செம மேட்டருப்பா : 5 (தனபாவம்)

panneer JJ

அண்ணே வணக்கம்ணே !
இந்த வரிசையில கடந்த பதிவுல ரெண்டாம் பாவத்தை பார்த்தம்.சுருக்கமா சொன்னா பையில பைசா வச்சுக்காதிங்க,ரெம்ப சுலபமான வழியில சம்பாதிக்காதிங்க -அப்படியே சம்பாதிச்சாலும் ஒரு ரேஞ்சுக்கு மேல சம்பாதிக்காதிங்க -அப்படியே சம்பாதிச்சாலும் சம்பாதிக்கிறதா காட்டிக்காதிங்க..சர்ப்லஸா இருக்கிற காசை போட்டுபுரட்ட பார்க்காதிங்க.

ச்சும்மா வர்ர காசுன்னா பொஞ்சாதி,புள்ள குட்டி ,மச்சான்,மச்சினி அல்லாருமே இன்டென்ட் போட ஆரம்பிச்சுருவாய்ங்க. அதுவும் பெருசா..அதுவும் உடனே நிறைவேத்தனுங்கற எதிர்ப்பார்ப்போட.

ரெம்ப கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறாப்ல சீன் போடுங்க -இன்னம் எத்தனை நாளைக்கு இது தொடருமோ தெரியல.அதுக்குள்ள செட்டில் ஆயிரனும்னு சனத்தை டென்சன் பண்ணிக்கிட்டெ இருங்க (நீங்களும் இதே மூட்ல இருந்தா ரெம்ப நல்லது)

அடுத்து பேச்சு .ஏற்கெனவே சொன்னாப்ல பாய்ண்ட் டு பாய்ண்ட் பேசுங்க. எந்த சர்க்யூட்ல மனம் விட்டு பேசறிங்களோ அங்கே கொடுக்கல் வாங்கலுக்கு இடம் கொடுக்காதிங்க. பேச்சுல சேஞ்ச் தெரியாம பார்த்துக்கங்க. (பணம் வந்ததற்கு முன் -வந்த பின்)

குடும்ப உறுப்பினர்களை பொருத்தவரை அவிக தேவைகளை நெசசரீஸ்,கம்ஃபர்ட்டபிள்,லக்சரீஸ்னு பிரிச்சுக்கங்க.வருமானம் தலைக்கு மேல வெள்ளமா போனாலே தவிர லக்சரீஸ் பக்கம் ஒதுங்காதிங்க.முடிஞ்சா நெசசரீஸ்,ரெம்ப கஷ்டம்னா கம்ஃபர்ட்டபிள்ஸோட நின்னுருங்க. இதுக்கே எவ்ள கஷ்டப்படனும் தெரீமான்னு சீன் போடுங்க. தேர்தல் சமயத்துல வேட்பாளர் கணக்கா வாக்குறுதிகளை அள்ளி விடாதிங்க.(படுக்கையிலும் கூட)

திடீர் வருமானம் வரனும்னு நினைக்காதிங்க – தப்பிதவறி வந்தா அது திடீர்னு போயிரவும் சான்ஸ் இருக்கு. ச்சும்மா காசு வரனும்னு நினைக்காதிங்க தப்பி தவறி வந்தா அது ச்சும்மாவே போயிரும்.

காசு வருதுன்னா அது கூடவே கருமமும் வருதுன்னு தெரிஞ்சுக்கோங்க.தோல் வியாதிக்காரன் கிட்டே உபரியா காசு வாங்கிட்டா உங்களுக்கும் தோல் வியாதி வந்துரலாம்.

வந்த காசை அனுபவிச்சுரனும்னு துடிக்காதிங்க. அனுபவிக்கிற சத்தா உள்ளவுகளுக்கு காசு வர்ரது கஷ்டம். ச்சும்மா வச்சு அழகு பார்க்கிற கப்பாசிட்டி இருந்தா எவ்ள வேணா வரும்.

லக்னாத் இரண்டாவது இடம் தான் உங்கள் உணவு பழக்கத்தை காட்டுது. எதையும் ப்ளான் பண்ணாதிங்க. மெனு தயாரிக்காதிங்க. நிபந்தனைகளை உருவாக்கிக்காதிங்க.கிடைச்சதை சாப்பிடுங்க.ஹெல்த் பாய்ண்ட் ஆஃப் வ்யூன்னா பரவால்லை.ருசிக்காவ மெனக்கெடாதிங்க.

இதை எல்லாம் ஃபாலோ பண்ணா ரெண்டாமிடம்,இரண்டுக்குடையவர் என்னதான் பல்பு வாங்கியிருந்தாலும் அந்தாசா நின்னு காட்டலாம்.
இது எதையும் ஃபாலோ பண்ணமாட்டேன் ஆனா எல்லாம் பர்ஃபெக்டா நடக்கனும்னு நடத்தி காட்டினா? ஒரே நாள்ள ஷெட் ஆயிரலாம், பணம் திருடு போகலாம்,கொடுத்து ஏமாந்துரலாம்,குடும்பத்துல கலகம் வரலாம்.விரும்பினதை தின்னமுடியாத வியாதிகள் வரலாம். வாய்,தொண்டையில் புண் வரலாம்,கேன்சரா மாறலாம், கண் டப்ஸாயிரலாம்.கண்டங்கள் வரலாம், விஷம் குடிச்சு சாகலாம், அல்லது உணவே விஷயமாயிரலாம்.

எனக்கு தெரிஞ்சு என் ஃப்ரெண்ட் இது எதையும் ஃபாலோ பண்றதில்லை.ஆனால் நல்லாதானே இருக்கான்றிங்களா? நாளை நடப்பதை ஆரே அறிவார்? ஒரு வேளை அவர் ஜாதகத்துல ரெண்டாமிடம் ஹார்லிக்ஸ் சாப்டு புஷ்டியா இருந்தா கொஞ்ச காலத்துக்கு ஓடும், பிறவு ஓட்டும்.

ரெண்டாமிடத்துல பாபகிரகம் இருந்தால் வறுமை அல்லது இல்லீகல் எர்னிங் அல்லது சுரண்டி பிழைத்தல் , சுபகிரகம் இருந்தா செல்வம்,லீகல் எர்னிங் ,சமூகத்துக்கு உபயோகமா வாழ்ந்து பொருளீட்டுதல்.

ஆனால் ஒன்னு பாஸ்.. ரெண்டுல உள்ள எந்த கிரகமும் எட்டை பார்க்கும். எட்டு ஆயுள் ஸ்தானம் .எனவே ஆயுள் குறையும்.
ஒரு வேளை நீங்க ஏமாளியா / தாராள மனசுக்காரரா இருந்தா உங்க வருமானத்தை ஆட்டைய போடறவனுக்கு ஆயுள் குறையும்.அதையும் நடக்க விடாம பண்ணிட்டா உங்களுக்கே..

டேக் கேர்.

செயிலுக்கு அனுப்பின கூரியருக்கு வந்த பதில்

response from CM Cell

அண்ணே வணக்கம்ணே !
நதிகள் இணைப்பு திட்டத்துக்கான நமது செயல் திட்டத்தை அன்றைய தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா பார்வைக்கு கொண்டு செல்ல நாம செய்த முயற்சிகள் தெரிந்ததே.
இந்த விவகாரத்தை செய்தியா ப்ரஸ்ஸுக்கு கொடுக்க எழுதி வச்சிருந்த மேட்டர் அப்படியே கீழே :
_____________________
1.தமது திட்டத்தின் 234 பிரதிகளை தமிழக சபா நாயகருக்கு அனுப்புகிறார்.எம்.எல்.ஏ க்களுக்கு கிடைக்கச்செய்யுமாறு கோருகிறார். நடவடிக்கை இல்லை
2.இன்னொரு முறை 234 பிரதிகள் தயாரித்து தமிழக முதல்வர் (இன்றைய மக்கள் முதல்வர்) இல்லத்துக்கு அனுப்புகிறார் . நடவடிக்கை இல்லை
3.அந்த சமயம் மக்களின் முதல்வர் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டிருந்ததால் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தம் யோசனைகளை சேர்க்கலாமே என்று முதல்வர் தனிப்பிரிவுக்கு ஆன் லைனில் மனு அனுப்புகிறார் .அவர்கள் அதிமுக கட்சி அலுவலகத்துக்கு ஃபார்வார்ட் செய்ததாக பதில் தருகிறார்கள்.
4.உடனே கட்சி அலுவலகத்துக்கு தொடர்பு கொள்கிறார் -ஒரு செட் யோசனைகளை கூரியரில் அனுப்புகிறார். பதில் இல்லை. நடவடிக்கை இல்லை
5.ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகிறார். பெங்களூர் பரப்பண அக்ரஹாரா செயிலில் இருக்கிறார். இவர் தம் யோசனைகளை -இவற்றின் பால் ஜெ வை சுற்றியிருக்கும் நபர்களின் அலட்சிய போக்கை சுட்டிக்காட்டி கூரியர் தபால் அனுப்புகிறார்.
6.கூரியர் தபால் அக்டோபர் 7 ஆம் தேதி டெலிவரி ஆகிறது. ப்ரூஃப் ஆஃப் டெலிவரியும் கிடைக்கிறது.
7.இதற்கிடையில் ஜெ வுக்கு ஜெயில் விலாசத்துக்கு தாம் தமது யோசனைகளை அனுப்பியுள்ள விஷயத்தை முதல்வர் தனிப்பிரிவு அதிகாரிகளுக்கு தெரிவிக்கிறார்.
பினாமி முதல்வர் பன்னீர் செல்வம் பதவியேற்று கொலுவிருக்கும் நாளிலேயே இவரது மனு ரிஜெக்ட் செய்யப்படுகிறது.
_______________
ஃப்ளாஷ் பேக் முடிஞ்சுருச்சு. இப்பம் லைவுக்கு வந்துரலாம். நாம கூரியர் மூலம் அனுப்பின கன்டென்ட்டை மம்மி புரட்டியிருக்காய்ங்க. (செயில்லயா? கார்டன்லயானு நமுக்கு தெரியாதுங்கோ ..நடந்ததை வச்சு ஒரு ஹன்ச் தேன்.
மம்மிக்கு எழுதின லெட்டருக்கு மம்மியே பதில் கொடுத்தா – அது செரியா வராது. சி.எம் செல் /கார்டன் நிர்வாகம்/சபா அலுவலகம்/கட்சி அலுவலக நிர்வாகம் எல்லாமே டுபாகூருனு தெரிஞ்சுரும்ல. அதனால இந்த ஆசாமியோட பழைய கம்யூனிக்கேஷன்ஸ் எதுனா பென்டிங்ல இருந்தா இப்பயாச்சும் ஒரு பதிலை கொடுத்து பைசல் பண்ணுங்கனு சொன்னாப்ல இருக்கு.
________________
சி.எம் செல் அதிகாரிகள் தங்க்ள் டேட்டா பேஸை சலிக்க ஜூன் 8,2014 ல நாம எழுதின மனு சிக்கியிருக்கு. மனுவுல என்ன சொல்லியிருக்கம்னா..
யம்மாடி..நதிகள் இணைப்புக்குன்னு ஒரு சூப்பர் ப்ளான் வச்சிருக்கன். அதை உங்க பார்ட்டி மேனிஃபெஸ்டோல சேர்க்க சொல்லி பார்லிமென்ட் எலீக்சன் டைம்ல அனுப்பினன். உங்க அதிகாரிங்க பார்ட்டி ஆஃபீஸுக்கு ஃபார்வார்ட் பண்ணாய்ங்க.
பார்ட்டி ஆஃபீஸையும் காண்டாக்ட் பண்ணேன்.அவிகளும் கண்டுக்கல. இப்பம் எலீக்சன் முடிஞ்சு ரிலாக்ஸா இருப்பிங்க. இப்பயாச்சும் பாருங்க. கு.பட்சம் ஸ்டேட் லெவல்லயாவது இம்ப்ளிமென்ட் பண்ணுங்க..
____________________
இந்த மனுவுக்கு 28/10/2014 ல அவிக கொடுத்த பதில் தான் இது. இந்த தேதிக்குள்ள மம்மி செயிலுக்குபோயி -நம்ம கூரியரை டெலிவரி வாங்கி -வீட்டுக்கு வந்துட்டாய்ங்கல்ல? வீட்ல பவர் க்ளாஸ் போட்டுக்கிட்டு நம்ம கன்டென்ட் பூரா புரட்டியிருப்பாய்ங்க போல
ஏம்பா நான் செரியா ரோசிக்கிறனா?
_______________________
மனுவுக்கு வந்த பதிலை ஸ்க்ரீன் ஷாட்டா கொடுத்திருக்கன். என்னா மாதிரி ஒரு வழுக்கல் பதில் பாருங்க. வெளங்கிரும்.
நம்ம ப்ளான்ல உள்ள ஹைலைட்டே நிருத்யோகர்களை கொண்டு நதிகளை இணைக்கிறது. அந்த ஸ்மெல் கூட இல்லை பாருங்க.
// நீர் வளத்தை அறிவியல் பூர்வமா காப்பாத்துவாய்ங்களாம்//

__________________

#வருத்தம்:

இதுக்கு மிந்தியெல்லாம் ஏதாச்சும் நடக்க போகுதுன்னாலே 24 மணி நேரத்துக்கு மிந்தியே நம்ம மைண்ட் ரிசீவ் பண்ணிக்கும்.ஆனால் இப்பம் அக்.28 ஆம் தேதியே வந்த பதிலை நவம்பர் 25 ஆம் தேதி தான் பார்க்க முடியுது.

முருகேசா.. எங்கயோ தப்பு நடக்குது.. அலார்ட்டாய்க்கடா !

நாய்கள் ஜாக்கிரதை :விமர்சனம்

5

அண்ணே வணக்கம்ணே !
எனக்கு கதைன்னா ரெம்ப பிடிக்கும். அதுவும் வாழ்க்கைக்கு நெருக்கமான கதைகள்னா ரெம்பவே பிடிக்கவும். ஏன்னா கதை தெரிஞ்சா தான் ரோசிக்க முடியும்.எல்லா கதையையும் நாமே வாழ்ந்து பார்க்கனும்னா ஆவிசு பத்தாதுல்ல.

மேலும் களாமாடும் அத்தனை “மஸ்த்” இல்லாத பார்ட்டி . மஸ்த் இல்லைன்னு கூட சொல்ல முடியாது. வாழ்க்கையில எதெல்லாம் முக்கியமில்லன்னு தெரிஞ்ச பிறவு என்னாத்த களமாடறது.

அதனால சுற்றி உள்ள வாழ்க்கைகளை அவதானிப்பது வழக்காச்சு. அதுகளை மாத்தி ரோசிக்கிறது ரெம்ப சுவாரஸ்யம் மட்டுமில்லை நமக்கே ஒரு ரிஹர்சல் மாதிரி.

அதுவும் சினிமான்னா ரெம்பவே பிடிக்கும். பார்க்க பிடிக்கும். அதை மாத்தி கனவு காண பிடிக்கும். சினிமான்னா பிடிக்க மொத காரணம் குறைஞ்ச நேரத்துல வாழ்க்கை முடிஞ்சுருது. நூறு வருச வாழ்க்கைய விமர்சிக்கிறது ரெம்ப கஷ்டம். ஆனால் சினிமா அப்டியில்லை முக்கியமான திருப்பங்களை மட்டும் தூறெடுத்து பந்தி வைக்குது.அந்த திருப்பங்கள்ள விளையாடறது ரெம்ப ஈசி.

இன்னைக்கு “நாய்கள் ஜாக்கிரதை” பார்த்தேன். உசுரோட புதைக்கிறத புதுமைய நம்பி -தேவர் ஃபார்முலாவை நம்பி இந்த கதையை செலக்ட் பண்ணிட்டாப்ல இருக்கு. இதை வேட்டையாடு விளையாடுலயே பார்த்துட்டம்.சமீபத்துல தெலுங்கு சினிமால காமெடி ட்ராக்ல கூட யூஸ் பண்ணியிருந்தாய்ங்க.

படம் பார்த்திருப்பிங்க.கதை ஒங்களுக்கே தெரிஞ்சுருக்கும். ஈரோயினை கடத்தி உசுரோட புதைச்சுர்ராய்ங்க. மீட்க போன ஈரோவையும் அஃதே. நாய் ஈரோவ ஐடென்டிஃபை பண்ணுது .ஈரோ ஈரோயினை மீட்டுருவாரு போல (வெளி நடப்பு பண்ணியாச்சுல்ல)

இதே நாட் -ஐ ப்ரொட்யூசர் மச்சானே கொடுத்திருந்தாலும் மெல்ல மெல்ல தலைய தடவி அந்த கதை கீழே உள்ளபடி மாத்தியிருப்பன்.
ஈரோ ஹானஸ்ட் போலீஸ் ஆஃபீசர். பொஞ்சாதி இன்னைக்கு ட்ரென்டுல உள்ளவ. அவனை பயங்கர டார்ச்சர் பண்றா.

ஈரோ தேன் கூட்ல கை வச்சுர்ராரு. வில்லன் ட்ரெண்ட்ல இருக்கிற ஏதோ ஒரு கிரைமோட மாஸ்டர் மைண்ட். பெர்ரிய ஆளு. ஈரோவ சஸ்பெண்ட் பண்ணிர்ராய்ங்க.

ஈரோயின் பிரிஞ்சு போயிர்ரா.ஈரோவோட ஃப்ரெண்ட் ஒருத்தனையே கண்ணாலம் கட்டவும் தயாராகிட்டிருக்கா. அவன் மேற்படி மாஸ்டர் மைண்டோட கைத்தடி .ஆனால் அவனுக்கு மேற்படி கிரைமோட “நித்ரசனம் “தெரியாது.அவிக காட்டற ஃபிலிமையே நம்பிட்டிருக்கிறவன்.அவனும் நம்ம ஈரோவ சகட்டுமேனிக்கு இன்சல்ட் பண்றான்.

அந்த சமயம் நம்மாளு டெப்ரஷன் ,ஆல்க்கஹாலிக்னு நாறி போயிர்ராரு .இவ்ள ஏன் இம்பொட்டன்ஸ் கூட வந்துருது (ஹி ஹி நாம டைரக்டரா இருந்து கில்மா மேட்டர் இல்லன்னா எப்படி பாஸ்? சூப்பர் கில்மா குத்துப்பாட்டு -பாட்டுக்கு பிறகு ஈரோ களமாட போகும் போது இந்த மேட்டர் அவருக்கு தெரியுது.

ஹிப்னட்டிஸ்ட்,சைக்கியாட் ரிஸ்ட் ,டி-ஆல்க்கஹாலிக் ஸ்பெஷலிஸ்டுங்க எல்லாம் ட்ரை பண்ணியும் ஃபெயில் ஆயிர்ராய்ங்க.
அப்பம் திருவாளர் மணி ( நாய்) ஈரோ லைஃப்ல என்டர் ஆகிறாரு. ஈரோ கொஞ்சம் கொஞ்சமா ரிக்கவர் ஆகறாரு. அந்த நேரம் பார்த்து ஈரோயினோட உட்பிக்கு மேற்படி கிரைமோட நிஜ சொரூபம் தெரிஞ்சு ரெபல் ஆகிறாரு. வில்லன் வழக்கமான தமிழ் சினிமா போல ஈரோயினை தூக்கி உசுரோட புதைச்சுர்ராரு.

ஈரோயின் தன் செல்ஃபோன்ல இருந்து ஒரே ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பறா. மத்ததெல்லாம் திரையில் கண்ட படியே.ஆனால் ஒன்னுங்க க்ளைமேக்ஸை பகல்ல ஷூட் பண்றம்.

இந்த விமர்சனம் மீதான விமர்சனத்தை எதிர்ப்பார்க்கிறேன்.

ஒன்மோர் டிப்: நாய்களோட அருமை பெருமைகளை சொல்ற கேரக்டர்ல சத்யராஜ் வந்து போயிருக்கலாம்.அதிக பட்சம் நாயை பார்த்துக்க சொல்லி கேட்டு செத்து போற மிலிட்டரி காரர் கேரக்டர்

செம மேட்டருப்பா : 4

3

அண்ணே வணக்கம்ணே !
எதை அடிக்க நினைச்சாலும் ஏற்கெனவே எழுதிட்டாப்ல ஒரு ஞா. அஞ்சு வருசமா கில்லி கணக்கா சொல்லியடிக்கிறம்ல. ஓஷோ சொல்வாரு நீ எதை வேணம்னா கேளு ..நான் நினைச்சதை தான் சொல்லிக்கிட்டு போவேன்.

நம்ம நிலையும் ஏறக்குறைய இது போல ஆயிருச்சு. நம்ம கொள்கை ரெம்ப சிம்பிள். இந்த உலகமே ஒரு பஸ் ஸ்டாண்டு மாதிரி .மரணம்ங்கற பஸ்ஸு வந்ததும் அடிச்சு பிடிச்சு ஏறவேண்டியதுதான்.ஏதோ கேம்ப் ஸ்டவ் வச்சு சப்பாத்தி சுட்டா பரவால்ல. நாம அப்படியா வாழறம்? ஊஹூம்.

வாத்யார் என்னமோ ஒருத்தனுக்கா கொடுத்தான் இல்லை ஊருக்காக கொடுத்தான்னு பாடிட்டு போயிட்டாரு. அவனவன் “போதும்”னு நின்னுட்டா போதும் பின்னாடி வரவனுக்கு அது கிடைச்சுரும். சனம் எல்லாம் எனக்கேன்னு தானே அலையுது.

இந்த ரெண்டாவது பாவத்தையே எடுத்துக்கங்க. பெரியார் என்ன அடுக்கு மொழியிலயா பேசினாரு? காமராஜர் என்ன இலக்கியங்களையா கோட் பண்ணாரு? ஆனாலும் அவிக பேச்சுக்கு மதிப்பிருந்ததே ! ஏன் ?

ஏன்னா அவிக ஊர் காசுக்கு அலையல. மனசுல பட்டதை பட்டு பட்டுன்னு பேசினாய்ங்க. அட வாத்யாரையே எடுத்துக்கங்க. அவரை-அவர் பேச்சை ஜெயமோகன் மாதிரி சைக்கோ கூட நக்கலடிச்சு எழுதியாச்சு.ஆனால் அவர் பேச்சு வேதம். அவர் பெயரே ஒரு மந்திரமா இருக்கே ..எப்படி?
நானே ஆரம்பத்துல தூய தமிழ்ல தான் எழுதிக்கிட்டிருந்தன் பப்பு வேகல. இப்போ இந்த மாதிரி அடிச்சு விடறேன்.சனம் ஏத்துக்கிறிங்க.ஏன்? என் எழுத்துல நெஜம் இருக்கு.

ஒரு பஸ் ஓனர்.தொழிலாளிகளை வண்டை வண்டையா திட்டுவார். எவனும் கோவிச்சுக்கமாட்டான்.ஏன்னா “லம்ப்சம்”மா அடிக்க போறான்.
அட ..நம்ம மோதி-அதார் க்ரூப் ஆஃப் இண்டஸ்ட் ரீஸையே எடுத்துக்கங்க. மோதிஜி பழைய அமிதாப் படம் மாதிரி வீராவேசமா டயலாகா அடிச்சு வ்இடறாரு. அதார் காரன் பேசறானா? இல்லை. அவனுக்கு என்ன கிடைக்குது.இவருக்கு என்ன கிடைச்சிரும்? அதை வெளிய தான் காட்டிக்க முடியுமா?

ஓட்டல் காரவுக,சேலைக்கடைக்காரவுக எல்லாம் புஸ்தவம் எழுதறாய்ங்க. (அவிகளா எழுதறாய்ங்கன்னு ஒரு சம்சயம்).ஆனால் அதுக்கு என்னா செலவு ? என்னா செலவு ? இருக்கிற நாலணா கவிஞனை எல்லாம் கூப்டு சால்வை போடனும். அரையணா எழுத்தாளனுக்கெல்லாம் பட்டம் கொடுக்கனும்.
இன்றைய தேதிக்கு அம்மா அப்பா ரெண்டு பேரும் வேலைக்கு போறாய்ங்க. பசங்க கிட்ட நின்னு நிதானிச்சு பேச கூட நேரமில்லை. அந்த பசங்க கூசாம கை செலவுக்கு அஞ்சாயிரம் பத்தாயிரம் கேட்குதுங்க.

அந்த அம்மா அப்பா குழந்தைக்கு புத்தி தெரிஞ்ச பிறவாச்சும் மாசத்துல ஒரு நாளாச்சும் லாஸ் ஆஃப் பேல லீவை போட்டுட்டு தங்கள் சம்பளத்துக்கு பின்னாடி இருக்கிற வலியை ஷேர் பண்ணியிருந்தா அது கேட்குமா?

பேச்சுக்கும் -பணத்துக்கும் இருக்கிற தொடர்பு இது. அதனாலதான் ரெண்டையும் க்ளப் பண்ணி தன வாக்குஸ்தானம்னு வச்சிருக்காய்ங்க.
இங்கே சூரியன் இருந்தா சொந்த முயற்சியில பணம் பண்ணுவான்.நானு நானுன்னு பேசுவான் – சனம் ஆமாம் ஆமாம்னு மொட்டை போட்டுரும்.
இங்கே சந்திரன் இருந்தா பணம் எப்ப வரும்னே தெரியாது. வராதுன்னுருந்தா வந்துரும். வந்துரும்னு இருந்தா வராது.இப்படி இருக்கும் போது காமராஜர் மாதிரி பார்க்கலாம்ணேன் ரேஞ்சுல தான் பேசமுடியும்.

இங்கே செவ் இருந்தா எதிராளிய மிரட்டி கூட பணம் பண்ணுவான்.கரன்சியை குமிச்சி தீக்குச்சி கிளிச்சு வச்சாப்ல செலவாயிரும்.
இப்படி சொல்லிக்கிட்டே போகலாம். இதான் பணத்துக்கும் பேச்சுக்கும் இருக்கிற லிங்கு. டாக்கிங் ஈஸ் சில்வர்-சைலன்ஸ் ஈஸ் கோல்ட்னு கேள்வி பட்டிருப்பிங்க. பேச்சை குறைங்க. ஆட்டோ மெட்டிக்கா பொருளாதாரம் மேம்படும்.

ஒரு காலத்துல எங்கெல்லாம் விளக்கு கம்பத்தை பார்த்தா அங்கெல்லாம் நாலு பேருக்கு நடுவுல நின்னு பேசிக்கிட்டிருப்பம். சோத்துக்கே லாட்டரி.
இப்பம்? காலையிலருந்து மாலை வரை வீடு -வீடு -வீடு தான்.போக்குவரத்தெல்லாம் மாலை 6.30 க்கு மேல தான். அப்ப கூட டிவி ஆங்க்கர் மாதிரி உரையாடலை வழி நடத்தறதோட செரி.

ஒரு காலத்துல செந்தமிழ்ல கவிதை மழையாபொழிஞ்சிக்கிட்டிருந்தம் . கஞ்சிக்கே கவலைபடற நிலை. இன்னைக்கு பேச்சு தமிழுக்கு மாறிட்டம். ஏதோ வண்டி ஓடுது.

நான் என்ன சொல்றேன்..ஒன்னு பேச்சை குறைங்க. அந்த பேச்சுலயும் அலங்காரத்தை குறைங்க.உவமை,உவமேயம்,பழமொழி ,கொட்டேஷன்லாம் விட்டு தள்ளுங்க.( விதி இல்லாத குறைக்கு ப்ளாக்ல எழுதும் போது உபயோகிச்சு தான் ஆகனும்.) பாய்ண்ட் டு பாய்ண்ட் பேசுங்க.

மம்மி மேட்டரையே எடுத்துக்கங்க..தேர்தல் சமயத்துல வாய விடாம இருந்திருந்தா இந்தளவுக்கு ஆயிருக்குமா? எதிரிகளே கண்ணுக்கு தெரியலன்னு பீத்தாம இருந்திருந்தா கதை வேற மாதிரி போயிருக்கும்ல?

சந்திரபாபு 1999-2004 ரெஜிம்ல என்னெல்லாம் வசனம் விட்டாரு தெரியுமா? எலீக்சன் டைம்ல தான் அரசியல் பேசனும் -நான் சி.இ.ஓ -உங்க மைன்ட் செட்டை மாத்திக்கங்க.

என்னாச்சு? பத்து வருசம் வீட்ல உட்கார வச்சுட்டாய்ங்க. பேச்சுங்கறது உங்கள் வெளிப்பாடு. உங்கள் லட்சியம்,கொள்கை பிடிப்பு,தைரியம்,வீரம் இதெல்லாம் வெளிப்பட வேண்டியது பேச்சுல இல்லை.செயல்ல.

எல்லாத்தையும் பேச்சுல விட்டுட்டா உள்ளார ஒன்னுமே மிஞ்சாது பாஸ்! சனம் தங்கள் ஈகோவையே தங்கள் ஆத்மாவா மதி மயங்கி கிடக்காய்ங்க. உங்க பேச்சால அவிக ஈகோவ டச் பண்ணிட்டா கொலையே பண்ணிட்டாப்ல ரேங்கிருவாய்ங்க.

அவிக ஈகோவ திருப்தி படுத்த சலாம் போட சொல்லல. கு.ப அதை சீண்டாம இருக்கலாமில்லை. இதுல வேற ரெண்டுல நின்ன கிரகம்லாம் அப்டியே எட்டை பார்க்கும். நீங்க பேச பேச ஆவிசு குறையும் பாஸ் !

செம மேட்டருப்பா: 3

swacha Bharath

அண்ணே வணக்கம்ணே !
தெரியாத்தனமா செம மேட்டருப்பான்னு ஒரு தலைப்பை வச்சு பதிவு போட்டம். உதிரியா பல விஷயங்களை எழுத நினைச்சன். ஆனால் இதுவும் தொடராயிருச்சு. ( முருகேசா.. சமாளிடா..சமாளிடா)

வர வர மறதி அதிகமாகுது. ஒரு காலத்துல மைண்ட்ல ஸ்டோர் ஆன மேட்டர் எல்லாம் சேஃபா இருக்கு.ஆனால் லேட்டஸ்ட் சங்கதி எதுவும் நிற்க மாட்டேங்குது . எகிறிப்போகுது. (வயசாகுதா?) ஆனால் பாருங்க.. சமயம் சந்தர்ப்பம்னு வரும் போது படக்குனு ஸ்பார்க் ஆகுது.( Thank God !)
இதுவாச்சும் பரவால்ல தாளி ..எல்லா விஷயத்துலயும் ஒரு வித அலட்சியம் – காரியம் நடந்தா என்ன நடக்காட்டி என்னங்கற ஃபீல் .இதுவும் நல்லதுக்கா? அல்லது சமூக அங்கீகாரம் தரும் திமிரா புரியல. ஓகே ஓகே..மேட்டருக்கு வரேன்.

செம மேட்டருப்பாவில் பாவம் வைஸ் போயிட்டிருக்கம். லக்ன பாவம் முடிச்சுட்டம். இன்னைக்கு 2 ஆம் பாவம். இதை தனஸ்தானம் -வாக்கு ஸ்தானம் -குடும்ப ஸ்தானம்னு சொல்றம்.

எச்சரிக்கை:
எந்த ஜாதகத்துலயும் எந்த கிரகமும்/எந்த பாவமும் 100% நன்மை தரக்கூடியதாவும் இருக்காது. 100% தீமை தரக்கூடியதாவும் இருக்காது. நன்மை தீமை கலந்து தர்ரதா தான் இருக்கும் என்பதை இங்க ஒரு தடவை மைண்ட்ல கொண்டு வாங்க.

இந்த ரெண்டாம் பாவம் இப்படி நல்லது -கெட்டது கலந்து இருந்தா பல விதமான வாழ்க்கை முறை அமையும்.

லைஃப் ஸ்டைல் 1
பேச்சு சுமுகமா இருக்கும் -பைசா புரளும்-குடும்பம் நல்லபடியா ஓடும்
லைஃப் ஸ்டைல்2
பேச்சு ஓஹோ. பைசாவுக்கு லாட்டரி. குடும்பத்துல பசி-பட்டினி
லைஃப் ஸ்டைல்:3
பேச்சு அர்ரகன்டா இருக்கும்.சண்டைக்கிழுக்கிறதா இருக்கும்-பைசா புரளும் -குடும்பம் ? இவன் செத்தா நல்லாருக்கும்னு சாமி கும்பிடும்.
லைஃப் ஸ்டைல்:4
ஊமை/திக்குவாய்/வாய் நிறைய பொய் -பைசா புரளும் -குடும்பம் ஓகே
லைஃப் ஸ்டைல்:5
தனிக்கட்டை -பேச்சு சுமுகம் -பைசா புரளூம்
லைஃப் ஸ்டைல்:6
பேச்சே/எழுத்தே அடிப்படையாக இருக்கும் தொழில் (உ.ம் பேச்சாளர்,எழுத்தாளர்,மத பிரச்சாரகர்,லெக்சரர்) -பைசா பெருசா புரளாது -குடும்பம் ஓகே
லைஃப் ஸ்டைல் 7
பேச்சில் தேன் ஒழுகும் – வாய் பேச்சிலயே வயித்து புள்ள கைக்கு வந்துரும் – ஊர்ல உள்ளவனுக்கெல்லாம் குல்லா போட்டு செம சில்லறை -பொஞ்சாதி ஓடிபோயிருவா -புள்ள குட்டி இருக்காது.
இதை எல்லாம் ஓரளவுக்கு பேலன்ஸ் பண்ணனும்னா என்ன பண்ணனும்? அடுத்த பதிவுல பார்க்கலாம்.