சோதிட புதிர் தொடர் தல முருகேசன் அனுமதியுடன்.

அண்ணே வணக்கம் ஆண்ணே..

போனமுறை

குறைநத தகவல் கொடுத்தது

குறுகிய நேரத்தை கெடுத்து..(இசை தொகை .. சரியா வருதா?)

..  வருந்துகிறேன்….

இம்முறை …. நீங்கள் கேட்ட எல்லா தகவல்களையும் தருகிறேன்..

பெயர்: கிறிஸ்டோபர்.

பாலினம்:ஆண்

வயது :31

கேள்வி.. இவரின் குணம்  என்ன ? செலவாளியா சிக்கன வாதியா? திருமணம் பற்றி சொல்லுங்க..

நன்றி..

சாதகத்துகான லிங்க்..

http://www.mediafire.com/?n1yj3wo5hphyahk

http://www.4shared.com/document/_cYJtYBC/christoperhoro.html

நன்றி…

வினோத்..

அம்மை அவள் கையில் பொம்மை

அண்ணே வணக்கம்ணே,

அல்லாரும் நல்லதமிழ் – ஒழுங்கான தமிழ்னு கோசம் போட்டுக்கிட்டே இருந்தாய்ங்களா?

நமக்குள்ளே இருந்த நாவலர் ( நெடுஞ்செழியின் இல்லிங்கோ) நாலு கால் பாய்ச்சல்ல பாய்ஞ்சு புறப்பட்டுட்டாரு.

அவரோட பாய்ச்சலை பார்க்க இங்கேஅழுத்துங்க

இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் திடீர் ராஜினாமா – திகீர் பின்னணி

நமக்கு மீடியா மேலயோ , மீடியா ஒலி/ஒளி பரப்பற செய்திகள் மேலயோ எந்தவிதமான ஆர்வமோ – அக்கறையோ கிடையாது. ஆனா ஒன்னு இந்த செய்திகள் எல்லாம் எடிட்டர் டேபிள்ள குப்பையா விழுந்துகிடக்கிற ஃபிலிம்  மாதிரி.

இதுல எதை எடுக்கனும் – எதை தள்ளிடனும் – எதை எதுக்கு முன்னே – எதுக்கு பின்னே ஒட்டனும் -எதை வெட்டனும்னு தெரிஞ்சிக்கிட்டா ஓரளவு யூஸ் ஃபுல் தேன். நமக்கு அந்த கப்பாசிட்டி இருக்குதுங்கற நினைப்புல அப்பப்போ செய்திகள் பார்க்கிறது வழக்கம்.

அப்படி அசால்ட்டா இன்னைக்கு மதியம் பார்த்துக்கிட்டிருந்தப்பதேன் ”  இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் ராஜினாமா”ங்கற செய்தி நம்ம கண்ல பட்டுது.

மேம்போக்கா பார்த்தா இது ஒரு வழக்கமான சம்பவமா தோணும். இதில் உள்ள திகீர் பின்னணியை தெரிஞ்சுக்கனும்னா உங்களுக்கு சரித்திரம் தெரிஞ்சிருக்கனும்.

அமெரிக்க தூதரகம்னா அதனோட முழு முதல் வேலை உளவு சொல்றதுதான். (அமெரிக்க தூதர்கள் தம் தாய் நாட்டுக்கு அனுப்பினதா  விக்கிலீக்ஸ் வெளியிட்ட கேபிள்களோட விவரம் ஞா இருக்கில்லை?) உளவுன்னா வெறும் படைபலம் இத்யாதி மட்டுமில்லை.

அமெரிக்கா போட்ட கோட்டை குறிப்பிட்ட நாடு தாண்டாம இருக்கா? அமெரிக்க நலனுக்கு எதிரா எதுனா காரியம் நடக்குதா? – அமெரிக்க எதிரிகளோட செயல்பாடுகள் என்ன?  அமெரிக்கா தடை செய்த  அமைப்புகளோட அரசாங்கம்/ ஆளுங்கட்சி /எதிர்கட்சிகள்/இதர அமைப்புகள் எதுனா தொடர்பு வச்சிருக்கா?
இந்த மாதிரி மேட்டரை எல்லாம் தூதர்கள் அனுப்பிக்கிட்டே இருக்கனும்.

இதான் அமெரிக்க தூதர்களோட அஜெண்டா. இதுல இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எங்கயோ கோட்டைவிட்டுட்டாப்ல இருக்கேன்னு கெஸ் பண்ணா வெரி குட். நெஜமாலுமே அதான் நடந்தாப்ல இருக்கு.லேட்டஸ்டா வெளி வந்த  தமிழக அரசியல் பத்திரிக்கையில  இதுக்கான க்ளூ இருக்கு. -அது என்னங்கறதை ஓப்பன் பண்ற வரை சின்ன சஸ்பென்ஸ். ஒரு சில மாண்டேஜ் ஷாட்ஸை பாருங்க.

* மும்பை தாஜ் ஹோட்டல் சம்பவம்

* சம்பவத்தில் தொடர்புள்ள குற்றவாளிகளின் பட்டியல் வெளியீடு

* பாக் வழக்கமான சால்ஜாப்புகள்

* இந்தியா ,  இந்த மேட்டரை பைசல் பண்றவரை ஒன்னோட பேச்சே இல்லைனு பாக்கிஸ்தானுக்கு    சொல்லிருது.

                                                             இங்கே ஷாட் கட் பண்ணா

இந்தோ -பாக் கிரிக்கெட் போட்டியை பார்க்க பாக் ஜனாதிபதி வராரு. இடையில என்ன நடந்தது? தமிழக அரசியல் ஸ்டேட்மென்ட் படி பார்த்தா ரகசிய பேச்சுவார்த்தைகள் நடந்திருக்கு. இதுல அமெரிக்காவால்
” ஆய் பையனு ” டிக்ளேர் செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ காரவுகளும் இருந்திருக்காய்ங்க.

இந்த மேட்டரை ஸ்மெல் பண்ணி – ஒடனே கேபிள் கொடுக்காம என்னய்யா புடுங்கிக்கிட்டிருந்தேன்னுட்டு தூதரை காச்சியெடுத்து ராஜினாமா செய்யச்சொல்லியிருக்க வாய்ப்பிருக்கா இல்லியா?

சிம்பிள் லாஜிக்.. என்னமோ நடக்குது மர்மமா இருக்குது..

கலை மாமணி விருதுகள் வழங்கும் விழா

அண்ணே வணக்கம் அண்ணே..

=======================

நன்றி திரு மணி அவர்களே.

நன்றி திரு கிருமி,

நன்றி திரு அரைவேக்கடு சோதிடர் அவர்களே.

நன்றி திரு யோகி அவர்களே,

நன்றி திரு கந்தன் அவர்களே,

========================

யாகூவின் ஜெகன்னதா ஹோரொ குருப்பில் இருக்கிறேன்

இது மாதிரி புதிர் விளையாட்டு அங்கே நடக்கும்

அதேபோல் ஒன்றை போடலாமா என நான் தலையிடம் அனுமதி கேட்டேன்..

அவர் சோதிடம் பற்றி போடவும் என்றார்.. அதானே போடப்போறம் என்றபடி பதிவு போட்டுவிட்டேன்..

நிற்க…

மேற்படி சாதகர் பன்னிர் செல்வம் எனது கொலிக் கின் தம்பி..

பெயர் பன்னிர் செல்வம்

வயது 18

பாலினம் ஆண்.

படிப்பு +2

நீங்கள் சொல்லியுள்ளது அனைத்தும் உண்மை தான்.

+1 படிக்கும்போதே போதை, பெண்கள் தொடர்பு… என இருந்தவர் தான்.

அப்பா, அண்ணனுடன் தினமும் சண்டையிட்டவர்.

அந்த சாதகர் 1- எப்ரல் – 2011 காலை 9.30 – 9.45 மணியளவில் வீட்டில் யாரும் இல்லாதபோது..

தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் என்பதை வருத்ததுடன் தெரிவித்து கொள்கிறேன்.

அவரின் சாதததை மேலும் 2 சர்வரில்

http://depositfiles.com/files/pedvbrjud

http://www.mediafire.com/?b56y3l8v5aded7j

ஆயுர் பாவம் கணிக்கும் நம் அண்ணன் டவுசர் பாண்டியின் திறமையை மிகவும் எதிர்பார்த்தேன்..:(

பங்கேற்ற அனைவருக்கும் கம்பெனி சார்பில் நன்றிக்ள்..

மற்றும் அனைவருக்கும் தனிதனியாக நேரில் தரமுடியாததால் இங்கேயே ..இப்போதே ..

கலைமாமணி பட்டம் வழங்கி  மகிழ்கிறோம்…

கலைமாமணி திரு மணி அவர்களே.

கலைமாமணி திரு கிருமி,

கலைமாமணி திரு அரைவேக்கடு சோதிடர் அவர்களே.

கலைமாமணி திரு யோகி அவர்களே,

கலைமாமணி திரு கந்தன் அவர்களே,

அனைவருக்கும் நன்றிகள் … மற்றும் வாழ்த்துக்கள்…

(அட்வான்சுடு கில்மா மேட்டருக்கான லிங்க்.. அனுபவசோதிடம் வெப்சைட்டில் போடலாமான்னு யோசனையாக உள்ளது எனவே என் மெயில் ஐடி  (glomoinc@gmail.com)ஒரு மெயில்  போடவும்.. பதிலில் அனுப்புகிறேன்.)

நன்றி..

 

புற்று நோயும் – மகான்களும் -கே. கந்தன்

முன்னுரை: ( ஹி ஹி முருகேசன் ஸ்பீக்கிங்)

டாடிக்கே அட்வைஸ் பண்ண கந்தன் ஜி பேரை வச்சிருக்கிறதாலயோ என்னமோ கந்தன் சாரு கச்சா முச்சானு ட்ராக் மாறி பெரீ பெரீ மேட்டரை எல்லாம் ப்ளாஸ்ட் பண்ணிக்கினு கீறாரு. புற்று நோய் பத்தின நம்ம கருத்தை சொல்லிட்டு சைடு வாங்கிக்கறோம்.

புற்று நோய் என்பது என்ன? தேவையற்ற செல்களின் வளர்ச்சி. உயிர்களுக்கு இயற்கை இட்டுள்ள முக்கிய ஆணை பல்கி பெருகுதல். உலகமெங்கும் பரவல் . இதற்குள்ள உடனடி குறுக்கு வழி செக்ஸ். அதனாலதான் செக்ஸ் உறுப்புகள் மிக குறுகிய காலத்தில் அதீதமாய் வளர்ச்சி அடைகின்றன. மேற்சொன்ன தேவையற்ற செல்களின் வளர்ச்சியும் இந்த செக்ஸ் உறுப்புகளிலேயே அதிகம் வருவது யதேச்சையல்ல.பெண்களில் கருவாய், கருப்பை,மார்பகம் பாதிக்கப்படுகின்றன. ஆண்களில் ப்ரோடஸ்டட்.

ஒவ்வொரு மனிதனும் பல்கி பரவிடவே விரும்புகிறான். செக்ஸ் அவன் இனத்தை பரப்பினால் – பணம்,பதவி,அதிகாரம் ஆகியன அவனை பரப்புகின்றன. மனிதன் செக்ஸ் – அது கிட்டாத போதோ – அல்லது அது கிட்டிடவோ பணம் பதவி என்று அலைபாய்கிறான்.

பரவிட வாய்ப்பே இல்லாத மனிதன் – பல்கி பரவும் கமாண்டை தன் ஆழ் மனதில் மட்டும் வைத்துள்ள மனிதன் விஷயத்தில் பல்கி பெருகும் எண்ணத்தை/கட்டளைய அவன் மனம் ஏற்றுக்கொண்டுவிடுகிறதோ என்றொரு சம்சயம் எனக்குண்டு.

மேற்சொன்ன பல்கி பெருகுதலுக்கு செக்ஸ் அல்லாது அடுத்தபடியாக உள்ள ஆறு வழி சாலை தியானம் – யோகம். ஒரு ஆண் அ பெண் செக்ஸை விட்டு இயல்பான வயதில் இயல்பாக தாண்டி – யோக வழியில் செல்லும்போது கான்சர் இத்யாதி தொல்லை தராதோ என்றும் ஒரு ஊகம் எனக்குள் உண்டு.என் சம்சயங்கள்,ஊகங்களுக்கு உயிரூட்டுவது போல் அமைந்துள்ளது கந்தனின் கட்டுரை .

எச்சரிக்கை:
கான்சருக்கு காரணமா அவர் காட்டியிருக்கிற காரணங்கள் விஷயத்தில் எனக்கு மாற்றுக்கருத்து உண்டுங்கோ.

இனி ஓவர் டு கே.கந்தன் :

சாய் பாபா புற்றுநோயினால் இறந்து இருக்ககூடும்னு தல ஒரு தகவல் சொன்னாரு. ரமண மஹரிஷி, ராமகிருஷ்ண பரமஹம்ஸ்ர் மற்றும் நிஸர்க தத்தா மஹாராஜ்(Nisargadatta Maharaj), இந்த மூன்று மகான்களும் இந்த நோயினால் தான் பூத உடலை நீத்தாங்க.

இதுல சில கேள்விகள் முளைக்குது . பெரிய மகான்களுக்கு எப்டி இந்த மாதிரி நோய் வருது? அவங்களாள தங்கள சரி பண்ணிக்க முடியாதா?

ஜோதிட ரீதியா பாத்தா புற்றுநோய்க்கு காரகம் குருவும் ராகுவும். குருதான் உடம்புல செல் வளர்ச்சிக்கு காரகன். ராகு திடீர் மாற்றத்திற்கு காரகர்.

புற்றுநோயில் இரண்டு வகை. ஒன்னு வெறும் கட்டிகள்: குருவினால் ஏற்படுவது. இன்னொன்னு உயிர்கொல்லி: ராகுவினால் ஏற்படுவது. இது ஜஸ்டு அறிமுகம்.

மகான்கள் விஷயத்துல கிரகங்களோட சக்தி கம்மி. (கொசுறு: கோள்னு சொல்றத விட‌ கிரகம்னு தான் சொல்லனும். ஏன்னு யாரச்சும் சொன்னா அவுங்களுக்கு பரிசு நம்ம தல தருவாரு). அகம் இருக்கிற வரைக்கும் தேன் கிரக ஆட்சி. மகான்கள் அதை ஓவர் கம் செய்தாச்சு.

மகான்கள் ப‌ல‌ ஜென்ம‌ங்களில் செய்த‌ தவத்தின் காரணமாக‌ அவுங்களோட கடைசி ஜென்ம‌த்துல‌ மோக்ஷம் கிடைக்கும்.

இப்போ தவம் என்னனு ஜோதிட ரீதியா பாத்தா நமக்கு சேர வேண்டியதை கூட வேண்டாம்னு தள்ளி வைக்கிறது.
எப்பிடி/? : பட்டினி கிடக்குறது, பிரம்மச்சர்யம், சுக போகங்கள விட்டுர்ரது. இதெல்லாம் செய்ய செய்ய அவுங்களோட பாவம் ஒவ்வொரு ஜென்மத்துலயும் கம்மியாகி புன்ணியத்தோட அளவு கூடி கிட்டே வருது.

புண்ணியம் கூடுனா நல்லது தானே ? இல்ல. புண்ணிய‌மும் க‌ர்ம‌ ப‌ல‌ன் தான். க‌ர்ம‌ ப‌ல‌ன் கரைந்தால் தான் முக்தி. அப்போ அந்த‌ புண்ணிய‌த்தை என்ன‌ ப‌ண்ற‌து?

ம‌கான்க‌ள் கிட்ட‌ ந‌ம்மளோட‌ பாவ‌த்த‌ ஏத்துக்கிட்டு தங்களோட புண்ணியத்தை நமக்கு குடுக்கிற‌ ச‌க்தி இருக்கு. பாவம். பொழைக்க தெரியாத ஜென்மங்கள், அப்டிதான? அதுனால தான், மகான் த‌ரிச‌ன‌ம் கிடைச்சா நோய் ச‌ரியாறது, வாழ்க்கைல‌ மேம்பாடு எல்லாம் சாத்தியமாகுது.

நாம அவுங்கள தரிசனம் பண்ணும்போது ந‌ம்ம‌ பாவ‌த்த‌ அவிக வாங்கிட்டு அவுங்களோட‌ புண்னிய‌த்த‌ நம்மகிட்ட‌ குடுக்க ஆரம்பிச்சிர்ராங்க. இது ஒரு தன்னிச்சையான செயல். அவுங்களுக்கு தான் விருப்பு, வெறுப்பு கிடையாதே. ம‌கான்க‌ளை தரிசிக்கிற எல்லோருக்கும் இந்த‌ மாதிரி ஆயிறாது. அதுக்குன்னு க‌ர்ம விதிக‌ள் இருக்கு. இந்த‌ ச‌ப்ஜ‌க்ட் பெரிய‌ க‌ட‌ல்.

தரிசனம் பெருகும் போது புண்ணிய அக்க‌வுன்ட‌ல‌ பால‌ன்ஸ் க‌ம்மி ஆகி ந‌ம்மலோ பாவ‌ங்க‌ள் அவுங்க‌ அக்கவுண்ட்ல சேருது. இத‌ த‌ங்க‌ளோட‌ த‌வ‌ வ‌லிமைனால‌ க‌ரைக்க‌ அவிகளால முடியும். தங்களோட ஆயுள பொருத்து சில காலம் அப்படி க‌ரைச்சுக்கிறாஙங்க. ஆனா ஆயுள் முடியற நேர‌ம் வ‌ர்ர‌ப்ப‌ இப்டி செய்யாம‌ பாவ‌ங்க‌ள‌ அப்படியே சேர‌ விட்டுர்ராங்க‌. அதுதான் புற்றுநோயா அவுங்க‌ உட‌ல்ல‌ பரிணமிக்குது.

Planets Care the Human_ஜாதகம் இல்லாதவனையும் கிரகங்கள் பாதிக்கிறது… உண்மையா?

ஜாதகம் இல்லாதவனையும் கிரகங்கள் பாதிக்கிறது… உண்மையா?

குழு என்றொரு அமைப்பு நம் வாழ்வில் எப்பொழுதும் நடந்துகொண்டிருக்கும்… தனித்து என்பது நீ பிறக்கும் பொழுதும் கிடைப்பதில்லை, இறக்கும் பொழுதும் கிடைப்பதில்லை… நான் தனியாகத்தானே இறக்கிறேன் என்று என்னிடம் கேட்பாயானால், எனக்கு அந்த அனுபவம் கிடைக்கவில்லை என்பதால் பதிலில்லை. அப்படியே தெரிந்து சொல்லமுற்பட்டாலும், நீயும் நானும் அங்கே சந்திப்போமா என்பதும் எனக்குத்தெரியாது.

வாழ்வில் எல்லா நல்ல விசயங்களும் மூடிமறைத்துத்தான் இருக்கின்றன. தெரிகிறது என்பதற்கும், பார்க்கிறேன் என்பதற்கும் உள்ள வித்தியாசங்கள் போல, பார்த்தல் மட்டுமே கிடைக்கக்கூடும். சில மரை கழண்டதுதான் எல்லாமே எனக்குத்தான் தெரியும் என்பதாக குதிக்கின்றன. பதில்  சொல்லும் முட்டாளைவிட, கேள்விகேட்கும் அறிவாளிகள் தான் மிகுந்திருக்கிறார்கள்.

இங்கே நீ மரத்திலிருந்து இறங்குவதற்கு எது விழுது, எது பாம்பு என்று சுட்டிகாட்டுவதுதான் உண்மையாளர்கள் வேலை. ஆனால் நீ எதைப்பிடித்தாலும் அது உன்னைச்சார்ந்தது…

ஆனால் விழுது பிடித்து விழுந்தாலும் கூட சாவு வரலாம் அல்லவா? எனவே அது உன் சமர்த்து…

இதெல்லாம் ஏன் சொல்லுகிறேன் என்றால், நீ எவ்வளவுதான் கவனமாக இருந்தாலும் உனக்கென்று ஒரு வரி எப்பொழுதும் அறியக்காணலாம் என்பது எழுதப்படாத உண்மை.

ஜாதகம் என்பது எழுதுவதும், எழுதப்படாமலிருப்பதும் பொதுவானது… உன் பிறப்பு எத்தகைய நிச்சயமான உண்மையோ, அது போலவே அந்த கிரகங்களின் ஆற்றலுக்குள் நீ கிடப்பதும்.

குழு (MASS) என்பதற்கு உதாரணமாக…

வாழ்வு, ஒரு பயணம், சாலையில் பச்சைக்கு காத்திருத்தல், இப்படி நிறைய இருக்கிறது… இது ச்சும்மா, நாம் ஏற்படுத்திக்கொண்டவைகள்…

ஆனால் இந்த பிரபஞ்சத்தில்….?

எல்லாமே ஒரு ஒழுங்கில் தான் அமைந்திருக்கின்றன. உனக்கு பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் கூட.

உனக்கான ஜாதகம் ஒரு வழிகாட்டி… போகிற ஊருக்கு செல்லும் வழிப்பாதைகள் சொல்லும் ஒரு வரைபடம். அதில் சாதக, பாதகம் இருப்பது பொது. இறங்கினால் சிரிப்பதும், ஏறினால் அழுவதும் நீதான். ஆனால் கிரகங்களை பொறுத்தவரை எல்லாம் ஒன்றுதான்.

ஒரு உண்மை பார்க்கலாமா? நீ ஒரு கேப்சூல் (Capsule) என்றால் உனக்குள் கிரகங்கள் ஒரு பொதுவான தன்மையை பதிந்து வைக்கின்றன… அது உன் வளர்ச்சியோடு கலந்து பரிணமளிக்கிறது என்பதுதான் அந்த உண்மை.

நீ எங்கிருந்து, எப்படி விலக்குவாய் அல்லது விலகுவாய்?

ஆனால் அவைகள், அந்த கிரகங்கள் உன்னைப்போலவே பல்லாயிரம் கோடி உயிரினங்களை பார்த்தாகிவிட்டது. நீ விரல் ஆட்டுவது குறித்து அது ஒன்றும் ஆட்சேபனை சொல்லப்போவதில்லை. அது பிரமாண்டத்தின் பிரமாண்டம்…

என் வழக்கமான ஒரு வார்த்தை…. அது இதுதான்…

“கிரகங்கள் ஆளுமை செய்வதில்லை, தூண்டுகின்றன அவ்வளவே”

உன்னோடு உனக்கு ஒரு நாளாவது பிணக்கு ஏற்பட்டதுண்டா? இல்லையல்லவா? அதுபோலவே, கிரகங்கள் உனக்கானதுதான்… அந்த கிரகங்களை நீ நேசித்ததுண்டா?

நேசித்துப்பார்த்தால் என்ன ஆகும்?

உன் பயணத்தில் உன் முயற்சியின்றி வாழ்வின் கடன் முடிக்கலாம்…

என்ன? வாழ்வின் கடன் என்னவா? விடிய விடிய கதை கேட்டுட்டு ராமன் சீதைக்கு சித்தப்பனான்னு கேட்டாப்ல இருக்கே?

அன்பன் சுகுமார்ஜி

மெய்ஞானமும் ,பொய்ஞானமும் -ஷக்திய சீலன்

அன்பிற்குரிய வலைதள நண்பர்களுக்கும்,அண்ணன் சித்தூர் முருகேசன் அவர்களுக்கும் வணக்கம்.

நண்பர்களே உலகம் எப்போதும் ஒன்று போலவே சிந்திக்கிறது ,யாராவது ஒருவர் ஒரு பக்கம் சாய்ந்தால் எல்லோரும் அதே பக்கம் சாய துடிக்கிறார்கள் ,தங்களுக்கு தேவையோ இல்லையோ ஏதோ ஒன்றோடு இணைத்து தங்களை அடையாளப்படுத்த துடிக்கிறர்கள்.

விளைவு களவாணிகளும் ,காமுகர்களும் ஆன்மீகவாதிகளாகிவிடுகிறார்கள்,நம்ம ஊரில் குளிர்பானங்கள் விற்பது கூட அப்பிடித்தான் ,உண்மையில் இந்த குளிர்பானங்கள் அவுரி வேர் கஷாயம் ,கண்டங்கத்திரி கஷாயம் ,போல தான் இருக்கிறது ,இவற்றில் பெரிதாக ஏதும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை ,ஆனாலும் நம் மக்கள் இதை குடிப்பதை கௌரவமாக நினைக்கிறார்கள் ,ஏனென்றால் மேட்டுக்குடி மனிதர்களும் ,மேலைநாட்டினரும் இதை குடிப்பதால் ,இதைக்குடித்து தாங்களும் அதே போல ஒரு நிலையை அடைந்து விட்டதாக மயங்குகிறார்கள் .சரி விஷயத்திற்கு வருவோம் .

நண்பர்களே!
உண்மையான ஆன்மீகத்திற்கு சரியான அடையாளம் இருக்கிறது .நம் மெய்ஞானிகள் அதை எடுத்துவைத்திருக்கிறார்கள் ,நாம் அதை உணர்ந்தால் யாரும் நம்மை ஏமாற்ற முடியாது .இந்த பதிவின் நோக்கமே அதை உணரவைப்பதுதான்.

தன்னை சுற்றியுள்ளவர்கள் எங்காவது ஒரு ஆன்மீகவாதியிடம் போய் சேர்ந்தால் எல்லோரும் அங்கு போய் விழுகிறார்கள் ,ஆனால் அந்த ஆன்மீகவாதியோ வேறு எங்காவது விழுந்து கிடக்கிறார்,”புலன் ஐந்தும் வெலவதே உண்மை வீரமே.

நம்ம ஆத்திசூடி பாட்டி சொன்னது.பெண்மை உட்பட எங்கேயும் மண்டியிடாதவனே சுத்த வீரன் ,மெய்ஞானி . இதை எப்போதும் நாம் மறக்ககூடாது .இப்போது உண்மையான மெய்ஞானிக்கான அடையாளங்கள் :

மரணத்துக்கு பின்:

ஆணாக இருந்தால் சுக்கிலமும் ,பெண்ணாக இருந்தால் சுரோணிதமும் இறுதி நேரத்தில் வெளியேறாது உள்ளுக்குளேயே அடங்கும் .

தேகம் பசு மஞ்சள் நிறத்தில் மாறும் ,அதாவது பொன்னிறத்திற்கு.

உடம்பில் நெட்டி முறியும் ,அதாவது சொடக்கு எடுக்க முடியும் .

தேகம் விறைத்து போகாது, துவளும் .

இறைவணக்க பாடல்களை பாடினால் தேகத்தில் வியர்வை வழியும் .

எத்துனை நாட்கள் ஆனாலும் தேகத்தை மண் தீண்டாது .

அடக்கம் செய்யாமல் நாற்ப்பது நாட்கள் தேகத்தை வெளியே போட்டு வைத்தாலும் ,எந்த நாற்றமும் வராது

குருவானவர் நீர் தந்தால் அது நம் தொண்டையில் இறங்கும் ஆச்சிரியமும் நிகழும் .

மேற்கண்ட அடையாளங்களை யாரால் உங்களுக்கு ,உங்களின் இறுதி நேரத்தில் தர முடிகிறதோ அவரே உண்மையான மெய்ஞானி ,அவரை சரணடையுங்கள் .

நண்பர்களே!
மேற்கண்ட வற்றில் உங்களுக்கு எந்த சந்தேகமும் வேண்டாம் ,இது வரை வந்த எல்லா மெய்ஞானிகள் மீதும் ஆணையிட்டு சொல்லுகிறேன் இது பரிபூரண உண்மை ,எனக்கு தெரிந்து இப்போது இதை தருவபவர்கள் யாரும் இல்லை.

ஆனால் நாற்பதாண்டுகளுக்கு முன்னால் ஒருவர் இருந்தார் ,அவருடைய சீடர்களுக்கு இந்த அடையாளங்கள் உண்டானது ,உண்டாகிகொண்டிருக்கிறது

உங்களுக்கு தெரிந்து யாரேனும் தற்போது இருந்தால் தயவு செய்து சொல்லுங்கள் .