பிரச்சினைங்கறது அனாதை இல்லை

அண்ணே வணக்கம்ணே,
பிரச்சினைகள் சாரி தீர்வுகள் இந்த பதிவுலயும் தொடருது. கூடவே பாபாவும் பாபா ப்ளாக் ஷீப்பும் தொடர்பதிவோட 11 ஆம் அத்யாயத்தை போட்டிருக்கேன். படிங்க . கமெண்ட் (ல) அடிங்க. ஓகே ?

பிரச்சினை இல்லாத மனிதன் கிடையாது. ( நாடுகள் கூட கிடையாது). பிரச்சினை என்பது கடந்த கால சோம்பல், சுகானுபவங்களின்,பொறுப்பின்மை, தள்ளிப்
போடுதல்களின்  விளைவு தான். ஆனால் பிரச்சினை வந்ததும். இதையெல்லாம் வசதியா மறந்துர்ரம். செல்ஃப் பிட்டி வந்துருது. (எனக்கு மட்டும் ஏன் இப்படி?)

பிரச்சினைங்கறது அப்பா அம்மா பேரு தெரியாத  அனாதை குழந்தை இல்லை.  அது பிறக்க ஒரு தாய்,ஒரு தந்தை  நிச்சயம் தேவை. மேற்படி பெற்றோருக்கு கு.க பண்றது எப்படின்னு  கடந்த சில பதிவுகள்ள பேசிக்கிட்டிருக்கோம். 

பிரச்சினைகளை பெத்துப்போடற காரணங்கள் அசங்க்யாகம். (கணக்கில்லாதவை). ஒரு ப்யூட்டி என்னன்னா சிங்கிள் காரணத்தால எப்பயும் பிரச்சினை பொறந்து வராது. சிங்கிள் டபுளானாதான் பிரச்சினை. பிரச்சினைகள் வர்ரது சகஜம். ஆனால் அதை டேக்கிள் பண்றதுல இருக்கிற டிஃபரன்ஸால தான் பல வாழ்க்கைகள்  தற்கொலை அ தோல்வியில முடியுது.

பிரச்சினையை ஸ்டடி பண்றதுலயும், தீர்வை யோசிக்கிறதுலயும், தீர்வை அமல் படுத்தறதுலயும் மன்ஷனுக்கு மன்ஷன் வித்யாசம் இருக்கு. இந்த வித்யாசத்துக்கு காரணம் பல அம்சங்களை பொறுத்திருக்கு. அந்த அம்சங்கள் வருமாறு (மீண்டும்)

1.வமிசா வழி காரணங்கள்(ஜெனட்டிக்):
2.இரசாயனகாரணங்கள்:
3.உணவு முறை:
4.என்விரான்மென்டல் காரணங்கள்:
5.குடும்ப அமைப்பு:
6.பொருளாதார காரணங்கள்:
7.சாதீய காரணங்கள்:
8.ஜோதிட காரணங்கள்: லக்னாதிபதியே 6,8,12 ல மாட்டிக்கிறது, நீசமாயிர்ரது, அஸ்தங்கதமாறது, செவ்வாய், சர்ப்ப தோஷங்கள், சனி,செவ்வாய் சேர்க்கை,பித்ரு சாபம், மாத்ரு சாபம், ஸ்த்ரீ சாபம்,
9.வாஸ்து ரீதியிலான காரணங்கள்:
10.கர்ம வினைகள்:
11.தேவதா சாபங்கள்:
12.தர்காதீத காரணங்கள்:

இந்த தொடர்பதிவுல  இந்த காரணங்களையெல்லாம்  பட்டியலிட்டு பைசல் பண்ணிக்கிட்டு வர்ரோம்.  லேட்டஸ்டா உணவு காரணங்களை பார்த்தோம். இப்போ என்விரான்மென்டல் காரணங்களை பார்ப்போம்.

என்விரான்மென்ட்டுன்னா பேச்சுத்தமிழ்ல அக்கம்பக்கம்னு சொல்லிரலாம். விவரமா சொல்லனும்னா உங்க பெற்றோர்,குடும்பம், தெரு,பள்ளி, பள்ளித்தோழர்கள் எல்லாத்தயும் பட்டியலிட வேண்டி வரும். உங்க குண நலன் கள் மோல்ட் ஆறது இவிகளை  வச்சுத்தான். முக்கியமா செக்ஸ் குறித்த உங்க புரிதல், விழிப்பு தான் உங்க கேரக்டரை டிசைட் பண்ணுது.

கடந்த பதிவுல சொன்ன ஆசனப்பருவம் எட் ஸெட் ரா ஞா வருதா?  ஒரு சிறுவனுக்கு செக்ஸ் குறித்த ஞானம் மறுக்கப்படும்போது, அவனோட ஆர்வம் தடுக்கப்படும்போது அவன் மறுபடி ஆசனப்பருவத்துக்கே போயிர்ரான்.

இந்த மாதிரி கிராக்கிங்க தான் ஹோமோக்களா, தின்னிப்பண்டாரங்களா(வாய்க்கும் இன உறுப்புக்கும் நேரடி தொடர்பு) , வாய் பேச்சில் வீரர்களா,  கோழைகளா, ஹிப்பாக்கிரட்ஸா, ஹென் பெக்டா( பெண்டாட்டிக்கு சரண்டர்), கஞ்சனுங்களா (ஹும் ‘பலான ‘ சுகத்துக்கே வாய்ப்பில்லை இதுல இதெல்லாம் எதுக்கு தண்டச்செலவுங்கற ஃபீலிங்) , ஊதாரிகளா(ஹூம் .. பலான சுகத்துக்குத்தான் செலவழிக்க முடியலை. இப்படின்னா செலவழிப்பமேங்கற ஃபீலிங்) , வன் முறையாளர்களா,கிரிமினல்ஸா, (உள்ளடக்கி வைக்கப்பட்ட செக்ஸ் எண்ணங்கள் வன்முறையா மாறுது) சேடிஸ்டுகளா, மசாக்கிஸ்டுகளா, ( புதைத்து வைக்கப்பட்ட செக்ஸ் எண்ணங்கள் இப்படி வெளிப்படும்), சுய இன்ப பிரியர்களா , இம்பொடன்ட்ஸ், துரித ஸ்கலித அன்பர்களா, அம்மா கோண்டுகளா (பெண்டாட்டிக்குத்தான் இவன் பவிசு தெரிஞ்சு போச்சே இன்னும் என்னென்னவோவா மாறிர்ராங்க.

அதிர்ஷ்டவசமா நமக்கு இந்த இழவெல்லாம் நடக்கலை. அதுக்கு காரணம்  என் அப்பா ,அம்மா, குடும்ப பின்னணி. முக்கியமா சதீஷுங்கற பால்ய ஸ்னேகிதன். என்னதான் துடுக்கானவன், அனுபவங்களுக்கு துடிக்கிறவன், தில்லுதுரைன்னாலும் ஓப்பன் டாக்கெல்லாம்  கிடையாது.  ரெம்ப ஷை (கூச்சம்) . அதை போக்கினவன் சதீஷுதான்.  நான் யார்க்கிட்டயும் பகிர்ந்துக்க முடியாம பொத்தி வச்சிருந்த மேட்டரெல்லாம் ஒன்னுமே இல்லை போல அவன் பட்டவர்த்தனமா பேசுவான். இன்னைக்கு இந்த ரேஞ்சுல  செக்ஸ் பத்தி விவரமா , தில்லா எழுத  ஃபௌண்டேசன் சதீசுதான். நிற்க

எட்டாங்கிளாஸ் படிக்கறச்ச சென்னைலருந்து  ஒரு பெண் வந்து  புதுசா சேர்ந்தது.   எங்க வீட்டண்டை யாரோ ஒண்டு குடித்தனத்து தூரத்து உறவுக்காரங்க கார்டியன் ஷிப்ல அங்கனயே ஒரு ரூம் எடுத்துக்கிட்டு படிச்சிக்கிட்டிருந்தா.

அப்போ பழனின்னு கொட்டை போட்ட கேஸு ( ஏழாம் வகுப்புல சப்ளிமெண்ட்ல கூட குண்டு போட்டு டீட்டெயின் ஆன பார்ட்டி)  ஒருத்தன் இருந்தான் . ஸ்டெப் கட் . டைட் ஃபிட்ல ஹாஃப் பேண்ட். அவன் புதியவளை மடக்க  எங்க வீட்டுக்கு வந்துருவான். என் தோள் மேல கை போட்டுக்கிட்டு ஸ்டைலா அவ வீட்டுப்பக்கம் போவான். அவள் கோலம் கீலம் போட்டுக்கிட்டிருந்தா  அடிக்குரல்ல ” சரசு கோலம் ரெம்ப நறுவிசா இருக்கு”ன்னு கமெண்ட் அடிப்பான். அவள் “பொறுக்கி”ம்பா.

க்ளாஸ்ல நான் சட்டாம்பிள்ளைங்கறதால பழனி “த பாரு நீ என்ன பண்றயோ ஏது பண்றயோ, அவளுக்கு என்ன சொல்வியோ எப்படி சொல்வியோ  எனக்கு தெரியாது. அவள் என்னை லவ் பண்ணனும்”னிட்டான். பழனி ஜி.டி. நாயுடு வேலைகள் எல்லாம் நிறைய செய்வான். ரேடியோவை டேப்ல பாட வைக்கிறது டேப்பை ரேடியோல பாட வைக்கிறது. அதுலெல்லாம் நமக்கு மோஜு சாஸ்தி.

நானும் முடிஞ்ச வரை அவளை கன்வின்ஸ் பண்ணேன். பழனி பத்தி பேசி பேசி அவளுக்கும் எனக்கும் இடையில ஃப்ரெண்ட் ஷிப் ஏற்பட்டு போச்சு. நோட்ஸு வாங்க கொடுக்க எங்க வீட்டுக்கு வருவாள். எங்கப்பா ( மாவட்ட கருவூல அதிகாரி) . குடும்ப உறுப்பினர்கள் கிட்டே வெகண்டையா பேசினாலும் விசிட்டர்ஸ இம்ப்ரெஸ் பண்றதுல புலி. அவள் வீட்டு வாசல்ல நின்னு என் பேரை சொல்லி கூப்டா
” வாங்க” ..னு கூப்டு உட்கார வச்சுட்டு ” த பாருபா யாரோ ஒரு பொண்ணு வந்து கேட்டுது உட்கார வச்சிருக்கேன்”னு எனக்கு இன்ஃபார்ம் பண்ணுவாரு.

இந்த சம்பவம் நடக்கிறச்ச எனக்கு 14 வயசு. வருஷம் 1980. இந்த என்விரான்மென்ட் யாருக்கு கிடைச்சிருந்தாலும் அவிக என்னைப்போலத்தான் சிந்திப்பாய்ங்க. எழுதுவாய்ங்கனு சொல்லவும் வேணுமா என்ன?

முந்தானை முடிச்சு படம் வந்தப்ப ( 1984?)  “ஆராரோ ” பாட்டுக்கப்புறம் பாக்கியராஜ் ஏன் குளிக்க போறாருன்னு எங்கம்மா கேட்க  அதை மாத்ரு பூதம் கணக்கா அனலைஸ் பண்ணி சொன்னென்னா  நம்ப முடியாது.

ஒரு தரம் எங்க சின்ன அண்ணனோட (பத்து வயசு பெரியவன்) லவர் ஒருத்தி அவனை மாட்டிவிட (விளையாட்டுக்குத்தான்.. எனக்கு மேட்டர் தெரியாதுங்கற தைரியத்துல) அவன் பாக்கெட்ல இருந்து  காம சூத்ரா ஐட்டத்தை  எடுத்து  காட்டி “பார்த்தயா உங்க அண்ணன் எந்த அளவுக்கு கெட்டுப்போயிருக்கா”னு சொல்ல ” ஹூம் இன்னம் வளரனும்.. நானெல்லாம் ஒன்லி டுடே தான்” னு சொல்ல  ………

இந்த மாதிரி ஒரு என்விரான்மென்ட் கிடைச்சும் அடலசன்ட் ஏஜ்ல 1984 டு 1986 அதுலயே மூழ்கி கிடந்தேன். அந்த 2 வருஷம் திரும்ப கிடைக்குமா கிடைக்காது.

உயிர்களின் தலையாய பிரச்சினை  செக்ஸ். அதை ஒருத்தன் எப்படி ஃபேஸ் பண்றானோ அதை பொருத்துதான் அவனோட கேரக்டர் மோல்ட் ஆகுது. உ.ம் சரோஜா தேவி புஸ்தவம், ஸ்வப்ன ஸ்கலிதம்னு வாழறவன் கனவு காண்றவனா மாறிர்ரான். சுய இன்பத்துல இறங்குறவன் ட்யூயல் காம்ப்ளெக்ஸுடையவனா, இரட்டை வேடக்காரனா, எஸ்கேப்பிஸ்டா,  ஹிப்பாக்கிரட்டா ஆயிர்ரான். விலைமகளை தேடிப்போறவன் ஸ்ட் ரெயிட் ஃபார்வேர்டா இருப்பான். அக்கம் பக்கம் ஆன்ட்டிகளை பார்க்கிறவன் கிரிமினலா , நம்பிக்கை துரோகியா மாறுவான். இப்படி எத்தனையோ சொல்லலாம்.

உங்க பாலை (ஆணா,பெண்ணா) நிர்ணயிக்கிற அதே ஜீன் தான் உங்க கேரக்டரையும் நிர்ணயிக்குது. நீங்க அடலசன்ட் ஏஜ்ல செக்ஸை எப்படி ஃபேஸ் பண்றிங்களோ அதை பொருத்து உங்க கேரக்டரே மாறிரும். உங்க கேரக்டரை பொறுத்து உங்களுக்கு வரக்கூடிய பிரச்சினைகள் மாறிரும். அதுகளை நீங்க டேக்கிள் பண்ற ஸ்டைல் மாறிரும். புரியுதா?

இனியாச்சு செக்ஸ் குறித்த மூட நம்பிக்கைகளை , தவறான புரிதல்களை, ஹிப்பக்கிரசியை விட்டொழிச்சு நேருக்கு நேரா மோதுங்க. உங்க கேரக்டர் மாறும், பிரச்சினைகள் மாறும் ( இப்போ கீற பிரச்சினையெல்லாம் ஃபணால் ஆயிரும் கண்ணு) , புதுசா பிரச்சினைகள் வந்தாலும் அதுகளை டேக்கிள் பண்ற ஸ்டைல் மாறும். வே ஆஃப் திங்கிங் மாறும். நல்ல தீர்வுகள் கிடைக்கும். ஓகேவா உடுங்க ஜூட்………..

பாபாவும் பாபா ப்ளாக் ஷீப்பும் : 11

கடந்த அத்யாயத்துல இரண்டு சம்பவங்களை சொல்றேன், சொல்றேனு  சொல்லாமயே முடிச்சுட்டன். அதனால இந்த அத்யாயத்துல சொல்லியே உடறேன்.வருஷம் 1998. நாலு பேருங்கற பதிவுல வர்ர வடிவேலு ஷிர்டி பாபா பத்தி சகட்டு மேனிக்கு பீலா விட நான் தரேண்டா பாபாவுக்கு அப்பாயிண்ட் மென்டுன்னு சவால் விட்டு ஷிர்டி போய் வந்த பிறகு நடந்த சம்பவம் இது. அவனோட  பழைய கடைதான் (சலூன்) என் ஆஃபீஸா இருந்தது.

ஒரு பக்கம் சலூன் சாமானுக இருக்க மறுபக்கம் ஜோசியம் சொன்ன ஒரே பார்ட்டி நான் தானு நினைக்கிறேன். இன்னுமொரு ஹிஸ்டரி ரிக்கார்ட் என்னன்னா கோழிக்கறிகடைல  கூட ஆஃபீஸ் போட்டிருக்கேன் ( ஆனா இது சென்னைல  3மாசத்துக்கொருதரம்  ரெண்டு மூணு நாளைக்குத்தான்)

தமிழ் பட விமர்சினங்கள்ள தவறாம இடம் பெற கூடிய வார்த்தை ஸ்டீரியோ டைப். என் ஆன்மீக பயணமும் ஸ்டீரியோ டைப்தான். ஒவ்வொரு கட்டத்துல ஒவ்வொரு சாமி/ஒவ்வொரு குரு. ஏதோ ஒரு புஸ்தவம் படிச்சோ அ சினிமா பார்த்தோ இன்ஸ்பைர் ஆக வேண்டியது. உடனே மேலதிக விவரங்களை பீராய வேண்டியது, பாட்டு கீட்டு இருந்தால் கேசட் வாங்க வேண்டியது. 

இந்த ப்ராசஸ்ல கிடைச்ச புளங்காகிதம், மயிர் கூச்செறிதல் எல்லாம் சில மாதங்கள் அ வருஷங்கள்ள தேசலாயிர்ரது வழக்கம். சில காலம் கழிச்சு மேற்படி ஞாபங்கள் தேவகுமாரான உயிர்த்தெழுவது வழக்கம். இந்த ஸ்டீரியோல ஒரு அம்சமா ஷிர்டி சாயி மஹத்யம் பட ஆடியோ கேசட் வாங்கினேன். ( படமே பார்த்திருக்கேன். ஆனால் அப்ப எந்த ஃபீலிங்கும் வரலைங்கறது ஆச்சரியம். )

சரி சரி மேட்டருக்கு வரேன். மேற்படி சலூன் கம் ஆஃபீஸ் நான் இருந்தாலும், இல்லன்னாலும் திறந்தே கிடக்கும். அப்படி ஒரு சந்தர்ப்பத்துல வடிவேலு மேற்படி பாபா கேசட்டை சுட்டுட்டான் போல. நானும் சில நாள் தேடி தேடி விட்டுட்டன்.

இத்தனைக்கும் வடிவேலு ஒன்னும் ஷேவிங்குக்க பார்ட்டி வந்தபிறகு அவங்க கிட்டே ஷேவிங் காசு வாங்கி ப்ளேடு வாங்கியார்ர நிலைல இல்ல. இன்னம் சொல்லப்போனால் சொந்த வீடு, நகை நட்டுன்னு வசதியான ஆளுதான்.  இருந்தாலும் அல்பமான வேலையெல்லாம் செய்வான். நானும் அல்பம் தான். ஆனால் நாலு பேருக்கு நல்லது கெட்டது சொல்ற நிலைல இருக்கிறதால ” தத் விடு”ன்னு  விட்டுர்ரது வழக்கம்.

ஒரு நாள் என் கேசட் அவன் கடைல பாடிக்கிட்டிருந்தது. நானு ஒன்னம் தெரியாத பப்பா மாதிரி ” நானும் வாங்கி வச்சிருந்தேம்பா ஏதோ ஒரு நாதாரி தூக்கினு பூட்டுக்கீது.. உன்னுதை கொடுப்பா ஒரு ராத்திரி பாபா கிட்ட பேசிட்டு கொடுத்துர்ரன்”ன்னேன். அப்பயாச்சும் ரியலைஸ் ஆகி “சாமி இது உன்னுத்தான்”னு சொல்லியிருக்கலாம்.சொல்லலை. நானும் சின்சியரா வாங்கிட்டு போய் மறு நாள் ரிட்டர் பண்ணிட்டன். அப்பயும் ஏதாச்சும் சினிமா காட்டி ” தா சாமி இது உந்துதான் சாமீ.. அது கூட தெரியல உனக்கு ..ஹும் எல்லாம் வசதிதான் காரணம்னு ” டயலாக் விட்டு சமாளிச்சிருக்கலாம். ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

இங்கே ஒரு தத்துவம். கெட்டவனை கெ(ப)ட்டுப்போக செய்யனும்னா அந்த கெட்டவனுக்கு நல்லதையே பண்ணிக்கிட்டிருக்கனும். அப்ப ஆண்டவன் கெட்டவனுக்கு கெட்டவனாயிர்ராரு

வடிவேலுவுக்கும் அவன் அண்ணனுக்கும் எப்பவும் வெட்டுப்பழி குத்துப்பழி. இவன் டீன் ஏஜ் போதைல திரிஞ்சிக்கிட்டிருந்தப்பயே அவங்கண்ணன் பண்டரியோட (போலி டாக்டர்+ லேப் டெக்னிஷியன்) கைய கால பிடிச்சு ஜி.ஹெச் ல வார்ட் பாயா சேர்ந்துட்டான். வீட்டை கட்டிக்கிட்டான். செட்டிலாயிட்டான். வட்டிக்கு திருப்பற ரேஞ்சுக்கு போயிட்டான். பார்க்க பஞ்சை பராரி மாதிரி விபூதி பட்டையும், பெரிய குங்கும பொட்டுமா வைட் அண்ட் வைட்ல  இருப்பான்.

நம்மாளுக்கு போறாது. டீன் ஏஜ் மயக்கத்துலருந்து மீண்டு வந்து கடைய தூக்கி நிறுத்தி கண்ணாலம் கட்டி ரெண்டை பெத்து போடறதுக்குள்ள பெண்டாட்டி இவன் வெத்துவேட்டுனு முடிவுபண்ணியாச்சு.இவனும் வெள்ளைக்கொடிய காட்டி சரண்டர் ஆஃப் இண்டியா. வீட்ல மதுரைதான்.

இந்த மாதிரி அண்ணன் தம்பிக்குள்ள எவனாச்சும் ஒருத்தன் டம்மி பீஸாயிருந்து,  அவன் பெண்டாட்டிக்கு பிரமணை ( சட்டிப்பானைகள் உருளாம இருக்க ஓலைலயோ, தாம்பு கயிற்று புரிகள்ளயோ ரிங் சைஸுக்கு சுத்தியிருப்பாங்க)  தூக்கிட்டு அலையற பார்ட்டியா இருந்தா அண்ணன் தம்பிக்குள்ள நிச்சயம் தகராறு வரும்.வந்துகிட்டே இருக்கும்.

இதுமாதிரி சந்தர்ப்பத்துல நம்மாளு நாலு பேர் பதிவுல வர்ர பண்டரி + பெரிய மனுசனையெல்லாம் கூட்டிக்கிட்டு போய் எதிர்வீட்டு திண்ணைல உட்கார வச்சுட்டான். பஞ்சாயத்துக்கு அண்ணனை கூப்டாங்க.அவனும்  வந்தான்.  நம்மாளுக்கு
பேஸ்மெண்ட் கொஞ்சம் வீக்குதான் . இருந்தாலும் பஞ்சாயத்து பெரியமன்சன் எல்லாம் நம்மாளுதானேங்கற நெனப்புல அண்ணன் காரன் மூக்குல கப்புனு குத்திட்டான். குப்புனு ரத்தம் வந்திருச்சு. அவன் போட்டிருந்த வெள்ளை  கை பனியன், வேட்டி மொத்தம் ரத்தத்துல நனைஞ்சுருச்சு.

பஞ்சாயத்து பெரிய மன்சனெல்லாம் காணாம போயிட்டாய்ங்க. அண்ணன் காரன் நீட்டா ஜி.ஹெச் போய் அட்மிட் ஆகி போலீஸ்ல கேஸ் கொடுத்துட்டான். போலீஸ் ஸ்டேஷனே என் பாக்கெட்லன்னு சிலும்பின வடிவேலுவை ஸ்டேஷன்ல உட்கார வச்சுட்டாய்ங்க. அப்புறம் நானும் இன்னும் ரெண்டு ஃப்ரெண்ட்ஸும் போய் எக்ஸ்  பார்ட்டியையும், சப் இன்ஸ்பெக்டரையும் கன்வின்ஸ் பண்ணி கூட்டிட்டு வந்தோம்.

இதென்ன அம்புலிமாமா கதை மாதிரி இருக்குன்னு நினைப்பிங்க. ஆனால் உண்மையில நடந்தது ராசா.  வடிவேலுக்காச்சும் அரை நாள் காவல். இன்னொரு பார்ட்டிக்கு?

1999 கையில இருந்த லட்சத்து ரெண்டாயிரமும் டம்ப் ஆகி மறுபடி ப்ரெட் ஹண்டர் அவதாரம் எடுத்த புதுசு. ஒவ்வொரு ஊர்லயும் பத்திரிக்கை வச்சு பொழப்ப நடத்தற க்ரூப் ஒன்னு இருக்கும். பத்திரிக்கை பதிவாளர் (www.rni.nic.in) வலைதளத்துல போய் பார்த்திங்கன்னா உங்க ஊர்லருந்து எத்தனை பத்திரிக்கை ரெஜிஸ்டர் ஆயிருக்குனு தெரிஞ்சிக்கலாம். ஆனால் இதுல வெளிவர்ரதென்னவோ அஞ்சுலருந்து பத்துக்குள்ள மேஜர் பத்திரிக்கைகள் மட்டும் தான். மற்றதெல்லாம் பதிவாகியிருக்கும். சில பல மொள்ளமாரி வேலைகளோட ரென்யூவல் ஆயிட்டிருக்கும். இவிக அரசு துறைகள்ள குழையடிச்சு விளம்பரம் வாங்கி விளம்பரம் கிடைச்சப்ப மட்டும் பத்து காப்பி போட்டு கணக்கு பண்ணி வயித்த கழுவிக்கிட்டிருப்பாய்ங்க .அல்லது ஓசி பஸ் பாஸோட திருப்திபடுவாய்ங்க.

(ரென்யூவலுக்கு இவிக பண்ற டுபாகூர் வேலைய சொல்லனும்னா தனிப்பதிவே போடனும்)

இந்த மாதிரி டுபுக்கு க்ரூப் மூலமா ஒரு பார்ட்டி இன்ட் ரட்யூஸ் ஆனான். ஷிர்டி பாபா பத்தின பாட்டுகளை  (ஆடியோ) வெளியிட போறதாவும்.. பாட்டு எழுதிக்கொடுக்கும்படியும் கேட்டான்.

நாமதான் ஆசுகவியாச்சே. உடனடி லாட்டரி மாதிரி அவன் கூப்ட லாட்ஜுக்கு போய் அவன் கேட்ட மாதிரியே பரபரனு (சுந்தர தெலுங்குங்கண்ணா) எழுதிக்கொடுத்தேன். உத்தமா பத்தினி மாதிரி அதை ஜெராக்ஸ் எடுக்கச்சொல்லி ஜெராக்ஸ் பிரதில கை.எ வேற போட்டுக்கொடுத்தான்.

மொத்தமா என்ன எழுதினேனு ஞா இல்லை. ஆனா ஒரே ஒரு வரி மட்டும் நல்லா ஞா இருக்கு.

“செட்டவாடனு கானயா செடின வாடனு நேனய்யா”

கெட்டவன் இல்லே கெட்டுப்போனவன்..னு அர்த்தம். பை பர்த் கெட்டவன்னா திருத்தவே முடியாது. கெட்டுப்போனவன்னா டபுள் மீனிங் வரும்.கெட்டுப்போனவனு ஒரு அர்த்தம். நலிஞ்சு போனவனு இன்னொர் அர்த்தம். நடுவுல கெட்டுப்போனவன் திருந்த வாய்ப்பிருக்கும். இப்படி நிறைய விளையாடி எழுதிக்கொடுத்தேன்.

அந்த நாதாரி என்ன பண்ணுச்சுன்னா நான் இல்லாதப்ப வீட்டுக்கு வந்து தான் கை.எ போட்டுக்கொடுத்த ஜெராக்ஸ் பிரதியை என் மனைவிய வாயடிச்சு பிக் அப் பண்ணிக்கிட்டு போயிருச்சு. அந்த நாள் முதல் இந்த நாள் வரை பிச்சை எடுத்துக்கிட்டே இருக்கு. உசுரோட இருக்கா இல்லையானு கூட தெரியாது. தெரிஞ்ச முகமா  யார்  தெரிஞ்சாலும் ” இஃப் யு டோண்ட் மைண்ட் ஒரு டென் ருப்பீஸ் இருக்குமா?” கேஸு.

அப்பாறமா தான் தெரிஞ்சது அந்த பன்னாடையோட வைஃப் என் கிளாஸ் மெட்டுன்னு . இப்ப சொல்லுங்க பாபா பவர் ஃபுல்லா இல்லையா? பாபா பவரை புரிஞ்சிக்கனும்னா பா பா ப்ளாக் ஷீப் ஹேவ் யு எனி உல்லுனு ரைம்ஸ் பாடற ரேஞ்சுக்கு நீங்க குழந்தை தன்மையோட இருக்கனும். அப்பத்தான் அவரோட பவரை உணர முடியும்.

நேத்து  பதிவுல நான் குறிப்பிட்ட நித்யானந்த பாபா கூட சொல்வாராம் “குருவை சுதந்திரமா செயல்பட விடனும். அதுக்கு சம்பூரண சரணாகதிதான் மார்கம்”

தி க்ரேட் நித்யானந்தா

பெண்களுக்கு மட்டுமில்லே ஆண்களுக்கும் மெனோஃபஸ் வருமாம் ( நாற்பதுகளில் செக்ஸ் மீது அதீத ஆர்வம். பின் படக்கென்று சர்க்யூட் ஃபெயில் ஆதல்). செக்ஸ்ல மட்டுமில்லை ஆன்மீகத்துல கூட மெனோஃபஸ் வரும். இதைப்பத்தி “பாபாவும் பா பா ப்ளாக் ஷீப் :10 பதிவுல விவரமா  எழுதியிருக்கன். மனிதர்களுக்கு மெனோஃபஸ் வந்துட்டா அம்புட்டுதேங். பார்ட்டி செக்ஸ் லைஃபை ஒழுங்கா எஞ்ஜாய் பண்ணியிருந்தா அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துரலாம். இல்லன்னா வம்புதான். தாத்தாக்கள் ரெண்டாம் கண்ணாலம் கட்டிக்கிறது, ஆன்டீஸ் கார் ட்ரைவர் கூட ஓடிப்போயிர்ரதெல்லாம் இந்த ஸ்டேஜுலதான்.

ஆனால் ஆன்மீகத்துல வர்ர மெனோஃபஸ் கொஞ்சம் டிஃப்ரன்ட். திடீர்னு இன்னொரு பாதை விரியும். அந்த பாதையில ஆன்மீக பயணம் புது உற்சாகத்தோட தொடரும். ஆமா இந்த பதிவுக்கு ” தி க்ரேட் நித்யானந்தா “ங்கற தலைப்பு ஏன்னு நீங்க கேட்கிறது எனக்கு கேட்குது.

மேற்சொன்ன ஆன்மீக மெனோஃபஸ்ல நான்  இருந்தப்ப தான் நித்யானந்தா விவகாரம் வெடிச்சது. நானும் கிழி கிழின்னு கிழிச்சன். ஆனா பாருங்க காரணம் இல்லாம எது ஒன்னுமே நடக்காது. ரஞ்சிதா புகழ் நித்யானந்தா பிறக்கறதுக்கு முந்தியே நித்யானந்தாங்கற பேரு  இருந்திருக்கு. அந்த பேர்ல எத்தனையோ லட்சம் பேர் பிறந்து,வாழ்ந்து முடிச்சிருப்பாய்ங்க.

நல்லதுக்கோ கெட்டதுக்கோ, திட்டவோ,புகழவோ நித்யானந்தாங்கற பேரை பல முறை பிரஸ்தாபிச்சதுக்கு பலன் கிடைச்சுருச்சுன்னுதான் நினைக்கிறேன்.அதுக்கும் ஒரு காரணம் இருந்திருக்கும்னு நம்பறேன்.

சுதந்திரம் வர்ரதுக்கு முந்தியே மகாராஷ்டிர மானிலத்துல கணேஷ் புரிங்கற ஊர்ல நித்யானந்த பாபானு ஒரு பட்சி வாழ்ந்திருக்கு. ஒரு தாட்டி பழனி கோவிலுக்கு கூட வந்திருக்கு. இந்த பார்ட்டியோட வாழ்க்கை வரலாறை படிக்கிற வாய்ப்பு கிடைச்சது.

பாலைவனத்துல நீண்ட தூரம் பயணம் பண்ணா தூரத்து வெயில் ஆறு கணக்கா தெரியுமாம். ஆனால் நித்யானந்த பாபா சமாசாரம் அப்படியில்லைனு நான் நம்பறேன். ஏன்னா அதை படிக்கிறச்ச பல்வேறு ஆன்மீக உணர்வுகள் , அதிர்வுகள் மூன்றாம் நாளைய ஏசு கணக்காய் உயிர்த்தெழுந்ததுங்கண்ணா.

இன்னைக்கு பணபலம் இருந்தா  மீடியா வெளிச்சத்தை விலைக்கு வாங்கி அ வாடகைக்கு எடுத்து தாளிச்சுரலாம். ஆனால் நித்யானந்தாவோட காலம் சுதந்திரத்துக்கு முந்தின காலம்.

அவருக்குள்ள ஏதோ ஒரு மலர் மலர்ந்து மணம் வீசியிருக்கனும்.இல்லாட்டி லட்சக்கணக்கான மக்களை ஈர்த்திருக்க முடியாது. இன்னைக்காச்சும் வரவு எட்டணா செலவு பத்தணா கேஸுங்க.. எதை தின்னா பித்தம் தெளியும்ங்கற பார்ட்டிங்க அதிகம். அது போதுமென்ற மனமே பொன் செய் மருந்துன்னு சனம் வாழ்ந்த காலம்.

இதற்கிடைல கட்டை ரெம்ப சேவேறி போச்சு .இதுக்கு மின்னாடியெல்லாம் இரவு 7 மணிக்கு மேல ஒரு டீ சாப்பிட்டா போதும் அன்னைக்கு தாளி சிவ ராத்திரிதான் இது நம்ம கேஸ் ஹிஸ்டரி. ஆனா பாருங்க சமீப காலமா ராத்திரி 9 மணிக்கு டிஃபன் அடிச்சுட்டு உடனே டீ சாப்பிட்டா கூட தூக்கம் சொக்க ஆரம்பிச்சிருச்சிங்கண்ணா. சரி விடியல்ல முழிப்பு வரும்னு படுத்தா எட்டு எட்டரை வரை தூக்கம். சரி இன்னைக்கு மதியம் கிழிச்சுரலாம்னு நினைச்சு சாப்டு முடிச்சா உடனே தூக்கம்.

சனத்துக்கும் எனக்கும் உள்ள வித்யாசங்கள்ள ஒன்னு அவிக விழிச்சிருக்கிற நேரத்துல நான் தூங்கிட்டு இருப்பேன். அவிக தூங்கற நேரத்துல நான்  வேலை செய்துக்கிட்டிருப்பேன். ஆயிரம் பதிவுகளை தாண்டியும் புதுசு புதுசா மேட்டர் கொட்ட இதுவும் ஒரு காரணம். ஆனா இந்த ப்ளஸ் பாயிண்டே ஃபணாலாயிருச்சு. ரொம்ப வேதனையா போச்சு.

நித்யானந்த பாபாவோட சரித்திரத்தை படிச்ச பிறவு கொஞ்சம் கொஞ்சமா நம்ம சுதர்மம் (ராத்திரியில பூனைகணக்கா சுறு சுறுப்பு) ரிட்டர்ன் ஆஃப் தி ட்ராகன்.  நித்யானந்த பாபாவோட ஸ்டைல் டிஃப்ரண்ட்.

மரத்து மேல,கூரை மேல உட்கார்ந்துக்குவாராம். கிராவிட்டி பவர்லருந்து ஓரளவு தப்பிச்சுக்கலாம். அதனால தான் வாஸ்துல கூட மாடில வசிக்கிறவனுக்கு அரைப்பலனுங்கறாய்ங்க. எங்க வீட்டு வாஸ்துவுக்கு அம்மா,அப்பா, ரெண்டு அண்ணன் காலி. தம்பி எங்கன இருக்கான்னே தெரியாது. நான் மட்டும் தப்பி பிழைச்சேன்னா அதுக்கு காரணம் மாடி அறைல வசிச்சது. நெக்ஸ்ட் 24 வயசுல ஸ்டெப் அவுட் ஆயிட்டதுதான்.

எப்பவும் கண்களை மூடியே இருப்பாராம். அதுலயும்  மூடின கண்கள் மேனோக்கியே ( ஆக்னா)  இருக்குமாம். மனித சக்தி வீணாகிறதே கண்கள் வழியாத்தான்.மூடின கண்கள் மேனோக்கி பார்க்குதுன்னா சுவாசம் கூட சுழுமுனைல நடக்கும்னு அர்த்தம்.

மிக மிக குறைவா பேசுவாராம். பேசியே அழிஞ்ச இனம் தமிழ் இனம். பேசியே அழிஞ்ச நாடு நம்ம நாடு.

ஒரு ஜாதகத்துல எல்லா கிரகமும் கேந்திர கோணங்கள்ள நின்னா அந்த ஜாதகனுக்கு எந்த கருமமும் ஒட்டாது ஹி ஈஸ் ஃப்ரீனு அர்த்தமாம். நம்ம ஜாதகத்துல 7 கிரகம் அப்படித்தான் உட்கார்ந்திருக்கு. ஆனால் சந்திரன் சுக்கிரன் மட்டும் வாக்கு ஸ்தானத்துல உட்கார்ந்து இப்படி செக்ஸையும் (சுக்ரன்),  சைக்காலஜியையும் (சந்திரன்)  போட்டு சொதப்ப வச்சிருக்காய்ங்க. நான் மட்டும் ஒரு 48 நாள்  ப்ளாக் எழுதறத விட்டுட்டு, மவுன விரதம் கடை பிடிச்சா அற்புதங்களே நடக்கும்.

இருந்தாலும் மனிதம் காக்க, மனித குலத்தை மீட்க பீசிக்கிட்டும், எளுதிக்கிட்டும் கிடக்கேன். ஹூம் பார்க்கலாம்.

எப்படியோ நித்யானந்தா டுபுக்கு பார்ட்டியா இருந்தாலும் ஜஸ்ட் அவரோட பேரை உச்சரிச்ச/எழுதின  புண்ணியத்துக்கு ஒரு உண்மையான சித்த புருஷரை பத்தி தெரிஞ்சிக்கிற வாய்ப்பு கிடைச்சது.

தி க்ரேட் நித்யானந்த (பாபா)

பி.கு: வாய்ப்பு கிடைக்கும் போது இந்த பாபாவோட வாழ்க்கை வரலாற்று சுருக்கத்தையாவது நம்ம ப்ளாக்ல எழுதப்பார்க்கிறேண்ணா.

பாபாவும் பாபா ப்ளாக் ஷீப்பும்: 10

பாபாவும் பாபா ப்ளாக் ஷீப்பும் என்ற தொடரை யார் படிக்கிறாய்ங்க, அவிக என்ன நினைக்கிறாய்ங்கன்னு ஒன்னும் தெரியாத நிலைல இதை தொடர்ந்து எழுதிக்கிட்டிருக்கேன். பல தடவை சொல்லியிருக்கேன். என்னுது கடகலக்னம் ரெண்டே கால் நாளைக்கு மிஞ்சி ஒரே வேலைய தொடர்ந்து செய்ய முடியாதுன்னு. இருந்தாலும் இதை தொடர உங்கள்ள யாரோ ஒருத்தரோட வில் பவர் தான் காரணமா இருக்கும். அந்த யாரோ நீங்களா கூட இருக்கலாம்.

1997  ல டச் ஆன பாபா  1999ல ஷீர்டி வரவச்சதையும் பிரதி வியாழன் பிரச்சினைகளால பாதிக்கப்பட்ட  தன் பக்தர்களை எனக்கு எண்டார்ஸ் பண்ணிக்கிட்டிருந்தாருங்கற விசயத்தையும் கடந்த பதிவுகள்ள சொல்லியிருக்கன். இந்த லிஸ்ட்ல எங்க தொகுதி எம்.எல்.ஏ வையும் எண்டார்ஸ் பண்ணாருன்னும் சொல்லியிருந்தன்.

படக்குனு 2004க்கு தாவி 2004 முதல் 6 வருஷத்துல நடந்த சம்பவங்களை விவரிக்கிறேன்னு கடந்த பதிவை முடிச்சிருந்தேன். ஆனா  இன்னைக்கு  நடந்த மேட்டரால 1998ல நடந்த ஒரு சம்பவமும்,1999ல  நடந்த இன்னொரு சம்பவமும் ஞா வந்தது. அந்த 2 சம்பவங்களை இப்ப பார்ப்போம்.

முதல்ல இன்னைக்கு நடந்த சம்பவம்:
உஞ்ச விருத்தி பிராமணன் போல பவித்திரமா வாழ்ந்த காலம் ஒன்றுண்டுன்னு பெருமையா சொன்னாலும் அது அந்த காலம்னு தான் சொல்ல முடியுது. இப்ப நானேதும் சந்தனக்கட்டை ஓட்டறதில்ல, நில ஆக்கிரமிப்பு பண்றதில்லன்னாலும் யோக சித்திக்கு தேவையான முக்கிய அம்சமான பிரத்யாஹாரத்தை ( பிறர் தரும் பொருளை ஏற்பது) பின்பற்ற முடியாத நிலை. அதனால எனக்குள்ள கொழுந்து விட்டு எரிஞ்சிட்டிருந்த  அக்னி சிம்னிக்குள்ள விளக்கு மாதிரி ஆயிருச்சு.

எனக்குள்ள கனன்றுக்கிட்டிருந்த சத்தியாக்ரஹம் (ஆக்கிரஹம்னா கோவம்னு அர்த்தம்) இன்னைக்கு கேவலம் குண்டூசி/சின்ன குத்தூசி  கணக்கா கட்டுரை எழுதற ரேஞ்சுக்கு வந்துருச்சு. ஒரு வார்த்தைல சொல்லனும்னா நீர்த்து போயிட்டன். லைஃபோட காம்ப்ரமைஸ் பண்ணிக்கிட்டேனு தான் சொல்லனும். அதே நேரத்துல இந்த காம்ப்ரமைஸ் நிரந்தரம் கிடையாது.

எனக்குள்ள ஒரு  நம்பிக்கை இருக்கு ஒரு நாளில்லை ஒரு நாள் விடியும். இந்த ப்ருஹன்னளை வேடம் முடியும். எதிர்காலத்துல  இன்றைய லஞ்ச லாவணியங்கள், ஜன நாயகப்படுகொலைகளுக்கு எதிரா  நடக்கப்போற தர்ம  யுத்தத்துல  அபிமன்யு போல பத்மவ்யூகத்துல சிக்கி சாவேனோ, அர்ச்சுனன் மாதிரி ஜெயிச்சு வருவேனோ தெரியாது.  ஆனால் யுத்தம் நிச்சயம். அதுல எனக்கொரு பங்கு நிச்சயம்.

என்னங்கண்ணா மொக்கை அதிகமாயிருச்சா மேட்டருக்கு வந்துர்ரன்.

ஸ்ரீ சாயி சத நாமாவளி ஒரு லட்சம் பிரதி போடறதா அறிவிச்சாச்சே தவிர வேலைகள் என்னமோ அரசு அலுவலகம் கணக்கா தான் நகருது. ஒரு டெம்போ வரணும், வேகம் வரணும்னா பாபா தொடர்பான பாடல்களை கேட்கனும்னு ஒரு துடிப்பு. ( தளர்ந்து போன காலத்துல வாயாக்ரா மாதிரி).

சங்கராபரணம் படத்துல ஓங்கார நாதானுசந்தான மவுகானமேன்னு  பாட்டு வரும்.
அதுல ஒரு வரி  “அத்வைத சித்திக்கி அமரத்வ லப்திக்கி கானமே சோபானமு”

ஓங்கார நாதானுசந்தான மவுகானமேங்கற வரியை பார்த்து இது ஏதோ சந்தானம் சம்பந்தப்பட்டதுன்னு நினைச்சுராதிங்க தம்பி.. ஓங்கார நாதத்துடன் இணைக்க கூடியது கானம் ஒன்றேன்னு இதுக்கு அர்த்தம். (அனு சந்தானம்னா இணைத்தல்னு அர்த்தம் சொல்லலாம்)

“அத்வைத சித்திக்கி அமரத்வ லப்திக்கி கானமே சோபானமு” ங்கற வரியை பாருங்க. அத்வைதம்னா அல்ஜீப்ரானு நினைச்சு பயந்துக்காதிங்க. த்வைதம்னா ரெண்டுனு அர்த்தம். அத்வைதம்னா ரெண்டல்லாத நிலைனு அர்த்தம். த்வைதம்னா கடவுள்+பக்தன்னு ரெண்டு கிராக்கியிருப்பாய்ங்க. அத்வைதத்துல பக்தன் கடவுளோட போய் ஜிங்குனு ஒட்டிக்கிட்டு ஏகமாயிருவான். அதான் அத்வைதம். ஓகே.

இந்த அத்வைத ஸ்டேஜுக்கும், அமரத்வ லப்திக்கும் ( கடவுளா மார்ரது) கானம் தான் வழிங்கறார் கவிஞர்.(வேற யாரு வேட்டூரி சுந்தர ராமமூர்த்திதான்)

இந்த காரணங்களால ஷீர்டி சாயி மஹத்யம்ங்கற படத்தோட பாடல்களை இன்டர் நெட்ல் டவுன் லோட் பண்ணி கேட்கலாம். அப்படியாச்சும் சார்ஜ் ஏறுதா பார்க்கலாம்னு  ஒரு எண்ணம் வந்தது.

ஆன்மீகத்துல ஒரு விதியிருக்கு. உங்க ஆன்மீக கிராஃப் சன் க்ரூப்ஸ் ஷேர் விலை மாதிரி எப்பவும்  ஏறிக்கிட்டே போகாது.  கொஞ்ச நாள் ஏறும் படக்குனு விழுந்துரும். விழுந்த ஒவ்வொரு தரமும் ரெண்டு மடங்கு ஏறும். ( நன்றி: ஓஷோ)

இதை ஆன்மீக மெனோஃபஸ்னு கூட சொல்லலாம்.

ஏறக்குறைய ஒரு வாரமா அப்ப்பப்போ ட்ரை பண்ணிக்கிட்டே இருந்தேன். வேலைக்காகலே.இன்னைக்கு ஒரே பிடியா  ஒரு மணி நேரம் உட்கார்ந்தும் மண்டை காஞ்சதுதான் மிச்சம்.

நெட்ல எல்லாம் கிடைக்கும்ங்கறது மிகை. கடைசில கடுப்பா போய் ஃப்ரெண்டோட சி.டி சென்டர்ல நோண்டி நுங்கெடுத்து சி.டியை பிக் அப் பண்ணிக்கிட்டு  வீட்டுக்கு வந்தேன்.

அதுக்கு முன்னாடி ஒரு உபகதை.ராம ராவண யுத்தம் முடிஞ்சுருச்சு.  ஸ்ரீராம பட்டாபிஷேகம் நடக்குது. ராமர் அனுமாரை கூப்டு ஒரு ரத்தினமாலையை ப்ரசண்ட் பண்றாரு. உடனே அனுமாரு அதை பிச்சி ஒவ்வொரு மணியா கடிச்சு பார்க்க ஆரம்பிச்சாரு. சீதைக்கு கோவம் வந்துருச்சு . குரங்குனு காட்டிட்ட பார்த்தியானு நினைச்சோ என்னமோ ” வாட் ஈஸ் திஸ்?”னிட்டு சீறினாய்ங்க.

ஆஞ்சனேயர் இந்த மணிகள்ள என்  ராமனோட அதிர்வுகள்,ருசி இருக்கானு பார்க்கிறேன். அப்படி இருந்தாதான் இதை அணிவேன்னாராம். சீதைக்கு கடுப்பாகி ஆமா பொல்லாத அதிர்வு உன் நெஞ்சத்துல அது இருக்கோ இல்லையோ செக் பண்ணிக்கலயானு கேட்டாங்க. உடனே அனுமாரு ஒரு ஓப்பன் ஹார்ட் சர்ஜரி பண்ணி தன் இதயத்துல ராமன் சீதா,லட்சுமணர்கள் இருக்கிறதை காட்டினாராம்.

நாம ஆஞ்சனேயர் ரேஞ்சுல்லயா?

கடந்த காலத்துல அம்மவாரி சத நாமாவளின்னு ஒரு பாக்கெட் புக் போட்டிருக்கேன். சரி மேட்சிங்கா இருக்கட்டும்னு ஸ்ரீ சாய் சத நாமாவளினு அறிவிச்சாச்சு. அப்புறம் பார்த்தா  ஸ்ரீ சாயி நாமாவளின்னு ஒரு ஐட்டம் செலாவணில இருக்கு. அதுல மொத்தம் 108 உருப்படி இருக்கு.

ஆன்மீகத்துல நாமம் – நாமி ( பெயர் – பெயருக்குடையவர்) ரெண்டுக்கும் வித்யாசம் கிடையாது. ரெண்டுமே சமம். அதாவது ராமனால் முடியற வேலை எல்லாமே ராம நாமத்தாலயும் முடியும். (ஒரு சந்தர்ப்பத்துல ராமனையே ஜெயிச்சதாவும் சொல்றாய்ங்க)

நாம ஜபத்துக்கு நான் விரோதி இல்லை. ஆனால் நாமங்களை அவற்றிற்குரிய அர்த்தங்களோடு , தாத்பரியங்களோடு, ரெஃபரென்ஸ் டு தி கான்டெக்ஸ்டோடு சொல்ல வேண்டும் என்பது என் கருத்து, அனுபவம்.

(சில சந்தர்ப்பங்கள்ள அர்த்தம் தெரியாம சொல்லிக்கிட்டிருந்த நாமங்கள் கூட பலன் தர்ரதுண்டு. உதாரணமா ஆஞ்சனெயருக்கு லட்சுமி ப்ரதாயானு ஒரு பேர் உண்டு. ( செல்வத்தை வழங்குபவனேனு அர்த்தம் அதை படிக்கிறப்பல்லாம் லட்சுமிக்கும் அனுமாருக்கும் என்னப்பா சம்பந்தம்னு நினைச்சிட்டே படிக்கிறது வழக்கம்.  சோத்துக்கு லாட்டரி அடிச்சிட்டிருந்த எனக்கு ஓரளவு மினிமம் கியாரண்டி கிடைச்சு இன்னைக்கு தினசரி யோசனை பண்ணாம  அம்பது அறுபது ரூபா என் திருப்திக்காக செலவழிக்கிறதுக்கு திருமகள் அருள் புரிய காரணம் ஆஞ்சனேயர் தான்னு சில வருஷங்களுக்கு முன்னாடிதான் ஸ்ட்ரைக் ஆச்சு. சீதை செல்வத்துக்கு அதி தேவதையான லட்சுமியோட அம்சம். ராமர் சீதைய தொலைச்சுட்டு அவதிப்பட்டப்போ சீதைய மறுபடி அடைய  ஆஞ்சனேயர் தானே உதவினார். ஆக அனுமார் செல்வத்தை வழங்குபவர்னுதானே அர்த்தமாகுது . அனுபவமாகுது)

ஈதிப்படி இருக்க சாயி சத நாமாவளில சிலது ரெம்ப சாதாரணமா இருந்தது. அதையெல்லாம் அவாய்ட் பண்ணிட்டன் ..ஆக சாயி நாமாவளிய எடிட் பண்ணிட்டன். இன்னைக்கு 2,000 காப்பி வெளிய போயிருக்கு .ஒரே ஒரு பார்ட்டி மட்டும் ஃபோன் பண்ணி கம்ப்ளெயிண்ட் பண்ணாப்ல.

என்னைக்கேட்டா எந்த ஒரு நூதன அனுபவமும் போக போக இயந்திரத்தனமா ஆயிரும். உங்க காதலி முதல் முதலா உங்க காதலிய அங்கீகரிச்சப்ப உங்களுக்கு ஏற்பட்ட புல்லரிப்பு, புள்ங்காகிதம், மயிர் கூச்செறிதலையெல்லாம் இப்ப உங்களால ஞா படுத்திக்க கூட முடியாது.

இந்த நாமாவளிகளும் அப்படித்தான்.  நாமாவளிகளை இயந்திரத்தனமா  சொல்லிக்கிட்டிருக்கிறதால ஒரு புண்ணியமும் கிடையாது. ஏற்கெனவே சொன்னபடி அந்த நாமங்களை, அவற்றின் பொருளை, உட் பொருளை, தாத்பர்யத்தை அறிந்து சொல்லனும். வெறுமனே சொல்லிட்டு மறந்துர்ரதுல்ல. அவற்றை அடிக்கடி சிந்திக்கனும்.

கம்ப்ளெயிண்ட் பண்ண பார்ட்டி நாமாவளிய பல வருஷமா சொல்லியிருக்கலாம் . ஆன்மீகம் தொடர்பான அவரோட நுன்னிய அதிர்வுகள், உணர்வுகள் மங்கியும் போயிருக்கலாம்ஆனால் நம்ம பாக்கெட் புக் அவரோட சிந்தனைகளை  நடராஜ் பென்சில் ரேஞ்சுல சீவி விட்டிருக்கும்.

இத்தனாம்பெரிய வியாக்யாணத்தை கொடுத்தது எதுக்குன்னா இன்னைக்கு நான் வாங்கின சி.டில மேற்படி ஸ்ரீ சாயி நாமாவளியோட ஒலி வடிவமும் இருக்கு. ஒவ்வொரு ஆயிரம் பிரதிக்கு  புது மாஸ்டர் தான் எடுக்கறோம். நீங்க சொல்லுங்கண்ணா 108 ஆ போட்டுரலாமா? சதமே தொடரட்டுமா?

இந்த மேட்டர்ல பாபா என்ன சொல்றாரு? ஒலிவடிவத்தை கொடுத்து ” அட பன்னாடை!  என் நாமாவளியென்ன ஆரம்ப எழுத்தாளர் எழுதின நாவலா எடிட் பண்ணி ஒரு பக்க கதையா போட.. மரியாதையா அடுத்த ஆயிரத்துல திருத்தி போடு”ங்கறாரா?

அல்லது

நீ என்னமோ பெரிய்ய ரேஷனலிஸ்ட் மாதிரி உன் வில் பவரை நம்பி நாமாவளிய எடிட் பண்ணி போட்டே. வேலையா ஆமையா நகருது. இப்போ ஒரிஜினலோட ஒலிவடிவம் உன் முன்னாடி இருக்கு. இப்ப நீ  யாருன்னு நான் தெரிஞ்சிக்க போறேன். திருத்தி போட்டா என்னை கன்சர்வேட்டிவ்னு நினைக்கிற  உன்னை கன்சர்வேட்டிவ் லிஸ்ட்ல சேர்ப்பேன்.  திருத்தாம விட்டா என்னை ரேஷ்னலிஸ்டுனு நினைக்கிற ரேஷ்னலிஸ்ட் லிஸ்ட்ல சேர்ப்பேங்கறாரா?

அப்படி வரச்சத்தான் மேற்படி 2 சம்பவங்கள் ஞா வந்தது . அதை இப்போ பார்ப்போம்.

சாரிங்கண்ணா இந்த பதிவுல சொல்றதா சொன்ன ரெண்டு சம்பவங்களை அடுத்த பதிவுல சொல்றேங்கண்ணா

காமக்கிளர்ச்சியோட சாப்டா

அண்ணே வணக்கம்ணே,
இன்னைக்கு இந்த பலான பதிவல்லாது

பாபாவும் பாபா ப்ளாக் ஷீப்பும்: 10

நித்யானந்தா தி க்ரேட்

என்ற இரண்டு தனிப்பதிவுகளும் போட்டிருக்கேன். படிச்சுட்டு உங்க கருத்தை தெரிவிங்கண்ணா.

(அக்கா,தங்கச்சி,தம்பி, மாமூ, மச்சானுங்களுக்கும் இதே அப்பீல்தான்.. அடி தூள்!)

மனித வாழ்விலான பிரச்சினைகள் குறித்த ஹோல் சேல் அனலைஸ் இந்த பதிவுலும் தொடருது. கடந்த பதிவுல நமக்கு வர்ர பிரச்சினைகளுக்கு நம்ம உணவு முறையும் ஒரு காரணமா இருக்கிறதை குறிப்பிட்டிருந்தேன். அவ்ளோ மேட்டர் படிச்சும் ” ஹ.. சொம்மா விடாதிங்க முருகேசன்!” ங்கற பார்ட்டிகளும் இருப்பாய்ங்க.

உதாரணத்துக்கு ஒரு சின்ன மேட்டரை பாருங்க.ஒரு ஃப்ரெண்டு. அலுமினியம் ஃபேப்ரிக் ஒர்க் பண்றவன். காண்ட் ராக்டர் ரேஞ்சுதான். இவன் வேலை கத்துக்கும்போது ஃபேப்ரிக் ஒர்க்னாலே சனத்துக்கு என்னனு தெரியாது. பெருசா படிப்பெல்லாம் கிடையாது. வேலை தெரியும் அவ்ளதான். கஷ்டப்படற குடும்பத்துல பிறந்து கை வேலை காரணமா முன்னுக்கு வந்தான். ஏதோ கல்யாணமாச்சு. ரெண்டு பசங்க. மொதல்ல ஃபீல்ட் ஒர்க். இவனும் வேலையாட்களோட சேர்ந்து வேலை செய்துக்கிட்டிருந்தான். போக போக வெறுமனே மேஸ்திரி மாதிரி கார்வார் பண்றதுதான்.

ஃபீல்ட் ஒர்க்ல இருக்கும்போது பயங்கர பசி இருக்கும். நானெல்லாம் சித்தூர் வேலூர் ரூட்ல ப்ரைவேட் பஸ் கம்பெனில செக்கிங்கா வேலை செய்த காலத்துல ரெண்டு டிஃபன், ரெண்டு லஞ்ச், ரெண்டு டின்னர் அடிப்பேன். சித்தூர் பஸ் ஸ்டாண்ட்ல சனத்தை   ” வேலூர் வா வேலூர் வான்னு கத்தி கூப்டு ஏத்தி ரெட்டிகுண்டா செக் போஸ்ட் தாண்டறதுக்குள்ள காலைல சாப்ட டிஃபன் பஸ்மமாகி வேலூர் போனதும் ரெண்டு இட்லி ஒரு வடையாச்சும் சாப்பிடனும்பானு தோணிரும். வேலூர்ல சாப்ட டிஃபன் மதியம் 12 க்கெல்லாம் பஸ்மம்.

(ஆனால் இப்படி அல்லாடி, தின்னு, செத்து சுண்ணாம்பானாலும் ராத்திரில தூக்கம் வந்து தொலையாது, இதனால அஜீரணத்துல ஆரம்பிச்சு அது வீசிங்ல கொண்டு விட்டுட்டது வேற கதை. அதை எப்படி க்யூர் பண்ணிக்கிட்டேங்கறது உபகதை)

நிற்க ஏழ்மைல, கடும் உழைப்புக்கு நடுவுல நல்லா தின்னுக்கிட்டிருந்த ஃப்ரெண்டு வெறுமனே கார்வார் வேலைய பார்க்கிறச்ச தீனிய குறைச்சிருக்கனும். குறைக்கலை.  இதனால பிள்ளையார் மாதிரி தொந்தி, கோவில் சிலை மாதிரி பிட்டம், வேத்து வழிய, மூச்சு வாங்க அவன் திங்கறதை பார்த்தாலே பரிதாபமா இருக்கும்.  மதியம் அளவுக்கு மீறி தின்னா தூக்கம் வரும். ராத்திரில அளவுக்கு மீறி தின்னா ஒன்னு தூக்கம் வராது, இல்லாட்டி பாதி ராத்திரி முழிப்பு தட்டும். இதெல்லாம் கேஸ் கேஸுக்கு மாறும்.

சிலருக்கு சாப்பிட்டதும் வயிற்றுப்பகுதில அதிகரிக்கிற ரத்த ஓட்டம் இன்னம் கொஞ்சம் டவுன் ஆகி வீரியம் புரளும். உடலுறவு குறித்த மூட நம்பிக்கைகள்ங்கற தொடர்புல இது பத்தி விவரமா சொல்லியிருக்கன். இருந்தாலும் அதனோட சுருக்கம் இங்கே.

மனித உடல்ல இரண்டு மண்டலங்கள் இருக்கு. ஒன்னு சீரண மண்டலம்,அடுத்தது  . இனப்பெருக்க மண்டலம் . ஒன்னு வேலை செய்யும்போது அடுத்தது வேலை செய்யாது. உதாரணமா சாப்பிடறச்ச காமக்கிளர்ச்சி இருக்காது. காமக்கிளர்ச்சியோட சாப்டா பசி மெட்டாஷ். சாப்பிட்டதும் சீரண மண்டலம் தன் வேலைய துவங்கிரும் . அந்த நேரத்துல கசமுசால இறங்கினா “அந்த” வேலைலயும் சூடு இருக்காது. சீரண கிரியையும் நின்னுரும். இரைப்பைல இருக்கிற உணவு அழுக ஆரம்பிக்கும். கேஸ் ஃபார்ம் ஆகும். இது தொடர்ந்தா அல்சர்.

அதனால ஒன்னு “கசமுசா”வையெல்லாம் முடிச்சுட்டு அப்பாறமா தின்னுங்க. இல்லாட்டி தின்னு 6 மணி நேரம் கழிச்சு “அதுல”இறங்குங்க ஓகே. இல்லை. அமாவாசை இருட்டில பெருச்சாளிக்கு போனதெல்லாம் வழியேங்கற மாதிரி மதியம் 2 மணிக்கு தீனி . 2.15க்கு ட்ரிபுள் எக்ஸுன்னா நாறிர்ரும். அதுவும் 2.30க்கு ட்ரெயினை பிடிக்க வேண்டியிருந்தா செமை நாறல் தான்.  டிக்கெட்டை மறந்துர்ரது, பணம் பிக்பாக்கெட் ஆயிர்ரது, போர்ட்டர் கிட்ட சண்டையெல்லாம் இந்த மாதிரி சந்தர்ப்பத்துலதான் நடக்கும்.

சரி உபகதைக்கு வந்துருவம்.

நான் சொன்ன ஃப்ரெண்டு மதியத்துல தூங்க ஆரம்பிச்சான். மதியம் தூங்கி எழுந்தா பசிக்கிறாப்ல ஒரு ஃபீலிங் இருக்கும். அதை நம்பி சாயந்திரம் வேற வெளுத்து வாங்க ஆரம்பிச்சான். மதியத்துல இவன் வரவே மாட்டானு தெரிஞ்சுக்கிட்டு வேலைக்காரங்க வேலை காட்ட ஆரம்பிச்சுட்டாய்ங்க. திருட்டு, வேலைல சுணக்கம், பார்ட்டிங்களை டைரக்டா டீல் பண்ணிக்கிறதுன்னு போச்சு .இவன் கீழே வேலை செய்தவன்ல  நாலு பேர் தனியே போய் கடை போட இவன் வியாபாரம் நொண்ட ஆரம்பிச்சுருச்சு.

நம்ம ஃப்ரெண்டு லேசா முழிச்சுக்கிட்டு மிச்சம் மீதி இருக்கிற  வேலைக்காரங்களோட இன்டராக்ட் ஆகறேனு அவிகளோட தண்ணி போட ஆரம்பிச்சான். லேட் நைட் வீட்டுக்கு போறது. காலைல ஹேங் ஓவர். அதை கண்ட்ரோல் பண்ண பெட் காஃபி மாதிரி ஒரு மூணு அவுன்ஸ் போட ஆரம்பிச்சான்.

ஷாட் கட் பண்ணா இப்ப வேலை வெட்டி வியாபாரம்லாம் போய் , புதையல் எடுக்கிற க்ரூப்போட சேர்ந்து சுத்திக்கிட்டிருக்கான். இத்தனைக்கும் காரணம் என்ன?
அவனுக்கேத்த, அவன் வேலைக்கேத்த உணவு முறைக்கு மாறாததுதான்.

சிலர் வீட்ல ஒரு முறம் எண்ணெய் ஊத்தி சமைப்பாய்ங்க. அந்த வீட்டு ஆம்பளைகளுக்கு தண்ணி குடிக்கவும், மூச்சா போகவுமே நேரம் சரியா இருக்கும். இந்த மாதிரி பார்ட்டிங்க தண்ணி கிடைக்காம தாகத்துல தவிக்கறச்ச எதையாவது  நின்னு  நிதானமா ரோசிக்க முடியுமா?

பிரச்சினையை கூலா டீல் பண்ண முடியுமா? ப்ர்ர்ர்ர்ர்ர்ர்

சிலர் வீட்ல தாளிக்கறச்ச மானாவாரியா கடுகு போட்டுருவாய்ங்க. இதனால பி.பி வருது. இடுப்பு வலி, முதுகு வலி வருது. இப்படி ஆயிரம் சொல்ல முடியும்.  என்னதான் கச்சா முச்சானு தின்னுக்கிட்டிருந்தாலும் ஒரு பீரியட் வரை உடம்பு சமாளிக்குது. கடைக்கால பொருத்து 20 லருந்து 30 வயசு வரை சமாளிக்குது. அதுக்கப்புறம்?

செரிப்பு திறன் மங்க ஆரம்பிச்சுரும். உணவு  செரிக்காட்டி வாயு கோளாறு வளரும். சரியா சாப்பிட முடியாது. அகாலத்துல பசிக்கும். இவன் பசிக்குதே, ரெண்டு வடை சாப்பிடலாம்னு கடைக்கு போவான். அந்த நேரம்தான் ஆஃபீசர் சர்ப்ரைஸ் விசிட் அடிப்பாரு, கண்ட நேரத்துல திங்கறவனுக்கு கண்ட நேரத்துல வயித்த கலக்கும் . இதைத்தான் வேலை வர நேரத்துல …ல வர்ரதும்பாய்ங்க.

இப்போ ஒரு மவுஸ் வாங்கறோம். அது இத்தனை க்ளிக்ஸ் வரை வேலை செய்யும்னு தான் போட்டிருப்பான். அதுமாதிரி ஒவ்வொரு உடம்புக்கும் இத்தனை ஆயிரம் இட்லி, இத்தனை ஆயிரம் வடைனு டார்கெட் இருக்கும். அதை நீங்க பத்து வருசத்துலயும் முடிக்கலாம். 60 வருசத்துலயும் முடிக்கலாம். அது உங்க வசதி.

சில சனம் பண்ற இன்னொரு தப்பு என்னண்ணா டயட்ல இருக்கேனு காக்காசோறு திம்பாய்ங்க. இது தேவையில்லாத வேலை. 5 கிலோ அரைக்கிற கிரைண்டர்ல 100 கிராம் போட்டு அரைச்சா என்ன ஆகும்? எல்லாம் கிரைண்டர்லயே ஒட்டிக்கிட்டு போயிரும். இப்படி சீன் போடறத விட வாரத்துல ஒரு நாள் ரெண்டு நாள் உண்ணாவிரதம் ட்ரை பண்ணலாம்.

ஒன்னு கிரைண்டர் கெப்பாசிட்டிக்கு அரை. இல்லையா கழுவி கவுத்துரு. (சர்க்கரை பார்ட்டிங்களுக்கும், அல்சர் கிராக்கிகளுக்கும் இது பொருந்தாது)

இன்னொரு உதாரணம். வீட்ல சோறு வடிக்கிற பாத்திரங்களை பார்த்திருப்பிங்க.(இப்ப அல்லாத்துக்கும் குக்கர்தான். ஒரு காலத்துலனு சேர்த்து படிங்க ) ரொட்டீனா சமைக்க  அரை கிலோ வடிக்க ஒரு பாத்திரம், விசேஷத்துல வடிக்க 5 கிலோ வடிக்கிற பாத்திரம்னு வச்சிருப்பாய்ங்க. அரை கிலோ வடிக்கிற பாத்திரத்துல 5 கிலோ அரிசி போட்டா என்னாகும்? வேகாது.

அஞ்சு கிலோ பாத்திரத்துல அரை கிலோ வடிச்சா என்னாகும்? தண்ணி வேஸ்டு. ஃப்யூயல் வேஸ்டு.

குக்கர்,பாத்திரம்லாம் உயிரில்லாத வஸ்துக்கள். ஆனால் மனுஷன் உயிருள்ள வஸ்து. தன் தலைல மூளைய தாங்கற ஜீவன். இவன் வயித்துல நடக்கிற ஒவ்வொரு கிரியையும் மூளையையும் பாதிக்குது. பிரச்சினைகளை க்ரியேட் பண்றதும் மூளைதான். அதுகளை தீர்க்க வேண்டியதும் மூளைதான். அதனாலதான் பிரச்சினைகளும் தீர்வுகளும்ங்கற தலைப்புல உணவு முறை காரணங்கள் ரெண்டாவது அத்யாயத்தையும் கடந்து போகுது..

வள்ளுவர் யாகாவாராயினும் நா காக்கன்னாரு. இது டூ இன் ஒன். பேச்சு விஷயத்துல மட்டுமில்லை தீனி விஷயத்துலயும் சாக்கிரதையா இருக்கனும். என் ஃப்ரெண்ட் ஒருத்தன் (லைன் மேன்) இவனும் வறுமைலருந்து பிக் அப் ஆனவன் தான். தீனிப்பைத்தியம். பானி பூரி, மிளகாய் பஜ்ஜி, ஆப்பம்னு வெளுத்துக்கட்டுவான். அந்த ஆப்பத்துல ஊர்பட்ட சோடா மாவ போட்டு வச்சிருப்பாய்ங்க. அப்பத்தானே அது நல்லா உப்பும். கண்டதையும் தின்னுட்டு (வயசு 30 ப்ளஸ் தான்) பேசிட்டே இருக்கிறச்ச காலை பிரிச்சு நீளமா வாயு வெளியேத்துவான். கண்டபடி திட்டுவேன். இன்னைக்கு பாவம்  பார்ட்டிக்கு டி.பி ப்ளஸ் ஷுகர். டி.பி வந்தவன் நன்னா சாப்பிடனும். ஷுகர் வந்தவன் வாயை வயித்தை கட்டனும். இது ரெண்டுல எதை செய்தாலும் அடுத்த வியாதி அதிகமாயிரும்.தேவையா இதெல்லாம்.

வாய்க்கும் இன உறுப்புக்கும் நேரடி தொடர்புன்னு ஒரு பதிவு போட்டிருந்தேன். அதனோட சுருக்கம்:
ஒரே குழாயோட ஆரம்பமும் முடிவும் தான் வாயும் ஆசன துவாரமும். வாய்ல உணவுக்குழாய்ல , இரைப்பைல ,சிறுகுடல்,பெருங்குடல்ல ஏற்படற அசைவுகள் இன உறுப்புலயும் அதிர்வுகளை ஏற்படுத்துது. செக்ஸ் கிடைக்காதவங்க தான் தீனி பண்டாரங்களா மாற வாய்ப்பு அதிகம்.சோகம் என்னன்னா மனிதனோட ஆதியாரம்ப கோரிக்கையான கொலை, தற்கொலையும் இந்த அமித தீனில நிறைவேறுது. என்.வி சாப்பிடறவங்களுக்கு கொல்லும் இச்சையும் நிறைவேறுது. அமித தீனியால தற்கொலை இச்சையும் நிறைவேறுது.

ஏற்கெனவே இன்னொரு பதிவுல சொன்ன மாதிரி மனிதனோட ப்ரக்ஞை குழந்தையா இருக்கிறச்ச ஆசன துவாரத்து மேலயே இருக்கும். (இதுக்கு சற்று மேலேதான் மூலாதார சக்கரம் இருக்கு)  இதனாலதான் குழந்தைகள் கழிவறைல அதிக நேரம் எடுத்துக்கும். நாளடைவுல இந்த ப்ரக்ஞை இன உறுப்புக்கு மாறனும்(உயரனும்). மாறுது. ஆனால் பெற்றோரும் சமுதாயமும் இதை கடுமையா எதிர்க்கிறதால அந்த அடலசன்டோட மனம்/ப்ரக்ஞை மறுபடி ஆசனப்பருவத்துக்கே போயிருது. ( சைக்கலஜில வர்ர வொக்காபிலரி)

குண்டலி மூலாதாரத்துல இருக்கிறச்ச மனித மனம் மாற்றங்களை எதிர்க்கும்.  சுய நலம் அதிகமா இருக்கும். பிடிவாதம் இருக்கும். பொசசிவ் நெஸ் இருக்கும்.( மன்சங்களுக்கு வர்ர பிரச்சினைகளுக்கு இதைவிட அடிஷ்னலா என்ன காரணம் இருக்கு சொல்லுங்க)

குண்டலி மேனோக்கி பயணிக்கனும். (உடலியல் ரீதில சொன்னா ஆசனத்துல இருந்து இன உறுப்புக்கு மாறனும்) அப்படி மாறும்போது மேற்சொன்ன குணாம்சங்கள் எல்லாம் குறையும்.

குண்டலி மூலாதாரத்துல இருக்கிறப்ப வர்ர பிரச்சினைகள் வேற. ஸ்வாதிஷ்டானத்துல இருக்கிறப்ப வர்ர பிரச்சினைகள் வேற. மனுஷன் அதுகள டேக்கிள் பண்ற ஸ்டைல்ஸே டிஃபரண்டா இருக்கும்.

அந்தந்த கால கட்டத்துல மனுஷனோட மைண்ட் செட்/ கான்ஷியஸ் மெச்சூர் ஆகிட்டே வரனும். இந்த ப்ராசஸ்ல செக்சுக்கு முக்கிய இடமிருக்கு. முதல்ல ஆசனப்பருவம். அதற்கடுத்து இன உறுப்புக்கு டைவர்ட் ஆகனும். அப்படி ஆயிட்டா பிரச்சினை இல்லை. சரக்கு தீர மாயை  விலக வயித்துப்பாட்ட பார்ப்பான். ( மணி பூரகம்) ஓரளவு தன்னிறைவு எய்திட்டா அவனோட கான்ஷியஸ் இதயத்துக்கு வரும்
( அனாஹதம்). அதாவது சக மனிதன்பால் ஈவு இரக்கம்லாம் தோணும்.

நீங்க இதுல எந்த ஸ்டேஜுல இருக்கிங்கனு பாருங்க. அதை பொருத்து உங்க பிரச்சினைகள் மாறிரும். பிரச்சினைகளை டேக்கிள் பண்ற ஸ்டைலும் மாறிரும்.

உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டும்பாங்க. (ரத்த ஓட்டம் வயிற்றுப்பகுதில அதிகமாகி மூளைக்கு சப்ளை குறையறதால) . இந்த மாதிரி நேரத்துல வசதி வாய்ப்பை பொறுத்து குட்டித்தூக்கம் போடுங்க. இல்லாட்டி கண்ண மூடிக்கிட்டு ஒரு 15 நிமிஷம் இருங்க. அதை விட்டு செக் எழுதவோ, ட்ரைவ் பண்ணவோ இறங்கினா ஏறு மாறா நடக்கும்.

இவ்ள எதுக்கு உங்க வயிறு நிறைஞ்சிருக்கா இல்லையா? நீங்க என்ன தின்னிங்கங்கறத பொருத்து ( அது சீரணம் கூட ஆகவேணா)  அநியாங்கள் மீதான உங்க எதிர் வினை, கருணை, பாசம் ,பரிவு, எதிரியுடனான டீலிங் சோஷியல் ரெஸ்பான்ஸ்பிலிட்டி எல்லாமே மாறிரும்.

வயிறு நிறைஞ்சிருக்கிறப்ப எதிரியை பத்தி திங்க் பண்ணுங்க. ஓஞ்சு போறான் நாயின்னு தோனும். பசில இருக்கிறச்ச உதவி கேட்டு கடிதம் எழுதின நண்பனை பத்தியோ விதவை தங்கச்சிய பத்தியோ திங்க் பண்ணுங்க நல்ல முடிவா எடுப்பிங்க.

கன்ஸ்யூமர்ஸ் சர்ப்லஸ்னு ஒரு கான்செப்ட் இருக்கு. அதாவது நீங்க ஒரு பொருளை பார்க்கறிங்க. வாங்கனும் போல இருக்கு. விலை விசாரிக்கிறிங்க.வாங்கறிங்க. விலை நூறு ரூபானு வைங்க. உங்க மனசுல பரவால்லப்பா  நூத்தம்பது ரூபா கூட கொடுக்கலாம்னு தோணினா ரூ 150 மைனஸ் 100 = ரூ.50 தான் கன்ஸ்யூமர் சர்ப்லஸ். நீங்க வியாபாரியா இருந்தா நீங்க விக்கிற பொருள்ள வாங்கறவனுக்கு கன்ஸ்யூமர் சர்ப்லஸ் கிடைக்கனும். நீங்க சர்வீஸ் ப்ரொவைடரா இருந்தா உங்க சர்வீஸ்ல உங்க க்ளையண்டுக்கு க.சர்ப்லஸ் கிடைக்கனும். இப்படி  ஒரு தொழில் அமைஞ்சு, இப்படி ஒரு கான்செப்டோட நீங்க வியாபாரம் பண்ண முடிஞ்சா, தொழில்  நடத்த முடிஞ்சா நீங்க கல்லையே தின்னாலும் செரிக்கும், கள்ளே குடிச்சாலும் லிவர் வீங்காது.

அதை விட்டுட்டு ஏமாந்தவன் தலைல மிளகாய் அரைக்கிறது, ஏமாந்தவன் தொடைல கயிறு திரிக்கிறதுன்னு இருந்தா நீங்க சாப்பிடறது  அமுதமாவே இருந்தாலும் விஷமாத்தான் வேலை செய்யும். கஞ்சி குடிச்சாலும் செரிக்காது.
ஆயிரம் ஹெல்த் ரூல் ஃபாலோ பண்ணாலும் ரோகம் தான் வரும். கர்ணன் செஞ்சோற்று கடன் தீர்த்த கதை தெரியுமில்லை..

ஒர்ரீஸ் அ கவலைகள் பத்தி முதல் அத்யாயத்துலயே சொல்லியிருக்கன் தலைப்பு கலைஞர் குடு்ம்ப பைத்தியம். கவலைகளோட திங்கற அறுசுவை  நிறைஞ்ச ஆரோக்கிய கரமான உணவும் பிரச்சினைகளைதான் கொண்டு வரும். ஒன்னு தின்னு, ஒரு குட்டி தூக்கம் போட்டுட்டு  கவலைப்படுங்க. இல்லாட்டி கவலைப்பட்டு முடிச்சுட்டு தின்னுங்க. தின்னுக்கிட்டே கவலைப்படாதிங்க. கவலையோட திங்காதிங்க.

நீரின்றி அமையாது உலகு மட்டுமில்லை உங்க பாடியும் தான். நம்ம பாடில 90% வாட்டர் கன்டென்ட். இதனோட கெமிக்கல் காம்பினேசன் கடல் நீரை ஒத்தது. கடல் நீர் மேல சந்திரனோட இன்ஃப்ளுயன்ஸ் அதிகம். சந்திரன் மனோகாரகன். உங்க மனோ சம்பந்தப்பட்ட அப் அண்ட் டவுன்ஸுக்கு காரணம் இதுதான். அதனால சுத்தமான தண்ணீர் நிறைய சாப்பிடுங்க. சாப்பாட்டுக்கு இடைல சாப்பிடாதிங்க. தாகம் எடுக்கறப்பல்லாம் பாட்டில் பாட்டிலா உள்ள தள்ளுங்க.

உணவுக்கு ருசியை தர்ரது பசி. பசி மந்தப்பட்டுப்போனா மசாலாவையோ, ஆடு,கோழ்யையோ, ஸ்னாக்ஸையோ நாடாதிங்க.  உண்ணாவிரதம் இருங்க. நம்ம பசியெல்லாம் பழக்க தோஷத்துல வர்ர பசி. உண்மையான பசியை நாம சந்திக்கனும்னா 12 நாளாச்சும் உண்ணாம இருக்கனும். இதுக்கு தேவை ஜஸ்ட் மனோபலம் தான். காட்டடியா 12 நாள்ள ஆரம்பிக்காதிங்க. மொதல்ல ஒரு நாள் ரெண்டு நாள்னு ட்ரை பண்ணுங்க. உ.வி ஆரம்பிக்கிறதுக்கு முந்தி எனிமா எடுத்துக்கங்க. முக்கியமா உங்க ஃபேமிலி டாக்டரை கன்சல்ட் பண்ணுங்க. (உங்க பாடி தாங்குமான்னு)

தவறான உணவு முறையால கவனம் சிதறடிக்கும் நோய்கள் வரும். இது பிரச்சினைகளை ஐடென்டிஃபை பண்ண கூட முடியாத நிலையை ஏற்படுத்திரும். பிரச்சினைகள் முத்திப்போக வாய்ப்பிருக்கு. முடிவெடுக்கும் திறனை பாதிக்கும் நோய்கள் கூட வரலாம். இதுவும் பிரச்சினைகளை கொண்டு வந்து குவிக்கும் அம்சம்.

மேற்படி வியாதிகள் இருக்கையில் நீங்க தேடிப்போற் தீர்வுகளே பிரச்சினைகளுக்கு ஸ்டீராயிட் (ஊக்க மருந்து) போல ராட்சச பலத்தை கொடுத்துரும். டேக் கேர்!

அடுத்த பதிவுல பிரச்சினை ஏற்படுத்தும்  என்விரான்மென்டல் காரணங்களை பார்ப்போம். உடுங்க ஜூட் !

நமீதா ஞா வந்து கூவ ஆரம்பிச்சுருச்சு

கலைஞருக்கு குடும்ப பைத்தியம்ங்கற தலைப்புல  இந்த தொடர ஆரம்பிச்ச பிறகுதான் உலவு டாட் காமோட ரேங்க் பட்டியல்ல  17 ஆவது ரேங்குல இருந்த  நம்ம ப்ளாக்  நெம்பர் ஒன்னாச்சு. இதை எதுக்கு சொல்றேன்னா இதுல மேட்டர் கீது நைனா.

ஒரு நாதாரி முட்டாத்தனமா பிஹேவ் பண்ணி ஊர்ல இருக்கிற சனத்தையெல்லாம் பிரச்சினைக்குள்ள தள்ளுது.( ஒரு சிட் ஃபண்ட் காரனையே எடுத்துக்கங்க அந்த நாய் மட்டும் இந்த தொடரை முன் கூட்டியே படிச்சு தெளிஞ்சிருந்தா?அதுல பணம் போட்டு ஏமாந்த பார்ட்டிங்க மட்டும்  இந்த தொடரை முன் கூட்டியே படிச்சு தெளிஞ்சிருந்தா? பத்திரிக்கைங்களுக்கு கால்பக்கம்,அரைப்பக்கம் விளம்பரங்களும் கிடைச்சிருக்காது. தலைப்பு செய்திகளும் கிடைச்சிருக்காது.

“கூசே காடித மேசே காடிதனு செடிப்பிந்தன்டா” ன்னு ஒரு சொலவடை  உண்டு. அதாவது ரெண்டு கழுதைங்க ஒரு நிலத்துல மேஞ்சுக்கிட்டிருந்தது. திடீர்னு ஒரு கழுதைக்கு நமீதா ஞா வந்து  கூவ ஆரம்பிச்சுருச்சாம். உடனே  நெலத்துக்காரன் வந்து அடி பின்னிட்டான்.  மேயற கழுதைய கூவுற கழுதை கெடுத்ததாங்கறது இதுக்கு அர்த்தம்.

ஒரு பன்னாடை ஓசில கிடைச்சதுன்னு ரெண்டு ப்ளேட் பிரியாணி, சிக்கன் சிக்ஸ்டி ஃபைவ், பீ ,புண்ணாக்குனு மேஞ்சுட்டு ட்ரைவ் பண்ணுதுனு வைங்க. என்னாகும்? சீரண கிரியை ஆரம்பிச்சுட்டதால ரத்த ஓட்டம் வயிற்றுப்பகுதில கான்சன்ட் ரேட் ஆகும். மூளைக்கு ரத்தம் எட்டாது, மிதப்பா இருக்கும், மதர்மதர்ப்பா இருக்கும்.எப்படா வீட்டுக்கு போவம் தூங்குவம்னு இருக்கும். கை  எக்ஸலேட்டரை முடுக்கிக்கிட்டே இருக்கும். முன்னாடி போற வண்டி காரன் திடீர்னு ஸ்லோ பண்ணானு வைங்க இந்த அலிகிரியால படக்குனு  ப்ரேக் போட முடியாது. இவன் அவன் மேல மோத, அவன் தன் முன் வாகனத்தை மோத .. தேவையா?

இந்த நிலைம மாறனும்னா அல்லாரும் விழிப்பா இருக்க கத்துக்கனும்.  வயித்து வலியா ஜில்லுன்னு பீர் அடிங்கன்னு வெட்டி சஜஷன் கொடுக்கிறது இந்த தொடரோட உத்தேசமில்லை. பிரச்சினையோட முடி,அடிகளை (தலை,பாதம்)  தரிசிக்க வச்சு, பிரச்சினைங்கற குழந்தையே பிறக்காம கு.க பண்றதெப்படின்னு கத்துக்கொடுக்கிறது தான் இந்த தொடர் பதிவோட நோக்கம்.

கடந்த அத்யாயத்துல ” தானா வர்ர பிரச்சினைகள் எல்லாருக்கும் வருது, அதை டேக்கிள் பண்றதுலதான் வித்யாசம் ஏற்படுது. இந்த வித்யாசத்துக்கு பல காரணங்கள் இருக்கு”ன்னு சொல்லி

1.வமிசா வழி காரணங்கள்(ஜெனட்டிக்):
2.இரசாயனகாரணங்கள்:
3.உணவு முறை:
4.என்விரான்மென்டல் காரணங்கள்:
5.குடும்ப அமைப்பு:
6.பொருளாதார காரணங்கள்:
7.சாதீய காரணங்கள்:
8.ஜோதிட காரணங்கள்: லக்னாதிபதியே 6,8,12 ல மாட்டிக்கிறது, நீசமாயிர்ரது, அஸ்தங்கதமாறது, செவ்வாய், சர்ப்ப தோஷங்கள், சனி,செவ்வாய் சேர்க்கை,பித்ரு சாபம், மாத்ரு சாபம், ஸ்த்ரீ சாபம்,
9.வாஸ்து ரீதியிலான காரணங்கள்:
10.கர்ம வினைகள்:
11.தேவதா சாபங்கள்:
12.தர்காதீத காரணங்கள்:
என்று ஒரு பட்டியலையும் தந்து 1.வமிசா வழி காரணங்கள்(ஜெனட்டிக்), 2.இரசாயன
காரணங்க ஆகிய  ரெண்டு கேட்டகிரியை பத்தி விளக்கமும் கொடுத்திருந்தேன்.

இன்னைக்கு 3.உணவு முறை, 4.என்விரான்மென்டல் காரணங்கள்ஆகிய ரெண்டு கேட்டகிரிய விளக்க முயற்சி பண்றேன்.

1986 ஒரு பாடாவதி தெலுங்கு படத்துல ஒரு சீன் ஒரே ஒரு சீன் என்னென்னமோ செய்துருச்சி. பெண்ணோட இன்னொரு பரிமாணத்தை (தாய்மை) காட்டுச்சு. அதுவரை பலான உத்தேசங்களோடவே பார்த்த பெண்ணை வேறு ஒரு கோணத்துல பார்க்கிற தெளிவு ஏற்பட்டுது. இருந்தாலும் அப்பப்ப தலை தூக்கின காமப்பேயை தலைல தட்டி வைக்க ஜெய் ஆஞ்சனேயா. ரீ சேனலைசேஷனுக்காக உடற்பயிற்சி. ஆன்மா ஆமைவடைன்னு ப்ராட் கேஜ்ல  போன வண்டி சிக்ஸ் பேக் மேலான வெறில படக்குனு மீட்டர் கேஜுக்கு டைவர்ட் ஆக   மாட்டுக்கறியெல்லாம் சாப்பிட ஆரம்பிச்சேன். (இதனோட விளைவா யாருக்கும் எந்த தீங்கும் பண்ணாம எல்லாருக்கும் உபயோகமா இருக்கிற பசு எப்படி அகாரணமா வெட்டப்படுதோ அப்படி நானும் பல முறை வெட்டப்பட்டேன்)

சரி சம்ப்வத்துக்கு வரேன். டிகிரி ஃபைனல் இயர்ல  க்ளாஸ் மேட் ஒருத்தன்.காலேஜ் யூனியன் எலக்சன் மேட்டர்ல என்னை கும்ம தேடறதா தகவல் வர வீட்ல பழம் வெட்ட வச்சிருந்த  ஜெர்மன் கத்தியை தூக்கிக்கிட்டு அந்த பார்ட்டியோட வீட்டுக்கே போயிட்டன். விடியல்ல போனதால கேட்டு பூட்டியிருக்க அவன் என்னை சீற, நான் அவனை சீற அவனை அவங்கப்பா அடக்கி உள்ள கூட்டிப்போக  சீன்  ரத்தமில்லாம முடிஞ்சு போச்சு.

2004க்கு பிறகு:
1997 க்கு முந்தி கலப்பு திருமணம், அப்பாவோட மரணம் தந்த  வறுமையாலயும், 1999க்கு பிறகு வந்த சீதேவிய நானா தொலைச்சதால வந்த வறுமையாலும் முட்டையே லக்சரியா இருக்க, மட்டன்,சிக்கனுக்கெல்லாம் டாட்டா. ஏதோ என் மனைவி வீர வன்னிய பரம்பரையா இருக்க அப்பப்ப வாசனைக்காக ஏதாச்சும் செய்வாள். அதையும் தொடறதில்லை.

( சைவம், கொல்லாமை இத்யாதி காரணங்களால் அல்ல. நான் மனோபலத்துல வாழறவன். என் பலம் மனசுல இருக்கு. அவளுக்கு இந்த இழவெல்லாம் கிடையாதே சரி ஃபிசிக்கல்  ந்யூட்ரிஷனாச்சும் கிடக்கட்டும்னு  ” இன்னா இது… பார்க்கவே சரியா இல்லை .. எடு  தூர எடு”ன்னு ரிஜெக்ட் பண்ணிர்ரது வழக்கம்.  2007க்கு பிறகு பிரியாணிக்கு தொட்டுக்க தயிர் பச்சடி இல்லன்னா மட்டும் ஈரல் ரெண்டு மூணு பீஸ் சைட் டிஷ்ஷா உபயோகிச்சிட்டிருந்தேன். போக போக அதுவும் ஸ்டாப். காரணம் என்னன்னே தெரியாது)

நான் எங்க எம்.எல்.ஏனு  அப்பப்ப பெருமையா சொல்ற  சி.கே வெற்றி வாய்ப்பை இழந்து இருக்க தெ.தேசத்தை சேர்ந்தவர் எம்.எல்.ஏவா இருந்த காலம். அவர் பேர் ஏ.எஸ். மார்க்கெட் சவுக்ல ஒரு வைசிய செயற்கை கல் வியாபாரி . இவர் சி.கே ஆதரவாளர். அவிக பக்கத்து வீட்ல ஒரு பஜாரி கும்பல். அந்த வீட்டு நந்தூர்னி ஏ.எஸ்ஸோட ஆதரவாளன். இந்தியா பாக்கிஸ்தான் மாதிரி படக்கு படக்குனு சண்டை வந்துரும்.

ஒரு நா சீன் ரிப்பீட்டு. சி.கே ஊர்ல இல்லை. செட்டியார் ரெம்ப புலம்ப ஆரம்பிச்சிட்டார். “யோவ் என் மேல நம்பிக்கை இருந்தா உன் பையனை என்னோட அனுப்புன்னேன்” அனுப்பிட்டாரு. கூட்டிக்கிட்டு எங்க போனேன்? ஏ.எஸ் வீட்டுக்கு. அங்கன வில்லங்கம் பண்ணின பக்கத்து வீட்டு நந்தூர்னியும் இருக்கு.

நீங்க நம்பினா நம்புங்க. இல்லாட்டி போங்க. ஏ.எஸ்ஸோட ஆஃபீஸ் ரூமுக்குள்ள நுழைஞ்சதுமே விஷயத்தை சுருக்கமா சொல்ட்டு தர்ம சாஸ்திரத்துலர்ந்து ஒரு பாரா எடுத்து விட்டேன்.

” பாருங்க சார்.. சி.கே சத்ரியர். நீங்களும் சத்ரியர். உங்களுக்குள்ள ஆயிரம் இருக்கலாம். எத்தனை கோரமான யுத்தம் நடந்தாலும் ஐயருங்களுக்கு, வைசியர்ங்களுக்கு டேமேஜ் பண்ணக்கூடாதுன்னு  தர்ம சாஸ்திரம் சொல்லுது. இனி இந்த ஃபேமிலிய டிஸ்டர்ப் பண்ண விடாதிங்க. வெற்றிய தர்ரது தர்மம் ஒன்னுதான்”

ஆச்சரியம் என்னடான்னா ஏ.எஸ் உடனே கன்வின்ஸ் ஆகி அந்த பக்கத்து வீட்டு நந்தூர்னிக்கு சொல்ட்டாரு ” தபாருப்பா டோன்ட் ரிப்பீட்டு.. லீவ் இட்”

1986க்கும்  2004 க்கும் எப்படி இத்தனை வித்யாசம் வந்ததுன்னா அசைவத்தை விட்டதுதான்னு பீலா விடமாட்டேன். ஆனால் வித்யாசத்துக்குண்டான பல காரணங்கள்ள இதுவுமொரு காரணம்.

ஜகதீஷ் சந்திரபோஸ் தாவரங்களுக்கு உயிரிருக்குன்னு சொல்ட்டாரு. பூட்டாரு. இந்த சமாசாரத்தை பசங்களுக்கு  நிரூபிக்க  சைன்ஸ் வாத்யாருங்க நீர் தாவரத்தை கலர் தண்ணில  வச்சி மறு நாள் வெட்டி காட்டுவாய்ங்க. அந்த தாவரத்தோட தண்டுலருந்து மேற்படி கலர் தண்ணி கசியும்.

சர்வ நிச்சயமா நீங்க சாப்பிடற உணவோட இம்பாக்ட் உங்க டெம்பர்மென்ட் மேல இருக்கும். கோபம் -பாவம் – சண்டாளம். கோபம்ங்கறது பலவீனத்தோட அடையாளம். சவுண்ட் மைண்ட் இன் சவுண்ட் பாடி. ( DTS இல்லிங்கண்ணா) .

நாம சாப்பிடற சாப்பாடு உடலுக்கு பலத்தை கொடுக்கனும். ஆனால் இன்னைய தேதிக்கு சனம் திங்கற தீனி ஊளைச்சதை, தொந்தி,பிட்டம்,ஷுகரு,பி.பி மாதிரி நோய்களைத்தான் தருது.

இயற்கையோட நியதிப்படி  எந்த உணவு பொருளா இருந்தாலும் அதுக்கு ஒரு எக்ஸ்பைரி டேட் இருக்கு. ஆனால் இன்னைக்கு இருக்கிற வியாபார போட்டில எக்ஸ்பைரி ஆனதை தூக்கி எறிய முடியாது. ஃப்ரெஷ்ஷாவும் விக்க முடியாது. அதனால ப்ரிசர்வர்ஸ் உபயோகிக்கிறாய்ங்க.இந்த விளம்பர யுகத்துல  சரக்கை விட சரக்கோட நிறந்தான் முக்கியமாயிருச்சு. அதனால கலர் சேர்க்கிறாய்ங்க.

எப்போ நாம இயற்கைலருந்து விலகறமோ அதுக்குண்டான விலைய கொடுத்தே ஆகனும்.  பீட்ஸா, கேக்,ஐஸ்க்ரீம் முத கொண்டு டின் ஃபுட், ஜங்க் ஃபுட் எல்லாத்துலயும் ப்ரிசர்வர்ஸ் உண்டு. 

வயித்துக்கு போன உணவே அழுக ஆரம்பிச்சுரும்னு தான் ஹெச்.சி.எல் சுரக்குது.
நிலைம இப்படி இருக்க கண்டதையும் கண்ட நேரத்துல திங்க நினைக்கிற சமுதாயத்துக்கு, நோய் தான் பரிசு.

உணவு பற்றாக்குறையால சத்துக்குறைவால சாகிறவங்கள விட அமித தீனியால சாகறவங்கதான் சாஸ்தி.

பல பேரு சாப்பிடற சாப்பாட்டுலருந்து அதை செரிக்க உடல் செலவழிச்ச சக்தி கூட திருப்பி கிடைக்கிறதில்லை. பச்சையா சாப்பிட்டா 100% கியாரண்டின்னுகூட சொல்லமுடியாது (இரசாயண உரங்கள்,பூச்சி மருந்து) வேகவச்சு சாப்பிட்டா 75% (குக்கர்ல பெட்டர்) தாளிச்சு சாப்பிட்டா 50% , பொறிச்சு, தீச்சு (அதாங்க வதக்கி) சாப்பிட்டா அது விஷம்.

அறுசுவை உணவுங்கறோமே தவிர நம்ம உணவுல உப்பு,காரம்,புளிப்புதான் சிம்மபாகம் வகிக்குது. கசப்பு,துவர்ப்புல்லாம் கிடையவே கிடையாது.

1999ல ஜீனோன்னு ஒரு நாயை வளர்த்துக்கிட்டிருந்தோம். அது உடம்பெல்லாம் உண்ணி. அதுக்கு ட்ரீட் பண்ணவோ, மருந்து மாயம் வாங்கவோ வசதி கிடையாது. பக்கத்துல வேப்ப மரம் இருந்தது.  ரெண்டு மண்டை வேப்பிலை ஒடிச்சிட்டு வந்து கொதிக்கவச்சு அதனோட உடம்பை நன்னா நனைச்சோம்.

அப்பவும் கஷாயம் மிச்சமிருந்தது. எரிபொருள் வீணாயிரக்கூடாதுன்னு (கொதிக்க வச்சோம்ல)  அதை ஒரு செம்புல ஊத்தி மனசை கல்லாக்கிக்கிட்டு ஒரு தம்முல குடிச்சி தொலைச்சிட்டன். அதுக்கு முந்தின்னா  வருஷத்துக்கு ஒரு தாட்டி டைஃபாயிடோ, காமாலையோ, ஏதோ ஒரு இழவு வந்து இழவெடுக்கும். 1999லருந்து 2010 வரை நோ டிசீஸ். சமீபத்துல ஜன்மத்துல செவ்வாய் ஸ்தம்பனம் ஆகியிருந்ததை கவனிக்காம விட்டதுல  சன் ஸ்ட்ரோக் வேற கூட்டு சேர்ந்து கொஞ்சமா ட்ரபுளாயிருச்சே தவிர .. ஐம் ஹேல் அண்ட் ஹெல்த்தி.

இந்தியர்கள்/முக்கியமா தென்னிந்தியர்கள் பண்ற தப்பு என்னன்னா 365 நாளும் அரிசிச்சோறு சாப்பிடறதுதான். அரிசி கார்போ ஹைட் ரேட் ஆகும். கா.ஹை க்ளூகோஸாகும். அதிகப்படி க்ளூகோஸ் சேர்ந்தா க்ளைக்கோஜனா மாத்தி ஸ்டாக் வைக்க இன்சுலின் சுரக்கனும். சுரக்கலன்னா ஷுகர் வரும்.

வேளை அறிந்த  உணவு:

மனுஷ உடம்புல ஒரு கடியாரம் இருக்கு. உயிர் கடியாரம்ங்கறாய்ங்க. அது சூரிய,சந்திர உதயங்களை அடிப்படையா கொண்டு வேலை செய்யுது. அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உண்டு. சூரிய சந்திர உதயங்கள் ஆகாயத்துல மட்டுமில்லே நம்ம உடல்லயும் நடக்கு.

மேற்படி உயிர் கடிகாரம்  கரெக்டா வேலை செய்யனும்னா  வைகறை துயிலெழு,  Early to bed early to rise, மாதிரியான பொன்மொழிகளையெல்லாம் ஃபாலோ பண்ணியாகனும். அப்பத்தான்  பசி,தூக்கம்,சீரணம், ஸ்டூல்ஸ் எல்லாம் வேளைக்கு நடக்கும். “இனியொரு விதி செய்வோம் .அதை எந்த நாளும் காப்போம்”னு பாரதியார் சொன்ன மாதிரி உணவெடுக்கன்னு ஒரு டைமிங் சார்ட்டை ப்ரிப்பேர் பண்ணிக்கிட்டு அதை ஃபாலோ பண்ணனும்.

நீங்க தின்னப்போறிங்களா இல்லையான்னெல்லாம் உடல் வெயிட் பண்ணாது . நேத்து நீங்க சாப்பிட்ட நேரத்துக்கு வயித்துல அமிலம் சுரக்க ஆரம்பிச்சுரும். அந்த  நேரம் நீங்க தீனிய உள்ள அனுப்பலன்னா இரைப்பையை சீரணம் பண்ண ஆரம்பிச்சுரும்.

என்.டி.ஆர் விடியல் 2.30 மணிக்கு எந்திரிச்சு யோகா,தியானம்லா செய்துட்டு 4 மணிக்கு ஆடு,கோழியோட ஃபுல் மீல்ஸ் அடிப்பாராம். இதனோட விளைவு என்னாச்சு? ஹார்ட் அட்டாக், பைபாஸ் பண்ண அமெரிக்கா போனார். பாஸ்கர் ராவ் ஆப்பு வச்சாரு.

நாம இந்த பூமியின் குழந்தைகள். பூமி சூரியனின் குழந்தை. ( நன்றி: ஓஷோ) நாம சூரியனை அனுசரிச்சுத்தான் வாழணும். ஒரு 48 நாள் மட்டும் சூரியன் உதிக்கறச்ச நாளை துவக்கி, சூரியன் அஸ்தமிக்கறச்ச வூட்டை சேந்து குளியல் போட்டு தின்னு 7க்கெல்லாம் தூங்கப்பாருங்க.லைஃபே மாறிரும். பிரச்சினைகளே மாறிரும். அதுகளை  நீங்க ஃபேஸ் பண்ற விதமே மாறிரும். இந்த சோதனைய ஆரம்பிகறதுக்கு மிந்தி ஒரு மெடிக்கல் டெஸ்ட், 48 ஆவது நாள் ஒரு மெடிக்கல் டெஸ்ட் எடுத்துப்பாருங்க.

வேலை அறிந்த உணவு:
சேல்ஸ் ரெப் சாப்பிட வேண்டிய உணவு வேற, சுழல் நாற்காலிலயே காலத்தை கழிக்கிற சேல்ஸ் மேனேஜர் சாப்பிட வேண்டிய உணவு வேற. மாத்தி சாப்பிட்டா பல்புதான்.  மறுபடி என்.டி.ஆர் உணவு முறைய பாருங்க.

சரீர தன்மையறிதல்:
உங்க சரீரத்தோட தன்மைய அறிஞ்சு சாப்பிடனும். பொதுவா  உஷ்ண த்ரேகம், சீதள த்ரேகம்னுவாய்ங்க. இதல்லாது பித்த உடம்பு, வாத உடம்புன்னு ரெண்டு வெரைட்டி இருக்கு. இதை பத்தியெல்லாம் நோண்டி நுங்கெடுத்து அதுக்கேத்த தீனிய திங்கனும்.

நொறுங்க  தின்றால் நூறு வயது:
சீரணம் ஆக்சுவலா மனசுல ஆரம்பமாகுதுன்னு சொல்லனும். நீங்க பசியை உணர்ந்து, சாப்பிடனும்னு நினைச்ச உடனே ப்ராசஸ் ஆரம்பமாயிருது. வாய்ல உமிழ் நீர் சுரக்குது. உணவுக்குழாய், இரைப்பை ,இரைப்பைல அமிலம் எல்லாமே ப்ரிப்பேர்டா இருக்கும்.

சிலர் பாம்பு மாதிரி அப்படியே விழ்ங்குவாய்ங்க. சிலர் அழகர் மலை குரங்கு மாதிரி கொறிப்பாய்ங்க. இதெல்லாமே ராங்கு. டார்வின் தன் பரிணாம தத்துவத்தை விளக்கி எழுதியிருக்கிற புஸ்தவத்துல மன்சாளோட குணங்கள் எல்லாம் எந்த பிராணிக்கிட்டருந்து வந்ததுன்னு விலாவாரியா எழுதியிருக்காராம். சதி எந்த பிராணிக்கிட்டருந்து வந்தது தெரியுமா? சிம்பன்ஸி கிட்டருந்து வந்ததாம். கைகலப்புன்னு துவங்கினா வாரக்கணக்குல நடக்குமாம். அதனால ஒரு  சிம்பன்ஸி தூங்கும்போது  நாலு சிம்பன்ஸி சேர்ந்து ஒரு பெரிய கல்லை தூக்கி தலைல போட்டுருமாம்.

உணவை நன்னா மென்னு அரைச்சு விழுங்கனும். இடையிடையில தண்ணி சாப்பிட கூடாது.மொதல்லயே ஒரு விழுங்கு தண்ணி சாப்டுரனும். டைனிங் டேபிள்ள உட்கார்ந்து சாப்பிடறதாலதான்  அரை டிக்கெட்டுங்களுக்கு கூட ஏட்டு ரேஞ்சுல தொப்பை விழுதோன்னு ஒரு சம்சயம் உண்டு. (லோ ஹிப் சாரி, லோ ஹிப் ஜீன் , அரணா கயிறு கட்டாம இருக்கிறதுல்லாம் கூட தொந்திக்கு காரணம்னா நம்ப மாட்டிங்க. )

நீங்க மணைலயோ,பாய் மேலயோ சப்பணம் கட்டி உட்கார்ந்து ஒரு முறம் எண்ணெய், ஆடு,கோழி ,பொறியல், கால் கிலோ உருளை கிழங்குன்னு சாப்பிட்டாலும் தொந்தி வந்துதான் தீரும் சொல்ட்டேன்.

புதுமைங்கறதாலயே அது தூள் ! பழமைங்கறதாலயே அது பாழ்ங்கற மென்டாலிட்டிய மாத்திக்கனும். அனுபவத்துக்கு மிஞ்சின ஆசிரியன் கிடையாது. எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் மெய்ப்பொருள் காண்பதறிவுங்கண்ணா..

உணவு குறித்த விழிப்புணர்வு இருந்தா நிறைய பிரச்சினைகளை தவிர்த்துரலாம். அப்படியே பிரச்சினைகள் வந்தாலும் அதை டேக்கிள் பண்ற ஸ்டைலே  நாசூக்கா இருக்கும்.

மீதி அடுத்த பதிவில்

ஆளவந்தான் விமரிசனம்

வறுமை தரும் பல பரிசுகளில் ஒன்று தமிழ் ,தெலுங்கு சினிமாக்களில் இருந்து பாதுகாப்பு. அதே சமயம் ஆ.வ மாதிரி படங்களை மிஸ் பண்ணுவது சோகம் தான். சோகம் என்றது ஆ.வ ஏதோ ஆதர்ச சினிமா என்ற நோக்கில் அல்ல. சிந்தனையை, நமக்குள்ளான கிரியேட்டிவிட்டியை கிளறிவிடக்கூடிய சரக்கு உள்ள சினிமா என்ற எண்ணத்தில் தான்.

“தொங்கலு  பட்ட வாரானிக்கி  குக்கலு மொரிகினட்டு”ன்னு ஒரு சொலவடை உண்டு. திருட்டு போன வாரம் கழிச்சு நாய் குரைச்ச மாதிரின்னு இதுக்கு அர்த்தம். ஆ.வ வந்து பல காலமான பிறகு இந்த விமர்சனத்தை எழுதறதும் அப்படித்தான்னு நான் சொல்ல மாட்டேன். ஏன்னா ஆளவந்தான் எல்லாம் டெக்னிக்கலா பார்த்தாலும், சப்ஜெக்ட் வைஸ் பார்த்தாலும் இன்னம் 20 வருசம் தாங்க கூடிய சினிமா. அதை எப்பவாச்சும் விமர்சிக்கலாம். இதனால விமர்சிக்கிறவுகளுக்கும் பலன் உண்டு. அதை படிக்கிறவுகளுக்கும் லாபம் உண்டு.

கதைன்னு பார்த்தா தேவர் கேட்ட மாதிரி,பாக்யராஜ் சொன்ன மாதிரி ரெண்டு வரில சொல்லலாம். ஒரு சிக் ஃபேமிலியோட இம்பாக்ட் இரட்டைகுழந்தைங்க மேல எப்படி இருக்கும்? ரெட்டைல ஒன்னு கமாண்டோ, ஒன்னு சைக்கோ.

கமல் மேல எனக்கு எப்பவுமே ஒரு சிம்பதி உண்டு.( சேம் போல்ஸ் அட்ராக்ட்ஸ் நெவர்ங்கற மாதிரி சின்ன வயசுல கமல்னா கெட்ட வார்த்தை மாதிரி. இருந்தாலும் அப்பவும் அவர் மேல சிம்பதி உண்டு).

எனக்கு கலைப்படங்களும் பிடிக்காது. விலைப்படங்களும் பிடிக்காது. பேர்லல் மூவிம்பாங்களே அந்த மாதிரி ரகத்துக்குத்தான் என் ஓட்டு. நீ எந்த படம் எடுத்தாலும் அதை மக்கள் தான் பார்க்கனும். மக்களுக்காகத்தான் எடுத்தாகனும்.  உன் சினிமால வர்ர பாத்திரங்களை, பிரச்சினைகளை சாமானியன் தன் வாழ்க்கைல சந்திச்சுருக்கனும்.

மக்களுக்காகத்தான் சினிமா.. சோடா புட்டிக் கண்ணாடிகளுக்காகவோ ஆ.வி, கல்கி மாதிரி பிராமண பத்திரிக்கைகளுக்காகவோ அல்ல. சினிமாங்கறது தலை வாழை இலைல பரிமாறப்பட்ட விருந்து மாதிரி இருக்கனு. அதுல ஏ டு ஜெட் இருக்கனும்.
கொஞ்சம் போல நரகல் கூட ஒரு மூலைல வைக்கலாம். தப்பில்லை.

கமல் மேல சிம்பதிக்கு காரணம் ரெண்டு. ஒன்னு அவர் புதுசா எதையும் கூட்ட தேவையில்லை. (விமரிசனத்துக்கு காரணம் :  அவர் எதையும் குறைச்சுக்கவே இல்லை. கூட்டிக்கிட்டே போறார்) . காரணம் நெம்பர் 2: சினிமால வந்த பணத்தை சினிமாவுலயே இன்வெஸ்ட் பண்றார்.

ஆளவந்தான் பார்த்ததுல எனக்கு ஸ்ட் ரைக் ஆன சமாசாரங்கள்:

1.சப்ஜெக்டே சாமானியனுக்கு அன்னியமான சப்ஜெக்டுங்கறதால நேட்டிவிட்டி மேல கான்சட்ரேட் பண்ணியிருக்கனும். ரசிகனுக்கு ஐடென்டிட்டி ப்ராப்ளம் வராம எட்க்க பார்த்திருக்கனும். ஆனா ஆ.வ படத்துல வர்ர அப்பா, வைப்பாட்டி கேரக்டரெல்லாம் இங்கிலீஷ் சினிமாலருந்து இறங்கி வந்தமாதிரி இருக்காய்ங்க. கதை தமிழ் நாட்ல தான் நடக்குதா? கு.ப இந்தியாலதான் நடக்குதா? ங்கற சந்தேகம் வந்துருது.

2.கமல் கொஞ்சம் போல தியாகம் பண்ணி கமேண்டோ கேரக்டரை அர்ஜுன் மாதிரி ஆளுக்கு விட்டுக்கொடுத்திருந்தா  நந்து கேரக்டர் சரித்திரத்துல நின்னுருக்கும்.

3.ஃப்ளாஷ் பேக் காட்சி அவ்ளோ நீளமா? பேசாம +2 ஏஜ்ல நடக்கறாப்ல வச்சு ஏதாச்சும் தகிடுதத்தம் பண்ணி கமலை ஒல்லியா, மீசையில்லாம காட்டியிருக்கலாம்.

4.என்னதான் கிராஃபிக்ஸுன்னாலும்  இப்படியா அள்ளித்தெளிக்கிறது. சந்தனம் சாஸ்தியாயிருச்சுன்னு  எங்கயோ பூசிக்கிட்ட மாதிரி.

5.கமல் கிட்டே எனக்கு பிடிக்காத விஷயம் ஒன்னு இருக்கு.  சண்டை காட்சில கூட “அட்டு”வேலை காட்டிருவாரு. இந்த படத்துல ரெண்டு கேரக்டர்லயுமே காட்டியிருக்காரு.

6.நந்துவோட மேனரிசம்ஸ் சூப்பர். பாப் பாடகி, போதை மருந்து சமாசாரம், பாடகி கொலைல்லாம் தேவையில்லாத மேட்டர். 

நந்து கமலோட சுய சார்பில்லாத தன்மைய, மனக்குழப்பத்தை  காட்ட அவரு பலர் கிட்டே கலந்தாலோசிக்கிற மாதிரியான சீன் தூள். க்ளைமேக்ஸ்ல சாகடிக்காம குணமாகி வெளிய வராப்ல வச்சிருக்கலாம்.  மத்தபடி  நல்ல படமா, சூப்பர் ஹிட் படமா வந்திருக்க வேண்டிய ஆளவந்தான் அதிகப்படி கிராஃபிக்ஸ், அதிகப்படி பச்சை குத்தல், அதிகப்படி கார்ட்டூன் குழப்பங்கள், ட்ரை ஃப்ளாஷ் பேக், நேட்டிவிட்டி இன்மை, கமலின் இரண்டு கேரக்டருமே பெரிய வித்யாசமற்று இருப்பதால் யாருக்கும் திருப்தி தராத அறிவு ஜீவி படமா போயிருச்சுன்னு நினைக்கிறேன்.