபவித்தவன் அதை மனைவியிடமும் பெற அறிந்திருப்பான். அம்மாவிடம் கொடுமை அனுபவித்தவன் “சூடு கண்ட பூனை மாதிரி” பொஞ்சாதிய தள்ளியே வைப்பான். பெண்ணை தாயாக பாவித்தால் அவள் உலகத்தாயாக மாறி – சக்தியாக மாறி சம்ரட்சிக்கிறாள்.அவளை ஜஸ்ட் ஒரு பெண்ணாக பார்க்கும் போது தான் சிக்கலே ஆரம்பம். அவள் அதை அங்கீகரித்தாலும் சிக்கலே.அங்கீகரிக்காவிட்டாலும் சிக்கலே.

ஏழாமிடம் சுபபலமாய் இருந்தால் தொப்புள் – தாய் ,மனைவி என்ற இந்த மூன்று மேட்டரும் ஓகே. ஒரு ஆணுக்கு தாயும்,மனைவியும் கரெக்டா செட் ஆயிட்டா அவனோட நண்பர்கள் வட்டம் இவனை மையமாக கொண்டு செயல்படும்.

அப்பா மாவட்ட கருவூல அதிகாரி .அவரை தேடி வர்ர விசிட்டர்ஸை விட நம்மை தேடி வர்ர விசிட்டர்ஸ் அதிகம். சாதாரணமா அப்பா,அம்மாவுக்கு இதெல்லாம் கடுப்பை தரும் மேட்டர்.ஆனால் நம்மை தேடி நம்ம “பட்லிக்களே” வந்தாலும் ..
அப்பா ” சார்.. மேல இருக்காரு..போங்க”ன்னிருவாரு. அம்மான்னா டீ,காஃபி,இத்யாதில்லாம் ஆஃபர் பண்ணுவாய்ங்க. எட்டாங்கிளாஸ் படிக்கிறச்ச நண்பனுக்கு யூனிஃபார்ம் இல்லாம -அவனை விரட்டி விட அம்மா நம்ம சட்டையை கொடுத்து விட்டவுக.

பொஞ்சாதி மேட்டர்லயும் பரவால்லன்னு தான் சொல்லனும். “பிறப்புலயே நோயாளியா” இருந்தாலும் (அப்படி ஒரு ஃபீல் அவிகளுக்கு) பல்லை கடிச்சுக்கிட்டு வேண்டியதை செய்வாய்ங்க (கொஞ்சம் ஸ்லோ)

இதனால நம்ம நண்பர்கள் வட்டம் எக்ஸ்பான்ட் ஆயிட்டே போனது. நல்லதோ கெட்டதோ நண்பர்கள் மூலம் நடந்ததே 99.99 சதவீதம். இது ஒரு வட்டம்.ஆரம்ப புள்ளி தொப்புள் முடிவு புள்ளி நண்பர்கள்.

ஒருவன் யாரையோ எதையோ இழக்க வேண்டும் என்பது அவன் தலை எழுத்தாயிருந்தால் – அது சப் கான்ஷியலா அவன்ல ஃபீட் ஆகியிருக்கும் போல. அதனால அவன் இறுக்கி கொள்ள பார்ப்பான். இந்த இறுக்கமே இழப்புக்கு ஆரம்பமாயிரும்.

நம்மை பொருத்தவரை ஆராயிருந்தாலும் வந்தால் வரவில் வைப்போம் -போனால் செலவில் வைப்போமே தவிர ஃபீல் பண்றதெல்லாம் கடியவே கடியாது.

வந்தவுகளை விரட்டி விடறாப்லயே பேசுவம்..அது ஜோசியம் கேட்க வந்தவுகளா இருந்தாலும்.

உ.ம் ” மச்சான் ! நானே கெட்டு நொந்து கிடக்கேன். டேமேஜ் பார்ட்டி .ஸ்க்ராப்..என்னால என்னத்தை கிழிக்க முடியும்னு வந்தே”
“யாரோ உங்களை மிஸ் கைட் பண்ணியிருக்காய்ங்க. நாம ஒன்னும் ஜோதிடப்புலியெல்லாம் இல்லை. நமக்கு தெரிஞ்ச ஜோசியமே ஒரு சதவீதமோ -ரெண்டு சதவீதமோ”

நாம இழக்க தயாராயிட்டா இழப்புகள் தவிர்க்கப்படும். அப்படியே இழந்தாலும் பிரச்சினையில்லை. இதான் சூட்சுமம். “அந்த்ய நிஷ்டூரத்தை விட ஆதி நிஷ்டூரம் பெட்டர்”

உங்க ஜாதகத்துல 7 ஆமிடத்தின் பலத்தை -சுப பலத்தை பொருத்து அம்மா -மனைவி -நண்பர்கள் அமையறாய்ங்க.
நீங்க எந்தளவுக்கு இவிக மேல டிப்பெண்ட் ஆகறிங்களோ அந்தளவுக்கு மேற்படி பாவ பலம் குறைஞ்சுக்கிட்டே வரும்.

ஒரு உறவு தொடர டிப்பென்டன்சி குறையனும். சின்ன சின்ன மேட்டருக்கெல்லாம் அம்மா,பொஞ்சாதி ,நண்பர்கள் மேல டிப்பெண்ட் ஆறதை விட்டு தொலைங்க. 7 ஆம் பாவத்து தீய பலன்லாம் பெருமளவு குறையும்.

ஜோதிட மர்மங்கள் : 3

அண்ணே வணக்கம்ணே !
வெள்ளி மதியம் புறப்பட்டு சென்னை போனோமா? சனிக்கிழமை மதியம் வரை சென்னையில புதிய தலை முறை தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கான ஆடிஷன்ல இருந்தமா? ரயிலு, பஸ்ஸூ,ஆட்டோ,டூ வீலர்னு ட்ராவல் பண்ணதுல ரெம்ப கேரா இருந்ததா ..அதனால “பொளப்ப” மட்டும் பார்த்துக்கிட்டு -ஃபேஸ்புக்ல பொம்மை பார்த்துக்கிட்டு இருந்துட்டன்.

நேத்திக்கு பிரம்மங்காருவின் கால ஞானம் தொடர் தெலுங்குல ஆரம்பம். அதான் இந்த இடைவெளி ..இன்னைக்கு ஜோதிட மர்மங்கள் தொடரை தொடருவம். நாம ஒவ்வொரு பாவம் தரும் நல்ல பலனையும் எப்படியெல்லாம் மிஸ் யூஸ் பண்றோம் -எப்படி எல்லாம் பல்பு வாங்கறோம்னு கடந்த சாப்டர்ல சொன்னேன்.

இன்னைக்கு ஆறாம் பாவம்.
2000 ஆம் வருசத்துல புர்ச்சி தலைவிக்கு ஒரு லெட்டர் போட்டோம்.” யம்மா நேரம் நெல்லாருக்கு. நீங்க தான் அடுத்த முதல்வர்” இதான் கன்டென்ட். அம்மா சீப் மினிஸ்டரு ஆனதுமே போயஸ் கார்டன் முகவரியில இருந்து ஒரு தேங்க்ஸ் கார்டு வந்தது.
இந்த மேட்டர் நொண்டி நொண்டி நடந்து பல காதுகளை ரீச் பண்ணுச்சு.அதுல ஒரு ஜோதிடரும் சேர்த்தி. அன்னார் நம்ம க்ளாஸ் மேட்டோட தம்பியின் ஆஸ்தான ஜோதிடர். நம்மை நாம ஜோதிடரா உணர்ந்தா தானே பொறாமை பொச்சரிப்புல்லாம் வரும். டோன்ட் கேர்.

அவராவே உளறிக்கொட்டுவார். அவர் மேல க்ளாஸ் மேட்டோட தம்பி வச்சிருக்கிற ட்ரஸ்டை குலைக்கக்கூடாதுன்னு மையமா சிரிச்சு லூஸ்ல விட்டுருவம்.

அவரு புர்ச்சி தலைவி கார்டு மேட்டரை தெரிஞ்சுக்கிட்டு அப்பப்போ நம்ம ஆஃபீஸுக்கு விசிட் அடிக்க ஆரம்பிச்சாரு.
அந்த காலத்துல நம்ம ஆஃபீஸுன்னா ஒரு லிஃப்ட் சைஸுல இருக்கும். ஒரு சமயத்துல ஒருத்தருக்கு தான் அனுமதி.மத்தவுக வெயிட் பண்ண பெரிய ஹால் இருக்கும்.

க்ளையண்டுங்க இல்லாத நேரம் நம்ம சனங்க ஒன்னு மன்னா மொக்கை போட்டுக்கிட்டிருப்பம். இந்த சந்தர்ப்பத்துல மேற்படி ஜோதிட நண்பர் பதவி பறி போன அரசியல்வாதி மாதிரி பேச ஆரம்பிச்சிருவாரு.

ஆரம்பத்துல நாம என்னவோ அவரோட குரு கிட்டே ஜோதிடம் கற்ற மாதிரி -போக போக அவர் கிட்டே கத்துக்கிட்ட மாதிரி -இன்னம் கொஞ்ச நாள் போக புர்ச்சி தலைவி மேட்டரை அவரோட டிஸ்கஸ் பண்ணி எழுதினாப்ல – இன்னம் கொஞ்ச நாள் போக அவர் சொன்னதை -அவர் சொல்லி நாம எழுதி அனுப்பினாப்ல கூட பேச ஆரம்பிச்சுட்டாரு.

நம்ம சனங்களுக்கு நம்மை பத்தி பக்காவா தெரியும். அதனால கொதிச்சு எழுவதும் – நக்கலா சிரிப்பதுமா இருப்பாய்ங்க. நாம அடக்கி வைக்கிறது.

எந்த கதைக்கும் ஒரு முடிவு இருக்கனுமில்லையா? இந்த கதைக்கும் முடிவு வந்தது, நண்பர் கோவா போனார். ஏர் பேக்,பேண்ட் சட்டைல்லாம் பீச்சுல வச்சுட்டு போனவர் போனாரடின்னு ஆயிருச்சு.

ஆறாமிடம் சத்ரு,ரோக,ருண உபாதைகளை காட்டும். நாம “பகைவனுக்கும் அருள்வாய் நெஞ்சே”ங்கற ரேஞ்சுல இருந்துட்டமா.. அந்த ஆறாம்பாவத்து வேக்குவம் நண்பருக்கு டிக்கெட் போட்டுருச்சு.

இன்னொரு உப கதை. சிமெண்ட் டீலர் ஒருத்தருக்கு எண் கணித கணக்கெல்லாம் போட்டு ரூ23 ஆயிரத்து சில்லறை கடனா கொடுத்தம். ரெண்டு வட்டிதேன். ஆனால் அவரு இஷ்டத்துக்கு மிஸ்யூஸ் பண்ணி வட்டி என்ன அசலே கொடுக்க முடியாத நிலைக்கு வந்துட்டாரு.

அப்பப்போ நம்ம கஷ்டத்துக்கு அவர் கொடுக்கிற ரூ.500 ஆயிரத்தை கூட ஆக்செப்ட் பண்ணிக்கிட்டிருந்தம் (அசல்ல)
ஒரு தாட்டி மோட்டாவா நாலு பேரை கூட்டிக்கிட்டு வந்தாரு. சீன் அர்த்தமாயிருச்சு. உன் கிட்டே இப்போ பையில என்ன இருக்கோ கொடு. பைசல் பண்ணிர்ரன்னேன். அஞ்சாயிரம் ரூ எடுத்து கொடுத்தாரு.ஒடனே வீட்ல இருந்து ப்ராமிசரி நோட்டை வரவழைச்சு கிழிச்சாச்சு.

நாம என்னமோ படிப்படியா இல்லின்னாலும் உழக்கு உழக்கா முன்னேறிட்டிருக்கன். ஆனால் நண்பர்? வீட்டுக்கு மூத்தவரான இவரை டீல்ல விட்டுட்டு தம்பி,தங்கைகளுக்கெல்லாம் கண்ணாலம் முடிச்சு இவரை டீல்ல விட்டுட்டாய்ங்க. 1999 ல என்ன நிலையோ அதே நிலை தான் 2009 லயும் . 2013 லயும்.

ஆக ஆறாம் பாவத்து வேக்குவம் சிறுக சிறுக சேவ் ஆகி நம்மை உயர்த்திருச்சு.அவரை படுக்க வச்சுருச்சு. ஆக ஆறாம் பாவத்து சுப பலனை முழுக்க பெறனும்னா

1.வெட்டி விவாதங்கள்ள விட்டு கொடுத்துருங்க
2.கை மாத்து ,சில்லறை கடனை எல்லாம் ச்சொம்மா கேளுங்க.கொடுத்தாலு ஓகே.இல்லாட்டாலும் ஓகே
3.சின்னதா தலைவலி,ஜுரம்,வவுத்து வலின்னு வரும் போது ஒடனே ஸ்பெசலிஸ்டை தேடி ஓடாதிங்க.கொஞ்சம் அவதிப்படுங்க