அப்துல் கலாம் -ஒரு ஜோதிட பார்வை

Jpeg
Jpeg

அண்ணே வணக்கம்ணே !
வேந்தர் டிவி -மூன்றாவது கண் நிகழ்ச்சியில பிரம்மங்காரு குறித்த நம்ம பேட்டி டெலிகாஸ்ட் ஆச்சா ? மறு நாள் இரவு தான் இந்த சைட் முடங்கிருச்சு.

செரி ..சனம் ஒரே தாட்டி அம்மினதால பேண்ட் விட்த் எதுனா எக்ஸீட் ஆயிருக்கும் விடியல்ல சரியாயிரும்னு அசால்ட்டா விட்டேன். மறு நாள் சென்னை செல்ல வேண்டியதாயிருச்சு. இடையில சில காலம் ஐடியா நெட் செட்டர் இருக்க சொல்லோ உள்ளூர் வெளியூர் ரெண்டும் ஒன்னுதேன். இப்பத்தேன் ப்ராட் பேண்டுக்கு மாறிட்டமா? மவளோட டாப்ல ப்ரவுசிங் பண்றது மூத்திர சந்துல ஜம்போ ஜெட் ஓட்டறாப்ல ரெம்ப குஷ்டமப்பா.

இன்னைக்குத்தேன் சரண் சாரை கான்டாக்ட் பண்ண முடிஞ்சது .சைட் ஓகே.ஆனால் 24 மணி நேர ட்ராஃபிக் போச்சே.அதை ஈடுகட்டனும்னா எதுனா அதிரடியா பதிவை போட்டாகனும். என்ன பண்ணலாம்னு ரோசிச்சப்பதான் அப்துல் கலாம் -ஒரு ஜோதிட பார்வைங்கற டைட்டில் ஸ்பார்க் ஆச்சு.

அப்ப மத்த பார்வை எல்லாம் ஆயிருச்சாம்பிங்க. எஸ்..பாஸ் ! திருமுருகன் காந்தி,தமிழச்சி போன்றவர்களை தவிர பலரும் கலாமை கடவுள்,இறைதூதர்,தேவ புருஷன்னு செம ஜல்லி.

ஒரு காலத்துல ரஜினிய கிளிச்சு நாம எழுதினப்போ ஆரோ சமூகத்தால அங்கீகரிக்கப்பட்டவிகளை விமர்சிக்கிறது ஒரு மனோ வியாதின்னு சொல்லியிருந்தாய்ங்க. சமூகம் வெர்சஸ் தனிமனிதன் ங்கற செனேரியோல ஏற்கெனவே ரோசிச்சு எழுதிட்டம்.அதன் சாரம் மட்டும் சொல்றேன்.

பொதுவாவே சமூகம் என்பது எப்பவும் 25 வருசம் ,கு.பட்சம் 10 வருசம் பின் தங்கித்தான் இருக்கும். ஏன்னா சமூகத்தை வழி நடத்தறவனோட இம்பாக்ட் அது. சனத்துல 90 சதம் எப்பவும் பின் தங்கியிருக்கும். அதனால அந்த 90 சதவீத கேஸ்ல இருந்துதான் வழி காட்டிகள் வருவாய்ங்க.அங்கீகரிக்க படுவாய்ங்க.

தற்போதைய சுடிதாரை ஒரு காலத்துல தேவடியா மாதிரி இருக்குன்னு சொன்ன சனம் இன்னமும் இருக்கலாம். குட்டிங்க சுடிதார் போட ஆசைப்பட்டு 10 வருசம் கழிச்சுதேன் அதை அனுமதிச்சிருப்பாய்ங்க. அவிக லெக்கின்ஸுக்கு மாறின பிறவு இப்போ இது என்னடி கருமம் இதை விட சுடிதாரே பெட்டருன்னிட்டிருப்பாய்ங்க .

கலாமை தூக்கி பிடிக்கிறவிக ரெண்டு க்ரூப் . ஒன்னு விசயமே தெரியாதவிக. ரெண்டு எல்லாம் தெரிஞ்சிருந்தும் தங்களோட எஸ்கேப்பிசத்துக்கு ஒரு ரோல் மாடல்ங்கற ஃபீலோட புகழ்ந்து பேசறவிக.

கலாம் எளிமையானவர் – அவிக புகழ காரணம். நான் என்ன சொல்றேன் முருகேசன் எளிமையா மட்டும் இருந்துரலாம்.ஆனால் ஒரு ஜனாதிபதி தான் மட்டும் எளிமையா இருந்தா போதாது (அது வெட்டி) அரசாங்கத்தையே எளிமைக்கு மாற்ற வாய்ப்பிருந்தும் அதை பயன் படுத்தலின்னா என்னா அருத்தம்?

கலாம் நேர்மையானவர் -அவிக புகழ இன்னொரு காரணம். நான் என்ன சொல்றேன் (மேற்படி பாராவ பாருங்க) ஒரு ஆச்சரியம் என்னடான்னா கலாம் ரெண்டாவது தபா ஜனாதிபதி பதவிக்கு ஆசைப்பட்டப்பவே கிளி கிளின்னு கிளிச்சுட்ட பார்ட்டி நாம . கூடங்குளம் மேட்டருக்கு பிறகும் கலாமை தூக்கி பிடிக்கிறவிகளை சத்தியமா புரியல பாஸ்.

செரி ஒளியட்டும் .மேட்டருக்கு வந்துர்ரன். அதாங்க ஜோதிட பார்வை . கலாமின் பிறந்த தேதி 15 / Oct / 1931 நேரம் 01 : 15 AM. கடகலக்னம் . லக்னத்துல குரு ( இவர் 6-9 க்கு அதிபதி) அந்தணன் தனித்து நின்றால் நிந்தனை பல உண்டாம். (லாஜிக் இல்லாத குட்னெஸ்) .

மூன்றாமிடத்துல 2+3/12+கேது .இரண்டுக்குரியவரும் கேதுவும் சேரும் போது அது 2/8 ல் ராகு கேது எஃபெக்டை கொடுத்துரும். (இளமையில் வறுமைக்கு இதான் காரணம் – லைம் லைட்டுக்கு வராதவரை சேஃப். குடும்பம் ஃபணால். (கண்ணாலமும் கட்டல -ஜனாதிபதி ஆன பிறவும் உறவுக்காரவிகன்னு ஒரு கூட்டம் வெளிச்சத்துக்கு வல்ல)

3+கேது காம்பினேஷன் மனோ தைரியத்தை கொடுத்திருக்கலாம். (2+கேது வறுமையை தந்தாலும் 3+கேது தான் விடாமுயற்சிக்கு பிறகு பொருளாதார மேம்பாட்டை தந்திருக்கு.ஆனாலும் இவர் எளிமையோ எளிமையா இருந்ததுதான் அதன் பின்னான வெற்றிகளுக்கு காரணமா இருந்திருக்கு. இம்பீச் ஆகாம காப்பாத்தினதும் இந்த எளிமை தான்.

கலைஞர் ஜாதகத்துல 2-8 ல் ராகு கேது இருந்தும் அவர் குடும்பத்தை பெருக்கிக்கிட்டே போனதால தான் செம நாஸ்தி.கலாம் லைஃப்ல பேசிக்கினே இருந்தாருங்கறாய்ங்க. அதுக்கு காரணம் 2+12 தான் காரணம் .பலன் ? பூஜ்ஜியம் தான்.

கொய்யா என் சாவுக்கு லீவ் விடாதிங்கடான்னு பன்னி பன்னி சொல்லியிருந்தாலும் ராமேஸ்வரத்துலயே கடை கண்ணிக்கு லீவ் விட்டு இழவுக்கு வந்தவிகளை இழவெடுத்திருக்காய்ங்க(தாக நீள்ளூ லேது) . 2+கேது தான் சிவதத்துவத்துல ஆராய்ச்சி பண்ணனும் – கூடங்குளம் சேஃப் இத்யாதி “தத்துவங்களுக்கு” காரணம்.

அடுத்து நாலாமிடத்துல சுக்+செவ் 4/11+5/10 .லக்னம் கடகமா இல்லாம இருந்திருந்தா காதல் கீதல்னு போயி நொந்திருப்பாரு. கடக லக்னங்கறதால சோறு தண்ணி கூட இல்லாம தொழில்ல மனம் குவிச்சு பெயர் புகழ். சுக்கிரன் பாதகாதிபதி ஆகவே புத்திரபாக்கியத்துக்கு ஆப்பு . இதுதான் அவமானங்களை கொஞ்சம் போல அவாய்ட் பண்ணி பெயர் புகழுக்கு இடம் கொடுத்திருக்கு.

லக்ன குரு ஒரு நாட்டுக்கே வழிகாட்டியா இருக்க கூடிய “சத்தா” வ கொடுத்திருந்தாலும் லக்னாதிபதி நீசம்ங்கறதால நான் மட்டும் எளிமையா இருப்பேன். நீங்க கொண்டாடுங்கனு விட்டுட்டாரு . நான் மட்டும் அகிம்சைய கடை பிடிப்பேன் -குசராத்துல நீங்க கசாப்பு பண்ணுங்கன்னு விட்டுட்டாரு . நான் மட்டும் நேர்மையா இருப்பேன் நீங்க சவப்பெட்டியில கூட ஊழல் பண்ணுங்கன்னு விட்டுட்டாரு.

ஒரு வேளை உ.வசப்பட்டு ஊரை திருத்தறேன்னு இறங்கியிருந்தா தேளை அடிச்சே கொன்னிருப்பாய்ங்க (ராசிய சொன்னேன்) .ஃபைனலா ராகு 9 ல் இருக்காரு. இவருக்கு சமசப்தகத்துல 3 ஆமிடத்தில் கேது. இவர் கொஞ்சம் தில்லு துரையா இருந்திருந்தா பாதுகாப்பு கேட்டு வெளி நாட்டுல தஞ்சம் புகுந்திருக்கனும் போல.ஆனால் அடக்கி வாசிச்சுட்டாரு பேண்டை உருவினப்ப கூட “கமுக்கமா” இருந்துட்டாரு (அமெரிக்க விமான நிலைய சோதனைய சொன்னேன்)

இத்தனை ஓட்டை இருந்தும் என் போன்றவர்களின் விமர்சனங்கள் கவனம் பெறாமல் சனம் தலைமேல வச்சு கொண்டாட காரணம் ஒன்னிருக்கு .அதான் அஷ்டமாதிபதியான சனி 6 ல் நின்றது . சனியே சப்தமாதிபதிங்கறதால சாகற வரை குவாலிஃபைட் பேச்சிலராவே இருக்க வேண்டி வந்துருச்சு. இவருக்கு ராகு தசையில சுக்ர புக்தி 10/Jul/2015 ல ஆரம்பம் . 10/Jul/2018 ல முடிவு.

ராகுவுக்கு ரெட்டையான கேது தன வாக்கு குடும்ப நேத்திராதிபதியான சூரியனோட சேர்ந்ததாலதான் (இது 2/8 ல் ராகு கேதுவுக்கு சமமான கிரக ஸ்திதி -வெட்டி விடற அமைப்பு) குண்டு வச்சு -உலக அரங்கத்துல இந்தியாவையே வெட்டி விட்டு இருட்டுல தள்ளிட்டாருங்கோ. வாக் ஸ்தானாதிபதி + கேது (இனி பேசப்படாது) குடும்ப ஸ்தானாதிபதி+கேது குடும்பத்தை பிரியனும்.

ஆனால் 24/Dec/2003 ல ஆரம்பிச்ச ராகு தசை தன் இரண்டாம் பகுதியில தான் இந்த வேலைய ஆரம்பிக்கனும்.கணக்கு போடுங்க 24/டிசம்பர்/2012 ல இதுக்கான வேலை ஆரம்பிச்சுருச்சு போல.
நெல்ல வேளையா 10/Jul/2015 ல சுக்கிர புக்தி ஆரம்பிச்சதுமே டிக்கெட் போட்டுட்டாரு. இல்லின்னா கண்ணால கிண்ணாலம் கட்டி செம ரவுசு பண்ணியிருப்பாரு போல.
அம்பேல் !

குருப்பெயர்ச்சி பலன்: கும்பம்,மீனம்

MoondravathuKan

அண்ணே வணக்கம்ணே !
குரு பெயர்ச்சி பலன்ல கும்பம் ,மீன ராசி மட்டும் நிலுவையில இருக்கு .இதையும் பைசல் பண்ணிரலாம். அதுக்கு மிந்தி கொஞ்சம் போல “நெல்லது கெட்டது ” பேசிக்கலாம். யுபிஏ டூ காலத்துல பா.ஜ.க புது ட்ரென்டு ஒன்னை கிரியேட் பண்ணிருச்சு .அதான் பாராளுமன்றத்தை முடக்கறது .
இப்ப அந்த வித்தையை காங்கிரஸ் மற்றும் எதிர்கட்சிகள் கை கொண்டு மொத்தமா இறக்க – பா.ஜ.க மெர்சலாயி கிடக்குது.ஏட்டிக்கு போட்டியா காங்கிரஸ் முதல்வர்களோட ஊழலை ஃபோக்கஸ் பண்ணனும்னு பார்க்கிறாய்ங்க. ஊஹூம்.வேலைக்காகல.

தமிழ் நாட்ல பார்த்தா தேர்தல் ஜூரம் வீச ஆரம்பிச்சுருச்சு . அன்பு மணி கவுண்ட மணி கணக்கா காமெடி பண்ண ஆரம்பிச்சுட்டாரு .(ஒயர் பிஞ்சு பல காலம் ஆச்சு )

மதுவிலக்கு மேட்டர்ல மம்மி கரண்ட்ல இல்லேன்னு தெரியுது. ஆண்,பெண்,குஞ்சு குளுவான் எல்லாமே நாசமா போயிட்டிருக்க – கலைஞர் பெட்டர் லேட் தேன் நெவர் பாய்ண்டை கேட்ச் பண்ணிட்டாரு . மம்மி டூ லேட் !

இப்பவாச்சும் நல்லது நடக்குதேன்னு வாய் திறந்து ஒரு நல்ல வார்த்தை சொல்ல மனசில்லாம சனம் பழைய குப்பையை எல்லாம் கிளறிக்கிட்டு கிடக்கு .
ஹ்ம்.. அசலான மேட்டரை விட்டுட்டு மொக்கை போட்டுக்கிட்டிருக்கன். வேந்தர் டிவி -மூன்றாவது கண் டீம் வந்ததை பதிவுல சொன்னேனா? முக நூல்ல மட்டும் சொன்னேனா ? ஞா இல்லை. வந்திருந்தாய்ங்க. பிரம்மங்காருவோட வாழ்க்கை -அவரோட கால ஞானம் – பிரளயம் இத்யாதிகளை பத்தி மடக்கி மடக்கி கேட்டாய்ங்க. ஏதோ நமுக்கு தெரிஞ்சதை சொன்னம்.

மேற்படி நிகழ்ச்சிக்காக கடப்பா,பிரம்மங்காரு மடம் வரை போக வேண்டியதாயிருச்சு . (லைஃப்ல ஃபர்ஸ்ட் டைம். என்னங்க பிரம்மங்காருவ பத்தி இவ்ள ஆராய்ச்சி பண்ணியிருக்கிங்க.இதுவரை இங்க வந்ததில்லையான்னு டீம்ல ஒருத்தரு கேட்டாரு . -ஏங்க ..தாஜ்மஹாலை பார்த்தபிறவு தான் காதலிக்கனுமா என்னன்னு மடக்கினேன்)

Brammangaru

நிற்க மேற்படி பேட்டி வரும் திங்கள் கிழமை (2015,ஜூலை,27) அன்னைக்கு வேந்தர் டிவி/மூன்றாவது கண் நிகழ்ச்சியில ஒளி பரப்பாக இருக்கிறது ( நேரம் : இரவு 9.30 முதல் 10 .00 )

ஓகே ஓகே..குரு பெயர்ச்சி பலனுக்கு போயிரலாமா?

குரு 2015,ஜூலை ,14 ஆம் தேதி விடியல் 5.45 மணிக்கு (கடகத்தில் இருந்து சிம்மத்துக்கு) ஏழுக்கு பெயர்ச்சி ஆய்ட்டாரு. இவரு கும்ப ராசிக்கு 2/11 க்குடையவர் . 2/11 பாவங்கள் ரெண்டுமே பைசாவுக்கு சம்பந்தப்பட்ட இடம் தான். 7ங்கறது மனைவிய காட்டற இடம்.
மனைவி-மனைவி வழி உறவுகளால் பொருளாதார மேம்பாடு காணலாம். மனைவியுடனான கம்யூனிகேஷன் பெட்டரா இருக்கும். குரு =மந்திரி . 7=மனைவி . ஆகவே உங்க மனைவியே உங்களுக்கு மந்திரி கணக்கா ரோசனைங்க சொல்லலாம்.

மனைவியால் குடும்பத்துல சுபகாரியங்கள் நடக்கும் ( பர்ஸுக்கு வேட்டு தான்) . மூத்த சகோதரத்தாலும் அனுகூலம் இருக்கு.ஆனால் ஒன்னு இந்த குரு தான் இருக்குமிடத்தை நசிக்க செய்வார். இதனால மனைவிக்கு பொறுப்புகள் கூடி அவிக சுகவீனத்துக்கு ஆளாகலாம் (கேஸ்ட் ரிக் ,அல்சர் மாதிரி )
இவர் தான் பார்க்குமிடத்தை டெவலப் பண்ணுவாரு .இதனால உங்களுக்கும் நல்ல நல்ல ஐடியால்லாம் வரும்.குறிச்சு வச்சுக்கிட்டு ப்ராக்டிக்கலா அனலைஸ் பண்ணி இம்ப்ளிமென்ட் பண்ணுங்க. (தர்ம சிந்தனை ஓவராயிரும் -போன்டியாயிரப்போறிங்க)

2015, ஆகஸ்ட் 10 முதல் செப் 9 வரை குரு அஸ்தமிக்கிறார் (அதாவது குரு பிரபாவம் ஜீரோவாகி சூரிய பிரபாவம் உச்சத்துக்கு போகும்) இதானல மனைவி/மனைவி வழி உறவுகளோட இஃப்ளுயன்ஸ் அதிகமாயிரும் . ஓவரா இடம் கொடுத்துட்டமோன்னு பாதி ராத்திரி மொட்டை மாடிக்கு போயி தம் போட ஆரம்பிச்சுருவிங்க. எல்லாம் ஒரு மாச கூத்து தானே லூஸ்ல விடுங்க.

2016,ஜனவரி 8 முதல் சிம்மத்துலயே வக்ரமாகிறார் (மார்ச் 15 வரை இதே நிலை -அடுத்த பஞ்சாங்கம் வந்தாதான் எதுவரை வக்ரம்னு சொல்ல முடியும்) அக்கா,அண்ணா,மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் போக்கு அதிர்ச்சியை தரும் ( ஐ மீன் பாஸ்டுக்கு கொய்ட் ஆப்போசிட்டா பிஹேவ் பண்ணுவாய்ங்க.) உங்களுக்கும்,மனைவிக்கும் வயிறு தொடர்பான பிரச்சினைகள் வரலாம்.

அடுத்து மீன ராசி கதைய பார்ப்பம்

இவிகளுக்கு குரு 1/10 க்குடையவர் . ஆறுல வர்ராரு (2015,ஜூலை ,14 ஆம் தேதி விடியல் 5.45 மணி முதல்) இதனால நோய் தொல்லை,கடன் தொல்லை ,வழக்கு வில்லங்கம்லாம் முழி பிதுங்க வைக்கும். செய்தொழில்,உத்யோகம் ,வியாபாரத்துலயும் இதே லொள்ளுதான்.
இந்த நேரத்தை பாசிட்டிவா யூஸ் பண்ணிக்கனும்னா ஒரே வழி பக்கா ப்ராஜக்ட் ரெடி பண்ணி -லம்ப்சமா ஒரு அமவுண்டை வங்கி கடனா வாங்க பாருங்க. தோஷமும் குறையும் .வேலையும் நடக்கும்.

பைசா,கண்ணாலம்,பொஞ்சாதி,புள்ள ,குட்டி எல்லாமே லொள்ளு பண்ணும். கண்டுக்காம லூஸ்ல விடுங்க. எதிராளி நாயேன்னதும் நாம வாய ஃபெவிக்கால் போட்டு ஒட்டிக்கிட்டா நாயோட போயிரும். நாம பேயின்னா பெருசாத்தானே போகும்.

வயிறு தொடர்பான பிரச்சினைகள் வரலாம்,மறதி இமிசை பண்ணும்.பெரீ மன்சங்களோட விரோதம் வந்துரும். முக்கியமா அவா. ஆகவே டேக் கேர்.
2015, ஆகஸ்ட் 10 முதல் செப் 9 வரை குரு அஸ்தமிக்கிறார் (அதாவது குரு பிரபாவம் ஜீரோவாகி சூரிய பிரபாவம் உச்சத்துக்கு போகும்) .

கடு கடுன்னு இருப்பிங்க. சிடு சிடுன்னு பேசுவிங்க.அடக்கி வாசிங்க.இல்லாட்டி பிரிவுகள் கூட ஏற்படலாம் (பரிகாரம்: ஆரஞ்சு நிற ஆடை அணிகலன்,சூரிய நமஸ்காரம்,காயத்ரி ஜபம்,காலை மாலை நடை பயிற்சி ) கடன்,நோய்,விவகாரங்கள் தூங்கவிடாம பண்ணும்.

2016,ஜனவரி 8 முதல் சிம்மத்துலயே வக்ரமாகிறார் (2016 மார்ச் 15 வரை இதே நிலை -அடுத்த பஞ்சாங்கம் வந்தாதான் எதுவரை வக்ரம்னு சொல்ல முடியும்)

இதை யோகமான காலம்னு சொல்லலாம்.(புயலுக்கு பின் அமைதி மாதிரி ) வயிறு தொடர்பான பிரச்சினைகள் இருந்தாலும் உடல் நலம் ஓரளவு சீராகும், ஓரளவுக்காச்சும் நிம்மதி கிடைக்கும். சகட்டு மேனிக்கு கண்டவிக கிட்ட முட்டி மோதிக்கிட்டிருந்த நிலை மாதிரி -அவன் கெடக்கிறான் விடுங்கற -மன நிலைக்கு வந்துருவிங்க. கடன் காரவிகளும் விட்டு பிடிக்கலாம்ங்கற மூடுக்கு வந்திருப்பாய்ங்க. எதிரிகளும் நண்பர்களா மாற வாய்ப்பிருக்கு (மொத்தமா நம்பிராதிங்க) செய் தொழில்/உத்யோகம்/வியாபாரத்துல இருந்த முடக்கம் நீங்கி வண்டி ஓட ஆரம்பிக்கும்.

ஸ்..அப்பாடா இத்துடன் 2015 குரு பெயர்ச்சி பலன் முடிந்தது .

கலைஞரே ! மதுவிலக்கு சரியே .! ஆனால்

kalaingar

அண்ணே வணக்கம்ணே !
ஏற்கெனவே நாடு உருப்பட,மானிலங்கள் உயர, புண்ணிய சேத்திரங்கள் சீர்ப்பட, அரசு போக்குவரத்து கழகங்கள் லாபத்துக்கு திரும்ப – இப்படி பலப்பல சப்ஜெக்டுல கச்சா முச்சான்னு ஐடியா கொடுத்து செல்ஃப் ஷேவ் பண்ணிக்கிட்ட பார்ட்டி நாமன்னு உங்களுக்கு தெரியும்.
1986 ல இந்த வியாதி நமுக்கு வந்தது . 1992 லயே ஜனசக்தி பத்திரிக்கையில தெரியாத்தனமா பப்ளிஷும் ஆயிருச்சு . 1994 ல் ஆடியோ கேசட்ல பதிவு பண்ணி என்.டி.ஆருக்கு அனுப்பினதா ஞா. 1998 ல ஆரம்பிச்சு இன்னைக்கு மோடி தினம் வரைக்கும் ஹோல்ஸேலாவும் ரீட்டெய்லாவும் நம்ம ரோசனைகளை அனுப்பிக்கிட்டே தான் இருக்கம்.

ஒரு விலைமகள் மகனும் இதை கண்டுக்கப்போறதில்லை.எடுத்து செய்யப்போறதும் இல்லை.தெரியும்.ஆனாலும் விதி யாரை விட்டது . சோத்துக்கு இல்லாத காலத்துலயே இந்த எம்.ஜி.ஆர் வேலைக்கு நிதி ஒதுக்கின பார்ட்டி நாம . இப்ப போயி விட்டுருவமா என்ன? (மிஞ்சிப்போனா கலீஞர் வீட்டு விலாசத்துக்கு ஒரு ஸ்பீட் போஸ்டு )

அய்யய்யோ மறுபடி மொதல்ல இருந்தான்னு ஓடிராதிங்க. லேட்டஸ்டா கலீஞரு திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தா பூரண மதுவிலக்கை அமல்படுத்துவோம்னு அறிக்கை விட்டிருக்காரு .

கலீஞர் கேரக்டர் எட்டினா குடுமி எட்டலின்னா காலு ரகம். அந்த காலத்துல எம்.சியாரு ப்ரூக்ளின் ஆஸ்பத்திரியில இருந்தப்போ -இருக்காரா பூட்டாரான்னு தெரியாத நிலையில இருந்தப்போ -எனக்கு ஓட்டு போடுங்க. வாத்யாரு வந்தா ஆட்சிய ஒப்படைக்கிறேன்னு கூட ஜொள் விட்ட பார்ட்டி கலீஞர்.
இந்த மதுவிலக்கு அறிக்கையும் இதை போன்றது தான். நாம இப்டி கேட்காத பார்ட்டிக்கெல்லாம் ரோசனைகளை அள்ளி விடறதுனால பாவம் அப்பாவின்னு அல்லாரும் நினைக்கிறாய்ங்க. நாம மனிதன் பாதி மிருகம் பாதி ரகம்.

கலைஞர் இப்டி அறிக்கை விட காரணம் என்னன்னு தெரியாத பார்ட்டியில்ல நாம. ஜெ கேம்ப்ல இப்டி ஒரு ப்ரப்போசல் வந்திருக்கும். எதுனா எச்சிக்கல அதை இப்டி அறிவாலயத்துக்கு ஊதி விட்டிருக்கும்.தலீவரு அட்வான்ஸ் ஆயிரனும்னு அடிச்சு விட்டுட்டாப்ல இருக்கு. இது காரணம் நெம்பர் 1
அடுத்து இந்த தபா எப்டியும் செயிக்கனும்.இல்லின்னா ராசாத்தியம்மாவே ஊட்ல உட்கார்ந்துக்கினு என்ன பண்றேன்னு ராயல் ஃபர்னிச்சர்ஸ் கல்லாவுல உட்கார சொல்லிட்டாலும் ஆச்சரியப்பட முடியாது.ஆகவே எப்டியாச்சும் செயிக்கனும்.பிறவு வேணம்னா கள்ள சாராயம் குடிச்சு சனம் கொத்தா செத்து தொலைஞ்சா ட்ரிபுள் எக்ஸ் படம் மாதிரி மது விலக்கை தளர்த்திர்ரதுங்கற தில்லுல கூட அறிக்கை விட்டிருக்கலாம்.
ஆனால் இதெல்லாம் இந்த பதிவுக்கு அப்பாற்பட்ட விஷயங்கள். நம்ம பாய்ண்ட் என்னன்னா மதுவிலக்கு அமல்படுத்தப்படனும்.தொடரனும். இது ரெண்டும் நடக்கனும்னா என்ன பண்ணனும்?

சிக்கல்கள்:
1.பல வருசமா குடிச்சு குடிச்சு ரத்தமே ஆல்க்கஹாலா மாறிட்ட கேஸுங்க அவ்ள சீக்கிரம் விடுமா? சான்ஸே கிடையாது இதுக்கு ஒரு வழி பண்ணியாகனும். இவிகள வச்சுத்தான் அண்டை மானில சரக்கு வரத்து , போலி மதுபான தயாரிப்பு ,கள்ளச்சாராயம்னு சங்கிலி தொடரா சிக்கல்கள் வரும்.
2.எந்தவித போட்டியோ -மார்க்கெட்டிங் தேவைகளோ இல்லாம மது தயாரிப்பாளர்கள் மஞ்ச குளிச்சிட்டிருந்திருப்பாய்ங்க.கலீஞர் மதுவிலக்குன்னதும் அவிக வீட்டோட இருந்து மொற வாசல் பண்ணிக்கிட்டிருக்க மாட்டாய்ங்க. மதுவிலக்கு மேட்டர்ல ஆனானப்பட்ட என்.டிஆருக்கே ஆப்படிச்ச கும்பல் அது .
3.டாஸ்மாக் கடை,பார் , காலி பாட்டில் , அட்டை பெட்டி இப்படி பல வழியில அட்டையா ரத்தம் உறிஞ்சுன கூட்டம் சும்மா இருக்குமா? நெவர்.
4.டாஸ்மாக் ஊழியர்கள் -மறைமுகமா டாஸ்மாக்கை நம்பியே பொளப்ப ஓட்டிக்கிட்டிருந்த கூட்டம் சும்மா இருக்குமா ? நெவர்.
5.அடுத்து வர்ரதுதான் கள்ளச்சாராய கும்பல்.

மேற்படி அஞ்சு சிக்கலையும் சிக்குன்னு சால்வ் பண்ணியாகனும்.இல்லின்னா ஒன்னு கலீஞர் அரசு எப்பவும் போல அல்ப்பாயுசுல பூடும் .அல்லது ஆந்திராவுல போல திமுகவிலயே யாரேனும் புல்லுருவிய உருவாக்கி வேட்டிய உருவிருவாய்ங்க.

NTR

இது மாதிரி எதுவும் அச்சாணியமா நடந்துராம இருக்கனும்.அப்பத்தேன் மதுவிலக்கு தொடரும். இதுக்கு என்ன பண்ணனும்? என்ன பண்ணாலும் தாளி இருக்கிற அதிகாரி,அரசு ஊழியர்கள்,காவலர்களை வச்சுத்தான் செய்தாகனும்.

அதுக்கு மொதல்ல இந்த கூட்டத்தை ஸ்புடம் போட்டாகனும்.இதெல்லாம் ஜுஜுபி. இந்த டீட்டெய்ல் எல்லாம் நம்ம மானிலக்கனவுகள் மற்றும் மோதிக்கான யோசனைகள் பதிவுலயே இருக்கு . காவல் துறையில களையெடுக்க அதன் கப்பாசிட்டிய சாஸ்தியாக்க உபரியா பல யோசனைகள் இங்கே இருக்கு . தெலுங்கு தேசத்துல போல மொத கையெழுத்து சென்டிமென்ட்லாம் பார்க்காம மொத 3 மாசத்துல மேற்படி காரியத்தை எல்லாம் நல்லபடியா செட் பண்ணிக்கிட்டு பிறவு மது விலக்கு சோலிக்கு போகனும்.
மதுவிலக்கால ஏற்படற வருமான இழப்பை ஈடுகட்டியாகனும். மொத 3 மாசத்துல இந்த மேட்டர்ல ஒர்க் அவுட் பண்ணியாகனும்.இல்லின்னா நாஸ்திதான். ஏன்னா மதுவிலக்கை பக்காவா அமல் படுத்தவும் செலவு பிடிக்கும்ல.அந்த செலவுக்கு கஜானாவுல காசு இருக்கனும்ல.

1.ஆல்க்கஹாலிக்ஸ்:
மது அடிமைகள் மீட்பில் உண்மையான ஆர்வம்,அனுபவம் உள்ள அமைப்புகள்/தனி நபர்களை எல்லாம் ஐடென்டிஃபை பண்ணி அவிக சொல்றாப்ல ஒரு செயல் திட்டம் வகுக்கனும். மாவட்ட,தாலுகா மையங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தனிப்பிரிவே இதற்காக தொடங்கனும்.
பிறவு மானிலத்துல உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டல்ஸ்,மெடிக்கல் காலேஜஸ் மேல ரெய்டு உடனும். என்னெல்லாம் ஓட்டையிருக்குன்னு பக்காவா ஒரு ரிப்போர்ட்டை கையில வச்சுக்கிட்டு விரையை கசக்கனும். குறைகளை நிவர்த்தி பண்ண டைம் வேணமா ? சீல் வைக்கட்டா? டைம் வேணம்னா அரசாங்கத்தின் மது அடிமைகள் மீட்பில் பங்கெடுத்தாகனும்னு சொல்லிரனும்.
மதுவிலக்கு பிரசாரம் – இதை எவனோ செத்தான் எனக்கென்ன போச்சுன்னு இல்லாம ரஜினி கமல் முதல் இன்னைக்கு என் ட்ரி ஆகி இருக்கிற புதுமுகம் வரை இதுல ஈடுபடுத்தனும்.

அரசின் சமூக நலதிட்டங்கள், அரசு /தனியார் வேலை வாய்ப்பு , வங்கி கடன் இப்படி சகலத்துக்கும் ரத்தத்தில் ஆல்க்கஹால் பர்சன்டேஜை டெஸ்ட் பண்ணி பர்ஸ்யூ பண்றாப்ல சட்டம் கொண்டு வரனும்.

குடிச்சா ஆள் காலி,குடும்பம் காலி ,பொஞ்சாதி விதவையாயிருவா/ விபச்சாரியாயிருவான்னா கூட அசைஞ்சு கொடுக்காத பார்ட்டிங்க கடந்த பாராவின் நிபந்தனைக்கு ஆடிப்போயிருவாய்ங்க.

2.மது தொழிற்சாலைகள்:
அரசு கட்சி சார்பற்ற அறிவு ஜீவிகள் , நிபுணர்களின் உதவியுடன் மொத 3 மாசத்துல உலகம் தழுவிய ஆய்வு மேற்கொண்டு ஆல்க்கஹாலை வண்டி ,வாகனங்களில் எரிபொருளா உபயோகிக்கிற டெக்னாலஜியை கொண்டு வரனும். அதை இந்தியா முழுக்க கொண்டு செல்ல முயற்சி பண்ணனும்.

3-4 .டாஸ்மாக் ஊழியர்கள் மற்றும் அதை அண்டி வாழ்ந்த அட்டை பூச்சிகள்:
டாஸ்மாக்கை வச்சு பொளப்பு நடத்திக்கிட்டிருந்த அட்டை பூச்சிகளை எல்லாம் ஐடென்டிஃபை பண்ணி அவிகள இதர உற்பத்தி நடவடிக்கைகளில் பங்கேற்க செய்ய வேண்டும். உ.ம் மனித/மிருக/பறவை கழிவுகள்,குப்பையில் இருந்து மின்சாரம் /உரம் , காற்றாலை மூலம் மின்சாரம்.

அம்மா உணவகத்தை ஒரு மாடலா வச்சுக்கிட்டு ஏதோ நாவல்ல பெரியவர் ஒருத்தர் எழுதினாப்ல “சமூக உணவு கூடங்கள்” அமைக்கவும் மேற்படி கும்பலை உபயோகிக்கலாம்.

அம்மா உணவகம் மாதிரி அ நி யாய விலைல்லாம் இல்லாம – ஒரு குடும்பம் தன் உணவு தேவைக்கு அணுகும் நிலையில் விலை வைத்து -பார்சல் தரும் ஏற்பாடு செய்யலாம்.

ஆல்க்கஹாலை எரிபொருளாக பயன் படுத்தும் டெக்னாலஜி நடைமுறைக்கு வந்து விட்டால் அந்த நெட் ஒர்க்கில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு முன்னுரிமை .மேற்படி அட்டை பூச்சி கூட்டத்துக்கு பின்னுரிமை .

4.கள்ளச்சாராய கும்பல்:
பால் கொள் முதல் மையங்கள் மாதிரி சாராய கொள் முதல் மையங்கள் அமைக்கலாம். ஆனால் சாராயத்தை எரிபொருளா மட்டும் பயன்படுத்தற அளவுல தயாரிக்க பயிற்சி கொடுத்துரனும். அடுத்து பக்கத்து ஸ்டேட்ல இருந்து மது உள்ளாற வராம காபந்து பண்ணியாகனும்.
மானில எல்லைகளில் உள்ள செக் போஸ்டுகளில் சூரிய ஒளி மின்சாரம் . 1000 வாட்ஸ் பல்பு போட்டுரனும். நல்ல க்வாலிட்டியோட வீடியோ வர்ராப்ல காஸ்ட்லி சிசி கேமரா பொருத்துதல். வெப் காஸ்டிங் . கொய்யால மாட்னா சொத்து பறிமுதல்னு சட்டம் கொண்டு வரனும்.மாட்டின வண்டியோட – அந்த பேர்ல எத்தனை வண்டி இருக்கே எல்லா வண்டி வாகனத்தையும் சீஸ் பண்ணிரனும் (இதுக்கும் சட்டம் கொண்டு வரனும்)

கலைஞருக்கு போனஸ் டிப்ஸ்:
தலீவரே ! இன்னைக்கிருக்கிற நிலைமைல மது விலக்கெல்லாம் சாத்தியமே இல்லாத மேட்டரு . எந்த பார்ப்பான் செத்தானோ -சாவானோ உங்க மனசுல நெல்ல எண்ணம் வந்திருக்கு. வாழ்த்துக்கள்.

ஆனால் நம்ம அனுபவம் வேற ஒன்னை சொல்லுது. சாக்கடையிலயே கிடந்தவன் திடீர்னு பூக்கடைக்குள்ள கால் எடுத்து வச்சா மூச்சு முட்டியே செத்துப்போயிருவான்.

வேண்டாத ஆட்டம்லாம் ஆடின பாவிங்க நல்லதை செய்யப்போயி ஆப்படிச்சுக்கிட்ட சரித்திரம் நிறையவே உண்டு,மது விலக்குக்கு உறுதி மொழி கொடுத்துட்டா செயிச்சுரலாம்னு கனவு காணாதிங்க.

உங்காளுங்க கேட்டா அதுக்கும் -அதாங்க உங்க கட்சி செயிச்சு ஸ்டாலின் சி.எம் ஆகவும் ஒரு ப்ளூ ப்ரிண்டை தரேன்.காசா பணமா?

என் தேசம் என் கனவு

3

முன் கதை சுருக்கம்:
நம்ம மோதிஜி பிரதமராகி 100 நாள் முடிஞ்ச பிறகு 2014,ஜூலை 16 ஆம் தேதி அவருக்கு ஒரு லெட்டர் போட்டேன். பிரதமர் அலுவலகம் “உங்கள் கடிதம் கிடைத்தது – இட் ஈஸ் கெப்ட் ஆன் ரெக்கார்ட்”னு பதில் கூட போட்டாங்க. அந்த லெட்டர்ல நான் தெரிவிச்சிருந்த யோசனைகள் தான் இந்த பதிவு .
இதை பாக்கெட் புக்கா போட்டு ( 4000 பிரதிகள்) தமிழ்,தெலுங்கு வி ஐ பிக்களுக்கும் , சாமானியர்களுக்கும் இலவசமா கொடுத்துக்கிட்டிருக்கன். என்ன யோசனைகளுக்கு போயிரலாமா?

பாகம்: 1
மத்திய அரசின் பட்ஜெட்டில் முக்கிய ஒதுக்கீடே வெளி நாட்டு/உள் நாட்டு
கடன்/ கடன் மீதான வட்டி/வட்டி மீதான வட்டிக்கே செய்யப்படுகிறது .
இதற்கு ஒரு முடிவு கட்டினாலே தவிர எந்த பிரதமரும் எதையும் சாதிக்க
முடியாது. எனவே ..

1.ஜனாதிபதி-கவர்னர் பதவிகள் ரத்து. இவர்களின் பணியை சுப்ரீம் கோர்/ஹை
கோர்ட் நீதிபதிகளே செய்யலாம்.
2.ஜனாதிபதி மாளிகை/பாராளுமன்ற வளாகம்,பிரதமர் வீடு , மானிலங்களிலான
கவர்னர் மாளிகைகள் ,முதல்வர்கள் வீடு சட்டமன்ற வளாகங்கள் அனைத்தையும்
க்ளோபல் டெண்டர் அழைத்து 99 வருடங்களுக்கு லீஸ்.
(எதிர்காலத்தில் பாராளுமன்ற சட்டமன்ற கூட்டங்கள்/கலந்தாலோசனைகள்
வீடியோகான்ஃபரன்ஸ் முறையில் மட்டுமே நடக்க வேண்டும்)
3.ஸ்விட்ஜர்லாந்து வங்கி கணக்காய் இங்கும் ஒரு வங்கி துவக்கினால் வெளி
நாடுகளில் தேங்கி/தேக்கப்பட்டு கிடக்கும் கருப்பு பணம் தானாகவே நம்
நாட்டை வந்தடையும்.
4.வாகனங்களுக்கு பெட் ரோலுடன் 60:40 விகிதத்தில் எத்தனால் கலந்து உபயோகிக்க அனுமதி.
5.வாரத்துக்கு ஒரு நாளை மாசு கட்டுப்பாட்டு தினமாக அறிவித்து 52+
கேரியர்ஸுக்கு மட்டும் அனுமதி (ரயில், பஸ்) பாதுகாப்பு/மருத்துவ துறை
தொடர்பான எமர்ஜென்சி சேவை வாகனங்களுக்கு மட்டும் விதிவிலக்கு.
6.நாட்டில் உள்ள 18 வயது நிறைந்த ஒவ்வொரு ஆண் பெண்ணுக்கும் இலவச
சைக்கிள். சைக்கிள்களுக்கு சாலைகளில் மெயின் ட்ராக்.
7.பாலியல் தொழிலுக்கு சட்ட அனுமதி.

பாகம்:2
மத்திய பட்ஜெட்டில் அடுத்த பெரிய ஒதுக்கீடு பாதுகாப்பு துறைக்கு மட்டுமே.
1.பாக்கிஸ்தான்,சீனா,பங்களா தேஷ் ஆகிய நாடுகள் உரிமை கோரி வரும் பாரத நில
பாகத்தை ஐ. நா செயல்பாடுகளுக்கு மட்டும் என ஒதுக்கி அவற்றின் பாதுகாப்பை
ஐ.நா பாதுகாப்பு சபை ஏற்க ஏற்பாடு.
2.நக்சல்பாரிகளின் ஆதிகத்தில் உள்ள இந்திய மாவட்டங்களில் அரசின்
வளர்ச்சி/சமூக நல திட்டங்களை நக்சல் ஆதரவாளர்களாய் முத்திரை குத்தி
இருக்கும் மனித உரிமை கழகங்கள் செயல்படுத்துமாறு செய்தல்.

பாகம்:3
1.அரசு இயந்திரத்திலான ஊழல்/அலட்சியம்/பொறுப்பின்மையை ஒழித்தல். அரசு
நிர்வாக செலவை 50% வரை குறைத்தல்.
2.மத்திய,மானில அரசு ஊழியர்கள் அனைவருக்கும் மருத்துவ,சைக்கோ மெட்ரி
டெஸ்ட். கடந்த 10 வருடங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மீது ஒரு தேர்வு
.இவற்றில் தோற்றவர்களுக்கு கோல்டன் ஷேக் ஹேண்ட். இவர் தம் வாரிசுகளில்
தகுதி உடையோருக்கு வாய்ப்பு.
3.அரசு துறையிலான காலியிடங்களையும்/மேற்படி தேர்வுகளில் தோற்றவர்களால்
காலியான இடங்களையும் டெண்டர் முறையில் நிரப்புதல் ( தேவையான தகுதி+
அதிகபட்ச குறைந்த ஊதியம்)
4.சனி,ஞா கிழமைகள்,சுதந்திர நாள்,குடியரசு தினம் தவிர்த்த அனைத்து ஓய்வு
நாட்களும் ரத்து. வருடத்தில் 11 வருடங்கள் தொடர்ந்து பணி
புரிந்தவர்களுக்கு ஊதியத்துடன் கூடிய 1 மாத ஓய்வு .
4.ஏரி,குளங்கள்,நீர்நிலைகளை பேராசை மற்றும் சுய நலத்துடன்
ஆக்கிரமித்துள்ளவர்களின் விவரங்களை சேகரித்து ராணுவம் மூலம் மீட்டல்.
5.வாய்க்கால்களை ஆக்கிரமித்துள்ளவர்கள் அண்டர் கிரவுண்டில் தம் சொந்த
செலவில் அவற்றை நிர்மாணித்து தர உத்தரவு.
6.ஒவ்வொரு குடிமகனும் ஆன்லைன் மூலம் தனது சொந்த விவரங்களை அரசுக்கு
கிடைக்க செய்யும் ஏற்பாடு. (சமூக,பொருளாதார நிலை) .எவ்வித கிராஸ்
செக்கும் இல்லாமல் இவற்றின் அடிப்படையில் அரசு சமூக நல,முன்னேற்ற
திட்டங்களில் வாய்ப்பு.
ஆனால் தவறான தகவல் தந்தவர்களுக்கு கடும் தண்டனை உண்டு என்பதை முன்
கூட்டியே பெரிய அளவில் மக்களுக்கு தெரிவித்தாக வேண்டும்.
பிறகு அரசு தன் வேகத்தில் 3 மாதத்தில் கிராஸ் செக் செய்து போலிபயனாளிகளை
கடுமையாக தண்டிக்க வேண்டும்.
7.சாலை நிர்மாண பணிகள் பிளாஸ்டிக் கழிவுகள் மூலமே நடக்க வேண்டும். புதிய
சாலைகள் அமைப்பதை விட ரயில்வே பாதைகளை விரிவு படுத்த வேண்டும்.
8. நீதிமன்றங்கள் வருடம் முழுதும் 24 மணி நேரம் ஷிஃப்ட் முறையில் பணி
செய்யும் ஏற்பாடு.
9.மத நிறுவனங்கள் படிப்படியாக மத ரீதியிலான நடவடிக்கைகளை
குறைத்துக்கொண்டு நாட்டு முன்னேற்றத்துக்கு ஒத்துழைக்க ஏற்பாடு .
10.பிரபல புண்ணிய சேத்திரங்கள், பெரிய ஆலயங்கள்,மடங்கள் ,ப்ரேயர் ஹால்ஸ்
சோலார்/விண்ட் மில் – பயோகியாஸ் மூலம் மட்டுமே கியாஸ்/மின்சாரம்
தயாரிக்கும் ஏற்பாடு . சுற்றுப்புற ஏரியாவுக்கும் வினியோகம்.
11.உள்ளூர் காய்கறி மார்க்கெட்/மட்டன் மார்க்கெட்/பூ மார்க்கெட் எதிரில்
வங்கிகள் எஸ்.டி.டி பூத் கணக்காய் பிரத்யேக கவுண்டர் திறந்து நடை பாதை
வியாபாரிகள், சிறு வியாபாரிகளுக்கு டெய்லி லோன்.

பாகம்:4
1.நாட்டின் 10 கோடி நிருத்யோகர்களை கொண்டு சிறப்பு ராணுவம். அதன் மூலம்
நீர்வழி சாலைகள் -நதிகள் இணைப்பு .
2.கிராமங்கள் முதல் நாடு தழுவிய விவசாயிகள் சங்கம் அமைப்பு . விவசாய
நிலங்களை லீஸ் அடிப்படையில் மேற்படி சங்கங்களுக்கு அளித்து கூட்டுறவு
பண்ணை விவசாயம்.
3.மேற்படி சிறப்பு ராணுவத்தில் ஒரு பகுதியை கொண்டு விவசாய உற்பத்திகளை
பாதுகாக்க தேவையான கிடங்குகள்/கோல்ட் ஸ்டோரேஜ் , வி.உற்பத்திகளை கொண்டு
செல்ல தேவையான சாலை/ரயில் பாதைகள் நிர்மாணம்.
4.நதிகள் இணைப்பு திட்டத்தில் முதலீடு செய்யும் அன்னிய நாட்டு
நிறுவனங்களுக்கு மட்டும் இந்தியாவில் முதலீடு செய்யும் வாய்ப்பு.
5.முழுமையான மதுவிலக்கு. மது அடிமைகளுக்கு கொக்கோ கோலா மாதிரியான
மெஷின்ஸ் மூலம் அடக்கவிலைக்கே மது.
6.ஒவ்வொரு மாணவனும் தன் உடல்,மனம்,புத்தி
,குடும்பம்,சமூகம்,மானிலம்,தேசம்,உலகம் பற்றிய விழிப்புணர்வை பெற்று தன்
சொந்த கால்களில் நின்று குடும்பம் முதல் உலகம் ஈறாக பயன் பெறும்படி
வாழும்படி செய்யும் கல்வி முறையை அமல் செய்தல் . ஏதேனும் கோடை விடுமுறையை
இதற்கு பயன்படுத்தலாம். விடுமுறையில் ஒவ்வொரு மாணவனும் நதிகள் இணைப்பில்
பங்கேற்கும்படி செய்யலாம்.
7.கல்வி அளித்த நிறுவனமே மாணவர்களுக்கு வேலை வாய்ப்பும் வழங்கும் சட்டம்
8.கடல்களில்,நதிகளில், நீர் நிலைகளில் கழிவு நீரை விடும் தொழிற்சாலைகளுக்கு தடை .
9.மின் தேவைகளில் 50 சதம் சோலார்,விண்ட் மில்,பயோ கியாஸ் மூலம் மட்டுமே
சேகரிக்கும் ஏற்பாடு .
10.போலீஸ் துறையிலான காலியிடங்களை உடனடியாக நிரப்புவதோடு -மேலும் 2
மடங்கு வேலையிடங்களை ஏற்படுத்தி நிரப்பியாக வேண்டும். ஷிஃப்ட் முறை
கடுமையாக அமல். ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனிலும் சிசி கேமரா ஏற்பாடு +வெப்
காஸ்டிங்.
11.போலீஸ் துறை ஆரம்ப கட்ட விசாரணை எஃப்.ஐ.ஆர் போட்டு,ஆதாரங்களை
சேகரிப்பதோடு நின்றாக வேண்டும்.தண்டனை வாங்கிதர வேறு அமைப்பை ஏற்படுத்த
வேண்டும். இதுவும் ஷிஃப்ட் முறையில் 24 மணி நேரம் இயங்க
வேண்டும்.
என் யோசனைகள் பிடித்திருந்தால் நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க. இதுல எதுனா பிடிக்கலின்னா ஏன் பிடிக்கலன்னு கமெண்ட்ல சொல்லுங்க. திருத்திக்கறேன்.

2015 குருபெயர்ச்சி பலன் : மகரம்

20150713_122300

அண்ணே வணக்கம்ணே !
அந்த காலத்துல தமிழ்ல ஒரு பாட்டெடுத்து விட்டா பாம்பு வந்து தன் விஷத்தை ரீ கால் பண்ணிட்டு போயிருமாம். பாம்பு கடிச்ச பார்ட்டி பொளச்சுருவாய்ங்களாம் ( பூம்பாவைக்கு உயிரை தந்த இசை அன்ட் ஆல் தட் ) வாத்யாரு பாட்டு பாடியே ஒரு அம்மாவ வீல் சேர்ல இருந்து எந்திரிச்சு நடக்க வச்சுருவாரு .

இதெல்லாம் ப்ராக்டிக்கலா சாத்தியமா பாஸ்?னு கேப்பிக. லா.ச.ரா “முடியறவாளுக்கு எப்பவும் முடியும்”ங்காறாருங்கோ. நம்ம மேட்டர்ல ஒரு தாட்டி எச்சுமி பாட்டிக்காவ ஒரு பாட்டு படிச்சம். பொருளாதாரம் செட் ரைட் ஆயிருச்சு .அதை இங்கே கேட்கலாம்.

நம்ம ரூல் பிரகாரம் பைசா புரண்டா வாய் பேச்சு டம்மி ஆயிரனும் .ஏன்னா ரெண்டும் ஒரே பாவம் தானே . (தனஸ்தானம்+வாக்குஸ்தானம்) . நெஜமாலுமே இப்பம் வண்டி முரண்டு பிடிக்க ஆரம்பிச்சுருச்சு .(மேலும் கோசாரத்துல இப்ப ரெண்டு எட்டுல ராகு கேது வேற கேம்ப் அடிச்சிருக்காய்ங்களா? மிடியல)
நேத்திக்கு ராத்திரி இனி நம்மால ஜோசியமே சொல்ல முடியாதோ ? பலன் பதிவே பண்ண முடியாதோங்கற அளவுக்கு பீதி கிளம்பிருச்சு .

செரி எச்சுமிக்கும் நமக்கும் ஏழாம் பொருத்தம்.அப்படியா கொத்தது எச்சுமியே ஒர்க் அவுட் ஆயிருச்சு (சேராதிருப்பது கல்வியும் செல்வமும்) . சரசு மம்மி பாக்கெட்ல இருக்கிற காசு மாதிரினு நினைச்சு ஒரு கவிதைக்கு ட்ரை பண்ணேன். அதை இங்கேயே தந்திருக்கன் பாருங்க.

பல காலத்துக்கு பிறவு ஒரே சிட்டிங்குல 3 ஜாதகத்தை பைசல் பண்ணமுடிஞ்சது (இது தொடரனுமே) செரி செரி..மொக்கை போதும்.மேட்டருக்கு வந்துர்ரன்.
குரு பெயர்ச்சி பலன் தொடருது . இன்னைக்கு மகர ராசி . மகர ராசிக்கு குரு 3-12 க்குடையவர் . இவர் போன ஒரு வருசம் ஏழுல இருந்தாரு. பொதுவிதிப்படி இது அனுகூலமான இடம்னாலும் அனுபவத்துல மனைவி/மனைவி வழி உறவுகளால் அல்லல் அலைச்சல் வீண் விரயங்களை கொடுத்திருப்பாரு .

செரி பாஸ்ட் ஈ பாஸ்ட் ..இனி என்ன ? அதை பார்ப்பம்.

குரு 2015,ஜூலை ,14 ஆம் தேதி விடியல் 5.45 மணிக்கு (கடகத்தில் இருந்து சிம்மத்துக்கு) ஒன்பதுக்கு பெயர்ச்சி ஆய்ட்டாரு. இதனால மேற்படி அல்லல்-அலைச்சல் -விரயம்லாம் கட்டுப்படும்.

செலவுகள் குறையும், தூக்கம்,கில்மாவுக்கு கூட நேரம் ஒதுக்க முடியாத அளவுக்கு கடுமையா உழைக்க வேண்டி வரலாம். இளைய சகோதரம் பாதிக்கும். காது தொடர்பான நோய் வரலாம், தோள் பட்டை பிரச்சினை கொடுக்கலாம்.

கரன்சி, தங்கம் டீல் பண்ணும் போது டேக் கேர். வயிறு இதயத்துக்கு சிரமம் கொடுக்காத உணவு மற்று பழக்க வழக்கங்கள் நல்லது .
ஊர் பஞ்சாயத்துக்கு போவாதிங்க. வீண் பழி வரலாம். அரசாங்கத்துக்கு அபராதம் கட்ட வேண்டி வரலாம்.அசால்டா இருந்திங்கனா லாக் அப்புக்கு கூட சான்ஸ் இருக்கு.

2015, ஆகஸ்ட் 10 முதல் செப் 9 வரை குரு அஸ்தமிக்கிறார் (அதாவது குரு பிரபாவம் ஜீரோவாகி சூரிய பிரபாவம் உச்சத்துக்கு போகும்) .சூரியன் அஷ்டமாதிபதி அஷ்டமத்துல ஆட்சி பெறுவதால் பல் தலை எலும்பு முதுகெலும்புக்கு பாதிப்பு வரலாம். அதே நேரம் குரு அஸ்தமிக்கிறதால ஃபைனான்ஸ் ப்ராப்ளம், மனைவி,குழந்தைகள் மேட்டர்ல மொத வாரம் ஃபுல் டென்ஷன் பிறவு தீர்வு கிடைக்கலாம்.

2016,ஜனவரி 8 முதல் சிம்மத்துலயே வக்ரமாகிறார் (மார்ச் 15 வரை இதே நிலை -அடுத்த பஞ்சாங்கம் வந்தாதான் எதுவரை வக்ரம்னு சொல்ல முடியும்)
எட்டுக்குடையவர் எட்டுல நின்னா மரணம்.அவர் வக்ரமானா? ஆவிசு கூடும். குரு எட்டில் நிற்பதற்கு சொன்ன தீய பலன்லாம் மாறி நல்ல ரிலீஃப் கிடைக்கலாம்.ஆனால் மனைவி,குழந்தைகள்,இளையசகோதரத்தின் போக்கு அதிர்ச்சி தரும்.

2015 குரு பெயர்ச்சி பலன் :தனுசு

Brammangaru

அண்ணே வணக்கம்ணே !
நம்ம லக்னத்துக்கு அஞ்சுல சரி ஜரூரா வேலை செய்றாரு.வேந்தர் டிவியின் மூன்றாவது கண் நிகழ்ச்சிக்காக பேட்டி+ பிரம்மங்காரு ஜீவ சமாதி விசிட்டின் போது ஒரு ஹேர் கட் இல்லை/ட்ரிம்மிங்கில்லை ,ஃபேஷியல் இல்லை. நாய் பொளப்பு .

நீண்ட நெடும்பயணம் . சாப்பாட்ல காரத்தை தவிர வேறில்லை. மோர் மட்டும் ஒன் மோர் கேட்க வேண்டியதாயிருச்சு . இந்த குரு பெயர்ச்சி பலன் கூட இழுக்குது. வீடியோ பதிவு கண்ணா மூச்சி காட்டுது .பார்ப்பம் .

இன்னைக்கு தனுசு ராசிக்கான குரு பெயர்ச்சி பலன் தந்திருக்கன் .சாரி ஃபார் தி டிலே !
குரு பெயர்ச்சி பலன் சொல்லும் போது தனுசு, மீன ராசி –சனி பெயர்ச்சி பலன் சொல்லும் போது மகர,கும்ப ராசி களுக்கு பலன் சொல்லும் போது அலார்ட்டா சொல்லனும் .ஏன்னா தனுசு மீன ராசிக்கு குரு ராசியாதிபதி , மகர,கும்ப ராசிக்கு சனி ராசியாதிபதி .

தனுசு ராசிக்கு இவரு 1- 4 க்குடையவர் . இவர் போன ஒரு வருசம் எட்டுல இருந்தாரு. மத்த ராசிக்காரவிகளுக்கு குரு எட்டுல வந்தா உடல் நிலை +பொருளாதார நிலை ரெண்டுமே பல்பு வாங்கிரும். ஆனால் தனுசு ராசிக்காரவிகளுக்கு உடல் நிலை அல்லது பொருளாதார நிலை ரெண்டுல ஒன்னு தான் பல்பு வாங்கும். அதுவும் உடல் உழைப்புக்கு அஞ்சாத பார்ட்டி -ஹார்ட் ஒர்க்கர்னா ரெண்டுமே இல்லாம கூட எஸ் ஆகலாம். தாய்,வீடு,வாகனம்லாம் கூட பல்பு கொடுத்திருக்கும்.

செரி பாஸ்ட் ஈ பாஸ்ட் ..இனி என்ன ? அதை பார்ப்பம்.

இப்போ அஷ்டமத்துல இருந்த குரு 2015,ஜூலை ,14 ஆம் தேதி விடியல் 5.45 மணிக்கு (கடகத்தில் இருந்து சிம்மத்துக்கு) ஒன்பதுக்கு பெயர்ச்சி ஆகிறார். குரு அஷ்டமத்துலருந்து விலகறதே ஒரு பாக்கியம். அதுவும் பாக்யத்துக்கு வராருன்னா டபுள் தமாக்கா தான்.

எட்டுலருந்து விலகறதால நோய்,நொடி,நோக்காடு,வறுமை ,வீண் பழி நீங்கும். ஒன்பதுக்கு வர்ரதால அப்பா,அப்பா வழி உறவுகளோட உதவி கிடைக்கும்.பூர்வீக சொத்து,உங்க முதலீடு,சேமிப்பு கை கொடுக்கும்.தூர தேச தொடர்புகளால திருப்பம் ஏற்படும், இது மட்டுமா? தாய்,வீடு,வாகன வகையில இருந்த சிக்கலும் விலகும். மாணவர்கள் தூர தேசம் போய் கல்வி பயிலவும் வாய்ப்பு கிடைக்கும்.

2015, ஆகஸ்ட் 10 முதல் செப் 9 வரை குரு அஸ்தமிக்கிறார் (அதாவது குரு பிரபாவம் ஜீரோவாகி சூரிய பிரபாவம் உச்சத்துக்கு போகும்) .சூரியன் பாக்யாதிபதிங்கறதால சொந்த முயற்சில ரிமோட் வில்லேஜ், நியூலி டெவலப்பிங் ஏரியா ,மலை பகுதியில ஒரு சொத்தே கூட வாங்குவிக .அடகு வச்சிருந்ததை ரிலீஸ் பண்ணுவிக. லோக்கல் பாலிட்டிக்ஸ்ல உள்ளவிகளுக்கு முக்கியத்வம் கூடும். நகராட்சி,பஞ்சாயத்து காண்ட் ராக்டருன்னா சொல்லவே தேவையில்லை.

2016,ஜனவரி 8 முதல் சிம்மத்துலயே வக்ரமாகிறார் (மார்ச் 15 வரை இதே நிலை -அடுத்த பஞ்சாங்கம் வந்தாதான் எதுவரை வக்ரம்னு சொல்ல முடியும்)
அப்பாவின் ,அப்பா வழி உறவின் போக்கு அதிர்ச்சி தரும். தாய்,தாய் வழி உறவு எரிச்சல் தரும். வாகனம் கடுப்பேத்தும்.மாணவர்கள் ஒரு கல்வியாண்டையே இழக்கவேண்டியும் வரலாம்.வயிறு இதயம் தொடர்பான பிரச்சினை உள்ளவர்களுக்கு சோதனை காலம்.

குருப்பெயர்ச்சி பலன் : துலாம் விருச்சிகம்

20150701_202654
அண்ணே வணக்கம்ணே !
கு.பெ பலனுக்கு போறதுக்கு மிந்தி சில முக்கிய அப்டேட்ஸ் தந்துர்ரன். இன்னைக்கு வேந்தர் டிவி காரவிக சித்தூர் வராய்ங்க. அவிகளோட பிரம்மங்காரு மடம் கிளம்பறம். நாம ஜியாக்ரஃபில ஜீரோ அதனால அதுக்கொரு பார்ட்டி, கூட மாட ஒத்தாசைக்கு மாப்ளே. இன்னம் நோ ட்ரிம்மிங் ,நோ ஹேர் டை , நோ ஃபேஷியல். பார்ப்பம்.

கட்டண ஆலோசனை ஓரளவு கரண்ட்ல வந்துட்டம். வேலையோட வேலையா இந்த கு.பெ .பலனையும் போட்டுட்டா சனம் கூல் ஆயிருமேன்னு விடியல் 3.34 க்கு இதை தட்டிக்கிட்டிருக்கன்.

அனுபவஜோதிடம் முக நூல் பக்கம் கேர் அப் ஆயிருச்சு போல. மருதப்பன் சார் புதுசா வாட்ஸப் க்ரூப் ஒன்னை துவக்கி கொடுத்திருக்காரு . இந்த ஒளிமயமான 6 வருசத்துல கூட நாம கை வச்சு உருப்பட்டது நிர்வாண உண்மைகள் ப்ளாக் தான். மத்ததெல்லாமே அதுலருந்து ஏற்றப்பட்ட அகல் விளக்குகள் தான். இந்த வாட்ஸ் அப் க்ரூப் மட்டும் செம ஹிட்டுங்கோ மொத்தம் 100 பேருக்கு தான் இடம். இப்பமே 30 பேர் வரை சேர்ந்தாச்சு.

இங்கே முக்கிய நிபந்தனை ஒன்னு தான். ஆரும் ஜூரி கடியாது . ஒருத்தருக்கொருத்தர் கத்துக் கொடுத்துக்கப் போறோம்.கத்துக்கப்போறோம். நோ குரு பிசினஸ். அடுத்து கோவில்,குளம்லாம் கடியாது . நிற்க கு.பெ பலனுக்கு போயிரலாம்.

ஜூலை 15 க்குள்ள வீடியோ பதிவாவேற தரேன்னு சொல்லி வச்சிருக்கன். இன்னைக்கே 13 ஆயிருச்சு.இடையில 2 நாள் தான். ஆத்தா ! வாக்கு தவறாம இருக்க அருள் புரி தாயீ !

துலாம்:
உங்களுக்கு இவரு 3-6 க்கு உடையவர் .இவர் போன ஒரு வருசம் பத்துல இருந்தாரு. குரு பத்தில் இருந்தா?பதவிபறி போயிரனும்ல? திருவாரூர் சரவணன் ( நம்ம ஆஸ்தான புக் டிசைனர்) இவரும்துலா ராசிக்காரர் தான் . சட்டம் படிக்க சித்தூர் ஆர்.கே.எம் லா காலேஜ்ல அட்மிட் ஆயிட்டாரு. எப்பூடி?

3= ஹை ரிஸ்க், அலைச்சல் 6 = வழக்கு . நம்மாளு DTP ஆப்பரேட்டர் .அங்கன லாயர்களுக்கு பெசல் செல்லம். ஒன்னமே இல்லாம இவ்ள முடியுதே ஆத்தன்டிக்கேட்டடா பண்ணா என்னன்னு இந்த முடிவு . திருவாரூர் டு சித்தூர் வந்து (அலைச்சல்) அட்மிட் ஆயே உட்டாரு .

ஆக ஒரு கிரகம் இங்க இருந்தா நன்மை-இங்க இருந்தா தீமைன்னு கோடு கிழிக்கவே முடியாதுங்கோ ! நாம உபயோகிச்சுக்கறதுல இருக்கு சூட்சுமம்.

இந்த குரு 2015,ஜூலை ,14 ஆம் தேதி விடியல் 5.45 மணிக்கு கடகத்தில் இருந்து சிம்மத்துக்கு பெயர்ச்சி ஆகிறார். இது உங்களுக்கு 11 ஆவது இடமான லாபஸ்தானம்.

குரு பத்துல இருந்து 11 க்கு வந்தா எப்படி இருக்கும்? வித் இன் தி சிட்டி நிறைய அலைஞ்சு திரிய வேண்டி வரும்.. அப்பா,அம்மாவுக்கு சின்ன வயசா இருந்தா தம்பி தங்கை வரலாம். பண மேடர்ல தகிரியமா ஆட்டை தூக்கி மாட்ல போடற கேசான நீங்களே திகில் பாண்டி போல ஆயிருவிங்க.. அண்ணா அக்கானு ஆருனா இருந்தா அவியளுக்கு அல்லல் அலைச்சல்,சத்ரு,ரோக ருண பீடைகள். உங்களுக்கு வரவேண்டிய காசு பணம்லாம் கொஞ்சம் வில்லங்கம் பண்ணாத்தான் வரும்.

உள்ள கடன் பத்தாதுன்னு லம்பா இன்னொரு அமவுண்ட் வாங்க வேண்டி வரும். ( சாஸ்தி வட்டிக்கு போயிராதிங்க பாஸ் !) தங்கம் அடகு வைக்க வேண்டி வரலாம்.

2015, ஆகஸ்ட் 10 முதல் செப் 9 வரை குரு அஸ்தமிக்கிறார் (அதாவது குரு பிரபாவம் ஜீரோவாகி சூரிய பிரபாவம் உச்சத்துக்கு போகும்) .சூரியன் 11க்குடையவர்ங்கறதால சொந்த முயற்சியில பைசா புரளும் . கடன் கொஞ்சம் போல தீரும். தங்கத்தை மீட்கலாம்.புதுசாவும் வாங்கலாம்.

2016,ஜனவரி 8 முதல் சிம்மத்துலயே வக்ரமாகிறார் (மார்ச் 15 வரை இதே நிலை -அடுத்த பஞ்சாங்கம் வந்தாதான் எதுவரை வக்ரம்னு சொல்ல முடியும்) கடன் குறையும்,விரோதிகள் எண்ணிக்கை குறையும், நோய்கள் கட்டுக்குள் இருக்கும். ஆனாலும் வயிறு ,இதயம் திடீர்னு மக்கர் பண்ணலாம். வயிறு இதயத்துக்கு சிரமத்தை குறைங்க.

மனைவி, குழந்தைகள் போக்கு அதிர்ச்சி தரும்,தங்கம்,ரொக்கம் மேட்டர்ல கேர்ஃபுல்.

விருச்சிகம்:
உங்களுக்கு இவரு 2-5 க்கு உடையவர் .இவர் போன ஒரு வருசம் ஒன்பதுல இருந்தாரு. இதனால உங்கள் பேச்சு வன்மை, கைப்பணம்,குடும்பத்தார் உழைப்பு/ஒத்துழைப்பு – வளர்ந்த பிள்ளைகளின் உழைப்பு எல்லாமே டம்ப் ஆயிட்டே வந்தது. நோ ரிட்டர்ன்ஸ்.

ஆனா இவரு 2015,ஜூலை ,14 ஆம் தேதி விடியல் 5.45 மணிக்கு கடகத்தில் இருந்து சிம்மத்துக்கு அதாவது ஒன்பதுல இருந்து பத்துக்கு பெயர்ச்சி ஆகிறார். பத்துல குரு வந்தா பதவி பறிபோகும்னு வினோலாக்ஸ் கொடுப்பாய்ங்க.பயந்துக்காதிங்க.

அடுத்தவிக மேட்டர்ல தலையிடாம /சிபாரிசு பண்றது /பஞ்சாயத்து பண்றது /ஷ்யூரிட்டி கொடுக்கிறது மாதிரி ஜோலிக்கெல்லாம் போகாதிங்க. மேலதிகாரி என்ன சொன்னாலும் “தெய்வமே ..நீங்க எங்கயோ போயிட்டிங்க” ரேஞ்சுல மெயின்டெய்ன் பண்ணுங்க. அன் எம்ப்ளாயிடா? கவலையே இல்லை.பறிபோகவாச்சும் ஒரு வேலை கிடைச்சுரும். உடுங்க ஜூட்டு .

கடந்த வருசத்துல முதல் வச்ச பேச்சு வன்மை, கைப்பணம்,குடும்பத்தார் உழைப்பு/ஒத்துழைப்பு – வளர்ந்த பிள்ளைகளின் உழைப்பு எல்லாமே இந்த வருசம் பலன் தர வாய்ப்பிருக்கு. சூதானமா நடந்துக்கிட்டா பெருசா ஒரு தொகை கைக்கு வர பொஞ்சாதி,புள்ளை குட்டிகளோட சின்ன சின்ன ஆசைகளை நிறைவேத்தி வச்சுட்டு சின்னதா தீர்த்த யாத்திரை கூட போய் வரலாமுங்கோ. ( ஆனாலும் அந்த சமயத்துல கையில கேஷோ – நகை நட்டோ வேணாமுங்க- ப்ளாஸ்டிக் மணி தான் இருக்கில்ல)

2015, ஆகஸ்ட் 10 முதல் செப் 9 வரை குரு அஸ்தமிக்கிறார் (அதாவது குரு பிரபாவம் ஜீரோவாகி சூரிய பிரபாவம் உச்சத்துக்கு போகும்) .சூரியன் ஜீவனாதிபதிங்கறதால தொழில் சூடு பிடிக்கும்,புது தொழில்ல கூட இறங்கலாம். லோக்கல் பாலிட்டிக்ஸ்ல உள்ளவிகளுக்கு முக்கியத்வம் கூடும். நகராட்சி காண்ட் ராக்டருன்னா சொல்லவே தேவையில்லை.

2016,ஜனவரி 8 முதல் சிம்மத்துலயே வக்ரமாகிறார் (மார்ச் 15 வரை இதே நிலை -அடுத்த பஞ்சாங்கம் வந்தாதான் எதுவரை வக்ரம்னு சொல்ல முடியும்)

ஆட்டம் கண்டுக்கிட்டிருந்த பதவி ஸ்டெடி ஆயிரும். அட அதுக்குள்ள வேலை போயிருந்தா நெல்ல வேலை கிடைக்கும். கண்,தொண்டை,வாய் பகுதியில் புண்,கட்டி இத்யாதி வரலாம் .டேக் கேர். மனைவி ,புள்ளை குட்டிங்க ஹெல்த் பத்திரம். அவிக என்னதான் கோக்கு மாக்கா நடந்துக்கிட்டாலும் பொறுமை ப்ளீஸ். மனைவி சூல் கொண்டிருந்தால் டபுள் கேர் அவசியம்.