உங்களுக்கும் ராஜயோகம் : 12

2192326

அண்ணே வணக்கம்ணே !
சந்திரன் ஒன்று ராஜகிரகம் கிடையாது (ராணிகிரகம் பாஸ்) ஆனாலும் ராஜயோகம் பெற இந்த சந்திர பலம் அவசியத்திலும் அவசியம் .
ஏன்?எதுக்கு? எப்படி? இல்லின்னா என்னாகும்? சந்திரபலம் இல்லாமயே ராஜயோகம் பெற என்ன செய்யனும்?. இந்த பதிவுல பார்த்துரலாம்.
சந்திரனை ராணிகிரகம்னு சொன்னேன்.ஏன் தெரியுமா? பிரபலங்களின் மனைவிகளுக்கு/துணைவிகளுக்கு காரகம் சந்திரன் தான். ஐயா ரேங்கிக்கிட்டாலும் அம்மாவ பார்த்து கரெக்ட் பண்ணிக்கிற சனமும் இருக்காங்கல்ல? ஐயாவே இறங்கி வரலின்னாலும் அம்மாவையே சுத்தி வந்தவிக க்ளிக் ஆன சரித்திரமெல்லாம் இருக்குல்ல (ஜெ).

சமீப காலமா வைகோவை எல்லாரும் உணர்வு வயப்பட்டவர் – உணர்வு வயப்பட்ட நிலையிலயே முடிவெடுக்கிறவர்னு சொல்லிக்கிட்டாய்ங்க.
பேஸிக்கலா எல்லா மனிதர்களும் சென்டிமென்ட்டல் ஃபூல்ஸ் தான். ஆனால் தாங்கள் சென்டிமென்ட் பார்த்து இழந்தது /மொக்கையானதுல்லாம் எல்லாரும் பச்சினு ஞா இருக்கும் போல.அதனால அடுத்தவன் உணர்ச்சி வசப்பட்டா கடுப்பாயிர்ராய்ங்க. உணர்ச்சி வசப்படறதே கேவலம்னா இதுல ஹிடன் அஜெண்டாவோட உணர்ச்சி வசப்பட்டாப்ல சீன் போட்டா என்னாகும்?

உணர்ச்சி வசப்படறது -சென்டிமென்ட்ல சிக்கிக்கிறதுல்லாம் கேவலம்னு சொன்னேன்.ஆனால் தலைவர்களுக்கு? அதுவும் ஒரு அழகுதான். அதுவும் பொது நலத்துக்காக -லாஜிக் இல்லாம -உலகமே விமர்சிச்சாலும் தயங்காம ஒரு முடிவெடுக்கிறது -அந்த முடிவுல ஸ்டிக் ஆன் ஆறது தலைமை குணத்துல டாப் டன்ல வந்திருது பாஸ் !

என்.டி.ஆர் ரெண்டு ரூவாய்க்கு கிலோ அரிசி அறிவிச்சப்ப அல்லாரும் ஸ்டன்டுன்னு நினைச்சாய்ங்க. செயிச்சு வராரு அரசாணை ரெடி பண்ண சொல்றாரு . ஐ ஏ எஸ்ஸுங்களுக்கு காலோட போவுது . ஏன்னா ஒய்.எஸ் காலத்துலயாவது மானில பட்ஜெட் லட்சம்கோடி.

அந்த காலத்துல ?
இதே போல நூறு உதாரணம் சொல்லலாம். நேட்டிவிட்டிக்காவ காமராஜரை பத்தி ஒரு சீன்.மதிய உணவு திட்டத்தை கொண்டுவர பார்க்கிறாரு . அதிகாரிங்க “பில்-குல்’ நடக்காதுங்கறாய்ங்க. காமராஜர் “யோவ் ! ஒரு காரியம் நடக்காதுன்னு சொல்லவா உங்களை எல்லாம் வச்சிருக்கன் ..எப்படி நடத்தலாம்னு சொல்லுங்கய்யா”ங்கறாரு .கடேசியில மடிப்பிச்சை வாங்கி பணம் கொண்டு வரேங்கறாரு .

அடுத்து சந்திரனோட முக்கிய காரகத்தை பார்க்கலாம். ஜலம் பாஸ் ! கரிகாலன்ல இருந்து ,காட்டன் துரை வரை , என்.டி.ஆர் ,ஒய்.எஸ்.ஆர்லருந்து இந்த முருகேசன் வரை மக்கள் மனசுல நின்னா அதுக்கு காரணம் என்ன? பாசன நீர் -குடி நீருக்காவ ஒர்க் அவுட் பண்ணது.

2011 ல் இமாலய வெற்றி கண்ட ஜெ 2016 ல இந்த கதிக்கு ஆளாக காரணம் என்ன? ஏரிகள் , கால்வாய்களை தூர் வாறாதது, செம்பரம்பாக்கம் ஏரிய பாதிராத்திரியில திறந்துவிட்டது .

இதை விட பல மடங்கு வெள்ளம்லாம் வந்திருக்கு.ஆனால் சென்னை மிதக்கல.ஏன்னா அப்பம் கலைஞர் சி.எம் , நம்ம துரை முருகன் பொதுப்பணித்துறை .அடிச்சாங்களோ இல்லையோ அதுக்குள்ள போகல.ஆனால் சென்னை மிதக்கல.

ராமாவரம் தோட்டத்துல இருந்த எம்.ஜி.ஆர் சாமான் செட்டெல்லாம் வெள்ளத்தோட போயிருச்சாம் .ஜெயாடிவில நியூஸ் ரீடர்லாம் முழங்கால் வரை தண்ணியில செய்தி வாசிச்சப்போ -கலைஞர் வீட்டு வாசப்படி வரை தான் தண்ணி வந்தது .

அறம் பிழைத்தோர்க்கு அறமே கூற்றாகும்ங்கறாப்ல இந்த தண்ணி மேட்டர்ல குல்ப்பம் கொடுத்தவிகளுக்கு தண்ணியே தண்ணி காட்டிரும் பாஸ்!
வாத்யாரு கச்சா முச்சான்னு சாராய ஆலைக்காரனுக்கெல்லாம் ஏரிகளை தாரை வார்த்தாரு? என்னாச்சு? கிட்னி ப்ளாக் .( சிறு நீரகங்களுக்கு காரகம் சந்திரன்)
கிரானைட் காரன் மழை நீர் கால்வாயை எல்லாம் அடைச்சு வயல்களை காய வச்சு ப்ளாக் மெயில் பண்ணி நிலங்களை எல்லாம் வாய்ல போட்டுக்கறப்ப ஆயா வெத்திலை பாக்குதான் இடிச்சுக்கிட்டிருந்தாப்ல இருக்கு. என்னாச்சு? மகாமகத்துல குளிக்கறேன்னு ஜல கிரீடைக்கு இறங்கி சனம் பலி – அதிகாரம் நஹி .
சந்திரன் அன்றாடங்காய்ச்சிகளுக்கு காரகன். படுக்க இடம் இல்லாம இடம் தேடும் மக்களுக்கு காரகன். அடுத்த வேளை சாப்பாட்டுக்கு கியாரண்டி இல்லாத சனத்துக்கு காரகன்.

இன்னைக்கு பூத் வரை வந்து ஓட்டுப்போடறது இவிக தேன். (ஒப்பிடுக : தென் சென்னை வெர்சஸ் வட சென்னை ) .சந்திரன் ஜல காரகன்,மனோகாரகன். சந்திர பலம் உள்ளவிக மனசு எப்பவுமே பள்ளம் நோக்கி வெள்ளம் பாயறாப்ல இந்த சனத்தை நோக்கி பாயும்.
இது இயல்பா நடந்தா நோ ப்ராப். செரி கணக்கு போட்டே செய்தாலும் நோ ப்ராப். ஹிடன் அஜெண்டாவோட ஃபிலிம் காட்ட சீன் போட்டா ? பொளப்பு நாறீரும்.
எங்க பக்கத்துல சந்திர பாபு வந்து உட்கார்ந்தாலே மழை காணாம போயிரும்.வறட்சி ,பஞ்சம் ,பட்டினி புடுங்கி தின்னும்.ஏன் தெரியுமா? அந்தாளுக்கு அவ்ளோ நல்ல மனசு .

என்.டி.ஆர் போய் சேர்ந்து எவ்ள காலம் ஆகுது? இன்னைக்கும் பேட்டை பேட்டையில அவரை பத்தி நினைக்கிறவிக பேசறவிக இருந்துக்கிட்டே இருக்காய்ங்க.ஏன்னா அந்தாளு கொளந்தை மாதிரி . குழந்தையும் தெய்வமும் ஒன்னும்பாய்ங்க.அந்த கொளந்தைக்கே ஆப்பு வச்ச பார்ட்டி சந்திரபாபு.
சென்டர்ல போலவரம் ப்ராஜக்டுக்கு நிதி ஒதுக்கினா அதுல பட்டிசிம்ங்கற ரிஜர்வாயர் கட்டி (சில்லறை ஒதுக்கி) எக்கச்சக்கமா சிக்கிட்டாருங்கோ. ஜகன் மோகன் ரெட்டி அன்னைக்கு ஜெ போல தில்லியில உள்ள எல்லா தலைவர்கள் வீட்டு முன்னேயும் போய் நீதி கேட்டுக்கிட்டிருக்காரு .