குரு பலம் வந்தா என்ன ? போனா என்ன?

DSCN0256

அண்ணே வணக்கம்ணே !
ஜூலை 5 ஆம் தேதிக்குள்ள குரு பெயர்ச்சி பலன் போட்டே உடறேன். டவுட்டு வேணாம். இந்த பதிவை கூட அதற்கான முன்னோட்டமாவே வச்சுக்கங்க.

குரு நம்ம ராசிக்கு 2,5,7,9,11 பாவங்கள்ள வர்ரதை “குரு பலம் வந்துருச்சு”ன்னு சொல்வாய்ங்க. இது பொதுப்பலன் தான். குரு உங்க ராசிக்கு பாபியா இருந்து 6,8,12 ல வந்தா பலன் மாறும். ( ஆனால் இந்த இடம் அவருக்கு ஆட்சி/உச்ச வீடா இருக்கப்படாது) இதே போல தனுசு,மீனம்,கடக லக்னக்காரவிகளுக்கு அவரு ஜன்மத்துல வந்தாலும் எஸ் ஆயிரலாம். இந்த விதிகள் எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்.

எல்லா விதிகளையும் அப்ளை பார்த்து குரு பலம் இருக்குன்னு சொல்ட்டாய்ங்க. அவரு நிற்கிற இடம்,பார்க்கிற இடம் ,அவர் பெற்ற ஆதிபத்யம் இத்யாதிய பொருத்து சிறப்பு பலன்லாம் சொல்லலாம். பொதுவா குருபலம் இருக்கிற காலத்துக்கும் -இல்லாத காலத்துக்கும் என்ன வித்யாசம்னு இந்த பதிவுல பார்க்கப்போறோம்.

ஏற்கெனவே ஒரு தடவை சனி பிடிக்கிறதுக்கு மிந்தி – சனி விலகுவதற்கு மிந்தின்னு ஒரு மெர்சலான பதிவு போட்டிருக்கம். அதை போல குரு மேட்டர்லயும் ஒரு பதிவு பண்ணலாம்னு ஒரு கெட்ட எண்ணம் வந்திருச்சு .அந்த எண்ணத்தை லேசா பட்டி பார்த்து குருபலம் இருந்தா என்ன? போனா என்னன்னு எழுதப்போறேன். (அடிக்கப்போறேன்)

குருபலம் இருந்தா:
1.டைம் மெயின்டெய்ன் பண்ண முடியும் ( நீங்க லேட்டா ஸ்டேஷனுக்கு போன ட்ரெயினும் லேட்டா இருக்கும்) ஆனால் லஞ்ச் மேட்டர்ல மட்டும் இது நடக்காது.
2.பைசா கூரைய பிச்சுக்கிட்டு கொட்டும்னு அடிச்சு சொல்ல முடியாது .ஆனால் வர்ர பைசா இன் டைம் வரும். Money Management னா என்னன்னு தெரியாதவிக கூட பக்காவா ப்ளான் பண்ணி செய்விங்க.குறைச்சலான காசுலயே நிறைவான பலன் கிடைக்கும்.
3.சொசைட்டியில மதிப்பு மருவாதி உள்ளவிக அறிமுகம் ஆக வாய்ப்பிருக்கும். அவியளால ஒன்னு ரெண்டு காரியம் கூட நடக்கும்.
4.என்னதான் அராத்து பேர்வழியா இருந்தாலும் உங்களையும் அறியாம கடவுள் பக்தி வந்துரும். மத,ஆன்மீக பெரியவா நீங்க கேட்காமயே நெல்ல வழி காட்டுவாய்ங்க.
5.பொஞ்சாதி,புள்ள குட்டி உங்க கொள்கைகளை ஏத்துக்கிறாய்ங்களோ இல்லையோ உங்க வேலைகளுக்கு ஒத்துழைப்பு கொடுப்பாய்ங்க.
6.உங்க பேச்சுக்கு மதிப்பு ஏற்படும். கொடுத்த வாக்கை நிறைவேத்தற சந்தர்ப்பம் ,சூழல் அமையும்.
7.அடகு வச்சிருந்த தங்க நகைய ரிலீஸ் பண்ணுவிங்க. புதுசா வாங்குவிங்க.
8.கடந்த கால உழைப்புக்கு ஒரு அங்கீகாரம்,பரிசு,பாராட்டுன்னு கிடைக்கும்.
9.பத்து,அஞ்சு வட்டியில மாட்டிக்கிட்டு அல்லாடினவிகளுக்கு வங்கிக்கடன் கிடைச்சு ரிலீஃப் கிடைக்கும்.
10.ரெம்ப நாளா தள்ளிப்போன நேர்த்திக்கடன் செலுத்தறது,தீர்த்த யாத்திரை மாதிரி போய் வர்ரதுல்லாம் கூட நடக்கும்.
11.வயிறு -இதயத்தின் செயல்பாடு சிறப்பா இருக்கும்.
12.சுபகாரியங்களுக்கு அழைப்புகள் அதிகமா வரும். நாலு இடம் போக வர இருப்பிங்க.நாள் போறதே தெரியாது.

குருபலம் போச்சுன்னா:
1.கொடுக்கல் வாங்கல்ல தேக்கம்
2.டைம் மெய்ன்டெய்ன் பண்ண முடியாது
3.பெரீ மன்சங்க அகாரணமா உங்களை டார்ச்சர் பண்ண ஆரம்பிச்சுருவாய்ங்க
4.நீங்க 10 ரூவா வேலைக்கு 100 ரூ செலவழிக்க தயாரா இருந்தாலும் வேலை நடக்காது.
5.தங்க நகைய அடகு வைக்க வேண்டி வரலாம்,தொலைஞ்சு போகலாம்.காசு எண்ணி கொடுக்கும் போது சாஸ்தி கம்மி ஆகலாம்.
6.பைசா என்னமோ தாராளமா புரள்றாப்ல ஒரு ஃபீல் இருக்கும் .ஆரம்பத்துல புரளவும் செய்யும்.ஆனால் ஒரு ஆறு மாசம் கழிச்சு பார்த்தா பட்ஜெட்ல பெரிய வேட்டியே விழுந்திருக்கும், அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டி வரும்.
7.வயிறு இதயம் தொடர்பான கோளாறுகள் தலை காட்டும்.
8. நீங்க எவ்ள பெரிய ஆன்மீக செம்மலா இருந்தாலும் உங்க தெய்வ நம்பிக்கை லேசா நசிய ஆரம்பிக்கும்.உள்ளுக்குள்ள கன்னுக்குட்டி உதைக்க ஆரம்பிக்கும்.
9.லாஜிக்கே இல்லாம பொஞ்சாதி,புள்ளகுட்டி முரண்டு பிடிக்க ஆரம்பிப்பாய்ங்க.
10.உங்க வட்டத்துல உங்களை ஹீரோவா கொண்டாடின பார்ட்டிங்க கூட முக்கியமான நிகழ்ச்சிகளுக்கு கூட உங்களை இன்வைட் பண்ண மறந்துருவாய்ங்க.
11.நேர்த்திக்கடன், கோவில் குளம்னு போறதுல்லாம் தள்ளிப்போகும்.
12.மாடா உழைச்சாலும் வேலை முடியாது.முடிஞ்சாலும் நொட்டை சொல்லிட்டு போயிருவாய்ங்க.

குரு பெயர்ச்சி பலன் : 2015-16 (பொது)

Brammangaruஎச்சரிக்கை:
நம்ம பழைய பதிவுகள் வெவ்வேறு தளங்களில் சிதறியிருக்கு. இன்னைக்கும் ஒவ்வொரு வலைப்பூவும் எந்த வித அப்டேட்டும் இல்லாமலே தினசரி 250 முதல் 500 வரை ஹிட்ஸ் வாங்கிக்கிட்டுதான் இருக்கு. அந்த வலைப்பூக்களின் தொடுப்பை கீழே கொடுத்திருக்கன்.

அனுபவஜோதிடம் (ப்ளாகர் வலைப்பூ)

அனுபவஜோதிடா (வோர்ட் ப்ரஸ்)

எஸ்.முருகேசன்

இங்கே புதிய பதிவு இல்லாத சமயம் அங்கே போயி கொண்டாடுங்க. இப்ப குரு பெயர்ச்சி பலனுக்கு போயிரலாமா?

2015,ஜூலை ,14 ஆம் தேதி விடியல் 5.45 மணிக்கு குரு கடகத்தில் இருந்து சிம்மத்துக்கு பெயர்ச்சி ஆகிறார். கடகம் குருவோட உச்ச ராசி.
ஒரு கிரகம் உச்சமா இருக்கும் போது அது தொடர்பான காரகங்கள் “கெத்தா “இருக்கும். உதாரணமா குரு காரகம் கொண்டவை எவைன்னு குருவே சொல்றாரு பாருங்க.

நான் தங்கம், பைனான்ஸ், அரசியல், மதம், மதம் சார்ந்த நிறுவனங்கள், தேவஸ்தானங்கள், வடகிழக்குத் திசை அகியவற்றிற்கு அதிகாரி, நானே புத்திரக்காரகன், பௌத்திரக்காரகன் (பேரன்கள்), நீதிமன்றம், கரூவூலம், புஷ்பராகம், பிராமணர், சான்றோர், இதயம், வயிறு, ஞாபகசக்தி, புராணம், வேதம், சேவை நிறுவனங்கள், ஆட்சி மொழி, அரசு தரும் வீட்டு வசதி, காசாளர், கண்டக்டர், முன்யோசனையுடன் திட்டமிட்டு செயல்படுதல், இது எல்லாம் என் இலாகாவின் கீழ் வருபவை. தட்சிணாமூர்த்தி, சாயிபாபா, ஸ்ரீராகவேந்திரரர் ஆகியோரும் எனது பிரதி ரூபங்களே!

கடந்த ஒரு வருச காலமா தங்க விலை ஏறுமுகம், அரசியல்னு பார்த்தா லக்கி டிப் கணக்கா முழு மெஜாரிட்டியோட ஒரு ஆட்சி எற்பட்டுருச்சு. நீதிமன்றத்தை பொருத்தவரை குரு முழு பலனை தரக்கூடிய அவரோட மத்ய காலத்துல குன் ஹா தீர்ப்பு வந்து நீதியை நெட்ட நெடுக்க நிற்க வச்சுது. பிறவு குருவோட பலம் குறைஞ்சு போன காலத்துல குமார சாமி படுக்க போட்டுட்டாரு (அது வேற கதை)

பிராமணர்கள் தலைமேல் வைத்து கொண்டாடும்/ புராணம் ,வேதம் இத்யாதியை தலைமேல் வைத்து கொண்டாடும் பா.ஜ.க ஒரு வருசமா பெருசா பிரச்சினை இல்லாம காலத்தை ஓட்டிருச்சு ராம் தேவ் மாதிரி குருமார் எல்லாம் கொண்டாடிக்கிட்டிருந்தாய்ங்க.
.
ஆட்சி மொழின்னு இந்தியை பந்தி வைக்க கூட முயற்சிகள் நடந்தது. குரு பெயர்வதற்கு 2 மாதங்கள் முன்பே பலனை மாத்தி கொடுக்க ஆரம்பிச்சுருவாரு (பார்க்கிறம்ல சுஷ்மா, வசுந்தராஜே ,முண்டே,ஸ்மிரிதி ராணி )

கடகத்தை விட்டு குரு விலகுவதால் மேற்சொன்ன அரசியல் ஸ்திரத்தன்மை குறையலாம், நீதிமன்றங்கள் “அழுத்தங்களுக்கு” உள்ளாக்கப்படலாம். அவா கனவுகள் கலைய ஆரம்பிக்கலாம், இந்தி ? இருக்கும் இடத்தில் இருந்துக்க வேண்டி வரலாம்.

குரு சிம்மத்துக்கு வந்துர்ரதால என்னாகும்?
குரு நிற்குமிடத்து அதிபதியான சூரியன் லோக்கல் லீடர்ஷிப்புக்கு காரகர்.ஆகவே பா.ஜ.கவுல குடுமிப்பிடி சண்டை ஆரம்பமாகி மறுபடி உண்மையான கூட்டணி ஆட்சி வந்துரலாம். சத்திரியர்கள் பலம் பெறுவர், கிராம மக்கள்,மலை ஜாதியினர் வீதிக்கு வந்து போராடி செயிப்பாய்ங்க. ஒரு சொட்டை தலையர்/சோடாபுட்டி கண்ணாடி போட்டவர் அரசியல்ல செமர்த்தியா கலக்க வாய்ப்பிருக்கு. இவர் நாட்டின் மையப்பகுதியை சேர்ந்தவராக இருக்கலாம்.

அஸ்தமனம்:

இது போதாதுன்னு 2015, ஆகஸ்ட் 10 முதல் செப் 9 வரை குரு அஸ்தமிக்கிறார் (அதாவது குரு பிரபாவம் ஜீரோவாகி சூரிய பிரபாவம் உச்சத்துக்கு போகும்) நான் சொன்ன பொலிட்டிக்கல் ஃபோர்ஸோட பலம் உச்சத்துக்கு போகலாம்.

குரு வக்ரம்:
ஜனவரி 8 முதல் சிம்மத்துலயே வக்ரமாகிறார் (மார்ச் 15 வரை இதே நிலை -அடுத்த பஞ்சாங்கம் வந்தாதான் எதுவரை வக்ரம்னு சொல்ல முடியும்)
சிம்மத்துல குரு வர்ரதால என்ன பலன்னு சொன்னேனோ அந்த பலன் எல்லாம் ஃபணாலாகிரும். அரசியல் வாதிகள்,நீதிபதிகள்,வங்கி நிறுவனங்கள்,அவா எல்லாம் தங்கள் இயல்புக்கு மாறா செயல்பட ஆரம்பிக்கலாம், மக்களுக்கு இதயம்,வயிறு தொடர்பான நோய்கள் அதிகரிக்கலாம்.ஏற்கெனவே இந்த பிரச்சினை உள்ளவிக ரெம்ப கேர்ஃபுல்லா இருக்கோனம்.

குருவுக்குரிய திசை வடகிழக்கு. இதனால வ.கி பகுதியில ஆட்சி கவிழ்வது /ஆட்சியாளர்கள் டிக்கெட் போடறது மாதிரி சம்பவங்களும் நடக்கலாம்.

மன்னிக்கவும்:
குரு பெயர்ச்சின்னதும் நம்ம ராசிக்கு எப்டி இருக்கு பார்த்துரலாம்னு வந்திருப்பிங்க. நான் என்னடான்னா மேக்ரோ லெவல் ப்ரிடிக்சன்ஸ் கொடுத்திருக்கன்.(அதுக்குத்தேன் பதிவோட தலைப்புல பொது என்ற வார்த்தைய சேர்த்தேன்)

கவலை வேண்டாம் அடுத்தடுத்த பதிவுகளில் 12 ராசிகளுக்கும் உண்டான ரிசல்ட்டை கொடுக்கிறேன்.

கால மாற்றமும் -கிரகபலனும் : 6

அண்ணே வணக்கம்ணே !
கால மாற்றமும் -கிரகபலனும்ங்கற தலைப்புல ஒரு தொடரை ஆரம்பிச்சு எழுதிக்கிட்டிருக்கம்.இதுல மொத நாலு பாவங்களை அனலைஸ் பண்ணியாச்சு. இப்ப ஐந்தாம் பாவம்.

இது புத்தி,புத்திர,பூர்வ புண்ணிய ஸ்தானம். அதிர்ஷ்டம்,பெயர் புகழ் இத்யாதிய காட்டும் பாவமும் இதுதான்.

எதை எழுத நினைச்சாலும் எப்பமோ எழுதிட்டதா ஃபீல் ஆகுது. இந்த ஃபீலையும் பல முறை எழுதிட்டாப்ல ஒரு ஃபீல். ஆனாலும் எடுத்துக்கிட்ட தலைப்பை நிரவித்தானே ஆகனும். மேலும் நம்ம சனத்துக்கு மறதி சாஸ்தி. மேலும் சனம் புதுசு புதுசா வர்ராய்ங்களே ! அவிகளுக்காச்சும் உபகாரமா இருக்கட்டுமே.

மொதல்ல இந்த புத்திங்கற மேட்டரை எடுத்துக்கிடலாம். புத்தின்னா என்ன? ஞா சக்தியா?ஒரு வகையில ஊம். இன்னொரு வகையில ஊஹூம்.
கவனித்தல் – கூர்ந்துகவனித்தல் -கவனித்தவற்றை பல கூறுகளாக்கி கவனித்தல் – அந்த கூறுகளின் இடையிலான பந்தம்-பந்தமின்மையை உணர்தல் – அந்த கூறுகள் ஒன்றை ஒன்று பாதித்தலை /பாதிக்காதிருத்தலை கவனித்தல் -இவற்றை எல்லாம் நினைவில் வைத்தல் .

புதிய சூழல் ,சவால் எதிர்ப்பட்ட போது நினைவில் வைத்தவற்றை மீட்டெடுத்தல் – கடந்த அனுபவத்துக்கும் தற்போதைய சூழலுக்கும் இடையிலான தொடர்பு தொடர்பின்மையை கவனித்தல் . இப்படியே ஒரு சுழல் தொடரும்.

இன்னைக்குள்ள ட்ரெண்டுல புத்தின்னா? சட்டத்தை தெரிஞ்சுக்கறதை விட ஜட்ஜை தெரிஞ்சுக்கறதுன்னு ஆயிருச்சு. இந்த குறுமதி தரும் வெகுமதி வமிசத்தை ஒழிச்சுரும். பைத்தியமாக்கிரும். பெருத்த அவமானத்துக்கு இலக்காக்கும்.

நிற்க .புத்திக்கும் புத்திரருக்கும் என்ன தொடர்பு?
கொஞ்சம் வெகண்டையாவே இருந்தாலும் கில்மா ட்ராக்லயே ரோசிப்பம். “முடியும்”னு நினைச்சா முடியும்,முடியாதோன்னு இறங்கினா முடியாமயே கூட போயிரலாம்.

மனித உடல் அப்பாவி. அது பலசமயம் மனித மனத்துக்கு அப்படியே கீழ் படிய ஆரம்பிச்சுருது. பஸ்ஸுல போறச்ச வாந்தி வர்ரதுக்கு கொஞ்சமே கொஞ்சம் உடல் சார்ந்தகாரணம் இருக்கலாம்.ஆனால் நிறைய சதவீதம் மனம் சார்ந்த காரணம் தான்.

தப்பு பண்ணிட்டமோங்கற ஃபீல் நோயா பரிணமிக்குது . நான் தப்பே பண்ணலியேங்கற ரேஞ்சுல தன்னை தான் செல்ஃப் ஹிப்னட்டைஸ் பண்ணிக்கிறவன் ராக்கெட் வட்டி வசூலிச்சிருந்தாலும் நோய் வர்ரதில்லை (சில காலம்) இன்ன பிற காரணங்களால் ஒரு நோய் ப்ரசன்ட் போட்டாச்சுன்னா மனசு கலகலத்து ஊர்ப்பட்ட நோய்களும் வந்துருது .அது வேற கதை .

முடியும்-முடியாதுங்கற ஒரே விஷயத்துல தானா புத்திக்கும் புத்திரர்களுக்கும் தொடர்பு ஏற்படுது? இல்லிங்ணா. பல மேட்டரு இருக்கு.
முலைக்காம்புக்கு பதில் ரப்பர் சூப்பான்ல காம்ப்ரமைஸ் ஆகிற புத்தி செக்ஸ் மேட்டர்ல கூட காம்ப்ரமைஸ் ஆயிரும். மாஸ்டர்பேஷன்ல இருந்து , ஹோமோ/லெஸ்பியன் , அனிமல் செக்ஸ், கள்ள உறவு இப்படி காம்ப்ரமைஸ் ஆயிட்டே இருக்கும்.

மாஸ்டர் பேஷன் பத்தி நிறைய எழுதியிருக்கன். இதுக்கு பழக்கப்பட்டாலும் பரவால்ல, இதுலயே திருப்தியும் அடைஞ்சு தொலைச்சா என்னாகும்?
ஹோமோவா இருந்தவனுக்கு மனைவியோட என்னமாதிரி அட்டாச் மென்ட் வரும்? கைக்குழந்தைங்க எல்லார் மேலயும் மூத்திரம் விட்டுராது. வளர்ந்த ஆண் உடலும் இப்படித்தான் . அங்கே மூத்திரம் -இங்கே விந்து . ஏதோ வம்படியா அடிச்சு புடிச்சு உறவில் இறங்கினாலும் பெப்பே தான்.
பாற்கடலை கடைஞ்சு அமுதம் எடுத்த கணக்கா உள்ளுக்குள்ள ஊறனும். இவன் மைண்ட்ல இவனோட “காதலன்”இருக்க. படுக்கையில மனைவி இருக்க? என்னாத்த ஊறி ..

இப்ப புரியுதா? அஞ்சாமிடம் கரீட்டா இருந்தா புத்தி கரீட்டா இருக்கும் (ஐ மீன் பாசிட்டிவ்) ,புத்தி கரீட்டா இருந்தா நார்மல் செக்ஸுவல் லைஃப். அது நார்மலா இருந்தா காலப்போக்குல எல்லாம் சமனாகி கருவுறுதல் நடக்கும்.

எப்படியா கொத்த தம்பதிக்கிடையிலும் ஆரம்பத்துல காமம் தான் தலைவிரிச்சாடும், காலப்போக்குல அது இரண்டாம் பட்சமாகி அன்பை காட்டும் ஒரு சாதனமாகி முதிர்ச்சி பெறும் போது உருவாகும் கரு நிச்சயமா பெட்டர் சாய்ஸா தான் இருக்கும்.

அதென்னா நேர்மறை /பாசிட்டிவ். இதெல்லாம் தடிமனான இங்கிலீஸ் புஸ்தவத்துலருந்து கத்துக்கறது இல்லிங்ணா. இதெல்லாம் ஜீன்லயே இருக்கனும். நாங்க ஜோதிஷ பரிபாஷையில பூர்வ புண்ணியம்னு சொல்றம்.

எப்பவும் சொல்ற விதிதான். அஞ்சாம் பாவம் 100% ஃப்ரூட் ஃபுல்லா இருந்தா பூர்வ புண்ணியம் (ஜீன்ஸ்) ஓகே, புத்தி ஓகே,புள்ள குட்டியும் ஓகே. எல்லாம் நார்மலா இருக்கும் போது பெயர் புகழுக்கு ஆசைப்படாத மன நிலை ஓகே. எப்பல்லாம் நாம பெயர் புகழுக்கு ஆசைப்படாம இருக்கமோ -இன்னம் சொல்லப்போனா அவமானங்களுக்கு ப்ரிப்பேர் ஆயிர்ரமோ அப்ப பெயர் புகழுக்கு குறைவே இருக்காது.
செரி ..உபகதைகள்,உதாரணங்கள் இல்லாம நேரடியா சொல்லிட்டன். புரியாதவிக டோன்ட் ஒர்ரி.அடுத்த பதிவுல படம் வரைஞ்சு பாகங்கள் குறிச்சுரலாம். லூஸ்ல விடுங்க.

கில்மா 365 (வீடியோ)

20150607_111649எச்சரிக்கை:
இந்த பதிவின் இறுதியில் கில்மா 365 என்ற பெயரில் சொந்த தயாரிப்பிலான ஒரு பலான வீடியோவுக்கான லிங்க் கொடுத்திருக்கன். சொந்த தயாரிப்புன்னா? ஹி ஹி..டெக்னிக்கலா. பிடிஎஃப் -ஐ ஜேபிஜி ஆக்கி -அதை ஸ்லைட் ஷோ ஆக்கி தந்திருக்கம். பின்னணிக்கு சூப்பர் சாங் வேற.

(மைனஸ் 18 வயதினர் தாய்க்குலம்/ஹிப்பாக்கிரட்ஸ் இந்த பதிவையே தவிர்த்துவிடுவது நலம்)

கில்மா 64 தெரியும் ( 64 பொசிஷனுங்கோ) அதென்ன 365? ஒரு மின் நூலை பார்த்த உடனே நமுக்கும் இதே டவுட்டு தேன். வருசத்துக்கு 365 நாள். இந்த 365 நாளைக்கும் ஒவ்வொரு பொசிஷனுன்னுட்டு கணக்கு பண்ணியிருக்காய்ங்க. ( அவசரத்துல 12 இன்டு 3 நாளை கூட கழிக்க காணோம்)
கில்மா மேட்டர்ல ஆரம்ப காலத்துல -ஐ மீன் ப்ளாக் எழுதிக்கிட்டிருந்த காலத்துல நோண்டி நுங்கெடுத்து அடிப்படையான விஷயங்களை எல்லாம் பந்தி வச்சாச்சு. இந்த 64 கதையே சந்தேகாஸ்பதம்.

இதை எல்லாம் ட்ரை பண்ணனும்னா கூட பாரத் சர்க்கஸ்ல அப்ரன்டிசாவாச்சும் இருந்திருக்கோனம். இதுல 365 ஆம். நம்ம எழுத்துல கில்மா மேட்டருங்கறது ஜஸ்ட் ஃப்ளேவருக்காவ சேர்க்கற விஷயம்.

தாளி கவைக்குதவாத மேட்டரை கிறுக்கிட்டு கவனம் பெற சனம் என்னென்னமோ பண்றாய்ங்க. நாம ஆராய்ச்சிக்கு உகந்த ஆராய்ச்சி பண்ணா டாக்டரேட்டுக்கு தகுதியாக்க கூடிய வாழ்க்கைக்கு சொந்த காரனா இருந்துக்கிட்டு ஜஸ்ட் கூச்சம் காரணமாவே பம்மிக்கிட்டிருக்கம்.
ஜஸ்ட் சுய நலத்துக்காவ – சுய லாபத்துக்காவ சனம் என்னென்னமோ செய்துர்ராய்ங்க. நாம உசந்தா இந்த நாடே உசரும். எனவே தான் இந்த விஷய பரீட்சை . (தூற்றுவார் தூற்றட்டும்)

இந்த 64 மற்றும் 365 எல்லாம் பசி இல்லாதவன் ருசிக்கு அலையற கதை தான். அசலான பசி – ருசிக்கு ப்ளூ ப்ரிண்டே இருக்கு. இந்த சமாசாரங்களை “ஜோதிடமும் தாம்பத்யமும்”ங்கற நம்ம புஸ்தவத்துல டீட்டெய்லா கொடுத்திருக்கம்.

இது மட்டுமா “ஆண் பெண் வித்யாசங்கள்”ங்கற புஸ்தவத்துல ஆண் பெண்ணையும்,பெண் ஆணையும் புரிஞ்சுக்க உதவக்கூடிய மனவியல்,பாலியல்,ஜோதிட உண்மைகளை விலாவாரியா கொடுத்திருக்கம்.

உபரியா ஜோதிடம் 360 (திருத்திய பதிப்பு) , பணம் பணம் பணம் என்ற இரண்டு புஸ்தவமும் எழுதி வெளியிட்டிருக்கம். அச்சிட்ட 2000 பிரதிகளில் நூறுக்கும் குறைவான பிரதிகள் தவிர எல்லாமே சோல்ட் அவுட்.

உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தா கிடைக்கும். விலை: நான்கு புத்தகங்களும் ரூ.200 பதிவு பார்சல் செலவு : ரூ 50 (பம்பர் ஆஃபர்: ஒரு செட்டுக்கு காசு அனுப்பினால் ஒரு செட் இலவசமுங்கோ)

நூல் விலை+பதிவு பார்சல் கட்டணத்தை செலுத்த வேண்டிய வங்கி கணக்கு:
Name: Sundaresan Murugan A/C No: 030333022274
Name of the Bank : State Bank of India
Branch Name: GREAMSPET Branch Code: 7083
IFSC Code: SBIN0007083
Address: C.B.ROAD City/State: CHITTOOR, AP
Pincode: 517002 Swift Code: N/A RTGS : YES

எம்.ஓ அனுப்புவோர்: சித்தூர் முருகேசன்,17-201,கும்மரா தெரு,சித்தூர் ஆ.பி 517001 முகவரிக்கு அனுப்பவும்.கூப்பனில் உங்கள் முகவரி கட்டாயம்.(தனிய ஒரு மெயிலும் தட்டிவிட்டுருங்க ப்ளீஸ்)

வங்கி கணக்கில் செலுத்துவோர் நூல்கள் அனுப்பவேண்டிய விலாசத்தை swamy7867@gmail.com மெயில் முகவரிக்கு உடனே தெரிவிக்கவும்.
பேபால் மெயில் முகவரி : swamy7867@gmail.com
ஆவலுடன் எதிர்பார்த்து வந்த வீடியோ இங்கே

காலமாற்றமும் -கிரக பலனும்: 5

20150610_221406

அண்ணே வணக்கம்ணே !
காலம் மாறியது .காட்சி மாறியது.கிரக பலன் மட்டும் மாறாதா என்ன? இந்த கேள்வியோட இந்த தொடரை எழுதிக்கிட்டிருக்கம். கடந்த பதிவுல நாலாம் பாவத்தை பத்தி பேசினம்.

தாய்,வீடு,வாகனம்,கல்வி இந்த 4 அம்சங்களும் நாலாம் பாவத்தை பொருத்த மேட்டரு. நம்மாளுங்க தாய் மேட்டரை டீல்ல விட்டாச்சு. இது வெறுமனே மம்மிகளோட தப்புன்னு சொல்லமாட்டேன்.

பால்ய திருமணம் எப்படி சைன்டிஃபிக்கா,பயாலஜிக்கலா ,மெடிக்கலா,சைக்கலாஜிக்கலா தப்போ அதே மாதிரி லேட் மேரேஜ் கூட மேற்சொன்ன எல்லா அடிப்படையிலும் தப்புத்தான். ஆனால் இதைத்தான் தொடர்ந்துக்கிட்டிருக்கம்.

கலைஞர் சொல்வாரு நான் கோபக்காரனாக இருந்த போது பிறந்தவர் அழகிரி. அமைதிக்கு மாறிக்கொண்டிருந்த போது பிறந்தவர் ஸ்டாலின்.
மேலுக்கு பார்க்கும் போது அழகிரி கெட்டவர் போலும் -ஸ்டாலின் நல்லவர் போலும் தெரியும்.ஆனால் அழகிரி ஸ்பான்டேனியஸா இருக்காரு. இயற்கையா இருக்காரு.ஸ்டாலின் கேல்க்குலேட்டடா இருக்காரு.இயற்கைக்கு விரோதமா இருக்காரு (மறைக்காரு)

இதுல பொலிட்டிக்கலா ஸ்டாலின் லாபமடையலாம்.ஆனால் சைக்கலாஜிக்கலா பார்த்தா? அதனோட இம்பாக்ட் உடல் மேல விழுந்தா? மெட்டாஷ்.
அழகிரி ? பொலிட்டிக்கலா நஷ்டப்பட்டிருக்கலாம். இன்னம் 30 வருசம் போனாலும் இப்டியே இருப்பாரு. (இயற்கையா,அப்பாவியா,ஸ்பான்டேனியஸா) இது சேஃப்.

உரிய வயசுல கண்ணாலம் கட்டி 18/19/20 வயசுல பிள்ளை பெத்தா -அந்த சமயம் ஆண் பெண்களுக்கு தங்கள் மேல -சமுதாயத்து மேல எதிர்காலத்து மேல அசைக்க முடியாத நம்பிக்கை இருந்திருக்கும். மனித வாழ்வின் அர்த்தமற்ற தன்மை உறைச்சிருக்காது. பாசம் ,நேசம் , இத்யாதி மேல எல்லாம் ட்ரஸ்ட் இருக்கும். அந்த காலகட்டத்துல பிறக்கிற குழந்தைகளுக்கும் இதெல்லாம் இருக்கும்.

தாளி ..நாற்பது வயசுக்கு என்ன ஆகுது? நம்பிக்கை நசிய ஆரம்பிக்குது, மனித வாழ்வின் அர்த்தமற்ற தன்மை புரிபட்டு போகுது.பாசம் ,நேசம் , இத்யாதி எல்லாம் எப்படியா கொத்த வேஷம்னு புரிஞ்சு போகுது . அப்பம் பிறக்கிற குழந்தைங்க எப்படி இருக்கும்?

நாற்பது வயசுக்கு மிந்தி கம்யூனிஸ்டா இல்லாதவனும் – நாற்பதுக்கு மேல கம்யூனிஸ்டா இருக்கிறவனும் அப் நார்மல்னு சொல்வாய்ங்க. ஏன்னா கடந்த ரெண்டு பேராவுல சொன்ன அதே காரணம் தான். ஏஜ் ஃபேக்டர், அனுபவங்கள், யதார்த்தங்கள் மாத்திருது.

கண்ணதாசன் சொல்வாரு .இரணியன் யூத்தா இருந்திருந்தா நரசிம்ம அவதாரத்தோட ஃபைட் பண்ணி பார்த்திருப்பான். யூத்தா இருக்கிறச்சா பெத்தா பிறக்கிறது யூத்தா இருக்கும். நாற்பது வயசுல நரி புத்தில்லாம் வந்த பிறவு பெத்தா அது ஃபிசிக்கலா யூத்தா இருக்கலாம். சைக்கலாஜிக்கலா? சான்சே கிடையாது.

தாய்-மகன்(ள்) பாசம்லாம் காலாவதியாக முக்கிய காரணம் இதான். மேற்கொண்டு பார்த்தா சிசேரியன். வேலைக்கு போக வேண்டியிருக்கிறது. தேவைகளின் அதிகரிப்பு. தேவைகளுக்கும் -சோர்ஸுக்கும் இடையிலான இடைவெளி -அதை நிரப்புதற்கான அலைக்கழிப்புகள் இப்படி பல காரணம் இருக்கு.
நம்ம கலாசாரம்,பண்பாடுல்லாம் பெண்ணை தாய் என்ற பாத்திரத்துக்கு மோல்ட் பண்ணும், தாய் என்ற இலக்கை நோக்கியே நகர்த்தும். இன்னைக்கு மேற்கத்திய கலாசாரம்,உலக மயம்,தனியார் மயம்,தாராளமயம், கன்ஸ்யூமரிசம் எல்லாம் சேர்ந்து சர்வைவல் கிரைசிஸ்ல கொண்டு தள்ளிருச்சு.
இந்த நிலையில உருவாகும் கரு அதன் எதிர்கால செயல்பாடுகளும் இதை ஒட்டித்தானே இருக்கும். அடுத்தது கல்வி. இதுக்கு டாப் ப்ரியாரிட்டி கொடுக்கிறாய்ங்க. தாயுடன் நெருக்கம் இல்லை. இளைப்பாறுதல் இல்லை. கல்வி குறித்த மன அழுத்தம் ஒரு பக்கம் துரத்துது . இந்த அழுத்தம் வாகனம் மீதான மோகமா மாறுது.

ஸ்தூலமா பார்க்கும் போது தாய்-வீடு-வாகனம்-கல்வி இதெல்லாம் வேற வேற தான். ஆனால் ஜோதிட ரீதியா பார்க்கும் போது இது நாலும் ஒன்னு தான். கொசுறா இதயமும் ஒன்னுதான்.

தாய் மடி கிடைக்கல, வீடு தங்க பிடிக்கல. கல்வி ? தப்ப வழியே இல்லை. இதனால வாகனமே தாய்மடியாகுது. இன்னைக்கு மாணவர்கள் கல்வி மேட்டர்ல ப்ரஷராலயோ ? ப்ளெஷராலயோ சொல்லி அடிக்க காரணம்.. தாய் மடி கிட்டாமையும், வீடு தங்காமையும் தான். லாஜிக்கை புரிஞ்சுக்கிட்டு வாகன மேட்டரையும் தியாகம் பண்ணிட்டு பெருசாவே சாதிக்கலாம். ஒரு வேளை தாய் மடி கிட்டலாம், வீடு மீண்டும் வீடாக மாறலாம்.

மன்சனோட சைக்கலாஜியே என்னன்னா ஒன்னு கிடைக்கலைன்னா அதனோட வடு மைண்ட்ல ஆழமா இருக்கும். அகாலமா அதுக்காவ போராடுவாய்ங்க. அபத்தமா ஆழ்மனசுல இதுக்கு பதில் அது,அதுக்கு பதில் இதுன்னு கன்ஃபீஸ் ஆயிருது.ப்ரொசீட் ஆயிர்ராய்ங்க.

சிகரட்,கம்பெனி ட்ரிங்ஸ், பியர்,லிக்கர் எல்லாமே நிப்பிள் காம்ப்ளெக்ஸுங்கறாய்ங்கல்ல. ஜோதிட ரீதியா தாய் மடிக்கு பதில் வாகனம். அடுத்தது வேலை கிடைச்சதுமே சைட், ஃப்ளாட் வாங்கறது ,அப்பார்ட்மென்ட் புக் பண்றதெல்லாம் கூட இந்த கேட்டகிரி .

அன்னைக்கு வீட்டை விட்டம் -இப்பம் வீட்டை பிடிக்கனும். இது எங்கே பிரச்சினை ஆகுதுன்னா வீடு சுக்கிர காரகம்,மனைவியும் சுக்ர காரகம். சுக்கிரன் அரைகுறை பலத்தோட இருந்தா சுக்கிர பலம்லாம் சொந்த வீட்டு கனவுல எக்ஸாஸ்ட் ஆகி முத்தின வெண்டைக்காயா -முன் மண்டையில சொட்டையோட வாழவேண்டியதாயிருது.

இந்த போராட்டம்லாம் என்ன பண்ணுதுன்னா ஹார்ட்டை பதம் பார்த்துருது. இன்னைக்கு இதய நோய்கள் அதிகரிச்சிருக்க என்னென்னமோ ஸ்தூல காரணங்கள் இருக்கு. ஆனால் ஜோதிட ரீதியா பார்த்தா ..இதய நோய்க்கு காரணம்…

தாய் மடி கிட்டாதது
வீடு வீடா இல்லாதது
வாகன மயக்கம்
சொந்த வீட்டு கனவு
இதெல்லாம் உள்ளார்ந்த மன அழுத்தத்தை ஏற்படுத்தி இதய நோயா முடியுது . கடந்த இந்த பதிவுகளை படிச்சதுல நாலாம் பாவ பலன் எப்டில்லாம் மாறியிருக்குன்னு ஒரு ஐடியா வந்திருக்கும்னு நினைக்கிறேன்.அடுத்த பதிவுல ஐந்தாம் பாவத்தை பார்ப்பம்.

காலமாற்றமும் -கிரக பலனும்: 4

1
அண்ணே வணக்கம்ணே !
காலமாற்றமும் -கிரக பலனும்ங்கற தலைப்புல ஒவ்வொரு பாவமா பலன் எப்டி மாறுதுன்னு அனலைஸ் பண்ணிக்கிட்டிருக்கம்.இதுவரை லக்ன,தன,சகோதர பாவங்களோட பலன் காலமாற்றதால எப்படி மாறுதுன்னு பார்த்தம். இன்னைக்கு நாலாம் பாவம்.

நாலுங்கறது தாய்,வீடு,வாகனம்,கல்வி,இதயம்ங்கற விஷயங்களை காட்டற பாவம். இந்த மேட்டர்ல காலமாற்றத்தால ஏற்பட்டிருக்கிற மாற்றங்கள் இந்த பாவ பலனை /இந்த பாவத்துல நின்ன கிரகங்களோட பலனை எப்படி மாத்துதுன்னு பார்த்துரலாம்.முக்கியமா யூத்துக்கு வாகன மேட்டர்ல வெறி,ஆண்மைக்குறைவு, திருமண தாமதம், கண்ணாலம் கட்டறதுக்கு மிந்தியே ஐ.எம் .இ ல அப்பார்ட்மென்டு,விகாரத்துக்கள், இதய நோய்கள் இதெல்லாம் காலமாற்றத்தால கிரக பலன்ல ஏற்பட்ட மாற்றங்கள் தான். எப்படின்னு இந்த பதிவுல பார்த்துரலாம்.

மொத காரகம் தாய். ஏதோ ஒரு தொ.கா நிகழ்ச்சியில ஆரோ ஒருத்தர் சொன்ன மேட்டர் இது ” அந்த காலத்துல அம்மாங்கள பிள்ளைங்க அது வேணம் இது வேணம்னு கேட்டா இருப்பா நாளக்கு செய்து தரேம்பாங்க. இப்ப உள்ள அம்மாங்க இருப்பா நாளைக்கு வாங்கி தரேங்கறாய்ங்க”
ரெண்டுக்கும் எவ்ளோ வித்யாசம் இருக்கு பாருங்க.

வேலைக்கு செல்லும் தாய்மார் தான் இப்டின்னு இல்லை. ஹவுஸ் வைஃப் மேட்டர்லயும் இந்த இழவுதான். நாம பொறந்தது 1967. அம்மா காலத்துலயே அப்பாவுக்கு 55 வயசு ஆன காலகட்டத்துல வீட்ல டிஃபன் பண்றதை விட்டுட்டாய்ங்க. இட்லிக்காரம்மா வீட்ல இருந்து வாங்கியாந்து வைக்க ஆரம்பிச்சுட்டாய்ங்க.

எங்கம்மாவோட மேக் அப்னா ஒரு பெரிய பாட்டில்ல ஸ்னோ இருக்கும். கிருஷ்ணர் கால் கட்டை விரலை வாய்ல வச்சிருக்கிற லோகோ போட்ட பவுடர் ஒன்னு போடுவாய்ங்க. அதுவும் அண்டை அசல்னு போறாப்ல இருந்தா தான். தலைக்கு? சாதாரண சீயக்காய் தூள், உடம்புக்கு அரப்பு பொடின்னு நினைக்கிறேன். சோப்பு? லைஃப் பாய்.

கண்ணாலமாகி பல காலம் எங்க அத்தை ,ரெண்டு சித்தப்பன் மார், கொசுறா எங்க பாட்டிக்கு அக்கா பையன் ஒருத்தன் வீட்டோடயே இருந்தாய்ங்க. எங்க பாட்டி ?

சாடிஸ்டுன்னு சொல்ல முடியாது .ஆனால் “இருப்பை” பற்றிய கவலை இருக்கலாமில்லையா? தன் இருப்பை உறுதிப்படுத்திக்க அப்பப்போ சைக்கிள் கேப்ல ஆப்பு வச்சிட்டே இருக்கும்.

அப்பா வாங்கிக்கிட்டு வர்ர புடவை தான் புடவை. திண்ணை டெய்லர் தைச்சு கொடுக்கிற ஜாக்கிட்டு தான் ஜாக்கிட்டு. ஏதோ சர்வீஸ் முடிய போகுது. எல்.டி.சி லாப்ஸ் ஆகுதுன்னு ஒரு தடவை செகண்ட் கிளாஸ் ரயில்ல ஒரு டூர் போய் வந்தாப்ல ஞா.

வீடு? மோல்டிங் போட்டு , சென்டரிங் அவுக்கிறதுக்கு மிந்தி போல இருக்கும் . மேட்டர் என்னடான்னா பழைய ஓட்டு வீடு எல்லா பனங்கழிக்கும் முட்டு கொடுத்து வச்சிருப்பாய்ங்க. வாகனம்னா ? சைக்கிள் தான். கடேசி காலத்துல டிஆர் டிஏ வுல அக்கவுண்ட்ஸ் ஆஃபீசரான பிறவு பிக் அப் பண்ணிக்க ஜீப் வரும் தட்ஸால்

இந்த மாதிரி வீட்ல இருக்கிற வரை அம்மாவும் ஓகே .கல்வியும் ஓகே. வீட்டு உறுப்பினர்களுக்கிடையில் இன்டராக்சன்,பந்தம்,பாசம் எல்லாம் ஓகே.
ஏ.சி நாயக்கர் சிமெண்ட் ஃபேக்டரி இருக்கிற தைரியத்துல சிமெண்ட்ல த்ராய் ,ஸ்லாப் போட்டு , அன் சோல்ட் மொசைக் எல்லாம் போட்டு வீடு கட்னாரு .செம பல்பு . (இடைக்காலத்துல கோழி பண்ணைக்கு போடற லைட் ரூஃப் போட்டது தனிக்கதை .)

யூட்ரஸ் கேன்சருக்கு அடையாளமா அம்மாவுக்கு மார்ல கட்டி . சி.எம்.சி காரவிக கல்லா கட்ட அந்த டெஸ்டு இந்த டெஸ்டுன்னு கோல்டன் செகன்ட்சை எல்லாம் விரயமாக்கி கேன்சர் வவுத்துக்கு பரவி , கேன்சரை விட கொடூரமான கீமோ தெரஃபிக்கு அம்மாவை பலி கொடுத்துட்டம்.

பெரிய அண்ணனுக்கு மாமன் மகளை முடிக்க, அண்ணனுக்கு வெளியூர்ல வேலைங்கற “நியாயமான” காரணத்தால அவிக பொட்டிய கட்ட ரூட்டர் இல்லாத கம்ப்யூட்டர்ங்க மாதிரி அண்ணன் தம்பில்லாம் சுயேச்சையா செயல்பட ஆரம்பிச்சு பொளப்பே நாறிப்போச்சு.

இது நடந்த கதை .இதுக்கான ஜோதிட காரண காரியங்களை சொல்றேன்.

நம்ம ஜாதகத்துல நாலாமிடத்துல செவ் +கேது சேர்க்கை (இத்தனைக்கும் கடகலக்னம் தான் -செவ் எங்கிருந்தாலும் தோஷமில்லேன்னு ஒரு ப்ரொவிஷன் இருக்கு )

நாலாமிடம் நாஸ்தின்னா தாய் காலி ஆகனும் (பாட்டி தீர்காயுசா இருந்தா செஞ்சுரிக்கு கொட்டு வாய்ல தான் டிக்கெட் ),வீடு சென்டரிங் அவுக்காத கணக்கா இருந்த வரை ஓகே. அதை கட்னதுமே பல்பு. வாகனம்? சைக்கிளா இருந்தவரை ஓகே.அது கெவுர்மென்டு ஜீப்பா மாறினதுமே பல்பு . கல்வி? பத்தாங்கிளாஸுல 72 % ,இன்டர்ல 50% ,டிகிரியில ஒரு சப்ஜெக்ட் தவிர்த்து (ஃபெயிலுங்கோ) 35 %.

செரி ..சொந்த கதை போதும்.மேட்டருக்கு வரேன்.

இன்னைக்கு இதய நோய்கள் சாஸ்தியாயிட்டே இருக்கு. இதுக்கு என்ன காரணம்னு பார்ப்பம். மொத பாய்ண்ட் தாய்.குழந்தைகளுக்கு முதலும்-முழுமையுமான புகலிடம்.

ஆனால் ஆஃபீஸ் கோயர்ஸ்,ஹவுஸ் வைவ்ஸ் எல்லாருமே தங்களை ஜஸ்ட் பெண்களா முன்னிறுத்திக்கறதுல தான் ஆர்வமா இருக்காய்ங்க. அதுவும் நிறைய பெண்கள் தங்களை உடலாகவே உணர்ராய்ங்க. உடலாவே வெளிப்படுத்தறாய்ங்க. அதை கட்டிக்காக்கவே துடிக்கிறாய்ங்க.

ஆண் ,பெண் யாரா இருந்தாலும் பேசிக்கலா ஒரு உயிர் தான். உயிருக்கு உணர்வு முக்கியம். உடலின் செயல்பாடு உங்கள் உணர்வு வழிதான் நடக்கும்.
அந்த காலத்துல ஒவ்வொரு ஆண் குழந்தையும் ஒரு கணவனாக -ஒரு தந்தையாக வடிவமைக்கப்பட்டது . ஒவ்வொரு பெண் குழந்தையும் மனைவியாகவும் -தாயாகவும் வடிவமைக்கப்பட்டது .

இப்பல்லாம் ஆண் ஒரு பொருளீட்டும் இயந்திரமாகவும்,பெண் அந்த இயந்திரத்தின் எக்ஸ்டென்ஷனாவும் தான் வடிவமைக்கப்படறாய்ங்க.
கணவன் -மனைவிங்கறதையாவது மேல் ஷேவனிஸ்ட் சொசைட்டியின் வெளிப்பாடுன்னு தள்ளிரலாம்.ஆனால் தாய்மை?இப்பல்லாம் இது பெண்ணோட ஆரோக்கியத்துக்கான சவால் போலவும் , அவளது ஃபிட்னெஸ்,அழகுக்கு ஆபத்தாவும் போதிக்கப்படுது.

இயற்கை விதியின் படி ஒரு ஆணோ -ஒரு பெண்ணோ உரிய காலத்துல உடலுறவுக்கோ – குழந்தை பிறப்புக்கோ இலக்காகலின்னா அவிக நாட் ஒன்லி சைக்கலாஜிக்கலி, ஃபிசிக்கலா கூட நார்மலா இருக்கவே முடியாது . இவிக சமூகத்துக்கே பேராபத்து.

இதை எல்லாம் ஆரு சொல்றது? செரி ஆரோ சொன்னாலும் கேட்க ஆரிருக்கா? இதன் விளைவு என்னாச்சுன்னா அனைத்து ஜாதகர்களுக்கும் தாய்ங்கற ஒரு கொடை மறுக்கப்படுது . உள்ளடக்கப்பட்ட செக்ஸ் எப்படி வன்முறையா வெடிக்குதோ அப்படி மறுக்கப்பட்ட தாயன்பு வாகன வெறியாவும் ,அப்பார்ட்மென்ட் வெறியாவும் மாறுது.இது ஆண்மைக்குறைவு , திருமண தாமதம், விவாகரத்து இத்யாதிக்கு காரணமாகி இட் லீட்ஸ் டு டிசாஸ்டர்ஸ்..
(தொடர்ந்து பேசலாம்)

காலமாற்றமும் -ஜோதிட பலனும் :4

DSC_9123 - Copy

அண்ணே வணக்கம்ணே !
கம்ப்யூட்டர்ல அதுவும் இணையத்துல தமிழ்ல எழுதமுடியுங்கறதே தெரியாத ஒரு கால கட்டம். இதுவும் சாத்தியம் தான்னு அந்தி மழை டாட் காம் மூலமாத்தான் தெரிஞ்சுக்கிட்டன்.

நாமதேன் இப்போ ராமசாமி ஆச்சே. படக்குன்னு நினைவில் இருந்து ஒரு கவிதைய தட்டி விட்டம்.

கலைவாணியின் கைகளில் கித்தார்
மாற வில்லையே கவிஞர்கள்

இதான் அந்த கவிதை .லைஃப்ல மாற்றம் என்பது கட்டாயம். அதை ஏற்பவர்களுக்கு அது ஜஸ்ட் ஒரு மாற்றம் தான்.ஏற்காதவர்களுக்கு? அது ஒரு மரணம்.

மொதல்ல தாயின் கருப்பை.பிறகு தாய்மடி. அப்டியே தந்தையின் தோள்,அக்கம் பக்கம்,ஸ்கூல்,காலேஜு ,வேலை பொஞ்சாதி இப்டி மாறிட்டே இருக்கும்.

மாற்றத்தை ஏற்காதவன் பொளப்பு நாய் பொளப்பாயிரும்.

மாற்றம் தீங்கே விளைவிப்பதாய் இருந்தாலும் அதை கொஞ்சம் ஜாலக்கா யூஸ் பண்ணி (வித் மினிமைஸ்ட் டேமேஜஸ்) பயனடைய தான் பார்க்கனும்.

காலமாற்றம்ங்கற தலைப்புல மொத ரெண்டு பாவங்களை அனலைஸ் பண்ணிட்டம். இன்னைக்கு 3 ஆம் பாவத்தை பார்ப்பம்.

இதுக்கு சகோதர ஸ்தானம்னு பேர். ஒரு காலத்துல பெரியப்பா சித்தப்பா பையனை கூட எங்க அண்ணாத்தன்னு சொன்ன நம்ம தமிழ் இனம் தான் இப்போ கூட பொறந்த அண்ணனை கூட ப்ரதர்னு தள்ளி வைக்குது.

அண்ணன் தம்பி பாசம்லாம் போயே போச் (மொதல்ல அப்டி ஒரு கேரக்டர் இருந்தாதானே? நாமிருவர் நமக்கிருவர்னு ஆரம்பிச்சு நாம் இருவர் நமக்கொருவர்னு வந்துட்டாய்ங்க. இப்போ நாமே இருவர். நமக்கேன் இன்னொருவர்னு ஆரம்பிச்சாலும் ஆச்சரிய படறதுக்கில்லை.)

அந்த காலத்துலயும் வெட்டி மடிஞ்ச அண்ணன் தம்பி உண்டு.இல்லேங்கல.ஆனால் அதெல்லாம் விதிவிலக்கு தான். ஆனால் இன்னைக்கு? ஆக இந்த மாற்றத்தால் 3 ஆம் பாவத்துக்குண்டா தீயான பலன் கொஞ்சம் குறையும்.

தம்பி உடையான் படைக்கு அஞ்சான்னு ஒரு பழமொழி. தம்பின்னு ஒருத்தன் இருந்தால் அண்ணனுக்கு பிரச்சினைன்னா ஃபீல்டுக்கு வந்துருவான்னு அருத்தம்.

மவளுக்கு கண்ணால ஏற்பாடு நடக்குது. கல்யாண பத்திரிக்கை ப்ரூஃப் பார்க்கிறேன். பையன் வீட்டுக்காரவிக பத்திரிக்கையோட கடேசியில இப்படிக்குன்னு அரைடஜன் பேர் போட்டிருந்தாய்ங்க.

செரி நமக்கும் தம்பின்னு ஒரு கேரக்டர் இருக்கில்லையா கேட்டுப்பார்ப்பம்னு ஃபோன் போட்டேன். ” நான் வெளியூர் ல இருக்கேன். என் பேரெல்லாம் எதுக்குப்பா”ன்னுட்டான்.

அண்ணன் தம்பின்னா மோர் ஆர் லெஸ் ஈக்வல் ஏஜ்ல இருப்பாய்ங்க. அந்த காலத்துல முக்கிய தொழில் விவசாயம். ஒரு மரத்து பறவைகள் கணக்கா ஒன்னா போயி ஒன்னா வந்து கூட்ல அடையனும். இன்னைக்கு அப்படியா? வர்க போராட்டம் இன்னைக்கு ஒரே வீட்ல நடக்குது.

ஆக மொத்தத்துல 3 ஆம் பாவம் சகோதர ஸ்தானமா டப்ஸாயிருச்சு.

அடுத்ததா இந்த பாவம் குறுகிய தூர பயணங்களை காட்டும். வித் இன் தி சிட்டி? இன்னைக்கு மோஸ்ட்லி எல்லாருமே தங்கள் வாழ் நாளின் குறிப்பிட்ட பங்கை பிரயாணத்துல தொலைக்கிறாய்ங்க. ( நெல்ல வேளையா நாம கிரேட் எஸ்கேப்)

என்னை பொருத்தவரை பயணம்ங்கறதே ஒரு நரகம். (இலக்கு சொர்கமா கூட இருக்கலாம்.அது வேற மேட்டர்) அதையும் அதுவும் தினம் தினம்னா? அதுவும் அடிச்சு பிடிச்சுன்னா? ஸ் ..யப்பா மிடியல.

ஆக இந்த பயணங்களாலும் 3 ஆம் பாவத்தின் தோஷம் பெருமளவு குறைகிறது. இதுவே பப்ளிக் ட்ரான்ஸ்போர்ட்டுன்னா சுத்தமா இல்லாமலே போயிரும். தோஷத்தை சொன்னேன். சொந்த வாகனம்னா ஓரளவு குறையும். டிரைவர்/ஏசி.கார்னா பலன் தலை கீழா மாறும்.

மேற்படி காரணங்களால் தோஷம் குறைந்து என்ன நற்பலன் ஏற்படுகிறதுன்னா மனோ தைரியம் குறையுது. ( ஹி ஹி 3 என்பது மாரக ஸ்தானம்.ஆகவே இந்த பாவம் கெட்டு குட்டிச்சுவரா போகனும். அப்பத்தேன் மனோ தைரியம் கூடும். )

பஸ்ஸுல நம்ம பக்கத்துல இருக்கிறவனை கத்தியால செருகிட்டு போனா கூட ஒன்னும் நடக்காத மாதிரி முன் ஸ்டாப்ல இறங்கி அடுத்த பஸ்ல ஏறிப்போயிர்ரம்.

அடுத்து இசை . இதுக்கும் இந்த பாவம் தான் காரகம். ஹெட் செட்ல பாட்டு கேட்டு சுகம் காணுகிறோம். சவுண்ட் பாக்ஸ் அவுட் ஆயிருது ( சுப -அசுப பலன் பேலன்ஸ் ஆயிருது)